Search

Eelamaravar

Eelamaravar

Tag

தமிழர்

சாதித்த கனடிய இளையோர் !

கனடிய அரசியல் களம் சமீப காலங்களாக தமிழர் பிரவேசங்களால் சூடு பிடித்தாலும் தமிழ் இளையவர்கள் இதில் இருந்து தள்ளி நிற்கின்றார்களோ என்ற கவலை பலரிடம் இருந்ததை காண முடிந்தது. இல்லை நாங்களும் களத்திற்கு வந்துவிட்டோம் எனக்கூறிக்கொண்டு கனடிய தமிழ் சமூகத்திற்கு நன்கு அறிமுகமான விஜய் தனிகாசலம் களத்தில் குதித்துள்ளார்.

கனடிய பட்டதாரியான இவர் தமிழ் இளையோர் செயற்பாடுகளின் ஒருங்கமைப்பாளராக தொழிற்பட்டு தமிழ் மக்களுக்கு நன்கு அறிமுகமானவர். தற்போது புதிதாக உருவாகியுள்ள ஸ்காபுரோ ரூச் பார்க் தொகுதியில் 2018 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஒன்ராரியோ மாநிலங்களவைக்கான தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பாளர் தெரிவுத் தேர்தல் நடந்து முடிந்து விஜய் தனிகாசலம் வெற்றியீட்டியுள்ளார்.

இவற்றை எல்லாம் தாண்டி இளையோர் வேட்பாளர் தேர்தலில் வெற்றி சூடியது பாராட்டப்பட வேண்டியதே ! வாழ்த்துக்கள் !

புலம்பெயர் இளைய சமுதாயத்துக்கு பாராட்டு!

இந்த வரலாற்றுச் சூழமைவில், தமிழர் உலகின் எந்த மூலையில் வாழ்ந்தாலும் எந்தக் கோடியில் வளர்ந்தாலும் எமது தேச விடுதலைக்கு உறுதியாகக் குரலெழுப்பி, எமது சுதந்திர இயக்கத்தின் கரங்களைப் பலப்படுத்துமாறு அன்போடு வேண்டுகிறேன்.

அத்துடன், தங்களது தாராள உதவிகளை வழங்கித் தொடர்ந்தும் பங்களிக்குமாறும் உரிமையோடு கேட்டுக்கொள்கிறேன். இந்த சந்தர்ப்பத்திலே தேச விடுதலைப் பணியைத் தீவிரமாக முன்னெடுத்து வருகின்ற புலம்பெயர்ந்து வாழும் எமது இளைய சமுதாயத்தினருக்கும் எனது அன்பையும் பாராட்டுதல்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

தமிழீழ தேசியத்தலைவரின் மாவீரர் நாள் உரை (2008)

Statement from Ontario PC Leader Patrick Brown on the nomination of Vijay Thanigasalam
April 23, 2017

“I congratulate Vijay on his nomination as the Ontario PC candidate for Scarborough-Rouge Park.

“Vijay brings a wealth of experience to our modern, inclusive and pragmatic Ontario PC team. A young professional who has been an active community volunteer for the past decade, I know Vijay will work tirelessly on behalf of the residents of Scarborough.

“After 14 years in power, life is harder with the Liberals. Ontario families are working hard, paying more, and getting less. Ontario deserves better. It’s time for a change in Ontario.

“In Scarborough and across the province, the Ontario PC Party will continue to work hard for a better future. I look forward to working with Vijay as part of our Ontario PC team as we share our positive message of change.”

கட்டுரையை தற்போது முழுமையாக பிரசுரிக்கவில்லை ஆனால்  பின்னர் பிரசுரிக்கப்படும் !

இருப்பினும் எம்மால் பலருடைய பல மாத உழைப்பு வீணாகி விடக்கூடாது என்பதால் தற்போது அமைதி காக்கின்றோம் ,  அதே நேரத்தில் மக்களிடத்தில் உண்மைகளை  உரைக்காமல் மக்கள் எல்லாவற்றையும் பார்த்துக்கொள்வார்கள் என்பதும், சுட்டு விரல் காட்டும் இடத்தில் ஓட்டுப்போடுவார்கள் என்று எதிர்பார்ப்பதும் முட்டாள்தனம் ஆகும்  !

கூலிக்கு மாரடிக்கும் ஊடங்களில் வரும் பொய்கள் தான் இப்போது செய்திகளாகி விட்டது !

அமைப்புக்களும் ஊடகங்களும் உண்மைகளை உரைக்க வேண்டும் !

நன்றி

Advertisements

வேட்பாளர் தேர்தல் : வாக்களிப்பீர் விஜய் தனிகாசலம் !

Dear friends,

I am pleased to share with you that I have decided to seek candidacy for the Ontario Progressive Conservative Party to represent Scarborough-Rouge Park in the Provincial Election in 2018.

All across Ontario, there are several issues to be addressed. The citizens of this great province deserve a government that is tirelessly working and fighting for them each and every day. The people in Scarborough-Rouge Park deserve a representative in Queen’s Park that can listen and understand their issues. I believe that the next representative at Queen’s Park needs to be responsive and can understand issues faced by the riding. This is why I am very proud to have decided to seek candidacy for the Ontario Progressive Conservative Party to represent Scarborough-Rouge Park.

A new beginning, a new voice, and a new direction is needed in Queen’s Park to ensure our shared vision of a prosperous Ontario. I am a young professional who continuously works tirelessly in our community for the past decade. I am an energetic individual who has worked with countless young Canadians, who share a common vision of a progressive Ontario. I look forward to creating solutions and bringing in true leadership to Queen’s Park and I am determined to be the voice that Scarborough-Rouge Park needs.

To ensure that we build a better Ontario together, I need the help and support from all of the Scarborough-Rouge Park residents. The Progressive Conservative Party will nominate a candidate for the 2018 Provincial Election in Scarborough-Rouge Park on Saturday, April 22, 2017.

I look forward to your continued support.

Yours sincerely,

Vijay Thanigasalam
Ontario PC Nomination Candidate
Scarborough-Rouge Park

https://www.facebook.com/Vijay-Thanigasalam

http://www.vijaythani.ca/

யார்? இந்த ‘வருணகுலத்தான்’

    இராஜராஜ சோழன் காலம்முதல் வளர்ச்சியடைந்துவந்த வல்வெட்டித்துறை முத்துமாரியம்மன் கோவில் போத்துக் கேயர் காலத்தில் முழுஅழிவினுக்குள்ளாகியது. 1619 யூன் 5 ந்திகதி யாழ்ப்பாணத்தின் இறுதிமன்னனான சங்கிலி குமாரன் போத்துக்கீசரால் கைப்பற்றப்பட்டு கோவா விற்கு கொண்டுசெல்லப்பட்டான். அத்துடன் யாழ்ப்பாண தமிழரசரின் ஆட்சி முடிவுக்குவந்தது. 1505இல் கொழும் பில் (அன்றைய கோட்டைஇராச்சியம்) கரையொதுங்கிய போத்துக்கீச தளபதியான DoLorenzo de Almieida இலங்கை யில் முதன்முதல் காலடிவைத்த போத்துக்கீசனாவான்.

இந் நிகழ்ச்சியை தொடர்ந்து இலங்கையின் கரையோரப் பகுதிகள் பலவும் போத் துக்கீசரின் ஆட்சியில் கீழ்வந்த ன. எனினும் 1519இல் யாழ்ப்பாணத்தில் ஆட்சிக்கு வந்த சங்கிலியன் எனப்படும் 7ம் செகராசசேகரன் 1561 வரை போத்துக்கீசரின் ஆணையை ஏற்கமறுத்துவந்தான். அத்துடன் இவர்களிற்கு எதிரான பலதாக்குதல்களை கடலிலும் தரையிலும் நடத்திவந்தான். (இவனுடைய தாயார் மங்காத்தா வல்வெட்டித்துறை மணல்குடியை சேர்ந்தவரும் அன்றையஅரசனான பரராசசேகரனின் மனைவியரில் ஒருத்தி என்பதும் குறிப்பிடத்தக்கது) குறிப்பாக 1544 டிசம்பரில் மன்னாரில் இவன் நடத்திய தாக்குதல் மிகப்புகழ்பெற்றது. இத்தாக்குதலில் போத்துக்கீச படை களுடன் மக்களை மதமாற்றத்திற்குள்ளாக் கிவந்த பிரான்சிஸ் எனும் மதகுருவும் மதம்மாறிய பலரும் கொல்லப்பட்டனர்.

இக்காலத்தில் சங்கிலியனின் மாற்றாந்தாயின் மகனான பரநிருபசிங்கன் போத்துக் கீசருடன் இணைந்து சங்கிலியனுக்கு எதிராக இயங்கிவந்தமை குறிப்பிடத்தக்கது. இவன் யாழ்ப்பாண அரசுரிமையை பெற்றுக்கொள்ளும் நோக்கில் போத்துக்கீசரின் உதவியை நாடியதுடன் தன்னை கத்தோலிக்கசமயத்திற்கும் மாற்றிக் கொண்டி ருந்தான். அரசுரிமையை எதிர்பார்த்திருந்த இவனுடைய மகனான இளஞ்சிங்கனும் மேற்படி தாக்குதலில் சங்கிலியனின் படைகளால் கொல்லப்பட்டான்.

போத்துக்கீசஏகாதிபத்தியத்திற்கு எதிரான சங்கிலிய னின் இத்தாக்குதல் பின்னாட் களில் மதவெறிகொண்ட வனாக சிலரால் வர்ணிக்கப்பட்டது. இச்சம்பவத்தைத் தொடர்ந்து புனிதசவேரியர் என்ற மதகுருவான பிரான் சிஸ் போத்துக்கீச அரசுக்கு 20.01.1545 இல் எழுதிய கடித த்தில் தமக்கு அடங்காத சங்கிலியை யாழ்ப்பா ண அரசில் இருந்து விரைவில் அகற்றுமாறும் அவ்வாறு அகற்றினால் யாழ்ப் பாணத்தில் பெரும் ஆன்மீக அறுவடை(கிறிஸ்தவ மதமாற்றம்) காத்திருப்பதாக வேண்டுகோள் விடுத்திருந் தார். அந்நிய ஏகாதிபத்தி யத்திற் எதிரான சங்கிலியனின் இப்போர்க்கால நடவ டிக்கையினை தொடர்ந்து மேலும் பதினேழு ஆண்டுகள் யாழ்ப்பா ணம் தமிழரின் முழுமை யான கட்டுப்பாட்டி லிருந்தது. இக்காலத்தில் மன்னார் முல்லைத்தீவு உட்பட வன்னியின் பலபகுதிகளும் யாழ்ப் பாண அரசின் கீழிருந்து வந்தன. போத்துக்கீசரின் இத்தகைய பலத்த எதிர்ப்புகளைமீறி 1561 வரை சங்கிலியனது முழுமை யான கட்டுப்பாட்டில் யாழ்ப்பாணம் விளங்கி வந்தமை குறிப்பி டத்தக்கது. இறுதியாக போத்துக்கேயரின் கடுமையான எதிர்ப்பாலும் உள்ளி ருந்து கொல்லும் தொடர்ச்சியான துரோகத் தினாலும் நாற்பத்திஇரண்டு வருடங்கள் அர சாண்ட சங்கிலியன் என்ற 7ம் செகராச செகரன் 1561 இல் வன்னிக்கு தப்பிச் செல்ல யாழ்ப் பாணம் போத்துக்கீசரின் மேலாண்மைக்குட்பட்டது.

மேற்படி சங்கிலியனைப்பற்றி ஆராய்ந்த ‘இலங்கையில் தமிழர் ஒருமுழுமையான வரலாறு’ நூலின் ஆசிரியரான கலாநிதி முருகர் குணசிங்கம்

யாழ்ப்பாண மன்னன் முதலாவதுசங்கிலி போத்துக் கீசரையும் அவர்கள் மதத் தையும் தமிழ்ப்பிரதேசத்தில் நிலைகொள்ளாமல் தடுத்துநிறுத்துவதற்கு தன்னாலான முயற்சிகளை எல்லாம் மனவுறுதியோடு செய்தான். ஆனால் அவனுடைய மரணத் திற்குப்பின்னர் சங்கிலி போல் துணிவும் தேசப்பற்றும் மதப்பற்றுமுள்ள மன்னன் போத்துக்கீசர் அட்சிக்காலத்தில் தமிழ்தேசத்திற்கு கிடைக்காமற் போய்விட்டதை காணமுடிகின்றது.

என தனதுநூலின் 184 ம்பக்கத்தில் கூறுவது இவ்விடத்தில் சுட்டிக்காட்டத்தக்கது.

யாழ்ப்பாணத்தில் சங்கிலியனுக்கு பின்வந்த சிலஅர சர்க ளும் அந்நியரான போத்துக் கீசரின் மேலாண் மையை ஏற்றுக்கொண்ட போதும் இறுதியாக 1616 இல் ஆட்சி க்கு வந்த சங்கிலிகுமாரன் சிலகாலத்திலேயே போத்துக் கீசருக்கு மாறாக செயற்படத் தொடங்கி னான். அத்துடன் அவர்களின் எதிரியான தஞ்சாவூரின் இரகுநாத நாயக்க மன்னனுடன் நட்புக்கொண்டான். இதனால் வெகுண்டெ ழுந்த போத்துக்கீசர் சங்கிலி குமா ரன் மீது போர்தொடுத் தனர். இவர்களுக்கு யாழ்ப்பா ணத்தில் இருந்த பல முதலி மார்களின் ஆதரவும் கிடைத்திருந்தது. குறிப்பாக கத்தோ லிக்கமதத்திற்கு மாறியிருந்த மீகாப்பிள்ளையின் மகனான சின்ன மீகாப்பிள்ளை என்பவன் டொம் லூயிஸ்(Domlouis) முதலி என்ற பெயருடன் ஏனைய முதலிகளு டன் இணைந்து 1618இல் சங்கிலிகுமாரனது ஆட்சிக்கு எதிராக தொடர்ச்சியாக கிளர்ச்சிசெய்து வந்தான். இக் காலத்தில் தஞ்சாவூர் நாயக்கரிடமிருந்து உதவிபெற்ற சங்கிலிகுமா ரன் இக்கிளர்ச்சியை முறியடித்தான். வருணகுலத்தான் எனும் கரையார்தலைவனின் கீழ் போராடிய அரசனின் படைகள் வெற்றிபெற்றன. இக்காலத்தில் தேவிக்கோட்டை யிலிருந்த தஞ்சாவூர் அரசனான இரகுநாதநாயக்கனே தனதுபடைகளுடன் யாழ்ப்பாணம் வந்ததாக ‘தஞ்சாவூர்நாயக்கர் வரலாறு’ நூலின் 161ம் பக்கத்தில் குறிப் பிடப்பட்டுள்ளது. தோல்வியடைந்த டொம்லூயிஸ் முதலி மன்னாருக்கு போத்துக்கீசரிடம் தப்பியோடினான்.

இவ்வாறு தனது ஆட்சிக்காலம் முழுமையும் எதிர்ப் போராட்டத்துடன் வாழ்ந்த சங்கிலிகுமாரன் இறுதியாக பருத்தித்துறையிலிருந்து இந்தியாவிற்கு தப்பிச்செல்ல முயன்றான். இவ்வேளையில் 1619 யூன் 5ந்திகதி கடல் மீது இவன் கைது செய்யப்பட்டான். பின்பு கோவாவிற்கு கொண்டுசெல்லப்பட்ட சங்கிலிகுமாரன் சிரச்சேதம் செய் யப்பட்டு கொல்லப்பட்டான். பிலிப் டி ஒலிவேரா யாழ்ப்பாணத்தின் அதிகாரமிக்க தளபதியாக போத் துக்கேய அரசினால் நியமிக் கப்பட்டான். இதனால் சங்கிலி குமாரனை அகற்றிவிட்டு ஆட்சியுரிமையை பெற்று விடலாம் என போத்துக்கீசருடன் இணைந்து செயற்பட்ட டொம்லுயிஸ் எதிர்பார்த்த அதிகாரம் கிடைக்கா மையினால் தஞ்சாவூர் படைகளுடன் இணைந்தமையும் குறிப்பிடத்தக்கது.

மேற்படி சங்கிலிகுமாரன் கைதுசெய்யப்பட்டதும் போத் துக்கேயரின் நேரடிஆட்சிக்குள் யாழ்ப்பாணம் வந்தது. இந்நிலையில் ஆரம்பம்முதலே அந்நியரான போத்துக் கீசரை எதிர்த்துவந்தவனும் கரையோரத் தளபதியுமான வருணகுலத்தான் அவர்களுக்கு அடங்காது அவர்களை தொடர்ச்சியாக தாக்கிவந்தான். தஞ்சாவூர்நாயக்கரின் உதவியுடன் கரந்தடி முறை யிலான இத்தாக்குதல்களை நடத்திவந்த இவனை ‘கரையாரத்தலைவன்’ என சுவாமி ஞானப்பிரகாசர் தனது ‘யாழ்ப்பாண வைபவ விமர் சனம் ‘ நூலில் பக்கம்160 இல் குறிப்பிடுகின்றார். கரையாளர் களின் படைகளுக்கு வருணகுலத்தானும் தஞ்சாவூர் படைகளுக்கு கெம நாயக்கன் என்பவரும் தலைமை தாங்கினர் என தஞ்சாவூர் நாயக்கர் வரலாறு நூலின் 164ம் பக்கத்து குறிப்பு கவனிக்கத்தக்கது. வல்வெட்டித்துறை சமூகத்தை சேர்ந்த இவ்வீரனை மூல நூலான Conquest of Ceylon என்னும் நூலை எழுதிய Fernando De Oueyroz ( குவரேஸ்பாதிரியார்) அறிமுகப் படுத்தும் விதமே அலாதியானது. Kinglet Of the careaz called VarnaGullata a Great Enemy of the Portuguese. (Page 468) அத்துடன் மீண்டும் அவனைப்பற்றி கூறவரும் அவர் Kinglet Of the careaz With the men Tanjour by night hid themselves in the house of the Fising Pepole.(Page633)

05.06.1619 இல் போத்துக்கீசரின் நேரடிஆட்சிக்குள் யாழ்ப் பாணம் உட்பட்டிருந்த இந்நிலையில் 1620 இன் தபசு காலம் (இது யேசு உயிர்த்தெழுந்த ஞாயிறுக்கு (ஈஸ்டர் ஞாயிறு) முன்வரும் நாற்பது நாட்களாகும்) என கூறப் படும் நாட்களொன்றில் வருணகுலத்தானின் முதலாவது அதிரடித்தாக்குதல் ஆரம்பமாயிற்று. பலம் கூடிய எதிரி யை பலம்குறைந்தவர்கள் திடீரெனத் தாக்கும் இத்தாக் குதல் முறையின கரந் தடித்தாக்குதல் எனவும்வர்ணிப்பர். இவ்வகையில் இத்தகைய தாக்கு தலை எம் மண்ணில் முதன்முதல் நடத்திய வரலாற்று வீரன் வருணகுலத்தான் என்பது போத்துக்கீசவரலாறு எமக்குத்தரும் அரிய செய்தியாகும். யாழ் பண்ணைத் துறையில் அமைந்திருந்த மாதாகோவிலுக்குள் பதுங்கி யிருந்த போத்துக் கீசரின் மேல் இத்தாக்குதல் நடத்தப் பட்டது. யாழ்ப் பாணத்தை கைப்பற்றிய போத்துக்கீசர் அங்கிருந்த பல கோவில்களையே தமது உறை விடமாக் கியிருந்தமை இவ்விடத்தில் குறிப்பிடத்தக்கது. எனினும் ஆலயத்தின் பின்புறமாக நுழைந்து போத்துககீசருடன் இணைந்து போராடிய எம்மவர்களின் செயலினால் பலம் பெற்ற போத்துக்கேயர் அத்தாக்குலை முறியடித்தி ருந்தனர். மனம் தளராத வருணகுலத்தானினால் மீண்டும் அடுத்தநாள் நல்லூரில் தங்கியிருந்த போத்துக் கீசரின் புகழ்பெற்ற தளபதியான பிலிப் டி ஒலிவேரா வின் மீது மற்றுமொரு தாக்குதல் நடத்தப்பட்டது. நவீன துப்பாக்கிகள் சகிதம் போராடிய போத்துக்கீசர் மீண் டும் வெற்றி பெற்றனர். தொடர்ந்த நாட்களொன்றில் தஞ்சாவூர் படைகளுடன் வந்த வருணகுலத்தான பூநகரியில் ஈழவூர் என்னும் இடத்தில் ஏற்பட்ட மோத லிலும் வெற்றிகரமாக தப்பிக்கொண்டான். இன்று சர்ச்சைக்குள்ளாகும் ஈழம் என்னும் பெயர்கொணட பிரதேசம் போத்துக்கீசர் இலங்கைக்கு வந்தகாலத்தில் இருந்ததனை குவரேஸ் பாதிரியாரின் 634 ம் பக்கக் குறிப்பு ஆதாரமாக தருகின் றது. மீண்டும் 1620 நவம்பர் மாதம் ஆயிரம் தஞ்சாவூர் படைகளுடன்வந்த வருண குலத்தான் தெண்டைமானா ற்றில் தரைஇறங்கினான். நல்லூர்வரை முன்னேறிச் சென்று போராடியபோதிலும் இம்முறையும் இவனுக்கு தோல்வியே கிடைத்தது. எனி னும் பிலிப் டி ஒலிவேராவை காயப்படுத்திய வருண குலத்தான் மீண்டும் அடுத்த தாக்குதலுக்கு தயாராகினான்.

போத்துக்கீசருக்கு எதிரான இத்தகைய கெரில்லாத் தாக்குதல்களை தனது சமூகத் தின் உதவியுடனும் கடல் கடந்துவந்த தஞ்சைப்படைகளின் துணையுடனும் தொட ர்ச்சியாக வருணகுலத்தான் மேற்கொண்டுவந்தான். மேற் படி அதிரடித்தாக்குதல்களை தலைமையேற்று நடத்தி வந்த அவன் இறுதியாக 2 February 1621 இல் தோற் கடிக்கப்பட்டான். நாகபட்டினத்திலிருந்து புதிதாக வந்து ஓய்வெடுத்துக்கொண்டிருந்த உதவிப்படைகளு டன் வல்வெட்டித்துறை குளக்கரையில் அமைந்திருந்த பனந்தோப் பில் பதுங்கியிருந்த வருணகுலத்தானையும் அவன்படைகளையும் எதிர்பாராமல் போத்துக்கீசப் படைகள் முற்றுகயிட்டுதாக்கின. எதிரியின் இம்முற்று கையை முறிய டிக்க போராடிய அவ்வேளையில் தனது சொந்தமண்ணில் இம்மாவீரன் வீரமரண மடைந்தான். நள்ளிரவில் நடந்த இத்தாக்குதலில்; மூன்றுமணித்தியா லத்தில் எண்ணூறு போர்வீரர்களும் வருணகுலத்தானும் அழிக்கப்பட்டதாக குவரேஸ்பாதியார் 643 ம் பக்கத்தில் குறிப்பிடுகின்றார். 2009 ஏப்ரல் ஆரம்பநாட்களில் நடந்த ஆனந்தபுரம் தாக்குதலுக்கு இணையானதாக்குதல் இது வாகும். இத்தாக்குதலை Antonio de Mota Galuao எனும் போத்துக்கீசதளபதி நடத்தியதாகவும் இவன் கட்டளை அதிகாரி பிலிப் டி ஒலிவேராவின் மருமகன் எனவும் மேலும் பல தகவல்களை அவர் தருகின்றார். 05.06.1619 முதல் 02.02.1621 இல்தான் மரணமடையும்வரை போத் துக்கீசரின் படைகளுக்கெதிராக ஆறுதடவைகள் இவன் தாக்கு தலை மேற்கொண்டதாக முன்கூறிய Conquest of Ceylon நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. நவீனதுப்பாக்கி கள் மற்றும் வெடிமருந்துகள் கொண்ட பீரங்கிகளுடன் தற்துணிச் சலை மட்டும் துணையாகக் கொண்ட வருண குலத்தானின் தொடர்ச்சியான இப்போ ராட்டமா னது என்றும் மெச்சத்தக்கது. தமிழரின் இறுதிப் போரென வரலாற்றா சிரியர்களால் வர்ணிக்கப்படும் இப்போராட்டமானது The battle between the Portuguese and Tamils at valvedditurai. Which ends in the defeat of the latter என Johan H Martyn எழுதிய Norts of Jaffna நூலில் 3ம் பக்கத்தில் குறிக்கப்பட்டுள்ளது.

மேற்படி இறுதிப்போர் நடந்ததனால் புகழ்பெற்றிருந்த வல்வெட்டித்துறையில் அமைந்திருந்த குளம் பின்நாட் களில் தூர்ந்துசெல்கையில் அதன்பெயர் தீருவில்(தீரு = தூர்ந்த வில் = குளம்) என மாற்றமடைந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது. வருணகுலத்தானுடன் போர்புரிந்த போத்துக்கீசப்படைகள் பயன்படுத்திய பீரங்கியொ ன்று பலகாலமாக குறிப்பிட்ட வல்வெட்டித்துறை குளக் கரையில்(தீருவில்) காணப்பட்டது. இறுதிப்போரின் எச்சமாக விளங்கிய அப்பீரங்கி வீரத்தின் விளை நிலமாக விளங்கும் வல்வெட்டித்துறைமண்ணின் பெரும் அடையா ளச்சின்னங்களில் ஒன்றாகும்.

வருணகுலத்தானின் தோற்றத்தை வர்ணிக்கும் ஆசிரி யர் Then an aracheset (தளபதி) before him on a sheet a large head, half bald, With a long and beautiful beard, which was turning grey, saying ‘This is the head of the Captain-General என கூறு கின் றார். இத்தகைய முன்புறம் சவரம் செய்யப்பட்டு நீண்டகூந்தலுடன் அழகான தாடியுடனும் காணப்பட்ட அவனுடைய பெரிய தலை வெட்டப்பட்டு மரக்கிளை யொன்றில் குத்தப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டது. அத் துடன் அவனுடன்வந்த மேலும் 800 போர்வீரர்களும் அவ் விறுதியுத்தத்தில் மாண்டுபோயினர். பிலிப் டீ ஒலிவே ராவை புகழ்ந்துரைக்கும் ‘யாழ் திருச்சபை வரலாறு’ எனும் நூலின் 47 ம்பக்கத்தில் அதன்ஆசிரியர் ‘போத் துக்கேய அதிகாரிகளில் குறிப்பி டத் தக்கவர் 1921ம் ஆண்டு வல்வெட்டித்துறையில் யாழ்ப்பாணஅரசன் தோற்கடிக் கப்பட்டபின் யாழ்ப்பாண ஆளுநரான பிலிப் டீ ஒலிவேராவும் அவர்காட்டிய ஆன்மீக வாஞ்சையுமா கும் எனக் கூறுமிடத்து யாழ்ப்பாண அரசன் தோற்கடிக் கப்பட்ட இடமென வல்வெட்டித் துறையை மீண்டும்அவர் சுட்டிக்காட்டுகின்றார். இங்கு யாழ்ப்பாண அரசனென வருணகுலத்தானை குறிப்பிடும் மேற்படி நூலின் ஆசிரி யர் ‘சுவாமி J.E..ஜெயசீலன’ மகாவம்சத்தில் துட்டகை முனுவின் புகழைக் கூறவந்த மகாநாமா அவனது எதிரி யான ஈழாழனை குறிப்பிடுவதுபோல் பிலிப் டி ஒலி வேரா வின் புகழைக்கூறவந்து அவனது எதிரியான வருணகுலத்தானை குறிப்பிட்டுள்ளமை கவனிக்கப் படவேண்டும். போத்துக்கேயரின் இலங்கை வரலாற்றை எழுதிய குவரேஸ் பாதிரியாரும் வருணகுலத்தானை Kinglet Of the careaz கரையார்களின் தலைவன் அல்லது மன்னன் என்றே குறிப்பிட்டிருப்பது இங்கு கூர்ந்து நோக்கத்தக்கது.

வருணகுலத்தான் வீரமரணமடைந்ததும் அதுவரை யாழ் பண்ணைத்துறையில் வசித்துவந்த பிலிப் டி ஒலி வேரா தலைநகரான நல்லூருக்கு தனது இருப்பிடத்தை மாற்றிக் கொண்டான். இக்காலத்தில் தலைநகரான நல்லூரில் அமைந்திருந்த கந்த சாமிகோவில் உட்பட யாழ்ப்பாணத் தில் அமைந்திருந்த பலகோவில்களும் போத்துக்கேய ரால் இடித்தழிக்கப்பட்டன. மக்களின் விருப்பத்திற்கு மாறாக கோவில்கள் இடிக்கப்பட்டதாக மேற்படி குவரேஸ்பாதிரியார் தனதுநூலின் 642ம் பக்கத் தில் கூறி யிருக்கின்றார். இதுபோலவே இறுதிப் போர் நடந்த வல் வெட்டித்துறையில் அமைந் திருந்த வருண குலத்தான் வணங்கியதாக நம்பப்படும் பழமைவாய்ந்த முத்துமாரி யம்மன் கோவிலும் போத்துக்கேய தளபதி யான பிலிப் டி ஒலிவேராவினால் இக் காலத்தில் அழிக்கப்பட்டது.

(1617 முதல் 1688 வரை தனது வாழ்கைக்காலமாக கொண்ட Fernao de Queyroz எனும் கத்தோலிக்க பாதிரி யார் The Temporal and Conquest of Ceylon எனும் நூலை எழுதியிருந்தார். போத்துக்கீசமொழியில் எழுதப்பட்ட இந்நூல் அவர் மறைவிற்குப்பின் 1689இல் போத்துக் கீசரின் தலைநகரான லிஸ்பனில் வெளியிடப் பட்டது. போத்துக்கீசர்கால இலங்கையைப்பற்றிய குறிப்பாக அன்றைய யாழ்ப்பாணஅரசு மற்றும் மக்கள்பற்றிய பலவிபரங்கள் இந்நூலில் அடங்கி யிருந்தன.

1930 SG.Perera என்பவரால் இந்நூல் ஆங்கிலமொழிக்கு மாற்றப்பட்டது. எனினும் நானூறு வருடங்களிற்கு முன் நடந்த சம்பவங்களும் முன்னூற்றைம்பது வருடங் களிற்கு முந்திய அகராதியில் தேடமுடியாத மொழிப் பாவனையும் கொண்ட இந்நூலை ஆதாரமாகக் கொண்டு யாழ்ப்பாண வைபவகௌமுதி, யாழ் திருச் சபை வரலாறு, Nortes of Jaffna மற்நும் சுவாமி ஞானப் பிரகாசர் எழுதிய யாழ்ப்பாண வைபவ விமர்சனம் History of Jaffna under Portugses எனும் நூல்களில் வல்வெட் டித்துறையில் நடந்த போத்துக் கீசருடனான இறுதிப் போர் மற்றும் அதன் நாயகனான வருணகுலத்தான் பற்றிய பலவிபரங்கள் குறிப்பிடப் பட்டுள்ளன. எனினும் மேற்படி வெள்ளையின ஐரோப்பி யரின் ஆக்கரமிப் புக்கு எதிராக போராடிய வருண குலத்தானின் வீர சாகசத்தைதையும் ஏன் அவனின் பெயரையும்கூட பின்வந்த யாழ்ப்பாண சரித்திர ஆசிரியர்கள் பலரும் ஏனோ குறிப்பிடாமல் விட்டுச்சென்றுள்ளனர். எனினும் அண்ணாமலை பல்கலைக் கழகத்தால் வெளியிடப்பட்ட Nayaks of Tanjore நூல் மற்றும் தஞ்சாவூர் நாயக்கர் வரலாறு போன்றநூல்களிலும் இதுபற்றிய பல விபரஙகளை காணலாம்.)

விரைவில் வெளிவரஇருக்கும் ‘வல்வெட்டித்துறை மாரியம்மன் வரலாறும் வழிபாடும்’ மற்றும் ‘வல் வெட்டித்துறையின் போராட்டவாழ்வு’ போன்ற நூல் களிலும் எங்கள் மண்ணின் மைந்தனான வருண குலத்தான் பற்றிய மேலும் பலவிபரங்களுக்கு காத்திருங்கள் !……….

நவீனதுப்பாக்கிகள் மற்றும்வெடிமருந்துகள் கொண்ட பீரங்கிகளுடன் தற்துணிச்சலை மட்டும் துணையாகக் கொண்ட வருணகுலத்தானின் இடைவிடாத போராட்ட மானது என்றும் மெச்சத்தக்கது. வீரர்கள் வீழ்ந்துபடு வதில் லை என்பதற்கு வருணகுலத்தானே மாபெரும் சாட்சியம் ஆம் அதனால்தான் நூனூறுவருடங்கள் கடந் தும் அவன் வரலாற்றை இன்னும் நாம் தேடிக் கொண் டிருக்கின்றோம். வருணகுலத்தானின் வர லாற்றை எனக்குமுதலில் கூறியசட்டத்தரணி சோம சுந்தரம் காண்டீபனுக்கு(சிவனருள் சுந்தரம்) ‘வல்வெட்டித்துறை வரலாற்றின்’ நன்றிகள் என்றென்றும் உண்டு.

முதன் முதலாக தமிழ் எழுத்தை கணனிக்கு கொண்டு வந்தவர் மறைவு!

இந்திய மொழிகளில் முதன் முதலாக தமிழே கணனிப் பயன்பாட்டுக்கு வந்தது. அந்த எழுத்துருவை பயன்பாட்டுக்கு கொண்டு வந்தவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகள். அதற்குப் பின்புலமாக இருந்தவர் முன்னாள் ரொரன்ரோ பல்கலைக்கழக பேராசிரியரான கணிதமேதை சி.விஜயகுமார் அவர்கள் ஆகும். இவர் நேற்று ரொரன்ரோவில் காலமானார்.

1980களின் இறுதியில் இந்திய இராணுவத்துதோடு புலிகள் உக்கிரபோரில் ஈடுபட்டிருந்தவேளை புலம்பெயர் நாடுகளில்; விடுதலைப் புலிகளின் செய்திகளை மக்களுக்கு கொண்டு செல்ல தமது கிளைகள் ஊடாக புலிகள் செய்தி ஏடுகளை நடத்தி வந்தனர். போர் செய்திகளை உடனுக்குடன் வெளியிட முன்னைய அச்சமைப்பு வேகம் போதாமல் இருந்த காரணத்தால் புலிகள் புதிய முயற்சிகளில் இறங்கினர். அப்போதுதான் முனைவர் சி.விஜயகுமார் அவர்கள் தன்னிடம் இருந்த திட்டத்தை விடுதலைப் புலிகளின் கனடாப் பொறுப்பாளர் ‘தொண்டைமானாறு’ குணம் அவர்களிடம் தெரிவித்தார். அத்திட்டத்திற்கு கணனிகள் மற்றும் உபகரணங்கள் வாங்க பெரும் நிதிதேவைப்பட்டது. இத்திட்டத்தை விடுதலைப் புலிகளின் மத்தியகுழு உறுப்பினரும் அனைத்துலகச் செயலகப் பொறுப்பாளருமான திரு.லோறன்ஸ் திலகர் அவர்களிடம் தெரிவித்து தலைமைப் பீடத்திடம் நிதி பெற ஆவன செய்தார் பொறுப்பாளர் குணம் அவர்கள்.

எடுத்துரு அமைக்க தமிழர் ஆர்வலர் குழு அமைக்கப்பட்டு விடுதலைப் புலிகளின் கனடிய அலுவலகத்தில் பணி நடைபெற்றது. வரைகலை கலைஞர்கள் திரு. பா. ஞனபண்டிதன், கரன் கிறாப் சசி, தவம்… போன்ற பலரின் உதவியோடு, சரஸ்வதி, ஓளவை, கீதவாணி, பூபாளம்,திருமலை. நாகந்தினி..போன்ற எழுத்துருக்கள் அமைக்கப்பட்டது. விடுதலைப் புலிகளின் கனடா நாட்டுக் கிளையின் வெளியீடான ‘உலகத்தமிழர்;’ ஏடே இவ்வெழுத்துக்கள் கொண்டு வெளிவந்த உலகின் முதல் கணனி அச்சேறிய தமிழ் ஏடு ஆகும்.

இவற்றுக்கெல்லாம் அறிவுக் கருவூலமாக இருந்தவர் முனைவர் சி.விஜயகுமார் அவர்கள் ஆகும். இவரின் மறைவு பேரிழப்பாகும். அன்னரின் பிரிவால் வாடும் குடும்பத்தினர் உறவினர்களுக்கு ஆழந்த இரங்கல்.

-ப.திருமுருகவேந்தன்

கம்பியில்லா விசைப்பலகை வழியே செல்லினம் தமிழ் உள்ளீடு

கம்பியில்லா விசைப்பலகையைக் கொண்டு செல்லினம் வழியே திறன்பேசிகளில் தமிழ் உள்ளிடுவது குறித்து திரு சிவ. தினகரன் எழுதியக் கட்டுரை. நீண்ட பனுவல்களை விரைவாகத் தட்டெழுத இந்த வசதி மிகவும் பயன்படும். இதை இங்கே பதிப்பிப்பதில் மகிழ்ச்சியடைகிறோம்.

சென்ற வாரம் வந்த அறிவிப்பு. மடிக்கணினி வழியே உலவுபவர்களின் இடையே இடியென விழுந்தது. அது வேறொன்றுமில்லை. வானூர்தியில் செல்பேசி தவிர வேறெந்த மின்னணுக் கருவியும் கையோடு கொண்டு செல்ல தடை என வானூர்தி சேவை நிறுவனங்களின் அறிவிப்பே அது.

செல்பேசி வழியே குறுஞ்செய்திகள் அனுப்பலாகுமே ஒழிய, நெடுந்தொடர்கள் தட்டச்சுவது சற்று சிரமமான செயல்தான். கணினி போன்ற விசைப்பலகை வழியே கதை, கட்டுரை, பத்தி என பெரும் பதிவுகளை உள்ளீடுவது போன்று செல்பேசியில் உள்ளீடு செய்ய இயலுவதில்லை என்பது உண்மைதான்.

பயணம் செய்யும் எல்லா இடங்களுக்கும் மடிக்கணினியோ அல்லது கணினியோ சுமப்பது சாத்தியமில்லை. இது போன்ற தருணங்களில் எனக்கும் இம்மாதிரியான நெருக்கடியான நிலை வாய்த்திருக்கிறது.

அப்போது தனிப்பட்ட விசைப்பகலையக் கொண்டு (External Keyboard) கொண்டு தட்டச்சு செய்ய முயன்றிருக்கிறேன். ஆங்கில வழி தட்டச்சுக்கு சரி. தமிழ் தட்டச்சு? எந்த செயலி உதவுமென தேடித்தேடி அலுத்திருந்த நேரத்தில்தான் ‘உடுக்கை இழந்தவன் கைபோல’ என் இடுக்கன் கலைத்தது செல்லினம்.
கம்பியில்லா புளூடூத் விசைப்பலகை

கூகுள் இன்டிக் விசைப்பலகை, Swiftkey Keyboard, எழுத்தாணி என பல்வகை தமிழ் விசைப்பலகை இருந்த போதும் தனிப்பட்ட விசைப்பகலையக் கொண்டு தட்டச்சும் போதும் ‘தமிழுக்கு’ என வரும்போது கைவிரித்து என்னை கைவிட்டுவிட்டன.

செல்லினம் ஒரு படி மேலே போய் எவ்வித இணைப்புமின்றி புளூடூத் விதைப்பலகை மூலம் தமிழ் தட்டச்சு வசதியினை சாத்தியப்படுத்தி என்னை மகிழ்ச்சிக் கடலில் மூழ்கடித்துவிட்டது.

அமேசான், ப்ளிப்கார்ட் போன்ற இணைய சந்தைகளில் சகாயமாக புளூடூத் விசைப்பலகை கிடைக்கிறது. உங்களது மொபைல் OTG support செய்யுமா? இல்லையா ? என்ற கவலை கூட இனி வேண்டாம். புளூ டூத் மூலம் இணைப்பு ஏற்படுத்தி இந்த விசைப்பலகை மூலம் லகுவாக தமிழ் தட்டச்சு செய்யலாம்.
கம்பியில்லா வைஃபை (wifi) விசைப்பலகை

இருப்பினும் என்னுடைய Favourite Dell Wireless விசைப்பலகைதான். செல்பேசி சார்ஜ் துளை வழியே Wifi Tongle ஐ சொருகிவிட்டு என்னுடைய டெல் விசைப்பலகை வழியே பத்தி, கட்டுரை, நெடுந்தொடர் என அலுப்பில்லாமல் தட்டச்சு செய்கிறேன். இந்த கட்டுரையை கூட Wifi விசைப்பலகை வழியேதான் தட்டச்சு செய்தேன்.

Wi-Fi என்பது பெயரளவுக்குத்தானே ஒழிய இது Flight Mode லும் அற்புதமாக வேலை செய்யும். உங்கள் செல்பேசியில் நீங்கள் Wi-Fi activate செய்யவேண்டிய அவசியமே இல்லை.

தமிழ் மற்றும் ஆங்கிலம்

Alt +1 – Phonetic
Alt + 2 – Tamil99
Alt +3 – English

என எளிதில் விசைபலகையினை மாற்றி விரைவாக தட்டச்சு செய்யலாம். என்னுடைய தனித்தேர்வான தமிழ்99 விசைப்பலகையின் வழியே தமிழ் தட்டச்சு செய்ய யாதொரு தடையுமில்லை. கணினியில் தட்டச்சு செய்யும் அதே வசதியினை செல்லினைம் எனக்கு வழங்கிவிடுகிறது. Google Docs வழியே எந்த பதிவாக இருந்தாலும் தட்டச்சு செய்து மின்னஞ்சல் வழியே அனுப்பிவிடுவேன். தேவையெனில் Printer வழியே அச்சும் எடுத்துக்கொள்வேன். இதனால் எனக்கு பெருஞ்சுமையாக இருந்த மேசைக்கணினி, மடிகணினிகளுக்கு கிட்டத்தட்ட விடை கொடுத்துவிட்டேன்.
சொல்த்தேர்வு

செல்பேசி வழியே தட்டச்சு செய்யும் போது சொல் தேர்வு இருக்கும். எனவே அதன் வழியே நாம் பிழையும் திருத்திக்கொள்வோம். அது இந்த முறை மூலம் தட்டச்சு செய்தால் சாத்தியமா என்றால் அதுவும் சாத்தியமே. Back Arrow தட்டினால் சொல்தேர்வும் திரையில் வந்து விடுகிறது. எனவே தட்டச்சு புல்லட் ரயில் வேகம் எடுக்கிறது.

கணினியில் உள்ள வசதிகள் அப்படியே

ஆம். மிகையில்லை. பனுவல்களை தேர்வு செய்ய மாற்று விசை (Shift Key) மற்றும் Arrow விசை மூலம் தேர்வு செய்தாகட்டும், Control + z கொண்டு Undo செய்வதாட்டும் Copy paste என அனைத்து கணினி பயன்பாடுகளையும் கணினி துணையின்றி இவ்விசைப்பலகை வழியே அனைத்து Shortcut Key method – ஐயும் எளிதில் நம்மால் செய்ய இயலும்.
சாதாரண விசைப்பலகை

வயர் மூலமாக சாதாரண விசைப்பலகை கொண்டு கூட நம்முடைய செல்பேசி இணைத்துக்கொண்டால் தமிழ் தட்டச்சு செய்ய இயலும். நாம் இனி பயணம் செய்யும்போது External Keyboard மட்டும் கொண்டு சென்றால் போதுமானது.

மின்னஞ்சல், வாட்ஸ்ஆப், பெரும் பத்திகள், பதிவுகள் என அலுப்பின்றி தட்டச்சு செய்ய முடியும். கணினி விசைப்பலகை கொண்டு தட்டச்சு செய்யும் போது எளிதாக இருக்கிறது என்பதைவிட ஆசையாக இருக்கிறது என்பதே உண்மை. இனி செல்லினம் கொண்டு தமிழை தட்டுங்கள் நமக்கான கதவு திறக்கப்படும். இனி வானமே எல்லை!

# சிவ. தினகரன், சென்னை 69
7871336611,
மின்னஞ்சல் – aforamma@gmail.com

தொடர்புடையக் கட்டுரை:
புளூதூத் விசைப்பலகைகளுடன் செல்லினம்

sellinam.com

இந்தி அரசின் சதி :தமிழர்களின் தொன்மையை மறைக்க முயற்சி! மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

பா.ச.க. அரசின் சதி : தமிழர்களின் தொன்மையை மறைக்க முயற்சி! கீழடி ஆய்வு அதிகாரிகள் அடியோடு மாற்றம்! மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் 10-4-2017 மதுரையில் தமிழர்களே திரளுக! – பழ. நெடுமாறன்

தமிழகத்தில் அண்மைக் காலமாக இலக்கியம், கல்வெட்டு, நாணயம், தொல்லியல், வெளிநாட்டார் குறிப்புகள் போன்ற சான்றுகளை முன்னிறுத்தி புதிய ஆய்வுகள் வெளிவந்துகொண்டிருக்கின்றன.

கொற்கை, முசிறி, அழகன்குளம், கொடுமணம், ஆதிச்சநல்லூர், பொருந்தல் மற்றும் பல ஊர்களில் அகழ்வாய்வுகள் நடத்தப்பட்டு பல வரலாற்று உண்மைகள்
கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

கொற்கை, அழகன்குளம், முசிறி, கொடுமணம் ஆகிய நகரங்கள் கி.மு. 4ஆம் நூற்றாண்டிற்கு முன்பிருந்தே உலக நாடுகளுடன் வணிகத் தொடர்பு கொண்டிருந்தன என்பது அகழ்வாய்வுகள் மூலம் மெய்ப்பிக்கப்பட்டுள்ளது. கி.பி. முதல் நூற்றாண்டைச் சேர்ந்த ரோம் நாணயங்கள் இவ்வூர்களில் கிடைத்துள்ளன. எனவே, இந்நகரங்கள் வெளிநாடுகளுடன் வணிகத் தொடர்பு கொண்டவையாக திகழ்ந்திருக்கின்றன. ஆனால் இந்த நகரங்கள் இன்று குக்கிராமங்களாகக் காட்சி தருகின்றன. நகர்ப்புற நாகரிகத்திற்கான தடயங்கள் இவ்வூர்களில் இன்னமும் கண்டுபிடிக்கப்படவில்லை. அதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்படவில்லை.

பூம்புகார்

சங்க இலக்கியங்களிலும், சிலம்பு, மேகலை போன்ற காப்பியங் களிலும் சிறப்பாகக் குறிப்பிடப் படும் சோழர் தலைநகரமான பூம்புகார் கடல் கோளில் அழிந்துபோனது.

1991ஆம் ஆண்டில் இந்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தேசிய ஆழ்கடல் ஆராய்ச்சிக் கழகம் புகழ்பெற்ற பூம்புகார் நகர கடல் பகுதியில் மேற்கொண்ட ஆய்வின் மூலம் ஒரு பெரிய நகரம் மூழ்கிக் கிடக்கக்கூடும் என்பதை உறுதிப்படுத்தின. ஆனால், தேசிய ஆழ்கடல் ஆராய்ச்சிக் கழகம் தனது ஆய்வினை பாதியில் நிறுத்திவிட்டது.

2001ஆம் ஆண்டில் பூம்புகார் கடல் பகுதியில் இங்கிலாந்தைச் சேர்ந்த ஆழ்கடல் ஆராய்ச்சியாளர் கிரகாம் ஹான்காக் என்பவர் தீவிரமாக ஆராய்ந்து கடலுக்கு அருகில் ஒரு பெரும் நகரம் மூழ்கிக் கிடப்பதை கண்டறிந்தார். இதனுடைய காலம் 11,500 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று கூறினார். அந்நகரம் சுமார் 75 அடி ஆழத்தில் புதைந்து கிடப்பதை கண்டறிந்தார். பூம்புகார் நகர நாகரிகம், சிந்து சமவெளி நாகரிகத்தை விட மிகவும் மேம்பட்ட ஒன்று என்றும் அவர் கூறினார்.
இலக்கியச் சான்றுகளை உறுதிப்படுத்தும் தொல்லியல் ஆதாரங்களும் பூம்புகாரில் கிடைத்துள்ளன. சங்க காலப் படகுத்துறை, புத்தவிகாரை, உறைகிணறுகள், அரிய மணிகள், கட்டிடங்கள், பழங்காசுகள் ஆகியவையும் கிடைத்துள்ளன. முதுமக்கள் தாழி ஒன்றும் அதற்குள் 10க்கும் மேற்பட்ட சிறுசிறு கலயங்களும் கிடைத்துள்ளன. கருப்பு, சிவப்பு கலயத்தில் எழுத்துப்பொறிப்புடன் கிடைத்துள்ள முதல் கலயம் இதுதான். கருப்பு, சிவப்பு நிறம் என்பது கி.மு. 5ஆம் நூற்றாண்டிற்கு முற்பட்ட காலத்தைக் காட்டுகிறது.

ஆனாலும், கடலுக்குள் மூழ்கிக் கிடக்கும் பூம்புகாரைப் பற்றிய முழு மையான ஆராய்ச்சி இன்னமும் நடைபெறவில்லை. கிரகாம் ஹான்காக்கின் ஆய்விற்குப் பிறகு இந்த ஆழ்கடல் ஆய்வு தொடரப்படவில்லை.

வைகை நாகரிகம்

மதுரை நகரத்திற்குக்கருகே வைகைக் கரையில் உள்ள கீழடி என்னும் சிற்றூரில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சியில் 2300 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ்பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட மண்பாண்ட ஓடுகள், தந்தம், சுடுமண் ஆகியவற்றால் செய்யப்பட்ட காதணிகளும் வேறு அரிய வகை மணிகளும், அணிகலன்களும் கிடைத்துள்ளன.

மேலும் கட்டிடங்களின் தரைத்தளங்கள் மதில்சுவர்கள், கால்வாய்கள், பெரும் தொட்டிகளும் அவற்றின் உள்ளே தண்ணீர் செல்வதற்கும், வெளியேறுவதற்குமான அமைப்புகள், வட்டக் கிணறுகள், மூடிய மற்றும் திறந்த வடிகால்கள், சுடுமண் குழாய்கள் போன்றவை முதன்முறையாகக் கிடைத்துள்ளன. ஒரு பெரும் நகர நாகரிகம் இருந்ததற்கான அடையாளச் சின்னங்களே இவையாகும்.

கீழடியில் 110 ஏக்கர் பரப்பளவைக் கொண்டிருக்கும் தொல்லியல் மேட்டில் வெறும் 50 சென்ட் பரப்பளவிற்குத்தான் அகழ்வாய்வு நடத்தப்பட்டிருக்கிறது. இந்த ஆய்வினை மேற்கொண்டிருக்கும் இந்திய தொல்லியல் துறையின் கண்காணிப்பாளரான அமர்நாத் இராமகிருட்டிணா “கி.மு. 3ஆம் நூற்றாண்டை சேர்ந்த இடமாக இந்த இடம் அமைந்திருக்கிறது. 2013ஆம் ஆண்டில் நாங்கள் அகழ்வாய்வு பணியைத் தொடங்கியபோது, சங்கக் காலத்தைச் சேர்ந்த சுமார் 293 நகரங்கள் வைகை ஆற்றின் இருகரைகளிலும் அமைந்திருப்பதை கண்டறிந்தோம். தமிழ்நாட்டிலேயே 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட நகர்ப்புற நாகரிகத்தின் முதல் தடயம் இதுவாகும்.

அரிக்கன்மேடு, காவிரிப்பூம்பட்டினம், உறையூர் போன்ற தொன்மையான நகரங்களில் செய்யப்பட்ட அகழ்வாய்வில் கிடைத்ததைவிட கீழடியில் அதிக எண்ணிக்கையில் தொடர்ச்சியாக பல கட்டிடங்கள் கண்டறியப்பட்டு வருகின்றன. சங்க காலத்தில் கட்டிடங்களே இல்லை என்ற கூற்றை இந்த அகழ்வாய்வு மாற்றியமைத்துள்ளது. இங்கு ஒரு நகர நாகரிகம் வாழ்ந்ததற்கான அடிப்படை ஆதாரங்கள் அத்தனையும் கிடைத்துள்ளன. அரப்பா நாகரிகம் போன்று சுடுமண், கழிவு நீர்க் கால்வாய், வசதியுடைய கட்டிட அமைப்புகளும் கண்டறியப்பட்டுள்ளன. மேலும் தமிழ்நாட்டில் இதுவரை நடைபெற்ற அகழ்வாராய்ச்சியில் இப்போதுதான் முதன்முறையாக சுடுமண் முத்திரை கிடைத்துள்ளது. அக்கால மக்கள் வாணிக நோக்கத்திற்காக இந்த முத்திரைக் குறியீட்டை பயன்படுத்தியிருக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

இந்தப் பகுதியில் பத்து முதல் 15 ஆண்டுகள் வரை அகழ்வாராய்ச்சி செய்ய வேண்டியுள்ளது.

அகழ்வாராய்ச்சியில் கிடைத்த பொருட்களை, இங்கு பத்திரப்படுத்தி வைக்க கட்டிடங்கள் இல்லை. கூடாரங்களில்தான் வைக்கப்பட்டுள்ளன. இங்கு எடுக்கப்பட்ட பொருள்களை, வேதியல் முறையில் சுத்தம் செய்வதற்குரிய சோதனைச் சாலை இங்கில்லை. மைசூரில்தான் உள்ளது. அங்கு கொண்டு சென்று அனைத்தையும் சுத்தம் செய்து திரும்பக் கொண்டுவந்து இங்கு வைப்பதற்கு அருங்காட்சியகம் அமைக்கப்பட வேண்டும்.

இந்தியா எங்கும் இவ்வாறு அகழ்வாராய்ச்சிகள் நடைபெற்ற இடங்களிலேயே 45 அருங்காட்சியகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதைப்போல் இங்கும் அமைப்பதற்கு தமிழக அரசு இரண்டு ஏக்கர் நிலம் கொடுக்க வேண்டும். அப்போதுதான் மத்திய அரசு அதற்கான கட்டிடத்தைக் கட்டித் தரும்.

கீழடியில் நடைபெறும் ஆய்வுகள் முழுமையாக நிறைவேறுமானால் இந்தியாவின் வரலாற்றையே திருத்தி எழுத வேண்டியிருக்கும்.

சங்க கால நகரங்களான மதுரை, உறையூர், கரூர், முசிறி போன்ற பழம்பெரும் நகரங்கள் அழிந்துவிட்டன. கொற்கை, பூம்புகார் ஆகியவை கடலுள் ஆழ்ந்துவிட்டன.

உறையூர், திருச்சி மாநகரத்தில் ஒரு பகுதியாக ஒடுங்கிவிட்டது. இப்போதுள்ள மதுரை நாயக்கர் கால மதுரையாகும். மேலே கண்ட நகரங்களில் மூதூர் மதுரை
அமைந்திருந்த பகுதி மட்டுமே கண்டறியப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் நகர்ப்புற நாகரிகம் முதன்முதலாக கண்டுபிடிக்கப்பட்ட இடம் இதுமட்டுமே. எனவே, இந்த
அகழ்வாராய்ச்சியில் ஈடுபட்டு இதை கண்டறிந்த மத்திய தொல்லியல் ஆராய்ச்சித்துறை கண்காணிப்பாளர் அமர்நாத் இராமகிருட்டிணா மற்றும் அவரது துணை
ஆராய்ச்சியாளர்கள் அனைவரும் தமிழ் மக்களின் பாராட்டிற்கும் நன்றிக்கும் உரியவர்களாவார்கள். இவர்களின் ஆய்வுப் பணிகள் தொடர்வதற்கு மத்திய அரசும், தமிழக அரசும் ஊக்கமளிக்க வேண்டும்.

ஆனால், இந்த அகழ்வாய்வை வெற்றிகரமாக நடத்தியுள்ள அதிகாரிகளைப் பாராட்டிப் பதவி உயர்வு அளிப்பதற்குப் பதில் ஒட்டுமொத்தமாக அனைத்து அதிகாரிகளையும் வெவ்வேறு மாநிலங்களுக்கு மாறுதல் செய்து மத்திய அரசு ஆணையிட்டிருக்கிறது.

இந்தியாவிலேயே தமிழர் நாகரிகம்தான் மிகத்தொன்மை வாய்ந்தது என்பது நிலைநாட்டப்பட்டுவிடக்கூடாது, அதை எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டும் என பா.ச.க. அரசு கருதுகிறது. எனவேதான் வைகை நாகரிக அகழ்வாய்வுப் பணிகளைச் சீர்குலைக்கும் வகையில் அதிகாரிகள் மாற்றம் நடத்தப்பட்டுள்ளது.

இந்திய அரசின் இந்த சதியை முறியடிக்கவும், மாற்றப்பட்ட அதிகாரிகளின் மாறுதல் ஆணைகளை இரத்து செய்து அவர்களை மீண்டும் கீழடியில் பணிகளை செய்ய அனுமதிக்க வேண்டும்.

தொன்மையான தமிழர் நாகரிகத்தை உலகறியச் செய்ய தமிழர்கள் ஒன்றுபட்டு குரல் கொடுக்க வேண்டும்.

மத்திய அரசு இவ்வாறு செய்ய மறுக்குமேயானால் தமிழக அரசின் தொல்லாய்வுத் துறையே இப்பணிகளை மேற்கொள்ள வேண்டும். இக்கோரிக்கைகளை வலியுறுத்தும் வகையில் வருகிற 10-4-17 திங்கட்கிழமையன்று மதுரையில் காலை 10 மணிக்கு தமிழர்களின் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
நடைபெறும்.

தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் அவர்கள் தலைமையில் நடைபெறும் இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் கட்சி வேறுபாடின்றி அனைத்துத் தமிழர்களும், அனைத்துத் தமிழ் அமைப்புகளும், அனைத்துக்கட்சிகளும் கலந்துகொள்ளுமாறு வேண்டிக்கொள்கிறோம்

கீழடியில் அகழ்வாய்வு பணி அதிகாரி இடமாற்றப்பட்டுள்ளார். இந்தி தேசத்தின் சதி

கீழடியில் அகழாய்விற்கான 3வது கட்ட பணிக்கு நிதி கேட்டிருந்த அகழ்வாய்வு பணிகளுக்கான கண்காணிப்பு அதிகாரியாக இருந்த அமர்நாத் அசாம் மாநிலத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.

கீழடி ஆய்வை காலி செய்ய மத்திய அரசு சதி?..3ம் கட்ட ஆய்வுக்கு நிதி கேட்ட அமர்நாத் அசாமுக்கு மாற்றம்! 2500 ஆண்டுகள் பழமை வாய்ந்த தமிழர்களின் பண்பாட்டின் ஆதரங்கள் கிடைத்த கீழடி அகழாய்வின் தலைவராக இருந்த அமர்நாத் அசாம் மாநிலத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

மதுரை: கீழடியில் அகழாய்விற்கான 3வது கட்ட பணிக்கு நிதி கேட்டிருந்த அகழ்வாய்வு பணிகளுக்கான கண்காணிப்பு அதிகாரியாக இருந்த அமர்நாத் அசாம் மாநிலத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். மதுரை அருகே கீழடியில் அகழ்வாராய்ச்சி மேற்கொண்ட போது அங்கு சுமார் 2500 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழர்களின் வரலாற்று பொக்கிஷம் கண்டுபிடிக்கப்பட்டது. சுமார் 5300 பண்டைய பொருட்களும் அங்கே கண்டறியப்பட்டன. மேலும், அகழாய்வு குழியின் இடை அடுக்கில் எடுக்கப்பட்ட பொருட்களில் நடத்தப்பட்ட கரிம பகுப்பாய்வு சோதனையில் கீழடி நகர நாகரீகம் கி.மு. 2ம் நூற்றாண்டுக்கு முந்தையது என்பது உறுதிபடுத்தப்பட்டது.

பாதியில் நிறுத்தம் இந்நிலையில், மத்திய அரசு இந்த ஆராய்ச்சியை பாதியிலேயே நிறுத்தியது. இதனை எதிர்த்து தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும், சமூக ஆர்வலர்களும் எதிர்த்தனர். 3ம் கட்ட ஆய்வு 3ம் கட்ட ஆய்வு இதனிடையே, மதுரை அருகே கீழடியில் புதைந்திருந்த தமிழர் நாகரீகத்தை வெளிக் கொண்டு வந்த புகழ்மிக்க பணியின் கண்காணிப்பாளராக பணியாற்றிய அமர்நாத் ராமகிருஷ்ணன் 3ம் கட்ட ஆய்விற்கான நிதி கேட்டு மத்திய அரசிடம் வேண்டுகோள் வைத்தார்.
அமர்நாத் அசாமிற்கு மாற்றம் அமர்நாத் அசாமிற்கு மாற்றம் இந்நிலையில், கீழடி தொல்லியல் ஆய்வுகளுக்கு தலைமையேற்று நடத்திய அமர்நாத் ராமகிருஷ்ணன் தமிழகத்தில் இருந்து அசாம் மாநிலத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மத்திய அரசு தனது புதிய கொள்கை முடிவுகளைக் காரணம் காட்டி இந்த பணியிட மாற்றத்தை நிகழ்த்தியுள்ளது. ஆய்வில் தொய்வு ஆய்வில் தொய்வு அதிகாரியின் அதிரடி மாற்றத்தால் கீழடி அகழ்வாய்வு பணிகளில் தொய்வு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. இதற்கு தமிழ் ஆர்வலர்களும், வரலாற்று பிரியர்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். அடுத்து யார் இந்த பொறுப்பிற்கு வருவார்கள் என்பதும் தெரியவில்லை. அப்படியே வந்தாலும் இதே உணர்வோடு அகழ்வாராய்ச்சியை மேற்கொள்வார்களா என்ற சந்தேகம் அனைவருக்கும் எழுந்துள்ளது.

tamil.oneindia.com

ரஜனியைத் தற்கொலை செய்வதற்கு துாண்டிய காவாலிகள் !

நல்லுாரடியில் இன்டைக்கு ரஜனியை இஞ்ச வரவைப்பதற்கான ஆதரவுப் போராட்டம் ஒன்டு நடந்தது. யாழ்ப்பாணத்தில் 99 வீதமானவர்கள் எழுதுப்படிக்கத் தெரிஞ்சவர்கள். மிகுதி ஒரு வீதமானவர்களே எழுத்தறிவு குறைந்தவர்கள். யாழ்ப்பாணச் சனம் எவ்வளவு கஸ்டப்பட்டாலும் படிப்பைக் கைவிடாதுகள். யாழ்ப்பாணத்தில இருக்கிற எழுதப்படிக்கத் தெரியாத ஒரு வீதமானதுகளில செரியான பிக்காலித்தனமான போக்குள்ளவர்களில் ( ரஜனியால் வில்லன்கள் என பந்தாடப்படுபவர்கள் போல் உள்ள) சிலரைத் திரட்டி அவர்களின் உறவுகளையும் கிழடு கட்டைகளையும் கொண்டே இந்த ஆர்ப்பாட்ம் நடாத்தப்பட்டது.

இதில் இன்னொரு முசுப்பாத்தி என்னவென்டால் நானும் ஆர்ப்பாட்டம் எப்புடி நடக்குது என்டு விடுப்புப் பாக்கப் போய் தேவையில்லாமல் அதுகள ஏத்தி வந்த ஒரு வான் றைவரிட வானை படம் பிடிக்க முற்பட்டு அவன் தன்ர வில்லத்தனத்தை தன்ர அடியாட்களோட காட்ட முற்பட்டுவிட்டான்.

நான் என்ன ரஜனியோ… பாஞ்சு பாஞ்சு புரட்டி எடுக்க…. வடிவேலப் போல அப்புடியே… ”வாடா… வாடா….” என்டு சொல்லிக் கொண்டு ஓடிவந்துட்டன்…….

உண்மையா ரஜனி ரகசியமா இஞ்ச வந்து இந்த ஆர்ப்பாட்டத்தைப் பார்த்திருந்தால் ”லைக்காகாரனுக்கு செவிட்டைப் பொத்தி ஒரு அறை விட்டுப்போட்டு துாக்கில தொங்கி தற்கொலை செய்திருப்பார்…….

”ஏன்டா… டேய்… ஏன்டா….. உங்களுக்கு இந்த வேலை””””

**

Parani Krishnarajani

போருக்கு பிந்திய சமூகத்தில்
உருக்கொள்ளும் உளவியற்சிக்கல்கள்
பலதரப்பட்டவை.
அதில் இது ஒரு வகை.
இன்று யாழில் ரஜனிக்காக போராடியவர்களுக்கு உடனடியாக ஒரு
கவுன்சிலிங் தேவை.

**

தமிழர்களின் குரல்

ஈழப்போர்ல வக்காலி ஒங்கள கொன்னுருக்கணும்டா ஈனப்பயலுகளா >_< ஈழத்தமிழர்களோட நெஞ்சுறுதிய பாத்து பலமுறை மெய்சிலிர்த்துருக்கேன்டா, ஆனா நீங்கமட்டும் கையில கெடச்சிங்கன்னா வக்காலி கண்டம்துண்டமா வெட்டி வீசணும் >_<

யாருக்கு யார்டா தலைவன் த்தூ….

**
யாழில் ரஜினிக்காக ஆர்ப்பாட்டம்: நடத்தப்பட்டதன் பின்னணி என்ன..?

நடிகர் ரஜினிகாந்த் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளவிருந்த நிலையில், அதற்கு தடை ஏற்படுத்தியவர்களுக்கு எதிராக யாழ். நல்லூரில் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.

ஈழத்துக் கலைஞர்களின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டதாக கூறப்படும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் குறித்து தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறிப்பாக ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட அனைவரும் ஏமாற்றி அழைத்து வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ். மற்றும் வவுனியாவில் இருந்து அவர்கள் அழைத்து வரப்பட்டுள்ளார்கள்.

குறிப்பாக வீடு இல்லாதவர்களுக்கு வீடு பெற்றுத்தருவதற்கான கூட்டம் என தெரிவித்தே பலரும் அழைத்து வரப்பட்டுள்ளனர்.

இது குறித்து ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கருத்து தெரிவிக்கையில், “யாழ். வேலணை பகுதியை சேர்ந்த எங்களை, யாழ்ப்பணத்தில் கூட்டம் என பஸ்ஸில் ஏற்றி வந்தார்கள்.

காலை 10 மணியளவில் எங்களை ஏற்றினார்கள். மதிய சாப்பாடு மட்டும் வழங்கியதுடன், பின்னர் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அழைத்து வந்து விட்டுள்ளார்கள்” என தெரிவித்துள்ளார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட மற்றும் ஒருவர் கருத்து தெரிவிக்கையில், “நாங்கள் யாழ்ப்பாணம் அராலி பகுதியை ​சேர்ந்தவர்கள். வீட்டுத் திட்டங்கள் கிடைக்காதவர்கள், வீடு தேவையானவர்களுக்கு தர போறதாக கதைத்தார்கள்.

இதனையடுத்து, வீடு கையளிப்பது தொடர்பான கூட்டம் எனக்கூறி அழைத்து வந்து இங்கே விட்டுள்ளார்கள். இங்கு வந்த பின்னரே ரஜினி யாழ்ப்பாணம் வர வேண்டும் என்பது தொடர்பான ஆர்ப்பாட்டம் என்று” என அவர் கூறியுள்ளார்.

இல்லத்தின் வாயில்க்கதவில் தலைவர் பிரபாகரன் உருவத்தை செதுக்கிய தமிழன் !

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் அவர்களின் தோற்றத்தை தனது இல்ல பிரதான நுழைவாயில் கதவில் செதுக்கியுள்ளார் தமிழ் நாட்டைச் சேர்ந்த வழக்கறிஞர் சதீஷ்குமார்.

புதிதாக அமைக்கப்பட்ட தனது இல்லத்திலேயே இவர் இந்த முயற்ச்சியை மேற்கொண்டுள்ளார் .

குறித்த இல்லத்தின் புதுமனைப் புகு விழாவிற்குச் சென்ற பலர் கதவில் தமது தலைவர் பிரபாகரனின் உருவத்தை பார்த்து மகிழ்ச்சி அடைந்ததுடன் புகைப்படங்களையும் எடுத்துக்கொண்டுள்ளனர்.

Up ↑