Search

Eelamaravar

Eelamaravar

Tag

ஈழம்

காணாமல் போன சகோதரனை தேடி போராடிய சகோதரி இனப்படுகொலை!

சகோதரனை தேடி போராடிய சகோதரி பலியான பரிதாபம்!

காணாமல் போன தமது உறவுகள் தொடர்பான தகவல்களை வெளிப்படுத்தக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வந்த பெண் ஒருவர் வவுனியாவில் மரணமடைந்துள்ளார்.

போராட்டத்தில் ஈடுபட்டு வந்த 24 வயதான இராசநாயகம் நிலா என்ற யுவதியே உடல்நலப் பாதிப்பினால் மரணமடைந்துள்ளார்.

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளின் தகவல்களை வெளிப்படுத்தக் கோரி 500 நாட்களையும் தாண்டி போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்தப் போராட்டத்தில் தனது சகோதரனைக் காணவில்லை எனத் தெரிவித்து குறித்த பெண் போராட்டத்தில் ஈடுபட்டு வந்துள்ளதுடன், தொடர்ச்சியான போராட்டத்தில் ஈடுபட்டு வந்தமையால் மன அழுத்தத்தினால் பாதிப்படைந்திருந்ததாக அவரது உறவினர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் நடப்பது சர்வாதிகார ஆட்சியா?

•“நாம்தமிழர்” சீமான் கைது. அவர் மீது பல வழக்குகள்.

•நூல் வெளியிட்டமைக்காக தேசத்துரோக குற்றச்சாட்டில் தோழர் வெற்றித்தமிழன் சிறையில் அடைப்பு

•எட்டு வழிச்சாலை தொடர்பாக மக்கள் கருத்து கேட்டமைக்கு முன்னாள் எம்.எல.ஏ பாலபாரதி மீது வழக்கு

•சி.பி.எம் முன்னாள் எம்எல்.ஏ டெல்லிபாபு மீது வழக்கு, கைது

•மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்த 6 பேர் மீது தேசிய பாதுகாப்புச் சட்டம். ஒருவர் மீது தேச துரோகச் சட்டம்

•தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் மீது தேசத் துரோக வழக்கு

•இயக்குனர் வ.கௌதமன் மீது வழக்கு

•மே 17 திருமுருகன் காந்தி மீது வழக்கு

•இயக்குனர் அமீர் மீது வழக்கு

•புதிய தலைமுறை தொலைக்காட்சி மீது வழக்கு

•நடிகர் மன்சூர் அலிகான் மீது வழக்கு

•சேலம் கல்லூரி மாணவி வளர்மதி மீது வழக்கு

•சிறையில் இருக்கும் சமூக செயற்பாட்டாளர் முகிலன் மீது தேசத் துரோக வழக்கு.

•சுற்றுச்சூழல் ஆர்வலர் பியூஸ் மானுஷ் மீது வழக்கு

•போலீஸை விமர்சித்தமைக்காக தொலைக்காட்சி நடிகை நிலானி மீது வழக்கு, கைது
.
•ஸ்டெர்லைட் படுகொலை விசயத்தில் போலீஸை விமர்சித்து வாட்ஸ் அப்பில் வீடியோ வெளியிட்ட திருச்சியைச் சேர்ந்த பெண் மீது வழக்கு, கைது

•சேலத்தில் நூற்றுக்கணக்கான விவசாயிகள் மீது வழக்கு மற்றும் தினமும் தொடரும் கைதுகள்

•திருவண்ணாமலையில் ஆலோசனைக் கூட்டம் நடத்தியதற்காக விவசாயிகள் கைது

•பிருந்தா காரத் தலைமையில் தூத்துக்குடியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்துக்கு, அனுமதி கடிதத்தில் உறுதி அளித்திருந்ததைக் காட்டிலும் கூடுதலாக கூட்டம் வந்துவிட்டனர் என வழக்கு

ஆர்ப்பாட்டம், கண்டனக் கூட்டம் மட்டுமல்ல… அரங்கக் கூட்டத்துக்குக் கூட அனுமதி மறுக்கப்படும் நிலை..
.
சேலம் 8 வழிச்சாலை செய்திகளை ஒளிபரப்பும் தொலைக்காட்சிகளுக்கு நெருக்கடி. அரசு கேபிளில், சம்பந்தமே இல்லாத வரிசையில் மாற்றிவிடும் நிலை..
.
‘போராட்டம் நடத்துவதை விமர்சிக்கும் பா.ஜ.க.வினரே போராட்டம் நடத்துவதுதான் வினோதம்’ என ட்விட்டரில் எழுதியதற்காக, சென்னையில் பணியாற்றும் அதிராம்பட்டினத்தைச் சேர்ந்த ஓர் இளம் (இஸ்லாமிய) பத்திரிகையாளரை அழைத்துச் சென்று போலீஸ் விசாரணை

அனைத்து சக்திகளும் ஒன்றிணைந்து இந்த சர்வாதிகார அரசை அகற்ற வேண்டிய தருணம் வந்துவிட்டது.

Balan tholar

திராவிட மடாதிபதி பெரியவா வீரமணி அவர்களே…

நல்லா வளர்க்குறீங்கப்பா திராவிடத்தை

Cartoonist Bala

மோடி முதல் எடப்பாடி வரை இனி நார் நாராக கிழிப்பேன்… ஒரு காட்டு காட்டிய கார்ட்டூனிஸ்ட் பாலா: அடுத்து எடுக்கப்போகும் அதிரடி முடிவு..?


கார்ட்டுனிஸ்ட் பாலா முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நெல்லை கலெக்டர் மற்றும் நெல்லை காவல்துறையை விமர்சனம் செய்து கார்டூன் வரைந்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இனிமேல் தான் அதிகம் வரைய போகிறேன் என்று கூறி உள்ளார்.

மேலும், மோடியில் தொடங்கி எடப்பாடி வரை, தவறு செய்வது யாராக இருந்தாலும், அப்படித்தான் வரைவேன். நான் ஒன்றும் கொலை குற்றம் செய்து விடவில்லையே. ஒரு தகப்பனாக இரண்டு குழந்தைகள் எரிவதை பார்த்து மனம் வெம்பி தான் அப்படி வரைந்தேன் என்று கூறியுள்ளார்.

கடந்த அக்டோபர் 23-ஆம் தேதி நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து இசக்கிமுத்து, அவரது மனைவி சுப்புலெட்சுமி மற்றும் அவரது இரண்டு குழந்தைகளுடன் தீக்குளித்தார். இந்த சம்பவத்தில் நால்வரும் உடல் கருகி உயிரிழந்தனர்.

நாட்டையே அதிரவைத்த இந்த சம்பவம் குறித்து கார்டுனிஸ்ட் பாலா முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நெல்லை கலெக்டர் மற்றும் நெல்லை காவல்துறையை விமர்சனம் செய்யும் கேலிச்சித்திரம் ஒன்றை வரைந்தார்.

அவர் வரைந்த இந்த கார்ட்டூன் லென்ஸ் தளம் மற்றும் அவரது சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டார் அது வைரலாக பரவியது. இதையடுத்து, நெல்லை கலெக்டர் சந்தீப் நந்தூரி காவல்துறையில் புகார் அளித்தார்.

இந்தநிலையில்,தற்போது அவர்மீது வழக்குப்பதிவு செய்து நெல்லை குற்றப்பிரிவு போலீசார் அவரை கைதுசெய்துள்ளனர்.

இதையெல்லாம் பார்த்தால், இந்த சனநாயக நாட்டில் மாற்றுக் கருத்துக் கொண்டோரை எதிரிகளாக பாவித்து அச்சுறுத்துவதும், மாற்று சிந்தனையாளர்களை கைது செய்து சிறைப்படுத்துவதும் நடப்பது சனநாயக ஆட்சியா, இல்லை சர்வாதிகார ஆட்சியா என்கிற சந்தேகத்தை எழுப்புகிறது.

குறிப்பாக மத்தியிலே பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு மிகவும் மோசமான இந்நிலை..அதன் எடுபிடி அரசான தமிழ்நாட்டின் அதிமுக எடப்பாடி அரசிலும் தொடர்வது கொடுமையிலும் கொடுமை.

பாலாவை நெல்லை போலீசார் அவர் வரைந்த கேலிச்சித்திரம் ஒன்றிற்காக கைது செய்வதாக கூறி ஒரு கொடும் குற்றவாளியை போல இல்லம் தேடி சென்று அவரது குடும்பத்தினர் முன்பாக தர தர வென இழுத்து சென்றிருப்பது மிகவும் வேதனையானது.

பாலாவை மனித உரிமைகளுக்கு அப்பாற்பட்டு கைது செய்திருப்பதன் மூலம் சனநாயகத்தின் 4 ஆவது தூணான இதழியல் சுதந்திரத்தை எடப்பாடி அரசு இன்று கொளுத்தி குப்பையில் வீசி எரிந்திருக்கிறது.

நெல்லை மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் துறை ஆகியவற்றின் அலட்சியத்தால் கந்துவட்டிக் கொடுமையால் ஒரு குடும்பமே அழிந்ததை தனது கேலிச்சித்திரத்தின் மூலம் கார்ட்டூனிஸ்ட் பாலா வினா எழுப்பியது ஒரு மிகச்சாதாராண இதழியாலாளர்களுக்கே உரிய கடமை.

நடந்திருக்கிற தவறுகளை திருத்திக் கொள்ள வக்கற்ற அரசு, கேள்வி எழுப்பியவர்களை சிறைப்படுத்தி ஒடுக்குவதன் மூலமாக நிலையாக நின்று விடலாம் என்று நினைப்பது அறிவீனம்.

தமிழ்நாட்டில் இக்காலத்தில் ஒரு அறிவிக்கப்படாத அவசர நிலை பிரகடனம் நடந்துக் கொண்டு இருக்கிறது என்பதையே கார்ட்டூனிஸ்ட் பாலாவின் கைது நடவடிக்கை காட்டுகிறது

Cartoonist-Bala

ஈனர்கள் வாழும் பூமியாக மாறும் நம் வீரம் விளைந்த தேசம்.

கிளிநொச்சியில் ஒரு ஏழை பெண் தலைமைத்துவ குடும்பம் ஒன்றுக்கு வாழ்வாதார உதவியாக வழங்கப்பட்ட பசுமாட்டை இரவோடு இரவாக திருடிச் சென்று இறைச்சிக்காக வெட்டியுள்ளனர்.

கிளிநொச்சி ஜெயந்திநகரில் அமைந்துள்ள அவரது தற்காலிக வீட்டு வளவில் கட்டியிருந்த பசுவினை திருடிச் சென்றவர்கள், ஜெயந்திநகர் மீனாட்சி அம்மன் கோவிலருகில் வைத்து வெட்டி இறைச்சியினை எடுத்து விட்டு எச்சங்களை விட்டுச் சென்றுள்ளனர்

இரண்டு பிள்ளைகளின் தாயாரான பெண்ணுக்கு வழங்கப்பட்ட பசுவையே இவ்வாறு வெட்டியுள்ளனர். மிகவும் வறுமை கோட்டிற்குள் வாழ்ந்து வரும் இவருக்கு யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தொண்டு நிறுவனம் ஒன்று பசுவை வாழ்வாதார உதவியாக வழங்கியிருந்தது எனத் தெரிவிக்கப்படுகிறது.

கணவன் விசேட கொமாண்டோ பிரிவில் இருந்து இறுதியில் கைது செய்யப்பட்டு காணாமல் போன நிலையில் எவ்வித வருமானமும் இல்லாமல் மகனுடன் கூலி வேலைக்குச் சென்றும் மற்றும் சகோதரர்கள் மூவர் போராளிகளாக இருந்து வீரச்சாவடைந்தும் இன்னுமோர் சகோதரர் எல்லைப்படையில் இருந்து வீரச்சாவடைந்தும் உள்ள பெண்ணுக்கு

இலண்டன் வாழ் புலம் பெயர் ஈழத் தமிழரான திருமதி சரஸ்வதி சண்முகநாதன் 16-03-2018 அன்று யாழ் எய்ட் ஊடாக வாழ்வாதார உதவியாக வழங்கிய 10 லீற்றர் பால் தரக்கூடிய அடுத்த மாதம் கன்றீனப் போகும் பசுவை களவாடி வெட்டி இறைச்சியாக்கி கன்றை வெளியில் எடுத்து வீசி மிருகத்தனமான செயலினை நிகழ்த்தி உள்ளது ஒரு கும்பல்!

Balan tholar

இணைய-காகிதப் புலிகள், அமைப்புக்களுக்கும் ஓர் எச்சரிக்கை !

ஏற்கனவே இணையத்தில் திருடி ஈழ விபச்சாரம் !  இது பற்றி முழுமையாக எழுதியிருந்தோம்.  யார் துரோகிகள் தமிழ்மீடியா கவுஸ் ,களத்தில், ஈழப்பறவைகள் ?

தமிழ்மீடியா, ஈழப்பறவைகள் பதிலளித்திருந்தார்கள் , களத்தில் பதிலளிக்கவில்லை மாறாக திருட்டைத் தொடர்ந்து வருகின்றார்கள் .  நாம் தற்போது யாரையும் சுட்டிக்காட்ட முற்படவில்லை .

யுத்தம் தீவிரமான காலத்திலிருந்து   எமது யூரியூப் காணொளிகள் , முகநூல் , வலைப்பூ கணக்குகள்  தொடர்ச்சியாக முடக்கப்பட்டு வந்தன.  பின்னர் சிறு இடைவெளிக்கு பின்னர்  மீண்டும்  அதை விட தீவிரமாக ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது.    அதுவும் யூரியூப்  நிர்வாகம் வேண்டுமென்றே செய்கின்றது . எமது தரப்பு  நியாயத்தை எடுத்துரைக்க சந்தர்ப்பம் கொடுக்காமலேயே விதிமுறைகளை மீறி கணக்கையே மூடுகின்றது.

நாம் தமிழர் போன்ற கட்சிகளின் எழுச்சியின் பின்னால் தமிழகம் சற்று இப்போது தான் விழித்துக் கொண்டிருக்கின்றது சீமான் ஈழவிஜயம் : கொளத்தூர்மணி -வைகோ பொய்பிரச்சாரம் நேரடி சாட்சி விளக்கம் !  நாம் பதிவிட்ட பின்னர் எமது எல்லாளன் முகநூல் கணக்கையும் முடக்கி விட்டார்கள்.

கடந்த 6 மாதத்தில் ஈழவர்குரல், ஈழம்வியூ யூரியூப் கணக்குகளை மூடிவிட்டது. எல்லாளன் முகநூல் கணக்கையும் மூடியிருக்கின்றார்கள் இவை தற்செயலான சம்பவங்களாக படவில்லை .

இதுவரை காலமும் இந்த இணைய- காகிதப்புலிகள்  அமைப்புக்கள் எம்மீதுள்ள போட்டி , பொறாமை, எதிர்மறை விமர்சனங்களால் என்னுடைய தனிப்பட்ட பிரச்சனையாக்கி யாரும் அலட்டிக்கொள்ளவில்லை.

நாமும் தொடர்ச்சியாக போராடிக் காப்பாற்றி வந்தோம் ஆனால் இம்முறை எமக்கு எந்த சந்தர்ப்பமும் கொடுக்கப்படாமல் எமது கணக்குகள் மூடப்படுகின்றன.  அதுவும்  தேசியத்தலைவரின் மாவீரர் நாள் உரை கூட பயங்கரவாத உரை என்னும் போர்வையில் நீக்கப்படுகின்றது  .

அதற்கு ஒரு படி மேல் சென்று தேசியத்தலைவரின் 50 வது அகவை தலைநிமிர்வு காணொளித் தொகுப்பை  (IWPL )Mumbai based company also known as Isha Webhosting Pvt Ltd   மும்பை கம்பனி உரிமை கோருகின்றது. அதனால் இந்தக் காணொளி தற்போது யூரியூபிலிருந்து அகற்றப்பட்டுக்கொண்டிருக்கின்றது . இதன் மூலம் எமது கணக்கையும் மூடிவிட்டார்கள். எமக்கு எந்தச் சந்தர்ப்பமும் கொடுக்கப்படவில்லை.

இவை எல்லாம் திட்டமிட்டு நடாத்தப்படுகின்றனவா ?

புலிகளை பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்தி ஒரு புறம் எமது காணொளியை நீக்கி கணக்கை முடும் யூரியூப் நிறுவனம்,  புலிகளால் தயாரிக்கப்பட்ட காணொளியை மும்பைக் கம்பனி உரிமை கோருவதைக் கண்டு கொள்ளவில்லை .

அப்படியானால்  யூரியூப்பில் புலிகளின் போராட்டக் காணொளிகள் இனி தொடர்ச்சியாக அகற்றப்படப்போகின்றது என்றே எமக்கு தோன்றுகின்றது.  எம்மால் தயாரிக்கப்பட்ட காணொளிகளை வெட்டி ஒட்டி பதிவேற்றியவர்களுக்கும் இது பொருந்தும்.

போட்டி போட்டு காணொளிகளை வெட்டி ஒட்டி பதிவேற்றுபவர்கள் அந்தக் காணொளிகளை தக்கவைத்துக் கொள்ள போராடவில்லை. அதற்கு வலுசேர்க்கவும் இல்லை மாறாக இது எனது தனிப்பட்ட பிரச்சனை என்று விட்டுவிட்டார்கள் .

கடந்த 10 வருடங்களாக நாம் தொடர்ச்சியாக பல காணொளிகளை உருவாக்கி பதிவேற்றியிருந்தோம்,  அதை தக்க வைக்க அதற்கு மேல் போராடியிருக்கின்றோம்

ஆனால் இம்முறை நாம் போராடப் போவதில்லை அப்படியே விட்டு விடப்போகின்றோம் அதன் தொடர்ச்சியாக இவர்களது காணொளிகளும் நீக்கப்படும் அப்போது இவர்களாகவே போராடுவார்கள் !

தமிழின விரோதிகளும் , துரோகிகளும் யுத்தத்திற்கு முன்பு போல் இன்னும்  அதே வேகத்தில் இயங்கிக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால் பாதிக்கப்பட்ட ஈழத்தமிழினம் நீண்ட தூக்கத்திற்கு சென்றுவிட்டது . மாவீரர், முள்ளிவாய்க்கால் தினங்களில் மட்டும் ஒரு சிலர் முகம் காட்டுவதோடு சரி.

 இது குறித்து உண்மையில் யாருக்காவது , எந்த அமைப்புக்காவது அக்கறை இருந்தால் யூரியூப் நிர்வாகத்திற்கு(  petition ) புகார் மனு எழுதுவதன் மூலம் அல்லது ஆவண செய்யவும் அல்லது புலிகளின் போராட்ட வரலாற்றுக் காணொளிப் பதிவுகள் இல்லாமல் போய்விடும்.

அல்லது

நாம் இந்த இலவச யூரியூப் தளங்களை நம்பியிருக்காமல் எமக்கென்று காணொளிகளை பதிவேற்றும் ஒரு தளத்தை உருவாக்கவேண்டும் ஏற்கனவே இருக்கும் மாவீரர் தளங்களுக்கு இத்தனை போட்டி இணையங்கள், அமைப்புக்கள் இருந்தும் யாரும் இல்லாததைச்  செய்ய முன்வரவில்லை

புலிகளின் போராட்ட வரலாற்றைக் காணொளிகளை பாதுகாத்து ஆவணப்படுத்த எந்த அமைப்பும் இதுவரை முயற்சிக்கவில்லை அப்படி செய்யும் தனிநபர்களையும் ஊக்குவித்து ஆதரவளிக்கவில்லை

ஒரு காணொளியை தயாரிப்பதற்கு பல மணித்தியாலங்கள் தேவைப்படும் , நாம் பல எம்மிடமிருந்த ஒளிவீச்சுக்களை ஒளிநாடாவிலிருந்து உருமாற்றம் செய்து பதிவேற்றியிருக்கின்றோம் அவற்றை திருடி வெளியிடுபவர்கள் உண்மையில் மாவீரர்களை நேசிப்பவர்களாக இருந்தால் எம்மிடம் இல்லாத ஒளிவீச்சு நாடாக்களை உருமாற்றம் செய்து வெளியிட்டிருக்க வேண்டும் ஆனால் அப்படி யாரும் செய்யவில்லையே !

நிதிப்பற்றாக்குறை காரணமாக எம்மால் அப்படி ஒரு தளத்தை உருவாக்க முடியவில்லை

புலிகளின் போராட்ட வரலாற்றுக் காணொளிகளை பதிவேற்றும்  ஒரு இணையத்தை ஆரம்பிக்கவேண்டும்  அதற்கு யாரவது முன்வருவார்களா ?

+++++

சாமத்திய வீட்டு நேரடி ஒளிபரப்பு ,அடுத்து முதல் இரவு காட்சி !

சாமத்திய வீட்டு நேரடி ஒளிபரப்பு

கடந்த சில வாரங்களாக முகப்புத்தகங்களில் சாமத்திய வீட்டு நிகழ்வொன்றை, ஊடகம் என்று கூறப்படும் ஒருவரால் நேரடி வர்ணனை செய்யப்படும் காணொளி ஒன்று வைரலாக சமூகவலைத்தளங்களிலும், தமிழ் இணையதளங்களிலும் பரவிக்கொண்டிருந்தது.

சாமத்திய வீட்டில் சிறுமி நடந்துவரும் அழகு தொடக்கம் தாய் தந்தையர் அணிந்திருந்த உடை பரிமாறப்பட்ட உணவுவரை, அனைத்தையுமே முகநூலில் நேரலை செய்திருந்தார் அந்தச் செய்தியாளர்.

இதை தமிழ் இணையதள ஊடகம் ஒன்று “உலகத் தமிழர்கள் பார்த்துப் பூரிக்கும் யாழ் சிறுமியின் கனேடிய சாமத்திய வீடு..!! (வீடியோ)அண்ணே!!!! அப்படியே கனடாவில கலியாணம் செய்யிற ஜோடிகளின் அன்றைய சம்பவங்களையும் இரவிரவாக வர்ணனை செய்யுங்கோ…. உலகத் தமிழர்கள் பார்த்துப் பூரிக்கும்படியாக அப்படியே இங்கேயும் பிரசுரிப்போம்….” என்று தனது பங்கிற்கு செய்தி பரப்பியிருந்தது.

இதில் இரண்டுவிடயங்களை நாம் கருத்தில் நோக்கலாம் முதலாவதாக சமாதியவிடு தேவையா? அது மிக பிரமணடமாக செயயும் சடங்கா அல்லது அது சம்பிரதாயமா?

இரண்டாவதாக சாமத்திய வீட்டு ஊடக ஒளி, ஒலி பரப்பு தேவையா ? என்பதுதான் புலம்பெயர் சமூகத்தால் பேசப்படுபொருளாக இருக்கிறது !

1) சமாதியவிடு தேவையா ?

ஒரு பெண் உள ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பாரிய மாற்றத்துக்கு உள்ளாகும் பருவம் அவள் பூப்பெய்தும் பருவம்தான். இது பற்றிய சரியான புரிந்துணர்வு புலத்தில் பல பெற்றோர்களிடம் நிச்சயமாக இல்லை. இந்த நிலையில் நாம் இது பற்றிப் பேச வேண்டியதொரு கட்டாயத்தில் இருக்கிறோம்.

புலப்பெயர் நாடுகளில் மாற்றுஇனங்களுடன் சேர்ந்து வளர்ந்து விட்ட நிலையில் சாமத்தியச் சடங்குகள் அவசியந்தானா? சாமத்தியச் சடங்கு எமது கலாசாரத்தில் ஏன் இடம் பிடித்துக் கொண்டது? என்பது போன்றதன் கேள்விகளுக்கு மிகத் தெளிவான கருத்துக்களோ அல்லது விளக்கங்களோ இதுவரை சரியான முறையில் புலம்பெயர் தேசங்களில் கிடைக்கவில்லை.

கடனடாவில் உள்ள 40 தமிழ் குழந்தைகளிடம் ஒரு ஆய்வொன்றை நடத்தியபோது பெரும்பாலான பிள்ளைகள் தமக்கு இப்படியான சடங்குகளில் உடன்பாடில்லை என்றே தெரிவித்துள்ளார்கள் . பெற்றோரின் விருப்பதுக்காவே அவர்கள் இதை செய்வதாகவும் கூறிகின்றார்கள். அதேநேரம் பெற்றாரிடம் கேட்ட்டபோது பிள்ளை ஆசைபடுகிறார்கள் என்று நாசூக்கான பொய்யை கூறிச்சமாளிக்கின்றார்கள். கடைசியில் வீடியோ எடுப்பவர், புகைப்படம் எடுப்பவர் மற்றும் மண்டபக்காரர் சேர்ந்து சாமத்திய வீட்டை ஒரு கொண்டாட்டமாக செய்து கொடுக்கிறார்கள். எது எப்படியோ பத்து வருடத்துக்கு முன்னர், யுத்தகாலத்தில் இருந்த கனடிய தமிழர்களின் வாழக்கை பொருளாதார நிலையில் இருந்து தற்பொழுது தமிழ்ச் சமூகம் அபரீத வளர்ச்சி கண்டுள்ளது. எப்படி வளர்ச்சி பெற்றிருந்தாலும் குறுகிய சமூக கட்டமைப்புக்குள் வாழும் கனேடிய தமிழர்கள் தமது பொருளாதார வளர்ச்சியை படம் போட்டு காட்டுவதற்கும், இயந்திர வாழ்வாக ஓடி திரியும் நிலையில் சொந்த பந்தத்துடன் உறவை பேணி சந்தோசமாக இருப்பதற்காவும், மகளை அழகு படுத்தி பார்க்கும் ஒரு சந்தோசத்தை ஏற்ப்படுத்தி நிக்கும் நிகழ்வாகவும் இது பதிவு செய்யப்படுகிறது.

இதில் பிரதான பங்கு வகிப்பது வர்த்தக புரட்சி மற்றும் விளம்பர உலகம். சாமத்திய வீடு சடங்குகில் தங்கி உள்ள பல வர்த்தக நிறுவனங்கள் தமது வியாபார விளம்பர உத்திகளை இவ்வகைச் சடங்குகளில் சேர்ப்பதினால் சாதாரண மக்களுக்கான சாமத்திய வீட்டுக்கு கவர்ச்சியாக அமைந்துள்ளது. புடவைக்கடை, புகைபிடிப்பாளர் ,விடியோபிடிப்பாளர் , மணடபம, உணவு பரிமாறும் நிலையங்கள், மல்லிகை பூ வியாபாரிகள் என்று இதில் தங்கியுள்ள வியாபாரங்களை அடுக்கிக்கொண்டே போகலாம். புதிய வர்த்தக உத்திகளும், புதிய சேவைகளும் தான் சமூகத்தின் கலாச்சாரத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் முக்கிய காரணியளாக அமைந்துள்ளன.

இன்னும் பத்து வருடத்தில் சாமத்திய சடங்கு நிலைக்குமா? நிலாக்காதா? என்று கேட்டால் பதில் நிலைப்பதும்  நிலைக்காததும் என்பது அக்காலத்தில் உள்ள சந்தைப்படுத்தலில்தான் தங்கியுள்ளது. சிலர் இப்போது இதை “சேலைச் சடங்கு(Saree Ceremony) என்றும் கூடக் கொண்டாடகிறார்கள். சேலைச் சடங்கானது மற்றய சமுகத்துக்கு நாம் கூறும் மரபு காரணம் மறைந்து, சேலைச் சடங்கு என்னும் புதிய வர்த்தக வடிவம் எடுக்கிறது எனலாம். சாமத்திய வீடு தேவையா இல்லையா என்பதற்கு என்னிடம் பதில் இல்லை. ஆனாலும் உங்கள் மனங்களில் ஏதோ ஒரு மூலையில் நாம் விட்டு வந்த சமூகத்தையும் ,போரில் அழிந்த மக்களையும் மனதில் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.அதே நேரம் கனடா போன்ற வளர்ந்த நாடுகளிலில் உங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் , , கல்வி , பாதுகாப்பு, பண்பாடு போன்றவற்றில் கவனம் செலுத்துங்கள் .

சாமத்திய வீட்டுக்கு ஊடக ஒளி ஒலி பரப்பு தேவையா ?

இது மிகவும் சுவாரிசமானது. இரண்டு வருடத்துக்கு முன்னர் ஒரு நடன ஆசிரியர் தனது மகளின் பிறந்த நாள் நிகழ்வுக்கு தனது ஊடக நண்பர்களையும் அழைத்திருந்தார். என்னுடன் வந்த சில ஊடக நணபர்கள் தாம் கொண்டுவர வேண்டிய பரிசு பொதிக்கு பதிலாக தமது ஒளிப்படக் கருவியைக் கொண்டுவந்து சுற்றி சுற்றி புகைப் படமெடுத்து தமது ஊடகமூடாக வலைத்தளங்களில் பரப்பிவிட்டிருந்தார்கள். இதைத் தொடர்ந்து இன்னுமொரு சமூக புகழ்விரும்பி தனது மகளின் சாமத்திய வீட்டுக்கு ஊடகர்களை அழைத்து சமூகவலைத்தள செல்வாக்கைத் தேடியதைத் தொடர்ந்து, சமூகத்தில் ஒரு VIP நிலையை அடைய விரும்பும் சிலரும் இப்போது ஊடகர்களை அழைக்கத் தொடங்குகியிருக்கிறார்கள்.

இதிலும் அதே வர்த்தகப் புரட்சிதான் முக்கிய காரணமாக இருக்கிறது. ஊடகமும் ஒரு வியாபாரம் என்பதில் யாரும் மாற்றுக்கருத்து கொண்டவர்களாக இருக்க மாட்டார்கள். வியாபாரம் என்று வந்து விட்டால் ஏதாவது மட்டுப்படுத்தப்படட வரைவிலக்கணம் இருகினறதா? என்றால் இல்லை. இனி வரும் ஊடகங்கள் சாம்மதியவீடு மட்டுமல்லாது அந்தச் செய்தியில் குறிப்பிட்ட்து போல முதலிரவுவரை போக ஆயத்தமாக இருக்கிறர்ர்கள். அப்படியான நேரடி ஒளிபரப்பு வந்தாலும் காலம் அதனையும் உள்வாங்கி முன்னேறும். அது தான் வர்த்தக மற்றும் வியாபார உலகம். ஊடக வியாபாரம் அந்த விளம்பரத்தை மேற்கொண்டு தமக்காண சேவை பெறுனர்களை அடைந்தே தீரும். அதீத தொழில்நுற்ப வளர்ச்சியின் வேகத்தினால் பெரும் முதலீட்டில் உருவாக்கப்படும் ஊடகம் என்னும் கட்டமைப்பு இப்போது அன்றாடப் பாவனைப் பொருகளினூடு உள்ளங்ககைகளில் வந்துவிட்ட்து. அதே போல் ஊடக ஆசையுள்ள சாதாரண மக்கள் ஒவ்வொருவரும் ஒரு ஊடகமாக சமூகவலைத்தளங்கள், செல்பேசி மென்பொருட்கள் மூலம் ஊடக நிலையை அடைந்து விட்டார்கள். முழுநேரமாக ஒரு வியாபாரம் வைத்திருப்பவர்களோ, வேலையில் இருந்து ஓய்வு பெற்றவர்களோ சமூக அந்தஸ்திற்காக ஊடகத்தை இன்னொரு வியாபாரமாக ஒரு செல் போனோடு ஆரம்பிக்கலாம். வியாபார போட்டி சந்தை வாய்ப்பை திறந்து விட்டுள்ளது. மாற்றங்கள் பணமாற்று விகிதம்போல் தினம் தினம் மாற்றப் பட்டுக்கொண்டே இருக்கிறது.

ஆதலால் இனி வரும் காலங்களில் சமூகவலைதளங்கள், இணையதளங்கள் என்பன சாமத்திய வீடடையோ அல்லது பெயர் மாற்றப்பட்ட சேலைச் சடங்கு, திருமணங்கள், முதல் தடவையாக மது அருந்துவது போன்றவற்றை சர்வதேச படுத்துவது சாதரணமாக கடந்து போகும்.

இகுருவி

*********
சாமத்திய வீடு என்ற பிற்போக்குத்தனம் பெண் பிள்ளைகள் மீதான அத்துமீறலே..!!!!!!

பனை/தென்னங் குருத்தோலைகள், மாவிலைகள், வாழைத்தண்டுகள் எனச் சூழலிலுள்ள மரங்களிலிருந்து பெற்றவற்றைக் கொண்டு கொண்டாட்டங்களுக்கு – சாவீடுகளுக்கு அலங்கரித்தல் என்பது வழமையானது. அதை நுணுக்கமாக விதவிதமான அலங்கரிப்புகளாக்குவதும் திறமை தான். ஆனால் தங்கள் வீட்டில் ஒரு பெண் குழந்தையைக் கருத்தரிக்கக் கூடிய கர்ப்பப் பையைக் கொண்டவளாய் இருக்கிறாள் என்பதற்கான விளம்பரம் தான் சாமத்தியச் சடங்கு. சிறுமியை அலங்கரித்துப் பலர் முன்னிலையில் நிறுத்தி பழைய – புதிய எந்தச் சடங்கைச் செய்தாலும் அது அவளது முதல் மாதவிடாயின் பொருட்டான நிகழ்வே. அது இரண்டாவதோ அதன் பின் ஏறத்தாழ 400 தடவைகளாவது அவளது வாழ்நாளில் சந்திக்கப்போகும் வலியும் சோர்வும் கூடிய எல்லா நாட்களையும் போல எடுத்துக் கொள்ளப்படாமல் குடும்பமும் உறவுகளும் தங்களின் பெருமைகளையும் கொடுக்கல் வாங்கல்களையும் தீர்த்துக்கொள்ளப் பயன்படுத்தும் ஒரு சடங்காகி விட்டது .

இன்னும் மாதவிடாய் பற்றியோ உடலில் ஏற்படும் இயற்கை மாற்றங்கள் பற்றியோ அச்சிறுமிக்குக் கற்பிப்பதோ அவளோடு அவை பற்றி உரையாடுவதோ கூட நடக்காது. அச்சிறுமிக்கும் தனக்கு ஏன் அக்கொண்டாட்டம் செய்யப்படுகின்றது என்ற புரிதலே இருப்பதில்லை. அது வழமை மற்றைய உறவுகள் அயலவர்கள் நட்புகள் அதைச் செய்தால் நாமும் செய்யலாம் எனும் பழகிப்போனதைச் செய்வோம் என்ற மனநிலை தான் அவர்களை இது பற்றி கேள்விகளைக் கேட்கவோ யோசிக்கவோ விடுவதில்லை. ஆனால், இயற்கைப்பொருட்களாலான அலங்காரத்தை முதன்மைப்படுத்தி ஒரு பேராசிரியர் சாமத்தியச் சடங்கை விதந்தோதுகிறார். அங்கு அச்சிறுமியின் தந்தையாகிய ஒரு பல்கலைக்கழக விரிவுரையாளர் சாமத்தியச் சடங்கு சம்பந்தமாக ஒரு புத்தகத்தை வெளியிட்டுமிருக்கிறார். அதுவொரு ‘அறிவூட்டும் விழாவாக அமைந்தது’ என எழுதியிருப்பதையும் படித்தபோது நமது ஆசிரியர்களும் பெரியோரும் நமக்கு எவ்விதமான சிந்தனைகளை வழங்குகிறார்கள் எனத் திகைப்பும் கோபமும் ஏற்படுகிறது.

இயற்கைப் பொருட்களால் அலங்கார முறைகளும் புதுமையான சடங்குகளும் வித்தியாசமாயிருப்பதாய் பேராசிரியர் எழுதியிருப்பது பொருந்தவேயில்லை. காலகாலமாக மாவிலைகள், ஓலைகள், பாளைகளால் அலங்கரிப்பது வழமை தான். இங்கு கைவேலைப்பாடுகள் தான் புதுமையாம். சடங்குகள் என்றாலே பழமை தானே? பிறகு அதிலென்ன புதுமை? புத்தகத்தில் கட்டுரைகள் எழுதிப் புனருத்தாரணம் செய்கின்ற சாமத்தியச் சடங்கு என்ற பிற்போக்குத்தனமும் பெண்கள் மீதான அத்துமீறலே!

தமிழர்களின் சாமத்தியச்சடங்கின் புதுமைகளோ மிகக் கேவலம். ஹெலிக்கொப்டரில் ஏறி இறங்குதல் வரை அது நீட்சியடைந்து விட்டது. எங்கள் பண்பாடு, எங்கள் கலாசாரம், எம் மகள், என் காசு என்று ஒரு ஹிந்தி சினிமாப் படப்பிடிப்புத் தான் அச்சடங்கில் நடத்திக் காட்டப்படுகிறது.தம் போலிப் பெருமைகளுக்காக மகள்களைக் காட்சிப் பொருளாக்கும் பெற்றோருக்கு அய்யோ கேடு!!

***

சாமத்தியச் சடங்கும் அதனது சமூகத்தளமும்

—- சிவரட்ணம் சுந்தரப்பிள்ளை —

1975 களுக்கு முன்பு ஊர்களில் மின்சாரம், ரேப் றெக்கோடர், தொலைக்காட்சி என்பனவெல்லாம் இல்லை, ரேடியோ கூட ஒரு சிலரின் வீடுகளில்த்தான் பார்க்கமுடியும். இந்தச் சூழலில் ஒரு பிள்ளை பருவமடைந்து விட்டால் ஓரளவு வசதியுள்ளவர்கள் ஒலிபெருக்கி எடுத்து 3 நாட்கள் கொண்டாடுவார்கள். அழைப்பிதழில் கூட‘கொண்டாட்டம் மூன்று நாட்கள் இடம்பெறும்‘ என குறிப்பிடப்பட்டிருக்கும். அந்த மூன்று நாட்களும் அந்த வீட்டில் சாப்பாட்டுக்கு குறைவிருக்காது. வறிய,தாழ்த்தப்பட்ட மக்களின் உணவுத்தேவையினை பூர்த்தி செய்வதாகவும் இந்த நாட்கள் அமையும். இவ்வாறு ஒலிபெருக்கி எடுத்து மூன்று நாட்கள் கொண்டாட்டம் செய்து சாப்பாடு கொடுத்தது அந்தக் குடும்பத்துக்கு ஒரு சந்தோசமான விடயமாகவும் இருந்தது.

பொருளாதார ரீதியாக இவ்வாறு செய்ய முடியாதவர்களின் மனநிலை எவ்வாறு இருந்திருக்கும் என்றோ அன்றைய பொருளாதாரச் சூழ்நிலையில் ஒலிபெருக்கி எடுத்து மூன்று நாள் கொண்டாட்டம் செய்வது ஒரு ஆடம்பரமான விடயம் என்பதையோ எண்ணிப்பார்க்க முடியாத எனது சிறு வயதில் இவ்வாறான சடங்குகளுக்குச் சென்று விளையாடுவதும் ஒலி பெருக்கி இயக்குபவரை நண்பனாக்கிக் கொண்டு நாங்கள் விரும்பும் எம்.ஜி.ஆர், சிவாஜி படங்களிலிருந்து ரி.எம் சௌந்தரராஜனின் பாடல்களை ஒலிபரப்பாக்கச் சொல்வதும் அப்பாடல் ஒலிபரப்பாகும் போது ஏதோ நாம்தான் இயற்றி, இசையமைத்து, பாடியது போல் ஒரு பிரம்மையை நண்பர்களுக்குக் காட்டுவதும்,இரவானதும் எங்களை விடப் பெரியவர்கள் ஒலிவாங்கியை எடுத்துப் பாடுவதும் அவர்களை‘நல்லா பாடுரயள் இன்னும் பாடுங்கோ‘ என அவர்களை ஏற்றிவிட்டு பாட்டைக் கேட்டுச் சிரிப்பதும் ரேடியோ கூட இல்லாத அந்த நாட்களில் இவ்வாறு மூன்று நாட்களாக ஒலிபெருக்கியுடன் பொழுதைக் கழிப்பது இப்போதைய சிறுவர்கள் வீடீயோ கேம்களில் பொழுதைக் கழிப்பது போன்றதாகும்.

அப்போது ஒரு பிள்ளை பருவமடைவதை கொண்டாட வேண்டுமா? வேண்டாமா என்கின்ற வாதங்களோ அல்லது இது ஏன் கொண்டாடப்படுகின்றது என்பது தொடர்பான விளக்கமோ நான் கேள்விப்பட்டது கிடையாது. கொண்டாட வசதியுள்ளவர்கள் கொண்டாடுவார்கள் வசதியற்றவர்கள் வீட்டுடனும் அவர்களது சுற்றத்தாருடனும் இந்தச் சடங்கை முடித்துக்கொள்வார்கள். இங்கு கொண்டாட்டம் என்பது வீட்டில் சமைத்து வருபவர்களுக்கு மனம் சந்தோசப்பட வயிறு நிறைய உணவு கொடுத்து ஒரு விருந்தோம்பல் செய்வதேயாகும்.

1980களுக்குப் பின்பு இந்தக் கொண்டாட்ட நிலையில் மாற்றம் ஏற்பட ஆரம்பிக்கின்றது. அதாவது ஒலிபெருக்கி எடுத்து மூன்று நாட்கள் கொண்டாட்டம் நடாத்துவது நாகரீகமானது அல்ல எனும் ஒரு கண்ணோட்டம் வளர ஆரம்பிக்கின்றது. இந்த வளர்ச்சியின் பயனாக இன்று சாமத்தியக் கலியாணம் தொடர்பாக மூன்று விதமான எண்ணக்கரு கொண்டவர்களைக் காணக்கூடியதாக இருக்கின்றது.

1. அழைப்பிதழ் அச்சடித்து அழைப்பு விடுத்து மண்டபங்களில் மதிய போசன விருந்துடன் நடாத்துபவர்கள்,

2. அழைப்பு விடுத்து மண்டபங்களில் நடாத்துவது நாகரீகமானது அல்ல எனக் கருதுபவர்கள்.

3. பிள்ளை பருவமடைவது அந்தப் பிள்ளைக்குரிய தனிப்பட்ட அந்தரங்கமான விடயமாகும் இதனை மற்றவர்களுக்கு தெரியப்படுத்துவது காட்டுமிராண்டித்தமானது என விட்டுவிடுபவர்கள்.

சரி, இவர்களை தனித்தனியாகப் பார்ப்போம்.

1. அழைப்பிதழ் அச்சடித்து அழைப்பு விடுத்து மண்டபங்களில் மதிய போசன விருந்துடன் நடாத்துபவர்கள்:

இவ்வாறு நடத்துபவர்களில் பெரும்பாலானவர்கள் நாம் எதற்காகச் செய்கிறோம்? என்ன செய்கிறோம்?என்கின்ற எந்தப் பிரக்ஞ்ஞையுமின்றி நாமும் எமது பிள்ளைக்குச் சிறப்பாகச் செய்யவேண்டும் என்கின்ற ஒரே நோக்கம் மட்டுமே உள்ளவர்கள். இந்த நோக்கத்துக்காக தமது பணத்தம்பட்டத்தையும் காட்டத்தவறமாட்டார்கள். உதாரணத்திற்கு மண்டபத்தில் கதிரைகள் இருந்தாலும் நட்சத்திர விடுதிகள் போல் இருக்கவேண்டும் என்பதற்காக துணியுடன் கூடிய கதிரைகளை வாடகைக்கு எடுப்பதும் புரியாணி என்ற பெயரில் அவியாச்சோற்றையும் அதனுடன் கலக்காத மாசிச் சம்பல், கோழிமுட்டை, கோழிப்பொரியல் என உடம்புக்கு ஒவ்வாத உணவை கோப்பையில் அரைவாசிக்குப் போட்டு கொடுப்பது அல்லது தாமாக எடுத்துக்கொள்ளல் (self-service) என்ற பெயரில் பிச்சைப்பாத்திரம் ஏந்துபவர்களாக விருந்தாளிகளை மாற்றுவது. அதிலும் கூட கோழிக்கும் அல்லது இறாலுக்கும் பங்கிடுவதற்கு ஒருவரை வைத்து விருந்தாழியை கேவலப்படுத்துவது. இதனை விட பிள்ளையை அலங்கரிப்பதற்கு, வீடியோ, புகைப்படம்,என பல இலட்சங்கள் செலவு செய்து விருந்தாளியை அவர்களுடைய தம்பட்டங்களைப் பார்த்துச் செல்லும் ஒருவானாக ஆக்கும் சடங்கு.

2. அழைப்பு விடுத்து மண்டபங்களில் நடாத்துவது நாகரீகமானது அல்ல எனக் கருதுபவர்கள்.

இவ்வாறானவர்களில் பெரும்பாலானவர்கள் அரச உயர் பதவிகளில் வசிப்பதோடு காலனியாதிக்க மனோபாவமும் சமஸ்கிருத மயப்பாடும் பண்பாட்டுப் பிரக்ஞையும் அற்றவர்கள். தமது பிள்ளை மற்றும் சொந்தக்காரர்களின் திருபதிக்காக தங்கள் சொந்தக்காரர்களுக்கும் நெருங்கிய நண்பர்களுக்கும் அறிவித்து, வீட்டோடு விருந்து கொடுத்து நடாத்தி முடிப்பவர்கள். இந்த அழைப்புக் கூட ‘மஞ்சள் நீராட்டு விழா‘ ‘ருதுசாந்தி அழைப்பிதழ்‘ என்றில்லாது வீட்டில் விருந்துக்கு வருமாறே அழைப்பு விடுக்கப்படுகின்றது. அதாவது ‘மஞ்சள் நீராட்டு விழா‘ ‘ருதுசாந்தி‘ எனக் கூறுவதே நாகரீகமானது அல்ல எனக் கருதுபவர்கள்.

3. பிள்ளை பருவமடைந்தது அந்தப் பிள்ளைக்குரிய தனிப்பட்ட அந்தரங்கமான விடயமாகும் இதனை மற்றவர்களுக்கு தெரியப்படுத்துவது காட்டுமிராண்டித்தமானது என விட்டுவிடுபவர்கள்.

இந்த 3வது வகைப்பாட்டினுள் வருவபர்களில் பெரும்பாலானோர் உயர் வர்க்கத்தினரும் பெண்ணியல் வாதிகளாகும். இவர்கள் இந்தச் சடங்கு தொடர்பாக முன்வைக்கும் விமர்சனங்கள் பின்வருமாறு அமைகின்றன.

1. சாமத்தியச் சடங்கு என்பது தமது மகள்மாரையே ஒரு கவர்ச்சிப்பொருளாகவும் பாலியல் பண்டமாகவும் காட்சிப்படுத்துவதாகும்

2. பெண் உடலியல் ரீதியான மாற்றத்தால் பாலியல் உறவுக்குத் தயாராகும் சந்தர்ப்பத்தில் அந்தப் பெண்ணை ஒரு பாலியல் பண்டமாக உணரப் பண்ணி மற்றவர்களுக்கும் அதனை தெரிவிக்கும் சடங்கு.

3. ஆண்களுக்கு சுகமளிப்பதற்கு பெண்ணை அடையாளப்படுத்தும் சடங்கு

4. ‘எனது பிள்ளை திருமணத்துக்கு தயாராகி விட்டாள் என்பதை அறைகூவலாக விடுக்கின்ற ஒரு சடங்காகும்

5. ‘எனது வீட்டிலும் ஒருத்தி தயாராக இருக்கின்றாள் என்பதைக் காட்டிக்கொள்ளும் ஒரு சடங்கு‘

இவற்றில் எந்தப் பெண்ணியல் வாதத்தளங்களும் இல்லாததோடு இவை ஆண்நிலைப்பட்ட வக்கிரத்தன்மையான சொல்லாடல்களாகவும் இருக்கின்றன. இந்த வக்கிரத்தன்மை என்பது அந்தப் பிள்ளையை ஆணுக்காக ஏங்கும் ஒரு பிண்டமாக,இன்பம் கொடுக்கும் ஒன்றாக, பயன்பாட்டுக்கான ஒன்றாகப் பார்த்து வரையறுப்பதாக இருக்கின்றது.

மேற்குறிப்பிட்ட மூன்று நிலையிலுள்ளவர்களுக்குமே இந்தச் சாமத்தியச் சடங்கின் அர்த்தத் தளங்கள்,சமூகத்தேவை, சமூகச் செயற்பாடுகள், சமூக ஒருங்கிணைப்பு, சமூகப்பாதுகாப்பு என்பவை தொடர்பாக எந்தவிதமான அறிவும் அனுபவமும் இல்லாமல் இந்தச் சடங்கை செய்வதும், இந்தச் சடங்கை விமர்சிப்பதும் நடந்துகொண்டிருக்கின்றது. இது எமது சமூக முரண்நகையாகும்.

தமிழ் பண்பாட்டில் காலங்காலமாக பின்பற்றி வந்த ஒரு சடங்கு ஒரு புறம் அர்த்தமற்ற ஆடம்பரச் சடங்காக மாறியிருப்பதும் மறுபுறம் அநாகரிகமானது,காட்டுமிராண்டித்தனமானது என ஒதுக்கப்பட்டிருப்பதற்குமான கருத்துநிலை என்ன என அறிந்து சாமத்தியச் சடங்கின் சமூக பொருளாதார உறவுநிலையை எடுத்துக்காட்டுவது அவசியமாகின்றது

******

பூப்பு நீராட்டு விழா – சமூகத் தேவையா? தா.பெ. அ. தேன்மொழி

ஒவ்வோர் ஆணும் பெண்ணும் எவ்வகை வேறுபாடுமின்றிக் கருவுற்று உருவடைந்து பிறக்கின்றனா்! உருவாக்க நிலைக்கும் பிறப்பு நிலைக்கும் ஒரே சமநிலையைப் பெற்ற ஆணினமும் பெண்ணினமும் உடலில் சில மாற்றங்களைப் பெற்றுள்ளன. அவ்வாறான மாற்றங்கள் ஆண் பெண் வாழ்வியல் நிலையில் இன உருவாக்கம் செய்யும் வகையில் வேறுபட்டு அமைந்துள்ளன. அவை தேவையான பருவங்களில் இருபாலருக்கும் நிகழ்கின்றன. ஆனால் வளா்ச்சியும் மாற்றமும் பெண்களுக்கு மட்டுமே நிகழ்வதாக எண்ணி, அதை வெளிப்படுத்தும் பல சடங்கு நிகழ்வுகளில் அறிவுத் தெளிவின்றி நடத்துகின்ற ஒன்று தான் பூப்பு நீராட்டு விழா என்பதுவாகும்.

ஆண்பிள்ளை பெண்பிள்ளை என்ற வேறுபாடின்றி விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகள், ஒரு பருவத்தில் பெண்பிள்ளைகள் தன் மகிழ்வுத்துள்ளலை நிறுத்திக் கொள்கின்றனா். தம் உள்ளம் குழந்தைமயமான நிலையிலும், ஆனால் சிறிதே அறிய முற்படுகின்ற ஆா்வ நிலையில் ஏன் எப்படி எதற்கு என்ற வினா துளிர்க்கும் நிலையில் உள்ளபோது, தம் உடலில் ஏற்படும் இயற்கையான பருவ மாற்றங்கள் சிலவற்றைக் கண்டு அதிர்ச்சியும் வியப்பும் அடைகின்றனா். எவரிடமும் வினவமுடியாத முதல் மனஅதிர்வைப் பெற்றதன் விளைவாகக் குழப்பத்துடன் உலவுகின்றனா். அவ்வாறான மனநிலையை இருபாலினமும் அடைந்தாலும் “பூப்படைதல்” என்னும் உடலியல் பருவமாற்றம் பெண்களை அச்சமுறச் செய்து, தன் பெற்றோரிடமோ உறவினரிடமோ கூறுகின்ற நிலையை உருவாக்குகிறது.

இந்தப்பருவ நிகழ்வை அறிந்தவா்கள் உடனே அந்தப் பெண்ணைத் தனிமைப்படுத்தி அமரவைத்து, அந்நேரத்திற்கு உடலுக்குத் தேவையான சிறப்பு உணவை அளித்து மகிழ்வடைகின்றனா். ஆனால் அவள் மனத்துக்குள் உருவாகும் வெளிவரவியலா மெலிதான ஒரு வினாவிற்கு உறுதிதரும் விடையளிக்க எவருக்கும அறிவிருப்பதாகத் தெரியவில்லை. அப்பெண்ணின் இயல்பை மாற்றி, இயற்கையான மனக்போக்குகளையும் கட்டாயப்படுத்தித் தடைப்படுத்துகின்றனா். அவ்வாறான காலங்களில் உறவினா்களுள் ஆண்கள் முகத்தையும் பார்க்கக்கூடாதென்றும், அதற்குப் பல மூடத்தனமான காரணங்களையும் சொல்லி அவளை ஊமையாக்கி வைத்திருப்பதும் நடக்கின்றது!

இந்தச் சமுதாயம் கல்வியறிவற்ற பெண்களை உருவாக்கியுள்ளமையும் இந்நிலைக்கான பல காரணங்களுள் ஒன்றெனக் கருதலாம். ஆனால் கல்வியறிவுள்ள பெண்கள் பலரும் ,பகுத்தறிவற்ற மூடா்களாய் வழி வழி வரும் பழக்கவழக்கங்களுக்கு அடிமைகளாகி ஏன் எப்படி எதற்கு என்று வினாவெழுப்பும திறனறிவற்று வளா்ந்து வரும் நிலைதான் இம்மூடப் பழக்கங்கள் வளர மேலும் ஏதுவாகின்றது. பெண்கள், ஒவ்வொன்றையும் அறிகின்ற ஆா்வம் செலுத்தினால்தான், அறிந்தவற்றுள் சரியானது எது? சரியற்றது எது? என்று பகுத்தறியக்கூடிய வாய்ப்பு உருவாகும்! அப்போது தான் எதை ஏற்பது?எதை ஏற்காமல் ஒதுக்குவது என்ற அழுத்தமான நுண் அறிவும் ஏற்படும். அவ்வாறான தெளிவும், பகுத்தறிவும் அறிவுநிலையும் தான் சரியற்றதை நடைமுறைப்படுத்தக் கூடாது என்று போராடக்கூடிய மனத்திண்மையை அளிப்பனவாகும்.

“உலகத்தோடு ஒட்ட ஒழுகல்” என்பதைக் காரணங்காட்டி நாம் வாயை மூடிக்கொண்டு, எதற்கும் மூடத்தனமான நிகழ்வுகளைத் தொடா்ந்து செய்து வருவத பல வாழ்வியல் சிதைவுகளையும் மனச்சிதைவுகளையும் அளிக்கும என்பதை இன்னும் அறியாத பெண்கள் பலா் இருப்பதால்தான் பூப்பு நீராட்டு விழாவை இந்த அறிவியல் காலத்திலும் நாம் ஏற்று நடத்தி இழிவுபட்டுக் கொண்டுள்ளோம்! ஒரு பெண் பூப்பு அடைகிறாள் என்றால் என்ன? அந்தப் பருவம் அடையும் நிகழ்வை உலகிற்கு அறிவிப்பதற்கான காரணம் என்ன? ஆணும் அவ்வாறான பருவநிலையை எய்துவதை இந்தச் சமுதாயம் ஏன் வெளிப்படுத்துவதில்லை? ஆண் – பெண் இருவருமே, உடலில் வளா்சிதை மாற்ற இயக்கம் என்ற அறிவியல் நோக்கில் பார்க்கும்போது பருவமெய்துகின்றனா். ஆனால் பெண்களின் பருவமெய்துகை மட்டிலும் அனைவராலும் கருதப்படும் இவ்விடத்திலிருந்தே பெண்ணை அடிமைப்படுத்தும்நிலை தொடங்கப்படுகிறது.

மேலும் பெண்ணுக்குத் திருமணம் செய்ய வேண்டும், ஆணின் கையில் பிடித்துக் கொடுத்துவிட வேண்டும் என்ற கருத்தும் கூடவே உருவாகிறது. இவற்றை முடிவு செய்வதாகிய நெடுநாளைய மூடவழக்கத்தைப் பெரும்பாலான கல்வியாளா்களும் தவிர்ப்பதில்லை! கல்வியறிவும் பட்டறிவும் ஏன் பகுத்தறிவும கூட, பிறப்பியத்தின் (சாதகத்தின்) காலில் விழுவதைப் பார்த்து அதிர்வடைகின்றோம்! எந்தப் பிறப்பியமும்(சாதகம்) ஆணின் பருவமடையும் நேரத்தைப் பற்றிக் கேட்பதுமில்லை! கணக்கில் எடுத்துக் கொள்வது மில்லை! பருவமடைந்த பெண் என்று வேறுபடுத்தி இழிவுப்படுத்தப்படுவதும் துயருறுத்தப்படுவதும் போல் எந்த ஆணுக்கும் நோ்வதில்லை. எல்லா இழிவுகளையும் ,வாழ்வில் ஏற்படும் அனைத்துக் குறைபாடுகளையும பெண்களின் மீதே சுமத்திவிட்டு ஆண்களில் பெரும்பான்மையானவா்கள் பொறுப்பின்றி பெருமிதமாகத் தள்ளி நிற்கின்றனா்!

ஆனால் ஆணும் பெண்ணும் சமம் என்று சமுதாயம் வெட்கமின்றி உரக்கக் கூவி அங்கலாய்க்கிறது! பருவமடைந்த பெண் தனக்கேற்பட்டுள்ள நிலைபற்றி அறியாத குழப்பநிலையில் உள்ளபோது ஒவ்வொரு தாயும் அவளுக்கேற்பட்டுள்ள உடலியல் மாற்றநிலை பற்றி விளக்கி, அவளை இயல்பான நிலையில் இருப்பதற்கு அறிவான முறையில் மிகப் பதனமாகக் (பக்குவமான) கூற வேண்டியது இன்றியமையாக் கடமை! உலகியல் சடங்கிற்காக அல்லது நம் மரபுவழக்கம் மாறாமல் இருப்பதற்காக, நாம் நடத்தும் பூப்பு நீராட்டு விழா வழியாகப் பெண் பருவமடைந்த செய்தியை விளம்பரப்படுத்திப் பெண்ணைப் பொருளாக்குகிறோமே தவிர, அவளின் பொருள் பொதிந்த உள்ளுணா்வுகள் ஊமையாயிருந்து மடிகின்றனவே என்று எவரும் எண்ணுவதே இல்லை. பெண் திருமணம் செய்யும் தகுதி நிலைக்கு வந்துவிட்டதாகக் கூறும் இந்தக் சமுதாயம் அவளின் மற்ற தகுதிகளை, அவளின் அறிவு நிலைக்கோ ஆக்கச் சிந்தனைகளுக்கொ உரிய தகுதிகளை மறந்து, வெறும் வாழ்வியல் துணையாகவும் பிள்ளைபெறும் பொறியாகவும் (இயந்திரம்) மட்டுமே கருதி அவளை இழிநிலைக்கு உட்படுத்துவதைத் தந்தை பெரியார் போல் இப்போதிருக்கும் ஆண்கள், தடுத்தெதிர்த்து ஒரு பெண்ணிய விடிவிற்கு அடிகோல வேண்டும்.

அறிவார்ந்த நிலையையும் கல்வியின் மேம்பாட்டையும், அதற்கும் மேலாக இச்சமுதாய இழிவுகளை அடியோடு அழிக்கப் பெண்களுக்கேயுரிய கடமைகளையும், பெண்கள் ஒவ்வொருவரும் உணா்வது – உணா்ந்தவா்கள் பிற பெண்களுக்கு உணா்த்துவது – மற்ற சடங்குகள், மூடத்தனமான விழாவை நடத்தாமல் – பெண்களின் அறிவு, பண்பாடு, கல்வி உயா்வுக்கான விழாக்களை பேரளவில் நடத்தினால் சமுதாயம் மேம்படும்: பெண்கள் உள்ஒளியும் கல்வி அறிவும் பெறுவர் ! அத்தகைய பெண்களால், ஒவ்வோர் இல்லமும் அறிவு ஒளிபெறும்! அவ்வாறான தெளிந்த அறிவு ஒளி மட்டுமே சீரழிவுகளையும், மூடத்தனங்களையும் தீய்த்துப் பெண்ணியத்திற்கான விடிவையும் நிலைநிறுத்தும் பெண்களின் அறிவார்வச் செயற்பாடு ஒன்றே அனைத்து விடிவிற்கும் மூலமான கதிரொளி என்பதைப் பெண்களுடன் ஆண்களும் உணரும் நாளே, பெண்ணிய விடுதலை நாள் ஆகும்!

எல்லாவற்றுக்கும் மேலாக ஒன்றை உணரவேண்டும்; இந்த இந்தியத் துணைக்கண்டத்தில் பேரளவு அரசியல் பித்தலாட்டங்களும் , சாதியிழிவுக் கொடுமைகளும், இந்து கிறித்துவ – முகமதிய மதப்பூசல்களும், தலைவிரித்தாடும் உணவுப்பற்றாக்குறைகளும் நீா்ச்சிக்கல்களும் பண்பாட்டுச் சீரழிவுகளும், தன்மையிழந்த விலங்குகளாய் மாந்தா்கள் உலவிக்கொண்டுள்ள இச்சூழலில் நாம் அனைத்து இக்கட்டுகளையும் மறந்து பூப்பு நீராட்டு விழா என்று வெட்கமின்றி நடத்திக் கொண்டுள்ள நிலை, எவ்வளவு வருத்தத்திற்குரியது. ஒரு பெண் பருவமெய்துதல் என்பதை ஓா் அறிவான கண்ணோட்டத்தில் மட்டுமே நாம் நோக்குதல் வேண்டும்.

நாம் பகுத்தறிவு பெற்றுவிட்டதாய் அலம்பல் காட்டிக்கொண்டு, மூடத்தனச் செய்கைகளை முனைந்து திருத்த எண்ணம் கொள்வதாய் காட்டிக் கொள்வதில் எவ்வளவுக்கு உண்மையாழம் உள்ளது? மூடச்சேற்றில் அழுந்தியுள்ள நாம் இச்சமூகத்திற்கே தேவையற்ற இழிசெயல்களை எவ்வாறு அறவே நீக்க இயலும்? பெண்விடுதலை – என்று மேடைப் பேச்சு பேசும் பெண்கள், ஆண்கள் அனைவரும் முதலில் பெண்களுக்கென்று சமுதாயம் உருவாக்கியுள்ள வீணான மூடச்சடங்குகளையும் முட்டாள்தனச் செய்கைகளையும் அறவே நீக்குவதற்கு போராட வேண்டும்! அதற்காகச் செலவு செய்யும் பெருந்தொகையைப் பெண்களின் கல்வி மேம்பாட்டிற்கும், அறிவியல் வளா்ச்சிக்கும் பயன்படுத்தி மகிழ்வடைய வேண்டும். அறிவியல் வளா்ச்சியை விழாவாகக் கொண்டாடும் உயா்ந்த எண்ணததை நாம் இயல்பாகப் பெறவேண்டுமானால், வாழ்வியலில் நாம் கடைப்பிடித்து வருகின்ற அனைத்து மூடத்தனங்களும் குழிதோண்டிப் புதைக்கப்பட்டாக வேண்டும்! மேலைநாடுகளில் அறிவியல் ஆக்கங்களை மேலும் மேலும் பெருக்கத் திட்டமிட்டு, கல்வியைக் குழந்தைகளுக்குக் கற்றுத்தருகின்ற உயா்ந்த சூழலை நாம் எண்ணிப்பார்த்து, நம் நாட்டில் நாமே உருவாக்கிக் கொண்டுள்ள இவ்வகை இழிந்த அடிமைச்சடங்குகளைத் தூா்த்தெறிந்தால் ஒழிய நம் உள்ளத்தில் அறிவு வேட்கையுங் கூடத் துளிர்க்காது!

ஒரு பெண் பிறப்பதற்கும் பருவமடைவதற்கும் – திருமணம் ஏற்பதற்கும் – அவளின் இல்வாழ்வு தொடங்குவதற்கும் – அவள் முதல்குழந்தையைச் சுமக்கும் காலத்தில் வளைகாப்பு என்ற மூடச்சடங்கு செய்தவற்கும்கூட, கணியம் (சோதிடம்) பார்க்கிறோம்! அடுத்து அவள் குழந்தையைப் பெற்ற நொடியிலிருந்து குழந்தைக்கும் கணியம்( சோதிடம்) பார்க்கும் வீண்செயலைத் தொடங்கி வைக்கின்றோம்! பெண்ணின் வாழ்வும், அவள் சோ்ந்த குடும்பத்தின் வாழ்வும் சோதிடத்தாலேயே கணிக்கப்படுகிறது. ஆனால், அவளுக்கு இயற்கையில் வாய்த்த அறிவுப்புலன்களாகிய ஐம்புலன்களும் தூர்க்கப்படும் நிலை தொடங்கப் பெறுகிறது! அவை ஒவ்வொன்றன் உணா்வு வெளிப்பாடுகளும் அறிவோடு இணைந்து செயற்பாட்டால் எத்தகைய அரிய விளைவுகள் நிகழும் என்பதை அறியாமலேயே, அவள் வாழ்வியலுக்கான ஒரு வெறுங்கருவியாக மட்டுமே ஆண்களால் இயக்கப்படுகின்றாள் !

வாய்ச்சுவைக்கான உணவு சமைக்கும் கருவியாக ஊக்கப் பெறுகின்றாள்! பிள்ளைகளைப் பெற்றுத் தரக்கூடிய ஓா் இயற்கைப் பொறியாக ஏற்கப்பெறுகின்றாள்! மேலும், இன்பம் துய்க்க ஏற்ற ஓா் அசையும் பொருளாகவும், விலைபேசித் தன் குடும்பத்திற்கு அழைத்துக் செல்லப்பெறும் தலையான பணியாளாகவும் இன்றும் எண்ணப் பெறுகின்றாள்! அவளின் அறிவும் – அரிய நுண்ணுணா்வும் அவ்வாறான ஆண்களால், எண்ணவோ ஏற்கவோ பெறுவதில்லை! அவா்களுக்கு அந்த அறிவேற்கும் தகுதியும் அமைந்துள்ளதாகக் கூறிட இயலாது! அருமைப் பெண்களே! எண்ணிப் பாருங்கள்! நாம் யார்? …. பகுத்தறிவற்ற சடப்பொருளா நாம்? நம்அறிவும் பகுத்தாயும் திறனறிவும் ஆணாளுமைச் சமூகத்தின் காலடியில் முடங்கிக்கிடக்க வேண்டுமா? ஒரே வழியில் பிறக்கும் நாம் நம் அண்ணன் தம்பியிடமிருந்து எவ்வகையில் மாறுபடுகின்றோம்? பிறப்பது பெண்ணென்றால் அவளுக்கு மூளை இருக்காது, அறிவுணா்வு இருக்காது, மற்ற நுண்ணணர்வுகள் இருக்காது என்று எந்த அறிவியல் ஆய்வினால் மெய்ப்பிக்க முடியும்?

ஏன், நாம் இதற்கெல்லாம் ஊமையாக நின்று நம்மீது சுமத்தப்படும் மூடச்சடங்குகளுக்கு இசைவளிக்கும் வெற்றுப் பதுமைகளாக அமைந்திருக்க வேண்டும்? நாம் என்ன உணா்ச்சியற்ற பிண்டங்களா? எல்லா அறிவிலும் மேம்பட்டவா்கள்! நமக்காக இச்சமுதாயம் நம்மீது திணிக்கும் சடங்குகளையும் விழாக்களையும் பகுத்தறிவு விழிப்போடு அறவே அழிப்பதற்கு நாம் போராடுதல் வேண்டும். பூப்பு நீராட்டு என்றால் என்ன, அவ்விழாவை எடுக்க என்ன காரணம் என்று எந்தப் பெண்ணோ, ஆணோ வெளிப்படையாக விளக்கவியலுமா? பெண்களுக்கான அடிமைக் கூறுகளில் ஒன்றாகவே பருவமெய்துதலுக்கான விழா நடத்தப்பெறுகின்றது. பெண்மையும் இழிவுப்படுத்தப் பெறுகிறது. பருவமெய்துதல் என்னும இயற்கை நிகழ்வை எய்தும் பெண்களைப் போலவே, ஆண்களும் பருவமெய்துகின்றனரே! ஆனால், அதற்கென விழா ஒன்றும் நிகழ்த்தப்படுவதில்லையே?

உடலியல் கூறுகளில் ஏற்படும் மாற்றங்களை அறிவதும், அதுபற்றி மற்றபெண்களுக்கும் ஆண்களுக்கும் அறிவுப்பார்வையில் விளக்குவதும் கற்றறிந்த பெண்களின், ஆண்களின் கடமைகளாகும்! இல்வாழ்விற்கு ஏற்ற உடல் நிலையைப் பெண் அடைகிறாள் என்பதை நாணமின்றி விழாஎடுத்துக் கூறத்துணியும் இவர்கள், ஆண் அடையும் அவ்வாறான நிலையையும் விழா எடுத்துக் கூறத் துணியாதது ஏன்? அதுபோன்றே பெண்களின் இப்பருவமெய்துதல் நிலையையும் இயல்புக்குரியதாக கருத வேண்டும்! பெண்களாகிய நாம் ஏற்கும் சமுக மேம்பாட்டுப் பணிகளுக்காகவும், சமுதாயத்தில் மண்டிக்கிடக்கும சாதிமதச் சகதிகளைத் தூா்க்கும் நிலைக்காகவும், மூடத்தனங்கள் ஒழிந்த அறிவு விளக்கம் பெறும் ஆண் – பெண் சமூக விழிப்பிற்காகவும் பெண்களுக்கான விழா இருக்க வேண்டுமே தவிர, அறியாமையைால் தொடா்ந்து நமக்காக நடைபெறும் பூப்புச்சடங்குகள், வளைகாப்பு விழாக்கள் என்பனவாக இருத்தல் வேண்டா! அன்பும் பகுத்தறிவும் உள்ள தாயுள்ளங்களே! நம் வயிற்றில் உருவாகும் பெண் – ஆண் பிள்ளைகள் இருவரும் சமமானவா்கள் என்பதை நாம் முதலில் உணரவேண்டும்! உடற்கூறுகள் சிலவற்றில் ஆண் பிள்ளைகள் வேறுபட்டிருக்கலாம்!

அவை பற்றியான விளக்கத்தை நாம் அறிவு நோக்கில் எடுத்துக் கூறலாம். இருவருக்கும் வழங்கும் மற்றைய அனைத்து உரிமைகளும் சமநிலையில் இருக்க வேண்டும் என்று போராடுவதில் பெண்களாகிய நமக்குத்தான் முதல் உரிமையுள்ளது. கல்விநிலையில், அறிவுநிலையில், நுண்ணோக்கு நிலையில், ஆக்கநிலையில் கணக்கியல் நிலையில், சமூகஅறிவு நிலையில், அதற்கும் மேலாகச் சிறந்த வாழ்வியல் நிலையில், அரசியல் நிலையில் என அனைத்து நிலைகளிலுமே ஆண்களையும் மிஞ்சிய அறிவு பெற்றுள்ள பெண்களை – நாம் அறிவால் ஏந்திப் பெருமையும் ஊக்கமும் அடையச் செய்ய வேண்டும்! அவா்களை ஏந்திழைகளாக்கிக் காட்சிப் பொருளாகவும் நுகா்பொருளாகவும் எண்ணும் ஆண்களைப் புறக்கணித்து, ’பெண்ணிற் பெருந்தக்க யாவுள’ என்பதை மெய்ப்பித்துக் காட்டுவதில் சளைக்காது நாம் போராடினால் மட்டுமே பெண்விடுதலை வெற்றிபெறும்! பெண்களின் மேல் திணிக்கப்பெறும் இழிநிகழ்வுகள் அனைத்தும் புதைக்கப்பெறும்!

பெண்ணுரிமை மலா்ச்சிபெற்று காக்கப்பெறும் ! .

திருக்குறளை முன்னிறுத்தி பதவியேற்றார் விஜய் தணிகாசலம்

கனடாவின் ஒன்ராரியோ பாராளுமன்றம் உத்தியோகபூர்வமாக யூலை 11ஆம் திகதி ஆரம்பித்துள்ள நிலையில் அதற்கு யூன் 7ஆம் திகதி நடைபெற்ற பொதுத்தேர்தலில் ஸ்காபுரோ ரூச்பார்க் தொகுதி பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட தமிழ் இளையவர் விஜய் தணிகாசலம் யூலை 10ஆம் திகதி உத்தியோகபூர்வமாக பதவியேற்றுக் கொண்டார்.

தாங்கள் விரும்பிய புனித நூலை முதன்மைப்படுத்தி பதவிப்பிரமாணம் செய்து கொள்ளும் வாய்பபைப் பயன்படுத்தி தமிழ் மறையாம் திருக்குறளை முதன்மைப்படுத்தியே அவர் பதவியேற்றுக் கொண்டுள்ளார். பெரும் சவால் நிறைந்த மேற்கத்திய அரசியல் அரங்கில் தனது உரிமைகளை சரிவரப்பயன்படுத்தி அவர் தனது பதவிப்பிரமாணத்தை மேற்கொண்டதையிட்டு பலரும் மகிழ்ச்சியும் பாராட்டுதல்களையும் தெரிவித்துள்ளனர்.

புதிய பூதத்தை வெளியே கொண்டுவந்துள்ள விஜயகலா! தந்திர நரியின் எந்திர விளையாட்டு இது!

“கிணறு வெட்ட பூதம் வெளிவந்தது என்பது பழமொழி” பூதம் வெளிவர வேண்டும் என்பதற்காகவே கிணறு வெட்டப்பட்டது என்பது இன்றைய ஐக்கிய தேசியக் கட்சியின் புது மொழியாக இருக்கிறது.

கடந்த முற்பது ஆண்டுகளுக்கும் மேலாக இலங்கை அரசியலை தீர்மானிக்கும் சக்தியாக, தமிழீழ விடுதலைப் புலிகள் விளங்கிக் கொண்டிருக்கிறார்கள். கடந்த 2009ம் ஆண்டு தமிழ்த் தேசிய அரசியல் அரங்கிலிருந்து புலிகள் ஆயுத ரீதியாக அகற்றப்பட்டிருந்தாலும், அவர்களுக்குப் பின்னரான ஒரு பெரு வெளி தமிழ்த் தேசிய அரசியலில் காணப்படுகின்றது என்பதை ஏற்றுத்தானாக வேண்டும்.

விரும்பியோ விரும்பாமலோ புலிகளின் வளர்ச்சியில் ஆரம்ப காலங்களில் இந்தியாவின் பங்கிருந்தது. அது இந்திய அரசின் பூகோள நலனை மையமாகக் கொண்டது. புலிகளை வைத்து ஆசிய அரங்கில் காய் நகர்த்தல்களை அன்றைய மத்திய அரசாங்கம் செய்தது.

எனினும் பின்னர் ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள் எல்லாவற்றையும் தலைகீழாக மாற்றியது. புலிகள் அழிக்கப்பட வேண்டியவர்கள் என்ற மனநிலைக்கு இந்திய அரசாங்கம் வந்தாலும், புலிகளின் தேவை இந்தியாவிற்கு இன்றளவும் இருக்கிறது என்பது, யுத்த முடிவிற்குப் பின்னரான சீனாவின் ஆதிக்கம் இலங்கையில் அதிகரித்ததன் பின்னர் உணரப்பட்டது.

இன்று புலிகள் ஆயுத ரீதியாக அழிக்கப்பட்டு, ஒன்பது ஆண்டுகள் கடந்தும், புலி என்ற வார்த்தையை மகிந்த ராஜபக்ச தரப்பும் சரி, ரணில் விக்ரமசிங்க தரப்பினரும் சரி கைவிடுவதாக தெரியவில்லை.

மீண்டும் புலிகள் வருவார்கள், நாட்டின் இறையான்மைக்கு ஆபத்து வருகிறது, புலிகளின் தலைமை அழிக்கப்பட்டதே தவிர, சர்வதேச நாடுகளில் புலிகள் இயங்கிக் கொண்டிருக்கிறார் என்று தன்னுடைய பிரசாரத்தை மேற்கொண்டிருக்கும் ராஜபக்ச தரப்பு, அதிகாரத்தைக் கைப்பற்ற புலிகளை நினைவுபடுத்துகிறது.

மறுபுறத்தில், ஆட்சியேற்று மூன்றாண்டுகள் கடந்தாலும், பெருமளவிலான வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் அரசாங்கம் காலத்தை வீணடிக்கிறது என்ற குற்றச்சாட்டுக்கு இலக்காகியிருக்கிறது. இன்னொரு புறத்தில் ஊழல் பிரச்சினை அரசாங்கத்திற்கு தலையிடியாக மாறியிருக்கிறது.

இவையொருபுறமிருக்க, கூட்டமைப்பினருக்கு கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்னும் அழுத்தமும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது.

எதிர்க் கட்சித் தலைவர் இரா. சம்பந்தனும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் அரசாங்கத்திற்கு கொடுத்த ஆதரவினை நீக்க வேண்டிய நிலைவரும் என்றும் எச்சரித்திருக்கிறார்.

குறிப்பாக வடக்கில் இருந்து இராணுவ வீரர்களை வெளியேற்றுவது என்பது கூட்டமைப்பின் முக்கிய கோரிக்கைகளில் ஒன்று. ஆனால், அரசாங்கம் இராணுவத்தினை வெளியேற்றினால், மகிந்த ராஜபக்சவின் வலைக்குள் வீழ்ந்துவிடுவோம் என்பதில் தெளிவாக இருக்கிறது.

எப்பாடு பாட்டேனும் வடக்கிலிருந்து இராணுவத்தினை வெளியேற்றும் முடிவினை அராசாங்கம் நிறைவேற்றாமல் காலத்தை இழுத்தடிக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறது.

வடக்கில், தொடர்ந்தும் வாள் வெட்டுக்களும், குழுச் சண்டைகளும் நடந்து கொண்டிருக்கின்றன. இவ்வளவு இராணுவம், காவல்துறையினர் இருந்தும் அவர்களை இனம் கண்டு கட்டுப்படுத்த முடியவில்லை என்பது வேடிக்கையானது.

முற்பது ஆண்டுகளாக போராடிய பெரும் படை பலம் கொண்ட புலிகளை தேடியழிக்கத் தெரிந்த இராணுவ வீரர்களுக்கு, ஏன் வாள் வெட்டுக் குழுவினரை கட்டுப்படுத்த முடியவில்லை என்கிற யதார்த்தமான கேள்வி எழுவதில் தவறில்லை.

ஆனால், இராணுவம் வெளியேறாமல் இருக்க வேண்டுமானால், வடக்கில் வன்முறைகள் நடந்தேற வேண்டும் என்பது மேலிடத்தின் கணிப்பாக இருக்கிறது.

மறுபுறத்தில், வடக்கில் வன்முறைகள் நிகழ்கின்றது. ஆனால் அரசாங்கம் கட்டுப்படுத்த முடியாமல் இருக்கிறது என்று கூட்டு எதிர்க்கட்சி குழப்பத்தை ஏற்படுத்துகிறது. இன்னொருபுறத்தில் இராணுவக் குறைப்புக் குறித்து கூட்டமைப்பும் வடமாகாண சபையும் தொடர்ச்சியாக குரல் கொடுத்துக் கொண்டிருக்கின்றன.

இவர்கள் எல்லோரினதும் வாயை அடைத்து, இராணுவத்தினரை நிலை நிறுத்துவதற்கு அரசாங்கம் இறக்கிய நபர் விஜயகலா மகேஸ்வரனாக இருக்கிறார்.

”மீண்டும் புலிகள் உருவாக்கப்பட வேண்டும்.” அவர்கள் காலத்தில் குற்றச்செயல்கள் நடைபெறவில்லை” என்று மேடையில் பேச, அது தெற்கில் பூதாகரமாக மாறியிருக்கிறது.

அமைச்சரின் பதவியைப் பறிக்க வேண்டும் என்று ஒரு தரப்பும், சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இன்னொரு தரப்பும் துள்ளிக் குதிக்கிறது.

ஆனால், பிரதமர் ரணில் விக்ரமசிங்க இது தொடர்பாக மௌனம் காத்துக் கொண்டிருக்கிறார். விஜயகலா மகேஸ்வரன் பேசிய வார்த்தைகளில் குற்றம் காண முடியாது. அவர் தெரிந்தோ தெரியாமலோ புலிகளின் ஆட்சி குறித்ததான உண்மை நிலையினை வெளியிட்டிருக்கலாம்.

ஆனால், இப்பொழுது எதற்காக வெளியிட்டார் என்பது தான் கேள்வி. ஏனெனில், இப்பொழுது, புலிகளின் மீள் எழுச்சி சாத்தியப்படக்கூடிய ஒன்று எனவே இராணுவத்தினரை வடக்கில் இருந்து வெளியேற்ற முடியாது என்று ஆணித்தரமாக அரசாங்கத்தினால் சொல்ல முடியும். அதைத்தான் சொல்லப் போகிறது.

இன்னொருபுறத்தில், அடுத்த தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிடும் விஜயகலா மகேஸ்வரனுக்கு கண்டிப்பாக வாக்குகள் குவியும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.

மறுபுறத்திலோ, மகிந்த ராஜக்ச எப்படி புலிகள் வருகின்றார்கள் என்று வாக்குச் சேகரித்தாறோ அதேபோன்று ரணில் விக்ரமசிங்க தரப்பினரும் வாக்குகளை சேகரிக்க புலிவேஷத்தைப் பயன்படுத்துவார்கள்.

ஆக, ஒரு கல்லில் பல மாங்காய்களை வீழ்த்தியிருக்கிறார் பிரதமர். வடக்கில் இராணுவக் குறைப்பு சாத்தியமற்ற ஒன்று என்பதை தெள்ளத் தெளிவாக இன்று விஜயகலாவின் பேச்சோடு நிரூபித்திருக்கிறது அரசு.

இலங்கை அரசியலில் ரணில் விக்ரமசிங்க தந்திர நரி என்று முன்னர் விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் குறிப்பிட்டதாகவும், அது தற்போது தான் தமக்கு நன்றாக புரிந்திருப்பதாகவும், அண்மையில் பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் குறிப்பிட்டார்.

அது ஒவ்வொரு இடத்திலும் தெள்ளத் தெளிவாக புலப்பட்டு நிற்பதை தமிழர் தரப்பு சிந்தித்துக் கொண்டால், தமிழருக்கு எதிராக இறுக்கப்படும் முடிச்சுக்களை இனம் காண முடியும்.

இல்லையேல், 2009ம் ஆண்டு சம பலத்தை இழந்த தரப்பு, அதற்கு கீழான அனைத்து பலங்களையும் இழக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படும் என்பதில் இருவேறு கருத்துக்கள் இருக்க வாய்ப்பில்லை.

S.P. Thas

விஜய் டிவி சூப்பர் சிங்கர் மக்களிசைப் புரட்சிப் பாடகன் செந்தில் கணேஷு !

விஜய் தொலைக்காட்சியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பலரையும் கவர்ந்தவர் திண்டுக்கல்லைச் சேர்ந்த ராஜலட்சுமி. இவரும் இவரது கணவர் செந்தில் கணேஷும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பாடி வருகிறார்கள். நாட்டுபுற பாடல்கள் தான் இவர்களது சிறப்பு

சமூக புரட்சிகரமான பாடல்களை இவர்களே எழுதி இசையும் அமைத்து பாடிவருவது இன்னுமொரு சிறப்பு இவர்களது பயணம் மென் மேலும் தொடர விஜய் தொலைக்காட்சியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் வெற்றியாளராக்குவது தமிழர்களது கடமை ஆகும்

இந்த இணைப்புக்குச் சென்று வாக்களிக்கலாம்

https://www.supersingervote.com/

************

https://www.supersingervote.com/senthil-ganesh-super-singer/

********************

நிகழ்ச்சிகள்

http://www.tubetamil.com/?s=super+singer&x=0&y=0

***************

சமீபத்திய நிகழ்ச்சியில், ராஜலட்சுமி தனது குடும்பப் பின்னணி பற்றிப் பேச, அவரை ட்விட்டரில் பாராட்டியுள்ளார் நடிகர் மாதவன்.

ராஜலட்சுமி கிராமியப் பாடல்கள் தான் தமிழர்களின் அடையாளம். கிராமியப் பாடல்கள் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்துவரும் நிலையில் தற்போது விஜய் டிவி-யில் கிராமியப் பாடல்களை மட்டுமே பாடி அசத்தி வருபவர்கள் செந்தில் கணேஷ் – ராஜலட்சுமி ஜோடி.

ரசிகர் பட்டாளம்

அழகான குரலில் பாடி தமிழுக்கும், கலைகளுக்கும் பெரும் சேர்த்து வருகிறார்கள் இவர்கள். தற்போது சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலக்கி வரும் இவர்களுக்கென பெரிய ரசிகர்கள் வட்டம் உருவாகிவிட்டது.

குடும்ப பின்னணி

சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியில், தன்னுடைய அப்பா நெசவுத் தொழிலை செய்துதான் குடும்பத்தை காப்பாற்றினார் என்றார். என் அப்பாவிற்குப்பின் இந்தத் தொழில் அழிந்துவிடும் போல இருக்கிறது. எங்களுக்கு அந்தத் தொழில் தெரியாது, மிகவும் கஷ்டப்பட்டு தான் என் அப்பா எங்களை வளர்த்தார் எனப் பேசினார். பரிசு அதோடு, இந்த நிகழ்ச்சியில் ராஜலட்சுமி கைத்தறி நெசவாளர்களைப் பற்றிய கிராமியப் பாடலைப் பாடினார். பின் கைத்தறி மூலமாக நெய்யப்பட்ட புடவைகளை அனுராதா மற்றும் ஸ்வேதா மோகனுக்கு கொடுக்க ஆசைப்படுவதாக கூறி அவர்களுக்கு புடவைகள் கொடுத்தார்.

மாதவன் பாராட்டு தற்போது நடிகர் மாதவன் ராஜலட்சுமியின் திறமையை பார்த்துவிட்டு எளிமை, அற்புதம், பெருமையாக இருக்கிறது. இது தான் தமிழ்நாடு. இப்படியான உலகத்தை தான் பார்க்க விரும்புகிறேன் என ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

நெடுவாசல் போராட்ட களத்தில் நிறைமாத கர்ப்பிணியாக பாட்டு பாடி போராடிய சூப்பர் சிங்கர் ராஜலட்சுமி

நிகழ்ச்சிகள்

https://www.youtube.com/results?search_query=super+singer+6+senthil+ganesh

நவீன விஞ்ஞானத்திற்கு சவால் விடும் சிங்கள இனத்தின் வரலாறு !

Up ↑