Search

Eelamaravar

Eelamaravar

எங்களிடம் இந்த சில்லித்தனமான வாதத்தைத் தூக்கிக் கொண்டு வராதீர்கள் !

ஈபிஆர்எல்எப் இயக்கம் தமிழ் மக்களுக்கு இழைத்த கொடூரங்களை பதிவு செய்தவுடன் அதற்கு பதிலளிக்க முடியாமல் புலிகளின் இறுதி நேர ஆட்சேர்ப்பை தூக்கிக் கொண்டு வருகிறார்கள் ஈபிஆர்எல்எப் அனுதாபிகள்.

புலிகளின் இந்த செய்ற்பாட்டுக்கு தத்துவ – கோட்பாட்டு ரீதியாக மட்டுமல்ல படைத்துறை விஞ்ஞான அடிப்படையில் தர்க்க ரீதியாகவும் என்னால் பக்கம் பக்கமாக நியாயம் கற்பிக்க முடியும்.

ஏனென்றால் புலிகளின் வீழ்ச்சியோ / அழிவோ எம் போன்றவரை உலுக்கவில்லை மாறாக இறுதி நேரத்தில் புலிகள் இழைத்ததாகச் சொல்லப்படும் குற்றங்களில் ‘புலிகள் எப்படிச் சிக்கினார்கள்?’ என்ற கேள்வியே எம்மைக் குடைந்தெடுத்தது.

அறம் சார்ந்த அந்த கேள்விகளுக்கான தேடலிற்கு கிடைத்த விடைதான் ‘நந்திக்கடல்’ கோட்பாடுகள்.

எனவே எங்களிடம் இந்த சில்லித்தனமான வாதத்தைத் தூக்கிக் கொண்டு வராதீர்கள்.

அதுவும் இந்திய படைகளின் இன அழிப்புக்கு சேவகம் செய்ய வீடுகள்/ கல்விக் கூடங்கள்/ பொது இடங்கள் என்று எந்த வேறுபாடில்லாமல் இளைஞர்களைக் கடத்திச் சென்று கட்டாயப் பயிற்சி கொடுத்து அவர்களின் வாழ்வைச் சூறையாடிய ஈபிஆர்எல்எப் இயக்கத்திற்கு அதற்கான தகுதி எள்ளளவும் கிடையாது.

மக்களிற்கு மட்டும் அதற்கான உரிமை உண்டு. அதற்கான பதிலை தலைவர் ‘நந்திக்கடலில்’ விட்டுச் சென்றிருக்கிறார்.

எனவே இவர்களுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் நமக்கில்லை.

ஆனால் ஆட்சேர்ப்பு குறித்து இன்னும் குழப்பத்திலுள்ள சிலருக்காக தர்க்கம்/ கோட்பாடு என்று நீட்டி முழக்காமல் எளிமையாக எழுதிய முன்னைய பதிவொன்றை இணைக்கிறேன்.

*****

இன்று “Enemy at the Gates” படம் பார்த்தேன். கிட்லரின் படைகள் நிலங்களை விழுங்கிக்கொண்டு ரஸ்யாவில் “Stalingrad” வரை வந்த வரலாறு எமக்கு எல்லோருக்கும் தெரியும்.”Stalingrad” நிலத்தில் வைத்து ரஸ்ய வீரர்கள் கிட்லரின் படைகளை வெற்றிகொண்டு துரத்தியடித்ததும் நாம் அறிந்ததே.. உலக சரித்திரத்தையே மாற்றியமைத்த வரலாறு அந்த சிறு நிலத்தில் வைத்து எழுதப்பட்டது. இந்த பின்புலத்தில் எடுக்கப்பட்ட திரைப்படம் இது.

ஆக்கிரமிப்பாளர்களை என்ன விலை கொடுத்தாவது துரத்தியடிக்க வேண்டும் என்பதற்காக பெரும் அழிவுக்கு மத்தியிலும் போராட முற்படும் சோவியத், நாடு முழுவதிலிருந்தும் ஆட்களை வலுக்கட்டாயமாக போர் முனைக்கு கொண்டுவருவதும் எந்த பயிற்சியுமில்லாமல் போதிய ஆயுதங்கள் கூட இல்லாமல் அவர்களை கள முனையில் இறக்குவதும் மிகவும் தத்ருபமாக காட்சிப்படுத்தப்ட்டடுள்ளது. மீறி தப்பி ஓடுபவர்களை ரஸ்ய வீரர்கள் “தாய்நாட்டை காக்காமல் ஓடும் நீ வாழத் தகுதியற்றவன்” என்று சுட்டுக்கொல்லும் காட்சிகளும் நேர்மையாக பதிவு செய்யப்பட்டுள்ளது. அப்படி சேர்க்கப்பட்ட ஒரு இளைஞன் காலத்தின் தேவை கருதி போர் முனையில் ஆக்கிரமிப்பாளர்களை துரத்தியடிக்க துணிச்சலுடனும் அர்ப்பணிப்புடனும் செயற்படுவதை விபரிப்பதே இத் திரைப்படத்தின் மையக்கதை..

வெற்றியின் பின்னால் இத்தகைய கதைகள் ஏராளமாக இருப்பதை உணர முடிகிறது.

இங்கு ஏன் இதை குறிப்பிடுகிறேன் என்றால் வன்னி இறுதிப்போரிலும் புலிகள் குறித்து இங்கு வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் “Stalingrad” இல் ரஸ்ய வீரர்களின் செயற்பாட்டிற்கு ஒப்பானது. வெற்றி பெற்றதால் அது வரலாறாகியது. இங்கு வீழ்ந்து போனதால் குற்றங்களாக மாற்றப்பட்டுள்ளன.

இறுதிக்காலத்தில் புலிகள் மீது வைக்கப்படும் குற்றங்களின் உளவியல் இந்த பின்புலத்திலேயே ஆராயப்பட வெண்டும்.

இன்று எமது பின்னடைவு எதிரிகளுக்கும் துரோகிகளுக்கும் நடந்த நிகழ்வுகளை திரிப்பதற்கு வசதியாக மாற்றிவிட்டிருக்கிறது.

எதிரிகளுக்கும் துரோகிகளுக்கும் மத்தியில் சிறீலஙகா, இநதியா அமெரிக்கா உட்பட பெரும் இராணுவ – அரசியல் வலையமைப்புக்கு எதிராக போராட வேண்டியிருப்பதை உணர்ந்து யாரும் தமக்கு ஒத்துழைப்பு வழங்கமாட்டார்கள் என்பதை கண்டறிந்து எதிரிகளை மக்களின் பலத்துடன் தமது மண்ணில் வைத்து அழித்தொழிப்பு செய்து ஒரு இராணுவ வெற்றியை அடைவதுதான் ஒரே தீர்வு என்பதை உணர்ந்து முன்பு கிளிநொச்சியையும் பின்பு அனந்தபுரத்தையும் ஒரு ஸ்ராலின்கிராட்டாக மாற்ற புலிகள் முயன்றார்கள்.

அதன் பின்புலம்தான் காலத்தின் தேவை கருதிய கட்டாய ஆட்சேர்ப்புக்களாகவும் ஆளணி பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய குறைவான பயிற்சிகளுடன் களமுனைக்கு ஆட்கள் அனுப்பப்பட்டதும் அதில் சில அசம்பாவிதங்களும் இதன் வழியேதான் நடந்தேறியது.

உள்ளிருந்து வேரறுத்த துரோகங்களும் சாவ்தேச படைவலு கட்டமைப்புக்களின் இராணுவ- ராஜதந்திர- தொழில்நுட்ப உதவிகளும் சிறீலங்கா படுகொலை அரசிற்கு பெரும் பக்கபலமாக புலிகளை எதிர்த்து பேரிட்டன..

அந்த சின்னஞ் சிறிய படை இதற்கு மேல் என்ன செய்ய முடியும்.? விளைவாக செய் அல்லது செத்துமடி என்ற ஓர்மத்துடன் இறுதிவரை போராடி வீழ்ந்தார்கள் அந்த மண்ணில் புலிகள்..

*******
போராடும் தேசிய இனங்களிற்கான ‘நந்திக்கடல்’ கோட்பாடுகளின் மைய சரடு

உயரிய நோக்கங்களுடன் ஆரம்பத்தில் அனைவரும் போராடப் புறப்பட்டிருந்தாலும் புலிகள் தவிர அனைத்து இயக்கங்களும் அழிந்து போனதற்கு அடிப்படைக் காரணம் தனி மனித ஒழுக்கமின்மை.

புகைப் பிடித்தல்/ மது அருந்துதல்/ தகாத உறவு என்பது ஒரு இயல்பான நடைமுறையாக இருந்தது அல்லது அதை ஒரு குற்றமாக அவர்கள் கருதவில்லை.

ஆனால் புலிகள் அமைப்பில் அது தண்டனைக்குரிய குற்றம்.

தளபதி குமரப்பாவுடன் லெபனான் வரை சென்று பயிற்சி எடுத்த புலிகளின் முன்னாள் மூத்த உறுப்பினர் ஒருவருடன் ஒரு முறை ஏனைய இயக்கங்களின் இந்த நடைமுறைகள் குறித்துப் பேசிய போது ஒரு ஆச்சர்யமான தகவலைக் குறிப்பிட்டார்.

“தலைவர் பிரபாகரன் தவிர்ந்து ஏனைய தலைவர்கள் அனைவரும் வேறுபாடில்லாமல் உலகப் போராட்டங்களைப் பிரதியெடுப்பதிலேயே குறியாக இருந்தார்கள். இது ஒரு கட்டத்தில் சேகுவேரா/ பிடல் காஸ்ட்ரோ போன்று புகைபிடித்தல், மது அருந்துதலையும் இயல்பாக அணுகும் மனநிலை மட்டுமல்ல பல புரட்சியாளர்களின் பலதாரமணம்/ காதல் எல்லாவற்றையும் அடியொட்டவும் தலைப்பட்டார்கள். அதையெல்லாம் ஒரு சாகசமாகப் பேசியும் திரிந்தார்கள். மக்களைப் படிக்காமல் புத்தகங்களை மட்டும் படித்துக் கொண்டிருந்ததால் போராட்டத்தில் புது உத்தியை உருவாக்க முடியாமல் போனது மட்டுமல்ல மேற்படி தனிமனுத ஒழுக்கத்தையும் இழந்து உட்கட்சிப் படுகொலை / மாற்று இயக்கப் படுகொலை என்று சுய சீரழிவுக்குள்ளாகி அழிந்தும் போனார்கள்.

இப்போது குற்றத்தை மட்டும் எம்மீது திருப்புகிறார்கள்.” என்றார்.

அடுத்து அவர் குறிப்பிட்டதுதான் வரலாற்றில் முக்கியமானது, ‘ ஒரு போராடும் இனக் குழுமத்தில் பல மாற்றுக் கட்சிகள்/அமைப்புக்கள் உருவாகுவது இயல்பு. ஆனால் ஒரு போராட்ட இயக்கம் தலைமை வகிப்பதுதான் சரி. அதுவும் ஒழுக்கத்தில் சிறந்த ஒரு இயக்கம் முக்கியமானது. உலகில் எங்கும் இரு இராணுவ கட்டமைப்பு இருப்பதில்லை. ஒரு இராணுவம்தான். அரசுகளின் வெற்றிக்கு இது ஒரு முக்கியமான காரணம். அதுதான் தலைவர் இவர்களை வெளியேற்ற முடிவெடுத்தார்.”

போராடும் தேசிய இனங்களிற்கான ‘நந்திக்கடல்’ கோட்பாடுகளின் மைய சரடு இது.

மாற்று இயக்கங்கள் ஏனைய போராட்டங்களைப் படித்தது தவறல்ல. அது அவசியம்தான். ஆனால் அவர்கள் தமக்கு என்று தனித்துவமான வழிமுறையை கடைப்பிடிக்காமல் இதற்குள்ளேயே தேங்கி நின்றதுதான் அவர்கள் செய்த வரலாற்று தவறு. அதுதான் பின்னாளில் தமது நோக்கத்தையே மறந்து அரசுகளின் கைப்பாவைகளாகி அழிந்தும் போனார்கள்.

பிரபாகரன் ஏனைய தலைவர்களிடமிருந்து வேறுபடும் இடம் இதுதான். அவர் தனது போராட்ட வழிமுறைகளை உலக பேராட்டங்களிலிருந்தோ தத்துவங்களிலிருந்தோ தேடவில்லை.. மாறாக மக்கள் தொகுதிக்குள் அதை தேடினார். அப்போதே அவர் தனித்துவமான ஒரு கோட்பாட்டை உருவாக்கும் ஆளுமையாக உருவெடுத்துவிட்டார்.

இனியும் தங்கள் தவறை ஏற்றுக் கொள்ளாமல் தலைவரையும் போராட்டத்தையும் தூற்றுவது மாற்று இயக்கத்தினரை மேலும் மக்களிடமிருந்து அன்னியப்படவே செய்யும்.

புரிந்தால் சரி.

Parani Krishnarajani

விஜய் பற்றி சீமான் பேசியது சரியா ?

நடிகை கஸ்தூரி தெளிவான விளக்கம் !

யாருடா வந்தேறிகள் ? கொந்தளித்த சீமான்

ரஜினி தலைவனா? அப்போ பிரபாகரன் யாரு? – சீமான் ஆவேசம்

விஜய் தான் சூப்பர் ஸ்டார்

படத்தில் நடிக்க விஜய் பயந்தாரா ?

அயோக்கிய நாய்களா… வெளுத்து வாங்கிய சீமான்

கம்மா நாயுடுகளை தெலுங்கிலேயே கலாய்த்த சீமான்

சீமான் சொல்றதுதான் சரி | Prakash Raj Interview

வெளியார் யார்? – பெ. மணியரசன்

தமிழீழம் என்ற ஒரு தேசம் இருந்ததற்கான மிக எளிமையான வரலாற்று சாட்சியம் !

“எழுந்து பறந்த காடு”

தமிழீழம் என்பது ஏதோ கற்பனையான ஒன்று என்றும்/ சிறீலங்கா எமது அண்டை நாடென்று நாம் விளிப்பதையும் இன்றைய நாளில் நக்கலடித்துத் திரிபவர்களுக்கு சின்ன கதை ஒன்று..

சரியாகப் பத்து வருடங்களுக்கு முன்பு, இதே பெப்ரவரி மாதத்தில் ஒரு நாள் ‘சிறீலங்கா’ என்று பெயர் பொறிக்கப்பட்ட இரு யுத்த விமானங்கள் கொழும்பிலிருந்து புறப்பட்டு வந்து வன்னியின் கடலோர தமிழர் குடியிருப்புக்கள் மீது குண்டுகளை வீசி விட்டுச் செல்கின்றன..

சில மணி நேரங்களில் கேப்பாப்புலவு விமானத் தளத்திலிருந்து ‘தமிழீழம்’ என்று பெயர் பொறிக்கப்பட்ட இரு வான் கலங்கள் சிறீலங்கா தலைநகர் கொழும்பு வான்பரப்பை ஊடறுத்து பறந்து ‘சிறீலங்கா’ அரசுக்கு சொந்தமான இராணுவ – பொருண்மிய நிலைகள் மீது குண்டுகளை வீசுகின்றன.

தெரியாமல் கேட்கிறேன்..

இது என்ன நமது மக்கள் கண்ட கனவா? இல்லை அம்புலிமாமா கதையா?

இந்த இரண்டு சம்பவத்திற்கும் என்ன பெயர்? ஐக்கிய இலங்கையா? ஒருமித்த நாடா?

போங்கடா போய் புள்ள குட்டியளைப் படிக்க வைக்கிற வேலையைப் பாருங்க..

தமிழீழம் என்ற ஒரு தேசம் இருந்ததற்கான மிக எளிமையான வரலாற்று சாட்சியம் இது.

இன்றைய கேப்பாப்புலவு போராட்டத்தில் மக்கள் கையில் வைத்திருக்கும் இந்தப் பதாகை சொல்லும் வரலாற்றுச் செய்தி இதுதான்..
Parani Krishnarajani

—-
கட்டுநாயக்கவைத் தாக்க புறப்படுவதற்கு முன்னர் வான்புலிகளுக்கு தலைவர் கண்டிப்போடு கூறிய விடயம்!

தமிழீழ விடுதலைப் புலிகளால் உத்தியோகபூர்வமாக உரிமை கோரப்பட்ட முதலாவது வான்புலிகள் அணியின் தாக்குதலிற்கு முன்னர் நடந்த சம்பவம் தொடர்பில் இன்றைய தினம் சமூக வலைத்தளங்களில் பலராலும் பகிரப்பட்டு வருகின்றது.

அதாவது கடந்த 2007ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 26ஆம் நாள் கொழும்பிலுள்ள கட்டுநாயக்க வான்படைத் தளத்தின்மீது தாக்குதல் நடத்துவதற்காக இரணைமடு வானூர்தி ஓடுதளத்திலிருந்து விடுதலைப் புலிகளின் விமானம் புறப்படுவதற்கு முன்னர் அதனை இயக்கிச் சென்ற இரண்டு வானோடிகளிடமும் தலைவர் பிரபாகரன் கண்டிப்பாக கூறிய விடயமே இவ்வாறு பகிரப்பட்டு வருகிறது.

கேணல் ரூபன் மற்றும் லெப்.கேணல் சிரித்திரன் ஆகிய இரண்டு வானோடிகளும் (பின்னாளில் வான் கரும்புலிகளாக மாறியவர்கள்) இரணைமடுவிலிருந்து கட்டுநாயக்க வான்படைத் தளத்தின்மீது தாக்குதலை மேற்கொள்வதற்காக புறப்படுவதற்கு முன்னர் தலைவர் பிரபாகரனைச் சந்திக்கின்றனர்.

இரவு உணவு வேளை முடிந்ததும் குண்டுகள் பொருத்தப்பட்டு தாக்குதலுக்கு தயாரான விமானத்தை செலுத்துவதற்கான கட்டளைக்காக இரண்டு வானோடிகளும் காத்திருந்தவேளை, இருவரையும் மிக அருகில் அழைத்த தலைவர் பிரபாகரன், பின்வருமாறு அறிவுறுத்தினார்.

“நீங்கள் செல்வது சாதாரண களமுனை அல்ல. பொதுமக்களையும் பல்வேறு வழிபாட்டுத் தலங்களையும் கடந்துசெல்லப்போகிறீர்கள். உங்கள் இலக்கு சிலவேளைகளில் தவறவிடப்படலாம். அந்த இலக்கை அடையமுடியாவிட்டாலும் பரவாயில்லை, அவசரத்தில் பொதுமக்கள்மீதோ வழிபாட்டுத் தலங்கள்மீதோ தாக்குதல்களை நடத்திவிடாதீர்கள். நமது இலக்கு எது என்று உங்களுக்கு தெரியும். அதைத் தொடமுடியவில்லையெனில் மீண்டு வந்துவிடுங்கள்” என்று கண்டிப்பாக கூறி, வெற்றியோடு வாருங்கள் என வாழ்த்தி வழியனுப்பிவைக்கிறார்.

இந்த சம்பவம் முன்னாள் போராளிகளால் வெளியிடப்பட்டு தற்போது தமிழ் மக்கள் மத்தியில் ஆழமான ஒரு உணர்வலையைத் தோற்றுவித்துள்ளமையை அறியக்கூடியதாக உள்ளது.

விடுதலைப் புலிகளின் வான்புலிகள் குறித்து உலக வல்லரசு நாடுகளிடம் ஒருவித ஆச்சரியமான நிலைமை காணப்பட்டதாக சர்வதேச பத்தி எழுத்தாளர் ஒருவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

குறிப்பாக இரவு நேரத்தில் தாக்குதலுக்குச் செல்வதுடன் சிறிலங்காவுக்கு இந்தியாவால் வழங்கப்பட்ட அதி சக்திவாய்ந்த இந்திரா ராடார்களின் கண்ணிலேயே மண்ணைத் தூவும் அளவுக்கு அவர்களின் வானோடித் திறமை காணப்பட்டதாக முதன்மைப் படுத்திக் கூறப்படுகிறது.

மேற்குறித்த விடயம் உண்மையும்கூட. குறிப்பாக விடுதலைப் புலிகளால் இதுவரை நிகழ்த்தப்பட்ட வான் தாக்குதல்களின்போது ஒரு சொற்ப நேரத்திற்கு முன்னரே அவர்களின் விமானம் ராடார்களில் பதிவாகியது. தாக்குதல் நடத்தச் செல்லும்போது கடலுக்கு மேலே குறைந்த உயரத்தில் பறந்தமையே இதற்கான காரணமாக சொல்லப்பட்டது.

அதி வேகத்தில் பயணிக்கும் விமானம் ஒன்றை கடல்/தரை மடத்திலிருந்து குறைவான உயரத்தில் செலுத்துவதென்பது மிகவும் கடினமான காரியமாகும். வளிமண்டலத்தின் மேலுதைப்பு மற்றும் கீழுதைப்பு விசைகளை சம நேரத்தில் கிழித்தபடி ஒரு விமானப் பறப்பு நிகழ்வதென்பது வானோடிகளின் அதிவிசேட திறமையிலேயே தங்கியுள்ளதாக விமானப் பொறியியல் கூறுகின்றது.

இந்த நிலையிலும் இலக்கு தவறாது தாக்குதல் நடத்திவிட்டு மீளவும் தரையிறங்கியமை குறித்து சமூக வலைத்தளங்களில் இன்று சிலாகிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

முன்னாள் அரசியல்துறை பொறுப்பாளர் அன்பரசன் மீது தாக்குதல் !

விடுதலைப்புலிகளின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் இனந்தெரியாத நபர்களினால் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர்.

விடுதலைப் புலிகளின் விசுவமடு கோட்ட முன்னாள் அரசியல்துறை பொறுப்பாளர் அன்பரசன் (செல்வராசா) என்பவரே கடந்த சனிக்கிழமை இனந்தெரியாத நபர்களின் வெட்டுக்காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

இதேவேளை இத் தாக்குதலை தடுக்க வந்த அன்பரசனின் மகனும் வெட்டுக்காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

தாக்குதலுக்கு உள்ளான அன்பரசன் ஒரு கலைஞன் ஆவார். 1990 களில் வில்லிசை மற்றும் நாடகங்களின் மூலம் மக்களிற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணியில் இருந்தவர்.

பின்னாளில் விசுவமடு கோட்ட அரசியல்துறைப்பொறுப்பாளராகவும் பின்னர் ஊரக வளர்ச்சித்திட்டத்தின் பணிப்பாளராகவும் கடமையாற்றியிருந்தார்.

உளவில் ரீதியாக பாதிப்பட்ட மக்களிற்கான ஆற்றுப்படுத்தல் மற்றும் உதவிதிட்டங்களை செயற்படுத்தியிருந்தவர். சமாதான காலப்பகுதியில் தென் இலங்கையில் வெள்ள அனர்த்தம் ஏற்பட்டபொழுது அம்மக்களுக்கான உதவித் திட்டங்களை முன்நின்று செயற்படுத்தியிருந்தார். தற்பொது சாரதிகள் பயிற்றுநராக கடமையாற்றி வருவதுடன் சமூக சேவையாளராகவும் செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாணத்தில் ஆவா குழுவை இயக்கும் தமிழ் அரசியல்வாதிகள் யார்? காணொளி

அண்மைக்காலமாக யாழ் குடாநாட்டை அச்சுறுத்தும் ஆவா குழு தொடர்பில் தென்னிலங்கை ஊடகம் ஒன்று அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் ஆவா குழு என்ற எந்தவொரு அமைப்பும் இல்லை என அருளானந்தம் அருண் என்ற இளைஞன் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த காலத்தில் வடக்கில் இடம்பெற்ற குற்றச் செயல்கள் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்ட ஆவா குழு உறுப்பினர் ஒருவர் சிங்கள ஊடகமொன்றுக்கு பல முக்கிய விடயங்களை வெளியிட்டுள்ளார்.

ஆவா குழு சுமந்திரன், சரவணபவன், வித்தியதரன் ஆகியோரினால் உருவாக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவர்களை சட்டத்திற்கு முன்னாள் நிறுத்த வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆவா என்ற குழுவை சிலர் உருவாக்கி கொண்டதற்கு யாழில் அப்படி ஒரு குழு இல்லை.

யாழ்ப்பாணத்தில் இளைஞர், யுவதிகளுக்கு விளையாடுவதற்கு ஒரு சிறிய இடமேனும் இல்லை என்ற போதிலும் கொழும்பு பிரதேசத்தில் சிலர் நடப்பதற்கு உட்பட தனி இடம் அமைக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தென்னிலங்கை ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் இந்த விடயங்களை குறிப்பிட்டுள்ளார்.

கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் மின் விளக்குகளை சேதப்படுத்திய விசமிகள்!

கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் அதிகளவான மாவீரர்களது வித்துடல்கள் விதைக்கப்பட்டுள்ளன.

மாவீரர் துயிலும் இல்லம் தமிழ் மக்களால் புனிதமான இடமாக நோக்கப்பட்டு வணக்கம் செலுத்தப்பட்டு வருகின்றது.

தமிழ் மக்களது விடுதலைக்காகப் போராடி தமது இன்னுயிர்களை உவந்தளித்த மாவீரர்களை விதைத்த துயிலும் இல்லங்கள் மரியாதைக்குரிய மேலான இடமாகக் கருதி வணக்கம் செலுத்தப்பட்டு வருகின்றது.

தமிழ் மக்களின் விடுதலை வீரர்களான மாவீரர்களை விதைக்கப்பட்ட மாவீரர் துயிலும் இல்லங்கள் கடந்த 2009 ஆண்டிற்கு முன்னர் தமிழீழ விடுதலைப் புலிகளால் சிறந்த முறையில் பேணப்பட்டு வந்தது.

கடந்த 2009 ஆண்டு தமிழர் தாயகப் பகுதிகள் மீது வல்லாதிக்க சக்திகளின் துணையுடன் பாரியளவில் போர் தொடுத்த இலங்கை இராணுவம் பலரைக் கொத்துக்கொத்தாகக் கொன்றொழித்ததுடன் தமிழர்களின் வணக்கத்துக்குரிய மாவீரர் துயிலும் இல்லங்களையும் இடித்துத் தரைமட்டமாக்கித் துவம்சம் செய்தது.

அவர்களால் கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லமும் இடித்தழிக்கப்பட்டு இராணுவ முகாம் அமைக்கப்பட்டிருந்தது.

கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்திலிருந்து இராணுவம் விலகிச் சென்றதன் பின்னர் கிளிநொச்சியில் சு.பசுபதிப்பிள்ளை அவர்கள் தலைமையிலான மாவீரர் பணிக்குழுவின் ஏற்பாட்டில் மாவீரர்களது உறவுகளால் மாவீரர் துயிலும் இல்லம் தற்துணிவாகத் துப்பரவாக்கப்பட்டு கார்த்திகை-27 இல் மாவீரர் நாள் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.

மாவீரர்களை விதைத்த கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லக் காணியை அபகரிப்பதற்காகப் பலர் பலதடவைகள் முயற்சித்து வந்தபோதெல்லாம் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களது துணையுடன் தடுத்து நிறுத்தப்பட்டு வந்துள்ளது.

மாவீரர்களது வணக்கத்துக்குரிய மாவீரர் துயிலும் இல்லத்தைப் பாதுகாக்கும் நோக்குடன் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரனது ஒழுங்கமைப்பில் கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தைச் சுற்றி மதில் அமைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு ஒருபகுதிக்கான மதிலமைப்பு வேலைகள் முழுமையாகப் பூர்த்தியாகியுள்ள நிலையில் இனவிரோதிகளின் காட்டிக்கொடுப்பால் மதில் அமைக்கும் பணிகளுக்கும் பல தடைகளும் இடையூறுகளும் ஏற்படுத்தப்பட்டு வந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

தற்போது கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர்களின் உறவுகளால் பொருத்தப்பட்டிருந்த சூரிய மின்கலத்துடன் கூடிய மின்விளக்குகள் விசமிகளால் சேதமாக்கப்பட்டு அதிலுள்ள பற்றறிகள் திருடப்பட்டுள்ளன.

இதனைக் கேள்விப்பட்ட கிளிநொச்சி மாவீரர் பணிக்குழுவின் தலைவர் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் சு.பசுபதிப்பிள்ளை அவர்கள் தலைமையிலான மாவீரர் பணிக்குழுவினர் அங்கு சென்று நிலைமைகளைப் பார்வையிட்டுள்ளனர்.

இது குறித்துக் கருத்துத் தெரிவித்த மாவீரர் பணிக்குழுவின் தலைவர் ச.பசுபதிப்பிள்ளை,

“எமது இன விடுதலைக்காப் போராடி தங்கள் இன்னுயிர்களையே எமக்காக உவந்தளித்த எமது உறவுகளான மாவீரர்களுக்காக நாம் எந்த நன்றிக் கடனும் செய்ய முடியாது.

அவர்களது தியாகம் மேலானது. அவர்கள் எமக்காகத் தங்களது மேலான இன்னுயிர்களையே ஆகுதியாக்கினார்கள். அவர்களை விதைத்த வித்துடல்கள் உள்ள கல்லறைகளும் சிதைத்தழிக்கப்பட்டுள்ளன.

அவர்களை நினைவுகூரும் இவ்விடத்தில் பொருத்தப்பட்ட மின்விளக்குக்களைக்கூட விட்டுவைக்காது சேதப்படுத்தித் திருடிச் செல்ல எப்படி அந்த விசமிகளுக்கு மனசு வந்ததோ தெரிவயில்லை.

இது மிகவும் வேதனையானதும் கேவலமானதுமான ஒரு செயற்பாடு. இதனைச் செய்ய அவர்களால் எப்படி முடிந்ததோ தெரியவில்லை.

எமது இன விடுதலைக்காக தமது இன்னுயிர் உவந்தளித்தமானமாவீரர்கள் என்றைக்கும் தமிழ் இனத்தின் இதயங்களிலிருந்து அகற்ற முடியாத புனிதர்கள்.

அவர்களை விதைத்த மாவீரர் துயிலும் இல்லங்களும் புனிதமானவை. அவர்களுக்காக அவர்களை விதைத்த மாவீரர் துயிலும் இல்லங்களையாவது பேணி அவர்களை மனதிருத்தி வழிபடும் நன்றியுள்ளவர்களாக நாம் செயற்படுவோம் என்றார்.

யாழ்.மாநகர சபை : தமிழ்த் தேசிய எழுச்சி நாட்களில் களியாட்ட நிகழ்வுகளுக்குத் தடை !

தமிழ் தேசிய எழுச்சி நாட்களில் யாழ்.மாநகர சபையின் எல்லைக்குள் களியாட்டம் உள்ளிட்ட கே லிக்கை விழாக்களை நடாத்துவதை தடை செய்யக் கோரும் பிரேரணை சபையின் ஏகமனதாக நி றைவேற்றப்பட்டுள்ளது.

யாழ்.மாநகர சபையின் இன்று காலை மாதாந்த அமர்வு நடைபெற்றது. இதன் போது தமிழ் தேசி ய மக்கள் முன்னணின் உறுப்பினர் வரதராஜா பார்த்திபனால் சபையில் பிரேரணை ஒன்றை சம ர்ப்பித்திருந்தார்.

யாழ்.மாநகர சபைக்கு உட்பட்ட பகுதிகளில் தமிழ் தேசிய எழுச்சி நாட்கள் மற்றும் நினைவேந்த ல் நாட்களில் களியாட்ட நிகழ்வுகள் மற்றும் கேலிக்கை விழாக்களை நடத்துவதை தடைசெய்ய வேண்டும்.

குறிப்பாக தமிழ் இன அழிப்பு நாளான மே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல், தியாக தீபன் திலீபனின் ஆரம்ப இறுதி நாள் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரர் வாரர் வாரத்த்தில் இவ்வாறான களியாட்ட, கேலிக்கை நிகழ்வுகளை தடை செய்ய வேண்டும். அவ்வாறான நிகழ்வுகள் நடாத்தப்படுவதற்கு மாநகர சபை அனுமதி வழங்கக் கூடாது.

மேலும் சபை எல்லைக்குள் நடைபெறும் நிகழ்வுகளில் சமூகப் பிறழ்வான சூது நடவடிக்கைகளையும் தடை செய்ய வேண்டும் என்ற பிரேரணையை பார்த்தீபன் சபையில் சமர்ப்பித்திருந்தார். குறிப்பாக யாழில் இராணுவத் தினால் நடத்தப்பட்ட நிகழ்வொன்றில் மதுபான போத்தலினை வெற்றி இலக்காக கொண்டு நடத்தப்பட்ட நிகழ்வினையும் பார்த்தீபன் சுட்டிக்காட்டினார்.

இப் பிரேரணை மீதான வாதங்கள் நடைபெற்றது. இதன் போது ஈ.பி.டி.பியின் உறுப்பினர் மு.ரெ மிடியஸ் அப் பிரேரணையில் முதல் போராளியான சிவகுமாரின் உயிரிழந்த யூன் 5 ஆம் திகதியி லும் இவ்வாறான கேலிக்கை நிகழ்வுகள் நடத்துவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார். மாவீரர் வாரம் முழுவதிலும் நிகழ்வுகளுக்கு தடை விதிக்க முடியாது என் று தெரிவித்து மாவிரர் வாரத்தில் 26, 27 ஆம் திகதிகளில் கேலிக்கை நிகழ்வுகளுக்கு தடைவிதிக்கலாம் என்ற யாழ்.முதல்வர் இமானுவேல் ஆனோல்ட்டின் திருத்தத்துடன் குறித்த பிரேரணை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

ஈ.பி.ஆர்.எல்.எப் மேற்கொண்ட படுகொலை விபரங்கள் !

மண்டையன் குழு படுகொலைகள் – தகவல்கள் திரட்ட இளைஞர்கள் ஆர்வம்

ஈபிஆர்எல்எவ் அமைப்பு கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நிகழ்த்திய மாநாட்டின்போது வெளியிட்ட ஆவணப் புத்தகம் ஈபிஆர்எல்எவ் மீது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.

தமிழரசுக் கட்சி புலி நீக்க அரசியல் செய்ய முற்படுகிறது ஏன மேடைகளில் கூவிவந்த சுரேஸ் பிரேமச்சந்திரன் விடுதலைப் புலிகளுக்கு எதிரான புத்தகம் ஒன்றினை வெளிட்டுள்ளமையே தற்போது சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது.

விடுதலைப் புலிகள் ஆதரவு நிலைப்பாடுடைய முன்னாள் முதல்வர் விக்கினேஸ்வரனின் கைகளினால் குறித்த புத்தகத்தை சுரேஸ் பிரேமச்சந்திரன் வெளியிட வைத்தது விக்கினேஸ்வரனைப் படுகுழியில் தள்ளும் ஈபிஆர்எல்எவ்இன் ஆரம்ப நடடிக்கையின் ஒரு அங்கம் எனவும் விமர்சிக்கப்படுகின்றது.

வெளியீட்டு நிகழ்வுகளுக்கு தான் அழைக்கப்பட்டார் முன்கூட்டியே புத்தகத்தைப் பெற்று அதனை நன்கு படித்து ஆராய்ந்துவிட்டே முன்னாள் முதல்வர் விக்கினேஸ்வரன் வெளியீட்டு நிகழ்வுகளுக்கு செல்லச் சம்பதிப்பது வழக்கம் எனவும் ஈபிஆர்எல்எவ் விடயத்தில் விக்கினேஸ்வரன் சுரேஸ் பிரேமச்சந்திரனினால் ஏமாற்றப்பட்டுவிட்டதாகவும் ஆவண வெளியீடு தொடர்பில் அவருக்கு முன்னறிவிப்பு வங்காமல் இரகசிய ஏற்பாடாக மேடையில் வைத்தே தெரிவிக்கப்பட்டது என விக்கினேஸ்வரனுக்கு நெருக்கமான ஆதரவு அணியினர் கருத்து வெளியிட்டு வருகின்றனர்.

குறித்த ஆவணப் புத்தகத்தில் விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட படுகொலைகள் எனக் கூறி ஈபிஆர்எல்எவ் ஒரு பட்டியல் ஒன்றினை வெளியிட்டிருக்கிறது.

இந்நிலையில் தான் பழசுகளைக் கிழறும் தமது வேலையை தொடங்கியிருக்கின்றனர் தமிழ் இளைஞர்கள். மண்டையன் குழுத் தலைவரான சுரேஸ் பிரேமச்சந்திரன் இயக்கிய மண்டையக் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட சகோதரப் படுகொலைகள் குறித்த தகவல்களை இளைஞர்கள் கேட்டறிந்துவருவதோடு ஈபிஆர்எல்எவ்இன் படுகொலைகள் குறித்த தரவுகளையும் சேகரித்துவருகின்றனர்.


நான் எந்த ஆவணத்தையும் வெளியிடவில்லை! சி.வி.விக்னேஸ்வரன் விளக்கம்

ஈ.பி.ஆர்.எல்.எவ் மாநாட்டில் சிறப்பு அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றியதைத் தவிர புத்தக வெளியீட்டிலோ அல்லது வேறு எந்த ஆவண வெளியீட்டிலோ நான் ஈடுபடவில்லை என வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியின் மாநாடு கடந்த 3ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டிருந்த சி.வி.விக்னேஸ்வரன் ஆவணம் ஒன்றை வெளியிட்டு வைத்ததாக செய்திகள் வெளியாகியிருந்தன.

குறிப்பாக அந்த ஆவணத்தில் விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட கொலைகள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் சில ஊடகங்களில் வெளியாகியிருந்த செய்திகளில் தெரிவிக்கப்பட்டிருந்தன.

இந்த விடயம் குறித்து சி.வி.விக்னேஸ்வரனிடம் கேள்வியெழுப்பிய போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


ஈ.பி.ஆர்.எல்.எப் மேற்கொண்ட படுகொலை விபரங்கள் !

1987 ஆம் ஆண்டு இந்திய ஆக்கிரமிப்பு இராணுவம் சமாதானப் படை (IPKF) என்ற பெயரில் ஈ.பி.ஆர்.எல்.எப் ஐயும் அழைத்துகொண்டு இலங்கைக்கு வருகின்றது. ஈ.பி.ஆர்.எல்.எப் இந்திய இராணுவத் துணைக் குழுக்களாகச் செயற்படுகின்றது.

இந்திய இராணுவத்துடன் இணைந்து மக்கள் மீதான தாக்குதல்களிலும் சமூகவிரோதச் செயற்பாடுகளிலும் ஈ.பி.ஆர்.எல்.எப் ஈடுபடுகின்றது. சுரேஷ் பிரேமச்சந்திரனின் தலைமையில் வரதராஜப்பெருமாளின் ஆலோசனையுடன் மண்டையன் குழு என்ற கொலைகாரக் குழு உருவாக்கப்படுகின்றது. இந்திய ஆக்கிரமிப்பு இராணுவத்தாலும், ஈ.பி.ஆர்.எல்.எப் இனாலும் புலி உறுப்பினர்கள் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்படுகின்றவர்களின் தலையைச் சீவிக் கொல்வதானால் மண்டையன் குழு என வடக்கிலும் கிழக்கிலும் சுரேஷ் பிரேமச்சந்திரனின் குழு அழைக்கப்பட்டது.

1988 டிசம்பர் மாதம் இந்திய இராணுவத்தின் துணையோடு நடத்தப்பட்ட போலியான தேர்த்தலில் வரதராஜப்பெருமாள் வடகிழக்கு மாநிலத்தின் முதலமைச்சராகிறார்.

1989 ஆம் ஆண்டு தமிழ்த் தேசிய இராணுவம் என்ற இந்திய அடியாள் படை ஒன்றைத் தோற்றுவிப்பதற்காக வரதாராஜப்பெருமாள், சுரேஷ் பிரேமச்சந்திரன், பத்மநாபா ஆகியோர் யாழ்ப்பாணத்திலிருந்து இந்திய இராணுவத்தின் கட்டளையின் கீழ் செயற்படுகின்றனர்.

சிறுவர்களும் இளைஞர்களும் வயது வேறுபாடின்றி பயிற்சிக்காகப் பலவந்தமாக அழைத்துச் செல்லப்படுகின்றனர். பாடசாலைகளில் அருகாமையிலும், விளையாட்டு மைதானம் போன்ற இளைஞர்கள் கூடும் இடங்களிலும் ஈ.பி.ஆர்.எல்.எப் துப்பாக்கிகளோடு சென்று இளைஞர்களை அழைத்துச் சென்று அசோக் ஹொட்டேலில் சிறை வைத்து இராணுவத்தில் இணைத்துக்கொண்டது. தமிழ்த் தேசிய இராணுவத்திற்கு சுரேஷ் பிரேமச்சந்தினர் பொறுப்பதிகாரியாகச் செயற்பட்டார்.

ஒவ்வொருதடைவையும் தெரு நாய்களைப் போன்று இளைஞர்கள் பயிற்சிக்கு என்று பிடித்துவரப்படும் போதும் சுரேஷ் பிரேமச்சந்திரனின் மிரட்டல் கலந்த உரையாற்றுவார். இந்திய இராணுவத்தை எதிரியகக் கருதிய பலருக்கு குறுகிய காலப் பயிற்சி வழங்கப்பட்டது.

யாழ்ப்பாணம், வவுனியா மட்டக்களப்பு திருகோணமலை ஆகிய இடங்களில் மண்டையன் குழு இயங்கி வந்தது.

1989ஆம் ஆண்டு மே மாதம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இளைஞர் ஒருவரின் வயிற்றிலிருந்து கொக்கோ கோலா போத்தல் ஒன்று சத்திரசிகிச்சை மூலம் எடுக்கப்பட்டது.

அச்செய்தி முரசொலி பத்திரிகையில் மட்டுமே வெளியாகியது. இளைஞர் ஒருவரின் வயிற்றிலிருந்து கோலா போத்தல் மீட்கப்பட்டது. அந்த இளைஞர் சில தினங்களுக்கு முதல் சிலரால் கடத்தி செல்லப்பட்டிருந்தார் என இறுதியில் எழுதப்பட்டிருந்தது.

அந்த இளைஞரை கடத்தியவர்கள் ஈ.பி.ஆர்.எல்.எவ் இயக்கத்தினர் என பின்னர் பலருக்கும் தெரியவந்தது. இதனால் ஈ.பி.ஆர்.எல்.எவ் இயக்கத்தினர் முரசொலி ஆசிரியர் திருச்செல்வத்தை சுட்டுக்கொல்வதற்கு திட்டமிட்டனர்.

முரசொலி பத்திரிகை ஈ.பி.ஆர்.எல்.எவ் இயக்கம் செய்து வந்த படுகொலைகளையும் மனித உரிமை மீறல்களையும் அம்பலப்படுத்தி வந்தது.

அன்று ஈ.பி.ஆர்.எல்.எப் இற்கு யாழ்ப்பாணத்தில் தலைமை தாங்கிய சுரேஸ் பிரேமச்சந்திரன் இந்திய இராணுவத்துக்காகவும் தங்கள் மீது புலிகள் மேற்கொள்கின்ற தாக்குதலுக்காகவும் பழிக்குப் பழி வாங்குகின்ற படுகொலைகளை முன்னின்று நடத்தி வந்தார்.

புலி ஆதரவாளர்கள் புலிகளுக்கு உதவியவர்கள், புலிகளுக்கு அடைக்கலம் கொடுத்தவர்கள் எனப் பலர் ஈ.பி.ஆர்.எல்.எவ் இயக்கத்தால் படுகொலை செய்யப்பட்டனர். திருச்செல்வத்தையும் கடத்தி கொலை செய்வதற்கு ஈ.பி.ஆர்.எல்.எவ் இயக்கம் திட்டமிட்டது.

எஸ்.திருச்செல்வம் அவர்களைக் கடத்துவதற்காக அவருடைய வீட்டுக்கு மண்டையன் குழுவினர் சென்ற போது திருச்செல்வம் வீட்டின் பின் பக்கத்தால் தப்பியோடிவிட்டார். அதனால் அங்கிருந்த அவரது மகன் அகிலனை மண்டையன் குழுவினர் கடத்திச் சென்றனர். திருச்செல்வம் தங்களிடம் வந்தால் மகனை விடுவிப்போம் என்று எச்சரித்துச் சென்றனர். தான் அவர்களிடம் சென்றால் கொல்லப்படுவேன் என்பதை நன்கு அறிந்திருந்த திருச்செல்வம் தான் செல்லாவிட்டால் தன் மகனைக் கொல்வார்கள் என்பதை எதிர்பார்த்திருக்கவில்லை.

இந்நிலையில் மண்டையன் குழு அகிலனை படுமோசமான சித்திரவதைக்கு உள்ளாக்கியது. அகிலனின் மலவாசலினூடாக சோடாப் போத்தலை செலுத்தினார்கள். அவருடைய நகங்களைப் பிடுங்கினார்கள். மறுநாள் அகிலன் பிணமாக வீதியில் வீசப்பட்டார்.

எஸ்.திருச்செல்வம் தம்பதிகளுக்கு கனடிய அரசு அரசியல் தஞ்சம் வழங்கி அவர்களை கனடாவுக்கு அழைத்தது. திருச்செல்வம் தனது மகனின் கொலை தொடர்பாக கனடிய அரசுக்கு வழங்கிய சாட்சியத்தில் சுரேஸ் பிரேமச்சந்திரனைக் குற்றம்சாட்டி இருந்தார். அதனால் சுரேஸ் பிரேமச்சந்திரனின் பெயர் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டு அவருக்கு விசா வழங்க கனடிய அரசு மறுத்து வருகின்றது.

இந்த இயக்கங்கள் மக்களுக்கு எதிராக துப்பாக்கிகளைத் திருப்பிய சம்பவங்கள் எண்ணிலடங்கா. அரச படைகளுக்கு எவ்விதத்திலும் குறையாமல் சித்திரவதைகளிலும் படுகொலைகளிலும் இந்த இயக்கங்கள் ஈடுபட்டன. ஒருவரைக் கொல்வதற்கு எவ்வித காரணங்களும் கொடுக்கப்பட வேண்டிய தேவையே இருக்கவில்லை.

திருச்செல்வத்தின் மகன் அகிலனை நான் நன்கு அறிந்திருந்தேன். அமைதியான சுபாவம் கொண்ட படிப்பு விளையாட்டு என சகல துறைகளிலும் சாதனை படைத்த மாணவன்.

கல்லூரியின் மிகத் திறமையான மாணவனான அகிலன் படுகொலை செய்யப்படுவதற்கு சில வாரங்கள் முன்னதாக க.பொ.த உயர்தரப் பரீட்சை முடிவுகள் வெளியாகி இருந்தது. அதில் அகிலன் நான்கு பாடங்களிலும் ‘ஏ’ பெற்று மிகத் திறமையாக சித்தியடைந்திருந்தார். தான் கல்வி கற்ற கல்லூரியின் கிரிக்கட் குழுவின் தலைவனாகவும் அகிலன் விளங்கினான்.

மாணவன் அகிலன் திருச்செல்வனின் கொலை ஒரு போதுமே நியாயப்படுத்தப்பட முடியாத படுகொலை. தகப்பனுக்காக ஒருபோதுமே மகனைக் கடத்திப் படுகொலை செய்தது யாராகவிருந்தாலும் ஏற்றுக்கொள்ளமுடியாத படுகொலை.

அதேபோன்று மட்டக்களப்பில் இலங்கை தமிழர் ஆசிரியர் சங்க தலைவராகவும் பிரஜைகள் குழு துணைத்தலைவராகவும் இருந்த வணசிங்க மற்றும் மட்டக்களப்பு பிரஜைகள் குழுத்தலைவர் வணபிதா சந்திரா பெர்ணாண்டோ ஆகியோரின் கொலைகளையும் ஈ.பி.ஆர்.எல்.எவ் இயக்கமே செய்தது.

வந்தாறுமூலையில் பிறந்த வணசிங்க அவர்கள் 1961ஆம் ஆண்டு சத்தியாக்கிரகப் போராட்டம் தொடக்கம் தமிழ் மக்களின் விடுதலைப்போராட்டத்தில் தன்னை இணைத்து கொண்டவர்.

இலங்கை தமிழர் ஆசிரியர் சங்க தலைவராக இருந்த வணசிங்க அவர்கள் இந்திய இராணுவ காலத்தில் தமிழ் மக்களின் பாகாப்பு தொடர்பான நடவடிக்கைகளில் முன்னின்று செயற்பட்ட முக்கிய பிரமுகர்களில் ஒருவராக விளங்கினார்.

மட்டக்களப்பு மாவட்ட பிரஜைகள் சபையின் உறுப்பினராகவும், பின்னர் அதன் துணைத்தலைவராகவும் இருந்து பாதிக்கப்பட்ட மக்களின் குரலாக ஒலித்தார்.

அநீதியும் உரிமை மீறலும் எங்கு நடக்கிறதோ அங்கு சென்று அவற்றைத் தட்டிக்கேட்டு நியாயம் தேடும் ஒரு தலைவனாக அவர் விளங்கினார். ஈ.பி.ஆர்.எல்.எவ் இயக்கம் செய்த அட்டூழியங்கள் படுகொலைகளை தட்டிக்கேட்டார்.

இதனால் ஈ.பி.ஆர்.எல்.எவ் இயக்கம் இவரை படுகொலை செய்ய திட்டமிட்டது. 1989ஆம் ஆண்டு ஜனவரி 31ஆம் திகதி மட்டக்களப்பு அரசடியில் அவர் வீட்டில் இருந்த போது ஈ.பி.ஆர்.எல்.எவ் இயக்கத்தை சேர்ந்த இருவர் அங்கு சென்றனர். அவருடன் பேச வேண்டும் என்றனர். வீட்டு முற்றத்தில் போடப்பட்டிருந்த கதிரையில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். தீடிரென ஒருவர் வணசிங்காவை சுட்டுக்கொன்று விட்டு தப்பி சென்றனர்.

ஈ.பி.ஆர்.எல்.எவ் இயக்கம் மட்டக்களப்பில் புரிந்த படுகொலைகளில் வணபிதா சந்திரா பெர்னாண்டோ அடிகளாரை மட்டக்களப்பு புனித மரியாள் தேவாலயத்திற்குள் வைத்து சுட்டுக்கொன்ற சம்பவம் முக்கியமானதாகும்.

1988ஆம் ஆண்டு யூன் 6ஆம் திகதி மட்டக்களப்பு புளியந்தீவில் உள்ள புனித மரியாள் தேவாலயத்திற்குள் வைத்து மட்டக்களப்பு மறைக்கோட்ட முதல்வரும் மட்டக்களப்பு பிரஜைகள் குழு தலைவருமான வணபிதா சந்திரா பெர்னாண்டோ அவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டார். இதே தேவாலயத்திற்குள் வைத்து தான் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராசசிங்கமும் சுட்டுக்கொல்லப்பட்டார்.

பிதா சந்திரா அவர்கள் மட்டக்களப்பு பிரஜைகள் குழு தலைவராக இருந்து ஆற்றிய பணிகள் பல. ஈ.பி.ஆர்.எல்.எவ் போன்ற இயக்கங்கள் செய்யும் அட்டூழியங்களை அம்பலப்படுத்தி வந்தார்.

அவர் சுட்டுக்கொல்லப்படுவதற்கு சில வாரங்களுக்கு முதல் மட்டக்களப்பு நகரில் வைத்து சுகுணா என்ற தமிழ் இளம் பெண்ணையும் ரிபாயா என்ற முஸ்லீம் இளம் பெண்ணையும் ஈ.பி.ஆர்.எல்.எவ் இயக்கத்தினர் கடத்தி சென்றனர். இவர்களை வாவிக்கரை வீதியில் உள்ள அவர்களின் அலுவலகத்தில் வைத்து கூட்டாக பலரும் பாலியல் பலாத்காரம் செய்தனர். வணபிதா சந்திரா இவர்களை மீட்பதற்கு பல முயற்சிகளை மேற்கொண்டார். இந்திய இராணுவ கட்டளை தளபதி ஒருவருடன் தொடர்பு கொண்டதன் பின் சுகுணா என்ற தமிழ் பெண் மீட்கப்பட்டார். ஆனால் ரிபாயா என்ற முஸ்லீம் பெண்ணை அவர்கள் பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்து விட்டனர்.

இந்த விடயத்தை வணபிதா சந்திரா மனித உரிமைகள் அமைப்புக்கள் மட்டத்திற்கு கொண்டு சென்றார். இதற்கு பழிவாங்குவதற்காகவே ஈ.பி.ஆர்.எல்.எவ் இயக்கம் வணபிதா சந்திரா அவர்களை படுகொலை செய்தது.

அதேபோன்றுதான் 1989ஆம் ஆண்டு பருத்தித்துறை பிரஜைகள் குழு தலைவராக இருந்த சிவானந்தசுந்தரம் அவர்களை ஈ.பி.ஆர்.எல்.எவ் இயக்கம் சுட்டுக்கொன்றது. யாழ்ப்பாணம் அரியாலையில் கூட்டம் ஒன்றில் உரையாற்றி விட்டு பருத்தித்துறை நோக்கி சென்ற போது அவரை ஈ.பி.ஆர்.எல்.எவ் இயக்கத்தினர் சுட்டுக்கொன்றனர்.

அக்காலப்பகுதியில் ஈ.பி.ஆர்.எல்.எவ் இயக்கத்தின் மனித உரிமை மீறல்களை அம்பலப்படுத்திய பிரஜைகள் குழுக்களின் தலைவர்கள் யாழ்ப்பாணத்திலும் மட்டக்களப்பிலும் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

களத்தில் எரியும் தீபமாய் தன்னையுருக்கி உழைத்த அந்தத் தளபதி ! – போர் முகம்-17

   மணியண்ணை எண்னோட வாழ்ந்ததைவிட தேசம்,மக்கள்,விடுதலை,போராளியள் எண்டு சொல்லிக்கொண்டு அதுக்காக வாழ்ந்த காலங்கள் தான் கூட மகன்||என்ற மணியண்ணையின் துணைவியின் வார்த்தைகள் எங்கள் மனங்களில் அந்தத் தளபதியின் நிஜமான செயற்பாடுகளை மீள் உயிர்ப்புச் செய்தபடியிருந்தன.

தினமும் விடுதலைக்காகக் களமுனைகளில் வலம்வந்த மணியண்ணை தன் வாழ்வில் அனைத்தையும் விடுதலைக்காய் ஒப்புவித்து வாழ்ந்திருந்தார். மணியண்ணை இவ்வளவுக்குப் போராட்டத்தில போய் முன்னேறினதுக்கும் அவற்ற வளர்ச்சிக்கும் நான்தான் மகன் காரணம். அவர் என்னோட கதைக்கேக்கை யும் போராட்டம்,எங்களுக்கு எண்டொரு விடுதலை எண்டுதான் கூடுதலான நேரம் கதைப்பார்|| என்றவர் கண்கலங்கிக் கொண்டார்.

மணியண்ணையின் இறுதி நிகழ்வில் துயர் தாங்காத அவரின் மகன் சொல்லியழுத வார்த்தைகளைக் கேட்ட எங்களிற்கு மணியண்ணையின் வீட்டுக்குச் செல்ல வேண்டும் என்ற அவா ஏற்பட்டிருந்தது.

அதனால் வீரச்சாவு நிகழ்வு நிறைவடைந்த சில நாட்களில் அவரின் வீட்டிற்குச் சென்றோம். அதனால் அங்கிருந்த தகரப்பந்தல்கள்,சிகப்பு, மஞ்சள் வர்ண எழுச்சிக்கொடிகள் அனைத்தும் அப்படியே இருந்தன. பிரிவின் துயர்ரைப் போக்கிக் கொள்ள முடியாதவர்களாய் அவரின் அனைத்து உறவுகளும் ஒருவருக்கு ஒருவர் ஆறுதலாய் கூடியிருந்தார்கள். மணியண்ணையின் போராளி மகன் எழுந்து வந்து அண்ணயாக்கள் வாங்கோ|| என்று எங்களைக் கூட்டிச் சென்று அமரவைத்தான்.

மணியண்ணையின் மகனிடம் நாங்கள் யார் என்பதையும் எங்களின் நோக்கம் என்ன என்பது பற்றியும் களமுனையில் மணியண்ணையைச் சந்தித்தது பற்றியும் எடுத்துக் கூறியிருந்தோம். நாங்கள் எங்களை அறிமுகம் செய்துகொண்டதும் இப்ப லைனில நடக்கிறதுகள் எல்லாம் போர்முகத்தில வரும் எண்டு அப்பா சொன்னவர்|| என்ற அவரின் மகன் அண்ணயாக்கள் வீட்டுக்குள்ள வாங்கோ|| என்று சொல்லியபடி எழுந்து செல்ல நாங்களும் அவரின் பின்னால் சென்றோம்.

வீட்டின் முன் கதவு வழியாகக் குனிந்தபடி உள்ளே சென்று கொண்டோம். அங்கிருந்த மேசையில் மலர்களின் நடுவில் மணியண்ணை சிரித்தபடியிருந்தார். களத்தில் எரியும் தீபமாய் தன்னையுருக்கி உழைத்த அந்தத் தளபதி இப்போது எரியும் தீபத்தின் முன் திருவுருவப் படமாய்க் காட்சி தந்துகொண்டிருந்தார். அவரின் திருவுருவப்படத்திற்கு அருகில் தட்டொன்றில் வைக்கப்பட்ட மலர்களை அந்தத் தளபதியின் திருவுருவப்படத்திற்கு வைத்து வணக்கம் செலுத்திக்கொண்டோம். களமுனையில் போராளிகளுடன் பார்த்த மணியண்ணையை இப்போது மலர்களின் நடுவில் பார்த்தது மனதை நோகடித்துக் கொண்டிருந்தது. வீட்டின் முன்பக்கச் சுவர்களில் தேச விடுதலைக்காய் தங்களை அர்ப்பணம் செய்து உழைத்து விதையாகிப்போன சில மாவீரர்களின் திருவுருவப் படங்கள் வரிசையாகக் கொழுவப்பட்டிருந்தன. மணியண்ணையின் வீடு உண்மையில் ஒரு சிறிய மாவீரர் நினைவாலயம் போலக் காட்சி அளித்துக்கொண்டிருந்தது. மீண்டும் வீட்டின் முன்னால் அமைக்கப்பட்ட தகரப் பந்தலில் வந்து அமர்ந்து கொண்டோம். மணியண்ணையின் உறவுகள் எங்களைச் சூழ்ந்து அமர்ந்து கொண்டிருந்தார்கள்.

மணியண்ணையின் வீடு அவரின் உறவுகள் சூழ்ந்திருக்க எங்களின் மனங்கள் களமுனையில் இருந்த மணியண்ணையைச் சுற்றிக் கொண்டிருந்தது. கொட்டும் மழையில் நனைந்தபடி மணியண்ணை எங்களுடன் உரையாடிக்கொண்டிருந்த காட்சிகள் மனதை நிறைத்துக்கொண்டிருந்தன. அதிலும் நாங்கள் இயக்கம் மகன். நீங்கள் நனையாதையுங்கோ|| என்று எங்களிற்குப் பக்குவம் காத்த அன்பான அரவணைக்கும் வார்த்தை மனதை நிறைத்துக் கொண்டிருந்தது. அண்ண, அம்மாதான் கனக்கச் சொல்லுவா கூட்டிக்கொண்டு வாறன்|| என்று சொல்லிக்கொண்டு எழுந்த மணியண்ணை யின் மகன் அம்மாவைக் கூட்டிக்கொண்டு வர அவர் எங்களின் முன்பாயிருந்த கதிரையில் அமர்ந்துகொண்டார்.

அழுதழுது சோர்ந்துபோன அவரின் முகத்தில் பிரிவின் சோகம் இழையோடிப்போயிருந்தது. சற்று நேரம் மணியண்ணையின் வீட்டில் முழு அமைதி குடிகொண்டிருக்கவேணும் அவ்வளவிற்கு அமைதியாய் இருந்தது. இப்ப எப்பிடிக் கதையைத் தொடங்குவது எண்டு தெரியாமல் நாங்கள் சிந்தித்துக்கொண்டிருந்தோம். மகன் மணியண்ணையைப் பற்றிச் சொல்லுறதுக்குக் கனக்கக் கிடக்குது. ஆனால்,இப்ப என்னாலை அந்தளத்தையும் சொல்ல ஏலாமல் இருக்குது|| என்றவர் பின்னர்;. அவரப்பற்றி கனக்கச்சொல்ல வேணும் சொன்னால் தான் எனக்கு மனம் ஆறும்|| எனக் கூறிக்கொண்டார்.அவரிடம் அம்மா மணியண்ணையின்ர இயக்கத் தொடர்புகள் எப்ப ஆரம்பிச்சது|| என்றோம். அவர் என்னைக் கலியாணம் கட்டுறதுக்கு முதலே அவருக்கு இயக்கத்தொடர்புகள் நிறைய இருந்தது மகன்|| என்றார். எங்களின்ர ஊரில எல்லாரும் இயக்கத்துக்கு நல்ல ஆதரவு. வவுனியா கட்டையர் குளம் எண்டால் அந்த நேரமே ஆமிக்குச் சரியான பயம் மகன். அங்க நாப்பத்தைஞ்சு, அம்பது குடும்பம்தான் இருந்தது. ஆனால் அவ்வளவும் இயக்கத்துக்கு நல்ல ஆதரவு||என்றார்.

மணியண்ணையும் கட்டையர் குளம் தானோ|| என்று கேட்க அவரும் எங்களின்ர ஊர் தான். எங்களின்ர ஊரில இருந்த குடும்பங்களில முக்காவாசிப்பேருக்கு மேல இயக்கத்திலதான் இருந்தவை|| என்றார். மணியண்ணை ஜெயம் அண்ணையாக்கள் வவுனியாவில இருந்த காலத்தில இருந்தே இயக்கத்தோடதான். அந்த நாளையிலையே இரவு பகலாய் இயக்கத்துக்காகவே உழைச்சார் மகன்|| என்றவர் கண்கள் கலங்கி அண்டைக்குத் தொடக்கம் இண்டைக்கு வரையும் அவர் தன்னை உருக்கி நாட்டுக்காகத் தான் மகன் உழைச்சார்|| என்று மணியண்ணையின் விடுதலை வாழ்வை சொல்லிக் கொண்டிருந்தார். கதைத்துக்கொண்டிருந்த எங்களிற்குப் பின்னால் இருந்து மாமா.. மாமா..||என்று சிறுமி ஒருத்தி கூப்பிடும் சத்தம் கேட்டது. திரும்பிப் பார்த்தோம். நாங்கள் எதிர்பாராத விதத்தில் எங்களருகில் தேனீர் தட்டுடன் நின்றாள் அந்தச் சிறுமி. நாங்கள் திரும்பிப் பார்க்கவும் மாமா இதக்குடியுங்கோ|| என்று சொல்லியபடி தேனீர்த் தட்டை நீட்டினாள். தேனீரைப் பெற்றுக்கொண்டோம். இவர் எப்பவும் இயக்கத்தைப்பற்றித் தான் கதைப்பார். வீட்டப் பாக்கிறதுக்கு நீங்கள் இருக்கிறியள் தானே. நான் நாட்டைப்பாக்கிறன்.

பிள்ளையளை நாட்டுப்பற்றாளராக வளத்திடுங்கோ எண்டு அடிக்கடி சொல்லுவார் மகன். அவற்ற ஆசைக்கு ஏற்ற மாதிரி நான் பிள்ளையளையும் வளத்துக்கொண்டு வந்தனான்|| என்றார். அவர்களின் வாழ்வில் கடந்து போன ஒரு நாளின் பொழுதொன்றில் இடம் பெற்ற சம்பவம் ஒன்றை மணியண்ணையின் மனைவி எங்களிடம் சொல்லிக்கொண்டார். ஒரு நாள் அவர் சரியான காய்ச்சலோட வீட்டவந்து படுத்திருந்தார். நானும் தொட்டுப்பாத்தன் சரியான காய்ச்சல். அப்ப இவர் நிண்டு காய்ச்சல் மாறினாப்பிறகு தானே போவார் எண்டு நான் மனதுக்க நினைச்சுக்கொண்டு சமைச்சுச் சாப்பாட்டைக் குடுத்தன். கொஞ்சமாய்ச் சாப்பிட்டுட்டு எழும்பி முகம் கழுவி வெளிக்கிட்டுக்கொண்டிருந்தார். அப்ப நான் மருந்து எடுத்துக்கொண்டுதானே வந்தநீங்கள் எண்டு கேட்டன். அதுக்கு அவர் நான் லைனுக்குப் போகப்போறன் எண்டு சொன்னார் மகன். அப்ப இந்தக் காய்ச்சலோடை போகப்போறீங்களோ காய்ச்சல் மாறும் மட்டும் லீவில நில்லுங்கோவன் எண்டு கேட்டன்.|| என்று சொல்லிக்கொண்டிருந்தவர் சட்டென்று கதையை நிறுத்திவிட்டார்.

கண்களில் வழிந்த நீரைத் துடைத்துக்கொண்டு அதுக்கு அவர் இயக்கத்துக்கு லீவில்ல அம்மா. நீங்கள் என்னை மட்டும் யோசிக்காதையுங்கோ. எல்லாக் களத்திலையும் போராளியள் சண்டைபிடிச்சு நாளாந்தம் வீரச்சாவடைஞ்சு கொண்டிருக்கினம். இப்பிடி இருக்க நாங்கள் சுதந்திரமாய் இருக்க ஏலாது. லைனில என்ர பெடியளோட நிண்டால் எனக்கு காய்ச்சல் இருக்கிறது தெரியாது. நீங்கள் ஒண்டுக்கும் யோசிக்காதையுங்கோ எண்டு சொல்லிப்போட்டு வெளிக்கிட்டுப் போட்டார் மகன்|| என்று மணியண்ணையின் மனைவி சொல்லிக்கொண்டிருந்தார். அவர் சொல்லிக் கொண்ட இந்தக் கதையைக் கேட்க மணியண்ணை களமுனையில் மழையில் நனைந்தபடி நின்றது ஞாபகத்தில் வந்து போய்க் கொண்டிருந்தது. அருகில் இருந்த மணியண்ணையின் தங்கை அண்ணா சின்னனில இருந்தே தான் என்ன வேலைக்குப் போனாலும் அந்த வேலைய முடிச்சுத்தான் அடுத்த வேலை. அப்பிடித்தான் இருந்தவர்|| என்றார். எண்பத்தி அஞ்சாம் ஆண்டு ஒரு நாள் இயக்கத்துக்குச் சாப்பாடு சமைச்சு வைச்சிட்டு பாத்துக் கொண்டிருக்கிறம.; ஒருத்தரும் வரேல்ல. ஆமிக்காறங்களின்ர நடமாட்டங்களும் கூடவாய் இருந்தது. அப்ப இந்தச் சாப்பாட்டைக் கொண்டுபோய்க் குடுக்க வேணும். அண்ணா சாப்பிடவே இல்லை.

அந்தச் சாப்பாட்டைக் காட்டுக்குள்ள கொண்டு போய் இயக்கத்துக்குக் குடுத்திட்டு வந்து பின்நேரம் நாலு மணிக்குப்பிறகு தான் சாப்பிட்டவர். அப்பிடித்தான் மணியண்ணா முந்தியே இருந்தவர்|| என்று அவரிற்கு பிறப்பில் இருந்தே எடுத்தபணியை முடிக்கும் குணம் இருந்தது என்பதாய்ச் சொல்லி முடித்தார் மணியண்ணையின் தங்கை. அவரிடம் ஷஷ உங்களின்ர வீட்டுக்காறர் இவயள் இயக்கத்துக்குப் போறதுக்கு முன்னுக்கே இயக்கத்தோட நல்ல நெருக்கம் இருந்ததோ|| என்று அவர்களின் போராட்டப்பங்களிப்பைப் பற்றிக்கேட்டோம். மணியண்ணையின் தங்கை தொடர்ந்தார் தம்பியவ நாங்கள் 85,86 ஆம் ஆண்டுகளிலேயே இயக்கத்தோட நல்ல ஆதரவாய் இருந்தம். இப்பிடி இருக்க எண்பத்தி ஆறாம் ஆண்டு ஆவணி மாதம் பதின் மூண்டாம் திகதி நாகராசா எண்ட எங்களின்ர சின்னண்ணா இயக்கத்தில சேந்திட்டார். அவருக்கு இயக்கப் பேர் நேசன். ஏற்கனவே இயக்கத்துக்குச் சாப்பாடுகள் குடுக்கிறது, ஆமிக்காறங்கள் எங்க வாறாங்கள் போறாங்கள் எண்டதப் பாத்துச் சொல்லுறது தான் எங்களின்ர வேலை|| என்று போராட்டத்திற்கும் தங்களின் குடும்பத்திற்குமான உறவுபற்றிச் சொல்லிக்கொண்டிருந்தார்.

இப்பிடியே இருக்க எங்களின்ர சின்னண்ணாவும் இயக்கத்துக்குப் போனதோட அப்பாவும் அம்மாவும் நாங்களும் இயக்கத்தோட நல்லாய் நெருங்கிப்போனம். அப்ப இந்தியன் ஆமிக்காறங்களும் வந்திட்டாங்கள். இயக்கத்துக்குச் சாப்பாடு குடுக்கிறது. தங்களைக் காட்டிக்குடுக்கிறது எண்டு சொல்லி இந்தியன் ஆமியும் ஒட்டுக்குழுக்காறங்களும் எங்களின்ர வீட்டை அடிக்கடி சோதிப்பாங்கள். வீட்டை வந்து எங்களின்ர இயக்கத்தில இருக்கிற சின்னண்ணாவை காட்டித்தராட்டில் மணியண்ணையைச் சுட்டுப்போடுவம் எண்டு வெருட்டுவாங்கள். இப்பிடி ஒரே ஆக்கினை தான்|| என்று இராணுவக் கொடுமைகளைப்பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தார்.

வவுனியாவில எங்கயாவது சண்டை நடந்து போராளியள் வீரச்சாவடைஞ்சாலும் எங்களுக்குச் சரியான கவலையாய் இருக்கும். யாரெண்டாலும் அவங்கள் எங்களின்ர கையால சாப்பிட்ட போராளியளாய்த் தான் இருக்கும். இப்பிடிச் சண்டையள் நடந்து போராளியள் ஆரும்; ஒருவர் போய் வீரச்சாவடைஞ்சிட்டால்; அவயின்ர வித்துடலை எங்களின்ர ஊரில இருக்கிற ஆரும் ஒருவர்போய் தங்களின்ர பிள்ளையள் எண்டுசொல்லி ஆஸ்பத்திரியில இருந்து எடுத்துக்கொண்டு வந்து அடக்கம் செய்யிறது|| என்றார்.

அப்ப இப்பிடியிருக்க ஒரு நாள் பாலமோட்டைப் பக்கம் நல்ல துவக்குச் சண்டை.சண்டை முடிஞ்சு கொஞ்ச நேரத்தில எங்களின்ர வீட்டுக்கு ஒரு இயக்க அண்ணா வந்து இந்தச் சண்டையில போராளி ஒராள் வீரச்சாவடைஞ்சிட்டார். ஆற்ற பிள்ளை எண்டாலும் பறவாயில்லை. அவரின்ர வித்துடலை உங்களின்ர பிள்ளை எண்டு சொல்லி வழமையாய்ச் செய்யிறமாதிரி எடுத்து அடக்கம் செய்யட்டாம் எண்டு ஜெயம் அண்ணா தகவல் சொல்லி அனுப்பியிருந்தார். இப்ப தளபதியாய் இருக்கிற ஜெயம் அண்ணா சொல்லி அனுப்பினதோட எங்களின்ர வீட்டில இருந்து அப்பாவும் வேற ஊராக்களும் சேந்து ஆஸ்பத்திரிக்குப் போய் சண்டையில வீரச்சாவடைஞ்ச போராளியின்ர வித்துடலை எடுத்துக்கொண்டு வாறது எண்டு போட்டினம். அப்ப வீட்டை வந்த போராளியிட்ட ஆர் தம்பி வீரச்சாவு எண்டு கேட்டம்.

அதில நாலைஞ்சு பேர் போனவையள் ஆர் வீரச்சாவோ தெரியேல்ல ஐயா வந்தவுடன தான் தெரியும் வரட்டும் எண்டு சொல்லிக்கொண்டு அந்தப்போராளியும் காட்டுக்குள்ள போட்டார் தம்பியவ|| என்றார் மணியண்ணையின் தங்கை. வித்துடலை எடுக்கப்போன அப்பா எங்களுக்குக் கிட்ட வந்து என்ர பிள்ளை நாகராசா எல்லோ எண்டு பெரிசாய்க்கத்தி அழ வெளிக்கிட்டார். அப்ப தான் தெரியும் அதில வீரச்சாவடைஞ்சது எங்களின்ர தம்பி எண்டுறது||என்றார் அவர்.

தொடரும்…..

Up ↑