Search

Eelamaravar

Eelamaravar

Category

Uncategorized

தமிழ் இனத்தின் மீட்பராக வாழ்ந்த தேசியத் தலைவருக்கு வீரவணக்கங்கள்

Tribute to Prabhakaran tamil 6

வரலாற்றின் ஓர் உண்மை மனிதனாக, ஒரு விடுதலைப் போரொளியாக, அடிமைப்பட்டுப்போன ஓர் இனத்தின் மீட்பராக, ஓரு சமூகத்தின் அரசியல் வழிகாட்டியாக, விடுதலையின் ஒரு குறியீடாக, தமிழினச் சின்னமாக, உலகத் தமிழ் இனத்தின் ஒரு வரலாற்று நாயகனாக வாழ்ந்த எங்கள் தேசியத் தலைவர் மறைந்து விடவில்லை. தமிழீழ தேசத்தின் தலைமைச் சுடராக எம் தேசமெங்கும் அவர் ஒளி வீசிக்கொண்டிருக்கின்றார்.

மானிடத்தின் விடுதலையை நேசிக்கும் எல்லோர் மனங்களிலும் அவர் என்றும் நிறைந்திருக்கின்றார். அழிவென்பதே அற்ற ஒரு தத்துவார்த்த ஒளியாக அவர் எங்கும் நிறைந்திருக்கின்றார். உலகெங்கும் விடுதலையை அவாவி நிற்கும் இனங்களுக்கு தலைவரின் வாழ்க்கை ஒரு வழிகாட்டி. எம் மக்களுக்கு உரிமையைப் பெற்றுக் கொடுங்கள் என்பதே அவர் எங்களுக்கு விட்டுச் சென்றிருக்கும் விடுதலைப் பத்திரம். இதனையே எங்கள் மனங்களில் ஏந்துவோம். தலைவர் ஏற்றிய விடுதலை நெருப்பை அதன் இறுதி இலக்குவரை அணையாது பாதுகாப்போம்.”




Tribute to Prabhakaran tamil 5

Tribute to Prabhakaran tamil 4

Tribute to Prabhakaran tamil 3

Tribute to Prabhakaran tamil 2

praba-god

Tribute to Prabhakaran tamil 2




ltte leaders dead

****

Facebook Comments

வீரவணக்கம்: மாசி மாதம் வீரகாவியமான மாவீரர்களுக்கு வீரவணக்கம்

தமிழீழ தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிரை ஈந்த இந்த வீரமறவர்களிற்கு எமது வீரவணக்கங்கள். மாசி மாதம் வீரச்சாவைத் தழுவிய ஏனைய மாவீரர்களிற்கும் எமது வீரவணக்கங்கள்.

February 7th

February 8th

  1. Bt Maj Isaiyarasanதமிழீழப் பாடகர் கடற்கரும்புலி மேஜர் இசையரசனின் நினைவுகளோடு
  2. முல்லைக் கடற்பரப்பில் டோறா மூழ்கடிப்பில் காவியமான கரும்புலிகள் வீரவணக்கங்கள்

February 12th

February 12th

February 17th

February 19th

February 20th

2004 ம் ஆண்டு தை, மாசி காவியமான விடுபட்ட மாவீரர்கள்

தமிழீழ தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிரை ஈந்த இந்த வீரமறவர்களிற்கு எமது வீரவணக்கங்கள். மாசி மாதம் வீரச்சாவைத் தழுவிய ஏனைய மாவீரர்களிற்கும் எமது வீரவணக்கங்கள்.

ltte veeravanakam

 

வீரவணக்கம்: தை மாதம் வீரகாவியமான மாவீரர்களுக்கு வீரவணக்கம்

தமிழீழ தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிரை ஈந்த இந்த வீரமறவர்களிற்கு எமது வீரவணக்கங்கள். தை மாதம் வீரச்சாவைத் தழுவிய ஏனைய மாவீரர்களிற்கும் எமது வீரவணக்கங்கள்.

January 29th

எரிந்துபோகாத எழுத்துக்கள் முத்துக்கு​மாரனின் நினைவாக

ஈழம் காக்க ஈகம் செய்த ஈகியர்கள் வீரவணக்கம்

*************

January 16th

பிரபாகரனின் முதல் பெரும் தளபதி கேணல் கிட்டு

 January 16th

**************

January 9th

லெப்.கேணல் இம்ரான், பாண்டியன் வீரவணக்க நாள்

வீரவேங்கை சுயந்தன் வீரவணக்க நாள்

*********

January 8th

மேஜர் சோதியா வீரவணக்க நாள்

கப்டன் பண்டிதர் வீரவணக்க நாள்

***********

January 6th


மாதந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளை வீரவணக்கம்

************

January 5th

மாமனிதர் குமார் பொன்னம்பலம் வீரவணக்கம்

****

********
2007,2008 தை வீரகாவியமான மாவீரர்களுக்கு வீரவணக்கம்…

*****
ltte veeravanakam

தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 6 ம் ஆண்டு நினைவில்

தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 6 ம் ஆண்டு நினைவில்

தேசத்தின் குரல் தமிழீழ தேசத்திற்கே இட்டுநிரப்பமுடியாத பேரிழப்பு –  தேசியத் தலைவரின் அறிக்கை


தலைமைச்செயலகம்,
தமிழீழ விடுதலைப் புலிகள்,
தமிழீழம்
2006-12-14

எமது சுதந்திர இயக்கத்தின் அரசியல் இராஜதந்திர நகர்வுகளில் எனக்குப் பக்கபலமாக இருந்து செயற்பட்ட எமது தேசத்தின் ஒளிவிளக்கு இன்று அணைந்துவிட்டது. ஆலோசனை வேண்டி, ஆறுதல் தேடி ஓடுவதற்கு பாலாண்ணை இன்று என்னுடன் இல்லை. இவரது மறைவு எனக்கு மாத்திரமல்ல தமிழீழ தேசத்திற்கே இட்டுநிரப்பமுடியாத பேரிழப்பு.

பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடையே விரியும் காலமாக மனிதவாழ்வு நிலைக்கிறது. இந்த வாழ்வுக்காலம் எல்லா மனிதர்களுக்கும் ஒரேமாதிரியாக, ஒத்ததாக, ஒருசீராக அமைவதில்லை. காலச்சீரற்றதாக ஒருவருக்குக் கூடி, மற்றவருக்குக் குறுகி, இன்னொருவருக்கு அதிகம் நெடுத்து கூடிக்குறைந்து செல்கிறது. துரதிஸ்டவசமாக, பாலாண்ணையினது வாழ்வு இடைநடுவில் நின்றுபோய்விட்டது. தீவிரம்பெற்றுள்ள எமது விடுதலைப்போருக்கு அவர் நிறையப் பணிகளை ஆற்றவேண்டியிருக்கின்ற தருணத்தில் அவருக்கு மரணம் சம்பவித்திருக்கிறது. இதனை என்னால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. துயரத்தின் சுமை என் ஆன்மாவை அழுத்துகிறது. என் உள்ளத்தை உடைத்து, நெஞ்சத்தைப் பிளக்கிறது. கட்டுக்கடங்காத காட்டாறு போல சீறிப்பாயும் உணர்ச்சிப் பெருவெள்ளத்தை என்னால் வார்த்தைகளால் கொட்டமுடியாது. மனித மொழியில் இதற்கு இடமுமில்லை.

பழக ஆரம்பித்த நாள் முதலே எமக்கிடையே ஒரு இனம்புரியாத புரிந்துணர்வு ஏற்பட்டது. அந்தப் புரிந்துணர்வால் எழும் பற்றுறவால் பிணைந்துகொண்டு, எமது உறவு நல்லுறவாக வளர்ந்து நட்புறவாகப் பரிணமித்தது. சிந்தனையாலும் செயலாலும் ஒன்றுபட்ட மனிதர்களின் சங்கமமாக அந்த உறவு மலர்ந்தது. தினம்தினம் நாம் பகிர்ந்துகொண்ட வாழ்பனுபவத்தில் வலிமைபெற்று வளர்ந்தது. சாதாரண மனித உறவுகளிலிருந்து இது முற்றிலும் வேறுபட்டது. காலத்தால் கனிந்து, வரலாற்றால் வடிவம் பெற்ற ஒரு அலாதியான இலட்சிய உறவு அது.

பாலாண்ணையை நான் ஆழமாக நேசித்தேன். விடுதலை இயக்கம் என்ற மாபெரும் குடும்பத்தில் ஒரு மூத்த தலைமகனாக பிதாமகனாக மூன்று தசாப்தங்கள் வாழ்ந்தவர் அவர். நானும் அவரை அப்படித்தான் நோக்கினேன். ஒரு குடும்பமாக ஒன்றுசேர்ந்து ஒத்திசைவாக ஒன்றித்திருந்த நாட்களில் அவர் ஒரு சாதாரண மனிதப்பிறவி அல்ல என்பதைக் கண்டுகொண்டேன். மோசமாகச் சுகவீனமுற்று தினம்தினம் சாவோடு போராடியபோதும், தாங்கமுடியாத உடல்உபாதைகளால் வருந்தியபோதும், தளர்ந்துபோகாத உறுதிப்பாடு அவரிடம் இருந்தது. அவரின் இந்த இலட்சிய உறுதி எனது நெஞ்சத்தைத் தொட்டுநின்றது. அவர் துன்பத்தால் துவண்டபோதெல்லாம் எனது ஆன்மாவும் கலங்கியழுதது.

எமது இயக்கத்தின் வளர்ச்சியிலும் அதன் இன்றைய விரிவாக்கத்திலும் பாலாண்ணைக்கு ஒரு நிரந்தரமான இடம் இருக்கிறது. ஒரு மூத்த அரசியல் போராளியாக, ஒரு மதியுரைஞராக, ஒரு தத்துவாசிரியராக எல்லாவற்றுக்கும் மேலாக எனது உற்ற நண்பனாக இருந்து எனக்கு ஊக்கமும் உத்வேகமும் அளித்தவர். ஆலோசனையும் ஆறுதலும் தந்தவர். எனது உணர்வுகளைப் பகிர்ந்துகொண்டு, எனது பழுக்களையும் பங்கிட்டுக்கொண்டவர். எமது விடுதலை இயக்கம் தோற்றம்பெற்ற ஆரம்பகாலம் முதல் என்னோடு இருந்து, எல்லாச் சோதனைகளையும் வேதனைகளையும் சவால்களையும் சங்கடங்களையும் தாங்கிக்கொண்டவர். எமது அரசியல் இராஜதந்திர முன்னெடுப்புக்களுக்கு மூலாதாரமாக, முன்னால் நின்று செயற்பட்டவர்.

ஈழத்தமிழினம் பெருமைகொள்ளும் வகையில் அரசியல் உலகிலும் இராஜதந்திர உலகிலும் அளப்பெரும் சாதனைகள் புரிந்து, எமது தேசசுதந்திரப் போராட்டத்தை உலக அரங்கில் முன்னிறுத்திய பாலாண்ணையின் மாபெரும் போராட்டப்பணிக்கு மதிப்பளித்து தேசத்தின் குரல் என்ற மாபெரும் கௌரவப்பட்டத்தை அவருக்கு வழங்குவதில் நான் பெருமையடைகிறேன். பாலாண்ணை உண்மையில் எம்மைவிட்டுப் போகவில்லை. அவர் எமது நினைவலைகளில் என்றும் நீங்காத நினைவுகளாக நிலைத்து நிற்பார்.

புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்

வே. பிரபாகரன்
தலைவர்
தமிழீழ விடுதலைப் புலிகள்

***
Pictures-தேசத்தின் குரல்/anton balasingam

****

வீரவரலாறு காணொளி

  1. மரணத்தின் பின்பும் வாழும் தேசத்தின் குரல்
  2.  வரலாற்றினுள் வெடித்தெழுந்தவர் அன்ரன் பாலசிங்கம்
  3. என்றும் ஒளி வீசும் தத்துவ விளக்கு! வழிகாட்டிய விழிச்சுடர் அன்ரன் பாலசிங்கம்!
  4. “தேசியத்தின் குரல்” கலாநிதி அன்டன் பாலசிங்கம் 4ம் ஆண்டு வீரவணக்கம்
  5. சபைகளை வென்ற சாணக்கியன் தேசத்தின் குரல் -புதுவையின் குரலில்
  6. இன்றைய தருணத்தில் தேவைப்படுகின்ற ‘தேசத்தின் குரல்’
  7. தேசத்தின் குரலுக்கு வீர வணக்கம்

—————————————————-

 Dr. Balasingham Last Speech at Alexandra Palace London

 

பாலா அண்ணா!

மூன்று தசாப்தங்களாக எங்களின் இலக்குக்கும் சர்வதேச செல்நெறிக்கும் இடையேயான இடைவெளியில் போர்புரிந்த போர் வீரன் பாலா அண்ணா போய்விட்டார்!

தமிழீழ விடுதலைப் போரின் மொழிக்கும் – சர்வதேச உறவாடலுக்கும் வடிவம் கொடுத்த தேசியதலைவர் பிரபாகரனின் மூத்த தோழன் பாலா அண்ணாவை சாவு பிரித்துவிட்டது!

தன்னுடலால் அழிந்து – அழியாத தமிழீழ விடுதலை வரலாற்றில் பாலா அண்ணா இடம்பிடித்துவிட்டார்.

சாவும் – இழப்பும் தமிழீழ மக்களின் சமகால வரலாற்றில் செறிவான தினசரி நிகழ்வாகியுள்ள போதும் இந்த மனிதரின் சாவு இதயத்தினுள் ஒரு இடைவெளியினை ஏற்படுத்துகின்றது.

மூன்று தசாப்தங்களாக எங்கள் தேசிய விடுதலை இலட்சியத்திற்கு உழைத்தவர்!
மூன்று தசாப்தங்களாக எங்கள் தேசியத்தின் குரலாகப் பேசியவர்!
மூன்று தசாப்தங்களாக எங்கள் தலைவரின் சகாவாக வாழ்ந்தவர்!
மூன்று தசாப்தங்களாக எங்களின் இலக்குக்கும் சர்வதேச செல்நெறிக்கும் இடையேயான இடைவெளியில் போர்புரிந்தவர்!
மூன்று தசாப்தங்களாக எழுத்தால் எங்களை புதுப்பித்தவர்!
மூன்று தசாப்தங்களாக பேச்சால் எங்களை உயிர்ப்பித்தவர்!

இந்தகைய மூன்று தாசாப்த சரித்திரத்தின் வரலாற்றுப் பாத்திரத்தை எங்களிமிருந்து இயற்கை பறித்த உண்மையை ஏற்றுக் கொள்ள இதயம் தயங்குகின்றது.

தமிழர் விடுதலைப் போரிற்கு பாலா அண்ணரின் பங்களிப்பு என்ன என்ற கேள்வி அர்த்தமற்றது. ஏனெனில் அவர் விடுதலைப் போரிற்குள் முழுமையாக வாழந்தவர் என்பதில் அனைத்துமே அடங்கிவிடுகின்றது. ஆனாலும்;, பாலா அண்ணா என்றால் அவரது ஆழமான எழுத்தும் – நிறைவான பேச்சுமே எங்கள் நினைவில் பதிவாகியுள்ளது.

தமிழர் விடுதலை இயக்கத்தின் தத்துவப் பேராசானாக அனைவராலும் அவர் மதிக்கப்பட்டார். தமிழீழ தேசிய விடுதலை தொடர்பாக 1970களில் எழுத ஆரம்பித்தார். தேசிய சுயநிர்ணய உரிமை தொடர்பான அனைத்துலக விவாதப் தேடலுக்குள் தமிழீழ விடுதலையின் நியாயங்களை இணைத்து விவாதித்தார். தமிழீழ விடுதலைப் போரின் நியாயங்களுக்குள் நிலவிய உலக முற்போக்கு விசையின் கூறுகளை எடுத்து விளக்கினார் சிங்கள அடக்குமுறையினுள் பொதிந்து கிடந்த வெறுக்கத்தக்க பெருந்தேசியவாத இருளை சுட்டிக்காட்டினார்.

தனது இயல்பான – செழுமையான அரசியல் மொழியூடாக போராளிகளையும், மக்களையும் தேசத்தையும் அரசியல் வழியில் பயிற்றுவித்தார். தேசிய மாவீரர் நாளில் தேசிய தலைவர் ஆற்றும் உரையின் விரிவாக்கவுரையை சுமார் 5 வருடங்களாக தொடர்ந்து இலண்டனில் மேற்கொண்ட போது மற்றுமொரு புதிய தளத்திற்கு புலிகள் இயக்கத்தின் புலத்து அரசியல் தொடர்பாடலை நகர்த்தினாhர்.

விடுதலைப் போராட்ட அரசியலும், சர்வதேச இராஐதந்திரத்திற்கும் இடையேயுள்ள இடைவெளியினை அளந்து – அளந்து கடந்து செல்ல பாலா அண்ணா கடுமையாக உழைத்தார்.

அமெரிக்க வெளிவிவகார பிரதியமைச்சர் றிச்சட் ஆமிர்ரெஐ;, பிரித்தானிய சர்வதேச உதவிகளுக்கான அமைச்சர் உட்பட பலர் முன்னே நோர்வே ஒஸ்லோ கொடைவழங்கும் நாடுகளுக்கான சிறப்பு மாநாட்டில் பாலா அண்ணாவின் இந்த சூட்சுமத்தின் அளவீடு வெளிப்படையாவே இருந்தது. சிங்களம் எங்களுக்கு ஏற்படுத்திய பேரழிவை அவர் பட்டியலிட்டு, விடுதலைப் போரின் நியாயங்களையும், தர்க்க விளக்கங்களையும் இராஐதந்திர வரம்புகளை மீறாது பாலா அண்ணா வெளிப்படுத்திய போது அது வரலாற்றில் எமக்கான குரலாகவும் – மைல்கல்லாக அமைந்தது.

பாலா அண்ணாவின் பயணத்தில் எதிர்ப்பட்ட முக்கிய பதிவுகள் தமிழீழ விடுதலையின் முக்கிய பதிவுகளாகவும் உள்ளன.

திம்புவில் இந்தியா தனது நலன்களை மட்டும் பேச முயன்ற போது எதிர்த்து நின்று தமிழீழ மக்களின் நியாயத்தினைப் பேசிய குற்றத்திற்காகப் புலிகளை தண்டிக்க விரும்பிய இந்திய மத்தியஅரசு 1985ல் பாலா அண்ணரை நாடு கடத்தியது.

இந்தியா இராணுவத்தின் கோரப் பிடியில் தமிழீழ தேசம் தள்ளாடிய போது சிறீலங்காவுடன் புலிகள் மேற்கொண்ட சாதுரியமான இராஐதந்திர ஆட்டத்தினை நேர்த்தியாக முன்னெடுத்து – 1990ல் இந்தியாவினை நேரடியான இராணுவ முரண்பாட்டிலிருந்து விலக்கிய நுட்பமான நடவடிக்கையிலும் பாலா அண்ணார் இருந்தார்.

பின்னர் சந்திரிகா அம்மையார் சர்வதேச சக்திகளின் ஆதரவுடன் நடாத்திய போர் தோற்ற போது, தமிழர்கள் ஈட்டிய வெற்றியிலிருந்து அதே சர்வதேச சக்திகளுடனான தொடர்பாடலை பாலா அண்ணா 2002 முதல் மேற்கொண்டார். கட்டுப்பாட்டுப் பகுதிகளை ஏற்றுக்கொள்ளும் சர்வதேச ஏற்றுக்கொள்கையுடன் கூடிய போர்நிறுத்த உடன்பாட்டினை புலிகள் தரப்பில் நின்று வரைவதில் பாலா அண்ணாவின் பங்கே முக்கியமாகவிருந்தது இருந்தது என முன்னாள் சனதிபதி சந்திரிகா முதல் விமல்வீரவம்ச வரை குத்திமுழங்கும் போது பாலா அண்ணரின் இயல்பான நக்கல் சிரிப்பில் ஒரு வியூக சிந்தனை இருந்தது.

பாலா அண்ணா வெறுமனே அரசியல் சிந்தனைகளை மட்டும் கொண்ட விடுதலைப் போரளியல்ல. அவர் மனித வாழ்வின் பல்வேறு வி;டயங்களையும் அலசிப் பேசும் அலாதியான சிந்தனையாளன். இந்திய சிந்தனையாளர் கிருஸ்ணமூர்த்தி தொட்டு பலவித வாழ்வியல் சிந்தனையாளர்களைப் பற்றிப் பேசினார் – எழுதினார். சிறந்த இலக்கியங்களைப் வாசித்தார் – விவாதித்தார். கவிதைகளை இரசித்தார். நிறைய புதியபுதிய எழுத்துக்களை வாசித்து காலத்துடன் தன்னைப் புதுப்பித்து – நடைபயில வைத்தார்.

தனக்கு சாவு நிச்சயம் என்பதை உணர்ந்த காலத்தில் கூட அவர் மக்களிற்கு இன்னமும் விடிவு கிட்டவில்லையே என்கின்ற ஏக்கத்துடன்தான் நாள்களை கடத்தினார். இறப்பதற்கு முன்னர் பாலா அண்ணர் தனது மரணத்தை பின்வருமாறு வர்ணித்தார்: ‘’18000 மேற்பட்ட போராளிகளினை சந்திக்கும் பயணத்தில் உள்ளேன்’’

இன்று எங்கள் மாவீரர்கள் பாலா அண்ணரை ஆரத்தழுவி வரவேற்று அவரது சிந்தனை அனுபவங்களை அவருக்கேயுரிய செழுமையான மொழியில் கேட்கையில் நாங்கள் அவரது மரணம் தந்த துன்பத்தினுள் வெறுமையாகி நிற்கின்றோம்.

பாலா அண்ணாவின் வாழ்வும் – தேடலும் சத்தியவேட்கை நிரம்பியது. மக்களையும் – மண்ணையும் நேசித்த மனிதனின் தேடலாகவும் வாழ்வாகவும் அது இருந்தது. அந்த மக்களின் வாழ்வை மீட்பதும் வாழ்விப்பதுதே பாலா அண்ணரின் இறுதி நினைவுக்கு நாங்கள் செய்யும் நினைவு வணக்கமாக இருக்கட்டும்.

பாலா அண்ணா! – Nathan, Geneva, 14 December 2006

———————–

தேசத்தின் குரல் இரங்கல் செய்திகள்

கரும்புலி மேஜர் வித்தி,மேஜர் பசீலன், அறிவு, தூயவன் உட்பட்ட மாவீரர்களின் வீரவணக்க நாள்

08.11.1994 அன்று யாழ். வெற்றிலைக்கேணி கடற்பரப்பில் வைத்து சிறிலங்கா கடற்படையின் தரையிறங்கு கலமான பபதா கலத்தின் மீதான கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட கடற்கரும்புலி மேஜர் வித்தி(வேதமணி) அவர்களின் 18ம் ஆண்டு வீரவணக்க நாளும்,

08.11.2006 அன்று மட்டக்களப்பு மாவட்டம் வாகரைப் பகுதியில் சிறிலங்கா படையினரின் கிளைமோர் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட திருகோணமலை மாவட்ட துணைத் தளபதி லெப்.கேணல் அறிவு அவர்களின் 6ம் ஆண்டு வீரவணக்க நாளும்

08.11.1999 அன்று மன்னார் பூநகரி கடற்பரப்பில் தவறுதலாக இடம்பெற்ற படகு விபத்தில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட யாழ். மாவட்ட அரசியற்துறைப் பொறுப்பாளர் லெப்.கேணல் தூயவன் அவர்களின் 13ம் ஆண்டு வீரவணக்க நாளும்

**

துணிச்சலின் சிகரமாய் மேஜர் பசீலன் வீரவணக்க நாள்

இந்திய அமைதிப்படையை கதிகலங்க வைத்த மேஜர் பசீலனின் வீரவணக்க நாள் (08.11.1987)

முல்லைத்தீவு முள்ளியவளையினை சேர்ந்த வன்னிமாவட்ட முன்னாள் படைத்தளபதி நல்லய்யா அமிர்லிங்கம் என்று அழைக்கப்படும் மேஜர் பசீலனின் 25 ஆம் ஆண்டு வீரவணக்க நாளும் இன்றாகும்.

தமிழீழ தாயக விடுதலைக்காக தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த மானமாவீரர்களிற்கு எமது வீரவணக்கங்கள்

கடற்கரும்புலி லெப்.கேணல் வளவன் ,உதயகீதன் ,வீமன் உட்பட்ட மாவீரர்களின் வீரவணக்க நாள்

15.10.2006 அன்று தமிழீழக் கடற்பரப்பில் வீரகாவியமான கடற்கரும்புலி லெப்.கேணல் வளவன் அவர்களின் 6ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.

கரும்புலி மேஜர் உதயகீதன், கடற்கரும்புலி கப்டன் அன்புக்கினியன் உட்பட்ட ஐந்து மாவீரர்களின் 11ம் ஆண்டு நினைவு நாள்!

மட்டு. நகரில் காவியமான கரும்புலி மேஜர் உதயகீதன், திருமலையில் காவியமான கடற்கரும்புலி கப்டன் அன்புக்கினியன், 2ம் லெப். வேந்தன், 2ம் லெப். ஈழச்செல்வன், முல்லைத்தீவில் காவியமான 2ம் லெப்.சிவா ஆகிய மாவீரர்களின் 11ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.

சிறிலங்கா படைகளுடன் சேர்ந்தியங்கிய தேசவிரோதிகள் மீது மட்டக்களப்பு நகரில் வைத்து 15.10.2001 அன்று மேற்கொள்ளப்பட்ட கரும்புலித் தாக்குதலில்

கரும்புலி மேஜர் உதயகீதன் (ஆனந்தன் விஜயஜெயந்தன் – அக்கரைப்பற்று, அம்பாறை)  வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர்.

இதே நாள் திருகோணமலை பள்ளித்தோட்டம் பகுதியில் சிறிலங்கா படையினருடன் ஏற்பட்ட மோதலின்போது

கடற்கரும்புலி கப்டன் அன்புக்கினியன் (நவசிவாயம் சிவரூபன் – மந்திகை, யாழ்ப்பாணம்)

2ம் லெப்டினன்ட் வேந்தன் (செல்லத்துரை பாலகுமார் – மீசாலை, யாழ்ப்பாணம்)

2ம் லெப்டினன்ட் ஈழச்செல்வன் (செல்லக்கணபதிப்பிள்ளை றமேஸ் – கொச்சிக்கடை, கொழும்பு)  ஆகிய போராளிகள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர்.

முல்லை மாவட்டம் முந்திரிகைக்குளம் பகுதியில் சிறிலங்கா படையினர் பதுங்கியிருந்து மேற்கொண்ட தாக்குதலின்போது

2ம் லெப்டினன்ட் சிவா (இராசையா பாலகுமார் – சுண்ணாகம் யாழ்ப்பாணம்)  வீரச்சாவைத் தழுவிக் கொண்டார்.

 




தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த வீரமறவர்களை இன்றைய நாளில் நெஞ்சில நிறுத்தி நினைவு கூருகிறோம்.

மட்டக்களப்பு மாவட்ட தாக்குதல் படைத் தளபதி லெப்.பரமதேவாவின்[ ராஜா] வீரவணக்க நாள்

தமிழீழ விடுதலைப்போராட்டம் பாரிய பின்னடைவை சந்தித்து தமிழர்கள் அரசியல் உரிமைகள் மறுக்கப்பட்டு தமிழர் நிலங்களெல்லாம் சூறையாடப்பட்டு கொண்டிருக்கின்றது .கிழக்கில் பசில் ராஜபக்சவும் வெளிநாட்டு நிறுவனங்களும் வளம் மிக்க பகுதிகள் பலவற்றை தம் வசமாக்கிவிட்டனர் .

மாலை மரியாதைகளுடன் தற்போது கிழக்கை வலம் வரும் அதிகாரம் மிக்கவர்களுக்கு இவை பற்றி எவ்வித சிந்தனைகளும் அற்ற நிலையில் தமிழ் மக்கள் தமது கையறு நிலையை எண்ணி வேதனைப் பட்டுக்கொண்டிருக்கின்ன்றனர் . 30 வருடங்களுக்கு முன்னரும் இதேபோன்றோதொரு சூழ்நிலையில் தமிழரின் விடுதலையை நெஞ்சில் நிறுத்தி போராடப்புறப்பட்ட இளம் வீரன் இரா.பரமதேவா என்கிற மறத்தமிழன் வீரமரணமடைந்து இன்றுடன் 26 வருடங்கள் நிறைவடைகின்றன.

என்றோ ஒரு நாள் இந்த வீரர்களின் கனவு பலிக்கும் என்ற நம்பிக்கையுடன் விடுதலைப்புலிகள் இதழில் பரமதேவாவின் வீரச்சாவு நினைவாக வெளியாகிய நினைவுக்குறிப்புக்களை வாசகர்களுடன் பகிர்ந்து அந்த மாவீரனுக்கு எமது வீர வணக்கத்தை செலுத்துகின்றோம் .

1983 செப்டெம்பர் 23 ந் திகதி மட்டக்களப்பு சிறைச்சாலை உடைத்துக்கொண்டு வெளியேறுகிறான் பரமதேவா .1984 செப்டெம்பர் 22 ந் திகதி களுவாஞ்சிக்குடி போலீஸ் நிலைய தாக்குதலின்போது நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் வீரமரணம் அடைகிறான் பரமதேவா .மட்டக்களப்பு சிறை உடைப்பு சம்பவத்தை புதியதோர் திருப்பமென்றும் ஓராண்டு நினைவு என்றும் சிலர் கூட்டம் நடத்திக் கொண்டிருந்தபோது சரியாக அதற்க்கு முதல்நாள் ஒரு போலீஸ் நிலையத்தின் மீது ஆயுத சன்னதனாய் கெரில்லாத் தாக்குதலை நடத்துகிறான் இந்த வீர மகன் .

ஒரு விடுதலை வீரனின் வாழ்க்கை இப்படித்தான் அமையமுடியும் .தமிழ் ஈழ விடுதலைப் புலிகளின் மட்டக்களப்பு தாக்குதல் பிரிவு படைத் தளபதியான லெப். இரா.பரமதேவா சிங்கள போலீஸ் கொமாண்டோக்கள் நிறைந்திருந்த களுவாஞ்சிகுடி போலீஸ் நிலைய தாக்குதலுக்கு தலைமை தாங்கினான் .அஞ்சாத நெஞ்சனாக முன்னணியில் நின்று போரிட்ட பரமதேவா களத்திலே வீரமரணம் அடைந்தான் .

பரமதேவா மட்டக்களப்பு மண் சுமந்த வீரமகன் . 28 வயதான பரமதேவா நன்கு பயிற்ரப்பட்ட கெரில்லா போராளியாவார் . 19 வயது மாணவனாக மட்டக்களப்பு அரசினர் கல்லூரியின் உயர் வகுப்பு மாணவனாக இருந்த காலத்திலிருந்தே சிங்களபேரினவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் பரமதேவா துடிப்போடு பங்குகொண்டிருந்தார் .

1975 மே 22 ஆம் திகதி ஸ்ரீலங்கா குடியரசு தினத்தை பகிஷ்கரிக்க மாணவர்களை அணிதிரட்டி போராடியமைக்காக பாடசாலையில் இருந்து பரமதேவா நீக்கப்பட்டார் . 1977 ஆம் ஆண்டு மட்டுநகரில் இடம்பெற்ற ஒரு குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக ஸ்ரீலங்கா பொலிசாரால் தேடப்பட்ட பரமதேவா அந்த இளம் வயதிலே தலைமறைவு வாழ்க்கையை மேற்கொண்டான் . 1978 இல் இயக்க தேவைகளுக்காக செங்கலடி மக்கள்வங்கி பணத்தை பறித்தெடுப்பதில் ஈடுபட்ட பரமதேவா பொலிசாருடன் நடத்திய சண்டையில் கையின் மேற்பாகத்தில் குண்டு பாய்ந்த நிலையில் பொலிசாரால் கைது செய்யப்பட்டான் .

1981 ஸ்ரீலங்கா அரசு விடுதலை வீரன் பரமதேவாவுக்கு 8 வருட கடுங்காவல் தண்டனை வழங்கியது . நீதி மன்றத்தில் கூடி இருந்தோர் குமுறி அழுதபோதும் பரமதேவா எப்போதும்போல சிரித்த முகத்தோடு அந்த தண்டனையை ஏற்றுக்கொண்டான் . போகம்பர , வெலிக்கட, நியுமகசின் ,மகர ஆகிய சிறைச்சாலைகளில் எல்லாம் சிறைவாசம் அனுபவித்த பரமதேவா சிங்கள கைதிகள் மத்தியிலும் மரியாதைக்குரியவனாக இருந்திருக்கிறான் .1971 ஆண்டு ஏப்பிரல் கிளர்சியல் ஈடுபட்ட சிங்கள அரசியல் கைதிகளுடன் சிறைச்சாலையில் பயன் மிகுந்த சர்சகைகளை பரமதேவா நடத்தி இருக்கிறன்.

1983 செப்டம்பர் 23 ந் திகதி மட்டக்களப்பு சிறைச்சாலை உடைத்துக்கொண்டு தமிழ் ஈழ போராளிகள் வெற்றிகமான நடவடிக்களில் பெரும் பங்கு வகுத்தவன் பரமதேவா .சிறையில் இருந்து தப்பியதும் அவன் ஓய்ந்து போய் நின்றுவிடவில்லை தமிழ் ஈழ விடுதலை புலிகளின் ஆயுத போராட்ட பாதையில் மூலமே தமிழ் ஈழ இலட்ச்சியத்தை அடையமுடியும் என்பதில் அசையாத நம்பிக்கை கொண்ட பரமதேவா விரைவிலே தமிழ் ஈழ மண்ணில் தனது கெரில்லா போராட்ட வாழ்க்கையை தொடங்கினான்.

விடுதலைப் புலிகள் ஒட்டுச்சுட்டான் பொலிஸ் நிலையத்தின் மீது நடத்திய வெற்றிகரமான கெரில்லாத் தாக்குதலில் பரமதேவா முன்னணி வீரனாக நின்று செயல்பட்டான் கொக்கிளாயில் சிங்கள இராணுவத்தின் மீதான கெரில்லாத் தாக்குதலிலும் பரமதேவா முன்நின்றான். என்றும் சிரித்த முகத்தோடு காட்சி தரும் பரமதேவாவின் கூர்மையான அறிவையும் விடுதலைப் போராட்டத்தையும் போர்க்குணத்தையும் மாறுபட்ட விடுதலை இயக்கங்கள் கூட அங்கீகரிக்கின்றன . கிழக்கு மாகாணத்தில் பரமதேவாவின் பெயரைத் தெரியாதவர்கள் யாரும் இல்லை .

பரமதேவாவுடன் சேர்ந்து களுவாஞ்சிக்குடிபொலிஸ் தாக்குதலில் முன்னின்று போராடிய மகிழடித்தீவைச் சேர்ந்த ரவி எனப்படும் தம்பிப்பிள்ளை வாமதேவன் என்ற இளம் கெரில்லாப் போராளியும் களத்திலேவீரமரணம்அடைந்தான்.

***********
தமிழர் எழுச்சி அரசியலில் விடுதலைப் புரட்சியை ஏற்படுத்திய லெப்.ராஜா (பரமதேவா)- மட்டு.மண்ணின் முதல் மாவீரன்!
1984 ம் ஆண்டு யூலை மாதம் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மட்டக்களப்பு – அம்பாறை மாவட்டத் தாக்குதல் தளபதியாக ராஜா என்னும் பெயருடன் பரமதேவா தாய் மண்ணில் கால் பதித்தார்.

1983 ம் ஆண்டு யூலை இலங்கைத் தீவில் திட்டமிட்டு நடத்தப்பட்ட தமிழின அழிப்பைத் தொடர்ந்து தமிழ் இளையோர்களின் எழுச்சி, புரட்சிவாத உணர்வாக மாறியதன் விளைவில் பரமதேவா என்ற விடுதலை வீரனின் பயணம் ஒரு தளபதியாக, சிங்களப் படைகளை எதிர்த்துத்தாக்கும் களவீரனாக எம்மைக் காண வைத்தது.

சிங்களப் படைகளுக்கு எதிரான தாக்குதல்களை தீவிரப்படுத்தும் நோக்கோடு தலைவர் அவர்களினால் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட தாக்குதல் தளபதிகள் என்ற வகைக்குள் தமிழீழத்தின் தாக்குதல் தளபதியாக கேணல் கிட்டு அவர்கள் செயல்பட்டார்.

மட்டக்களப்பு – அம்பாறை மாவட்டத்தின் தாக்குதல் தளபதியான ராஜா (பரமதேவா) தாய் மண்ணுக்கு வருகை தந்திருந்தபோது தமிழீழப் விடுதலைப் புலிகளின் முன்னணி உறுப்பினர்கள் உட்பட்ட சில போராளிகள் மாத்திரம் தங்கியிருந்தனர். தமிழரின் விடுதலைப் போராட்டத்தில் பல இயக்கங்கள் உருவாக்கப்பட்ட நிலையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆரம்பம் மட்டக்களப்பில் புரட்சிவாத இளையோர்களின் புனிதப் பயணமாக அமைந்திருந்தன.

ஒரு போராளியாக, ஒரு விடுதலை வீரனாக, தமிழர் படையின் சிறப்பு மிக்க வீரனாக திகழ்ந்த பரமதேவா தாய் மண்ணில் தன்னைப் பெற்றெடுத்த தாயைப் பார்ப்பதற்கு முதல் எத்தனையோ தமிழ்த் தாய்மாரின் கண்ணீருக்கு காரணமான சிங்களப் பேரினவாதத்தின் படைகள் மீது தாக்குதலை நடத்திவிட்டு தனது தாயைச் சந்திப்பேன் என்று செய்தி அனுப்பிவிட்டு தாக்குதல் ஒன்றுக்கான ஆயத்தத்தில் தன்னை ஈடுபடுத்தினார்.

ஒரு போராளியின் உருவாக்கம் மொழிப்பற்று, இனப்பற்றிலிருந்து ஆரம்பிக்கின்றது. சூழ்நிலையின் தாக்கத்துக்குள் இல்லாமல் சிறு வயது முதல் தன் இனத்தின் விடுதலையில் எழுந்தவர்கள், தனது குடும்பத்தின் விருப்போடு தமிழினத்தின் போராளியாகப் புறப்பட்டவர்களின் வரிசையில் மட்டக்களப்பில் முதல் விடுதலை வீரனாக களம்கண்ட காவிய நாயகன் லெப்.ராஜா என்பதில் விடுதலையை நேசிக்கும், விடுதலை பெற்றவர்களாக வாழ வேண்டும் என்கின்ற அனைத்து தமிழ் மக்களின் நெஞ்சினில் ஏந்தப்பட்ட விடுதலை நெருப்பின் அடையாளமாகும்.

இவ்வாறு உணர்வான விடுதலைப் போராளியை தாயக விடுதலைக்கு ஈந்த அன்னையை எண்ணிப்பெருமிதம் கொள்வதோடு அணையாத விடுதலை நெருப்பாக மட்டக்களப்பில் எரிந்து கொண்டிருக்கும் லெப். ராஜா அவர்களின் வரலாற்றில் என் எழுதுகோலை ஊன்றுகின்றேன்.

தமிழர் தாயகம் மீதான நில அபகரிப்பு, ஆக்கரமிப்பு, தமிழின அழிப்பு, மொழிப் புறக்கணிப்பு என்பன தேசிய இன அடையாளத்தை அழிக்கும் செயலாக சிங்களப் பேரினவாதத்தின் ஆயுத அடக்குமுறைக்கு பதில் சொல்லும் நிலையில் மாறியபோது புறப்பட்ட இளையோர்களில் ஒருவராக பரமதேவாவின் தன்னலமற்ற தாயக விடுதலைப்பற்று வெளிப்படுத்தப்பட்டிருந்ததனால் ஒரு உண்மைப் போராளியை எமது மண் பெற்று பெருமைகொண்டது.

பல இயக்கங்களின் உருவாக்கமும், இவற்றில் உள்நுழைந்த தன்னல வாதிகளுக்கு மத்தியில் மக்கள் பரமதேவாவை ஒரு விடுதலைப் போராளியாக ஏற்றுக் கொண்டதை அன்றைய மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட மக்களின் உணர்வுகளிலிருந்து அறியமுடிந்தது.

1984 .09 .22 ம் நாள் அன்று களுவாஞ்சிக்குடி சிங்களகாவல் நிலைய அழிப்பில் முதல் வித்தாக வீரவேங்கை ரவியுடன் வீழ்ந்த லெப்.ராஜாவின் வீரச்சாவுடன் புரட்சிகர விடுதலைப் பயணத்தை விடுதலைப் புலிகள் இயக்கம் மட்டக்களப்பில் தொடங்கி வைத்தது. தன்னலமற்ற, நேர்மையும், அர்ப்பணிப்பும் கொண்ட பரமதேவா அவர்களின் இழப்பு தலைவருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

கிழக்கின் பெரும் வீரனாக, தலைமைக் தளபதியாக செயலாற்றி விடுதலை இயக்கத்தை நடத்தக்கூடிய வல்லமை கொண்டவரான பரமதேவா பயணத்தில் தொடர்ந்திருந்தால் இன்றைய அவலம் மட்டக்களப்பில் ஏற்பட்டிருக்காது.

மட்டக்களப்பின் புறநகர் பகுதியில் அமைந்தள்ள நாவற்கேணி மறைவிடத்தில் பரமதேவா அவர்களும் ஏனைய போராளிகளும் தங்கியிருந்தனர். போராட்டப் பயணத்தில் மக்களுக்கு அறிமுகமான பல போராளிகள் இணைந்திருந்ததனால் மக்களின் ஆதரவு நன்றாகவே இருந்தது. முதல் தாக்குதலுக்கான திட்டம் இங்கிருந்துதான் உருவாக்கப்பட்டன. தலைவரின் ஆணையில் தாக்குதல் தளபதியாக களமிறங்கிய பரமதேவாவுக்கு தலைவரின் ஆலோசனையும் நிறைவாகக் கிடைக்கப்பெற்றிருந்தன.

விடுதலைப் போராளிகளை பெருமையாக மக்கள் மதித்த காலப்பகுதியில் இரகசியமாக இத் தாக்குதல் திட்டம் வகுக்கப்பட்ட போதும் அர்ப்பணிப்போடு அமைந்ததாக சிலரின் உதவியையும் பெற்று தாக்குதலுக்கு விடுதலைப்புலிகள் இயக்கம் தயாராகினர். தாக்குதலுக்கான இடமும், காலமும் குறிக்கப்பட்ட நிலையில் போராளிகளும் குழுவாகக் பிரிக்கப்பட்டனர்.

மூன்று குழுக்களாகப் பிரிந்த போராளிகள் சந்திக்கும் இடமாக கிரான்குளம் ஊர் தெரிவு செய்யப்பட்டது. 1984 ம் ஆண்டு செப்டம்பர் 21 ம் நாள் இரவு குழுக்கள் மூன்றும் பிரிந்து தாங்கள் பயணம் செய்ய வேண்டிய பாதையைத் தீர்மானித்தனர். ஒரு குழு தோணி ஒன்றில் மட்டக்களப்பு வாவியில் பயணித்து ஆயுதங்களுடன் கிரான் குளத்திற்கு வந்து சேர்ந்தனர்.

இரண்டாவது குழு, மூன்றாவது குழு மிதி வண்டியில் வேறு வேறு பாதைகள் ஊடக பயணித்து குறிப்பிட்ட இடத்தை அடைந்தனர். அன்று இரவு ஒரு ஆதரவாளரின் தென்னந்தோட்டத்தில் தங்கினர். 22 ம் நாள் பகல் உணவு எடுத்துக்கொண்ட பின் மாலை 5 மணியளவில் தாக்குதல் நடத்த வேண்டும் என்ற திட்டத்திற்கமைய பி. பகல் 3 மணிக்கும் 4 மணிக்குமிடைப்பட்ட வேளையில் கிரான் குளத்திற்கும், குருக்கள் மடத்திற்குமிடையில் அம்பிளாந்துறை சந்திக்கு அருகாமையில் கல்முனை – மட்டக்களப்பு பிரதான வீதியில் போராளிக்குழுக்கள் ஒன்று சேர்ந்து தாக்குதலுக்கு செல்லும் பயணத்தை ஆரம்பித்தனர்.

கல்முனை நெடுஞ்சாலையில் மட்டு நகரிலிருந்து 20 வது மைல்லில் அமைந்துள்ள களுவாஞ்சிக்குடியில் நிலைகொண்டிருந்த சிங்களக் காவல் துறையின் நிலையத்தைத் தாக்கியழித்து ஆயுதங்களைப் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கையில் அவசர மருத்துவ ஊர்தி உட்பட இரண்டு ஊர்திகள் வழிமறிக்கப்பட்டு அந்த ஊர்திகளில் போராளிகள் அனைவரும் தாக்குதலுக்காகச் சென்றனர்.

இத் தாக்குதலில் அனுபவமிக்க திருமலைத் மாவட்ட தளபதி லெப். கேணல் சந்தோசம், மூதூர்த் தளபதி மேஜர்.கணேஷ், ஆகியோரும் இடம் பெற்றது மேலும் சிறப்பான நிலையில் தாக்குதல் அணி இருந்ததைக் குறிப்பிட முடிகின்றது.

மாவட்டத்தில் தங்கியிருந்து செயல்பட்ட அனைத்து விடுதலைப் புலிப்போரளிகளும் இதில் பங்கெடுத்திருந்தனர். சரியாக பிற்பகல் 5 .30 மணியளவில் காவல் நிலையத்தினுள் பாய்ந்த விடுதலைப் புலிகள் தாக்குதலைத் தொடுத்தபோது, எதிர் பார்த்ததற்கு மாறாக காவல் துறையினரின் விடுதியிலிருந்து போராளிகளை நோக்கி வேட்டுக்கள் தீர்க்கப்பட்டதனால் களநிலைமை மாறியிருந்தது.

ஏனெனில் போராளிகளுக்கு கிடைத்த தகவலின்படி மாலை 6 மணிக்கு பின்னர்தான் காவல்துறையினர் விடுதிகளுக்குள் திரும்புவார்கள் என்றும் அது வரையில் காவல் நிலையத்தினுள் அனைத்து ஆயுதங்களும் இருக்கும் என்பதால் பணி ஒய்வு பெறும் நேரத்தில் தாக்குதல் நடத்துவதன் மூலம் ஆயுதங்களையுப் பெற்று வெற்றியுடன் திரும்பமுடியும் என்பது போராளிகளின் நிலைப்பாடாகும். ஆனால் சற்றும் எதிர்பாரத விதமாக நடந்த இச்சண்டையில் லெப்.ராஜா, வீரவேங்கை ரவி அவர்களின் வீரச்சாவுடன் சில போராளிகள் விழுப்புண்ணடைந்த நிலையில் ஒரு ஆயுதம் மாத்திரம் கைப்பற்றப்பட்டு போராளிகள் பின்வாங்கினர்.

இத் தாக்குதலில் எமக்கு ஏற்பட்ட இழப்பு வரலாற்றில் ஈடு செய்யமுடியாத இழப்பாக அமைந்து போனது. போராட்ட வரலாற்றில் பிற்பட்ட காலங்களின் நிகழ்வுகளுடன் ஒப்பிடும்போது அறியக் கூடியதாகயிருக்கின்றது. மண்ணின் விடுதலைக்காக மட்டக்களப்பில் எழுந்த தமிழ் தேசிய உணர்வின் அடையாளமான பரமதேவா தாய் மண்ணில் தாக்குதலில் வீழ்ந்தது தமிழ் மக்களுக்கும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் பேரிழப்பாக இருந்தது.

வீரவேங்கை ரவி மகிழடித்தீவு ஊரைச் சேர்ந்தவர். வெளிவாரிப் பட்டப் படிப்பு மாணவனாக இருந்து விடுதலைப் போராட்டத்தில் பங்கெடுத்து, அரசியல் வேலையில் உற்சாகமாக செயல்பட்டவர். குடும்பத்தில் மூத்த மகனான வாமதேவன் என்ற ரவிக்கு ஆறு தங்கைகள் சகோதரிகளாக இருந்தனர். இவரின் இழப்பு குடும்பத்திற்கு மாத்திரமில்லாமல் ஊரக உணர்வுள்ள மக்களுக்கும் பாரிய தாக்கத்தை உண்டு பண்ணியிருந்தது. அன்று இளம் அரசியல் விடுதலைப் போராளி ஒருவரையும் மட்டக்களப்பில் விடுதலைப் புலிகள் இயக்கம் இழந்திருந்தது.

இவர்கள் இருவரின் வீரச்சாவு செய்தியறிந்த மக்கள் எல்லோரும் குடும்ப உறுப்பினர் ஒருவரை இழந்த தவிப்போடு துயரம் நிறைந்தவர்களாக காணப்பட்டனர். தமிழர்களுடைய வரலாற்றில் மட்டக்களப்பில் பள்ளிக்கூட பருவத்திலிருந்து விடுதலைக்காக எழுந்த ஓர் உயர்வான போராளியான பரமதேவாவை ,ழந்து தாய் மண் தவித்தது. மட்டக்களப்பின் முதல் விடுதலைப் போராளியாக களமிறங்கிய வரலாற்று நாயகனின் சிந்தனைகள், செயல்பாடுகள் விடுதலைப் போராளிகளுக்குப் பாடமாக அமையப்பெற்றிருந்தன.

ஒவ்வொரு தமிழரும் வாழும்வரை போராளியாக வாழ்வதென்பது வரலாற்றில் எமது விடுதலையை வென்றெடுக்க வழிவகுக்கும். இந்த உறுதிதான் எமக்குத் தேவையாகும். இதைவிடுத்து விவேகமற்ற விமர்சனத்தை முன் வைப்பவர்கள் தங்களைத் தாங்களே அறிந்து பின்வாங்கி தம்மை அர்பணித்து தாய் மண்ணில் வீழ்ந்தவர்களை உயர்ந்த இடத்தில் வைத்து பார்க்கவேண்டும்.

பணத்தாசை பிடித்து, ஆக்கிரமிப்பு வாதிகளின் பண உதவியுடன், பித்தலாட்டம் போட்டு, இணையதளம் நடத்துபவர்கள், போராளிகளை போற்றா விட்டாலும், தூற்றாமல் விலகிக் கொள்வதுதான் தமிழ்த் தேசியத்தின் விடுதலைக்கு செய்யும் உதவியாகும்.

போற்றுவதற்கும், தூற்றுவதற்குமான தகுதியை இழந்து வெளிநாடுகளில் வாழும் தமிழ்த் தேசிய விரோதிகள் தமிழ்த் தேசிய இனத்தின் அரசியல் விடுதலை அரங்கிலிருந்து வெளியேறி, ஒதுங்கி வாழ்ந்தாலே போதும் என்ற நிலையில் தமிழ் உணர்வாளர்கள் இருக்கின்றனர்.

பரமதேவாவின் தமிழ் உணர்வு, விடுதலை பெற்றவர்களாக தமிழ் மக்கள் வாழ வேண்டும் என்ற நிலையில் உயர்ந்து நின்றபோது இளவயதில் மாணவ பருவத்தில் இன விடுதலை வீரனாக மட்டக்களப்பில் பரமதேவாவைக் காணமுடிந்தது.

விடுதலைப் போராட்டத்தின் வளர்ச்சி, எழுச்சியில் வரலாறு தேட முற்படுபவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டியது பரமதேவா என்ற தமிழ் இளைஞனின் ஆயுதப் போராட்டம் மட்டக்களப்பின் விடுதலைப் புரட்சியில் மாற்றத்தை ஏற்படுத்தியது என்பதை ஏற்றுக்கொண்டு எழுத வேண்டிய நிலையுமுள்ளது. போராளியின் புனிதப் பயணம் என்பது இலட்சியத்தின் எல்லையில்தான் முடிவடையும்.

தடைகளையும் தன்னல மேம்பாட்டையும் கருத்தில் கொண்டு தடம் புரண்டு திரும்புவது போராளி என்ற நிலையிலிருந்து மாறிவிடும். இலட்சியத்தை நோக்கிப் புறப்பட்டவர்கள் எல்லாம் சிங்களப் பாராளுமன்றக் கதிரைகளுக்கு அடிபடும் நிலையில் போராட்டம் மாறியிருக்கின்ற இவ்வேளையில் புரட்சிவாதிகளையும், புனிதப் போராளிகளையும் எமது மக்களுக்கு இனங்காட்டி வருகிறோம்.

மாணவனாக போராட்டத்தில் பரமதேவா.

பரமதேவா, 1975 ம் ஆண்டுகளில் அனைத்துத் தமிழ்மக்களாலும் அறியப்பட்ட பெயராகும். இந்தப் பெயரின் பின்னால் இருந்தபலம் தமிழ் இளையோர்களை தாயக விடுதலை நோக்கிய உறுதியான பயணத்தில் இணைய வைத்திருந்தன. 1972 ம் ஆண்டு சிங்கள அரசின் புதிய அரசியலமைப்பு சட்டங்களின் உருவாக்கத்தில் மே 22 குடியரசு நாளாக அறிவிக்கப்பட்டிருந்தன.

சிறுபான்மை இனங்கள் என்று சொல்லப்படுகின்ற தமிழ்த் தேசிய இனங்களான தமிழ், முஸ்லிம் மக்களின் அடிப்படை உரிமைகளின் பாதுகாப்புக்கு இருந்த சட்டவிதியும் அகற்றப்பட்டதாக அரசியலமைப்பை உருவாக்கியிருந்தனர். இந்த அரசியலமைப்பை உருவாக்கியவர் அப்போதைய அமைச்சரும் லங்கா சம சமாஜக்கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான கொல்வின் ஆர் டி .சில்வா அவர்களாகும். சமத்துவம் பேசுகின்றவர்கள் எல்லாம் பதவிக்கு வந்தவுடன் பேரினவாதத்திற்குள் ,ருந்து அரசியல் செய்வதையே சிறிலங்காவில் அன்று கண்டதுபோல் இன்றும் கண்டுகொண்டுடிருக்கின்றோம்.

1972 ல் உணர்ச்சிப் பாவலர் காசி ஆனந்தன் அவர்களின் உணர்வுமிக்க வரிகள் தமிழ் இளையோர்களைத் தட்டியெழுப்பியது மாத்திரமில்லாது அவரையும் சிங்களக் சிறைக்குள் தள்ளியது. அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களிடத்தில் விடுதலை வேட்கை வீறுகொண்டு எழுந்ததனால் ஆண்ட பரம்பரை மீண்டுமொருமுறை ஆளநினைப்பதில் என்ன குறை? என்ற பாவலரின் வரிகளுக்கு அர்த்தத்தை உண்டுபண்ணும் விதமாக தமிழ் இளையோரின் எழுச்சியும் அமைந்திருந்தன.

மே 22 கரி நாளாக அறிவிக்கப்பட்டு பள்ளிக்கூடங்களில் மாணவர்கள் அரசு அறிவித்திருந்த குடியரசு நாள் நிகழ்வுகளைப் புறக்கணித்து தமிழர் வாழ் நிலங்கள் எங்கும் எதிர்ப்பு முழக்கங்கள், எதிர்ப்பு பதாகைகள், கறுப்புக் கொடிகள் என்று சிங்கள அரசுக்கு புரியவைக்கும் நடவடிக்கைகளை தமிழ்மக்கள் மேற்கொண்டனர். இவற்றில் தமிழ் மாணவர்களின் பங்கு அளப்பரியதாக அமைந்திருந்தன.

தமிழ் மாணவர் பேரவை என்ற எழுச்சிமிகு அமைப்பின் உருவாக்கத்திற்கும் சிங்கள பேரினவாதத்தின் போக்கு காரணமாக இருந்தன. இவ்வாறான எழுச்சியின் அடையாளமாக, அத்திவாரமாக, விடுதலைப் புரட்சி ஏற்படுவதற்கு முக்கியமாக மட்டக்களப்பில் பரமதேவாவின் உணர்வு மிக்க எழுச்சி மாவட்டமெங்கும் தமிழ் மாணவர்களை தட்டி யெழுப்பியது. எழுச்சி கொண்ட இனமாக தமிழினம் மாறி விடுதலையில் ஓர் புரட்சியை ஏற்படுத்துவதற்கு பரமதேவா என்ற மாணவனின் போராட்டங்களும் தூங்கிக் கிடந்த தமிழர்களை நிமிர்ந்து நியாயம் கேட்கவைத்தது.

அற வழியின் கொள்கையில் அரசியலாக இருந்த தமிழ்த் தேசிய ,னத்தின் விடுதலையை அச்சமின்றி, உயிரை துச்சமாக எண்ணிப் பயணிக்கும் இளையோர்களின் கரங்களில் மாறுவதற்கு பரமதேவா போன்றவர்களின் விடுதலைப்பற்று தூண்டு கோலாகயிருந்தன.

பரமதேவா, மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட ஆயுதப் போராட்ட எழுச்சிக்கு முதல் தொடக்கம் என்பதிலிருந்து எழுகின்ற விடுதலை இயக்கங்களின் தோற்றங்களுக்கு மத்தியிலும் தனித்துவமாக, தலை நிமிர்ந்து களம்காணப் புறப்பட்டவர்.

மேடையில் விடுதலைப் புரட்சிவாதம் பேசிய தமிழ் அரசியல் தலைவர்கள் எல்லாம் வீட்டில் குடும்ப வளர்ச்சியில் அரசியல் செய்த வேளையில் பரமதேவா போன்றவர்களின் புரட்சிவாத எண்ணங்கள் தங்கள் வழியை தீர்மானிக்க தமிழ் இளையோர்களை ஒருமுகப்படுத்தியதையும் காணமுடிந்தது.

இன்று இந்துக்கல்லுரியாக எம்முன் உயர்ந்து நிற்கின்ற மட்.கோட்டமுனை மகா வித்தியாலயத்தின் உயர்தர மாணவனாக பரமதேவா, தமிழரின் பண்பாட்டு உடையில் பள்ளிக்கூடம் செல்லும் மாணவனாகக் காணப்பட்டார். இவரின் ஆற்றலும், அறிவும், தமிழ் இனத்தின் மீது கொண்டபற்றும், பார்த்தவுடன் தெரிந்து கொள்ளுமளவுக்கு முகத்தில் மலர்ந்திருந்தது. ஓர் இளம் விடுதலை வீரனை மட்டக்களப்பு மக்கள் இனங்காணும் அளவுக்கு உயர்ந்த எண்ணங்களும் உறுதியும் பரமதேவாவிடம் நிறைந்து காணப்பட்டிருந்தன.

மாணவ பருவத்தில் பள்ளிக் கூடத்தில் பரமதேவா ஏற்படுத்திய புரட்சி, தமிழ், மாணவர்களை தட்டியெழுப்பியது மாத்திரமல்லாது,சிங்கள அரசு இயந்திரத்தையும் அச்சமடைய வைத்தது. மாணவனான பரமதேவாவின் உணர்வை முளையிலே கிள்ளியெறிய எண்ணியதின் விளைவில் ராஜன் செல்வநாயகத்தின் பங்கு அன்றிருந்தது. இதனால் பள்ளிக் கூடத்தினுள் கலகம் விளைவிக்கும் மாணவன் என்று பரமதேவாவை எந்தப் பள்ளிக் கூடத்திலும் படிக்கமுடியாதவாறு அதிபரை வைத்து வெளியேற்றினார்.

ஆனால் நிலைமைமாறி மாவட்டமெங்கும் மாணவர்கள் புறக்கணிப்பின் மூலம் எதிர்ப்பை தெரிவித்தனர். இப் போராட்டம் மட்டக்களப்பு கல்வித் திணைக்கள அதிகாரிகளை அதிர வைத்தது. சந்திப்புக்கள், பேச்சு வார்த்தைகள் என்று அதிகாரிகள் செயல்பட்டு மீண்டும் பள்ளிக்கூடத்தில் சேர்த்துக்கொள்ளும் முடிவை அறிவித்தபோது அதிபர் திரு. வைத்தியநாதன் அவர்கள் பள்ளிக்கூடத்திலிருந்து வெளியேறும் முடிவை எடுத்தார். இம் முடிவு பரமதேவாவை சங்கடத்துக்குள்ளாக்கியது. ஏனென்றால் திறமைமிக்க அறிவியலாளரான திரு. வைத்தியநாதன் அவர்களின் இடமாற்றம் சக மாணவர்களின் கல்வியைப் பாதிக்கும் என்பதால் தான் வெளியேறி வேறு பள்ளிக்கூடத்தில் பயில்வதற்கு பரமதேவா முடிவு எடுத்துச் செயல்பட்டார்.

பரமதேவா என்ற தமிழ் இளைஞனின் உணர்வு மிக்க எழுச்சி மட்டக்களப்பில் தமிழ் மக்கள் மத்தியில் விடுதலைப் புரட்சி மேலும் வளர்வதற்கு வித்திட்டது என்று சொன்னால் மிகையாகாது. 33 ஆண்டு காலவிடுதலைப் புரட்சியின் 28 ஆண்டுகளுக்கு முன் விடுதலைக்காய் வீழ்ந்த விடுதலை வீரனைப் பற்றிய நினைவுகளில் மட்டக்களப்பில் கருவான புரட்சி வாதத்தின் விடுதலைப் புலிகளின் வித்தாக தாய் மண்ணில் வீழ்ந்த தமிழ் மறவனின் வரலாறு விடுதலைப் போராட்டத்தில் மட்டக்களப்பில் எழுதப்படும்போது எண்ணற்ற எழுச்சிமிகு இளையோர்கள் பற்றியும் எழுதவேண்டிய நிலையுள்ளது.

1972 ம் ஆண்டு தமிழ் மக்களின் விடுதலை வரலாற்றில் முக்கியமான ஆண்டாகவும் எடுத்துக்கொள்ள முடிகின்றது. ஏனெனில் இக்காலத்தில் இளையோர்களின் தீவிர எழுச்சியினால் அடிமைப்பட்ட தமிழர்களின் சார்பாக சிங்கள அரசுக்கு அடங்காப்பற்றுடன் கூடிய எதிர்ப்புகளும் காணப்பட்டன.

மட்டக்களப்பு மாவட்டம் எங்கும் தமிழ் இளையோர்கள் விடுதலைப் புரட்சி வாதிகளாக மாறத்தொடங்கியதும் சிறைக்குள் தள்ளப்பட்டு, சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டதும் மக்கள் மத்தியில் விடுதலைப் போராளிகளுக்கான ஆதரவு மேலும் அதிகரித்துக்காணப்பட்டன. மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களில் இளையோர்களிடையே ஏற்பட்ட விடுதலை உணர்வு, தமிழ் இளைஞர் பேரவை என்ற அமைப்பின் வளர்ச்சிக்கு தூண்டுகோலாக அமைந்தன.

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் இளைஞர் பேரவையின் முதல் தலைவராக திரு. அன்ரன் என்பவர் பணியிலிருந்தபோது. திரு.பொன்.வேணுதாஸ், திரு.மோகனச்சந்திரன், பாசி, துரைராசசிங்கம் போன்றவர்களின் செயல்பாடும் இணைந்ததாக காணப்பட்டன. இக்காலத்தில் மட்டக்களப்புத் தொகுதி பாராளுமன்ற உறுப்பினராக சுயேட்சையில் தெரிவாகி பின்பு சிறீலங்கா சுதந்திரக்கட்சியில் இணைந்து மாவட்ட அரசியல் அதிகாரியாகச் செயல்பட்ட இராஜன் செல்வநாயகம் அவரின் தமிழ் விரோதப் போக்கு தமிழ் இளைஞர்களுக்கு எதிராகத் திரும்பியதனால், விடுதலை உணர்வுள்ள இளைஞர்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகினர்.

கொழும்பிலிருந்து மட்டக்களப்புக்கு வந்திருந்த சிங்கள காவல்துறையின் விசேட பிரிவினர் இவ்வாறான இளைஞர்களை கைது செய்யும் நோக்குடன் வீடுகளில் தேடுதலை நடத்தி பெற்றோருக்கு பெரும் இடையூறுகளை கொடுத்தனர். இந் நடவடிக்கைகளுக்கு பின்னால் இராஜன் செல்வநாயகத்தின் பங்கு பெரும் அளவில் ,ருந்ததை குறிப்பிடமுடிகின்றது.

தமிழர்களுடைய வரலாறறில் காட்டிக்கொடுக்கும் தேசிய விரோதிகள் வரலாறும் ,ணைந்தே ,ருந்து வந்துள்ளது. இது மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டுமல்ல யாழ்ப்பாணம், வன்னி, திருகோணமலை என எல்லா இடங்களிலும் தொடர்ந்திருந்தன. இப்போதும் தொடர்ந்து கொண்டேயிருக்கின்றது. தன்னலமற்றவர்கள் மத்தியில் தன்னலமுள்ளவர்களின் செயல்பாடு அழிக்க, அழிக்க முளைப்பதுபோல் தொடர்வது விடுதலைப் போராட்டத்தை பலவீனப்படுத்துவதற்கு சிங்களப் பேரினவாதத்திற்கு உதவியாக அமைந்தன. இது எமது இனத்தின் சாபக்கேடு என்றே குறிப்பிடமுடிகின்றது.

விடுதலைப் போராட்டம் என்றால் என்ன என்று அறியாதவர்கள் எல்லாம் விடுதலைப் போராட்டத்தில் இணைந்தும், விடுதலையை வைத்து அரசியல் நடத்திய தன்னல வாதிகளின் போக்கும், விடுதலைப் போராட்ட வளர்ச்சியில் பாரிய தாக்கத்தை உண்டு பண்ணியிருந்தன.

இவ்வாறான நிலையில் மட்டக்களப்பில் பரமதேவா போன்ற தமிழ் இளைஞர்களின் பற்று பாரிய தாக்கத்தை சிங்கள அரச இயந்திரத்தில் ஏற்படுத்தியிருந்ததை குறிப்பிட முடிகின்றது. முள்ளிவாய்க்கால் ஊரில் தேசிய விடுதலைப் போராட்டத்தின் போர்க்கருவிகள் மௌனிக்கப்பட்ட நிலையில் வரலாறு தேடும் பலருடைய செயல்பாடுகளுக்கு மத்தியில், பரமதேவா பற்றிய போராட்டப் பதிவை தமிழர் வரலாற்றில் வைப்பதற்கு முனைகின்ற வேளையில் மட்டக்களப்பு – அம்பாறை மாவட்டத்தில் விடுதலைப் புரட்சி வாதிகளாக போர்க்கருவி ஏந்திய நிலையில் புறப்பட்ட முதல் விடுதலை வீரனாக பரமதேவா அவர்களையே குறிப்பிடமுடிகின்றது.

1977 ம் ஆண்டுத் தேர்தலில் பரமதேவா

தமிழீழ நாட்டின் மக்கள் ஆணைக்கான தேர்தலாக 1977 ம் ஆண்டுத் தேர்தல் இடம்பெற்றது. இத் தேர்தலில் தமிழ் இளைஞர்களின் பங்கு அதிகமாகவே காணப்பட்டது. மட்டக்களப்புத் தொகுதியில் உணர்ச்சிப் பாவலர் காசி ஆனந்தன் அவர்கள் தமிழரசுக்கட்சி வீட்டுச் சின்னத்தில் தேர்தலில் போட்டியிட்டபோது, மட்டக்களப்புத் தொகுதி தமிழ் இளைஞர்களின் அதிகப்படியான ஆதரவு கிடைக்கப்பெற்றிருந்தன.

மாணவனான பரமதேவா தொகுதியெங்கும் தேர்தல் கூட்டங்களில் உணர்வு பொங்க பேசியது தமிழ் இளைஞர்களின் விடுதலை உணர்வு முழக்கமாக வெளிப்பட்டது. இக் காலப்பகுதியில் மட்டக்களப்பு – அம்பாறை மாவட்டங்களில் பல தமிழ் இளைஞர்கள் தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு மக்களின் ஆதரவு பெற்றுக்கொடுக்கும் வகையில் மேடைகளிலும், வெளியிலும் பரப்புரையை மேற்கொண்டிருந்தனர். கொள்கை, இலட்சியம் என்பதில் பரமதேவா உட்பட்டவர்களின் நிலை நேரிய பாதையில் பயணித்ததையும் அவதானிக்க முடிந்தது.

மட்டக்களப்பில் பொன்.வேணுதாஸ், மோகனச்சந்திரன், அன்ரன், வாசுதேவா, சிவஜெயம், தயாளன், குணாளன், சின்னாச்சி, யோகபதி, பூபாலபிள்ளை (பீ.டி), ஆரையம்பதி தவராஜா, செல்வேந்திரன் போன்றவர்களும்.

கல்குடாவில் பா.சின்னத்துரை, கி.துரைராசசிங்கம், வாகரை பிரான்சிஸ், வாழைச்சேனை யோகராஜா, நிமலன் சௌந்தரராஜன், ராஜ்மோகன் ஆகியோரும். பட்டிருப்பில், நடேசானந்தம், மண்டூர் மகேந்திரன்,சரவணபவான், அரசன், தம்பிராசா, பரமேஸ்வரன், பிரேம், இன்பராசா, தவம், உட்பட்ட தமிழ் இளைஞர்கள் தமிழ் மக்களின் விடுதலையை பெறுவது என்ற குறிக்கோளில் தேர்தல் பரப்புரைகளில் ஈடுபட்டனர்.

அம்பாறை மாவட்டத்தில் தமிழ் மக்கள் சிறுபான்மையாக மாற்றப்பட்டதனால் மாவட்டம் எங்கும் வேல்முருகு, தமிழ்நேசன், பன்னிர்செல்வம், ரஞ்சன், நாகராஜா ஆகிய இளைஞர்களின் உணர்வுமிக்க செயல்பாடுகள் தமிழ் மக்களை தெளிவுபடுத்தியிருந்தன.

மாணவப்பருவத்திலிருந்து தனது இறுதிக்காலம் வரை தமிழ் மக்களின் விடுதலைக்காக களத்தில் பயணித்த பரமதேவா போன்றவர்களின் போராட்ட வரலாறு இன்றைய எதிர்கால இளைய சந்ததிக்கு பாடமாக அமைய வேண்டுமென்பது இக் கட்டுரையின் நோக்கமாகும், பிறப்பின் பயனை அடைந்துவிட்ட இந்தப் புனிதப் போராளிகள் விட்ட பணி தொடரவேண்டும்.

தாய் மண்ணில் பிறந்ததன்பின் தொடர்ந்த மாணவ, வாலிபப் பருவங்களை, தமிழ் மக்களின் விடுதலைக்காக அர்ப்பணித்த பரமதேவா போன்ற இளையோர்கள் எக்காலத்திலும் தமிழ்த் தேசிய இனத்தால் மறக்கப்படமுடியாத மாமனிதர்கள் என்பதை தமிழர் வரலாறு உணர்த்திக் கொண்டேயிருக்கும். மட்டடக்களப்பில் பரமதேவா தமிழ்த் தேசிய எழுச்சியின் ஆரம்ப வடிவம் என்பது அழியாத வரலாற்று பதிவாகும்.

தனித்து ஒரு குழு அமைத்து, களமாடப் புறப்பட்ட பரமதேவா,

1977 ம்ஆண்டு காலப்பகுதியில் இலங்கைத் தீவில் திட்டமிட்டு நடத்தப்பட்ட தமிழின அழிப்பைத் தொடர்ந்து தமிழ் இளைஞர்களின் சிந்தனையில் ஏற்பட்ட மாற்றம் அரசியலுக்கு அப்பால் தமிழ்மக்களின் விடுதலையை பெறுவதற்கு உகந்தவழியை தெரிவு செய்யும் நிலையில், பரமதேவா எடுத்தமுடிவு ஆயுதங்களைப் பெறுவதற்காக அரச நிறுவனங்களிலிருந்து காசு பெறும் நடவடிக்கையாகும்.

இதற்காக பொத்துவில் ரஞ்சன், விஜி, வாமதேவன் ஆகியோர் குழுவாக இணைந்தனர். 1978 ம் ஆண்டு செங்கலடி ப .நோ .கூட்டுறவுச் சங்க கிராமிய வங்கியிலிருந்து காசை பறித்துக்கொள்ளும் நடவடிக்கை தாக்குதல் இலக்காகும். ,க் காசு மூலம் விடுதலைப் போராட்டத்திற்கு தேவையான போர்கருவிகளை பெற்றுக்கொள்ள வேண்டுமென்ற எண்ணம் பரமதேவாவின் மனதில் பதிந்திருந்தது.

எவ்வித எதிர்கால வாழ்வு நோக்கமும் அற்ற ஒரு விடுதலைப் போராளியை பெற்றுக்கொண்ட தமிழ் மக்கள் குறுகிய காலத்தில் இழந்தது உறுதிமிக்க விடுதலைப் போராட்டத்தில் ஏற்பட்ட தடைகளில் ஒன்றாகவே கருத முடிந்தது.

தனித்துச் சிந்தித்து களமிறங்கிய பரமதேவா அவர்களின் திட்டத்தில் முதல் நடவடிக்கையொன்று மட்டக்களப்பு மண்ணில் நிறைவேற்றப்பட இருக்கின்ற நிலையில் செங்கலடியைப் பற்றிக் குறிப்பிடுகின்றபோது மட்டக்களப்பு – திருகோணமலை நெடுஞ்சாலையில் 10வது மைல் கல்லில் செங்கலடி அமைந்திருக்கின்றது. செங்கலடி கிராமிய வங்கிக்கு முன்பாக நெடுஞ்சாலையின் மறுபக்கத்தில் சாந்தி சாராய விடுதியும், அதற்கு அருகாமையில் சாரதா படமாளிகையும், அதனை அண்டியதாக எல்லை வீதியும் அமைந்திருக்கின்றன.

ஓரளவு சனநடமாட்டம் உள்ள இவ்விடத்தில் ஒரு நடவடிக்கையை பரமதேவா குழுவினர் திட்டமிட்டிருந்தனர். இவர்கள் பயன்படுத்திய மகளூர்ந்து ஓட்டுனராக வாமதேவன் இருந்தார். குறிப்பிட்டபடி நடவடிக்கை அந்தபோதும், எதிர்பாராத சம்பவம் ஒன்று இவர்கள் பிடிபடுவதற்கு காரணமாகவிருந்தன.

மட்டக்களப்பு – பதுளை நெடுஞ்சாலையில் பரமதேவா குழுவினரின் மகளுர்ந்து, பறித்தெடுத்த காசுடன் பயணித்த வேளையில் சாந்தி சாராய விடுதியில் சந்தர்ப்ப வசமாக தங்கியிருந்த சிங்களக் காவல்துறை புலனாய்வுப் பிரிவினர் செங்கலடி கிராமிய வங்கியில் தென்பட்ட பதட்டத்தை விளங்கிக்கொண்டபின் பரமதேவா குழுவினரின் மகளூர்ந்தை தொடர்ந்து சென்று மகளூர்ந்தை நெருங்கிய வேளையில் துப்பாக்கி வேட்டுக்களை தீர்த்துள்ளனர்.

இதனால் பரமதேவா குழுவினரும் எதிர்த்தாக்குதல் தொடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர். ஆனால் இத் தாக்குதலைத் தொடர்ந்து பரமதேவா விழுப்புண் அடைய மகளூர்ந்து நிறுத்தப்பட்டு இறங்கி ஓட முற்படும்போது ஓட்டுனர் வாமதேவன் மாத்திரம் தப்பிச்செல்ல பரமதேவா, விஜயசுந்தரம், ரஞ்சன் ஆகியோர் பிடிக்கப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.
இக்காலங்களில் மக்களால் பேசப்பட்ட கதாநாயகன் பரமதேவா, காலத்தால் அழியாத வரலாற்றுப் பதிவு ஒன்றை ஆரம்பித்து வைத்து, உணர்வுள்ள இளையோர்களை தமிழர் உரிமைக்காக தட்டியெழுப்பிய தன்னலமற்ற வீரன். இவனுடைய எழுச்சி, எண்ணற்ற இளையோர்களை களமாடத் தூண்டியது.

இந்த வரிசையில் மட்டக்களப்பில் மறத்தமிழ் வீரனாக, தன்மானத்துடன் எழுந்து, சிங்களப் படைகளுக்கு கெதிரான குண்டுத் தாக்குதலுக்கு சென்ற வேளையில் கைகளுக்குள்ளே குண்டுவெடித்ததால் விழுப்புண் அடைந்த நிலையில், இந்த அடையாளம் தன்னைக் காட்டிக்கொடுக்குமென்பதால் மட்டக்களப்பில் பிரசித்தி பெற்ற கல்லடிப்பால அடியில் ஓடுகின்ற மட்டக்களப்பு வாவியில் வீழ்ந்து முழ்கி தன்னை இழந்து தமிழ் மக்களின் விடுதலைப் போருக்கு ஆரம்பத்தில் அத்தியாயம் ஒன்றைப் படைத்திட்ட செந்தமிழ் வீரன் பெஞ்சமின் உட்பட்டவர்களை எண்ணிக்கொள்வதிலும், அதனை எழுத்தாக வடிப்பதிலும், பரமதேவா வரலாற்றோடு பதிவை ஒன்றிணைத்து தொடர்கின்றேன்.

சிங்களச் சிறையில் பரமதேவா

1978 ம் ஆண்டு பரமதேவா, ரஞ்சன், (லெப்.சைமன்) விஜயசுந்தரம், ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த காலப்பகுதியில் நூற்றுக்கணக்கான தமிழ் இளையோர்கள் சிங்கள புலனாய்வுப் படையால் பிடித்து, சித்திரவதை செய்யப்பட்டு சிறைகளை எல்லாம் தமிழர்களின் அடக்குமுறைக் கூடங்களாக மாற்றிக்கொண்டிருந்தனர்.

விடுதலைக்காக போராளிகள் உருவாவதும், சிறைகளில் சித்திரவதை செயப்பட்டு, இருண்ட வாழ்க்கையில் மக்களுக்காக வாழ்வதும் தொடர்ந்த வண்ணம் தமிழர் தாயகமெங்கும் விடுதலை அலை எழுந்து கொண்டிருந்தன. மட்டக்களப்பு மண்ணில் உணர்வுடன் எழுந்த, உணர்ச்சி பாவலர் தனது பாட்டு வரிகளால் ஊட்டிய பற்று இளையோர்களை விடுதலைப் பற்றாளர்களாக மாற்றியிருந்தது.

ஒவ்வொரு அடக்கு முறையையும் சிங்களம் திணிக்கும்போது திரண்டெழும் மக்கள் சக்தி மலைபோல் எதிர் கொண்டது. அரச சட்டங்களில் ஏற்படுத்தப்பட்ட மாற்றம் அன்றைய ஜனாதிபதி து.சு.ஜெயவர்த்தன அவர்களின் பேரினவாத அரசியல் தமிழ் ,ளைஞர்களுக்கெதிராக அடக்கு முறைச்சட்டங்களை உருவாக்குவதற்கும், சிங்களச் சிறைகளில் விசாரணைகளின்றி, காலவரையற்ற சிறைவாசத்திற்குட்படுத்துவதும் தமிழின அடக்கு முறையை மேலும் வலுவாக்கியது.

இதனால் எண்ணற்ற இளையோர்கள் சிங்கள சிறைகளில் குவிந்திருந்தனர். ,வர்களில் ஒருவராக பரமதேவாவும் சிங்களச் சிறைகளில் அடைக்கப்பட்டிருந்தார். தாயகமெங்கும் ஏற்பட்ட எழுச்சி, சிங்களப் பேரினவாதத்தின் அடக்குமுறை, மேலும் இளையோர் கூட்டங்களை அணியணியாக விடுதலை ஒன்றையே நோக்காகக் கொண்டு பயணிக்கவைத்தன.

புதிய அரசியலமைப்பு, நிறைவேற்று அதிகாரங்கொண்ட அடக்குமுறை ஆட்சியமைப்பு எல்லாம் இணைந்ததாக தமிழ்மக்களை குறி வைத்த சட்டங்கள், தன்னாட்சி உரிமைக் கோட்பாட்டுக்கு விலங்கு போட்டு தமிழ் மக்களை அடக்கி ஆளப்புறப்பட்டதெல்லாம் தாயகமெங்கும் தமிழின எழுச்சியின் உச்சத்திற்கு இளைஞர்களை அழைத்துச்சென்றிருந்தன. தொடர்ந்து அடக்குமுறைக்கும், தமிழின அழிப்புக்கும் உச்சமாகமைந்த 1983 யூலை இன வன்முறையும், படுகொலைகளும் சிங்களப் பேரினவாதஅரசியலின் பௌத்த மேலாதிக்க கொள்கையை வெளிப்படுத்தன.

உலகிலே ஆச்சரியப்பட்ட விடயமாக சிங்களவர்கள் பௌத்தமதத்தைப் பின்பற்றிய நிகழ்வாக இருப்பதைக் குறிப்பிடக் கூடியதாகவுள்ளது. வக்கிரமும், வன்முறையும் கலந்து ஏனைய இனத்தவரையும், மதத்தவரையும் அழிக்கும் செயலானது பௌத்தத்திற்கு பெரிய இழுக்கை இலங்கைத் தீவில் ஏற்படுத்தியிருந்தது.

சிறைக்குள் அடைக்கப்படிருந்த தமிழ் அரசியல் போராளிகளை படுகொலை செய்யும் செயலானது உலகத்திலேயே மனிதாபிமானத்திற்கு ஏற்பட்ட அச்சுறுத்தலாக எடுத்துக்கொண்டு, உலகம் நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலையில் அமைந்த சம்பவமான சிறைப்படுகொலை உலக நாகரீகத்தைக் குழி தோண்டிப் புதைத்த நிலையிலிருந்தன. மூத்த போராளிகளான தங்கத்துரை, குட்டிமணி,போன்ற 52 தமிழ்ப் போராளிகளின் படுகொலையும், தப்பிய கைதிகள் மட்டக்களப்பு சிறைக்குள் மாற்றப்பட்டதான நிலையில் பரமதேவா போன்றோரின் சிறைவாசமும் தொடர்ந்திருந்தன.

1983.09.23 ம் நாள் மட்டக்களப்பு தமிழ் மக்களின் முழு ஆதரவோடு தகர்க்கப்பட்ட சிறையிலிருந்து தமிழ்ப் போராளிகள் வெளியேறிய போது பரமதேவா உட்பட சிலர் தாயக மண்ணில், பரந்த வெளிச்சத்தில், விடுதலை வானில் மறைக்கப்படாத ஒளியைத் தேடிய நிலையில் தமிழர் எழுச்சியின் புரட்சி விடுதலை வடிவமான மேதகு வே .பிரபாகரன் அவர்களின் உறுதிமிக்க விடுதலைப்பாதை அவர்களை பின்தொடரவைத்தன.

சிங்களப் பேரினவாதத்தைப் பொறுத்தவரையில் பிரபாகரன் அவர்களின் வீரம், தன்மானம் என்பன தமிழரைத் தலை நிமிர்ந்து வாழவைக்கும் என்ற எண்ணம், பரமதேவா அவர்களை விடுதலைப் புலிகள் இயக்கத்தில் ,ணைய வைத்ததன் மூலம், விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ,ந்தியாவில் முதல் பாசறையில் பயிற்சி பெறுவதற்கு பயணிக்கவைத்தன.

விடுதலைப் புலிகளின் பாசறையில் பரமதேவா

இலங்கைத் தீவில் மாபெரும் தமிழின அழிப்பைத் தொடர்ந்து 1983 ம் ஆண்டு இறுதிப் பகுதியிலிருந்து இந்திய அரசின் அழைப்பில் தமிழ் இளையோர்கள் அணிகள் படைத்துறை பயிற்சி பெறுவதற்காக படகின் மூலம் சென்று கொண்டிருந்தனர். இப் பயிற்சியை பெறுவதற்கு தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு வழங்கப்பட்ட முதலாவது பயிற்சிப் பாசறையில் பரமதேவாவும் இணைந்திருந்தார்.

1972 ம் ஆண்டு காலப்பகுதியில் விடுதலை எழுச்சியில் உணர்வுடன் எழுந்த மட்டக்களப்பு – அம்பாறை மாவட்ட தமிழ் இளைஞர்களின் முன்னணியில் திகழ்ந்த பாசி, மோகனச்சந்திரன், ஆகியோருடன் பொன். வேணுதாஸ் சரவணபவான் பிற்காலத்தில் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்திருந்தனர்.

1975 ம் ஆண்டு காலப்பகுதியில் விடுதலை எழுச்சியில் உணர்வுடன் எழுந்து ஆயுதப் போராட்டத்திற்கு வித்திட்ட மட்டக்களப்பு – அம்பாறை மாவட்ட தமிழ் இளைஞர்களின் முன்னணியில் திகழ்ந்த பரமதேவா, ரஞ்சன், தயாளன்,யோகபதி ஆகியோர் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்திருந்தனர்.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் மட்டக்களப்பு -அம்பாறை மாவட்டத்திலிருந்து முதல் உறுப்பினரான பாசி.யோகன் அவர்களுடன் இணைந்ததாக போராளிகள் புறப்பட்டிருந்தனர்.

மட்டக்களப்பின் முன்னணி வீரன் பரமதேவாவின் விடுதலை உணர்வு, எழுச்சிமிகு செயல்பாடுகள் என்பவற்றை அறிந்திருந்த விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் .பிரபாகரன் அவர்களுக்கு பரமதேவா விடுதலைப் புலிகளோடு இணைந்தது தனது உறுதியான விடுதலைப் பயணத்தில் கிழக்கிலிருந்து சாள்ஸ் அன்ரனியைத் தொடர்ந்த பலமாகவே எண்ணிப்பெருமிதம் கொண்டிருந்தார்.

தலைவரின் நெஞ்சினில் ஆழமாக வேரூன்றியிருந்த கிழக்கு போராளிகளில் பரமதேவா ஒருவர் என்பதை தலைவர் அவர்களின் எண்ணங்களின் வெளிப்பாட்டிலிருந்து அறிந்து கொள்ளமுடிகிறது.

தாய் மண்ணில் விடுதலைப் புலிப் போராளியாகப் களத்தில் பரமதேவா

சாதாரண படகுப் பயணமூலம் தாய்த் தமிழகத்திலிருந்து தமிழீழத் தாய்மண்ணுக்கு வந்திருந்த பரமதேவா தனது பிறந்த ஊர் பயணத்தில் நடைப்பயணம் ஒன்றுக்காக காத்திருந்தார்.
ஆரம்ப காலங்களில் சாதாரண மீன் பிடிப் படகுகள் மூலமும்,கால் நடை மூலமும் மாவட்டங்களுக்கிடையிலான போக்கு வரவைப் போராளிகள் மேற்கொண்டிருந்தனர்.

யாழ்.மாவட்டத்திலிருந்து வன்னி பெருநிலப்பரப்பில் முல்லைத்தீவு மாவட்டத்தில் விடுதலைப் புலிகளின் போராளிகளோடு சிலகாலம் தங்கியிருந்த பாமதேவா முல்லை மண்ணில் ஓட்டுச்சுட்டான் ஊரில் நிலைகொண்டிருந்த சிங்கள காவல் நிலையத்தை தாக்கியழிக்கும் நடவடிக்கையில் முன்னணி வீரனாக களமிறங்கினார்.

விடுதலைப் புலிகளின் போராளிகளால் 05 .08 .1984 ம் ஆண்டு அன்று தாக்கியழிக்கப்பட்ட ஓட்டுச்சுட்டான் சிங்கள காவல் நிலையத்தில் சுமார் 30 விசேட பயிற்சி பெற்ற அதிரடிப்படையினர் உட்பட்ட 50 சிங்கள காவல் துறையினர் பணியிலிருந்தனர். முல்லைத்தீவின் முச்சந்தியில் அமைந்துள்ள ஓட்டுச்சுட்டான் பழமையான வரலாற்றை எமக்கு உணர்த்தும் பாரம்பரிய தாயகத்தின் புனித பூமியாகும். தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தையும் தன்னகத்தே கொண்டுள்ள இவ்வூரிலிருந்து முல்லைத்தீவு,புதுக்குடியிருப்பு, முத்தையன்கட்டு, நெடுங்கேணி போன்ற தமிழரின் ஊர்களுக்குள்ளும் செல்ல முடியும், இந்த ஊரின் அருகாமையில் பண்டாரவன்னியன் என்ற தமிழ் மன்னனின் கல்லறை கற்சிலை மடுவில் அமைந்துள்ளதையும் குறிப்பிடமுடியும்.

வீறுகொண்டெழுந்த வேங்கைகளின் பாய்ச்சலில் கிலிகொண்ட சிங்களப்படையினர் அழிக்கப்பட்ட படையினரை விட்டு நாலா புறமும் ஓடியபோது விடுதலைப் புலிகள் உள் நுழைந்து எராளமான நவீன போர்க்கருவிகளை அள்ளியெடுத்து வெளியேறினர்.

சிங்கள காவல் ஆய்வாளர் கணேமுல்ல உட்பட்ட 6 பேர் இத் தாக்குதலில் அழிக்கப்பட்டனர். விழுப்புண் அடைந்த சில போராளிகளுக்கு பரமதேவா முதல் உதவிப் பணிகளைத் செய்திருந்தார். இத்தாக்குதலில் ஈடுபட்ட போராளிகளுடன் பரமதேவா என்ற மட்டக்களப்பு மாவீரனும் இணைந்திருந்தார். தாக்குதலுக்கும், மருத்துவத்திற்குமாக கடமை உணர்த்தப்பட்ட பரமதேவா தனது பணியை செம்மையாக செய்திருந்தார்.

அள்ளப்பட்ட ஆயுதங்களில் சிலவற்றுடன் முல்லைத்தீவு மண்ணிலிருந்து நடைப்பயணமாகவும், கடல் பயணமாகவும் சில போராளிகளுடன் மட்டக்களப்பு நோக்கி புறப்பட்டார். முல்லைத்தீவு, மணலாறு, தென்னமரவாடி, வெருகல் ஊர்களுடாக அவருடைய பயணம் அமைந்திருந்தது. அக்காலத்தில் விருப்புடன், புனிதப் பயணத்தில் இலட்சியத்திற்காக, உறுதியான கொள்கையில் பயணிக்கும் ஒவ்வொரு போராளிக்கும், தமிழீழ மெங்கும் தமிழ் ஊர்களைத் தாவிச்செல்வதும், அங்கு வாழும் மக்களை தரிசிப்பதும் புதிய அனுபவமாகும். ஒரு போராளியின் உள்ளத்தில் ஊற்றெடுத்த உணர்வின் வெளிப்பாடகவும் இருந்ததனால் இப் பயணத்தை தமிழர் நிலங்களில் கால் பதித்துச் செல்லும் பாக்கியமாகவே கருதியிருந்தனர்.

ஒரு போராளியின் வாழ்க்கையில் தான் சார்ந்த இனத்தின் விடுதலையை தாங்கிச்செல்லும்போது. முழு இனத்தின் உறவோடு பயணிப்பதில் அவனின் இலட்சியப்பற்று, மொழிப்பற்று, இனப்பற்று என்பன உண்மையின் வெளிப்பாடாகவே அமைந்துவிடுகின்றன. இவ்வாறு எமது மண்ணில் புனிதப் போராளியாகப் பயணித்தவர்களில் பரமதேவாவும் தமிழர் வரலாற்றில் விடுதலை வீரனாக, கண்முன்னே நிழலாக காட்சிதந்து கொண்டிருக்கின்றார்.

ஒரு தமிழன்னைக்கு, தாய் மண்ணில் பிறந்த பரமதேவா பாலகப்பருவம் தாண்டிய பள்ளிப் பருவத்தில் தமிழ் மக்களின் விடுதலையை தோள்மீது சுமந்து பயணித்து தமிழீழ அன்னையின் வீரப் புதல்வர்களில் ஒருவரானார்.

மட்டக்களப்பில் இராஜதுரை, அம்பாறையில் கனகரெட்ணம் போன்றவர்கள் தமிழ்த் தேசியத்தை சிதைத்து தமிழர் அரசியலிலிருந்து மாறியபோது, கனகரெட்ணம் அவர்களின் மகனையும் அழைத்துக்கொண்டு களமாடப் புறப்பட்ட பரமதேவா மட்டக்களப்பு அரசியலில் பாரிய தாக்கத்தையும், உறுதியான விடுதலை சார்பாக ஏற்படுத்தியிருந்தார்.

அன்று அவருக்கு தோள் கொடுத்தவர்களாக காசி ஆனந்தன், பொன்.வேணுதாஸ், வணசிங்கா ஆசிரியர், சௌந்தரராஜன் ஆசிரியர், பத்திரிகையாளர் நித்தியானந்தன், வணபிதா சந்திரா பெர்னாண்டோ போன்றவர்களைத்தான் எம்மால் இனங்காணமுடிகிறது. தமிழர் அரசியலில் வேறுபலரும் தொடர்ந்திருந்தபோதும் உறுதியான விடுதலை, அரசியல் பயணத்தில் விலகாமல் சென்றவர்களாக பிற்காலத்தில் அரசியலில் மிளிர்ந்தவர்களை உயர்ந்தவர்களாக சொல்ல முடியவில்லை.

தமிழரின் அரசியல் பயணம், விடுதலைப் பயணமாக மாறிய வேளையில் மட்டக்களப்பில் உறுதியான அரசியல் எழுச்சியில் குளிர் காய்ந்து பதவியைப் பிடித்தவர்களும், அதைக்தக்கவைக்க தடம் புரண்டு அரசியல் நடத்தியவர்களையும், அவதானிக்க முடிந்தது.

பரமதேவா (லெப். ராஜா) என்ற மாவீரனின் வரலாற்றுப் பதிவில் சாதாரண சம்பவங்களாக அரசியலைப் பிரித்துப் பார்க்க முடியவில்லை. ஏனெனில் எழுச்சி அரசியல் தொடங்கிய வேளையில் இவருடைய விடுதலை எழுச்சியும் மக்கள் மத்தியில், ஒரு புரட்சித் தீயை மூட்டியதால், வரலாறும் அரசியலோடு இணைந்ததாக பதியப் படவேண்டிய நிலையில் இருக்கின்றது.

,ன்றைய தமிழ் இளையோர்களுக்கெல்லாம் முன் மாதிரியான, எழுச்சி வீரனாக கூறக்கூடிய பரமதேவா (லெப் .ராஜா) என்ற தன்மானமிக்க, தமிழ் புரட்சியாளனின் வரலாறு, புதிய எழுச்சியை, புதிய அரசியலை, விடுதலைக் களத்தில் நிட்சயம் தோற்றுவிக்கும். மங்காது, மறையாது, புரட்சியாளர்களின் வரலாறு என்பதற்கமைய லெப். ராஜா (பரமதேவா) போன்றவர்களின் வரலாறும், காலம் காலமாக எமது மக்களின் சந்ததியோடு தொடர்ந்து செல்லும்.

விடுதலை அடையமட்டுமல்ல, விடுதலை பெற்ற பின்பும் இது தொடரும்.

மாசற்ற மறவனை பெற்றெடுத்த மட்டக்களப்பு மண் கண்ட வீரர்கள்பலர், இம் மண்ணில் களமாடி வீழ்ந்த 8000 க்கு மேற்பட்ட மாவீரர்களின் வரலாற்றின் ஆரம்பந்தான் பரமதேவா என்ற புரட்சி வீரனின் புதிய விடுதலை அத்தியாயம். எழுதப்படுகின்ற எமது போர்க்காவியத்தின் படைப்புகளில் மட்டக்களப்பின் தொடக்கத்தின் முதல் பக்கமாக பரமதேவா என்ற விடுதலைப் போராளியின் வரலாறு அமைந்திருக்கும்.

என்றும் எழுகதிர்.

லெப்.கேணல் ரஞ்சன் உட்பட்ட 10 மாவீரர்களி​ன் வீரவணக்க நாள்


அம்பாறையில் காவியமான அம்பாறை மாவட்டத் தளபதி லெப்.கேணல் ரஞ்சன் உட்பட்ட 8 மாவீரர்களினதும், யாழ். மாவட்டத்தில் வீரச்சாவைத் தழுவிய இரு மாவீரர்களினதும் 17ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.

27.08.1995 அன்று அம்பாறை மாவட்டம் வம்மியடிக்குளம் பகுதியில் சிறலங்கா சிறப்பு அதிரடிப்படையினருடன் இடம்பெற்ற மோதலில் வீரச்சாவைத் தழுவிய

அம்பாறை மாவட்டத் தளபதி லெப்.கேணல் மாருதியன் (ரஞ்சன்) (செல்லத்துரை பிரபாகரன் – தம்புலுவில், அம்பாறை)

கப்டன் கமால் (கந்தையா செல்வராசா – அம்பாறை)

கப்டன் மதனமோகன் (கிறிஸ்ரி) (செல்லத்துரை நாகேந்திரன் – கோமாரி, அம்பாறை)

லெப்டினன்ட் நவரங்கன் (நிசாந்தன்) (கிருஸ்ணபிள்ளை ராஜமோகன் – தம்புலுவில், அம்பாறை)

2ம் லெப்டினன்ட் அறிவொளி (பீதாம்பாரம் ரவிச்சந்திரன் – கன்னங்குடா, மட்டக்களப்பு)

வீரவேங்கை இந்திரன் (செல்லையா ராஜீ – பொத்துவில், அம்பாறை)

வீரவேங்கை லிங்கேஸ்வரன் (தில்லையன் சிவராஜா – கொக்கட்டிச்சோலை, மட்டக்களப்பு)

ஆகிய மாவீரர்களினதும்,

அம்பாறை மாவட்டத்தில் சுகவீனம் காரணமாக சாவினை அணைத்துக் கொண்ட

2ம் லெப்டினன்ட் சுரேந்திரன் (காதர்) (நாகப்பன் விஸ்வநாதன் – குருக்கள்மடம், மட்டக்களப்பு)

என்ற மாவீரரினதும்

யாழ். மாவட்டம் அச்சுவேலிப் பகுதியில் சிறிலங்கா படையினர் பதுங்கியிருந்து நடாத்திய தாக்குதலின்போது வீரச்சாவைத் தழுவிய

லெப்டினன்ட் அக்காச்சி (அப்துல்லா) (செல்வரத்தினம் குமரசீலன் – சுண்ணாகம், யாழ்ப்பாணம்)

2ம் லெப்டினன்ட் தில்லைநாதன் (நல்லதம்பி நகுலேஸ்வரன் – கொடிகாமம், யாழ்ப்பாணம்)

ஆகிய மாவீரர்களினதும் 17ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.

தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த வீரமறவர்களை இன்றைய நாளில் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூருகிறோம்.

கரும்புலிகள் மேஜர் நிலவன்(வரதன்) கப்டன் மதன் வீரவணக்கம்

கிளாலி கடல்நீரேரியில் போக்குவரத்தில் ஈடுபட்டிருந்த மக்கள் மீது தாக்குதல் நடத்தவந்த சிறிலங்கா கடற்படையினர் மீது தாக்குதலை மேற்கொண்டு இரு நீரூந்து விசைப்படகுகளை மூழ்கடித்து வீரகாவியமான கடற்கரும்புலிகள் மேஜர் நிலவன்(வரதன்) மற்றும் கப்டன் மதன் ஆகியோரின் நினைவுநாள் (26.08.1993) இன்றாகும்.

26.08.1993 அன்று கிளாலி நிரேரியூடாக போக்குவரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த மக்களைத் தாக்கவந்த சிறிலங்கா கடற்படையினர் மீது தாக்குதலை நடாத்தி, கடற்படையின் இரு நீருந்து விசைப்படகுகளைத் தாக்கி மூழ்கடித்து கடற்கரும்புலிகள் இருவர் உட்பட ஐந்து போராளிகள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர்.

 

அவர்களின் விபரம் வருமாறு:

1. கடற்கரும்புலி மேஜர் நிலவன் (வரதன்)

(கந்தசாமி இராமசந்திரன் – கள்ளிச்சை, வடமுனை, மட்டக்களப்பு)

2. கடற்கரும்புலி கப்டன் மதன்

(சீனிவாசகம் சிவகுமார் – மட்டக்களப்பு)

3. கடற்புலி கப்டன் சிவா

(முத்துலிங்கம் கருணாநாதன் – குச்சவெளி, திருகோணமலை)

4. கடற்புலி லெப்டினன்ட் பூபாலன்

(சுந்தரராஜ் பாஸ்கரன் – நாகர்கோவில், யாழ்ப்பாணம்)

5. கடற்புலி 2ம் லெப்டினன்ட் சுரேந்திரன்

(சபாரத்தினம் சிவாகரன் – புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு)


தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த வீரமறவர்களை இன்றைய நாளில் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூருகிறோம்.


வன்னியில் (05.07.08) நடைபெற்ற நிகழ்வில் கரும்புலி மேஜர் நிலவனின் பாடல்களைக்கொண்ட “புதிய காற்று” குறுவட்டை படையத் தொடக்கப் பயிற்சிக் கல்லூரிப் பொறுப்பாளர் கேணல் ஆதவன் ஆகியோர் வெளியிட்டு வைத்தனர்.

Up ↑