Search

Eelamaravar

Eelamaravar

Category

tamilthesiyam

இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்

thai pongalஈழ விடுதலைப் பொங்கல்ltte pongal 3tamil

ltte pongal

சுதந்திரப் பொங்கல்

இரண்டாயிரம் ஆண்டுப் பொங்க்கலடி
தோன்றட்டும் ஆயிரம் மங்கலங்கள்
மண்ணாற்றல் யாவுமே மேல்வரட்டும்
மாற்றலர் கெய்யிடர் போய்விடட்டும்

ஆடிய பச்சைக் கதிர்களெல்லாம்
அறுவடை முடிந்து அரிசியாகி
வாடிய வயிறாய் குளிரவைக்கும்
வளமான தைப்பொங்கல் நாளிதடி

முத்தான நெல்லின் மணிகளோடு
முந்திரிகை வற்றல் சேர்ந்தினிக்கும்
சத்தான பயறும் கலந்தவிந்த
சர்க்கரைப் பொங்கலாய்
வாழ்வினிக்கும்

பச்சை அரிசி பால் பொங்கிடட்டும்
பட்டினி துன்பங்கள் நீங்கிடட்டும்
அச்சங்கள் நீங்கிட ஆண்டு இதில்
ஆதார பொங்கலோ பொங்கிடட்டும்

ஓடிடும் காலங்கள் ஓடிடட்டும்
ஒன்றுமில்லா நிலை மாறிடட்டும்
தேடிய செல்வங்கள் சேர்ந்திடட்டும்
தமிழ் தேசம் மகிழ்வினில் ஆடிடட்டும்

ஆண்டுக்கொருமுறை வாற பொங்கல்
அடுத்த ஆண்டினில் வரும் பொழுது
மீண்டும் எம்மை நாங்கள் ஆளுகின்ற
மேன்மையுறு நாளாய் தோன்றிடட்டும்

வீட்டுக்கு வீடு நாம் பொங்க்கிடலாம்
வெற்றி விழாவாகப் பொங்க்கிடலாம்
நாட்டு விடுதலை கிட்டியதால்
நமக்கது சுதந்திரப் பொங்கலடி

மாமனிதர் ‘கவிஞர்’ நாவண்ணன்.
எரிமலை (தை 2000)

**
தைத்திங்கள் மலரட்டும்

‘தைத்திங்கள் மலரட்டும்’
வதை செய்தோர் காலம் போய்
விதை விதைக்கும் காலத்தை
கதையாகத்தந்தான் காண் கரிகாலன்
கவிதை சொல்லும் தைத்திங்கள் கனிகிறது.

திக்கெட்டும் புகழ் பரப்பி
திசை எங்கும் தமிழ் பரப்பி
கொட்டட்டும் போர்ப்பரணி வரலாறு
திகைக்கட்டும் சிங்களத்தின் அகராதி.

காலம் ஒரு பதில் சொல்லும்
கரிகாலன் சேனை விடையளிக்கும்
புதியதொரு வரலாறு உருவாகும்
புதிய தைப்பொங்கலுடன் உறவாடும்.

ஏருழவர் தொழிலாளர் சிற்பிகளின்
தேரூர்ந்த சிறப்புக்களைச் சிதைத்திருந்த
கொடூரத்தின் கும்பல்களை குதறிவிட்டோம்
கொஞ்சு தமிழ்க் கோலத் தை நீ வாழி.

கிராமியத்துப் படையணிகள் கிளம்பட்டும்
கிறுக்கழிக்க எல்லைப்படை விரையட்டும்
களமாடும் புலிச்சேனை தளைக்கட்டும்
களங்க மற்ற தைத்திங்கள் மலரட்டும்.

போர் ஆண்டு பூரணமாய் பொலியட்டும்
புகுந்து நின்று போர் முடிக்க இணையட்டும்
வீட்டிற்கொரு விடுதலைத் தீ கிளம்பட்டும்
விரைவான சுதந்திரமாய் மலரட்டும்.

கவிஞர் செவ்வந்தி மகாலிங்கம்.
எரிமலை (தை 2001)

1995.09.22 நாகர் கோவில் படுகொலை

Naakarkovil bombing

நாகர் கோவில் பாடசாலையில் சிங்கள வான் வல்லூறுகளின் தாக்குதலின் பலியான மாணவசெல்வங்க்களை நெஞ்சம் மறக்குமா…?

யாழ்.வடமராட்சி கிழக்கு பிரதேசத்தில் 1995.09.22 அன்று நாகர்கோவில் மகாவித்தியாலயத்தின் மீது சிங்கள வான் படைகளின் ” புக்காரா ” குண்டுவீச்சால் பிச்செறியப்பட்ட புறாக்களின் அவலச்சாவை நெஞ்சம் தான் மறக்குமா…?

தலைவாரி, பொட்டுவைத்து, பள்ளி சென்று வா என்று அம்மா அனுப்பிவைக்க, பத்திரமாக படித்துவிட்டு வீடு திரும்பி வா என அப்பாவும் சொல்லி அனுப்ப, வெள்ளை நிற பள்ளிக்கூட ஆடைகளை அணிந்து உல்லாசமாக, உற்சாகமாகச் பாடசாலை சென்ற அந்த மாணவச் செல்வங்கள் மீது குண்டுபோட சிங்கள இனவெறியனுக்கு எப்படித் தான் மனம் வந்ததோ தெரியவில்லை.

பாவம்! பள்ளிக்குச் செல்லும் பிள்ளை அன்று வீடு திரும்ப மாட்டாள் என அம்மாவுக்கு முன்னரே தெரியாமல் போய்விட்டது. பாடசாலை சென்ற பையன் இனி வீட்டிற்கு பிணமாகத் தான் வருவான் என அப்பா நினைத்துக்கூடப் பார்க்கவில்லை.

|| நாகர் கோவில் மாணவர் மீதான வான் தாக்குதல்….

இலங்கை புக்காரா ரக விமானங்கள் பாடசாலை என்று கூடப்பாராமல் குண்டுகளை சரமாரியாக வீசிச் சென்றது. அதில் 21 பாடசாலை மாணவர்கள் ஸ்தலத்திலேயே உடல்சிதறி துடிதுடித்து பலியானார்கள்.

உலகே உலகே ஒரு தரம் ….

பாடசாலையில் எஞ்சியிருந்த மாணவர்கள் தங்கள் உயிரைப் பாதுகாப்பதற்காக பாடசாலையை விட்டு சிதறி நாலா பக்கமும் ஓடியதைக் கண்ணுற்ற சிங்கள இனவெறியன் கிராமத்தின் எல்லாஇடங்களிலும் கண்டபடி குண்டு மழைகளை சரமாரியாக பொழிந்து தள்ளினான். அதன் காரணமாக வீதியில் விடுகளில் இருந்த பொதுமக்களும் பலியாகினார்கள் எங்கும் புழுதியுடன் கரு மேகம் சூழ்ந்தவண்ணம் இருந்தது.

வீரம் வீசும் எங்கள் மண்ணில் …

அந்தக்கொடூரத் தாக்குதலில் மாணவர்கள், பொதுமக்கள் வயது வேறுபாடுன்றி பலர் காயங்களுக்கு உள்ளாகிய நிலையில், காயப்பட்டவர்களை மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லக்கூட வாகனவசதி கூட இல்லாத நிலையில் எத்தனையோ பேர் உயிரிழக்கவேண்டிய பரிதாபம் ஏற்பட்டது. ஓலத்தின் குரல்கள் அந்த விதிகளில், தெருக்களில் ஏன் அந்த கிராமத்தையே நிறைத்தது.

|| நாகர் கோவில் படுகொலை நினைவில்…

சில மாணவர்கள் சிறிய காயங்களுக்கு உள்ளாகி இருந்தாலும், இரத்தப்போக்கு காரணமாக ஆசிரியரின் மடியில் பிணமானர்கள். சில ஆசிரியர்கள் மனநலம் பாதிப்படைந்தனர்.

ஒரு சில மணிநேரங்களில் அயற்கிராமங்களில் இருந்த வாகனங்களை கொண்டு வந்து காயப்பட்டவர்களை வைத்தியசாலைக்கு கொண்டு செல்கையில் இடைவழியில் எத்தனையோ உயிர்கள் பிரிந்தன.

கருவறை பற்றி எரிய பிள்ளை மடிந்த சோகம், அப்படியாக அன்று அந்த கிராமத்தில் நடந்த இனக்கருவழிப்பு இன்றும் தன இயல்பை முழுவதுமாக இழந்த நிலையில் அந்த மண் மயான பூமியாக காட்சியளிப்பதை எம்மவர்களால் மறக்கத்தான் முடியுமா…?

நாகர் கோவில் மண்ணில் 22.09.1995 அன்று எம்மைவிட்டு பிரிந்து சென்ற மாணவர்களின் நினைவை சுமந்து வண்ணம் பயணிக்கின்றோம். எமது இனத்தைக் கருவறுக்க, சிங்கள இனவாதிகள் மாணவர்களைக் குறிவைத்தனர். கள்ளம் கபடம் ஏதுமற்ற வெள்ளை உள்ளம் கொண்ட மாணவச் செல்வங்கள் அணிந்திருந்த வெள்ளை சீருடைகளில் எல்லாம் இரத்தக் கறைகள்!

தமது குண்டு வீச்சில் 21 தமிழர்களைக் கொன்று குவித்துவிட்டோம் என்ற இறுமாப்பு சிங்கள வான்படைக்கு, கொன்றது பச்சை குழந்தையானாலும் சரி, அல்லது பிறந்து 3 நாள் ஆன குழந்தையானாலும் சரி, கொல்லப்பட்டது தமிழன் தானே என்று அவனுக்கு திருப்தி.

|| உறவை இழந்த ஒரு சகோதரனின் உள்ளத்திலிருந்து ….

இள வயதில் மடிந்த உங்களை
இன்றும் நினைத்து அழுகின்றோம்
பதினேழு ஆண்டுகள் கடந்தாலும்
பாசத்துடன் நினைவு கூருகின்றோம்!.

பள்ளி சென்ற உங்களோடு பலரை
அள்ளி எடுத்தான் ஒருநொடிப்பொழுதில்
அந்நியனின் “புக்காரா” வடிவில் காலனவன் அன்று
முப்பொழுதும் நினைத்து வாடுகின்றோம் என்றும்!

எங்களை விட்டு பிரிந்து சென்ற
உங்களின் நீங்கா நினைவுகளோடு….

ஆயினும் தொடராய் எத்தனை எத்தனை இப்படியான துயிர் தமிழீழ மண்ணில் செஞ்சோலை முதல், சிங்களவனின் வரம்பு எல்லை மீறிய இனவழிப்பின் உச்சம் முள்ளிவாய்க்கால் வரை சென்றும் வாய் மூடி கிடக்கிறது உலகம்.

தமிழீழத்திலே சிங்கள இனவெறியால் பலியாகிய ஆயிரம் ஆயிரம் உயிர்களின் ஆன்மாக்களின் குமுறலையும் கண்ணீரையும் குருதியையும் பிசைந்து அழியாத சுவடுகள் ஆகிப்போன 21 பூக்களின் உடல்கள் செங்குருதியில் மிதந்த அந்த கோர சம்பவத்தின் நினைவில் தமிழீழ தேசம் …

இன அழிப்பில் படுகொலையான எம் உறவுகளுக்கு எம் சீரம் தாழ்ந்த கண்ணீர் பூக்களை அவர் பாதம் தன்னில் வைத்து செல்கின்றோம்.

பலிகாகிய உறவுகளை நெஞ்சிருத்தி எம் தேசத்தில் இருள் மேகம் விலகி சுதந்திர உதயத்தைக் காண மலரப்போகும் தமிழீழத்தை ஒளிரவைக்க ஒன்று படுவோம் தமிழினமே …

– மீட்டல்களுடன் தேசக்காற்று.

நாகர்கோவில் மண்ணில் செங்குருதியில் மாணவ செல்வங்கள்…

1995.09.22 அன்று நாகர்கோவில் மகாவித்தியாலயத்தின் மீது சிங்கள வான் படைகளின் குண்டுவீச்சால் பிச்செறியப்பட்ட பாடசாலை தளிர்கள் …

கண்ணீருடன் கசியும் இதயத்துடன் ….

செல்வன் மயில்வாகனம் கணகநாதன்

செல்வன் இராமநாதன் கோபிதரன்

செல்வன் சுந்தரலிங்கம் பழனி

செல்வன் நாகமுத்து செந்தில்வேல்

செல்வன் கிருஷ்ணகுமார் தவசீலன்

செல்வன் இராசரத்தினம் உமாகாந்தன்

செல்வி அல்போன்ஸ் அமலவிஜி

செல்வி இரவிந்திரராசா அமிர்தா

செல்வி இராசரத்தினம் கவிதா

செல்வி இராமநாதன் மேதினி

செல்வி மார்க்கண்டு நாகலோஜினி

செல்வி பாலச்சந்திரன் ரஜிதா

செல்வி தாமோதரம் சகுந்தலா

செல்வி இராமச்சந்திரன் சங்கீதா

செல்வி சிதம்பரப்பிள்ளை சசிருபி

செல்வி செல்வகுலசிங்கம் செல்வதி

செல்வி குகசரவணமலை தர்சினி

செல்வி சுந்தரலிங்கம் தர்சினி

செல்வி பூலோகராசா துஷாந்தினி

செல்வி நவரத்தினசாமி உமாதேவி

செல்வி தர்மலிங்கம் துஷந்தினி

செஞ்சோலை படுகொலையின் ஆண்டு ஈர நினைவில்

தமிழரின் நீண்ட சோக வரலாற்றில் `2006 ஆகஸ்ட் 14′ ஈனர் படைகளின் ஈவிரக்கமற்ற தாக்குதல்களால் பரிதாபகரமாகக் கொல்லப்பட்ட 61 பிஞ்சுகளின் குருதியால் எழுதப்பட்டுள்ளது. நான்கு மாத பச்சிளம் குழந்தையை கண்முன்னே துடிதுடிக்க சுட்டுக்கொல்லும் வெறிபிடித்த சிங்கள ஆக்கிரமிப்பாளர்களுக்கு இதுவொரு பொருட்டாக இல்லாது போனாலும் அழுது… அழுது… ஆறமுடியாமல் அகதிகளாய் அலையும் தமிழினத்தால் இதைத் தாங்கிக் கொள்ளும் சக்தியில்லையென்றே கூறவேண்டும்.

முல்லைத்தீவு மாவட்டம் வல்லிபுனத்தில் `செஞ்சோலை’ சிறுமிகள் இல்லத்தின் வளாகமொன்றுள்ளது. இந்த வளாகமே கடந்த ஆகஸ்ட் 14 ஆம் திகதி திங்கட்கிழமை காலை 7 மணியளவில் கண்மூடித்தனமான வான் தாக்குதல்களுக்கு இலக்காகியது. பேரினவாத அரச படைகளின் நான்கு அதிவேக யுத்த விமானங்கள் மிலேச்சத்தனமாக வீசிய 16 குண்டுகளும் 61 பாடசாலை மாணவிகளின் உயிர்களை பறித்ததுடன் 155 இற்கும் அதிகமான மாணவிகள் படுகாயமடைந்துள்ளனர். கொல்லப்பட்டவர்களில் சிலரது உடல்கள் சிதறியபடி காணப்பட்டன. காயமடைந்தவர்களில் 25 மாணவிகளது நிலைமை கவலைக்கிடமாகவுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. காயமடைந்தவர்களில் பலர் அவயவங்களை இழந்திருப்பதாகவும் சிலர் கைகள், கால்கள் இரண்டையும் இழந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

காயமடைந்தவர்கள் முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு, தர்மபுரம், கிளிநொச்சி ஆகிய பொது வைத்தியசாலைகளிலும் தனியார் வைத்தியசாலைகளிலும் உடனடியாக அனுமதிக்கப்பட்டனர். தமது பிள்ளைகள் தங்கியிருந்த பகுதி மீது குண்டுத் தாக்குதல்கள் இடம்பெற்றதை அறிந்த பெற்றோர் அலறியடித்தவாறு செஞ்சோலை வளாகத்துக்கு ஓடிவந்தனர். கொல்லப்பட்டவர்களில் தமது பிள்ளையும் உள்ளாளா என்ற ஏக்கத்துடன் இறந்து கிடந்த மாணவிகளைத் தேடிய குடும்பத்தினர் கொல்லப்பட்ட தமது பிள்ளை தான் என தெரிந்ததும் கதறிய கதறல்கள் அங்கிருந்த அனைவரையும் அழவைத்தது. “பத்து நாளும் என்னால விட்டிட்டு இருக்க ஏலாதுண்டு முதலில் மாட்டேன் என்டுதான் சொன்னன். ஆனால், நல்ல விஷயம் எண்டு எல்லாரும் சொன்னதால தான் விட்டனான். கடைசியில இப்படியாப்போச்சு” என தலையில் அடித்து கதறிய தாயாரொருவர் தன் மகளைத் தூக்கி வா வீட்ட போவோம் என கேட்டதும் அனைவரும் கதறியழுதனர்.

செஞ்சோலை வளாகத்தில் அப்பாவி மாணவிகளை தறிகெட்ட சிங்களப் படை கொன்றது மாத்திரமல்லாமல் கொல்லப்பட்டவர்கள் விடுதலைப் புலிகள் இயக்கத்திலுள்ள சிறுவர் போராளிகளெனக் கூறி வெளியுலகுக்கு உண்மையை மூடிமறைக்க இனவெறி அரசாங்கம் முயல்வது அனைவரையும் ஆத்திரமடையச் செய்துள்ளது. செஞ்சோலை வளாகம் புலிகளின் பயிற்சி முகாமெனவும் அங்கு சிறுவயது போராளிகளே இருந்ததாகவும் கூறி 2004 ஆம் ஆண்டு தமது விமானமொன்று எடுத்த படமொன்றையும் காட்டியுள்ளன காட்டுமிராண்டிப் படைகள். இதைவிட ஒருபடி மேலே சென்ற பேரினவாத அரசின் அமைச்சரும் பாதுகாப்பு நிலைவரம் தொடர்பாக பேசவல்லவருமான கெஹகிலிய ரம்புக்வெல,” கொல்லப்பட்டது சிறுவயது போராளிகள். அரசுக்கெதிராக செயற்படும் எவராயினும் அதாவது வயது, பால் வேறுபாடின்றி கொல்வோம்” என தமது அரசும் இனவெறிபிடித்தே அலைகின்றது என்பதனை பறைசாற்றினார். ஆனால், சம்பவ இடத்திற்கும் வைத்தியசாலைகளும் நேரடியாக சென்று விசாரணைகளை மேற்கொண்ட போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவும் `யுனிசெப்’பும் கொல்லப்பட்டவர்கள் அப்பாவி மாணவிகள் என்பதனை வெளிப்படுத்தியது. எனினும், தனது பொய்ப் பிரசாரத்தை தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றார் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ. ஊடக நிறுவனங்களின் பிரதிநிதிகளை அழைத்த ஜனாதிபதி இந்த பொய்யையே மீண்டும் கூறியுள்ளார்.

இதேவேளை, இந்த தாக்குதல்களுக்கு பழிக்குப் பழிவாங்கிவிடுவார்களென்ற அச்சத்தில் தெற்கிலுள்ள பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன. அப்படியானால் அங்கே வல்லிபுனத்தில் கொல்லப்பட்டவர்கள் அப்பாவி தமிழ் மாணவிகள் தான் என்பதனை அரசு மறைமுகமாக ஏற்றுக்கொண்டுள்ளது என்பதை எவரும் இலகுவில் புரிந்துகொள்வார்கள். பத்துநாள் பயிற்சிப்பட்டறை உண்மையில் கொல்லப்பட்டவர்கள் யார்? ஏன் அங்கு கூடியிருந்தார்கள்? காலை 7 மணிக்கு அவர்கள் என்ன செய்தார்கள்? முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள வல்லிபுனம் மக்கள் குடியிருப்புகள் நெருக்கமாகவுள்ள பகுதி. குடாநாட்டிலிருந்து 1995 இல் இடம்பெயர்ந்து வன்னிக்கு சென்றவர்களுக்கு இதை நன்கு உணர்ந்து கொள்ளமுடியும். அங்கு தான் `செஞ்சோலை’ வளாகமும் உள்ளது. செஞ்சோலை என்றதும் தாயகத்தைச் சேர்ந்த அனைவருக்கும் நன்றாக தெரியும். இந்த வளாகத்திலுள்ள அருகில் பல நலன்புரி நிலையங்கள், வேறு பல சிறுவர் இல்லங்கள் என பலவுள்ளன. மனிதநேய நடவடிக்கைகள் நிறைந்த ஒரு பகுதியே வல்லிபுனம். இந்த செஞ்சோலை வளாகத்தில் தற்போது செஞ்சோலை சிறுமியர் இல்லத்தைச் சேர்ந்தவர்களில்லை. இந்த வருடம் ஜனவரியில் கிளிநொச்சியில் அமைக்கப்பட்ட புதிய வளாகத்துக்கு சிறுமியர்கள் சென்றுவிட்டனர்.

ஆனால், வள்ளிபுனம் – செஞ்சோலை வளாகம் தொடர்ந்தும் செஞ்சோலை வளாகமாகவே உள்ளது. இங்கு வதிவிட பயிற்சிப்பட்டறைகள் நடாத்தப்படுவது வழமையானதொன்று. காரணம் ஏற்கனவே சிறுமியர் இல்லமாக இது செயற்பட்டமையால் மாணவிகள் தங்கியிருந்து பயிற்சிகளை மேற்கொள்வதற்கு வசதியாக இவ்வளாகம் இருப்பதே. அத்துடன், இந்த வளாகம் ஐ.நா. அமைப்புகளூடாக பயிற்சிப் பட்டறைக்கான இடமென இலங்கை அரசாங்கத்தாலும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுபோன்ற பல காரணங்களால் இங்க பல பயிற்சிப் பட்டறைகள் நடைபெற்றுவந்தன. அதேபோன்றதொரு பயிற்சிப் பட்டறை நடைபெற்றுக் கொண்டிருந்த போதே இலங்கை அரசின் விமானப் படை கோரத்தாண்டவமாடி தமிழரை துன்பத்தில் வாடவிட்டுள்ளது. கடந்த 11 ஆம் திகதி முதல் இச்செஞ்சோலை வளாகத்தில் க.பொ.த. உயர்தர மாணவிகளுக்கான 10 நாள் வதிவிட பயிற்சி நெறி நடைபெற்றுவந்தது. இந்தப் பயிற்சி நெறியின் 3 ஆம் நாளின் போதே இப்பேரனர்த்தம் ஏற்பட்டுள்ளது. சமூக தலைமைத்துவ திறன்கள், முதலுதவி, பால் சமத்துவம் தன்னம்பிக்கையை கட்டியெழுப்புதல், வினைத்திறனுடனான நேர முகாமை மற்றும் குழு வேலை போன்றவற்றில் மாணவிகளுக்கு பயிற்சியளிப்பதனை நோக்கமாகக் கொண்டே இப்பயிற்சிப் பட்டறை நடைபெற்று வந்தது. இதன்போது கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களைச் சேர்ந்த 500 க.பொ.த. உயர்தர மாணவிகள் கலந்துகொண்டிருந்தனர் எனத் தெரியவருகின்றது. செய்தி கேட்டுக்கொண்டிருந்த மாணவிகளே அதிகளவில் கொல்லப்பட்டனர். “காலை 7 மணியளவில் மாணவிகள் ஒன்றுகூடலுக்காக தயாராகிக் கொண்டிருந்தனர். அவர்களில் பலர் தற்போதைய யுத்த சூழ்நிலை குறித்து அறிய வானொலியில் செய்தியைக் கேட்டுக் கொண்டிருந்தனர். இதன்போதே விமானங்கள் வட்டமிட்டு 16 குண்டுகளை அடுத்தடுத்து வீசின. செய்தியைக் கேட்டுக்கொண்டிருந்தவர்களே நேரடியாக தாக்குதலுக்கு இலக்காகினர்.

இதில் அதிகளவானோர் கொல்லப்பட்டதுடன் பலருக்கு பின்புறத்தில் மோசமான காயங்கள் ஏற்பட்டன. வேறு வேலைகளிலிருந்த மாணவிகள் அருகேயிருந்த காட்டுப் பகுதிகளுக்குள் ஓடிவிட்டனர்” என விடுதலைப் புலிகளின் சமாதான செயலகம் விடுத்திருக்கும் இடைக்கால அறிக்கை கூறுகின்றது. தீயிலிருந்தும் மின்னிலிருந்தும் எவ்வாறு தப்புவது, அதேபோல இரசாயன பதார்த்தங்களிலிருந்து எவ்வாறு பாதுகாப்பாயிருப்பது, விமான தாக்குதல்களிலிருந்து எவ்வாறு தப்புவது, நாடகங்கள், இசை, நகைச்சுவை மூலமான தனிநபர் வெளிப்பாடுகள் போன்ற பயிற்சிகள் ஆசிரியர்களாலும் துறைசார் நிபுணர்களாலும் கற்பிக்கப்பட்டதாக அவ்அறிக்கை தெரிவிக்கின்றது. இதேவேளை, இந்தப் பயிற்சிப்பட்டறை குறித்து தமிழீழ கல்விக் கழக பொறுப்பாளர் இளங்குமரன் கூறுகையில்; “இதுவொரு வருடாந்த பயிற்சிப்பட்டறை. கிளிநொச்சி கல்வி வலயத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இப்பயிற்சி நெறிக்கு பெண்கள் புனர்வாழ்வு மற்றும் அபிவிருத்தி நிலையம் நிதியுதவியையும் ஆதரவையும் வழங்கியிருந்தது. கிளிநொச்சி, முல்லைத்தீவு, ஒட்டுசுட்டான் ஆகிய கல்வி வலயங்களுக்குட்பட்ட 18 பாடசாலைகளைச் சேர்ந்த உயர்தர மாணவிகளும் வேறு கல்வி நிலையங்களைச் சேர்ந்த தெரிவுசெய்யப்பட்ட பெண்களும் இப்பயிற்சியில் பங்கெடுத்திருந்தனர். சிங்கள அரசு தமிழ்ச் சமூகத்தின் கல்வி உரிமையை மறுத்துள்ளது. வரலாற்றில் சிங்கள தீவிர வாதிகள் எப்போதும் தாக்கியே வந்துள்ளனர் எனத் தெரிவித்துள்ளார். தமிழ் மாணவர்கள் திட்டமிட்ட முறையில் அழிக்கப்படுவது இதுதான் முதற்தடவையல்ல. அரசின் முப்படைகளினதும் வெறியாட்டத்தால் அப்பாவித் தமிழர்கள் பட்டபாடு வார்த்தைகளால் எழுதிவிடமுடியாது.

ஏனெனில் அந்த வலியை பதிவுசெய்யும் ஆற்றல் இந்த வார்த்தைகளுக்கு இல்லை. இரு தசாப்தங்களுக்கு மேலாக தொடரும் போரில் பேரினவாத அரச படைகள் பாவித்த மிகப் பயங்கரமான விமானங்கள் பல. அவை விடுதலைப் புலிகளை தாக்கியதை விட பொதுமக்களையே பலிகொண்டன. இன்று தமிழர் தாயகத்தை விட்டு வெளியேறி புலத்திலுள்ளவர்களானாலும் சரி வட, கிழக்குக்கு வெளியே இருக்கும் வளர்ந்தவர்களானாலும் சரி விமானத் தாக்குதல்களில் அனுபவப்பட்டவர்களாக இருப்பார்கள். அன்று ஹெலி, சீ.பிளேன், சியாமாச் செட்டி, அன்ரனோவ், சகடை ( பட்டப்பெயர்), புக்காரா என தொடங்கி தமிழரின் உயிர்குடித்த விமானங்கள் தாயகத்தின் வானில் தலைகாட்ட முடியாத நிலையில் `மிக்’ என்றும் `கிபிர்’ என்றும் `சுப்பசொனிக்’ என்றும் அப்பாவி தமிழரின் உயிர்குடிக்க அனுப்பப்படுகின்றன. இலங்கை விமானப் படைகள் தமிழர் தாயகத்தின் மேற்கொண்ட கண்மூடித்தனமான தாக்குதல்கள் ஏராளம். இதில் பள்ளி மாணவர்கள், பச்சிளம் குழந்தைகளை வகைதொகையின்றி பலியெடுத்த வரலாறு மிகக் கொடியது. நாகர்கோவில் மத்திய பாடசாலை சிறார்களின் படுகொலை அன்று 1995 செப்டெம்பர் 22 ஆம் திகதி சின்னஞ்சிறுசுகளின் கலகலப்பான பேச்சுக்களுடன் நாகர் கோவில் மத்திய பாடசாலை பூஞ்சோலையாக காணப்பட்டது. பகல் 12.30 மணியளவில் மதியநேர இடைவேளைக்கு மணியடித்த போது பிள்ளைகள் வெளியில் வந்து விளையாடிக் கொண்டிருந்தனர்.

பகல் 12.50 மணி…
ஆக்கிரமிப்பு படைகளின் `புக்காரா’ விமானங்கள் குண்டுகளை மாறி மாறி கண்மூடித்தனமாக வீசின. எதுவும் அறியாத பிஞ்சுகள் மரமொன்றின் கீழே பதுங்கிக் கொண்டனர். இந்த கொலை வெறிபிடித்தவர்களின் தாக்குதல்களால் மரத்தின் கீழே நின்ற 25 சிறார்கள் உடல்சிதறி அநியாயமாக கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலின்போது 40 அப்பாவிகள் ஒட்டுமொத்தமாக ஸ்தலத்திலேயே கொல்லப்பட்டனர். 200 பேர் வரையில் படுகாயமடைந்தனர். இதில் கொல்லப்பட்டவர்களில் 6 வயது குழந்தை முதல் 16 வயது சிறுவன் வரை அடங்குகின்றனர். இது பாடசாலை மாணவர்கள் படையினரால் கூண்டோடு அழிக்கப்பட்ட மற்றுமொரு சம்பவம். இதைவிட மாணவர்கள், குழந்தைகள், பெண்கள் ,வயோதிபர்களென எதுவித வேறுபாடுகளுமின்றி கொல்லப்பட்ட சம்பவங்கள் ஏராளம். `குமுதினி’ படகில் ( நெடுந்தீவுக்கும் குறிகட்டுவானுக்குமிடையில் போக்குவரத்தில் ஈடுபட்டுள்ள படகு) பயணித்த பலரை 1984 ஆம் ஆண்டு கடற்படை வெட்டியும் குத்தியும் கொன்றது. இதில் 6 மாத பச்சிளம் பாலகன் துப்பாக்கியிலுள்ள கத்தியால் கடற்படையினரால் குத்திக் கொலை செய்யப்பட்டான். மூன்று முறை அந்த பிஞ்சு நெஞ்சில் குத்தி கொன்ற கடற்படை இன்றும் தமிழர் தாயகத்திலேயே நிலை கொண்டுள்ளது. இவ்வாறு இலங்கை அரசின் முப்படைகளும் மேற்கொள்ளும் தாக்குதல்களால் அப்பாவித் தமிழ் மக்கள் இழந்த உயிர்கள், உடைமைகள் ஏராளம். ஆனால் தமது கண்மூடித்தனமான தாக்குதல்களை மேற்கொண்டுவிட்டு அதற்குப் பொய்யான,வொப்பான விளக்கங்களை பேரினவாதிகள் மாத்திரமன்றி சிங்களத்துவ ஊடகங்களும் கூறிவருகின்றன. இதற்கு தமிழக முதல்வர் மு.கருணாநிதி கூறியுள்ளதை பதிலாக முன்வைக்கலாம். ” இனவெறி – இதயமற்றோர் நடத்திய முல்லைத்தீவு படுகொலைக்கு சமாதானம் சொல்வது போன்ற சண்டாளத்தனம் கொடுமையானது”. இலங்கையில் நடைபெறும் அராஜகங்களுக்கு இந்த பழமொழியும் நன்றாக பொருந்தும் – “பேய் ஆட்சி செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள்” என்பதே அது.

காலம் இங்கு பேசும் கதை யாவும் இங்கு கூறும் இன வெறியன் வானரக்கன் செயலால் சோலையில் உங்கள் உதிரம் கண்ட காற்றும் இங்கு சோக கீதம் இசைக்கும் பாசம் வைத்த உறவுகள் தவிக்கின்றோம் பாரினில் உங்கள் நினைவுடன் ஏக்கத்துடன் வாழ்கிறோம் உங்களை காணும் அன் நாள் வரை உறங்காது எம் விழிகள் …

யார் மரணமும் யாரையுமே நோகவில்லை முடிவில் முள்ளிவாய்க்காலை விழுங்கி சுடுகாடாய், கனத்தது உலக தமிழரின் கல்மனசு..!

செஞ்சோலை மலர்கள் படுகொலை

முல்லைத்தீவு மாவட்டம் வல்லிபுனத்தில் `செஞ்சோலை’ சிறுமிகள் இல்லத்தின் வளாகமொன்றுள்ளது. இந்த வளாகமே கடந்த ஆகஸ்ட் 14 ஆம் திகதி திங்கட்கிழமை காலை 7 மணியளவில் கண்மூடித்தனமான வான் தாக்குதல்களுக்கு இலக்காகியது.

Sencholai-Ninaivil

 

ஈழப்போர் – 4 ஆட்டிலறிகளின் போர்

ஈழப்போர் வரலாற்றில்: இலகுரக விமானங்களை வைத்து, வான் ஆதிக்கத்திலும் பலமான நிலையில் இருந்து உலகில் வேறெங்கும் நிகழாத வரலாற்றுப் பதிவை உருவாக்கிய பிரபாகரன் எனும் பிம்பம்col raju artlery

மூன்றாம் கட்ட ஈழப்போருக்கும் நான்காம் கட்ட ஈழப்போருக்கும் இடையில் நிலவிய போர்நிறுத்த காலத்தில், ஒரு மென்தீவிர யுத்தம் நடந்தது யாவரும் அறிந்ததே. அந்தக் காலகட்டத்தில், இருதரப்புமே ஆட்டிலறிகள், மோட்டார்கள், கொண்டு மோதிக் கொள்ளாவிட்டாலும், தமது புலனாய்வுப் பிரிவுகள் மூலம் மோதிக் கொண்டன. துப்பாக்கிகள் மூலமும் மறைமுகமாக சண்டையிட்டன. ஒருவரையொருவர் போட்டுத் தள்ளின. ஆழ்கடலில் விடுதலைப் புலிகளின் ஆயுதக்கப்பல்கள் மூழ்கடிக்கப்பட்ட சம்பவங்களும் இடம்பெற்றன. கடற்படைக் கப்பல்கள் மீதான கரும்புலித் தாக்குதல்களும் நடந்தன. அதேவேளை, கொழும்பிலும் பிற பகுதிகளிலும் இராணுவப் புலனாய்வுப் பிரிவின் உயர் அதிகாரிகளை வேட்டையாடும் சம்பவங்களும் நடந்தன. இந்த மென்தீவிர யுத்தத்தின் பிற்காலத்தில், குறிப்பாக, 2005 டிசெம்பரில், சரத் பொன்சேகா இராணுவத் தளபதியாகப் பொறுப்பேற்ற பின்னர், கிளைமோர் தாக்குதல்களும் இடம்பெற்றன. இது தனியே இராணுவத்தினர் மீது இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் மட்டும் நடக்கவில்லை, புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளிலும் இடம்பெற்றன.

மாவிலாறு அணைக்கட்டைப் புலிகள் மூடிய பின்னர், அதனைக் கைப்பற்றும் இராணுவ நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. அது நான்காவது கட்ட ஈழப்போரின் தொடக்கம் எனலாம். அத்துடன், ஆட்டிலறி தாக்குதல்களும், விமானக்குண்டு வீச்சுகளும் ஆரம்பமாகின. ஆனாலும், போர்நிறுத்த உடன்பாடு நூலிழையில் தொங்கிக் கொண்டிருந்தது. கடைசியாக, 2006 ஓகஸ்ட் 11ம் திகதி, முகமாலை முன்னரங்கில் விடுதலைப் புலிகள் தொடுத்த பாரிய தாக்குதலை அடுத்து, நான்காவது கட்ட ஈழப்போர் அதிகாரபூர்வமாக வெடித்தது.

ஈழப்போர் வரலாற்றில், மிகவும் நீண்டதும், போரிடும் தரப்பினருக்குப் பாரிய இழப்புகளை ஏற்படுத்தியதுமான மூன்றாம் கட்ட ஈழப்போர், விடுதலைப் புலிகளை சமபலம் கொண்ட சக்தியாக, இலங்கை அரசை ஏற்க வைத்ததுடன் நிறைவுக்கு வந்தது. இந்தப் போர் மற்றும் அதில் ஏற்பட்ட இழப்புகள் தொடர்பான புள்ளிவிபரங்கள் முன்னைய பகுதியில் விபரிக்கப்பட்டது.

2002 பெப்ரவரியில், போர்நிறுத்த உடன்பாடு முறைப்படி கையெழுத்திடப்பட்ட பின்னர், 2006 ஜுலையில் மாவிலாறில் போர் வெடிக்கும் வரை, ஒரு நீண்ட அமைதியையும் சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

கிட்டத்தட்ட, நான்கு ஆண்டுகளுக்கு மேலாக, போரற்ற அந்த அமைதி நிலை நீடித்தது.

அதனை முழுமையான அமைதி நிலை என்று கூறமுடியாது – இன்னொரு போருக்கான ஆயத்தநிலை என்று உறுதியாக கூறலாம்.

ஆரம்பத்தில், அமைதியான சூழல் நிலவிய போதும், பின்னர் மெல்ல மெல்ல ஒரு நிழல் யுத்தத்தினுள் அந்த அமைதிக்காலம் நுழைந்தது. ஒரு கட்டத்தில் அது ஒரு மென்தீவிர யுத்தமாக மாறியது. கடைசியாக அந்த அமைதியை முறித்துக் கொண்டு நான்காவது கட்ட ஈழப்போர் வெடித்தது. போர்நிறுத்தம் நடைமுறையில் இருந்த போதிலும், இருதரப்புமே தம்மைப் போருக்குத் தயார்படுத்திக் கொண்ட அமைதிக்காலம் அது. அந்தக் காலகட்டத்தில், இராணுவத் தலைமையக புள்ளிவிபரங்களை மேற்கோள்காட்டும் மற்றொரு ஆய்வு அறிக்கை ஒன்று வெளியானது. அந்த ஆய்வை செய்திருந்தவர் மருத்துவ கலாநிதி ருவான் ஜெயதுங்க.

இலங்கையில் போரிடுவோரை அடிப்படையாக கொண்டு நடத்தப்பட்ட, போர் அழுத்தங்களின் உளவியல் முகாமைத்துவம் (Psychological Management of Combat Stress – A Study Based on Sri Lankan Combatants) என்ற ஆய்வே அது.

அந்த ஆய்வுக்காக, இராணுவத் தரப்புக் கொடுத்த புள்ளிவிபரங்களின் படி, மூன்று கட்ட ஈழப்போர்களிலும் கொல்லப்பட்ட இலங்கை இராணுவத்தினரின் எண்ணிக்கை 17,066 ஆகும். அந்தக் காலகட்டத்தில், 9220 அதிகாரிகளும், 20,266 படையினருமாக, மொத்தம், 29,486 படையினர் காயமடைந்து, உடல் உறுப்புகளை இழந்ததாக அந்த ஆய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகள் தரப்பில் அந்தக் காலகட்டத்தில் 17,903 பேர் மரணமானதாகவும், அந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. எனினும், இராணுவத் தலைமையகத்தினால், அண்மையில் ஆங்கில ஊடகவியலாளர் ஒருவருக்கு கொடுக்கப்பட்ட புள்ளிவிபரங்களின்படி, காணாமற்போனவர்களையும் சேர்த்து, மூன்றாம்கட்ட ஈழப்போரின் முடிவில் கொல்லப்பட்ட படையினரின் எண்ணிக்கை 18,123 ஆகும்.

(ஈழப்போர் -1 இல்- 1031 பேர்,
ஈழப்போர்-2 இல் 4535 பேர்,
ஈழப்போர் -3 இல் 12,557பேர்).

இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்ட போது, காணாமற்போனவர்களை கொல்லப்பட்டவர்களாக இராணுவத்தரப்பு கணிக்கவில்லை.

இதனால், மூன்று கட்ட ஈழப்போர்களிலும் காணாமற்போனதாக அறிவிக்கப்பட்ட, 3718 படையினரையும் உள்ளடக்காமலேயே, அந்த ஆய்வுக்காக, 17,903 படையினர் கொல்லப்பட்டதான தரவு வழங்கப்பட்டுள்ளது என்று கருதலாம். இந்த ஆய்வுக்காக வழங்கப்பட்ட தரவிலும், அண்மையில் வழங்கப்பட்ட தரவுக்கும் இடையில் பெரிய வேறுபாடுகள் இல்லை. ஆனால், காணாமற்போன படையினர் இதில் உள்ளடக்கப்படாது போனால் மிகப்பெரிய வேறுபாடு இருப்பதை காணலாம். அதுபோலவே, மூன்று கட்ட ஈழப்போர்களிலும், படுகாயமடைந்து அங்கவீனமடைந்த படையினரின் மொத்தத் தொகை, 29,486 என்று கூறுகிறது இந்த ஆய்வு. ஆனால், இராணுவத் தலைமையகம் அண்மையில் வழங்கிய, ஈழுப் போர்கள் பற்றிய தனித்தனியான புள்ளிவிபரங்களின்படி, மூன்று கட்ட ஈழப்போர்களிலும் படுகாயமடைந்த படையினரின் மொத்த எண்ணிக்கை, 15,606 ஆகும்.ltte artlery

(ஈழப்போர் -1இல்- 180 பேர்,
ஈழப்போர்-2 இல் 2671 பேர்,
ஈழப்போர் -3 இல் 12,755 பேர்).

இதன்படி, ஆய்வு அறிக்கைக்கு வழங்கப்பட்ட தரவுக்கும், இந்த்த் தரவுகளுக்கும் இடையில் மிகப் பெரிய வேறுபாடுகள் உள்ளதைக் காணலாம். இதில் சரியான எண்ணிக்கை எது என்று, சுயாதீனமான தரப்புகளால் முடிவுக்கு வருவது முடியாத காரியம்.

இந்தத் தொடரின் ஆரம்பத்திலேயே குறிப்பிட்டது போன்று, போர் தொடர்பாக கடந்த காலங்களில் வழங்கப்பட்ட புள்ளிவிபரங்களுக்கு இடையில் பெரியளவில் முரண்பாடுகள் இருந்தன என்பதே முக்கியமானது.

மூன்றாம் கட்ட ஈழப்போருக்கும் நான்காம் கட்ட ஈழப்போருக்கும் இடையில் நிலவிய போர்நிறுத்த காலத்தில், ஒரு மென்தீவிர யுத்தம் நடந்தது யாவரும் அறிந்ததே. அந்தக் காலகட்டத்தில், இருதரப்புமே ஆட்டிலறிகள், மோட்டார்கள், கொண்டு மோதிக் கொள்ளாவிட்டாலும், தமது புலனாய்வுப் பிரிவுகள் மூலம் மோதிக் கொண்டன.

துப்பாக்கிகள் மூலமும் மறைமுகமாக சண்டையிட்டன. ஒருவரையொருவர் போட்டுத் தள்ளின.

ஆழ்கடலில் விடுதலைப் புலிகளின் ஆயுதக்கப்பல்கள் மூழ்கடிக்கப்பட்ட சம்பவங்களும் இடம்பெற்றன.

கடற்படைக் கப்பல்கள் மீதான கரும்புலித் தாக்குதல்களும் நடந்தன.

அதேவேளை, கொழும்பிலும் பிற பகுதிகளிலும் இராணுவப் புலனாய்வுப் பிரிவின் உயர் அதிகாரிகளை வேட்டையாடும் சம்பவங்களும் நடந்தன.

இந்த மென்தீவிர யுத்தத்தின் பிற்காலத்தில், குறிப்பாக, 2005 டிசெம்பரில், சரத் பொன்சேகா இராணுவத் தளபதியாகப் பொறுப்பேற்ற பின்னர், கிளைமோர் தாக்குதல்களும் இடம்பெற்றன.

இது தனியே இராணுவத்தினர் மீது இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் மட்டும் நடக்கவில்லை, புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளிலும் இடம்பெற்றன.

மாவிலாறு அணைக்கட்டைப் புலிகள் மூடிய பின்னர், அதனைக் கைப்பற்றும் இராணுவ நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

அது நான்காவது கட்ட ஈழப்போரின் தொடக்கம் எனலாம்.

அத்துடன், ஆட்டிலறி தாக்குதல்களும், விமானக்குண்டு வீச்சுகளும் ஆரம்பமாகின.

ஆனாலும், போர்நிறுத்த உடன்பாடு நூலிழையில் தொங்கிக் கொண்டிருந்தது.

கடைசியாக, 2006 ஓகஸ்ட் 11ம் திகதி, முகமாலை முன்னரங்கில் விடுதலைப் புலிகள் தொடுத்த பாரிய தாக்குதலை அடுத்து, நான்காவது கட்ட ஈழப்போர் அதிகாரபூர்வமாக வெடித்தது. அந்தப் போர் 2009 மே 18ம் திகதி முள்ளிவாய்க்காலில் மூச்சடங்கும் வரை, ஓயாமல் நடந்தது.prabakaran with artlery

முகாலையில் புலிகள் தொடுத்த போர், யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றும் பெருந்திட்டத்தின் ஒரு பகுதியாகும். அதற்காக புலிகள் மண்டைதீவு, அல்லைப்பிட்டி பகுதிகளி0லும் தரையிறங்கினர். ஆனால், முகமாலை முன்னரங்கை உடைத்து எழுதுமட்டுவாள் வரை, முன்னேறிய புலிகளால் கிளாலிப் படைத்தளத்தை வீழ்த்த முடியாது போனது. அதுபோலவே மண்டைதீவு, அல்லைப்பிட்டியிலும் தொடர்ந்து தாக்குப்பிடிக்க முடியாது போனது. அதனால், புலிகளின் யாழ்ப்பாணம் மீதான தாக்குதல் திட்டம் பிசுபிசுத்துப் போய் கைவிடப்பட்டது. எனினும், நான்காவது கட்ட ஈழப்போரில் வடமுனையில் – நாகர்கோவில், எழுதுமட்டுவாள், கிளாலி இராணுவ வேலியை கடைசிவரை பாதுகாப்பதில் விடுதலைப் புலிகள் உறுதியாக இருந்தனர். ஆனையிறவைப் படையினர் கைப்பற்றும் வரை அதைத் தக்கவைத்துக் கொண்டனர்.

நான்காவது கட்ட ஈழப்போரில், கிழக்கில் மூதூரைக் கைப்பற்றும் ஒரு தாக்குதலையும் புலிகள் நடத்தினர். ஆனால், சில நாட்களிலேயே அந்த முயற்சியும் படையினரால் முறியடிக்கப்பட்டது. இருவாரங்களுக்கு முன்னர், புத்தளம் கருவெலகஸ்வெவ பகுதியில் நடந்த வாகன விபத்தில் மரணமான, கேணல் ரவீந்திர ஹன்துன்பத்திரன இந்த முறியடிப்பில் முக்கிய பங்கு வகித்தவர். அப்போது மேஜராக இருந்த அவரது தலைமையிலான 2வது கொமாண்டோ படைப்பிரிவு தான், காலாற்படையினருடன் இணைந்து மூதூர் பிரதேசத்தில் புலிகளிடம் இழந்த பிரதேசங்களை மீட்டது.

நான்காவது கட்ட ஈழப்போரின் முக்கியமான ஒரு விடயம், விடுதலைப் புலிகளின் ஆட்டிலறிகள் கிழக்கிற்கும் பரவலாக்கப்பட்டது தான்.

122 மி.மீ, 130 மி.மீ, 152 மி.மீ ஆட்டிலறிகளை விடுதலைப் புலிகள் திருகோணமலையிலும், மட்டக்களப்பிலும் நிறுத்திச் சண்டையிட்டது ஈழப்போர் வரலாற்றில் அதுவே முதல்முறை.

புலிகள் திருகோணமலைத் துறைமுகம், கடற்படைத் தளங்கள் மீது ஆட்டிலறிக் குண்டுகளை பொழிந்தபோது. அரசாங்கம் ஆடிப் போனது உண்மை.

அதுபோலவே இன்னொரு விடயம், விடுதலைப் புலிகளின் விமானப்படை.

சில இலகுரக விமானங்களை வைத்து, வான் ஆதிக்கத்திலும் பலமான நிலையில் இருப்பதாக ஏற்படுத்திக் கொண்ட பிம்பம், அரசின் போர்த்திட்டத்தில் கணிசமான தாக்கங்களை ஏற்படுத்தியது. இன்றுவரை உலகில் அரசு இல்லாத அமைப்பு ஒன்று விமானப்படையை வைத்திருந்து, குண்டுகளை வீசியதான வரலாறு பதிவாகவில்லை. நவீன தொழில்நுட்பங்கள் வளர்ந்து வரும் நிலையில், இனிமேல் உலகில் வேறெங்கும் அப்படியொரு வரலாற்றுப் பதிவு உருவாகும் என்று எதிர்பார்ப்பதும் கடினம். நான்காவது கட்ட ஈழப்போர், இரண்டு தரப்புமே நவீன தொழில்நுட்பங்களையும், தந்திரோபாயத் தாக்குதல்களையும் கொண்டதாகவே தொடங்கியது. இருதரப்புமே, மரபுவழிப் படையணிகளைக் கொண்டிருந்த போதிலும், மரபுசாரா முறைகளில் சண்டைகளை நடத்தவே விரும்பினர்.

புலிகளைப் பலவீனப்படுத்த இராணுவத்தரப்பு, கெரில்லா பாணியில் தாக்குதல்களை நடத்தியது.

தமது பக்க சேதங்களைக் குறைத்து, படைபலத்தைக் கட்டிக்காக்க புலிகளும் அதனை விரும்பினர்.

ஈழப்போர்- 4 கிட்டத்தட்ட ஒரு ஆட்டிலறிகள், மோட்டார்களின் யுத்தமாகவே இருந்தது.

ஈழப்போர் வரலாற்றில் முன்னொருபோதும் இல்லாதளவுக்கு இந்த பீரங்கிச் சமர் அமைந்தது.

போரிடும் தரப்பினருக்கு ஏற்பட்ட சேதங்கள் பற்றிய புள்ளிவிபரங்களில் இருந்து இதன் தாக்கத்தை உணர்ந்து கொள்வது இலகுவானது.

சுபத்ரா

புலிகளைச் சமபல நிலைக்கு உயர்த்திச் சென்ற ஈழப்போர்-3

ஈழப்போர் -1, 1983 தொடக்கம் 1987 வரை 4 ஆண்டுகளும், இந்திய – புலிகள் போர் 1987 தொடக்கம் 1990 வரை சுமார் இரண்டரை ஆண்டுகளும், ஈழப்போர் -2, 1990 தொடக்கம் 1994 வரையான கிட்டத்தட்ட நான்கரை ஆண்டுகளும், ஈழப்போர் -4, 2006 தொடக்கம் 2009 வரையான சுமார் 3 ஆண்டுகளும் நீடித்தது. ஒரு வகையில் சொல்லப் போனால், இருதரப்பையுமே முடிவில் களைப்படைய வைத்த போர் என்றால் அது, ஈழப்போர் -3 தான். கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகளாக நடந்த போர், மக்களையும் சரி போரில் ஈடுபட்ட தரப்பினரையும் சரி சலிப்படைய வைத்தது. கொழும்பில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தை விடுதலைப் புலிகள் சாதகமாக அணுகியதற்கு இதுவும் ஒரு காரணம்.

ltte artleryசெப்ரெம்பர் 11 தாக்குதலுக்குப் பின்னர், ஏற்பட்ட சர்வதேச அரசியல் சூழல் தான், விடுதலைப் புலிகளை ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்துடன் பேச வைத்ததாக கருதப்பட்டாலும், நீண்டபோரில் ஏற்பட்ட ஒரு சலிப்புணர்வு அதற்கு முக்கிய காரணம் என்பது மறுக்கமுடியாதது. ஈழப்போர் -3 தான் விடுதலைப் புலிகளை தோற்கடிக்க முடியாத சக்தியாக உலகினால் உணர வைத்தது. இந்த ஏழு ஆண்டுகாலப் போர் ஒருபோதும், தொடர்ச்சியாக எந்தவொரு பக்கத்துக்கும் சாதகமானதாக அமைந்து கொள்ளவில்லை.

இதுவரை பார்க்கப்பட்ட மூன்று கட்டப் போர்களையும் விட, போரில் ஈடுபட்ட தரப்பினருக்கு, குறிப்பாக அரசபடையினருக்கு மிக மோசமான இழப்புகளை ஏற்படுத்தியது மூன்றாவது கட்ட ஈழப்போர் தான். முன்னைய போர்களில் இருந்து இது வித்தியாசமான பரிமாணத்தை அடைந்திருந்தது. காரணம் விடுதலைப் புலிகள் மரபுவழிப் படையணிகளைக் கொண்ட ஒரு இராணுவமாக மாறியது இந்தக் காலகட்டத்தில் தான்.

சந்திரிகா குமாரதுங்க அரசாங்கத்துடன் நடத்தப்பட்ட பேச்சுக்கள் பூநகரிப் படைத்தளத்தை விலக்கிக் கொள்ளும் விவகாரத்தில் முட்டுக்கட்டை ஏற்பட்டு, முறிந்து போன நிலையில், விடுதலைப் புலிகளே போர்நிறுத்த உடன்பாட்டில் இருந்து விலகிக் கொள்ளப் போவதாக அறிவித்தனர். திருகோணமலைக் கடற்படைத் தளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரணசுறு, சூரய ஆகிய பீரங்கிப் படகுகளை கடற்புலிகள் தாக்கியழித்ததுடன் ஆரம்பமானது இந்த மூன்றாவது கட்ட ஈழப்போர்.

1995 ஏப்ரல் 19ம் திகதி வெடித்த மூன்றாம் கட்ட ஈழப்போர், 2002 பெப்ரவரி 22ம் திகதி அப்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் போர் நிறுத்த உடன்பாட்டில் கையெழுத்திடும் வரை தொடர்ந்தது. கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகள் இந்தப் போர் நீடித்தது. விடுதலைப் புலிகள் சந்தித்த – இலங்கையில் நடந்த ஐந்து கட்ட போர்களிலும், மிகவும் நீண்டது இது தான்.

ஈழப்போர் -1, 1983 தொடக்கம் 1987 வரை 4 ஆண்டுகளும், இந்திய – புலிகள் போர் 1987 தொடக்கம் 1990 வரை சுமார் இரண்டரை ஆண்டுகளும், ஈழப்போர் -2, 1990 தொடக்கம் 1994 வரையான கிட்டத்தட்ட நான்கரை ஆண்டுகளும், ஈழப்போர் -4, 2006 தொடக்கம் 2009 வரையான சுமார் 3 ஆண்டுகளும் நீடித்தது. ஒரு வகையில் சொல்லப் போனால், இருதரப்பையுமே முடிவில் களைப்படைய வைத்த போர் என்றால் அது, ஈழப்போர் -3 தான். கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகளாக நடந்த போர், மக்களையும் சரி போரில் ஈடுபட்ட தரப்பினரையும் சரி சலிப்படைய வைத்தது. கொழும்பில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தை விடுதலைப் புலிகள் சாதகமாக அணுகியதற்கு இதுவும் ஒரு காரணம்.

செப்ரெம்பர் 11 தாக்குதலுக்குப் பின்னர், ஏற்பட்ட சர்வதேச அரசியல் சூழல் தான், விடுதலைப் புலிகளை ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்துடன் பேச வைத்ததாக கருதப்பட்டாலும், நீண்டபோரில் ஏற்பட்ட ஒரு சலிப்புணர்வு அதற்கு முக்கிய காரணம் என்பது மறுக்கமுடியாதது.

ஓயாத போர், குண்டு வீச்சுகள், ஷெல் தாக்குதல்கள், பொருளாதாரத் தடைகளால் ஏற்பட்ட பின்னடைவுகள், நோய்கள் என்று வன்னியில் விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பிரதேசத்தில் வாழ்ந்த மக்களிடையே சோர்வை ஏற்படுத்தத் தொடங்கியது.

இந்தச் சோர்வு விடுதலைப் புலிகள் மத்தியிலும் ஏற்பட்டிருக்க வாய்ப்புகள் உள்ளன.

அந்தச் சூழலைச் சமாளித்துக் கொள்ள – தற்காலிக நிம்மதியை ஏற்படுத்திக் கொடுக்க ஒரு ஓய்வு தேவைப்பட்டது.

சர்வதேச அரசியல் சூழமைவுகளும், கொழும்பின் ஆட்சிமாற்ற அறிகுறிகளும் சாதகமாக அமைந்து போனது விடுதலைப் புலிகளுக்கு அதிஷ்டமே.

ஆனால், இந்த அதிஷ்டமே பின்னர், துரதிஷ்டமாகவும் மாறியது.

விடுதலைப் புலிகளின் பெருந்தோல்விக்கு இந்த தற்காலிக அமைதியே வழிவகுத்தது என்பதையும் மறுக்க முடியாது.

ஈழப்போர் -3 தான் விடுதலைப் புலிகளை தோற்கடிக்க முடியாத சக்தியாக உலகினால் உணர வைத்தது. இந்த ஏழு ஆண்டுகாலப் போர் ஒருபோதும், தொடர்ச்சியாக எந்தவொரு பக்கத்துக்கும் சாதகமானதாக அமைந்து கொள்ளவில்லை.

திருகோணமலையில் பீரங்கிக் கப்பல்கள் மூழ்கடிப்பு, குறிப்பிட்ட சில படைமுகாம்கள் மீதான தாக்குதல்களில் கிடைத்த வெற்றி, வடக்கில் இரண்டு அவ்ரோ விமானங்களை வீழ்த்தியது, வடக்கில் படைநகர்வு முறியடிப்பு போன்ற நடவடிக்கைகளின் மூலம், விடுதலைப் புலிகளின் கை ஆரம்பத்தில் ஓங்கியிருந்தது. ஆனால், அந்த நிலை நீண்டகாலத்துக்கு நிலைக்கவில்லை. வெலிஓயாவில் ஐந்து இராணுவ முகாம்களைத் தாக்கியழிக்கும் புலிகளின் திட்டம் பெரும் தோல்வியாக அமைந்ததுடன், புலிகள் பக்கம் சாந்திருந்த வெற்றி மெல்ல மெல்ல அரசபடைகளின் பக்கம் மாறத் தொடங்கியது. இதன் ஒரு கட்டத்தில் யாழ்ப்பாணத்தைப் புலிகள் இழந்து போனது, அவர்களின் பெரிய பின்னடைவாக மாறியது. இதனால் போரின் மையம் – கட்டளை அமைப்புகள் அனைத்தும் வன்னிக்கு கைமாறியது. இறுதிவரை அந்த நிலையே தொடர்ந்தது.

யாழ்ப்பாணத்தை இழந்த பின்னர், அரசபடைகள் வெற்றி மிதப்பில் இருக்க முல்லைத்தீவு படைத்தளத்தை அடித்து வீழ்த்திய புலிகள் மீண்டும் தமது நிலையைத் தக்கவைத்துக் கொண்டனர். இலங்கையின் வரலாற்றில், இரண்டு மூன்று நாட்களுக்குள், சுமார் 1500 பேருக்கும் அதிகமான போரிடும் தரப்பினர் கொல்லப்பட்ட முதல் தாக்குதலாக அது அமைந்தது. புலிகளின் அந்த வெற்றியை சமனிலைப்படுத்தும் அடுத்த நடவடிக்கையை படைத்தரப்பு தொடங்கியது. முல்லைத்தீவுக்குப் பதிலாக கிளிநொச்சியைப் பிடித்துக் கொண்டது. தொடர்ந்து அது ஏ-9 வீதிக்கான சமராக மாறிய போது, மீண்டும் கிளிநொச்சியைப் புலிகள் பிடித்துக் கொண்டனர். ஆனாலும், தென்முனையில் மாங்குளத்தைக் கடந்து சென்ற அரசபடையினர், ஏ-9 வீதியை முழுமையாகப் பிடித்து விடுவரோ என்று அஞ்சப்பட்ட சூழலில், புலிகள் ஓயாத அலைகள் -3 நடவடிக்கை மூலம் இழந்துபோன பெரும் பிரதேசங்களை கைப்பற்றிக் கொண்டனர். அத்துடன் போரின் போக்கு விடுதலைப் புலிகளுக்கு சார்பாகத் திரும்பியது.

ஆனையிறவுப் பெருந்தளத்தையும் தள்ளிக் கொண்டு முகமாலை வரையும் முன்னேறிய புலிகள், பின்னர் யாழ்ப்பாண நகரின் எல்லை வரை வந்து நின்றனர். அந்த நெருக்கடியில் இருந்து படைத்தரப்பு ஓரளவுக்கு மீண்டு கொண்டாலும், மூன்றாவது கட்ட ஈழப்போர் புலிகளை ஒரு பலமான நிலைக்கே கொண்டு சென்றது. அக்னிகீல என்ற பெயரில் வடக்கில் அரசபடையினர் மேற்கொண்ட படைநகர்வு பெருந்தோல்வியாக முடிந்த போக, மூன்றாவது கட்ட ஈழப்போர் புலிகளை மேலாதிக்க நிலைக்கு கொண்டு சென்றிருந்தது. இந்த மூன்றாம் கட்ட ஈழப்போரில், இலங்கை இராணுவத்தினரின் தரப்பில், 420 அதிகாரிகளும், 9028 படையினருமாக மொத்தம் 9448 பேர் கொல்லப்பட்டதாக கூறுகிறது இராணுவத் தலைமையகத்தின் அதிகாரபூர்வ தகவல். இந்தக் காலகட்டத்தில், 93 அதிகாரிகளும், 2625 படையினருமாக, மொத்தம் 2718 இராணுவத்தினர் காணாமற் போயினர்.

காணாமற்போன படையினரும் கொல்லப்பட்டவர்களாகவே கருதப்படுவதால், ஈழப்போர்-3 இல், இலங்கை இராணுவம் 11,746 படையினரை இழந்துள்ளது. மேலும் இந்தப் போரில், 492 அதிகாரிகளும், 11,906 படையினருமாக, மொத்தம் 12,398 படையினர் படுகாயமடைந்தனர்.

மூன்றாம் கட்ட ஈழப்போரில், 349 கடற்படையினர் கொல்லப்பட்டனர். மேலும், 254 கடற்படையினர் இந்தக் காலகட்டத்தில் விடுதலைப் புலிகளுடனான சண்டைகளில் காணாமற்போயினர். காணாமற்போன படையினரையும் சேர்த்து, இந்த ஏழு ஆண்டுகாலப் போரில், இலங்கைக் கடற்படை, 603 படையினரை இழந்துள்ளது. இந்தப் போரில் படுகாயமடைந்த 241 கடற்படையினரில் 24 பேர் மட்டுமே தொடர்ந்து சேவையாற்றக் கூடிய நிலையில் இருந்தனர். ஏனைய 217 பேரும் ஓய்வுபெற்றுச் செல்லவேண்டிய நிலை ஏற்பட்டது. இலங்கை விமானப்படையும், ஈழப்போர் -3 இல், கணிசமான இழப்புகளை சந்தித்தது.

விடுதலைப் புலிகள் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தி பல விமானங்களை வீழ்த்தியதால், ஈழப்போர்களின் வரலாற்றிலேயே அதிக இழப்புகளை இந்தக் காலகட்டத்தில் தான் விமானப்படை சந்தித்தது. 208 விமானப்படையினர் ஈழப்போர் -3 இல் கொல்லப்பட்டதுடன் மேலும் 116 பேர் காயமடைந்தனர். ஈழப் போர் -3 இல் முப்படைகளையும் சேர்ந்த- காணாமற்போனவர்கள் உள்ளடங்கலாக, 12,557 பேர் கொல்லப்பட்டனர். மேலும், 12,755 பேர் இந்தப் போரில் படுகாயமடைந்தனர். இந்தப் போரில் கொல்லப்பட்ட மற்றும் படுகாயமடைந்த படையினரின் எண்ணிக்கை கிட்டத்தட்ட சமமாக உள்ளதைக் காணலாம்.

ஈழப்போர் -1 இல் முப்படையினர் தரப்பிலும் கொல்லப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1031 பேர், காயமடைந்தவர்கள் 180. ஈழப்போர் முப்படையினரின் தரப்பில், 4535 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 2671 பேர் படுகாயமடைந்தனர்.

முதலிரு கட்டப் போர்களிலும், கொல்லப்பட்ட மற்றும் நிரந்தர காயங்களுக்குள்ளானவர்களின் எண்ணிக்கைகளுக்கு இடையில், இருந்த வேறுபாட்டுக்கும், ஈழப்போர் -3இல் இந்தக் கணக்கிற்கும் இடையில் பாரிய வேறுபாட்டைக் காணலாம்.

ஈழப்போர்-1 இல் கண்ணிவெடிகளை மையப்படுத்திய போரில், பெரும்பாலும் மரணங்களே நிகழ்ந்தன, படுகாயங்களுடன் தப்பியோர் மிகக்குறைவு.

ஈழப்போர் -2 துப்பாக்கிகள், கனரக ஆயுதங்களுடன் நடத்தப்பட்ட சமர். அதில், கிட்டத்தட்ட, ஒன்றுக்குப் பாதி என்றளவில் மரணங்களும் நிரந்தர பாதிப்புள்ள காயங்களும் படையினருக்கு ஏற்பட்டன.

ஈழப்போர் -3 ஒரு மரபுரீதியான போராகவே இடம்பெற்றது.

ஆட்டிலறிகளும், மோட்டார்களும் இந்தப் போரில் முக்கிய பங்கெடுத்தன.

இதனால், கொல்லப்பட்ட படையினருக்குச் சமமான எண்ணிக்கையினர், போர்க்களத்தில் இருந்து நிரந்தரமாக அப்புறப்படுத்தப்படும் காயங்களுக்கு உள்ளாகினர். விடுதலைப் புலிகள் தரப்பில், இந்தக் காலகட்டத்தில், 1995இல் 1508 பேரும், 1996இல், 1380 பேரும், 1997இல், 2112 பேரும்,1998இல், 1805 பேரும், 1999இல் 1549 பேரும், 2000இல், 1973 பேரும், 2001இல் 761 பேரும் உயிரிழந்தனர். விடுதலைப் புலிகள் தரப்பில் மூன்றாவது கட்ட ஈழப்போரில் மொத்தம் 11,088 பேர் உயிரிழந்ததாக கூறுகிறது அதிகாரபூர்வ தகவல்.

ஆக,

இருதரப்பிலும் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களின் படி, மூன்றாவது கட்ட ஈழப்போரில், ஏற்பட்ட மரணங்களுக்கு இடையில் மிகப்பெரிய வேறுபாடுகள் இல்லை என்பதைக் காணலாம்.

மூன்றாம் கட்ட ஈழப்போரில் முக்கியமான இரண்டு விடயங்கள் கடற்புலிகளும், ஆட்டிலறிகளும். புலிகளின் இந்த இரண்டு பிரிவுகளும் இந்தக் காலகட்டத்தில் தான் அசுரத்தனமான வளர்ச்சி கண்டன. அது அரச படையினரை பெரிதும் நெருக்கடிக்குள்ளாகியது மட்டுமன்றி போரின் போக்குகளையும் திசைமாற்றி விட்டிருந்தது.

****

புலிகளை மரபுவழிச் சமர்களுக்கு தயார்படுத்திய ஈழப்போர் – 2

இரண்டாம் கட்ட ஈழப்போர் பரந்தளவிலான சமர்கள், சண்டைகளைக் கொண்டதாகவே இருந்தது. அவ்வப்போது வழிமறிப்புச் சண்டைகளுடன் நடந்து வந்த இந்தப் போர் 1991 ஜுலையில் ஆனையிறவுத் தளம் மீது புலிகள் நடத்திய முற்றுகைச் சமருடன் புதிய கட்டத்துக்கு நகர்த்தப்பட்டது. அந்த முற்றுகையை உடைக்க, படைத்தரப்பு மேற்கொண்ட ‘ஒப்பரேசன் பலவேகய‘ என்ற நீண்ட படை நடவடிக்கை, இரண்டு மரபுவழி இராணுவங்களின் சமராக அதை எடைபோட வைத்தது. அப்போது விடுதலைப் புலிகள் தம்மை ஒரு மரபுவழிப் படையைக் கொண்ட இராணுவமாக உரிமை கோரியிருந்தாலும், அது ஒரு அரைநிலை மரபுவழிப் படையாகவே செயற்பட்டது என்பதே உண்மை.

ஏனென்றால், விடுதலைப் புலிகளிடம், அப்போது ஒரு மரபுவழி இராணுவத்துக்குரிய படைபலமோ, ஆயுத வளங்களோ இருக்கவில்லை. குறிப்பாக, குறுந்தூர மோட்டார்களும், உள்ளூரில் கவசவாகனமாக மாற்றியமைக்கப்பட்ட புல்டோசர்களும் தான் அவர்களிடம் இருந்தன. ஆனால் மரபுவழி இராணுவம் ஒன்றிடம், நெடுந்தூர ஆட்டிலறிகளும், கவசவாகனங்களும், டாங்கிகளும் இருக்க வேண்டும்.

ltte artlery 3

விரிவான ஆய்வில்,

இந்தியப்படையினரின் வெளியேற்றத்தை அடுத்து, ஒரு சில மாதங்கள் மட்டுமே வடகிழக்கில் அமைதி நிலை நீடித்தது. இந்தியப்படையினரின் வெளியேற்றத்தின் யாழ்.குடாநாட்டையும், வடக்கின் பெரும்பாலான பகுதிகளையும் விடுதலைப் புலிகள் தமது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர். பிறேமதாச அரசுடன் நடத்தப்பட்ட பேச்சுக்கள் மெல்ல மெல்ல முறிந்து, மீண்டும் தொடங்கியது யுத்தம்.

1990 ஜுன் 10ம் திகதி மட்டக்களப்பில் தொடங்கிய மோதல் தான் ஈழப்போர் -2 ஆக வெடித்தது. முதலாம் கட்ட ஈழப்போரிலும், இரண்டாம் கட்ட ஈழப்போரிலும், விடுதலைப் புலிகள் முழுமையாக கெரில்லாப் போரையே நடத்தினர். ஆனால், இரண்டாம் கட்ட ஈழப்போர் விடுதலைப் புலிகளை ஒரு அரை மரபுவழிப் படையாக மாற்றியது.
கிழக்கில் முற்றிலும் கெரில்லாப் போரை நடத்திய விடுதலைப் புலிகள், வடக்கில், இராணுவ முகாம்களை சுற்றிவளைத்து, படையினரை முடக்கினர்.

கிழக்கில் புலிகளும் படையினரும், ஒருவரையொருவர் பதுங்கித் தாக்குவதையும் தப்பி ஓடுவதையும் வழக்கமாக்கிக் கொள்ள, வடக்கிலோ அதற்கு நேர் எதிர்மாறான போர் வியூகம் அமைக்கப்பட்டது. படையினரை முகாம்களுக்குள் முடக்கி வைத்திருப்பது, அத்தகைய முகாம்களை தாக்கியழிப்பது என்று புலிகள் செயற்பட்டனர். அதேவேளை, படையினரோ புதிய இடங்களைப் பிடித்து கட்டுப்பாட்டு பிரதேசத்தை விரிவாக்கவும், புலிகளின் தாக்குதலில் இருந்து தமது இருப்பை பாதுகாக்க, அவ்வப்போது முகாம்களுக்கு வெளியே வந்து நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் நிர்ப்பந்திக்கப்பட்டனர். புலிகள் பலமடைந்து வந்ததை உணர்ந்த படைத்தலைமை, அவர்கள் பெருமெடுப்பில் தாக்குதலை நடத்துவதைத் தவிர்ப்பதற்காக, தற்காப்புக்கான தாக்குதல்களை அவ்வப்போது நடத்திக் கொள்ள வேண்டியிருந்தது.

இரண்டாம் கட்ட ஈழப்போர் பரந்தளவிலான சமர்கள், சண்டைகளைக் கொண்டதாகவே இருந்தது. அவ்வப்போது வழிமறிப்புச் சண்டைகளுடன் நடந்து வந்த இந்தப் போர் 1991 ஜுலையில் ஆனையிறவுத் தளம் மீது புலிகள் நடத்திய முற்றுகைச் சமருடன் புதிய கட்டத்துக்கு நகர்த்தப்பட்டது. அந்த முற்றுகையை உடைக்க, படைத்தரப்பு மேற்கொண்ட ‘ஒப்பரேசன் பலவேகய‘ என்ற நீண்ட படை நடவடிக்கை, இரண்டு மரபுவழி இராணுவங்களின் சமராக அதை எடைபோட வைத்தது. அப்போது விடுதலைப் புலிகள் தம்மை ஒரு மரபுவழிப் படையைக் கொண்ட இராணுவமாக உரிமை கோரியிருந்தாலும், அது ஒரு அரைநிலை மரபுவழிப் படையாகவே செயற்பட்டது என்பதே உண்மை. ஏனென்றால், விடுதலைப் புலிகளிடம், அப்போது ஒரு மரபுவழி இராணுவத்துக்குரிய படைபலமோ, ஆயுத வளங்களோ இருக்கவில்லை.

குறிப்பாக, குறுந்தூர மோட்டார்களும், உள்ளூரில் கவசவாகனமாக மாற்றியமைக்கப்பட்ட புல்டோசர்களும் தான் அவர்களிடம் இருந்தன. ஆனால் மரபுவழி இராணுவம் ஒன்றிடம், நெடுந்தூர ஆட்டிலறிகளும், கவசவாகனங்களும், டாங்கிகளும் இருக்க வேண்டும். மரபுப் போர் பாணியில் புலிகள் பல சமர்களைச் செய்திருந்தாலும், இரண்டாம் கட்ட ஈழப்போரில், அவர்கள் முழுமையான மரபுப் போர்ப்பலத்தை பெறவில்லை. ஆனால், இரண்டாம் கட்ட ஈழப்போரில் புலிகளின் கடற்தாக்குதல் பலம், திடீரெனப் பெருகியது படைத்தரப்புக்குப் பெரும் அச்சுறுத்தலான விடயமாக மாறியிருந்தது.

வடக்கில் ஆனையிறவு, சிலாவத்துறை, பூநகரிப் படைத்தளங்கள் மீது விடுதலைப் புலிகள் இந்தக் காலத்தில் நடத்திய பெரும் சமர்கள் இறுதி வெற்றியை அவர்களுக்குக் கொடுக்காத போதிலும், கடல்வழி உதவியின்றி இனிமேல் எந்தவொரு படைத்தளங்களையும் வடக்கில் பாதுகாக்க முடியாது என்ற உண்மையை உணர்த்தியது. மரபுரீதியான தாக்குதல் உத்திகளைக் கையாண்டு புலிகள் நடத்திய இந்தச் சமர்களும், விடுதலைப் புலிகளின் தளங்களை அழிப்பதற்காக படையினர் யாழ்ப்பாணம், வன்னி, மணலாறு பிரதேசங்களில் நடத்திய தாக்குதல் நடவடிக்கைகளும் பெரும் ஆளணிச் சேதங்களை இருதரப்பிலும் ஏற்படுத்தின. இந்த பெருஞ்சமர்களின் போது, இருதரப்பும் பெருமளவிலான வெடிபொருட்களைப் பயன்படுத்தின.

1990 ஜுன் 10ம் திகதி தொடங்கிய இந்த இரண்டாம் கட்ட ஈழப்போர், 1994 நவம்பரில் சந்திரிகா குமாரதுங்க ஜனாதிபதியாகப் பதவிக்கு வந்து, போர் தவிர்ப்பு உடன்பாடு ஒன்று செய்து கொள்ளப்படும் வரை நீடித்தது. கிட்டத்தட்ட மூன்றரை ஆண்டுகள் நீடித்த இரண்டாம் கட்ட ஈழப்போரில், இலங்கை இராணுவத்தின் தரப்பில் 140 அதிகாரிகளும், 3399 படையினருமாக மொத்தம் 3539 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 19 அதிகாரிகளும், 586 படையினருமாக மொத்தம் 605 இராணுவத்தினர் காணாமற்போயினர். காணாமற்போனவர்களும் கொல்லப்பட்டதாகவே தற்போது கணக்கிடப்படுவதால், ஈழப்போர் 2 இல் இலங்கை இராணுவத்தின் தரப்பில் கொல்லப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4144 பேராகும். இந்தக் காலகட்டத்தில், 80 அதிகாரிகளும், 2449 படையினருமாக மொத்தம், 2529 இராணுவத்தினர் படுகாயமடைந்தனர். இந்த எண்ணிக்கை, போரினால் நிரந்தர காயங்களுக்கு உள்ளானவர்களாகும். குணமடைந்தவர்கள் இதில் அடங்கவில்லை.

இரண்டாம் கட்ட ஈழப்போரில், இலங்கைக் கடற்படை தரப்பில் 117 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 136 கடற்படையினர் காணாமற் போயினர். காணாமற் போனவர்களையும் சேர்த்து, கடற்படை இந்தப் போரில் 253 பேரைப் பறிகொடுத்தது. இந்தக் காலகட்டத்தில் மோசமாக காயமடைந்த 74 கடற்படையினரில், ஒரே ஒருவர் மட்டுமு தொடர்ந்து சேவையாற்றக் கூடிய நிலையில் இருந்தார். ஏனைய அனைவரும் ஓய்வுபெற வேண்டிய நிலை ஏற்பட்டது.

கடற்புலிகளின் தாக்குதல்களால், தான் ஈழப்போர் 2 இல் கடற்படை அதிக இழப்புகளைச் சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இலங்கை விமானப்படையும், ஈழப்போர் 2 இல் சில விமானங்களை இழந்தது. அதன் காரணமாகவும், தரையில் போர் நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்ட விமானப்படையினர், புலிகளின் தாக்குதல்களில் சிக்கியதாலும், ஈழப்போர் -2 இல் விமானப்படை தரப்பில் 138 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 68 விமானப்படையினர் படுகாயமடைந்தனர். இரண்டாம் கட்ட ஈழப்போரில் கொல்லப்பட்ட பொலிசார் இந்தக் கணக்குகளில் உள்ளடக்கப்படவில்லை.

ஈழப்போர்- 2இன் தொடக்கத்தில் கிழக்கில் விடுதலைப் புலிகளிடம் சரணடைந்த 300இற்கும் அதிகமான பொலிசார் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும் பொலிசார் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டன, பொலிசாரும் புலிகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் பங்கேற்றனர். இந்த நடவடிக்கைகளின் போது, ஈழப்போர் 2இல் நூற்றுக்கணக்கான பொலிசாரும் கொல்லப்பட்டதுடன், பல நூற்றுக்ணக்கானோர் காயமடைந்தனர். எனினும், அதுபற்றிய சரியான விபரங்கள் அதிகாரபூர்வமாக வெளியிடப்படவில்லை. இந்த மூன்றரை ஆண்டுகாலப் போரில், காணாமற்போனவர்களையும் சேர்த்து, முப்படையினரின் தரப்பில், 4535 பேர் கொல்லப்பட்டனர். மேலும் முப்படைகளையும் சேர்ந்த 2671 பேர் இந்தப் போரில் படுகாயமடைந்தனர். இந்தப் போரில், விடுதலைப் புலிகள் தரப்பில் கொல்லப்பட்டவர்கள் பற்றிய துல்லியமான மதிப்பீடுகள் இல்லாவிட்டாலும், அவர்கள் வெளியிட்ட மாவீரர் பட்டியல் ஒன்றின் படி, 1990இல், 965 பேரும், 1991இல், 1622 பேரும், 1992இல், 792பேரும், 1993இல், 928 பேரும், 1994இல், 378 பேரும், உயிரிழந்ததாக கூறப்பட்டுள்ளது.

இதன்படி, ஈழப்போர் 2ல், விடுதலைப் புலிகள் தரப்பில் 4685 பேர் மரணமாகியுள்ளனர். இது முற்றிலும் சரியான கணக்காக இருக்க வாய்ப்பில்லை. ஒரு தோராயமான கணக்குத் தான். விடுதலைப் புலிகள் தரப்பில் இந்தக் காலகட்டத்தில் காயமடைந்தவர்கள், நிரந்தரப் பாதிப்பை அடைந்தவர்கள் எத்தனை பேர் என்ற விபரமும் இல்லை. அதேவேளை. படைத் தலைமையகம் வெளியிட்ட தகவல்கள் முற்றிலும் சரியானதாக இருக்கும் என்றும் கருதுவதற்கில்லை. எவ்வாறாயினும் இருதரப்பினதும் அதிகாரபூர்வ தகவல்களின் படி, இரண்டாம்கட்ட ஈழப்போரில் கொல்லப்பட்ட படையினர் மற்றும் புலிகளின் எண்ணிக்கை கிட்டத்தட்ட சமமாகவே இருந்துள்ளதை இந்தப் புள்ளிவிபரங்கள் எடுத்துணர்த்துகின்றன.

தீவிர ஈழத்தமிழர் ஆதரவாளர் இயக்குனர் மணிவண்ணன் காலமானார்

Dir Manivannan memoryபிரபல தமிழ் திரைப்பட இயக்குனரும் நடிகருமான மணிவண்ணன் (வயது 59) மாரடைப்பால் சென்னையில் மரணம் அடைந்தார்.

 Dir Manivannan

என் சடலத்தின் மீது புலிக்கொடி போர்த்த வேண்டும்!- மணிவண்ணனின் கடைசி ஆசை

manivannan_1

சென்னை நெசப்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் இருந்தபோது, திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் மரணமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மிகவும் உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த மணிவண்ணன், அறுவை சிகிச்சைக்கு பின்னர் உடல் நலம் தேறியிருந்த நிலையிலேயே இன்று மரணமடைந்துள்ளார்.

நூறாவது நாள், 24 மணி நேரம், கோபுரங்கள் சாய்வதில்லை, அமைதிப்படை என தமிழில் 50 படங்களை இயக்கியவர் மணிவண்ணன். 400 க்கும் அதிகமான படங்களில் நடித்தும் உள்ளார்.

அண்மையில்தான் மணிவண்ணன் இயக்கத்தில் சத்யராஜ் நடித்த அமைதிப்படை-2 படம் வெளியாகி இருந்தது.

திமுக தலைவர் கருணாநிதியின் கதை வசனத்தில், ‘பாலைவன ரோஜாக்கள்’ என்ற படத்தையும் அவர் இயக்கி உள்ளார்.

இதுவரை ஈழத் தமிழருக்காக குரல்கொடுத்து வந்த தலைமகனின் இழப்பு ஈடுசெய்ய முடியாததாகும். அன்னாரது குடும்பத்தினருக்கு ஈழத்தமிழினம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.

பிரபல தமிழ் திரைப்பட இயக்குனரும், நடிகருமான மணிவண்ணன் சென்னையில் இன்று மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 59.

சென்னை நெசப்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் இருந்தபோது, திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் மரணமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை நெசப்பாக்கத்தில் உள்ள ஆர்.வி.ஆர். ஹவுஸ் குடியிருப்பு பகுதியில் மணிவண்ணன் குடும்பத்துடன் வசித்துவந்தார். இன்று பகல் 12 மணிக்கு வீட்டில் இருந்தபோது, முதுகு வலிப்பதாக கூறியவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.. அடுத்த நிமிடம் மயங்கி கீழே சாய்ந்து உயிரிழந்தார்.

குடும்பம்

மணிவண்ணனுக்கு செங்கமலம் என்ற மனைவியும், ரகுவண்ணன் என்ற மகனும், ஜோதி என்ற மகளும் உள்ளனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மிகவும் உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த மணிவண்ணன், அறுவை சிகிச்சைக்கு பின்னர் உடல் நலம் தேறியிருந்த நிலையிலேயே இன்று மரணமடைந்துள்ளார்.

50 படங்களை இயக்கியவர்

கோபுரங்கள் சாய்வதில்லை இவரது இயக்கத்தில் வெளியான முதல் படமாகும். தொடர்ந்து இளமை காலங்கள், இங்கேயும் ஒரு கங்கை, நூறாவது நாள், பாலைவன ரோஜாக்கள், முதல் வசந்தம், ஜல்லிக்கட்டு, சின்னதம்பி பெரியதம்பி, அமைதிப்படை, 24 மணி நேரம், ஆண்டான் அடிமை உள்ளிட்ட பல படங்களை இயக்கி உள்ளார்.

400 க்கும் அதிகமான படங்களில் நடித்தும் உள்ளார்.

அண்மையில்தான் மணிவண்ணன் இயக்கத்தில் சத்யராஜ் நடித்த அமைதிப்படை-2 படம் வெளியாகி இருந்தது.

இவர் இயக்கிய ‘பாலைவன ரோஜாக்கள்’ திமுக தலைவர் கருணாநிதியின் கதை வசனத்தில் வெளியானது.

பாரதிராஜாவிடம் உதவி இயக்குனர்

பிரபல திரைப்பட இயக்குனர் பாரதிராஜாவிடம் சேர்ந்து உதவி இயக்குனராக பணிபுரிந்த மணிவண்ணன், பின்னர் தனியாக திரைப்படங்களை இயக்கத் தொடங்கினார்.

பாரதிராஜா இயக்கத்தில் வெளியான நிழல்கள், டிக் டிக், அலைகள் ஓய்வதில்லை உள்ளிட்ட படங்களுக்கு திரைக்கதையும் எழுதி உள்ளார்.

இறுதிச் சடங்கு

மணிவண்ணனின் மறைவுக்கு தமிழ் திரைப்பட இயக்குனர்கள் மற்றும் நடிகர்இ நடிகைகள் உள்ளிட்ட தமிழ் திரையுலகை சேர்ந்தவர்கள் இரங்கல் வெளியிட்டுள்ளனர்.

நெசப்பாக்கத்தில் உள்ள வீட்டில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு ஏராளமானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.அவரது இறுதி சடங்கு நாளை நடக்கிறது.

Dir Manivannan 2

தீவிர ஈழத்தமிழர் ஆதரவாளர்

ஆரம்பக் காலங்களில் திமுக அபிமானியாக இருந்த மணிவண்ணன், பின்னர் வைகோ மதிமுகவை தொடங்கிய போது அவருக்கு ஆதரவளித்தார்.

தீவிர ஈழத்தமிழர் ஆதரவாளரான மணிவண்ணன், முள்ளிவாய்க்கால இறுதிப்போருக்கு பின்னர், சீமானின் நாம் தமிழர் கட்சி மேடைகளில் முழங்கி வந்தார். மேலும் பல்வேறு ஈழத்தமிழர் ஆதரவு போராட்டங்களிலும் பங்கேற்று வந்தார்.

கோவையை சேர்ந்தவர்

கோவை மாவட்டம் சூலூர் பகுதியை சேர்ந்தவர் மணிவண்ணன். அந்த மண்ணுக்கே உரிய நக்கல், நையாண்டி மணிவண்ணனிடம் தூக்கலாக காணப்படும்.

என் சடலத்தின் மீது புலிக்கொடி போர்த்த வேண்டும்!- மணிவண்ணனின் கடைசி ஆசை

நடிகர் சத்யராஜ் உடன் இணைந் அமைதிப்படை, மணிவண்ணனின் திரையுலக வாழ்வில் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது.

இப்படத்தின் விழா ஒன்றில் பேசிய மணிவண்ணன், ‘’நான் மட்டும் ஈழத்தில் பிறந்திருந்தால் புலிகள் இயக்கத்தில் சேர்ந்து போராளியாகி வீர மரணம் அடைந்திருப்பேன்.

தமிழ்நாட்டில் பிறந்துவிட்டதால், ஈழ உணர்வோடு வாழ்கிறேன். என் மரணத்திற்கு பிறகு சொந்தம் பந்தம் என்று சொல்லிக்கொண்டு ஓடி வருவார்கள். அவர்களிடம் என் உடலை ஒப்படைக்கக்கூடாது.

என் உடம்பை சீமானிடம் ஒப்படைத்துவிட வேண்டும். அவர்தான் இறுதிச்சடங்கு செய்யவேண்டும்.

என் சடலத்தின் மீது விடுதலைப்புலிகள் கொடி போர்த்த வேண்டும். இதுதான் என் கடைசி ஆசை. வேறொன்றுமில்லை’’ என்று கூறினார்.

****

இயக்குநர் மணிவண்ணன் மறைவு கலை உலக பகுத்தறிவுப் போராளி மறைந்தார்!: வைகோ இரங்கல்

காலத்தால் அழியாத காவியங்கள் பலவற்றை இயக்கியவரும், தலைசிறந்த சிந்தனையாளருமான மணிவண்ணன் மறைந்தார் என்ற செய்தி பேரிடியாகத் தாக்கிற்று. தாங்க முடியாத அதிர்ச்சிக்கும், துயரத்துக்கும் ஆளானேன்.

எழுத்திலும் பேச்சிலும், அனைவரையும் வசீகரிக்கும் பேராற்றல் பெற்ற மணிவண்ணன், நடிகராகவும் முத்திரை பதித்தார்.

தமிழ் இன மீட்சிக்காகத் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்ட கலை உலகப் போராளி மணிவண்ணன், தமிழ் ஈழ விடுதலைப்புலிகளுக்காகத் துணிச்சலுடன் ஆதரவுக்குரல் எழுப்பி வந்தார். தமிழ் ஈழ விடுதலைக்கான பயணத்தில் இன்னும் அளப்பரிய பணிகளைச் செய்யும் எண்ணமும், திறமும் கொண்டு, இந்த இலட்சிய ஏந்தல் உழைத்திடும் வேளையில், இயற்கை அவரைப் பறித்துக் கொண்டதை எண்ணுகையில், வேதனை மேலிடுகிறது.

திராவிட இயக்கத்தில் சோதனைகளை எதிர்கொண்டு நான் போராடியபோது, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் உருவான தொடக்க காலத்தில், இயக்குநர் மணிவண்ணன் எழுத்திலும், மேடைப் பேச்சிலும், தோள்கொடுத்துத் துணைநின்று, ஆதரித்த பண்பும் பாங்கு, என்றும் என் எண்ணத்தில் நிலைத்து இருக்கும். ஆண்டுகள் பலவாக அவருடன் பழகிய உன்னதமான நாள்களை நான் எப்படி மறக்க முடியும்?

அவரது மறைவு, பகுத்தறிவு இயக்கத்துக்கு, கலை உலகுக்கு, தமிழ் ஈழப் போர்க்களத்துக்கு ஈடு செய்யவே முடியாத பேரிழப்பாகும்.

அவரை இழந்து கண்ணீரில் பரிதவிக்கும் அவரது குடும்பத்தினருக்கும், உற்றார் உறவினர்களுக்கும், அவரை நேசிக்கும் அனைத்துத் தமிழ் உள்ளங்களுக்கும், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கண்ணீரைக் காணிக்கை ஆக்குகின்றேன்.

‘தாயகம்’ வைகோ
சென்னை – 8 பொதுச்செயலாளர்
15.06.2013 மறுமலர்ச்சி தி.மு.க.
****
கனடாவில் இனமான இயக்குனர் மணிவண்ணன் அவர்களின் இரங்கல் நிகழ்ச்சி.
Dir Manivannan 3

தமிழ் மக்களின் விடிவிற்காக, தமிழ் தேசமொன்றின் மீள்வருகைக்குமாக உழைத்த ஒரு உன்னத மனிதரை தமிழினம் 15.06.2013 அன்று இழந்துவிட்டது.

இவரின் இரங்கல் நிகழ்வு கனடாவில் நடைபெறும் விபரம் பின்வருமாறு.

இடம்: கனடா கந்தசாமி கோவில் – 733 Birchmount Rd, Scarborough, Ontario
காலம்: ஜுன் 17, ஞாயிறு மாலை 5 மணி.

ஈழத் தமிழர்களின் பிரச்சினைக்கு தமிழீழமே தீர்வு என்று வெளிப்படையாகவும் உறுதியாகவும் கூறுபவர். சுயநல வாழ்வு எனும் குறுகிய வட்டத்திற்குள் தனது நீண்ட வாழ்வை சிறைப்படுத்திக் கொள்ளாமல் உயர்ந்த வாழ்வு வாழ்ந்தார். தனது இனப்பற்றாலும் தேசப்பற்றாலும் தமிழ்ச் சமூக மேன்மைக்காக இறுதிவரை சேவையாற்றினார். ஈழத் தமிழ் மக்கள் விடுதலை அடையவேண்டுமென்ற உயரிய எண்ணத்திற்கு தனது அறிவாற்றல், செயலாற்றல் அனைத்தையுமே ஒருங்கிணைத்து தேசப் பணிபுரிந்தார்.

ஒடுக்குமுறைக்குள்ளாக்கப்பட்ட தமிழ் இனத்தின் விடியலிற்காக தனது தேசப்பணியை உறுதியோடு முன்னெடுத்தார். கொடிய நோயினால் இவரது உடல் தளர்ந்து போயிருந்தாலும் உள்ளத்தில் சுதந்திர உணர்வு நிரம்ப இளமை மிடுக்குடன் மிளிர்ந்த இவர் இறுதிவரை தமிழ் மண்ணிலும், மக்களிலும் பற்று மிகுதியுடன் வாழ்ந்தார்.

ஈழத் தமிழர்களின் உரிமைக்கான போராட்டத்தில் சிறீலங்கா இனவெறி அரசு பல்லாயிரம் அப்பாவி தமிழ் மக்களை கண்மூடி தனமாக கொன்று குவித்தது .இவ் விவாகரத்தில் சிறீலங்கா அரசு நடந்து கொள்ளும் விதத்தை கண்டித்து தமிழ் நாட்டில் தனது மூச்சு இருக்கும்வரை ஓங்கி குரல் கொடுத்தார் .தமிழர்களின் உரிமைக்கான போராட்டத்தில் இனமான இயக்குனர் மணிவண்ணன் அவர்களின் அர்ப்பணிப்பு என்றும் அழியாச் சுடர்விளக்காய் எரிந்து நிற்கும்.

”நான் மட்டும் ஈழத்தில் பிறந்திருந்தால் புலிகள் இயக்கத்தில் சேர்ந்து போராளியாகி வீர மரணம் அடைந்திருப்பேன், என் சடலத்தின் மீது விடுதலைப்புலிகள் கொடி போர்த்த வேண்டும். இதுதான் என் கடைசி ஆசை. வேறொன்றுமில்லை” என்று அன்று இனமான இயக்குனர் கூறிய வார்த்தைகள் அவர் தமிழ் ஈழ விடுதலைப் போராட்டத்தின் மீதும் தமிழ் மக்கள் மீதும் வைத்திருந்த உணர்வுகளை கோடிட்டு காட்டுகின்றது.

தமிழருக்கு நிரந்தர தமிழீழ தாயகம் விரைவிலே மலரும் என்ற உறுதியோடு தேசத்தின் விடுதலை மீதும், எமது இனத்தின் பற்றோடும் உறுதியோடும் இறுதி மூச்சு வரை செயற்பட்டு வந்த இனமான இயக்குனர் மணிவண்ணன் அவர்களுக்கு எமது ஆழ்ந்த இரங்கலை இத்துடன் தெரிவிக்கின்றோம்.

இனமான இயக்குனர் மணிவண்ணன் அவர்களின் இழப்பால் துயருறும் குடும்பத்தார், நண்பர்கள் அனைவரின் துயரிலும் நாம் பங்கு கொள்கிறோம்.

மேலதிக தொடர்புகளுக்கு: கனடியத் தமிழர் தேசிய அவை
தொலைபேசி: 416.830.7703
மின்னஞ்சல்: info@ncctcanada.ca
முகநூல்: facebook.com/canadianncct
***

மணிவண்ணன் தமிழ் மக்களுக்காக வீரத்துடன் குரல் கொடுத்த மாமனிதன் – யாழ்ப்பாண மக்கள் பேரவை
ஜூன் 16, 2013

தமிழ்த் தேசிய உணர்வாளரும் தமிழீழ விடுதலைப் போராட்ட ஆதரவாளரும் தமிழ் மக்களில் அக்கறையுடையவருமான மணிவண்ணன் அவர்கள் திடீர் மரணமடைந்த செய்தி யாழ்.குடாநாட்டு மக்களை ஆழ்ந்த துயரமடைய வைத்துள்ளதாக யாழ்ப்பாண மக்கள் பேரவை தெரிவித்துள்ளது.

தமிழ் மக்கள் இக்கட்டான சூழ்நிலையில் சிக்கித் தவிக்கின்ற இந்த நேரத்தில் தமிழ் மக்களுக்காக வீரத்துடன் குரல் கொடுத்த மாமனிதன் ஒருவர் இன்று எங்கள் மத்தியில் இல்லை என்பதை நினைக்க எங்கள் உள்ளம் அழுகிறது. இவரின் இழப்பை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றும் மேற்படி பேரவை தெரிவித்துள்ளது.

ஈழத் தமிழ் மக்களுக்காக இந்தியாவிலும் புலம்பெயர் நாடுகளிலும் குரல் கொடுத்த மணிவண்ணன் அவர்களுக்கு தமது கண்ணீர் அஞ்சலிகளைக் காணிக்கையாக்குவதாக தெரிவித்துள்ள குடாநாட்டு மக்கள் பேரவை, அவரின் இழப்பால் துயருற்றிருக்கும் குடும்பத்தினரின் துயரத்தில் தாங்களும் பங்கெடுப்பதாகவும் தெரிவித்துள்ளது. அத்துடன் அன்னாரின் இழப்பால் ஆழ்ந்த கவலையடைந்திருக்கும் திரை ரசிகர்களுக்கும் தமிழக அரசியல்வாதிகளுக்கும் யாழ்ப்பாண மக்கள் பேரவை தமது அனுதாபங்களையும் தெரிவித்திருக்கின்றது.

மணிவண்ணன் மரணித்த செய்தி அறிந்த யாழ்ப்பாண மக்கள் பேரவை அவருக்கு வணக்கம் தெரிவித்து நேற்று சனிக்கிழமை இரவு வெளியிட்ட அஞ்சலிச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

சிங்கள இனவெறியர்களின் கடும்போக்குவாதத்திற்குள் சிக்கித் தவித்த தமிழ் மக்களை சிங்களத்தின் பிடியிலிருந்து மீட்க வேண்டுமென்று பெரும் விருப்பு கொண்டு செயற்பட்ட அமரர் மணிவண்ணன் அவர்கள் திடீர் மரணமடைந்த செய்தியானது எங்களை ஆழ்ந்த கவலையடைய வைத்துள்ளது. ஈழத்தமிழ் மக்களுக்காக குரல்கொடுத்த மாமனிதன் ஒருவர் இன்று எங்கள் மத்தியில் இல்லை என்பதை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

தான் ஒரு திரைப்படத் தயாரிப்பாளராக இருந்த போதிலும் சினிமாவிற்கு அப்பால் ஈழத்தமிழ் மக்களை நேசித்த பெருமனிதன். தொப்புள்கொடி உறவுகளான ஈழத் தமிழ் மக்கள் சிங்களவர்களால் சின்னாபின்னப்படுத்தப்பட்டமை கண்டு அவர் பொங்கியெழுந்தார். தமிழ் மக்களுக்கு விடுதலை வேண்டுமென்று உரத்த குரல் எழுப்பினார்.

மணிவண்ணன் அவர்களின் சிந்தனைகள் ஏனையோரை விட அவரை வித்தியாசமான மனிதனாக மாற்றியது. அவர் எமது தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தை ஆதரித்தார். தமிழ் மக்களைப் போன்று தமிழீழ விடுதலைப் புலிகளையும் அவர் ஆழமாக நேசித்தார். தான் இறந்தால் தனது உடலுக்கு தமிழீழ தேசியக் கொடியாகிய புலிக்கொடி போர்த்துமாறு அவர் புலம்பெயர் சமூகத்தினர் முன் உரையாற்றும் போது உணர்ச்சிப் பெருக்கோடு கூறியமையானது அவரின் போராட்ட ஆதரவையும் தமிழ் மக்கள் மீதான அன்பையும் வெளிப்படுத்தியிருந்தது.

இந்த வேளையில் தமிழ்த் தேசிய உணர்வாளர்கள் எங்களை விட்டுப் பிரிவது எங்களுக்கு பெரும் இழப்பாகும். அதிலும் மணிவண்ணன் அவர்களின் இழப்பானது அவரின் குடும்பத்தினரையும் உறவினர்களையும் போன்று தமிழ் மக்களுக்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பாகும்.

மணிவண்ணன் அவர்கள் எந்த இலட்சியத்தை நேசித்தாரோ, அவர் தமிழ் மக்கள் தொடர்பாக எத்தகைய நிலைப்பாட்டைக் கொண்டிருந்தாரோ அந்த இலட்சியங்களையும் அவரின் சிந்தனைகளையும் நிறைவேற்றுவதே நாம் அவருக்கு செய்கின்ற இறுதி வணக்கமாகும்.

“இலட்சிய வீரர்கள் வீழ்வதுமில்லை. தமிழரின் போராட்டம் தோற்பதுமில்லை”

தமிழ் மக்கள் பேரவை.
யாழ்ப்பாணம்.
15.06.2013

வன்னியில் விடுதலைப்புலிகளின் ‘நிழல் அரசு’ – விளக்கும் நூல்

A fleeting moment in my country

சிறிலங்காவில் ஈழத்தமிழர்களின் தாய்நாடான வடக்கு கிழக்கின் ஒருபகுதி தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த காலப்பகுதியில் இடம்பெற்ற விடயங்கள் தொடர்பாக இந்த நூல் [A fleeting moment in my country: the last years of the LTTE de-facto state by N. Malathy] விளக்குகிறது.

இந்நூல் பற்றியதான அறிமுகம் Links International Journal of Socialist Renewal என்னும் தளத்தில் Chris Slee எழுதப்பட்டுள்ளது.

« ஒரு நாடானது பௌதீக ரீதியான அழிவுகள், ஆட்சிக் கட்டமைப்பில் ஏற்பட்ட அழிவுகள், மக்கள் ஒட்டுமொத்தமாக அழிவுகளைச் சந்தித்தமை, படுகொலைகள் என எல்லாவிதமான அழிவுகளையும் நேரில் பார்க்காதவர்களால் இதனைக் கற்பனை செய்து கொள்ள முடியுமா? இவ்வாறான ஒட்டுமொத்த அழிவுகளையும் ஒரே நேரத்தில் ஒரு நாடு பெற்றுக் கொண்டது முன்னைய வரலாற்றில் நடைபெற்றதா? ஏனெனில் எனது நாடானது இவ்வாறான அழிவுகளைச் சந்தித்த போதும், இந்த நாடு தொடர்பாக இந்த நாட்டின் சொந்த மக்களின் மனங்களில் மட்டுமே காணப்படுகிறது. ஆனால், இந்த நாடானது பூகோள நாடுகளால் இன்னமும் அங்கீகரிக்கப்படவில்லை »

இந்த நூலானது [A fleeting moment in my country: the last years of the LTTE de-facto state by N. Malathy] அதன் ஆசிரியரான என்.மாலதியினுடைய, சிறிலங்காவின் வடக்கு கிழக்கில் அமைந்துள்ள தமிழர்களின் தாய்நாடு தொடர்பாகக் கூறுகிறது.

சிறிலங்காவில் ஈழத்தமிழர்களின் தாய்நாடான வடக்கு கிழக்கின் ஒருபகுதி தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த காலப்பகுதியில் இடம்பெற்ற விடயங்கள் தொடர்பாக இந்த நூல் விளக்குகிறது.

தமிழீழ விடுதலைப் புலிகள் எவ்வாறு தமது தாய்நாட்டின் ஒருபகுதியை ஆட்சி செய்தார்கள், இவர்களது ஆட்சியின் கீழ் எந்த வகையான சமூகம் கட்டியெழுப்பப்பட்டது என்பது தொடர்பாக இதில் ஆராயப்படுகிறது.

மே 2009ல் தமிழீழ விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்ட போது, அவர்களின் கட்டுப்பாட்டிலிருந்த சமூகம் எவ்வாறு சிறிலங்கா இராணுவத்தின் ஆக்கிரமிப்பின் போது அழிக்கப்பட்டது என்பதை இந்த நூல் விளக்குகிறது.Dr_N_Malathy

நியூசிலாந்தில் வாழும் மாலதி, புலம்பெயர் ஈழத்தமிழ் சமூகத்தின் உறுப்பினராவார்.

சிறிலங்கா அரசாங்கத்திற்கும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் பெப்ரவரி 2002ல் போர்நிறுத்த உடன்படிக்கை எட்டப்பட்டது. 2002 பிற்பகுதியில், பெரும்பாலான புலம்பெயர் தமிழர்கள் வடக்கு கிழக்கு தமிழர் தாயகப் பகுதிக்குச் சென்றது போன்று மாலதியும் தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குச் சென்று அங்கு ஆறு வாரங்கள் வரை தங்கியிருந்தார்.

இதன் பின்னர், 2004ல் மீண்டும் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குச் சென்ற மாலதி அங்கே மூன்று மாதங்கள் வரை தங்கியிருந்தார். இதனைத் தொடர்ந்து 2005ல் மீண்டும் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குச் சென்ற இவர் போர் முடியும் வரை நிரந்தரமாகத் தங்கியிருந்தார். இவர் புலிகளின் தலைநகரமாகக் காணப்பட்ட கிளிநொச்சியில் தங்கியிருந்தார்.

மாலதி, வன்னியில் தங்கியிருந்த காலப்பகுதியில், வடக்கு கிழக்கு மனித உரிமைச் செயலகம், தமிழீழ விடுதலைப் புலிகளின் சமாதானச் செயலகம், பெண்கள் மற்றும் ஆதரவோற்றோர் விடுதி போன்ற பல்வேறு அமைப்புக்களில் பணியாற்றினார்.

போர் தீவிரமடைந்த காலப்பகுதியான 2008ல் ஏனைய மக்களைப் போன்று மாலதியும் கிளிநொச்சியை விட்டு இடம்பெயர வேண்டியேற்பட்டது. இதன் பின்னர் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்து மார்ச் 2009ல் வெளியேறிய மாலதி சில மாதங்கள் வரை சிறிலங்கா அரசாங்கத்தால் நிர்வகிக்கப்பட்ட தடுப்பு முகாமொன்றில் தங்கியிருக்க வேண்டியேற்பட்டது.

மாலதி, தான் நேரில் பார்த்த தனது தாய்நாடு சந்தித்த அழிவுகள் தொடர்பாக விளக்கி எழுதியுள்ள நூலில், போர்நிறுத்த உடன்பாடு எட்டப்பட்ட காலப்பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் தனது வாழ்வு தொடர்பாக இவர் எழுதிய பகுதி எனக்கு மிகவும் பிடித்துள்ளது.

சிறிலங்கா அரசாங்கத்தின் செயற்பாடுகள் பலவற்றை புலிகள் அமைப்பு நடாத்தியிருந்தது. விடுதலைப் புலிகள் அல்லது இதன் தலைமையின் கீழ் செயற்பட்ட பல நிறுவனங்கள், தமிழ் மக்களின் சுகாதாரம், வேலைக்குச் செல்லும் பெற்றோரின் பிள்ளைகளைக் கவனித்தல், தாய் தந்தையரை இழந்த பிள்ளைகளைப் பராமரித்தல், சமூக நலத்திட்டங்கள் எனப் பல்வேறு சேவைகளை வழங்கின. தமிழீழ விடுதலைப் புலிகள் தமக்கென்று தனியாக நீதிமன்றங்கள் மற்றும் காவற்துறையைக் கொண்டிருந்தன.

போர் இடம்பெற்ற காலப்பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகள், பின்தங்கிய பிரதேசங்களில் சுகாதார நலச் சேவைகளை விரிவுபடுத்தியிருந்தனர். போர்நிறுத்த உடன்படிக்கை கைச்சாத்திட்டதன் பின்னர், மக்களின் ஆரோக்கியத்தைப் பேணும் விதமாக சுகாதார சேவைகள் மேலும் விரிவுபடுத்தப்பட்டன. அழிவடைந்த மருத்துவமனைகள் சில மீளக்கட்டப்பட்டன.

புலம்பெயர் தமிழ் சமூகத்தைச் சேர்ந்த மருத்துவத் துறைசார் வல்லுனர்கள், தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு சென்று இலவச சிறப்பு மருத்துவ சிகிச்சைகளை வழங்கினர். குறிப்பாக போரில் காயமடைந்தவர்களுக்கு செயற்கை முறையான அறுவைச் சிகிச்சைகளை மேற்கொண்டனர்.

போர் நிறுத்த காலத்தில், தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் சிறிலங்கா அரசாங்கத்தின் பொதுத் திணைக்களங்கள் பல தொடர்ந்தும் பணியாற்றின. உள்ளுர் மட்டத்தில், தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களால் தலைமை தாங்கப்பட்ட நிறுவனங்களுக்கும் சிறிலங்கா அரசாங்கத் திணைக்களங்களுக்கும் இடையில் நெருங்கிய தொடர்பும் ஒத்துழைப்பும் பேணப்பட்டது. குறிப்பாக சுகாதார சேவையில் இவ்வாறான ஒத்துழைப்பு காணப்பட்டது.

கல்வித் துறையைப் பொறுத்தளவில் தமிழீழ விடுதலைப் புலிகள் தனியான பாடசாலை முறைமையை உருவாக்க முயற்சிக்கவில்லை, ஆனால் சிறிலங்கா அரசாங்கத்தின் கல்வி முறையில் செல்வாக்குச் செலுத்த முயற்சித்தனர். போர் நிறுத்த உடன்பாடு எட்டப்பட்ட காலப்பகுதியில், ஒவ்வொரு பிள்ளையும் பாடசாலை செல்வதை உறுதிப்படுத்துவதற்காக தமிழீழ விடுதலைப் புலிகள் பொறிமுறை ஒன்றை உருவாக்கியிருந்தனர்.

பாடசாலையை விட்டு விலகியவர்களுக்கு புலம்பெயர் தமிழ் சமூகத்தின் உதவியுடன் பல்வேறு கல்வி நிறுவகங்கள் நடாத்தப்பட்டன. இவற்றுள் குறிப்பாக, தகவற் தொழினுட்ப கல்விச் சேவைகளை வழங்குவதற்கான நிறுவகங்களை தமிழீழ விடுதலைப் புலிகள் தமது கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் நடாத்திவந்தனர். போர் தீவிரம் பெற்றதால் இந்தக் கல்விச் சேவைகள் பாதிப்படைந்தன.

போரின் போது பெற்றோர்களை இழந்த சிறார்கள், மற்றும் போரின் போது காணாமற் போன பெற்றோர்களின் பிள்ளைகள், தமது பிள்ளைகளைப் பராமரிக்க முடியாத பெற்றோர்களின் பிள்ளைகள் என பலதரப்பட்ட ஆதரவற்ற சிறார்களுக்கான சிறுவர் இல்லங்களை தமிழீழ விடுதலைப் புலிகள் தமது கட்டுப்பாட்டின் கீழ் உருவாக்கி நடாத்தினர்.

இவ்வாறான இல்லங்கள் பலவற்றை மாலதி நேரில் சென்று பார்வையிட்டதுடன், இந்த இல்லங்களில் ஒரு இல்லத்தின் மேம்பாட்டுக்காக மாலதி பணியாற்றியிருந்தார். ஏழைப் பெற்றோர்களின் பிள்ளைகளைப் பராமரித்து அவர்களுக்கு உணவு மற்றும் மருத்துவ சேவைகளை வழங்குவதற்கான பகல் பராமரிப்பு இல்லங்களையும் புலிகள் நிறுவியிருந்தனர். வளங்கள் மிக அரிதாகக் கிடைத்த போதிலும், இவ்வாறான இல்லங்களில் வழங்கப்பட்ட சிறுவர் பராமரிப்பு சேவைகள் ‘சிறப்பாக’ காணப்பட்டதாக மாலதி தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்.

போர் நிறுத்த காலப்பகுதியில், தமிழீழ விடுதலைப் புலிகள் தமது கட்டுப்பாட்டின் கீழிருந்த மக்களுக்கு பொது போக்குவரத்து சேவைகள், வங்கிச் சேவைகள் மற்றும் ஏனைய பல சேவைகளை வழங்கியிருந்தனர்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் கீழிருந்த பெண்கள் பல்வேறு சாதனைகளைப் புரிந்ததாக மாலதி கூறுகிறார். புலிகள் அமைப்பில் பெண் போராளிகளுக்கான இராணுவப் பிரிவுகளும் காணப்பட்டன. இவர்கள் மிக உயர்வாக மதிக்கப்பட்டதுடன், இந்தப் பெண் போராளிகள் தன்னம்பிக்கையுடன் வாழ்ந்தனர்.

« பெண்போராளிகளுக்கு வழங்கப்பட்ட பயிற்சிகள் மூலம் இவர்கள் மேலும் முன்னேற்றமடைந்தனர். தமிழ் சமூகத்தில் இந்தப் பெண்கள் கலாசார ரீதியாக மிக இறுக்கமாக வளர்க்கப்பட்டதுடன் இவர்களின் பங்களிப்பானது முதன்மையாகக் கருதப்படவில்லை. ஆனால் இந்தப் பெண்கள் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் இணைந்ததன் பின்னர் அங்கு வழங்கப்பட்ட பயிற்சிகள் மூலம் இவர்கள் இந்தத் தடைகளை உடைத்தெறிந்து மேலும் மெருகூட்டப்பட்டனர். போர்க் களங்களில் இந்தப் பெண்கள் நேரடியாகப் பங்குபற்றியதால் இவர்கள் ஆண் புலி உறுப்பினர்களாலும், பொது மக்களாலும் வியந்து பார்க்கப்பட்டனர் » என மாலதி தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த வன்னியில் வாழ்ந்த பெண்கள் வீட்டுக்கு வெளியே பல்வேறு பொது வேலைத்திட்டங்களில் பங்குபற்றியதாக மாலதி கூறுகிறார். சிறிலங்காத் தீவின் ஏனைய இடங்களை விட வன்னியில் பெண்கள் பொது வேலைகளில் பங்குபற்றுவதை அதிகம் காணமுடிந்ததாக மாலதி கூறுகிறார்.

புலிகள் அமைப்பின் சட்ட முறைமையில் பெண்கள் முதன்மைப் பங்கை வகித்திருந்தனர். « புலிகளின் காவற்துறை, புலிகளின் நீதிமன்றங்களில் பணியாற்றிய சட்டவாளர்கள், நீதிபதிகள் போன்றவர்களில் கிட்டத்தட்ட 50 சதவீதமானவர்கள் பெண் புலிகளாவார் » என மாலதி குறிப்பிட்டுள்ளார்.

புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் ஒரு தனித்தன்மை வாய்ந்த பெண்மைவாதம் நிலவியதாக மாலதி சுட்டிக்காட்டுகிறார். « தமிழீழ விடுதலைப் புலிகளின் பெண் உறுப்பினர்கள், புலிகளால் ஆளப்பட்ட நிறுவனங்களில் பணிபுரிந்த பெண்கள், சுயதொழில்களில் ஈடுபட்ட பெண்கள் போன்றோர் புலிகள் அமைப்பின் பல நிறுவகங்களின் ஊடாக ஒருவருடன் ஒருவர் தொடர்பைப் பேணிச் செயற்பட்டார்கள். இது அங்கு நிலவிய தனித்துவமான பெண்களின் கலாசாரத்தால் ஏற்பட்டதாகும். இந்தப் பெண்கள் வெளிப்படையாக, அடிக்கடி பெண்களுக்கு எதிராக இடம்பெறும் வீட்டு வன்முறைகள் மற்றும் ஏனைய வன்முறைகள் தொடர்பாக கலந்துரையாடினர். இந்தப் பெண்கள் அனைவரும் உதவி தேவைப்படும் பெண்ணுக்காக கைகொடுத்தனர் » என மாலதி தனது நூலில் தெளிவாக விளக்கியுள்ளார்.

புலிகள் அமைப்புடன் இணைந்து கொண்டமைக்கான காரணம் என்ன என்பது தொடர்பாக மாலதி பல பெண் புலிகளிடம் வினவியிருந்தார். தமது குடும்பத்து உறுப்பினர்களைக் கொலை செய்த சிறிலங்கா இராணுவத்திற்கு தண்டனை கொடுப்பதற்காக இந்தப் பெண்கள் தாம் புலிகளுடன் இணைந்ததாக பொதுவாக கூறினார்கள்.

இது தவிர, சிறிலங்கா இராணுவப் படைகளால் தமக்கெதிராக இழைக்கப்படும் வன்புணர்வுகள் மற்றும் பாலியல் சித்திரவதைகளிலிருந்து தப்பிப்பதற்காக தாம் இவ்வாறு புலிகள் அமைப்புடன் இணைந்து கொண்டதாக பலர் கூறினர்.

புலிகள் அமைப்புடன் இணைந்து கொள்வதன் மூலம் இந்தப் பெண்கள் இராணுவத்தால் பாதிக்கப்பட்டவர் என்ற நிலையை அடையாது, வலுமிக்கவர்கள் என்ற நிலையை அடைவதை புலிகள் அமைப்பில் இணைந்து கொண்டதன் மூலம் உணர்ந்தனர். பாரம்பரிய கலாசாரத்திற்கு எதிராக போராடுவதற்கும், வறுமை மற்றும் குடும்பச் சூழ்நிலை காரணமாக ஏற்படும் வன்முறைகளிலிருந்து விடுபடுவதற்காகவும் பெண்கள் புலிகள் அமைப்புடன் இணைந்து கொண்டனர்.

சிறிலங்காத் தீவின் ஏனைய இடங்களில் நிலவி வரும் சாதி தொடர்பான மூடநம்பிக்கைகளை விட புலிகளின் கட்டுப்பாட்டின் கீழிருந்த வன்னியில் சாதிப் பிரச்சினை நிலவியமை ஒப்பீட்டளவில் மிகக் குறைவாகும் என்பதை மாலதி அவதானித்துள்ளார்.

சிறிலங்காவில் போர் நிறுத்தம் உடன்படிக்கை கைச்சாத்திட்ட போது, வன்னியில் ஐ.நா அமைப்புக்கள், அனைத்துலக அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் வேறு பல தொண்டர் அமைப்புக்கள் பணியாற்றின.

வடக்கு கிழக்கு மனித உரிமைகள் செயலகம் மற்றும் புலிகள் அமைப்பின் சமாதான செயலகம் போன்றவற்றில் மாலதி பணியாற்றிய போது, இவர் இந்த அமைப்புக்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டியிருந்தது. இக்காலப்பகுதியில், புலிகளுக்கு எதிராக இந்த அமைப்புக்கள் அரசியல் ரீதியான சில எதிர்ப்புக்களை முன்வைத்தாலும் கூட, இவர்கள் பல பயனுள்ள பணிகளை ஆற்றியிருந்தன என்பது மாலதியின் வாதமாகும்.

18 வயதிற்குக் குறைந்தவர்களை புலிகள் அமைப்பு ஆட்சேர்ப்பு செய்வதாக கூறி இந்த அமைப்புக்கள் புலிகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டன. சிறிலங்கா அரசானது தமிழர்களை அடக்குவதை உணர்ந்த புலிகளின் தலைவர்கள் பலர் தாமாகவே விரும்பி 18 வயதின் முன்னரே புலிகள் அமைப்பில் இணைந்து கொண்டனர். இவர்கள் சிறிலங்கா அரசால் அடக்கப்பட்டதே இதற்கான காரணமாகும். எதுஎவ்வாறிருப்பினும், 18 வயதிற்கு கீழே உள்ளவர்களை தமது அமைப்பில் இணைத்துக் கொள்ளமாட்டோம் என பின்னர் புலிகள் அறிவித்திருந்தனர்.

சிறிலங்காவில் பல்வேறு மனித உரிமை மீறல் சம்பவங்கள் நடைபெற்ற போதும், அவற்றைக் கருத்திலெடுக்காது சிறார்களை ஆட்சேர்ப்புச் செய்வது தொடர்பாக மட்டும் அனைத்துலக அமைப்புக்கள் மற்றும் அரச சார்பற்ற அமைப்புக்கள் முக்கியப்படுத்தியதை மாலதி விமர்சிக்கிறார்.

இவர்கள் அரசியல் ரீதியாக பாரபட்சம் காண்பித்ததாகவும், இந்த அமைப்புக்கள் தமக்கான நிதி சேகரிப்பிற்காக சிறுவர் ஆட்சேர்ப்பு விடயத்தை முதன்மைப்படுத்தியதாக மாலதி குற்றம் சாட்டுகிறார். இந்த விவகாரமானது ஊடகங்களுக்கு கவர்ச்சியைத் தருவதாக ஐ.நா அதிகாரி ஒருவர் தனிப்பட்ட ரீதியாகக் கூறியதாக மாலதி சுட்டிக்காட்டியுள்ளார்.

வடக்கு கிழக்கு மனித உரிமைச் செயலகத்தில் மாலதி பணியாற்றிய வேளையில், சிறிலங்கா இராணுவப் படைகளாலும், அரசாங்கத்திற்குச் சார்பான துணை ஆயுதக் குழுக்களாலும் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல் சம்பவங்களை ஆவணமாக்க உதவினார். படுகொலை செய்யப்பட்ட, காணாமற்போனவர்களின் உறவுகளைச் சந்தித்து மாலதி உரையாடியிருந்தார்.

2002 பெப்ரவரியில் போர்நிறுத்த உடன்பாடு எட்டப்பட்ட பின்னர் இவ்வாறான மனித உரிமை மீறல் செயற்பாடுகள் குறைவடைந்த போதிலும், பின்னர் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியது. சிறிலங்கா அரசாங்கப் படைகள் இவ்வாறான சம்பவங்களில் அதிகம் ஈடுபட்டன. டிசம்பர் 2005ல் மட்டக்களப்பிலுள்ள தேவாலயம் ஒன்றில் நத்தார் பூசையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் கலந்து கொண்ட வேளையில் படுகொலை செய்யப்பட்டார். இது இராணுவப் படைகள் இவ்வாறான கொலைச் சம்பவங்களில் ஈடுபட்டனர் என்பதற்கான ஒரு எடுத்துக்காட்டாகும்.

இதேபோன்று சிறிலங்கா விமானப் படையால் பல்வேறு விமானக் குண்டுத்தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன. சிறிலங்கா வான்படையின், இஸ்ரேல் நாட்டினால் வழங்கப்பட்ட கிபிர் விமானங்களின் உதவியுடன் 2007ல் மீனவக் கிராமம் ஒன்றின் மீதான விமானக் குண்டு வீச்சு சம்பவம் தொடர்பாக வெளிவந்த Kfir Fodder என்கின்ற காணொலியைத் தயாரிப்பதற்கு மாலதி உதவிசெய்திருந்தார்.

சிறிலங்கா விமானப் படையால் பொதுமக்களைக் குறிவைத்து மேற்கொள்ளப்பட்ட கொத்துக் குண்டுத் தாக்குதலை எதிர்த்து மாலதி ஒரு அறிக்கை ஒன்றை எழுதி வெளியிட்டிருந்தார். ஆனால் அனைத்துலக செய்தி நிறுவனங்கள் இந்த அறிக்கையை முதன்மைப் படுத்தவில்லை. இதேபோன்று பொசுபரஸ் குண்டுகளை சிறிலங்காப் படைகள் பயன்படுத்துவதை உறுதிப்படுத்திய போதும், மேற்குலக ஊடகங்கள் இவற்றை அசட்டை செய்திருந்தன.

2006ல், சிறிலங்கா அரசாங்கமானது யுத்த நிறுத்த உடன்படிக்கை அமுலிலிருந்த போது கிழக்கைக் கைப்பற்றுவதற்கான பெருமெடுப்பிலான இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டது. இந்த உடன்படிக்கை உத்தியோகபூர்வமான ஜனவரி 2008 வரை நடைமுறையிலிருந்தது. இவ்வாறான நிலையில், கிழக்கு மற்றும் வடக்கைக் கைப்பற்றுவதற்காக சிறிலங்காப் படைகளால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு வெளிநாட்டு சக்திகள் இராணுவ ரீதியிலான உதவிகளை வழங்கியிருந்தன.

சிறிலங்கா இராணுவத்தினர் கிளிநொச்சியை நோக்கி முன்னேறியபோது, மாலதி உட்பட பொதுமக்கள் அனைவரும் வேறிடங்களுக்கு இடம்பெயர வேண்டியேற்பட்டது. பாதுகாப்பு வலயங்கள் என சிறிலங்கா இராணுவத்தினர் அறிவித்த போதிலும், மக்களைக் குறிவைத்து தொடர்ச்சியான தாக்குதல்களை மேற்கொண்டனர்.

மாலதி, புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்து வெளியேறிய பின்னர், மெனிக் பாம் தடுப்பு முகாமுக்கு அனுப்பப்பட்டார். இவருடன் இந்த முகாங்களில் மேலும் 300,000 வரையானோர் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். இங்கு நிலமை மிக பயங்கரமாயிருந்தது. « நாம் தங்க வைக்கப்பட்ட தடுப்பு முகாமில் காவலில் ஈடுபட்ட சிறிலங்கா இராணுவத்தினர் துப்பாக்கிகளைக் கைகளில் வைத்திருந்தனர். இவர்கள் எங்களை குற்றவாளிகள் போல் நடாத்தினர். இவர்கள் ஆண்கள், பெண்கள், வயது முதிர்ந்தவர்கள் என எவ்வித பாகுபாடுமின்றி தாக்கினர். இந்த இராணுவத்தினருக்கு கோபம் வரும்போதெல்லாம், இவர்கள் தமது சப்பாத்துக்களால் மக்களைத் தாக்கினர் » என மாலதி குறிப்பிட்டுள்ளார். இந்த தடுப்பு முகாங்கள் நெரிசலாகக் காணப்பட்டதுடன், நோய்கள் எளிதில் பரவின.

இவ்வாறு தடுத்து வைக்கப்பட்ட பெரும்பாலான மக்கள் டிசம்பர் 2009ல் விடுவிக்கப்பட்டனர். ஆனால், தமது சொந்த இடங்களுக்கு திரும்பி வந்த பின்னரும் கூட இந்த மக்கள் சிறிலங்கா இராணுவத்தாலும், துணை ஆயுதக்குழுக்களாலும் சித்திரவதை செய்யப்படுகின்றனர்.

இந்த நூலானது மாலதியின் தனிப்பட்ட அனுபவங்கள் மற்றும் அவதானிப்புக்கள் தொடர்பாக விளக்குகிறது. ஆனால், தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டதில் அனைத்துலக சக்திகளின் பங்களிப்பு என்ன என்பது தொடர்பாக மாலதி சுருக்கமாகக் குறிப்பிட்டுள்ளார். உலகின் அதிசக்தி வாய்ந்த நாடுகள் போரின் போது சிறிலங்காவுக்கு உதவி செய்துள்ளன.

« தமிழீழ விடுதலைப் புலிகள், புலம்பெயர் தமிழ் மக்களின் ஆதரவுடன் மட்டுமே போராட்டத்தை நடாத்தினர். இவர்களுக்கு எந்தவொரு வெளிநாட்டு சக்தியும் உதவவில்லை. இதுதவிர, தனது குறிக்கோளை மிக வெற்றிகரமாக நடாத்தி முடிக்கின்ற விவேகத்தை புலிகள் அமைப்பு கொண்டிருந்தது. தமது கோரிக்கையை இவர்கள் உலகுக்கு எடுத்துக் கூறியுள்ளனர். கதவைத் திறப்பதற்கு கற்றுக்கொண்ட செம்மறியாடு போன்று புலிகள் செயற்பட்டனர் » என மாலதி குறிப்பிட்டுள்ளார்.

புலிகள் அமைப்பு தோற்கடிக்கப்பட்டமை தொடர்பில் மாலதி இந்தியா மற்றும் சீனாவின் நோக்கம் தொடர்பாக மாலதி கூறுகிறார். சிறிலங்காவில் தமிழ் மக்களுக்கு தனித் தாய்நாடொன்று வழங்கப்பட்டால் தனது நாட்டில் பாதிக்கப்பட்ட சிறுபான்மை இனத்தவர்களுக்கு தனித் தாய்நாட்டை வழங்க வேண்டி ஏற்படலாம் என இந்தியா கருதியது. « மோசடிகளில் ஈடுபடாத புலிகள் அமைப்பானது, அடக்கப்பட்ட சாதிகள் மற்றும் சிறுபான்மை இனங்களைக் கொண்ட நாடுகளுக்கு அச்சுறுத்தல் சக்தியாக விளங்கியது » என மாலதி கூறுகிறார்.

« மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து இந்திய மாக்கடலின் ஊடாக எண்ணெய் வளத்தைப் பெற்றுக் கொள்ளும் வழங்கற் பாதையைப் பாதுகாப்பதற்கும், அமெரிக்கா மற்றும் நேற்றோ நாடுகள் இந்திய மாக்கடலில் தமது ஆதிக்கத்தை நிலைநாட்டுவதைத் தடுப்பதற்கும் » சீனாவானது சிறிலங்காவின் தெற்கில் அம்பாந்தோட்டை துறைமுகத்தை அபிவிருத்தி செய்து தனது செல்வாக்கை நிலைநிறுத்த வேண்டும் எனக் கருதியது.

அமெரிக்காவால் தலைமை தாங்கப்படும் மேற்குலக நாடுகள் சிறிலங்கா அரசாங்கத்திற்கு ஆதரவளித்தன. சில குறிப்புக்களைத் தவிர, சிறிலங்கா அரசாங்கத்திற்கு மேற்குலகத்தால் வழங்கப்பட்ட இராணுவ உதவிகள் தொடர்பாக இந்த நூல் ஆராயாது என மாலதி குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக மேற்குலக நாடுகளால் மேற்கொள்ளப்பட்ட பரப்புரை தொடர்பாக மாலதி தனது நூலில் ஆராய்கிறார்.

« மேற்குலக நாடுகளால் புலிகளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட பரப்புரை நடவடிக்கையானது புலிகள் அமைப்பின் கொள்கைக்கு அவமதிப்பை ஏற்படுத்தியது. சிறிலங்கா அரசாங்கத்தால் பல பத்தாண்டுகளாக தமிழ் மக்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட அடக்குமுறைகளைப் புலிகள் எதிர்த்து நின்றபோது, இவ்வாறான பரப்புரைகள் புலிகள் தொடர்பாக பொய்யான கருத்தை உருவாக்கியது. இதற்கும் மேலாக, வேறு எந்தவொரு தீர்வுகளும் சாத்தியப்படாது போது, புலிகள் அமைப்பு ஆயுதப் போராட்டத்தை ஆரம்பித்தனர் என்கின்ற கருத்தை மேற்குலகம் தொடர்ச்சியாக மறுதலித்தது » என மாலதி தனது நூலில் சுட்டிக்காட்டியுள்ளார்.

அனைத்துலக அரச சார்பற்ற நிறுவனங்கள் மேற்குலக நாடுகளால் புலிகளுக்கு எதிராக மேற்கொண்ட பரப்புரையின் ஒரு பகுதி என மாலதி கருதுகிறார். குறிப்பாக போர்நிறுத்த உடன்பாடு எட்டப்பட்ட காலப்பகுதியில், அனைத்துலக அரச சார்பற்ற நிறுவனங்கள், புலிகளுக்கு எதிராக சிறுவர் ஆட்சேர்ப்பை முக்கியப்படுத்தி பரப்புரைகளை மேற்கொண்டன. ஆனால் இந்த நிறுவனங்கள் சிறிலங்கா இராணுவத்தால் மேற்கொள்ளப்பட்ட மிகப் பெரிய மீறல்களை அசட்டை செய்து புலிகளின் சிறுவர் ஆட்சேர்ப்பு விவகாரத்தை மட்டும் பெரிதுபடுத்திப் பேசின.

தமிழீழ விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்ட பின்னர், மேற்குலகமானது சிறிலங்கா அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க் கால மீறல்கள் தொடர்பாக தமது விமர்சனங்களையும் அழுத்தங்களையும் முன்வைத்தன. ஆனால் மேற்குலக நாடுகள் தற்போதும் தமிழர்களுக்கான தனித்தாய்நாடை ஏற்றுக் கொள்ளவில்லை.

« தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆட்சிக் காலத்தில், இவர்களது கட்டுப்பாட்டின் கீழிருந்த வன்னியில் வியக்க வைக்கும் சமூக மாற்றங்கள் ஏற்பட்டன. தென்னாசியாவில் புரையோடிப் போயுள்ள சாதி வேறுபாட்டுக் கொள்கையை புலிகள் ஒழித்திருந்தனர். சமூகத்தில் பெண்களுக்கான பங்களிப்பை புலிகள் வரையறுத்தனர். இந்தப் பெண்கள் துணிச்சலுடன் செயற்பட்டனர். சமூக மக்களுக்கு பல்வேறு நலன்புரி சேவைகளை புலிகள் வழங்கினர். போராட்டம் என்பதை தமது ஆன்மாவாகக் கொண்ட மக்கள் அனைவரும் ஒரு குடையின் கீழ் ஒன்றுதிரண்டனர். தமிழ் மக்களுக்கும் தென்னாசியாவுக்கும் நலன் பயக்கும் பல்வேறு சமூக மாற்றங்களைக் கொண்டு வருவதற்காக புலிகள் வேலைத்திட்டங்களை மேற்கொண்டனர். இவ்வாறான பலம் மிக்க, வலுமிக்க மாற்றங்களுக்கு எடுத்துக் காட்டாக விளங்கிய புலிகள் அமைப்பு தற்போது அழிக்கப்பட்டு விட்டது » என மாலதி விளக்குகிறார்.

இந்நிலையில், பெரும்பாலான தமிழ் மக்கள் ஏன் தமிழீழ விடுதலைப் புலிகளை ஆதரித்தனர் என்பதை விளங்கிக் கொள்ளுதல் முக்கியமானதாகும். உலக நாடுகளின் அரசாங்கங்களும் ஊடகங்களும், தமிழீழ விடுதலைப் புலிகளை ‘பயங்கரவாதிகள்’ எனச் சித்தரிக்கின்றன. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவளிப்பதானது ‘பயங்கரவாதம்’ என சித்தரிக்கப்படுகிறது.

விடுதலைப் புலிகள் சில பயங்கரவாத நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தாலும் கூட, சிறிலங்கா அரச பயங்கரவாதத்தால் மேற்கொள்ளப்படும் பயங்கரவாத நடவடிக்கைகளுடன் ஒப்பிடும்போது, அவை மிகச் சொற்பமாகும். எதுஎவ்வாறிருப்பினும், தமிழீழ விடுதலைப் புலிகளின் பெரும்பாலான உறுப்பினர்கள் பயங்கரவாதச் செயற்பாடுகளில் எவ்வித பங்கும் வகிக்கவில்லை. இவர்கள் இனவாத, இனக் கொலை புரியும் ஆட்சிக்கு எதிராக தமது சுதந்திரத்தைப் பெற்றெடுப்பதற்காக போராடினார்கள். புலிகளைப் பயங்கரவாதிகள் எனக் கூறுவதால், அவுஸ்திரேலியாவில் வாழும் தமிழர்கள் மற்றும் அவுஸ்திரேலியாவுக்குச் செல்லும் தமிழ் அகதிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது.

2007ல், புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் உதவித் திட்டங்களை மேற்கொள்வதற்காக நிதி சேகரித்த மூன்று அவுஸ்திரேலியத் தமிழர்கள் கைதுசெய்யப்பட்டு பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டனர். புலிகளுக்கு உதவி செய்ததாக இவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது. 2010ல் இந்தக் குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டனர். ஆனால் அவுஸ்திரேலிய வாழ் தமிழ் சமூகம் மீது இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் தாக்கத்தை உண்டுபண்ணியுள்ளன.

இன்று 50 வரையான தமிழர்கள், அவுஸ்திரேலியாவில் காலவரையறையற்று தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் புலிகள் அமைப்புடன் தொடர்புபட்டதாக குற்றம் சாட்டப்பட்டு, நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தலாம் என்ற முன்னெச்சரிக்கை காரணமாகவே தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலியா அறிவித்திருந்தது.

இவ்வாறானவர்கள் பயங்கரவாதத்திற்கு எவ்விதத்திலும் துணைபோகவில்லை என்பதை காண்பிப்பதற்கு மாலதியினுடைய நூல் உதவுகிறது.

அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி.

தமிழீழ தேசியத் தலைவரின் புரட்சிகர சித்தாந்தம்

anita-prabakaran interview

English Tamil Eelam National Leader Hon.V.Pirapaharan’s revolutionary socialism

Pdf tamil version   Anita Pratap’s interview V.Pirapaharan 1984 TAMIL

இக்கட்டுரையின் முழுக்கருத்திலும் உடன்பாடு இல்லாவிட்டாலும்  தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் சிந்தனையில் உருவான புரட்சிகர சோசலிசத் தமிழீழம் என்ற சித்தாந்தம் காலப்பொருத்தம் கருதி வாசகர்களுக்காக பிரசுரம் செய்கிறோம்.

2002ஆம் ஆண்டு கிளிநொச்சியில் நடைபெற்ற அனைத்துலக செய்தியாளர் மாநாட்டில் திறந்தவெளிப் பொருளாதாரம் தொடர்பாக தமிழீழ தேசியத் தலைவர் தெரிவித்த கருத்தை தூக்கிப் பிடித்துக் கொண்டு சோசலிச சித்தாந்தத்தை தலைவர் அவர்கள் கைவிட்டார் என்று உருத்திரகுமாரன் குழுவினர் கூறுவதுதான் இதில் இன்னும் வேடிக்கையாக உள்ளது.

தேசியத் தலைவரின் பத்திரிகையாளர் மாநாடு பத்தாண்டுகள் நிறைவில் ஒரு பார்வை-காணொளி

சோசலிசம் என்றால் என்ன?

இதற்கு எவ்வாறான வரைவிலக்கணத்தை தமிழீழ தேசியத் தலைவர் அவர்கள் கொடுத்தார்?

திறந்தவெளிப் பொருண்மியக் கொள்கைகள் தொடர்பாக 2002ஆம் ஆண்டு தலைவர் அவர்கள் விடுத்த அறிவித்தல் அவரது சிந்தனையில் உருவான புரட்சிகர சோசலிச சித்தாந்தத்திற்கு முரணானதா?

இவற்றுக்கான பதில்களை நாம் வேறு எங்கும் தேடி அலையத் தேவையில்லை. இவற்றை தலைவர் அவர்களின் உரைகள் – செவ்விகள் போன்றவற்றிலும், தலைவரின் சிந்தனைக்கு தத்துவார்த்த வடிவம் கொடுக்கப்பட்டு தேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களால் எழுதப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் அதிகாரபூர்வ வெளியீடுகளிலும், தலைவர் அவர்களின் தமிழீழ சுதந்திர சாசனமாக விளங்கும் ‘சோசலிசத் தமிழீழம்’ PDF ltte Freedom Charter for Tamil Eelam என்ற ஆவணத்திலும் நாம் காணலாம்.National Leader Hon.V.Pirapaharan’s Freedom Charter for Tamil Eelam

இவை பற்றி நாம் விரிவாக ஆராய்வதற்கு முன்னர் திறந்தவெளிப் பொருண்மியம் தொடர்பாக பொதுவுடமை (கம்யூனிசம்) சித்தாந்தத்தின் தந்தையாக விளங்கும் கார்ல் மார்க்ஸ், சோசலிசப் (சமவுடமை) புரட்சியின் பிதாமகனாக விளங்கும் விலாடிமிர் லெனின் ஆகியோரின் கருத்துக்களை இங்கு சுருக்கமாகப் பதிவு செய்வது பொருத்தமாக இருக்கும்.

திறந்தவெளிப் பொருண்மியம் என்பது இன்று முதலாளித்துவத்தோடு பின்னிப்பிணைந்த ஒன்றாக காணப்படுவது மறுக்க முடியாதது. சந்தை வணிகத்தில் ஆட்சியாளர்களின் தலையீடுகளை எதிர்க்கும் இக்கோட்பாடே மேற்குலகின் தாராண்மை சனநாயக ஆட்சியமைப்புக்களுக்கு அடிநாதமாக விளங்குகின்றது. அதேநேரத்தில் கார்ல் மார்க்ஸ் கனவுகண்ட பொதுவுடமை சமுதாயமாக இருந்தாலும் சரி, லெனின் அவர்களால் தத்துவார்த்த வடிவம் கொடுக்கப்பட்ட சமவுடமைப் புரட்சிச் சித்தாந்தமாக இருந்தாலும் சரி, இவற்றுக்கு அடிநாதமாகவும் திறந்தவெளிப் பொருண்மியக் கோட்பாடே விளங்குகின்றது. இதுதான் அரசியல் சித்தாந்தத்தில் திறந்தவெளிப் பொருண்மியக் கோட்பாடு வகிக்கும் நகைமுரண் வகிபாகமாகும்.

எவ்வளவு தூரத்திற்கு வர்க்க முரண்பாடுகளுக்கும், சுரண்டல்களுக்கும் திறந்தவெளிப் பொருண்மியம் வித்திடுகின்றதோ, அதே அளவிற்கு ஒடுக்கப்படும் மக்களின் புரட்சிக்கு வித்திடும் தன்மையையும் அது கொண்டுள்ளதை கார்ல் மார்க்ஸ் அவர்கள் புரிந்து கொண்டிருந்தார். இதனால்தான் 09.01.1848 அன்று பிறசெல்சில் நடைபெற்ற பிறசெல்ஸ் சனநாயக ஒன்றியத்தின் மாநாட்டில் உரையாற்றும் பொழுது திறந்தவெளிப் பொருண்மியம் தொடர்பாக பின்வருமாறு மார்க்ஸ் அவர்கள் குறிப்பிட்டார்:

“சகோதரத்தின் பெயரில் ஒரே தேசத்திற்குள் எவ்வாறான வகுப்பு வேறுபாடுகளை திறந்தவெளிப் பொருண்மியம் தோற்றுவிக்கின்றது என்பதை நாம் ஏற்கனவே நிரூபித்துவிட்டோம்.

அந்த வகையில் உலகில் உள்ள தேசங்களிடையே முரண்பாடுகளை தோற்றுவிக்கும் தன்மையையே திறந்தவெளிப் பொருண்மியம் கொண்டுள்ளது… இது பழமை
வாய்ந்த தேசங்களிடையே பிளவை ஏற்படுத்தி பாட்டாளி – முதலாளி வர்க்க முரண்பாடுகளை உச்சநிலைக்கு இட்டுச் செல்கின்றது.

ஒற்றை வார்த்தையில் கூறுவதானால் சோசலிசப் புரட்சிக்கு திறந்தவெளிப் பொருண்மியம் வித்திடுகின்றது.

இந்தப் புரட்சிகர எண்ணத்துடனேயே திறந்தவெளிப் பொருண்மியத்தை நான் ஆதரிக்கிறேன்.” இதே கருத்தையே 17.10.1921 அன்று திறந்தவெளிப் பொருண்மியக் கோட்பாடுகளை உள்ளடக்கிய சோவியத் ஒன்றியத்திற்கான புதிய பொருண்மியக் கொள்கைகளை அறிமுகம் செய்து வைத்து உரையாற்றும் பொழுது லெனின் அவர்களும் வெளியிட்டார்.

திறந்தவெளிப் பொருண்மியக் கொள்கைளை அமுல்படுத்துவதன் மூலம் புரட்சிகர பட்டாளி வர்க்கத்தை தோற்றுவித்து அதன் ஊடாக சமூகத்தில் புரட்சிகர பொருண்மிய மாற்றத்தை கொண்டு வரமுடியும் என்பதே லெனினின் கருத்தாக இருந்தது:

“நிகழும் போரில் யார் வெற்றி பெறுவார்கள், எவர் பயனடைவார்கள் என்பதுதான் இப்பொழுதுள்ள கேள்வி: நாம் திறந்து விடும் கதவாலும், மேலும் பல கதவுகளாலும் (எமது பிரசன்னத்தின் மத்தியிலும், எமக்குத் தெரியாமல் திறக்கும் கதவுகளாலும்) நுழையும் முதலாளிகளா? அல்லது ஆட்சியிலிருக்கும் பாட்டாளி வர்க்கமா? இதனால் பயனடையப் போகின்றது என்பதுதான் கேள்வி… அதேநேரத்தில் முதலாளித்துவம் பயனடையும் பொழுது தொழில் உற்பத்தியும் வளர்ச்சி கண்டு பாட்டாளி வர்க்கம் பலமடைவதற்கு வழிகோலும் என்பதையும் நாம் மறந்துவிட முடியாது.”

அதாவது திறந்தவெளிப் பொருண்மியம் சரியான முறையில் கையாளப்பட்டால் அது சமூகப் புரட்சிக்கு வித்திட்டு வர்க்க முரண்பாடுகளும், சுரண்டல்களும் நீங்கிய சுபீட்சமான சமுதாயம் தோற்றம் பெறுவதற்கு வழிகோலும் என்பதே கார்ல் மார்க்ஸ் அவர்களினதும், விலாடிமிர் லெனின் அவர்களினதும் கருத்தாக இருந்தது.

சரி, இது பற்றி தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் என்ன கூறுகின்றார் என்று பார்ப்போம்.

1984ஆம் ஆண்டு மார்ச் மாதம் வெளிவந்த ‘சண்டே’ எனப்படும் இந்திய ஆங்கில சஞ்சிகை தலைவரின் சித்தாந்தம் பற்றி வினவியது. அதற்கு ஒற்றை வசனத்தில் தலைவர் பதிலளித்தார்:

“கேள்வி: உங்களின் சித்தாந்தக் கோட்பாடு என்ன?

பதில்: புரட்சிகர சோசலிசம்.

கேள்வி: எப்படியோ ஒருகாலம் தமிழீழம் கைகூடிவிட்டால் அது எவ்வகையான நாடாக அமையுமென நீங்கள் நினைக்கிறீர்கள்?

பதில்: தமிழீழம் ஒரு சோசலிச அரசாக அமையப் பெறும். சோசலிசம் என்பதன்மூலம் சமத்துவமான சமூக அமைப்பை நான் கருதுகிறேன். இதில் மனித சுதந்திரத்திற்கும், தனிநபர் உரிமைகளுக்கும் உத்தரவாதமுண்டு. எல்லாவித ஒடுக்குமுறையும் சுரண்டலும் ஒழிக்கப்பட்ட மக்களின் உண்மையான சனநாயகமாக அது திகழும். தமிழ் மக்கள் தங்களுடைய பொருளாதாரத்தைப் பேணி வளர்த்து தமது கலாசாரத்தை மேம்பாடு செய்யும் வகையில் அவர்களுக்கு அதிகபட்ச வாய்ப்புக்கள் கிடைக்கின்ற ஒரு சுதந்திர சமூகமாகத் தமிழீழம் அமையும்…”

இச்செவ்வி மூலம் 1984ஆம் ஆண்டிலேயே ஒரு செய்தியை தெளிவாக தலைவர் அவர்கள் எடுத்துரைத்தார். அதாவது தனது புரட்சிகர சோசலிச சித்தாந்தம் என்பது ஈழத்தமிழர்களுக்கு பயனளிக்கக்கூடிய வகையில் திறந்த வெளிப் பொருண்மியக் கொள்கைகளை உள்ளடக்கியதாக இருக்கும் என்பதே அது.

திறந்தவெளிப் பொருண்மியக் கொள்கைகளுக்கு அடிநாதமாக விளங்குவது மனிதவுரிமைகள் என்று மேற்குலக நாடுகளில் போற்றப்படும் மனித சுதந்திரமும், லிபெற்றி (liberty) என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் தனிநபர் உரிமைகளும் ஆகும்.

தலைவர் அவர்களின் செவ்வி வெளிவருவதற்கு ஓராண்டுக்கு முன்னர் 1983ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரச்சார வெளியீட்டு வாரியத்தின் பதிப்பாக ‘அரச பயங்கரவாதமும் ஆயுதப் புரட்சியும்’ என்ற தலைப்பில் நூல் ஒன்றை பாலா அண்ணை வெளியிட்டார். அதில் தலைவரின் புரட்சிகர சோசலிசம் தொடர்பாகவும், அதில் பொதிந்துகிடக்கும் மார்க்சிய-லெனினிய சித்தாந்தத்தையும் பின்வருமாறு அவர் விளக்கினார்:

“எமது இயக்கத்தை ஆரம்பித்து, அதனைக் கட்டுக்குலையாது கட்டுப்பாட்டுடன் கட்டி வளர்த்து வரும் பெருமை, எமது தலைவர் பிரபாகரனையே சாரும். இவரே இன்று எமது இயக்கத் தலைவராகவும், தளபதியாகவும் இருந்து கொண்டு இயக்கத்தை வழிநடத்தி வருகிறார்.

இன ஒடுக்குமுறையால் எழுந்த சமூக, அரசியல், பொருளாதாரப் புறநிலைகள் தமிழ்த் தேசியவாத எழுச்சியை ஈழத்தமிழரிடையே வலுப்பெறச் செய்தன. ஆரம்பத்தில் அதே தேசியவாதத்தால், தேசாபிமானத்தால் உந்தப்பட்டு ஆயுதப் போராட்டத்தில் குதித்த நாம், காலப்போக்கில் ஒரு புரட்சிகர சித்தாந்தத்தையும், அதனால் நெறிப்படுத்தப்பட்ட கொள்கைத் திட்டம் – செயற்திட்டத்தின் முக்கியத்துவத்தையும், அவசியத்தையும் உணர்ந்து கொண்டு, ஒரு விடுதலை இயக்கத்தை கட்டுக்கோப்பாக அமைத்து, ஒரு புரட்சிகர கொள்கைத் திட்டத்தை நெறிப்படுத்துவதற்கும், நாம் வரித்துள்ள ஆயுதப் போராட்ட வடிவங்களுக்கு வலுவேற்றி தேசிய விடுதலையுடன் சோசலிசப் புரட்சியையும் முன்னெடுத்துச் செல்லவும், மார்க்சி-லெனினிச தத்துவத்தை இன்றியமையாததாக ஏற்றுக் கொண்டோம். இந்த அரசியல் விழிப்புணர்வால் நாம் புரட்சிகர சோசலிசத்தை எமது புரட்சிச் சித்தாந்தமாக வரித்துக் கொண்டோம்.“

அதாவது, சரியான முறையில் கையாளப்படும் திறந்தவெளிப் பொருண்மியம் எவ்வாறு சமூகப் புரட்சிக்கு வித்திட்டு சமூகத்தில் சுபீட்சமான சூழலுக்கு வழிவகுக்கும் என்று கார்ல் மார்க்ஸ், விலாடிமிர் லெனின் ஆகியோர் கருதினார்களோ அதே வழியிலேயே தனது புரட்சிகர சோசலிச சித்தாந்தத்திற்குள் திறந்தவெளிப் பொருண்மியக் கோட்பாட்டை தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களும் உள்ளடக்கினார்.

தலைவர் அவர்களின் புரட்சிகர சோசலிசம் என்பது வைதீக மார்க்சியவாதிகள் முன்வைத்த உழுத்துப் போன அரச இயந்திரத்தின் பிடிக்குள் சிக்கித் திணறும் பொருண்மியக் கொள்கைகளை அடியோடு நிராகரித்தது. அதேநேரத்தில் பொருண்மிய சுதந்திரத்தின் போர்வையில் சமூகத்தில் சுரண்டல்களும், முரண்பாடுகளும் வலுவடையும் சூழல் ஏற்படாதிருப்பதை உறுதிசெய்யும் வகையிலும் தலைவர் அவர்களின் புரட்சிகர சோசலிச சித்தாந்தம் அமைந்தது.

அதாவது தலைவரின் புரட்சிகர சோசலிசம் என்பது அரச கட்டுப்பாடுகள் இன்றி தமிழீழ மக்கள் சுதந்திரமாக தமது பொருண்மிய வாழ்வைக் கட்டியெழுப்பும் விதத்திலும், அதில் காத்திரமான பங்கை புலம்பெயர்வாழ் ஈழத்தமிழ் முதலீட்டாளர்கள் வகிப்பதற்கு இடமளிக்கும் வகையிலும் அமைந்தது. இதுதான் மலரும் சோசலிச தமிழீழத்தில் மனித சுதந்திரத்திற்கும், தனிமனித உரிமைகளுக்கும் உத்தரவாதம் இருக்கும் என்று 1984ஆம் ஆண்டு மார்ச் மாதம் தலைவர் அவர்கள் விடுத்த அறிவித்தலின் அர்த்தபரிமாணமாகும்.

தமிழீழத் தேசியத் தலைவரின் இந்நிலைப்பாடு பாலா அண்ணையால் தத்துவார்த்த வடிவம் கொடுக்கப்பட்டு தமிழீழ விடுதலைப் புலிகளால் 1985ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட தலைவரின் சுதந்திர சாசனமாக விளங்கும் சோசலிச தமிழீழம் எனும் ஆவணத்தில் உள்ளது. அதில் திறந்தவெளிப் பொருண்மியம் தொடர்பாகவும், புலம்பெயர் தமிழ் முதலீட்டாளர்களின் பங்கு பற்றியும் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது:

“மத்திய அரசின் குறுகிய வட்டத்திற்குள் அல்லாது சனநாயக ரீதியில், சுயாதீனமான முறையில் தேசிய பொருளாதாரத் திட்டம் வகுக்கப்படுவதையும், செயற்படுத்தப்படுவதையும் விடுதலைப் புலிகள் இயக்கம் ஊக்குவிக்கும். தமிழீழத்தின் சமூக-பொருளாதார புனரமைப்பில் பொதுமக்கள் சகல மட்டத்திலும் பங்குகொள்ள எமது விடுதலை இயக்கம் வாய்ப்பளிக்கும். தேசிய செல்வம் சமத்துவமாக மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும் என்பதை உறுதியளிக்கும் அதேவேளை, தேசிய பொருளாதாரத்தை கட்டி எழுப்பும் முயற்சிகளில் வெளிநாடுகளில் வதியும் தமிழீழத் தேசாபிமானிகளுக்கு சகல சந்தர்ப்பங்களும் அளிக்க எமது இயக்கம் தீர்மானித்திருக்கின்றது.”

இவ்வாறு திறந்தவெளிப் பொருண்மியக் கொள்கைகளை தன்னகத்தே கொண்டுள்ள தலைவரின் சுதந்திர சாசனத்தின் ஆங்கில வடிவம் பின்வருமாறு தெரிவிக்கின்றது:

The LTTE will not adopt a rigid centralised planning but opt for liberalisation and democratisation in the framing and implementing national economic programmes. LTTE will encourage people’s participation at all levels in the socio-economic transformation of the nation. Concept of self-management and self-reliance will be governing principles in shaping policies towards economic progress. While ensuring equal distribution of national wealth, the LTTE will provide incentives for expatriate Tamil patriots to contribute to the development of the national economy.”

தலைவரின் சுதந்திர சாசனமாக விளங்கும் சோசலிச தமிழீழம் என்ற ஆவணத்தின் ஆங்கில மொழியாக்கத்தின் மேற்கண்ட பகுதியில் குறிப்பிடப்படும் லிபரலைஸ்சேன் (liberalisation) என்ற சொற்பதம் திறந்தவெளிப் பொருண்மியக் கோட்பாட்டை உள்ளடக்கிய புரட்சிகர சோசலிச சித்தாந்தத்தையே விளித்து நிற்கின்றது. இதுவே தனது சுதந்திர சாசனம் வெளியிடப்பட்டு பதினேழு ஆண்டுகள் கடந்த பின்னர் 2002ஆம் ஆண்டு கிளிநொச்சியில் நடைபெற்ற அனைத்துலக செய்தியாளர் மாநாட்டில் திறந்தவெளிப் பொருண்மியக் கொள்கைகள் தொடர்பாக தலைவர் வெளியிட்ட கருத்திற்கு அடிப்படையாக அமைந்தது.

இதனைத்தான் ‘நாங்கள் திறந்தவெளிப் பொருண்மியத்தை ஆதரிக்கின்றோம் (We are for free trade)’ என்று தலைவரின் கருத்தை ஆங்கிலத்தில் பாலா அண்ணை மொழிபெயர்த்துக் கூறியதன் அர்த்தமாகும்.

உருத்திரகுமாரனின் நாடுகடந்த குழுவின் பரப்புரை செய்வது போன்று புரட்சிகர சோசலிச சித்தாந்தத்தைக் கைவிட்டு திறந்தவெளிப் பொருண்மியக் கோட்பாட்டை தலைவர் தழுவிக் கொள்ளவில்லை. மாறாக தலைவரின் புரட்சிகர சோசலிசச் சித்தாந்தம் என்பது திறந்தவெளிப் பொருண்மியக் கோட்பாட்டை உள்ளடக்கியதாகவே தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தோற்றம் பெற்ற நாள் முதல் இருந்து வந்துள்ளது.

இதனால்தான் 1980களில் யாழ்ப்பாணக் குடாநாடு தமது கட்டுப்பாட்டின் கீழ் இருந்த பொழுது சுயசார்பு பொருண்மியத்திற்கு அடித்தளமிட்ட அதேவேளை, திறந்தவெளிப் பொருண்மியத்தை தமிழீழ விடுதலைப் புலிகள் ஊக்குவித்தார்கள். இதனைத்தான் 1990ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்தை நிர்வாகத் தலைநகராகக் கொண்டு தமிழீழ நடைமுறை அரசை நிறுவிய பொழுது தமிழீழ விடுதலைப் புலிகள் செய்தார்கள்.

இதுதான் 1995ஆம் ஆண்டின் இறுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் நடைமுறை அரசின் மையம் வன்னிக்கு நகர்ந்த பொழுதும் நடந்தது. இதுதான் 2002ஆம் ஆண்டு போர்நிறுத்தம் ஏற்பட்டதும் கிளிநொச்சியை நிர்வாகத் தலைநகராகக் கொண்டு தமிழீழ நடைமுறை அரசை தமிழீழ விடுதலைப் புலிகள் விரிவாக்கம் செய்த பொழுதும் நடந்தது.

அதாவது சோசலிச தமிழீழம் என்ற சுதந்திர சாசனத்தை எழுதுவதோடு மட்டும் தலைவர் நின்றுவிடவில்லை. தனது சுதந்திர சாசனத்தில் குறிப்பிட்டப்பட பொருண்மிய விடுதலை, பெண் விடுதலை, சாதிய விடுதலை, மத சார்பின்மை, மலையக தமிழர்களின் உரிமைகள் உட்பட பலதரப்பட்ட திட்டங்களை தனது நெறியாட்சியில் இயங்கிய தமிழீழ நடைமுறை அரசில் தலைவர் அவர்கள் நடைமுறைப்படுத்தினார்.tamileelam freedom charter

http://tamileelamfreedomcharter.org/

தரையிறங்கும் கழுகும், இலவுகாக்கும் கிளியும்

மாலைதீவில் படைத்தளங்களை அமைப்பதற்கான பூர்வாங்க நடவடிக்கைகளில் அமெரிக்கா ஈடுபட்டிருப்பது தொடர்பான தகவல்கள் அண்மைக் காலங்களில் அரசல் புரசலாக ஊடகங்களில் வெளிவந்த வண்ணமிருந்த நிலையில் இவற்றை உறுதி செய்யும் வகையில் மாலைதீவிற்கும், அமெரிக்காவிற்கும் இடையில் கைச்சாத்திடப்பட உள்ள ஒப்பந்தத்தின் நகல் கடந்த வாரம் வெளிவந்துள்ளது.obama vs mahinda

மாலைதீவிற்கும், அமெரிக்காவிற்கும் இடையில் இராணுவச் சேவைகளைப் பகிர்ந்து கொள்வதற்கான ஒப்பந்தம் 2010 செப்ரெம்பர் மாதம் 22ஆம் நாளன்று கைச்சாத்தாகிய பொழுது அதன் அடுத்தபடியாக படைத்தளங்களை அமைப்பதற்கான ஒப்பந்தம் ஏற்படுத்தப்படும் என்பது எதிர்பார்க்கப்பட்டது.

இதனை உறுதி செய்யும் வகையில் மாலைதீவில் அமெரிக்கப் படைத்தளங்களை அமைப்பதற்கான ஒப்பந்தத்தின் நகல் வெளிவந்துள்ளது. இந்நகல் வெளியிடப்பட்டது என்று கூறுவதை விட அது கசிய விடப்பட்டது என்று கூறுவதே பொருத்தமானது. இதனை யார் கசிய விட்டார்கள் என்பது பற்றி ஆராய்வதோ அன்றி அதனைக் கசிய விட்டதால் எவருக்கு என்ன இலாபம் உண்டு என்று ஆராய்வதோ இங்கு அனாவசியமானது.

மாறாக இந்நகல் வெளிக்கொணரும் செய்திதான் இங்கு முக்கியமானது. உலகில் வல்லாதிக்கம் செலுத்த முற்படும் வல்லரசுகளாக இருந்தாலும் சரி, தத்தமது பிராந்தியங்களில் ஆதிக்கம் செலுத்த முற்படும் பிராந்திய வல்லரசுகளாக இருந்தாலும் சரி, கடல்வழி சுதந்திரம் என்பது அவற்றின் இருப்பிற்கும், பாதுகாப்பிற்கும் இன்றியமையாதது.

அதிலும், இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னர் உலகை தாராண்மைத்துவ ஒழுங்கமைப்புக்குள் கொண்டு வந்து தனது பொருண்மிய நலன்களை விரிவாக்கம் செய்யும் மூலோபாயத்துடன் இயங்கி வரும் அமெரிக்காவைப் பொறுத்தவரை இந்து சமுத்திரத்தில் கடல்வழிச் சுதந்திரம் பேணப்படுவது அத்தியாவசியமானது. இதனால்தான் நீண்ட காலமாகவே அமெரிக்காவின் கழுகுப் பார்வை இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் பொதிந்துள்ளது.

‘இந்து சமுத்திரத்தை எவர் கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றார்களோ, அவர்களின் ஆதிக்கத்தின் கீழ் ஆசியா இருக்கும்? என்கின்றார் அமெரிக்காவின் நவீன கடல்வழி மூலோபாயங்களின் பிதாமகனாக விளங்குபவரும், பத்தொன்பதாம் நூற்றாண்டின் தலைசிறந்த கடற்போர் வியூகிகளில் ஒருவராக திகழ்ந்தவருமான அட்மிரல் அல்பிரட் தயர் மாகன்.

சோவியத் ஒன்றியத்துடன் பனிப்போரில் ஈடுபட்ட காலத்திலேயே இந்து சமுத்திரப் பிராந்தியத்தை தனது கட்டுக்குள் கொண்டு வருவதற்கான பகீரத பிரயத்தனங்களில் அமெரிக்கா இறங்கியது. இரண்டாம் உலக யுத்தத்தின் முடிவுடன் பிரித்தானியா சாம்ராச்சியம் சரியத் தொடங்க, அதன் எதிர்வினையாக மேற்குலகில் ஏற்பட்ட பொருண்மிய பின்னடைவுகளை சீர்செய்வதும், பிரித்தானியாவின் பிடி நழுவிப்போன கீழைத்தேய நாடுகளில் தனது பொருண்மிய நலன்களை நிலைநாட்டுவதுமே அமெரிக்காவின் அன்றைய மூலோபாயமாக இருந்தது.

ஆனால் அதற்கு பெரும் தடையாகவும், சவாலாகவும் விளங்கியவர் இந்திரா காந்தி அம்மையார். தென்னாசியப் பிராந்தியத்தில் பாரத தேசத்தின் நலன்களுக்கு குந்தகம் விளைவிக்கும் சகல வெளித்தலையீடுகளையும் பகைமை நடவடிக்கைகளாக வரையறுத்து இந்திரா காந்தி அம்மையார் வகுத்த ‘இந்திரா கோட்பாடு’ அன்று இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் ஆதிக்கம் செலுத்துவதற்கு அமெரிக்கா எடுத்த முயற்சிகளுக்கு பெரும் தலையிடியாக இருந்தது என்றால் மிகையில்லை. இதனையும் மீறி ஈழத்தீவில் தளம் அமைப்பதற்கு அமெரிக்கா எடுத்த முயற்சிகளே 1980களில் தமிழீழ தேசிய விடுதலை இயக்கங்களுக்கு ஆயுதங்களையும், போர்ப் பயிற்சிகளையும் அளித்து ஜெயவர்த்தனாவை மண்டியிட வைத்து தனது கட்டுக்குள் கொண்டு வருதற்கு இந்திரா காந்தி அம்மையார் எடுத்த நடவடிக்கைகளுக்கு அடிப்படையாக அமைந்தது.

ஆனாலும், இந்திரா காந்தி அம்மையாரின் மறைவுடன் ‘இந்திரா கோட்பாடு’ அவரது புதல்வர் ராஜீவ் காந்தியால் கைவிடப்பட, அமெரிக்காவுடன் படிப்படியாக நல்லுறவை இந்தியா ஏற்படுத்திக் கொண்டது. ராஜீவ் காந்தியின் ஆட்சிக்காலத்தில் முகிழ்த்த இவ் உறவு, சந்திரசேகரின் ஆட்சியில் மேம்படுத்தப்பட்டது. எவ்வாறு முதலாவது வளைகுடா யுத்தத்தின் பொழுது தென்னிலங்கையில் அமெரிக்கப் போர் விமானங்கள் எரிபொருட்களை நிரப்புவதற்கு பிரேமதாசாவின் அரசாங்கம் ஒத்துழைப்பு நல்கியதோ, அவ்வாறான ஒத்துழைப்பை சந்திரசேகரின் அரசாங்கமும் வழங்கியது. இந்நல்லுறவு நரசிம்மராவின் ஆட்சியில் விரிவடைந்தாலும், வாஜ்பாயின் ஆட்சியில் அது மந்தகதியை எட்டியது.

இவ்வாறு மந்தகதியில் காணப்பட்ட அமெரிக்க – இந்திய நல்லுறவு, 2004ஆம் ஆண்டு சோனியா காந்தியின் தலைமையிலான கொங்கிரஸ் கட்சி டில்லியின் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து மீண்டும் உத்வேகம்பெற்றது. இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் இன்று அமெரிக்காவும், இந்தியாவும் பங்காளிகள். அணுசக்தி ஒத்துழைப்பாக இருந்தாலும் சரி, பொருண்மிய ஒத்துழைப்பாக இருந்தாலும் சரி, இராணுவ ஒத்துழைப்பாக இருந்தாலும் சரி எல்லா விடயங்களில் இன்று அமெரிக்காவின் தாளத்திற்கு சுருதி மாறாமல் இந்தியா ஆடுகின்றது.

ஈழத்தமிழர் பிரச்சினை தொடர்பில் ஜெனீவாவில் இரண்டு தடவைகள் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை இந்தியா ஆதரித்தமையும், டில்லி விடுத்த கோரிக்கைளை ஏற்று அதன் வீச்சை வோசிங்டன் நீர்த்துப் பெறப்போகச் செய்தமையும் இதற்கு மிகச்சிறந்த சான்றுகள் எனலாம். இப்படியானதொரு பின்புலத்திலேயே தற்பொழுது மாலைதீவில் படைத்தளங்களை அமைப்பதற்கான பூர்வாங்க நடவடிக்கைகளில் அமெரிக்கா இறங்கியுள்ளது.

அடிக்கடி அரசியல் குழப்பங்களை எதிர்நோக்கும் ஒரு நாடு மாலைதீவு. அங்கு ஏற்பட்ட குழப்பங்கள் பிராந்திய வல்லரசு என்ற வகையில் இந்தியாவிற்கு நெடுங்காலமாகவே தலையிடியை கொடுத்து வந்துள்ளன. இந்நிலையில் இப்பொழுது மாலைதீவில் அமெரிக்கா காலூன்றத் தயாராகுவது இந்தியாவைப் பொறுத்தவரை ஒத்தடமும், ஆசுவாசமும் அளிக்கும் செய்தியாகவே அமைகின்றது.

மாலைதீவில் தரையிறங்கும் அமெரிக்கக் கழுகு இன்னும் சிறிது காலத்தில் ஈழத்தீவிலும் தரையிறங்கிவிடும் என்பதில் எவருக்கும் எவ்வித ஐயமும் இருக்க முடியாது. இன்று மாலைதீவில் அமெரிக்கா காலூன்றுவதற்கு அடிப்படையாக இருப்பது 2010ஆம் ஆண்டு இரு நாடுகளுக்கு இடையில் ஏற்படுத்தப்பட்ட இராணுவ சேவைகளைப் பகிர்ந்து கொள்ளும் ஒப்பந்தமாகும். இவ்வாறான ஒப்பந்தத்தை 2007 பங்குனி மாதம் 5ஆம் நாளன்று சிறீலங்காவுடன் அமெரிக்கா ஏற்படுத்திக் கொண்டது.

இவ் ஒப்பந்தத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சிகள் ரணிலின் ஆட்சியில் 2002ஆம் ஆண்டிலேயே எடுக்கப்பட்டிருந்தாலும், வாஜ்பாயின் தலைமையிலான அப்போதைய இந்திய அரசாங்கத்தின் எதிர்ப்புக் காரணமாக அது பிற்போடப்பட்டது. பின்னர் சோனியா பச்சைக்கொடி காட்ட, 2007ஆம் ஆண்டு அவ் ஒப்பந்தத்திற்கு மகிந்தர் உயிர்கொடுத்தார். இதன் தொடர்ச்சியாக இன்னும் சிறிது காலத்தில் மாலைதீவு போன்று ஈழத் தீவிலும் படைத்தளங்களை அமைப்பதற்கான ஒப்பந்தம் ஒன்றை மகிந்தருடன் அமெரிக்கா ஏற்படுத்தும் என திடமாக எதிர்பார்க்கலாம்.

இதற்கான சமிக்ஞைகள் 2009 மார்கழிமாதம் 7ஆம் நாளன்று அமெரிக்க செனெட் சபையின் வெளியுறவுக் குழுவால் வெளியிடப்பட்ட அறிக்கையில் காணப்படுகின்றன. தற்பொழுது அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சராக விளங்கும் ஜோன் கெரி அவர்களின் மேற்பார்வையிலேயே இவ் அறிக்கை தயாரிக்கப்பட்டது. ஈழத்தீவில் அமெரிக்காவிற்கு உள்ள நலன்கள் பற்றியும், இவற்றைத் தக்கவைப்பதற்கு கையாளப்பட வேண்டிய யுக்திகள் பற்றியும் இவ் அறிக்கை வெளிப்படையாகத் தெரிவிக்கின்றது.

அதன் முக்கிய பகுதிகள் வருமாறு:

“ஏற்கனவே இருக்கக்கூடிய மனிதநேய மற்றும் அரசியல் கரிசனைகளுடன் அமெரிக்க நலன்களைப் பேணுவதில் சிறீலங்காவிற்கு இருக்கும் பூகோள-கேந்திர வகிபாகம் பற்றிப் பெரும்பாலும் அமெரிக்கக் கொள்கை வகுப்பாளர்கள் குறைத்தே மதிப்பிட்டு வந்துள்ளனர். ஐரோப்பாவையும், மத்திய கிழக்கு முதல் சீனா உள்ளடங்கலாக முழு ஆசியப் பிராந்தியத்தையும் இணைக்கும் இந்து சமுத்திரத்தின் முக்கியத்துவம் வாய்ந்த கடல்வழிப் பாதையில் சிறீலங்கா அமைந்துள்ளது. கடல்வழி வணிகத்தை சீர்குலைக்கக்கூடிய பயங்கரவாத நடவடிக்கைகளையும், கடற்கொள்ளை நடவடிக்கைகளையும் தடுக்கும் பொதுவான கரிசனை அமெரிக்காவிற்கு மட்டுமன்றி இந்தியாவிற்கும், சீனாவிற்கும் உண்டு.

சிறீலங்காவின் வகிபாகம் என்பது கடல்வழிப் பாதைகளோடு மட்டுமன்றி உலகின் மிகப் பெரும் சனநாயக நாடாக விளங்கும் இந்தியாவின் பாதுகாப்பிற்கும் இன்றியமையாததாக உள்ளது. சிறீலங்காவில் நிலவக்கூடிய இனமுரண்பாடுகள் இந்தியாவின் உறுதிநிலையை, அதிலும் அறுபது மில்லியன் தமிழர்கள் வசிக்கும் இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் உறுதிநிலையை பாதிக்கக்கூடிய தன்மையைக் கொண்டுள்ளன. இவை அனைத்தும் எமது உறவுக்கான கரிசனைகளில் உள்ளடக்கப்பட வேண்டும்.

சிறீலங்காவை அமெரிக்கா இழந்து விட முடியாது. இதற்காக சிறீலங்காவுடனான உறவை ஒரே இரவில் நாம் மாற்றியமைக்க வேண்டியதோ அல்லது அதன் அரசியல்-மனிதநேய தவறுகளை அலட்சியம் செய்ய வேண்டியதோ இல்லை. மாறாக சிறீலங்காவை எமது கட்டுக்குள் கொண்டு வரக்கூடிய வகையில் எம்மிடம் உள்ள ஆற்றல்களை விரிவாக்கம் செய்வதற்கான புதிய அணுகுமுறை கையாளப்பட வேண்டும்.

எமது உறவின் பொருண்மிய, வணிக, பாதுகாப்பு அம்சங்கள் ஊடாகப் பயன்பெறக்கூடிய பன்முகப்பட்ட மூலோபாயம் கைக்கொள்ளப்பட வேண்டும். இவ் அணுகுமுறை நாம் விரும்பும் அரசியல் மாற்றங்கள் ஏற்படுவதற்கும், அதன் ஊடாக இந்து சமுத்திரத்தில் அமெரிக்காவின் கேந்திர நலன்கள் பேணப்படுவதற்கும் வழிகோலும். வெறுமனவே தமிழர்கள் செறிந்து வாழும் வடக்குக் கிழக்கிற்கு நிதியுதவி அளிப்பதோடு மட்டும் நின்றுவிடாது சிங்களவர்கள் வாழும் பகுதிகளிலும் முதலீடுகளை மேற்கொள்ளும் வகையில் அமெரிக்க மூலோபாயம் அமைய வேண்டும்.”

ஈழத்தமிழர்களின் அரசியல் வேட்கையாக விளங்கும் தனியரசுக் கோரிக்கையைப் புறந்தள்ளி விட்டு மகிந்தரின் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையிலான அரசியல் தீர்வையும், போர்க்குற்றங்கள் தொடர்பான உள்ளக விசாரணையையும் அமெரிக்காவும், அதன் நேசநாடுகளும் வலியுறுத்துவதன் அர்த்தபரிமாணங்களை நாம் புரிந்து கொள்வதற்கு ஜோன் கெரி அவர்களின் தலைமையில் வெளியிடப்பட்ட அறிக்கையின் மேற்குறிப்பிடப்பட்ட பகுதிகள் போதுமானது.

ஆறு தசாப்தங்களுக்கு மேலாக கொழுந்துவிட்டெரியும் ஈழத்தமிழர்களின் தனியரசுக்கான வேட்கையை அதிகாரப் பரவலாக்கம் எனும் நீரை ஊற்றுவதன் மூலம் அணைத்து விட்டு ஈழத்தீவில் காலூன்றுவதே அமெரிக்காவின் இப்போதைய யுக்தியாகும்.

ஈழத்தீவில் அமெரிக்கா படைத்தளங்களை அமைப்பதையிட்டுக் கொள்கையளவில் மகிந்தருக்கு ஆட்சேபனை கிடையாது. தானும், தனது குடும்பமும் சிறீலங்காவின் ஆட்சிக்கட்டிலில் நிரந்தரமாக அமர்ந்து கொள்வதற்கு அமெரிக்காவின் பிரசன்னம் வழிவகுக்கும் பட்சத்தில் அதனை ஆரத்தழுவி வரவேற்பதற்கு மகிந்தர் தயாராகவே இருக்கின்றார். இதனால்தான் தமிழீழ விடுதலைப் புலிகளுடனான யுத்தம் உக்கிரமடைந்திருந்த 2007ஆம் ஆண்டில் அமெரிக்காவுடன் இராணுவ சேவைகளை பகிரும் ஒப்பந்தத்தை அவர் ஏற்படுத்திக் கொண்டார்.

ஆனால் அமெரிக்கா எதிர்பார்க்கும் அதிகாரப் பரவலாக்கத்தின் அடிப்படையிலான அரசியல் தீர்வு தென்னிலங்கைச் சிங்களவர்களின் வாக்கு வங்கியை தான் இழக்கும் சூழலுக்கு வழிகோலும் என்ற அச்சமும் மகிந்தருக்கு உண்டு. தவிர அமெரிக்கா விதந்துரைக்கும் திறந்தவெளிப் பொருண்மியக் கொள்கைகளை அமுல்படுத்துவது ஏற்கனவே பாமர சிங்கள மக்கள் எதிர்நோக்கும் பொருண்மிய நெருக்கடிகளை மேலும் அதிகரித்துத் தானும், தனது குடும்பமும் நிரந்தரமாக வீட்டுக்கு அனுப்பப்படும் புறநிலையை தோற்றுவிக்கும் என்ற அச்சமும் மகிந்தருக்கு உள்ளது.

அதேநேரத்தில் அமெரிக்காவை எதிர்ப்பதன் ஊடாகவோ, அன்றி சீனாவுடன் ஒட்டி உறவாடுவதன் மூலமோ தான் நினைத்ததை நீண்ட காலத்திற்கு சாதிக்க முடியாது என்பதும் மகிந்தருக்கு நன்கு தெரியும். வடகொரியா விடயத்தில் அண்மையில் அமெரிக்காவிற்கு பக்கபலமாக சீனா எடுத்த நிலைப்பாடு இதனையே உறுதி செய்கின்றது. கடந்த காலத்தில் சூடானையும், லிபியாவையும் கைவிட்டது போன்று தன்னையும் என்றோ ஒருநாள் சீனா கைவிடும் என்பது மகிந்தருக்கு நன்கு தெரியும்.

இப்படியாக திரிசங்கு நிலையில் இருக்கும் மகிந்தருக்கு ஒரேயரு தெரிவுதான் உள்ளது: அமெரிக்காவின் காலில் மண்டியிடுவதுதான் அது. இதற்கான புறநிலையை தோற்றுவிப்பதற்காகவே இப்பொழுது அமெரிக்கா குத்தி முறிகின்றது. கடந்த இரண்டு ஆண்டுகளாக ஜெனீவாவில் அமெரிக்கா கொண்டு வந்த உப்புச்சப்பற்ற தீர்மானங்களுக்கு அடிப்படையாக விளங்குவது இதுதான். எப்பொழுது மகிந்தர் அமெரிக்காவிடம் மண்டியிடுகின்றாரோ அப்பொழுதே ஈழத்தமிழர் பிரச்சினையில் அமெரிக்காவின் கரிசனையும் முடிவுக்கு வந்து விடும்.

சீனாவும், அமெரிக்காவும் மோதும் நாள் வரும் பொழுது தமிழீழம் அமையும் என்ற கனவில் மிதந்து மாடமாளிகைகளில் ஒய்யாரமாக சுதந்திர சாசனம் எழுதும் நாடங்களில் விருந்துண்டு திளைத்து உலகத் தமிழர்கள் களைத்துப் போக, அமெரிக்காவிடம் மண்டியிட்டு ஈழத்தீவில் தமிழீழ தேசத்தின் அடையாளத்தை நிரந்தரமாக அழிக்கும் கைங்கரியத்தை மிகவும் கனக்கச்சிதமாக சிங்களம் அரங்கேற்றப் போகின்றது.

அதாவது இப்பொழுது மாலைதீவில் தரையிறங்கும் கழுகு விரைவில் ஈழத்தீவிலும் களமிறங்கும் பொழுது ஈழத் தமிழர்களின் கதி இலவுகாத்த கிளியின் நிலைக்கே மாறப் போகின்றது. முள்ளிவாய்க்காலில் ஒன்றரை இலட்சம் உறவுகளின் உயிர்கள் காவுகொள்ளப்பட்ட பொழுது அதனை தடுத்து நிறுத்த முடியாது கையறு நிலையில் இருந்தது போன்ற நிலையையே மீண்டும் ஒரு தடவை உலகத் தமிழினம் எட்டப் போகின்றது.

இந்நிலையை நாம் தவிர்க்க வேண்டுமாயின் சனநாயகப் போராட்டம், இராசதந்திரப் போராட்டம் போன்ற மாயைகளிலிருந்து மீண்டெழுந்து தமிழீழ தேசியத் தலைவரின் சிந்தனைக்கு செயல்வடிவம் கொடுக்கும் வகையில் எமது போராட்ட மூலோபாயங்களை செழுமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

கொழும்பிலும், காலியிலும், அம்பாந்தோட்டையிலும் அமெரிக்கா படைத்தளங்களை அமைப்பதையிட்டு நாம் அலட்டிக் கொள்ளத் தேவையில்லை: அது சிங்கள மக்கள் கையாள வேண்டிய பிரச்சினை. ஆனால் அதற்காக ஈழத்தமிழர்களின் அரசியல் அபிலாசைகள் பலியிடப்படுவது எந்தவகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாதது.

– சேரமான்

நன்றி: ஈழமுரசு

Up ↑