Search

Eelamaravar

Eelamaravar

Category

வீரவணக்கம்

கடற் சமர்களின் கதாநாயகன் லெப் கேணல் தியாகன்.!

தமிழீழ போரியல் வரலாற்றில் அதிகளவான கடற் சமர்களின் கதாநாயகனாக விளங்கிய தியாகன்.

கடற்புலி லெப்டினன்ட் கேணல் தியாகன்
சந்திரசேகரம்பிள்ளை தசகுமாரன்.
வீரச்சாவு: 13.08.2007

சம்பவம்: திருகோணமலை புல்மோட்டைக் கடற்பரப்பில் சிறிலங்காக் கடற்படையினருடனான நேரடிச் சமரின் போது.

1991ம் ஆண்டின் பிற்பகுதியில் தொடர்ச்சியாக மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இராணுவ ஆக்கிரமிப்புக்கள் இராணுவத் தாக்குதல்கள் காரணமாக விடுதலைப் புலிகளமைப்பில் தன்னை இணைத்துக் கொண்ட தியாகன். கடற்புலிகளின் இரண்டாவது பயிற்சி முகாமான மாவீரரான மேஜர் யப்பான் நினைவாக அவரது பெயரில் உருவான ‘யப்பான் 02’ல் தனது ஆரம்பப் பயிற்சியை முடித்து; மேலதிக பயிற்சிக்காக கடற்புலிகளின் படைத்துறைப் பள்ளிக்கு செல்கிறான். அங்கு படிப்பிலும் விளையாட்டிலும் குறிப்பாக தொலைத்தொடர்பு சம்பந்தப்பட்ட வகுப்பிலும் சிறந்து விளங்கினான்.

அத்தோடு தொலைத்தொடர்பு சம்பந்தமான வகுப்பில் அதன் ஆசிரியர்மாரை கேள்விகள் கேட்டு தனது சந்தேகத்தை தீர்த்துக்கொள்வான். தொலைத்தொடர்பு சம்பந்தமாக இவனுக்குள்ள ஆர்வத்தை அறிந்த கடற்புலிகளின் துணைத் தளபதி பிருந்தன் மாஸ்ரர் இவனை சண்டையாகிலும் சரி, விநியோக நடவடிக்கையாகிலும் சரி கடற் கண்காணிப்புக்காகிலும் தொலைத்தொடர்பு நிலையத்திற்க்கு இவனையும் அழைத்துச் செல்வார். அங்கு ராடரில் படகுகளை எவ்வாறு துல்லியமாக இணங்கானுவது அதாவது எதிரியின் படகு எது கடற்புலிகளின் படகு எது என்பது போன்ற இப்படியாக தொலைத்தொடர்பு சம்பந்தமான அறிவைப் பெற்ற தியாகன் பின்னர் தொலைத்தொடர்பு நிலையத்தில் நின்று செயற்பட்டான்.

தொடர்ந்து விநியோக மற்றும் கடற்சண்டைகளில் தொலைத்தொடர்பாளனாக சென்று வந்துகொண்டிருந்தான். பின்னர் ஒரு சண்டைப்படகின் கட்டளை அதிகாரியானான். தொடர்ந்து மன்னார் மாவட்ட கடல் நடவடிக்கை மற்றும் கடல் சண்டைக்காக ஒரு தொகுதி படகுகள் அங்கே அனுப்பப்பட்டபோது இவனது படப்படியான வளர்ச்சிகளை நன்கு அவதானித்த சிறப்புத் தளபதி சூசை அவர்களால் சண்டைப் படகுகளின் தொகுதி கட்டளை அதிகாரியாக நியமிக்கப்படுகிறான்.

“ஒயாத அலைகள் 03” நடவடிக்கையில் யாழ். கிளாலி நீரேரியில் கடற்படையினருக்கெதிரான தாக்குதலில் பெரும்பங்காற்றி ஆனையிறவு மீட்புச் சமருக்கு பலம் சேர்த்தான். அத்தோடு நின்று விடாமல் தொடர்ந்தும் யாழ்ப்பாணத்தை மீட்கும் சமருக்கு தரைத்தாக்குதலனிக்கு உதவியாக பெரும் பங்காற்றினான். அதன் பின்னர் முல்லைத்தீவுக் கடற்பரப்பில் 16.09.2001 அன்று இடம்பெற்ற வலிந்த தாக்குதலில் நிலமையை மாற்றி அமைத்த பெருமை தியாகனையே சாரும்.

கடலில் இடம் பெற்ற பெரும்பாலான விநியோகப் பாதுகாப்புச்மராகிலும் சரி வலிந்த கடற்சமராகிலும் சரி தொகுதிக் கட்டளை அதிகாரியாகச் செவ்வனவே பணியாற்றினான்.

ஈழப்போர் நான்கில் கடற்புலிகளின் கடற்தாக்குதல் தளபதியாக நியமிக்கப்படுகிறான். அதன் பின்னர் கடற்தாக்குதலில் ஒரு மாற்றத்தைக் கொண்டுவர எண்ணியவன் சிறப்புத் தளபதி மற்றும் கடற்சண்டை அநுபவமுள்ள போராளிகளோடு ஆலோசித்து சிறிய படகுகளைக் கொண்ட தொகுதியை உருவாக்கி கடற்கரும்புலிகளையும் அழைத்துச் சென்று எதிரியை அவனது இடத்திற்கே பலநாட்களாகச் தேடிச்சென்று அவனது நடவடிக்கைக்கு இடையூறு விளைவித்தவன் .
பலவெற்றிகரத் தாக்குதல்களை செவ்வனவே வழிநடாத்தியவன். பல இக்கட்டான கடற்சமரில் படகுகளைப் பிரியவிடாமல் அவர்களை தனது அநுபவங்களைக் கொண்டும் கடற்தாக்குதல் தளபதிகள் எவ்வாறு இக்கட்டான நேரங்களில் செயற்பட்டார்களோ அப்படிச் செயற்பட்டு அவ் இக்கட்டான நிலைகளிலிருந்து மீண்டு எதிரிக்கு எதிராக பழைய வேகத்துடன் படகுகளை ஒன்றாக்கி தாக்குதல் நடாத்திய ஒருதளபதி.

மூத்த போராளிகளுக்கு மரியாதை கொடுத்து கதைக்கிற பன்பு அவர்களின் அநுபவங்களைக் கேட்டறிவதில் இருந்த ஆர்வம். போராளிகளுடன் பழகுகிற விதம்.இப்படியாக தியாகனைப் பற்றி சொல்லிக் கொண்டே போகலாம். மூத்த தளபதி சொர்ணம் தலைமையிலான ஒரு தொகை போராளிகளை திருகோணமலையிலிருந்து வன்னிக்கு அழைத்து வருவதற்கான திட்டம் தலைவர் அவர்களால் கடற்புலிகளுக்கு வழங்கப்படுகிறது. அதனுடன் ஒரு அறிவித்தலும் வழங்கப்பட்டது அதாவது ஒரு பாரிய அணி திருகோணமலையிலிருந்து வன்னிக்கு செல்லப் போகிறது. என எதிரியானவன் தனது அதிகாரிகளுக்கு செய்தி அனுப்பியதை விடுதலைப் புலிகளின் ஒட்டுக் கேட்கும் அணியினரால் தெரிவிக்கப்பட்டது. அப்படியான சூழலில் தான் இவ்விநியோக நடவடிக்கை இடம்பெற்றது இவ் விநியோகப் பாதுகாப்புச் சமர் லெப். கேணல் தியாகன் தலைமையிலேயே இடம்பெற்றது விநியோகத்தில் வருபவர்களுக்கு எதுவும் நேரக்கூடாது என்ற தலைவர் அவர்களின் கருத்திற்கிணங்க விநியோக அணிகளுக்கு பாதுகாப்பு வழங்கி எதிரியின் பாரியதொரு கடற்கலங்களுக்கெதிரான கடற்சமரில் படகுகளைப் பிரியவிடாமல் கடற்படையின் கலங்களை விநியோபடகுகளிற்க்குச் செல்லவிடாமல் கட்டளைகளை தெளிவாக வழங்கி இறுதிவரை போராடி 13.08.2007 வீரச்சாவடைகிறான்.

கடற்புலிகளைப் பொறுத்தளவில் தியாகனின் இழப்பென்பது ஒரு பாரிய இழப்பாகுமென்பதில் எவ்வித ஐயமுமில்லை. தியாகனின் சகோதரியும் இவ்விடுதலைப் போராட்டத்தில் வீரச்சாவடைந்திருந்தார். நீள்வானம் போன்று இவர்களது தியாகம் என்றும் எங்கள் மண்ணில் நிலைத்திருக்கும்.

– அலையரசி.

புலிகளால் முதலாவது பெயர் சூட்டப்பட்ட இராணுவ நடவடிக்கை “ஆகாய கடல் வெளிச்சமர்”

இச் சமரானது மூன்று பிரதான பிரிவுகளாக நடைபெற்றது.

முதலாவது வன்னிப் பெருநிலப்பரப்புப் பக்கமாக அதாவது பெரிய உப்பளம் சுற்றுலா விடுதியை நோக்கியதாக இருந்து இச் சமரை தளபதி பால்ராஜ் அவர்கள் நெறிப்படுத்தி வழிநடாத்த உள் நடவடிக்கையை தளபதி சூசை அவர்கள் வழிநடாத்தினார்.இவ் இராணுவ நடவடிக்கை. முதலாவதாக 10.07.1991 அன்றும் இரண்டாவதாக 13.07.1991 அன்றும் நடைபெற்றது.13.07.1991 அன்றைய தாக்குதலில் மேஜர் கேசரி அவர்களும் உதவியாக கப்டன் டக்ளஸ் அவர்களும் ஓட்டிச் சென்ற கனரக வாகனம் மீது இராணுவச் சிப்பாய் வாகனத்தில் ஏறி குண்டைப் போட்டு வெடிக்கவைத்ததால் அன்றைய முயற்சியும் வெற்றியளிக்கவில்லை.

இரண்டாவது தென்மராட்சிப் பக்கமாக அதாவது தடைமுகாமை கைப்பற்ற இச் சமரை தளபதி தமிழ்ச்செல்வன் அவர்கள் வழிநாடாத்த உள் நடவடிக்கையை தளபதி குணா அவர்கள் வழிநடாத்தினார்.இந் நடவடிக்கை முறையே 11.07 1991அன்றும் இரண்டாவதாக 27.07 1991 அன்றும் நடைபெற்றது.இவ் இராணுவ முகாம் தாக்குதல்களும்.வெட்டவெளியேன்பதால் உழவு இயந்திரங்களுக்கு இரும்புத் தகட்டால் மூடப்பட்டு அதன் பின்னால் போராளிகள் சென்றே தாக்குதல் நடாத்தினார்கள் .இந்த தாக்குதல்களிலிருந்து பட்ட அனுபவங்களின்படி 27.07.1991 அன்றைய தாக்குதல் எமது காவலரணிலிருந்து எதிரியின் காவலரண்களுக்கு அண்மைவரை பதுங்கு குழிகள் வெட்டி அதனூடாகா அணிகள் எழும்பி தாக்குதல் நடாத்திக்கொண்டு தடைமுகாமை கைப்பற்றுவதென்றும் .

மற்றொரு நடவடிக்கை கனரக வாகனத்துக்கு இரும்புத் தகடு அடிக்கப்பட்டு அதனை காப்பாக பயன்படுத்தி போராளிகள் சென்று தடைமுகாமை கைப்பற்றுவதென்றும்.ஆனால் துரதிஸ்டவசமாக எதிரியின் தாக்குதலால் கனரக வாகனம் எதிரியின் காவலரனுக்கு அண்மையாக செயலிழந்தது.இக்கனரக வாகனத்தை செலுத்திய தளபதி லெப் கேணல் சரா அவர்களும் உதவியாக சென்ற மேஜர் குகதாஸ் அவர்களும் வீரச்சாவடைந்தனர்.இச் சமரின் இன்னுமொரு முயற்சியாக மேஜர் சொனி அவர்கள் தலமையிலான ஒரு அணியொன்று சின்ன உப்பளமூடாகச் சென்று இராணுவத்திற்க்கு பின்பக்கமாக சென்று தாக்குதல் நடாத்தி தடைமுகாமை கைப்பற்ற எடுத்தநடவடிக்கையும் பலனளிக்கவில்லை.இச் சமரின் உள் நடவடிக்கையை வழி நடாத்திய தளபதி குணா அவர்கள் விழுப்புண்ணைடைந்தார் .அவரை போராளிகள் பின்னுக்குக் கொண்டுவந்தார்கள்.ஆனால் அவரோ மருத்துவமனைக்கு செல்ல மறுத்து ஆனையிறவிலே நின்றார்.அதன் பின்னர் மூத்த தளபதி பொட்டு அவர்களால் வலுக்கட்டாயமாக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்.இது மாதிரியான பலசம்பவங்கள் இச் சமரில் நடைபெற்றன.

மூன்றாவது வெற்றிலைக்கேனி கட்டைக்காடு கடற்கரை இவ்விடத்தில் கடற்படையால் தரையிறக்கலாமென எதிர்பார்த்து காத்திருந்த வேளையில் 14.07.1991 அன்று கடுமையான தாக்குதலுக்கும் மத்தியில் தரையிறக்கினான்.இச் சமரை வழிநாடாத்திய தளபதி லெப்.கேணல் சூட்டி அவர்கள் அன்றைய தினம் வீரச்சாவடைந்தார்.இருந்தும் சண்டைதொடர்ந்தது.முன்னேறிய இராணுவத்தை அதாவது வெற்றிலைக்கேணியிலிருந்து புல்லாவெளிச்சந்திவரை சங்கிலித்தொடராக நின்ற இராணுவத்தை 21.07.1991அன்று தளபதி சொர்ணம் தலைமையில் தகர்த்தெறிந்து நுழைதல் பாணியிலான ஒரு தாக்குதல் முள்ளியானில் மேற்கொள்ளப்பட்டது.இத் தாக்குதல் திட்டமானது இராணுவத்தை இரண்டாகப் பிரிப்பது ஆனால் இரண்டாகப்பிரிக்க முடியாவிட்டாலும் .

பல இராணுவத்தை கொன்று ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன.தொடர்ந்து முன்னேறிய படையினரை.கடுமையான எதிர்த் தாக்குதலைத் தொடர்ச்சியாக தொடுத்தனர்.கொம்படி வரை வந்த படையினர்.கொம்படியிலிருந்து இயக்கச்சி சந்திக்கு வர முயற்சித்தபோது.தளபதி லெப் .கேணல் ராஜன்.அவர்கள் தலமையிலான அணிகள் இராணுவத்தின் முன்னேற்ற முயற்சியை எதிர்த்து கடுமையாக போரிட்டதால் படையினர் அம் முயற்சியை கைவிட்டு .அப்படியே கைவிட்டுவிட்டு வேறு பாதையால் முன்னேற்றத்தை தொடர அங்கும் எதிர்த்தாக்குதல் நடைபெற்றது.

இச் சமர் பற்றி எழுதுவதற்க்கு இலகுவானதாக இருந்தாலும் ஆனால் போராளிகள் பட்ட கஸ்ரம் கொஞ்சமல்ல கடற்கரை மணல் உப்பு வெட்டை காப்புகள் ஏதுமற்ற நிலை சுட்டெரிக்கும் வெயில் ஓய்வற்ற நித்திரையற்ற பொழுதுகள் உணவுகள் இருந்தும் உண்ணமுடியாத நிலை இவைகளுக்கும் மத்தியில் வெல்ல வேண்டும் என்கிற எண்ணம் மட்டுமே தவிர வேறொன்றுமில்லை இவ் அா்ப்பணிப்பு மிக்க இச்சமர் இயக்கத்திற்க்கு பல முக்கியத்துவத்தை உணர்த்திய சமர் இச் சமர் பல படையணிகளின் தோற்றத்தை உருவாக்கிய பல துறைகளின் அவசியத்தை உணர்த்தி சமர் இலங்கையில் இரண்டு இராணுவம் உள்ளதை வெளி உலகுக்கு உணர்த்திய இச் சமர்களை ஒருங்கிணைத்து செவ்வனவே புலனாய்வுத் துறைப் பொறுப்பாளரும் மூத்த தளபதியுமான பொட்டு அவர்கள் தலைவரின் ஆலோசனையுடன்.வழிநடாத்தினார். ஒரு மாதமாக நடைபெற்ற இவ் இராணுவ நடவடிக்கையில் அறுநூற்றி மூன்று போராளிகள வீரச்சாவடைந்தனர்.

உண்மையிலே இச்சமரிலே வீரகாவியமான ஒவ்வொரு போராளிகளுக்குப் பின்னாலும் அற்புதமான தியாகங்களும்,மனிதத்தன்மைக்கு அப்பாலான விடுதலை உணர்வும் உள்ளன. இவர்களுடைய அர்ப்பணிப்புக்கள் சாதாரணமான இழப்புக்கள் அல்ல மாறாக தமிழர்களுடைய வீர வரலாற்று சரித்திரங்கள்.
இச்சமரிலே தங்கள் உயிர்களைக் கொடையாக்கி தாய்மண் விடுதலைக்காகத் தங்களை ஈகம் செய்த அனைத்து மாவீரர்களுக்கும் எமது வீரவணக்கத்தைத் தெரிவித்துக் கொள்வோமாக.

2 ஆம் கட்ட ஈழப்போர் தொடங்கியது. வெறும் வான் தொடர்புகளை மட்டுமே நம்பி எமது மண்ணில் எதிரி அமைத்துவைத்திருந்த இராணுவ முகாம்களான கோட்டை, கொக்காவில், கொண்டச்சி என்பன போரின் ஆரம்பக் கட்டத்திலேயே இறுக்கமான முற்றுகைக்குட் கொண்டு வரப்பட்டதால் எமது கைகளுள் வீழ்ந்தன. எனவே, எதிரி இப்போது வான்படை, கடற்படை, தரைட்படையென முட்படைகளினதும் தொடர்புகளுடன்கூடிய அல்லது அவ்வாறான தொடர்புகளை உடன் ஏற்படுத்தக்கூடிய இராணுவக் கூட்டுத்தளங்களை மட்டுமே எமது பிரதேசங்களில் வைத்திருப்பதற்கு நிப்பந்திக்கப்பட்டான்.

ஆனையிறவுத் தளமும் இத்தகைய அமைப்பைக் கொண்டதாக இருந்தது. இம்முகாம் மீது நாம் தாக்குதலைத் தொடுக்கும் பட்சத்தில் வான், கடல், தரையென மும்முனைகளிலும் எமது நடவடிக்கைகளை எதிகொள்ளக்கூடிய வாய்பான சூழ்நிலையில் ஆனையிறவு இராணுவத்தளம் இருந்தது யாழ்ப்பாணக் குடாநாட்டிற்கும் தமிழீழத்தின் ஏனைய பகுதிகளுக்குமான ஒரேயொரு தரைப்பாதையாக ஆனையிறவுக் கடல்நீரேரியூடாக ஒடுங்கிச்செல்லும் பாதையில், குடாநாட்டின் கழுத்தை நெரிப்பதுபோல் ஆனையிறவு இராணுவத்தளத்தை எதிரி நீண்டகாலமா கவே வைத்திருந்தான். கடல்நீரேரியும் நீண்ட உப்புவெளிகளைக் கொண்டிருந்த பிரதேசங்களும் எதிரியின் பாதுகாப்பிற்கு நம்பிக்கை கொடுப்பதாக அமைந்திருந்தன

இவ்வாறு, சகலவழிகளிலுமே எதிரிக்குச் சாதகமாக இருந்த ஆனையிறவுத் தளத்தின்மீது ஒரு முற்றுகைத் தாக்கியழிப்புச் சமரை மேற்கொண்டு, அதை வீழ்த்துவதென எமது இயக்கம் முடிவுசெய்தது.ஒரு மரபுவழிச் சமருக்குரிய ஆட்பலநிலையிலும் கருவி நிலையிலும் எதிரி பல மடங்கு மேலோங்கியிருந்தான். எனினும், ஒரு கெரில்லாப் போராட்ட அமைப்பிற்குரிய ஆட்பல நிலையையும் கருவிநிலையையும் மட்டுமே கொண்டிருந்த எமது இயக்கம், மரபுவழிச் சமருக்கு முகங்கொடுக்கக்கூடிய எமது போராளிகளின் மனத்திடத்தை மட்டுமே நம்பிச் சமரங்கைத் திறக்க முடிவுசெய்தது. எமக்குக் கிடைக்கக்கூடிய வளங்களை வைத்து, எமது போராளிகளின் தனித்து வமான தொழினுட்ப அறிவை மட்டுமே பயன்படுத்தி மரபுவழித் தாக்குதலுக்கு மிகவும் இன்றிய மையாததாயிருந்த போர்க்கலங்கள் ஆனையிறவுச் சமருக்காகத் தயாரிக்கப்பட்டிருந்தன. உழவு இயந்திரம், புள்டோசர் என்ப ன பெரும் வெட்டைகளூடாக எமது அணிகளை நகர்த்துவதற்குத் தேவையான கவசவாகனங்களாக உருமாற்றப்பட்டிருந்தன. எமதியக்கத்தால் தயாரிக்கப்பட்ட “பசிலன் – 2000′ என்ற அதிகதாக்கம் விளைவிக்கக்கூடிய குறுந்தொலைவீச்சுப் பீரங்கியும் எம்மிடம் இருந்தது.

எனவே, போராளிகளின் மனப்பலத்தை மட்டுமே பெரிதாக எண்ணித் திட்டமிடப்பட்ட ‘ஆகாய, கடல், வெளி நடவடிக்கையில், முகாமின் தென்பகுதியூடான நடவடிக்கைகளுக்கான பிரதான பணி சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியிடம் வழங்கப்பட்டது. ஏனைய படையணிகளையும் உள்ளடக்கி இத்தென்சமர்முனையைச் சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதி பால்ராஜ் அவர்கள் வழிநடத்தினார்.

போன்ற இடங்களில் நடைபெற்ற சமகளில் படையினர் கடும் இழப்பினைச் சந்தித்தனர். பூவரசங்குளச் சந்திப்பகுதியில் நடைபெற்ற கடுமையான சமளிற் சிறீலங்கா வான்படைமீதான எமது படையணிப் போராளிகளின் தாக்குதலில் ‘பெல்’ ரக உலங்குவானுர்தி ஒன்று சுட்டுவீழ்த்தப்பட்டது. இது போராட்ட வரலாற்றில் சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி புரிந்த முக்கிய சாதனையாகும், எதிரியின் கவசவாகனங்கள் பலவும் சேதமாகின. களத்தில் மூக்குடைபட்ட எதிரி தன் அநாகரிகத்தை வெளிப்படுத்தி அண்டியிருந்த மக்கள் குடியிருப்புக்கள்மீது கண்மூடித்தனமான குண்டு வீச்சுக்களை நடாத்தினான். 19.06.1991 வரை நடந்த கடுமையான சமரில் 50 இற்கு மேற்பட்ட படையினரையும் ஆயு தங்களையும் இழந்ததுடன் 150 இற்கு மேற்பட்ட படையினர் படுகாயமடைந்ததிற் படையினர் பின் வாங்கத் தொடங்கிள். புலிகளின் பலம்பற்றி இராணுவ விமர்சகர்கள் வியந்து நின்ற இச்சமரின் வெற்றிக்காகச் சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியைச் சேர்ந்த போராளிகள் 22 பேர் வரலாறாகினர்.

‘வன்னி விக்கிரம’ நடவடிக்கைகளில் இலங்கை இராணுவத்தினரின் இழப்பைப்பற்றி ஆராய்ந்த பி.பி.சி. உலக சேவையின் இலங்கை முகவர் கருத்து வெளியிடுகையில் இலங்கைத்தீவில் இலங்கை இராணுவம் புலிகளிடம் புதிய சிக்கல்களை எதிர்கொள்ளவேண்டியுள்ளதாகத் தெரிவித்தார். அவ்வளவிற்குச் சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் ‘வன்னி விக்கிரம’ எதிர்த்தாக்குதல் வலுப்பெற்றிருந்ததை உலகம் அறிந்துகொண்டது
–நெருப்பாற்று நீச்சலில் பத்தாண்டுகள் நூல்

தமிழீழ விடுதலைப் புலிகள் தமது உறுதியான பலத்தை வெளிக்காட்டிய சத்ஐய எதிர்ச்சமர்.!

யூலை மாதம் பதினெட்டாம் திகதி ஆரம்பித்தது “ஓயாத அலைகள்”, வரலாற்றுப் பெருமிதத்தைச் சுமந்து நெஞ்சை நிமிர்த்தி அது உலகத்திற்கு தன்னை இனம்காட்டிக் கொண்டது. இரண்டு நாளிலேயே முல்லைப்படைத்தளம் முழுமையும் விடுதலைப் புலிகளின் கைகளில் வந்தது. அடுத்த ஓரிரு தினங்களிலேயே சுற்றுவட்டாரத்திலும் சிங்களக் கொடுங்கோன்மையினரின் பாதச் சுவடுகள் துடைத்தெறியப்பட்டு முல்லை நகர் சுத்தப்படுத்தப்பட்டது. அதற்கிடையில், முல்லைத்தீவு முகாம் எக்காரணம் கொண்டும் மூடப்படமாட்டாது, எக்காரணம் கொண்டும் அதனைக் கைவிடமாட்டோம் என, சிறீலங்காவின் பாதுகாப்பு பிரதி அமைச்சர் அனுருத்த ரத்வத்த சூழுரைத்து அனுப்பிவைத்த படை, பெரும் பிரயத்தனத்தின் மத்தியில் முல்லைப்படைத்தளத்தில் இருந்து சுமார் பத்து கிலோமீற்றர் தொலைவில் அலம்பிலிலும் அதனை அண்டிய பகுதிகளிலும் இறக்கப்பட்டது. ஆனாலும் நிலைமையை முன்னரேயே எடைபோட்டிருந்த விடுதலைப்புலிகள் அவர்களைச் சுற்றி வளைத்துக் குறிவைத்தனர்.

நகர முடியாத இறுக்கமான பொறியில் சிக்கிக்கொண்ட படையினர் வாழ்வுக்கும் சாவுக்கும் இடையில் போராடிக்கொண்டிருந்தானர்.விடுதலைப் புலிகளோ பாதுகாப்பாக நிலை எடுத்து எதிரிகளிடம் இருந்து கைப்பற்றிய ஆயுதங்களைக் கொண்டே எதிரிகளைத் தாக்கினர். இங்கு களநிலைமை இப்படியிருக்க, குழும்பில் குளுகுளு அறையில் இருந்துகொண்டு அமைச்சர்கள் விடும் அறிக்கை வேறுவிதமாக இருந்தது. முல்லைத்தீவு முகாமுக்கு அனுப்பப்பட்டுள்ள மேலதிக படையினர் முகாமில் உள்ள படையினருடன் எந்த நேரத்திலும் இணைந்துகொள்வார்கள், முல்லைத்தீவு முகாமின் ஒரு பகுதியில் இருந்து கொண்டு படையினர் புலிகளுடன் சண்டையிட்டு வருகின்றனர் என்றெல்லாம் அமைச்சர்கள் இலகுவாக செய்திகள் தந்து கொண்டிருந்தனர்.

ஆனால் களநிலைமை வரலாறு காணாத ஒரு பெரும் தோல்வியை அரசின் தோள்களில் சுமத்திக்கொண்டிருந்தது. யாழ். வெற்றி என்ற உள்ளீடற்ற பொய்மைத் தோற்றம் பொசுங்க்கிக்கொண்டிருந்தது. எதிர்காலத்தில் மீளமுடியாத ஒரு கிடுக்குப் பிடியில் அரசு சிக்கிக்கொண்டிருந்தது. உண்மை இப்படியிருக்க பொய்மைகள் வேறு முகத்தில் ரூபவாஹினியில் தோன்றின.

உண்மையை எவ்வளவுகாலம் திரையிட்டு வைப்பது முழுப்பூசனிக்காயை சோற்றில் மறைக்க முடியுமா…? ஆனால் மறைக்க முனைந்தார்கள். சத்ஜய இராணுவ நடவடிக்கையின் வாயிலாக. சத்ஜய இராணுவ ஆரம்பிக்கப்பட்டது யூலை இருபத்தாறில். இந்த இராணுவ நடவடிக்கை ஆணையிரவில் இருந்து கிளிநொச்சியை நோக்கி, கையறுநிலையில் சடுதியாக மேற்கொள்ளப்பட்ட இராணுவ நகர்வு என்பது இராணுவ விவகாரங்கள் புரியாதவர்களால் கூட புரிந்து கொள்ளக்கூடியதே.

முல்லைத்தீவு முகாமைக் காப்பாற்றப் போனவர்கள் காப்பாற்றுவார் இன்றி, மாழ்வதைத் தவிர மீளும் வகையறியாமல் திகைத்து நிற்க, இந்த சத்ஜய நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது. ஆனையிறவில் இருந்து கெடுகாலத்தில் புறப்பட்ட இராணுவம் பரந்தனில் தடுத்து நிறுத்தப்பட்டு தாக்கப்பட்டது. கடும் எதிர்ப்பு இன்றி பரந்தன் வரை முன்னேறிய சிறிலங்காப் படையினர் பத்துநாட்கள் பரந்தனிலேயே தரித்து நின்று, தமது நிலைகளைப் பலப்படுத்தி, மீண்டும் அடுத்த நகர்வை ஆகஸ்ட் மாதம் 5ம் திகதி ஆரம்பித்தனர். முன்னர் குடாநாட்டில் மேற்கொள்ளப்பட்ட சூரியக்கதிர்கள், போல் இது சுலபமாக இருக்கவில்லை. வான்வழியாகக் குண்டுகளைச் சொறிந்தபடி, எறிகணைகளை மழைபோல் பொழிந்தபடி, டாங்கிகள் கனரக வாகனங்கள் சகிதம் புறப்பட்ட இராணுவத்தினர் சொற்ப தூரத்தில் வைத்தே கடுமையாகத் தாக்கப்பட்டனர். உறுதியான முடிவுடன் விடுதலைப் புலிகள் தாக்குதலை நடத்தினர்.

பெரும் எடுப்பிலான இந்த நகர்விற்கு விடுதலைப்புலிகள் முகம் கொடுக்காமல், குடாநாட்டில் பின்வாங்கியது போல் பின்வாங்குவார்; நகர்வு சுலபமாய் அமையும் எனத் திட்டம் வகுத்தோர் தப்புக்கணக்குப் போட்டிருக்கக் கூடும். ஐந்தாம் ஆறாம் திகதிகளில் நடந்த சண்டையில் ஆறு யுத்த டாங்கிகள் அழிக்கப்பட்டன. நூற்றிற்கும் மேற்ப்பட்ட இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். மேலும் பலர் படுகாயப்படுத்தப்பட்டனர். இரண்டு நாள் சண்டையில் பெருமளவில் இராணுவ வளங்களை இராணுவம் இழந்தது. பரந்தனில் இருந்து முன்னேறிய படையினர், மீண்டும் ஒரு தோல்வியைச் சுமந்துகொண்டு பரந்தனுக்குப் பின்வாங்கியுள்ளனர்.

காலப் போருத்தமின்றித் தொடங்கப்பட்ட இந்த சத்ஜய இராணுவ நடவடிக்கையின் தேவை என்ன என்பதற்கு ஒரு காரணம் வெளிப்படையாக சொல்லப்படுகிற போதும், இதற்கு இன்னுமொரு காரணமும் காட்டப்படுகின்றது. முல்லைத்தீவைக் காப்பாற்றவென, அமைச்சர் ரத்வத்தையால் அனுப்பிவைக்கப்பட்ட படையினர் விடுதலைப் புலிகளால் சுற்றிவளைக்கப்பட்டு தாக்கப்பட்டுக் கொண்டிருந்த அதேவேளை, அவர்களை மீட்டெடுப்பதற்கு வழி தேடிய சிறிலங்கா பாதுகாப்பு உயர்பீடம், இந்த சத்ஜயவைக் கண்டு பிடித்ததாகச் சொல்லப்படுகிறது. ஒருமுகப்பட்டிருந்த விடுதலைப் புலிகளின் கவனத்தை, சிதறடித்து படையினரைக் காப்பாற்ற அரசாங்கம் திட்டமிட்டதாகக் கருதப்படுகிறது.

அதாவது விடுதலைப் புலிகளின் முற்றுகைக்குள் இருந்து, சிக்கிய படையினரை இழுத்தெடுக்க அரசு கையாண்ட உத்தி என சொல்லிக்கொள்கின்றார்கள். கிளிநொச்சிவரை முன்னேறுவது, முடிந்தால் தரைப் போக்குவரத்துப் பாதை ஒன்றை அமைப்பது என்ற அடிப்படையில், முன்னர் வரைந்த திட்டத்திற்கு திடீரென உயிர் கொடுத்து நகரவிட்ட அரசு, இதன் மூலம் இரு காரியங்களைச் சாதித்துக் கொள்ளலாம் என நம்பியிருக்கக்கூடும். முல்லைத்தீவில் அப்பிக் கொண்ட சகதியைத் துடைப்பது, சிக்குண்ட படையினரைக் காப்பது என்ற வகையில் அது சிந்தித்திருக்கக்கூடும்.

எது எப்படி இருப்பினும், இரு களநிலையிலும் விடுதலைப் புலிகள் தமது உறுதியான பலத்தை வெளிக்காட்டியுள்ளனர். முல்லைத்தீவை சுத்தப்படுத்தி மக்களின் வளமான வாழ்க்கைக்கு பாதை திறந்த விடுதலைப் புலிகள், கிளிநொச்சி நோக்கிய இராணுவத்தின் ஆக்கிரமிப்புப் பாதிக்கும் ஆப்பு வைத்தனர்.

– சுப்பு.
வெளியீடு : எரிமலை இதழ்

வீரவணக்கம்: வீரகாவியமான மாவீரர்கள் தொகுப்பு

பலாலி விமானத்தள மையம் நோக்கிய கரும்புலிகள் ! வீரவணக்கம்

2-08-1994 அன்று அதிகாலை யாழ்ப்பாணத்திலிருந்த பலாலி விமானப்படைத் தளம் மீது விடுதலைப்புலிகளின் கரும்புலிகள் அணியினர் அதிரடித் தாக்குதலொன்றை நடத்தினர்.

பலாலி விமானப்படைத் தளம் மீதான இரண்டாவது கரும்புலித் தாக்குதல் அதுவாகும்.

1993 நவம்பரில், தவளைப் பாய்ச்சல்’ என்ற பெயரிட்டு பூநகரி கூட்டுப்படைத் தளம் மீது விடுதலைப்புலிகள் பெருமெடுப்பில் தாக்குதலை நடத்தினர். அந்த நேரத்தில் திசைதிருப்பல் தாக்குதலாக பலாலி படைத்தளத்தின் மீது கரும்புலித் தாக்குதலொன்றும் நடத்தப்பட்டது.

அதுவே அப்படைத்தளம் மீதான முதலாவது கரும்புலித்தாக்குதல். ஆனால் சில தவறுகளால் எதிர்பாராத விதமாக அத்தாக்குதல் தோல்வியில் முடிவடைந்தது. அத்தாக்குதலுக்காக கிட்டத்தட்ட 30 பேர் கொண்ட பெரிய அணி ஊடுருவியிருந்தது. அச்சண்டையில் 13 பேர் வீரச்சாவடைய மிகுதிப்பேர் தளம் திரும்பினர்.

அந்தத் திட்டத்திலிருந்த தவறுகள் களையப்பட்டு, சிறப்பான வேவுத் தரவுகளோடு சிறிய அணியொன்று தாக்குதலுக்குத் தயாரானது. கெனடி எனப்படும் நிலவன் தலைமையில் அவ்வணி தாக்குதலுக்கு நகர்ந்தது. (நிலவன், அச்சமரில் விழுப்புண்ணடைந்து மயங்கிய நிலையில் எதிரிகளிடம் பிடிபட்டு நீண்டகாலம் சிறையிலிருந்து பின்னர் கைதிகள் பரிமாற்றத்தின் போது விடுவிக்கப்பட்டார்.)

பலாலி விமானப்படைத்தளம் நோக்கி நகர்ந்துகொண்டிருந்தபோது இடையில் மாவிட்டபுரத்தில் எதிரியோடு மோதவேண்டிய நிலை வந்தது. அம்மோதலில் எதிரியின் பவள் கவசவாகமொன்று அழிக்கப்பட்டது. புலிகளின் அணியில் எவரும் எவ்வித காயமுமில்லை. ஆனால் அணி சிதைந்துவிட்டது. அணித்தலைவன் நிலவனோடு சிலரும், ஏனையவர்கள் இரண்டு மூன்றாகவும் சிதறிவிட்டனர்.

தன்னோடிருந்தவர்களை அழைத்துக்கொண்டு பலமைல்கள் தள்ளியிருந்த விமானப்படைத்தளம் நோக்கி மிகவேகமாக நகர்ந்தார் அணித்தலைவர் நிலவன். எதிரி உஷாராகிவிட்டான். தமது எல்லைக்குள் புலியணி ஊடுருவிட்டதையும், அவர்களின் இலக்கு பலாலி விமானப்படைத்தளம் தான் என்பதையும் எதிரி உடனே புரிந்துகொண்டான். எதிரி முழு அளவில் தன்னைத் தயார்ப்படுத்துவதற்கும் தாக்குதலை நடத்திவிட வேண்டுமென்பதே அணித்தலைவனின் குறிக்கோளாக இருந்தது.

அதன்படி மிகவேகமாக விமானப்படைத் தளத்தினுள் ஊடுருவி சண்டையைத் தொடங்கியது புலியணி. இடையிலேயே அணி குலைந்துபோய் பலம் குறைந்த நிலையிலிருந்தாலும், இருக்கும் வளத்தைக்கொண்டு அதிர்ச்சித் தாக்குதலைத் தொடுத்தது புலியணி. அத்தாக்குதல் தொடங்கியதும், ஏற்கனவே ஆயத்த நிலையில் எதிரியிருந்ததால் இரண்டொரு விமானங்கள் ஓடுபாதையை விட்டுக் கிழம்பி தம்மைக் காத்துக்கொண்டன. மேலெழும்புவதற்கு முன்னரே புலிகளால் ‘பெல் 212′ ரக உலங்குவானூர்தியொன்று அழிக்கப்பட்டது.

தொடர்ந்து நடந்த சண்டையில் கரும்புலியணியில் ஐந்து பேர் வீரச்சாவடைந்தனர்.

அணியிலிருந்து சிதறியிருந்த ஏனையவர்கள் சில நாட்களின் பின்னர் ஒருவாறு தளம் திரும்பினர்.

இந்தக் கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவை தழுவிய கரும்புலிகள்.

கரும்புலி கப்டன் திரு

கரும்புலி மேஜர் திலகன்

கரும்புலி லெப். ரங்கன்

கரும்புலி கப்டன் நவரட்ணம்

கரும்புலி மேஜர் ஜெயம்


சேந்தான்குளம் சந்தியடியில் ஒரு அதிகாலை, காவலரண்களுக்கு அருகாகப் பதுங்கிக்கொண்டிருந்தான் ஒரு வேவுப்புலி. காவல் உலா சுற்றிக்கொண்டு வந்த படைப்பிரிவு ஒன்றிலிருந்து எவனோ ஒரு சிங்களப் படையால் எதேச்சையாக “ரோச்” அடித்தான். வெளிச்சம் சரி நேராகத் தெறித்து அவனிலேயே பட்டது. உறுமத்தொடங்கின துப்பாக்கிகள்; தாவிப்பாய்ந்தன எம் வீரன். தலைதெறிக்க ஓடத்தொடங்கினான். எதிரியின் காணிக்குள்ளேயே ஒரு கலைபாடு விடயம் என்னவென்றால், ஏற்கனவே இரு நாட்களாக அவனுக்குச் சீரான சாப்பாடு இல்லை கலைத்துச் சுட்ட பகைவனுக்குத் தப்ப அவன் இளைத்து இளைத்து ஓடினான். உடல் ஒத்துழைக்க மறுத்தது. கால் சோர்ந்து கொண்டே போனது; ஆனாலும் எங்கோ அவன் தீடிரென மறைந்து விட, துரத்தியவர்கள் தடுமாறிப் போனார்கள்.

பிடிக்க முடியவில்லை. ஆற்றாமையால் கண்டபடி சுட்டுவிட்டுப் போய்விட்டார்கள். அப்படியே மறைந்திருந்தவன் , இரவானதும் மெல்ல மெல்ல ஊரத் துவங்கினான். இஅயலாமையொடு ஊர்ந்தவன், எதிரியின் அரணைக் கடந்து வந்து சற்றுத் துரத்துக்குள்ளேயே மயங்கிப் போனான். பாவம் முகாமிற்குத் தூக்கிவந்து ‘சேலைன்‘ ஏற்றியபோது கண்திறந்தவன்.

தப்பித்து வந்தது ஒரு அதிஷ்டம் என்று தான சொல்லவேண்டும்.

இப்படியாக….. எத்தனையோ மயிரிழைகளில் தப்பி, அதிஸ்டவசமாக மீண்டவர்கள் கொண்டுவந்த தரவுகள்தான் , பலாலிப் பெருந்தலத்தின் மையத்தில் குறிவைக்க எங்களுக்கு அத்திவாரமாக அமைந்தன.

பலாலித் தாக்குதலின் தார்ப்பரியத்தை விளங்கிக்கொள்ள வேண்டுமானால், எங்களது வேவு வீரர்களைப் புரிந்து கொள்ள வேண்டும். எல்லாத் தாக்குதல்களையும் போலவேதான் அதுவும்! வேவுப்புலிவீரர்கள் பெற்றுத்தந்த வெற்றி அது.

எங்களது வேவு வீரர்கள் அபூர்வமான் மனிதர்கள். சாவுக்கும் அஞ்சாத அவர்களது வீரத்தை எண்ணிப்பாருங்கள். அது போற்றுதற்குரியது. பகைவனின் நெஞ்சுக்கூட்டுக்கு மேலேறி வேவு பார்த்துவிட்டு மீளும் அந்த மனத்துணிவு அபாரமானது; அது ஒரு இணைதேட முடியாத நெஞ்சுறுதி!

தாங்கள் கொண்ட இலட்சியத்தில் அவர்கள் எத்துணை பற்றுக் கொண்டவர்களாக இருக்கிறார்கள் என்பதைச் சிந்தித்துப் பாருங்கள். அந்த இலட்சியத்திற்காகத் தங்களது இன்னுயிரையே துச்சமெனத் தூக்கி எறிய மனமுவந்து நிற்கும் அவர்களது தியாக உணர்வு, மேன்மை மிக்கது; உன்னதமானது!

தாயகத்தின் மீதும் தாயகத்து மக்கள் மீதும் அவர்கள் கொண்டிருந்த நேசம் இருக்கிறதே…. அது சாதாரணமானதல்ல. அது ஒரு அளவு கடந்த காதல்; தளர்ச்சியற்ற பிணைப்பு!

அந்த வீரர்களின் ஒவ்வொரு அசைவுக்குப் பின்னால் இருந்தும், எதிரியின் வலைப்புகளிற்கு மத்தியில் நின்று அவர்கள் எடுத்த ஒவ்வொரு முடிவிற்குப் பின்னால் இருந்தும், அவர்களை இயக்கிக்கொண்டிருந்த உந்துவிசை. அவர்களுடைய அந்த “மனநிலை” தான்.

எங்கள் அன்னைபூமியை ஆக்கிரமித்தி நிற்கும் சிங்களப் படைகளின் மிகப் பெரியதும், மிகவும் பாதுகாப்பானதுமான தலமென்ற பெருமையுடையது பலாலி முக்கூட்டுப் படைத்தளம்.

வடபுலப் போர் அரங்கின் பிரதான கட்டளைத் தலைமையகமும் அதுவேதான்.

தனிக்காட்டு ராயாவாக ஒரு சிங்கம், கால்களை அகல எறித்துவிட்டு அச்சமற்ற அலட்சியத்தோடு படுத்திருப்பதைப் போல ….

30 சதுர மெயில் விஸ்தீரணத்தில் ….

அகன்று நீண்டு விரிந்து கிடக்கிறது அந்தப் பெருந்தளம்.

இவை தெரியாத விடயங்களல்ல; ஆனால், ஆச்சரியம் என்னவெனில்…

“என்னை எவரும் ஏதும் செய்துவிட முடியாது” என்ற இறுமாப்போடு நிமிர்ந்திருக்கும் அந்த முக்கூட்டுத்தளத்தினுள் நுழைந்து, எங்களது வேவுப்படை வீரர்கள் குறிவைத்த இலக்கு, அதன் இதயமாகும்.

அது, சிறீலங்கா விமானப்படையின் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தலைமையகம் என்ற கேந்திர மையமாகும்.

இந்த முப்படைக் கூட்டுத்தளத்தை சுற்றி வர, பலமான் உருக்குக்கவசம் போன்று, உள்ள அதன் முன்ன்னணிப் பாதுகாப்பு வியூகத்தை ( Front Defence line ) ஊடுருவி நுழைவதென்பதே, ஒரு இமாலயக் காரியம்தான.

இமையாத கண்களுடன் , துயிலாமல் காத்திருக்கும் பகைவனின் பத்து ‘பற்றாலியன்‘ படைவீரர்கள்.

சரசரப்புக்கெல்லாம் சடசடத்து, சள்ளடையாக்கிவிடத் தயாராக அவனது சுடுகருவிகள்.

உலகெங்கிலும் இருந்து போறிக்கண்ணிகளையும், மிதிவெடிகளையும் வாங்கி வந்து, விதைத்து உருவாக்கியிருக்கும் அவனது கண்ணிவெடி வயல் ( Mines field ).

வானுலக நட்சத்திரங்களின் ஒளிர்வினைக் கொண்டே, பூவுலக நடமாட்டங்களைத் துல்லியமாய்க் காட்டும் அவனது ‘இரவுப் பார்வை‘ சாதனங்கள் ( Night vision ).

தேவைக்கேற்ற விதமாகப் பயன்படுத்தவென, தேவைக்கேற்ற அளவுகளில் கைவசமிருக்கும் அவனது தேடோளிகள் ( Search Lights ).

அடுக்கடுக்கான சுருள் தடைகளாயும், நிலத்துக்கு மேலால் வளைப்பின்னலாயும் குவிக்கப்பட்டிருக்கும் அவனது முட்கம்பித் தடுப்புகள்.

வன்னிப் பக்கத்துக் குளங்களைப் போல, உயர்ந்த அரண்களாக எழுப்பப்பட்டுள்ளன அவனது அணைக்கட்டுகள்.

உள்ளுக்கிருப்பதைக் கண்டு அறிவதற்கு வெளியில் இருந்து பார்க்க முடியாமல், நிலத்திலிருந்து வானுக்கு எழும்புகின்ற அவனது தகரவேலி.

எங்கிருந்து எங்கு என்று இடம் குறியாது, எப்போதிருந்து எப்போதுக்குள் என்று காலம் குறியாது, ரோந்து சுற்றிக்கொண்டு திரியும் அவனது ‘அசையும் காவலணிகள்’ ( Mobile Sentries ).

அத்தனை பலங்களினாலும் பலம் திரட்டி அரசு பலத்தோடிருந்தனர் எங்கள் பகைவர்.

“எந்தப் பலத்திலும் ஒரு பலவீனம் இருக்கும், தேடுங்கள்” என்றார் எங்கள் தேசியத்தலைவர்.

நூல் நுழையும் ஊசிக்கண் துவாரம் தேடிய எம் வேவுவீரர்கள், அந்த ‘மரண வலயத்தை‘ ஊடுருவிக் கடந்து, சிங்கத்தின் குகைக்குள் நுழைந்தார்கள்.

வெளியில் தனது முன்னணிக் காவலரண்களிலிருந்து, அசைக்க முடியாத தன்னுடைய பலத்தை எண்ணிப் பகைவன் இருமாந்துகொண்டிருக்க.

உள்ளே, சுமார் பத்து மைல்களுக்கு அப்பாலிருக்கும் அவனது மையத்தலத்தில், விமான ஓடுபாதைகளில், நடந்து வானுர்திகளை வேவு பார்த்துக்கொண்டிருந்தனர் எம் வீரர்கள்.

அவர்களுடைய முயற்சிதான் ஒரு கரும்புலி நடவடிக்கைக்கான திட்டத்திற்கு கருக்கொடுத்தது. அவர்களது ஓய்வற்ற கடும் உழைப்பு, அந்தத் திட்டத்தை படிப்படியாக வளர்த்து முழுமைப்படுத்தியது.

தாக்குதல் இலக்கை வேவு பார்த்து. தாக்குதலணி நகரப் பாதை அமைத்து, தாக்குதல் பயணத்தில் ‘தரிப்பிடம்‘ கண்டு தாக்குதலுக்கான நாள் குறித்த அவ் வேவுப்புலி வீரர்கள்.

கரும்புலி வீரர்களுக்கு உறுதுணையாக வழிகாட்டிச் செல்லத் தயாராகி நின்றார்கள்.

தாக்குதல் திட்டம் தயாரிக்கப்பட்டுவிட்டது.

பெரிய நோக்கம்;

அரசியல்ரீதியாகவும், படையியல்றீதியாகவும் முக்கியத்துவத்தைப் பெறக்கூடிய ஒரு நடவடிக்கை.

எமது மக்களின் உயிர்வாழ்வோடு பினைந்ததும் கூட.

ஆனால், அது ஒரு பலமான இலக்கு; உச்சநிலைப் பாதுகாப்புக்கு உட்பட்ட கேந்திரம்.

செல்பவர்கள் வேலமுடியும்; ஆனால் திரும்ப முடியாது.

சிங்கத்தின் குகைக்குள் நுழைந்து அதனை எதிர்கொள்வதற்கு நிகரான செயல் அது.

இருப்பினும் தாக்குதல் தேவையானது.

வேவு அறிக்கைகளின் அடிப்படையில் தாக்குதலுக்கான வழிமுறை தீர்மானிக்கப்பட்டது.

அது ஒரு கரும்புலி நடவடிக்கை.

நான் முந்தி நீ முந்தி என்று நின்றவர்க்குள் தெரிவாகியவர்களைக் கொண்டு தயார் செய்யப்பட்டது ஒரு தாக்குதலணி.

கெனடி அதன் களமுனைத் தளபதி; அவனோடு இன்னும் 6 வீரர்கள்.

சிர்ருருவி மாதிரிப் படிவமாக ( Model ) அமைக்கப்பட்டிருந்த பலாலி வான்படைத் தளத்தையும், அதன் ஓடுபாதைகளையும் சுற்றி அவர்கள் நின்றுகொண்டிருந்தனர்.

தளபதி கடாபி அவர்களுக்குரிய தாக்குதல் வழிமுறைகளைத் தெளிவுபடுத்தினார். ஒவ்வொருவருக்குமுரிய இலக்குகளைக் காட்டி விளக்கினார். ஒவ்வொருவரும் எவ்விதமாகச் செயற்ப்படவேண்டும் என்பதை அவர் சொல்ல்லிக் கொடுத்தார்.

அவர்களுக்குரிய ஒத்திகைப் பயிற்சிகள் ஆரம்பித்தன.

”பயிற்சியைக் கடினமாகச் செய்; சண்டையைச் சுலபமாகச் செய்” என்பது ஒரு படையியல் கோட்பாடு.

அந்தக் கோட்பாட்டின்படியே அவர்கள் செயற்ப்பட்டார்கள்.

ஆகா…..! அந்த நேரத்தில் நீங்கள் பார்த்திருக்க வேண்டும் அவர்களை;

மெய்யுருகிப் போயிருப்பீர்கள்.

எவ்வளவு உற்சாகம்; எவ்வளவு ஆர்வம்; ஓய்வற்ற பயிற்சிகளில் அவர்கள் காட்டிய மனமார்ந்த அந்த ஈடுபாடு….. !

‘எப்படி வாழவேண்டும் ?‘ என்று சிந்தித்துக் கொண்டிருக்கிற எங்களுக்குல்லிருந்து தானே அவர்கள் போனார்கள்!

உயிரைக் கொடுத்துவிட்டு எப்படி வெற்றியைப் பெறவேண்டும் என்றல்லவா ஒத்திகை பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

அவர்களுக்குள் இருந்திருக்கக்கூடிய தேசாபிமானத்தை நினைத்துப் பாருங்கள்; அவர்களுக்குள் இருந்திருக்கக் கூடிய தமிழபிமானத்தை எண்ணிப் பாருங்கள்.

எங்கள் தலைவன் ஊட்டி வளர்த்த மேன்மை மிகு உணர்வு அது.

தங்கள் கடைசிக் கணங்களில்.

தங்களின் உயிர் அழிந்துவிடப் போவதைப் பற்றியல்ல; தங்களின் இலக்குகள் அழிக்கப்பட வேண்டியதைப் பற்றியே அவர்கள் சதா சிந்தித்துக் கொண்டிருந்தார்கள்.

இப்படிப்பட்டவர்களிடம் போய், “நீங்களில்லையாம்; ஆட்களை மாத்தப்போகினமாம்” என்று சொன்னால் எப்படியிருக்கும்?

அப்படி ஒரு கதை, கதையோடு கதையகா வந்து காதில் விழுந்தது.

“குழுக்கள் போட்டு புதுசா ஆக்களைத் தெரிவு செய்யப் போறேனேன்று சொர்ணம் அண்ணன் சொன்னவராம்” என்றது அந்தத் தகவல்.

கெனடி குழம்பிவிட்டான். அவனால் அதனை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தளபதியிடம் போய் சண்டை பிடித்தான்.

“நான் கட்டாயம் போக வேணும்” என்று விடாப்பிடியாய்ச் சொன்னான். “வேணுமென்றால் அவர் மற்ற ஆட்களை மாத்தட்டும். குழுக்கள் தெரிவுக்கு என்ற பெயரைச் சேர்க்க வேண்டாம்” திட்டவட்டமாகக் கூறினான்.

எந்த மாற்றமும் செய்யப்படாமலேயே எல்லா ஒழுங்குகளும் பூர்த்தியாகிவிட்டன.

அவர்களுடைய நாள் நெருங்கிவிட்டது.

கடைசி வேவுக்குப் போனபோது, அசோக்கிடம் ஜெயம் சொன்னானாம்.

“கரும்புலிக்குள்ளேயும் நாங்கள் வித்தியாசமாகச் செய்யப்போகின்றோம்; இது ஒரு புது வடிவம். நாங்கள் இவற்றை அழிக்கும்போது சிங்களத் தளபதிகள் அதிர்ச்சிக்குள்ளாவார்கள்.”

தேசியத்தலைவர் வந்து வழியனுப்பிவைத்தார் ;

அவர்களுக்கு அது பொன்னான நாள்.

ஒன்றாயிருந்து உணவருந்திய தேசியத்தலைவர், கட்டியணைத்து முத்தமிட்டு விடை தந்தபோது.

கரும்புலிகளுக்குள்ளே உயிர் புல்லரித்தது.

“நான் நம்பிக்கையோடு எதிர்பார்க்கின்றேன்”, தேசியத்தலைவர் வழியனுப்பி வைத்தார்.

மேலே, வானத்துக்கும் பூமிக்கும் இடையில்.

வெகு உல்லாசத்துடன்.

உலங்கு வானூர்த்தி ஒன்று பலாலிப் பக்கமாகப் போய்க்கொண்டிருந்தது. அட்டகாசமாய் சிரித்துவிட்டு நவரட்ணம் சொன்னான். “இன்றைக்கு பறக்கிறார் , நாளைக்கு நித்திரை கொள்ளப் போகிறார்.”

நீண்ட பயணத்திற்குத் தயாராகி, சிரித்துக் கும்மாளமடித்துக் கொண்டு நின்றவர்களிடம், “எல்லோரும் வெளிக்கிட்டு வீட்டீர்கள் ….. துரதேசத்துக்குப் போல இருக்கு……”

தளபதி சொர்ணம் கேட்க்க,

கண்களால் புன்னகைத்து ரங்கன் சொன்னான்.

“ஓமோம் ….. கிட்டண்ணையிட்ட…. திலீபண்ணை…. இப்படி நிறைய தெரிஞ்ச ஆக்கள் அங்க இருக்கினம்.”

பள்ளிப் பெருந்தளத்தின் முன்னணிக் காவலரன்களுக்கு மிகவும் அருகில் எங்கள் தளபதிகளிடம் விடைபெற்றுச் செல்லும் போது, நின்று திரும்பி தளபதி செல்வராசாவிடம் “அண்ணன்மார் கவனமாகப் போங்கோ ‘செல்; அடிப்பான்” என்று சொல்லிவிட்டுப் போனான் திரு.

கைகளை அசைத்து அசைத்துச் சென்ற கரும்புலிகள் இருளின் கருமையோடு கலந்து மறைந்தார்கள்.

தாக்குதலணி, தாக்குதல் மையத்தைச் சென்றடைவதே ஒரு பெரிய விடயமாகக் கருதப்பட்டது.

தாக்குதலைச் செய்வது இன்னொரு பெரிய காரியம்.

புறப்பட்டுப் போகும் போது அவர்களிடம் இருந்தது தளராத உறுதி, தணியாத தாகம், எல்லாவற்றையும் மேவி, அசையாத தன்னம்பிக்கை.

“அம்மா !

நான் உங்கள் பிள்ளைதான்; ஆனால், தமிழீழத் தாய்மார்கள் எல்லோருக்கும் நான் ஒரு பிள்ளை…..

….. அம்மா ! என்னுடைய ஆசை மக்கள் மகிழ்ட்சியாக சுதந்திரமாக வாழவேண்டும் என்பதுவே. அதனால்தான் உயிரைப் பெரிதாக நினையாமல் நான் போராடப் போனேன்.

அதனால், எனக்காக நீங்கள் கவலைப்படாதீர்கள்; நீங்களும் சந்தோசமாக இருக்க வேண்டும்.

…. எமது மண் சுதந்திரமடைய வேண்டும். அது நடைபெற வேண்டுமானால் மக்கள் எல்லோருமே தாயகத்துக்காக உயிரைக் கொடுக்கவும் தயாராகக் கிளர்ந்தெழ வேண்டும்.

இதுதான் என் கடைசி விருப்பம்”

ஒகஸ்ட் திங்கள் முதலாம் நாள்.

பகற்பொழுது பின்வாங்கிக்கொண்டிருந்தது.

யாழ்ப்பாணக் குடாநாட்டை இருள் விழுங்கிக்கொள்ள, பலாலிப் பெருந்தளத்தை, மின்னாக்கி ஒளிவெள்ளத்தில் அமிழ்த்தியது!

மாலை 6.30 மணியைக் கடந்துவிட்டிருந்த நேரம்.

தங்கள் இலக்கை நோக்கி அவர்கள் நகர்ந்து கொண்டிருந்தார்கள்.

வேவுப் புலி வீரர்கள் முன்னே; கரும்புலி வீரர்கள் பின்னே.

மாவிட்ட புரத்தையும், தெள்ளிப்பளையையும் இணைக்கும் பிரதான் வீதியும், தச்சன்காட்டிலிருந்து வந்து அதனைச் சந்திக்கும் குறுக்கு வீதியும் இராணுவச் சப்பாத்துக்களால் மிதிபட்டு பேச்சு மூச்சற்றுக் கிடந்தன.

வீதியோரமாக, தட்ச்சன்காட்டடியில் அணி நகர்ந்துகொண்டிருந்த சமயம் ,

அவதானமாக; மிக அவதானமாக அவர்கள் ஊர்ந்துகொண்டிருந்த போது.

தீடிரென தெல்லிப்பளை பக்கமகாகக் கேட்டது ‘ட்ரக்‘ வண்டிகளின் உறுமல்.

பயங்கர வேகத்தோடு அது நெருங்கிக்கொண்டிருந்தது.

“நேராக மாவிட்டபுரம் பக்கம்தான் போகப்போறான்” என நினைத்த வேளை, தட்ச்சன்காட்டுப் பக்கமாகவே திரும்பினான். வந்த வேகம் தனியாமலேயே.

நல்ல காலம்…

பளீரென அடித்த ஒழி வெள்ளத்தினுள் மூழ்கிப் போகாமல், பக்கத்திலிருந்த காணிக்குள், எல்லோரும் சம நேரத்தில் பாய்ந்து மறைந்து விட்டார்கள்.

அவர்களைக் கடந்து நேராகச் சென்று, சந்திக் காவலரனடியில் நின்றவன், நின்றானா …..? அந்த வேகத்திலேயே திரும்பி வந்தான்.

‘என்ன நசமடாப்பா …. ? ‘ என நினைத்த வேளை ‘ட்ரக்’ வண்டிகள் இரண்டும் அவர்களுக்கு நேர் முன்னே வந்து சடுதியாய் தரிக்க ….

சில்லுகள் கிளப்பிய புழுதியோடு, புற்றீகலாய்க் குதித்தனர் சிங்களப் படையினர்.

குழல் வாய்கள் தணலாக துப்பாக்கிகள் பேசத்துவங்கின. ‘பொம்மருக்கென்று‘ காவி வந்த நவரட்னத்தின் “லோ” ஒன்று, ‘ட்ரக்‘ வண்டியைக் குறிவைத்து முழக்கியது.

எல்லோரும் ஓடத் துவங்கினர். அது சண்டை போடக்கூடிய இடமல்ல; சண்டை பிடிப்பதற்குரிய நேரமுமல்ல.

அவர்கள் அங்கே போனது இதற்காக்கவுமில்லை.

எங்கே தவறு நடந்தது ……? எங்காவது சுத்துச் சென்றிக்காரன் கண்டானோ….? ‘டம்மி‘ என்று நினைத்த பொயின்ரிலிருந்து பார்த்துச் சொன்னானோ? எங்காவது வீடு உடைத்து சாமான் எடுக்க வந்த ஆமி கண்டு அறிவித்தானோ….?

என்னவாகத்தான் இருந்தாலும், அவர்கள் சென்ற சொக்கம் கெட்டுவிட்டது.

தட்சன்காட்டில் நிகழ்த்த அந்த துரதிர்ஷ்டம்தான், எங்களது தாக்குதல் திட்டத்தையே திசைமாற்றியது.

“திரு” இல்லை “ரங்கன்” இல்லை; “புலிக்குட்டிக்கு” என்ன நடந்ததென்று தெரியவில்லை; ராஜேஷ் ஒரு வழிகாட்டி. அவனையும் காணவில்லை.

எங்கள் தாக்குதலணி சேதாரப்பட்டுவிட்டது.

ஏனையோர் ஒரு பக்கமாக ஓடியதால் சிதறாமல் ஒன்றாயினர்.

தாம் வந்த காரியத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டிய தவிர்க்க முடியாத கட்டாயம் எழுந்துவிட்டத்தை, எஞ்சியவர்கள் உணர்ந்தனர்; இந்தச் சண்டையோடு எதிரி உசாரடைந்துவிடுவான். கரும்புலி வீரர்கள், வேவுப்புலி வீரர்களை அவசரப்படுத்தினர்.

“உடனடியாக எங்களைத் தாக்குதல் முனைக்குக் கூட்டிச் செலுங்கள்.”

அடுத்த சில மணி நேரங்களின் பின் பொழுது நள்ளிரவை நெருங்கிக்கொண்டிருந்த சமயத்தில்….. அவர்கள், வான்படைத் தளத்தின் முட்கம்பி வேலிக்கருகில் தயாராகிக்கொண்டிருந்தனர்.

பிரதான கட்டளையகத்தோடு கெனடி தொடர்பு எடுத்தான். நடந்து முடிந்த துயரத்தை அவன் அறிவித்தான்.

“7 பெருக்கென வகுக்கப்பட்ட தாக்குதல் திட்டத்தில் எஞ்சியிருப்பது 4 பேர் மட்டுமே” என்பதை அவன் தெரியப்படுத்தினான். “எதிரி முழுமையாக உசார் அடைந்துவிட்டதால், இருக்கிரவர்களுடன் உடனடியாக தாக்குதலை ஆரம்பிக்க வேண்டும்” என்று வலியுறுத்தினான். “தாமதிகின்ற ஒவ்வொரு நிமிடமும் இலக்குகள் தப்பிப் போக நாங்கள் வழங்குகின்ற சர்ந்தப்பங்கள்” என்பதை விளக்கினான். “தாக்குதலை நிகழ்த்தாமல் திரும்பி, தப்பித்து வெளியேறுவதும் சாத்தியப்படாது” என்பதையும் சொன்னான்.

அவனிடம் சற்று நேரம் அவகாசம் கேட்க பிரதான கட்டளையகம், பிரத்தியேகமாக அமைக்கப்பட்டிருந்த இன்னொரு கட்டளைகத்தோடு கலந்து பேசியது. கெனடி சொல்வதே சரியானது எனவும், அதைவிட வேறு வழியில்லை எனவும் பட்டது.

தாக்குதலுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.

முட்கம்பி வேலிகளை நறுக்கி அறுத்த வேவுப்புலி வீரர்கள் பாதை எடுத்துக் கொடுக்க, வான்தளத்தில் இலக்குகளைத் தேடி கரும்புலி வீரர்கள் உள்ளே நுழைந்தனர்.

நவரட்ணம் கடைசியாய் வரைந்த மடலிலிருந்து….

அம்மா! அப்பா!

இனத்துக்கு சுதந்திரமாக ஒரு நாடு இருந்தால்த்தான், எங்களுக்கு நிரந்தரமாக ஒரு வீடு இருக்கும். சுதந்திரமான ஒரு நாடு அமைக்கவே நான் போராட வந்தேன். இனித் தமிழீழத்தில் குண்டுகள் விழக்கூடாது; இதற்காகவே நான் இன்று கரும்புலியாய்ச் செல்கின்றேன்.

என் ஆசை தங்கச்சி!
உனது அடுத்த பரம்பரை, எம் எதிர்கால சந்ததி, மிக மகிழ்ட்சியோடு வாழவேண்டும் என்பதற்காகவே, நான் கனவிலும் நினையாத களம் நோக்கிப் புறப்படுகின்றேன்.

வெல்க தமிழீழம் !

அசொக்கிடமும், ரஞ்சனிடமும் விடைபெற்று அவர்கள் உள்ளே சென்றுவிட, அவர்களிடம் விடைபெற்றுக்கொண்டு, இவர்கள் வெளியே திரும்பிக்கொண்டிருந்தனர்.

விடி சாம நேரம்.

படு இருள்.

மிகக் குறுகிய துரத்திர்க்குள் தான் எதனையும் மங்கலாய்த் தன்னும் பார்க்க முடியும்.

மாவிட்டபுரத்திற்க்கு பக்கத்தில் ஒரு குச்சொழுங்கையால் அவர்கள் திரும்பிகொண்டிருந்த போது,

ஒரே ஒரு மணித்துளி……

இருந்தாற் போல்….. அந்த இருளுக்குள் இருளாக …. அவர்களிற்கு முன்னாள்…..

அதென்ன……? நில்லாக் எதோ அசைவது போல உள்ளது!

ரஞ்சனின் கைகளைச் சுரண்டி மெதுவாக, “ஆமி நிக்கிறான் போ ……”, அசோக் சொல்லிமுடிக்கும் முன் தீப்பொறி கக்கிய சுடுகுழழிளிருந்து காற்றைக் கிழித்துச் சீரிய ரவைகள், அசோக்கின் தசைநார்களையும் கிழித்துச் சென்றன!

தலையோ…. கழுத்தோ….. நெஞ்சுப்பகுதியாகவும் இருக்கலாம ….. சரியாகத் தெரியவில்லை….. சன்னங்கள் பாய்ந்து சல்லடையாக்கிச் சென்றன.

“அம் ….” முழுமையாக வெளிவராத குரலுடன், குப்பற விழுந்தான் அந்த வீரன்.

அடுத்த நிமிடத்தில்….

கொஞ்சம் ரவைகளையும் ஒரு கைக்குண்டையும் பிரயோகித்து, அசோக்கையும் பறிகொடுத்துவிட்டு, பக்கத்துக் காணிக்குள் பாய்ந்து ரஞ்சன் ஓடிக்கொண்டிருந்தான்.

முன்பொரு நாள் ….

மயிலிட்டிப் பக்கமாக வேவுக்குச் சென்ற ஒரு இரவில், இராணுவம் முகாமிட்டிருக்கும் பாடசாலை ஒன்றை ரஞ்சனுக்குக் காட்டி, அசோக் மனக்குமுறலோடு சொன்னானாம்.

“இதுதான்ரா நான் படிச்ச பள்ளிக்கூடம்; இண்டைக்கு இதில சிங்களவன் வந்து குடியிருக்கிறான் மச்சான்…… வீட்டுக்கு ஒரு ஆளேண்டாலும் போராட வந்தா இந்த இடமேல்லாத்தையும் நாங்கள் திருப்பி எடுக்கலாம் தானேடா…..”

ரஞ்சனது நெஞ்சுக்குள் இந்த நினைவு வந்து அசைந்தது.

தொடர்ந்து நகருவது ஆபத்தாயும்முடிந்துவிடக்கூடும் என்பதால், அருகிலேயே ஒரு மரைஇவிடம் தேடி அவன் பதுங்கிக்கொண்டான்.

இப்போது அவன் தனித்த்துப்போனான்; கூடவந்த தோழர்கள் எல்லோரினதும் நினைவுகள், இதயமெல்லாம் நிறைந்து வாட்டின.

இனி எப்படியாவது அங்கிருந்து அவன் வெளியேற வேண்டும். வந்தவர்களில் எஞ்சியிருப்பது அவன் மட்டும்தான். நடந்தவற்றைப் போய் சொல்வதற்காவது, அந்த மரணக்குகைக்குளிருந்து அவன் பாதுகாப்பாகத் தப்பிக்க வேண்டும். எனவே அவன் இனி மிக அவதானமாக இருக்கவேண்டியது கட்டாயமாகிறது.

மெல்ல விடிந்தது.

அவன் தொடர்ந்து நகர்ந்து வெளியேற நினைத்த போது,

மின்னலென ஒரு யோசனை மூளைக்குள் பொறிதட்டியது.

‘தச்சன்காட்டில் யாரவாது அதிஷ்டவசமாகத் தப்பியிருக்கலாம். அவர்கள் பாதை தெரியாமல் மாறுபட்டு, வேவு வீரர்கள் திரும்பி வருவார்கள் என நம்பி உள்ளே நுழைந்த முதல் நாள் இரவு அவர்கள் தங்கிய தரிப்பிடத்தில் போய் நிற்கக்கூடும்.

நப்பாசைதான்; ஒரு மன உந்துதலோடு அவன் போனான்.

அவன் அங்கே செல்ல…… அங்கே …..!

என்ன அதிசயம்! அவன் நினைத்து வந்ததைப் போலவே அவர்கள்….

ஆனால் நால்வருமல்ல .

ரங்கனும் , புலிக்குட்டியும் மட்டும் நின்றார்கள்; ராஜேஷ் இல்லை, ‘திரு‘ வும் இல்லை.

அவனைக் கடந்தும் அவர்கள் மட்டற்ற மகிழ்ட்சி ‘போன உயிர் திரும்பி வந்தது போல’ என்பார்களே, அப்படி ஒரு மகிழ்ட்சி. “உடனே எங்களைக் கொண்டுபோய் கெனடி அண்ணனிட்ட விடு; இண்டைக்கு இரவுக்காவது அடிக்கலாம்” என்று அவர்கள் அவசரப் படுத்திய போது,

ரஞ்சன் நடந்தவற்றைச் சொன்னான்.

அந்தக் கரும்புலி வீரர்களால் அதனைத் தாங்கமுடியவில்லை. தாங்கள் பங்கு கொள்ளாமல் அந்தத் தாக்குதல் நடந்து முடிந்ததை அவர்களால் நினைத்துப் பார்க்கக்கூட முடியவில்லை. தங்களது கைகளை மீறி எல்லாம் நடந்து முடிந்துவிட்டதை எண்ணி, அவர்கள் மனம் புழுங்கினார்கள்.

எல்லாம் முடிந்தது.

“இனி நாங்கள் எப்படியாவது, எந்தப் பிரசினையும் இல்லாமல் வெளியில் போய்விட வேண்டும்” என்றான் ரங்கன். போகத்தானே வேண்டும் , பிறகென்ன…..? ஆனால், ரங்கன் அதற்க்குக் காரணம் ஒன்றைச் சொன்னான்.

“இதற்குள் நிற்கும்போது எங்களுக்கும் ஏதாவது நடந்தால், இயக்கம் எங்களையும் கரும்புலிகள் என்றுதானே அறிவிக்கும். அப்போது விமானங்களை அழித்தவர்கள் என்ற பெயர்தானே வரும். ஆனால், அவர்களுடைய தியாகத்தில் நாங்கள் குளிர்காயக்கூடது.” இதுதான் அவனுடைய மனநிலை.

மிகவும் பாதுகாப்பானது என்று கருதிய பாதை ஒன்றினால் வெளியேற அவர்கள் முடிவு செய்தனர்.

ரஞ்சன் வழிகாட்டினான் ; கூட்டிவந்த வேவு வீரர்களில் இப்போது எஞ்சியிருப்பது அவன்மட்டும்தான்.

பகற்பொழுது , எனவே ஆகக்கூடிய அவதானத்துடன் அவர்கள் நகர்ந்துகொண்டிருந்தனர்.

மெல்ல மெல்ல சூரியன் உச்சியை நோக்கி உயர்ந்துகொண்டிருந்தான்.

அப்போது அவர்கள் சீரவளைக்குப் பக்கத்தில் போய்க்கொண்டிருக்கிறார்கள்.

சரியாக நினைவில் இல்லை, ஒரு பதினோரு மணியிருக்கும் .

ஒரு பற்றைக்குள்ளிருந்து “கதவு …. ?” என ஒரு குரல் கேட்டது.

திரும்பிப் பார்த்தால், ஒரு சிங்களப் படையால் குந்திக்கொண்டிருந்தான்; தங்களுடைய ஆட்கள் என்று நினைத்திருப்பான் போலும்.

என்ன பதிலி சொல்வது ….? அவர்கள் யோசிக்க, அவனுக்குள் சந்தேகம் எழுந்துவிட்டது.

சற்று உறுத்தலாக, “ஓயா கவுத …..?” கேட்டுக்கொண்டே துப்பாக்கியைத் தூக்கிக்கொண்டு அவன் எழ, ரஞ்சனின் கையில் இருந்த “ரி – 56” அவனுக்கு பதில் சொல்லியது.

“நாங்கள் புலிகள்.”

வெடித்தது சண்டை …

அவர்கள் ஓடத் துவங்கினர் ; மொய்த்துக்கொண்டு கலைத்தனர் சிங்களப் படையினர்.

கணிசமானதொரு துறை இடைவெளியில் அந்தக் கலைபாடு நடந்தது. பகைவனின் சன்னங்கள் அவர்களை முந்திக்கொண்டு சீறின.

திடிரென ரங்கன் கத்தினான், “டே! என்ற காலில் வெடி கொளுவிற்றுதடா ….”

ஓடிக்கொண்டே பார்த்தவர்கள், வலது கால் என்பது தெரிகிறது; எந்த இடத்தில் என்பது தெரியவில்லை. அதைத் தெரிந்து கொள்வதால் எந்தப் பயனும் வந்துவிடப் போவதுமில்லை.

ரங்கன் ஓட ஓட அவனது காலிலிருந்து ரத்தம் தெறித்துக்கொண்டிருந்தது.

இவர்களால் எதுவுமே செய்ய முடியாது. எதனையும் செய்ய வேண்டுமென அவனும் எதிர்பார்க்கவும் இல்லை.

“என்னால் எலாதடா….. என்னை சுட்டுப்போட்டு நீங்கள் ஒடுங்க்கோடா!” ரங்கன் கத்தினான்.

அவன் ஓட முடியாமல் பின்வாங்கிக்கொண்டிருந்தான்.

ரஞ்சன் சொன்னான். “குப்பியைக் கடித்துக் கொண்டு….. ‘சாஜ்ஜரை‘ இழு மச்சான் …..”

“சாஜ்ஜர்” உடலோடு இணைக்கும் வெடிகுண்டு. தாக்குதலுக்குப் புறப்படும்போது கரும்புலி வீரர்களுக்கு வழங்கப்பட்டது. சண்டைக்களத்தில் எதிரியிடம் பிடிபடக்கூடிய சர்ந்தபம் வருமானால், ஆகக் கடைசி வழியாக அவர்களைக் காக்கும்.

ரங்கன் குப்பியைக் கடித்துக்கொண்டே “சாஜ்ஜரின்” பாதுகாப்பு ஊசியை இழுத்து எறிந்தான்.

மெல்ல மெல்ல அவன் பின்தங்கி விழ, கலைத்துக்கொண்டு வந்த படையினர் அவனை நெருங்க…..

சாஜ்ஜரும் ரங்கனும் வெடித்துச் சிறரிய சத்தம், ஓடிக் கொண்டிருந்தவர்களின் காதில் விழுந்தது. திரும்பிப் பார்த்தார்கள்….. புகையும், அவனது உயிரும் தமிழீழத்தின் தென்றலோடு கலந்துகொண்டிருந்தன.

அந்த வெடி அதிர்ட்சியில் குழம்பித் தடுமாறி, பகைவன் திரும்பவும் கலைக்கத் துவங்க முன், அவர்கள் ஓடி மறைந்து விட்டார்கள்.

எங்கோ பதுங்கியிருந்து. எல்லாம் அடங்கிய இரவாகிய பின் மெல்ல மெல்ல நகர்ந்து வெளியில் வந்தனர் ரஞ்சனும் புலிக்குட்டியும்.

தச்சன்காட்டில் மாறுபட்டுக் காணாமற்போன ராஜேசும் இந்து நாட்களின் பின்னர், ஒருவழியாக வந்து சேர்ந்தான்.

ஆனால் அசோக் வரவில்லை; ரங்கன் வரவில்லை; திருவும் வரவில்லை.

நடு இரவு கடந்து போனது.

ஒகஸ்ட் 2 ஆம் நாளின் ஆரம்ப மணித்துளிகள் சிந்திக்கொண்டிருந்தன.

கெனடி பிரதான கட்டளையகத்துக்கு விபரத்தை அறிவித்தான்.

“இப்போ நாங்கள் நான்கு பேர்தான் நிற்கின்றோம். ஜெயம், நவரட்ணம், திலகன், மற்றும் நான். நாங்கள் தாமதிக்க முடியாது; மற்றவர்களுக்கு என்ன நடந்தது என்பதும் தெரியாது; அவர்கள் வருவார்கள் என எதிர்பார்க்க முடியாது. எனவே நாங்கள் நால்வரும் உள்ளே இறங்குகின்றோம். எங்களால் முடிந்தளவிற்கு வெற்றி கரமாகச் செய்கின்றோம்.”

தச்சன்காட்டுச் சண்டையின் செய்தி எங்கும் பறந்தது.

அந்தப் பெருந்தளம், மயிர்களைச் சிலிர்த்துக்கொண்டு நிமிரும் ஒரு சிங்கத்தைப் போலத் துடித்தெழுந்தது.

ஆபத்து தங்களது வீட்டுக்குள்ளேயே நுழைந்துவிட்ட அச்சம் சிப்பாய்களைக் கவ்விக்கொண்டது.

சுடுகருவிகள் தயாராகின.

எந்த நேரத்திலும், எந்த முனையையும் உள்ளே நுழைந்து புலிகள் தாக்குவார்கள் எனப் படிவீரர்கள் எச்சரிக்கப்பட்டனர்.

விமான ஓட்டிகள் வானுர்த்திகளில் ஏறித் தயார்நிலையில் இருக்குமாறு பணிக்க்க்கப்பட்டனர்.

வான்படைத் தளத்தைப் பாதுகாக்கும் காவலரண்களும் , வானுர்த்திகளுக்குரிய காவற்படையினரும் உசார்நிலையில் வைக்கப்பட்டனர்.

பாதுகாப்பு ஏற்பாடுகள் உச்சநிலைக்கு வந்து பரிபூரணமாக ஆயத்தமாகிய பகைவன், எதனையும் எதிர்கொள்ளத் தயாராகப் போர்க்கோலம் பூண்டு நின்ற வேளை…

யுத்த சன்னதர்களாகப் புறப்பட்டுச் சென்ற எங்கள் கரும்புலி வீரர்கள்….. சிங்களத்தின் சிலிர்ந்து நின்ற பிடரி மயிர்களினூடு ஊர்ந்து, அதன் முகத்தை நெருங்கினர்.

பிரதான கட்டளையகத்திலிருந்து “வோக்கி”யில் கெனடியின் குரல் ஒலித்தது. கெனடி நிலைமையை விளக்கினான்.

“நாங்கள் நல்லா கிட்ட நெருங்கிற்றம் ….”

“ஏதாவது தெரிகின்ற மாதிரி நிற்கிறதா?”

“நாங்கள் தேடிவந்ததில் ஒன்றுதான் நிற்குது. பக்கத்தின் ஒருத்தன் நிற்கின்றான்.”

“வேறு ஒன்றும் இல்லையா …..?”

“அருகில் சின்னன் ஒன்று ஓடித்திரியுது.”

“நீங்கள் தேடிப்போன மற்றதுகள் …..?”

“இங்கு இருந்து பார்க்க எதுவும் தெரியேல்ல, துரத்தில் நிற்கக்கூடும். இறங்க்கினதற்குப் பிறகுதான் தேடக்கூடியதாக இருக்கும்.”

“இப்ப நீங்கள் இறங்கக்கூடிய மாதிரி நிற்க்கிறீங்களா…….?”

“ஓமோம் ….. குண்டு எரியக்கூடிய துரத்திற்கு வந்திட்டம். நீங்கள் சொன்னால் நாங்கள் அடிச்சுக் கொண்டிறங்கிறம்.”

“அபடியெண்டால் நீங்கள் அப்படியே செய்யுங்கோ.”

கட்டளையகம் அனுமதி வழங்கியது.

அதன் பிறகு என்ன நடந்திருக்கும் ……?

கெனடி உத்தரவிட்டிருப்பான்.

“தாக்குதலை ஆரம்பியுங்கள்”

நவரட்னத்தின் கையிலிருந்த “லோ” முழங்க “பெல் 212” இல் தீப்பற்றி எரியும்போது, கெனடி “டொங்கா”னால் அடிக்க திலகன் அதன் மீது கைக்குண்டை வீசியிருப்பான்.

அதே சம நேரத்தில்….. ஜெயத்தின் “லோ” பவள் கவச வண்டியைக் குறிவைத்து முழங்கியிருக்கும்.

பலாலித் தளத்தின் மையமுகாம் அதிர்ந்திருக்கும்.

தங்கள் அனைத்துக் கவசங்களையும் உடைத்து நுழைந்து, பாதுகாக்கப்பட்ட அதியுயர் கேந்திரத்தையே புலிகள் தாக்கிவிட்டத்தை எதிரி கண்முன்னால் கண்டு திகைத்திருப்பான்.

சன்னங்களைச் சரமாரியாய் வீசிரும் துப்பாக்கிகளோடு கூச்சலிட்டபடி பகைவன் குவிந்து வர….. கெனடியின் “டொங்கான்” எறிகணைகளைச் செலுத்தியிருக்கும்.

திலகனின் “ரி – 56” ஓய்வற்று இயங்கிக்கொண்டிருக்க, தங்களது அடுத்த இலக்கைத் தேடி அவர்கள் ஓடிக்கொண்டிருந்திருப்பார்கள்.

“கெனடி…… கெனடி….. நிலைமை என்ன மாதிரிஎன்று எங்களுக்கு சொல்லுங்கோ ……”

“ஒரு ஹெலியும் ஒரு பவளும் அடிச்சிருக்கிறம். ரெண்டும் பத்தி எரிக்ஞ்சுகொண்டிருக்குது…. கிட்டப் போக ஏலாம சுத்தி நிண்டு கத்திக் கொண்டிருக்குராங்கள். ”

“மற்றது என்ன மாதிரி …..?”

“தொடர்ந்து அடித்துக்கொண்டு உள்ளே இறங்கிக்கொண்டிருக்கிறம்…..
பொம்மருகளைத் தேடுறம்….”

ஆனால் 500 மீற்றருக்கு அகன்று 2600 மீற்றருக்கு நீண்டிருந்த விசாலமான ஒரு பாதை அது. மிகவும் துரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ”சியா மாசெட்டி” குண்டு வீச்சு விமானங்களில் தயாராய் இருந்த ஓட்டிகள் அவர்ரியா மேலேடுத்துவிட்டனர்.

கெனடியின் தொடர்பு நீண்ட நேரத்தின் பின் கிடைத்தது.

“கெனடி…. நிலைமை எப்படி எண்டு சொல்லுங்கோ …..”

“ஒரு ‘ஹெலி‘யும் ஒரு ‘பவளும்‘ அடிச்சிருக்கிறம்…. முழுசா எரிஞ்சு கொண்டிருக்கு ….. புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்.”

“கெனடி ….. நீங்கள் அவசரப்பட வேண்டாம். …. மற்ற ஆக்கள் என்ன மாதிரி?”

“நானும் திலகனும் நிக்கிறம் …..”

“கெனடி….. நீங்கள் அவசரப்படாதேங்கோ ….. தொடர்ந்து எதுவும் செய்யக்கூடிய மாதிரி இல்லையா ……?”

“அண்ணை….. ….. எனக்கு ரெண்டு காலும் இல்லையண்ணா ……”

“……………………………………………”
“…………………………………….. …..”
“…………………………………………”

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் ; புலிகளின் தாகம் ……. தமிழீழ ……”

“கெனடி …….. கெனடி ……”
“கெனடி …….. கெனடி ……”
“திலகன் …….. திலகன் ……”
“கெனடி …….. கெனடி ……”
ஒரு முதியவர் நீண்ட பெருமூச்சொன்றை விட்டுக்கொண்டு….…

“எண்டா தம்பி செய்கிறது…… வயதும் போகுது….” என்று கவலைப்பட்டபோது.

அருகில், “ஈழநாதம்” நாளேட்டில் அவர்களின் படங்களைப் பார்த்து நின்ற அவரின் துணைவியார் ஏக்கத்தோடு சொன்னார்.

“நீங்கள் வயது போகுதெண்டு கவலைப்படுறியள்…. எத்தின பிள்ளைகளுக்கு வயது போறதேயில்லை …….!”

வெளியீடு : உயிராயுதம் பாகம் 01


August 1st

August 2nd

August 3rd

தரைத்தாக்குதலனியின் சிறந்த முன்னனி அணித்தலைவன் லெப் கேணல் கதிர்வாணன்!

லெப் கேணல் கதிர்வாணன்.
மகேந்திரன் திருக்குமார்
வீரச்சாவு.29.07.2008

2002ம் ஆண்டு சமாதானக் காலப்பகுதியில் தளபதி கண்ணன் அவர்களிடம் தன்னை இணைத்துக் கொண்ட கதிர்வாணன் அடிப்படைப் பயிற்சிகளை முடித்து வெளியேறியவன் .தொடர்ந்து படைய அறிவியல் பிரவிற்க்கு சென்றான்.அங்கே படித்துக் கொண்டிருந்த காலப்பகுதியில் தலைவர் அவர்களின் பணிப்புரைக் அமைவாக படைய அறிவியற் கல்லூரிப் போராளிகளில் குறிப்பிட்டளாவானவர்கள் கடற்புலிகளுக்குள் உள்வாங்கப்பட்டபோது கதிர்வாணனும் ஒருவனாக வந்தான்.

இங்கு வந்தவர்களுடன் மேலும் பல போராளிகளுடன் தலைவர் அவர்களின் சிந்தனைக்கமைவாக லெப் கேணல் நிரோஐன் கடற்படைக்கல்லூரி ஆரம்பிக்கப்பட்டு அங்கே ஆழ்கடல் சண்டைக்கான பயிற்சிகள் மற்றும் வகுப்புக்களும் நடந்தன. அங்கு நடைபெற்ற வகுப்புக்கள் மற்றும் பயிற்சிகளிலும் ஏனைய செயற்பாட்டிலும் சிறந்து விளங்கினான் . இவனது திறமையான செயற்பாடுகள் மற்றும் சகபோராளிகளுடன் பழகுகிற விதம் இவைகள் கவனிக்கப்பட்டு. அக்கல்லூரியின் நிர்வாகப் பொறுப்பாளனாக நியமிக்கப்படுகிறான்.அப்பணிகளிலும் சிறந்து விளங்கினான்.சமாதானம் முறிவடைந்து சண்டை ஆரம்பமாகியபோது படகின் இரணடாம் நிலைக் கட்டளை அதிகாரியாகச் செயற்பட்டு பலகடற்சமர்களில் பங்குபற்றினான்.

அத்தோடு தென்தமிழீழ விநியோக நடவடிக்கை படகின் கட்டளை அதிகாரியாகச் சென்று வந்தான்.அது மட்டுமல்லாமல் கடற்கரும்புலிகளுக்கான பயிற்சித் திட்டத்தில் பங்குபற்றி அவர்களுக்கான பயிற்சிகளையும் வழங்கினான்.தொடர்ந்து கடற்புலிகளின் கடற்தாக்குதலனியிலிருந்த குறிப்பிட்டளவான போராளிகள் கடற்புலிகளின் தரைத்தாக்குதலணிக்குள் உள்வாங்கப்பட்டபோது கதிர்வாணனும் உள்வாங்கப்பட்டான்.தரைத்தாக்குதலுக்கேற்றமாதிரியாக பயிற்சிகளை முடித்தவன் கடற்புலிகளால் மேற்கொள்ளப்பட்ட நெடுந்தீவு, சுட்டதீவு , எருக்கலமபிட்டி போன்ற படையினரின் மினிமுகாம்கள் மீதான தாக்குதலிகளில் ஒரு அணியை வழிநடாத்தி மிகத்திறமையாக பங்காற்றினான்.அதற்காக சிறப்புத் தளபதி சூசை அவர்களால் பாராட்டிக் கௌரவிக்கப்பட்டான்.

கடற்புலிகளின் தரைத்தாக்குதலணி மன்னார் களமுனையின் ஒருபகுதியை பொறுப்பெடுத்தபோது அதில் ஒரு பகுதிக்கான பொறுப்பாளனாக சிறப்புத்தளபதியால் நியமிக்கப்பட்டு அக்களமுனையில் படையினரின் முன்னேற்றத்திற்கான மறிப்புத்தாக்குதலை செவ்வனவே வழிநாடத்தினான்.சிறந்த நிர்வாகியாக கடற்தாக்குதற் படகின் கட்டளை அதிகாரியாக தரைத்தாக்குதலனியின் சிறந்த முன்னனி அணித்தலைவனாக இப்படியாக பல்வேறுபட்ட பணிகளை செவ்வனவே செய்து கொண்டிருந்த கதிர்வாணன் . 29.07.2008 அன்று முழங்காவில் பகுதியில் சிறிலங்காப் படையினரின் ஆக்கிரமிப்புக்கெதிரான சமரில் வீரச்சாவடைகிறான்.

இலை குழைகளை தின்று உயிர் தப்பி தளம் திரும்பிய சிறுத்தைப் படையணி பெண் போராளிகள்.

1995 ஆம் ஆண்டின் ஆடி மாதத்தின் 28 ஆம் நாள் தமிழீழ விடுதலைப் புலிகளின் பலமான ஒரு படையணியை தமிழீழமும் சர்வதேச சக்திகளும் உணர்ந்து கொள்ள இருந்த நாள். இவர்கள் யார் என்று சிங்களப் படைகளும் அதன் அரசும் நிட்சயமாக உணர்ந்தன. ஆனாலும் துரோகத்தால் மலிந்து போன எம் விடுதலைப் போராட்ட வரலாற்றில் பல இழப்புக்களை நாம் சந்திக்க நேர்ந்த . நாளாக இன்றைய நாள் பதிவாகி இருந்தது.

சிறுத்தைப் படையணித் தளபதிகளில் ஒருவரான லெப்.கேணல் கோமளா உட்பட்ட 57 போராளிகளை நாம் இழக்க நேரிட்டதும். இன்றைய நாளில் தான். ஆனாலும் இன்றைய நாளும் இந்தச் சண்டையும் எமக்கு பெரும் வெற்றியைத் தந்திருந்தது. தமிழீழ பெண்களின் வீரத்தை சிங்களம் உணர்ந்து கொண்ட முக்கியமான சண்டையாக இது அமைந்தது.

இரவோடு இரவாக மணலாறு காட்டினூடாக தகர்தழிப்புத் தாக்குதல் ஒன்றுக்கான முழுத் தயார்ப்படுத்தலுடன் நகர்ந்திருந்தது தமிழீழ விடுதலைப்புலிகளின் சிறப்புப் படையணியான “சிறுத்தைப் படையணி” சிறுத்தைப் படையணியின் சிறப்புத் தளபதியான கேணல் ராஜூ அவர்களின் ஒருங்கிணைப்புக் கட்டளையின் கீழ் லெப் கேணல் கோமளாவின் வழிநடத்தலுடன் நகர்ந்து சென்ற அப் படையணியின் பெண் போராளிகள் பெரும் வரலாறு ஒன்றை பதிவு செய்யத் துடித்துக் கொண்டிருந்தார்கள்.

மண்கிண்டி மலை, கொக்குத்தொடுவாய், டொலர்பாம், கென்பாம், வெலிஓயா ( மணலாறு என்ற தமிழ் பெயரை நேரடியாக சிங்களத்தில் மொழிபெயர்த்து வெலி- மணல் , ஓயா – ஆறு இப்பெயரை வைத்திருந்தது சிங்கள அரசு) என்ற இடத்தில் அமைந்திருந்த “பராக்கிரம்பாகு “முகாம் போன்ற 5 பாரிய படைத்தளங்களின் ஒருங்கிணைப்புச் செயலகமாக இருந்த வெலிஓயா படைத்தளத்தை கட்டுப்படுத்தி சம நேரத்தில் நடக்க இருந்த ஏனைய படைத் தளங்கள் மீதான தாக்குதல்களுக்கு இடையூறாக இருக்கக் கூடிய கட்டளைகளையும், வளங்கல்களையும், எறிகணை மற்றும் மோட்டார் உதவித் தாக்குதல்களையும் தடுக்கவும் என இவ்வணி வெலிஓயாத் தளத்தை நோக்கி சென்றது.

வெலிஓயா சார்ந்த பகுதிகள் எங்கும் சிறு சிறு அணிகாளாக பரவிக் கொண்டார்கள் சிறுத்தைப்படையணியின் பெண் போராளிகள்.

அந்த தாக்குதலுக்கு சென்ற அத்தனை போராளிகளும் சாதாரண போராளிகள் அல்ல. தமிழீழத்தின் உயிராயுதங்களுக்கு நிகரானவர்கள். கரும்புலிப் படையணிக்குள் உள்வாங்கப்படாமல் இருந்தாலும் சிறப்புப் படையணியாக இருந்து கொண்டு கரும்புலிகளின் தீரத்தோடு செயற்பட்டவர்கள். தாக்குதலுக்கு செல்லும் போது “சார்ச்சர்” எனக் கூறக்கூடிய வெடியுடையை அணிந்தே இவர்களும் சென்றிருந்தார்கள்.

அவ்வணிகளுக்குள் மேஜர் மாதங்கி தலமையில் ஒரு அணி வெலிஓயா படைமுகாமை தாக்கி அழித்து விடும் நோக்கத்தோடு உள் நுழைந்திருந்தது. ஏனைய அணிகள் வெலிஓயா படைமுகாமை சுற்றி படையினரின் வழங்கல் அணியினர் மற்றும் உதவி அணியினரின் வருகையைக் காத்து நிலையெடுத்திருந்தனர். எவ்வகையிலும் தாக்குதல் வரலாம் என்ற எதிர்பார்ப்போடு முறியடிப்புத் தாக்குதலுக்கான ஆயுத்தத்தோடு கோமளா தனது போராளிகளை தயார்நிலையில் வைத்திருந்தார். முகாமுக்குள் உள் நுழைந்த அணி 3 பேர் கொண்ட சிறு அணிகளாக பிரிந்து அப்படை முகாமை தாக்கத் தயாராக இருந்தார்கள்.

அதே நேரம் பின்னணியில் தாம் வளர்த்த தமது சிறப்புப் படையணியின் முதல் வெற்றிச் செய்தியை கேட்க தயாராக இருந்தார்கள் தேசியத்தலைவரும் அவரது மூத்த தளபதிகளும்.

பெரும் எதிர்பார்ப்பு அனைவரிடமும் இருந்தது. எதிர்பார்ப்பு வீண்போகவும் இல்லை. உள்நுழைந்த வீர வேங்கைகள் சாதித்தார்கள். தாம் நேசித்த தலைவன் எதிர்பார்த்ததை செய்து முடித்தார்கள். விடுதலைப்புலிகளின் சிறப்புப் படையணியின் சிறுத்தைப் படையணியின் பெண் போராளிகள் என்றால் இது தான் என்று சர்வதேசத்துக்கும் சிங்களத்துக்கும் உணர வைத்தார்கள்.

இவ்வாறான காத்திருப்பு நேரத்தில் உள்நுழைந்த அணி சரியான இலக்குகளுக்குப் போய்விட்டதை உறுதிப்படுத்திய கோமளாவுக்கு ராஜூ அவர்கள் சண்டை ஆரம்பிப்பதற்கான சமிக்கையை கொடுக்க, தாக்குதலை ஆரம்பிக்க உத்தரவிடுகிறார் கோமளா.

பாரிய எதிர்ப்பின் மத்தியிலும் பெரும் பாதுகாப்பரன்களை உடைத்தெறிந்து உள் நுழைந்த படையணி சிறு சிறு அணிகளாக தாக்கத் தொடங்கியது. புலிகளின் அதிரடித்தாக்குதலை எதிர்பார்க்காத சிங்களப்படை திணறியது. எங்கு திரும்பினாலும் புலிகளின் ஆயுதங்கள் எதிரியை குறி வைத்தன. சிங்களப்படை செய்வதறியாது திகைத்த அதே நேரம் விடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தான் இச்சண்டையை செய்வதை எதிரி உணரத் தொடங்கினான். ( சில வேளை காட்டிக் கொடுப்பாளர்கள் தகவல் சொல்லி இருக்கலாம்) அதனால் உள் நுழைந்த போராளிகள் அனைவரையும் உயிருடன் பிடிக்க வேண்டும் என்ற நினைப்பு அவர்களுக்குள் எழுந்தது. ஆனாலும் அவர்கள் எதிர்பார்க்காத தாக்குதல் வியூகங்கள் மூலமாக பெண்புலிகள் எதிரியை திக்குமுக்காட வைத்தனர்.

வெலிஓயா படைமுகாமை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார்கள் சிறுத்தைப்படையணிப் போராளிகள். அங்கிருந்த தொலைத் தொடர்பு ( Communication) தொடக்கம் கட்டளைப் பீடம் ( Commanding Station ) வரை தமது கட்டுக்குள் கொண்டு வந்தார்கள் சிறுத்தைப்படையணியின் சிறப்பு அணி.

தேசியத் தலைவரது திட்டத்தை நிறைவேற்றி அங்கே இருந்த ஆட்லறி எறிகணை ஏவுதளத்தை முற்றுமுழுதாக அழித்தார்கள். பக்கத்தில் இருந்த முகாம்களுக்கான வளங்கல்களையும் கட்டளைகளையும் நிறுத்தினார்கள். அங்கே தரித்து இருந்த 5 ஆட்லறிகள் முழுவதுமாக அழிந்து போனது. படைமுகாம் சிதைந்து கிடந்த நிலையில் ஆயுத வெடிபொருட்கள் முழுவதுமாக தீர்ந்து போகும் நிலை வந்து விட்டது. ஆனால் எதிரியின் துப்பாக்கிகளையும் ரவைகளையும் கைப்பற்றி எதிரியை தாக்கினார்கள். துன்பத்தை தந்தவனுக்கு துன்பத்தை அவனது துப்பாக்கியாலையே திருப்பிக் கொடுத்தார்கள். கிட்டத்தட்ட 3 நாட்களாக தொடர்ந்த சண்டை இறுதிக் கட்டத்தை நெருங்குகிறது. எதிரியின் ரவைகளும் முடிகின்ற நிலைக்கு வந்திருந்தன.

இறுதியாக உடலோடு கட்டப்பட்டிருந்த வெடிமருந்துடை (சார்ச்சர்) மட்டுமே மிஞ்சி இருந்தது. அதை வெடிக்க வைத்து தம்மை உயிர்த்தியாகம் செய்ய அவர்களால் முடியும். ஆனால் அவர்கள் தாம் பயின்ற தற்காப்புக் கலையை ஆயுதமாக்கினர். கராத்தேக் கலையின் அதி விசேட பயிற்சிகளைப் பெற்றிருந்த அப்போராளிகள் இறுதியாக எதிரிகளை கொல்வதற்கு அதையே ஆயுதமாக்கினர். தமிழீழத்தின் மூத்த கராத்தே ஆசிரியர் ஒருவரின் நேரடி கற்பித்தலில் தாம் கற்றுக் கொண்ட தற்காப்புக் கலையினை இறுதிவரை பயன்படுத்தினார்கள். அவர்கள் அந்த வளர்ப்பு சரியாகவே வளர்க்கப்பட்டது என்பதை உணர்த்தினார்கள்.

தம்மிடம் இருந்த குத்துக்கத்தி மூலமாகவும் ( ஆயுத்ததோடு பொருத்தப்பட்டிருக்கும் கத்தி), கிடைக்கும் எப் பொருளையும் ( தடி, கம்பி, ) ஆயுதமாக பயன்படுத்தி கைகலப்பில் ஈடுபட்டார்கள். எதிரிக்கு பெண்புலிகளின் வீரத்தை உரைத்தார்கள். ஒரு நிலையில் எதிரியே “பெண்களா அல்லது பேய்களா இவர்கள் “ ( எதிரியின் உரையாடல்களை விடுதலைப்புலிகளின் தொலைத் தொடர்பு கண்காணிப்பு பிரிவு கண்காணித்த போது உறுதிப்படுத்தப்பட்டது. ) என்று பயந்து ஓடும் அளவுக்கு தாக்குதலை செய்தார்கள்.

பெண் புலிகள் தானே இலகுவாக உயிருடன் பிடித்து விடலாம் என்ற இறுமாப்போடு வந்த சிங்களப்படைகள் ஒவ்வொருவராக உயிரற்று போனார்கள். குறித்த சில வீரப் பெண்களின் வீரச்சாவோடு அந்த சண்டை வெற்றி வாகை சூடியது. இந்த நிலையில் ஏனைய அணிப் போராளிகளை தளம் திரும்புமாறு கேணல் ராஜூ அவர்களிடம் இருந்து கட்டளை வருகிறது.

தளபதி லெப் கேணல் கோமளா தன் போராளிகளை ஒருங்கிணைத்து வெற்றியோடு தளம் திரும்புகிறார். சிறு அணிகளாக இருந்தவர்கள் ஒருங்கிணைந்து மண்கிண்டிமலைப் படைமுகாம் நோக்கி வந்து மணலாறுக் காடுகளுக்கிடையில் பயணிக்கிறார்கள். அந்த வெற்றியின் உச்ச நேரத்தில் துரோகிகளின் துரோகத்தனத்தால் கோமளாவின் அணி பற்றிய முழுமையான தகவல்களுடன் அவர்களை இடை மறிக்கிறான் எதிரி. சரியாக திட்டமிட்டு இடை மறித்த எதிரியோடு சண்டை மூள்கிறது. கோமளா அணியை நிலை குலையாமல் ஒருங்கிணைக்கிறார். கேணல் ராஜூ நேரடியாக வழிநடத்துகிறார். ஆனாலும் தொடர்புகள் அறுந்து போகின்றன. கடுமையான முற்றுகை. அவர்கள் சாவைக் கண்டு அஞ்சுபவர்கள் அல்ல ஆனால் சாதிக்கத் துடித்தார்கள்.

முழுமையாக திறனையும் பயன்படுத்தி சண்டை செய்தார்கள். இறுதியாக வெலிஓயாத் தளத்துக்குள் உயிருடன் பிடிபடாமல் போனவர்களை இங்கே பிடித்து விட வேண்டும் என்று துடித்தது சிங்களம். ஆனால் அவர்களால் முடியவே இல்லை. இறுதி வரை சிங்களத்துக்கு புலி வீரத்தை நிலைநிறுத்திய சிறுத்தைப் படையணியின் சிறப்பு அணி இறுதி வரை கைகளாலும் கால்களாலும் சண்டையிட்டது. நவீன போராட்ட முறமைகள் உட்புகுத்தப்பட்ட பின்பும் இவ்வாறான தாக்குதல்களை எதிரி சிந்தித்துப் பார்க்கவில்லை. திணறிப் போன சிங்களப்படையின் உயிருடன் பிடிப்பதற்கான கனவு மண்ணுக்குள் புதைந்து போனது. இவ்வாறு ஒரு புறம் வீரத்தின் உச்சங்கள் சண்டையிட்டு வீரச்சாவடைந்த அதே நேரம் இன்னும் ஒரு அணி தலைவனின் இன்னும் ஒரு எண்ணத்தை நிறைவேற்றத் துடித்துக் கொண்டிருந்தது.

“தேவையற்ற சாவுகளை தவிர்க்க வேண்டும் ” என்று தேசியத் தலைவர் அடிக்கடி குறிப்பிடுவதைப் போல பெண் போராளிகள் அவ்வெண்ணத்தை நிறைவேற்ற முனைந்தனர். சக்தி, அஞ்சலை, உஷா, .உட்பட்ட 5 பெண் போராளிகள் உயிர்தப்பிப்பிழைத்தல் நடவடிக்கையில் இறங்குகிறார்கள்.

“தப்பிப் பிழைத்தல்” என்பது அற்பதமானதும் மிகக் கொடுமையான செயல். இதன் வரலாற்றை அறிந்தவர்கள் அல்லது அனுபவித்தவர்களுக்கே அதன் உண்மை புரியும். பயங்கரமான எதிர் விளைவுகளைத் தாங்கிக்கொள்ளும் செயற்பாடாக இது கணிக்கப் படுகிறது. உயிர்தப்பிப் பிழைத்தல் என்ற சொல்லைக் கேட்டவுடனே எனக்கு 3 விடயங்கள் நினைவுக்கு வரும்

1. ஈராக்கில் தனது படையணியுடன் சண்டைக்காக சென்று உயிர் மீண்டு வந்த பிரித்தானிய இராணுவ வீரன் Chris Ryan இன் அனுபவக் குறிப்பான “ தப்பியவன் “ (The One That Got Away) நாவல்.
2. “Man vs. Wild” என்ற Discovery தொலைக்காட்சித் தொடர்.
3. செவ்வாய்க் கிரகத்தில் கைவிடப்பட்டு பூமிக்கு உயிருடன் திரும்பி விண்வெளி வீரன் ஒருவரின் கதையாகிய The Martian என்ற திரைப்படம்

இம் மூன்றுமே உயிர்தப்பிப் பிழைத்தல் என்ற விடயத்தின் ஆழத்தையும் அனுபவங்களையும் அக்குவேறு ஆணிவேறாக பேசுகின்றன. இதன் அனுபவம் என்பது வார்த்தைகளால் கூற முடியாதவை. அந்த வேதனைகளை யாரும் மறந்து விடவும் முடியாது.

இந்த நிலையில் தப்பிப் பிழைத்தல் பற்றி வெளிநாட்டவர்களின் அனுபவங்களை அறிந்த எமக்கு எம்மவர்கள் பற்றிய உண்மையான பல சம்பவங்களை அறிவதற்கு காலம் வழி விட்டதில்லை. அவ்வாறான தீரம் மிக்க பக்கம் ஒன்றை பகிரப்படாத பக்கம் தன் மீது பதிந்து கொள்கிறது.

மண்கிண்டிமலைப் படைமுகாம் அழிப்புக்குச் சென்ற இப் பெண் போராளிகள் உயிர் வாழ ஆசைப்பட்டவர்கள் அல்ல. தமிழீழத்துக்கான தமது தேவையை உணர்ந்தவர்கள். தாம் எதற்காக வளர்க்கப்பட்டோம் என்பதை நன்கு அறிந்தவர்கள். அதனால் தான் இலக்குத் தகர்க்கப்பட்ட பின் நடந்து கொண்டிருந்த வீரச்சாவுகளுக்குள்ளும் அவர்கள் தாம் சாவதை தவிர்தார்கள். சார்ச்சர் வெடிக்கத் தயாராக இருந்தாலும் வெடித்து சாவதை விட சாதிக்க வேண்டி சண்டைக் களங்களின் தேவையை உணர்ந்து தப்பிக்க முயல்கிறார்கள்.

உணவில்லை, குடிக்கத் தண்ணீர் இல்லை. தேவையான ஆயுத வெடிபொருட்கள் இல்லை. சரியான தொலைத்தொடர்பு முறமைகள் கையில் இல்லை. இருந்தவையும் கைவிடப்பட்டுவிட்டன. ஆனால் எப்பிடியாவது உயிர் தப்பி தலைவனிடம் செல்ல வேண்டும் என்ற இலக்கு மட்டும் தான் அவர்களிடம் இருந்தது. சிறப்புப் பயிற்சி பெற்ற அவர்களால் தப்பிக்க இயலும் என்ற நம்பிக்கை இருந்தது. அதனால் அவர்கள் தப்பித்தார்கள்.

ஆட்லறித் தளத் தகர்ப்புத் தாக்குதல் நடவடிக்கைக்காக உயிர்க்கொடை செய்த தம் தோழிகளை விட்டுவிட்டு நடக்கத் தொடங்குகிறார்கள். அங்கிருந்து பல தடைகளைத் தாண்ட வேண்டும். சிங்களக் கிராமங்களை கடக்க வேண்டும். படை முகாங்களை தவிர்த்து வெளியேற வேண்டும். அதற்குள்ளே யாராவது தப்பித்திருக்கக் கூடும் என்ற நோக்கத்தோடு அனுப்பப்பட்டிருக்கும் ரோந்துக் காவல் அணிகளிடம் இருந்து தப்பிக்க வேண்டும். இவற்றையெல்லாம் கடக்கும் போது சிங்கள வேட்டைக்காறரின் கண்களில் படவே கூடாது.

இப்படியாக பல தடைகளைத் தாண்ட வேண்டிய அவர்கள். சில முக்கிய வீதிகளையும் ஊடறுத்து வர வேண்டும். அவர்கள் வந்தார்கள். அங்கிருந்து நடக்கத் தொடங்கியவர்கள் பல வீதிகளைக் குறுக்கறுத்து கவனமாக கடந்து விடுகிறார்கள். ஆனால் இடையில் இருந்த பல படைமுகாம்களில் பல தடவைகள் முட்டுப்படுகிறார்கள். சிறிய சண்டைகள் மூண்டாலும் அவற்றில் இருந்து விலகி ஓடுகிறார்கள்.

கிட்டத்தட்ட இரண்டு வாரங்கள் அவர்களின் முயற்சி காடு மலை என்று தொடர்ந்து கொண்டே இருந்தது. மணலாறில் தொடங்கியவர்கள் வவுனியாக் காட்டுக்குள் வந்து மிதந்தார்கள். அத்தனை நாட்களும் உணவில்லை காட்டு இலை குழைகளை பச்சையாக உண்டார்கள். சாப்பிடக் கூடியதாக எது கிடைத்தாலும் அதை பத்திரப்படுத்திக் கொண்டார்கள். காட்டுக்குள் இலைகளைத் தவிர வேறெதுவும் அவர்களுக்கு கிடைக்கவில்லை மிருகங்களை வேட்டையாடினால் அதில் இருந்து வெளியேறும் வெடிச்சத்தம் இவர்களை இனங்காட்டி ஆபத்துக்களை கொண்டு வரும் என்பதை உணர்ந்து வேட்டையாடுவதை தவிர்த்தார்கள். இலைகளை மட்டுமே உண்டார்கள்.

காட்டுக்குள் அருவிகளை தேடிக் கழைத்து விட்ட நிலையில் வரண்டு கிடந்த உதடுகளை நனைக்க வேண்டும் என்று தண்ணீர்க் கொடியை தேடினார்கள். ஆனால் சில நேரத்தில் அவையும் கிடைப்பதில்லை. கிடைக்கும் நேரத்தில் தண்ணீர்க் கொடியைக் கொண்டு உதட்டை ஈரப்படுத்திக் கொண்டார்கள்.

உடலில் கொஞ்சம் கொஞ்சமாக பலமிழக்கத் தொடங்கிய அவர்கள் இறுதி வரை சோர்ந்து விடவில்லை. நடந்து கொண்டே இருந்தார்கள். நடந்து நடந்து வவுனியா காட்டினூடாக எமது கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வந்தேறிய போது அவர்கள் போராளிகளா என்ற சந்தேகம் எழுந்தது. ஏனெனில் அவர்களின் கோலம் அவ்வாறு மாகி இருந்தது. மக்கள் அவர்களை அடையாளம் கண்டு கொண்டார்கள். இவர்களும் மக்களை அடையாளம் கண்டு கொண்டு தாம் பாதுகாப்பான இடத்துக்கு வந்து விட்டோம் என உறுதிப்படுத்தியவர்களாய் நிலத்திலே மயங்கி விடுகிறார்கள்.

துரோகத்தினால் முடிக்கப்பட்ட இவ்வெற்றிச் சண்டை தன்னுள் 57 சிறுத்தைப் படையணியின் சிறப்புப் பெண் போராளிகளின் தியாகத்தாலும் அவர்களின் வீரத்தாலும் மட்டுமல்லது அந்த பிரதேசத்தில் அன்று நடந்த ஐந்து படைமுகாம்கள் மீதான தாக்குதல்களில் மொத்தமாக 180 எழுதமுடியாத பல காவியங்களை எழுதிச் சென்றது என்பது உண்மையே…

அனுபவக் குறிப்பு பகிர்வு: முதலாவது சிறுத்தைப் படையணியின் பெண் போராளி
எழுதியது: இ. இ. கவிமகன்

2001 கட்டுநாயக்கா விமானப் படைத்தளக் தாக்குதல் கரும்புலிகள் வீரவணக்க நாள்

கட்டுநாயக்கா விமானத்தள தகர்ப்பில் வெற்றிக்கு வித்திட்ட பெயர் குறிப்பிடப்படாத கரும்புலி மாவீரர்கள்…!

24.07.2001 அன்று சிறிலங்கா தலைநகரில் அமைந்துள்ள கட்டுநாயக்கா விமானப் படைத் தளத்தினுள் ஊடுருவி தமிழர் தாயகத்தில் நாளும் குண்டுகள் வீசி, தமிழின அழிப்பிற்கு பயன்படுத்தப்பட்ட வானூர்த்தி படைக்கலங்கள் பலவற்றை அழித்து மாபெரும் வெற்றிக்கு வித்திட்டு பெயர் குறிப்பிடப்படாத கல்லறைகளில் உறங்கும் கரும்புலி மாவீரர்களின் 18ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

ஈழநாதம் பத்திரிக்ககையில் அன்று பதிவான அழிக்கப்பட்ட விமானங்கள் எண்ணிக்கை 28 ஆக வெளியிடப்பட்டது.

முற்றிலுமாக அழிக்கப்பட்டவை….!

இரண்டு எ (A) – 340 – 300 பயணிகள் விமானங்கள்
ஒரு எ (A) – 330 -200 பயணிகள் விமானம்
நான்கு கிபிர் போர் விமானங்கள்
மூன்று கெ (K)-8 பயிற்சி விமானங்கள்
இரண்டு எம்.ஜ.ஜி (MIG) – 27 ஜெட் போர் விமானங்கள்
இரண்டு பெல் (bell) 412 உலங்கு வானூர்தி
இரண்டு வி.வி.ஜ.பி (VVIP) 412 உலங்கு வானூர்தி
இரண்டு எம்.ஜ (MI) -17 உலங்கு வானூர்தி
மூன்று K-8

சேதப்படுத்தப்பட்டவை…..!

இரண்டு – A-320 பயணிகள் விமானங்கள்
ஒரு – A-340 பயணிகள் விமானம்
ஒரு அண்டொனோவ் (Antonov) போக்குவரத்து விமானம்
ஒரு எம்.ஜ (Mi) -24 உலங்கு வானூர்தி
ஒரு பெல் (Bell) 412 உலங்கு வானூர்தி
நான்கு கிபிர் போர் விமானங்கள்

விடுதலைப்புலிகளால் நடத்தப்பட்ட இத்தாக்குதலானது இலங்கையின் பொருளாதாரத்தில் வரலாறு காணாத மாற்றத்தை ஏற்படுத்தியது.

இத்தாக்குதலின் மூலம் சுமார் 375 மில்லியன் அமெரிக்க டாலர்களிற்கும் அதிகமான சொத்துக்கள் அழிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

இத்தாக்குதலில் 14 பெயர் குறிப்பிடமுடியாத மறைமுகக் கரும்புலிகள் வெற்றிக்கு வித்திட்டு காற்றில் கலந்தனர் .தமிழீழ விடுதலை புலிகளின் போராட்ட வாழ்வில் மாபெரும் வெற்றி மகுடம் சூட்டிய நாள். ஆம், கட்டுநாயகா வான்படை தளத்தை தகர்த்த நாள்!

1983 ஆம் ஆண்டு யூலை மாதம், தமிழர்களின் வாழ்வில் மறக்க முடியாத,இன்னல்கள், கொடிய துயரங்கள் நிறைந்த மாதம்.

கொடுங்கோலன் சிங்களவனால்,ஒரு மிகப்பெரிய யுத்தத்தை, தமிழர்களின் வாழ்வில் திணித்த நாள்.

ஆயிரக்கணக்கான தமிழர்களை, சிங்களன் கொன்றொழித்த நாள். லட்சத்துக்கும் அதிகமான தமிழர்கள்,வீடுகளற்ற அகதிகளாக நடுத்தெருவில் நின்ற நாள். பல்லாயிரகணக்கான தமிழர்களின் வீடுகளையும், ,உடமைகளையும்,அவர்களின் வியாபார ஸ்தலங்களையும் அடித்து நொறுக்கிய நாள்.

தமிழர்களுக்கு பெருமளவில் பொருட்சேதமும், உயிர் சேதமும் நிகழ்ந்த இந்த மாதத்தை தான், கறுப்பு யூலை என்று நினைவு படுத்தி,புலம் பெயர் மக்கள் வாழும்,அனைத்து தேசங்களிலும் ஆண்டு தோறும் அஞ்சலி செலுத்துவது வழக்கம்.

புலம் பெயர் தமிழன் ஒவ்வொருவனும், யூலை மாதத்தின் கடைசி நாட்களை தன் வாழ்நாளில் மறக்க இயலாத அளவுக்கு கொடுமையான சம்பவங்கள் நிகழ்ந்த காலம் இது.

இனி சிங்களனோடு பேசுவதில் எந்த பிரயோஜனமும் கிடையாது. சிங்களனுக்கு புரிந்த மொழி, திருப்பி அடிப்பது தான். பொருளாதாரத்தில் அவனை சிதைப்பது தான் என்று முடிவு கட்டிய,தமிழீழ விடுதலைப் புலிகள், கறுப்பு யூலைக்கு பதிலடியாக, ஒரு மாபெரும் யுத்தத்தை, இழப்பை சிங்களனுக்கு தரவேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு இருந்தார்கள்.

ஆம் அந்த தாக்குதலுக்காக 2001 ஆண்டு யூலை 24 ஆம் நாள் என்று,தேதி குறிக்கப்பட்டது. கட்டுநாயகா வான்படை தளத்தை தகர்ப்பது என்று முடிவெடுத்தார்கள் விடுதலைப்புலிகள்.

வடக்கிலும் கிழக்கிலும் வாழ்ந்த விடுதலைப்புலிகள், எதிரியை அவன் கோட்டைக்குள்ளேயே புகுந்து தாக்கி, தங்கள் வீரத்தை நிலைநாட்ட வேண்டும் என்று முடிவெடுத்து, இலங்கையின் இதயமான கொழும்புக்கு உள்ளேயே ஊடுருவினார்கள்.

பதினான்கு கரும்புலிகள் யூலை மாதம் 24 ஆம் தேதி அதிகாலை மூன்றரை மணிக்கு, கட்டுநாயகா வான்படை தளத்துக்குள் நுழைந்தார்கள்.

இருபத்தாறு விமானங்களை தகர்த்தார்கள். அதில் பண்டார நாயகா விமான நிலையத்தில் நின்ற, நான்கு பயணிகள் இல்லாத விமானம் உட்பட. அதிகாலை மூன்றரை மணிக்கு ஆரம்பித்த யுத்தம்,காலை எட்டரை மணிக்கு முடிவுக்கு வந்தது.

வெறும் ஐந்து மணி நேரத்தில்,எதிரியின் இருபத்தாறு போர் விமானங்களை தகர்த்த எம் கரும்புலிகள், வீரச்சாவை தழுவினார்கள். இந்த யுத்தத்தை திட்டமிட்டு, முன்னின்று நடத்தியவன் மாவீரன் தளபதி சார்லஸ்.

இந்த தாக்குதலால் சிங்களனுக்கு ஏற்பட்ட இழப்போ முன்னூற்று ஐம்பது மில்லியன் அமெரிக்க டாலர்கள்.அது மட்டுமா, பாதுகாப்பில்லை என்று கருதி,சிங்களனின் சுற்றுலா வணிகம் அடியோடு சிதைந்து போனது. விமான நிலையம் மூடப்பட்டது. கடும் பொருளாதார வீழ்ச்சியை சிங்களவன் சந்தித்தான்.

துன்பத்தை தந்தவனுக்கே,அந்த துன்பத்தை திருப்பி கொடுத்தார்கள் எம் மாவீர கண்மணிகள்.

கொழும்பு விமான படை தளத்தில் புகுந்து இருபத்தாறு விமானங்களை தாக்க தெரிந்த விடுதலை புலிகளுக்கு, சிங்களனில் ஒரு ஆயிரம் பேரை கொல்வது என்பது கடினமான விடயமா?

சாவை துச்சமென மதித்து தான், கரும் புலிகளாக களத்தில் நிற்கிறார்கள். அப்படி துணிந்த பிறகு சிங்களனில் ஒரு ஆயிரம் பேரை கொன்றிருக்க முடியாதா?

ஏன் செய்யவில்லை? காரணம் தலைமை அப்படி. நம் எதிரி சிங்கள அரசும், ராணுவமும் தானே ஒழிய,சாதாரண சிங்கள மக்கள் அல்ல.அவர்கள் நம் இலக்கு அல்ல என்று பல முறை அழுத்தம் திருத்தமாக பதிவு செய்தவன் எங்கள் தலைவன் பிரபகாரன்.

அந்த அளவுக்கு கட்டுப்பாடுகளோடு, படை நடத்தியன் எங்கள் தலைவன் பிரபாகரன். முப்பதாண்டு கால ஆயுத போரில், விடுதலைப்புலிகள் ஒரு சிங்களத்தியை, கையைப் பிடித்து இழுத்தார்கள், பாலியல் ரீதியாக துன்புறுத்தினார்கள் என்று எவனாவது குற்றம் சொல்ல முடியுமா?

ஏன் என் எதிரி சிங்களன் அப்படி ஒரு குற்றசாட்டை சொல்ல முடியுமா? முடியாது.காரணம் அந்த அளவுக்கு ஒழுக்கமான தலைமை, தலைவனின் வழியில் கட்டுகோப்பான போராளிகள்.

எங்கள் போராட்டங்களில் வேண்டுமானால், பின்னடைவு ஏற்பட்டு இருக்கலாம். ஆனால் எங்கள் போராட்ட வழியில் நேர்மையும், நியாயமும் இருந்தது. எதிரியை தாக்குவதில் கூட ஒரு கட்டுப்பாடு இருந்தது.

உலக விடுதலை போராட்ட வீரர்களில், விடுதலைப் புலிகளை போல வீரம் செறிந்த போராளிகளும் இல்லை. பிரபாகரனை போன்ற மாவீரன் எவனும் இல்லை என்று மார் தட்டி சொல்வோம்.

கட்டுநாயக்கா வான்படை தாக்குதலில், வீரச்சாவை தழுவிய எம் கரும்புலி வீர மறவர்களுக்கும்,கறுப்பு யூலையில், சிங்களவனால் கொடூரமாக கொன்றொழிக்கப்பட்ட,எம் உடன்பிறப்புகள் அனைவரையும் நெஞ்சிருத்தி வணங்குகின்றோம்.

பல கரும்புலி வீரர்கள் இன்று பெயர் குறிப்பிடப்படாத கல்லறைகளில் அநாமதேயமாக உறங்கியபோதும் அவர்களது அற்புதமான சாதனைகள் வரலாற்றுக் காவியங்ககளாக என்றும் அழியாப் புகழ்பெற்று வாழும்.

– தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள்.

katunayaka black tigers



இலட்சிய நாயகன் லெப்டினன்ட் செல்லக்கிளி அம்மான் .!

செல்லக்கிளி அம்மான், சந்திரன் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த லெப்டினட் செல்வநாயகத்துக்கு இயக்கம் சூட்டிய பெயர்கள் இவை. கல்வியங்காடு என்ற இடத்தி ஏழை விவசாயக் குடும்பத்திலே பிறந்து ஆரம்பக் கல்வியைக் கூடத் தொடர முடியாத நிலையில் கல்வியைக் கைவிட்ட செல்லக்கிளி, ஆரம்பத்தில் அண்ணா கோப்பி விற்பனை வானில் சாரதியாக வேலை பார்த்தான். செல்லக்கிளி இயக்கத் தலைவர் பிரபாகரனுக்கு அறிமுகமான காலத்தில் இருந்தே இயக்க நடவடிக்கைகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டவன். எந்த வாகனத்தையும் மிகத் திறமையாக ஓட்டும் பயிற்சியைப் பெற்றிருந்த செல்லக்கிளி, ஆயுதங்களாகட்டும், மோட்டார் இயந்திரங்களாகட்டும் பழுதடைந்தால் தானே திருத்தி இயக்கக் கூடிய மிகச் சிறந்த தொழில் நுட்ப அறிவையும் பெற்றிருந்தான். காட்டுப்பாதைகளை அறிவதில் அதிசயிக்கத்தக்க ஆற்றலைக் கொண்டிருந்த செல்லக்கிளி தனது வாழ்க்கையை தான் வாழ்ந்த சூழ்நிலையை ஒரு கெரில்லாப் பயிற்சிக்களமாக ஆக்கிக்கொண்டிருந்தான். ஒரு தடவை உடையார்கட்டுக் குடியேற்றத் திட்டத்தில் காட்டுமரங்களை வெட்டி விவசாயத்தில் ஈடுபட்டிருந்த வேளையில் எதிர்பாராமல் வந்த இரண்டு பெரிய கரடிகளில் ஒன்றைக் கோடாரியால் வெட்டிக் கொன்றான். மற்றக்கரடி, கூட இருந்தவர்களால் சுட்டுக் கொல்லப்பட்டது.

ஒய்வு நேரங்களில் காட்டுப்பகுதிகளில் கட்டுத் துவக்குக் கட்டி மிருகங்களை வேட்டையாடுவது அவனது பொழுது போக்காகும். ஆரம்ப காலங்களில் காடுகளில் இயக்கத்திற்கான முகாம்களை அமைக்கு வேலை நடைபெறும் போதெல்லாம் முகாம்களுக்குத் தேவையான அமைப்புகளைக் கொண்ட மரங்களைத் தேடிக்கண்டு பிடித்து வெட்டுவது, கொட்டில் போடுவது, கூரை வேய்வது போன்ற செயல்கள் அவன் தலைமையில் அவன் மேற்பார்வையில் தான் நடைபெறுவது வழக்கம்.

சிறுவயதில் இருந்தே தனது பெரிய தாயாரின் வீட்டில் வாழ்ந்து வந்தவன் செல்லக்கிளி. அவனது பெரிய தாயாரின் மகன் செட்டி என்ற தனபாலசிங்கம் ஆரம்பத்தில் தமிழீழ விடுதலைப் போராளியாக இருந்த போதிலும் பின் முழுமையான சுயநலவாதியாகவே மாறினான். அவனது துரோகத்தைக் கண்டு செல்லக்கிளி அவனை அண்ணன் என்று பாராது “அரசியலைத் துற அல்லது என் கையாலேயே நீ சாவாய்” என்று எச்சரித்தான். ஆனால் அவன் திருந்தவில்லை. செட்டியின் செயல் எல்லை மீறவே இயக்கத்தின் தலைவர் பிரபாகரனால் செட்டி சுடப்படுகிறான். செட்டி சுடப்பட்டதற்குப் பின்பும் இயக்கத்திற்கும் பிரபாகரனுக்கும் விசுவாசமாக முழுமையாக தன் உயிரையே தருகிற அளவிற்குச் செயலாற்றினான் செல்லக்கிளி. “செட்டியின் குடும்பத்தைக் காப்பாற்றுவது எனது கடமைதான். அதைவிட இயக்கத்திற்கு நான் ஆற்ற வேண்டிய கடமை பெரிது” இது செல்லக்கிளி உறுதியாக உதிர்த்த வார்த்தைகள்.

இயக்கத்தையும் அவனையும் பிரித்துப் பார்க்க முடியாத அளவிற்கு அவனது பணி இயக்கத்திற்கு அர்ப்பணிக்கப்பட்டது. இயக்கத்தின் ஆரம்ப காலத்தில் இருந்தே இயக்கம் நடத்திய முக்கிய தாக்குதல் நடவடிக்கைகளிலெல்லாம் பங்கு பற்றியவன் செல்லக்கிளி.

முதல் முதலில் இயக்கம் உளவுப்படை பொலிஸ் அதிகாரியான கருணாநிதியை அழித்த நிகழ்ச்சி, பொலிஸ் உளவுப்படை தலைமையகத்தைச் சேர்ந்த பஸ்தியாம்பிள்ளை குழுவினர் மீதான் தாக்குதல், உமையாள்புரம் இராணுவத்தின் மீதான தாக்குதல், பருத்தித்துறை பொலிஸ் நிலையைப் பொறுப்பதிகாரி மீதான தாக்குதல், கந்தர்மடம் வாக்குச்சாவடியில் நடந்த இராணுவத்தினர் மீதான தாக்குதல் என்று இயக்கம் நடத்திய முக்கிய தாக்குதல் நடவடிக்கைகளிலெல்லாம் ஈடுபட்டுத் தன் தனி முத்திரையைப் பதித்தான் செல்லக்கிளி.

பருத்தித்துறை பொலிஸ் நிலையைப் பொறுப்பதிகாரி விஜயவர்த்தனாவைச் இட்டுவிட்டு அவனிடமிருந்து எடுத்த ஜீப் வண்டியை குன்றும் குழியுமாயிருந்த வீதிகளினுடாக 15 மெயில் தூரத்தை 9 நிமிடத்தில் ஓட்டிச் சென்று அந்தத் தாக்குதலில் ஈடுபட்ட இயக்க வீரர்களை இராணுவ முற்றுகைக்குள் படாது வெளிக்கொண்டு வந்த செயல் செல்லக்கிளியின் சாரதீயத் திறமைக்கு எடுத்துக்காட்டாகும். அவன் தலைமையேற்றுச் சிறப்புற நடத்திய இன்னுமொரு தாக்குதல் இரகசியப் பொலிஸ் அதிகாரி பஸ்தியாம்பிள்ளை குழுவின் மீதான தாக்குதலாகும்.

07.04.1978 அன்று அதிகாலை 5.30 மணியளவில் முருங்கன் மடு வீதியின் உட்புறமுள்ள காட்டுக்குள் அமைந்திருந்த மரமுந்திரிகைத் தோட்டத்துக்குள் இருந்த விடுதலைப் புலிகளின் இருப்பிடத்தை முற்றுகையிட்ட உளவுப்படை பொலிஸ் அதிகாரி பஸ்தியாம்பிள்ளை குழுவினர் நிராயுதபாணிகளாக இருந்த விடுதலைப்புலி இளைஞர்களைச் சுற்றி வளைத்தனர். இயந்திரத் துப்பாக்கி, கைத்துப்பாக்கிகள் சகிதம் வந்திருந்த பொலிஸாரிடம் பேச்சுக்கொடுத்து தன் புத்தி சாதுரியத்தால் அவர்களின் கவனத்தை திசை திருப்புகிறான் செல்லக்கிளி. பொலிஸார் சற்று ஏமாந்திருந்த நேரத்தில் விடுதலைப்புலிகள் அனைவரும் ஒன்றாகப் பாய்கிறார்கள் பொலிஸாரின் மேல். அடுத்தகணம் பொலிஸாரிடமிருந்த சில ஆயுதங்கள் விடுதலைப் புலிகள் கைகளுக்கு மாறுகின்றன. முதன்முதலாக அன்றுதான் கையிலெடுத்த எஸ்.எம்.ஜி. செல்லக்கிளியின் கைகளில் வேகமாக இயங்குகிறது. சில நிமிடங்களில் வேட்டுக்கள் தீர்க்கப்படுகிறன. புலிகளை வேட்டையாடவென வந்த பொலிஸ் இன்ஸ்பெக்ரர் பஸ்தியாம்பிள்ளை, சப் இன்ஸ்பெக்ரர் பேரம்பலம், சார்ஜன்ட் பாலசிங்கம், கான்ஸ்டபிள் சிறிவர்த்தனா என ஒவ்வொருவராகச் சுட்டு வீழ்த்தப்பட்டனர். இறுதியாக பொலிஸார் கொண்டு வந்த ஆயுதங்களாலேயே அவர்கள் சுடப்பட்டதுடன் அவர்கள் வந்த காரையே எடுத்துக்கொண்டு விடுதலைப் புலிகள் ஆயுதங்களுடன் தப்பிச் சென்றனர். மூன்று நாட்களின் பின்னர்தான் பஸ்தியாம்பிள்ளை கோஷ்டியினரின் முடிவு பற்றிய செய்தி வெளியே தெரிய வந்தது. செல்லக்கிளி தலைமையிலான இந்தத் தாக்குதல் நிகழ்ச்சியானது தமிழ்ப் போராளிகள் மத்தியில் ஒரு புத்துணர்ச்சியை ஏற்படுத்தியது.

ஆபத்து வரும் வெளிகளில் நிதானமாகச் சிந்தித்து வேகமாகச் செயற்படும் தன்மை செல்லக்கிளிக்கு கூடவே பிறந்ததாகும். முன்பொரு தடவை செல்லக்கிளி இருந்த கிராமமான உடையார்கட்டுக்கு செல்லக்கிளியைத் தேடி சப் இன்ஸ்பெக்ரர் தாமோதரம் பிள்ளை சென்ற போது செல்லக்கிளியின் வீட்டிற்கு அண்மையில் செல்லக்கிளியிடம் செல்லக்கிளியைப் பற்றி விசாரித்தான். செல்லக்கிளியோ நிலைமையை உணர்ந்து சற்றும் தடுமாறாது “வாங்கோ ஐயா செல்லக்கிளியின் வீடு பக்கத்திலேதான் இருக்குது கூட்டிக்கொண்டு போய்க் காட்டுறன்” என்று தன் வீட்டுக்கே சப் இன்ஸ்பெக்ரரை அழைத்துச் சென்று காட்டிவிட்டு வேகமாக மறைந்துவிட்டான். அதன் பின்புதான் சப் இன்ஸ்பெக்ரர் செல்லக்கிளி தன்னை ஏமாற்றிவிட்டு தப்பிச் சென்றதைத் தெரிந்து ஆத்திரப்பட்டான்.

தனக்குச் சரி எனப்பட்டதை உதாரணங்கள், பழமொழிகளோடு விளக்கி வாதிடுவது செல்லக்கிளிக்கு கைவந்த கலை. சட்டம் படித்துவிட்டு தமிழினத்தையே ஏமாற்றிக் கொண்டிருந்த கூட்டணி எம்பிக்கள் மத்தியில் நின்று பள்ளிப் படிப்பையே முடிக்காத செல்லக்கிளி “ஆறு ஆண்டுகளாக நாம் காடு மேடு என்று அலைகின்றோம். நீங்கள் முப்பது ஆண்டுகளாக என்ன செய்தீர்கள்?” என்று அவர்களின் பொது மேடையிலேயே ஏறி வினா எழுப்பினான். உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான அபேட்சகர்களைத் தேர்ந்தெடுக்க என தமிழர் விடுதலைக் கூட்டணியினரால் கூட்டம் கூட்டப்பட்ட இடத்திற்குச் சென்று தேர்தலைப் பகிஷ்கரிக்கும்படி வாதிட்டான் செல்லக்கிளி. சுயநலமிகள் அவன் வார்த்தையை ஏற்கவில்லை. ஆனால் தமிழீழ மக்கள் செல்லக்கிளியின் கருத்தை உள்ளூராட்சித் தேர்தலை முற்று முழுதாகப் பகிஷ்கரிதத்தன் மூலம் முழுதாக ஏற்றுக் கொண்டனர்.

1983ம் ஆண்டு ஜீன் மாதம் 23ம் நாள் வடமாகாணத்தில் மிகப்பெரிய இராணுவ முகாமிலிருந்து யாழ்ப்பாணம் நகருக்குச் செல்லும் வீதியில் திருநெல்வேலி என்ற இடத்தில் ரோந்து வந்து கொண்டிருந்த இராணுவ வண்டிகள் இரண்டின் மீது செல்லக்கிளி தலைமையிலான பதின்நான்கு விடுதலைப் புலிகள் கொண்ட கெரில்லா அணுகி தனது தாக்குதலை ஆரம்பிக்கின்றது வேகமாக வந்த ஜீப் வண்டி, விடுதலைப் புலிகள் வைத்த கண்ணிவெடி சரியான நேரத்தில் வெடித்ததால் மேலே தூக்கி எறியப்பட்டு கீழே வந்து விழுகிறது. அதில் வந்த சிங்கள இராணுவத்தினர் கீழே குதித்து தாம் வைத்திருந்த துப்பாக்கிகளைத் தூக்கியபடி ஓட முயல்கின்றனர். பின்னால் வந்த இராணுவ ட்ரக் வண்டியிலிருந்த இராணுவத்தினர் பீதியினால் ட்ரக் வண்டிக்குள்ளேயே பதுங்குகின்றனர். விடுதலைப்புலிகளின் துப்பாக்கித் தோட்டாக்களும் வெடிகுண்டுகளும் ட்ரக்கை விட்டு எழமுயன்ற இராணுவத்தினரின் உடல்களைச் சல்லடையாக்குகின்றன. தமிழீழத்தில் முதல் தடவையாக அதிக அளவு சிங்கள இராணுவத்தினர் கொல்லப்படுகின்றனர். இதைக் கண்டு உற்சாக மிகுதியினால் வெற்றிக் களிப்புடன் மறைவிடத்திலிருந்து தான் வைத்திருந்த இயந்திரத் துப்பாக்கிரை இராணுவ வண்டியை நோக்கி இயக்கியபடி எழுந்து நின்று சுடத் தொடங்குகிறான் செல்லக்கிளி. அதேநேரம் ஜீப் வண்டிக்குள் இருந்த சிங்களச் சிப்பாய் ஒருவன் சுட குண்டு நேராகச் செல்லக்கிளியின் இதயத்தை ஊடுருவிச் செல்கிறது. சப்தமெதுவுமின்றிக் கீழே விழுகிறான் செல்லக்கிளி.

13 இராணுவத்தினரை வீழ்த்தி ஏராளமான ஆயுதங்களை எடுத்த உற்சாகத்தில் திளைத்த விடுதலைப் புலிகள் செல்லக்கிளியின் மறைவுச் செய்தியை அறிந்ததும் அதிர்ச்சியடைந்து சோகத்தில் ஆழ்கின்றனர். முதல் வாரத்தில் இரண்டு முன்னோடி வீரர்களை இழந்த விடுதலைப்புலிகள் களத்தில் செல்லக்கிளியையும் இழந்ததால் வெற்றிக்கான எக்களிப்பு சிறிதுமின்றி சோகமே உருவாகத் தம் இருப்பிடம் திரும்புகின்றனர். இயக்கம் வளர்ந்து வரும் நிலையில் இயக்கம் முன்னோடி வீரர்களுக்கு பொறுப்புக்களைக் கொடுத்து அவர்களுக்கு அனுபவப் பயிற்சியைக் கொடுக்கும் வகையில் அந்தத் தாக்குதலுக்கான தலைமையைச் செல்லக்கிளியிடம் ஒப்படைத்துவிட்டு தானும் ஒரு வீரனாகத் தாக்குதலில் கலந்து கொண்ட இயக்கத் தலைவர் பிரபாகரனுக்கு செல்லக்கிளியின் மறைவு பேரதிர்ச்சியைக் கொடுக்கிறது. எதிர்காலத்தில் செல்லக்கிளியிடம் ஒப்படைக்கக்கூடிய பொறுப்புக்களைப் பற்றிச் சிந்தித்துக்கொண்டிருந்த பிரபாகரனுக்கு செல்லக்கிளியின் மரணம் இயக்கத்தில் ஒரு பெரிய தேக்கமாகப்படுகிறது. ஆம்! இயக்கத்துக்கு அவன் ஆற்றிய பணிகளைப் பற்றியும் பிரபகரனைவிட வேறு யாருக்கும் முழுமையாகத் தெரிந்திருக்க நியாயமில்லை.

இயக்கம் தொடங்கிய காலத்தில் சுழல் துப்பாக்கி இவைகளை ஈயத்தை உருக்கித் தயார் செய்த காலத்தில் கூட இருந்து உதவியதுடன் பின்னர் இயக்க வீரர்களுக்கு தானியங்கித் துப்பாக்கிகளை வைத்துப் பயிற்சி கொடுக்க வெளியில் இரவு பகலாக அலைந்து குறைந்த விலையில் ஏராளமான ஒரிஜினல் துப்பாக்கி ரவைகளை வாங்கி வந்து சேர்த்தது, இவையெல்லாம் செல்லக்கிளி இயக்கத்துக்குச் செய்த மறக்கமுடியாத் சேவைகளாகும். அன்று செல்லக்கிளி வாங்கி வந்து குவித்த துப்பாக்கி ரவைகளை வைத்தே இயக்கத்தின் முன்னணி வீரர்கள் எல்லாம் சுட்டுப் பயிற்சி எடுக்க முடிந்தது. ஏன் இயக்கத்துக்கென வாங்கப்பட்ட முதல் துப்பாக்கிகூட செல்லக்கிளிக்குச் சொந்தமான இரண்டு மாடுகளை விற்றுக்கிடைத்த பணத்தில் வாங்கப்பட்டதுதான்.

படித்தவர்கள் குழம்பிய காலத்திலும் தான் குழம்பாது இருந்துவந்த செல்லக்கிளியின் கிராம வாசனை தொனித்த வயதுக்கு மீறிய வாதங்களையும், வார்த்தைப் பிரயோகங்களையும் கேட்ட இயக்க வீரர்கள் அவனை “அம்மான்” என்று அன்புடன் அழைத்து வந்தார்கள். அவனது திறமையான மதிநுட்பமான செயலாற்றல்கள் பல விடுதலைக்குப் பின் சரித்திரத்தில் மட்டுமே வெளிவர வேண்டிய செய்திகள். அவனது இறுதிக்காலமானது தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் ஓர் திருப்புமுனை ஆம்! சரித்திரம் படைத்த செல்லக்கிளி சரித்திரமாகிய நாள், தமிழீழ விடுதலைக்கான அகிம்சைப் போராட்டமானது ஆணி வேரோடு பிடுங்கி எறியப்பட்டு ஆயுதப் போராட்ட சகாப்தம் உருவான நாள்.

-வெளியீடு : எரிமலை இதழ் –

தமிழீழ விடுதலைப்புலிகளின் மூத்த உறுப்பினர் லெப். செல்லக்கிளி அம்மான் மற்றும் 1983 யூலை 23ம் நாள் நள்ளிரவில் நடைபெற்ற திருநெல்வேலித்தாக்குதல் குறித்த நினைவுகளை தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் “விவரிக்கையில்”

ஓயாத அலைகள் ஒன்று : முல்லைத்தீவு இராணுவ முகாம் மீதான தாக்குதல்.!

முல்லை நிலம் விடுதலைப்புலிகளின் வெடி அதிர்வுகளால் சிலிர்த்தது. கடலும் கடல் சார்ந்த நிலத்திலும் இடியும் மின்னலுமாக போர்க்களம். புகைமண்டலங்க்களுள் இருந்து எழுந்த தீச்சுவாலைகள் எட்டுத் திக்கும் உதயத்தின் வரவுக்கான சந்தோஷக் கனல்களை மூட்டின.

சூரியக்கதிர் இராணுவ நடவடிக்கை மூலம் புலிகளைப் பலவீனப்படுத்தி விட்டோம் என்று வீணான, கற்பிதமான போக்கிலிருந்த சிங்களப் பேரினவாதிகளுக்கு இது கசப்பானதும் மறக்க முடியாததுமான ஒரு மிகப்பெரிய அனுபவமாக அமைந்தது. தமிழீழ விடுதலைப் புலிகளால் நிகழ்த்தப்பெற்ற தாக்குதல் ஒவ்வொன்றின் போதும், சிறீலங்கா இராணுவம் தமது முகாங்களை உசார்படுத்தி விடுதலைப் புலிகளின் தாக்குதலை முறியடிப்பதற்கு ஏற்ற ஆயுதங்களை செய்வது வழமை. இம்முகாம் தாக்குதலுக்கு உள்ளாகும் என்பது குறித்து சிறீலங்கா இராணுவத்திற்கு புலனாய்வாளர்கள் முற்கூட்டியே தெரிவித்திருந்தும் அவர்களால் முகாம் மீதான தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் போனமை சிறீலங்கா இராணுவத்தினரின் பலவீனத்தையே கோடிட்டுக் காட்டுகிறது.

கடற்புலிகளின் பலம் குறித்து சிங்கள இராணுவ விமர்சகர்களே வியந்து பேசியிருக்கிறார்கள். கடற்புலிகளின் ஆதிக்கம் வலுப்பெற்று வருவது குறித்த அச்சத்தை அவர்கள் நிறையவே கொண்டிருந்தார்கள். இவ் வளர்ச்சிப் போக்கு இராணுவ முகாம்களுக்கான, யாழ் குடாநாட்டிலுள்ள விநியோகப் பாதைகளை அறுத்துவிடும் ஆபத்தை அவர்கள் உணர்ந்திருந்தார்கள். இதனால் படையினருக்கான ஆயுத தளபாடங்கள், உணவு, மருந்து என இத்தியாதி தேவைகளுக்கான தட்டுப்பாடுகள் அவர்களை நெருங்கத் தொடங்கும். அத்தோடு அவர்கள் முகாம்களை விட்டு வெளியேற முடியாத அவல நிலையம், அடிக்கடி தொடரும் விடுதலைப்புலிகளின் ஓயாத தாக்குதல்களும் இராணுவ பலத்தை பலமிழக்கச் செய்துவிடும் என்பதை இராணுவ ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியிருந்தார்கள். சூரியக்கதிர் இராணுவ நடவடிக்கையானது விடுதலைப் புலிகளின் தாக்குதல் தந்திரோபாய உத்திகளில் பலத்த மாற்றத்தைக் கொணரும் என்றும் இந்த இடப்பெயர்வு விடுதலைப்புலிகளின் படை பல சக்தியை அதிகரிக்கச் செய்யும் என்றும் எச்சரித்தனர். வன்னிப் பிராந்தியத்தில் ஒரு முகப்படுத்தப்பட்ட முறையில் களம் அமைத்திருக்கும் விடுதலைப் புலிகள் பலமான தாக்குதல்களை மேற்கொள்வார்கள் என்பது குறித்த அச்சத்தையும் தெரிவித்தார்கள்.

முல்லை இராணுவ முகாம் மீதான தாக்குதல் மூலம் விடுதலைப் புலிகளின் படைக்கல சக்தி பன்மடங்காக அதிகரித்துள்ளமை யாழ் குடாநாட்டிற்குச் செல்லும் கடல், ஆகாய ரீதியிலான சுயாதீனப் போக்குவரத்தை கேள்விக்குறியாக்கி உள்ளது.

கடல் பரப்பைப் பொருத்தவரை கொழும்பிலிருந்து தென்பகுதி ஊடாக திருமலை செல்லும் கடற்பரப்பானது இதுவரை சிறீலங்காப் படைகளிற்கு பாதுகாப்பானதாகவே இருந்து வருகிறது. ஆனால், திருமலையிலிருந்து வடக்கே செல்லும் கடற்பாதையானது சிறீலங்காவுக்கு மிகவும் பாதுகாப்பற்ற பகுதியாகவே உள்ளது. இதனால், குறிப்பிட்ட தூர இடைவெளிகளில் உள்ள தமது முகாம்களில் பெரும் எண்ணிக்கையிலான படையினரை நிறுத்தி கனரக ஆயுதங்களைக் குவித்து பலப்படுத்தி வருகின்றனர். யாழ் குடாநாட்டில் இருந்த பலாலி முப்படைத்தளம், காரைநகர் கடற்படைத்தளம், மண்டைதீவு இராணுவ முகாம் ஆகியவற்றில் மண்டைதீவு இராணுவ முகாம் சென்ற வருடம் விடுதலைப் புலிகளால் தாக்கியழிக்கப்பட்டது. (இது 1996 வரையப்பட்ட கட்டுரை தேசக்காற்று இணையம் வரலாற்றுடன் இணைக்கிறது) வரலாற்றுச் சிறப்பானதாக அமைந்தது. அத்துடன் ஆனையிறவு, பூநகரி, மன்னார், முல்லைத்தீவு, வவுனியா போன்ற இடங்களிலும் இவர்களது பாரிய இராணுவ முகாங்கள் அமைந்திருக்கின்றன.

இதில் மன்னார் இராணுவ முகாமானது மேற்கில் அவர்களது போக்குவரத்திற்கு ஒரு முக்கிய தளமாக அமைந்திருக்கிறது. கிழக்கில் திருமலையிலிருந்து யாழ்ப்பணத்திற்கு இராணுவ விநியோகங்களைச் செய்வதற்கு முல்லைத்தீவு இராணுவ முகாமானது கேந்திர முக்கியத்துவம் வாய்ந்ததாக திகழ்ந்தது. கடற்புலிகளின் நடமாட்டத்தைக் கண்காணிப்பதற்கும் இந்த முல்லைத்தீவு இராணுவ முகாம் சிறீலங்காப் படையணிக்கு மிகவும் உறுதுணையாக இருந்து வந்தது. விடுதலைப்புலிகள் முல்லைத்தீவில் உள்ள ஆக்கிரமிப்பு இராணுவத்தை தாக்கியழிப்பதற்கு இது மாத்திரம் காரணமல்ல. வேறு பல காரணங்களும் இருப்பதாக இராணுவ ஆய்வாளர்கள் கருதுகின்றனர். அதாவது சென்ற வருடம் சிறீலங்கா இராணுவத்தினரால் யாழ் குடாநாடு மீது மேற்கொள்ளப்பட்ட சூரியக்கதிர் இராணுவ நடவடிக்கையில் பெருமளவு படைகளை விடுதலைப் புலிகள் ஈடுபடுத்தாமல் சிறுதொகையான வீரர்களை மட்டும் தாக்குதலில் ஈடுபடுத்திவிட்டு உத்திரீதியான நகர்வை மேற்கொண்டிருந்தார்கள்.

வன்னிப் பிராந்தியத்தில் தளமிட்டிருக்கும் விடுதலைப் புளிவீரர்களிற்கு மிக அருகாமையில் முல்லைத்தீவு முகாம் இருந்தது. அது விடுதலைப்புலிகளுக்கு ஆபத்தானதாக இருந்தது. மேலும், பெருமளவு மக்கள் தங்கியிருக்கும் வன்னி பெருநிலப்பரப்பு மீதான ஆக்கிரமிப்புக்கு ஏதுவான மேடையாக இருந்தது. வன்னிப் படையெடுப்பு நடவடிக்கை ஒன்று முப்படையின் பலத்தையும் கூட்டி மேற்கொள்ளப்படும் பட்சத்தில் முல்லை இராணுவ முகாமின் இருப்பு பலத்த இன அழிவை ஏற்படுத்தும் என்பது விடுதலைப் புலிகளின் கருத்தாக இருந்தது. அதனால் அவ்வாறானதொரு இராணுவ ஆக்கிரமிப்பு நடவடிக்கையை எதிர்கொள்ள முன் வன்னிப்பிராந்தியத்தில் உள்ள இவ் இராணுவ முகாமை தாக்கியழித்துவிட விடுதலைப் புலிகள் அலையாய் எழுந்தார்கள்.

யாழ்ப்பாணத்தை சிறீலங்காப் படைகள் ஆக்கிரமித்தபோது, விடுதலைப் புலிகளினதும் மக்களினதும் இடப்பெயர்வு ஒரு தற்காலிகப் பின்னடைவுதான் என்பதை விடுதலைப்புலிகள் தெளிவாக விளங்கியிருந்தார்கள். விடுதலைப் புலிகள் திட்டமிடjப்பட்ட மரபு ரீதியான ஒரு படை நகர்வை அன்றிருந்த சூழலில் எதிர்கொள்ள விரும்பவில்லை. தாம் விரும்பியவாறு எதிரியை எதிர்கொள்ளல் என்பதை முல்லைத்தீவில் நீருபித்துக் காட்டினர்.

1500 இராணுவத்தினர் இருந்த முகாமில் 30 பேரே உயிர் தப்பினர். 122 மில்லி மீற்றர் பீரங்கிகள், கவச வாகனங்கள் என்ற ரீதியில் பல கோடி ரூபா பெறுமதியான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. இன்னொரு விசேசமாக உதவிக்கு வந்த படைகளை முறியடித்தும் பின்வாங்கச் செய்து கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த அம் முகாம் பகுதியை கட்டுப்பாட்டிலேயே விடுதலைப்புலிகள் வைத்துக்கொண்டனர். இதன் மூலம் விடுதலைப்புலிகள் பலம் வாய்ந்த ஒரு படை பல சக்தியை உருவாக்கி அந்த சக்தியைக் கொண்டு ஓயாத அலையாக எழுந்து போராட்ட வரலாற்றில் புதிய பரிமாணங்களைப் படித்தும் தொட்டும் நிற்கிறார்கள் என்பது வெள்ளிடை மலை.

வெளியீடு :– எரிமலை இதழ்

Up ↑