Search

Eelamaravar

Eelamaravar

Category

பங்குனி மாவீரர்கள்

கேணல் அமுதாப்:சாள்ஸ் அன்ரனி சிறப்பு படையணியின் தளபதி

Col Amuthap

சாள்ஸ் அன்ரனி சிறப்பு படையணியின் தளபதி லெப்.கேணல் அமுதாப் வீரச்சாவைத் தழுவிக்கொண்டுள்ளார். கடந்த 31.03.2009 அன்று இவர் வீரச்சாவைத் தழுவிக்கொண்டுள்ளார்.

சாள்ஸ் அன்ரனி சிறப்பு படைப்பிரிவின் தளபதி லெப் கேணல் அமுதாப் பல களங்கள் கண்ட பெரும் வீரன்

காலத்தால் அழியாத மாவீரர் கல்லறை
கல்லறை அல்ல
உயிர் உள்ளவர் பாசறை (காலத்தால்)

தீபங்கள் அணையலாம் தீ அணைவதில்லை
தேசத்தை காத்த உயிர் ஒய்ந்தொழிவதில்லை (தீபங்கள்) (காலத்தால்)

குண்டு மழை நடுவினிலும் குருதி மழை நடுவினிலும்
நின்று போர்களம் பார்த்தவன்
உண்ட சோறு தொண்டைஉள் நுழையுமுன்
நஞ்சை உண்டு தாய்மண் காத்தவன் குண்டுமழை காலத்தால்

இலையுதிர் காலத்தில் உதிர்ந்தாரா இல்லையவர்
இள்வேனில் நாளில் உதிர்ந்தார்
தலை தந்து தமிழீழ மண் வாழ விலை தந்து
மாவிரராய் நிமிர்ந்தார் இலையுதிர் காலத்தால்

மாற்றார் சிதைத்தாலும் மாவீரர் கல்லறை
மண்ணாய் நிலைக்குமையா
ஆற்றல் மிகுந்த மாவிரர் கல்லறை மண்ணில்
அனலே முளைக்குமையா மாற்றார் காலத்தால்

தமிழீழ மாமண்ணில் என்றென்றும் புலி வீரர்
நடந்த கால் தடமிருக்கும்
தமிழ் மாந்தர் உள்ளவரை என்றென்றும்
அவர் நெஞ்சில் மாவீரர் படமிருக்கும் தமிழீழ காலத்தால்

Lt Col Amuthap

விபரணம் :- லெப்.கேணல் அமுதாப் அவர்களின் எழுச்சி உரை…..

கேணல் கிட்டு உட்பட பத்து வேங்கைகளின் 11ம் ஆண்டு நினைவு தினத்தன்று தாயகத்திலிருந்து சிறப்பு விஜயம் மேற்கொண்டு யேர்மனியில் சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் தளபதிகளில் ஒருவரான லெப்.கேணல் அமுதாப் அவர்களின் சிறப்பு உரையின் பகுதியை வழங்குகின்றோம்.

Lt Col Amuthap

lt_col_amirthap

சாள்ஸ் அன்ரனி சிறப்புத் தளபதி கோபித் வீரவணக்க நாள்

Col Kopithசாள்ஸ் அன்ரனி சிறப்புத் தளபதி கோபித் அவர்களின் 7ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்

கேணல் கோபித்

அடங்காப்பற்றின் வன்னி மண்ணில் மல்லாவியில் பெருமையாக சொல்ல ஓர் வீரத்தளபதி
எங்கள் “கேணல் கோபித் அண்ணா !

இளந்தென்றல் வீசும் வன்னி காற்றில்
கோபித் எனும் பெயர் உச்சரித்தாலே
எம் மனதில் மட்டுமல்ல அடர்ந்த
காடுகளுக்கு கூட இனம் புரியாத
ஒரு புத்துணர்ச்சி வரும் !

பாசம் எனும் கூட்டில் விழாமல்
தேசம் எனும் நேசம் கொண்டு
சாள்ஸ் அன்ரனி படையணியை
திறம்பட கோலோச்சிய பல
சாதனைகளின் சரித்திர நாயகனே !

உன்னுடைய நிதானமான
பேச்சும், மற்றவர்களிடையே
அன்பாக பம்பலாக
நீ பழகும் விதமும் இன்றும் என்
மனத்திரையில் அண்ணா !Col Kopith with leader

இரட்டைவாய்க்கால் என
உச்சரிக்க முடியவில்லை எம்மால்
சிங்களத்தின் சீரழிந்த செயலால்
உன்னை இழந்து ஆண்டுகள் தான்
ஆச்சு ஆற வில்லை இன்னும் எம் வலிகள்,
அருவி கண்ட விழிகள் அடங்க வில்லை இன்னும்,நெஞ்சுக்குள் நின்றாடும்
நினைவுகள் அழியாத கோலங்களாய்…..

அழகாய் பூத்திடும் எம் தமிழீழம்
அதில் மொட்டாக மலர்ந்திடும்
உன் திருமுகம்!

அன்றும் இன்றும் என்றும் உன்
தன்னம்பிக்கை தோற்காது வன்னி மைந்தா !

ஒரு கணம் எம் நினைவுகள் ஒடுக்கியே உங்கள் நினைவுகளை சுமந்து கண்ணீர் பூக்களை காணிக்கை ஆக்குகிறேன் !

நினைவுபகிர்வு
மார்ஷல் வன்னி..

வீரவணக்கம் :லெப்.கேணல் தமிழ்மணி

Lt Col Thamilmani 2 Lt Col Thamilmani
வீரச்சாவு – 22.03.2009

வீரவணக்கங்கள்

ltte veeravanakam 2

Col Suki Lt Col Elavan Lt Col Isaiventhan Lt Col Jana sky tiger 2 Lt Col Jana sky tiger Lt Col Thalir Lt Col Umasuthan Lt Col ValuvanLTTE cadre
Lt Col Ratha
Cap SudarisaiLt Col KathiravanLt Col NeethanMaj Sathivel

கடற்புலிகளின் துணைத் தளபதி லெப்.கேணல் மங்களேஸ்

Lt Col Mangaleshகடற்புலிகளின் துணைத் தளபதி லெப்.கேணல் மங்களேஸ் அண்ணாவின் 8ம் ஆண்டு நினைவுநாள் இன்றாகும் .

கடற்லிகளின் துணைத் தளபதியாகவும் பின்பு தரைத்தாக்குதல் பிரிவில் படையணித் தளபதியாகவும் சிறந்த ஒரு தளபதியாக பணியாற்றிவர்.

கடற்புலிகள் அணியினில் இணைந்ததிலிருந்து தனது கடமைகளின் ஊடாக படிப்படியாக உயர்ந்து போராளிகளின் மனதினில் இடம்பிடித்ததோடு… தளபதிகளின் மனங்களிலும் பதிவாகிப் போனதால் அவருக்குரிய தகுதிகளும் அவரைத் தேடியே வந்தது.

2000 ஆம் ஆண்டளவில் ஆணையிறவுப் பெருந்தளத்தை கைப்பற்ற குடாரப்புத் தரையிறக்கமே… வழி சமைதுதது. அந்த குடாரப்புத் தரையிறக்கத்தை பிரிகேடியர் பால்ராஜ் அண்ணாவின் தலைமையிலான 1200 போரளிகளை எந்தவிதமான இழப்புக்களுமின்றி மிகவும் விவேகமாகவும்… நிதானமாகவும்… வெற்றிகரமாகத் தரையிறக்கம் செய்த கடற்புலிகளின் தளபதியே இவராவார்.

சிறிலங்கா படையினரின் தொலைதொடர்பினை விடுதலைப்புலிகள் இலகுவில் ஓட்டுகேட்டு கொள்கிறார்கள் என்பதை உணர்ந்த சிறிலங்கா அரசு வெளிநாடு ஒன்றில் இருந்து ( பாகிஸ்தான்)நவீன ரக தொலைத்தொடர்பு கருவிகளை கொள்வனவு செய்து களமுனையில் படையினரின் செயற்பாட்டுக்காக பயன்பாட்டில் விட்டிருந்தது.இது ஒட்டுகேட்பது கடினமானதுதான்.ஆரம்பத்தில் இதனை உடறுத்து ஒட்டுகேட்பது என்பது முடியாததாகவே இருந்தது.

எனினும் குறிப்பிட்ட காலத்துக்குள் விடுதலை புலிகள் இதனையும் வெற்றி கொண்டு அதன் தொழில்நுட்பத்தை கண்டறிந்து அதற்கேற்ப வகையில் ஓட்டு கேட்க துவங்கினார்கள்.அதனை எவ்வாறு கண்டறிந்தார்கள் என்றால்,பாகிஸ்தான் வழங்கியிருந்த தொலைத்தொடர்பு கருவியினை சிறிலங்கா படையினர் விடுதலைபுலிகளின் கட்டுபாட்டு பகுதிக்குள் இருந்து பயன்படுத்த தொடங்கினார்கள்.அதாவது சிறிலங்கா படையின் ஆழ உடுருவும் படையினர் விடுதலைபுலிகளின் நிர்வாக பகுதிகளுக்குள் வந்து தாக்குதலை நடத்தும் போது,இவ்வாறு ஓட்டுகேட்க்க முடியாத கருவிகளை பயன்படுத்த தொடங்கினார்கள் இந்த நிலையில் ஆழ உடுருவும் அணியின் தாக்குதல் ஒன்றினை வவுனியா புளியங்குளம் பகுதிக்கு அண்மையாக விடுதலைப்புலிகள் முறியடித்து இருந்தனர்.

இதன்போது ஆழ உடுருவும் படையினரின் சடலம் ஒன்று வெடிபொருட்கள் என்பனவற்றுடன் பாகிஸ்தான் வழங்கிய புதிய தொலைத்தொடர்பு கருவியும் புலிகள் வசம் வந்து சேர்ந்தது.அதனை பார்த்தபோது புலிகளுக்கு ஆச்சரியமாகி போனது,ஏனெனில் நவீன தொலைத்தொடர்பு கருவி என்று சிறிலங்காவிற்கு பாகிஸ்தான் வழங்கிய அந்த தொடர்பாடல் கருவிகளை சிறிலங்கா பாவனைக்கு கொண்டுவருவதற்கு முன்னரே விடுதலைப்புலிகள் தமது பாவனையில் வைத்திருந்தனர்.உடனடியாக அதன் தொழில்நுட்பத்தை தெரிந்துகொண்டு ஒட்டுகேட்க முடியாது என்று கருதிய பாகிஸ்தான் தொடர்பாடல் கருவியில் உரையாடிய படையினரின் உரையாடல்களையும் போராளிகள் ஒட்டுகேட்க தொடங்கினார்கள்.

இதேவேளை தென்னிலங்கையில் தாக்குதலுக்கான பொருட்கள்,நகர்வுகள், மன்னார் கடல்வழியாகவே நகர்த்த படுகின்றன.என ஏற்கனவே பார்த்திருந்தோம் கேணல் சாள்ஸ் அவர்களின் வீரச்சாவுக்கு பின் மங்களேஸ் மாஸ்டரிடம் சில பணிகள் கொடுக்கபடுகின்றன.இதனைவிட இவர் திருக்கேதீஸ்வரம் கட்டளைத்தளபதியகவும் செயற்பட்டு கொண்டிருந்தார்.இவரது முதன்மையான கட்டளை மையம் அடம்பன் மாகவித்தியலத்திற்கு அருகாமையில் காணப்பட்டது.கடற்புலி போராளிகளை வைத்தே திருக்கேதீஸ்வரம் பகுதி எதிர்த்தாக்குதல் நடைபெறுகிறது.இவருக்கு கீழ்தான் பொறுப்பாளர் காதர் அவர்களும் செயற்பட்டு கொண்டிருக்கிறார்.

இவ்வாறுதான் அன்று திருக்கேதீஸ்வரம் பகுதியில் விடுதலைபுலிகளின் காவலரண் ஒன்றை எதிரி கைப்பற்றி விட்டான்.இதில் போராளிகள் பலர் வீரச்சாவு அடைகின்றார்கள்.இக்காவலரண் மீட்பதுக்கான தாக்குதலை விடுதலைப்புலிகள் நடத்தி மீட்கிறார்கள்.இதன்போது விடுதலைபுலிகளின் காவலரணில் நின்ற சிறிலங்கா படையினர் சில நரிவேலைகளை செய்திருந்தார்கள்.காவலரண் முன் சிறிலங்கா படையினருக்கு வைத்த மிதிவெடிகளை சிறிலங்கா படையினர் எடுத்து அந்த காவலரணில் வாசல்கள் ,உள்வந்து இருக்கும் இடம் அதற்க்கு பின்புள்ள விடுதலைப்புலிகள் நடமாட்ட பாதை போன்ற இடங்களில் புதைக்கிறார்கள்.புலிகளின் நடமாட்ட பாதையில் சிறிலங்கா படையினர் புதைத்துவிட்டு போன மிதிவெடியில் மங்களேஸ் கால் வைக்கிறார்.மிதிவெடியில் கால்பட்டு கீழே விழும்போது,அருகில் புதைத்து வைக்கபட்டிருந்த இன்னொரு மிதிவெடியில் உடம்பு விழ அதுவும் வெடிக்க லெப்.கேணல் .மங்களேஸ் மாஸ்டர் அந்த இடத்துலயே வீரச்சாவை தழுவி கொள்ளுகிறார்.

08.03.2008 அன்று தான் நேசித்த மக்களுக்காக தனது உயிரை ஈர்ந்தார்.

இன்று இவரது 8 ஆம் ஆண்டு நினைவுநாள் ஆகும்.

இம் மாவீரருக்கு எமது வீர வணக்கத்தை தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.

31.03.2000 ஓயாதஅலை-03 நடவடிக்கையில் காவியமான கரும்புலிகள் வீரவணக்க நாள்

31-03-2000 அன்று ஓயாதஅலை-03 நடவடிக்கையில் யாழ்-இயக்கச்சிப் பகுதியில் நடைபெற்ற கரும்புலித்தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கரும்புலிகளான
bt ltte 32. 3.2000

கரும்புலி மேஜர் மலர்விழி
பாலகிருஸ்ணன் சங்கீதா
யாழ்ப்பாணம்

கரும்புலி மேஜர் ஆந்திரா (நாயகம்)
விநாயகமூர்த்தி சுதர்சினி
யாழ்ப்பாணம்

கரும்புலி மேஜர் ஆந்திரா வீரவணக்கம்

Bt Maj Malarvili

Bt Maj Anthira

 

ஆகிய கரும்புலி மாவீரர்களின் 13ம் ஆண்டு வணக்க நாள் இன்றாகும்.
தமிழீழ தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிரை ஈந்த இந்த வீரமறவர்களிற்கு எமது வீரவணக்கங்கள். இதே நாளில் வீரச்சாவைத் தழுவிய ஏனைய மாவீரர்களிற்கும் எமது வீரவணக்கங்கள்.

https://www.facebook.com/karumpulimaveerarkal

31.03.1996 யாழ் – சுண்டிக்குள கடற்பரப்பில் காவியமான கரும்புலிகள் வீரவணக்க நாள்

31.03.1996 அன்று காங்கேசன்துறை துறைமுகத்திலிருந்து திருகோணமலை துறைமுகத்தை நோக்கி ரோந்து சென்ற சிறீலங்கா கடற்படையினரின் கடல்கல அணியினை யாழ் – சுண்டிக்குள கடற்பரப்பில் வழிமறித்து அக்கடல்கல அணியிலிருந்த டோறா பீரங்கிப் படகினை மூழ்கடித்த கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலிகளானbt ltte 31. 3.1996

கடற்கரும்புலி கப்டன் இளையவள்
இராசலிங்கம் இராஜமலர்
திருகோணமலை

கடற்கரும்புலி மேஜர் ஜெகநாதன்
சங்கரப்பிள்ளை தவராசா
கிளிநொச்சி

Bt Maj Jeyanathan Bt Cap Ilaiyaval

ஆகிய கடற்கரும்புலி மாவீரர்களின் 17ம் ஆண்டு நினைவு வணக்க நாள் இன்றாகும்.
தமிழீழ தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிரை ஈந்த இந்த வீரமறவர்களிற்கு எமது வீரவணக்கங்கள். இதே நாளில் வீரச்சாவைத் தழுவிய ஏனைய மாவீரர்களிற்கும் எமது வீரவணக்கங்கள்.

https://www.facebook.com/karumpulimaveerarkal

29.03.2001 கடற்பரப்பில் காவியமான கரும்புலிகள் வீரவணக்க நாள்

29-03-2001அன்று தமிழீழக் கடற்பரப்பில் தவறுதலாக ஏற்பட்ட வெடி விபத்தில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலிகளான

bt ltte 29. 3.2001

கடற்கரும்புலி கப்டன் வாகைசூடி
மரியநாயம் பிலிப்ஸ்.ரீபன்
யாழ்ப்பாணம்

கடற்கரும்புலி மேஜர் காந்தன்
மகாதேவன் சுதாகரன்
முல்லைத்தீவு

Bt Cap vakaisudiBt Maj Kanthan

அகிய கடற்கரும்புலி மாவீரர்களின் 12ம் ஆண்டு நினைவு வணக்க நாள் இன்றாகும்.

தமிழீழ தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிரை ஈந்த இந்த வீரமறவர்களிற்கு எமது வீரவணக்கங்கள். இதே நாளில் வீரச்சாவைத் தழுவிய ஏனைய மாவீரர்களிற்கும் எமது வீரவணக்கங்கள்.

https://www.facebook.com/karumpulimaveerarkal

22.03.2008 நாயாறு கடற்பரப்பில் காவியமான கரும்புலிகள் வீரவணக்க நாள்

22.03.2008 அன்று நாயாறு பகுதியில் இடம் பெற்ற சிறீலங்கா கடற்படையினரின் டோறா தகர்ப்பின் போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட

லெப். கேணல் அன்புமாறன்
சுபாஸ்கரன் கனகலிங்கம்
முல்லைத்தீவு

மேஜர் நிரஞ்சனி
அன்பரசி நன்னித்தம்பி
கிளிநொச்சி

மேஜர் கனிநிலா
குணரூபா குணராசா
கிளிநொச்சி

ஆகிய கடற்கரும்புலி மாவீரர்களின் 5ம் ஆண்டு நினைவு வணக்க நாள் இன்றாகும்.

Bt dora attack 2008 Bt Lt Col anpumaran, prabakaran Bt Lt Col anpumaran Bt Maj Niranjini with prabakaran Bt Maj Niranjini Bt Maj Kaninila with prabakaran Bt Maj Kaninila

தேசியத்தலைவர் அவர்களின் கரங்களை தமிழ்மக்கள் அனைவரும் வலுப்படுத்துங்கள் என நாயாறு பகுதியில் இடம் பெற்ற சிறீலங்கா கடற்படையினரின் டோறா தகர்ப்பில் வீரச்சாவடைந்த கடற்கரும்புலிகள் வேண்டுகோள்

தமிழீழ தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிரை ஈந்த இந்த வீரமறவர்களிற்கு எமது வீரவணக்கங்கள். இதே நாளில் வீரச்சாவைத் தழுவிய ஏனைய மாவீரர்களிற்கும் எமது வீரவணக்கங்கள்.ltte veeravanakam

Up ↑