கடல்புலிகளின் தளபதி சூசை அவர்களின் மரணமும் தெளிவான மன உறுதியும்
தலைமையால் கொடுக்கப்பட பொறுப்புகளை சரியாக செய்து இறுதி நிமிடம் வரை தலைமைக்கு விசுவாசமாக நடந்து தமிழ் ஈழம் என்ற உயரிய இலட்சியத்துக்காக தன்னையே தற் கொடையாக தந்த எமது தளபதி சூசை.
நந்திக்கடல் பகுதியின் பொறுப்பும் பொது மக்களை சரியான நேரம் பார்த்து இராணுவ கட்டுப்பாட்டு பகுதிக்கு அனுப்பும் பொறுப்பும் தலைவரால் அவரிடம் கொடுக்கப்பட்டது தமிழ் நாட்டில் உள்ள உறவுகளுக்கு சூசை மூலமாகவே செய்திகள் பரிமாறப்பட்டன ஒரு கட்டத்தில் ஒரு போராளி தளபதி சூசையிடம் அண்ணா நிலைமை மோசமாகி வருகிறது நீங்கள் வெளி ஏறுங்கள் நாம் பார்த்து கொள்கிறோம்.
அப்போது தளபதி சூசை கோபமாக உங்களை இந்த நட்ராற்றில் விட்டுட்டுப் போய் விட்டால் என் மன சாட்சியே என்னை கொன்று விடும் அதை விட இந்த இடத்தில் வீர மரணம் அடைவதே மேல் ,அப்போது அந்த போராளி தயக்கத்துடனே அண்ணியும் பிள்ளையும் இராணுவத்திடம் பிடிபட்டு விட்டார்கள் அண்ணியிடம் உங்கள் நம்பரை பெற்று கொண்ட இராணுவ புலனாய்வாளர் உங்களுடன் பேச வேண்டுமாம் சரி கொடு என்று வாங்கி பேசிய தளபதி சூசை அவர்கள் எனது மனைவியையும் பிள்ளையையும் கொன்றாலும் அல்லது சித்திரவதை செய்தாலும் நான் சரணடைய மாட்டேன் இங்கு எமக்காக மரணித்த போராளிகள் மேல் சத்தியம் அவர்கள் வழியில் நாமும் செல்வோம்.
நாம் கடைசி வரை அவரை காப்பாற்ற முயற்சி எடுத்தோம் அவரது தமிழ் ஈழ பற்றுக்கு முன்னால் நாம் தோற்று போனோம் ஆம் வயிற்றிலும் தொடையிலும் காயமுற்ற அவரை கார் டியுப்பின் உதவியுடன் தமிழ் நாட்டுக்கு நீந்தி கொண்டு வர முயற்சி செய்தோம் பாதி வழியில் அவர் எங்களை விட்டு போய் விட்டார் திரும்பி வந்து நந்தி கடல் பகுதியில் முகம் மட்டும் தெரிய கூடியவாறு புதைத்து விட்டு வெளியேறினோம்…..( காகங்கள் உடலை கொத்தி சின்னாபின்னம் செய்து விட கூடாது என்பதற்காக ) காரணம் எமது பெரிய அணிகள் வந்தால் அவர்கள் முடிவு எடுப்பார்கள் என்று அதற்குள் சிங்கள இராணுவம் அந்த பகுதிக்குள் வந்து உடலை கை பற்றி கொண்டது
தியாகங்கள் தொடரும்…
-ஆதி
http://www.eelamview.com/2012/05/17/brigadier-soosai/
*
புலிகளின்குரல் வானொலி தமிழீழ தேசியத்தலைவரினால் உத்தியோக புர்வமாக தொடக்கிவைக்கப்பட்ட நாள் 1990 ஆம் ஆண்டு கார்திகை மாதம் 21 தேதி.
புலிகளின் குரல் வானொலிச் சேவையின் ஓராண்டு பூர்த்தி நாளை முன்னிட்டு தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் அனுப்பிய வாழ்த்துச் செய்தியில்……
“எமது எதிரியான சிங்கள அரசும் அதன் கைக்கூலிகளான தமிழ்த் துரோகக் குழுக்களும் எமக்கு எதிராக மிகவும் கேவலமான விஷமப் பிரச்சாரங்களை ஆற்றி வருகின்றன. எதிரியின் பொய்ம்மையான கருத்துப் போருக்கு எதிராக உண்மையின் ஆயுதமாக எமது வானொலியின் குரல் ஒலிக்க வேண்டும். ஒரு சத்திய யுத்தத்தின் போர் முரசாக புலிகளின் குரல் ஒலிக்க வேண்டும்” என்றார்.
புலிகளின் குரல் வானொலி ( 21.11.1990 ) !!
புலிகளின்குரல் வானொலி தமிழீழ தேசியத்தலைவரினால் உத்தியோக புர்வமாக தொடக்கிவைக்கப்பட்ட நாள் 1990 ஆம் ஆண்டு கார்திகை மாதம் 21 தேதி.
புலிகளின் குரல் வானொலிச் சேவையின் ஓராண்டு பூர்த்தி நாளை முன்னிட்டு தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் அனுப்பிய வாழ்த்துச் செய்தியில்……
“எமது எதிரியான சிங்கள அரசும் அதன் கைக்கூலிகளான தமிழ்த் துரோகக் குழுக்களும் எமக்கு எதிராக மிகவும் கேவலமான விஷமப் பிரச்சாரங்களை ஆற்றி வருகின்றன. எதிரியின் பொய்ம்மையான கருத்துப் போருக்கு எதிராக உண்மையின் ஆயுதமாக எமது வானொலியின் குரல் ஒலிக்க வேண்டும். ஒரு சத்திய யுத்தத்தின் போர் முரசாக புலிகளின் குரல் ஒலிக்க வேண்டும்” என்றார்.
ஈழப் போராட்டத்தை வேகப்படுத்திய புலிக் குரல்
ஈழத் தமிழர்களின் வாழ்வில் கார்த்திகை மாதம் பல வழிகளிலும் சிறப்பினைப் பெற்றுள்ளது என்று கூறினால் மிகையாகாது. விடுதலைக்காக தன் மூச்சை நிறுத்திய ஓர் உயிரின் இறப்பும், விடுதலை வேண்டிய தமிழர்களினை வேகப்படுத்திட ஓர் உயிரின் உயிர்ப்பும் இம் மாதத்தில் தான் அரங்கேறின. ஈழத்தில் முன்பொரு காலத்தில் இந்த இரு பெரும் வரலாற்று நிகழ்வுகளுக்கும் அப்பால் புலிகளின் குரல் வானொலி, தமிழீழ காவல் துறை முதலியவையும் இந்த கார்த்திகை மாதத்தில் தான் ஆரம்பித்து வைக்கப்பட்டன. தாயக மக்களின் உண்மைக் குரலாய், தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் எண்ணக் குரலாய் புலிகளின் குரல் ஈழத்தின் வட கிழக்கெங்கும் தன் ஒலி வீச்சு எல்லையை விரிவுபடுத்தியிருந்தது.
சிறிய பொருளினைச் சந்தைப்படுத்துவது முதல், ஒரு வியாபாரத்தினைப் பெருக்குவது வரை விளம்பரம் என்பது எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததோ, அதே போல ஒரு அமைப்பினது கொள்கைகளை, சிந்தனைகளை, அவ் அமைப்புச் சார்ந்த சமகால மாற்றங்களை மக்களிடத்தே கொண்டு செல்வதற்கு ஒரு ஊடகம் என்பது அவசியமாகும். விடுதலை அமைப்பினது போராட்ட நோக்கத்தை மக்களிடத்தே கொண்டு செல்லவும், விடுதலை அமைப்பிற்கும் மக்களுக்கும் இடையேயான தொடர்பாடல்களைக் கட்டியெழுப்புவதற்கும் ஊடகம் என்பது அவசியம் என்பதனை உணர்ந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் திரு.வே.பிரபாகரன் அவர்களது சிந்தனையின் பயனாக 1986களின் பிற் பகுதியில் யாழ்ப்பாணக் குடாநாட்டினை மையப்படுத்தித் தொடங்கி வைக்கப்பட்டது தான் நிதர்சனம் எனும் பெயர் கொண்ட தொலைக்காட்சியாகும்.
ஈழப் போராட்டத்தின் ஆரம்ப காலங்களில் போராட்டச் சம்பவங்களை, கள நிலமைகளை. அரசியல் நகர்வுகளை, போராட்டப் பிரச்சாரங்களை மக்களிடத்தே கொண்டு சென்று சேர்ப்பதற்கு நடு நிலையான ஊடகம் ஒன்று இல்லையே என்று ஆதங்கப்பட்ட புலிகள் அமைப்பினரின் முதல் முயற்சியாகப் புலிகளின் குரல் எனும் பெயர் கொண்ட பத்திரிகை 1988ம் ஆண்டின் நடுப் பகுதியில் பிறக்கின்றது. காலவோட்ட மாற்றத்தில் புலிகளின் குரல் எனும் பத்திரிகையினைப் திரு.பிரபாகரன் அவர்களின் சிந்தனைக்கு அமைவாக புலிகளின் குரல் எனும் பெயரில் வானொலியாக மாற்றம் செய்து மக்களுக்கு நடு நிலையான செய்திகளைப் பகிரும் முதலாவது ஒலிபரப்பு முயற்சியினை 21.11.1990 அன்று தமிழீழ விடுதலைப் புலிகள் தொடங்குகின்றார்கள்.
ஸ்ரீலங்கா அரசின் அழுத்தங்களுக்கு அடி பணியாது ஈழ மக்களுக்காய் களமாடும் வீரர்களின் நினைவுகளையும்,சம கால அரசியல் சம்பவங்களையும் உள்ளடக்கிய ஒரு மணி நேர ஒலிப்பரப்பாக புலிகளின் குரல் வானொலி ஈழத்தின் வடக்குப் பகுதியில் 1990ம் ஆண்டின் இறுதிக் நாட்களில் இரவு எட்டு மணி தொடக்கம் ஒன்பது மணி வரை தன் ஒலிபரப்பினைத் தொடங்குகின்றது. பின்னர் மக்களின் பேரபிமானம் பெற்ற வானொலியாக இவ் வானொலி மாற்றம் பெற்றுக் கொண்டதும் காலையும், இரவும் எனத் தன் சேவையினை விரிவுபடுத்துகின்றது. குறுகிய மூல வளங்களை உள்ளடக்கியும், சீரான மின்சார வசதிகள் இன்றியும் மக்களுக்கு ஒரு நேர்த்தியான ஒலிபரப்பினை வழங்க வேண்டும் எனும் பிரபாகரன் அவர்களின் சிந்தனைக்கமைவாகப் புலிகளின் குரல் வானொலி மக்கள் மனங்களைக் கவரும் வண்ணம் நாளொரு பொழுதாகத் தன் பணியினைச் சிறப்புற ஆற்றத் தொடங்குகின்றது.
ஆரம்ப காலங்களில் ஈழத்தில் மின்சாரமின்மையால் மக்கள் பற்றரிகளின் உதவியோடும், சைக்கிள் டைனமோ மின்சாரத்தின் உதவியோடும் தான் வானொலிப் பெட்டியை முடுக்கி விட்டு புலிகளின் குரல் ஒலிபரப்பினைக் கேட்கத் தொடங்கினார்கள். வட பகுதி மக்களுக்கு நடு நிலையான செய்திகள் சென்று சேரக் கூடாது எனும் இராணுவத்தினரதும், அரசாங்கத்தினதும் இறுக்கமான கொள்கை காரணமாக யாழ்ப்பாணத்தை மையமாக வைத்துப் புலிகளின் குரல் ஒலிபரப்பு பண்பலை 98 அதிர்வெண்ணில் (98KHZ) இல் ஒலிபரப்பாகும் போது இராணுவத்தினர் விஷமத்தனாமாக அவ் ஒலிபரப்புச் சேவையினைக் குழப்பும் நோக்கில் தமது வானொலிச் சேவையினைப் புலிகளின் குரல் ஒலிபரப்பாகும் அதே அலை வரிசையில் ஒலிக்கச் செய்வதும்; சமயோசிதமாகச் செயற்படும் புலிகளின் குரல் ஒலிபரப்புத் தொழில் நுட்பவியலாளர்கள் பண்பலை 92 அதிர்வெண்ணிற்ற்கு மாற்றுவதும் ஈழத்தில் புலிகளின் குரல் செய்தி ஒலிபரப்பாகும் வேளையில் இடம் பெறும் சுவாரஸ்யமான நிகழ்வுகளாகும் !
போராட்டக் கொள்கைகளைத் தாங்கி, தலைவர் பிரபாகரனின் சிந்தனையின் வடிவமாக ஓங்கி ஒலித்துக் கொண்டிருந்த புலிகளின் குரல் 1990ம் ஆண்டின் பின்னர் ஈழ மண் சந்தித்த அத்தனை இடப் பெயர்வுகளையும் தாங்கி மக்களோடு மக்களாக இடம் பெயர்ந்து தன் சேவைகளை மக்களுக்கு வழங்கிக் கொண்டிருந்தது.புலிகளின் ஆட்சேர்ப்பிற்காவும், போராட்டம் பற்றிய பிரச்சாரப் பரப்புரைகளுக்காகவும் புலிகளின் குரல் ஆரம்பிக்கப்பட்டதாக ஒரு சிலர் விஷமத்தனமான பரப்புரைகளில் ஈடுபட்டு நின்ற சமயத்தில்; சமூக நிகழ்சிகளை,செய்தி அலசல்களை,விளையாட்டுச் செய்திகளை, விளம்பரங்களைத் தாங்கி ஒலிக்கின்ற ஒலிபரப்பான தமிழீழ வானொலியினைப் புலிகளின் குரல் நிறுவனத்தினர் ஆரம்பித்து இப் பிரச்சாரச் செய்கைகளுக்கெல்லாம் முற்றுப் புள்ளி வைத்தனர்.
இராணுவ விமானங்களின் குண்டு வீச்சுத் தாக்குதல்கள்,பீரங்கித் தாக்குதல்கள் எனப் பல நடவடிக்கைகளிற்கு மத்தியிலும் போராளிகளுக்கும், மக்களுக்கும் ஈழ மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கின்ற – தேசியத் தலைவரின் எண்ணங்களைத் தாங்கி வருகின்ற ஒரு வானொலிச் சேவையினை வழங்கிய பெருமை அதன் பணிப்பாளர் திரு. தமிழன்பன் அவர்களையும், பணியாளர்களையுமே சாரும்! ஒரு முறை அறிவிப்பாளர் கிருஸ்ணபிள்ளை திருமாறன் அவர்கள் ஜெயசிக்குறுச் சமர் இடம் பெற்ற வேளையில் 1998ம் ஆண்டின் நடுப் பகுதியில் வன்னியின் கொக்காவில் பகுதியில் அமைந்திருந்த புலிகளின் குரல் வானொலிக் கலையகத்தில் தமிழீழ வானொலிச் சேவையின் மாலை நேரச் செய்தியறிக்கைக்கு தயாராகிக் கொண்டிருந்தார்.
அந் நேரம் இடம் பெற்ற விமானக் குண்டு வீச்சில் புலிகளின் குரல் கலையகத்தின் ஒரு பகுதி சேதமடைந்தாலும், வானொலியினை நிறுத்தாது “குண்டு விழுந்தால் என்ன! வீடு குலுங்கி இடிந்தால் என்ன! உடல் துண்டு பறந்தால் என்ன! நாங்கள் துடித்து மகிழ்ந்தால் என்ன!
தாகம் தணியாது! எங்கள் தாயகம் யார்க்கும் பணியாது!” எனும் பாடலை ஒலிபரப்பி ஒலிபரப்பினை நிறுத்தாது அழிவுகளின் மத்தியிலும், அச்சத்தின் மத்தியில் இருந்தும் மக்களுக்கான சேவையினை வழங்கிய பெருமையினை எப்படி வர்ணிப்பது? இந்தளவு தூரம் தலைவரின் சிந்தனையிற்குச் செயல் வடிவம் கொடுக்கின்ற ஊடகத் துறையினையும் புலிகள் அமைப்பினர் நேசித்தார்கள் என்றால்;! அந்த ஊடகத்தின் வீரியம் எப்படி இருந்திருக்கும் என்று ஊகித்துப் பாருங்களேன்!
1999ம் ஆண்டு கார்த்திகை மாதம் நான்காம் திகதி முதல் புலிகளின் படை நடவடிக்கைகள் தாக்குதல்கள் தொடங்கும் போது இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதி மக்கள் எந்தப் பிரதேசங்களை நோக்கி இடம் பெயர வேண்டும் எனும் தகவல்களையும், முதன் முதலாக ஈழப் போராட்ட வரலாற்றில் ஒரு நேரடி ஒலிபரப்புப் போன்று புலிகளின் ஓயாத அலைகள் மூன்று வரலாற்றுச் சமரின் ஆறு நாள் அதிரடித் தாக்குதல்களை நேரடிச் செய்திகளாக உடனுக்குடன் பகிர்ந்து கொண்ட பெருமையும் புலிகளின் குரலையே சாரும்! இலங்கை வானொலி வரலாற்றில் தொலைபேசியூடாக அழைத்துப் பாடல் கேட்கின்ற ரெலிபோன் விருப்ப நிகழ்ச்சியினை வயர்லெஸ் வோக்கி டோக்கி மூலம் செய்து காட்டிய முதலாவது வானொலி புலிகளின் குரலாகும்.
தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனின் மாவீரர் நாள் உரை இடம் பெறும் கார்த்திகை மாதம் 27ம் திகதியன்று மாலை 05.40 மணியளவில் இலங்கை இராணுவத்தினரால் திட்டமிட்டு மாவீரர் நாள் நிகழ்வுகளைக் குழப்பும் வகையில் இடம் பெறும் விமானக் குண்டு வீச்சுத் தாக்குதல்களிற்கு மத்தியிலும் நிமிர்ந்து நின்று மக்கள் மத்தியில் வரலாற்றுச் சிறப்பு மிக்க உரையினைக் கொண்டு சென்று சேர்க்கின்ற அயராத பணியினைச் செய்ததும் இந்தப் புலிகளின் குரல் தான்! 23 தடவைகள் விமானக் குண்டு வீச்சிற்கு புலிகளின் குரல் கலையகம், மற்றும் ஒலிபரப்புக் கோபுரங்கள் அகப்பட்டாலும் “விழ விழ எழுவோம்!” என நிமிர்ந்து நின்று ஈழ மக்கள் வாழ்வோடு இரண்டறக் கலந்திருந்தது புலிகளின் குரல்.
போராட்டம் தொடர்பான நிகழ்வுகளை விட, பாடசாலை மாணவர்களின் உள அறிவினை மேம்படுத்தும் போட்டி நிகழ்ச்சிகள், பொது அறிவுத் தேடலை விரிவுபடுத்தும் நாளாந்த அவதானிப்பு போட்டி வினாக்கள் எனப் பல சிறப்பான நிகழ்வுகளையும் தன்னகத்தே தாங்கி வலம் வந்து கொண்டிருந்த புலிகளின் குரல் 1999ம் ஆண்டு சிங்கள மொழியிலான சேவையினை “கொட்டி ஹண்ட சிங்கள விக்காசிய” எனும் பெயரில் சிங்கள இராணுவத்தினருக்கு கள நிலமைகளைச் சொல்லும் நோக்கில் ஆரம்பிக்கின்றது. நாடகங்கள், நாட்டுப்புற கலைப் பாடல்கள், வரலாற்று நினைவு மீட்டல்கள் எனப் பல சுவையான சம்பவங்களைத் தாங்கி வந்த புலிகளின் குரல் போராளிகளுக்குள்ளும், பொது மக்களுக்குள்ளும் பொதிந்திருந்த இலக்கியத் தேடலுக்கும் உந்து சக்தியாக விளங்கியிருக்கிறது.
குறுகிய வீச்செல்லைக்குள் இருந்த புலிகளின் குரல் சமாதான காலத்தில் (2002ம் ஆண்டு) நோர்வே நாட்டின் அனுசரனையின் கீழ் பெற்றுக் கொள்ளப்பட்ட ஒலிபரப்புச் சாதனங்களின் உதவியோடு இலங்கையின் வடக்கு கிழக்கிற்கும் தன் ஒலிபரப்பு வீச்செல்லையினை விரிவுபடுத்துகின்றது. 2005ம் ஆண்டு இணையத்திலும் தன் சேவையினை இணைத்து உலக நாடுகளில் வாழும் தமிழ் உறவுகளும் புலிகளின் குரலை உரத்துக் கேட்கும் நிலையினை உருவாக்கியது. காலையில் தேசியத் தலைவரின் சிந்தனைகளோடு தன் ஒலிபரப்பினைத் தொடங்கும் புலிக் குரல், மாவீரர் பாடல், கணப் பொழுது, செய்தியறிக்கை, வீரச் சாவு அறிவித்தல், சாவு அறிவித்தல், மற்றும் துயர் பகிர்வோம் ஆகிய நிகழ்ச்சிகளோடு நாளிதழ் நாழி எனும் பெயரில் சுவையும் சுவாரஸ்யமும் கலந்து பத்திரிகைச் செய்திகளையும் வழங்கி வந்திருக்கின்றது.
போர்க் கால சூழ் நிலையினைக் கருத்திற் கொண்டு ஒன்றாய் எழுவோம் எனும் நிகழ்ச்சியும், புறப்படுங்கள் போர்க்களம் எனும் நிகழ்ச்சியும், போராட்டத்திற்காக ஆட்களைத் திரட்டும் நோக்கில் உருவாக்கப்பட்டிருந்தது. பின்னாளில் கவிஞர் புதுவை இரத்தினதுரையின் கவிதைகளைத் தாங்கி நாடு எனும் நிகழ்ச்சியும், யோகரட்ணம் யோகியின் உரையினைத் தாங்கி வரும் தமிழர் பாடு நிகழ்ச்சியும் ஈழத்தின் இறுதி யுத்தக் கள நிலமைகளைக் கருத்திற் கொண்டு இணைத்துக் கொள்ளப்பட்டது. இரவு நேரத்தில் கணப் பொழுது, கருத்துக் களம், உலக வலம், கருத்துப் பகிர்வு, செய்தி வீச்சு, அகமும் புறமும், எனும் நிகழ்ச்சிகளோடு தொடர் நாடகங்களையும் மக்களுக்கு வழங்கி மக்கள் மனங்களில் இன்றும் நினைவலைகளாக அடித்துக் கொண்டிருக்கின்ற பெருமையும் இந்தப் புலிகளின் குரலையே சாரும்.
23 தடவைகள் விமானக் குண்டு வீச்சிற்கு உட்பட்டும், பல தடவைகள் இடப் பெயர்வுகளைச் சந்தித்தும் இறுதி யுத்த காலம் வரை வன்னி மக்கள் பின்னே நகர்ந்து சென்று ஈழப் போரின் இறுதி நாட்களான 15.05.2009 வரை வன்னிப் பகுதியில் ஓயாது ஓங்கி ஒலித்துக் கொண்டிருந்து புலிகளின் குரல். இன்று தமிழர்களின் வாழ்வியற் கலை கலாச்சார விடயங்கள் வன்னி மண்ணில் சிதைக்கப்பட்ட பின்னரும், ஈழ மக்கள் வாழ்வோடு மட்டுமல்ல அகில மெங்கும் பரந்து வாழுகின்ற தமிழ் மக்கள் வாழ்வோடும் இரண்டறக் கலந்து இணையம் மூலம் ஒலித்துக் கொண்டிருக்கின்றது. பல தடைகளின் மத்தியில் விடுதலையின் உணர்வின் குரலாக ஒலித்து நிற்கும் புலிகளின் குரல் ஈழத்தில் வாழும் பெரும்பான்மையான தமிழர் உள்ளங்களில் அவர் தம் இளமைக் காலத்தின் நினைவின் குரலாக ஞாபகச் சுவடுகளில் பொதிந்திருக்கிறது என்பதில் ஐயமில்லை!
வானொலி ஒலிபரப்புத் துறையில் கடந்து வீறு நடை போட்டுக் கொண்டிருக்கிறது இந்த வானொலி!
இது முழுமையனாது அல்ல ஒரு சில தொகுப்பு விக்கிபீடியாவிலிருந்து
PDF–List of commanders of the LTTE – Wikipedia,
புலிகளின் உள் கட்டமைப்புகள்
கடற்புலிகள்
1)சாள்ஸ் படையணி
2)அங்கைய கண்ணி நீரடி நீர்ச்சல் பிரிவு
3)நிறோயன் நீரடி நீர்ச்சல் பிரிவு
4)ஈரூடக தாக்குதல் படையணி
5)கடற்படை படகு கட்டுமான பிரிவு
6)கடற்கரும்புலிகள் அணி
7)கடற்சிறுத்தை படையணி
வான்புலிகள்
1)ராதா வான் காப்பு படையணி
2)விமான தாக்குதல் படையணி
தரைப்படை
1) சார்ள்ஸ் அன்ரனி சிறப்பு படையணி
2) ஜெயந்தன் படையணி
3) இம்ரான் பாண்டியன் படையணி
4) யாழ் செல்லும் படையணி
5) புலனாய்வுத்துறை தாக்குதல் படையணி
6) சோதியா படையணி
7) அன்பரசி படையணி
8)- மாலதி படையணி
9) சிறுத்தை படையணி
10)தரைக்கரும் புலிகள் படையணி
11)பொன்னம்மான் கண்ணி வெடி பிரிவு
12)கிட்டு பீராங்கி படையணி
13)விக்ரர் விசேடகவச எதிர்ப்பு படையணி
14)லெப். கேணல் குட்டிசிறி மோட்டார் படையணி
15)மகளிர் அரசியல் துறை தாக்குதல் படையணி
16)இம்ரான் பாண்டியன் உந்துருளி அணி
17)எல்லை படை
18)துணைப்படை
அறிவியல்
1) வெடிபொருள் தொழில்நுட்ப பிரிவு
2)கணிணி தொழில்நுட்ப பிரிவு
3)இலத்திரனியல் தொழில்நுட்ப பிரிவு
4) போர்கருவி தொழிற்சாலை
5)தமிழீழ இராணுவ விஞ்ஞான கல்லூரி
அரசியல் துறை
1) பரப்புரை பிரிவு
2) தமிழீழ பொறியியல் துறை
3) தமிழீழ விளையாட்டு துறை
4) விடுதலைப்புலிகளின் ஆங்கில கல்லூரி
5) திரைப்படபுத்தக மொழிபெயர்ப்பு துறை
6) தமிழீழ விடுதகலைப்புலிகளின் அரசியல் பிரிவு
7) தமிழீழ கல்வி மேம்பாட்டு கழகம்
8 ) தமிழீழ கலை பண்பாட்டு கழகம்
9) விடுதலைப்புலிகளின் சுகாதாரப் பிரிவு
10)சூழல் நல்லாட்சி ஆணையம்
11)தமிழீழ வனவள பாதுகாப்பு பிரிவு
12)பொருண்மிய மேம்பாட்டு நிறுவனம்
13)பொருண்மிய மதியுரைகம்
14)தமிழீழ காலநிலை அவதானிப்பு நிலையம்
15)ஓளிக்கலைப்பிரிவு
16)தமிழிழ தேசிய தெலைக்காட்சி
17)நிதர்சனம்
18)ஒளி வீச்சு ஒலிபரப்பு
19)புலிகளின் குரல் பத்திரிகை
20)புலிகளின் குரல் தமிழீழ வானொலி
21)ஈழநாதம்
22)சுதந்திரப் பறவைகள்
23)விடுதலைப்புலிகள் ஏடு
24)மருத்துவ பிரிவு
25)திலீபன் மருத்துவ சேவை
தமிழீழ காவல்துறை
1)குற்றதடுப்புபிரிவு
2)விசாரணை பிரிவு
3)வீதி போக்குவத்து கண்காணிப்பு பிரிவு
4)தமிழீழ காவல்துறை தாக்குதல் படையணி
தமிழீழ நீதித்துறை
*தமிழீழ நீதி மன்றம்
*சட்ட ஆக்க கழகம்
புலனாய்வுத் துறை
நிதித்துறை
*தமிழீழ நிர்வாக நிதிபிரிவு
*தமிழீழ வழங்கல் பிரிவு
*தமிழீழ வங்கி
*கொள்முதல் பிரிவு
தமிழீழ பேக்குவரத்து கழகம்
இதைவிட இரகசியமான சில படைகளும் உண்டு
பயிற்சி தந்திரம் துணிவு வெற்றி என்ற தேசியத் தலைவரின் தாரக மந்திரத்துடன், 1991 ம் ஆண்டு இதே நாளில் தமிழரின் படைக் கட்டமைப்பின் புதிய படிநிலை வளர்ச்சியாக சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி உருவாக்கம் பெற்றது. தமிழீழத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கணிசமான போராளிகள் எழுதுமட்டுவாள் தளத்தில் ஒன்றுகூட்டப்பட்டு, 1200 1200 போராளிகளைக் கொண்ட தாக்குதல் அணியும் 300 போராளிகளைக் கொண்ட கனரக ஆயுத அணியும் ஒண்றிணைக்கப்பட்டு ஒருங்கிணைந்த படைப்பிரிவாக சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியை தலைவர் உருவாக்கினார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முதலாவது மரபுவழிப் படையணியாக கட்டமைக்கப்பட்ட இப் படையணிக்கு, இயக்கத்தின் முதலாவது தாக்குதல் தளபதி லெப். சீலன் அவர்களின் இயற்பெயரை தலைவர் சூட்டினார். சீலனின் துணிவு, பற்றுறுதி ,அறிவுக்கூர்மை, செயல்வேகம் ,ஈகம் ஆகிய அனைத்தையும் முன்னுதாரணமாக கொண்டு செயற்பட வேண்டும் என்ற உயரிய நோக்கு தலைவரால் போராளிகளுக்கு வலியுறுத்தப்பட்டது. சமர்க்கள நாயகன் பால்ராஜ் அவர்களை சிறப்புத் தளபதியாக நியமித்த தலைவர், புகழ்பூத்த தளபதிகள் ராஜன் ( றோமியோ – நவம்பர் ) அவர்களை தளபதியாகவும் ஜஸ்டின் அவர்களை துணைத் தளபதியாகவும் நியமித்து வழிநடத்தினார்.
மிக உயர்ந்த உளவுரண் , தெளிவான திட்டமிடுதல், விரைவான நகர்வு திறன், களச் சூழலுக்கேற்ப சிறப்பு பயிற்சிகள் ,திறமான தகவல் தொடர்பு ,துல்லியமான வேவு , தேர்ந்த கள நிர்வாகம் ,அணித் தலைவர்களுக்கான தலைமைத்துவப் பயிற்சிகள் முதலான அனைத்தையும் உள்ளடக்கிய சிறப்புப் பயிற்சிகளில் படையணியை ஈடுபடுத்திய பால்ராஜ், களத்தின் எந்தச் சவால்களையும் எதிர்கொள்ளும் திறனுடன் படையணியை வளர்த்தார்.
வவுனியா பெரும் காடுகளூடாக வன்னிப் பெரு நிலத்தை முழுமையாக ஆக்கிரமிக்க சிறிலங்கா இராணுவம் மேற்கொண்ட வன்னி விக்கிரம -2 நடவடிக்கையை முறியடிக்கும் பாரிய தாக்குதலில் சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி தனது முதல் தாக்குதலை தொடுத்தது .மிகவும் தீவிரமாக களமாடிய படையணியில் சிறப்பாக செயற்பட்ட போராளி கஜன் முதலாவதாக வீரச்சாவைத் தழுவி படையணியின் பாய்ச்சலுக்கு உத்வேகமூட்டினார். இச் சமரில் படையணியின் கனரக அணி உலங்கு வானூர்தியைச் சுட்டு வீழ்த்தி எதிரியின் படை நடவடிக்கைக்கு முற்றுப்புள்ளி வைத்தது. இவ் வெற்றிச் சமரில் எதிரியிடமிருந்து ஏராளமான ஆயுதங்களை போராளிகள் கைப்பற்றினர்.
1992 ம் ஆண்டு படையணியின் சிறப்புத் தளபதியாக கிண்ணி அவர்கள் பொறுப்பேற்று வவுனியா, நெடுங்கேணி பகுதிகளில் பல சமர்களில் படையணியை வழிநடத்தினார். இதன் பின்னர் வன்னியிலும் யாழ் குடா நாட்டிலும் பல்வேறு வலிந்த தாக்குதல்களை படையணிநடத்தி தாயகத்தின் கணிசமான பகுதிகளை எதிரியிடமிருந்து மீட்டது. 1994 ம் ஆண்டில் இளம் தளபதி கில்மன் அவர்கள் படையணியின் சிறப்புத் தளபதியாக தலைவரால் நியமிக்கப்பட்டு திருக்கோணமலை மாவட்டத்தில் படையணியை நடத்தினார். அங்கே பல தாக்குதல்களை வெற்றிகரமாக நடத்திய கில்மன் ,அங்கு வெடிவிபத்தில் வீரச்சாவைத் தழுவிக் கொண்டதைத் தொடர்ந்து படையணி மீண்டும் வன்னிக்கு வந்தது. 1995 ம் ஆண்டு மீண்டும் படையணியின் சிறப்பு தளபதியாக பால்ராஜ் பொறுப்பெடுத்து சூரியக்கதிர் , சத்ஜெய முதலான முறியடிப்புச் சமர்களில் படையணியை வழிநடத்தினார். தொடர்ச்சியாக களமாடிய படையணியில் பெருமளவிலான போராளிகள் வீரச்சாவடைந்தும் விழுப்புண்ணடைந்தும் இருந்த நிலையில், தலைவர் வன்னி மாவட்ட படையணியை சாள்ஸ் அன்ரனியுடன் இணைத்து படையணிக்கு புத்துயிரூட்டினார்.
1996 ல் ஓயாத அலைகள் – 1 சமரில் எதிரியிடமிருந்து ஆட்டிலறி பீரங்கிகளை கைப்பற்றும் முக்கிய கடமையை தலைவர் படையணியிடம் வழங்கினார். இளம் தளபதி ராகவனின் தலைமையில் களமிறங்கிய அணி மிக விரைவாக செயற்பட்டு எதிரியிடமிருந்து இரண்டு ஆட்டிலறி பீரங்கிகளை கைப்பற்றி, கிட்டு பீரங்கி படையணி உருவாக்கத்திற்கு வழிவகுத்தது. 1997 ம் ஆண்டு பால்ராஜின் பாசறைத் தோழனும் சமர்க்கள நாயகனுமான தீபன் அவர்கள் படையணியின் சிறப்பு தளபதியாக பொறுப்பேற்றார். இளம் தளபதிகள் முகுந்தன் என்று சேகர், ராகவன் முதலானோரைக் கொண்டு ஜெயசிக்குறு முறியடிப்புச் சமரில் தீபன் படையணியை திறமுடன் வழிநடத்தினார். இச் சமரில் எதிரியின் ஒரு டாங்கி உட்பட பல கவச வாகனங்களை அழித்த படையணி கனரக ஆயுதங்களை கைப்பற்றியது.
1998 ல் சேகர் அவர்கள் படையணியின் சிறப்புத் தளபதியாகவும் ராகவனும் முகுந்தனும் தளபதிகளாக நியமிக்கப்பட்டு , உருத்திரபுரம் ,மாங்குளம், பனங்காமம் பகுதிகளில் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டது. 2 ம் மாதம் உருத்திரபுரம் சண்டையில் திறனுடன் களமாடிய படையணி எதிரியின் டாங்கியையும் பல கவச வாகனங்களையும் அழித்து பெரும் வெற்றியை ஈட்டியது. இதன் பின்னர் தளபதியாக விமலன் அவர்களும் துணைத் தளபதியாக இராஜசிங்கம் அவர்களும் நியமிக்கப்பட்டனர்
ஓயாத அலைகள்-2 சமரில் படையணியை சேகர் திறமுடன் வழிநடத்தினார். இச் சமரில் படையணியின் மூத்த அணித் தலைவர்கள் இராசநாயகம் , தமிழ்ச்செல்வன் , முதலானோரின் கனரக அணி காத்திரமான தாக்குதல்களை நடத்தி கிளிநொச்சியின் பெரும் பகுதிகளை மீட்டது. டிப்போ சந்தி களத்தில் தீவிரமாக எதிர்த்து நின்ற எதிரியை ராகவன் தலைமையில் இறங்கிய அணி மூர்க்கமான தாக்குதல் நடத்தி முறியடித்து களிநொச்சி நகரை முழுமையாக மீட்டது.
1999 ல் ராகவன் படையணியின் சிறப்புத் தளபதியாக பொறுப்பேற்று ஆனையிறவு பரந்தன் சுட்டதீவு களமுனையில் பாதுகாப்பு கடமைகளிலும் சிறப்புப் பயிற்சிகளிலும் படையணியை நடத்தினார். படையணியின் கனரக ஆயுதங்களை திறனுடன் பயன்படுத்தும் வகையில் இளம் தளபதி மதன் அவர்களின் பொறுப்பில் கனரக அணிகளை தனியாக ஒருங்கிணைத்து சிறப்பு பயிற்சிகளில் ஈடுபடுத்தினார். சுட்டதீவில் எதிரியின் பாரிய நடவடிக்கையை முறியடித்த படையணி ,அடுத்து பரந்தன் ஊரியான் பகுதிகளில் எதிரி மேற்கொண்ட பாரிய நடவடிக்கைகளையும் முறியடித்து வெற்றி வாகை சூடியது. இச் சமர்களில் தளபதிகள் விமலன், மயன், நேசன் ஆகியோர் சிறப்புடன் செயற்பட்டு வெற்றிக்கு வித்திட்டனர்.
ஓயாத அலைகள்-3 சமரில் ஒட்டுசுட்டானில் ராகவன் வீரச்சாவைத் தழுவிக் கொள்ள ,துணைத் தளபதி இராசசிங்கம் ஓமந்தை வரையிலான சமர்களில் படையணியை தொடர்ந்து வழிநடத்தினார். 1999 இறுதியில் படையணியின் சிறப்புத் தளபதியாக இராசசிங்கம் அவர்களும் தளபதியாக விமலன் அவர்களும் துணைத் தளபதியாக நேசன் அவர்களும் பொறுப்பேற்று பரந்தன் மீட்புச் சமரில் படையணியை வழிநடத்தினர் .
2000 ம் ஆண்டில் சில மாதங்கள் முகாவில் பகுதியில் கடமையில் நின்ற படையணி, பின்னர் குடாரப்பு ,இத்தாவில் தரையிறக்க சமர்களில் களமிறங்கியது . ஆனையிறவு வெற்றிக்கு பின், தொடர்ந்து தனங்கிளப்பு கிழக்கு அரியாலையில் களமிறங்கிய படையணி வெற்றிகரமாக யாழ்ப்பாணம் வரை சென்று பெரும் பகுதிகளை மீட்டது. 2000 ம் ஆண்டு ஆறாம் மாதம் இராசசிங்கம் இரணைமடு குளத்தில் ஏற்பட்ட விபத்தில் சாவடைந்ததைத் தொடர்ந்து, சிறப்புத் தளபதியாக சேகர் அவர்கள் மீண்டும் பொறுப்பேற்றார். இதே நாளில் யாழ் கனகம்புளியடி களத்தில் எதிரி மேற்கொண்ட பாரிய தாக்குதலை படையணியின் துணைத் தளபதி வீரமணி அதிரடித் தாக்குதல்களால் முறியடித்து பெரும் வாகை சூடினார்.
2000 ம் ஆண்டு 9 ம் மாதம் நாகர்கோவில் மீதான வலிந்த தாக்குதலில் சேகர் படையணியை வழிநடத்தினார். தொடர்ந்த இச் சமரில் எதிரியின் பதுங்கித் தாக்குதலில் படுகாயமடைந்து, யாழ்வேள் மருத்துவமனையில் வீரச்சாவைத் தழுவிக் கொண்டார்.
ஒரு வருட இடைவெளியில் மூன்று சிறப்புத் தளபதிகளை படையணி இழந்து துயரத்தில் மூழ்கியிருந்தாலும் இம் மாவீரர்களுடைய சீரிய வழிநடத்தலில் வளர்ந்த படையணி சளைக்காமல் தனது பயணத்தை தொடர்ந்தது .சிறப்புத் தளபதியாக வீரமணி அவர்களும் தளபதியாக நகுலன் அவர்களும் துணைத் தளபதியாக கோபித் அவர்களும் படையணியைப் பொறுப்பேற்று திறமுடன் நடத்தினர்.
2001 ம் ஆண்டு முதலாம் மாதம் இயக்கம் போர்நிறுத்தம் அறிவித்திருந்த நிலையில் எழுதுமட்டுவாள் ,நாகர்கோவில் பகுதிகளில் பெருமளவு துருப்புகளுடன் முன்னேறிய எதிரி வீரமணி உள்ளிட்ட எமது அணிகளை சுற்றிவளைத்த , பல முனைகளில் முறியடிப்புத் தாக்குதலை நடத்தி முற்றுகையை உடைத்து வெளியேறியது. தொடர்ந்து 4 ம் மாதம் முகமாலையில் பல்லாயிரக்கணக்கான துருப்பினருடன் எதிரி மேற்கொண்ட தீச்சுவாலை நடவடிக்கையை படையணி தீரத்துடன் போராடி முறியடித்தது. இச் சமரில் எதிரியிடமிருந்து ஏராளமான ஆயுதங்களை படையணி கைப்பற்றியது. இவ் வெற்றிச் சமரின் புகழுடன் படையணி தனது பத்தாம் ஆண்டு விழாவை தேசியத் தலைவர் மற்றும் தளபதிகளின் பங்கேற்புடன் சிறப்பாக கொண்டாடியது.
2002 ம் ஆண்டு போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்ட பிறகு, படையணியின் அணித் தலைவன் அமுதாப் தலைமையில் சிறப்பு பரப்புரையில் இறங்கிய படையணி போராளிகள் மக்களிடையே பெரும் எழுச்சியை உருவாக்கி ஏராளமான புதிய போராளிகளை இயக்கத்தில் இணைந்தனர். தொடர்ந்து யாழ் குடா நாடு, மன்னார், வவுனியா, திருக்கோணமலை , மட்டக்களப்பு முதலான அனைத்து பகுதிகளிலும் சிறப்பு அரசியல் வேலைத் திட்டங்களில் படையணி ஈடுபட்டது. 2002 ம் ஆண்டின் இறுதியில் சிறப்புத் தளபதியாக நகுலன் அவர்களும் தளபதியாக கோபித் அவர்களும் துணைத் தளபதியாக பல்லவன் அவர்களும் பொறுப்பேற்று படையணியை பயிற்சிகளிலும் பல்வேறு வேலைத் திட்டங்களிலும் தொடர்ந்து நடத்தினர். படையணியின் நிர்வாக திறன்களை மேம்படுத்தும் விதத்தில பல புதிய உட்கட்டமைப்புகளை கோபித்தும் நகுலனும் உருவாக்கி வளர்த்தனர். தலைவரின் ஆலோசனையின்படி படையணிக்கு கொடியும் சின்னமும் உருவாக்கப்பட்டன . கோபித் உருவாக்கிய “இயலாத ஒன்று இருக்காது எமக்கு ” என்ற வாசகம் படையணியின் முழக்கமாக்கப்பட்டது.
2004 ம் ஆண்டில் துரோகி கருணாவுக்கு எதிரான நடவடிக்கையில் படையணி கோபித்தின் தலைமையில் இறங்கி தீரத்துடன் போராடி கருணாவை வெளியேற்றியது. தொடர்ந்து பல்லவன் தலைமையில் தாக்குதல் தளபதி செங்கோலனின் விசேட அணி. மட்டு அம்பாறை காடுகளிலும் தொப்பிகல காட்டிலும் துரோகக் குழுக்களுக்கு எதிராக பல தாக்குதல்களை வெற்றிகரமாக நடத்தியது. 2004 ம் ஆண்டு இறுதியில் சுனாமிப் பேரலைகளால் எமது தேசம் தாக்கப்பட்ட போது உடனடி மீட்புப் பணிகளில் இறங்கிய படையணி தாக்குதல் தளபதி தென்னரசன் தலைமையில் புனரமைப்பு பணிகளில் முழுவீச்சுடன் செயற்பட்டது.
துரோகக் குழுக்களின் ஆதரவுடன் எதிரியின் ஆழ ஊடுருவும் அணியினர் தமிழீழத்தில் கிளைமோர் தாக்குதல்களை நடத்தி மக்களுக்கும் இயக்கத்திற்கும் அழிவை ஏற்படுத்திக் கொண்டிருந்த போது , அவர்களுக்கு எதிரான நடவடிக்கையில் படையணி களமிறக்கப் பட்டது. வவுனியா நெடுங்கேணி காடுகளில் தீவிரமான தேடுதலிலும் கண்காணிப்பிலும் ஈடுபட்ட படையணி நெடுங்கேணி காட்டில் எதிரியின் ஆழ ஊடுருவும் அணியைச் சுற்றி வளைத்து தாக்கி ஆயுதங்களை கைப்பற்றியதோடு இரு இராணுவத்தினரின் உடல்களை கைப்பற்றியது. 2005 ம் ஆண்டில் எமது மூத்த தளபதியும் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளருமான பொட்டு அம்மான் அவர்கள் தென்தமிழீழத்திற்கு பயணம் மேற்கொண்ட போது படையணியில் கோபித் தலைமையில் விசேட அணி அம்மானுடன் சென்று அங்கு பல்வேறு நடவடிக்கைகளில் சிறப்புடன் செயலாற்றியது .
2006 ம் ஆண்டு ஏழாம் மாதம் படையணியின் சிறப்புத் தளபதியாக கோபித் அவர்களும் தளபதியாக பல்லவன் அவர்களும் துணைத் தளபதியாக பிரதாபன் அவர்களும் பொறுப்பேற்றூ நடத்தினர். 8 ம் பாதம் முகமாலைச் சண்டையில் கோபித் படையணியை வழிநடத்தினார். பின்னர் 9 ம் மாதம் நடந்த சமரில் தாக்குதல் தளபதி குட்டி விழுப்புண்ணடைந்த நிலையிலும் வீரத்துடன் போராடி எதிரியின் முன்னேற்றத்தை தடுத்து நிறுத்தினார். அடுத்து 10 ம் மாதம் பல்லாயிரம் துருப்பினர் மற்றும் டாங்கி கவச வாகனங்களுடன் முன்னேறிய எதிரியை படையணி திறமுடன் எதிர்த்து முறியடித்தது. இவ் வெற்றிச் சமரை கோபித் திறமுடன் வழிநடத்தினார். இச் சமரில் எதிரியின் டாங்கியும் கவச வாகனங்களும் அழிக்கப்பட்டதோடு எதிரியின் 80 க்கு மேற்பட்ட உடல்களும் பெருமளவிலான ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன.
2007 ம் ஆண்டில் பனங்காமம் , மன்னார் களமுனைகளில் எதிரியின் முன்னேற்றங்களை தடுத்து தீவிரமான தாக்குதல்களை நடத்தியது. இக் காலத்தில் படையணிக்கு வந்த ஏராளமான புதிய போராளிகளுக்கு பாவலன் தலைமையிலான போர்ப்பயிற்சி ஆசிரியர் குழு சிறப்பு பயிற்சிகளை வழங்கி படையணியின் போரிடும் ஆற்றலை வளர்த்தெடுத்தது. நெருக்கடியான களச்சூழலில் பெரிய தம்பனை , இரணைஇலுப்பைக்குளம், பனங்காமம் , பறையனாலங்குளம் முதலான பகுதிகளில் எதிரியின் பெருமளவிலான முன்னேற்றங்களை தடுத்து நிறுத்தியது.
2008 ம் ஆண்டு மத்தியில் படையணியின் சிறப்புத் தளபதியாக விமலன் அவர்களும் தளபதியாக குமணன் அவர்களும் துணைத் தளபதியாக அமுதாப் அவர்களும் பொறுப்பேற்று தொடர் சண்டைகளில் படையணியை நடத்தினர். முழங்காவில், வன்னேரிக்குளம் ,அக்கராயன்குளம் பகுதிகளில் பல்லாயிரம் எதிரித் துருப்பினரை உறுதியுடன் எதிர்த்து களமாடிய படையணி சில மாதங்களுக்கு எதிரியிடமிருந்து முன்னேற்றத்தை தடுத்து நிறுத்தியது. கிளிநொச்சியை பாதுகாத்த பெருஞ்சமரில் விமலன் படையணியை திறமுடன் வழிநடத்தினார்.
2009 ம் ஆண்டு கிளிநொச்சியிலிருந்து இயக்கம் பின்வாங்கிய பிறகு, பிரமந்தனாறு , வள்ளிபுனம் களங்களில் தீவிரமாக களமாடிய படையணி பல்லாயிரக்கணக்கான துருப்பினரைக் கொன்று குவித்து பெருமளவிலான ஆயுதங்களை அழித்தது. 3 ம் மாத இறுதியில் கட்டளைத் தளபதி கோபித்தும் துணைத் தளபதி அமுதாப்பும் உறுதியுடனும் போராடி வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர். தொடர்ந்து சிறப்புத் தளபதி விமலனும் தளபதி தமிழரசனும் படையணியை கேப்பாபிலவு , புதுக்குடியிருப்பு , மாத்தளன் சமர்களில் வழிநடத்தினர் . இச் சமர்களில் எதிரிக்கு பேரழிவை ஏற்படுத்திய படையணி முள்ளிவாய்க்கால் சமரில் பல்வேறு முனைகளில் கடுமையாக போராடியது .
பதினெட்டு ஆண்டுகளாக நூற்றுக்கும் மேற்பட்ட சமர்களில் தொடர்ச்சியாக களமாடிய படையணியாக சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி தமிழீழ வரலாற்றில் தடம் பதித்து நிற்கின்றது. படையணியின் தந்தை எனப் போற்றப்படும் மூத்த தளபதி பால்ராஜ் அவர்களும் தமிழீழத்தின் ஈடிணையற்ற மூத்த தளபதி தீபன் அவர்களும் படையணியின் இரு கண்களாகவும் இரு கரங்களாகவும் இருந்து படையணியை வழிநடத்தி வளர்த்தனர். தமிழீழத்தின் மூத்த தளபதிகள் அனைவரின் கட்டளைகளிலும் தமிழீழத்தின் அனைத்து மாவட்டங்களிலும் களமாடிய படையணியாக சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி திகழ்கின்றது.
நேரடிச் சமர்கள் மட்டுமின்றி புகழ்பெற்ற வேவு நடவடிக்கைகளிலும் படையணி சிறப்புடன் செயற்பட்டது. படையணியின் புகழ்பூத்த வேவு அணி லீடர்களான மதன் , வீரமணி, கோபித் , குட்டி, இலக்கியன் , தமிழ்ச்செல்வன், பிரதாபன் , மதுரன் , தென்னரசன் ,மோகன் , வான்மீகி ,சிவபாலன், பிரபு, கண்ணன் ,தமிழ்நாடன் ,இளஞ்சுடர் , மாதவன் முதலான துடிப்புமிக்க வேவுப்புலிகள் பல்வேறு வேவு நடவடிக்கைகளில் திறமுடன் செயற்பட்டு பல சமர்களின் வெற்றிக்கு வழிகோலினர் .இராணுவ கட்டுப்பாட்டு பகுதிகளில் பல உள் நடவடிக்கைகளிலும் படையணி சிறப்புடன் செயலாற்றியது . 1995 ம் ஆண்டு இயக்கம் யாழ் குடா நாட்டிலிருந்து பின்வாங்கிய பிறகு, படையணியின் சிவாஜி மாஸ்டர் தலைமையில் ஒரு அணி இராணுவத்தின் பகுதிக்குள் இருந்து பல தாக்குதல்களை வெற்றிகரமாக நடத்தியது. இராசநாயகத்தின் தலைமையில் இன்னொரு விசேட அணி யாழ்ப்பாணம் வலிகாமம் பகுதிகளில் எதிரி மீது பல தாக்குதல்களை வெற்றிகரமாக நடத்தி விட்டு, வன்னிக்கு திரும்பியது. வவுனியா மணலாறு மாவட்டங்களில் இராணுவ கட்டுப்பாட்டு பகுதிகளில் படையணி போராளிகள் பல தாக்குதல்களை நடத்தநடத்தினர் .2001 ம் ஆண்டு இறுதியில் யாழ் பருத்தித்துறையில் படையணியின் அணித் தலைவர்கள் மதுரனும் மோகனும் சிறிலங்கா இராணுவத் தளபதி மீது கிளைமோர்த் தாக்குதலை வெற்றிகரமாக நடத்தினர். 2006 ம் ஆண்டு இளம் அணித் தலைவன் படையரசன் தலைமையில் ஒரு அணி பல்வேறு செயற்பாடுகளில் ஈடுபட்டது. மன்னாரில் படையணியின் தாக்குதல் தளபதி றமணன் புலனாய்வுத் துறை போராளிகளுடன் இணைந்து பல தாக்குதல்களை வெற்றிகரமாக நடத்தினார்.
படையணியிலிருந்து முப்பதிற்கும் மேற்பட்ட கரும்புலிகள் உருவாகி பெரும் தாக்குதல்களை வெற்றிகரமாக நடத்தி போராட்டத்திற்கு வெற்றி தேடித் தந்தனர். மேஜர் தனுசன் முதலான தரைக் கரும்புலிகளும் மேஜர் தீக்கதிர், மேஜர் தமிழ்த்தென்றல் முதலான கடற் கரும்புலிகளும் கண்ணன் முதலான மறைமுகக் கரும்புலிகளும் வெற்றிகரமாக செயற்பட்டு படையணிக்கு பெருமை சேர்த்தனர்.
சண்டைகள் மட்டுமின்றி நிர்வாகம், அரசியல், கலைநிகழ்ச்சிகள், விளையாட்டு ஆகிய அனைத்து துறைகளிலும் படையணி சிறப்பாக செயல்பட்டது. படையணியின் நிர்வாகப் பொறுப்பாளர்களாக சிவாஜி , மதன், தில்லை குட்டி, முத்தழகு , தமிழரசன் , தேவன் முதலானோர் சிறப்புடன் கடமையாற்றி படையணியின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றினார். கிளிநொச்சி கோவிந்தன்கடை சந்தியில் படையணிக்காக மாவீரர் நினைவாலயம் எழுப்பி படையணியின் அனைத்து மாவீரர்களின் திருவுருவப் படங்கள் மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டன. 2200 க்கும் மேற்பட்ட படையணி மாவீரர்கள் தாயகத்தின் விடுதலைக்காக களமாடி தமது இன்னுயிர்களை ஈந்து படையணியின் வெற்றிக்கும் வளர்ச்சிக்கும் அரும் பங்காற்றினர். 50 க்கும் மேற்பட்ட லெப். கேணல் தர தளபதிகள் படையணியின் வெற்றிக்காக பெரும் பங்களிப்பைச் செய்தனர்.
படையணி தமக்கென அரசியல் பொறுப்பாளரையும் மக்கள் தொடர்பாளரையும் கொண்டிருந்து மக்கள் மத்தியில் தனித்துவமான ஆதரவாளர்களை கொண்ட படையணியாக சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி விளங்கியது. படையணியின் பல ஆதரவாளர்கள் களமுனைகளில் ஆபத்தான சூழ்நிலைகளில் போராளிகளுடன் இணைந்து செயல்பட்டு போராட்டத்தின் வெற்றிக்கு பெரும் பங்களிப்பு செய்தனர்.
படையணியின் அணிகள் களத்தில் ஒன்றுகூடும் போது , படையணியின் மருத்துவ பொறுப்பாளனும் இசைக் கலைஞனுமாகிய மேஜர் பிரியக்கோன் பெயரில் கலைநிகழ்ச்சிகள் நடத்தி மகிழ்ந்திருப்பர். இந் நிகழ்ச்சிகளில் எமது படையணியின் போராளிக் கலைஞர்கள் எழுச்சிப் பாடல்களை பாடியும் நகைச்சுவை நிகழ்ச்சிகளை நடத்தியும் அனைவரையும் மகிழ்விப்பர். இதன் தொடர்ச்சியாக போர்நிறுத்த காலத்தில், நாடு கடந்த தமிழ் உறவுகளின் பேருதவியால் படையணியில் இராகசீலம் இசைக்குழு உருவாக்கம் பெற்றது. இளம் அணித் தலைவர்கள் சிலம்பரசன் , கலைச்செல்வன் தலைமையில் நவீன இசைக் கருவிகளில் பயிற்சி பெற்ற போராளிகள் மக்களிடையேயும் போராளிகளிடையேயும் இசை நிகழ்ச்சிகளை நடத்தி பெரும் எழுச்சியூட்டினர் .
விளையாட்டுத் துறையிலும் படையணி போராளிகள் மிகுந்த ஆர்வத்துடன் ஈடுபட்டு தேசியத் தலைவரிடமும் மூத்த தளபதிகளிடமும் பரிசுகளையும் பாராட்டுகளையும் பெற்று படையணிக்கு பெருமை சேர்த்தனர் . லெப். சீலன் நினைவுக் கோப்பை கால்பந்து போட்டிகள் , லெப். கேணல். ராகவன் நினைவு வலைபந்து ( voly ball ) போட்டிகள் முதலான பல விளையாட்டு போட்டிகளை போராளிகளிடையேயும் மக்களிடையேயும் படையணி நடத்தியது. கவியரங்கம் , பட்டிமன்றம், சிறு நாடகங்கள் ஆகியவற்றிலும் படையணி போராளிகள் பங்குபற்றி பாராட்டுக்களை பெற்று படையணிக்கு பெருமை சேர்த்தனர்.
படையணியின் தாக்குதல் தளபதி வரதன் தலைமையில் செயற்பட்ட கல்விக் குழு போராளிகளுக்கு அடிப்படை ஆங்கிலம், கணிதம், பொது அறிவு, அரசியல் முதலான பல விடயங்களில் போராளிகளுக்கு கற்பித்தது . மூத்த தளபதி தீபன் அவர்களின் வழிகாட்டுதலில் ” மேஜர் றோய் அதிகாரிகள் பயிற்சி கல்லூரி ” யை துவங்கி போராளிகளுக்கு சிறப்புப் பயிற்சிகளை வழங்கியது. மேலும் ” அக்கினி வீச்சு ” என்ற கையெழுத்து இதழை நடத்தி போராளிகளின் கவிதைகள் ஓவியங்கள் , மாவீரர் நினைவுகள் , கட்டுரைகள் ,பொதுஅறிவுத் தகவல்கள் முதலான ஆக்கங்களை வெளியிட்டு அவர்களின் படைப்பாற்றலை வளர்த்தது.
படையணியின் பத்தாண்டு கால போர் வரலாற்றை தொகுத்து ” நெருப்பாற்று நீச்சலில் பத்தாண்டுகள் ” என்ற நூலை படையணி வெளியிட்டது . மேலும் படையணியின் முன்னோடி லெப். சீலன் அவர்களின் போராப்ட வாழ்வைச் சித்தரிக்கும் வகையில் ” களம் கலங்கும் காலக்கருவி ” என்ற நூலும் படையணியால் வெளியிடப்பட்டது.
சீலன் அவர்களின் நினைவைப் போற்றும் வகையிலும் படையணியின் வீரச் செயற்பாடுகளை போற்றும் வகையிலும் புதுவை இரத்தினதுரை அவர்களால் எழுச்சிப் பாடல்கள் எழுதப்பட்டு தமிழீழ இசைக் குழுவை இசையமைத்து சாந்தன் முதலான தமிழீழத்தின் புகழ்பெற்ற பாடகர்களால் பாடப்பெற்று படையணியால் வெளியிடப்பட்டது. 2007 ம் ஆண்டு தமிழீழத் தேசியத் தொலைக்காட்சி விவரணப்படம் படம் ஒன்றை வெளியிட்டு படையணிக்கு பெருமை சேர்த்தது.
தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் சீரிய வழிகாட்டுதலோடும் தலைவரின் தனிப்பட்ட ஆலோசனைகள் அறிவுறுத்தல்களோடும் தொடர்ந்து பயணித்த படையணி , தலைவரின் சீரிய எண்ணங்களுக்கு செயல் வடிவம் கொடுத்து தொடர்ந்து போராடியது . மிகவும் சவாலான களங்களில் தலைவரால் நம்பிக்கையுடன் களமிறக்கக்கூடிய படையணியாக சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி விளங்கியது. பல தருணங்களில் படையணி சில பத்துகள் எண்ணிக்கையான போராளிகளைக் கொண்ட சிறு அணியாக மாறிய போது தலைவர் உடனடியாக கவனமெடுத்து இயக்கத்தின் பல்வேறு பிரிவுகளிலிருந்து போராளிகளை சாள்ஸ் அன்ரனியில் இணைத்து மீண்டும் மீண்டும் புத்துயிரூட்டி வளர்த்த படையணியாக சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி திகழ்கின்றது. மிகுந்த உளவுரணுடன் தலைவராலும் தளபதிகளாலும் வளர்த்தெடுக்கப்பட்ட இப் படையணி தலைவரின் பாதையில் தொடர்ந்து பயணித்து தமிழீழ விடுதலையை வென்றெடுக்கும். இது உறுதி.
புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்
(பெ. தமிழின்பன்.)
லெப். கேணல் சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி தமிழீழ விடுதலைப் புலிகளின் முதல் மரபுவழிப் படையணி ஆகும். தமிழீழ விடுதலைப் புலிககளின் முதலாவது தாக்குதற் தளபதியான லெப்.சீலன் லூக்காஸ் சாள்ஸ் அன்ரனியின் பெயரைத் தன் பெயராகக் கொண்டு தொடங்கப்பட்டுள்ளது. இப்படையணி, பயிற்சி, தந்திரம், துணிவு என்னும் மூன்றையும் தன் குறிக்கோள் வாசகமாகக் கொண்டு செயற்படுகின்றது. இது 1991 ஆம் ஆண்டு ஏப்ரல் 10 ஆம் நாள் உருவாக்கப்பட்டது.
சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி ஈழப்போரில் நடந்த பெரும்பாலான சமர்களில் பங்கு பற்றி பல வெற்றிகளைப் பெற்றது.
1991 மே 5 அன்று இலங்கைப் படைத்துறையினர் [[ஓமந்தை]] கொந்தக்காரர்குளம் கோழியாக்குளம் ஆகிய இடங்களில் “வன்னி விக்கிரம 2” என்ற பெயர் நடவடிக்கை மூலம் எடுத்த பெரும் எடுப்பிலான இராணுவ முன்னெடுப்பை சார்ள்சு அன்ரனி சிறப்புப் படையணி முறியடித்தது. இது அவர்களது முதலாவது சமர் ஆகும். கேணல் பால்ராஜ் தளபதியாக இருந்து லெப். கேணல் ராஜன் இதனை வழி நடத்தி அந்தச் சாதனை நிகழ்த்தப்பட்டது. இச்சமரில் விடுதலைப் புலிகளின் 20 போராளிகள் கொல்லப்பட்டனர்.
5 சிறப்புத் தளபதிகள், 4 தளபதிகள், ஒரு துணைத்தளபதி, 12 தாக்குதல் தளபதிகள் உட்பட 1,200 போராளிகளை இப்படையணி 2005 ஆம் ஆண்டு வரை இழந்துள்ளது.
மார்ச் 26 புலிகளின் முதலாவது வான் தாக்குதல்
வீரத்திற்கு பெயர் சொன்ன தமிழர்களின் வரலாற்றில் முன்னொரு பொழுதும் கண்டிராத வீரத்தின் உச்சத்தை விடுதலைப் புலிகள் கண்டிருந்தார்கள்.
தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரனின் காலம் என்பது தமிழர்க்கும் தமிழுக்கும் தமிழ் வீரத்திற்கும் பொற்காலமாகும்.
மார்ச் 26 இன்று வான் புலிகளின் தீரம் மிக்க வான் தாக்குதல் நடைபெற்ற நாளாகும். மார்ச் 26, 2007 அன்று முதலாவது வான் தாக்குதல் வெற்றி வரலாற்றை எழுச்சியோடு எழுதியது.
தமிழரின் விடுதலை வரலாற்றில் முன்னொரு போதுமே கண்டிராத எழுச்சியின் ஒரு வடிவமே .வான் படை தாக்குதல் வரலாறு.
இந்த வான் படையின் முதல் தாக்குதல் நிகழ்ந்த முதல் நாளான .இந்நாளின் அதிகாலை 1,45 மணியளவில் கட்டுநாயக்கா சிங்கள வான் தளம் மீது ஒரு வெற்றிகரமான தாக்குதலை நிகழ்த்திய நாள் இன்று ஆகும்..!!!
தமிழினத்தை பூண்டோடு அழிக்க கங்கணம் கட்டி திரிந்த எதிரியை குலை நடுங்க செய்ததோடு தமிழர்களின் வீரத்தை எண்ணி உலகை வியக்க வைத்த வான் படை தந்த முதல் தலைவனையும் அவர் வழி வந்த இளம் தமிழர்களையும் இன்றைய நாளில் நினைவில் ஏந்திடுவோம்.
**
விடுதலைப் புலிகளின் வான்புலிகள் நடத்திய, முதலாவது விமானத்தாக்குதல், கொழும்பு, கட்டுநாயக விமானப்படை தளத்தின்மீது நடத்தப்பட்டது. அதுவரை புலிகளிடம் விமானங்கள் உள்ளது என, ஊகத்திலேயே இருந்த சம்பவம் அன்று உண்மையானது.!
முதல் குண்டு கட்டுநாயக்க விமானத்தளத்தில் விழுந்து வெடித்த குண்டின் அதிர்வு, கொழும்பில் மட்டுமல்லாது முழு உலகையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
புலிகளை சர்வதேசம் அழிப்பதற்கு, அவர்கள் கையில் எடுத்த முக்கய காரணங்களில், மிக முக்கியமானதில் முதலாவது வான்படைத்தாக்குதல். இரண்டாவது கரும்புலித்தாக்குதல்கள்.
நான் முன்னமே எனது பதிவுகளில் குறிப்பிட்டுள்ளது போல, ஒசாமா பின்லாடனின் இரட்டை கோபிர தாக்குதலின் பின், போராட்ட அமைப்புகள் அனைத்தையும் சர்வதேசம் பயங்கரவாத பட்டியலில் இணைத்தது.
சிங்கள, மற்றும் இந்திய அரசுகளின் பொய்யான, நயவஞ்சக பருப்புரைகளை நம்பி புலிகளின் தார்மீக போராட்டத்தை புறம்தள்ளி, புலிகளையும் அந்த பட்டியலில் இணைத்து மிகப்பெரும் வரலாற்று தவறை சர்வதேசம் அன்று செய்திருந்தது.
கபட நோக்கமுடைய சிங்கள அரசுடன் கைகோர்த்து, எமது போராட்டத்தை இல்லாமல் செய்தார்கள். அந்த தவறை என்றோ ஒரு நாள் இவர்கள் உணரும் காலம் வரும்.
வான்புலிகளின் தாக்குதல்கள் எதிர் பக்கத்திற்கு கலக்கத்தை கொடுத்தபோதும், தமிழர் தரப்போ அந்த வெற்றியை பெருமிதமாக கொண்டாடினர். எமக்கே, எமக்கான முதலாவது வான்படையை உருவாக்கி, அதன் கன்னித்தாக்குதலை செய்த புலிகளை தமிழர்கள் மனத்தார வாழ்த்தினர்.!
இந்த தாக்குதலையும் ஏனைய தாக்குதல்களையும் வான்புலிகள் எவ்வாறு மேற்கொண்டனர்?
அதற்கு எப்படியான தந்திரங்களை பிரயோகித்தார்கள்?
உண்மையில் புலிகளிடம் யுத்தத்தில் பாவிக்கும் விமானங்கள் இருக்கவில்லை என்பது உங்களுக்கு தெரியும். யுத்த விமானங்களை வாங்குவதற்கு புலிகளிடம் பணபலம் இருந்த போதும், எந்த நாடும் உத்தியோகபூர்வமாக அதை எமக்கு விற்பதற்கு முன் வரவில்லை.
அத்தோடு அதற்கு சர்வதேச சட்டங்களும் குறுக்கிட்டன. அப்படியான நேரத்தில் தான் சில மூன்றாம் தர நாடுகளின் தரகர்கள் ஊடாக சாதாரண கிளைடர் ரக விமானங்களே கொள்முதல் செய்யப்பட்டது.(Czech-built Zlin Z-143 light aircraft.).
நான் அடிக்கடி கூறுவது போல எந்தவொரு சிறு பொருள் கிடைத்தாலும் அதன் உச்ச பயன்பாட்டை புலிகள் அதிலிருந்து பெற்றுவிடுவார்கள். அதில் குறிப்பிட்டு சொல்ல கூடியது இந்த விமானத்தாக்குதல் ஆகும்.
உண்மையில் உங்களுக்கு தெரியும் இந்த விமானங்கள் வெளிநாடுகளில் பொதுமக்களின் பயிற்சிக்கும், தமது தோட்டங்களுக்கு மருந்து தெளிப்பதற்கும் பயன்படுத்துவதென்பது.
இந்த விமானங்களை புலிகளில் எப்படி தாக்குதல் விமானமாக மாற்றினார்கள்?
எப்படி சிங்கள அரசின் கதுவிகளின் (ராடர்) கண்ணில் மண்ணை தூவினார்கள்?
எப்படி சிங்கள அரசின் அதி நவீன விமானங்களின் தாக்குதல்களில் இருந்து தப்பி தொடர்ந்து தாக்குதலை மேற்கொண்டார்கள்?
நிச்சியமாக இது எல்லோருக்கும் மிகப்பெரும் ஆச்சரியம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. வான்புலிகள் இரணைமடு, புதுக்குடியிருப்பு, பூநகரி போன்ற இடங்களில் தமது விமான ஓடுபாதைகளை அமைத்திருந்தார்கள்.
தாக்குதலின் போது செல்வது ஒரு பாதையாகவும், திரும்பி வருவது ஒருபாதையாகவும் தமது பிளைட் பிளானை (flight plan)வடிவமைத்திருந்தார்கள். ஒரு விமானப் பறத்தளுக்கு இந்த பிளைட் பிளான் என்பது மிக மிக பிரதானமானது. இதை வான்புலிகள் மிக கச்சிதமாக போட்டிருந்தார்கள்.
புலிகளால் இந்த உலகத்துக்கே ஒரு பாடம் இருக்கின்றது. அதாவது உள்ளதை கொண்டு திருப்தி படுவது. அடுத்தது தரமற்ற பொருளாக இருப்பினும் தங்கள் திறமையை முழுவதும் நம்பி, களத்தில் இறங்கி, அதன் உச்ச பயனை பெறுவதென்பது, புலிகளுக்கு மட்டுமே உரித்தான திறமையாகும்.
புலிகள் சாதாரண விமானத்தை எப்படி குண்டுவீச்சு விமானமாக மாற்றினார்கள்? அதற்கு புலிகள், முதலில் தேவை இல்லாத பாரத்தை குறைக்கும் நோக்கில் விமானத்திலிருந்த தேவையில்லாத பொருட்களை அகற்றினர்.
குண்டு வீச்சுக்கு விமானங்களுக்கு தேவையான கதுவிகள், தூரம் அளக்கும் கருவிகள், போன்றவற்றை இதற்கென்றே விசேடமாக பிறநாடுகளில் இருந்து தருவித்தனர்.
தாக்குதலுக்கான குண்டுகளை விடுவிக்கும் பொறிமுறை என்பன புலிகளின் தொழில்நுட்ப போராளிகளால் பொருத்தப்பட்டு, சோதித்து ,திருப்பதி கண்டபின், முதலாவது தாக்குதலுக்கான நாளை தெரிவு செய்த தலைவர், அந்த தாக்குதலுக்கான அனுமதியை வழங்கினார்.
2007-ம் ஆண்டு, மார்ச் 26-ம் தேதி, திங்கட்கிழமை புலிகளின் இரணைமடு விமானத்தளத்தில் வைத்து இறுதிச் சோதனையின் பின் சாதாரண விமானத்தை குண்டுவீச்சு விமானமாக மாற்றிய பின் தமது முதலாவது தாக்குதலுக்காக புறப்பட்டு சென்றது தமிழரின் முதலாவது வான்படை.
இரணைமடுவில் இருந்து புறப்பட்ட விமானம் மல்லாவிக்கு மேலால் மடுவை நோக்கி பறந்தது.
எமது பகுதிக்குள் மிகவும் தாழப்பறந்து, வவுனியா, அனுராதபுர நகரங்கள் விமானியின் இடதுபக்கத்தில் இருக்கும் படி பார்க்கப்பட்டது.
இதில் பிரதானமாக நகரங்கள் மற்றும் இராணுவமுகாங்கள் பற்றிய முளுத்தரவுகளும், ஏற்கனவே திரட்டப்பட்டு அதை தவிர்த்தே “பிளைட் பிளான்” போடப்பட்டது.
அதன்படி மன்னார் ஊடாகப்பறந்து, வங்காலை கடந்து வலதுபுறமாக திரும்பி கடலின் மேல் தாழப்பறந்து மீண்டும் உடப்பு தாண்டி மீண்டும் பங்கதெனியவுக்கு மேலால் பறந்து பிங்கிரிய, பொவட்ட ,போன்ற பிரதேசங்களுக்கு மேலால் பறந்து, மீண்டு திரும்பி கட்டுநாயக்க தளத்துக்கு நேரே வந்து தமது முதலாவது விமானத்தாக்குதலை அதிகாலை 12.45க்கு வான்புலிகள் துல்லியமாக மேற்கொண்டனர்.!
இந்த தாக்குதலில் 3விமானப்படை வீரர்கள் கொல்லப்பட்டதாகவும், 14பேர் படுகாயமடைந்ததாகவும் சிங்கள அரசு அறிவித்தது. தனியார் ஊடகங்களோ மூன்று விமானங்கள் சேதமடைந்ததாகவும் பலர் கொல்லப்பட்டதாகவும், செய்தி வெளியிட்டபோதும் சிங்கள அரசு அதை மறுத்திருந்தது.
தாக்குதலின் பின் கடலின் மேலாக தாழப்பறந்த விமானங்கள் மீண்டும் மான்னார் வான்பரப்பினுள் நுழைந்து வெற்றிகரமாக தளம் திரும்பினர். சிங்களம் இந்த தாக்குதலில் அதிர்ந்து போனது.
அதன் பின் பல தாக்குதலை வான்புலிகள் செய்தபோதும் அதை முறியடிப்பதற்கு இந்திய அரசிடமிருந்து கதுவிகளும், சீனாவிடம் இருந்து விசேட தாக்குதல் விமானங்களும், வேறு நாடுகளிலிருந்து ACK -ACK என்னும் விமான எதிர்ப்பு துப்பாக்கிகளையும் வாங்கி, சிங்களம் எதிர்த்தாக்குதளுக்கான ஆயத்தம் செய்தபோதும், புதிது புதிதாக பிளைட் பிளானை போட்ட புலிகள் துல்லியமான தாக்குதல்களை தொடர்ந்து மேற்கொண்டனர்.
மூன்றாவது தாக்குதலின் போது வான்புலிகளை, துரத்திய போதும் சிங்கள வான்படையால் வான்புலிகளை சுட்டு விழுத்தமுடியவில்லை. காரணம் சிங்கள அரசு சீனாவிடம் வாங்கிய யுத்த விமானம் வேகம் கூடியவை, அதனால் வேகம் குறைந்த புலிகளின் விமானத்துக்கு ஈடாக தாழ்வாகவும் மெதுவாகவும் பறக்கமுடியாது தமது தாக்குதல் முயற்சியை கைவிட்டு திரும்பின.
இருட்டிலேயே விமானத்தை ஓடி, ஏற்றி, இறக்க பயிற்சியை பெற்றிருந்த புலிகள் பத்திரமாக தளம் திரும்பினர்.
இது போல பின்னைய தாக்குதல்களின் போது, இராணுவமுகாங்களில் பரவலாக நிறுவியிருந்த கதுவிகளையும், எதிரியையும் குழப்பும் நோக்கில், பரவலாக இராணுவ முகாம்களை நோக்கி இரவில் தகரபெரல்களை இணைத்த மிகப்பெரும் புகைக்குண்டுகளை புலிகள் ஏவினர்.
இது புலிகளால் மூட்டப்பட்ட நெருப்புடன் எதிரியின் முகாம் நோக்கி செல்லும் போது அவர்களின் கதுவிக்கும், அதை பார்த்துக்கொண்டிருக்கும், இராணுவத்துக்கும் குழப்பத்தை புலிகள் உருவாக்கினர்.
புலிகள் நினைத்தது போலவே பிழையான தகவல்கள் இராணுவத்தினர் தமக்குள் பரிமாறிக்கொண்டிருக்க, வான்புலிகள் தங்கள் தாக்குதல்களை கச்சிதமாக நிகழ்த்திவிட்டு தளம் திரும்பினர்.
இப்படி சிறு விடையங்களையும் கருத்திலெடுத்தே, வான்புலிகளின் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டது.
இறுதியுத்தத்தின் போது பிரதான வீதியை ஓடுபாதையாக்கிய வான்புலிகள், வெடிமருந்து நிரப்பப்பட்ட விமானங்களுடன் புறப்பட்டு சென்று தாக்குதல் மேற்கொண்டு, எமக்காக தம்மையும் அழித்துக்கொண்டனர் வான்கரும்புளிகள்.!
அன்று இதே நாளில் தமிழர் தலைநிமிர்ந்தனர். அன்று வரலாற்றின் புதிய அத்தியாம் ஒன்று எழுதப்பட்டு தமிழரின் வரலாற்றில் அந்த தாக்குதல் இடம் பிடித்தது.!
பெருமைகளுடன் துரோணர்..!!
ஒளிவீச்சு (ஒளிநாடா சஞ்சிகை) கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் இல்லை. நடுநிலையான மேற்கோள்களை கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். மேற்கோள்கள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.
ஒளிவீச்சு தமிழீழ விடுதலைப்புலிகளின் அமைப்பால் வெளியிடப்பட்ட தமிழீழத்தின் முதலாவது வீடியோ சஞ்சிகை ஆகும். இது நிதர்சனம் நிறுவனம் மூலம் மே 1993 இலிருந்து மாதாந்த ஒளிநாடா சஞ்சிகையாக வெளிவந்து கொண்டிருந்தது. 100 க்கு மேல் வெளியான இச் சஞ்சிகை சரியாக 75 நிமிடங்களைக் கொண்டது. சண்டைகள் நடக்கும் பொழுது போராளிகள், சக போராளிகளுடன் இணைந்து பல நேரடிச் சமர்களைப் படம் பிடித்து, உண்மையான காட்சிப் பதிவின் மூலம் பல ஆவணத் திரைப்படங்களை இச் சஞ்சிகையில் வெளியிட்டு வந்தது குறிப்பிடத் தக்கது.
பொருளடக்கம்
1 ஒளிவீச்சு உருவாக்கம்
2 இதில் இடம்பெற்ற அம்சங்கள்
2.1 செய்திச்சரம்
2.2 மாவீரர் நினைவு
2.3 மண்ணும் மக்களும்
2.4 மருத்துவம்
2.5 விளையாட்டு
2.6 புதியவெளியீடுகள்
2.7 கலையும் மக்களும்
2.8 குறும்படங்கள்/விவரணங்கள்
3 ஒளிவீச்சில் வெளியிடப்பட்ட குறும்படங்களில் சில
4 வெளி இணைப்புகள்
5 மேற்சான்றுகள்
ஒளிவீச்சு உருவாக்கம்
ஒளிவீச்சு சஞ்சிகையின் உருவாக்கத்திற்கு அடித்தளமாக இருந்தவர் மாமனிதர் சச்சிதானந்தம் (ஞானதரன்). இவருடன் இணைந்து செயற்பட்டவர் லெப்.கேணல் தவம் (தவா). மாமனிதர் வை. சச்சிதானந்தசிவம் (ஞானரதன்), லெப்.கேணல் தவம் (தவா) இருவரும் இணைந்து 1991 – 1992 காலப்பகுதியிலேயே ஒளிவீச்சு சஞ்சிகையைத் தயாரித்திருந்தனர். ஆனாலும் இதழின் தொழில்நுட்பத்தில் இருந்த குறைபாடு காரணமாக, 1993 இல் திருத்தித் தயாரிக்கப்பட்ட பின்னரே அது முதல் முதலாக வெளியிடப்பட்டது.
இதில் இடம்பெற்ற அம்சங்கள்
செய்திச்சரம்
செய்திச்சரம் பகுதியில் குறித்த மாதப்பகுதியில் தமிழீழத்தில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளும், களத்தில் நேரடியாகப் பதிவு செய்யப்பட்ட போராட்டச் செய்திகள் அடங்கிய உள்நாட்டுச் செய்திகளும் இடம்பெறும்.
மாவீரர் நினைவு
மாவீரர் நினைவு என்னும் பகுதியில் குறிப்பிட்ட மாதப்பகுதியில் வீரமரணம் அடைந்த மாவீரர்களின் நினைவுப்படங்களும், அவர்களுக்கான அஞ்சலி நிகழ்வுகளும் இடம்பெறும்.
மண்ணும் மக்களும்
மண்ணும் மக்களும் என்னும் பகுதியில் மக்களின் அன்றாட வாழ்க்கை நிகழ்வுகள், மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள், தமிழீழ மண்ணில் நடைபெறும் விசேடவிழாக்கள் என்பவை காட்சிப்படுத்தப்படும்.
மருத்துவம்
மருத்துவம் பகுதியில் நோய்கள் பற்றிய விளக்கங்கள், தடுப்புமுறைகள், சிகிச்சைகள் போன்றன இடம் பெறும்.
விளையாட்டு
விளையாட்டு என்னும் பகுதியில் தமிழீழத்தின் பல பாகங்களிலும் நடைபெறும் விளையாட்டுகள் பற்றிய செய்திகள் இடம்பெறும்.
புதியவெளியீடுகள்
புதியவெளியீடுகள் என்ற பகுதியில் குறிப்பிட்ட மாதப்பகுதியில் புதிதாக வெளிவந்த நூல்கள், சஞ்சிகைகள் பற்றிய அறிமுகங்கள் இடம்பெறும்.
கலையும் மக்களும்
என்னும் பகுதியில் தமிழீழ மக்களின் கலை, பண்பாடு பற்றிய விளக்கக் கோலங்களும், விசேடமாக இடம்பெற்ற கலை நிகழ்வுகளும் இடம்பெறும்.
குறும்படங்கள்/விவரணங்கள்
இறுதிப்பகுதியான குறும்படங்கள் விவரணங்கள் பகுதியில் தமிழீழத்தில் வெளிவந்த குறும்படங்களில் ஒன்று அல்லது தமிழீழ மக்கள் சம்பந்தமான ஏதாவது ஒரு விவரணம் இடம் பெறும்.
ஒளிவீச்சில் வெளியிடப்பட்ட குறும்படங்களில் சில
கண்ணீர் (மே 1993) [1]
நேற்று (ஜூலை 1993)
வீரசீலம் (லெப். சீலனின் இறுதிக்கணங்களை நினைவு கூரும் படம்)
Recent Comments