Search

Eelamaravar

Eelamaravar

Category

சுத்துமாத்துக்கள்

போா்குற்ற விசாரணை வேண்டாம் என கூத்தமைப்புடன் இணைந்து கூறிய ரணில்!

தமிழீழ விடுதலை புலிகள் தொடா்பான குற்றங்களுக்கும் வழக்குகள் இடம்பெறுகின்றன, அரச ப டைகள் மீதான குற்றங்களுக்கும் வழக்குகள் இடம்பெறுகின்றன. எனவே மறப்போம், மன்னிப் போம் என்பதன் அடிப்படையில் போா்குற்ற விசாரணைகள் தேவையில்லை.

மேற்கண்டவாறு பிரதமா் ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளாா், இன்று கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடந்த அபிவிருத்தி கலந்துரையாடலிலேயே இதனை தெரிவித்தார்.

போர்க்குற்றச்சாட்டுக்கள் இரண்டு தரப்பிலும் உள்ளன. இலங்கை ஜனாதிபதி கொல்லப்பட்டிருக்கிறார். பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கொல்லப்பட்டிருக்கிறார். அமைச்சர்கள், படைவீரர்கள், பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

ஏன்.. தமிழ் அரசியல் தலைவர்களும் கொல்லப்பட்டுள்ளனர். அவர்கள் எல்லோரும் புலிகளால் கொல்லப்பட்டவர்கள். அதேபோல, இராணுவத்தினர் மீதும் குற்றச்சாட்டுக்கள் வைக்கப்படுகின்றன.

இவற்றிற்கு எதிராக இரண்டு தரப்பும் வழக்கு தொடர முயன்றால், முடிவின்றி மாறி மாறி தொடர்ந்து கொண்டு செல்லலாம். இதையெல்லாம் மறந்து, மன்னித்து, உண்மையை கண்டறிந்து, அனைவரும் ஒன்றுபட்டு நாட்டை கட்டியெழுப்புவதே அவசியமானது“ என்றார்.

அப்படியானால் முன்னால் விடுதலைப்புலிகளின் குற்றங்களையும் மன்னித்து விடுதலை செய்யலாம் தானே !

  சரி சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்ட அரசியல் கைதிகளைக் கூட மன்னித்து விடுதலை செய்யவில்லையே பின்னர் எப்படி தமிழர்கள் மட்டும் மன்னிக்க வேண்டுமா ?

சொந்த மக்களை ஏமாற்றி மத்திய அரசில் சலுகைகளை அனுபவிக்கும் கேவலம் உலகில் வேறு எங்கும் இல்லை

சாதாரண கூட்டமைப்பு நாடாளமன்ற உறுப்பினர்கள் அமைச்சரவைக்கு நிகரான சலுகைகளை பெறுகிறார்கள் . இலங்கை வரலாற்றில் சாதாரண பாராளமன்ற உறுப்பினர்கள் அரச வான் வழி பயண போக்குவரத்தை பெறுவது இயலாத காரியம் . ரணில் விக்ரமசிங்கே எதிர்க்கட்சி தலைவராக இருந்த பொது கூட தயா கமகே நிறுவனத்திற்கு சொந்தமான தயா வான் வழி சேவைகளை தான் பயன்படுத்தி இருந்தார்

இப்போது சாதாரண பாராளமன்ற உறுப்பினரான சுமந்திரனுக்கு அந்த வான் வழி போக்குவரத்து வசதிகள் வழங்கப்படுகிறது .

இங்கே இவளவு வசதிகளை அனுபவிக்கும் இவர்கள் இவர்களை தெரிவு செய்த மக்களுக்கு பெற்று கொடுத்தது என்ன ?

1. கோவில்கலுக்குள் அமைக்கப்படும் விகாரைகளை, புத்தர் சிலைகளை தடுக்க முடியாமல் இருப்பது ஏன் ?
2. வடக்குக்கு நியமிக்கப்படும் சிங்கள சிற்றுளியார்களை தடுக்க முடியாமல் இருப்பது ஏன்
3. கிழக்கு முகாமைத்துவ உதவியாளர் சேவை தொடக்கம் கணக்காளர் சேவை பரீட்சை வரை ஏமாற்றப்படும் தமிழ் தேர்வுநாடிகளுக்கு பெற்று கொடுத்த தீர்வு என்ன ?
4. வவுனியா , முல்லைத்தீவு , திருகோணமலை என பறிக்கப்படும் நிலங்கள் , மேற்கொள்ளப்படும் சிங்கள குடியேற்றங்கள் தொடர்பாக இவர்கள் எடுத்த நடவடிக்கை என்ன ?
5. பட்டதாரிகளுக்கு பல ஆண்டுகளாக வேலைவாய்ப்பு வழங்கப்பட வில்லை .இது தொடர்பாக இவர்கள் எடுத்து கொண்ட நடவடிக்கை என்ன ?
6. 700 நாட்களுக்கு மேலாக வீதியில் இருக்கும் காணாமல் போனவர்களின் உறவினர்கள் , கோப்பாபிலவு மக்கள் , சிறைக்கைதிகள் உறவுகளுக்கு இவர்கள் பெற்று கொடுத்த தீர்வு என்ன ?
7. கிராமிய எழுச்சி திட்டத்தின் கீழ் காசை பங்கீடு செய்து தொகுதிகள் தோறும் வீண் விரயம் செய்யும் இவர்கள் இது வரை நிலைத்திருக்கும் அபிவிருத்திக்கு செய்த பங்களிப்பு என்ன ?
8. தொல்லியல் திணைக்களம் , வளவள திணைக்களம் , மகாவலி அபிவிருத்தி சபை என நாள் தோறும் அபகரிக்கப்படும் நிலங்களுக்கு இவர்கள் வழங்கும் தீர்வு என்ன ?
9. வவுனியா பொருளாதார வலயம் , வடமராட்சி கிழக்கு குடி நீர் திட்டம் , முதலமைச்சர் நிதியம் என வடக்கு மாகாணசபை பெயர் எடுத்து விட கூடாது என மத்திய அரசு சகிதம் இவர்கள் குழப்பி விட்ட பொருளாதாரம் சார்ந்த திட்டங்களுக்கு என்ன தீர்வு ?
10. விவசாய சந்தைப்படுத்தல்களை ஆக்கிரமித்து நிற்கும் தம்புள்ள விவசாயிகள் , ஆமியின் விவசாய பண்ணைகளை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன ?
11. ஆமி நடத்தும் முன்பள்ளிகளை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது ? .

சமஸ்டி தீர்வு , சர்வதேச விசாரணை முடிவடைந்து விட்டது , ஐ நாவில் கால அவகாசம் என சொந்த மக்களை ஏமாற்றி மத்திய அரசில் சலுகைகளை அனுபவிக்கும் கேவலம் உலகில் வேறு எங்கும் இல்லை

-இனமொன்றின் குரல்-

பௌத்த பிக்குவிற்கு சேவகம் செய்யும் சிறிலங்கா வடக்கு ஆளுனர்!

அஸ்கிரிய பீடத்தின் மஹாநாயகர் அதிசங்கைக்குரிய வரக்காகொட ஞானரத்ன தலைமைத்தேரரை வடமாகாண சிறிலங்கா ஆளுநர் சுரேன் ராகவன்; இன்று (15) முற்பகல் சந்தித்து ஆசி பெற்றதுடன் அவர் உரையாடியுமுள்ளார்.

எதிர்வரும் மார்ச் மாதம் வடக்கில் முதலாவது பௌத்த மாநாட்டிற்கு அழைப்புவிடுக்கப்பட்டுள்ள நிலையில் அவரது இந்த சந்திப்பு நடந்துள்ளது.
தமிழர் தாயகத்தில் திட்டமிட்டு முன்னெடுக்கப்படும் பௌத்த விகாரைகள் அமைப்பு நடவடிக்கைகள் தொடர்பில் தமிழ் தரப்புக்கள் பலவும் ஆளுநரது கவனத்திற்கு கொண்டு சென்றுள்ள நிலையில் இத்தகைய சந்திப்பு நடந்துள்ளது.

வழமையாக தமிழ் ஆளுநர் ஒருவரை வடக்கிற்கு நியமிப்பதற்கு எதிர்ப்பு வெளியிட்டு வந்த அஸ்கிரிய மற்றும் மல்வத்த பீடாதிபதிகள் சுரேன் இராகவன் நியமனத்திற்கு ஆதரவு தெரிவித்து வந்தமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே வரலாற்று சிறப்புமிக்க கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் இன்று (15) முற்பகல் விஜயம் செய்து வழிபாடுகளில் ஈடுபட்டு ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டார்.

கண்டி தலதாமாளிகைக்கு விஜயம் மேற்கொண்ட ஆளுநர் அவர்களை கண்டி தலதா மாளிகையின் தியவதன நிலமே பிரதீப் நிலங்க தெல வரவேற்றார்.
இதன்போது ஆளுநர் புனித தந்ததாதுவினை தரிசித்து வழிபாடுகளில் ஈடுபட்டதுடன் ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டார். ஆளுநரின் செயலாளர் எல்.இளங்கோவன், வட மாகாண பிரதம செயலாளர் ஏ.பத்திநாதன் ஆகியோரும் இந்த விஜயத்தில் இணைந்திருந்தனர்.

ஈ.பி.ஆர்.எல்.எவ் இன் துரோகத்தின் நீட்சியாகவே வரலாற்று குறிப்பேடு வெளியீடு!

தமிழ் மக்களின் விடுதலைக்காக ஆயுதம் ஏந்திய சில அமைப்புக்களே பின்னாட்களில் பாதை மாறி கொள்கை பிறழ்ந்து தமிழ்மக்களின் விடுதலைக்கு விரோதமாக செயற்பட்டார்கள். இதில் ஈ.பி.ஆர்.எல்.எவ். அமைப்புக்கு வலுவான பங்கிருப்பதற்கு சுரேஸ்பிரேமச்சந்திரன் முக்கிய காரணகர்த்தாவாகத் திகழ்ந்துள்ளமை வரலாறு கூறி நிற்கும் உண்மையாகும்.

தமிழர்கள் தமிழ்த் தேசிய சக்திகளாக அரசியல் ரீதியில் ஐக்கியப்பட்டு பலம்பெற வேண்டிய இவ்வேளையில் மீண்டும் இரத்தக்கறை படிந்த துரோக வரலாற்றை மீட்டுப்பார்க்கும் துர்ப்பாக்கிய நிலையை அதே ஈ.பி.ஆர்.எல்.எவ். தான் ஏற்படுத்தியுள்ளது. கடந்த 03.02.2019 அன்று யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற அவர்களின் கட்சி பிராந்திய மாநாட்டில் வெளியிடப்பட்ட வரலாற்று குறிப்பேடு எனும் ஆவணத் தொகுப்பானது ஈ.பி.ஆர்.எல்.எவ்.இன் தமிழினத் துரோகத்தின் நீட்சியாகவே அமைந்துள்ளது.

தமிழர்களின் சுதந்திர வாழ்வினை இலட்சியமாக வரித்துக்கொண்டு தம்மையே ஈகம் செய்து களத்திலே போராடிய தமிழீழ விடுதலைப் புலிகள் அதே இலட்சியத்தின் வழி நின்று மேற்கொண்ட தமிழ்த் தேசிய விரோதத்திற்கெதிரான நகர்வுகள் அனைத்தும் தமிழ்த்தேசிய நலன்சார்ந்ததாகவே அமைந்திருந்தது. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கான மக்கள் ஆதரவானது இறுதிவரை வலுவான நிலையில் தொடர்ந்தமை அதனையே கட்டியம் கூறி நிற்பதோடு மட்டும் அல்லாமல் தமிழீழ விடுதலையை நோக்கிய போராட்டம் மக்கள் போராட்டமாக உலகளாவிய ரீதியில் எழுச்சி பெற்றதை யாவரும் அறிந்ததே.

ஆயுதப்போராட்டத்தில் உச்சம் பெற்று இராணுவச்சமநிலையில் மேலோங்கியிருந்த போதிலும் அனைத்துலக போக்கிற்கு ஏற்றவாறு மக்களின் ஜனநாயக பங்கேற்பின் அடித்தளத்தில் ஏற்படுத்தப்பட்ட அரசியல் கட்டமைப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தமிழீழத் தேசியத் தலைமை ஏற்படுத்தியிருந்தது. அதில் புளொட்இ ஈ.பி.டி.பி போன்ற கட்சிகளை தவிர்த்து ஈ.பி.ஆர்.எல்.எவ். மற்றும் ரெலோ போன்றவற்றையும் இணைத்தே உருவாக்கப்பட்டிருந்தது.

கொள்கைபிறழ்ந்து பின்னின்று இயக்கிய சக்திகளின் நலன்களுக்காக சொந்த இனத்துக்கே எதிராக செயற்பட்ட துரோக வரலாற்றில் ஈ.பி.ஆர்.எல்.எவ் இற்கும் அதி முக்கிய இடமுண்டு. அவ்வாறு இருந்தும் அவர்களை மன்னித்து அரசியல் நீரோட்டத்தில் இணைத்து மக்கள் பிரதிநிதிகளாக்கியிருந்தமை தமிழீழத் தேசியத் தலைமையின் தமிழினத்தின் விடுதலையை நோக்கிய அதியுச்ச கரிசனையின் வெளிப்பாடாகும்.

இந்நிலையில் எவரையோ திருப்திப்படுத்தவும் அவர்களது அபிலாசைகளை நிறைவேற்றிக் கொள்ளும் வகையிலும் வரலாற்று குறிப்பேடு என்ற ஆவணத்தொகுப்பை வெளியிட்டுள்ள ஈ.பி.ஆர்.எல்.எவ். இன் செயலை அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை வன்மையாக கண்டிக்கின்றது. அத்துடன் இச்சதியில் வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்களை ஒரு கருவியாக கபடத்தனமான முறையில் பயன்படுத்தியுள்ளமைஇ முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள் ஆவணத்தொகுப்பு தொடர்பாக வெளியிட்டுள்ள ஊடக மறுப்பறிக்கை இவர்களை அம்பலப்படுத்தியுள்ளது.

தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்டிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தமிழின விரோத நிலைப்பாட்டின் பின்னணியில் ஒரு வலுவான ஐக்கிய முன்னணியை உருவாக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருந்தது. அந்த அடிப்படையில் தமிழ்த்தேசிய தளத்தில் கொள்கை பற்றுறுதியுடன் பயணிக்கும் சக்திகளை ஒருங்கிணைத்து வலுவான ஐக்கிய முன்னணி ஒன்றை உருவாக்க தாயக, புலம்பெயர் தளங்களில் தீவிர முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் ஈ.பி.ஆர்.எல்.எவ். இன் இந்த செயற்பாடானது அதற்கு எதிரானதாகவே அமைந்துள்ளது.

ஆகவே இவ்வாறான ஐக்கிய முன்னணியை உருவாக்கும் வகையில் தமிழ் மக்கள் கூட்டணி என்ற கட்சியை ஆரம்பித்து செயற்பட்டுவரும் முன்னாள் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள் இவ்விடயத்தில் தீர்க்கமானதொரு முடிவினை எடுக்க வேண்டிய காலசூழலிற்குள் தள்ளப்பட்டுள்ளார் . தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை வென்றெடுக்கும் உன்னத பயணத்தில் தமிழினத்தின் நலனை மட்டுமே முன்னுறுத்திய அடிப்படையில் கொள்கை சார்ந்தவர்கள் மட்டுமே இருக்க முடியும் என்பதனை பொறுப்புனர்வுடன் சுட்எக்காட்ட கடமைப்பட்டுள்ளோம்.

‘தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்’
அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை


அண்ணாந்து பார்த்து சுரேஸ் தன் முகத்தில் துப்புகிறார் !

ஈ.பி.ஆா்.எல்.எவ் கட்சியின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களுக்கான மாநாட்டின்போது வரலாறு சம்மந்தமான ஆவணம் ஒன்று வெளியிடப்பட்டிருக்கின்றது. அது குறிப்பாக சகோதர படுகொலைகள் குறித்து பேசும் ஆவணமாக காணப்படுகின்றது.

ஆனால் அந்த விடயத்தினை மீள..மீள.. நினைவுபடுத்துவது தமிழ் மக்கள் மனங்களில் மாறாத வடுவை விதைக்கும் ஒரு செயலாகும் என ரெலோ அமைப்பினைச் சேர்ந்த சிவாஜிலிங்கம் குறிப்பிட்டிருக்கிறார்.

இது தொடர்பில் மேலும் குறிப்பிட்ட அவர்,

தமிழ்தேசிய கூட்டமைப்பு உருவாக்கப்பட்டபோது தமிழீழ விடுதலை புலிகளின் தலைவா் மேதகு வே.பிரபாகரனுடன் பேசும் சந்தா்ப்பத்தில் முன்னாள் ஆயுதப் போராட்ட இயங்களுடன் தமிழீழ விடுதலை புலிகள் ஒற்றுமைப்படுவதென்பது மறப்போம், மன்னிப்போம் என்பதன் அடிப்படையில் அமையவேண்டும். என கேட்டிருந்தோம். அதனை புலிகள் ஒப்புக் கொண்டாா், அதை பின்பற்றினாா்கள்,

அவ்வாறான நிலையில் மீளவும்.. மீளவும்.. அதை குறித்து பேசிக் கொண்டிருப்பது பயனற்ற ஒன்றாகும். இது சுரேஸ் பிரேமச்ந்திரன் அண்ணார்ந்து பார்த்து தனது முகத்திற்கு நேரே தானே துப்புவது போன்றது என்றாா்.

*
ஈ.பி.ஆர்.எல்.எப் தொடர்ந்து ,ரெலோ, புளொட் அமைப்பினர் மேற்கொண்ட படுகொலைகள்.!

நான் என் வாழ்நாளில் அதாவது ஈழப்போராட்ட வரலாற்றில் பார்த்த முதல் கொலை எனக்கு இப்போதும் நன்றாக நினைவிருக்கிறது. எண்பதுகளின் நடுப்பகுதி அது.

நான் எனது ஊரான வல்வெட்டித்துறையிலிருந்து உடுப்பிட்டிக்கு ரியூசனுக்காக மலர் அக்காவீட்டிற்கு சென்றிருந்தபோது அவரின் வீட்டின் முன்னால் ஒரு வாகனம் ஒன்று வந்து கிறீச்சிட்டு நின்றது. அந்த வாகனத்திலிருந்து குதித்த பல பெடியங்கள் ஆயுதங்களுடன் மலர்அக்கா வீட்டிற்கு பக்கத்து வீட்டிற்குள் ஓடினார்கள்.

அப்போது ஒரு வயதான அம்மாவும் மூன்று அக்காக்களும் “அண்ணா ஓடு ஓடு” என்று கத்தியபடி அந்த பெடியங்களை தடுக்க முனைந்தார்கள். ஆனால் பெடியங்கள் அவர்களை துப்பாக்கியால் தாக்கி தூக்கி எறிந்துவிட்டு வீட்டுக்குள் ஓடினார்கள். சிறிது நேரத்தில் இரத்த வெள்ளத்தில் ஒரு அண்ணாவை வாகனத்தில் தூக்கி எறிந்தபடி அங்கிருந்து மிக வேகமாக மறைந்து போனார்கள்.

அப்போது ஒருவர் இன்னொருவருக்கு சொல்லிக்கொண்டிருந்தார்.. “பொபியின்ர பெடியள் வந்து தாஸின்ர பெடியளை சுட்டு இழுத்துகொண்டு போகிறாங்கள்” என்று.

நான் என் வாழ்நாளில் அதாவது ஈழப்போராட்ட வரலாற்றில் பார்த்த முதல் கொலை அது.

சிங்களவன் தமிழனை கொன்றதை நான் அப்போது பார்க்கவில்லை. ஒரு இயக்கத்தை சேர்ந்தவரை வேறு ஒரு இயக்கத்தை சேர்ந்தவர் அழித்ததையும் பார்க்கவில்லை. ஒரே இயக்கத்திற்குள் இருந்தவரை அதே இயக்கம் சுட்டுகொன்றதை பார்த்ததே எனது ஈழப்போராட்ட அரசியலின் முதல் மனப்பதிவு.

ரெலோ இயக்கத்தின் ஒரு பிரிவைச் சேர்ந்தவர்களால் அதன் வேறு பிரிவை சேர்ந்தவர்கள் சுடப்பட்ட வரலாறு இது.

பிற்பாடு அந்த இரு பிரிவினரும் யாழ் வைத்தியசாலைகளில் ஒன்றின் முன் மக்களையும் நோயாளிகளையும் பொருட்படுத்தாது மிக மூர்க்கமாக பொருதி ரெலோவின் பொபி பிரிவினரால் தாஸ் உட்பட பலர் சுட்டு படுகொலை செய்யப்பட்டனர்.

ரெலோ இயக்கத்தை புலிகள் அடக்குவதற்கு முன்னான ஒரு நிகழ்வு இது.

இப்படி நிறைய நிகழ்வுகளை ஒவ்வொரு இயக்கம் தொடர்பாகவும் வரலாற்றிலிருந்து பட்டியலிட முடியும்.

இந்த சம்பவத்திற்கு சில மாதங்களுக்கு முன்பு சுழிபுரத்திற்கு மாமி வீட்டிற்கு சென்றிருந்தபோது ‘ஆறு விடுதலைப்புலிகளை காணவில்லை’ என்ற அறிவித்தலும் பிற்பாடு அவர்கள் புளொட் இயக்கத்தினரால் கடத்தப்பட்டு சித்தரவதை செய்யப்பட்டு இரகசியமாக படுகொலை செய்யப்பட்டார்கள் என்ற கண்ணீர் அஞ்சலி அறிவித்தல்களையும் காணநேரிட்டது.

நிலைமை இப்படியிருக்க எல்லா மாற்று இயக்க அண்ணையும் சேர்ந்து புலிகள்தான் சகோதரப் படுகொலையை ஆரம்பித்தவை என்று சொல்லித் திரியினம்.

அதை ஏந்தி வாந்தியாக எடுக்க காலாகாலத்திற்கு ஒரு கூட்டமும் உருவாகியிருக்கிறது.

-பரணி கிருஷ்ணரஜினி

எங்களிடம் இந்த சில்லித்தனமான வாதத்தைத் தூக்கிக் கொண்டு வராதீர்கள் !

ஈபிஆர்எல்எப் இயக்கம் தமிழ் மக்களுக்கு இழைத்த கொடூரங்களை பதிவு செய்தவுடன் அதற்கு பதிலளிக்க முடியாமல் புலிகளின் இறுதி நேர ஆட்சேர்ப்பை தூக்கிக் கொண்டு வருகிறார்கள் ஈபிஆர்எல்எப் அனுதாபிகள்.

புலிகளின் இந்த செய்ற்பாட்டுக்கு தத்துவ – கோட்பாட்டு ரீதியாக மட்டுமல்ல படைத்துறை விஞ்ஞான அடிப்படையில் தர்க்க ரீதியாகவும் என்னால் பக்கம் பக்கமாக நியாயம் கற்பிக்க முடியும்.

ஏனென்றால் புலிகளின் வீழ்ச்சியோ / அழிவோ எம் போன்றவரை உலுக்கவில்லை மாறாக இறுதி நேரத்தில் புலிகள் இழைத்ததாகச் சொல்லப்படும் குற்றங்களில் ‘புலிகள் எப்படிச் சிக்கினார்கள்?’ என்ற கேள்வியே எம்மைக் குடைந்தெடுத்தது.

அறம் சார்ந்த அந்த கேள்விகளுக்கான தேடலிற்கு கிடைத்த விடைதான் ‘நந்திக்கடல்’ கோட்பாடுகள்.

எனவே எங்களிடம் இந்த சில்லித்தனமான வாதத்தைத் தூக்கிக் கொண்டு வராதீர்கள்.

அதுவும் இந்திய படைகளின் இன அழிப்புக்கு சேவகம் செய்ய வீடுகள்/ கல்விக் கூடங்கள்/ பொது இடங்கள் என்று எந்த வேறுபாடில்லாமல் இளைஞர்களைக் கடத்திச் சென்று கட்டாயப் பயிற்சி கொடுத்து அவர்களின் வாழ்வைச் சூறையாடிய ஈபிஆர்எல்எப் இயக்கத்திற்கு அதற்கான தகுதி எள்ளளவும் கிடையாது.

மக்களிற்கு மட்டும் அதற்கான உரிமை உண்டு. அதற்கான பதிலை தலைவர் ‘நந்திக்கடலில்’ விட்டுச் சென்றிருக்கிறார்.

எனவே இவர்களுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் நமக்கில்லை.

ஆனால் ஆட்சேர்ப்பு குறித்து இன்னும் குழப்பத்திலுள்ள சிலருக்காக தர்க்கம்/ கோட்பாடு என்று நீட்டி முழக்காமல் எளிமையாக எழுதிய முன்னைய பதிவொன்றை இணைக்கிறேன்.

*****

இன்று “Enemy at the Gates” படம் பார்த்தேன். கிட்லரின் படைகள் நிலங்களை விழுங்கிக்கொண்டு ரஸ்யாவில் “Stalingrad” வரை வந்த வரலாறு எமக்கு எல்லோருக்கும் தெரியும்.”Stalingrad” நிலத்தில் வைத்து ரஸ்ய வீரர்கள் கிட்லரின் படைகளை வெற்றிகொண்டு துரத்தியடித்ததும் நாம் அறிந்ததே.. உலக சரித்திரத்தையே மாற்றியமைத்த வரலாறு அந்த சிறு நிலத்தில் வைத்து எழுதப்பட்டது. இந்த பின்புலத்தில் எடுக்கப்பட்ட திரைப்படம் இது.

ஆக்கிரமிப்பாளர்களை என்ன விலை கொடுத்தாவது துரத்தியடிக்க வேண்டும் என்பதற்காக பெரும் அழிவுக்கு மத்தியிலும் போராட முற்படும் சோவியத், நாடு முழுவதிலிருந்தும் ஆட்களை வலுக்கட்டாயமாக போர் முனைக்கு கொண்டுவருவதும் எந்த பயிற்சியுமில்லாமல் போதிய ஆயுதங்கள் கூட இல்லாமல் அவர்களை கள முனையில் இறக்குவதும் மிகவும் தத்ருபமாக காட்சிப்படுத்தப்ட்டடுள்ளது. மீறி தப்பி ஓடுபவர்களை ரஸ்ய வீரர்கள் “தாய்நாட்டை காக்காமல் ஓடும் நீ வாழத் தகுதியற்றவன்” என்று சுட்டுக்கொல்லும் காட்சிகளும் நேர்மையாக பதிவு செய்யப்பட்டுள்ளது. அப்படி சேர்க்கப்பட்ட ஒரு இளைஞன் காலத்தின் தேவை கருதி போர் முனையில் ஆக்கிரமிப்பாளர்களை துரத்தியடிக்க துணிச்சலுடனும் அர்ப்பணிப்புடனும் செயற்படுவதை விபரிப்பதே இத் திரைப்படத்தின் மையக்கதை..

வெற்றியின் பின்னால் இத்தகைய கதைகள் ஏராளமாக இருப்பதை உணர முடிகிறது.

இங்கு ஏன் இதை குறிப்பிடுகிறேன் என்றால் வன்னி இறுதிப்போரிலும் புலிகள் குறித்து இங்கு வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் “Stalingrad” இல் ரஸ்ய வீரர்களின் செயற்பாட்டிற்கு ஒப்பானது. வெற்றி பெற்றதால் அது வரலாறாகியது. இங்கு வீழ்ந்து போனதால் குற்றங்களாக மாற்றப்பட்டுள்ளன.

இறுதிக்காலத்தில் புலிகள் மீது வைக்கப்படும் குற்றங்களின் உளவியல் இந்த பின்புலத்திலேயே ஆராயப்பட வெண்டும்.

இன்று எமது பின்னடைவு எதிரிகளுக்கும் துரோகிகளுக்கும் நடந்த நிகழ்வுகளை திரிப்பதற்கு வசதியாக மாற்றிவிட்டிருக்கிறது.

எதிரிகளுக்கும் துரோகிகளுக்கும் மத்தியில் சிறீலஙகா, இநதியா அமெரிக்கா உட்பட பெரும் இராணுவ – அரசியல் வலையமைப்புக்கு எதிராக போராட வேண்டியிருப்பதை உணர்ந்து யாரும் தமக்கு ஒத்துழைப்பு வழங்கமாட்டார்கள் என்பதை கண்டறிந்து எதிரிகளை மக்களின் பலத்துடன் தமது மண்ணில் வைத்து அழித்தொழிப்பு செய்து ஒரு இராணுவ வெற்றியை அடைவதுதான் ஒரே தீர்வு என்பதை உணர்ந்து முன்பு கிளிநொச்சியையும் பின்பு அனந்தபுரத்தையும் ஒரு ஸ்ராலின்கிராட்டாக மாற்ற புலிகள் முயன்றார்கள்.

அதன் பின்புலம்தான் காலத்தின் தேவை கருதிய கட்டாய ஆட்சேர்ப்புக்களாகவும் ஆளணி பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய குறைவான பயிற்சிகளுடன் களமுனைக்கு ஆட்கள் அனுப்பப்பட்டதும் அதில் சில அசம்பாவிதங்களும் இதன் வழியேதான் நடந்தேறியது.

உள்ளிருந்து வேரறுத்த துரோகங்களும் சாவ்தேச படைவலு கட்டமைப்புக்களின் இராணுவ- ராஜதந்திர- தொழில்நுட்ப உதவிகளும் சிறீலங்கா படுகொலை அரசிற்கு பெரும் பக்கபலமாக புலிகளை எதிர்த்து பேரிட்டன..

அந்த சின்னஞ் சிறிய படை இதற்கு மேல் என்ன செய்ய முடியும்.? விளைவாக செய் அல்லது செத்துமடி என்ற ஓர்மத்துடன் இறுதிவரை போராடி வீழ்ந்தார்கள் அந்த மண்ணில் புலிகள்..

*******
போராடும் தேசிய இனங்களிற்கான ‘நந்திக்கடல்’ கோட்பாடுகளின் மைய சரடு

உயரிய நோக்கங்களுடன் ஆரம்பத்தில் அனைவரும் போராடப் புறப்பட்டிருந்தாலும் புலிகள் தவிர அனைத்து இயக்கங்களும் அழிந்து போனதற்கு அடிப்படைக் காரணம் தனி மனித ஒழுக்கமின்மை.

புகைப் பிடித்தல்/ மது அருந்துதல்/ தகாத உறவு என்பது ஒரு இயல்பான நடைமுறையாக இருந்தது அல்லது அதை ஒரு குற்றமாக அவர்கள் கருதவில்லை.

ஆனால் புலிகள் அமைப்பில் அது தண்டனைக்குரிய குற்றம்.

தளபதி குமரப்பாவுடன் லெபனான் வரை சென்று பயிற்சி எடுத்த புலிகளின் முன்னாள் மூத்த உறுப்பினர் ஒருவருடன் ஒரு முறை ஏனைய இயக்கங்களின் இந்த நடைமுறைகள் குறித்துப் பேசிய போது ஒரு ஆச்சர்யமான தகவலைக் குறிப்பிட்டார்.

“தலைவர் பிரபாகரன் தவிர்ந்து ஏனைய தலைவர்கள் அனைவரும் வேறுபாடில்லாமல் உலகப் போராட்டங்களைப் பிரதியெடுப்பதிலேயே குறியாக இருந்தார்கள். இது ஒரு கட்டத்தில் சேகுவேரா/ பிடல் காஸ்ட்ரோ போன்று புகைபிடித்தல், மது அருந்துதலையும் இயல்பாக அணுகும் மனநிலை மட்டுமல்ல பல புரட்சியாளர்களின் பலதாரமணம்/ காதல் எல்லாவற்றையும் அடியொட்டவும் தலைப்பட்டார்கள். அதையெல்லாம் ஒரு சாகசமாகப் பேசியும் திரிந்தார்கள். மக்களைப் படிக்காமல் புத்தகங்களை மட்டும் படித்துக் கொண்டிருந்ததால் போராட்டத்தில் புது உத்தியை உருவாக்க முடியாமல் போனது மட்டுமல்ல மேற்படி தனிமனுத ஒழுக்கத்தையும் இழந்து உட்கட்சிப் படுகொலை / மாற்று இயக்கப் படுகொலை என்று சுய சீரழிவுக்குள்ளாகி அழிந்தும் போனார்கள்.

இப்போது குற்றத்தை மட்டும் எம்மீது திருப்புகிறார்கள்.” என்றார்.

அடுத்து அவர் குறிப்பிட்டதுதான் வரலாற்றில் முக்கியமானது, ‘ ஒரு போராடும் இனக் குழுமத்தில் பல மாற்றுக் கட்சிகள்/அமைப்புக்கள் உருவாகுவது இயல்பு. ஆனால் ஒரு போராட்ட இயக்கம் தலைமை வகிப்பதுதான் சரி. அதுவும் ஒழுக்கத்தில் சிறந்த ஒரு இயக்கம் முக்கியமானது. உலகில் எங்கும் இரு இராணுவ கட்டமைப்பு இருப்பதில்லை. ஒரு இராணுவம்தான். அரசுகளின் வெற்றிக்கு இது ஒரு முக்கியமான காரணம். அதுதான் தலைவர் இவர்களை வெளியேற்ற முடிவெடுத்தார்.”

போராடும் தேசிய இனங்களிற்கான ‘நந்திக்கடல்’ கோட்பாடுகளின் மைய சரடு இது.

மாற்று இயக்கங்கள் ஏனைய போராட்டங்களைப் படித்தது தவறல்ல. அது அவசியம்தான். ஆனால் அவர்கள் தமக்கு என்று தனித்துவமான வழிமுறையை கடைப்பிடிக்காமல் இதற்குள்ளேயே தேங்கி நின்றதுதான் அவர்கள் செய்த வரலாற்று தவறு. அதுதான் பின்னாளில் தமது நோக்கத்தையே மறந்து அரசுகளின் கைப்பாவைகளாகி அழிந்தும் போனார்கள்.

பிரபாகரன் ஏனைய தலைவர்களிடமிருந்து வேறுபடும் இடம் இதுதான். அவர் தனது போராட்ட வழிமுறைகளை உலக பேராட்டங்களிலிருந்தோ தத்துவங்களிலிருந்தோ தேடவில்லை.. மாறாக மக்கள் தொகுதிக்குள் அதை தேடினார். அப்போதே அவர் தனித்துவமான ஒரு கோட்பாட்டை உருவாக்கும் ஆளுமையாக உருவெடுத்துவிட்டார்.

இனியும் தங்கள் தவறை ஏற்றுக் கொள்ளாமல் தலைவரையும் போராட்டத்தையும் தூற்றுவது மாற்று இயக்கத்தினரை மேலும் மக்களிடமிருந்து அன்னியப்படவே செய்யும்.

புரிந்தால் சரி.

Parani Krishnarajani

விஜய் பற்றி சீமான் பேசியது சரியா ?

நடிகை கஸ்தூரி தெளிவான விளக்கம் !

யாருடா வந்தேறிகள் ? கொந்தளித்த சீமான்

ரஜினி தலைவனா? அப்போ பிரபாகரன் யாரு? – சீமான் ஆவேசம்

விஜய் தான் சூப்பர் ஸ்டார்

படத்தில் நடிக்க விஜய் பயந்தாரா ?

அயோக்கிய நாய்களா… வெளுத்து வாங்கிய சீமான்

கம்மா நாயுடுகளை தெலுங்கிலேயே கலாய்த்த சீமான்

சீமான் சொல்றதுதான் சரி | Prakash Raj Interview

வெளியார் யார்? – பெ. மணியரசன்

யாழ்ப்பாணத்தில் ஆவா குழுவை இயக்கும் தமிழ் அரசியல்வாதிகள் யார்? காணொளி

அண்மைக்காலமாக யாழ் குடாநாட்டை அச்சுறுத்தும் ஆவா குழு தொடர்பில் தென்னிலங்கை ஊடகம் ஒன்று அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் ஆவா குழு என்ற எந்தவொரு அமைப்பும் இல்லை என அருளானந்தம் அருண் என்ற இளைஞன் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த காலத்தில் வடக்கில் இடம்பெற்ற குற்றச் செயல்கள் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்ட ஆவா குழு உறுப்பினர் ஒருவர் சிங்கள ஊடகமொன்றுக்கு பல முக்கிய விடயங்களை வெளியிட்டுள்ளார்.

ஆவா குழு சுமந்திரன், சரவணபவன், வித்தியதரன் ஆகியோரினால் உருவாக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவர்களை சட்டத்திற்கு முன்னாள் நிறுத்த வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆவா என்ற குழுவை சிலர் உருவாக்கி கொண்டதற்கு யாழில் அப்படி ஒரு குழு இல்லை.

யாழ்ப்பாணத்தில் இளைஞர், யுவதிகளுக்கு விளையாடுவதற்கு ஒரு சிறிய இடமேனும் இல்லை என்ற போதிலும் கொழும்பு பிரதேசத்தில் சிலர் நடப்பதற்கு உட்பட தனி இடம் அமைக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தென்னிலங்கை ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் இந்த விடயங்களை குறிப்பிட்டுள்ளார்.

கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் மின் விளக்குகளை சேதப்படுத்திய விசமிகள்!

கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் அதிகளவான மாவீரர்களது வித்துடல்கள் விதைக்கப்பட்டுள்ளன.

மாவீரர் துயிலும் இல்லம் தமிழ் மக்களால் புனிதமான இடமாக நோக்கப்பட்டு வணக்கம் செலுத்தப்பட்டு வருகின்றது.

தமிழ் மக்களது விடுதலைக்காகப் போராடி தமது இன்னுயிர்களை உவந்தளித்த மாவீரர்களை விதைத்த துயிலும் இல்லங்கள் மரியாதைக்குரிய மேலான இடமாகக் கருதி வணக்கம் செலுத்தப்பட்டு வருகின்றது.

தமிழ் மக்களின் விடுதலை வீரர்களான மாவீரர்களை விதைக்கப்பட்ட மாவீரர் துயிலும் இல்லங்கள் கடந்த 2009 ஆண்டிற்கு முன்னர் தமிழீழ விடுதலைப் புலிகளால் சிறந்த முறையில் பேணப்பட்டு வந்தது.

கடந்த 2009 ஆண்டு தமிழர் தாயகப் பகுதிகள் மீது வல்லாதிக்க சக்திகளின் துணையுடன் பாரியளவில் போர் தொடுத்த இலங்கை இராணுவம் பலரைக் கொத்துக்கொத்தாகக் கொன்றொழித்ததுடன் தமிழர்களின் வணக்கத்துக்குரிய மாவீரர் துயிலும் இல்லங்களையும் இடித்துத் தரைமட்டமாக்கித் துவம்சம் செய்தது.

அவர்களால் கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லமும் இடித்தழிக்கப்பட்டு இராணுவ முகாம் அமைக்கப்பட்டிருந்தது.

கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்திலிருந்து இராணுவம் விலகிச் சென்றதன் பின்னர் கிளிநொச்சியில் சு.பசுபதிப்பிள்ளை அவர்கள் தலைமையிலான மாவீரர் பணிக்குழுவின் ஏற்பாட்டில் மாவீரர்களது உறவுகளால் மாவீரர் துயிலும் இல்லம் தற்துணிவாகத் துப்பரவாக்கப்பட்டு கார்த்திகை-27 இல் மாவீரர் நாள் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.

மாவீரர்களை விதைத்த கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லக் காணியை அபகரிப்பதற்காகப் பலர் பலதடவைகள் முயற்சித்து வந்தபோதெல்லாம் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களது துணையுடன் தடுத்து நிறுத்தப்பட்டு வந்துள்ளது.

மாவீரர்களது வணக்கத்துக்குரிய மாவீரர் துயிலும் இல்லத்தைப் பாதுகாக்கும் நோக்குடன் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரனது ஒழுங்கமைப்பில் கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தைச் சுற்றி மதில் அமைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு ஒருபகுதிக்கான மதிலமைப்பு வேலைகள் முழுமையாகப் பூர்த்தியாகியுள்ள நிலையில் இனவிரோதிகளின் காட்டிக்கொடுப்பால் மதில் அமைக்கும் பணிகளுக்கும் பல தடைகளும் இடையூறுகளும் ஏற்படுத்தப்பட்டு வந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

தற்போது கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர்களின் உறவுகளால் பொருத்தப்பட்டிருந்த சூரிய மின்கலத்துடன் கூடிய மின்விளக்குகள் விசமிகளால் சேதமாக்கப்பட்டு அதிலுள்ள பற்றறிகள் திருடப்பட்டுள்ளன.

இதனைக் கேள்விப்பட்ட கிளிநொச்சி மாவீரர் பணிக்குழுவின் தலைவர் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் சு.பசுபதிப்பிள்ளை அவர்கள் தலைமையிலான மாவீரர் பணிக்குழுவினர் அங்கு சென்று நிலைமைகளைப் பார்வையிட்டுள்ளனர்.

இது குறித்துக் கருத்துத் தெரிவித்த மாவீரர் பணிக்குழுவின் தலைவர் ச.பசுபதிப்பிள்ளை,

“எமது இன விடுதலைக்காப் போராடி தங்கள் இன்னுயிர்களையே எமக்காக உவந்தளித்த எமது உறவுகளான மாவீரர்களுக்காக நாம் எந்த நன்றிக் கடனும் செய்ய முடியாது.

அவர்களது தியாகம் மேலானது. அவர்கள் எமக்காகத் தங்களது மேலான இன்னுயிர்களையே ஆகுதியாக்கினார்கள். அவர்களை விதைத்த வித்துடல்கள் உள்ள கல்லறைகளும் சிதைத்தழிக்கப்பட்டுள்ளன.

அவர்களை நினைவுகூரும் இவ்விடத்தில் பொருத்தப்பட்ட மின்விளக்குக்களைக்கூட விட்டுவைக்காது சேதப்படுத்தித் திருடிச் செல்ல எப்படி அந்த விசமிகளுக்கு மனசு வந்ததோ தெரிவயில்லை.

இது மிகவும் வேதனையானதும் கேவலமானதுமான ஒரு செயற்பாடு. இதனைச் செய்ய அவர்களால் எப்படி முடிந்ததோ தெரியவில்லை.

எமது இன விடுதலைக்காக தமது இன்னுயிர் உவந்தளித்தமானமாவீரர்கள் என்றைக்கும் தமிழ் இனத்தின் இதயங்களிலிருந்து அகற்ற முடியாத புனிதர்கள்.

அவர்களை விதைத்த மாவீரர் துயிலும் இல்லங்களும் புனிதமானவை. அவர்களுக்காக அவர்களை விதைத்த மாவீரர் துயிலும் இல்லங்களையாவது பேணி அவர்களை மனதிருத்தி வழிபடும் நன்றியுள்ளவர்களாக நாம் செயற்படுவோம் என்றார்.

ஈ.பி.ஆர்.எல்.எப் மேற்கொண்ட படுகொலை விபரங்கள் !

மண்டையன் குழு படுகொலைகள் – தகவல்கள் திரட்ட இளைஞர்கள் ஆர்வம்

ஈபிஆர்எல்எவ் அமைப்பு கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நிகழ்த்திய மாநாட்டின்போது வெளியிட்ட ஆவணப் புத்தகம் ஈபிஆர்எல்எவ் மீது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.

தமிழரசுக் கட்சி புலி நீக்க அரசியல் செய்ய முற்படுகிறது ஏன மேடைகளில் கூவிவந்த சுரேஸ் பிரேமச்சந்திரன் விடுதலைப் புலிகளுக்கு எதிரான புத்தகம் ஒன்றினை வெளிட்டுள்ளமையே தற்போது சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது.

விடுதலைப் புலிகள் ஆதரவு நிலைப்பாடுடைய முன்னாள் முதல்வர் விக்கினேஸ்வரனின் கைகளினால் குறித்த புத்தகத்தை சுரேஸ் பிரேமச்சந்திரன் வெளியிட வைத்தது விக்கினேஸ்வரனைப் படுகுழியில் தள்ளும் ஈபிஆர்எல்எவ்இன் ஆரம்ப நடடிக்கையின் ஒரு அங்கம் எனவும் விமர்சிக்கப்படுகின்றது.

வெளியீட்டு நிகழ்வுகளுக்கு தான் அழைக்கப்பட்டார் முன்கூட்டியே புத்தகத்தைப் பெற்று அதனை நன்கு படித்து ஆராய்ந்துவிட்டே முன்னாள் முதல்வர் விக்கினேஸ்வரன் வெளியீட்டு நிகழ்வுகளுக்கு செல்லச் சம்பதிப்பது வழக்கம் எனவும் ஈபிஆர்எல்எவ் விடயத்தில் விக்கினேஸ்வரன் சுரேஸ் பிரேமச்சந்திரனினால் ஏமாற்றப்பட்டுவிட்டதாகவும் ஆவண வெளியீடு தொடர்பில் அவருக்கு முன்னறிவிப்பு வங்காமல் இரகசிய ஏற்பாடாக மேடையில் வைத்தே தெரிவிக்கப்பட்டது என விக்கினேஸ்வரனுக்கு நெருக்கமான ஆதரவு அணியினர் கருத்து வெளியிட்டு வருகின்றனர்.

குறித்த ஆவணப் புத்தகத்தில் விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட படுகொலைகள் எனக் கூறி ஈபிஆர்எல்எவ் ஒரு பட்டியல் ஒன்றினை வெளியிட்டிருக்கிறது.

இந்நிலையில் தான் பழசுகளைக் கிழறும் தமது வேலையை தொடங்கியிருக்கின்றனர் தமிழ் இளைஞர்கள். மண்டையன் குழுத் தலைவரான சுரேஸ் பிரேமச்சந்திரன் இயக்கிய மண்டையக் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட சகோதரப் படுகொலைகள் குறித்த தகவல்களை இளைஞர்கள் கேட்டறிந்துவருவதோடு ஈபிஆர்எல்எவ்இன் படுகொலைகள் குறித்த தரவுகளையும் சேகரித்துவருகின்றனர்.


நான் எந்த ஆவணத்தையும் வெளியிடவில்லை! சி.வி.விக்னேஸ்வரன் விளக்கம்

ஈ.பி.ஆர்.எல்.எவ் மாநாட்டில் சிறப்பு அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றியதைத் தவிர புத்தக வெளியீட்டிலோ அல்லது வேறு எந்த ஆவண வெளியீட்டிலோ நான் ஈடுபடவில்லை என வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியின் மாநாடு கடந்த 3ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டிருந்த சி.வி.விக்னேஸ்வரன் ஆவணம் ஒன்றை வெளியிட்டு வைத்ததாக செய்திகள் வெளியாகியிருந்தன.

குறிப்பாக அந்த ஆவணத்தில் விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட கொலைகள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் சில ஊடகங்களில் வெளியாகியிருந்த செய்திகளில் தெரிவிக்கப்பட்டிருந்தன.

இந்த விடயம் குறித்து சி.வி.விக்னேஸ்வரனிடம் கேள்வியெழுப்பிய போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


ஈ.பி.ஆர்.எல்.எப் மேற்கொண்ட படுகொலை விபரங்கள் !

1987 ஆம் ஆண்டு இந்திய ஆக்கிரமிப்பு இராணுவம் சமாதானப் படை (IPKF) என்ற பெயரில் ஈ.பி.ஆர்.எல்.எப் ஐயும் அழைத்துகொண்டு இலங்கைக்கு வருகின்றது. ஈ.பி.ஆர்.எல்.எப் இந்திய இராணுவத் துணைக் குழுக்களாகச் செயற்படுகின்றது.

இந்திய இராணுவத்துடன் இணைந்து மக்கள் மீதான தாக்குதல்களிலும் சமூகவிரோதச் செயற்பாடுகளிலும் ஈ.பி.ஆர்.எல்.எப் ஈடுபடுகின்றது. சுரேஷ் பிரேமச்சந்திரனின் தலைமையில் வரதராஜப்பெருமாளின் ஆலோசனையுடன் மண்டையன் குழு என்ற கொலைகாரக் குழு உருவாக்கப்படுகின்றது. இந்திய ஆக்கிரமிப்பு இராணுவத்தாலும், ஈ.பி.ஆர்.எல்.எப் இனாலும் புலி உறுப்பினர்கள் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்படுகின்றவர்களின் தலையைச் சீவிக் கொல்வதானால் மண்டையன் குழு என வடக்கிலும் கிழக்கிலும் சுரேஷ் பிரேமச்சந்திரனின் குழு அழைக்கப்பட்டது.

1988 டிசம்பர் மாதம் இந்திய இராணுவத்தின் துணையோடு நடத்தப்பட்ட போலியான தேர்த்தலில் வரதராஜப்பெருமாள் வடகிழக்கு மாநிலத்தின் முதலமைச்சராகிறார்.

1989 ஆம் ஆண்டு தமிழ்த் தேசிய இராணுவம் என்ற இந்திய அடியாள் படை ஒன்றைத் தோற்றுவிப்பதற்காக வரதாராஜப்பெருமாள், சுரேஷ் பிரேமச்சந்திரன், பத்மநாபா ஆகியோர் யாழ்ப்பாணத்திலிருந்து இந்திய இராணுவத்தின் கட்டளையின் கீழ் செயற்படுகின்றனர்.

சிறுவர்களும் இளைஞர்களும் வயது வேறுபாடின்றி பயிற்சிக்காகப் பலவந்தமாக அழைத்துச் செல்லப்படுகின்றனர். பாடசாலைகளில் அருகாமையிலும், விளையாட்டு மைதானம் போன்ற இளைஞர்கள் கூடும் இடங்களிலும் ஈ.பி.ஆர்.எல்.எப் துப்பாக்கிகளோடு சென்று இளைஞர்களை அழைத்துச் சென்று அசோக் ஹொட்டேலில் சிறை வைத்து இராணுவத்தில் இணைத்துக்கொண்டது. தமிழ்த் தேசிய இராணுவத்திற்கு சுரேஷ் பிரேமச்சந்தினர் பொறுப்பதிகாரியாகச் செயற்பட்டார்.

ஒவ்வொருதடைவையும் தெரு நாய்களைப் போன்று இளைஞர்கள் பயிற்சிக்கு என்று பிடித்துவரப்படும் போதும் சுரேஷ் பிரேமச்சந்திரனின் மிரட்டல் கலந்த உரையாற்றுவார். இந்திய இராணுவத்தை எதிரியகக் கருதிய பலருக்கு குறுகிய காலப் பயிற்சி வழங்கப்பட்டது.

யாழ்ப்பாணம், வவுனியா மட்டக்களப்பு திருகோணமலை ஆகிய இடங்களில் மண்டையன் குழு இயங்கி வந்தது.

1989ஆம் ஆண்டு மே மாதம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இளைஞர் ஒருவரின் வயிற்றிலிருந்து கொக்கோ கோலா போத்தல் ஒன்று சத்திரசிகிச்சை மூலம் எடுக்கப்பட்டது.

அச்செய்தி முரசொலி பத்திரிகையில் மட்டுமே வெளியாகியது. இளைஞர் ஒருவரின் வயிற்றிலிருந்து கோலா போத்தல் மீட்கப்பட்டது. அந்த இளைஞர் சில தினங்களுக்கு முதல் சிலரால் கடத்தி செல்லப்பட்டிருந்தார் என இறுதியில் எழுதப்பட்டிருந்தது.

அந்த இளைஞரை கடத்தியவர்கள் ஈ.பி.ஆர்.எல்.எவ் இயக்கத்தினர் என பின்னர் பலருக்கும் தெரியவந்தது. இதனால் ஈ.பி.ஆர்.எல்.எவ் இயக்கத்தினர் முரசொலி ஆசிரியர் திருச்செல்வத்தை சுட்டுக்கொல்வதற்கு திட்டமிட்டனர்.

முரசொலி பத்திரிகை ஈ.பி.ஆர்.எல்.எவ் இயக்கம் செய்து வந்த படுகொலைகளையும் மனித உரிமை மீறல்களையும் அம்பலப்படுத்தி வந்தது.

அன்று ஈ.பி.ஆர்.எல்.எப் இற்கு யாழ்ப்பாணத்தில் தலைமை தாங்கிய சுரேஸ் பிரேமச்சந்திரன் இந்திய இராணுவத்துக்காகவும் தங்கள் மீது புலிகள் மேற்கொள்கின்ற தாக்குதலுக்காகவும் பழிக்குப் பழி வாங்குகின்ற படுகொலைகளை முன்னின்று நடத்தி வந்தார்.

புலி ஆதரவாளர்கள் புலிகளுக்கு உதவியவர்கள், புலிகளுக்கு அடைக்கலம் கொடுத்தவர்கள் எனப் பலர் ஈ.பி.ஆர்.எல்.எவ் இயக்கத்தால் படுகொலை செய்யப்பட்டனர். திருச்செல்வத்தையும் கடத்தி கொலை செய்வதற்கு ஈ.பி.ஆர்.எல்.எவ் இயக்கம் திட்டமிட்டது.

எஸ்.திருச்செல்வம் அவர்களைக் கடத்துவதற்காக அவருடைய வீட்டுக்கு மண்டையன் குழுவினர் சென்ற போது திருச்செல்வம் வீட்டின் பின் பக்கத்தால் தப்பியோடிவிட்டார். அதனால் அங்கிருந்த அவரது மகன் அகிலனை மண்டையன் குழுவினர் கடத்திச் சென்றனர். திருச்செல்வம் தங்களிடம் வந்தால் மகனை விடுவிப்போம் என்று எச்சரித்துச் சென்றனர். தான் அவர்களிடம் சென்றால் கொல்லப்படுவேன் என்பதை நன்கு அறிந்திருந்த திருச்செல்வம் தான் செல்லாவிட்டால் தன் மகனைக் கொல்வார்கள் என்பதை எதிர்பார்த்திருக்கவில்லை.

இந்நிலையில் மண்டையன் குழு அகிலனை படுமோசமான சித்திரவதைக்கு உள்ளாக்கியது. அகிலனின் மலவாசலினூடாக சோடாப் போத்தலை செலுத்தினார்கள். அவருடைய நகங்களைப் பிடுங்கினார்கள். மறுநாள் அகிலன் பிணமாக வீதியில் வீசப்பட்டார்.

எஸ்.திருச்செல்வம் தம்பதிகளுக்கு கனடிய அரசு அரசியல் தஞ்சம் வழங்கி அவர்களை கனடாவுக்கு அழைத்தது. திருச்செல்வம் தனது மகனின் கொலை தொடர்பாக கனடிய அரசுக்கு வழங்கிய சாட்சியத்தில் சுரேஸ் பிரேமச்சந்திரனைக் குற்றம்சாட்டி இருந்தார். அதனால் சுரேஸ் பிரேமச்சந்திரனின் பெயர் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டு அவருக்கு விசா வழங்க கனடிய அரசு மறுத்து வருகின்றது.

இந்த இயக்கங்கள் மக்களுக்கு எதிராக துப்பாக்கிகளைத் திருப்பிய சம்பவங்கள் எண்ணிலடங்கா. அரச படைகளுக்கு எவ்விதத்திலும் குறையாமல் சித்திரவதைகளிலும் படுகொலைகளிலும் இந்த இயக்கங்கள் ஈடுபட்டன. ஒருவரைக் கொல்வதற்கு எவ்வித காரணங்களும் கொடுக்கப்பட வேண்டிய தேவையே இருக்கவில்லை.

திருச்செல்வத்தின் மகன் அகிலனை நான் நன்கு அறிந்திருந்தேன். அமைதியான சுபாவம் கொண்ட படிப்பு விளையாட்டு என சகல துறைகளிலும் சாதனை படைத்த மாணவன்.

கல்லூரியின் மிகத் திறமையான மாணவனான அகிலன் படுகொலை செய்யப்படுவதற்கு சில வாரங்கள் முன்னதாக க.பொ.த உயர்தரப் பரீட்சை முடிவுகள் வெளியாகி இருந்தது. அதில் அகிலன் நான்கு பாடங்களிலும் ‘ஏ’ பெற்று மிகத் திறமையாக சித்தியடைந்திருந்தார். தான் கல்வி கற்ற கல்லூரியின் கிரிக்கட் குழுவின் தலைவனாகவும் அகிலன் விளங்கினான்.

மாணவன் அகிலன் திருச்செல்வனின் கொலை ஒரு போதுமே நியாயப்படுத்தப்பட முடியாத படுகொலை. தகப்பனுக்காக ஒருபோதுமே மகனைக் கடத்திப் படுகொலை செய்தது யாராகவிருந்தாலும் ஏற்றுக்கொள்ளமுடியாத படுகொலை.

அதேபோன்று மட்டக்களப்பில் இலங்கை தமிழர் ஆசிரியர் சங்க தலைவராகவும் பிரஜைகள் குழு துணைத்தலைவராகவும் இருந்த வணசிங்க மற்றும் மட்டக்களப்பு பிரஜைகள் குழுத்தலைவர் வணபிதா சந்திரா பெர்ணாண்டோ ஆகியோரின் கொலைகளையும் ஈ.பி.ஆர்.எல்.எவ் இயக்கமே செய்தது.

வந்தாறுமூலையில் பிறந்த வணசிங்க அவர்கள் 1961ஆம் ஆண்டு சத்தியாக்கிரகப் போராட்டம் தொடக்கம் தமிழ் மக்களின் விடுதலைப்போராட்டத்தில் தன்னை இணைத்து கொண்டவர்.

இலங்கை தமிழர் ஆசிரியர் சங்க தலைவராக இருந்த வணசிங்க அவர்கள் இந்திய இராணுவ காலத்தில் தமிழ் மக்களின் பாகாப்பு தொடர்பான நடவடிக்கைகளில் முன்னின்று செயற்பட்ட முக்கிய பிரமுகர்களில் ஒருவராக விளங்கினார்.

மட்டக்களப்பு மாவட்ட பிரஜைகள் சபையின் உறுப்பினராகவும், பின்னர் அதன் துணைத்தலைவராகவும் இருந்து பாதிக்கப்பட்ட மக்களின் குரலாக ஒலித்தார்.

அநீதியும் உரிமை மீறலும் எங்கு நடக்கிறதோ அங்கு சென்று அவற்றைத் தட்டிக்கேட்டு நியாயம் தேடும் ஒரு தலைவனாக அவர் விளங்கினார். ஈ.பி.ஆர்.எல்.எவ் இயக்கம் செய்த அட்டூழியங்கள் படுகொலைகளை தட்டிக்கேட்டார்.

இதனால் ஈ.பி.ஆர்.எல்.எவ் இயக்கம் இவரை படுகொலை செய்ய திட்டமிட்டது. 1989ஆம் ஆண்டு ஜனவரி 31ஆம் திகதி மட்டக்களப்பு அரசடியில் அவர் வீட்டில் இருந்த போது ஈ.பி.ஆர்.எல்.எவ் இயக்கத்தை சேர்ந்த இருவர் அங்கு சென்றனர். அவருடன் பேச வேண்டும் என்றனர். வீட்டு முற்றத்தில் போடப்பட்டிருந்த கதிரையில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். தீடிரென ஒருவர் வணசிங்காவை சுட்டுக்கொன்று விட்டு தப்பி சென்றனர்.

ஈ.பி.ஆர்.எல்.எவ் இயக்கம் மட்டக்களப்பில் புரிந்த படுகொலைகளில் வணபிதா சந்திரா பெர்னாண்டோ அடிகளாரை மட்டக்களப்பு புனித மரியாள் தேவாலயத்திற்குள் வைத்து சுட்டுக்கொன்ற சம்பவம் முக்கியமானதாகும்.

1988ஆம் ஆண்டு யூன் 6ஆம் திகதி மட்டக்களப்பு புளியந்தீவில் உள்ள புனித மரியாள் தேவாலயத்திற்குள் வைத்து மட்டக்களப்பு மறைக்கோட்ட முதல்வரும் மட்டக்களப்பு பிரஜைகள் குழு தலைவருமான வணபிதா சந்திரா பெர்னாண்டோ அவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டார். இதே தேவாலயத்திற்குள் வைத்து தான் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராசசிங்கமும் சுட்டுக்கொல்லப்பட்டார்.

பிதா சந்திரா அவர்கள் மட்டக்களப்பு பிரஜைகள் குழு தலைவராக இருந்து ஆற்றிய பணிகள் பல. ஈ.பி.ஆர்.எல்.எவ் போன்ற இயக்கங்கள் செய்யும் அட்டூழியங்களை அம்பலப்படுத்தி வந்தார்.

அவர் சுட்டுக்கொல்லப்படுவதற்கு சில வாரங்களுக்கு முதல் மட்டக்களப்பு நகரில் வைத்து சுகுணா என்ற தமிழ் இளம் பெண்ணையும் ரிபாயா என்ற முஸ்லீம் இளம் பெண்ணையும் ஈ.பி.ஆர்.எல்.எவ் இயக்கத்தினர் கடத்தி சென்றனர். இவர்களை வாவிக்கரை வீதியில் உள்ள அவர்களின் அலுவலகத்தில் வைத்து கூட்டாக பலரும் பாலியல் பலாத்காரம் செய்தனர். வணபிதா சந்திரா இவர்களை மீட்பதற்கு பல முயற்சிகளை மேற்கொண்டார். இந்திய இராணுவ கட்டளை தளபதி ஒருவருடன் தொடர்பு கொண்டதன் பின் சுகுணா என்ற தமிழ் பெண் மீட்கப்பட்டார். ஆனால் ரிபாயா என்ற முஸ்லீம் பெண்ணை அவர்கள் பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்து விட்டனர்.

இந்த விடயத்தை வணபிதா சந்திரா மனித உரிமைகள் அமைப்புக்கள் மட்டத்திற்கு கொண்டு சென்றார். இதற்கு பழிவாங்குவதற்காகவே ஈ.பி.ஆர்.எல்.எவ் இயக்கம் வணபிதா சந்திரா அவர்களை படுகொலை செய்தது.

அதேபோன்றுதான் 1989ஆம் ஆண்டு பருத்தித்துறை பிரஜைகள் குழு தலைவராக இருந்த சிவானந்தசுந்தரம் அவர்களை ஈ.பி.ஆர்.எல்.எவ் இயக்கம் சுட்டுக்கொன்றது. யாழ்ப்பாணம் அரியாலையில் கூட்டம் ஒன்றில் உரையாற்றி விட்டு பருத்தித்துறை நோக்கி சென்ற போது அவரை ஈ.பி.ஆர்.எல்.எவ் இயக்கத்தினர் சுட்டுக்கொன்றனர்.

அக்காலப்பகுதியில் ஈ.பி.ஆர்.எல்.எவ் இயக்கத்தின் மனித உரிமை மீறல்களை அம்பலப்படுத்திய பிரஜைகள் குழுக்களின் தலைவர்கள் யாழ்ப்பாணத்திலும் மட்டக்களப்பிலும் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

வைகோ நீங்கள் நல்லவரா, கெட்டவரா ? தெரியல்லையேப்பா ?

விடுதலைப் புலிகளுக்கு கவசமாகத் திகழ்ந்தவர் ஜார்ஜ் பெர்ணான்டஸ்! நேரில் சென்று கண்கலங்கினார் வைகோ.

இந்தியாவின் முன்னாள் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்ணான்டஸ் மறைவுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இரங்கல் செய்தி விடுத்ததோடு நேரிலும் சென்று புகழ்வணக்கம் செலுத்தி குடும்பத்தினருக்கு ஆறுதலும் தெரிவித்தார் !

மாபெரும் புரட்சியாளர் ஜார்ஜ் பெர்ணான்டஸ் மறைவு நாட்டின் பேரிழப்பு!

வைகோ இரங்கல் !

இந்திய நாட்டின் ஜனநாயகத்தைக் காக்க, தொழிலாளர்களைக் காக்க தன் வாழ்வையே அர்ப்பணித்த மாபெரும் புரட்சியாளர்தான் ஜார்ஜ் பெர்ணான்டஸ் அவர்கள் ஆவார். இலட்சோப இலட்சம் தொழிலாளர்களின் நம்பிக்கையைப் பெற்றவராக மராட்டிய மாநிலத்தில் அவர்களின் உரிமையைக் காக்க போராடி வென்றார்.
அனைத்து நாடுகள் சோசலிச அமைப்பின் நிர்வாகியாகத் திகழ்ந்தார். இந்திய நாட்டின் வரலாற்றையே உலுக்கிய 1974 ரயில்வே தொழிலாளர் வேலை நிறுத்தத்தை தலைமை தாங்கி நடத்தினார். பலமுறை காவல்துறை அடக்குமுறைக்கு ஆளாகி தாக்கப்பட்டார். அப்படி ஒருமுறை அவர் தலையில் விழுந்த குண்டாந்தடி அடிதான் கடந்த ஒன்பது ஆண்டுகளாக அவர் நினைவில்லாமல் படுத்த படுக்கையாக துணைவியார் லைலா கபீர் அவர்களின் பராமரிப்பில் இருந்தார்.

1975 ஜனவரி 25 நள்ளிரவில் பிரகடனம் செய்யப்பட்ட நெருக்கடி நிலை சர்வாதிகார காலத்தில் தலைமறைவு புரட்சி வாழ்வு நடத்தினார். பின்னர் கல்கத்தாவில் கைது செய்யப்பட்டு, பரோடா டைனமிக் வழக்கில் குற்றவாளியாக காவல்துறை வழக்குப் போட்டது. கைகளுக்கும் கால்களுக்கும் விலங்கு போட்டுத்தான் அவரை நீதிமன்றத்துக்கு அழைத்து வந்தது. லோகநாயக் ஜெயப்பிரகாஷ் நாராயணன் அவர்களின் அடுத்த இடத்தில் இந்திய நாட்டின் புரட்சிகர நாயகனாகத் திகழ்ந்தார்.

1977 இல் நாடாளுமன்றத் தேர்தலில் பீகார் மாநிலத்தில் மிசாபூர் தொகுதியில் மூன்றரை இலட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். அமைச்சர் பதவியை ஏற்க மறுத்தார். பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் கட்டாயப்படுத்தியதால் அமைச்சரானார். நெருக்கடி நிலை காலத்தில் அவர் தலைமறைவு வாழ்க்கை நடத்தியபோது, 1975 இல் முதல்வராக இருந்த தி.மு.க. தலைவர் டாக்டர் கலைஞர் அவர்கள் பெர்ணான்டஸ் தலைமறைவாக இருப்பதற்கு பெரிதும் உதவினார். ஜார்ஜ் பெர்ணான்டஸ் இல்லம் திபெத் அகதிகளுக்கு புகழிடமாயிற்று.

1978 முதல் அவர் உயிர் நண்பனானேன். பின்னர் உடன் பிறவாத தம்பியாகவே என் மீது பாசம் கொண்டார். விடுதலைப் புலிகளுக்கும், தமிழ் ஈழத்துக்கும் அவர் செய்த உதவிகள் கொஞ்ச நஞ்சம் அல்ல. எண்ணில் அடங்காதவை.

பிரதமர் வாஜ்பாய் ஆட்சியில் ஈழத் தமிழர்களுக்கு, குறிப்பாக புலிகளுக்கு அவர் கவசமாகத் திகழ்ந்து செய்த உதவிகளை எண்ணும்போதே என் கண்களில் கண்ணீர் வடிகிறது. 2001 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் சென்னையில் என் இல்லத்தில் மூன்று நாள் தங்கியிருந்தார். நான் பொடா கைதியாக வேலூர் மத்திய சிறையில் இருந்தபோது, டெல்லியிலிருந்து வந்து மூன்றுமுறை என்னை சிறையில் சந்தித்தார்.

விடுதலைப் புலிகளுக்குச் சென்ற கப்பலை சர்வதேச கடலில் இந்தியக் கடற்படை தடுக்க முயன்றதை பெர்ணான்டஸ் கவனத்துக்குக் கொண்டுசென்ற உடன் அவரும், பிரதமர் வாஜ்பாய் அவர்களும் அதன்பின் அப்படி ஒரு சம்பவம் நடக்காமல் தடுத்தனர்.

அவர் உடல்நலம் குறைந்து, நினைவு இழந்தபின் கடந்த எட்டு ஆண்டுகளில் இருபது முறை அவர் வீட்டுக்குச் சென்று அவர் படுக்கைக்குப் பக்கத்திலேயே உட்கார்ந்து அழுதுகொண்டு இருப்பேன். அதனால்தான் அவரது துணைவியார் லைலா கபீர் பெர்ணான்டஸ் அவர்கள் இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகைக்கு கொடுத்து பேட்டியில், இந்தியாவிலேயே ஜார்ஜ் பெர்ணான்டசின் உயிர் நண்பர்களில் வைகோதான் முதன்மையானவர் எனக் கூறினார். அவர் என்னிடம் காட்டிய அன்பையும், பாசத்தையும் நினைக்கும்போதே நெஞ்சு வெடித்துவிடும் போல் இருக்கிறது.

ஈழத்தமிழர் இனப்படுகொலையைத் தடுக்க 2009 இல் இதே நாளான ஜனவரி 29 இல் வீரத் தியாகி முத்துக்குமார் தீக்குளித்து மடிந்த அதே நாளில் என் உடன்பிறவாத அண்ணன், நான் உயிரினும் மேலாக நேசித்த அண்ணன் ஜார்ஜ் பெர்ணான்டஸ் மறைந்தார் என்ற செய்தி அறிந்து நிலைகுலைந்துபோனேன். ஈழத்தமிழர் வரலாற்றிலும், இந்திய ஜனநாயக வரலாற்றிலும் அழியாத புகழ் ஒளியாக ஜார்ஜ் பெர்ணான்டஸ் நிலைத்து இருப்பார்.

அவரது துணைவியாருக்கும், புதல்வருக்கும், உற்றார் உறவினருக்கும், அவரை நேசிக்கும் இலட்சோப இலட்சம் தோழர்களுக்கும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், ஈழத் தமிழர்கள் சார்பில் கண்ணீர் அஞ்சலியை, வீரவணக்கத்தைத் தெரிவிக்கிறேன்.
என தெரிவித்தார்

முன்னாள் போராளி சேரன் மெல்லக் கொல்லும் மருந்தில் கொல்லப்பட்டார் ?

பிரித்தானியாவில் மரணமான விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் முக்கிய போராளியின் மரணத்தில் வெடிக்கும் சர்ச்சை?

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளி சேரன் 21.01.2019 அன்று பிரித்தானியாவில் சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளார் என பிரித்தானிய தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவரது இறுதி நிகழ்வுகள் Oxford இல் அமைந்துள்ள உலகத் தமிழர் வரலாற்று மைய வளாகத்தில் உள்ள மாவீரர் நினைவு மண்டபத்தில், 03.02.2019 காலை 6.00 மணிக்கு சமய கிரியைகளுடனும் காலை 8.00 மணிக்கு இறுதி வணக்க நிகழ்வுகளுடனும் நடைபெறவுள்ளதாக கூறும் ஏற்பாட்டாளர்கள் மேலும் குறிப்பிடுகையில்…

தகனக் கிரியைகள் அருகில் உள்ள Banbury – Oxford (OX16 1ST) Crematorium இல் காலை 11.00க்கு நடைபெறவுள்ளது.

இதனை தொடர்ந்து மதிய உணவு ஏற்பாடுகள் வரலாற்று மையத்தின் வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

போராட்டத்தில் அளப்பெரும் சாதனைகளுக்கு சொந்தக்காரன், விடுதலைப் புலிகளின் தலைவரின் பாராட்டையும், பரிசும் பெற்ற முன்னாள் தளபதி என கூறப்படுகிறது.

இவரின் மரணத்திலும் பலவகை மர்மங்கள் தொடர்வதாக கூறும் முன்னாள் போராளிகளிகளுடன் தடுப்பில் இருந்து வந்தவர் எனவும் வந்த பின்னர் பிரித்தானியாவில் சாதாரண வாழ்க்கை வாழ்ந்தவர் எனவும் கூறப்படுகிறது.

திடீர் என ஏற்பட்ட நெஞ்சு வலி காரணமாக பிரித்தானியாவில் உள்ள வைத்தியசாலைக்குச் சென்ற போது சரியான வகையில் முதலுதவி கொடுக்கத் தவறியதன் விளைவே இவரது மரணத்திற்கு காரணம் என கூறும் முன்னாள் போராளிகள் தடுப்பில் இருந்து வந்த பலர் தாயகத்திலும் இறந்துள்ளனர் அதன் நீட்சியாக வெளிநாடுகளிலும் பலர் இறக்கின்றனர் அப்படிப் பார்க்கையில் இலங்கை அரசு தடுப்பில் இருந்த போது ஏதாவது மெல்லக் கொல்லும் மருந்துகளை உடலினுள் ஏற்றி இருக்க வாய்ப்பு உள்ளதாக கூறுகின்றனர்.

காரணம் மிகவும் ஆரோக்கியமான நிலையில் தடுப்பிற்குச் சென்றவர்கள் சென்று வந்த பின் தீடீர் திடீர் என இறப்பது பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

இது தொடர்பில் பாராளுமன்றத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் கருத்து தெரிவித்து இருந்தமையும் குறிப்பிடத் தக்கது.

Up ↑