Search

Eelamaravar

Eelamaravar

Category

சித்திரை மாவீரர்கள்

மேஜர் பண்டிதர்(ரமணசர்மா)

மேஜர் பண்டிதர்
இராமலிங்கசர்மா ரமணசர்மா
புன்னாலைக்கட்டுவான் வடக்கு, யாழ்ப்பாணம்

நிலை: மேஜர்
இயக்கப் பெயர்: பண்டிதர்
இயற்பெயர்: இராமலிங்கசர்மா ரமணசர்மா
பால்: ஆண்
ஊர்: புன்னாலைக்கட்டுவான் வடக்கு, யாழ்ப்பாணம்
மாவட்டம்: யாழ்ப்பாணம்
வீரப்பிறப்பு: 02.07.1971
வீரச்சாவு: 04.04.1997
நிகழ்வு: யாழ்ப்பாணம் நாகர்கோவில் கடற்பரப்பில் ஏற்பட்ட படகு விபத்தில் வீரச்சாவு
துயிலுமில்லம்: விசுவமடு
மேலதிக விபரம்: விசுவமடு மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் நினைவுக்கல் நாட்டப்பட்டுள்ளது.

ltte veeravanakam 2

மேஜர்.பண்டிதர், லெப்.கேணல். அம்மாண்ணையின் கீழ் பணியாற்றிய ஒரு “வழங்கள் துறையை”சேர்ந்த போராளி. எப்போதும் அமைதியான, சிந்தனையுடன் காணப்படும் ஒரு சிறந்த போராளி.

சிறந்த நிர்வாகி என்பதே அவனுக்கு பொருத்தமாகும். தனக்கு கொடுக்கப்படும் பணியை எந்தவித கேள்வியும் கேட்க முடியாதளவுக்கு மிக கச்சிதமாக செய்துமுடிக்கும் ஆற்றல் கொண்ட போராளி.

1990 இறுதியில் போராட்டத்தில் இணைந்த பண்டிதர், பயிற்சிக்கு முன்னமே கோட்டை சண்டையில் பணியில் இருந்தான். அங்கு சண்டையில் இருக்கும் போராளிகளுக்கு உதவியாக பதுங்குகுழிகள் அமைத்தல், உணவுகள் கொண்டு சென்று கொடுத்தல் போன்ற மிகவும் கடுமையான பணியை செய்தான்.

உண்மையில் போராளிகளை விட மிகவும் அபாயகரமான பணியை, பயிற்சி எடுக்காத போராளிகள் அன்று செய்துகொண்டிருந்தனர். கோட்டையில் இருந்த எதிரி, நிலமட்டத்தில் இருந்து உயரத்தில் இருந்தமையால், அவனுக்கு போராளிகளை குறிபாத்து சுடுவதற்கு(சினைப்பர்) இலகுவாக இருக்கும்.

எமது போட்டத்தில் அன்றைய நேரத்தில், போராளிகள் எதிரியால் அதிகம் குறிவைக்கப்பட்டது கோட்டையில் தான். அன்றைய நேரத்தில் இப்படியான பணிகளில் தாக்குப்பிடிக்கும் போராளிகளை தான் பயிற்சிக்கு அனுப்பப்படுவார்கள்.

அன்றைய நேரத்தில் இது ஒரு உளவுரண் சோதனைக்காலமாகவே இது பார்க்கப்பட்டது. இதை எல்லாம் தாண்டி கோட்டை புலிகளால் வெற்றி கொள்ளப்பட்டதும், பண்டிதர் பயிற்சிக்காக மணியம்தோட்டத்தில் அமைந்திருந்த குட்டி முகாமுக்கு அனுப்பப்பட்டான்.

அங்கு குட்டி 3வது அணியில் பயிற்சி எடுத்துக்கொண்டிருந்த போது, 1991.தை இறுதி என்று நினைக்கின்றேன், பயிற்சி முடிவதற்கு இன்னும் சிறிது நாட்களே இருந்தது. அப்போது இரண்டாம் கட்ட ஈழப்போர் ஆரம்பித்த நேரம் அது.

பல புதிய நிர்வாகங்கள் தோற்றுவிக்கப்பட்டு, கட்டமைப்புகள் வேகம் பெற்றிருந்த நேரம். எமது துறைக்கும், வெளியக வேலைக்கு புதிய போராளிகளை இணைக்கும் நோக்கில், A/L வரை படித்துவிட்டு போராட்டத்தில் இணைந்த சில போராளிகளின் தரவுகளுடன், அவர்களின் செயல் வீச்சை கணிக்கும் நோக்கில் குட்டி முகாமுக்கு சூட்டண்ணையுடன் சென்றிருந்தேன்.

அங்கு வைத்து தான் முதல் முதலில் பண்டிதரை சந்தித்தேன். பண்டிதருடன் உரையாடியதில் திருப்தி அடைந்து, அவனையும் தெரிவு செய்திருந்தோம். அடுத்த போராளியுடன் உரையாடிக்கொண்டிருந்த போது மதிய உணவுக்கான விசில் அடிக்கப்பட்டதும் போராளிகள் உணவை உண்பதற்காக சென்றிருந்தனர்.

நாங்களும் அங்கேயே உணவருந்தும் நோக்கில், சமையல் கூடத்தை நோக்கி சென்றோம். அன்று மாட்டு இறைச்சி சமைக்கப்பட்டிருந்தது. நாங்கள் எமக்கான உணவை எடுத்துக்கொண்டு வரும் போது, போராளிகளுடன் பண்டிதர் உணவருந்துவதை கண்டேன்.

அவனது விபரங்களை வைத்து, அவன் ஒரு குருக்களின் மகன் என்பதை அறிவேன். அதனால் அவர்கள் புலால்(மாமிசம்) உணவுகளை உண்பதில்லை என்று தெரியும். ஆனால் அப்படி புதிதாக வருபவர்கள் கால ஓட்டத்தில் புலால் உண்பதற்கு பழகிவிடுவார்கள். அதனால் பண்டிதரும் அதற்கு பழக்கப்பட்டிருப்பான் என்றே எண்ணினோம்.

ஆனால் அன்று அவன் சீனியுடன் சோற்றை உண்பதை கண்டேன். உடனே அவனை கூப்பிட்டு இது பற்றி கேட்டேன். தன்னால் புலால் உணவை உண்ண முடியவில்லை என்றான். இரண்டு மாதங்கள் கோட்டையிலும், மூன்று மாதங்கள் பயிற்சி முகாமிலும் என ஐந்து மாதங்களுக்கு மேல் சீனியுடனேயே உணவருந்துவதை கூறினான்.

அப்போது அவன் தன்னை போராளியாக்குவதற்கு எதையும் தாங்கும் மனநிலையில் இருப்பதை கண்டு வியந்தேன். அவனிடமிருந்து விடை பெற்று சென்றுவிட்டேன். ஆனால் அவனை எமது துறைக்குள் அன்று உள்வாங்க முடியாது போயிருந்தது.

காரணம் அந்த பணியின் நிமித்தம் நீண்ட தூரம் காடுகளின் ஊடாக , பல நாட்கள் தொடர்ந்து நடக்க வேண்டி வரும். சில வேளைகளில் நாம் கணிப்பிடும் நாட்களுக்கு முன் எமது இடத்தை சென்றடைய முடியாது போனால், கையிருப்பு உணவு முடிந்து, உணவுத்தட்டுப்பாடும் ஏற்படும், சிலவேளை காடு மாறிப்போனாலும்(திசைமாறி) இந்த பிரச்சனையை சந்திக்க வேண்டி வரும்.

அப்படியான நேரத்தில், நாம் போகும் பாதைகளில் கிடைக்கும் உணவை, அது பாம்பாகவோ அல்லது நீர் நிலைகளில் திரியும் சிறிய ஆமைகளோ எதுவாகினும் உண்டு உயிர்வாழும் மனநிலையும் வேண்டும். அது பண்டிதரிடம் இல்லை என்பதால் அன்று அவன் அந்த பணிக்கு தவிர்க்கப்பட்டான்.

எமது போராட்டத்தில் மேஜர்.பண்டிதர் தொடங்கி பிரிகேடியர் விதுஷா போன்ற பிராமண வகுப்பை சேர்ந்த போராளிகளும், ஆரம்ப காலத் தளபதி லெப்.சீலண்ணை(சாள்ஸ் அன்ரனி) தொடங்கி, சொர்ணமண்ணை போன்ற பல கிருத்தவ தளபதிகள் உட்பட, ஆரம்ப காலம் முதல் முள்ளிவாய்க்கால் வரை எல்லா மதத்தை சேர்ந்த போராளிகளும், எல்லா சாதியத்தை சேர்ந்த போராளிகளாலுமே, தமிழரின் போராட்ட தேர் கட்டி இழுக்கப்பட்டது.

இதை நான் பதிவு செய்வதற்கு முக்கிய காரணம் சமீபகாலமாக முகநூலில் சாதியம் பற்றியும், மதங்கள் பற்றியும் கருத்து மோதல் என்னும் பெயரில் நாற்றமெடுக்கும் சகதியில் சிலர் புரண்டு உறுள்வதை காண்கின்றேன்.

தமிழன் பழம் பெரும் பாரம்பரியத்தை கொண்டபோதும், எமக்கென்று ஒரு நாடு இல்லாது, பின்னால் தோன்றிய இனங்களிடம் கூட அடிமைப்பட்டு, எதிலியளாக உலகமெங்கும் சுற்றி திரிவதற்கு முக்கிய காரணம், தமிழன் சாதி, மதம் எனப் பிரிந்திருப்பதே ஆகும்.

இதை சில கட்டமைப்புகள் மறைமுகமாக ஊக்குவிக்கின்றன. இது ஒரு பிரித்து ஆளும் சதியே.! ஆனபோதும் இளைய சமூகம் இதிலிருந்து வெளிவர முயற்சித்த போதும், “சில சாக்கடைகள்” அவர்களையும் அதனுள் மீண்டும் இழுக்கின்றனர்.

2009 வரை மறந்திருந்த அல்லது கதைக்கப் பயப்பட்ட ஒரு அழுக்கை மீண்டும் ஈழத்தமிழரில் சிலர் தங்கள் உடலில் பூச வெளிக்கிடுவதை காண்கின்றேன்.

எமது போராட்டத்தில் சைவர், கிருத்தவர், முஸ்லிம் என எல்லா மதத்தினரும், சாதாரண போராளி தொடங்கி உயர் தளபதிகள் வரை வீரச்சாவடைந்துளார்கள்.

அதே போல சாதிகளால் பிரிந்திருந்த தமிழர்களை, தலைவர் “தமிழர்களாக” ஒன்று திரட்டினார். அந்த “தமிழர் என்ற ஒற்றுமையே” எமது போராட்டம் பாரிய இராணுவ சாதனைகளை அன்று படைக்க முக்கிய காரணமாக இருந்தது.

இன்றும் தமிழன், தலைவர் காட்டிய வழியில் பயணிக்க வேண்டிய காலம். நீங்கள் மீண்டும் சாதி,மதம் என்று பிரிந்தால், அது எதிரிக்கே வாய்ப்பாக அமையும். தமிழர் என்னும் அடையாளத்துடன் தான் தமிழன் சர்வதேச அரங்கில் தலைநிமிர்ந்தான்.

மதம் என்பது ஒருவரது நம்பிக்கை. அதற்காக அவர் தமிழர் இல்லாது போவார்களா?

தயவு செய்து ஏற்றத்தாழ்வுகளை களைந்து தமிழராய் ஒன்றிணையுங்கள். குறிப்பாக தமிழ்நாட்டு இளைஞர்கள், யுவதிகள் சாதி,மதம் களைந்து தமிழராய் ஒன்றிணையுங்கள். அதுவே எமது பலம்.!

தலைவர் எந்த சந்தர்ப்பத்திலும் போராளிகளின் மத நம்பிக்கைகளில் தலையிட்டதில்லை.!
அதுவே அவரது வெற்றிக்கு காரணம்.!

கிறிஸ்மசுக்கு கேக்கும், சிறப்பு உணவும் அது போலவே பொங்கல் போன்ற விசேட தினங்களிலும் விசேட உணவு பாரபட்சம் இல்லாது போராளிகளுக்கு வழங்கப்பட்டது.

தலைவர் எந்த மதத்துக்கோ அல்லது சாதி சார்ந்தோ யாருக்கும் பொறுப்புகளை வழங்கியது கிடையாது. புலிகலமைப்பில் திறமைக்கே முதலிடம். இது தான் தலைவரின் வெற்றியின் ரகசியம். அவர் எல்லோரையும் தமிழராகவே பார்த்தார். இதை தான் இளைய சமுதாயம் அண்ணையிடமிருந்து கற்கவேண்டிய முதல் பாடம்.

மீண்டும் பண்டிதரிடம் வருகின்றேன்.
1990இல் பண்டிதரை சந்தித்த பின், மீண்டும் இறுதியாக சந்தித்தது 1997இல் யாழில் நிக்கும் போது தற்செயலாகவே சந்தித்தேன்.

அன்றைய நேரத்தில் யாழ்ப்பாணம் எதிரியால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த நேரம். அந்த நேரத்தில் பல பொருட்களுக்கு சிங்கள அரசு தடை செய்திருந்தமையால் அந்த பொருட்களை யாழில் இருந்து வன்னிக்கு, போராளிகள் கடத்துவது வழமை. அந்த பணிக்காகவே பண்டிதரும் யாழ் வந்திருந்தான்.

அந்த நேரத்தில் நான் யாழில் இருந்து வன்னி செல்வதற்காக வடமராட்சி கிழக்கில், எமது படகொன்றிற்காக காத்திருந்த போது,யாழில் கொள்வனவு செய்த பொருட்களுடன் எங்களிடத்திற்கு வந்து சேர்ந்தான் பண்டிதர்.

என்னை கண்டதும் நட்புடன் உரையாட ஆரம்பித்தான். நீண்ட நேர உரையாடலின் பின் ஏன் தன்னை எங்கள் பிரிவில் அன்று உள்வாங்கவில்லை என்ற கேள்வியை கேட்டபோது, நான் காரணத்தை சொன்னேன்.!

பலமாக சிரித்தபின் கூறினான், வரும் போது “கொத்து ரொட்டி” தான் சாப்பிட்டு வந்தேன் என்று கூறிவிட்டு, வன்னியில் சந்திப்போம் என்றபடி பொருட்கள் ஏற்றப்பட்ட படகில் வன்னி நோக்கி பயணமானான்.

அடுத்தநாள் தான் தெரியும் படகில் ஏற்றபட்ட பொருட்களின் சுமை கூடியமையால், படகு கவிழ்ந்து கடலில் மூழ்கியதால், தண்ணீரில் விழுந்த பண்டிதர் மேலே வரவில்லையாம்.

ஆம் பண்டிதருக்கு நீச்சல் தெரியாமையால் அந்த விபத்தில் மேஜர்.பண்டிதர் எம்மை விட்டு பிரிந்தான். மிகவும் நேர்த்தியான நிர்வாகி, சிறந்த போராளியை அன்று நாம் இழந்தோம்.

அன்பு நண்பர்களே நான் மீண்டும் வலியுறுத்துவது, தயவு செய்து சாதி, மதங்களை கடந்து தமிழராய் ஒன்றிணையுங்கள் அதுவே எமது பலம். எமது தேசத்தில் கல்லறைகளில் எந்த பிரிவோ, பாகுபாடோ இல்லாது ஒன்றாய் உறங்கும் எம் வீரர்களை பாருங்கள்.!

எமது தமிழ் இளையவரே.! எனது கையை, பல போராளிகளின் இரத்தம் நனைத்துள்ளது.
எல்லோருடைய இரத்தமும் சிகப்பாகவே இருந்தது. அதில் நான் எந்த வேறுபாட்டையும் கண்டதில்லை.

நாங்கள் ஒரு கோப்பையில் உண்டு ஒரு பாயில் உறங்கி ஒன்றாகவே எந்த பேதமும் இல்லாது வளர்ந்தோம். அது மிகவும் இனிமையான நாட்கள். அதில் அதிகமானோர் இன்று உயிருடன் இல்லாத போதும், அவர்கள் நினைவுகள் இன்றுபோல் நெஞ்சில் நிழலாடுகின்றது.

தயவு செய்து சாதி,மதம் பற்றி பெருமை பேசுபவர்களை ஒதுக்கி வையுங்கள். தலைவர்,மற்றும் போராளிகள் எல்லோரும், எல்லா மதத்தலைவர்களையும் கெளரவத்துடனேயே அணுகினர். அதுவும் தலைவரின் சிறந்த பண்புகளில் ஒன்று. இதை எப்போதும் மனதில் வைத்து பயணியுங்கள்.

போராட்ட காலத்து சில புகைப்படங்களை இணைத்துள்ளேன். அந்த புகைப்படங்கள் உங்களுக்கு போராளிகளைப் பற்றியும், அவர்களின் தியாகத்தையும் ஒற்றுமையும் கூறி நிக்கின்றன..!
மனச்சுமையுடன் துரோணர்.!!

லெப் கேணல் மதன்

Lt Col Mathan

சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் தளபதி.

வவுனியா மாவட்டம் கூழாங்குளத்தில் 07-06-1972 ல் பிறந்த துரைசாமி சுந்தரலிங்கம் , 1990 ம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்தான் . மதன் என்ற இளம் போராளியாக விளைபூமி – 06 ல் அடிப்படைப் பயிற்சிகளை பெற்று வவுனியா மாவட்ட படையணியில் இணைக்கப்பட்டான் . வேவுப் போராளியாக தன் களச் செயற்பாடுகளை துவங்கிய மதன் , தாக்குதல் அணிகளுக்கு வழிகாட்டியாகவும் செயற்பட்டான் . மேலும் கனரக ஆயுதங்களில் ஆர்வமுடன் பயிற்சி , பல தாக்குதல்களில் களமாடிய மதன் 1-9 படையணியில் இணைக்கப்பட்டான் .

1-9 படையணியில் வேவுப் புலியாகவும் கனரக ஆயுதம் ( ஜி. பி. எம். ) சூட்டாளனாகவும் மதனுடைய களச் செயற்பாடுகள் வன்னிக் காடுகளில் விரிவடைந்தன .யாழ் குடா நாட்டில் பல இராணுவ முகாம்கள் மீதான வேவு நடவடிக்கைகளில் தீவிரமாக செயல்பட்டான் . 1995 ம் ஆண்டு வன்னி மாவட்ட படையணியில் வேவு அணி லீடராக இணைக்கப்பட்ட மதன் தமிழீழத்தின் பல பகுதிகளிலும் வேவுச் செயற்பாடுகளில் திறமுடன் செயற்பட்டான் . 1996 ம் ஆண்டு சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியில் வேவு அணிப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார்.

இளம் போராளிகளை வேவு நடவடிக்கைகளில் பயிற்றுவிப்பதில் மதன் வல்லவராயிருந்தார் . அச்சமறியா வேவுப் புலிகளான வீரமணி , கோபித் , தென்னரசன் , இராசசிங்கம் மதுரன் முதலான இளம் அணித் தலைவர்களை வேவு நடவடிக்கைகளில் திறமுடன் நடத்தினார். படையணியின் முதுநிலை அணித் தலைவன் ராகவன் மதனுடைய இணைபிரியாத தோழனாயிருந்து மதனிடம் வேவுப் பயிற்சி பெற்றார். பல தாக்குதல்களில் மதன் ராகவனுடன் இணைந்து கனரக ஆயுத சூட்டாளனாக களமாடினார்.

1996 ம் ஆண்டு ஆனையிறவு பெரும் தளத்தில் மதன் வேவு நடவடிக்கைகளில் ஈடுபட்டு இருந்த போது எதிரியின் கண்ணிவெடியில் சிக்கி படுகாயமுற்ற, ஒரு காலை இழந்தார். சில மாதங்கள் சிகிச்சைக்கு பின் , உடல் நலன் தேறி செயற்கைக் காலுடன் மீண்டும் களமுனைக்கு திரும்பினார்.

1997 ல் ஜெயசிக்குறு முறியடிப்புச் சமரில் மதன் கள நிர்வாகப் பொறுப்பாளராக ஓய்வின்றி செயற்பட்டார். வெடிபொருள் வழங்கல், உணவு வழங்கல், வாகனம் முதலான அனைத்தையும் மதன் தனியொரு பொறுப்பாளராக இருந்து நிர்வகித்தார். ஜெயசிக்குறு நடவடிக்கை தடுத்து நிறுத்தப்பட்ட பின்பு, படையணியின் கண்ணன் நிர்வாகத் தளத்தில் மதன் நிர்வாகப் பொறுப்பாளராக கடமையேற்று நடத்தினார். இக் காலத்தில் சேந்தன், தமிழரசன் வீரன், எழிலன், இரவி, தமிழன், குமுதன் முதலான இளம் அணித் தலைவர்களை நிர்வாகச் செயற்பாடுகளில் பயிற்றுவித்து திறமுடன் வழிநடத்தினார்.

1998 ல் ஓயாத அலைகள் -2 சமரில் மதன் வெடிபொருள் வழங்கல் பொறுப்பாளராக திறனுடன் செயற்பட்டார். கிளிநொச்சி மீட்புக்கு பிறகு தொடர்ந்து நிர்வாகப் பொறுப்பாளராக கடமையாற்றிய மதன், 1999 ல் ராகவன் அவர்கள் சிறப்புத் தளபதியாக பொறுப்பேற்ற போது , கனரக அணிகள் பொறுப்பாளராக மீண்டும் களமுனைக்கு திரும்பினார். கனரக ஆயுத அணிகளை சிறப்புப் பயிற்சிகளில் ஈடுபடுத்திய மதன் , போராளிகளின் செயற்திறன்களை வளர்த்தெடுப்பதில் அரும்பாடுபட்டார் . சுட்டதீவு பின்தளத்தில் தனது கட்டளை மையத்தை அமைத்திருந்த மதன், சுட்டதீவு பரந்தன் ஊரியான் முன்னரஙகில் எதிரி மேற்கொண்ட பாரிய முன்னேற்றங்களை தடுத்து நிறுத்திய கடும் சண்டைகளில் மோட்டார் அணிகள் ஒருங்கிணைப்பாளராக திறமுடன் களமாடினார்.

ஓயாத அலைகள்-3 சமரில் மதன் ஒட்டுசுட்டான் ,அம்பகாமம் களத்தில் வெடிபொருள் வழங்கல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டார். இச் சமரில் ராகவன் அவர்களின் இழப்பால் ஆறாத துயரடைந்த மதன் சிறிதும் மனந்தளராமல் தனது தோழனின் இலட்சியப் பயணத்தில் ஓய்வின்றி களமாடினார். ஓமந்தை வரையிலான சமர்களில் மிகவும் திறமாக கள நிர்வாகத்தை நடத்திய மதன் , பரந்தன் மீட்புச் சமரில் சிறப்புத் தளபதி இராசசிங்கம் அவர்களுடன் நின்று வெடிபொருள் வழங்கல் பொறுப்பாளராக தொடர்ந்து கடமையாற்றினார்.lt col mathan

2000 ம் ஆண்டில் பூநகரி பகுதியில் நிலையமைத்திருந்த மதன் எமது வேவு அணிகளை தனங்கிளப்பு ,அரியாலை பகுதிகளில் நடத்தினார். இலக்கியன் , பல்லவன், மதுரன் ,மோகன் முதலான அணித் தலைவர்களை தீவிரமான வேவுச் செயற்பாடுகளில் ஈடுபடுத்தினார். குடாரப்பு இத்தாவில் தரையிறக்கச் சமருக்கான பயிற்சித் தளத்தில் படையணியின் கள நிர்வாகப் பொறுப்பாளராக மதன் கடமையாற்றினார்.

இத்தாவில் தரையிரக்கச் சமரில் மதன் தொடர்ந்து வெடிபொருள் வழங்கல் களநிர்வாகப் பொறுப்பாளராக தீவிரமாக செயற்பட்டார் . கட்டளைத் தளபதி பால்ராஜ் அவர்களுக்கு அருகில் நிலையமைத்த மதன், சிறப்புத் தளபதி இராசசிங்கம் துணைத் தளபதி நேசன் ஆகியோருடன் இணைந்து ஓய்வொழிச்சலின்றி செயற்பட்டார். மதுரன் , பாவலன் , மாறன், ஆரூரன் முதலான அணித்தலைவர்கள் மதனுடன் நின்று ஓய்வின்றி கடமையாற்றினர் . பெட்டிச் சண்டைகளில் வெடிபொருள் வழங்கலை திறமுடன் செயற்படுத்திய மதன், கனரக மோட்டார்களை ஒருங்கிணைத்தும் களமாடினார் . 2000 ம் ஆண்டு 4 ம் மாதம் 10 ம் நாள் எதிரி மேற்கொண்ட பாரிய முன்னேற்றங்களுக்கு எதிரான பெரும் சமரில் தீரத்துடன் செயற்பட்ட மதன் , தொடர்ந்து 11-04-2000 அன்று எதிரியின் செறிவான எறிகணை வீச்சுக்களுக்கு மத்தியில் எமது மோட்டார் நிலைக்கு எறிகணைகளை உழவூர்தியில் ஏற்றிக் கொண்டு சென்றபோது , எதிரியின் எறிகணைகள் உழவூர்தியின் மீது வீழ்ந்து வெடித்ததில் படுகாயமடைந்த மதன் சயனைட் அருந்தி வீரச்சாவைத் தழுவிக் கொண்டார். அன்றைய சமரில் போராளிகள பெற்ற வெற்றியில் மதனின் பங்களிப்பு அளப்பரியதாக இருந்தது.

லெப். கேணல். மதன் அவர்களின் உடன்பிறந்த தமையன் நளன் அவர்களும் எமது இயக்கத்தில் இணைந்து திறமுடன் களமாடிய போராளியாக விளங்கினார். இம்ரான் பாண்டியன் படையணியில் செயற்பட்டு வந்த நளன் , வேவு நடவடிக்கைகளிலும் நிர்வாகப் பொறுப்பாளராகவும் திறமுடன கடமையாற்றினார். இறுதிச் சமரில் இம்ரான் பாண்டியன் படையணியின் தளபதிகளுள் ஒருவராக வீரத்துடன் களமாடிய நளன் 04-04-2009 அன்று வீரச்சாவைத் தழுவிக் கொண்டார். தமிழீழ தாயக விடுதலைக்காக இரு மாவீரர்களை ஈந்த குடும்பமாக மதன் அவர்களின் குடும்பம் சிறப்பு பெற்றது.

லெப். கேணல். மதன் அவர்கள் எமது தேசியத் தலைவர் மீதும் தமிழ் மக்கள் மீதும் ஆழ்ந்த பற்றும் அன்பும் கொண்ட துடிப்புமிக்க போராளியாக விளங்கினார். நெடிதுயர்ந்த தோற்றத்தில் கனிவுடனும் எளிமையுடனும் திகழ்ந்த மதன், தனது பொறுப்புகளை நிறைவேற்றும் பொழுது கண்டிப்பும் நேர்த்தியும் சமரசத்திற்கு இடமற்ற உறுதியும் கொண்ட போராளியாக விளங்கினார். இவருடைய சிறப்பான செயற்பாடுகளுக்காக தலைவரிடமும் தளபதிகளிடமும் பாரட்டுகளைப் பெற்றார். படையணியின் மீது ஆழ்ந்த பற்று கொண்ட மதன் ஒரு காலை இழந்தும் சிறிதும் மனம் தளராமல் தொடர்ந்து களத்தில் செயற்பட்ட முன்னுதாரணமான தளபதியாக மதன் விளங்கினார். லெப். கேணல். மதன் அவர்களின் பொறுப்புணர்வும் வீரமும் ஈகமும் தமிழ் மக்களின் மனதில் என்றும் நீங்காது நிறைந்திருக்கும்.

இதே நாளில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட அனைத்து மாவீரர்களையும் இந்நாளில் நினைவு கூர்கின்றோம்.

புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்

பெ . தமிழின்பன்.

———-

பொறுப்பு: சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் தளபதி
நிலை: லெப்.கேணல்
இயக்கப் பெயர்: மதன் (அரசன்)
இயற்பெயர்: துரைசாமி சுந்தரலிங்கம்
பால்: ஆண்
ஊர்: கூழாங்குளம், வவுன்யா
மாவட்டம்: வவுனியா
வீரப்பிறப்பு: 07.06.1972
வீரச்சாவு: 11.04.2000
நிகழ்வு: கிளிநொச்சி முகமாலை பகுதியில் “ஓயாத அலைகள் – 03“ நடவடிக்கையின்போது வீரச்சாவு
துயிலுமில்லம்: ஆலங்குளம்
மேலதிக விபரம்: ஆலங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.

லெப் கேணல் இளவாணன் 7ஆம் ஆண்டு வீரவணக்க நாள்

தரும்புரத்தில் ஓர் இந்திரன் அவன் தான் எங்கள் இளவாணன் அண்ணா !-7ஆம் ஆண்டு நினைவு நாள்

Lt Col Ilavananசோழன் வாணிபத்தில் வலம் வந்து மருதம் வாணிபத்தை ஆண்ட இளவரசனும் இவனே தான் ஒரு பணிப்பாளர் என்ற அந்தஷ்த்தை கொஞ்சமும் காட்டி கொடுக்காமல் ஒரு சாதாரண பணியாளன் போல் எம்மை அன்பாக ஆளுமையாக வழிநடத்தும் பாங்கு மிகப்பெரும் சாதனையாக இருந்தது இந்த வீரனிடம்.

மல்லாவியில் இருந்து பணி நிமிர்த்தம் கிளிநொச்சிக்கு போய் விட்டால் உடனும் என்னை தனது அலுவலகத்திற்கு வரும் படி அழைத்து வீட்டில் உள்ள ஆக்கள் தொடக்கம் ஒவ்வொருவரும் எப்படி உள்ளனர் என விசாரித்து சாப்பாட்டுக்கான ஒழுங்குகள் எல்லாம் செய்து தந்து அக்கறையுடன் செயல்படும் எங்கள் வீட்டு உடன் பிறவா சகோதரனும் இவனே..

சில காலங்கள் என்னை (வோக்கி) இயக்கும் பணியும் அத்தோடு உள்ளக்கணக்காய்வு பணிக்கும் நியமித்தது இருந்தார். அனைத்து போராளிகளுக்குமான வழங்கல் எமது மருதம் வாணிபத்தினால் எல்லா இடங்களிலும் வழங்கப்பட்டது இதன் போது படிவங்களுக்கு கூடி குறைத்து மரக்கறிகள்,புலால் எமது பணியாளர்கள் வழங்கினால் உடனும் போராளிகள் இளவாணன் அண்ணாவை தொடர்பு கொண்டு முறையிட என் அலை வரிசை கதறும்(சாளி வன்/மருதம்)என்று அவருடைய கண்டிப்பு நிறைந்த குரலில் ஆனால் நிதானமாக சொல்லுவார் என்ன பிரச்சனை எண்டாலும் பார்த்து நிவர்த்தி செய்யுங்கள் என்று..

என் உயிரை காப்பாற்றிய உத்தமனும் இவரே 2003ஆம் ஆண்டு கிளிநொச்சி பணிமனைக்கு உள்ளக கணக்காய்வு ஒன்றுகூடலுக்கு சென்றிருந்தபோது சக தோழிகளுடன் தூங்கி கொண்டிருந்தேன்(இரத்தப்புடையன்) பாம்பு என்னை பதம் பார்த்தது உடனும் பொன்னம்பலம் மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அழிக்கப்பட்ட போதும் நான் தப்புவது கடினம் என வைத்தியர்கள் கூறினார்கள்.காலையில் இதை அறிந்து கொண்ட இளவாணன் அண்ணா உடனும் வந்து எங்கிருந்தாவது எவ்வளவு செலவானாலும் மருந்து எடுத்து பிள்ளையை காப்பாற்றுங்கள் தான் வீட்டுக்காரர்களுக்கு பதில் சொல்ல முடியாது என்று திடமாக கூறி ஏனைய மருத்துவர்களிடம் தொடர்பு கொண்டு உரிய சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்து என்னை காப்பாற்றினார்.அந்த காலப்பகுதியில் நிறைய பணம் செலவாகி இருந்தது மருத்துவ சிகிச்சைக்காக.

தெரியாத அறியாத எந்த ஒரு மனிதனாக இருந்தாலும் அவர்களுடைய தேவைகளை கேட்டு அறிந்து பூர்த்தி செய்து வைப்பதில் இளவாணன் அண்ணாவை போல் வேறு யாரும் இருந்திருக்க வாய்ப்பில்லை.

மருதம் வாணிபம் எங்கள் வீடு ஒவ்வொரு போராளிகளின் தேவைக்கேற்ப இறைச்சிக்காக கால்நடைகள் வளர்க்கப்பட்டன அதில் இருந்து பால் வினியோகமும் போராளிகளுக்கு வழங்க ஏற்பாடு செய்து பெற்ற தாய் போல் ஒவ்வொரு போராளிகளின் உணவு விடயத்திலும் அக்கறை காட்டிய உத்தமன்.

வேறு ஒரு பணிப்பாளருக்கு கீழ் பணியாற்றுவது என்றால் பல தரப்பட்ட கட்டுப்பாடுகளும் விதி முறைகளும் இருக்கும் ஆனால் இளவாணன் அண்ணா அப்படி அல்ல நாம் ஏதும் தவறு செய்து விட்டால் அறிக்கை எழுதி தாங்கோ என கேக்க மாட்டார் நேர கூப்பிட்டு காரணத்தை தெரிந்து கொண்டு அறிவுரை கூறி அனுப்புவார்.இன்னாளில் எங்கள் (வாகைசூடி) அண்ணாவை மறந்திட முடியாது மருதம் வாணிபத்தின் வலக்கை.இவனை பொறுப்பாளர் என்று ஒரு நாள் கூட நான் அழைத்ததோ அந்த ஸ்தானத்தில் பார்த்ததோ இல்லை ஏனெனில் அடிபட்டு ஒரு கோப்பையில் சாப்பிட்ட எங்கள் வீட்டு பிள்ளை.நான் பிழை செய்தால் சக நண்பர்கள் மத்தியில் வைத்து பேச மாட்டார் தனது அலுவலகத்துக்கு வா என கூப்பிட்டு தான் இது பிழை அது பிழை என கூறுவதோடு வாயாடி என்ற பெயரையும் எனக்கு சூட்டிய வாகைசூடி அண்ணாவே இவன் தான்.இன்று விண்ணிலா? மண்ணிலா? நான் அறியேன் எங்கிருந்தாலும் நீ உயிரோடு வருவாய் என்ற நம்பிக்கையோடு காத்து கிடக்கிறோம் அண்ணா.

ஒவ்வொரு போராளிகளின் ரத்தத்திலும் இளவாணன் அண்ணாவின் பெயர் பதிந்து இருக்கும்.இயற்கை விரும்பி ஆடம்பரம் இல்லாத எழில் நிறைந்த ஒரு அண்ணன்.கறுப்பு மோட்டசைக்கிலும் ஒரு வோக்கியும் எப்போதுமே அவரோடு இருக்கும்.வீதிகளில் தெரிந்தவர்களை கண்டால் புன்னகை நிறைந்த ஒரு தலை ஆட்டலோடு விலகி செல்லுவான்.இறுதி யுத்தத்தின் போதும் கூட மக்களுக்கும் போராளி குடும்பங்கள்,மாவீரர்குடும்பங்களுக்கும் பால் மா தொடக்கம் பல்பொருட்கள் வழங்கிய ஒரு தூய உள்ளம் படைத்த எங்கள் இளவாணன் அண்ணாவை இழந்து நிக்கின்றோம்.அன்பான மனைவி,இரு குழந்தைகளென இல்லறம் கண்டவனை இயமன் இழுத்து சென்று விட்டான்.

இன்னாளில்(அண்ணிக்கும்,பிள்ளைச்செல்வங்களுக்கும்)ஆறுதலை மன உறுதியை தெரிவித்து கொள்கிறேன்.

தருமபுரத்தில் பிறந்ததலோ என்னவோ ஏழை மக்களின் துயரம் போக்கிய ஈழத்து மைந்தனுக்கு ஒரு கணம் என் நினைவுகளை ஒடுக்கியே உங்கள் நினைவுகளை சுமந்து மருதம் வாணிபம் சார்பாக கண்ணீர் பூக்களை காணிக்கை ஆக்குகின்றேன்

மார்ஷல் வன்னி

வீரவணக்கங்கள்

Lt Col Asok07ம் ஆண்டு நினைவு நாள் 02.04.2016
லெப்.கேணல் அசோக்
அழகையா புலேந்திரன்
அம்பாறை
வீரச்சாவு – 02.04.2009

04.04.2004 அன்று சுகயீனம் காரணமாக சாவடைந்த நிதர்சன நிறுவனத்தின் இலத்திரனியல் தொழிநுட்பவியலாளர் மேஜர் செல்வமதி நினைவாக.

Maj Selvamathi12ம் ஆண்டு நினைவு நாள் 04.04.2016
மேஜர் செல்வமதி
குமாரவேலு சாந்தினி
திக்கம், பருத்தித்துறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 04.04.20042nd Lt Neyachudar

16ம் ஆண்டு நினைவு நாள் 04.04.2016
2ம் லெப்டினன்ட் நேயச்சுடர்
அரியம் செந்தூரன்
வசந்தபுரம், இளவாலை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 04.04.2000Veeravengai Kalaiyoli

16ம் ஆண்டு நினைவு நாள் 03.04.2016
வீரவேங்கை கலையொளி
கனகரத்தினம் சசிமலர்
ஆலங்கேணி, பூநகரி, கிளிநொச்சி
வீரச்சாவு: 03.04.2000

Lt Vicna

16ம் ஆண்டு நினைவு நாள் 02.04.2016
எல்லைப்படை லெப்டினன்ட் விக்னா
தர்மலிங்கம் விக்னராசா
மாயக்கை, பருத்தித்துறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 02.04.2000

Lt Col Thirumaravan
18.03.2009 லெப்.கேணல் திருமறவன் அண்ணாவின் 7ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்
ltte veeravanakam

மேஜர் றோய் / கௌதமன்

veeravanakam( கந்தசாமி நிர்மலராஜ் )
சிவபுரி , திருக்கோணமலை.

சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் மூத்த அணித் தலைவனாகிய றோய் 1991 ம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்தான் . திருமலை மாவட்ட படையணியின் தாக்குதல் அணியில் ஒரு போராளியாக தன் களச் செயற்பாடுகளை துவங்கிய றோய் திருமலை, மட்டு அம்பாறை காடுகளில் சிங்கள இராணுவ முகாம்கள் மீதான பல தாக்குதல்களில் திறமுடன் களமாடி இளம் அணித் தலைவனாக வளர்ந்தான் . 1995 ம் ஆண்டு வன்னிக்கு மாற்றப்பட்ட றோய் தேசியத் தலைவரின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருந்த எம். ஓ. படைப்பிரிவில் இளம் அணித் தலைவனாக இணைக்கப்பட்டான் .வேவு மற்றும் புலனாய்வுப் பணிகளிலும் போர்ப்பயிற்சி ஆசிரியனாகவும் செயற்பட்ட றோய் 1999 ம் ஆண்டு சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியில் இணைக்கப்பட்டான் .

படையணியில் வீரமணியின் கொம்பணியில் பிளாட்டூன் லீடராக களமிறங்கிய றோய் ஊரியான் பரந்தன் சுட்டதீவு முன்னரங்கில் பாதுகாப்புக் கடமைகளிலும் பயிற்சிகளிலும் தனது பிளாட்டூனை திறனுடன் வழிநடத்தினார். கொம்பனி லீடர் இராசநாயகத்தின் இணைபிரியாத் தோழனாக விளங்கிய றோய் படையணியின் அணித் தலைவர்களுள் பிரபலமானவராக விளங்கினார் .படையணியின் சிறப்புத் தளபதியாக ராகவன் அவர்கள் பொறுப்பேற்றபோது றோயின் திறன்களை மேலும் வளர்க்கும் விதமாக முதுநிலை அதிகாரிகள் பயிற்சி நெற்றியில் ஈடுபடுத்தினார். இயக்கத்தின் அனைத்து படையணிகளிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட போராளிகளுக்கு வழங்கப்பட்ட இப் பயிற்சி நெறியில் றோய் முதலாவதாக தேர்ச்சி பெற்று தேசியத் தலைவரின் பாராட்டைப் பெற்றபயிற்சி முடிந்து களமுனைக்கு திரும்பிய றோயை கொம்பனிப் பொறுப்பாளராக ராகவன் கடமையில் ஈடுபடுத்தினார்.

ஓயாத அலைகள்-3 சமரில் ஒரு கொமாண்டராக களமிறங்கிய றோய் கனகராயன்குளம் வரையிலான சமர்களில் தீவிரமாக களமாடினார். இச்சமரில் படுகாயம் அடைந்த றோய் சில மாதங்கள் சிகிச்சைக்கு பின் மீண்டும் களத்திற்கு திரும்பினார். ஆனையிறவு மீட்புக்கான பயிற்சியில் தனது கொம்பனியை திறமுடன் வழிநடத்திய றோய் , இத்தாவில் பெருஞ்சமரில் பெட்டி வியூகத்தின் ஒரு பகுதி கொமாண்டராக தீரமுடன் செயற்பட்டார். 02-04-2000 அன்று எமது பகுதிக்குள் டாங்கிகளுடன் முன்னேறிய பெருமளவிலான எதிரித் துருப்பினரை விரட்டியடித்த கடும் சமரில் வீரத்துடன் போரிட்ட றோய் அங்கே வீரச்சாவைத் தழுவிக் கொண்டார்.

தேசியத் தலைவர் தளபதிகள் முதலான அனைவரினதும் அன்பையும் பாராட்டையும் பெற்ற மூத்த அணித் தலைவராக விளங்கிய றோய் பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் சிறிதும் மனம் தளராமல் தனது கடமைகளை செவ்வனே நிறைவேற்றிய முன்னுதாரணமான போராளியாகத் திகழ்ந்தார். தமிழ் மக்களை ஆழமாக நேசித்த றோய் மக்களிடையே அரசியல் உணர்வை வளர்ப்பதிலும் முன்னின்று உழைத்தார். மேஜர் றோய் அவர்களின் வீரமும் மதிநுட்பமும் விடாமுயற்சிகளும் இளம் போராளிகளுக்கு என்றும் வழிகாட்டியாக அமையும்.

இதே நாளில் இவருடன் இணைந்து களமாடி வீரச்சாவைத் தழுவிக் கொண்ட 2 ம் லெப். தமிழின்பன் ,மேஜர் அமுதா, மேஜர் லக்சனா ,மேஜர் அரசி, மேஜர் மதி, கப்டன் அத்தி, லெப். மணிநிலா , லெப். தேன்கவி , வீடியோ படப்பிடிப்பாளர் முதலான அனைத்து மாவீரர்களையும் இந்நாளில் நினைவு கூர்கின்றோம்.

2000 ம் ஆண்டு சித்திரை மாதம் வீரச்சாவைத் தழுவிய மாவீரர்களுக்கு வீரவணக்கம்

குறிபார்த்துச் சுடுவதும் ஒரு கலை என்பதை நிரூபித்த பிரிகேடியர் ஆதவன்/கடாபி.

அது ஓர் அடர்ந்த வனம். அந்த வனத்தின் நடுவே சிறியதோர் வெட்டை. அந்த வெட்டை வெளியில் என்றுமில்லாதவாறு போராளிகள் பலர் ஆர்ப்பரித்துக்கொண்டிருந்தார்கள். அனைத்துத் தளபதிகளுக்கும் குறிபார்த்துச் சுடும் போட்டிக்கான ஆயத்தங்கள் நடந்து கொண்டிருந்தது.Brigadier Aathavan or gaddaffi

இனம் புரியாத மகிழ்சியோடும், ஒரு விதமான படபடப்போடும் அனைத்துத் தளபதிகளும் தயாராகிக்கொண்டிருந்தார்கள். “ஊஊ” என்ற ஓசையை கிளப்பியபடி விரைந்து வந்த வாகனத்தில் இருந்து இறங்கிய தலைவரை உற்சாகத்தோடு வரவேற்கின்றார்கள் தளபதிகளும், போராளிகளும். எப்போதும் தலைவரோடு கூடவே கடாபி அண்ணையையும் வரவேற்றவர்கள், தமக்குள் பேசிக்கொள்கிறார்கள் “கடாபி அண்ணை சூட்டுப்போட்டியில் கலந்து கொண்டால் தாங்கள் எப்படி வெல்லுறது…”

அனைத்துத் தளபதிகளுக்கும் போட்டிக்கான விதிமுறைகள் கூறப்படுகிறது. குறிப்பிட்ட நேரத்துக்குள் 10 ரவைகளையும் குறுப்பீங்காய்(துல்லியமான சூட்டு இடைவெளி) அடிப்பவர்களுக்கே முதலிடம். ஒவ்வொருவரும் தங்களுக்கான ரவைகளை அடித்து முடித்தபோது இறுதி சூட்டாளரான கடாபி அண்ணை துப்பாக்கியைத் தூக்கி இலக்கைக் குறிபார்க்கிறார். அனைத்துத் தளபதிகளும் அவரையே கண்ணை இமைக்காமல் பார்க்கின்றனர். கண் இமைக்கும் நேரத்துக்குள் 10 ரவைகளையும் அடித்து விட்டு, கடாபி அண்ணை நிமிரும் போது, கடாபி அண்ணையும் “ஸ்கோரை” (பெறுபேரு) பார்ப்பதற்காக அனைவரும் தலைதெறிக்க ஓடுகின்றனர். “ஒரு ரவுண்ட்ஸ் மட்டும் தான் பிடிச்சிருக்கு” என்று முதல் பார்த்த கமல் சொல்ல, அதைத் தொடர்ந்து எல்லோரும் அதையே சொல்ல, தலைவர் அவர்கள் இலக்கின் பின்பக்கம் செல்கின்றார்.

என்ன அதிசயம் அனைவரும் பிரமித்துப்போனார்கள். ஒரு ரவை போன அதே பாதையால் பத்து ரவைகளும் போயிருக்கின்றன. கடாபி அண்ணையை அருகழைத்த தலைவர் அவர்கள் ஆரத்தழுவிக்கொண்டார். ஒரு தாய் சாதனை படைத்த தன் பிள்ளையை அணைத்த்துக் கொள்வது போல. அனைவராலும் பிரமிப்போடும் பெருமையோடும் நோக்கப்படும் ஆதவன் என்றளைக்கப்படும் கடாபி அண்ணையின் சாதனைகள் ஒன்றல்ல இரண்டல்ல ஓராயிரம் சாதனைகள். சாதாரண மனிதர்கள் நினைத்துக்கூட பார்க்கமுடியாத அளப்பெரும் தியாகங்களையும் சாதனைகளையும் புரிந்துவிட்டு விழி மூடித் துயில் கொள்ளும் இந்த மாவீரனின் வரலாற்றின் சிறு பகுதியை இங்கு தருகின்றேன்.

வடமராட்சி என்ற அழகிய ஊரில் 05 சகோதரர்களுக்கு மூத்தவறாகப் பிறப்பெடுத்தவர்தான் கடாபி அண்ணை. வறுமைக் கொட்டின் கீழ் வாழ்ந்த அவருடைய குடும்பத்தின் சுமையை சிறுவயதிலே சுமக்கும் நிலை கடாபி அண்ணைக்கு உருவாகிறது. தந்தையின் வருமானத்தைக் கொண்டு தேவைகளைப் பூர்த்தி செய்யமுடியாமல் திண்டாடிய அம்மாவை சாமதானப்படுத்திய 5ம் வகுப்பு படிக்கும் 11 வயதுச் சிறுவனாகிய கடாபியண்ணை, தன்படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு, தந்தையுடன் இணைந்து பேக்கரி (வெதுப்பகம்) வேலைக்குச் செல்கிறார். பகல் முழுதும் ஓய்வின்றி பேக்கரியில் உழைத்துவிட்டு, இரவு நேரங்களில் “ஐஸ்க்ரீம் கொம்பனி” ஒன்றில் வேலைக்குச் செல்கிறார். இரவு பகல் பாராது உழைத்துக் கொண்டிருந்த கடாபி அண்ணைக்குக் கிடைக்கும் ஓய்வு நேரங்களில் தியட்டருக்குப் போய் ஆங்கிலச் சண்டைப் படங்களைப் பார்ப்பதே இவரின் பொழுதுபோக்காகின.

தன் குடும்பத்தின் முன்னேற்றத்துக்காக உழைத்துக் கொண்டிருந்த சிறுவனாகிய கடாபி அண்ணைக்கு மறைந்து வாழும் சில விடுதலைப்புலி உறுப்பினர்கள் அறிமுகமாகிறார்கள். அவர்களுடைய கொள்கைப் பிடிப்பினாலும், இலட்சியப் பற்றினாலும் ஈர்க்கப்பட்ட சிறுவனாகிய கடாபி அண்ணை, அப் போராளிகளுக்குப் பல வழிகளில் உதவி புரிகின்றார். எதிரியை உழவு பார்ப்பது, உணவுகள் எடுத்துக் கொடுப்பது, போராளிகள் மறைந்து வாழும் இடங்களில் சாதாரண மாணவன் போல காவல் கடமைகளில் ஈடுபடுவது, தகவல்களைப் பறிமாறுவது போன்ற பணிகளின் மூலம் இவரின் ஆரம்பக் கட்ட விடுதலைப் பணி ஆரம்பமாகியது.

தமிழ் மக்களுக்கான விடுதலையின் தேவையை மனசார உணர்ந்து கொண்ட கடாபி அண்ணை அவர்கள் தனது 14வது வயதில் முழுநேர உறுப்பினராக தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் தன்னை இணைத்துக் கொள்கிறார். போராளிக்குறிய முழுமையான பயிற்சிகளைப் பெறுவதற்காக இந்தியாவுக்கு அனுப்பப்பட்ட இவர், 1984ம் ஆண்டு 6வது பயிற்சிப்பாசறையில் பயிற்சியினை ஆரம்பிக்கின்றார். பிருந்தன் மாஸ்டர், பிரிகேடியர் பால்ராஜ், யான் அண்ணை என இன்னும் பல வீரர்களோடு இவரும் ஒருவராகினார்.Brigadier gadaffi

பாலகப் பருவத்திலே பல கஸ்ரங்களைத் தாங்கி, ஓய்வின்றி உழைத்த கடாபி அண்ணாவுக்கு பயிற்சிகள் எதுவும் கடினமாகத் தெரியவில்லை. பயிற்சிகளின் பிரதான பயிற்சியான சூட்டுப் பயிற்சியின் முதல் நாளே இலக்கின் நடுப்புள்ளியில் குறிபார்த்துச் சுட்டு பயிரற்சிப் பொறுப்பாளர் பொன்னம்மான் அண்ணாவின் பாராட்டைப் பெற்றதோடு மட்டும் நின்றுவிடாது, தொடர்ந்து வந்த நாட்களில் பயிற்சிக்காகக் கொடுக்கப்பட்ட அத்தனை ரவைகளையும் இலக்கின் நடுப்புள்ளியில் சுட்டு சிறந்த சூட்டாளராக தலைவர் அவர்களால்த் தெரிவு செய்யப்படுகிறார்.

கடாபி அண்ணையின் ஒழுக்கத்தையும், நேர்மையையும், திறமையையும் இனங்கண்டு கொண்ட தலைவர் அவர்கள் அவரை தன்னுடைய மெய்ப்பாதுக்காவலராக ஆக்கியதோடு விமான எதிர்ப்பு ஏவுகணைகளைச் சுடும் சிறப்புப் பயிற்சிக்காகவும் தெரிவு செய்யப்பட்டார். சாதாரணப் போராளியாக தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பில் தனது பணிகளை ஆரம்பித்த தளபதி கடாபி அண்ணா அவர்கள் கடின உழைப்பால் தனக்கான தகமைகளை வளர்த்துக்கொண்டு உயரிய இராணுவத் தளபதியாக உருவெடுத்தார்.

1986ம் ஆண்டுக் காலப் பகுதியில் இந்தியாவிலிருந்து மாணலாற்றுக்கு வந்த கடாபி அண்ணை அவர்கள், தலைவரின் நேரடி நெறிப்படுத்தளின் கீழ் பணிபுரிந்தார். இலங்கை இராணுவம், இந்திய இராணுவம் என மாறி மாறி தலைவரை உயிருடன் பிடிக்க முயன்று தோற்றுப்போன அத்தனை நடவடிக்கைகளையும் முறியடித்துப் போராடி தலைவரைப் பாதுகாத்த வீரமும் விவேகமும் கொண்ட போராளிகளில் கடாபி அண்ணையும் ஒருவராகிறார்.

கொடுக்கப்பட்ட பணி எதுவாயினும் தூரநோக்குச் சிந்தனையோடும், நுணுக்கத்தோடும், அழகாகவும் செய்யும் இவர் திறனை அடிக்கடிப் பாராட்டும் தலைவர் அவர்கள் தமிழ் நாட்டில் இருந்து தன்னைச் சந்திக்க வந்திருந்த வைக்கோ அண்ணையை தமிழ் நாட்டுக்குக் கொண்டு சென்று விடும் மிக மிக முக்கிய பொறுப்பை கடாபி அண்ணையிடம் ஒப்படைக்கிறார்.

வைக்கோ அண்ணையை பாதுகாப்பாக் கூட்டிச் செல்லும் போது, முல்லைத்தீவு கடற்பகுதியில் ஏற்பட்ட சமரின்போது கடாபி அண்ணை பலத்த காயம் அடைகிறார். அந்நிலையில் கூட தன்னை சுதாகரித்துக்கொண்டு வைகோ அண்ணையை எதிரியிடமிருந்து பாதுகாத்து, தமிழ்நாட்டில் பாதுகாப்பாகச் சேர்ப்பிக்கின்றார். பலத்த காயம் ஏற்பட்டதால் இந்தியாவிலிருந்தே மருத்தவம் பெறவேண்டிய சூழல் கடாபி அண்ணைக்கு ஏற்படுகின்றது. 06 மாதங்கள் இந்தியாவிலிருந்து கொண்டே மருத்துவ உதவியைப் பெற்ற கடாபி அண்ணை மீண்டும் ஈழம் திரும்பி வந்து, தலைவரின் நேரடி நெறிப்படுதலின் கீழ் பணிபுரிந்து கொண்டிருந்தபோது, ஆரம்ப காலங்களில் “கடல்புறா” என பெயர் கொண்டழைக்கப்பட்ட கடற்புலிகள் படையாணிக்கு கேணல் சங்கர் அண்ணை அவர்களே பொறுப்பாக நியமிக்கப்பட்டிருந்தார். சங்கர் அண்ணை அவர்களை வேறு ஒரு பணிக்காக தலைவர் அவர்கள் நியமித்துவிட்டு கடல்புறாவின் தளபதியாக கடாபி அண்ணை அவர்களை தலைவர் அவர்கள் நியமித்தார்.

கடல்புறாவை செவ்வென கட்டியெழுப்பும் பணியில் கடாபி அண்ணை அவர்கள் ஈடுபட்டுக்கொண்டிருந்த வேளை 1991ம் ஆண்டு நடைபெற்ற ஆகாய கடல் வெளி மரபுவழித் தாக்குதலின் போது வெற்றிலைக்கேணிப் பகுதியால் பெரும் படையோடு ஊடறுத்த இராணுவத்தை வழிமறித்துத் தாக்குதல் நடத்தியபோது கடாபி அண்ணை நெஞ்சினில் பலத்த காயம் அடைகிறார். சில மாதங்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த கடாபி அண்ணை அவர்களை தலைவர் அவர்கள் அழைத்து இம்ரான் பாண்டியன் படையணியின் உள்ளகப் பாதுகாப்புப் பொறுப்பாளராக நியமிக்கிறார். தலைவரின் பாதுகாப்பு, போராளிகளின் தேவைகள், தாக்குதல், பயிற்சி, புலனாய்வு என பன்முகப்படுத்தப்பட்ட பணிகளை செய்யவேண்டிய சூழல் ஏற்பட்டபோது ஓய்வின்றி உழைத்தவர் கடாபி அண்ணை.

மாத்தையா அவர்களின் துரோகத்தனத்தை இனம்கண்டு, உறுதிப்படுத்திய பின்னர், பல வழிகளில் விசாரணைகள் நடந்தபோதும், மேலதிகமான, கடுமையான, இறுதிக்கட்ட விசாரணைகளை நேரடியாக மேற்கொண்டவரும் கடாபி அண்ணை அவர்களே.Brigadier Aathavan , praba

“முன்னேறிப்பாய்ச்சல்” என்ற பெயரில் இலங்கை இராணுவம் மேடிற்கொண்ட நடவடிக்கைக்கு எதிராக புலிகள் நடத்திய “புலிப்பாய்ச்சல்” நடவடிக்கையைத் தொடர்ந்து விடுதலைப் புலிகளின் படைக் கட்டுமானத்தில் சில மாற்றங்கள் நிகழ்ந்தன. அதுவரை இம்ரான் பாண்டியன் படையணியின் சிறப்புத் தளபதியாக இருந்த மூத்த தளபதி சொர்ணம் அவர்கள் கூட்டுப் படைத் தளபதியாக நியமிக்கப்பட்டார். அதே நேரம் கடாபி அண்ணை அவர்கள் இம்ரான் பாண்டியன் படையணியின் சிறப்புத்தளபதியாக நியமிக்கப்பட்டார்.

1995ம் ஆண்டு யூலை மாதத்திலிருந்து 2002ம் ஆண்டுவரை, அதாவது விடுதலைப்புலிகளுக்கும் அரச படைகளுக்கும் யுத்த நிறுத்தம் ஏற்பட்டவரை கடாபி அண்ணை அவர்களே இம்ரான் பாண்டியன் படையணியின் சிறப்புத்தளபதியாகப் பணியாற்றினார்.

இம்ரான் பாண்டியன் படையணியென்பது சிறப்பு அணிகளின் கூட்டமைப்பாகவே இருந்தது. கடாபி அண்ணை பல சிறப்பு அணிகளை அப்படையணியின் கீழ் உருவாக்கி விடுதலைப்பயணத்தில் பல சாதனைகளை ஏற்படுத்தினார். கரும்புலி அணி, லெப் கேணல் விக்டர் கவச எதிர்ப்புப்படையணி, லெப் கேணல் ராயன் கல்விப்பிரிவு, மயூரன் பதுங்கிச்சுடும் அணி, செம்பியன் வேவு அணி, கேணல் சங்கர் ஆள ஊடுருவித்தாக்கும் அணி, லெப் கேணல் ராதா வான்காப்புப் படையணி, விடுதலைப்புலிகளின் கவசப்படையணி போன்ற சிறப்புப் படையணிகளும் படையத் தொடக்க கல்லூரிகள் போன்ற படைக்கட்டுமானங்களையும் தலைவரின் எண்ணத்திற்கேற்ப்ப உருவாக்கி, வளர்த்து, வழிநடத்தியதில் கடாபி அண்ணையின் தலமைத்துவப்பணிகளின் சிறப்புகளை காணக்கூடியதாக இருந்தது.

இப்பணிகளோடு மேலதிகமாக தலைவரின் பாதுகாப்பு சார்ந்த பணிகளையும் நேரடியாகக் கண்காணித்து வந்த கடாபி அண்ணை விடுதலைப்பணிக்காக ஓய்வின்றி இயங்கிக் கொண்டிருந்தார். ஒரு பயிற்சிப் பணியாக இருந்தாலும் சரி அல்லது வேவுப் பணியாக இருந்தாலும் சரி, அல்லது தாக்குதல் பணியாக இருந்தாலும்சரி நேரமெடுத்து திட்டமிடலுக்காகவே கூடிய நேரத்தை ஒதுக்கி ஒவ்வொரு பணியையும் சரியாக நிறைவேற்றும் பாங்கு கடாபி அண்ணைக்கு உரியதே. பயிற்சித் திட்டமிடல் பற்றிக் குறிப்பிடவேண்டும் என்றால் ஒரு காலத்தில் குறிப்பிட்ட பயிற்சிக்கு மூன்று மாதங்கள் என திட்டமிடப்பட்டிருக்கும். ஆனால் எதிரியின் தாக்குதல் நடவடிக்கைகள் அதிகரிக்கும்போது இப்பயிற்சிக் காலத்தை சுருக்க வேண்டிவரும். அப்போதுகூட குறுகிய கால பயிற்சித் திட்டமிடல் ஒன்றை தயார் செய்துவிட்டே பயிற்சிகள் வழங்கப்படவேண்டும் என்பதில் கவனமாய் இருப்பார்.

அதே போல் தாக்குதல் நடவடிக்கை ஒன்றைப் பூர்த்தி செய்தாலும் அத்தாக்குதலின் வெற்றி தோல்வி என்பதைவிட அத்தாக்குதல் தொடர்பான விபரங்களை ஆவணப்படுத்துமாறே தாக்குதலணிப் பொறுப்பாளர்களிடம் கண்டிப்பாக கட்டளையிடுவார். அத்தாக்குதல் வெற்றியடைந்ததற்கான காரணங்கள் அல்லது தோல்வியடைந்ததற்கான காரணங்கள் எதிர்காலத்தில் எவ்வாறான விடயங்களை மேம்படுத்தலாம் என்பன போன்ற விடயங்களை உள்ளடக்கியதாகவே அவ் ஆவணங்கள் தயாரிக்கப்படும். அவ்வாறு தயாரிக்கப்படும் ஆவணங்களை தானே சரிபார்த்து போராளிகளுக்குப் புரியவைப்பார்.

அத்தோடு இவ்வாறு பெறப்படும் ஆவணங்கள் அனைத்தும் பயிற்சி ஆசிரியர்களுக்கு அனுப்பிவைக்கப்படும். அதற்கேற்ப திருத்தங்கள், மாற்றங்கள் பயிற்சிகளில் செய்யப்படும். இவ்வாறு இறுக்கமான கால கட்டங்களின் போதும் மரபுவழி இராணுவங்களுக்கு ஒப்பான திட்டமிடல்களையும், செயற்பாடுகளையும் பேணிவருவதில் மிகமிகக் கவனமெடுத்து செயல்ப்பட்டு வந்தவர்தான் கடாபி அண்ணை.Brigadier Aathavan 3

கடாபி அண்ணையை பொறுத்தவரையில் தாக்குதல்களோடு சம்மந்தப்பட்ட தாக்குதலணிகளை மட்டுமன்றி பயிற்சிகள், விசாரணைகள், புலனாய்வு, ஆசிரியர்கள் போன்ற நிர்வாக ரீதியிலான அணிகளையும் நிர்வகிப்பது, முகாம்களை சீரமைப்பது, பராமரிப்பது போன்ற அத்தனை பணிகளையும் சிறப்பாக செய்யும் வித்தகராகத் திகழ்ந்தார். பன்முகப்படுத்தப்பட்ட பணிகளையாற்றிய கடாபி அண்ணை அவர்கள் பெண் போராளிகளின் வளர்ச்சியிலும் முக்கிய பங்கு வகித்தவராவார். 027ஆரம்ப காலங்களில் பெண்போராளிகளுக்கு கனரக ஆயுதப்பயிற்சியை வழங்கியதுடன் சூட்டுப்பயிற்சி, சீறோயிங் கனரக ஆயுதங்களை கையாள்வது, ஆயுதங்களை பராமரிப்பது என எல்லாவற்றையும் ஆழமாக கற்பித்து பல கனரக ஆயுத பெண் ஆசிரியர்களை உருவாக்கியவரும் இவரே. அத்தோடு கல்வியறிவு இல்லாமல் எழுத வாசிக்க கஷ்டப்படும் போராளிகளுக்கு அறிவூட்டல்களைச் செய்வதோடு கல்வியில் ஆர்வத்தை தூண்டுவதற்காகச் சிறிய விடயங்களைக் கூட பாராட்டி அன்பளிப்புப் பொருட்களைக் கொடுத்து அவர்களை ஊக்குவித்ததோடு கல்வியறிவில்லாமல் யாருமே இருக்கக் கூடாதென்பதில் அதீத கவனமெடுப்பார்.

அனைவருடனும் சம நிலையில் பழகும் இவருக்கு தனிப்பட்ட நண்பர்கள் என்று யாருமே இருந்ததில்லை. அனைவருடைய கருத்திற்கும் மதிப்புக்கொடுக்கும் இவர் சிறியவர், பெரியவர் என்ற பேதம் பார்ப்பதில்லை. அனைவருக்கும் கருத்துச் சுதந்திரம் இருக்கிறது என்பதை போராளிகளுக்கு புரியவைத்து, அனைவருடைய கருத்துக்களையும் பொறுமையாகக் கேட்டு, அவர்களுக்குரிய தீர்வுகளை உடனுக்குடன் வழங்குவார்.

இவருடைய தாக்குதல் நடவடிக்கைகளை பொறுத்தவரை சிறப்பு இராணுவ நடவடிக்கைகளில்தான் இவர் நேரடியாகப் பங்குபற்றினார். பல கரும்புலித்தாக்குதல்களுக்கு பயிற்சிகளை வழங்கியதோடு நின்றுவிடாது பல தாக்குதல்களையும் நெறிப்படுத்தி வெற்றியீட்டிய பெருமை இவரையே சாரும். தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் இவருக்கு வழங்கப்பட்டிருந்த விமான எதிர்ப்பு ஏவுகணையைக் கொண்டு 1995 ம் ஆண்டு எம் இனத்தை குண்டுபோட்டு கொன்றுகுவித்த இரு அவ்றோ விமானத்தை சுட்டு வீழ்த்தி தனித்துவமான பெரும் சாதனையை ஈட்டி தமிழீழ தேசியத்தலைவரின் பாராட்டைப் பெற்றார்.

1997 ம் ஆண்டு முல்லைத்தீவு கடலில் உக்கிரமாக சண்டை நடந்துகொண்டிருந்த போது, எதிரியோ மிகப்பலத்தோடு சண்டையிட்டுக்கொண்டிருந்தான். எதிரியின் மிகவும் பலமான தாக்குதலாக உலங்குவானூர்தியால் தாக்கிக்கொண்டிருந்தான். தமிழீழ விடுதலைப் புலிகளின் படகு மூழ்க ப் போகும் சூழ்நிலையில் யாருமே எதிர்பாராத விதமாய் கடாபி அண்ணை அவர்கள் எதிரிக்கு மிகப்பலமாக இருந்த உலங்குவானூர்தியை சுட்டு வீழ்த்தினார். களத்தில் நிலவரம் மாறியாது. அத்தனை வீரர்களும் எதுவித சேதமும் இல்லாமல் தளம் திரும்புகிறார்கள். தளம் திரும்பிய அந்த வீரர்கள் சாவின் விளிம்பிலிருந்து தம்மைக் காப்பாற்றிய கடாபி அண்ணையைப் பார்த்து கண்ணீர்மல்க நன்றி கூறினார்கள். இப்படித்தான் நீளும் நினைவுகளாக கடாபி அண்ணையின் சாதனைகள் தொடர்ந்தன.

ஜெயசிக்குறு சமர் உக்கிரமடைந்து கொண்டிருந்தது. பல சாதனைகளோடும் பல இழப்புகளோடும் அச்சமர் தொடர்ந்து கொண்டிருக்கையில், விஞ்ஞான குளத்தில் எதிரியானவன் பெருமெடுப்பிலான இராணுவ நடவடிக்கையை செய்வதற்குத் திட்டமிட்டிருந்தான். முற்றுமுழுதாக விடுதலைப்புலிகளை சிதைப்பதற்கான ஏற்பாடு. இதை அறிந்துகொண்ட கடாபி அண்ணை அவர்கள் தனது ஆழுகையின் கீழ் இருந்த கரும்புலி அணியொன்றை எதிரியின் கொலைவலயத்திற்குள் அனுப்பி அத்தாக்குதலை முறியடிப்பதற்கான ஏற்பாட்டை செய்தார். அத்தாக்குதலைத் திட்டமிட்டு செயற்படுத்துவதற்காக வந்த அதிகாரிகள் கொண்ட உலங்குவானூர்தியை எதிரியின் பிரதேசத்திற்குள் வைத்து சுட்டுவீழ்த்தி அத்தாக்குதலை முறியடித்து, அங்கிருந்து தப்பி வருகிறார்கள் கரும்புலி வீரர்கள். இத்தாக்குதலை திட்டமிட்டு நேரடியாக நெறிப்படுத்தியவரும் எம் கடாபி அண்ணை அவர்களே.Brigadier Aathavan 33

அது போலவே அளம்பில் கடற்பரப்பில் 1999 ம் ஆண்டு தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு தொடர்ச்சியாக தொல்லை கொடுத்து வந்த டோறாக்களை ராங்கைப் (பிரங்கி) பயன்படுத்தி அழித்தொழித்தவரும் கடாபி அண்ணையே. குறிபார்த்துச் சுடும் தனித்திறமை கொண்ட கடாபி அண்ணை அவர்கள் எப்பணி ஆற்றினாலும் அதில் ஓர் தனித்துவம் இருக்கும். ஒரு தடைவை தமிழீழத் தேசியத்தலைவருக்கு புதிய கனரக ஆயுதமொன்று கிடைக்கப் பெற்றது. அதை இயக்கம் முறைக்குரிய ஆவணம் எதுவும் வரவில்லை. அந்த ஆயுதத்தை எப்படி இயக்குவது, எப்படி கழட்டிப் பூட்டுவது என்பதை கண்டுபிடிக்குமாறு தேசியத் தலைவர் அவர்கள் சில பொறுப்பாளர்களிடம் ஒப்படைத்தார். பல ஆங்கிலப் புத்தகங்களை புரட்டியும், தாமாக சில நாட்கள் முயன்றும் முடியாமற் போகவே தேசியத்தலைவர் அவர்களிடம் சொன்னார்கள் “கண்டுபிடிக்க முடியவில்லை” என்று. அவர்களைப் பார்த்து புன்முறுவல் பூத்த தேசியத்தலைவர் அவர்கள் வேறோர் பணிக்காக வேறு இடத்தில் நின்ற கடாபி அண்ணையிடம் அந்த ஆயுதத்தை கையளித்தபோது, அந்த ஆயுதத்தை வாங்கிய கடாபி அண்ணை அவ் ஆயுதத்தை இருபக்கமும் திருப்பிப் பார்த்துவிட்டு குறிப்பிட்ட சில நிமிடங்களுக்குள் பல பாகங்களாகப் பிரித்து வைத்துவிட்டு, இயக்கும் முறையை புரிய வைத்துவிட்டு, தேசியத் தலைவரை பார்த்தபோது தேசியத்தலைவர் அவர்கள் கடாபி அண்ணையின் தோளில்தட்டி “இதுதான் கடாபி” என அனைவரையும் பார்த்துக் கூற, அனைவரும் இணைந்து பாராட்டியபோது எதுவும் நடவாததுபோல் சாதாரணமாகவே இருந்தார் கடாபி அண்ணை அவர்கள்.

பற்பல ஆற்றல்களைக்கொண்ட இவரிடம் தேசியத்தலைவர் அவர்கள் சொல்கிறார் “கடாபி கடல் இண்டைக்கு அமைதியாக இருக்கா? என்று சூசையை தொடர்பெடுத்து கேளு. கடல் அமைதியாக இருந்தால் நாங்கள் கடற்பயிற்சிக்கு போகலாம்” சொல்லி சில கணங்கள் கூட ஆகவில்லை வானத்தில் உள்ள வெள்ளியை பார்த்துவிட்டு “அண்ணை கடல் இண்டைக்கு நல்ல அமைதியா இருக்கு நாங்கள் கடற்பயிற்சிக்கு போகலாம்” என்றார். வானத்திலுள்ள நடசத்திரங்களை கணித்தே கடலின் நிலவரத்தை சொல்லுமளவிற்கு திறமையுள்ளவர்தான் கடாபி அண்ணை .

தமிழீழ தேசியத்தலைவர் அவர்களோடு கூடவே இருந்து பல விடயங்களைக் கற்று அறிந்து செயலாற்றிய வித்தகர்தான் இவர். தனது குடும்பத்தில் அதிக பற்றுக்கொண்டவர் . தனது மனைவி பிள்ளைகளோடு கழிக்கும் நேரம் மிகச் சொற்பமே. என்றாலும் கிடைக்கும் நேரங்களில் தன் பிள்ளைகளுக்கு நல்ல தந்தையாகவும் செயற்பட்டார். நற்சிந்தனைகளையும் தேசப்பற்றையும் ஊட்டியே வளர்த்தார்.

சின்னச் சின்ன விடயங்களில்கூட அதிக அக்கறை எடுத்து செயல்ப்படும் கடாபி அண்ணை அவர்கள் படையத் தொடக்க பயிற்சிக் கல்லூரிகளில் சிறப்புத் தளபதியாக இருந்த காலங்களில் புதிய போராளிகளை உள்வாங்கி அவர்களுக்கான திட்டமிடல்களை வகுத்து மிகமிக அற்புதமாக புதிய பயிற்சியாளர்களை நல்ல போராளிகளாக்கினார். கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் நான்கு அல்லது ஐந்து பயிற்சி முகாம்களில் பயிற்சிகள் வழங்கப்படும். புதிய போராளிகளுக்குரிய கட்டமைப்புகளை சீரமைத்து, பயிற்சிகளை வழங்கி, நல்ல போராளிகலாக ஆக்குவது மிகமிக கடினமான பணி. ஒவ்வொரு பிரதேசங்களில், இடங்களில் இருந்து வருபவர்கள் வேறுபட்ட குணவியல்புகளோடு இருப்பார்கள். அவர்கள் அனைவரையும் ஒரு குடையின் கீழ் கொண்டுவருவது அவ்வளவு சுலபமான காரியமல்ல. கடாபி அண்ணை அவர்கள் சரியாக திட்டமிடல்களை வகுத்து பயிற்சி ஆசிரியர்களை அதற்குரிய வகையில் நெறிப்படுத்தி மிகமிக எளிதாக அப்பணியை ஆற்றினார்.

2006 ம் ஆண்டிலிருந்து எதிரியின் தொடர் விமானத்தாக்குதலில் அடிக்கடி தமிழீழ விடுதலைப்புலிகளின் இலக்குகள் தாக்கப்பட்டுக்கொண்டிருந்தது. நாளுக்குநாள் போராளிகள், மக்கள் என தினமும் பலர் காயப்பட்டும் இறந்துகொண்டும் இருந்தனர். அந்தக் காலங்களில் பலதடைவைகள் படையத் தொடக்க பயிற்சிக் கல்லூரிகளை இலக்குவைத்து விமானத்தாக்குதல்கள் நடத்தப்பட்டன. ஒரு தடைவை கூட ஒரு போராளியோ அல்லது பயிற்சியாளரோ காயப்படவுமில்லை வீரச்சாவு அடையவுமில்லை. அவ்வளவு அழகாக திட்டமிட்டு எந்தச் சந்தர்ப்பத்திலும் போராளிகள் தம்மை பாதுகாத்துக் கொள்ளக் கூடிய வகையில் அனைத்து இடங்களிலும் நிலைகள் அமைக்கப்பட்டிருந்தது. பல தடைவைகள் நடந்த விமானத் தாக்குதலின்போதும் அத்தனை புதிய போராளிகளையும் காப்பாற்றியது கடாபி அண்ணையின் மதிநுட்பமான திட்டமிடலுடன் கூடிய செயல் மட்டுமே.

தலைவர் அவர்கள் பல தடைவைகள் பொறுப்பாளர்களுக்கு சொல்லியிருந்தார் “கடாபியால் மட்டும் எந்த இழப்புமின்றி போராளிகளை காப்பாற்ற முடியுதென்றால் ஏன் உங்களால் முடியுதில்லை” என்று.

புதிய பயிற்சியாளர்களிடமிருந்து கூட கருத்துக்களை பெறவேண்டும் என்பதில் அக்கறையெடுப்பார். வாரத்தில் ஒருதடைவை தானே சென்று பயிற்சியாளர்களுடன் கதைப்பார். அவர்கள் தாமாக கருத்துக்களை முன்வைக்க மாட்டார்கள் என்பதால் அனைவரிடமும் காகிதமும் பேனாவும் கொடுத்து “உங்கள் பெயர்களை எழுதாமல் சொல்ல விரும்பும் கருத்துக்களை எழுதித்தாருங்கள். நான் ஏதாவது பிழைவிட்டிருந்தால்கூட நீங்கள் எழுதலாம். நீங்கள் எழுதும் விடயம் சரியாக இருந்தால் நிச்சயமாக அதற்கான மாற்று நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்பார் . அதேபோலவே பயிற்சி ஆசிரியர்களிடம் புதிய போராளிகளை வழிநடத்துவது, அறிவுரைகளை பலதடைவைகள் வலியுறுத்துவார். பயிற்சிகள் வழங்குவதோடு போராளிகள் சரியான முறையில் பராமரிக்கப்பட வேண்டும் என்பதில் மிக மிக கவனமாக இருப்பார். அத்தோடு முன்மாதிரிகளாக ஆசிரியர்கள் திகழவேண்டும் என்பதில் கண்டிப்பாக இருப்பார்.Brigadier Aathavan 6

எமது போராட்ட வரலாறுகள், ஒவ்வொரு நிகழ்வின் பதிவுகளும் மிகமிக முக்கியமென கருதுவார். எந்த இக்கட்டான சூழலிலும் அனைத்து நிகழ்வுகளும் உண்மையாக பதிவுசெய்து ஆவணப்படுத்த வேண்டும் என்பதில் மிகுந்த அக்கறை காட்டுவார். அப்பணியை முக்கிய பணியாக கருதி அதற்காக போராளிகளைத் தெரிவு செய்து தானே அப்பணியை நேரடியாக நெறிப்படுத்துவார். இறுதிச்சமர் உக்கிரமாக நடந்து கொண்டிருந்த வேளைகளில் கடாபி அண்ணை அவர்களில் சண்டைக் களங்களில் பணியாற்றிகொண்டிருந்தார். அந்த நேரத்திலும்கூட அவணங்களை பதிவு செய்து பாதுகாக்கும் போராளியைத் தொடர்புகொண்டு அப்பணியின் முக்கியத்துவத்தை விளங்கப்படுத்தி எச்சந்தர்ப்பத்திலும் இப்பணியை இடைவிடாது தொடருமாறு வலியுறுத்துவார்.

இவ்வாறு பலவேறு விடுதலைப்பணிகளை முன்னெடுத்துக் கொண்டிருந்த கடாபி அண்ணை அவர்கள் முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள ஆனந்தபுரப்பகுதியில் பெருமெடுப்பில் நடந்த யுத்தத்தில் ஒரு பகுதி தாக்குதல் தளபதியாக களமிறங்கினார். தடைசெய்யப்பட அனைத்து ஆயுதங்களையும் பயன்படுத்தி எதிரியானவன் புலிகளை அழிப்பதில் முனைகிறான். வாழ்வா? சாவா? என்ற பெரும் யுத்தக்கத்தில் ஒவ்வொரு போராளிகளும் உறுதியோடு போரிட்டு வீரச்சாவு அடைகிறார்கள். எதிரியின் துரோகத்தனத்திற்கு பலியாகவேண்டிய இக்கட்டான சூழல் அது.

கடாபி அண்ணை அவர்கள் தன் அணிக்கு கட்டளை வழங்கி போரிட்டுக் கொண்டிருந்தவேளை எதிரியின் தாக்குதலில் பலத்த காயமடைகிறார். போராளிகள் பலர் அவரைக் காப்பாற்ற முனைகின்றனர். முடியவில்லை……

தமிழீழத் தேசியத்தலைவரையும், தமிழீழத்தையும் தன் உயிர் மூச்சாகக்கொண்ட கடாபி அண்ணை அவர்கள்……..

“அண்ணையை காப்பாற்றுங்கோ அண்ணைக்கு உறுதுணையாய் இருங்கோ” என அருகில் இருந்த போராளிகளிடம் முணுமுணுத்தபடி அன்னை மண்ணை அரவணைத்தார்.

அப்பெரும் யுத்தகளத்தில் தீரமுடன் போராடி வீரச்சாவடைந்த பிரிகேடியர் ஆதவன் அல்லது கடாபி என அழைக்கப்படும் சாதனை வீரனை நினைவு கூருவதோடு அக்களத்தில் வீரமுடன் போரிட்டு வீரச்சாவடைந்த அனைத்து போராளிகளையும் நினைவு கூருகிறோம்.

“உங்கள் தாகம் தீரும்வரை ஓயாது எம் பயணம்”

ஆக்கம் சி.கலைவிழி

12-04-1996 கொழும்பு துறைமுகத் தாக்குதல் நடவடிக்கையில் காவியமான கரும்புலிகள்

12-04-1996 அன்று தலைநகர் கொழும்பு துறைமுகத்துக்குள் ஊடுருவி மூன்று சரக்கு கப்பல்கள் மூன்று கடற்படை படகுகள் என்பனவற்றை தகர்த்தும் துறைமுகக்கட்டிடத் தொகுதிமீது தாக்குதல் நடத்தி வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலி மாவீரர்களுக்கும்

bt colombo harbour attack 1996

Bt Lt Col Rathees

Bt Maj Jenarthanan

Bt Maj Rvaas

Bt Maj Poiyamoli

Bt Maj Rathan

Bt Maj Paran

Bt Cap Viki

Bt Cap Mathani

Bt Cap Subas

12-04-2000 அன்று மன்னார் கடற்பரப்பில் கடற்படையின் நீருந்து விசைப்படகை மூழ்கடித்த தாக்குதலின் போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலி மாவீரருக்கும்

Bt Cap Veeramani

மற்றும் இதே நாளில் வீரச்சாவைத் தழுவிய ஏனைய மாவீரர்களிற்கும் எமது வீரவணக்கங்கள்.

கரும்புலி மேஜர் அறிவுக்குமரன்

11-04-2000 அன்று திருமலைக் கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையினருடன் ஏற்பட்ட நேரடி மோதலின் போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட

கரும்புலி மேஜர் அறிவுக்குமரன்
குமாரவேல் கேதீசன்
வவுனியா

Bt maj arivukumaran 2

ஆண்குரல்:- “அம்மா…. எங்களுடைய தாயகமண்ணின் மீட்சிக்காக…. என்னால் செய்யக்கூடிய தியாகம் எதுவோ…. அதைத்தான் நான் செய்யப்போகிறன்.. அதை மனமகிழ்வோடும் பூரண சந்தோஷத்தோடும் செய்கின்றேன். உங்களுக்கு இது ஜீரணிக்க முடியாத வேதனையாய்த்தான் இருக்கும். எனவே எங்களின் சாவுக்காக கண்ணீர் வடித்து கவலையடைவதைவிட நீங்கள் அதை ஏற்றுக்கொள்வதே எனக்கு நீங்கள் செய்யும் இறுதிக்கடனாய் ஆத்மாசாந்தியாய் இருக்கும் அம்மா….. உங்கள் மகன் நினைவுக்கல்லில் நிமிர்ந்து நிற்பான்.. நீங்கள் சுவாசிக்கும் காற்றில் நனையும் மழைத்துளியில் எல்லாம் உங்கள் மகன் கலந்திருப்பான்….”

கரும்புலி மேஜர் அறிவுக்குமரனின் அன்புசுமந்த வரிகள் இவை… தன்தாயை நேசித்தது போலவே… தன் தாயகத்தையும் பூசித்த தேசப்பற்றாளன்…..

தாய்:- ‘என்ரபிள்ளை… என்ர பிள்ளை எவ்வளவு கஷ்டங்களைத் தாங்கிப்படிச்சது… இப்ப…. இப்ப… அதுக்குப்பலனாய் ஒரு உத்தியோகம் கிடைச்சிருக்கு.. கேள்விப்பட்டால் பிள்ளை எவ்வளவு சந்தோஷம்படுவான்.. ம்… என்ர பிள்ளையின்ர கெட்டித்தனத்துக்கு பரிசு கிடைச்சிருக்கு…

மகன்:- ‘அம்மா……. என்னை எங்கையும் தேடவேண்டாம்… நான் எல்லோருக்குமாகப் போராடப்போகிறேன்………’

குரல்:- அவன் தன்னுடையதும்…தன் குடும்பத்தினதும் முன்னேற்றத்தைவிட தேசத்தின் விடுதலையே பெரிதென்று சிந்தித்தான். ‘கொற்றவன் தம்மைக் கண்டுகண்டுள்ளம் குளிர எம் கண்கள் குளிர்ந்தனவே’ என்று எல்லோரும் எண்ண இந்தத் தேசத்தின் புதல்வனாய் தன்னை அர்ப்பணித்துச் சென்றவன் அறிவுக்குமரன்.

அறிவுக்குமரன் மென்மையின் உறைவிடம்…அவன் மென்மையாய்… புன்னகை சுமந்து திரிந்தாலும் அவனுக்குள்ளே எப்போதும் ஓர் எரிமலை கனன்று கொண்டே திரிந்தது… தனக்கு கிடைத்த எல்லாவற்றையும் விட……. தேசியத்தலைவரையும்……… போராளிகளையும்…….. மக்களையும் உன்னத உறவுகளாய் நேசித்தான்.. தான் எத்தனை துயரங்களை துன்பங்களை அனுபவித்தாலும் தன்சக போராளிகளோ……… தன் நேசத்துக்குரிய மக்களோ துன்பப்படுவதை அவன் தாங்கிக் கொள்ளமாட்டான்…

‘தேசத்தைச் செதுக்கியவர்களே……..
இன்று உங்களுக்காய் கல்லறையில்
நினைவுக்கல்லில் உங்கள் பெயர்களைச்
செதுக்குகின்றோம்.
செதுக்கப்படாமலும் இன்னும் சிலர்
வெளித்தெரியாமலும்… எங்கள் மனதில் மட்டும்.
உண்ணாமல் பசிகிடந்து… உறங்காமல் விழித்திருந்து
கால்வலிக்க காடுதாண்டி
கைகள்வலிக்க கடல் தாண்டி
ஈழம் வேண்டிடப்போனீர்… நாம்…
இதயம் விம்மிட நிற்கின்றோம்…
என்று இடியாய்க் கனன்ற கரும்புலிகளை எண்ணி இதயத்தில் துடித்தவன் அறிவுக்குமரன்….

தெளிந்த சிந்தையோடு போராட்டத்தில் இணைந்துகொண்ட அறிவுக்குமரன்இ தன்னை அழித்தெனினும் தன் தேசத்து மக்களுக்கு சுதந்திரமான வாழ்வைஇ கௌரவமான வாழ்வைப் பெற்றுக்கொடுக்க வேண்டும் எனத்துடித்து நின்றவன். கடுமையான பயிற்சிகளையெல்லாம் தன்மக்களின் விடுதலை வாழ்வை எண்ணி ஏற்றுக் கொண்டவன்.

அவன் முதலில் கந்தகப்பொதிசுமந்தகளம் ஜெயசிக்குறு சமர்க்களம். விடுதலைப்புலிகள் பலமிழந்திருப்பதாய் கற்பனைபண்ணி விடுதலைப்புலிகளை அழித்துவிடலாமென்ற நம்பிக்கையோடு எதிரி நன்கு திட்டமிட்டு தொடக்கிய சமர்முனை ஜெயசிக்குறு. இந்த ஜெயசிக்குறு மீதான எதிர்ச்சமர்க்காலத்தில்இ 10.06.97 அன்று தாண்டிக்குளம் படைத்தளம் மீதான தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இதன்போது கரும்புலி ஊடறுப்புத் தாக்குதலும் நடந்தது. இந்தத்தாக்குதலில் அறிவுக்குமரனும் பங்கேற்றான்.

அந்த ஜெயசிக்குறு மீதான எதிர்ச்சமர்முனையில் தாண்டிக்குளத்தில் வரலாறாய் நிலையான தன் சககரும்புலிகளின் பிரிவு இவனை நெருப்பாய்ச் சுட்டது. தன்னோடு ஒன்றாயிருந்துஇ ஒன்றாய் உண்டுஇ ஒன்றாய் வந்தவர்கள் வரலாற்றில் வரலாறானபோதுஇ இவன்மனம் பெருமையுடன் துயரமும் சுமந்தது.

1997ஆம் ஆண்டின் இறுதிநாட்கள்… ஒரு நாட்பொழுதில் அந்த மகிழ்ச்சிமிக்க சம்பவம் நிகழ்ந்தது. தாக்குதல் ஒன்றுக்காக தெரிவு செய்யப்பட்டுள்ள கரும்புலிகளில் ஒருவனாய் அறிவுக்குமரனும் தெரிவானான். அவனுக்கு ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு எல்லை இல்லாமலிருக்க…. அந்தமகிழ்வை இரட்டிப்பாக்குவதுபோல தேசியத்தலைவர் அவர்களும்.. அவர்களைச் சந்தித்தார். தலைவரின் சந்திப்போடும்… அறிவுறுத்தலோடும்… ஆசிகளோடும் புறப்பட்ட அறிவுக்குமரன் உட்பட்ட கரும்புலி அணியினர் 02.01.1998 அன்று தமக்குரிய இலக்குள்ள இடத்தை வந்தடைகின்றனர்.

அதுவும் ஜெயசிக்குறு களமுனைப்பகுதிகளில் ஒன்றான கரிப்பட்டமுறிப்பு ஆக இருந்தது. அங்கிருந்துதான் ஜெயசிக்குறு நடவடிக்கைக்கான வான்வழி விநியோகத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்தான் எதிரி. அன்று அந்த விநியோகத்தளத்தையும்…. எதிரியின் ஆ.ஐ.17 உலங்கு வானூர்தியையும் ஒருசேர தாக்கி அழித்தார்கள் கரும்புலி அணியினர். தேசியத்தலைவனின் வழிகாட்டலில் எதிரியின் வானூர்தியையும்இ தளத்தையும் சிதறடித்தவர்களுக்கு உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை.. இந்த துணிகரமான வெற்றியைப் படைத்துவிட்டு வந்தவர்களில் கரும்புலி மேஜர் அறிவுக்குமரனும் ஒருவன். அவனுடைய இயந்திரத்துப்பாக்கி அன்று பேசியவை வெறும் வார்த்தைகளல்ல.

மீண்டும் கடுமையான பயிற்சிகள். அறிவுக்குமரன் சோர்ந்து போய் விடவில்லை. தேசியத்தலைவரின் உற்சாகமான வார்த்தைகள் அவர்களை உந்தின. 01.02.1998 இல் இன்னொருகளமுனை ஆனையிறவுத் தளம். அங்கே உப்பளமுகாம் அழிப்புக்காக நுழைந்த கரும்புலிகளில் அறிவுக்குமரனும் அடக்கம். அதிகாலை 1.15 இற்கு தாக்குதல் ஆரம்பமாகிறதுஇ எதிரி கடுமையான எதிர்ப்புக்காட்டுகிறான். அந்த கடுமையான எதிர்ப்புகளின் மத்தியிலும் உப்பள முகாம்மீதான தாக்குதல் உச்சம் பெறுகின்றது.

கடுமையான காயங்களுக்குள்ளான கரும்புலி சபேசன் வெடியாய் அதிர்ந்து விடுகிறான். எதிரியும் தாக்குதலுக்கு ஈடுகொடுக்க முடியாமல் பின்வாங்குகிறான். கரும்புலி குமரேசுவுக்கும் காயம். கால்கள் இரண்டும் செயலிழந்துவிட்டன. அவனும் வெடியாகிப் போகிறான். எஞ்சியோரைப் பின்வாங்கச் சொல்கிறான் இந்தத் தாக்குதலுக்கு தலைமைதாங்கிய குமுதன்.

படகேறி வந்த

அறிவுக்குமரன் பின்வாங்கி வந்தது இன்னமும் மெய்சிலிர்க்கும் நினைவுகளாகவே உள்ளன. உயிரோடு மீண்டுவந்து நடந்தவற்றை ஏனைய போராளிகளிடம் சொல்லி விடுவதற்காக அவன் அனுபவித்த இன்னல்கள் எல்லாம் வார்த்தைகளுக்கும் வரிவடிவங்களுக்கும் அப்பாற்பட்டவை. எடுத்து வைத்த ஒவ்வொரு அடியிலும் உயிர்பறிக்கும் ஆபத்துக்கள் காத்திருந்தன. சாதாரண மனிதப்பிறவிகளால் நினைத்துப்பார்க்கமுடியாத அந்த ஆபத்துக்களையெல்லாம் கடந்து அவன் தன் தோழர்களை வந்தடைந்தான். அவன் கடந்த ஒவ்வொரு கணமும் மரணம் அவனைத் துரத்திக் கொண்டிருந்தது. ஒவ்வொரு தடவையும் மரணத்தை நெஞ்சிலுதைத்து வீழ்த்திவிட்டு அவன் நிமிர்ந்தான்.

இப்போது தாக்குதலுக்கு தலைமைதாங்கிவந்த குமுதனுக்கும் உடல் முழுக்க காயம். “நான் சாச்சை இழுக்கப்போறன். நீங்கள் போங்கோ” அந்த வார்த்தைகளும் அறிவுக்குமரனுக்குள் நுழைந்தன. அறிவுக்குமரன் குமுதனைப்பார்க்கிறான். “நீங்கள் வெளியிலை போகோணும். உங்களுக்குள்ளை கிடக்கிற முழுத்தகவல்களையும் போய்ச்சொல்லவேணும். அதுஇ இன்னொரு சண்டை செய்யிறதுக்கு உதவும்”

சிறிது நேரத்தில்இ அந்த வெடிச்சத்தம் பெரிதாய் ஒலிக்கிறது. இப்போது அறிவுக்குமரன் மட்டுமேஇ அறிவுக்குமரன் தன்னை எப்படியோ பாதுகாத்துக் கொண்டுஇ எத்தனையோ இடர்களைத் தாண்டி வெளிவருகிறான். மரணத்தைத் துரத்தி தேசத்தின் புதல்வனாய் வெளியேவந்தவன். தன் உணர்வுகளை கவிதை வரிகளாக்கினான்.

இளமையை இதமான உணர்வுகளை
இனியசுகங்களை ஒதுக்கியவர்களே….
தமிழர் எம் தேசத்தை செதுக்கியவர்களே..
இன்று உங்களுக்காய் கல்லறையில்
நினைவுக்கல்லில் உங்கள்
பெயரைச்செதுக்குகின்றோம்…
செதுக்கப்படாமலும்… இன்னும்சிலர்
வெளித்தெரியாமல் எங்கள் மனதில் மட்டும்’

அறிவுக்குமரன் ஒருபோதும் ஓயாத புயற்காற்றுஇ ஆனையிறவுப் படைத்தளப் பிரதேசத்துக்குள்.. வேவுப்பணிகளில் ஈடுபட்டான்…. வேவுப்பணிகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது… கையில் காயமுறுகிறான்.. ஆனாலும்… காயம் மாறமுன்பு… மீண்டும் கடும் பயிற்சிகளில் ஈடுபடுகிறான்…

10.10.1999 அன்று அவன் திருமலைக்கு செல்லவேண்டும்… அங்கும் அவனது கடமைகள் இருந்தன… அன்று – முதல் பெண்மாவீரர் இரண்டாம் லெப்டினன் மாலதியின் நினைவு நாளில் தன் உள்ளத்து உணர்வுகளைக் கொட்டி அனைவருடனும் பழகுகின்றான்.. அவனது அன்பில் எல்லோரும் திளைத்திருக்க… கையசைத்து படகேறுகிறான் அறிவுக்குமரன்.

திருமலையில்… அவனுடைய பணிகள் தொடர்ந்து கொண்டிருந்தன…. இரவும் பகலுமாய் அவன் உழைத்தான். கால்களிலும்இ கைகளிலும் உள்ள விழுப்புண்கள் வேதனை கொடுத்தாலும்… அவன் அதைப் பொருட்படுத்தவில்லை. ஆறுமாதங்களாய் அவனது அயராத பணிக்கு நடுவே.. அந்த அழைப்பு… அவனை வன்னி பெருநிலப்பரப்புக்கு வருமாறு கேட்கிறது… அவனுக்குள் ஆனந்தம்… மீண்டும் வன்னி மண்ணைப் பார்க்கப் போகும் பரவசம்… அருகே நின்ற தோழனின் கரங்களைப் பற்றி தன் அன்பைத் தெரிவித்தவன்… அவனிடம் இரு கைக்குண்டுகளையும் வாங்கிக் கொண்டு புறப்படுகிறான்.

11.04.2000 அன்று…. கடலிலே படகு அறிவுக்குமரனையும்இ துணைப்படைவீரன் ஜோன்சனையும் ஏற்றிக்கொண்டு விரைகிறது… அறிவுக்குமரனின் முகத்தில் ஆனந்தப் பூரிப்பு. பழைய தோழர்களின் நினைவுகள் கொடிவிட்டுப் பறக்கின்றன..

(உயிர்கொடுத்த தோழர்களின் உணர்வுகொண்டு செல்லுவோம்… பாடல்வரிகள் ஓய…)

கடலில் எதிரியோடு மோதல் வெடிக்கிறது… அந்த மோதலில் வீரவரலாகிறான் அறிவுக்குமரன்… அறிவுக்குமரனோடு… துணைப்படைவீரன் ஜோன்சனும்இ அறிவுக்குமரன் கரும்புலி மேஜர் அறிவுக்குமரானாய்.. எல்லோர் மனங்களிலும் நிறைகிறான்… அறிவுக்குமரனுக்குள் ஆயிரம் உணர்வுகள் இருந்தன. அவன் சிறந்த படைப்பாளியாகவும் இருந்தான்…. கவிதைகளைஇ பாடல்களைஇ சம்பவங்களை புலிகளின்குரல் நேயர்களுக்காக எழுதினான்… தன்னுடைய அனுபவங்கள்.. தன்னோடிருந்த தோழர்களின் சாதனைகள்இ அவர்களின் உள்ளத்து உணர்வுகள் மக்களை சென்றடைய வேண்டும் என்று அவன் எண்ணினான்.. புலிகளின்குரல் வானொலியில் அவனுடைய எண்ணங்களும்இ சிந்திப்புகளும் ஒலிபரப்பாகின.

அறிவுக்குமரனை திருமலைக்கடற்பரப்பு தன்னுடன் வாரி அணைத்துக் கொண்டது. அவன் சாதித்துவிட்ட சாதனைகள் எங்களோடு நிறைந்திருக்கின்றன. அவனின் இலட்சியமும் இதயக்கனவுகளும் எங்களோடு ஒட்டியனவாய் என்றுமுள்ளன.

சி. கண்ணம்மா.

கரும்புலி மேஜர் அறிவுக்குமரன்
குமாரவேல் கேதீசன்
வவுனியா

பிரிவு: கரும்புலி
நிலை: மேஜர்
இயக்கப் பெயர்: அறிவுக்குமரன்
இயற்பெயர்: குமாரவேல் கேதீசன்
பால்: ஆண்
ஊர்: வவுனியா
மாவட்டம்: வவுனியா
வீரப்பிறப்பு: 15.02.1973
வீரச்சாவு: 11.04.2000
நிகழ்வு: 11-04-2000 அன்று திருமலைக் கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையினருடன் ஏற்பட்ட நேரடி மோதலின் போது வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்
துயிலுமில்லம்: கிளிநொச்சி
மேலதிக விபரம்: மேற்படி மாவீரர் துயிலும் இல்லத்தில் இம்மாவீரரின் நினைவுக்கல் நாட்டப்பட்டுள்ளது

தமிழீழ தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிரை ஈந்த இந்த வீரமறவர்களிற்கு எமது வீரவணக்கங்கள். இதே நாளில் வீரச்சாவைத் தழுவிய ஏனைய மாவீரர்களிற்கும் எமது வீரவணக்கங்கள். bt maj arivukumaran

Up ↑