இச் சமரானது மூன்று பிரதான பிரிவுகளாக நடைபெற்றது.
முதலாவது வன்னிப் பெருநிலப்பரப்புப் பக்கமாக அதாவது பெரிய உப்பளம் சுற்றுலா விடுதியை நோக்கியதாக இருந்து இச் சமரை தளபதி பால்ராஜ் அவர்கள் நெறிப்படுத்தி வழிநடாத்த உள் நடவடிக்கையை தளபதி சூசை அவர்கள் வழிநடாத்தினார்.இவ் இராணுவ நடவடிக்கை. முதலாவதாக 10.07.1991 அன்றும் இரண்டாவதாக 13.07.1991 அன்றும் நடைபெற்றது.13.07.1991 அன்றைய தாக்குதலில் மேஜர் கேசரி அவர்களும் உதவியாக கப்டன் டக்ளஸ் அவர்களும் ஓட்டிச் சென்ற கனரக வாகனம் மீது இராணுவச் சிப்பாய் வாகனத்தில் ஏறி குண்டைப் போட்டு வெடிக்கவைத்ததால் அன்றைய முயற்சியும் வெற்றியளிக்கவில்லை.
இரண்டாவது தென்மராட்சிப் பக்கமாக அதாவது தடைமுகாமை கைப்பற்ற இச் சமரை தளபதி தமிழ்ச்செல்வன் அவர்கள் வழிநாடாத்த உள் நடவடிக்கையை தளபதி குணா அவர்கள் வழிநடாத்தினார்.இந் நடவடிக்கை முறையே 11.07 1991அன்றும் இரண்டாவதாக 27.07 1991 அன்றும் நடைபெற்றது.இவ் இராணுவ முகாம் தாக்குதல்களும்.வெட்டவெளியேன்பதால் உழவு இயந்திரங்களுக்கு இரும்புத் தகட்டால் மூடப்பட்டு அதன் பின்னால் போராளிகள் சென்றே தாக்குதல் நடாத்தினார்கள் .இந்த தாக்குதல்களிலிருந்து பட்ட அனுபவங்களின்படி 27.07.1991 அன்றைய தாக்குதல் எமது காவலரணிலிருந்து எதிரியின் காவலரண்களுக்கு அண்மைவரை பதுங்கு குழிகள் வெட்டி அதனூடாகா அணிகள் எழும்பி தாக்குதல் நடாத்திக்கொண்டு தடைமுகாமை கைப்பற்றுவதென்றும் .
மற்றொரு நடவடிக்கை கனரக வாகனத்துக்கு இரும்புத் தகடு அடிக்கப்பட்டு அதனை காப்பாக பயன்படுத்தி போராளிகள் சென்று தடைமுகாமை கைப்பற்றுவதென்றும்.ஆனால் துரதிஸ்டவசமாக எதிரியின் தாக்குதலால் கனரக வாகனம் எதிரியின் காவலரனுக்கு அண்மையாக செயலிழந்தது.இக்கனரக வாகனத்தை செலுத்திய தளபதி லெப் கேணல் சரா அவர்களும் உதவியாக சென்ற மேஜர் குகதாஸ் அவர்களும் வீரச்சாவடைந்தனர்.இச் சமரின் இன்னுமொரு முயற்சியாக மேஜர் சொனி அவர்கள் தலமையிலான ஒரு அணியொன்று சின்ன உப்பளமூடாகச் சென்று இராணுவத்திற்க்கு பின்பக்கமாக சென்று தாக்குதல் நடாத்தி தடைமுகாமை கைப்பற்ற எடுத்தநடவடிக்கையும் பலனளிக்கவில்லை.இச் சமரின் உள் நடவடிக்கையை வழி நடாத்திய தளபதி குணா அவர்கள் விழுப்புண்ணைடைந்தார் .அவரை போராளிகள் பின்னுக்குக் கொண்டுவந்தார்கள்.ஆனால் அவரோ மருத்துவமனைக்கு செல்ல மறுத்து ஆனையிறவிலே நின்றார்.அதன் பின்னர் மூத்த தளபதி பொட்டு அவர்களால் வலுக்கட்டாயமாக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்.இது மாதிரியான பலசம்பவங்கள் இச் சமரில் நடைபெற்றன.
மூன்றாவது வெற்றிலைக்கேனி கட்டைக்காடு கடற்கரை இவ்விடத்தில் கடற்படையால் தரையிறக்கலாமென எதிர்பார்த்து காத்திருந்த வேளையில் 14.07.1991 அன்று கடுமையான தாக்குதலுக்கும் மத்தியில் தரையிறக்கினான்.இச் சமரை வழிநாடாத்திய தளபதி லெப்.கேணல் சூட்டி அவர்கள் அன்றைய தினம் வீரச்சாவடைந்தார்.இருந்தும் சண்டைதொடர்ந்தது.முன்னேறிய இராணுவத்தை அதாவது வெற்றிலைக்கேணியிலிருந்து புல்லாவெளிச்சந்திவரை சங்கிலித்தொடராக நின்ற இராணுவத்தை 21.07.1991அன்று தளபதி சொர்ணம் தலைமையில் தகர்த்தெறிந்து நுழைதல் பாணியிலான ஒரு தாக்குதல் முள்ளியானில் மேற்கொள்ளப்பட்டது.இத் தாக்குதல் திட்டமானது இராணுவத்தை இரண்டாகப் பிரிப்பது ஆனால் இரண்டாகப்பிரிக்க முடியாவிட்டாலும் .
பல இராணுவத்தை கொன்று ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன.தொடர்ந்து முன்னேறிய படையினரை.கடுமையான எதிர்த் தாக்குதலைத் தொடர்ச்சியாக தொடுத்தனர்.கொம்படி வரை வந்த படையினர்.கொம்படியிலிருந்து இயக்கச்சி சந்திக்கு வர முயற்சித்தபோது.தளபதி லெப் .கேணல் ராஜன்.அவர்கள் தலமையிலான அணிகள் இராணுவத்தின் முன்னேற்ற முயற்சியை எதிர்த்து கடுமையாக போரிட்டதால் படையினர் அம் முயற்சியை கைவிட்டு .அப்படியே கைவிட்டுவிட்டு வேறு பாதையால் முன்னேற்றத்தை தொடர அங்கும் எதிர்த்தாக்குதல் நடைபெற்றது.
இச் சமர் பற்றி எழுதுவதற்க்கு இலகுவானதாக இருந்தாலும் ஆனால் போராளிகள் பட்ட கஸ்ரம் கொஞ்சமல்ல கடற்கரை மணல் உப்பு வெட்டை காப்புகள் ஏதுமற்ற நிலை சுட்டெரிக்கும் வெயில் ஓய்வற்ற நித்திரையற்ற பொழுதுகள் உணவுகள் இருந்தும் உண்ணமுடியாத நிலை இவைகளுக்கும் மத்தியில் வெல்ல வேண்டும் என்கிற எண்ணம் மட்டுமே தவிர வேறொன்றுமில்லை இவ் அா்ப்பணிப்பு மிக்க இச்சமர் இயக்கத்திற்க்கு பல முக்கியத்துவத்தை உணர்த்திய சமர் இச் சமர் பல படையணிகளின் தோற்றத்தை உருவாக்கிய பல துறைகளின் அவசியத்தை உணர்த்தி சமர் இலங்கையில் இரண்டு இராணுவம் உள்ளதை வெளி உலகுக்கு உணர்த்திய இச் சமர்களை ஒருங்கிணைத்து செவ்வனவே புலனாய்வுத் துறைப் பொறுப்பாளரும் மூத்த தளபதியுமான பொட்டு அவர்கள் தலைவரின் ஆலோசனையுடன்.வழிநடாத்தினார். ஒரு மாதமாக நடைபெற்ற இவ் இராணுவ நடவடிக்கையில் அறுநூற்றி மூன்று போராளிகள வீரச்சாவடைந்தனர்.
உண்மையிலே இச்சமரிலே வீரகாவியமான ஒவ்வொரு போராளிகளுக்குப் பின்னாலும் அற்புதமான தியாகங்களும்,மனிதத்தன்மைக்கு அப்பாலான விடுதலை உணர்வும் உள்ளன. இவர்களுடைய அர்ப்பணிப்புக்கள் சாதாரணமான இழப்புக்கள் அல்ல மாறாக தமிழர்களுடைய வீர வரலாற்று சரித்திரங்கள்.
இச்சமரிலே தங்கள் உயிர்களைக் கொடையாக்கி தாய்மண் விடுதலைக்காகத் தங்களை ஈகம் செய்த அனைத்து மாவீரர்களுக்கும் எமது வீரவணக்கத்தைத் தெரிவித்துக் கொள்வோமாக.
2 ஆம் கட்ட ஈழப்போர் தொடங்கியது. வெறும் வான் தொடர்புகளை மட்டுமே நம்பி எமது மண்ணில் எதிரி அமைத்துவைத்திருந்த இராணுவ முகாம்களான கோட்டை, கொக்காவில், கொண்டச்சி என்பன போரின் ஆரம்பக் கட்டத்திலேயே இறுக்கமான முற்றுகைக்குட் கொண்டு வரப்பட்டதால் எமது கைகளுள் வீழ்ந்தன. எனவே, எதிரி இப்போது வான்படை, கடற்படை, தரைட்படையென முட்படைகளினதும் தொடர்புகளுடன்கூடிய அல்லது அவ்வாறான தொடர்புகளை உடன் ஏற்படுத்தக்கூடிய இராணுவக் கூட்டுத்தளங்களை மட்டுமே எமது பிரதேசங்களில் வைத்திருப்பதற்கு நிப்பந்திக்கப்பட்டான்.
ஆனையிறவுத் தளமும் இத்தகைய அமைப்பைக் கொண்டதாக இருந்தது. இம்முகாம் மீது நாம் தாக்குதலைத் தொடுக்கும் பட்சத்தில் வான், கடல், தரையென மும்முனைகளிலும் எமது நடவடிக்கைகளை எதிகொள்ளக்கூடிய வாய்பான சூழ்நிலையில் ஆனையிறவு இராணுவத்தளம் இருந்தது யாழ்ப்பாணக் குடாநாட்டிற்கும் தமிழீழத்தின் ஏனைய பகுதிகளுக்குமான ஒரேயொரு தரைப்பாதையாக ஆனையிறவுக் கடல்நீரேரியூடாக ஒடுங்கிச்செல்லும் பாதையில், குடாநாட்டின் கழுத்தை நெரிப்பதுபோல் ஆனையிறவு இராணுவத்தளத்தை எதிரி நீண்டகாலமா கவே வைத்திருந்தான். கடல்நீரேரியும் நீண்ட உப்புவெளிகளைக் கொண்டிருந்த பிரதேசங்களும் எதிரியின் பாதுகாப்பிற்கு நம்பிக்கை கொடுப்பதாக அமைந்திருந்தன
இவ்வாறு, சகலவழிகளிலுமே எதிரிக்குச் சாதகமாக இருந்த ஆனையிறவுத் தளத்தின்மீது ஒரு முற்றுகைத் தாக்கியழிப்புச் சமரை மேற்கொண்டு, அதை வீழ்த்துவதென எமது இயக்கம் முடிவுசெய்தது.ஒரு மரபுவழிச் சமருக்குரிய ஆட்பலநிலையிலும் கருவி நிலையிலும் எதிரி பல மடங்கு மேலோங்கியிருந்தான். எனினும், ஒரு கெரில்லாப் போராட்ட அமைப்பிற்குரிய ஆட்பல நிலையையும் கருவிநிலையையும் மட்டுமே கொண்டிருந்த எமது இயக்கம், மரபுவழிச் சமருக்கு முகங்கொடுக்கக்கூடிய எமது போராளிகளின் மனத்திடத்தை மட்டுமே நம்பிச் சமரங்கைத் திறக்க முடிவுசெய்தது. எமக்குக் கிடைக்கக்கூடிய வளங்களை வைத்து, எமது போராளிகளின் தனித்து வமான தொழினுட்ப அறிவை மட்டுமே பயன்படுத்தி மரபுவழித் தாக்குதலுக்கு மிகவும் இன்றிய மையாததாயிருந்த போர்க்கலங்கள் ஆனையிறவுச் சமருக்காகத் தயாரிக்கப்பட்டிருந்தன. உழவு இயந்திரம், புள்டோசர் என்ப ன பெரும் வெட்டைகளூடாக எமது அணிகளை நகர்த்துவதற்குத் தேவையான கவசவாகனங்களாக உருமாற்றப்பட்டிருந்தன. எமதியக்கத்தால் தயாரிக்கப்பட்ட “பசிலன் – 2000′ என்ற அதிகதாக்கம் விளைவிக்கக்கூடிய குறுந்தொலைவீச்சுப் பீரங்கியும் எம்மிடம் இருந்தது.
எனவே, போராளிகளின் மனப்பலத்தை மட்டுமே பெரிதாக எண்ணித் திட்டமிடப்பட்ட ‘ஆகாய, கடல், வெளி நடவடிக்கையில், முகாமின் தென்பகுதியூடான நடவடிக்கைகளுக்கான பிரதான பணி சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியிடம் வழங்கப்பட்டது. ஏனைய படையணிகளையும் உள்ளடக்கி இத்தென்சமர்முனையைச் சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதி பால்ராஜ் அவர்கள் வழிநடத்தினார்.
போன்ற இடங்களில் நடைபெற்ற சமகளில் படையினர் கடும் இழப்பினைச் சந்தித்தனர். பூவரசங்குளச் சந்திப்பகுதியில் நடைபெற்ற கடுமையான சமளிற் சிறீலங்கா வான்படைமீதான எமது படையணிப் போராளிகளின் தாக்குதலில் ‘பெல்’ ரக உலங்குவானுர்தி ஒன்று சுட்டுவீழ்த்தப்பட்டது. இது போராட்ட வரலாற்றில் சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி புரிந்த முக்கிய சாதனையாகும், எதிரியின் கவசவாகனங்கள் பலவும் சேதமாகின. களத்தில் மூக்குடைபட்ட எதிரி தன் அநாகரிகத்தை வெளிப்படுத்தி அண்டியிருந்த மக்கள் குடியிருப்புக்கள்மீது கண்மூடித்தனமான குண்டு வீச்சுக்களை நடாத்தினான். 19.06.1991 வரை நடந்த கடுமையான சமரில் 50 இற்கு மேற்பட்ட படையினரையும் ஆயு தங்களையும் இழந்ததுடன் 150 இற்கு மேற்பட்ட படையினர் படுகாயமடைந்ததிற் படையினர் பின் வாங்கத் தொடங்கிள். புலிகளின் பலம்பற்றி இராணுவ விமர்சகர்கள் வியந்து நின்ற இச்சமரின் வெற்றிக்காகச் சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியைச் சேர்ந்த போராளிகள் 22 பேர் வரலாறாகினர்.
‘வன்னி விக்கிரம’ நடவடிக்கைகளில் இலங்கை இராணுவத்தினரின் இழப்பைப்பற்றி ஆராய்ந்த பி.பி.சி. உலக சேவையின் இலங்கை முகவர் கருத்து வெளியிடுகையில் இலங்கைத்தீவில் இலங்கை இராணுவம் புலிகளிடம் புதிய சிக்கல்களை எதிர்கொள்ளவேண்டியுள்ளதாகத் தெரிவித்தார். அவ்வளவிற்குச் சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் ‘வன்னி விக்கிரம’ எதிர்த்தாக்குதல் வலுப்பெற்றிருந்ததை உலகம் அறிந்துகொண்டது
–நெருப்பாற்று நீச்சலில் பத்தாண்டுகள் நூல்
யூலை மாதம் பதினெட்டாம் திகதி ஆரம்பித்தது “ஓயாத அலைகள்”, வரலாற்றுப் பெருமிதத்தைச் சுமந்து நெஞ்சை நிமிர்த்தி அது உலகத்திற்கு தன்னை இனம்காட்டிக் கொண்டது. இரண்டு நாளிலேயே முல்லைப்படைத்தளம் முழுமையும் விடுதலைப் புலிகளின் கைகளில் வந்தது. அடுத்த ஓரிரு தினங்களிலேயே சுற்றுவட்டாரத்திலும் சிங்களக் கொடுங்கோன்மையினரின் பாதச் சுவடுகள் துடைத்தெறியப்பட்டு முல்லை நகர் சுத்தப்படுத்தப்பட்டது. அதற்கிடையில், முல்லைத்தீவு முகாம் எக்காரணம் கொண்டும் மூடப்படமாட்டாது, எக்காரணம் கொண்டும் அதனைக் கைவிடமாட்டோம் என, சிறீலங்காவின் பாதுகாப்பு பிரதி அமைச்சர் அனுருத்த ரத்வத்த சூழுரைத்து அனுப்பிவைத்த படை, பெரும் பிரயத்தனத்தின் மத்தியில் முல்லைப்படைத்தளத்தில் இருந்து சுமார் பத்து கிலோமீற்றர் தொலைவில் அலம்பிலிலும் அதனை அண்டிய பகுதிகளிலும் இறக்கப்பட்டது. ஆனாலும் நிலைமையை முன்னரேயே எடைபோட்டிருந்த விடுதலைப்புலிகள் அவர்களைச் சுற்றி வளைத்துக் குறிவைத்தனர்.
நகர முடியாத இறுக்கமான பொறியில் சிக்கிக்கொண்ட படையினர் வாழ்வுக்கும் சாவுக்கும் இடையில் போராடிக்கொண்டிருந்தானர்.விடுதலைப் புலிகளோ பாதுகாப்பாக நிலை எடுத்து எதிரிகளிடம் இருந்து கைப்பற்றிய ஆயுதங்களைக் கொண்டே எதிரிகளைத் தாக்கினர். இங்கு களநிலைமை இப்படியிருக்க, குழும்பில் குளுகுளு அறையில் இருந்துகொண்டு அமைச்சர்கள் விடும் அறிக்கை வேறுவிதமாக இருந்தது. முல்லைத்தீவு முகாமுக்கு அனுப்பப்பட்டுள்ள மேலதிக படையினர் முகாமில் உள்ள படையினருடன் எந்த நேரத்திலும் இணைந்துகொள்வார்கள், முல்லைத்தீவு முகாமின் ஒரு பகுதியில் இருந்து கொண்டு படையினர் புலிகளுடன் சண்டையிட்டு வருகின்றனர் என்றெல்லாம் அமைச்சர்கள் இலகுவாக செய்திகள் தந்து கொண்டிருந்தனர்.
ஆனால் களநிலைமை வரலாறு காணாத ஒரு பெரும் தோல்வியை அரசின் தோள்களில் சுமத்திக்கொண்டிருந்தது. யாழ். வெற்றி என்ற உள்ளீடற்ற பொய்மைத் தோற்றம் பொசுங்க்கிக்கொண்டிருந்தது. எதிர்காலத்தில் மீளமுடியாத ஒரு கிடுக்குப் பிடியில் அரசு சிக்கிக்கொண்டிருந்தது. உண்மை இப்படியிருக்க பொய்மைகள் வேறு முகத்தில் ரூபவாஹினியில் தோன்றின.
உண்மையை எவ்வளவுகாலம் திரையிட்டு வைப்பது முழுப்பூசனிக்காயை சோற்றில் மறைக்க முடியுமா…? ஆனால் மறைக்க முனைந்தார்கள். சத்ஜய இராணுவ நடவடிக்கையின் வாயிலாக. சத்ஜய இராணுவ ஆரம்பிக்கப்பட்டது யூலை இருபத்தாறில். இந்த இராணுவ நடவடிக்கை ஆணையிரவில் இருந்து கிளிநொச்சியை நோக்கி, கையறுநிலையில் சடுதியாக மேற்கொள்ளப்பட்ட இராணுவ நகர்வு என்பது இராணுவ விவகாரங்கள் புரியாதவர்களால் கூட புரிந்து கொள்ளக்கூடியதே.
முல்லைத்தீவு முகாமைக் காப்பாற்றப் போனவர்கள் காப்பாற்றுவார் இன்றி, மாழ்வதைத் தவிர மீளும் வகையறியாமல் திகைத்து நிற்க, இந்த சத்ஜய நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது. ஆனையிறவில் இருந்து கெடுகாலத்தில் புறப்பட்ட இராணுவம் பரந்தனில் தடுத்து நிறுத்தப்பட்டு தாக்கப்பட்டது. கடும் எதிர்ப்பு இன்றி பரந்தன் வரை முன்னேறிய சிறிலங்காப் படையினர் பத்துநாட்கள் பரந்தனிலேயே தரித்து நின்று, தமது நிலைகளைப் பலப்படுத்தி, மீண்டும் அடுத்த நகர்வை ஆகஸ்ட் மாதம் 5ம் திகதி ஆரம்பித்தனர். முன்னர் குடாநாட்டில் மேற்கொள்ளப்பட்ட சூரியக்கதிர்கள், போல் இது சுலபமாக இருக்கவில்லை. வான்வழியாகக் குண்டுகளைச் சொறிந்தபடி, எறிகணைகளை மழைபோல் பொழிந்தபடி, டாங்கிகள் கனரக வாகனங்கள் சகிதம் புறப்பட்ட இராணுவத்தினர் சொற்ப தூரத்தில் வைத்தே கடுமையாகத் தாக்கப்பட்டனர். உறுதியான முடிவுடன் விடுதலைப் புலிகள் தாக்குதலை நடத்தினர்.
பெரும் எடுப்பிலான இந்த நகர்விற்கு விடுதலைப்புலிகள் முகம் கொடுக்காமல், குடாநாட்டில் பின்வாங்கியது போல் பின்வாங்குவார்; நகர்வு சுலபமாய் அமையும் எனத் திட்டம் வகுத்தோர் தப்புக்கணக்குப் போட்டிருக்கக் கூடும். ஐந்தாம் ஆறாம் திகதிகளில் நடந்த சண்டையில் ஆறு யுத்த டாங்கிகள் அழிக்கப்பட்டன. நூற்றிற்கும் மேற்ப்பட்ட இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். மேலும் பலர் படுகாயப்படுத்தப்பட்டனர். இரண்டு நாள் சண்டையில் பெருமளவில் இராணுவ வளங்களை இராணுவம் இழந்தது. பரந்தனில் இருந்து முன்னேறிய படையினர், மீண்டும் ஒரு தோல்வியைச் சுமந்துகொண்டு பரந்தனுக்குப் பின்வாங்கியுள்ளனர்.
காலப் போருத்தமின்றித் தொடங்கப்பட்ட இந்த சத்ஜய இராணுவ நடவடிக்கையின் தேவை என்ன என்பதற்கு ஒரு காரணம் வெளிப்படையாக சொல்லப்படுகிற போதும், இதற்கு இன்னுமொரு காரணமும் காட்டப்படுகின்றது. முல்லைத்தீவைக் காப்பாற்றவென, அமைச்சர் ரத்வத்தையால் அனுப்பிவைக்கப்பட்ட படையினர் விடுதலைப் புலிகளால் சுற்றிவளைக்கப்பட்டு தாக்கப்பட்டுக் கொண்டிருந்த அதேவேளை, அவர்களை மீட்டெடுப்பதற்கு வழி தேடிய சிறிலங்கா பாதுகாப்பு உயர்பீடம், இந்த சத்ஜயவைக் கண்டு பிடித்ததாகச் சொல்லப்படுகிறது. ஒருமுகப்பட்டிருந்த விடுதலைப் புலிகளின் கவனத்தை, சிதறடித்து படையினரைக் காப்பாற்ற அரசாங்கம் திட்டமிட்டதாகக் கருதப்படுகிறது.
அதாவது விடுதலைப் புலிகளின் முற்றுகைக்குள் இருந்து, சிக்கிய படையினரை இழுத்தெடுக்க அரசு கையாண்ட உத்தி என சொல்லிக்கொள்கின்றார்கள். கிளிநொச்சிவரை முன்னேறுவது, முடிந்தால் தரைப் போக்குவரத்துப் பாதை ஒன்றை அமைப்பது என்ற அடிப்படையில், முன்னர் வரைந்த திட்டத்திற்கு திடீரென உயிர் கொடுத்து நகரவிட்ட அரசு, இதன் மூலம் இரு காரியங்களைச் சாதித்துக் கொள்ளலாம் என நம்பியிருக்கக்கூடும். முல்லைத்தீவில் அப்பிக் கொண்ட சகதியைத் துடைப்பது, சிக்குண்ட படையினரைக் காப்பது என்ற வகையில் அது சிந்தித்திருக்கக்கூடும்.
எது எப்படி இருப்பினும், இரு களநிலையிலும் விடுதலைப் புலிகள் தமது உறுதியான பலத்தை வெளிக்காட்டியுள்ளனர். முல்லைத்தீவை சுத்தப்படுத்தி மக்களின் வளமான வாழ்க்கைக்கு பாதை திறந்த விடுதலைப் புலிகள், கிளிநொச்சி நோக்கிய இராணுவத்தின் ஆக்கிரமிப்புப் பாதிக்கும் ஆப்பு வைத்தனர்.
– சுப்பு.
வெளியீடு : எரிமலை இதழ்
- சத்ஜய நடவடிக்கைக்கு எதிரான சமரில் காவியமான 67 மாவீரர்களின் வீரவணக்க நாள்
- முல்லைக் கடற்பரப்பில் காவியமான கடற்கரும்புலிகளின் வீரவணக்க நாள்
—
2-08-1994 அன்று அதிகாலை யாழ்ப்பாணத்திலிருந்த பலாலி விமானப்படைத் தளம் மீது விடுதலைப்புலிகளின் கரும்புலிகள் அணியினர் அதிரடித் தாக்குதலொன்றை நடத்தினர்.
பலாலி விமானப்படைத் தளம் மீதான இரண்டாவது கரும்புலித் தாக்குதல் அதுவாகும்.
1993 நவம்பரில், தவளைப் பாய்ச்சல்’ என்ற பெயரிட்டு பூநகரி கூட்டுப்படைத் தளம் மீது விடுதலைப்புலிகள் பெருமெடுப்பில் தாக்குதலை நடத்தினர். அந்த நேரத்தில் திசைதிருப்பல் தாக்குதலாக பலாலி படைத்தளத்தின் மீது கரும்புலித் தாக்குதலொன்றும் நடத்தப்பட்டது.
அதுவே அப்படைத்தளம் மீதான முதலாவது கரும்புலித்தாக்குதல். ஆனால் சில தவறுகளால் எதிர்பாராத விதமாக அத்தாக்குதல் தோல்வியில் முடிவடைந்தது. அத்தாக்குதலுக்காக கிட்டத்தட்ட 30 பேர் கொண்ட பெரிய அணி ஊடுருவியிருந்தது. அச்சண்டையில் 13 பேர் வீரச்சாவடைய மிகுதிப்பேர் தளம் திரும்பினர்.
அந்தத் திட்டத்திலிருந்த தவறுகள் களையப்பட்டு, சிறப்பான வேவுத் தரவுகளோடு சிறிய அணியொன்று தாக்குதலுக்குத் தயாரானது. கெனடி எனப்படும் நிலவன் தலைமையில் அவ்வணி தாக்குதலுக்கு நகர்ந்தது. (நிலவன், அச்சமரில் விழுப்புண்ணடைந்து மயங்கிய நிலையில் எதிரிகளிடம் பிடிபட்டு நீண்டகாலம் சிறையிலிருந்து பின்னர் கைதிகள் பரிமாற்றத்தின் போது விடுவிக்கப்பட்டார்.)
பலாலி விமானப்படைத்தளம் நோக்கி நகர்ந்துகொண்டிருந்தபோது இடையில் மாவிட்டபுரத்தில் எதிரியோடு மோதவேண்டிய நிலை வந்தது. அம்மோதலில் எதிரியின் பவள் கவசவாகமொன்று அழிக்கப்பட்டது. புலிகளின் அணியில் எவரும் எவ்வித காயமுமில்லை. ஆனால் அணி சிதைந்துவிட்டது. அணித்தலைவன் நிலவனோடு சிலரும், ஏனையவர்கள் இரண்டு மூன்றாகவும் சிதறிவிட்டனர்.
தன்னோடிருந்தவர்களை அழைத்துக்கொண்டு பலமைல்கள் தள்ளியிருந்த விமானப்படைத்தளம் நோக்கி மிகவேகமாக நகர்ந்தார் அணித்தலைவர் நிலவன். எதிரி உஷாராகிவிட்டான். தமது எல்லைக்குள் புலியணி ஊடுருவிட்டதையும், அவர்களின் இலக்கு பலாலி விமானப்படைத்தளம் தான் என்பதையும் எதிரி உடனே புரிந்துகொண்டான். எதிரி முழு அளவில் தன்னைத் தயார்ப்படுத்துவதற்கும் தாக்குதலை நடத்திவிட வேண்டுமென்பதே அணித்தலைவனின் குறிக்கோளாக இருந்தது.
அதன்படி மிகவேகமாக விமானப்படைத் தளத்தினுள் ஊடுருவி சண்டையைத் தொடங்கியது புலியணி. இடையிலேயே அணி குலைந்துபோய் பலம் குறைந்த நிலையிலிருந்தாலும், இருக்கும் வளத்தைக்கொண்டு அதிர்ச்சித் தாக்குதலைத் தொடுத்தது புலியணி. அத்தாக்குதல் தொடங்கியதும், ஏற்கனவே ஆயத்த நிலையில் எதிரியிருந்ததால் இரண்டொரு விமானங்கள் ஓடுபாதையை விட்டுக் கிழம்பி தம்மைக் காத்துக்கொண்டன. மேலெழும்புவதற்கு முன்னரே புலிகளால் ‘பெல் 212′ ரக உலங்குவானூர்தியொன்று அழிக்கப்பட்டது.
தொடர்ந்து நடந்த சண்டையில் கரும்புலியணியில் ஐந்து பேர் வீரச்சாவடைந்தனர்.
அணியிலிருந்து சிதறியிருந்த ஏனையவர்கள் சில நாட்களின் பின்னர் ஒருவாறு தளம் திரும்பினர்.
இந்தக் கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவை தழுவிய கரும்புலிகள்.
கரும்புலி கப்டன் திரு
கரும்புலி மேஜர் திலகன்
கரும்புலி லெப். ரங்கன்
கரும்புலி கப்டன் நவரட்ணம்
சேந்தான்குளம் சந்தியடியில் ஒரு அதிகாலை, காவலரண்களுக்கு அருகாகப் பதுங்கிக்கொண்டிருந்தான் ஒரு வேவுப்புலி. காவல் உலா சுற்றிக்கொண்டு வந்த படைப்பிரிவு ஒன்றிலிருந்து எவனோ ஒரு சிங்களப் படையால் எதேச்சையாக “ரோச்” அடித்தான். வெளிச்சம் சரி நேராகத் தெறித்து அவனிலேயே பட்டது. உறுமத்தொடங்கின துப்பாக்கிகள்; தாவிப்பாய்ந்தன எம் வீரன். தலைதெறிக்க ஓடத்தொடங்கினான். எதிரியின் காணிக்குள்ளேயே ஒரு கலைபாடு விடயம் என்னவென்றால், ஏற்கனவே இரு நாட்களாக அவனுக்குச் சீரான சாப்பாடு இல்லை கலைத்துச் சுட்ட பகைவனுக்குத் தப்ப அவன் இளைத்து இளைத்து ஓடினான். உடல் ஒத்துழைக்க மறுத்தது. கால் சோர்ந்து கொண்டே போனது; ஆனாலும் எங்கோ அவன் தீடிரென மறைந்து விட, துரத்தியவர்கள் தடுமாறிப் போனார்கள்.
பிடிக்க முடியவில்லை. ஆற்றாமையால் கண்டபடி சுட்டுவிட்டுப் போய்விட்டார்கள். அப்படியே மறைந்திருந்தவன் , இரவானதும் மெல்ல மெல்ல ஊரத் துவங்கினான். இஅயலாமையொடு ஊர்ந்தவன், எதிரியின் அரணைக் கடந்து வந்து சற்றுத் துரத்துக்குள்ளேயே மயங்கிப் போனான். பாவம் முகாமிற்குத் தூக்கிவந்து ‘சேலைன்‘ ஏற்றியபோது கண்திறந்தவன்.
தப்பித்து வந்தது ஒரு அதிஷ்டம் என்று தான சொல்லவேண்டும்.
இப்படியாக….. எத்தனையோ மயிரிழைகளில் தப்பி, அதிஸ்டவசமாக மீண்டவர்கள் கொண்டுவந்த தரவுகள்தான் , பலாலிப் பெருந்தலத்தின் மையத்தில் குறிவைக்க எங்களுக்கு அத்திவாரமாக அமைந்தன.
பலாலித் தாக்குதலின் தார்ப்பரியத்தை விளங்கிக்கொள்ள வேண்டுமானால், எங்களது வேவு வீரர்களைப் புரிந்து கொள்ள வேண்டும். எல்லாத் தாக்குதல்களையும் போலவேதான் அதுவும்! வேவுப்புலிவீரர்கள் பெற்றுத்தந்த வெற்றி அது.
எங்களது வேவு வீரர்கள் அபூர்வமான் மனிதர்கள். சாவுக்கும் அஞ்சாத அவர்களது வீரத்தை எண்ணிப்பாருங்கள். அது போற்றுதற்குரியது. பகைவனின் நெஞ்சுக்கூட்டுக்கு மேலேறி வேவு பார்த்துவிட்டு மீளும் அந்த மனத்துணிவு அபாரமானது; அது ஒரு இணைதேட முடியாத நெஞ்சுறுதி!
தாங்கள் கொண்ட இலட்சியத்தில் அவர்கள் எத்துணை பற்றுக் கொண்டவர்களாக இருக்கிறார்கள் என்பதைச் சிந்தித்துப் பாருங்கள். அந்த இலட்சியத்திற்காகத் தங்களது இன்னுயிரையே துச்சமெனத் தூக்கி எறிய மனமுவந்து நிற்கும் அவர்களது தியாக உணர்வு, மேன்மை மிக்கது; உன்னதமானது!
தாயகத்தின் மீதும் தாயகத்து மக்கள் மீதும் அவர்கள் கொண்டிருந்த நேசம் இருக்கிறதே…. அது சாதாரணமானதல்ல. அது ஒரு அளவு கடந்த காதல்; தளர்ச்சியற்ற பிணைப்பு!
அந்த வீரர்களின் ஒவ்வொரு அசைவுக்குப் பின்னால் இருந்தும், எதிரியின் வலைப்புகளிற்கு மத்தியில் நின்று அவர்கள் எடுத்த ஒவ்வொரு முடிவிற்குப் பின்னால் இருந்தும், அவர்களை இயக்கிக்கொண்டிருந்த உந்துவிசை. அவர்களுடைய அந்த “மனநிலை” தான்.
எங்கள் அன்னைபூமியை ஆக்கிரமித்தி நிற்கும் சிங்களப் படைகளின் மிகப் பெரியதும், மிகவும் பாதுகாப்பானதுமான தலமென்ற பெருமையுடையது பலாலி முக்கூட்டுப் படைத்தளம்.
வடபுலப் போர் அரங்கின் பிரதான கட்டளைத் தலைமையகமும் அதுவேதான்.
தனிக்காட்டு ராயாவாக ஒரு சிங்கம், கால்களை அகல எறித்துவிட்டு அச்சமற்ற அலட்சியத்தோடு படுத்திருப்பதைப் போல ….
30 சதுர மெயில் விஸ்தீரணத்தில் ….
அகன்று நீண்டு விரிந்து கிடக்கிறது அந்தப் பெருந்தளம்.
இவை தெரியாத விடயங்களல்ல; ஆனால், ஆச்சரியம் என்னவெனில்…
“என்னை எவரும் ஏதும் செய்துவிட முடியாது” என்ற இறுமாப்போடு நிமிர்ந்திருக்கும் அந்த முக்கூட்டுத்தளத்தினுள் நுழைந்து, எங்களது வேவுப்படை வீரர்கள் குறிவைத்த இலக்கு, அதன் இதயமாகும்.
அது, சிறீலங்கா விமானப்படையின் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தலைமையகம் என்ற கேந்திர மையமாகும்.
இந்த முப்படைக் கூட்டுத்தளத்தை சுற்றி வர, பலமான் உருக்குக்கவசம் போன்று, உள்ள அதன் முன்ன்னணிப் பாதுகாப்பு வியூகத்தை ( Front Defence line ) ஊடுருவி நுழைவதென்பதே, ஒரு இமாலயக் காரியம்தான.
இமையாத கண்களுடன் , துயிலாமல் காத்திருக்கும் பகைவனின் பத்து ‘பற்றாலியன்‘ படைவீரர்கள்.
சரசரப்புக்கெல்லாம் சடசடத்து, சள்ளடையாக்கிவிடத் தயாராக அவனது சுடுகருவிகள்.
உலகெங்கிலும் இருந்து போறிக்கண்ணிகளையும், மிதிவெடிகளையும் வாங்கி வந்து, விதைத்து உருவாக்கியிருக்கும் அவனது கண்ணிவெடி வயல் ( Mines field ).
வானுலக நட்சத்திரங்களின் ஒளிர்வினைக் கொண்டே, பூவுலக நடமாட்டங்களைத் துல்லியமாய்க் காட்டும் அவனது ‘இரவுப் பார்வை‘ சாதனங்கள் ( Night vision ).
தேவைக்கேற்ற விதமாகப் பயன்படுத்தவென, தேவைக்கேற்ற அளவுகளில் கைவசமிருக்கும் அவனது தேடோளிகள் ( Search Lights ).
அடுக்கடுக்கான சுருள் தடைகளாயும், நிலத்துக்கு மேலால் வளைப்பின்னலாயும் குவிக்கப்பட்டிருக்கும் அவனது முட்கம்பித் தடுப்புகள்.
வன்னிப் பக்கத்துக் குளங்களைப் போல, உயர்ந்த அரண்களாக எழுப்பப்பட்டுள்ளன அவனது அணைக்கட்டுகள்.
உள்ளுக்கிருப்பதைக் கண்டு அறிவதற்கு வெளியில் இருந்து பார்க்க முடியாமல், நிலத்திலிருந்து வானுக்கு எழும்புகின்ற அவனது தகரவேலி.
எங்கிருந்து எங்கு என்று இடம் குறியாது, எப்போதிருந்து எப்போதுக்குள் என்று காலம் குறியாது, ரோந்து சுற்றிக்கொண்டு திரியும் அவனது ‘அசையும் காவலணிகள்’ ( Mobile Sentries ).
அத்தனை பலங்களினாலும் பலம் திரட்டி அரசு பலத்தோடிருந்தனர் எங்கள் பகைவர்.
“எந்தப் பலத்திலும் ஒரு பலவீனம் இருக்கும், தேடுங்கள்” என்றார் எங்கள் தேசியத்தலைவர்.
நூல் நுழையும் ஊசிக்கண் துவாரம் தேடிய எம் வேவுவீரர்கள், அந்த ‘மரண வலயத்தை‘ ஊடுருவிக் கடந்து, சிங்கத்தின் குகைக்குள் நுழைந்தார்கள்.
வெளியில் தனது முன்னணிக் காவலரண்களிலிருந்து, அசைக்க முடியாத தன்னுடைய பலத்தை எண்ணிப் பகைவன் இருமாந்துகொண்டிருக்க.
உள்ளே, சுமார் பத்து மைல்களுக்கு அப்பாலிருக்கும் அவனது மையத்தலத்தில், விமான ஓடுபாதைகளில், நடந்து வானுர்திகளை வேவு பார்த்துக்கொண்டிருந்தனர் எம் வீரர்கள்.
அவர்களுடைய முயற்சிதான் ஒரு கரும்புலி நடவடிக்கைக்கான திட்டத்திற்கு கருக்கொடுத்தது. அவர்களது ஓய்வற்ற கடும் உழைப்பு, அந்தத் திட்டத்தை படிப்படியாக வளர்த்து முழுமைப்படுத்தியது.
தாக்குதல் இலக்கை வேவு பார்த்து. தாக்குதலணி நகரப் பாதை அமைத்து, தாக்குதல் பயணத்தில் ‘தரிப்பிடம்‘ கண்டு தாக்குதலுக்கான நாள் குறித்த அவ் வேவுப்புலி வீரர்கள்.
கரும்புலி வீரர்களுக்கு உறுதுணையாக வழிகாட்டிச் செல்லத் தயாராகி நின்றார்கள்.
தாக்குதல் திட்டம் தயாரிக்கப்பட்டுவிட்டது.
பெரிய நோக்கம்;
அரசியல்ரீதியாகவும், படையியல்றீதியாகவும் முக்கியத்துவத்தைப் பெறக்கூடிய ஒரு நடவடிக்கை.
எமது மக்களின் உயிர்வாழ்வோடு பினைந்ததும் கூட.
ஆனால், அது ஒரு பலமான இலக்கு; உச்சநிலைப் பாதுகாப்புக்கு உட்பட்ட கேந்திரம்.
செல்பவர்கள் வேலமுடியும்; ஆனால் திரும்ப முடியாது.
சிங்கத்தின் குகைக்குள் நுழைந்து அதனை எதிர்கொள்வதற்கு நிகரான செயல் அது.
இருப்பினும் தாக்குதல் தேவையானது.
வேவு அறிக்கைகளின் அடிப்படையில் தாக்குதலுக்கான வழிமுறை தீர்மானிக்கப்பட்டது.
அது ஒரு கரும்புலி நடவடிக்கை.
நான் முந்தி நீ முந்தி என்று நின்றவர்க்குள் தெரிவாகியவர்களைக் கொண்டு தயார் செய்யப்பட்டது ஒரு தாக்குதலணி.
கெனடி அதன் களமுனைத் தளபதி; அவனோடு இன்னும் 6 வீரர்கள்.
சிர்ருருவி மாதிரிப் படிவமாக ( Model ) அமைக்கப்பட்டிருந்த பலாலி வான்படைத் தளத்தையும், அதன் ஓடுபாதைகளையும் சுற்றி அவர்கள் நின்றுகொண்டிருந்தனர்.
தளபதி கடாபி அவர்களுக்குரிய தாக்குதல் வழிமுறைகளைத் தெளிவுபடுத்தினார். ஒவ்வொருவருக்குமுரிய இலக்குகளைக் காட்டி விளக்கினார். ஒவ்வொருவரும் எவ்விதமாகச் செயற்ப்படவேண்டும் என்பதை அவர் சொல்ல்லிக் கொடுத்தார்.
அவர்களுக்குரிய ஒத்திகைப் பயிற்சிகள் ஆரம்பித்தன.
”பயிற்சியைக் கடினமாகச் செய்; சண்டையைச் சுலபமாகச் செய்” என்பது ஒரு படையியல் கோட்பாடு.
அந்தக் கோட்பாட்டின்படியே அவர்கள் செயற்ப்பட்டார்கள்.
ஆகா…..! அந்த நேரத்தில் நீங்கள் பார்த்திருக்க வேண்டும் அவர்களை;
மெய்யுருகிப் போயிருப்பீர்கள்.
எவ்வளவு உற்சாகம்; எவ்வளவு ஆர்வம்; ஓய்வற்ற பயிற்சிகளில் அவர்கள் காட்டிய மனமார்ந்த அந்த ஈடுபாடு….. !
‘எப்படி வாழவேண்டும் ?‘ என்று சிந்தித்துக் கொண்டிருக்கிற எங்களுக்குல்லிருந்து தானே அவர்கள் போனார்கள்!
உயிரைக் கொடுத்துவிட்டு எப்படி வெற்றியைப் பெறவேண்டும் என்றல்லவா ஒத்திகை பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
அவர்களுக்குள் இருந்திருக்கக்கூடிய தேசாபிமானத்தை நினைத்துப் பாருங்கள்; அவர்களுக்குள் இருந்திருக்கக் கூடிய தமிழபிமானத்தை எண்ணிப் பாருங்கள்.
எங்கள் தலைவன் ஊட்டி வளர்த்த மேன்மை மிகு உணர்வு அது.
தங்கள் கடைசிக் கணங்களில்.
தங்களின் உயிர் அழிந்துவிடப் போவதைப் பற்றியல்ல; தங்களின் இலக்குகள் அழிக்கப்பட வேண்டியதைப் பற்றியே அவர்கள் சதா சிந்தித்துக் கொண்டிருந்தார்கள்.
இப்படிப்பட்டவர்களிடம் போய், “நீங்களில்லையாம்; ஆட்களை மாத்தப்போகினமாம்” என்று சொன்னால் எப்படியிருக்கும்?
அப்படி ஒரு கதை, கதையோடு கதையகா வந்து காதில் விழுந்தது.
“குழுக்கள் போட்டு புதுசா ஆக்களைத் தெரிவு செய்யப் போறேனேன்று சொர்ணம் அண்ணன் சொன்னவராம்” என்றது அந்தத் தகவல்.
கெனடி குழம்பிவிட்டான். அவனால் அதனை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தளபதியிடம் போய் சண்டை பிடித்தான்.
“நான் கட்டாயம் போக வேணும்” என்று விடாப்பிடியாய்ச் சொன்னான். “வேணுமென்றால் அவர் மற்ற ஆட்களை மாத்தட்டும். குழுக்கள் தெரிவுக்கு என்ற பெயரைச் சேர்க்க வேண்டாம்” திட்டவட்டமாகக் கூறினான்.
எந்த மாற்றமும் செய்யப்படாமலேயே எல்லா ஒழுங்குகளும் பூர்த்தியாகிவிட்டன.
அவர்களுடைய நாள் நெருங்கிவிட்டது.
கடைசி வேவுக்குப் போனபோது, அசோக்கிடம் ஜெயம் சொன்னானாம்.
“கரும்புலிக்குள்ளேயும் நாங்கள் வித்தியாசமாகச் செய்யப்போகின்றோம்; இது ஒரு புது வடிவம். நாங்கள் இவற்றை அழிக்கும்போது சிங்களத் தளபதிகள் அதிர்ச்சிக்குள்ளாவார்கள்.”
தேசியத்தலைவர் வந்து வழியனுப்பிவைத்தார் ;
அவர்களுக்கு அது பொன்னான நாள்.
ஒன்றாயிருந்து உணவருந்திய தேசியத்தலைவர், கட்டியணைத்து முத்தமிட்டு விடை தந்தபோது.
கரும்புலிகளுக்குள்ளே உயிர் புல்லரித்தது.
“நான் நம்பிக்கையோடு எதிர்பார்க்கின்றேன்”, தேசியத்தலைவர் வழியனுப்பி வைத்தார்.
மேலே, வானத்துக்கும் பூமிக்கும் இடையில்.
வெகு உல்லாசத்துடன்.
உலங்கு வானூர்த்தி ஒன்று பலாலிப் பக்கமாகப் போய்க்கொண்டிருந்தது. அட்டகாசமாய் சிரித்துவிட்டு நவரட்ணம் சொன்னான். “இன்றைக்கு பறக்கிறார் , நாளைக்கு நித்திரை கொள்ளப் போகிறார்.”
நீண்ட பயணத்திற்குத் தயாராகி, சிரித்துக் கும்மாளமடித்துக் கொண்டு நின்றவர்களிடம், “எல்லோரும் வெளிக்கிட்டு வீட்டீர்கள் ….. துரதேசத்துக்குப் போல இருக்கு……”
தளபதி சொர்ணம் கேட்க்க,
கண்களால் புன்னகைத்து ரங்கன் சொன்னான்.
“ஓமோம் ….. கிட்டண்ணையிட்ட…. திலீபண்ணை…. இப்படி நிறைய தெரிஞ்ச ஆக்கள் அங்க இருக்கினம்.”
பள்ளிப் பெருந்தளத்தின் முன்னணிக் காவலரன்களுக்கு மிகவும் அருகில் எங்கள் தளபதிகளிடம் விடைபெற்றுச் செல்லும் போது, நின்று திரும்பி தளபதி செல்வராசாவிடம் “அண்ணன்மார் கவனமாகப் போங்கோ ‘செல்; அடிப்பான்” என்று சொல்லிவிட்டுப் போனான் திரு.
கைகளை அசைத்து அசைத்துச் சென்ற கரும்புலிகள் இருளின் கருமையோடு கலந்து மறைந்தார்கள்.
தாக்குதலணி, தாக்குதல் மையத்தைச் சென்றடைவதே ஒரு பெரிய விடயமாகக் கருதப்பட்டது.
தாக்குதலைச் செய்வது இன்னொரு பெரிய காரியம்.
புறப்பட்டுப் போகும் போது அவர்களிடம் இருந்தது தளராத உறுதி, தணியாத தாகம், எல்லாவற்றையும் மேவி, அசையாத தன்னம்பிக்கை.
“அம்மா !
நான் உங்கள் பிள்ளைதான்; ஆனால், தமிழீழத் தாய்மார்கள் எல்லோருக்கும் நான் ஒரு பிள்ளை…..
….. அம்மா ! என்னுடைய ஆசை மக்கள் மகிழ்ட்சியாக சுதந்திரமாக வாழவேண்டும் என்பதுவே. அதனால்தான் உயிரைப் பெரிதாக நினையாமல் நான் போராடப் போனேன்.
அதனால், எனக்காக நீங்கள் கவலைப்படாதீர்கள்; நீங்களும் சந்தோசமாக இருக்க வேண்டும்.
…. எமது மண் சுதந்திரமடைய வேண்டும். அது நடைபெற வேண்டுமானால் மக்கள் எல்லோருமே தாயகத்துக்காக உயிரைக் கொடுக்கவும் தயாராகக் கிளர்ந்தெழ வேண்டும்.
இதுதான் என் கடைசி விருப்பம்”
ஒகஸ்ட் திங்கள் முதலாம் நாள்.
பகற்பொழுது பின்வாங்கிக்கொண்டிருந்தது.
யாழ்ப்பாணக் குடாநாட்டை இருள் விழுங்கிக்கொள்ள, பலாலிப் பெருந்தளத்தை, மின்னாக்கி ஒளிவெள்ளத்தில் அமிழ்த்தியது!
மாலை 6.30 மணியைக் கடந்துவிட்டிருந்த நேரம்.
தங்கள் இலக்கை நோக்கி அவர்கள் நகர்ந்து கொண்டிருந்தார்கள்.
வேவுப் புலி வீரர்கள் முன்னே; கரும்புலி வீரர்கள் பின்னே.
மாவிட்ட புரத்தையும், தெள்ளிப்பளையையும் இணைக்கும் பிரதான் வீதியும், தச்சன்காட்டிலிருந்து வந்து அதனைச் சந்திக்கும் குறுக்கு வீதியும் இராணுவச் சப்பாத்துக்களால் மிதிபட்டு பேச்சு மூச்சற்றுக் கிடந்தன.
வீதியோரமாக, தட்ச்சன்காட்டடியில் அணி நகர்ந்துகொண்டிருந்த சமயம் ,
அவதானமாக; மிக அவதானமாக அவர்கள் ஊர்ந்துகொண்டிருந்த போது.
தீடிரென தெல்லிப்பளை பக்கமகாகக் கேட்டது ‘ட்ரக்‘ வண்டிகளின் உறுமல்.
பயங்கர வேகத்தோடு அது நெருங்கிக்கொண்டிருந்தது.
“நேராக மாவிட்டபுரம் பக்கம்தான் போகப்போறான்” என நினைத்த வேளை, தட்ச்சன்காட்டுப் பக்கமாகவே திரும்பினான். வந்த வேகம் தனியாமலேயே.
நல்ல காலம்…
பளீரென அடித்த ஒழி வெள்ளத்தினுள் மூழ்கிப் போகாமல், பக்கத்திலிருந்த காணிக்குள், எல்லோரும் சம நேரத்தில் பாய்ந்து மறைந்து விட்டார்கள்.
அவர்களைக் கடந்து நேராகச் சென்று, சந்திக் காவலரனடியில் நின்றவன், நின்றானா …..? அந்த வேகத்திலேயே திரும்பி வந்தான்.
‘என்ன நசமடாப்பா …. ? ‘ என நினைத்த வேளை ‘ட்ரக்’ வண்டிகள் இரண்டும் அவர்களுக்கு நேர் முன்னே வந்து சடுதியாய் தரிக்க ….
சில்லுகள் கிளப்பிய புழுதியோடு, புற்றீகலாய்க் குதித்தனர் சிங்களப் படையினர்.
குழல் வாய்கள் தணலாக துப்பாக்கிகள் பேசத்துவங்கின. ‘பொம்மருக்கென்று‘ காவி வந்த நவரட்னத்தின் “லோ” ஒன்று, ‘ட்ரக்‘ வண்டியைக் குறிவைத்து முழக்கியது.
எல்லோரும் ஓடத் துவங்கினர். அது சண்டை போடக்கூடிய இடமல்ல; சண்டை பிடிப்பதற்குரிய நேரமுமல்ல.
அவர்கள் அங்கே போனது இதற்காக்கவுமில்லை.
எங்கே தவறு நடந்தது ……? எங்காவது சுத்துச் சென்றிக்காரன் கண்டானோ….? ‘டம்மி‘ என்று நினைத்த பொயின்ரிலிருந்து பார்த்துச் சொன்னானோ? எங்காவது வீடு உடைத்து சாமான் எடுக்க வந்த ஆமி கண்டு அறிவித்தானோ….?
என்னவாகத்தான் இருந்தாலும், அவர்கள் சென்ற சொக்கம் கெட்டுவிட்டது.
தட்சன்காட்டில் நிகழ்த்த அந்த துரதிர்ஷ்டம்தான், எங்களது தாக்குதல் திட்டத்தையே திசைமாற்றியது.
“திரு” இல்லை “ரங்கன்” இல்லை; “புலிக்குட்டிக்கு” என்ன நடந்ததென்று தெரியவில்லை; ராஜேஷ் ஒரு வழிகாட்டி. அவனையும் காணவில்லை.
எங்கள் தாக்குதலணி சேதாரப்பட்டுவிட்டது.
ஏனையோர் ஒரு பக்கமாக ஓடியதால் சிதறாமல் ஒன்றாயினர்.
தாம் வந்த காரியத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டிய தவிர்க்க முடியாத கட்டாயம் எழுந்துவிட்டத்தை, எஞ்சியவர்கள் உணர்ந்தனர்; இந்தச் சண்டையோடு எதிரி உசாரடைந்துவிடுவான். கரும்புலி வீரர்கள், வேவுப்புலி வீரர்களை அவசரப்படுத்தினர்.
“உடனடியாக எங்களைத் தாக்குதல் முனைக்குக் கூட்டிச் செலுங்கள்.”
அடுத்த சில மணி நேரங்களின் பின் பொழுது நள்ளிரவை நெருங்கிக்கொண்டிருந்த சமயத்தில்….. அவர்கள், வான்படைத் தளத்தின் முட்கம்பி வேலிக்கருகில் தயாராகிக்கொண்டிருந்தனர்.
பிரதான கட்டளையகத்தோடு கெனடி தொடர்பு எடுத்தான். நடந்து முடிந்த துயரத்தை அவன் அறிவித்தான்.
“7 பெருக்கென வகுக்கப்பட்ட தாக்குதல் திட்டத்தில் எஞ்சியிருப்பது 4 பேர் மட்டுமே” என்பதை அவன் தெரியப்படுத்தினான். “எதிரி முழுமையாக உசார் அடைந்துவிட்டதால், இருக்கிரவர்களுடன் உடனடியாக தாக்குதலை ஆரம்பிக்க வேண்டும்” என்று வலியுறுத்தினான். “தாமதிகின்ற ஒவ்வொரு நிமிடமும் இலக்குகள் தப்பிப் போக நாங்கள் வழங்குகின்ற சர்ந்தப்பங்கள்” என்பதை விளக்கினான். “தாக்குதலை நிகழ்த்தாமல் திரும்பி, தப்பித்து வெளியேறுவதும் சாத்தியப்படாது” என்பதையும் சொன்னான்.
அவனிடம் சற்று நேரம் அவகாசம் கேட்க பிரதான கட்டளையகம், பிரத்தியேகமாக அமைக்கப்பட்டிருந்த இன்னொரு கட்டளைகத்தோடு கலந்து பேசியது. கெனடி சொல்வதே சரியானது எனவும், அதைவிட வேறு வழியில்லை எனவும் பட்டது.
தாக்குதலுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.
முட்கம்பி வேலிகளை நறுக்கி அறுத்த வேவுப்புலி வீரர்கள் பாதை எடுத்துக் கொடுக்க, வான்தளத்தில் இலக்குகளைத் தேடி கரும்புலி வீரர்கள் உள்ளே நுழைந்தனர்.
நவரட்ணம் கடைசியாய் வரைந்த மடலிலிருந்து….
அம்மா! அப்பா!
இனத்துக்கு சுதந்திரமாக ஒரு நாடு இருந்தால்த்தான், எங்களுக்கு நிரந்தரமாக ஒரு வீடு இருக்கும். சுதந்திரமான ஒரு நாடு அமைக்கவே நான் போராட வந்தேன். இனித் தமிழீழத்தில் குண்டுகள் விழக்கூடாது; இதற்காகவே நான் இன்று கரும்புலியாய்ச் செல்கின்றேன்.
என் ஆசை தங்கச்சி!
உனது அடுத்த பரம்பரை, எம் எதிர்கால சந்ததி, மிக மகிழ்ட்சியோடு வாழவேண்டும் என்பதற்காகவே, நான் கனவிலும் நினையாத களம் நோக்கிப் புறப்படுகின்றேன்.
வெல்க தமிழீழம் !
அசொக்கிடமும், ரஞ்சனிடமும் விடைபெற்று அவர்கள் உள்ளே சென்றுவிட, அவர்களிடம் விடைபெற்றுக்கொண்டு, இவர்கள் வெளியே திரும்பிக்கொண்டிருந்தனர்.
விடி சாம நேரம்.
படு இருள்.
மிகக் குறுகிய துரத்திர்க்குள் தான் எதனையும் மங்கலாய்த் தன்னும் பார்க்க முடியும்.
மாவிட்டபுரத்திற்க்கு பக்கத்தில் ஒரு குச்சொழுங்கையால் அவர்கள் திரும்பிகொண்டிருந்த போது,
ஒரே ஒரு மணித்துளி……
இருந்தாற் போல்….. அந்த இருளுக்குள் இருளாக …. அவர்களிற்கு முன்னாள்…..
அதென்ன……? நில்லாக் எதோ அசைவது போல உள்ளது!
ரஞ்சனின் கைகளைச் சுரண்டி மெதுவாக, “ஆமி நிக்கிறான் போ ……”, அசோக் சொல்லிமுடிக்கும் முன் தீப்பொறி கக்கிய சுடுகுழழிளிருந்து காற்றைக் கிழித்துச் சீரிய ரவைகள், அசோக்கின் தசைநார்களையும் கிழித்துச் சென்றன!
தலையோ…. கழுத்தோ….. நெஞ்சுப்பகுதியாகவும் இருக்கலாம ….. சரியாகத் தெரியவில்லை….. சன்னங்கள் பாய்ந்து சல்லடையாக்கிச் சென்றன.
“அம் ….” முழுமையாக வெளிவராத குரலுடன், குப்பற விழுந்தான் அந்த வீரன்.
அடுத்த நிமிடத்தில்….
கொஞ்சம் ரவைகளையும் ஒரு கைக்குண்டையும் பிரயோகித்து, அசோக்கையும் பறிகொடுத்துவிட்டு, பக்கத்துக் காணிக்குள் பாய்ந்து ரஞ்சன் ஓடிக்கொண்டிருந்தான்.
முன்பொரு நாள் ….
மயிலிட்டிப் பக்கமாக வேவுக்குச் சென்ற ஒரு இரவில், இராணுவம் முகாமிட்டிருக்கும் பாடசாலை ஒன்றை ரஞ்சனுக்குக் காட்டி, அசோக் மனக்குமுறலோடு சொன்னானாம்.
“இதுதான்ரா நான் படிச்ச பள்ளிக்கூடம்; இண்டைக்கு இதில சிங்களவன் வந்து குடியிருக்கிறான் மச்சான்…… வீட்டுக்கு ஒரு ஆளேண்டாலும் போராட வந்தா இந்த இடமேல்லாத்தையும் நாங்கள் திருப்பி எடுக்கலாம் தானேடா…..”
ரஞ்சனது நெஞ்சுக்குள் இந்த நினைவு வந்து அசைந்தது.
தொடர்ந்து நகருவது ஆபத்தாயும்முடிந்துவிடக்கூடும் என்பதால், அருகிலேயே ஒரு மரைஇவிடம் தேடி அவன் பதுங்கிக்கொண்டான்.
இப்போது அவன் தனித்த்துப்போனான்; கூடவந்த தோழர்கள் எல்லோரினதும் நினைவுகள், இதயமெல்லாம் நிறைந்து வாட்டின.
இனி எப்படியாவது அங்கிருந்து அவன் வெளியேற வேண்டும். வந்தவர்களில் எஞ்சியிருப்பது அவன் மட்டும்தான். நடந்தவற்றைப் போய் சொல்வதற்காவது, அந்த மரணக்குகைக்குளிருந்து அவன் பாதுகாப்பாகத் தப்பிக்க வேண்டும். எனவே அவன் இனி மிக அவதானமாக இருக்கவேண்டியது கட்டாயமாகிறது.
மெல்ல விடிந்தது.
அவன் தொடர்ந்து நகர்ந்து வெளியேற நினைத்த போது,
மின்னலென ஒரு யோசனை மூளைக்குள் பொறிதட்டியது.
‘தச்சன்காட்டில் யாரவாது அதிஷ்டவசமாகத் தப்பியிருக்கலாம். அவர்கள் பாதை தெரியாமல் மாறுபட்டு, வேவு வீரர்கள் திரும்பி வருவார்கள் என நம்பி உள்ளே நுழைந்த முதல் நாள் இரவு அவர்கள் தங்கிய தரிப்பிடத்தில் போய் நிற்கக்கூடும்.
நப்பாசைதான்; ஒரு மன உந்துதலோடு அவன் போனான்.
அவன் அங்கே செல்ல…… அங்கே …..!
என்ன அதிசயம்! அவன் நினைத்து வந்ததைப் போலவே அவர்கள்….
ஆனால் நால்வருமல்ல .
ரங்கனும் , புலிக்குட்டியும் மட்டும் நின்றார்கள்; ராஜேஷ் இல்லை, ‘திரு‘ வும் இல்லை.
அவனைக் கடந்தும் அவர்கள் மட்டற்ற மகிழ்ட்சி ‘போன உயிர் திரும்பி வந்தது போல’ என்பார்களே, அப்படி ஒரு மகிழ்ட்சி. “உடனே எங்களைக் கொண்டுபோய் கெனடி அண்ணனிட்ட விடு; இண்டைக்கு இரவுக்காவது அடிக்கலாம்” என்று அவர்கள் அவசரப் படுத்திய போது,
ரஞ்சன் நடந்தவற்றைச் சொன்னான்.
அந்தக் கரும்புலி வீரர்களால் அதனைத் தாங்கமுடியவில்லை. தாங்கள் பங்கு கொள்ளாமல் அந்தத் தாக்குதல் நடந்து முடிந்ததை அவர்களால் நினைத்துப் பார்க்கக்கூட முடியவில்லை. தங்களது கைகளை மீறி எல்லாம் நடந்து முடிந்துவிட்டதை எண்ணி, அவர்கள் மனம் புழுங்கினார்கள்.
எல்லாம் முடிந்தது.
“இனி நாங்கள் எப்படியாவது, எந்தப் பிரசினையும் இல்லாமல் வெளியில் போய்விட வேண்டும்” என்றான் ரங்கன். போகத்தானே வேண்டும் , பிறகென்ன…..? ஆனால், ரங்கன் அதற்க்குக் காரணம் ஒன்றைச் சொன்னான்.
“இதற்குள் நிற்கும்போது எங்களுக்கும் ஏதாவது நடந்தால், இயக்கம் எங்களையும் கரும்புலிகள் என்றுதானே அறிவிக்கும். அப்போது விமானங்களை அழித்தவர்கள் என்ற பெயர்தானே வரும். ஆனால், அவர்களுடைய தியாகத்தில் நாங்கள் குளிர்காயக்கூடது.” இதுதான் அவனுடைய மனநிலை.
மிகவும் பாதுகாப்பானது என்று கருதிய பாதை ஒன்றினால் வெளியேற அவர்கள் முடிவு செய்தனர்.
ரஞ்சன் வழிகாட்டினான் ; கூட்டிவந்த வேவு வீரர்களில் இப்போது எஞ்சியிருப்பது அவன்மட்டும்தான்.
பகற்பொழுது , எனவே ஆகக்கூடிய அவதானத்துடன் அவர்கள் நகர்ந்துகொண்டிருந்தனர்.
மெல்ல மெல்ல சூரியன் உச்சியை நோக்கி உயர்ந்துகொண்டிருந்தான்.
அப்போது அவர்கள் சீரவளைக்குப் பக்கத்தில் போய்க்கொண்டிருக்கிறார்கள்.
சரியாக நினைவில் இல்லை, ஒரு பதினோரு மணியிருக்கும் .
ஒரு பற்றைக்குள்ளிருந்து “கதவு …. ?” என ஒரு குரல் கேட்டது.
திரும்பிப் பார்த்தால், ஒரு சிங்களப் படையால் குந்திக்கொண்டிருந்தான்; தங்களுடைய ஆட்கள் என்று நினைத்திருப்பான் போலும்.
என்ன பதிலி சொல்வது ….? அவர்கள் யோசிக்க, அவனுக்குள் சந்தேகம் எழுந்துவிட்டது.
சற்று உறுத்தலாக, “ஓயா கவுத …..?” கேட்டுக்கொண்டே துப்பாக்கியைத் தூக்கிக்கொண்டு அவன் எழ, ரஞ்சனின் கையில் இருந்த “ரி – 56” அவனுக்கு பதில் சொல்லியது.
“நாங்கள் புலிகள்.”
வெடித்தது சண்டை …
அவர்கள் ஓடத் துவங்கினர் ; மொய்த்துக்கொண்டு கலைத்தனர் சிங்களப் படையினர்.
கணிசமானதொரு துறை இடைவெளியில் அந்தக் கலைபாடு நடந்தது. பகைவனின் சன்னங்கள் அவர்களை முந்திக்கொண்டு சீறின.
திடிரென ரங்கன் கத்தினான், “டே! என்ற காலில் வெடி கொளுவிற்றுதடா ….”
ஓடிக்கொண்டே பார்த்தவர்கள், வலது கால் என்பது தெரிகிறது; எந்த இடத்தில் என்பது தெரியவில்லை. அதைத் தெரிந்து கொள்வதால் எந்தப் பயனும் வந்துவிடப் போவதுமில்லை.
ரங்கன் ஓட ஓட அவனது காலிலிருந்து ரத்தம் தெறித்துக்கொண்டிருந்தது.
இவர்களால் எதுவுமே செய்ய முடியாது. எதனையும் செய்ய வேண்டுமென அவனும் எதிர்பார்க்கவும் இல்லை.
“என்னால் எலாதடா….. என்னை சுட்டுப்போட்டு நீங்கள் ஒடுங்க்கோடா!” ரங்கன் கத்தினான்.
அவன் ஓட முடியாமல் பின்வாங்கிக்கொண்டிருந்தான்.
ரஞ்சன் சொன்னான். “குப்பியைக் கடித்துக் கொண்டு….. ‘சாஜ்ஜரை‘ இழு மச்சான் …..”
“சாஜ்ஜர்” உடலோடு இணைக்கும் வெடிகுண்டு. தாக்குதலுக்குப் புறப்படும்போது கரும்புலி வீரர்களுக்கு வழங்கப்பட்டது. சண்டைக்களத்தில் எதிரியிடம் பிடிபடக்கூடிய சர்ந்தபம் வருமானால், ஆகக் கடைசி வழியாக அவர்களைக் காக்கும்.
ரங்கன் குப்பியைக் கடித்துக்கொண்டே “சாஜ்ஜரின்” பாதுகாப்பு ஊசியை இழுத்து எறிந்தான்.
மெல்ல மெல்ல அவன் பின்தங்கி விழ, கலைத்துக்கொண்டு வந்த படையினர் அவனை நெருங்க…..
சாஜ்ஜரும் ரங்கனும் வெடித்துச் சிறரிய சத்தம், ஓடிக் கொண்டிருந்தவர்களின் காதில் விழுந்தது. திரும்பிப் பார்த்தார்கள்….. புகையும், அவனது உயிரும் தமிழீழத்தின் தென்றலோடு கலந்துகொண்டிருந்தன.
அந்த வெடி அதிர்ட்சியில் குழம்பித் தடுமாறி, பகைவன் திரும்பவும் கலைக்கத் துவங்க முன், அவர்கள் ஓடி மறைந்து விட்டார்கள்.
எங்கோ பதுங்கியிருந்து. எல்லாம் அடங்கிய இரவாகிய பின் மெல்ல மெல்ல நகர்ந்து வெளியில் வந்தனர் ரஞ்சனும் புலிக்குட்டியும்.
தச்சன்காட்டில் மாறுபட்டுக் காணாமற்போன ராஜேசும் இந்து நாட்களின் பின்னர், ஒருவழியாக வந்து சேர்ந்தான்.
ஆனால் அசோக் வரவில்லை; ரங்கன் வரவில்லை; திருவும் வரவில்லை.
நடு இரவு கடந்து போனது.
ஒகஸ்ட் 2 ஆம் நாளின் ஆரம்ப மணித்துளிகள் சிந்திக்கொண்டிருந்தன.
கெனடி பிரதான கட்டளையகத்துக்கு விபரத்தை அறிவித்தான்.
“இப்போ நாங்கள் நான்கு பேர்தான் நிற்கின்றோம். ஜெயம், நவரட்ணம், திலகன், மற்றும் நான். நாங்கள் தாமதிக்க முடியாது; மற்றவர்களுக்கு என்ன நடந்தது என்பதும் தெரியாது; அவர்கள் வருவார்கள் என எதிர்பார்க்க முடியாது. எனவே நாங்கள் நால்வரும் உள்ளே இறங்குகின்றோம். எங்களால் முடிந்தளவிற்கு வெற்றி கரமாகச் செய்கின்றோம்.”
தச்சன்காட்டுச் சண்டையின் செய்தி எங்கும் பறந்தது.
அந்தப் பெருந்தளம், மயிர்களைச் சிலிர்த்துக்கொண்டு நிமிரும் ஒரு சிங்கத்தைப் போலத் துடித்தெழுந்தது.
ஆபத்து தங்களது வீட்டுக்குள்ளேயே நுழைந்துவிட்ட அச்சம் சிப்பாய்களைக் கவ்விக்கொண்டது.
சுடுகருவிகள் தயாராகின.
எந்த நேரத்திலும், எந்த முனையையும் உள்ளே நுழைந்து புலிகள் தாக்குவார்கள் எனப் படிவீரர்கள் எச்சரிக்கப்பட்டனர்.
விமான ஓட்டிகள் வானுர்த்திகளில் ஏறித் தயார்நிலையில் இருக்குமாறு பணிக்க்க்கப்பட்டனர்.
வான்படைத் தளத்தைப் பாதுகாக்கும் காவலரண்களும் , வானுர்த்திகளுக்குரிய காவற்படையினரும் உசார்நிலையில் வைக்கப்பட்டனர்.
பாதுகாப்பு ஏற்பாடுகள் உச்சநிலைக்கு வந்து பரிபூரணமாக ஆயத்தமாகிய பகைவன், எதனையும் எதிர்கொள்ளத் தயாராகப் போர்க்கோலம் பூண்டு நின்ற வேளை…
யுத்த சன்னதர்களாகப் புறப்பட்டுச் சென்ற எங்கள் கரும்புலி வீரர்கள்….. சிங்களத்தின் சிலிர்ந்து நின்ற பிடரி மயிர்களினூடு ஊர்ந்து, அதன் முகத்தை நெருங்கினர்.
பிரதான கட்டளையகத்திலிருந்து “வோக்கி”யில் கெனடியின் குரல் ஒலித்தது. கெனடி நிலைமையை விளக்கினான்.
“நாங்கள் நல்லா கிட்ட நெருங்கிற்றம் ….”
“ஏதாவது தெரிகின்ற மாதிரி நிற்கிறதா?”
“நாங்கள் தேடிவந்ததில் ஒன்றுதான் நிற்குது. பக்கத்தின் ஒருத்தன் நிற்கின்றான்.”
“வேறு ஒன்றும் இல்லையா …..?”
“அருகில் சின்னன் ஒன்று ஓடித்திரியுது.”
“நீங்கள் தேடிப்போன மற்றதுகள் …..?”
“இங்கு இருந்து பார்க்க எதுவும் தெரியேல்ல, துரத்தில் நிற்கக்கூடும். இறங்க்கினதற்குப் பிறகுதான் தேடக்கூடியதாக இருக்கும்.”
“இப்ப நீங்கள் இறங்கக்கூடிய மாதிரி நிற்க்கிறீங்களா…….?”
“ஓமோம் ….. குண்டு எரியக்கூடிய துரத்திற்கு வந்திட்டம். நீங்கள் சொன்னால் நாங்கள் அடிச்சுக் கொண்டிறங்கிறம்.”
“அபடியெண்டால் நீங்கள் அப்படியே செய்யுங்கோ.”
கட்டளையகம் அனுமதி வழங்கியது.
அதன் பிறகு என்ன நடந்திருக்கும் ……?
கெனடி உத்தரவிட்டிருப்பான்.
“தாக்குதலை ஆரம்பியுங்கள்”
நவரட்னத்தின் கையிலிருந்த “லோ” முழங்க “பெல் 212” இல் தீப்பற்றி எரியும்போது, கெனடி “டொங்கா”னால் அடிக்க திலகன் அதன் மீது கைக்குண்டை வீசியிருப்பான்.
அதே சம நேரத்தில்….. ஜெயத்தின் “லோ” பவள் கவச வண்டியைக் குறிவைத்து முழங்கியிருக்கும்.
பலாலித் தளத்தின் மையமுகாம் அதிர்ந்திருக்கும்.
தங்கள் அனைத்துக் கவசங்களையும் உடைத்து நுழைந்து, பாதுகாக்கப்பட்ட அதியுயர் கேந்திரத்தையே புலிகள் தாக்கிவிட்டத்தை எதிரி கண்முன்னால் கண்டு திகைத்திருப்பான்.
சன்னங்களைச் சரமாரியாய் வீசிரும் துப்பாக்கிகளோடு கூச்சலிட்டபடி பகைவன் குவிந்து வர….. கெனடியின் “டொங்கான்” எறிகணைகளைச் செலுத்தியிருக்கும்.
திலகனின் “ரி – 56” ஓய்வற்று இயங்கிக்கொண்டிருக்க, தங்களது அடுத்த இலக்கைத் தேடி அவர்கள் ஓடிக்கொண்டிருந்திருப்பார்கள்.
“கெனடி…… கெனடி….. நிலைமை என்ன மாதிரிஎன்று எங்களுக்கு சொல்லுங்கோ ……”
“ஒரு ஹெலியும் ஒரு பவளும் அடிச்சிருக்கிறம். ரெண்டும் பத்தி எரிக்ஞ்சுகொண்டிருக்குது…. கிட்டப் போக ஏலாம சுத்தி நிண்டு கத்திக் கொண்டிருக்குராங்கள். ”
“மற்றது என்ன மாதிரி …..?”
“தொடர்ந்து அடித்துக்கொண்டு உள்ளே இறங்கிக்கொண்டிருக்கிறம்…..
பொம்மருகளைத் தேடுறம்….”
ஆனால் 500 மீற்றருக்கு அகன்று 2600 மீற்றருக்கு நீண்டிருந்த விசாலமான ஒரு பாதை அது. மிகவும் துரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ”சியா மாசெட்டி” குண்டு வீச்சு விமானங்களில் தயாராய் இருந்த ஓட்டிகள் அவர்ரியா மேலேடுத்துவிட்டனர்.
கெனடியின் தொடர்பு நீண்ட நேரத்தின் பின் கிடைத்தது.
“கெனடி…. நிலைமை எப்படி எண்டு சொல்லுங்கோ …..”
“ஒரு ‘ஹெலி‘யும் ஒரு ‘பவளும்‘ அடிச்சிருக்கிறம்…. முழுசா எரிஞ்சு கொண்டிருக்கு ….. புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்.”
“கெனடி ….. நீங்கள் அவசரப்பட வேண்டாம். …. மற்ற ஆக்கள் என்ன மாதிரி?”
“நானும் திலகனும் நிக்கிறம் …..”
“கெனடி….. நீங்கள் அவசரப்படாதேங்கோ ….. தொடர்ந்து எதுவும் செய்யக்கூடிய மாதிரி இல்லையா ……?”
“அண்ணை….. ….. எனக்கு ரெண்டு காலும் இல்லையண்ணா ……”
“……………………………………………”
“…………………………………….. …..”
“…………………………………………”
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் ; புலிகளின் தாகம் ……. தமிழீழ ……”
“கெனடி …….. கெனடி ……”
“கெனடி …….. கெனடி ……”
“திலகன் …….. திலகன் ……”
“கெனடி …….. கெனடி ……”
ஒரு முதியவர் நீண்ட பெருமூச்சொன்றை விட்டுக்கொண்டு….…
“எண்டா தம்பி செய்கிறது…… வயதும் போகுது….” என்று கவலைப்பட்டபோது.
அருகில், “ஈழநாதம்” நாளேட்டில் அவர்களின் படங்களைப் பார்த்து நின்ற அவரின் துணைவியார் ஏக்கத்தோடு சொன்னார்.
“நீங்கள் வயது போகுதெண்டு கவலைப்படுறியள்…. எத்தின பிள்ளைகளுக்கு வயது போறதேயில்லை …….!”
வெளியீடு : உயிராயுதம் பாகம் 01
August 1st
August 2nd
August 3rd
1995 ஆம் ஆண்டின் ஆடி மாதத்தின் 28 ஆம் நாள் தமிழீழ விடுதலைப் புலிகளின் பலமான ஒரு படையணியை தமிழீழமும் சர்வதேச சக்திகளும் உணர்ந்து கொள்ள இருந்த நாள். இவர்கள் யார் என்று சிங்களப் படைகளும் அதன் அரசும் நிட்சயமாக உணர்ந்தன. ஆனாலும் துரோகத்தால் மலிந்து போன எம் விடுதலைப் போராட்ட வரலாற்றில் பல இழப்புக்களை நாம் சந்திக்க நேர்ந்த . நாளாக இன்றைய நாள் பதிவாகி இருந்தது.
சிறுத்தைப் படையணித் தளபதிகளில் ஒருவரான லெப்.கேணல் கோமளா உட்பட்ட 57 போராளிகளை நாம் இழக்க நேரிட்டதும். இன்றைய நாளில் தான். ஆனாலும் இன்றைய நாளும் இந்தச் சண்டையும் எமக்கு பெரும் வெற்றியைத் தந்திருந்தது. தமிழீழ பெண்களின் வீரத்தை சிங்களம் உணர்ந்து கொண்ட முக்கியமான சண்டையாக இது அமைந்தது.
இரவோடு இரவாக மணலாறு காட்டினூடாக தகர்தழிப்புத் தாக்குதல் ஒன்றுக்கான முழுத் தயார்ப்படுத்தலுடன் நகர்ந்திருந்தது தமிழீழ விடுதலைப்புலிகளின் சிறப்புப் படையணியான “சிறுத்தைப் படையணி” சிறுத்தைப் படையணியின் சிறப்புத் தளபதியான கேணல் ராஜூ அவர்களின் ஒருங்கிணைப்புக் கட்டளையின் கீழ் லெப் கேணல் கோமளாவின் வழிநடத்தலுடன் நகர்ந்து சென்ற அப் படையணியின் பெண் போராளிகள் பெரும் வரலாறு ஒன்றை பதிவு செய்யத் துடித்துக் கொண்டிருந்தார்கள்.
மண்கிண்டி மலை, கொக்குத்தொடுவாய், டொலர்பாம், கென்பாம், வெலிஓயா ( மணலாறு என்ற தமிழ் பெயரை நேரடியாக சிங்களத்தில் மொழிபெயர்த்து வெலி- மணல் , ஓயா – ஆறு இப்பெயரை வைத்திருந்தது சிங்கள அரசு) என்ற இடத்தில் அமைந்திருந்த “பராக்கிரம்பாகு “முகாம் போன்ற 5 பாரிய படைத்தளங்களின் ஒருங்கிணைப்புச் செயலகமாக இருந்த வெலிஓயா படைத்தளத்தை கட்டுப்படுத்தி சம நேரத்தில் நடக்க இருந்த ஏனைய படைத் தளங்கள் மீதான தாக்குதல்களுக்கு இடையூறாக இருக்கக் கூடிய கட்டளைகளையும், வளங்கல்களையும், எறிகணை மற்றும் மோட்டார் உதவித் தாக்குதல்களையும் தடுக்கவும் என இவ்வணி வெலிஓயாத் தளத்தை நோக்கி சென்றது.
வெலிஓயா சார்ந்த பகுதிகள் எங்கும் சிறு சிறு அணிகாளாக பரவிக் கொண்டார்கள் சிறுத்தைப்படையணியின் பெண் போராளிகள்.
அந்த தாக்குதலுக்கு சென்ற அத்தனை போராளிகளும் சாதாரண போராளிகள் அல்ல. தமிழீழத்தின் உயிராயுதங்களுக்கு நிகரானவர்கள். கரும்புலிப் படையணிக்குள் உள்வாங்கப்படாமல் இருந்தாலும் சிறப்புப் படையணியாக இருந்து கொண்டு கரும்புலிகளின் தீரத்தோடு செயற்பட்டவர்கள். தாக்குதலுக்கு செல்லும் போது “சார்ச்சர்” எனக் கூறக்கூடிய வெடியுடையை அணிந்தே இவர்களும் சென்றிருந்தார்கள்.
அவ்வணிகளுக்குள் மேஜர் மாதங்கி தலமையில் ஒரு அணி வெலிஓயா படைமுகாமை தாக்கி அழித்து விடும் நோக்கத்தோடு உள் நுழைந்திருந்தது. ஏனைய அணிகள் வெலிஓயா படைமுகாமை சுற்றி படையினரின் வழங்கல் அணியினர் மற்றும் உதவி அணியினரின் வருகையைக் காத்து நிலையெடுத்திருந்தனர். எவ்வகையிலும் தாக்குதல் வரலாம் என்ற எதிர்பார்ப்போடு முறியடிப்புத் தாக்குதலுக்கான ஆயுத்தத்தோடு கோமளா தனது போராளிகளை தயார்நிலையில் வைத்திருந்தார். முகாமுக்குள் உள் நுழைந்த அணி 3 பேர் கொண்ட சிறு அணிகளாக பிரிந்து அப்படை முகாமை தாக்கத் தயாராக இருந்தார்கள்.
அதே நேரம் பின்னணியில் தாம் வளர்த்த தமது சிறப்புப் படையணியின் முதல் வெற்றிச் செய்தியை கேட்க தயாராக இருந்தார்கள் தேசியத்தலைவரும் அவரது மூத்த தளபதிகளும்.
பெரும் எதிர்பார்ப்பு அனைவரிடமும் இருந்தது. எதிர்பார்ப்பு வீண்போகவும் இல்லை. உள்நுழைந்த வீர வேங்கைகள் சாதித்தார்கள். தாம் நேசித்த தலைவன் எதிர்பார்த்ததை செய்து முடித்தார்கள். விடுதலைப்புலிகளின் சிறப்புப் படையணியின் சிறுத்தைப் படையணியின் பெண் போராளிகள் என்றால் இது தான் என்று சர்வதேசத்துக்கும் சிங்களத்துக்கும் உணர வைத்தார்கள்.
இவ்வாறான காத்திருப்பு நேரத்தில் உள்நுழைந்த அணி சரியான இலக்குகளுக்குப் போய்விட்டதை உறுதிப்படுத்திய கோமளாவுக்கு ராஜூ அவர்கள் சண்டை ஆரம்பிப்பதற்கான சமிக்கையை கொடுக்க, தாக்குதலை ஆரம்பிக்க உத்தரவிடுகிறார் கோமளா.
பாரிய எதிர்ப்பின் மத்தியிலும் பெரும் பாதுகாப்பரன்களை உடைத்தெறிந்து உள் நுழைந்த படையணி சிறு சிறு அணிகளாக தாக்கத் தொடங்கியது. புலிகளின் அதிரடித்தாக்குதலை எதிர்பார்க்காத சிங்களப்படை திணறியது. எங்கு திரும்பினாலும் புலிகளின் ஆயுதங்கள் எதிரியை குறி வைத்தன. சிங்களப்படை செய்வதறியாது திகைத்த அதே நேரம் விடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தான் இச்சண்டையை செய்வதை எதிரி உணரத் தொடங்கினான். ( சில வேளை காட்டிக் கொடுப்பாளர்கள் தகவல் சொல்லி இருக்கலாம்) அதனால் உள் நுழைந்த போராளிகள் அனைவரையும் உயிருடன் பிடிக்க வேண்டும் என்ற நினைப்பு அவர்களுக்குள் எழுந்தது. ஆனாலும் அவர்கள் எதிர்பார்க்காத தாக்குதல் வியூகங்கள் மூலமாக பெண்புலிகள் எதிரியை திக்குமுக்காட வைத்தனர்.
வெலிஓயா படைமுகாமை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார்கள் சிறுத்தைப்படையணிப் போராளிகள். அங்கிருந்த தொலைத் தொடர்பு ( Communication) தொடக்கம் கட்டளைப் பீடம் ( Commanding Station ) வரை தமது கட்டுக்குள் கொண்டு வந்தார்கள் சிறுத்தைப்படையணியின் சிறப்பு அணி.
தேசியத் தலைவரது திட்டத்தை நிறைவேற்றி அங்கே இருந்த ஆட்லறி எறிகணை ஏவுதளத்தை முற்றுமுழுதாக அழித்தார்கள். பக்கத்தில் இருந்த முகாம்களுக்கான வளங்கல்களையும் கட்டளைகளையும் நிறுத்தினார்கள். அங்கே தரித்து இருந்த 5 ஆட்லறிகள் முழுவதுமாக அழிந்து போனது. படைமுகாம் சிதைந்து கிடந்த நிலையில் ஆயுத வெடிபொருட்கள் முழுவதுமாக தீர்ந்து போகும் நிலை வந்து விட்டது. ஆனால் எதிரியின் துப்பாக்கிகளையும் ரவைகளையும் கைப்பற்றி எதிரியை தாக்கினார்கள். துன்பத்தை தந்தவனுக்கு துன்பத்தை அவனது துப்பாக்கியாலையே திருப்பிக் கொடுத்தார்கள். கிட்டத்தட்ட 3 நாட்களாக தொடர்ந்த சண்டை இறுதிக் கட்டத்தை நெருங்குகிறது. எதிரியின் ரவைகளும் முடிகின்ற நிலைக்கு வந்திருந்தன.
இறுதியாக உடலோடு கட்டப்பட்டிருந்த வெடிமருந்துடை (சார்ச்சர்) மட்டுமே மிஞ்சி இருந்தது. அதை வெடிக்க வைத்து தம்மை உயிர்த்தியாகம் செய்ய அவர்களால் முடியும். ஆனால் அவர்கள் தாம் பயின்ற தற்காப்புக் கலையை ஆயுதமாக்கினர். கராத்தேக் கலையின் அதி விசேட பயிற்சிகளைப் பெற்றிருந்த அப்போராளிகள் இறுதியாக எதிரிகளை கொல்வதற்கு அதையே ஆயுதமாக்கினர். தமிழீழத்தின் மூத்த கராத்தே ஆசிரியர் ஒருவரின் நேரடி கற்பித்தலில் தாம் கற்றுக் கொண்ட தற்காப்புக் கலையினை இறுதிவரை பயன்படுத்தினார்கள். அவர்கள் அந்த வளர்ப்பு சரியாகவே வளர்க்கப்பட்டது என்பதை உணர்த்தினார்கள்.
தம்மிடம் இருந்த குத்துக்கத்தி மூலமாகவும் ( ஆயுத்ததோடு பொருத்தப்பட்டிருக்கும் கத்தி), கிடைக்கும் எப் பொருளையும் ( தடி, கம்பி, ) ஆயுதமாக பயன்படுத்தி கைகலப்பில் ஈடுபட்டார்கள். எதிரிக்கு பெண்புலிகளின் வீரத்தை உரைத்தார்கள். ஒரு நிலையில் எதிரியே “பெண்களா அல்லது பேய்களா இவர்கள் “ ( எதிரியின் உரையாடல்களை விடுதலைப்புலிகளின் தொலைத் தொடர்பு கண்காணிப்பு பிரிவு கண்காணித்த போது உறுதிப்படுத்தப்பட்டது. ) என்று பயந்து ஓடும் அளவுக்கு தாக்குதலை செய்தார்கள்.
பெண் புலிகள் தானே இலகுவாக உயிருடன் பிடித்து விடலாம் என்ற இறுமாப்போடு வந்த சிங்களப்படைகள் ஒவ்வொருவராக உயிரற்று போனார்கள். குறித்த சில வீரப் பெண்களின் வீரச்சாவோடு அந்த சண்டை வெற்றி வாகை சூடியது. இந்த நிலையில் ஏனைய அணிப் போராளிகளை தளம் திரும்புமாறு கேணல் ராஜூ அவர்களிடம் இருந்து கட்டளை வருகிறது.
தளபதி லெப் கேணல் கோமளா தன் போராளிகளை ஒருங்கிணைத்து வெற்றியோடு தளம் திரும்புகிறார். சிறு அணிகளாக இருந்தவர்கள் ஒருங்கிணைந்து மண்கிண்டிமலைப் படைமுகாம் நோக்கி வந்து மணலாறுக் காடுகளுக்கிடையில் பயணிக்கிறார்கள். அந்த வெற்றியின் உச்ச நேரத்தில் துரோகிகளின் துரோகத்தனத்தால் கோமளாவின் அணி பற்றிய முழுமையான தகவல்களுடன் அவர்களை இடை மறிக்கிறான் எதிரி. சரியாக திட்டமிட்டு இடை மறித்த எதிரியோடு சண்டை மூள்கிறது. கோமளா அணியை நிலை குலையாமல் ஒருங்கிணைக்கிறார். கேணல் ராஜூ நேரடியாக வழிநடத்துகிறார். ஆனாலும் தொடர்புகள் அறுந்து போகின்றன. கடுமையான முற்றுகை. அவர்கள் சாவைக் கண்டு அஞ்சுபவர்கள் அல்ல ஆனால் சாதிக்கத் துடித்தார்கள்.
முழுமையாக திறனையும் பயன்படுத்தி சண்டை செய்தார்கள். இறுதியாக வெலிஓயாத் தளத்துக்குள் உயிருடன் பிடிபடாமல் போனவர்களை இங்கே பிடித்து விட வேண்டும் என்று துடித்தது சிங்களம். ஆனால் அவர்களால் முடியவே இல்லை. இறுதி வரை சிங்களத்துக்கு புலி வீரத்தை நிலைநிறுத்திய சிறுத்தைப் படையணியின் சிறப்பு அணி இறுதி வரை கைகளாலும் கால்களாலும் சண்டையிட்டது. நவீன போராட்ட முறமைகள் உட்புகுத்தப்பட்ட பின்பும் இவ்வாறான தாக்குதல்களை எதிரி சிந்தித்துப் பார்க்கவில்லை. திணறிப் போன சிங்களப்படையின் உயிருடன் பிடிப்பதற்கான கனவு மண்ணுக்குள் புதைந்து போனது. இவ்வாறு ஒரு புறம் வீரத்தின் உச்சங்கள் சண்டையிட்டு வீரச்சாவடைந்த அதே நேரம் இன்னும் ஒரு அணி தலைவனின் இன்னும் ஒரு எண்ணத்தை நிறைவேற்றத் துடித்துக் கொண்டிருந்தது.
“தேவையற்ற சாவுகளை தவிர்க்க வேண்டும் ” என்று தேசியத் தலைவர் அடிக்கடி குறிப்பிடுவதைப் போல பெண் போராளிகள் அவ்வெண்ணத்தை நிறைவேற்ற முனைந்தனர். சக்தி, அஞ்சலை, உஷா, .உட்பட்ட 5 பெண் போராளிகள் உயிர்தப்பிப்பிழைத்தல் நடவடிக்கையில் இறங்குகிறார்கள்.
“தப்பிப் பிழைத்தல்” என்பது அற்பதமானதும் மிகக் கொடுமையான செயல். இதன் வரலாற்றை அறிந்தவர்கள் அல்லது அனுபவித்தவர்களுக்கே அதன் உண்மை புரியும். பயங்கரமான எதிர் விளைவுகளைத் தாங்கிக்கொள்ளும் செயற்பாடாக இது கணிக்கப் படுகிறது. உயிர்தப்பிப் பிழைத்தல் என்ற சொல்லைக் கேட்டவுடனே எனக்கு 3 விடயங்கள் நினைவுக்கு வரும்
1. ஈராக்கில் தனது படையணியுடன் சண்டைக்காக சென்று உயிர் மீண்டு வந்த பிரித்தானிய இராணுவ வீரன் Chris Ryan இன் அனுபவக் குறிப்பான “ தப்பியவன் “ (The One That Got Away) நாவல்.
2. “Man vs. Wild” என்ற Discovery தொலைக்காட்சித் தொடர்.
3. செவ்வாய்க் கிரகத்தில் கைவிடப்பட்டு பூமிக்கு உயிருடன் திரும்பி விண்வெளி வீரன் ஒருவரின் கதையாகிய The Martian என்ற திரைப்படம்
இம் மூன்றுமே உயிர்தப்பிப் பிழைத்தல் என்ற விடயத்தின் ஆழத்தையும் அனுபவங்களையும் அக்குவேறு ஆணிவேறாக பேசுகின்றன. இதன் அனுபவம் என்பது வார்த்தைகளால் கூற முடியாதவை. அந்த வேதனைகளை யாரும் மறந்து விடவும் முடியாது.
இந்த நிலையில் தப்பிப் பிழைத்தல் பற்றி வெளிநாட்டவர்களின் அனுபவங்களை அறிந்த எமக்கு எம்மவர்கள் பற்றிய உண்மையான பல சம்பவங்களை அறிவதற்கு காலம் வழி விட்டதில்லை. அவ்வாறான தீரம் மிக்க பக்கம் ஒன்றை பகிரப்படாத பக்கம் தன் மீது பதிந்து கொள்கிறது.
மண்கிண்டிமலைப் படைமுகாம் அழிப்புக்குச் சென்ற இப் பெண் போராளிகள் உயிர் வாழ ஆசைப்பட்டவர்கள் அல்ல. தமிழீழத்துக்கான தமது தேவையை உணர்ந்தவர்கள். தாம் எதற்காக வளர்க்கப்பட்டோம் என்பதை நன்கு அறிந்தவர்கள். அதனால் தான் இலக்குத் தகர்க்கப்பட்ட பின் நடந்து கொண்டிருந்த வீரச்சாவுகளுக்குள்ளும் அவர்கள் தாம் சாவதை தவிர்தார்கள். சார்ச்சர் வெடிக்கத் தயாராக இருந்தாலும் வெடித்து சாவதை விட சாதிக்க வேண்டி சண்டைக் களங்களின் தேவையை உணர்ந்து தப்பிக்க முயல்கிறார்கள்.
உணவில்லை, குடிக்கத் தண்ணீர் இல்லை. தேவையான ஆயுத வெடிபொருட்கள் இல்லை. சரியான தொலைத்தொடர்பு முறமைகள் கையில் இல்லை. இருந்தவையும் கைவிடப்பட்டுவிட்டன. ஆனால் எப்பிடியாவது உயிர் தப்பி தலைவனிடம் செல்ல வேண்டும் என்ற இலக்கு மட்டும் தான் அவர்களிடம் இருந்தது. சிறப்புப் பயிற்சி பெற்ற அவர்களால் தப்பிக்க இயலும் என்ற நம்பிக்கை இருந்தது. அதனால் அவர்கள் தப்பித்தார்கள்.
ஆட்லறித் தளத் தகர்ப்புத் தாக்குதல் நடவடிக்கைக்காக உயிர்க்கொடை செய்த தம் தோழிகளை விட்டுவிட்டு நடக்கத் தொடங்குகிறார்கள். அங்கிருந்து பல தடைகளைத் தாண்ட வேண்டும். சிங்களக் கிராமங்களை கடக்க வேண்டும். படை முகாங்களை தவிர்த்து வெளியேற வேண்டும். அதற்குள்ளே யாராவது தப்பித்திருக்கக் கூடும் என்ற நோக்கத்தோடு அனுப்பப்பட்டிருக்கும் ரோந்துக் காவல் அணிகளிடம் இருந்து தப்பிக்க வேண்டும். இவற்றையெல்லாம் கடக்கும் போது சிங்கள வேட்டைக்காறரின் கண்களில் படவே கூடாது.
இப்படியாக பல தடைகளைத் தாண்ட வேண்டிய அவர்கள். சில முக்கிய வீதிகளையும் ஊடறுத்து வர வேண்டும். அவர்கள் வந்தார்கள். அங்கிருந்து நடக்கத் தொடங்கியவர்கள் பல வீதிகளைக் குறுக்கறுத்து கவனமாக கடந்து விடுகிறார்கள். ஆனால் இடையில் இருந்த பல படைமுகாம்களில் பல தடவைகள் முட்டுப்படுகிறார்கள். சிறிய சண்டைகள் மூண்டாலும் அவற்றில் இருந்து விலகி ஓடுகிறார்கள்.
கிட்டத்தட்ட இரண்டு வாரங்கள் அவர்களின் முயற்சி காடு மலை என்று தொடர்ந்து கொண்டே இருந்தது. மணலாறில் தொடங்கியவர்கள் வவுனியாக் காட்டுக்குள் வந்து மிதந்தார்கள். அத்தனை நாட்களும் உணவில்லை காட்டு இலை குழைகளை பச்சையாக உண்டார்கள். சாப்பிடக் கூடியதாக எது கிடைத்தாலும் அதை பத்திரப்படுத்திக் கொண்டார்கள். காட்டுக்குள் இலைகளைத் தவிர வேறெதுவும் அவர்களுக்கு கிடைக்கவில்லை மிருகங்களை வேட்டையாடினால் அதில் இருந்து வெளியேறும் வெடிச்சத்தம் இவர்களை இனங்காட்டி ஆபத்துக்களை கொண்டு வரும் என்பதை உணர்ந்து வேட்டையாடுவதை தவிர்த்தார்கள். இலைகளை மட்டுமே உண்டார்கள்.
காட்டுக்குள் அருவிகளை தேடிக் கழைத்து விட்ட நிலையில் வரண்டு கிடந்த உதடுகளை நனைக்க வேண்டும் என்று தண்ணீர்க் கொடியை தேடினார்கள். ஆனால் சில நேரத்தில் அவையும் கிடைப்பதில்லை. கிடைக்கும் நேரத்தில் தண்ணீர்க் கொடியைக் கொண்டு உதட்டை ஈரப்படுத்திக் கொண்டார்கள்.
உடலில் கொஞ்சம் கொஞ்சமாக பலமிழக்கத் தொடங்கிய அவர்கள் இறுதி வரை சோர்ந்து விடவில்லை. நடந்து கொண்டே இருந்தார்கள். நடந்து நடந்து வவுனியா காட்டினூடாக எமது கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வந்தேறிய போது அவர்கள் போராளிகளா என்ற சந்தேகம் எழுந்தது. ஏனெனில் அவர்களின் கோலம் அவ்வாறு மாகி இருந்தது. மக்கள் அவர்களை அடையாளம் கண்டு கொண்டார்கள். இவர்களும் மக்களை அடையாளம் கண்டு கொண்டு தாம் பாதுகாப்பான இடத்துக்கு வந்து விட்டோம் என உறுதிப்படுத்தியவர்களாய் நிலத்திலே மயங்கி விடுகிறார்கள்.
துரோகத்தினால் முடிக்கப்பட்ட இவ்வெற்றிச் சண்டை தன்னுள் 57 சிறுத்தைப் படையணியின் சிறப்புப் பெண் போராளிகளின் தியாகத்தாலும் அவர்களின் வீரத்தாலும் மட்டுமல்லது அந்த பிரதேசத்தில் அன்று நடந்த ஐந்து படைமுகாம்கள் மீதான தாக்குதல்களில் மொத்தமாக 180 எழுதமுடியாத பல காவியங்களை எழுதிச் சென்றது என்பது உண்மையே…
அனுபவக் குறிப்பு பகிர்வு: முதலாவது சிறுத்தைப் படையணியின் பெண் போராளி
எழுதியது: இ. இ. கவிமகன்
1980 களின் இறுதியில், மரபுப்படையணியாக புலிகளமைப்பு வளர்ச்சியை கண்டநேரத்தில், இந்திய இராணுவத்தினருடன் சண்டைபிடிக்கும் முடிவை தலைவர் எடுத்தபோது, பலநூறு போராளிகள் அமைப்பை விட்டு வெளியேயிருந்தனர்.!
இந்திய இராணுவத்தினருடனான போரின் போது சிலநூறு போராளிகளே, தனியாகவும்,சிறு, சிறு குழுக்களாகவும், தமிழீழமெங்கும் களத்தில் நின்றனர்.!
1990களில் ஆரம்பத்தில் இந்திய இராணுவம், எம் தேசத்தை விட்டு அகன்றதும், பல்லாயிரம் போராளிகள் புலிகளமைப்பில் தங்களை இணைத்தனர்.
ஒரு கெரில்லா அமைப்பாக சுருங்கி இருந்த புலிகளமைப்பு, பெரும் மரபுவழிப்படையாக மீண்டும் மாற்றம் பெற்றது.
1990ம் ஆண்டு, 2ம் கட்ட ஈழப்போர் ஆரம்பமான பின்னர் தான், பெரும் மரபுவழிப்படையணிகளை நகர்த்துவது தொடங்கி, அதை சீராக்குவது வரை, பட்டறிவின் மூலம் தங்களை வளர்த்துக்கொண்டனர் புலிகள்.
இதில் முதல், முதலாக “ஆகாய கடல் வெளிச்சமர்” என பெயர் சூட்டப்பட்ட, முதலாவது வலிந்த தாக்குதல் ஆணையிறவுப் பெரும் தளத்தின் மீது புலிகளால் மேற்கொள்ளப்பட்டது.
அந்தக்காலம், புலிகளின் பட்டறிவுக்காலம்.!
நாம் நிர்ணயித்த இலக்கை அன்று அடைய முடியாது போனது. அந்த தாக்குதல் ஒரு மாதத்துக்கு மேல் நீடித்தது. இரண்டு இராணுவங்கள் இலங்கையில் உள்ளது என சர்வதேச ஊடகங்கள் வர்ணித்தன.
இந்த தாக்குதல்கள் மூலம் பெரும் நிவாகப்பட்டறிவையும், போர் நுணுக்கங்களையும் எமது போராளிகள் கற்றுக்கொண்டனர். இதன் பின்னர், பல மினிமுகங்கள், தொடர் காவலரண் தகர்ப்பு, முன்னேற்ற முறியடிப்பு, என தங்களை புலிகள் யுத்த ரீதியாக வளர்த்துக் கொண்டனர்.
மணலாற்றில் அமைந்திருந்த, மண்கிண்டிமலை முகாம் முகாம் மீது, ஒரு வலிந்த தாக்குதலுக்கு தயாராகினர் புலிகள்.
அதற்கான வேவு நடவடிக்கை புலிகளால் ஆரம்பிக்கப்பட்டு, முழுமை பெற்றிருந்தது. இறுதி வேவு லெப்.கேணல் தனத்தின் தலைமையில் நிறைவு பெற்றிருந்தது. எல்லாம் தயாராகி போராளிகளுக்கான பயிற்சிகள் நிறைவு பெற்றிருந்தன.
இதயபூமி-1 என தலைவரால் பெயர் சூட்டப்பட்டு, பெரும் தாக்குதலொன்றிற்கு புலிகள் தயாராகினர். மணலாறு மாவட்ட தளபதி, அன்பு அண்ணை தலைமையில், பால்றாஜ் அண்ணையின் வழிகாட்டலுடன், ஒரு பகுதிக்கு தனம் தலைமை தாங்கினார்.
இந்த இராணுவ முகாமை பொறுத்தவரை இராணுவத்துக்கே சாதகமான பிரதேசம். என்னை பொறுத்தவரை புலிகளை தவிர, வேறு எந்த இராணுவத்தினரும் இப்படியான ஒரு இலக்கை தெரிவு செய்திருக்க மாட்டார்கள்.!
ஏனெனில் அந்த காவலரண்களின் அமைவிடம் உயரமான இடங்களில், பள்ளத்தை நோக்கியவாறே பெரும்பாலும் அமையப்பெற்றிருந்தது.
அந்த முகாமுக்கு காப்பாக சிறு, சிறு மலைகளும் காடுகளும் என, எதிரிக்கே முழுவதும் சாதகமான புவியமைப்பை, அந்த முகாம் கொண்டிருந்தது.
அப்படியான ஒரு முகாம் மீதான தாக்குதல் ஒன்றை நடத்தும் நோக்கில் புலிகள் இருட்டோடு இருட்டாக நகர ஆரம்பித்தனர். காவலரணில், காவலிருந்த சிங்கள சிப்பாய்களின் கண்ணில் மண்ணை தூவி, இராணுவ முகாமினுள் நுழைந்து, எதிரியின் பிரடிக்கு பின்னால் நிலை எடுத்தனர்.
இந்த நேரத்தில் நடந்த சம்பவம் ஒன்றை நான் குறிப்பிட வேண்டும்.
இப்படி உள் நுழையும் போது, போராளி ஒருவரை விசப்பாம்பு தீண்டி விட்டது. தன்னால் சண்டை குழம்பக் கூடாது என்றுணர்ந்த அந்த போராளி, வேதனையை பொறுத்தபடி, சத்தமில்லாது அந்த பாம்பு நகரும் வரை காத்திருந்து, அங்கிருந்து பின் நகர்ந்து, அந்த தாக்குதல் வெற்றிபெற வழிகோலினான்.
இவர்கள் தான் எங்கள் வீரர்கள்.!
25.07.1993 அன்று திட்டமிட்டபடி மண்கிண்டிமலை முகாம் மீது புலிகளால், அந்த வரலாற்று தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.!
இந்த தாக்குதலை சிங்களச் சிப்பாய்கள் எதிர் பார்க்கவில்லை. அடுத்தது திருப்பி தாக்குவதற்கு அவர்களுக்கு சந்தர்ப்பமும், புலிகள் வழங்கவில்லை.
திடீர் தாக்குதலால் நிலை குலைந்த சிங்களப்படை சிதறி ஓடியது. பெரும் காடு சூழ்ந்த பிரதேசம் என்பதால் அது அவர்களுக்கு சாத்தியமாகி இருந்தது.
அன்று 100மேற்பட்ட இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். புலிகள் தரப்பில் 8போராளிகள் வீரச்சாவடைந்தனர். புலிகளால்81MM மோட்டர் உட்பட நூற்றுக்கு மேற்பட்ட ஆயுதங்கள் அள்ளப்பட்டது.
தலைவரால் பெயர் சூட்டப்பட்டு, புலிகளின் இந்த பாச்சல், சிங்களத்துக்கு அவமானத்தை உண்டாக்கியது. குறைந்த இழப்புடன் பெரும் சேதத்தை எதிரி சந்தித்தான்.
இந்த தாக்குதலுக்கு பழிவாங்கவே தான், இதே ஆண்டு ஒன்பதாம் மாதம் ஒப்ரேசன் யாழ்தேவியை தொடங்கி கிளாலியை கைப்பற்ற வெளிக்கிட்டு, புலிகளால் முதுகெலும்பு உடைக்கப்பட்டது. (இந்த தாக்குதல் பற்றி முன்னமே பதிவு செய்துள்ளேன்)
1993ம் ஆண்டு புலிகளின் ஆண்டு. அன்று பல வெற்றிகளை நாம் எம் கைகளில் வைத்திருந்தோம்.!
ஏன் இந்த தாக்குதல் புலிகளால் அன்று மேற்கொள்ளப்பட்டது?
இதில் தான் தலைவரின் போர் உத்தியை, நீங்கள் அறிய வேண்டும்.!
1993 இல் பூநகரி தாக்குதலுக்காக, கிட்டத்தட்ட ஒரு வருடம் கடும் பயிற்சி நடந்து கொண்டிருந்தது. அதனால், குறிப்பிட்டு சொல்லுமளவுக்கு, பெரும் தாக்குதல் எதுவும் புலிகளால், எதிரி மீது மேற்கொள்ளப்படவில்லை. இதனால் சிங்கள உளவுத்துறையினர் எச்சரிக்கை ஒன்றை தமது அரசுக்கு விடுத்தனர்.
புலிகள் பெரும் போர் ஒன்றுக்கு தயாராகின்றார்கள் என்ற செய்தி, சிங்கள நாளேடுகளில் செய்தியாக உலா வந்தது. இதனால் சிங்களப்படை முகாம்கள் உச்சவிழிப்புடன் வைக்கப்பட்டது.
இதனால், அவர்களை திசை திருப்ப வேண்டிய தேவை புலிகளுக்கு எழுந்தது. பூநகரி தாக்குதலின் ஒரு அங்கம் தான் இதயபூமி-1 தாக்குதல் என்றால் அது மிகையாகாது.
இப்படியான நேரத்தில் தான் இந்த தாக்குதலுக்கு தலைவர் திட்டமிட்டார்.!
அதனால், பூநகரி தாக்குதலில் பங்குபற்ற, பயிற்சி எடுத்த படையணியினருக்கு, இந்த தாக்குதல் பற்றி தெரியாமல், வேறு ஆண், பெண் களப்போராளிகளுடன், வெளி வேலைகளில் இருந்த போராளிகளையும், புதிய போராளிகளையும் இணைத்து, அவர்களைக் கொண்டே இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.
இந்த தாக்குதலின் வெற்றியாலும், தாக்குதலுக்கு பெயர் சூட்டப்பட்டமையாலும், இந்த தாக்குதலுக்காக தான், புலிகள் பயிற்சி எடுத்தனர் என, சிங்களம் ஒரு முடிவுக்கு வந்தது.
ஆனால், மீண்டும் காத்திகை மாதம் மூன்றாவது தடவையாக “தவளை” என்று பெயர் சூட்டி, பூநகரி மீது தாக்குதல் மேற்கொண்டபோது, சிங்களத்துக்கு தெரிந்திருக்கும் “இதயபூமி-1 வெறும் ட்ரெய்லர்” தான் என்று.!
எங்கள் தலைவனின் போர் நுட்பத்துக்கு சிறிய உதாரணம் இந்த தாக்குதல்.!
இந்த உத்தி வெளித்தெரியாத போதும், இதுபோன்ற தலைவரின் போர் நுட்பங்கள், எமது வரலாற்றில் புதையுண்டு போயுள்ளது.!
இந்த தாக்குதலின் வெற்றி, புலிகளின் போரிடும் உளவுரணை அன்று மேம்படுத்தி இருந்தது.!
அதன் வெளிப்பாடே பூநகரி வெற்றி.!
இந்த தாக்குதலின் போது (சரியாக எனக்கு நினைவில்லை) 10இலட்சத்திற்கு மேற்பட்ட, எதிரியின் பணம் அன்று புலிகளால் கைப்பற்றப்பட்டிருந்தது.
அந்த பணத்தில், அந்த தாக்குதலில் பங்கு பற்றிய போராளிகளுக்கு, முள்ளியவளையில் ஒரு பாடசாலையில் வைத்து விருந்து வைக்கப்பட்டது.
அந்த விருந்தில் எமது மக்களும் பங்குபற்றி, தம் சந்தோசத்தை கொண்டாடினர்.!!
நினைவுகளுடன் துரோணர்.!!
**
இதயபூமி 01
தமிழீழ தேசத்தின் இதயம் அது. மணலாறு, தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் உயிர் மூச்சாய் இருந்துவரும் மையம். இந்திய வல்லாதிக்கப் படைகளை முகத்தில் அறைந்து வீடு அனுப்புவைத்ததில் பெரும் பங்கெடுத்துக் கொண்ட களபூமி. எல்லாவற்றிற்கும் மேலாக வடதமிழ் ஈழத்தையும், தென்தமிழ் ஈழத்தையும் இணைத்து வைத்திருக்கும் பால பூமி. மணலாறு, தமிழீழத்தின் இதயத்தைப் பிளந்து தமிழ் மக்களின் தாயக தாகத்தை அழுத்து விடத் துடிக்கும் எதிரிக்கும் அந்தப் பிராந்தியம் முக்கியமாகத்தான் இருந்தது. மிகக் குறுகிய காலப் பகுதியில் சிங்கள பேரினவாத அரசு ‘வெலி ஓயா’ என புதிய நாமம் சூட்டி அப்பகுதியில் வாழ்ந்த தமிழ் சுதேசிகலையெல்லாம் விரட்டியடித்து, அங்கெல்லாம் சிங்கள மக்களைக் குடியமர்த்தி, அவர்களுக்கு பாதுகாப்பளிக்கவும் சில அபகரிப்புக்களை தொடர்ந்து மேற்கொள்ளவும் வீறாப்புடன் எழுந்து நிற்பதுதான் ‘மண்கிண்டிமலை’ அது எதிரியின் பாசையிலே ‘ஜானக புர’.
ஆனால்….. 25.07.1993 அன்று இரவு விடிந்தபோது, எதிரு அதிர்ந்தான். உலகம் வியந்தது. சிங்கள தேசம் ஒருமித்து ஒப்பாரி வைத்தது. ‘வெட்கத்துக்குரிய நாள். எது பிழையாகிப் போனது?’ இப்படிப் பலவாறு தமது இராணுவத் தோல்விகளை தாங்கிக்கொள்ள ம்,உடியாமல் அழுதன பல சிங்களதேச நாளேடுகள்.
ஆம், பேரின அரசினால் மிகப்பெரிய தமிழினப் படுகொலை நடாத்தி முடிக்கப்பட்ட பத்து ஆண்டுகள் நிறைவெய்திய வேளையில் ( 1993 கார்த்திகை வரையப்பட்ட கட்டுரை தேசக்காற்று இணையம் வராலாற்றுடன் இன்று பதிவு செய்கிறது) கடந்த 25.07.1993 அன்று இரவோடு இரவாக இப்பகுதியின் மிகப் பெரிய முகாம்…. எதிரி தனக்கு கேந்திர முக்கியத்துவம் வாய்ததெனக் கருதி வந்த முகாம்…. அப்பகுதியில் நடைபெற்ற பல்வேறு இராணுவத் தாக்குதலுக்கும் கட்டளைத் தலைமையகமாகப் பயன்படுத்துப்பட்டு வந்த மண்கிண்டிமலை இராணுவ முகாம்….. அத்துடன் அதனைச் சூழ்ந்திருந்த சிறிய முகாம்களும் அரைமணி நேரத்தில் தகர்த்தழிக்கப்பட்ட வரலாற்றுச் சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.
இதயபூமி 01 எனப் பெயர் சூட்டப்பட்டு விடுதலைப் புலிப் போராளிகளினாலும் அவர்களின் பின்னால் அணிவகுத்து நின்ற துணைப்படை வீரர்களினாலும் நடாத்தப்பட்ட இந்த மின்னல் வேக, வெற்றிகரமான தாக்குதலில் தமது இனிய உயிர்களை இதயபூமிக்குத் தந்து தமிழ் மக்களின் நெஞ்சங்களில் நிரந்தரமாய் உறங்கிக் கொண்டனர் பத்து வேங்கைகள்.
70க்கும் மேற்பட்ட இராணுவம் கொல்லப்பட்டு, 5 கோடி பெறுமதியான ஆயுதங்கள் அள்ளப்பட்டு வெற்றிகரமாக நிறைவேறிய இதயபூமி 01இன்னும் எத்தனை தடவைகள் இந்தப் பகுதியில் வேடிக்கப்போகின்றதோ என்று எதிரி ஏங்கிக் கொண்டிருக்கிறான்.
– எரிமலை (கார்த்திகை 1993) இதழிலிருந்து
கட்டுநாயக்கா விமானத்தள தகர்ப்பில் வெற்றிக்கு வித்திட்ட பெயர் குறிப்பிடப்படாத கரும்புலி மாவீரர்கள்…!
24.07.2001 அன்று சிறிலங்கா தலைநகரில் அமைந்துள்ள கட்டுநாயக்கா விமானப் படைத் தளத்தினுள் ஊடுருவி தமிழர் தாயகத்தில் நாளும் குண்டுகள் வீசி, தமிழின அழிப்பிற்கு பயன்படுத்தப்பட்ட வானூர்த்தி படைக்கலங்கள் பலவற்றை அழித்து மாபெரும் வெற்றிக்கு வித்திட்டு பெயர் குறிப்பிடப்படாத கல்லறைகளில் உறங்கும் கரும்புலி மாவீரர்களின் 18ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
ஈழநாதம் பத்திரிக்ககையில் அன்று பதிவான அழிக்கப்பட்ட விமானங்கள் எண்ணிக்கை 28 ஆக வெளியிடப்பட்டது.
முற்றிலுமாக அழிக்கப்பட்டவை….!
இரண்டு எ (A) – 340 – 300 பயணிகள் விமானங்கள்
ஒரு எ (A) – 330 -200 பயணிகள் விமானம்
நான்கு கிபிர் போர் விமானங்கள்
மூன்று கெ (K)-8 பயிற்சி விமானங்கள்
இரண்டு எம்.ஜ.ஜி (MIG) – 27 ஜெட் போர் விமானங்கள்
இரண்டு பெல் (bell) 412 உலங்கு வானூர்தி
இரண்டு வி.வி.ஜ.பி (VVIP) 412 உலங்கு வானூர்தி
இரண்டு எம்.ஜ (MI) -17 உலங்கு வானூர்தி
மூன்று K-8
சேதப்படுத்தப்பட்டவை…..!
இரண்டு – A-320 பயணிகள் விமானங்கள்
ஒரு – A-340 பயணிகள் விமானம்
ஒரு அண்டொனோவ் (Antonov) போக்குவரத்து விமானம்
ஒரு எம்.ஜ (Mi) -24 உலங்கு வானூர்தி
ஒரு பெல் (Bell) 412 உலங்கு வானூர்தி
நான்கு கிபிர் போர் விமானங்கள்
விடுதலைப்புலிகளால் நடத்தப்பட்ட இத்தாக்குதலானது இலங்கையின் பொருளாதாரத்தில் வரலாறு காணாத மாற்றத்தை ஏற்படுத்தியது.
இத்தாக்குதலின் மூலம் சுமார் 375 மில்லியன் அமெரிக்க டாலர்களிற்கும் அதிகமான சொத்துக்கள் அழிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
இத்தாக்குதலில் 14 பெயர் குறிப்பிடமுடியாத மறைமுகக் கரும்புலிகள் வெற்றிக்கு வித்திட்டு காற்றில் கலந்தனர் .தமிழீழ விடுதலை புலிகளின் போராட்ட வாழ்வில் மாபெரும் வெற்றி மகுடம் சூட்டிய நாள். ஆம், கட்டுநாயகா வான்படை தளத்தை தகர்த்த நாள்!
1983 ஆம் ஆண்டு யூலை மாதம், தமிழர்களின் வாழ்வில் மறக்க முடியாத,இன்னல்கள், கொடிய துயரங்கள் நிறைந்த மாதம்.
கொடுங்கோலன் சிங்களவனால்,ஒரு மிகப்பெரிய யுத்தத்தை, தமிழர்களின் வாழ்வில் திணித்த நாள்.
ஆயிரக்கணக்கான தமிழர்களை, சிங்களன் கொன்றொழித்த நாள். லட்சத்துக்கும் அதிகமான தமிழர்கள்,வீடுகளற்ற அகதிகளாக நடுத்தெருவில் நின்ற நாள். பல்லாயிரகணக்கான தமிழர்களின் வீடுகளையும், ,உடமைகளையும்,அவர்களின் வியாபார ஸ்தலங்களையும் அடித்து நொறுக்கிய நாள்.
தமிழர்களுக்கு பெருமளவில் பொருட்சேதமும், உயிர் சேதமும் நிகழ்ந்த இந்த மாதத்தை தான், கறுப்பு யூலை என்று நினைவு படுத்தி,புலம் பெயர் மக்கள் வாழும்,அனைத்து தேசங்களிலும் ஆண்டு தோறும் அஞ்சலி செலுத்துவது வழக்கம்.
புலம் பெயர் தமிழன் ஒவ்வொருவனும், யூலை மாதத்தின் கடைசி நாட்களை தன் வாழ்நாளில் மறக்க இயலாத அளவுக்கு கொடுமையான சம்பவங்கள் நிகழ்ந்த காலம் இது.
இனி சிங்களனோடு பேசுவதில் எந்த பிரயோஜனமும் கிடையாது. சிங்களனுக்கு புரிந்த மொழி, திருப்பி அடிப்பது தான். பொருளாதாரத்தில் அவனை சிதைப்பது தான் என்று முடிவு கட்டிய,தமிழீழ விடுதலைப் புலிகள், கறுப்பு யூலைக்கு பதிலடியாக, ஒரு மாபெரும் யுத்தத்தை, இழப்பை சிங்களனுக்கு தரவேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு இருந்தார்கள்.
ஆம் அந்த தாக்குதலுக்காக 2001 ஆண்டு யூலை 24 ஆம் நாள் என்று,தேதி குறிக்கப்பட்டது. கட்டுநாயகா வான்படை தளத்தை தகர்ப்பது என்று முடிவெடுத்தார்கள் விடுதலைப்புலிகள்.
வடக்கிலும் கிழக்கிலும் வாழ்ந்த விடுதலைப்புலிகள், எதிரியை அவன் கோட்டைக்குள்ளேயே புகுந்து தாக்கி, தங்கள் வீரத்தை நிலைநாட்ட வேண்டும் என்று முடிவெடுத்து, இலங்கையின் இதயமான கொழும்புக்கு உள்ளேயே ஊடுருவினார்கள்.
பதினான்கு கரும்புலிகள் யூலை மாதம் 24 ஆம் தேதி அதிகாலை மூன்றரை மணிக்கு, கட்டுநாயகா வான்படை தளத்துக்குள் நுழைந்தார்கள்.
இருபத்தாறு விமானங்களை தகர்த்தார்கள். அதில் பண்டார நாயகா விமான நிலையத்தில் நின்ற, நான்கு பயணிகள் இல்லாத விமானம் உட்பட. அதிகாலை மூன்றரை மணிக்கு ஆரம்பித்த யுத்தம்,காலை எட்டரை மணிக்கு முடிவுக்கு வந்தது.
வெறும் ஐந்து மணி நேரத்தில்,எதிரியின் இருபத்தாறு போர் விமானங்களை தகர்த்த எம் கரும்புலிகள், வீரச்சாவை தழுவினார்கள். இந்த யுத்தத்தை திட்டமிட்டு, முன்னின்று நடத்தியவன் மாவீரன் தளபதி சார்லஸ்.
இந்த தாக்குதலால் சிங்களனுக்கு ஏற்பட்ட இழப்போ முன்னூற்று ஐம்பது மில்லியன் அமெரிக்க டாலர்கள்.அது மட்டுமா, பாதுகாப்பில்லை என்று கருதி,சிங்களனின் சுற்றுலா வணிகம் அடியோடு சிதைந்து போனது. விமான நிலையம் மூடப்பட்டது. கடும் பொருளாதார வீழ்ச்சியை சிங்களவன் சந்தித்தான்.
துன்பத்தை தந்தவனுக்கே,அந்த துன்பத்தை திருப்பி கொடுத்தார்கள் எம் மாவீர கண்மணிகள்.
கொழும்பு விமான படை தளத்தில் புகுந்து இருபத்தாறு விமானங்களை தாக்க தெரிந்த விடுதலை புலிகளுக்கு, சிங்களனில் ஒரு ஆயிரம் பேரை கொல்வது என்பது கடினமான விடயமா?
சாவை துச்சமென மதித்து தான், கரும் புலிகளாக களத்தில் நிற்கிறார்கள். அப்படி துணிந்த பிறகு சிங்களனில் ஒரு ஆயிரம் பேரை கொன்றிருக்க முடியாதா?
ஏன் செய்யவில்லை? காரணம் தலைமை அப்படி. நம் எதிரி சிங்கள அரசும், ராணுவமும் தானே ஒழிய,சாதாரண சிங்கள மக்கள் அல்ல.அவர்கள் நம் இலக்கு அல்ல என்று பல முறை அழுத்தம் திருத்தமாக பதிவு செய்தவன் எங்கள் தலைவன் பிரபகாரன்.
அந்த அளவுக்கு கட்டுப்பாடுகளோடு, படை நடத்தியன் எங்கள் தலைவன் பிரபாகரன். முப்பதாண்டு கால ஆயுத போரில், விடுதலைப்புலிகள் ஒரு சிங்களத்தியை, கையைப் பிடித்து இழுத்தார்கள், பாலியல் ரீதியாக துன்புறுத்தினார்கள் என்று எவனாவது குற்றம் சொல்ல முடியுமா?
ஏன் என் எதிரி சிங்களன் அப்படி ஒரு குற்றசாட்டை சொல்ல முடியுமா? முடியாது.காரணம் அந்த அளவுக்கு ஒழுக்கமான தலைமை, தலைவனின் வழியில் கட்டுகோப்பான போராளிகள்.
எங்கள் போராட்டங்களில் வேண்டுமானால், பின்னடைவு ஏற்பட்டு இருக்கலாம். ஆனால் எங்கள் போராட்ட வழியில் நேர்மையும், நியாயமும் இருந்தது. எதிரியை தாக்குவதில் கூட ஒரு கட்டுப்பாடு இருந்தது.
உலக விடுதலை போராட்ட வீரர்களில், விடுதலைப் புலிகளை போல வீரம் செறிந்த போராளிகளும் இல்லை. பிரபாகரனை போன்ற மாவீரன் எவனும் இல்லை என்று மார் தட்டி சொல்வோம்.
கட்டுநாயக்கா வான்படை தாக்குதலில், வீரச்சாவை தழுவிய எம் கரும்புலி வீர மறவர்களுக்கும்,கறுப்பு யூலையில், சிங்களவனால் கொடூரமாக கொன்றொழிக்கப்பட்ட,எம் உடன்பிறப்புகள் அனைவரையும் நெஞ்சிருத்தி வணங்குகின்றோம்.
பல கரும்புலி வீரர்கள் இன்று பெயர் குறிப்பிடப்படாத கல்லறைகளில் அநாமதேயமாக உறங்கியபோதும் அவர்களது அற்புதமான சாதனைகள் வரலாற்றுக் காவியங்ககளாக என்றும் அழியாப் புகழ்பெற்று வாழும்.
– தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள்.
செல்லக்கிளி அம்மான், சந்திரன் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த லெப்டினட் செல்வநாயகத்துக்கு இயக்கம் சூட்டிய பெயர்கள் இவை. கல்வியங்காடு என்ற இடத்தி ஏழை விவசாயக் குடும்பத்திலே பிறந்து ஆரம்பக் கல்வியைக் கூடத் தொடர முடியாத நிலையில் கல்வியைக் கைவிட்ட செல்லக்கிளி, ஆரம்பத்தில் அண்ணா கோப்பி விற்பனை வானில் சாரதியாக வேலை பார்த்தான். செல்லக்கிளி இயக்கத் தலைவர் பிரபாகரனுக்கு அறிமுகமான காலத்தில் இருந்தே இயக்க நடவடிக்கைகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டவன். எந்த வாகனத்தையும் மிகத் திறமையாக ஓட்டும் பயிற்சியைப் பெற்றிருந்த செல்லக்கிளி, ஆயுதங்களாகட்டும், மோட்டார் இயந்திரங்களாகட்டும் பழுதடைந்தால் தானே திருத்தி இயக்கக் கூடிய மிகச் சிறந்த தொழில் நுட்ப அறிவையும் பெற்றிருந்தான். காட்டுப்பாதைகளை அறிவதில் அதிசயிக்கத்தக்க ஆற்றலைக் கொண்டிருந்த செல்லக்கிளி தனது வாழ்க்கையை தான் வாழ்ந்த சூழ்நிலையை ஒரு கெரில்லாப் பயிற்சிக்களமாக ஆக்கிக்கொண்டிருந்தான். ஒரு தடவை உடையார்கட்டுக் குடியேற்றத் திட்டத்தில் காட்டுமரங்களை வெட்டி விவசாயத்தில் ஈடுபட்டிருந்த வேளையில் எதிர்பாராமல் வந்த இரண்டு பெரிய கரடிகளில் ஒன்றைக் கோடாரியால் வெட்டிக் கொன்றான். மற்றக்கரடி, கூட இருந்தவர்களால் சுட்டுக் கொல்லப்பட்டது.
ஒய்வு நேரங்களில் காட்டுப்பகுதிகளில் கட்டுத் துவக்குக் கட்டி மிருகங்களை வேட்டையாடுவது அவனது பொழுது போக்காகும். ஆரம்ப காலங்களில் காடுகளில் இயக்கத்திற்கான முகாம்களை அமைக்கு வேலை நடைபெறும் போதெல்லாம் முகாம்களுக்குத் தேவையான அமைப்புகளைக் கொண்ட மரங்களைத் தேடிக்கண்டு பிடித்து வெட்டுவது, கொட்டில் போடுவது, கூரை வேய்வது போன்ற செயல்கள் அவன் தலைமையில் அவன் மேற்பார்வையில் தான் நடைபெறுவது வழக்கம்.
சிறுவயதில் இருந்தே தனது பெரிய தாயாரின் வீட்டில் வாழ்ந்து வந்தவன் செல்லக்கிளி. அவனது பெரிய தாயாரின் மகன் செட்டி என்ற தனபாலசிங்கம் ஆரம்பத்தில் தமிழீழ விடுதலைப் போராளியாக இருந்த போதிலும் பின் முழுமையான சுயநலவாதியாகவே மாறினான். அவனது துரோகத்தைக் கண்டு செல்லக்கிளி அவனை அண்ணன் என்று பாராது “அரசியலைத் துற அல்லது என் கையாலேயே நீ சாவாய்” என்று எச்சரித்தான். ஆனால் அவன் திருந்தவில்லை. செட்டியின் செயல் எல்லை மீறவே இயக்கத்தின் தலைவர் பிரபாகரனால் செட்டி சுடப்படுகிறான். செட்டி சுடப்பட்டதற்குப் பின்பும் இயக்கத்திற்கும் பிரபாகரனுக்கும் விசுவாசமாக முழுமையாக தன் உயிரையே தருகிற அளவிற்குச் செயலாற்றினான் செல்லக்கிளி. “செட்டியின் குடும்பத்தைக் காப்பாற்றுவது எனது கடமைதான். அதைவிட இயக்கத்திற்கு நான் ஆற்ற வேண்டிய கடமை பெரிது” இது செல்லக்கிளி உறுதியாக உதிர்த்த வார்த்தைகள்.
இயக்கத்தையும் அவனையும் பிரித்துப் பார்க்க முடியாத அளவிற்கு அவனது பணி இயக்கத்திற்கு அர்ப்பணிக்கப்பட்டது. இயக்கத்தின் ஆரம்ப காலத்தில் இருந்தே இயக்கம் நடத்திய முக்கிய தாக்குதல் நடவடிக்கைகளிலெல்லாம் பங்கு பற்றியவன் செல்லக்கிளி.
முதல் முதலில் இயக்கம் உளவுப்படை பொலிஸ் அதிகாரியான கருணாநிதியை அழித்த நிகழ்ச்சி, பொலிஸ் உளவுப்படை தலைமையகத்தைச் சேர்ந்த பஸ்தியாம்பிள்ளை குழுவினர் மீதான் தாக்குதல், உமையாள்புரம் இராணுவத்தின் மீதான தாக்குதல், பருத்தித்துறை பொலிஸ் நிலையைப் பொறுப்பதிகாரி மீதான தாக்குதல், கந்தர்மடம் வாக்குச்சாவடியில் நடந்த இராணுவத்தினர் மீதான தாக்குதல் என்று இயக்கம் நடத்திய முக்கிய தாக்குதல் நடவடிக்கைகளிலெல்லாம் ஈடுபட்டுத் தன் தனி முத்திரையைப் பதித்தான் செல்லக்கிளி.
பருத்தித்துறை பொலிஸ் நிலையைப் பொறுப்பதிகாரி விஜயவர்த்தனாவைச் இட்டுவிட்டு அவனிடமிருந்து எடுத்த ஜீப் வண்டியை குன்றும் குழியுமாயிருந்த வீதிகளினுடாக 15 மெயில் தூரத்தை 9 நிமிடத்தில் ஓட்டிச் சென்று அந்தத் தாக்குதலில் ஈடுபட்ட இயக்க வீரர்களை இராணுவ முற்றுகைக்குள் படாது வெளிக்கொண்டு வந்த செயல் செல்லக்கிளியின் சாரதீயத் திறமைக்கு எடுத்துக்காட்டாகும். அவன் தலைமையேற்றுச் சிறப்புற நடத்திய இன்னுமொரு தாக்குதல் இரகசியப் பொலிஸ் அதிகாரி பஸ்தியாம்பிள்ளை குழுவின் மீதான தாக்குதலாகும்.
07.04.1978 அன்று அதிகாலை 5.30 மணியளவில் முருங்கன் மடு வீதியின் உட்புறமுள்ள காட்டுக்குள் அமைந்திருந்த மரமுந்திரிகைத் தோட்டத்துக்குள் இருந்த விடுதலைப் புலிகளின் இருப்பிடத்தை முற்றுகையிட்ட உளவுப்படை பொலிஸ் அதிகாரி பஸ்தியாம்பிள்ளை குழுவினர் நிராயுதபாணிகளாக இருந்த விடுதலைப்புலி இளைஞர்களைச் சுற்றி வளைத்தனர். இயந்திரத் துப்பாக்கி, கைத்துப்பாக்கிகள் சகிதம் வந்திருந்த பொலிஸாரிடம் பேச்சுக்கொடுத்து தன் புத்தி சாதுரியத்தால் அவர்களின் கவனத்தை திசை திருப்புகிறான் செல்லக்கிளி. பொலிஸார் சற்று ஏமாந்திருந்த நேரத்தில் விடுதலைப்புலிகள் அனைவரும் ஒன்றாகப் பாய்கிறார்கள் பொலிஸாரின் மேல். அடுத்தகணம் பொலிஸாரிடமிருந்த சில ஆயுதங்கள் விடுதலைப் புலிகள் கைகளுக்கு மாறுகின்றன. முதன்முதலாக அன்றுதான் கையிலெடுத்த எஸ்.எம்.ஜி. செல்லக்கிளியின் கைகளில் வேகமாக இயங்குகிறது. சில நிமிடங்களில் வேட்டுக்கள் தீர்க்கப்படுகிறன. புலிகளை வேட்டையாடவென வந்த பொலிஸ் இன்ஸ்பெக்ரர் பஸ்தியாம்பிள்ளை, சப் இன்ஸ்பெக்ரர் பேரம்பலம், சார்ஜன்ட் பாலசிங்கம், கான்ஸ்டபிள் சிறிவர்த்தனா என ஒவ்வொருவராகச் சுட்டு வீழ்த்தப்பட்டனர். இறுதியாக பொலிஸார் கொண்டு வந்த ஆயுதங்களாலேயே அவர்கள் சுடப்பட்டதுடன் அவர்கள் வந்த காரையே எடுத்துக்கொண்டு விடுதலைப் புலிகள் ஆயுதங்களுடன் தப்பிச் சென்றனர். மூன்று நாட்களின் பின்னர்தான் பஸ்தியாம்பிள்ளை கோஷ்டியினரின் முடிவு பற்றிய செய்தி வெளியே தெரிய வந்தது. செல்லக்கிளி தலைமையிலான இந்தத் தாக்குதல் நிகழ்ச்சியானது தமிழ்ப் போராளிகள் மத்தியில் ஒரு புத்துணர்ச்சியை ஏற்படுத்தியது.
ஆபத்து வரும் வெளிகளில் நிதானமாகச் சிந்தித்து வேகமாகச் செயற்படும் தன்மை செல்லக்கிளிக்கு கூடவே பிறந்ததாகும். முன்பொரு தடவை செல்லக்கிளி இருந்த கிராமமான உடையார்கட்டுக்கு செல்லக்கிளியைத் தேடி சப் இன்ஸ்பெக்ரர் தாமோதரம் பிள்ளை சென்ற போது செல்லக்கிளியின் வீட்டிற்கு அண்மையில் செல்லக்கிளியிடம் செல்லக்கிளியைப் பற்றி விசாரித்தான். செல்லக்கிளியோ நிலைமையை உணர்ந்து சற்றும் தடுமாறாது “வாங்கோ ஐயா செல்லக்கிளியின் வீடு பக்கத்திலேதான் இருக்குது கூட்டிக்கொண்டு போய்க் காட்டுறன்” என்று தன் வீட்டுக்கே சப் இன்ஸ்பெக்ரரை அழைத்துச் சென்று காட்டிவிட்டு வேகமாக மறைந்துவிட்டான். அதன் பின்புதான் சப் இன்ஸ்பெக்ரர் செல்லக்கிளி தன்னை ஏமாற்றிவிட்டு தப்பிச் சென்றதைத் தெரிந்து ஆத்திரப்பட்டான்.
தனக்குச் சரி எனப்பட்டதை உதாரணங்கள், பழமொழிகளோடு விளக்கி வாதிடுவது செல்லக்கிளிக்கு கைவந்த கலை. சட்டம் படித்துவிட்டு தமிழினத்தையே ஏமாற்றிக் கொண்டிருந்த கூட்டணி எம்பிக்கள் மத்தியில் நின்று பள்ளிப் படிப்பையே முடிக்காத செல்லக்கிளி “ஆறு ஆண்டுகளாக நாம் காடு மேடு என்று அலைகின்றோம். நீங்கள் முப்பது ஆண்டுகளாக என்ன செய்தீர்கள்?” என்று அவர்களின் பொது மேடையிலேயே ஏறி வினா எழுப்பினான். உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான அபேட்சகர்களைத் தேர்ந்தெடுக்க என தமிழர் விடுதலைக் கூட்டணியினரால் கூட்டம் கூட்டப்பட்ட இடத்திற்குச் சென்று தேர்தலைப் பகிஷ்கரிக்கும்படி வாதிட்டான் செல்லக்கிளி. சுயநலமிகள் அவன் வார்த்தையை ஏற்கவில்லை. ஆனால் தமிழீழ மக்கள் செல்லக்கிளியின் கருத்தை உள்ளூராட்சித் தேர்தலை முற்று முழுதாகப் பகிஷ்கரிதத்தன் மூலம் முழுதாக ஏற்றுக் கொண்டனர்.
1983ம் ஆண்டு ஜீன் மாதம் 23ம் நாள் வடமாகாணத்தில் மிகப்பெரிய இராணுவ முகாமிலிருந்து யாழ்ப்பாணம் நகருக்குச் செல்லும் வீதியில் திருநெல்வேலி என்ற இடத்தில் ரோந்து வந்து கொண்டிருந்த இராணுவ வண்டிகள் இரண்டின் மீது செல்லக்கிளி தலைமையிலான பதின்நான்கு விடுதலைப் புலிகள் கொண்ட கெரில்லா அணுகி தனது தாக்குதலை ஆரம்பிக்கின்றது வேகமாக வந்த ஜீப் வண்டி, விடுதலைப் புலிகள் வைத்த கண்ணிவெடி சரியான நேரத்தில் வெடித்ததால் மேலே தூக்கி எறியப்பட்டு கீழே வந்து விழுகிறது. அதில் வந்த சிங்கள இராணுவத்தினர் கீழே குதித்து தாம் வைத்திருந்த துப்பாக்கிகளைத் தூக்கியபடி ஓட முயல்கின்றனர். பின்னால் வந்த இராணுவ ட்ரக் வண்டியிலிருந்த இராணுவத்தினர் பீதியினால் ட்ரக் வண்டிக்குள்ளேயே பதுங்குகின்றனர். விடுதலைப்புலிகளின் துப்பாக்கித் தோட்டாக்களும் வெடிகுண்டுகளும் ட்ரக்கை விட்டு எழமுயன்ற இராணுவத்தினரின் உடல்களைச் சல்லடையாக்குகின்றன. தமிழீழத்தில் முதல் தடவையாக அதிக அளவு சிங்கள இராணுவத்தினர் கொல்லப்படுகின்றனர். இதைக் கண்டு உற்சாக மிகுதியினால் வெற்றிக் களிப்புடன் மறைவிடத்திலிருந்து தான் வைத்திருந்த இயந்திரத் துப்பாக்கிரை இராணுவ வண்டியை நோக்கி இயக்கியபடி எழுந்து நின்று சுடத் தொடங்குகிறான் செல்லக்கிளி. அதேநேரம் ஜீப் வண்டிக்குள் இருந்த சிங்களச் சிப்பாய் ஒருவன் சுட குண்டு நேராகச் செல்லக்கிளியின் இதயத்தை ஊடுருவிச் செல்கிறது. சப்தமெதுவுமின்றிக் கீழே விழுகிறான் செல்லக்கிளி.
13 இராணுவத்தினரை வீழ்த்தி ஏராளமான ஆயுதங்களை எடுத்த உற்சாகத்தில் திளைத்த விடுதலைப் புலிகள் செல்லக்கிளியின் மறைவுச் செய்தியை அறிந்ததும் அதிர்ச்சியடைந்து சோகத்தில் ஆழ்கின்றனர். முதல் வாரத்தில் இரண்டு முன்னோடி வீரர்களை இழந்த விடுதலைப்புலிகள் களத்தில் செல்லக்கிளியையும் இழந்ததால் வெற்றிக்கான எக்களிப்பு சிறிதுமின்றி சோகமே உருவாகத் தம் இருப்பிடம் திரும்புகின்றனர். இயக்கம் வளர்ந்து வரும் நிலையில் இயக்கம் முன்னோடி வீரர்களுக்கு பொறுப்புக்களைக் கொடுத்து அவர்களுக்கு அனுபவப் பயிற்சியைக் கொடுக்கும் வகையில் அந்தத் தாக்குதலுக்கான தலைமையைச் செல்லக்கிளியிடம் ஒப்படைத்துவிட்டு தானும் ஒரு வீரனாகத் தாக்குதலில் கலந்து கொண்ட இயக்கத் தலைவர் பிரபாகரனுக்கு செல்லக்கிளியின் மறைவு பேரதிர்ச்சியைக் கொடுக்கிறது. எதிர்காலத்தில் செல்லக்கிளியிடம் ஒப்படைக்கக்கூடிய பொறுப்புக்களைப் பற்றிச் சிந்தித்துக்கொண்டிருந்த பிரபாகரனுக்கு செல்லக்கிளியின் மரணம் இயக்கத்தில் ஒரு பெரிய தேக்கமாகப்படுகிறது. ஆம்! இயக்கத்துக்கு அவன் ஆற்றிய பணிகளைப் பற்றியும் பிரபகரனைவிட வேறு யாருக்கும் முழுமையாகத் தெரிந்திருக்க நியாயமில்லை.
இயக்கம் தொடங்கிய காலத்தில் சுழல் துப்பாக்கி இவைகளை ஈயத்தை உருக்கித் தயார் செய்த காலத்தில் கூட இருந்து உதவியதுடன் பின்னர் இயக்க வீரர்களுக்கு தானியங்கித் துப்பாக்கிகளை வைத்துப் பயிற்சி கொடுக்க வெளியில் இரவு பகலாக அலைந்து குறைந்த விலையில் ஏராளமான ஒரிஜினல் துப்பாக்கி ரவைகளை வாங்கி வந்து சேர்த்தது, இவையெல்லாம் செல்லக்கிளி இயக்கத்துக்குச் செய்த மறக்கமுடியாத் சேவைகளாகும். அன்று செல்லக்கிளி வாங்கி வந்து குவித்த துப்பாக்கி ரவைகளை வைத்தே இயக்கத்தின் முன்னணி வீரர்கள் எல்லாம் சுட்டுப் பயிற்சி எடுக்க முடிந்தது. ஏன் இயக்கத்துக்கென வாங்கப்பட்ட முதல் துப்பாக்கிகூட செல்லக்கிளிக்குச் சொந்தமான இரண்டு மாடுகளை விற்றுக்கிடைத்த பணத்தில் வாங்கப்பட்டதுதான்.
படித்தவர்கள் குழம்பிய காலத்திலும் தான் குழம்பாது இருந்துவந்த செல்லக்கிளியின் கிராம வாசனை தொனித்த வயதுக்கு மீறிய வாதங்களையும், வார்த்தைப் பிரயோகங்களையும் கேட்ட இயக்க வீரர்கள் அவனை “அம்மான்” என்று அன்புடன் அழைத்து வந்தார்கள். அவனது திறமையான மதிநுட்பமான செயலாற்றல்கள் பல விடுதலைக்குப் பின் சரித்திரத்தில் மட்டுமே வெளிவர வேண்டிய செய்திகள். அவனது இறுதிக்காலமானது தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் ஓர் திருப்புமுனை ஆம்! சரித்திரம் படைத்த செல்லக்கிளி சரித்திரமாகிய நாள், தமிழீழ விடுதலைக்கான அகிம்சைப் போராட்டமானது ஆணி வேரோடு பிடுங்கி எறியப்பட்டு ஆயுதப் போராட்ட சகாப்தம் உருவான நாள்.
தமிழீழ விடுதலைப்புலிகளின் மூத்த உறுப்பினர் லெப். செல்லக்கிளி அம்மான் மற்றும் 1983 யூலை 23ம் நாள் நள்ளிரவில் நடைபெற்ற திருநெல்வேலித்தாக்குதல் குறித்த நினைவுகளை தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் “விவரிக்கையில்”
முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு – ஒட்டிசுட்டான் அடர்ந்த காட்டுப்பகுதி வழியாக நான் பயணம் செய்துகொண்டிருந்த பஸ் வண்டி புதுக்குடியிருப்பு நோக்கி ஓடிக்கொண்டிருந்தது. சாரதி பஸ் வண்டியின் வேகத்தை திடீரெனக் குறைத்து மெதுவாக நகர்த்தினான். நான் யன்னல் வழியாக வெளியே எட்டிப் பார்த்தேன். அங்கு நூற்றுக்கணக்கான வயோதிபர்களும், இளைஞர்களும், பெண்களும் கூட அந்தக் காட்டுப் பாதையை மூடி மறைத்துக்கொண்டு நின்றனர். “தம்பி என்ன நடந்தது? இந்த சனம்மில்லாத காட்டுப்பகுதியில் ஒரே சனமாகக் கிடக்குது” என்று எனக்கு முன்னால் இருந்த சாரதியை ஆவலுடன் கேட்டு எட்டிப்பார்த்தேன். “ஏதுவும் விபத்தா தெரியவில்லை அல்லது வேறெதுவோ தெரியவில்லை.” என்று அவர் தனக்குத் தெரிந்த ஊகங்களை எல்லாம் சொல்லி மண்டையைப் போட்டு குழப்பிக் கொண்டிருந்தார். எங்களுடைய பஸ்வண்டி நகரமுடியாமல் நின்றது. அங்கே பிரமாண்டமான பீரங்கி வண்டி ஒன்று வீதியோரமாக நிற்பாட்டிக் கிடந்தது. அதைச் சுற்றித்தான் நூற்றுக்கணக்கானோர் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். இது என்ன சாமான்? நான் என்னுடைய கண்ணால் ஒருநாளும் காணவில்லையே என்று வியப்பாகப் பார்த்துக் கொண்டு அருகில் இருந்த இளம் போராளி ஒருவரைக் கேட்டேன். இதுதான் ஐயா ஆட்லறி ஷெல் அடிக்கின்ற பீரங்கி.முல்லைத்தீவு ஆமிக்காம்பை எங்கடை ஆட்கள் கைப்பற்றினர் என்று அந்த இளம் போராளி கூறினார். அவர் களைப்பாக இருந்த போதும் முகம் பூரிப்பினால் மலர்ந்து கொண்டிருந்தது.
ஆமாம் ஆயுதத்திற்காக தமது உயிரை அர்ப்பணித்த இந்த மண்ணுக்கு உரமாகின போராளிகளை நினைத்தேன். இதற்காகப் பலியான அவர்களை நினைத்து அந்த ஆயுதத்தை தொட்டுப்பார்த்தேன். அண்ணை இன்னும் கொஞ்சம் போங்கோ அங்கே இன்னுமொரு ஆட்லறி நிற்கிறது என்று யாரோ கூறியது காதில் விழுந்தது ஆச்சரியமாக இருந்தது. ஒரு ஆட்லறி முகாமில் இருந்து எடுத்து வரவே பெரியபாடாக இருந்திருக்கும் அதற்கிடையில் இன்னும் ஒன்றா? மீண்டும் பஸ்ஸில் நாங்கள் ஏறி பயணத்தைத் தொடர்ந்தோம். அந்த இடத்தில் இருந்து சிறிய தூரம் சென்றதும் அதைவிடப் பெரிய ஆட்லறி ஒன்று புல்டோசரில் கட்டிவைத்தபடி நின்றது. அங்கும் ஒரே சனக்கூட்டம். நல்லூர் திருவிழாக் கூட்டத்தில் குவிந்தவர்கள் மாதிரி எல்லோர் முகத்திலும் ஒரே குதூகலம். “முல்லைத்தீவு முகாம் சரியாம்” “ஆயிரம் ஆமிவரை முடிஞ்சுதாம்” “கனபேர் சரணடைந்திருக்கலாமாம்”, “எத்தனையோ ஆயுதங்கள் சாப்பாட்டுச் சாமான்கள், வாகனங்கள் எல்லாம் அள்ளிக்கொண்டுவந்து விட்டினமாம்” என அங்கு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த சனமெல்லாம் தமக்குத் தெரிந்தபடியெல்லாம் கதைத்துக் கொண்டிருந்தது.
முல்லைத்தீவு முகாம் வன்னிப் பேரு நிலப்பரப்பிலுள்ள மிகப் பெரியதொரு கேந்திர முக்கியத்துவம் வந்த ஐராணுவ கடற்படைக் கூட்டுத்தளம். 1990ம் ஆண்டு முல்லைத்தீவில் காலம் காலமாக வாழ்ந்து வந்த மக்களை ஒரே இரவில் அகதிகளாக்கி உடுத்த உடுப்புடன் வெளியேற்றிய ஆயிரக்கணக்கான இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்ட அந்த நிலம் முல்லைத்தீவு முகாமாக காட்டியளித்துக் கொண்டிருந்தது.
வடக்குக் கிழக்குப் பகுதியில் கடலாலும் தெற்கே நிலப்பரப்பினாலும் சூழப்பட்ட முகாம். 5 மைல் பரப்பிற்குள் தமது தளத்தை அமைத்து அப்பகுதியை ஆக்கிரமித்துக் கொண்டிருந்தனர். அந்த இராணுவ முகாம் அமைக்கப்பட்ட பின்னர் குமுளமுனை, செம்மலை, தண்ணீருற்று, முள்ளியவளை, அலம்பில் பகுதியில் உள்ள மக்கள் திலமும் சொல்லொணாத் துயரத்துக்கும், எறிகணை வீச்சுக்கும் ஆளாகி வந்தனர். இது சர்வதேசத்தின் கண்களுக்குப் படாத தமிழர்களின் பெரிய அவலம். கடந்த சில நாட்களுக்கு முன்னர் கூட வற்றாப்பளை அம்மன் ஆலயத்திற்கு அருகில் உள்ள மாட்டுப் பட்டியில் அடுத்தடுத்து விழுந்த ஆட்லறி எறிகணைகளால் 40 பசுமாடுகள் உடல் சிதறிக் கொல்லப்பட்டன. அந்த பரிதாபகரமான சம்பவம் நடந்து முடிந்து சில நாட்களுக்குள் அதே எறிகணை பீரங்கிகள் எமது மக்கள் குடியிருப்புக்களில் உலாவருகின்றன. “இந்தப் பெரிய சாமான்களைக் கொண்டு வந்து சேர்த்துப் போட்டாங்கள். இனி என்ன எங்களுக்குத் தமிழீழம் கிடைச்சமாதிரித்தான்” அந்தக் கூட்டத்தோடு ஒருவராக நின்ற அந்தப் பெரியவர் குதூகலித்தார். சில மாதங்களுக்கு முன் வலிகாமத்தில் இருந்தும் பின் தென்மராட்சியில் இருந்தும் இடம்பெயர்ந்து வந்து சேர்ந்தவரின் முகத்தில் எவ்வளவு குதூகலம் அந்த ஆட்லறியை இழுத்து வந்த புல்டோசரின் முனால் நான்கு போராளிகள் தூங்கிக் கொண்டு இருந்தனர். ஆம் களத்தில் பல இரவுகள் தூக்கமில்லாமல் தண்ணீர் உணவு கூட அருந்த முடியாமல் போராடிக்களைத்துப் போய் வந்த அந்தப் போராளிகளைப் பார்த்தபோது உடல் சிலிர்த்தது.
முல்லைத்தீவு இராணுவத் தளத்தில் கைப்பற்றப்பட்ட அந்த 122 மி.மீ நடுத்தர பிரிவு ஆட்லறி எறிகணைகளை இழுத்துக் கொண்டு வந்த புல்டோசர்களின் முற்தளத்தில் இருந்த போராளிகளைப் பரிவோடு பார்த்துக்கொண்டு நின்ற மக்கள் அவர்களின் களைத்துப் போன முகங்களைத் தடவிக் கொடுத்தது நெஞ்சைத் தொட்டது. எங்களுடன் பஸ்வண்டியில் வந்துகொண்டிருந்தவர்களில் ஒருவரான கலாதரன் என்ற அதிபர் கண்களை அகலத் திறந்தபடி வியப்புமாறாத நிலையில் ஆட்லறிப் பீரங்கியை மேலும் கீழும் பார்த்துக்கொண்டிருந்தார். “இந்த ஆட்லறியால எங்கட எத்தின ஆயிரம் மக்களைப் பறிகொடுத்தோம் நாங்கள். எத்தனை கோடிக்கணக்கான சொத்துக்களை அழித்திருக்கின்றார்கள்.” உணர்ச்சிவந்த அவரது கண்களில் இருந்து நீர் வடிந்தது. பச்சை நிறத்திலான அந்த பீரங்கியைத் தொட்டு கண்களில் ஒத்திக்கொண்டார். இனி எங்கட உயிரையும் சொத்துக்களையும் காப்பாற்றுவதற்கு பயன்படும் என்று அவர் சொல்லிக்கொண்டே பஸ்வண்டியில் ஏறி அமர்ந்தார்.
முல்லைத்தீவு இராணுவத்தளம் விடுதலைப் புலிகளின் கையில் வீழ்ந்ததால் ஆங்காங்கே மக்கள் தம்மை மறந்து ஆனந்தக்கூத்தாடுவதும் கைதட்டிப் பாட்டுப்பாடுவதுமகா இருந்தனர். சில இடங்களில் வெடிகளைக் கொழுத்தியும் கையில் பந்தங்களை வைத்தும் தமது மகிழ்ச்சியைத் தெரிவித்தனர். கிளிநொச்சியில் புலிகளுக்கெதிராக மக்கள் கிளர்ந்தெழுந்து ஆர்ப்பாட்டப் பேரணியை நடத்தினர் எனச் சில நாட்களுக்கு முன்னர்தான் இலங்கை வானொலி தொடர்ந்து மூன்று நாட்களாகக் கூறிவந்ததை மீண்டும் நினைத்துப் பார்கிறேன். ஆம் புலிகளின் சாதனையால் தம்மை மறந்து மகிழ்ச்சி ஆரவாரம் செய்து தெருவில் நடமாடிய அந்த மக்களைப் பார்க்கும் போது, மக்கள் எங்கே நிற்கின்றார்கள் என்ற செய்தியை மீண்டும் முழங்கிச் சொல்வது போல் இருந்தது.
நாங்கள் ஏறிய அந்த விஷேட சேவை பஸ்வண்டி உறுமலுடன் புறப்பட்டு புதுக்குடியிருப்பையும் கடந்து உடையார்கட்டை நோக்கி பரந்தன்சாலை ஊடாக விரைந்து கொண்டிருந்தது. முல்லைத்தீவுiranuva முகாம் ஓர் இரவினுக்குள் விடுதலைப் புலிகளால் தகர்க்கப்ப்பட்டுவிட்டதாம் என்ற செய்தியைக் கேட்டதும் எங்கள் எல்லோருக்கும் வியப்பாகத்தான் இருந்தது. ஆம் எத்தனையோ காவலரண்கள், பாதுகாப்பு வளையங்கள், ஆயிரக்கணக்கான விஷேட பயிற்சிபெற்ற இராணுவப் படையணிகள் அங்கிருந்தன, நவீனரக ஆயுதங்களைக் குவித்து வைத்திருந்ததுடன் இன்னும் ஒரு சில தினங்களுக்குள் வன்னித் தாக்குதலைத் தொடங்கி வன்னிப்பெரு நிலப்படப்பு முழுவதையும் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து விடுவோம் என்ற பெரியளவிலான ஆயுதங்களை மேற்கொண்டிருந்த நிலையில்தான் முல்லைத்தீவு இராணுவமுகாம் மீதான புலிகளின் “ஓயாத அலைகள்” இராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
1996ம் ஆண்டு ஆடி 17ம் திகதி இரவு பத்துமணியளவில் இருந்து புதுக்குடியிருப்பு பகுதிகளில் தொடங்கிய ஆரவாரமும் இடைச்ச்சலும் தொடர்ந்து காதைப் பிளந்துகொண்டேயிருந்தன. ஒன்றுக்குப்பின் ஒன்றாகச் சென்றுகொண்டிருந்த நூற்றுகணக்கான வாகனங்கள், புல்டோசர்கள், மோட்டார் சைக்கிள்கள் என்று அந்தப் பிரதேசம் அதிர்ந்து கொண்டிருந்தது. அன்றிரவு எங்கள் ஒருவருக்கும் தூக்கம் வரவில்லை. கடவுளே இவ்வளவு ஆயிரக்காணக்கான பெடியள் போகுதுகள் அதுவும் வெற்றியோடு சுகமாகத் திரும்ப வேண்டும் என்று இரவு முழுவதும் ஒவ்வொருவரின் பிராத்தனைகளும் இருந்தன. நள்ளிரவு 12.30 மணிபோல் ஊரே அடங்கி இருந்த வேளையில் ஒருசில எறிகணைச் சந்தங்கள் கேட்டன. அதன்பின் பெரிய அளவில் சத்தங்கள் கேட்கவில்லை. மீண்டும் இரவு 2.30 மணி இருக்கும் திரும்ப அமைதியையும் கிழித்துக்கொண்டு வட்டமிட்டுக்கொண்டிருந்த புக்காரா விமானங்களின் இரைச்சல் எல்லோரையும் ஒரு கணம் உளிக்கிவிட்டது. மறுநாள் அதிகாலை வரை சுப்பர்சொனிக் புகாரா விமானங்கள் இறைந்து கொண்டே இருந்தன. “நேற்றிரவு முல்லைத்தீவினில் காயப்பட்ட போராளிகளை பஸ்ஸில் ஏற்றிக்கொண்டு போகினமாம்” “இராணுவ முகாம் முக்கால்வாசிப் பகுதியினையும் பிடிச்சாச்சாம்.” அன்று காலை ஊர் முழுவதும் இதுதான் பேச்சு. காலை 8.30 மணிபோல் 15க்கு மேற்பட்ட பஸ்வண்டிகள், லொறிகள், இழுவை இயந்திரங்களில் வந்த போராளிகள் “முல்லைத்தீவு முகாமில் இருக்கும் ஆயுதங்களை சாமான்களையும் அள்ளிறத்துக்கு ஆட்கள் தேவை, எங்களோட வரவிரும்பிற ஆட்கள் இதுகளிலே இருங்கள் என்று சொல்லி முடிக்க முன்னர் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் தாமாகவே ஓடிவந்து வண்டிகளில் ஏறிக்கொண்டனர்.
அவர்களில் இளைஞர்கள் மட்டுமல்ல வயோதிபர்களும், குடாநாட்டில் இருந்து இடம்பெயர்ந்த அகதிகளும், அரச ஊழியர்களும் கூட இருந்தனர். “ஐயா நீங்கள் போறது ஆபத்தான இடம். காம்பில் இருந்து தப்பியோடிப்போன ஆமிக்காரங்கள் பற்றைகள் வழியே ஒழிந்து நின்று ரவுண்ஸ் அடிப்பாங்கள்” அந்தப் போராளிகள் கொடுத்த முன்னெச்சரிக்கையையும் கூடப் பொருட்படுத்தாமல் முண்டியடித்து ஏறிக்கொண்டிருந்தனர். “தம்பி எங்கட மண்ணை அந்த சிங்களவனிடம் இருந்து மீட்க நீங்கள் செய்கிற இந்த தியாகத்திற்கு நாங்கள் இதுகூடச் செய்யாவிட்டால்” என்று அவர்கள் சொல்லிக்கொண்டு பஸ்வண்டியில் ஏறினர். உற்சாகமும் உத்வேகமும் நிறைந்த அந்த மக்கள் கூட்டத்தை பார்த்ததும் அந்த இளம் போராளிகளின் உள்ளம் மகிழ்ச்சியால் குதூகலித்தது. ஆம் அங்கே ஒரு மக்கள் போராட்டம் முனைப்பெடுத்துக் கொண்டு இருந்தது. அந்த மக்களை ஏற்றி நிறைத்துக் கொண்ட பஸ்வண்டிகள் தகர்க்கப்பட்ட முல்லைத்தீவு இராணுவ முகாம் நோக்கி விரைந்து கொண்டு இருந்தன.
புதுக்குடியிருப்பு – முல்லைத்தீவு பிரதான வழியாகச் சென்றுகொண்டிருந்த அந்த பஸ்வண்டிகளும் லொறிகளும் சிவன் கோயிலைத் தாண்டி முள்ளிவாய்காலையும் பரந்தன் வெளியினூடாக கடந்து சென்றது. இடையிடையே வானத்தில் சுப்பர் சொனிக் விமானங்கள், கிபிர் குண்டுவீச்சு விமானங்களின் மிரட்டல் ஓடிக்கொண்டிருந்த வண்டிகளில் இருந்தவர்களைக் கலக்கிக்கொண்டிருந்தது. அந்த மக்களின் தொடர் வண்டிகள் அடர்ந்த காட்டுப் பகுதியூடாக சென்று வெட்டுவாய்க்கால் பாலத்தின் முன்பு நிறுத்தப்பட்டதும், அவற்றில் இருந்து இறங்கியவர்களின் இதயங்கள் படபடவென அடித்துக் கொண்டிருந்தன. “பாலத்தாலை இப்ப உள்ளுக்குப் போக ஏலாது. கடலுக்கு இறங்கிச் சுற்றித்தான் போகவேண்டும்.கொஞ்சத்தூரம்தான் போகவேண்டும்” அவர்களை அழைத்துக் கொண்டு சென்ற போராளி சிரித்துக் கொண்டு கலளிநூடாக நடக்கத் தொடங்கினான்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் மிகப்பெரும் பழமை வாய்ந்த கடலேரிதான் அது. நந்தி உடையார் என்பவரால் அணை கட்டப்பட்டதால் அது நந்திக்கடல் எனப் பெயர் பற்றதாக ஒரு ஐதீகம். அந்த சிறிய ஏரி ஒரு காலத்தில் செல்வம் கொழிக்கும் விலை கடலாக இருந்தது. கடல் நீரும் நன்னீரும் சங்கமிக்கும் அந்த நந்திக்கடலில் இறால் வளர்ப்பு பிரபல்யம் வாய்ந்த ஒரு தொழிலாக இருந்து வந்தது. அந்த பெரிய இன இறால்களை வளர்த்து வருவதர்கேற்ற இயற்கை சூழல் இருந்ததால் பெருமளவில் ஏற்றுமதி செய்யக்கூடிய இறால் பண்ணையாக அந்த நந்திக்கடல் இருந்தது. (இப்போது 2009ம் ஆண்டு ஓர் வரலாறாக…. இந்தக் கட்டுரை 1996 வரையப்பட்டது ஆயினும் காலத்தின் தேவை உணர்ந்து தேசக்காற்று இணையம் வராலார்ருடன் மீள்பதிவாக்கிறது)
1990ம் ஆண்டின் பின்னரான இராணுவ முற்றுகையைத் தொடர்ந்து அந்தப் பிரதேச மக்களின் வாழ்வும் வளமும் அழிக்கப்பட்டுவிட்டது. தமிழீழ மாவட்டங்களில் வளம் செழிக்கும் மாவட்டமாக விளங்குவது முல்லை மாவட்டம் ஒன்றுதான். ஆம் கடல்வளம், காட்டுவளம், மண்வளம், நீர்வளம் என எல்லாமே ஓரிடத்தில் இருப்பதாலோ என்னவோ இங்கு வாழும் மக்களும் வந்தோரை வரவேற்கும் பண்புள்ள பரந்த உள்ளம் கொண்டவர்களாக இருக்கின்றார்கள். அந்த மண்ணில் கால் வைத்ததும் அந்த மக்களில் ஒன்றாகச் சென்ற வேலாயுதம் என்ற வயோதிபர் ஒருவர் நந்திகடலைத் தொட்டுக்கும்பிட்ட காட்சி நெஞ்சை உருக்கியது. அவரும் அந்த மண்ணிலேயே காலம் காலமாக வாழ்ந்து பரம்பரை பரம்பரையாகச் சேர்த்துவைத்த சொத்துக்களை எல்லாம் பறிகொடுத்துவிட்டு உடுப்புக்களுடன் ஒரு சில சமையல் பாத்திரங்களுடன் மட்டுமே வெளியேறி இன்று அகதியாய் புதுக்குடியிருப்பில் வாழ்ந்து வருகின்றார். ஆம் மரணித்துப் போன அந்த நகரத்தை நோக்கி உயிர்த்துடிப்புள்ள மனிதர்களின் பயணம் அந்த நந்திக்கடல் நீரேரியூடாக ஆரம்பமாகியது. கோரைப் பற்றைகளும் பனைமரங்களுமகாக் காட்சியளித்த அந்த வரலாற்றுப் புகழ்பெற்ற நகரம் பேய்வாழ்ந்த வீடு போல் இருந்தது. உடைந்த கட்டிடங்கள் பற்றைகளால் மூடிப்போய் பாழடைந்து கிடந்தன. தூரத்தில் தெரிந்த இராணுவக் காவலரன்கள அந்தப் போர்ச் சூழழில் ஒரு பயங்கரமான தோற்றத்தைக் கொடுத்துக் கொண்டு இருந்தன.
அவர்களை அழைத்துவந்த போராளிகள் முன்னே செல்ல அவர்களைத் தொடர்ந்து நூற்றுக்கணக்கான பொதுமக்கள் முழங்கால் அளவு தண்ணீர் ஊடாக நடந்து சென்று கொண்டிருந்தான்ர். அந்த ஆழம் குறைந்த நந்திக்கடளையும் கடந்து கடற்கரைக்கு வந்து சேர்ந்தவர்களுக்கு அங்கு இருந்த காட்சி பென்கெர் ஆங்கிலத் திரைப்படம் பார்த்தது போன்று திகிலூட்டுவதாக இருந்தது. அந்தக் கடற்கரை நீளத்திற்கு இரண்டு மூன்று அடிகளுக்கு ஒன்றாக ஆயுதம் தாங்கிய போராளிகளின் பெருந்தொகையாக தயார் நிலையில் நின்றனர். கடலில் கடற்புலிகளின் நூற்றுக்கணக்கான அதிவேகப் பீரங்கிப்படகுகள் அணிவகுத்து நின்றன. அங்கிருந்து சுமார் மூன்று மெயில் தூரம் வரை கடற்கரை மணலிநூடாக நன்னது சென்று முல்லைத்தீவு இராணுவ முகாமின் மையப்பகுதியை அடைந்தனர். அங்கே இராணுவத்தினரின் மிகப் பெரிய தகவல் தொடர்புக் கோபுரம் சரிந்துபோய்க் கிடந்தது. சுற்றுப்புறமும் கிடக்கும் நூற்றுக்கணக்கான இராணுவத்தினரின் சடலங்கள் சிதறிக் காணப்பட்டன. அந்த சடலங்களையும் கடந்துபோவதற்கு அவர்களுக்குப் போதும் போதும் என்றாகிவிட்டது. ஆம் தமிழ்மக்களை குண்டு வீசிக் கொன்றவர்கள், தமிழர் சொத்துக்களை நீர்மூலமாக்கி அழித்தவர்கள் காலம் காலமாக வாழ்ந்த மக்களை அவர்களின் சொந்த மண்ணிலிருந்து அடித்துத் துரத்தியவர்கள். அந்தப் போர் வெறியர்களின் இறந்த சடலங்கள் தெருவீதிகளிலும் கட்டிட இடிபாடுகளிலும் காவலரண்களிலும் முட்கம்பிகளிலும் தொங்கிக்கிடந்தன.
கடந்த சில வாரங்களாக முல்லைத்தீவு இராணுவ முகாமில் இருந்து ஏவப்பட்ட நூற்றுக்கணக்கான ஆட்லறி எறிகணைகள் பசு மாடுகளை மட்டுமா கொன்றொழித்தன? தினமும் குறைந்தது ஒருவர் என்ற கணக்கில் மனித உயிர்களைப் பலிகொண்டு வந்தன. முள்ளியவளை விநாயகர் ஆலயத் தேரில் விழுந்த செல் அந்தத் தேரையும் ஆலையத்தையும் சிதைத்து 15 இலட்சம் ரூபாவிற்கு மேல் நஷ்டத்தை ஏற்படுத்தியது. அந்த முகாம் வளவினுள் சென்ற பொதுமக்கள் வியப்புடன் சுற்றும் முற்றும் பார்த்துக்கொண்டு நின்றனர். அவர்கள் இந்தப் பாரிய படைத்தளத்தினுள் வருவார்கள் என நினைத்துக்கூடப் பார்த்து இருக்கமாட்டார்கள். யாழ்ப்பாணத்தில் இருந்து வீடுகளை விட்டு வெளியேறி இனி தங்க தங்கட வீடுகளுக்கு எப்போ போகப் போகிறோம் என்றிருந்த அவர்களுக்கு முல்லைத்தீவு நகரம் ஒரு நம்பிக்கையைக் கொடுத்து விட்டது. அங்கே உதவி செய்வதற்காக விளிகாமத்தில் இருந்து இடம்பெயர்ந்து விசுவமடுவில் வாழும் ஒருவரும் வந்திருந்தார். அந்தக் காட்சி அவர்களுக்கு ஒரு உத்வேகத்தைக் கொடுத்துக்கொண்டிருந்தது. “ஐயா தம்பிமாரே கெதியாயாய் ஓடி வாருங்கள். இந்தப் பெட்டிகளைக் கொண்டுபோய் வள்ளத்திலும், டிரக்கர்களிலும் ஏற்றுங்கோ” அங்கே நிற ஏனைய போராளிகளுக்கு கட்டளையிட்டுக்கொண்டு நின்ற ஒருவர் உரக்கக் கத்திக்கொண்டு நின்றார். அவரின் அந்த வேண்டுகோளைத் தொடர்ந்து முகாமின் மையப்பகுதியில் இருந்த மூட்டைகள் பெரிய பெரிய பேட்டிகள் எல்லாம் வெளியே கொண்டு வரப்பட்டன. கடலில் நின்ற வளங்களிலும் டிராக்டர்களிலும் இவை ஏற்றப்பட்டுக் கொண்டிருந்தன. அங்கே ஆயிரக்கணக்கான பெண் போராளிகளும் ஆண்போராளிகளும் நின்று இயந்திரமாகச் செயல்பட்டுக் கொண்டு நின்றனர். போராளிகளுடன் சென்ற இளைஞர்கள் மட்டுமல்ல முதியவர்களும் கூட உற்சாகமாகச் செயல்பட்டுக் கொஞ்சத்தூரம் தூக்கிக் கொண்டுவந்து தாங்கோ” அங்கே ஒரு பெண்போராளி பெரிய பெட்டியை தூக்க முடியாமல் தூக்கிக் கொண்டு வந்தார். சிரல் ஓடிப்போய் அவற்றை வாங்கி தூக்கிக் கொண்டு போய் டிராக்டரில் ஏறினர். அதைப் போல் ஆயிரக்கணக்கான பெட்டிகள் வள்ளங்களில் ஏற்றப்பட்டுக் கொண்டிருந்தன. சிலர் இரனுவமுகாமின் ஏனைய பகுதிகளுக்கும் ஓடிச் சென்று ஆசை தீரப் பார்த்து பிரமித்துப்போய் நின்றனர். அங்கே கண்ட காட்சிகள் அவர்களை மலைக்க வைத்துவிட்டன.
அந்த அரை முழுவதும் பலகோடி ரூபாய் பெறுமதியான உணவுப் பொருட்கள் மட்டும் அடுக்கடுக்காய் இருந்தான். சீஸ்கட்டிகள், நூடில்ஸ் பைகள், லிப்டன் தேயிலைப் பைகள், ஓவல்டின், மைலோ, நெஸ்டமோல்ட் பெட்டிகள், கொடியால் வகைகள், அரிசி மூடைகள், மா மூடைகள், என்று ஏராளமான உணவுப் பொருட்கள் மூட்டை மூட்டையாக அடுக்கப்பட்டு இருந்தன. இந்தப் பண்டகசாலைகளில் செமிக்கபட்டிருந்த உணவுப் பொருள்களே பலகோடி ரூபாய்க்கு மேல் இருக்கும் என்று பார்த்தவர்கள் கூறிக்கொண்டார்கள். இவை யாவும் போதாதென்று பெட்டி பெட்டியாக சிகரட் பக்கெட்டுக்கள், வைன், பியர், சாராயம் போன்ற பல்வேறு மதுபான வகைகளும் கூட பெட்டி பெட்டியாக அடுக்கப்பட்டிருந்தன. “மச்சான் இதுகளை ஏற்றுவதற்கே பத்துநாட்களுக்கு மேல் போகும்” காலமையிளிருந்து வெயிலுக்க வேலை செய்கின்றோம். ஒரே தண்ணி விடாயாய் இருக்குது என்றான் இளையவனான முரளி. “டேய் முரளி அங்க பார் அந்தத் தட்டு நிறைய யூஸ் போத்தல்கள் அடுக்கிக்கிடக்குது” அவனும் அவனுடன் நின்ற ரமேஷும், அந்த அரை மூலையில் இரண்டு தட்டில் நீளத்திற்கு அடுக்கடுக்கா வைக்கப்பட்ட ஆயிரக்கணக்கான பலரக பழச்சாறு யூஸ் போத்தல்களைக் காட்டியதும் இருவரும் ஓடிச்சென்று அதில் ஒன்றை வாயில் கொட்டினர். அத்தகைய வெயிலிலும் தண்ணீர் தாகத்திலும் அனைவரும் ஓயாது வேலை செய்தனர். வெளியில் கொச்சி நீளத்திற்கு நின்ற டிரக்ரர்களிலும் லொறிகளிலும் பெட்டி பெட்டியாக ஆயுத தளபாடங்களையும், எறிகணைகளையும், ரவைகளையும் ஏற்றி நிறைத்ததும் அவை ஒவ்வொன்றாக முகாமைவிட்டு வெளியேறிக் கொண்டிருந்தன. வழியில் ஒரு சிறிய வீட்டின் முனால் அழகான “பொமேரியன்” நாய்க்குட்டிகள் இரண்டுகளில் ஒன்று கத்திக்கொண்டு இருந்தது. அந்த அழகான பேட்டை நாய்க்குட்டு வருவோர் போவரைக் கைகாட்டி அழைப்பது போன்று முன்னம் கால்களை ஆட்டி ஆட்டிக் குரைத்துக் கொண்டிருந்தது. அது பிரிகேடியர் வளர்த்த செல்லப் பிராநியாம். அதனுடைய அழகையும் செயல்காளையும் கண்ட ஒரு போராளி ஓடிப்போய் அந்த நாய்க்குட்டியைத் தூக்கிக் கொண்டு வந்து அவனது வாகனத்துக்குள் ஏற்றி விட்டான்.
ஆடி மாதம் 17ம் திகதி இரவு 12.30 மணிக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் படையணிகளினால் தொடுக்கப்பட்ட இந்த அதிவேகத் தாக்குதலுக்கு “ஓயாத அலைகள்” எனப் பெயரிடப்பட்டது எவ்வளவு பொருத்தமானது. அன்றைய தாக்குதலுக்கு ஈடுகொடுக்க முடியாத ஓடி சுமார் நூறு மீற்றருக்கு அப்பால் உள்ள ஒரு மரத்தில் ஏறி இருந்து தப்பிச் சென்ற இராணுவ கோப்ரல், பி.பி.சி நிறுவனத்திற்கு அளித்த பெட்டி சண்டையின் அகோரத்தை வெளிக்காட்டியது. “நாங்கள் அன்றும் வழமைபோல் இராணுவக் காவலரண்களில் உசாராக இருந்தபோது அலை அலையாக ஆண்புலிகளும், பெண்புலிகளும் ஓடிவந்து அதிவேகத்தில் சுட்டுக் குண்டு நாலாபுறத்திலும் இருந்து தாக்கினார்கள். அந்த நேரத்தில் எங்களால் ஒன்றும் செய்ய முடியாது திணறிவிட்டோம். முடிந்தவரை நாங்களும் எதிர்த்து சுட்டுக் கொண்டிருந்தோம். அவர்களின் துரிதமான அடியின் வேகம் தாங்க முடியாமல் என்னிடம் இருந்த ரவைகள் தீர்ந்ததும் ஓடிப்போய் தென்னை மரத்தில் ஏறி ஒழிந்திருந்தேன். பின்னர் ஒரு ஜீப்பில் ஒரு புலி வந்து தமிழில் எதோ கூறியதைத் தொடர்ந்து நூற்றுக்கணக்கான பொதுமக்கள் வந்து ஆயுதங்களையும், போருலகளையும் இறந்த எங்களுடைய இராணுவத்தின் உடல்களையும் டிரக்டரிகளில் ஏற்றிக்கொண்டு இருந்தனர். புலிகள் மற்ற தளத்திற்கு சென்றதும் நான் மரத்திலிருந்து இறங்கி தப்பிச் சென்றேன்.” அந்தப் 19 வயது சிங்களச் சிப்பாய் புலிகளின் இந்தப் புயல்வேகத் தாக்குதலினால் எந்த அளவுக்குப் பாதிக்கப்பட்டிருந்தார் என்பதை அவரது மருண்ட வெளுறிய முகம் காட்டிக் கொண்டிருந்ததாகச் செய்தியாளர் கூறினார்.
ஆம் கொரில்லா இயக்கமாகத் தோற்றம் பெற்ற விடுதலைப் புலிகள் இயக்கம் காலப்போக்கில் தரை, கடல், விமான வழித்தாக்குதல் ஊடாக வளர்ச்சி பெற்று ஒரு மரபு வழிப் படையணியாக முதிர்ச்சி பெற்றது. உலகில் விடுதலை இயக்கங்களுக்கு எல்லாம் முன்னோடியாகத் திகழ்கிறது. இந்த முல்லைத்தீவு முகாம் சமர் தலைவர் பிரபாகரனால் நன்கு திட்டமிடப்பட்டு, நேரிப்படுத்தப்படுத்தப்பட்டு பல மூத்த தளபதிகள் மூலம் வழிநடத்தப்பட்ட மிகப் பெரிய தாக்குதல் ஆகும். “ரிவிரச” இராணுவ நடவடிக்கைகள் மூலம் விடுதலைப்புலிகளின் முதுகெலும்பை உடைத்து விட்டோம். அவர்கள் பின்வாங்கிப் போயுள்ளார்கள். அவர்களால் இனியொரு மரபு வழிப்போரை மேற்கொள்ள முடியாது. ஒழித்திருந்து கொரில்லாத் தாக்குதலையே மேற்கொள்ள முடியும். இன்னும் 25 வீதமான புலிகளே இருக்கின்றனர். அவர்களையும் விரைவில் ஒழித்து நாட்டில் அமைதி நிலையை ஏற்படுத்துவோம்” என்று உலகத்திற்கு பாதுகாப்பு பிறது அமைச்சர் அனுரத்த ரத்வத்த அவர்கள் அறிக்கை விடுத்து சில வாரங்கள் கூட ஆகவில்லை. இந்தப் பாரிய முகாம் மீதான தாக்குதல் நடத்தப்பட்டது. சிறீலங்கா அரசுக்கும் அவருக்கும் பேரதிர்ச்சியையும், உலகுக்கு திகைப்பையும் கொடுத்துள்ளது.
இரவு 12.30க்கு ஆரம்பித்த தொடர்ச்சியான மோட்டார் தாக்குதலின் பின்னர் இராணுவ முகாமில் இருந்த எறிகணை பீரங்கிகளையும், கவசவாகனங்களையும் புலிகள் கைப்பற்றிவிட்டனர். அதனைத் தொடர்ந்து இராணுவ சிப்பாய்கள் எதுவும் செய்யமுடியாத அளவுக்கு ஆயுரக்கனக்கான புலிகளால் சுற்றி வளைக்கப்பட்டனர். அன்று அந்த முகாமில் இருந்த 2 ஆட்லறி எறிகணைப் பீரங்கிகளை கைப்பற்றிய போராளிகள் அதனை உடனடியாக வெளியே கொண்டுவர முடியாமற் போய்விட்டது அங்கே நின்ற பொதுமக்கள் அவற்றை அப்புரபப்டுத்த படாதபாடுபட்டனர். அங்கே ஓடிவந்த சிலர் தங்கள் தோள்களைக் கொடுத்து ஆட்லறியைத் தூக்க முயன்ற காட்சியைப் பார்த்து, வீர்ரச்சாவு அடைந்தாலும் பரவாயில்லை என்றே அங்கே நின்ற ஒரு போராளி உணர்ச்சி போங்க கூறிக்கொண்டு நின்றார். ஆம் எமது மக்களைக் கொன்று, எமது மக்களுக்குப் பெரும் அச்சுறுத்தலாக விளங்கிய அந்தப் பிரமாண்டமான ஆட்லறுப் பீரங்கி முகாமின் முன் பகுதி மூலமாகக் கொண்டு வரப்பட்டு கடற்கரை வழியாக இழுத்துச் செல்லப்பட்டது. பூநகரித் தளம் விடுதலைப் போராட்டத்தில் டாங்கிப் பலத்தைக் கொடுத்தது. இன்று முல்லைத்தீவு தளம் ஆட்லறிப் பலத்தை பெற்றுக்கொடுத்தது. ஒரு மரபு வழி அணிக்கு இருக்க வேண்டிய அனைத்து தகுதிகளையும், வளங்களையும் பெற்றுள்ள நிலையில் தமிழீழ விடுதலைப்புலிகள் இப்பொழுது புதிய பரிமாணத்தை அடைவதற்கு தளம் அமைத்துக் கொண்டு இருக்கின்றனர்.
“ஏய் தம்பிமாரே கேலிகள் வருது அடிக்கப்போகிறாங்கள். அப்படியே விழுந்து படுங்கோ” அந்தமுகாம் பகுதியில் துரிதமாகச் செயற்பட்டுக்கொண்டிருந்த மிக எடுப்பான தோற்றத்தைக் கொண்டிருந்த மூத்த போராளி ஒருவர் உரத்துக் கூறியபடி அங்கு ஓடி வந்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை செய்துகொண்டிருந்தார். அந்தத் தீடீர் எச்சரிக்கையைத் தொடர்ந்து அங்கே இருந்த பொதுமக்கள் சிதறி ஓடி தரையில் விழுந்து படுத்தவர்கள் ஒருபுறமும், கட்டிடங்களுக்குள் ஓடியவர்கள் ஒருபுறமும், தண்ணீர்த் தொட்டியின் கீழ் ஒழிந்து கொண்டவர்கள் எனவும் பதுங்கினர். கீழே விழுந்து முகம் குப்பறப்படுத்தவர்களில் பலர் இறந்து சிதறிக்கிடந்த இராணுவச் சிப்பாய்களின் மத்தியில் கூட படுத்து இருந்தனர். அந்த நேரம் கடலோரமாக வரிசையாககப் பறந்து கொண்டிருந்த ஹெலிக்கொப்டர்களில் இருந்து சரமாரியாக ரொக்கட் தாக்குதல்களை மேற்கொண்டனர். அவற்றிலிருந்து ஏவப்பட்ட பல ரொக்கட்டுகளும் குண்டுகளும் கடற்புலிகளின் பீரங்கிப் படகுகளை நோக்கி மேற்கொள்ளப்பட்டன. கடற்புலிகள் கீழே இருந்து எதிர்த்தாக்குதல் செய்ததை அடுத்து அவைகள் மேலே ஏறி உயரத்தில் பறந்து மறைந்தன.
“இது என்ற வாழ்க்கையில் என்றைக்கும் மறக்கேலாது.” அங்கு நின்ற பொதுமக்களில் ஒரு நடுத்தர வயதுடைய அரச ஊழியராகிய செல்லத்துரை சொன்னார்.
1990ம் ஆண்டு முல்லைத்தீவு நகரை விட்டு இராணுவத்தினரால் வெளியோற்றப்பட்டோர்களில் அவரும் அவரின் குடும்பத்தினரும் அடங்குவர். அவர்கள் முள்ளியவளையில் அகதியாக வாழ்ந்துகொண்டிருந்தார்கள். இன்று ஆறு வருடங்களின் பின் தான் பிறந்த மண்ணை முத்தமிட்ட மகிழ்ச்சியில் அவரது உள்ளம் குதூகலித்துக் கொண்டிருந்தது. முல்லைத்தீவு முகாமின் மையப்பகுதியில் ஆட்லறி நிலைக்கு அடுத்து பிரதான தபாற்கட்டிடம் உள்ளது. அதைத் தொடர்ந்துள்ள அரசுக் கட்டிடங்களான கச்சேரி, பொது வெளிப்பகுதி, நீதிமன்றக் கட்டிடங்கள், சிறீலங்கா காவல்துறை, அதற்கெதிராக இலங்கை வங்கிக் கட்டிடம் அதையடுத்து பொது நூலிநிளையம் என்பன அமைந்துள்ளன. அங்குள்ள பெருமளவு அரச கட்டிடங்களில் பெருந்தொகையான புத்தம் புதிய ஆயுதத் தளபாடங்கள், உணவுப் பண்டங்களும் சேமிக்கப்பட்டிருந்தன.
ஆங்காங்கே நின்ற பல வீடுகளின் கூரைத்தகடுகளும் மரங்களும் கழற்றப்பட்டு மொட்டியாகத் தோற்றமளித்துக் கொண்டிருந்தன. அந்த வீடுகளின் கூரைத் தகடுகள் இராணுவக் காவலரண்கள் அமைக்கவும் போலி அரண்கள் அமைக்கவும் இராணுவத்தினரால் எடுத்துச் செல்லப்பட்டு இருந்தன. பல வீடுகள் இராணுவப் படையணிகளின் பல்வேறு பிரிவுப் பொறுப்பாளர்கள் மேஜர், கப்டன் தரப்பினர் தங்கப் பயன்படுத்தப்பட்டு வந்தன. அந்த வீடுகள் மிக அழகாகவும் நவீன வசதிகளுடன் இருந்தன. அங்கே சென்ற நூற்றுக்கணக்கான மக்கள் போராளிகளுடன் சேர்ந்து அந்த முகாமைத் துடைத்து வழித்துக் கொண்டு இருந்தனர். சில வீடுகளில் இராணுவத்தினரின் பிடியில் சிக்குப்பட்டு கைதிகளாக இருந்த பொதுமக்கள் சிலரை போராளிகள் அழைத்து வந்து லொறிகளில் ஏற்றினார்கள். அவர்களில் ஒரு வயோதிபப் பெண் நடக்கமுடியாது கஷ்டப்பட்டபோது இரண்டு போராளிகள் அவரைத் தூக்கி வந்ததைப் பார்த்த மக்கள் ஒரு நல்ல மீட்பராகவே அவர்களை அங்கு கண்டனர். 1990ம் ஆண்டு இராணுவ முற்றுகையின் போது அந்த நகரமே இடம் பெயர்ந்து ஓடிய போது உறவினர்களாலும், உடன்பிறப்புக்களாலும் கைவிடப்பட்ட பதினேழு பேர் இராணுவத்தின் கையில் சிக்குண்டு அடிமை வாழ்வுக்கு இழுத்துச் செல்லப்பட்டிருந்தனர். அந்த இராணுவ ஆக்கிரமிப்பில் இருந்து விடுவிக்கப்பட்ட 60 வயதுடைய பெண் ஒருவரிடம், இந்த ஆறு வருட காலமும் அவர்கள் எப்படி வாழ்ந்தார்கள் என்று விசாரித்தபோது, நாங்கள் 17 பேர் மட்டுமே இராணுவத்துடன் இருந்தோம். எங்களுக்கெனத் தனியாக ஒரு செய்யமுடியாது. ஆடுகள் வளர்ப்பதும் அவற்றிற்கு வேண்டிய உணவுகளை சேகரிப்பதுமே தொழில். அவற்றை இராணுவத்திற்கு கொடுக்க வேண்டும். அவர்கள் மூன்று நேரமும் சோறு தருவார்கள் என்று கூறினார். தனது கொத்தடிமை வாழ்வு பற்றி குறிப்பிட்ட அந்த பெண்ணின் முகத்தில் விடுவிக்கப்பட்ட பூரிப்பு இருந்தது.
வானத்தில் தொடர்ச்சியாகப் பறந்துகொண்டிருந்த சுப்பர் சொனிக், கிபீர், புக்காரா குண்டுவீச்சு விமானங்களின் இரைச்சல் ஒரு முறமும், மண்கிண்டிமலை இராணுவ முகாமில் இருந்து விட்டுவிட்டு ஏவப்பட்டுக்கொண்டிருக்கின்ர ஆட்லறி எறிகணைகள் ஒரு புறமுமாக அந்தச் சின்னஞ்சிறிய நகரம் ஒரு யுத்தக்கலாமாகவே இருந்தது.
இடையிடையே முகாம் பகுதியிலும் கிறனேற் வெடிகுண்டுகளின் சத்தமும் துப்பாக்கிக் குண்டுகளின் சத்தமும் கேட்ட வண்ணமாகவே இருந்தன. முகாம் தகர்ப்பின் போது தப்பி ஓடிய சிப்பாய்களை ஆங்காங்கே பரந்துள்ள கட்டிடங்களுக்குள்ளும், பற்றைக்காடுகளுக்குள்ளும் ஒழிந்திருந்தனர்.
நூற்றுக்கும் மேற்பட்ட சிங்கள் இராணுவத்தினர், டிப்போவுக்கும் அருகில் இருந்த பழைய இராணுவ முகாம் பகுதிகளுக்குள்ளும், முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலை கட்டிடத்திற்குள்ளும் ஓடிப்போய் ஒளித்துக்கொண்டிருப்பதாகக் கூறிய ஒரு போராளி.
“இன்று இரவுக்குள்ளை அவங்கள் எல்லோரையும் பிடிச்சுப்போடுவம்…” என்று சிரித்துக்கொண்டே கூறியபடி தனது துப்பாக்கியை தூக்கி தோளில் மாட்டிக்கொண்டு போனான்.
ஏ.கே.எல்.எம்.ஜி இலகுவாகத் தூக்கித் தோளில் மாட்டியபடி மேற்குத் திசையை நோக்கி நடந்த அந்தப் போராளியின் உறுதியையும், தன்னம்பிக்கையையும் பார்த்துக் கொண்டிருந்தவர்களினது மனதிலும் ஒரு உறுதி பிறந்தது.
அந்தப் போராளிக்கு சுமார் 20 வயதுதான் இருக்கும். மட்டக்களப்பைச் சேர்ந்தவர். 1994ம் ஆண்டு சிங்கள இராணுவத்தின் கொடூரச் செயலினால் தனது தாயையும் தந்தையையும் பறிகொடுத்துக் காட்டுப்பாதையூடாக தப்பி வன்னி மண்ணுக்கு வந்து போராட்டத்தில் தன்னை இணைத்துக்கொண்டவன். தனது சொந்த மண்ணில் இருந்து ஆதிக்க வெறியர்களை விரட்டிச் சுதந்திரமாக நடமாடவேண்டும் என்ற இலட்சிய தாகத்துடன் அவன் இன்று ஒரு போராளியாக அந்த முல்லை மண்ணில் உலாவருகின்றான்.
ஒரு இலட்சியத்துக்காக தம்மை அர்ப்பணித்தவர்கள் தாம் கொண்ட இலட்சியத்தை அடையும் வரை ஓயாப்போவதுமில்லை, மரணத்திற்கும் அஞ்சுவதில்லை என்பதை அவனது போக்கு எடுத்துக்காட்டியது.
அன்று காலையில் இருந்தே போராளிகளுடன் இணைந்து தோளோடு தோள் கொடுத்து இயங்கிக்கொண்டிருந்த மக்களின் மனதிலே பிறந்த உற்சாகம், ஒரு புதிய தேசத்தைக் கட்டி எழுப்புவதற்கான அத்திவாரமாக இருந்தது.
அன்றைய ஆனந்தக் கலப்பில் தன்னையும் அர்பணித்து வானத்தில் வனம் வந்து ஒளிவீசிக்கொண்டிருந்த சூரியனும் மெல்ல மெல்ல மேற்கு வானினுள் பிரிய மனமின்றி மறையத் தொடங்கிய நேரம்….
“நல்லாக் களைச்சுப் போனியல்….. இனைடைக்கு நீங்கள் செய்த இந்தப்பணி எங்கடை போராட்டத்திலை ஒரு திருப்பு முனையாகத்தான் இருக்கப்போகுது…… எங்கடை போராளிகளுக்கும் ஒரு உற்சாகத்தையும் தாங்கள் கைவிடப்பட்டவர்கள் அல்ல என்ற உணர்வையும் ஏற்படுத்தி விட்டியல்”.
யுத்த முனையில் ஒரு பிரிவுப் போராட்ட அணியின் கட்டளைத் தலைவனாக நின்று வழிநடத்திக் கொண்டிருந்த ஒரு போராளி அங்கே நின்ற அந்த மக்கள் கூட்டத்தை நோக்கி வந்தார்.
தமிழ் மக்களை விடுதலைப் புலிகளிடமிருந்து அந்நியப்படுத்தி தாம் எந்தத் தீர்வையும் திணித்து தமிழர் தாயகத்தியும், தமிழர்களையும் அடிமை கொண்டுவிடலாம் என்று கனவு கண்டுகொண்டிருந்த சிங்களப் பேரினவாதத்திற்கு அங்கே முனைப்போடு நின்ற ஆயிரக்கணக்கான பொதுமக்களின் பங்களிப்பு மரண அடி கொடுத்தது போல் இருந்தது.
“தம்பிமாரே!….. இந்த ஸ்டோரில இருக்கிற உங்களுக்கு விருப்பமான எதையாவது எடுத்துச் சாப்பிடுங்கோ…. ஆனால், அங்கே இருக்கிற சாராயம், பியர் ரின்கள், வைன் ரின்கள், சிகரட் பக்கட்டுகளை தொடாதீங்கோ…..”
அந்தப் போர்க்கள நெருக்கடியிலும், வெற்றிக்களிப்பிலும் கூடத் தனது இனம் தவறான வழிக்கு இழுத்துச் செல்லப்படக்கூடாது என்பதில், மிகவும் நிதானத்துடன் இருந்த அந்தப் போராளியை அங்கே நின்ற இளைஞர்கள் வியப்புடன் பார்த்தார்கள்! அந்தப் போராளி அங்கே நின்ற இளைஞர்களையும் கூட்டிக்கொண்டு தபால் கந்தோர் கட்டிடத்திற்குள் போனார்.
பெருமளவு உணவுப் பொருட்களை ஏற்றி முடித்தும் கூட இன்னும் பெருமளவு அங்கே குவிந்திருந்தது. அந்த அறையினுள் சென்றதும் அவரவர் தமக்கு விருப்பமான உணவுப் பொருட்களை எடுத்துச் சாப்பிட்டார்கள். சிலர் அங்கே வந்ததன் நினைவுச் சின்னமாக, சீஸ்ரின், இறைச்சி ரின், கண்டோஸ் பக்கற் போன்றவற்றுள் சிலவற்றை எடுத்து தமது காற்சட்டைப் பைகளுக்குள் போட்டுக்கொண்டனர்.
அவர்களது செய்கைகளை தள்ளி நின்று பார்த்துக்கொண்டு நின்ற போராளிகளுக்கு சிரிப்புத்தான் வந்தது….. அவர்கள் முன்னால் பிளாஸ்ரிக் வாளிகளில் பிரியாணிப் பார்சல்கள் கொண்டுவந்து வைக்கப்பட்டன.
அவற்றில் “கமகம” என்று இறைச்சி வாசனை மூக்கைத் துளைத்துக் கொண்டிருந்தது. முல்லைத்தீவுச் சந்தியில் இராணுவத்தினரால் அமைக்கப்பட்டிருந்த வட்ட வடிவ குரோட்டன் மேடையருகில் அவற்றை வைத்துவிட்டு ஏனைய போராளிகளையும் கூவி அழைத்தனர். எவருமே அந்தப் பிரியாணிப் பார்சல்களை ஏறெடுத்துக்கூட பார்க்கவில்லை. அந்தளவிற்கு அந்த கட்டிடங்களுக்குள்ளும் பற்றைகளுக்குள்ளும் ஓடி ஒளிந்திருந்த நூற்றுக்கணக்கான சிங்களப் படையினைத் தேடி அலைவதில்தான் உற்சாகமாக இருந்தார்கள்.
மெல்ல மெல்ல இருள் கவியத் தொடங்கியதும். அந்த மக்களை அழைத்துவந்த போராளிகள் அவர்களை நோக்கி வந்து, அண்ணை…… இருட்டுப்பட்டுக் கொண்டு வந்திட்டுது….. உங்களுக்கான ரக்ரர்கள் தயாராக இருக்கு. இருங்கோ என்று கூறியதும் சற்றுத் தள்ளி நிப்பாட்டப்பட்டு நின்ற ரக்ரர்களில் ஏறத்தொடங்கிவிட்டனர்.
இருளும் நேரத்தில் அங்கே இவ்வளவு பெருந்தொகையான பொதுமக்களை வைத்திருப்பது ஆபத்தானது என்று அவர்கள் எண்ணியிருக்க வேண்டும்….. விரைவாக அவர்களை அழைத்து வந்த பாதை வழியே கூட்டிச் சென்றார்கள்.
ஆறு வருடங்கள் மக்களை இழந்து வாடி வதங்கிய….. முல்லை மண் அன்று புத்துயிர் பெற்றது போல் பூரித்திருந்தது.
நீண்ட காவலரண் சுவர்கள் முள்கம்பிகளையும் கடந்து அவர்களை ஏற்றிய ரக்ரர்கள் கடற்கரை வழியாக நந்திக்கடல் வரை சென்றது. அங்கிருந்து ரக்ரர்களில் இருந்து இறங்கி நந்திக்கடலைக் கடந்து நடந்து சென்றவர்களை ஏற்றிச்செல்வதற்காக வெட்டுவாய்க்கால் பலத்திற்கு அப்பால் சுமார் 20 பஸ் வண்டிகள் ஆயத்தமாக இருந்தன….
பஸ் வண்டிகளில் ஏறியிருந்த ஒவ்வொருவர் மனதிலும் உற்சாகமும், குதூகலமும் இருந்தாலும் அந்த வளம்கொழிக்கும் முல்லை நகரை விட்டு விட்டு வெளிஎரிக்கொண்டிருப்பது ஏதோ ஒரு இனம் புரியாத கவலையைக் கொடுத்திருக்க வேண்டும். எவருமே ஒருவரோடு ஒருவர் எதுவும் பேசிக்கொள்ளவில்லை….
அந்தச் சுமை நிறைந்த உள்ளங்களை ஏற்றியபடி ஒன்றின் பின் ஒன்றாக அந்த பஸ்வண்டிகள் புதுக்குடியிருப்பை நோக்கி விரைந்து கொண்டிருந்தன.
“நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும், நாட்டின் அடிமை விலங்கு தெறிக்கும்”
அந்த வண்டித் தொடரில் முதலாவதாக விரைந்துகொண்டிருந்த பஸ் வண்டியில் பூட்டப்பட்டிருந்த வானொலிப் பெட்டியிலிருந்து ஒலித்துக்கொண்டிருந்த தேனிசை செல்லப்பாவின் வெண்கலக் குரலிலான அந்தப் புகழ்பெற்ற பாடல் காற்றினூடாகப் பரவி முல்லைவரை விரைந்து சென்று கொண்டிருந்தது.
முல்லைத்தீவு இராணுவத்தளம் கைப்பற்றப்பட்டதும், 18ம் திகதி 1ம் நாள் போரிலே பெரும்தொhu.கை இராணுவத்தினர் கொல்லப்பட்டதும் அங்கிருந்து பலவகை பெரும்தொகையான நவீன கனரக புத்தம் புதிய ஆயுதங்கள், கவசவாகனங்கள், கோடிக்கணக்கான ரூபா பெறுமதியான உணவுப் பண்டங்கள் கைப்பற்றப்பட்டதும் கனவுபோல் இருந்தது. இது தொடர்பாக உண்மையை அறிவதற்காக அன்று பதினெட்டாம் திகதி இரவு இலங்கை வானொலியில் செய்தியறிக்கையைக் கேட்டவர்கள் மலைத்துப்போய் இருந்தார்கள்.” வடபகுதியில் முல்லைத்தீவு முகாம் மீது இன்று அதிகாலை தெற்குப் புறமாகவும், கிழக்குப் புறமாகவும் இருந்து எல்.ரி.ரியினர் புதிய ரக ஆயுதங்களைக் கொண்டு தாக்க எடுத்த முயற்சி படையினரால் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டதும். இப்பொழுது இராணுவ முகாம் முழுமையாக இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் எல்.ரி.ரியினரை தேடி அழிப்பது தொடர்பாகவும் பாதுகாப்புத் தலைமையகம் தெரிவித்துள்ளது.” இவ்வாறு இலங்கை வானொலியில் செய்தியறிக்கையில் குறிப்பிட்ட போது அதிர்ச்சியாகவும் ஆச்சரியமகாவும் இருந்தது.
எனவே புதுக்குடியிருப்பிலிருந்தும் அயலிளிருந்தும் பெரும்தொகையான பொதுமக்கள் புலிகள் கைப்பற்றிய இராணுவ முகாமுக்குள் போய் ஆயுதப் பெட்டிகளையும், உணவுப் பொருட்களையும் எடுத்துக்கொடுத்துவிட்டு வந்ததாகக் கூறி ஒருவர் தான் போனதற்கு அடையாளமாக ஒரு சிறிய ரின்னை எடுத்துக்காட்டி அங்கு நடந்த சம்பவத்தை விபரித்து 5 நிமிடம் கூட ஆகவில்லை, அதற்குள் இலங்கை வானொலி இப்படிக் கூறியது அங்கிருந்தவர்களுக்கு பெரிய குழப்பமாய் போய்விட்டது. இந்திய இராணுவம் தமிழீழத்தை ஆக்கிரமித்து இருந்தபோதும் இப்படியான உண்மைக்குப் புறம்பான செய்திகளைத் திரித்துக்கூறி மக்களையும் உலகத்தையும் குழப்பி வந்தனர். அன்று மூடி மறைத்த உண்மைகளெல்லாம் பின்னர் வெளிவந்த போது இந்தியா தனது முகத்தில் தானே கரியைப் பூசிக்கொண்டது. சிறீலங்காவில் பொதுஜன ஐக்கிய முன்னணி ஆட்சிக்கு வந்த பின்னர் செய்தித் தணிகையை கடுமையாக அமுல்படுத்தி தமிழீழப் பகுதிகளில் மேற்கொண்டுவருகின்ற இனப்படுகொலைகளையும், கொடூரங்களையும் உலகின் ஊனக்கங்களில் இருந்து மறைத்து வருகின்ற கொடுமை உலகில் வேறு எந்த ஜனநாயக நாட்டில்தான் இருக்கமுடியும்.
சிறீலங்காவில் எதேச்சாதிகரமணா அடிப்படை மனித உரிமைகாளியும் மீறல்களையும் போக்கிரித்தனத்தையும் கண்டித்து சிறீலங்காவின் பாராளுமன்றத்தில் அதன் எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் பேசுகையில் “முல்லைத்தீவு இராணுவ முகாமில் பல இராணுவத்தினர் கொல்லபப்ட்டுவிட்டனர். எவ்வளவு இராணுவத்தினர் கொல்லப்பட்டனர் என்பதை அரசு இனமும் வெளியிடவில்லை. பெருந்தொகையான ஆயுத தளபாடங்களை வாங்கி வைத்தும், சக்தி வாய்ந்த முப்படைகளையும் வென்றுவிட விடுதலைப் புலிகளால் முடியும் எனப்[அது நிரூபிக்கப்பட்டு விட்டது. புலிகள் மாபெரும் சக்தி என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டியது தவிர்க்கப்பட முடியாததாகிவிட்டது. புலிகள் பயங்கரவாதிகள் அல்ல. இந்தக் கசப்பான உண்மையை ஏற்றுக்கொள்ள வேண்டும். சிறீலங்கா அரச பத்திரிகைத் தணிக்கையை வைத்துக்கொண்டு உண்மையினை மறைப்பது அப்பட்டமாகத் தெரிகிறது. பத்திரிக்கையை சுதந்திரமாக எழுத விடுங்கள். அவற்றின் பனி விமர்சனம் செய்வதுதான். எந்தவிதமான கசப்பான செய்திகளையும் உண்மைகளையும் நாம் சந்திக்கத் தயாராகவே உள்ளோம்.” என்று குறிப்பிட்டது அரசின் கபடத்தனத்தை வெளிக்காட்டுவதுடன் சிங்கள அரசின் தலைவர்கள் போராட்டத்தை உணர்ந்து வருவதையும் வெளிக்காட்டுவதாகவும் இருந்தது. உள்ளூர் பத்திரிகைகளுக்கு வாய்ப்பூட்டு போட்டுள்ள சிறீலங்கா அரசு முல்லைத்தீவு சமரின் உண்மைகளை எழுதிய வெளிநாட்டுப் பத்திரிக்கைகளைக் கூட இலங்கையில் விற்பனையாக விடாது தடுத்ததை இந்த அரசின் மீது உலக நாடுகள் வைத்திருந்த நம்பிக்கையை சிதறடித்துள்ளது.
‘ஓயாத அலைகள்” ஆரம்பித்து இரண்டாவது நாளன்று வன்னிப் பெருநிலப்பரப்பில் ஒரே பரபரப்பும் பதட்டமுமாகவே இருந்தது. பரவலாக எல்லா இடமும் விமானக் குண்டு வீச்சுக்களும் எறிகணைத் தாக்குதல்களும் முல்லைத்தீவு கிளிநொச்சி மாவட்டங்களில் மிக மோசமாக மேற்கொள்ளப்பட்டிருந்தது. அன்றுகூட ஆணையிரவு முகாமிலிருந்து அடுத்தடுத்து ஏவப்பட்ட ஆட்லறி எறிகணைகள் கிளிநொச்சி வைத்தியசாலை, செஞ்சிலுவைச் சங்கப் பணிமனை, பாடசாலைகள் போன்ற மனிதர் நடமாடும் பகுதிகளை விழுந்து வெடித்ததில் பலர் படுகாயமடைந்ததுடன் ஆருக்கும் மேற்பட்ட பொதுமக்கள் உடல் சிதறிக் கொல்லப்பட்டனர். முல்லைத்தீவு இராணுவ முகாமில் அரச படையினருக்குள் ஏற்பட்ட படுதோல்விகளை சீரணிக்க முடியாது சிங்களப் பேரினவாதிகள் மக்கள் குடியிருப்புக்கள் மீதும் வைத்தியசாலைகள் மீதும் குண்டு வீசி அப்பாவிப் பொதுமக்களை கொன்று பழிதீர்த்துக்கொள்ள முனைகிறது.
அன்று கலை எட்டு மணிக்கு மல்லாவியைச் சேர்ந்த ஒரு அதிபரின் மோட்டார் சைக்கிளில் முல்லைத்தீவு போவதற்குத் தயாரானோம். எங்களுடன் கல்வி உயர் அதிகாரி ஒருவரும் புறப்படத் தயாரானார். முல்லைத்தீவுக் கல்வித் திணைக்களக் கட்டடம் எப்படியிருந்தது என்று பார்த்தோம். அங்கு எவ்வளவு இலட்சக்கணக்கான கல்வி உபகரணங்கள், தளபாடங்கள் எல்லாம் இருந்திருக்கும். அந்தப் பிராந்தியத்தில் சிதைந்துபொன் கல்வியும், கல்வி அபிவிருத்தியையும் கட்டி எழுப்பவேண்டும் என்ற ஆவல் அவரை அங்கு போவதற்குத் தூண்டியது. நாங்கள் மூவரும் ஒரே மோட்டார் சைக்கிளில் ஏறி முகாம் பகுதியை அடைந்துவிட்டோம். வெட்டுவாய்க்கால் பாலத்தில் ஒரு சில அடி தூரத்தில் அங்கே காவலரண் அமைந்து இருந்த ஒரு போராளியால் தடுத்து நிறுத்தப்பட்டோம். “ஐயா குறைநினைக்காதீர்கள். நாங்கள் இன்று ஒருவரையும் உள்ளே அனுமதிக்கவில்லை. உங்களையும் போக விடேலாது” அந்தக் காவலரனுக்குப் பொறுப்பாக இருந்த அந்தப் போராளி சிறிது கடுமையாகவே கூறிக்கொண்டிருந்தார்.
எங்களுடைய மோட்டர் வாகனத்திற்குப் பின்னால் வந்து கொண்டிருந்த போராளிகளைக் கூட திருப்பி அனுப்பிக்கொண்டிருந்தனர். “முகாம் தாக்குதல் நடந்த பின் இரவோடிரவாக தப்பி ஓடிய சில ஆமிக்காரங்கள் பற்றைக்காட்டுக்குள்ளும் வீடுகளுக்குள்ளும் ஒளித்திருந்து ரவுண்ஸ் அடிக்கிறார்கள். அதுதான் நாங்கள் யாரையும் உள்ளே போகவிடவில்லை. அவங்களைத் தேடித் பிடித்து அழிக்கிற வேலை தொடர்கிறது”. அங்கேயிருந்த இன்னுமொரு போராளி கூறியதும் நிலைமையைப் புரிந்துகொண்டோம். அந்த இடத்தில் நிற்கும்பொழுது அந்தப் பகுதியெங்கும் எறிகணைத் தாக்குதலும் விமானக்குண்டு வீச்சுமாக ஒரே இரைச்சலாக இருந்தது. அந்தக் காவலரணின் முன்னாள் நிறுத்தப்பட்டிருந்த ஒரு மினி வானில் வாகனத்தில் நிரப்பி வைக்கப்பட்டிருந்த பெருமளவு ஆயுதங்களை இன்னொரு லொறிக்கு அங்கிருந்த போராளிகள் மாற்றிக் கொண்டிருந்தனர். டொங்கான், மோட்டார்கள், ஏ.கே.துப்பாக்கிகள் என்று பலவகையான ஆயுதங்கள் ஏற்றப்பட்டுக் கொண்டிருந்தன. போரின் போது இறந்த இராணுவத்தினரின் ஆயுதங்கள்தான் அவை என்று அங்கிருந்த ஒருவர் கூறிக்கொண்டிருந்தார்.
போர் ஓய்ந்தபாடில்லை. முல்லைத்தீவு மாவட்டம் எங்கும் ஒரே ஷெல்களும், விமானங்களின் இடியோசைகளும் அதிரவைத்துக் கொண்டிருந்தன. தமிழீழ விடுதலைப் புலிகளினால் முகாம் கைப்பற்றப்பட்டு அங்கிருந்து தம்பியோடிய எஞ்சிய படையினரை மீட்கவும் இழந்து போன முகாமை மீண்டும் கைப்பற்ற மேற்கொண்ட முயற்சிகள் வெற்றிபெறவில்லை. களத்தில் காயமுற்ற படையினரை மீட்க முடியாது திண்டாடும் படையினருக்கு அந்த முகாமின் நிலை அதிர்ச்சியைக் கொடுத்திருக்கும். மேலும் பெருந்தொகையான படையினரை முகாமுக்குள் அனுப்பிவிட்டால் புலிகளை நிலைகுலையச் செய்து முகாமைத் தமது பிடிக்குள் கொண்டுவந்து விடமுடியும் என்ற ஒரு வரட்டுத் துணிவினால் முல்லைத்தீவிலிருந்து சுமார் 6 கிலோமீற்றர் தொலைவிலேயே உள்ள சிலாவத்துறையில் இரண்டு ஹெலிக்கொப்டர்கள் மூலம் நூற்றுக்கும் மேற்பட்ட படையினர் தரையிறக்கப்பட்டனர்.
அதேவேளை அலம்பில் பகுதியிலும் நூற்றுக்கும் மேற்பட்ட விசேட அதிரடிப்படையினர் தீடிரென தரையிறக்கப்பட்டனர்.இரண்டாவது நாள் முற்றுகையின் போது, உலங்க்குவானூர்த்திகளால் தரையிறக்கப்பட்ட கொமாண்டோப் பிரிவினர் மீது போராளிகள் மிக உக்கிரமாக தாக்குதல் மேற்கொண்டதும் அந்தப் படையணிப் பொறுப்பான படைத்தளபதி லெப்.கேணல் ஒருவர் கொல்லப்பட்டதுடன், 40க்கும் மேற்பட்ட இராணுவக் கொமாண்டோக்களும் அழிக்கப்பட்டனர். தளபதியை இழந்துவிட்ட அந்தப் படையணி நாலாபக்கமும் சிதறியோடத் தொடங்கியது. போராளிகள் இல்லாத ஒரு இடத்தில் இரகசியமாக படைகளை இறக்கி முகாம் நோக்கி நகர்வைத் தொடங்க இருந்தவர்களுக்கு திடீரென நாலா புறத்திலும் இருந்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் பேரதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் கொடுத்தது. அந்தப் பகுதியில் மட்டும் பொறிக்குள் அகப்பட்ட நிலையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட படையினர் போராளிகளினால் சுற்றிவளைக்கப்பட்டு தொடர்ச்சியாகத் தாக்கப்பட்டனர். கடற்படையின் பாரிய போர்க்கப்பலும் பெருமளவுக்கு துருப்புக்களைக் காவியிறக்கும் ‘லாண்டிங் கிறாப்’ என்னும் கப்பலும் ‘டோரா’ அதிவேகக் கப்பல்களுமகா சுமார் 20க்கு மேற்பட்ட கடற்படைக் கலங்கள், பாரிய ஆயுதங்கள் சகிதம் 6 உலங்குவானூர்த்திகள் 50 கலிபர் துப்பாக்கிகளினால் வேட்டுக்களைத் தீர்த்துக்கொண்டிருக்கையில் படையினரைத் தரையிறக்கும் முரர்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அங்கே கடலில் காத்து நின்ற கடற்புளியினருக்கும் சிறீலங்காப் படையினருக்கும் இடையே நேருக்கு நேரான கடும் கடற்சமர் நடைபெற்றது.
இரண்டு பக்கங்கள்ளிலும் இருந்து எழுந்த வெடியோசைகள் வானமே இடிந்து விழுவது போல் அதிர்ந்துகொண்டிருந்தன. அந்த அளவிற்கு இரண்டு பக்கங்களிலிருந்தும் அதிநவீன ஆயுதப் பிரயோகங்கள் மேற்கொள்ளப்பட்டன. அந்த நேரம் வெடிமருந்து ஏற்றிய கடற்கரும்புலிகளின் மூன்று படகுகள் கடற்படைக் கப்பல்களின் பலத்த பாதுகாப்புக்கு மத்தியிலும், உக்கிரமான தாக்குதல்களை நிகழ்த்திக்கொண்டிருந்த அதிவேகப் போர்க்கப்பலானpaariya சீன சங்கே 3 ரகத்தைச் சேர்ந்த “ரணவிரு” கப்பலில் மோதி வெடித்துச் சிதறின. அந்தப் பாரிய போர்க்கப்பல் தீப்பிழம்பென வெடித்து மூழ்கத் தொடங்கியது. அதிலிருந்து நாற்பதுக்கும் மேற்பட்ட படையினரும் அப்படியே கடலில் மூழ்கி தம்மை சங்கமித்துக்கொண்டிருன்தனர்.
அளம்பிலில் தரையிறங்கி முன்னேற முடியாமல் தவித்துக்கொண்டிருந்த படையினருக்கு உதவுவதற்காக மூன்றாவது நாள் வந்த எம்.ஐ. 24 வகைக் உலங்குவானூர்த்தி போராளிகளினால் சுட்டு வீழ்த்தப்பட்டது. தொடர்ந்து அடிக்கு மேல் அடி வாங்கிக்கொண்டிருந்த படையினரால் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தனர். அலம்பிலில் இறக்கப்பட்ட படையினரில் நூற்றுக்கும் மேற்பட்ட இராணுவத்தினர் கொல்லப்பட்டு விட்டனர். அவர்களில் எஞ்சியிருந்தவர்களுடனான தகவல் தொடர்புகள் முற்றாகத் துண்டிக்கப்பட்ட நிலையில் சரியான கட்டளை அதிகாரி இல்லாததால் சிதரியோடிக் கொண்டிருந்தனர். சிலர் அங்கிருந்து காட்டுப்பகுதிக்குள்ளும் ஓடிக்கொண்டிருந்தார்கள். மேலும் 6வது நாளாவதாக கடல் வழியாகப் பெருமளவு படையினரை தரையிறக்க ஆயத்தப்படுத்தினர். தரையில் நின்ற போராளிகளினால் மோட்டார் தாக்குதல்கள் கடற்படைக் கலங்கள் மீது மேற்கொள்ளப்பட்டதில் எறிகணைகளில் ஒன்று கப்பலின் முன் பகுதியில் வீழ்ந்ததில் அப்பாரிய கப்பல் பலத்த சேதத்திற்கு உள்ளாகியதுடன் அதிலிருந்த 30 படையினர் கொல்லப்பட்டதாகவும் சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு நடவடிக்கைத் தலைமையகம் தெரிவித்தது.
இந்தத் தொடர்ச்சியான நெருக்கடியின் மத்தியிலும் கொழும்பிலிருந்து இயங்கும் சிறீலங்காவின் வோநோளியிலும் தொலைக்காட்சியிலும் இராணுவப் பேச்சாளர் சரத் முனசிக “அலம்பிலில் தரையிறக்கப்பட்டுள்ள படையினர் முல்லைத்தீவை நோக்கி விரைந்துகொண்டிருக்கின்றனர். இன்னும் ஒரு சில மணித்தியாலங்களுக்குள் முகாமுக்குள் இராணுவத்தினருடன் முன்னேறிச் செல்லும் படையினர் இணைந்துகொள்வார்கள். இது வரை நடந்த போரில் நூறிற்கும் மேற்பட்ட எல்.ரி.ரியினர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர்.” என்று தொடர்ந்து பிரச்சாரம் செய்துகொண்டிருந்தமையால் கேட்பதற்கு பரிதாபகரமாக இருந்தது. ‘ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு’ என்னும் தமிழ்ப் பழமொழி போல் இப்போது பாதுகாப்பு அமைச்சருக்கும் ஜனாதிபதிக்கும் எவ்வளவு பொருத்தம் என்பது அவர்களது யோசனையற்ற செயல்கள் சாட்சி அளிக்கின்றன. ஏற்கனவே தாக்கியழிக்க்கப்பட்ட முகாமில் படையினர் பெருந்தொகையாக கொல்லப்பட்டும் முகாம் முற்றாக தாக்கப்பட்டும் கூட அங்கு இருப்பவர்களோடு எந்தத் தொடர்புளில்லாத நிலையிலும் புதிய இடத்தில் பல படையினரை இறக்கி அவர்களுக்கு கைகொடுக்க முன்வந்த பாதுகாப்பு அமைச்சின் போக்கு சிறீலங்காவின் நிதானமற்ற போக்கை உலகிற்கு அம்பலப்படுத்தியது.
18ம் திகதி அதிகாலையிலேயே முல்லைத்தீவு இராணுவமுகாம் புலிகளால் தாக்கியழிக்கப்பட்டதும் அங்கே கொல்லப்பட்டதும், சிதறி தப்பியோடியபோது சுடப்பட்டும் இறந்த இராணுவத்தினரது சடலங்கள் ஆங்காங்கே சிதறிக் காணப்பட்டன.
இறந்த இராணுவத்தினரின் சரியான தொகையை மூடிவைத்து மறைத்துவந்த அரசு போர் நடந்து 11 நாட்களின் பின் 28ம் திகதி செய்தியாளர் மகாநாடு ஒன்றில், வெளிவிவகார அமைச்சர் கதிர்காமரினால்,
“முல்லைத்தீவு முகாம் முற்றாக புலிகள் வசமானது உண்மைதான். அங்கு சுமார் 1500 படையினர் வரை இருந்தனர். அவர்கள் எல்லோருமே கொல்லப்பட்டிருக்க வேண்டும்” என்ற உண்மை வெளிப்பட்டது.
“பிணநாற்ற….!” என்று சொல்வார்களே?…. அங்கு ஒரு பிணமல்ல ஆயிரத்துக்கும் மேற்ப்பட்ட சடலங்கள் அழுகி உடல் உப்பி பெருத்த நிலையில் அங்குமிங்குமாக தேடி ஐக்கப்பட்டு பக்குவமாக லொறிகளிலும் ஏற்றி கிளிநொச்சி சந்திரன் பூங்காவுக்கு கொண்டு செல்லவதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டன.
அங்கே நின்று சடலங்களைத் தூக்கிக்கொண்டிருந்தவர்களில் ஒருவர் “இந்தச் சடலங்களைப் பேசாமல் இஞ்சையே எரித்துப்போட்டுப் போறதுக்கு வீணாகச் செலவழித்து இதைக்கொண்டுபாய் கொடுக்கிறதோ? இதுகளைக் கொண்டு போறதை விட இங்கிருந்து ஏதாவது மிச்ச சொச்ச ஆயுதப்பெட்டிகளையாவது கொண்டுபோய் சேர்த்தால் பிரயோசனமாக இருக்கும்” என்றுsalippudan கூறினார்.
“ஐயா! நீங்கள் அப்படிக் கதைக்கிறது சரியில்லை. எங்கட எதிரியாக இருந்தாலும் அவன் போர்க்களத்தில் இறந்துவிட்டதால் அதற்குரிய மரியாதையை நாங்கள் செய்யவேணும். என்ன இருந்தாலும் அவர்களும் போர்வீரர்கள் தானே. எங்கட தலைவர் இந்த விடயத்திலை எவ்வளவு நிதானமாக செயல்படுகிறார் என்று தெரியும்தானே.” அந்த மக்களுடன் சேர்ந்து இராணுவத்தினரின் சடலங்களைத் தூக்கிக்கொண்டு நின்ற ஒரு போராளி கூறியதும் எல்லோரும் வாயடைத்துப் போய் நின்றார்கள்.
“இந்த சின்ன வயசில் இப்படியொரு உயர்ந்த சிந்தனை உள்ளவனாக இருக்கிறானே! எல்லாம் தலைமைத்துவப் பண்பின் சிறப்புத்தானே.
அங்கே நின்றவர்கள் அந்தப் போராளியின் உணர்வை வியந்து தமது செயலுக்காக வருத்தப்பட்டுக்கொண்டனர்.
வலிகாமம் பகுதி இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட பின்னர், அந்த ஆக்கிரமிப்பு இராணுவத்தினர் நடந்து கொண்ட மிலேச்சத்தனமான அநாகரிகமான செயல்களைப் பார்த்தால் அவர்கள் நாகரிகமான ஒரு இனமா என்றுதான் கடகத் தோன்றும்.
இந்த மண் மீட்புக்காகான போரிலே, தமது இன்னுயிர்களை அர்ப்பணித்து வீரச்சாவடைந்த மாவீரர்களின் கல்லறைகளை உழுது தரைமட்டமாக்கிய வெறித்தனம் ஆடியமை!
அரச அழுத்தங்களினால் பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் உளப்பாதிப்புற்று வாழும் எமது குழந்தைகளுக்கென அமைக்கப்பட்ட பூங்காக்களை இடித்து அழித்து கொடுமைகள் புரிந்தமை…!
இந்திய – இலங்கை கூட்டுச்சதியால் தம்மை அழித்து ஆகுதியாக்கிவிட்ட குமரப்பா, புலேந்திரன் உள்ளிட்ட பன்னிரு வேங்கைகளுக்கு வல்வெட்டித்துறை தீருவிலில் அமைக்கப்பட்ட தூபியை வெடிவைத்து தகர்த்த கொடுங்கோண்மை….!
இவர்கள்தான் யுத்தம் மூலம் சமாதானத்தைக் கொண்டு வருவதற்கு ஜனாதிபதி சந்திரிக்காவினால் அனுப்பிவைக்கப்பட்ட வேடம் போட்ட வேட்டை நாய்கள்.
தீருவில் பன்னிரு வேங்கைகளின் நினைவுத் தூபி 1988ம் ஆண்டு இந்திய இராணுவ ஆக்கிரமித்திருந்த காலப்பகுதியில் முழுக்க முழுக்க மக்களின் பங்களிப்பினாலேயே உருவாக்கப்பட்ட ஒரு மாபெரும் நினைவாலயம். ஆரம்பத்தில் அதனைக் கட்டுவதற்கு பல தடைகளை இந்திய இராணுவத்தினர் ஏற்படுத்தி, பலரை மிரட்டி கைதுசெய்து சித்திரவதை செய்தபோதும், ஒன்றுதிரண்ட மக்கள் சக்தியினால் அந்த மாபெரும் நினைவாலயம் கட்டி முடிக்கப்பட்டது. பின்னர் அது பூசிக்கப்பட்ட நினைவாலயம் ஆக்கப்பட்ட பின்னர் எந்த ஒரு இந்திய ஜவானும் அதன் மேல் பாதணிகளுடன் ஏறியது கிடையாது…. அந்தளவுக்கு கல்லறைகள் பூசிக்கப்பட வேண்டியதொரு தார்மீகக் கோட்பாட்டைக் கொண்டிருந்தன.
அங்கிருந்து மீட்கப்பட்ட 1208 சடலங்களையும் ஏற்றிக்கொண்டு சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்ட லொறிகளும் ரக்ரர்களும் முல்லைத்தீவுச் சாலை வழியாக கிளிநொச்சிக்குப் போய்க்கொண்டிருந்தன.
முல்லைத்தீவுச் சமரில் கொல்லப்பட்ட பல படையினரின் சடலங்களை மனிதாபிமான முறையில் கையளிக்க முன்வந்த போதும் அவ்வளவு பெருந்தொகையான சடலங்களை பொறுப்பேற்க அரசு மறுத்து விட்டது. சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திடமிருந்து 55 சடலங்களை மட்டுமே அரசு பொறுப்பேற்றுக் கொண்டது. மிகுதிச் சடலங்கள் கிளிநொச்சி, முல்லைத்தீவு அரச அதிபர்களிடம் கையளிக்கப்பட்டு அவை அரச செலவில் அடக்கம் செய்யப்பட்டுவிட்டன.
போர் வெறி கொண்ட சிங்கள தேசத்திற்காக இனங்களுக்கிடையிலான செளசன்யம் வளரக்கூடாது என்ற நோக்கில் நித்தியா சுபபோகத்தை அனுபவிக்க முனையும் சிங்கள ஆட்சியாலர்களுக்காக தமது இன்னுயிர்களை அர்பணித்த அந்த எழிச் சிங்கள சிப்பாய்களின் உடலைக்கூட அரசு பொறுப்பேற்க மறுத்துவிட்டது அரசின் மீதான சிங்களவர்களின் நம்பிககியை சிதறடித்துவிட்டது. வெறும் பணத்திற்காக ஏழைச் சிங்களத் தாய்மார்களின் பிள்ளைகளை தமிழர்களின் தாயக விடுதலைக்கு எதிரான போரில் இன்றுmadinthu கொண்டிருக்கிறார்கள்.
‘பாதுக்கை’ என்ற ஒரு சிங்களக் கிராமத்தில் தித்தேனிய என்ற இடத்தைச் சேர்ந்த சோமாகுல என்ற ஏழைத்தாய் முல்லைத்தீவு முகாமில் போர்க்கள முனையில் நிற்கின்ற தன்னுடைய மகனுக்கு 05.12.1995ல், “ஆதரயே மமே சுது புத்தா” என்ற ஆரம்பித்து எழுதிய கடிதத்தில் அந்த சிங்களக் குடும்பம் ஏன் இந்த யுத்தத்தில் பலியாக வேண்டும் என்றே எண்ணத் தோன்றுகின்றது.
சிறீலங்கா அரசின் பொய்ப் பிரச்சார மாயையில் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் யதார்த்தத்தை அறியாது, தமியால்ர்கள் எந்த இலட்சியத்திற்குப் போராடி வருகின்றார்கள் என்று கூடப் புரியாத ஆயிரக்கணக்கான சிங்களத் தாய்மாரின் பிரதிபலிப்பாகவே சோமாவும் இருக்கின்றாள் என்பதில் வியப்பில்லை.
சிங்களப் பேரினவாதிகளினதும் மூர்க்கத்தனமான பொக்குஇடைய பிக்குகளின் போதனைகளின் மத்தியிலும் அவலப்படுகின்ற அவர்களால் எப்படித்தான் உண்மையை அறிந்து கொள்ளமுடியும்? மீகவத்தை, பாதுக்கை என்ற கிராமத்தில் இருக்கும் சோமா என்ற அந்தத் தாயின் கடிதத்தில்
‘உனது சுகம் அறிய ஆவல் …..உனக்கு இப்போ காலம் சரி இல்லையாம் சனி தோஷம் இருப்பதால், போதி பூஜை செய்து கிரகத் தோத்திரம் பாடி ஏழு நாட்கள் இன்றுடன் முடிவடைகிறது…. மகனே உனக்குக் கூடாத காலம் அவதானமாக நடந்து கொள்…. எமது சிறீலங்கா இராணுவ வீரர்கள் திராவிட இனத்திடம் இருந்தும் பிரிவினைவாதிகளிடமிருந்தும் இருந்தும் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றியதில் எங்கள் எல்லோருக்கும் மகிழ்ச்சி. ஆனால் எதற்கும் நீ அவதானமாக நடந்து கொள். ஆனது அக்காவின் கடனில் 10600 ரூபா கொடுத்து நீ அனுப்பிய 10000 ரூபா வைத்தான் பெற்றுக்கொண்டேன்.. எனது தங்கமகனே!… நீ உயிரோடு சுகமே திரும்ப வேண்டும் கவனமாகவும் நிதானமாகவும் செயல்படவும், உனது அம்மா சோமா”
அந்தத் தாயின் கடிதத்தில் போருக்குச் சென்றுவிட்ட தன் மகனின் சுகம் பற்றியே மீண்டும் மீண்டும் குறிப்பிட்டிருந்தது. பலத்த இராணுவச் சோதனையின் பின்பு தான் அந்தக் கடிதம் தன் மகனிடம்செர்பிக்கப்படும் என்று சோமா அறிந்திருந்தும், மகனை உயிரோடு பார்க்க வேண்டும் என்ற ஆவலில் “கண்டபடி போருக்கு முன்னுக்குச் செல்லக்கூடாது” என்று மறைமுகமாக எச்சரிக்கத் தவறவில்லை!
அத்தகைய சிங்களத் தாயின் அபிலாசைகள் எங்கே…? அவளுடைய இறந்துபோன அந்த மகனைப் பொறுப்பேற்று உயிரற்ற உடலைக்கூட கொடுக்க மனம் இல்லாத சிங்களப் பேரினவாதிகளுக்காகவா அவனைப் போன்ற சிங்கள இளைஞர்கள் தமிழீழ மண்ணிலே மடிய வேண்டும்….?
தமிழீழ இளைஞர்கள் ஒரு இலட்சியத்திற்கான போராட்டத்தை முன்னேடுத்துக்கொண்டிருக்க சிங்கள இளைஞர்களோ ஆட்சியாளர்களின் அர்த்தமற்ற “சமாதானத்திற்கான யுத்தம்” என்றபோர்வையில் பணத்திற்காகவும், குடியிருப்புக்கான வீட்டுக்காகவும்arpa சலுகைகளுக்காகவும் மடிகின்றனர். ஆனால் களத்தில் நின்றும் விலகியிருக்கும் சிங்கள ஆட்சியாளர்களோ லண்டன் நகர விடுதிகளிலும், கொழும்பு ஐந்து நட்சத்திர ஓட்டல்களிலும் உல்லாசமாகப் பொழுதைப் போக்குகின்றனர். அவர்களைப் பொருத்தவரையில் இந்த யுத்தம் முடிவுக்கு வந்து விட்டால் இப்பொழுது அனுபவித்துக் கொண்டிருக்கின்ற எல்லாச் சுகபோகங்கலுமே பறிபோய் விடும் என்ற அச்சத்தில் பிரச்சினைகள் முடியாதிருக்க யுத்தத்தைத் தொடர்ந்து நடத்துகின்றார்கள். ஆனால் “எங்கள் பிள்ளைகளைக் காட்டுங்கள்” என்று அழுது புலம்பி சோமா போன்ற ஆயிரக்கணக்கான எழிச் சிங்களத் தாய்மார்களுக்கு அவர்கள் என்ன பதிலை சொல்லப் போகிறார்கள்..?
அந்த உண்மையை அறிவு பூர்வமாக உணரும்வரை சிங்கள இளைஞர்களின் சடலங்களும் தமிழீழ மண்ணிலே, புதைக்கப்படுவதும் தவிர்க்க முடியாததாகவே போகும்….!
முல்லைத்தீவு நகரை மீண்டும் ஒரு தடவை பார்க்க வேண்டும், அந்த நகரத்தின் மூளை முடுக்கெங்கும் சுற்றிவர வேண்டும் என்ற ஆவல் எழ ஏழாவது நாளான அன்றும் புறப்படுவதற்குத் தயாரானேன்.
“முல்லைத்தீவுப் பக்கம் போனால் எங்கடை வீட்டையும் ஒருக்கால் போய்ப் பார்த்து வாருங்கோ” முல்லைத்தீவில் இருந்து தன் அழகான கல்வீட்டை இழந்து அகதியாய் ஓடிவந்து புதுக்குடியிருப்பில் மண் குடிசை அமைத்து வாழ்ந்து வருகின்ற தோட்டக் கல்வி அதிகாரி ஒருவர் தன் ஆவலை வெளிக்காட்டினார். தான் வாழ்ந்து, உண்டு, படுத்து எழும்பிய அந்த வீட்டை மீதும் பார்க்கத் துடிக்கும் ஆதங்கத்தை அவரது முகம் காட்டிக்கொண்டிருந்தது.
அன்று பிற்பகல் ஐந்துமணி போல் எனது ஒன்றுவிட்ட சகோதரனான சொல்வராஜாவுடன் மோட்டார் சைக்கிளில் புறப்பட்டுப் போகும் பொழுது, ஆளரவம் குறைந்த நேரத்தில் தனிமையில் செல்வது சிறிய பயமாக இருந்தது.
அந்த நகரம் ஆவிகள் உலாவும் நகரம் போல் காட்சியளித்ததுக் கொண்டிருந்தது!
“சே!…….. பயப்படாதயுங்கோ அண்ணை! என்ன ஆகப் போனால் கால்தான் போகும்..”
செல்வராஜா பகிடியாகக் கூறியபடி, மோட்டர் சைக்கிளில் வேகத்தைக் கூட்டியது, அது காற்றையும் கிழித்துக் கொண்டு பறந்தது.
வெட்டுவாய்க்கால் (வட்டு வாசல்) பாலத்தில் இருந்த முல்லைத்தீவு முகாம் நோக்கி நீண்டு செல்கின்ற தார் ரூட்டில் இரு புறமும் விடத்தல் முள்ளும் பற்றைகளும், சாரல் பற்றைகளும் படர்ந்து வளர்ந்திருந்தன அந்தப் பகுதிகளைப் பல போராளிகள் நின்று துப்பரவு செய்து கொண்டிருந்தார்கள்.
“அலம்பில் சிலாவத்தத்துறையில் இறக்கிவிட்ட ஆமி முகாம் நோக்கி முன்னேறி வாராங்களாம் அதுக்கிடையிலை ஏன் இப்ப பாதையை வெளியாக்கிறியள்?”
அந்தச் சாலையின் இருபக்கத்திலும் நின்று சென்மன் புளுதி படிந்த வெள்ளை பெனியனுடனும், அரைக் காற்சட்டையுடனுமாக வேலை செய்துகொண்டு நின்ற ஒரு போராளியிடம் கேட்டோம்.
“ஐயா!… இஞ்சை இருந்தவன் சும்மா செத்துப் போகேல்லை… பதினையாயிரத்திற்கும் மேற்ப்பட்ட நிலக்கண்ணி வெடிகளையும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனக்கண்ணி வெடிகளையும்களையுமெல்லா புதைத்து வைச்சிருக்கிறான்… நேற்றுக்கூட மைன்ஸ் கிளியர் பண்ணேக்கை எங்கடை பெடியன் ஒருத்தனுக்குப் பாதம் போச்சுது…..”
அந்தப் போராளி மிக்கச் சாதாரமாகக் கூறிவிட்டு பாதையை மெது மெதுவாகச் சுத்தப்படுத்தத் தொடங்கிவிட்டான். இரண்டு பக்கமும் மூடி வளர்த்திருந்த விடத்தல் முள்ளுகள் எங்களுடைய கன்னங்களையும் சட்டைகளையும் பதம் பார்த்துவிட்டன.!
வெட்டு வாய்க்கால் பாலத்தையும் கடந்து வளைவான பாதையில் திரும்பும் பொழுது சிறிது தூரம் தள்ளி இடதுபுறமாகamaithiyaana ஒரு சூழழில் இருந்த கன்னிமார் கோயில் பாழடைந்து போய் இருந்தது. சப்த கன்னிகைகளும் ஆலயம் அமைத்து வழிபட்டு வந்த அந்தப் பெண் தெய்வ வழிபாட்டு முறை முல்லைத்தீவில் இருந்திருக்கிறது. அந்த ஆலயத்தைச் சுற்றி முட்கம்பி வேலி போடப்பட்டு, பற்றைகளும், மரங்களும் வளர்ந்து ஒரே புதிராகக் காட்சியளித்தது.
அங்கிருந்து சிறுது தூரத்தில் வெட்டு வாய்க்கால் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை புத்தர்களால் முடிப்பாய் இருந்தது. முல்லை நகர் ஆக்கிரமிக்கப்பட்ட பொழுது அங்கு காலம் காலமாக வளர்ந்த மக்கள் மட்டும் அகதிகளாக்கப்படவில்லை…… அந்த மக்களால் பூசித்தும் நேசித்தும் வளர்க்க்கப்பட்ட கல்விச் சாலைகளும் கூடவே அகதிகளாக்கப்பட்டன. அந்தப் பாடசாலைகளை அழித்துக் கல்வி கற்பதன் மீது நிரந்தர பாதிப்பை ஏற்படுத்தியமை, தமிழரின் கல்வி சிதைக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தை நிறைவேற்றியதாகத்தான் இருந்தது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள நூற்றி நான்கு பாடசாலைகளில் கரைத்துரைப்பற்றுக் கோட்டத்தில் உள்ள முல்லைத்தீவு மகாவித்தியாலயமும், முல்லைத்தீவு றோ.க. பெண்கள் பாடசாலை முல்லைத்தீவு முஸ்லிம் வித்தியாலயம், வெட்டுவாய்க்கால் அ.த.க. பாடசாலை. முல்லைத்தீவு இந்து வித்தியாலயம். சிலாவத்தை இந்து தமிழ் கலவன் பாடசாலை, சிலாவத்தை றோ.க. பாடசாலை ஆகிய எட்டுப் பாடசாலைகளும் இராணுவ முற்றுகைக்குள் கொண்டுவரப்பட்டிருந்தன! அதனைத் தொடர்ந்து, அந்தப் பாடசாலைகளில் கல்வி கற்றுக் கொண்டிருந்த 2400 மாணவர்களும் நிர்க்கதியாக்கப்பட்டனர்.
இந்த நாட்டில் சகல இன மக்களும் சமமான கல்வி வசதி வளப் பங்கீடு என்பவற்றை ஏற்படுத்தி, நாட்டின் 10000 பாடசாலைகளையும் இன மொழி வேறுபாட்டின்றி தரம் உயர்த்த உழைப்போம் என்று கூறிப் பெருமளவு வெளிநாட்டு உதவிகளைப் பெற்றுக்குவிக்கும் ஆட்சியாளர்கள், இங்கே ஒரு தூய தமிழ்க் கிராமத்தில் உயிர்ப்போடு இயங்கிய எட்டுப் பாடசாலைகளையும் முடக்கி விட்ட அந்தக் கொடுமையையும் உலகுக்குக் கூறுவார்களா….?
கன்னிமார் கோயிலையும் கடந்து அந்தக் தார் ரோட்டு வழியே செல்லும் பொழுது ஆயிரக்கணக்கான சீமேந்து கற்கள், மண் ஆகியவற்றால் உரமாக அணைகட்டி, முகாமின் வெளிப்புற வளையமாக பலமான காவலரண்கள் நூற்றுக்கணக்கில் 20 அடிக்கு ஒன்றாக அமைக்கப்பட்டிருந்தன!…. அதில் இருந்து சில மீற்றர்கள் தூரம் சென்றதும் அடர்ந்த முட்கம்பி வளையங்கள் ஒரு பாதுகாப்பு வலயமாக இருந்தன.
அந்தப் பாதையின் ஒரு பக்கங்களிலும் உள்ள வயல் வெளிகளில் ஆங்காங்கே இறந்து போருமிப்போன பல சடலங்கள் இன்றும் அங்கே கிடந்தன.
“வயல் வெளிகளில் நிறைய மைன்ஸ் இருகிறதாலை அந்தச் சடலங்களை எடுக்கலையாம்…”
மோட்டார் சைக்கிளில் போய்க்கொண்டிருக்கும் பொழுதே செல்வராஜா அந்தப் பகுதியைக் காட்டிக் கொண்டு போனார் அந்த முகாமின் மூன்றாவது பாதுகாப்பு வலயத்தையும் கடந்து மையப்பகுதிக்குத் சென்றோம். அந்தப் பகுதியில் உள்ள புல்நிலங்கள் நெருப்பு வைத்துக் கொழுத்தப்பட்டிருந்தன.
“ஷீ…. இவ்வளவு பாதுகாப்பு வளையங்களையும் கடந்து இந்தப் பெரிய முகாமை எங்கடை பொடியல் எப்படித்தான் தாக்கியளித்தார்களோ?”
அந்த வியத்தகு சாதனையை நினைத்துப் பார்க்கவே உடல் புல்லரிக்கின்றது. சிறுவயதில் வேதாளன் கதைகள், மாயாவிக் கதைகளைப் படித்து அதில் வரும் அற்புதமணா வெற்றிகளையெல்லாம் நினைத்து மெய்மறந்திருக்கிறேன்.
அது கற்பனை….. ஆனால் எமது கண்முன்னால் நியமாகவே ஒரு அற்புதத்தை, நினைத்துப் பார்க்கவே முடியாத ஒரு தீரத்தைக் கண்டுவிட்ட பிரமை இன்னும் மாறவில்லை!
‘அண்ணை! கெதியாய் எல்லாவற்றையும் பார்த்துவிட்டு வாங்கோ…. நான் ஒரு போடியநிட்டை போட்டுவாறன்…’ செல்வராஜா என்னைத் துரிதப்படுத்திவிட்டு, ஆலமரத்தின் கீழ் நின்ற சில போராளிகளை நோக்கிப் போனார்.
அழகான கடற்கரை… வெண்மணற் பரப்பை முத்தமிடும் வகையில் பொங்கி ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தது. அங்கே பல போராளிகள் ஓடிப்பாடித் திரிந்துகொண்டிருந்தார்கள். சிலர் குளித்துக் கொண்டு இருந்தார்கள்.
கடைத்தெருப் பக்கமாக நீளத்திற்கு அழகாக இருந்த கடைகளில் அப்துல் சமது, கன்கோவஸ்தியாம் பிள்ளை வைன் ஸ்ரோர்…. ஆகிய பல கடைகள் மேற்கூரைகள் கழற்றப்பட்ட நிலையில் இருந்தன. அங்கே இராணுவத்தினரின் கொத்தடிமைகளாக இருந்தவர்களால் கைவிடப்பட்ட நூற்றுக்கணக்கான ஆடுகள் அநாதரவாக நின்று மேய்ந்துகொண்டிருந்தன. அந்தக் கடைகளுக்கு எதிர்ப்புறமாக உள்ள ஒரு வீட்டில் மேல் கூரையில் ஒரு சிங்கள சிப்பாய் காய்ந்து கருகிப்போன உடல் முகம் குப்புறக் கிடந்தது. அதன் கீழ் அஸ்பெஸ்ரஸ் சீர்ருக்கும் ஓட்டுக்கும் இடையில் ஒரு சிப்பாயின் உடல். இப்படி ஒன்றா இரண்டா ஏற்கனவே கணக்கில் அடங்காத சடலங்கள் இன்றும் மீட்க்கப்படாமல் இருந்தன.
‘ஐயா… அங்காலை ஒரு பங்கருக்குள்ளை இருபத்தேழு ஆமிக்காரங்க்கடை சடலங்கள் கருகிப் போய்க்கிடக்குது. அதுக்குள்ளே இருந்து அவங்கடை ஆயுதங்கள் கூடக் கருகிப்போய்க் கிடக்குது….. வாருங்கோ காட்டுறன்….’
நான் ஒரு பத்திரிக்கையாளன் என்பதை அறிந்தோ என்னவோ ஏதோ ஒரு ஆர்வத்தில் இந்தப் போராளி என்னை அழைத்தான்…..
“இல்லைத் தம்பி இவ்வலோளவும் போதும் நன்றி…” அந்த அழகான நகரத்தை ஆசைதீரக் கண்டுகளித்த எனது மனம் மீண்டும் அந்தக் காட்சியைக் காணவிரும்பவில்லை!
முல்லைத்தீவு….! மாமன்னன் சூரபத்மனின் அற்புதமான மாகேந்திரபுரி போன்று மிக மிக அழகாகத் திட்டமிட்டு அமைக்கப்பட்டு இன்று களை இழந்து ஓளி இழந்து போய் இருக்கின்றது….. வடக்கே பொங்கிப் பிரவகிக்கும் கடல் தெற்கே ஒரு புறமாக அரச திணைக்களக் கட்டடங்கள், கிழக்கே அழகான வீடுகளும், கடைகளும் அமைந்த கடைத்தெரு. விசாலமான விளையாட்டரங்கு, திரையரங்குகள்….. என்று மிக அற்புதமாகத் திட்டமிட்டு, அழகாக அந்த நகரம் அமைக்கப்பட்டிருந்தது.
தமிழீழ சிங்கள தேசப் போரில் முல்லைத்தீவு ஒரே ஒரு கேந்திர முக்கியத்துவம் பெற்றது மட்டுமன்றி அது ஒரு பூர்விக வரலாற்றுச் சிறப்பைக் கொண்டது என்ற பெருமையையும் உடையது.
ஆம்! பிரித்தானியர் ஆட்சிக் காலத்தில் தமிழீழப் பகுதியின் பல்வேறு நிலபப்ரப்புக்களையும் ஆண்டு வந்த சங்கிலியன் தொடக்கம் குளக்கோட்டன் வரையிலான பல தமிழ் அரசர்கள் எல்லோரும் தோற்கடிக்கப்பட்ட போது ‘வன்னி’யை மட்டும் பிரித்தானிய ஏகாதிபத்தியத்திற்கு அடங்க மறுத்தது. தனித்தமிழர் இராச்சியமாக நிமிர்ந்து நின்றது. அன்று கடைசித் தமிழ் மன்னனாக வீரத்துடன் வாழ்ந்த பண்டாரவன்னியன் ஆளுமைக்குள் இருந்த தமிழர்கள், தன்மானத்துடனும், வீரத்துடனும், செல்வம் கொழிக்கும் வளத்துடன் வாழ்ந்தார்கள்…..! ஆனால், யாழ்ப்பாணத்தில் சங்கிலியன், தோற்கடிக்கப்பட்டதும் பிரித்தானிய ஏகாதிபத்தியவாதிகளின் கொடூரங்களுக்கு அஞ்சிய தமிழர்கள், வன்னிப் பெர்நிலப்பரப்புக்கே ஓடி வந்து முல்லைத்தீவுப் பகுதியில் தக்ஞ்சமடைன்தனர்!
கரிக்காட்டு மூலை என்ற இடத்தில் தன் தளத்தை அமைத்து பிரித்தானிய அரசுக்கு எதிராக இறுதிவரை போராடிய பண்டார வன்னியன், பிரித்தானிய ஆக்கிரமிப்பாளர்களினால் சுற்றிவளைக்கப்பட்டுக் கற்சிலை மடுவரை போராடியபடி பின் வாங்கிச் சென்று இறுதியில் அந்தத் தனித் தமிழ் மறவன் அங்கே வீரச்சாவைத் தழுவிக்கொண்டான்.
இன்றும் கூட கற்சிலைமடுவில் அந்த மாவீரன் பண்டாரவன்னியனின் கல்வெட்டு வன்னியின் அடங்கா வீரத்தைக் காட்டி நிற்கிறது! (ஆனால் இன்று அவை சிங்கள இனவெறிப் படைகளாலும் மற்றும் கைக்கூலிகளாலும் சிதைக்கப்பட்டுவிட்டது வரலாறைத் தழுவிய இக்கட்டுரை 1996 வரையபபட்டது . )
மாலை மயங்கும் நேரத்தில் அந்த மாவீரன், புனித பாதம் பட்ட பூமியில் நிற்கும்பொழுது என் நெஞ்சிலெல்லாம் பூரித்தது. சந்திக்கு எதிர்புறமாக இருந்த வடபிராந்திய போக்குவரத்துச் சபையின் தலைமைப் பணிமனைக் கட்டிடத்தின் முன்னால், சில போராளிகள் குவிந்து நின்றனர். அந்தப் பெரிய கட்டிடத்தின் முன்னால் மிக உயரமான் ஒரு கொடிக்கம்பத்தில் சிங்கள ஆக்கிரமிப்பின் சின்னமான ஆறு வருடங்களாகப் பரந்துகொண்டிருந்து துப்பாக்கிச் சன்னங்கள் பட்டுத் துளை விழுந்துசுருங்கிப் போய்க் கிடந்த வாளேந்திய சிங்கக் கொடியை ஒரு போராளி இறக்கிக்கொண்டிருந்தான்!
1995ம் ஆண்டு மார்கழி மாதத்தில் தூய தமிழ் அரசோச்சிய யாழ் மண்ணிலே சிறீலங்காப் பாதுகாப்புத் துணை அமைச்சர் அநுருத்த ரத்வத்தை ஆக்கிரமிப்பின் கொடியை ஏற்றித் தென்னிலங்கையில் தன்னை ஒரு துட்டகைமுனுவாகக் காட்டி பெருமை பெற்ற அந்தச் சிறுமையை நினைத்துப் பார்க்கிறேன்.
ஒ…. இன்று ஒரு முகாம் மட்டும் கைப்பற்றப்படவில்லை பேயாட்சி செய்த ஒரு தமிழ் நகரமும் விடுதலைப் புலிகளால் மீட்கப்பட்டுவிட்டது!
அந்தப் பூரிப்பில் முல்லை மக்கள், தாம் இழந்துவிட்ட வீடுகளை, தவழ்ந்து, ஓடி உருண்டு விளையாடிய மண்ணைப் பார்த்து மகிழத் தயாராகிவிட்டார்கள்.
“முல்லைத்தீவு முகாம் முற்றாக புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. அளம்பில் பகுதியில் பெரும் எடுப்புடன் தரையிறக்கப்பட்ட முப்படைகளின் ‘திரிஹார’ இராணுவ நடவடிக்கை மூலம் மீண்டும் முல்லைத்தீவை முற்றுகையிட முனைந்த இராணுவத்தினர் தமது பெருமளவு ஆயுதங்களையும் இறந்த நூற்றுக்கணக்கான இராணுவத்தினரின் சடலங்களையும் கைவிட்டு கடல் மூலம் ஓடித் தப்பிவிட்டார்கள்…”
இந்தச் செய்தியைக் கேள்விப்பட்டதும் தமிழீழ மண் ஒருகணம் துள்ளிக் குதித்தது.
ஒ…. அன்று குளக்கோட்ட மன்னனால் திருகோணமலையில் செதுக்கப்பட்ட கல்வெட்டின் தீர்க்கதரிசனம்inru நிதர்சனமாகி வருகின்றது…..
“முன்னே குளக்கோட்ட மன்னனால் திருகோணமலையில் செதுக்கப்பட்ட கல்வெட்டின் தீர்க்கதரிசனம் இன்று நிதர்சனமாகி வருகின்றது.
“முன்னே குளக்கோட்டன் மூட்டும் திருப்பணியை பின்னே பரங்கி பிரிக்கவே மன்னவ பின் பொண்ணாததனையியற்ற வழித் தெவித்து எண்ணாரே பின்னரசர்கள்….”
என்ற அடிப்படையைத் தொடர்ந்து வரும் அடியில்
“பறங்கிக்கண், பூனைக்கண், புகைக்கண், மான் கண் மாறிய பின்னே வடுகாய்விடும்…..” என்ற இந்த அடிகள் மூலம் போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர், சிங்களவா என அன்னிய ஆக்கிரமிப்பலர்க்ளின் ஆட்சிக்குள் சிக்குண்டு தவிக்கும் தமிழீழம் மீண்டும் இறுதியில், ‘வடுக்கா’ என குறிப்பிடும் தமிழர்கள் வசமாகும் அனக் குறிப்பிடப்பட்ட அந்தத் தீர்க்கதரிசனமான அந்தக் கோணேசர் கல்வெட்டு எங்கள் குனிந்த தலைகளை மீண்டும் நிமிரச் செய்யும்!
அப்பொழுது இன்று மீட்க்கப்பட்ட களிப்பில் மகிழ்ந்து நிற்கும் முல்லைத்தீவில் மட்டுமல்ல தமிழர் வாழும் தமிழீழம் எங்கும் எங்கள் புலிக்கொடி பறக்கும்! அவை வானில் பட்டொளி வீசி எங்கள் வீரத்தின் புகழ் பாடும்!!
– வல்வை ஆனந்தன்.
எரிமலை 1996 இதழிலிருந்து
Recent Comments