- முதல் பெண் மாவீரர் 2ம் லெப். மாலதி உட்பட்ட மாவீரர்களின் வீரவணக்க நாள்
- 2nd Lt Malathi – Ltte First Woman Martyr
- முதல் பெண் மாவீரரான 2ஆம் லெப். மாலதி வீரவணக்கம்
- தமிழீழப் பெண்களின் எழுச்சிக்கு வித்தாகி வீழ்ந்த விடுதலைச்சுடர்- 2ம் லெப்மாலதி
இலங்கை – இந்திய கூட்டுச்சதியை முறியடிக்க பலாலி படைத்தளத்தில் காவியமான லெப்.கேணல் குமரப்பா – லெப்.கேணல் புலேந்திரன் உட்பட்ட பன்னிரு வேங்கைகளின் 28ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.
தமிழீழக் கடற்பரப்பில் பயணித்தவேளை சிறிலங்கா கடற்படையால் பிடிக்கப்பட்டு பலாலி படைத்தளத்தில் வைக்கப்பட்டிருந்த இவர்களை கொழும்பிற்கு கொண்டு செல்வதற்கு சிறிலங்கா – இந்தியப் படைகள் மேற்கொண்டிருந்த கூட்டுச் சதியினை முறியடிக்க 05.10.1987 அன்று சயனைட் உட்கொண்டு
யாழ். மாவட்ட தளபதி லெப்.கேணல் குமரப்பா (பாலசுந்தரம் இரத்தினபாலன் – வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்.)
திருமலை மாவட்ட தளபதி லெப்.கேணல் புலேந்திரன் (குணநாயகம் தருமராசா – பாலையூற்று, திருகோணமலை.)
மேஜர் அப்துல்லா (கணபதிப்பிள்ளை நகுலகுமார் – சாவகச்சேரி, யாழ்ப்பாணம்.)
கப்டன் பழனி (பாலசுப்பிரமணியம் யோகேந்திரராசா – வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்.)
கப்டன் கரன் (வைத்திலிங்கம் மனோகரன் – சுண்டுக்குளி, யாழ்ப்பாணம்.)
கப்டன் மிரேஸ் (தவராஜா மோகனராஜா – வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்.)
கப்டன் நளன் (கணபதிப்பிளளை குணேந்திரராஜா – பருத்தித்துறை, யாழ்ப்பாணம்.)
லெப்டினன்ட் அன்பழகன் (தேசோமயானந்தம் உத்தமசிகாமணி – வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்.)
லெப்டினன்ட் தவக்குமார் (சோமசுந்தரம் பாக்கியராஜா – முள்ளியான், யாழ்ப்பாணம்.)
2ம் லெப்டினன்ட் ரெஜினோல்ட் (கபிரியேல் பேனாட் மரியநாயகம் – முள்ளியான், யாழ்ப்பாணம்.)
2ம் லெப்டினன்ட் ஆனந்தகுமார் (ஞானபிரகாசம் பிரான்சிஸ் அலோசியஸ் – மணற்காடு, யாழ்ப்பாணம்.) ஆகியோர் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர்.
இவர்களுடன் சயனைட் உட்கொண்ட நிலையில் மருத்துவமனைக் கொண்டு செல்லப்பட்டு பண்டுவம் அளிக்கப்பட்ட போது 06.10.1987 அன்று கப்டன் ரகுவப்பா
(இராஜமாணிக்கம் ரகுமான் – வல்வெட்டிதுறை, யாழ்ப்பாணம்.) வீரச்சாவைத் தழுவிக் கொண்டார்.
யாழ். மாவட்ட தளபதி லெப்.கேணல் குமரப்பா
தமிழர் தாயகப் பகுதிகளில் நிலை கொண்டிருந்த சிறிலங்கா படையினருக்கும், காவல்துறையினருக்கும் எதிராக மேற்கொள்ளப்பட்ட பல்வேறு தாக்குதல்களில் பங்கெடுத்து சிறிலங்கா படையிருக்கு பல்வேறு அழிவுகளை ஏற்படுத்தியிருந்தார். தமிழீழத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் சிறிலங்கா படையினருக்கு எதிரான தாக்குதல்களில் லெப்.கேணல் குமரப்பா அவர்கள் பங்கு கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
குமரப்பா அவர்களின் திறமையை அறிந்திருந்த தேசியத் தலைவர் அவர்கள் மட்டக்களப்பு மாவட்ட தளபதியாகவும், யாழ். மாவட்டத் தளபதியாகவும் நியமித்தார். தலைவர் அவர்கள் தன் மீது வைத்திருந்த நம்பிக்கையை தனது செயற்பாட்டின் மூலம் குமரப்பா அவர்கள் நிருப்பித்திருந்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் தளபதியாகவும். யாழ். மாவட்டத்தின் தளபதியாகவும் விளங்கிய காலத்தில் அந்தந்த மாவட்டங்களில் சிறிலங்கா படையினருக்கும், சிறிலங்கா காவல்துறையினருக்கும் எதிராக மேற்கொள்ளப்பட்ட பல்வேறு தாக்குதல்களில் லெப்.கேணல் குமரப்பா அவர்கள் ஈடுபட்டதுடன் அந்தந்த மாவட்டங்களில் விடுதலைப் புலிகள் அமைப்பினை உறுதியாகக் கட்டியமைக்க அயராது உழைத்தார்.
சிறிலங்கா – இந்திய உடன்படிக்கை காலப்பகுதியில் லெப்.கேணல் குமரப்பா அவர்கள் திருகோணமலை மாவட்டத் தளபதி லெப்.கேணல் புலேந்திரன் உட்பட்ட போராளிகளுடன் தமிழீழக் கடற்பரப்பில் பயணித்துக் கொண்டிருந்தவேளை சிறிலங்கா கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டு காங்கேசன்துறை படை முகாமிலும் பின்னர் பலாலி படைமுகாமிலும் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.
தடுத்து வைக்கப்பட்டிருந்த இவர்களை கொழும்பிற்குக் கொண்டு செல்வதற்கு சிறிலங்கா – இந்தியப் படைகள் மேற்கொண்ட சதியினை முறியடிப்பதற்காக சயனைட் உட்கொண்டு தம் இன்னுயிர்களை இவர்கள் ஈகம் செய்தனர்.
இந்திய சிறிலங்கா படைகளின் சதியினை அறிந்து கொண்ட லெப்.கேணல் குமரப்பா அவர்கள் தன்னை அழித்து கொள்வதற்கு முன்னர் தேசியத் தலைவர் அவர்களிற்கு எழுதிய மடல்:
கனம் தலைவர் அவர்களுக்கு,
குமரப்பா ஆகிய நான் 3.10.87 அன்று அதிகாலை 4.30 மணியளவில் சிறிலங்கா கடற்படையால் பருத்தித்துறை கடலுக்கு மேலாக வைத்துக் கைது செய்யப்பட்டேன். பின்பு காங்கேசன்துறை முகாமிற்கு கொண்டு வந்து, அங்கிருந்து பலாலி இராணுவ முகாமுக்கு இந்திய அமைதிப் படையினரின் கண்காணிப்பிலும், இலங்கை இராணுவத்தின் பாதுகாப்பிலும் இருக்கிறேன்.
மேலும் என்னை கொழும்பிற்குக் கொண்டு செல்ல நேரிடலாம். நான் இலங்கை அரசாங்கத்தின் சட்டங்களை அங்கீகரிக்கவில்லை. என்னைக் கொழும்பு கொண்டு செல்ல நேரும் பட்சத்தில் என்னை முழுமையாக அழித்துக் கொள்ள சித்தமாயுள்ளேன்.
”புலிகளின் தாகம் தமிழீழ தாயகம்”
திருமலை மாவட்ட தளபதி லெப்.கேணல் புலேந்திரன்
அன்பின் புலேந்திரன்,
தமிழ் மக்களின் பாதுகாப்புக்குத் தானே உத்தரவாதம் என்று எமது ஆயுதங்களைப் பெற்ற இந்தியா, நீ திருமலைக்குப் போவதற்குப் பாதுகாப்புக் கேட்டபோது இந்திய இராணுவத்திலுள்ள மேஜர் கருப்பசாமி உனக்குச் சொன்னார், “இன்றும் இல்லை, இனி எப்போதும் இல்லை” என்று. விடுதலைக்காகப் போரிடும் ஓரினம் தன்னைத் தானே நம்பியிருக்கவேண்டும் என்ற உண்மையைக் கருப்பசாமி வாயிலாக அன்று இந்தியா உணர்த்தியது. பின்னர் அதே செய்தி உனது மரணம் மூலம் ஊர்ஜிதப்படுத்தப்பட்டது.
உனது மரணம் தமிழீழத்தையே உலுக்கியது. மாபெரும் வரலாற்றுக் துரோகமல்லவா அது. தமிழீழ வரலாற்றில் உனது பெயர் அழியாஇடத்தைப் பெற்றதல்லவா? முதன் முதன் சிறீலங்கா இராணுவத்தினருக்கு எதிராக் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் (1981 இல் காங்கேசன்துறை வீதிச் சம்பவம் ) பங்கு பற்றியவர்களில் சீலன், ரஞ்சன் ஆகியோர் வீரச்சாவெய்திய பின் நீ தானே எஞ்சியிருந்தாய். கடைசியில் நம்பிக்கை துரோகத்துக்கல்லவா நீ பலியாகியிருக்கிறாய். தமிழீழ விடுதலைப் போரின் பல வரலாற்றுப் பதிவுகள் உனது வீரச்சாவால் ஸ்தம்பிதமாகிவிட்டனவே.
நான் இந்தியப் படைகளின் சிறையில் இருந்த காலத்தில் எனது மனைவி எனது மகளின் நிலையைப் பற்றி ஒரு செய்தி சொன்னாள். வீதியில் தமது தகப்பனுடன் செல்லும் குழந்தைகளை வெறித்தபடி பார்ப்பாளாம். தனது பார்வையிலிருந்து அவர்கள் மறையும் வரை வேறெதையும் பார்க்கமாட்டாளாம், பேசமாட்டாளாம், இச் செய்தியைக் கேட்டதும், தந்தை அருகில்லாதது ஒரு குழந்தைக்கு எப்படியான ஏக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. என்பதை உணர முடிகிறது. கூடவே உனது ஞாபகம் என்னை வாட்டியது. எனது மகள் என்றோ ஒருநாள் தனது தந்தையைக் கண்டவள். இனி மேலும் அந்த வாய்ப்புக் கிடைக்கலாம். ஆனால் உனது மகன் பிறக்கும்போதே ‘இன்னும் இல்லை இனி எப்போதும் இல்லை’ என்ற நிலையல்லவா ஒ…எவ்வளவு விலை கொடுத்திருக்கிறோம் எமது தாயக விடுதலைக்கு. கூடவே எம் இயக்கத்தின் சக்தியையும் கணக்கிட்டுக் கொள்கின்றேன். இதையெல்லாம் தாங்கும் வலிமையை எபப்டிப் பெற்றுக் கொண்டோமென்று .
இயக்க ரீதியாக என்பதை விட தனிப்பட்ட முறையிலும் எமது கிராமத்து மக்களின் இதயத்தைப் பொருத்தவரை நீ அவர்களது தத்துப்பிள்ளை பாடசாலை மாணவர்கள் என்ற போர்வையில் பொட்டுவின் வீட்டில் வாடகைக்கு குடியிருந்த அந்த நாட்களை நினைத்துக் கொள்கிறேன். மீள வருமா அந்த நாட்கள் “புலேந்திரன், புலேந்திரன்” என்று உருகி வழிந்தர்களே எனது கிராம மக்கள்! எங்கள் எல்லோருக்கும் இடையில் உன்னிடம் மட்டும் அப்படியென்ன சக்தியிருந்தது? விஷேசமான கறிகள் சமைத்தாலோ, கோயில் விஷேசங்களின் பிரசாதங்கள் என்றாலோ உனது பெயரைச் சொல்லி விசாரித்துக் கொண்டுவந்து ஒரு பங்கை தருவார்களே அது ஏன் ?
அந்தக் காலத்தில் எனது கிராமத்தில் நடந்த மரண ஊர்வலங்களில் பிரேதத்தைச் சுமக்கும் தோள்களில் ஒன்று உன்னுடையது. மங்கள காரியங்கள் நடைபெறும் வீடுகளில் அலங்கார வேலைகளுக்கிடையே உனது குரல் தனித்துக் கேட்கும். குடும்பத்தில் முரண்டு பிடிக்கும் இளைஞர்களுக்கெல்லாம் உனது வார்த்தைகள் நாணய கயிறு, மாலை நேரத்தில் சனசமூக நிலையை மைதானத்தில் நீ தான் உதைபந்தாட்டப் பயிற்சியாளன். அயலிலுள்ள மாணவர்களுக்கு இலவசக்கல்வி போதனையாளன். இன்னும் எத்தனை எத்தனை? இந்தச் சம்பவங்களையெல்லாம் எனது கிராம மக்கள் ஞாபகப்படுத்திச் சொல்கையில் அவர்களது கண்கள் கலங்கும். தொண்டை அடைத்துக் கொள்ளும். மீண்டும் பிறந்து வரமாட்டாயா? என்ற ஏக்கம் பிறக்கும்.
‘சுப்பர்சொனிக்’ அது தான் நாங்கள் உனக்கு இட்ட பட்டப் பெயர். எங்கும் எதிலும் வேகம் காட்டும் உனது போக்கு – மிதிவண்டி தொடங்கி எந்த வாகனத்திலும் உன்னுடன் நாம் வரப் பயப்படுவது உனது வேகத்தைப் பார்த்துதான். எங்கே பொய் அடிபட்டாலும் இறுதியில் நொண்டுவதும் நாங்கள் தான். நீ சிரித்தபடியே எழும்பி வருவாய் அப்படியான சர்ந்தப்பங்களில் ஒரு போதுமே நீ உனது தவறை ஒத்துக்கொள்வதில்லை “நானென்ன செய்யிறது திடீரெண்டு வந்திட்டான் – திடீரெண்டு வளைவு வந்திட்டுது” என்றெல்லாம் நீ சொல்லும் பொது நாங்கள் வழியை மறந்து சிரிப்போம். பயிற்சியின் போது ஒழுங்காகச் செய்வதற்காக நாங்கள் தண்டனை பெறும்போது நீ மேலதிகமாகச் செய்ததற்காகத் தண்டனை பெறுவாய். அந்த கடுமையான பயிற்சி முடிந்தும் நாங்கள் தரையில் கிடந்தது தத்தளிக்கும் போது நீயோ சிரித்தபடியே துள்ளித் திரிந்தாய் மீண்டும் வருமா அந்த நாட்கள்?
நாங்கள் செம்மணியிலிருந்து கொடிகாமம் வரை ஓடிப் பயிர்சியெடுப்பது எதுக்கு ஓடுகிறோம் என்று தெரியாமல் எமது கிராமத்து இளைஞர்கள் ” நாங்களும் வாறம் ” எனத் துணைக்கு ஓடி வருவது ” எந்த இடத்து றேசுக்கு ஓடிப்பழகுறீங்கள் ? ” என்று சாவகச்சேரி காவல் நிலையக் காவலர்கள் கேட்பது. இவற்றில் நான் எதை நினைப்பது? எதை மறப்பது அன்று எமது வியர்வையை தாங்கிக் கொண்ட அந்த வீதி அந்த வீதியால் செல்லும் பொது உதிரும் கண்ணீரையும் ஏற்றுக்கொள்கிறது. உனது மகன் வளரட்டும் இந்தப்பாதையெல்லாம் கூட்டிச் சென்று ” இதால தானடா கொப்பரும் நாங்களும் ஓடிப்பழகினது ” என்று காட்டுகிறேன்.
புலேந்திரன் நீ நடத்திய தாக்குதல்கள் ஒவ்வொன்றுமே சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தவை. சிறீலங்காவின் சகல படைகளுக்கு எதிராகவும் தாக்குதல் நடத்தியிருகிறாய். குடியேற்றம் மூலம் எனது பாரம்பரிய பிரதேசங்களைக் கபளீகரம் செய்ய முனைந்த சிங்களப் பேரினவாதிகளுக்கு நீ சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்தாய். அதனால் தான் உன்னை பணயமாக வைத்து தமது சிப்பாய்களைக் கேட்க முனைந்தது சிறீலங்கா அரசு. மணமாகி மூன்று மாதங்கள் உனது வரிசைச் சுமக்கும் உனது மனைவி இந்த நிலையிலும் அடிபணிய மறுத்தாய்.”சிறீலங்கா இராணுவத்தினர் யுத்தகாலத்தில் கைது செய்யப்பட்டவர்கள். நாம் சமாதான காலத்தில் கைது செய்யபப்ட்டவர்கள்” என்றாய். முடிவில் சயனைட் உட்கொண்ட நிலையிலும் கைகள், கால்கள் பற்களால் யுத்தம் நிகழ்த்தினாய்.
உனது உடலில் தெரிந்த காயங்கள் சிங்களப்படை உன்மீது எவ்வளவு ஆத்திரம் கொண்டு இருந்தது என்பதைப் புலப்படுத்தின.
“இந்தியா எமக்குச் செய்த பாவத்தைக் கழுவ புனித கங்கை நீர் போதாது” என்று ஒரு வரலாற்றறிஞர் குறிப்பிட்டதை நினைவு கூறுகின்றேன். திலீபனின் மரணம், உனது மரணம் எமது மக்களுக்கெதிரான போர் இவற்றைக் குறித்தே அவர் அவ்வாறு கூறினார்.
லெப் கேணல் புலேந்திரன் பற்றிய சில குறிப்புகள்…
விடுதலைப்புலிகளின் மத்தியகுழு உறுப்பினரான லெப் கேணல் புலேந்திரன் திருகோணமலை மாவட்டத் தளபதியாகவும் பொறுப்பு வகித்தார்.
இவர் பங்கேற்ற முக்கிய தாக்குதல்கள் :
* 15.10.1981 அன்று முதன்முதலாக சிறீலங்கா இராணுவத்தினர் மீதான தாக்குதலான யாழ். காங்கேசன்துறை வீதித் தாக்குதல்.
* 27.10.1983 அன்று சாவகச்சேரி பொலிஸ் நிலையத் தாக்குதல்.
* 18.02.1983 அன்று பருத்தித்துறையில் பொலிஸ் ‘ஜீப்’ மீதான தாக்குதல்.
* 29.04.1983 அன்று சாவகச்சேரி ஐக்கிய தேசியக்கட்சி வேட்பாளர் முத்தையா மீதான தாக்குதல்.
* 18.05.1983 அன்று கந்தர்மடம் தேர்தல் சாவடியில் சிறீலங்கா இராணுவத்தினர் மீதான தாக்குதல்.
* 23.07.1983 அன்று திருநெல்வேலித் தாக்குதல்.
* 18.12.1984 அன்று பதவியா – புல்மோட்டை வீதி சிரீபுரச் சந்தியில் சிறீலங்கா இராணுவத்தினர் மீதான தாக்குதல்.
* 09.01.1985 அன்று அச்சுவேலி சிறீலங்கா இராணுவ முருகைக்கு எதிராக நிகழ்ந்த தாக்குதல்.
* 14.02.1985 அன்று கொக்கிளாய் சிறீலங்கா இராணுவ முற்றுகைக்கு எதிராக நிகழ்ந்த தாக்குதல்.
* திருமலை – கிண்ணியா வீதியில் இராணுவத்தின் கவசவாகனம் மீதான தாக்குதல்.
* திருமலை – கிண்ணியா வீதியில் விமானப்படையினர் மீதான தாக்குதல்.
* முள்ளிப்பொத்தானை சிறீலங்கா இராணுவ முகாம் மீதான தாக்குதல்.
* பன்மதவாச்சி சிறீலங்கா இராணுவத்தினர் மீதான தாக்குதல்.
– தீருவில் தீ ( 05,10.1992 ) எனும் நூலிலிருந்து ….
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”
தமிழீழ தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிரை ஈந்த இந்த வீரமறவர்களிற்கு எமது வீரவணக்கங்கள். ஐப்பசி மாதம் வீரச்சாவைத் தழுவிய ஏனைய மாவீரர்களிற்கும் எமது வீரவணக்கங்கள்.
October 2nd
October 3rd
October 5th
October 6th
October 7th
October 9th
October 10th
October 11th
October 12th
October 13th
October 14th
October 17th
October 18th
October 19th
October 20th
October 21st
October 22nd
October 23rd
October 24th
October 25th
October 26th
October 29th
October 30th
October 31st
தமிழீழ தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிரை ஈந்த இந்த வீரமறவர்களிற்கு எமது வீரவணக்கங்கள். கார்த்திகை மாதம் வீரச்சாவைத் தழுவிய ஏனைய மாவீரர்களிற்கும் எமது வீரவணக்கங்கள்.
***
November 1st,
November 2nd
November 3rd
November 4th
November 5th
November 8th
November 9th
November 10th
November 11th
November 15th
November 16th
நெருப்பாற்றில் தீக்குளித்த தளபதி காள் பாடல் காணொளி
மாவீரர் நாள் வரலாற்றுப் பதிவுகள்
தலைவர் வே.பிரபாகரன் வரலாற்றுப் பதிவுகள்
தேசியத் தலைவர் வே.பிரபாகரன்/ leader V.Prabaharan
தேசியத் தலைவர் வே.பிரபாகரன் மாவீரர் நாள் ஒளிப்படங்கள் /Leader V.Prabakaran Maaveerar day Pictures
Leader V.Prabakaran wallpapers/ தேசியத் தலைவர் வே.பிரபாகரன் பின்னணி விம்பகம்
வரலாறு தந்த வல்லமை: பிரபாகரன் எங்கள் தேசியத்தின் ஆத்மா ஓர் இறைதத்துவம்
“பிரபாகரம் மறையாது” அது “அகிலம் எங்கும் வியாபிக்கும்” வரலாற்றின் ஓர் உண்மை
காலம் எழுதிய வரிகளில்…!
இந்திய ராணுவம் ஈழமண்ணுக்குத் தந்து சென்ற வடுக்கள் எங்கள் மனங்களில் நூற்றாண்டுகள் போனாலும் கரையாத துயரங்கள்; அவை. ஓவ்வொரு ஊருக்குள்ளும் ஒரு குடும்பமேனும் இந்தியப் படைகளால் சிதைவுற்ற கதைகளைச் சுமந்து கிடக்கிறது வரலாறு. அந்தக் கொடிய நாட்களில் எங்கள் ஊர்களில் தலைமறைவு வாழ்வு வாழ்ந்த புலிவீரர்கள் பலரது கதைகளையும் காலம் மௌனமாகச் சுமந்து கொண்டு நகர்கிறது.
1989ம் ஆண்டின் ஓரிரவு எங்கள் வீடுகளில் அத்துமீறி நுளைந்து நிரந்தரமாய் எங்களோடு உறவாகி நினைவுள்ளவரை தங்கள் ஞாபகங்களைத் தந்து சென்றவர்களுள் கப்டன் றவியண்ணாவும் ஒருவர்.
ஊரில் உலாவிய போராளிகளுள் றவியண்ணா வித்தியாசமான போராளி. அமைதியென்றால் அது றவியண்ணாதான். அதிகம் கதையில்லை அலட்டலில்லை. அத்திபூத்தாற்போல ஏதாவது பகிடிகள் அப்படித்தான் அவரது சுபாவம். எப்போதுமே எதையோ கடுமையாய் யோசிக்கிறவர் போலவே இருப்பார். தனக்கு ஏதாவது தேவையென்றாலும் உடனே கேட்கிற பழக்கமில்லை. சாப்பாடென்றாலென்ன தேனீரென்றாலென்ன கையில் கொடுத்தால் மட்டுமே வாங்குவார்.
அமைதியான அந்த முகமும் மெல்லவே கதைக்கிற அந்தக் குரலும் ஒரு வித்தியாசமான போராளியை எங்கள் ஊரில் உலாவ வைத்தது. அமைதியே உருவான அந்த உருவம் கருணையே வடிவான அந்தக் கண்கள் எப்போதும் தனது இலட்சியக்கனவையும் ஈழத்தின் விடியலையுமே கண்களில் சுமந்து திரிந்தது.
சிலரை வருடக்கணக்காகச் சந்தித்திருப்போம் பழகுவோம். ஆனால் அவர்கள் மீதான கரிசனை அல்லது பாசம் ஒரு வழிப்போக்கரை சந்தித்தது போலவே இருக்கும். சிலர் காரணம் சொல்ல முடியாதபடி அவர்களுடனான பரிச்சயம் , உறவு சிலநாளாகவோ அல்லது சிலகாலங்களாகவோ இருக்கும் ஆனால் நெஞ்சுக்குள் நிரந்தரமாய் இடம்பிடித்து விடுவார்கள். எங்கள் வாழ்வின் நீளத்தில் அவர்களது நினைவும் அன்பும் தொடர்ந்து கொண்டேயிருக்கும். அதுபோலவே றவியண்ணாவின் அமைதியும் எதையும் தனக்காக கேட்டுப் பெறாத குணமும் எல்லோரையும்விட றவியண்ணா மீதான அன்பை அதிகமாயிருந்தது.
வீட்டில் சமைக்கப்படுகிற சிறப்பான உணவுப்பண்டம் வரை ஒரு பங்கு றவியண்ணாவுக்காகக் காத்திருக்கும். அந்த அமைதியான மனிதனைக் காலம் பிரித்துவிடாதிருக்க சாமியிடம் பிரார்த்தனை சத்தமில்லாத் தொடராய்…..! ஒருநாள் றவியண்ணா வராது போனாலும் றவியண்ணாவைத் தேடும் கண்கள். ரவியண்ணா எப்போதும் சாய்ந்திருக்கும் இலுப்பைமரம் கூட அந்த இலட்சிய வீரனை இதயத்தில் சுமந்திருந்தது. அந்து வீரன் எல்லா உயிர்களிடத்தும் செலுத்திய அன்பின் சாட்சியாய் இயற்கை கூட றவியண்ணாவுக்காய் காத்திருந்தது.
ஓவ்வொரு போராளியும் ஏதாவதொரு பொருளை அல்லது தனது நினைவை மறக்காதிருக்க ஏதாவதொன்றை விட்டுச் சென்றது போல றவியண்ணாவும் விட்டுச் சென்ற ஞாபகங்கள் ஏராளம். அதில் ஒன்று றவியண்ணா எப்போதும் விரும்பிக் கேட்கும் பாடல் ‘ஓ மரணித்த வீரனே’. இந்தப்பாடல் தியாகி.திலீபன் அவர்கள் மரணித்த நல்லூர் வீதியில் தியாகி திலீபன் அவர்களது அஞ்சலி நிகழ்வில் அதிகம் ஒலிக்கவிடப்பட்ட பாடல். அதையே றவியண்ணாவும் அடிக்கடி விரும்பிக் கேட்பார். சிறப்பான காரணம் ஏதாவது உண்டா என்பதை றவியண்ணா யாரோடும் பகிர்ந்து கொள்ளவில்லை. எதைக் கேட்டாலும் ஒரு புன்னகையால் சொல்லிவிடுகிற அல்லது மறைத்துவிடுகிற வல்லமையைக் கொண்டிருந்த அந்த விழுதின் நினைவுகளை எழுதிவிட சொல்லிவிட காலத்தாலும் முடியாத கதைகளை அந்த அமைதியான மனிதன் கொண்டிருந்தது அதிசயம்தான்.
வோக்கி ரோக்கியையும் தனது துப்பாக்கியையும் எங்கேயிருந்தாலும் கழற்றியதையே காணவில்லை. வோக்கி ரோக்கி இரைச்சலோடு குரல்கள் வரும். மாமரத்தில் அல்லது ஏதாவதொரு உயரத்தில் ஏறிநின்று கதைக்கிற போது மட்டுமே வோக்கியை கையில் எடுப்பார்.
துவக்குத் தவறி வெடிச்சா என்ன செய்வீங்கள் ? ஒருநாள் கேட்ட போது அந்த ஆயுதத்தின் பெறுமதியையும் அதன் தேவையையும் வளமை போல அமைதியான சிரிப்போடு ஒரு கதையாகவே சொல்லி முடித்தார். ஒரு ரவையும் ஒரு கைக்குண்டும் எத்தனை பெறுமதியானவை என்பதனை றவியண்ணா சொல்லும் வரை அறிந்திருக்கவில்லை. அப்படி எல்லாவற்றிலும் நிதானமும் கவனமும் மிக்க ஒரு அற்புத மனிதன்.
தனது சொத்துக்களாக வைத்திருந்த சில உடுப்புக்களோடு ஒரு நாட்குறிப்புப் புத்தகம் சிவப்பு, நீலம் றொனோட் பேனாக்கள் , சில புத்தகங்கள் , சில ஒலிநாடாக்கள். சின்னம்மான் வளவுப் பெரிய பெரியபுளிமரத்தடியில் அந்தப்புத்தகங்களில் எதையாவது வாசித்துக் கொண்டிருப்பார்.
சக போராளிகள் ஆளாளுக்கு அடிபட்டு கும்மாளமடிப்பார்கள் அமைதியாகச் சிரித்தபடி எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருப்பார். சிலர் பகிடிச்சண்டைகளில் கோபித்து ஆளையாய் பார்க்காமல் பேசாமல் இருந்ததைக் கண்டிருக்கிறேன் ஆனால் றவியண்ணா அப்படி யாருடனும் கோபித்துக் கதைக்காமல் இருந்ததைக் கண்டதே நினைவில் இல்லை.
ஒரு மழைநாள். பிள்ளையார் கோவில் வீதியிலிருந்து பஞ்சுமாமா வீடுவரை வெள்ளம். பெஞ்சன் வடலிப் பற்றைகளில் இருந்த கொம்பேறி மூக்கன் பாம்பு வெள்ளத்தில் இருக்கிறதென்று வதனிமாமி சொல்லியிருந்தா. ரியூசன் முடிஞ்சு பிள்ளையார் கோவில் மடத்தடி வரையும் போய் அதனைத் தாண்டிப்போகப் பயத்தில் கொஞ்சம் முன்னே போவதும் பின்னே நிற்பதுமாக நிற்க ஜீன்சை முளங்காலளவு மடித்துவிட்டு நடந்து வந்தார் றவியண்ணா. என்ன பாம்பு வருமாமோ ? எல்லா வீரமும் போய் பாம்புதான் காலைச்சுற்றும் போலிருக்க அந்தப் புலிவீரன் அதெல்லாம் சும்மா வாங்கோ நான் வாறன் என வந்தது இன்றும் நினைவில் நிற்கிறது.
வதனிமாமி சொன்ன கொம்பேறிமூக்கன் பாம்பு பின்னர் ஒருநாள்; நல்லாரப்பாவால் அடிக்கப்பட்டு ஒன்றரை மீற்றர் நீளமான பெரிய உருப்படியான அந்தப் பாம்பை பெஞ்சன் வடலி இலுப்பைக்கு மேற்கு வேலிக்கரையை அண்டியிருந்த முட்கிழுவையில் கட்டித் தொங்கவிடப்பட்டிருந்தது. அந்த வீதியால் நடந்து வந்தால் சுற்றிப் பார்த்துவிட்டு வேகமெடுக்கிற ஓட்டத்தையும் சயிக்கிளையும் பார்த்து அதேயிடத்தால் எந்தப்பயமும் இல்லாமல் சென்று வரும் றவியண்ணா சொல்லுவார். செத்தபாம்பு உயிர்க்காது….!
இப்படிப் பல நினைவுகள் றவியண்ணா பற்றி….! பயத்தையகற்றிய பாரதியாய் தன் பார்வையால் , சிரிப்பால் , தன் பேச்சால் தந்த துணிச்சலை என்றும் மறக்க முடியாத மனிதனாய் எங்கள் ஊருக்குள் உலவிய றவியண்ணாவும் அவரது தோழர்களும் ஒருநாள் எங்கள் ஊரைவிட்டுப் போனார்கள்.
போகும் போது ஒவ்வொருவரிடமிருந்தும் கிடைத்த நினைவுப் பொருட்களில் ஒன்று றவியண்ணா போட்டிருந்த கறுப்பு பிளாஸ்டிக்காப்பு. எல்லோரோடும் அமைதியாகவே போனார் றவியண்ணா. சொல்லில் வடிக்க முடியாத துயரை அந்தப்பிரிவு தந்து போனது. ஊரே வெறிச்சுப் போனது போல அதற்குப் பிறகு வந்த நாட்கள் அவர்களில்லாமல் கலகலப்பை இழந்த உணர்வு.
திரும்பி வருவேன் எனச்சொல்லிப் போனவர்களுள் சிலர் மட்டுமே வந்து போனார்கள். றவியண்ணா எங்களிடம் வரவில்லை. 2ம் கட்ட ஈழப்போர் ஆரம்பித்த காலமது. காற்றில் பறந்துவிடுமாப்போல அந்த மெல்லிய உருவம் அணிகிற சேட்டிற்குள் ஆயிரம் கிலோ காற்றை அடைத்துவிட்டது போல காற்றள்ளி நிற்க , காங்கேசன்துறையிலிருந்து யாழ் செல்லும் வீதியில் சில தடவைகள் வேகமாய் ஓடும் மோட்டார் சயிக்கிளின் சாரதியாய் யாரோ ஒரு போராளியை ஏற்றியபடி அல்லது தனியாகப் போனதைக் கண்டிருக்கிறேன். இன்னும் உங்களையெல்லாம் மறக்கவில்லையென்பதைச் சொல்லுமாப் போல ஒரு பன்னகை , ஒரு கையசைப்பு அதுவே றவியண்ணாவின் அன்பின் வெளிப்பாடாக அமையும்.
அப்போதெல்லாம் புலனாய்வுப்பிரிவு என்பதன் அர்த்தமே புரியாது. ஆனால் றவியண்ணா ஒரு புலனாய்வுப்போராளியென்றும் அவர் புலனாய்வுப்பணியில் இருப்பதாகவும் சொல்லப்பட்டது.
புலனாய்வாளனுக்குரிய அனைத்துத் திறமைகளையும் அந்த வீரன் தனக்குள் ஒளித்து வைத்திருந்த திறமைகளை வெளியார் யாருமே காணாது காத்து ரவியண்ணா படைத்த வெற்றிகளை சாதனைகள் பலவென்று சொல்வார்கள். சாதனைப்புலியொன்று சத்தமில்லாமல் எங்களோடு வாழ்ந்து எங்கள் ஊரோடு உறவாடி எங்களைப் பிரிந்து போனது ஒரு பொழுது…..!
காற்றள்ளிக் கொண்டு போகும் வேகத்தில் போகும் றவியண்ணாவின் மோட்டார் சயிக்கிளில் றவியண்ணாவைக் கொண்டு போன காலத்தின் சதி நடந்த தினம் 02.09.1990. அன்று றவியண்ணாவின் கதையை அவர் ஓடித்திரிந்த மோட்டார் சயிக்கிளில் வந்தே காலன் முடித்து வைத்தான். கப்டன்.ரவியாக எங்கள் ரவியண்ணா இரத்தத்தில் தோய்ந்து மரணித்துப் போனார்.
றவியண்ணாவின் போராளித் தோழனொருவனே அந்தத்துயரச் சேதியைச் சொல்லிவிட்டுப் போனான். சாவின் வலியை எங்களின் குடும்பத்தில் ஒரு உறவாய் அண்ணாவென்றழைக்கும் உரிமையைத் தந்த அந்த மாமனிதனை இழந்த துயரத்தை கண்ணீரால் கரைத்த துயரம் இன்றும் அந்த மாவீரனை மனக்கண் முன்னே நிறுத்தி வைத்திருக்கிறது.
தாயகக்கனவோடு தமிழின விடுதலைக்காகவே ஓயாது உழைத்த அமைதியே உருவான றவியண்ணாவின் மூச்சுக்காற்று அதே கனவோடு எங்கள் மனங்களிலும் தாயக மண்ணோடும் கலந்து போனது.
தையிட்டி மண்ணில் திரு.திருமதி.மாசிலாமணி தம்பதிகளின் மடியில் தவழ்ந்த ரவீந்திரன் என்ற குழந்தையை ஈழ விடுதலைப் போராட்டம் ஒரு புலனாய்வுப்போராளியாய் ஒரு சிறந்த போராளியாய் எமக்குத் தந்து ஈழவரலாற்றில் கப்டன் ரவி என்ற கௌரவத்தோடு பதிவு செய்து கொண்டது.
2003இல் ஊர் போன போது றவியண்ணா அதிகம் நடந்த எங்கள் பிள்ளையார் கோவில் மேற்கு வீதியால் நடந்து நான் பிறந்த வீட்டைப் பார்க்கப் போனேன். பெரிய வாகனம் போகும் அளவு பெரிய வீதி ஒன்றையடிப் பாதையாய் ஒடுங்கியிருந்தது. றவியண்ணா , றோயண்ணா , நெல்சம்மான் , அப்பாண்ணாவென பல போராளிகள் உலாவிய அந்தத் தெரு பற்றைகளாலும் மதிவெடிகளாலும் நிறைந்திருந்தது.
கனவுகளில் பிள்ளையார் மேற்குவீதி கண்ணில் தெரிகிற போது றவியண்ணாவும் அந்த வீதியில் வருவது போலவே பலமுறை கனவுகள் வந்திருக்கிறது. காலம் எங்கள் றவியண்ணாவையும் மறக்காமல் தன்னோடு கொண்டு செல்வதை அந்த வீதியில் மிஞ்சியிருந்த எச்சங்கள் நினைவுபடுத்திக் கொண்டிருந்தது.
காலம் 2003…,ஆடிமாதம்…..,
வன்னியில் மாவீரர்களின் நிழற்படங்கள் அவர்களது ஞாபகங்கள் தரும் பொக்கிசங்கள் சேமிக்கப்பட்டிருக்கும் ஆவணங்களின் காப்பகத்திற்குச் சென்ற போது பலரது படங்கள் கேட்டிருந்தேன். நெடுநாள் தேடிய கிடைத்தற்கரிய ஒரு பொக்கிசம் போல ஒரு போராளியிடமிருந்து ஒரு தொகை மாவீரர்களின் படங்கள் கிடைத்தது. 1981 – 2002 வரையில் புலனாய்வுத்துறையில் வீரச்சாவடைந்த மாவீரர்களின் படங்கள் யாவையும் ஆவணப்படுத்துமாறு ஒரு போராளித் தோழன் இறுவட்டுக்களில் பதிவு செய்து தந்தான்.
கிடைத்த படங்களை ஒருமுறை பார்த்துவிடும் ஆவலில் சிலவேளை நான் தேடுகிற படங்கள் அதில் பதிவாகியிருக்கலாமென்ற நம்பிக்கையில் அந்தத் தோழனின் மடிக்கணணியை வாங்கி அதில் ஆண்டுவாரியாகத் தேடினேன். நம்பிக்கை பொய்க்காது றவியண்ணாவின் படமும் அந்த இறுவட்டில் பதிவாகியிருந்தது. மீண்டும் றவியண்ணாவை கண்ட மகிழ்ச்சியின் வெளிப்பாடாக கண்களிலிருந்து வழிந்த கண்ணீர்த் துளிகளில் றவியண்ணா மீண்டும் பிறந்து வந்திருப்பது போல ஓர் சந்தோசம்….!
வருடாவருடம் றவியண்ணாவின் பிறந்தநாள் , நினைவுநாள் ,மாவீரர்நாள் நாட்களில் நினைவுகளைத் தந்து சென்ற பலரது படங்களோடு றவியண்ணாவின் படத்தின் முன்னாலும் ஒரு மெழுகுவர்த்தி எரிந்தபடியிருக்கிறது.
– சாந்தி ரமேஷ்.
கால்கள் மணலிற்குள்ளால் நடந்து கொண்டிருந்தாலும் மனம் இப்போதும் கடலிற்குள்ளேயே நின்று கொண்டிருந்தது. கடலின் கரையைத் தொட்டுவிட ஒவ்வொரு அலையும் துடித்துக் கொண்டிருந்தது. இந்த அலைகளைப் போலவே இலட்சியத் துடிப்புடன் போராடி மடிந்த நிரோஜனின் நினைவுகள் தான் ஒன்றன் பின் ஒன்றாக எங்களது நெஞ்சில் அழியாத தடங்களாக பதிந்திருக்கின்றன.
கடல்நீரும் துள்ளியெழும் அலைகளும் ஒரு பொழுதில் வாய் திறந்து பேசுமானால் இவனைப் பற்றி, இவன் சாதனைகளைப் பற்றி, இவன் இறுதியாய் எப்படி மடிந்தான் எனபது பற்றி தெளிவாகச் சொல்லியிருக்கும். ஆனால் அவை இப்போது மௌனமாய் இருப்பதால் அந்தப் பணியை எனJ எழுதுகோல் ஏற்றுக்கொள்கிறது. தமிழீழத்தின் கடல்நீரை உங்கள் கரங்களால் தொடும்போது அந்த நீருக்குள்ளும் இந்த நிரோஜனின் கதையிருக்கும்.
1990ல் இயக்கத்தில் இணைந்து கொண்ட அவனின் கடற்பயணம் 1992ல் ஆரம்பிக்கின்றது. அன்றிலிருந்து அவனுக்கும் இந்தத் தமிழீழக் கடலுக்கும் நெருங்கிய உறவு. அவன் புதியவனாக கடற்புலிகள் அணியில் இணைந்து கொண்டாலும் குறுகிய நாட்களுக்குள்ளேயே கடலில் நீண்டகால அனுபவமுள்ளவனைப்போல கடலின் நுட்பங்களைத் திறமையாக அறிந்திருந்தான். அந்த நாட்களில் அவனின் கடற்போரின் திறமையை வெளிக்கொண்டுவந்த அந்தத் தாக்குதல் நடைபெற்றது.
அது ஒரு சிறிய படகு. அந்தச் சிறிய படகில்தான் நிரோஜனின் கடல்வழி வழங்கல் நடைபெற்றுக்கொண்டிருந்தது. அன்று அந்தப் படகில் தரைப்படைத் தளபதி ஒருவரை ஏற்றியபடி நிரோஜன் படகை ஓட்டிக்கொண்டிருந்தான். அந்த இரவின் இருளில் சடுதியாக ஏற்பட்டது அந்த வெளிச்சம். தளபதியால் இப்போது என்ன செய்வதென்றே புரியாத போதிலும் நிரோஜன் நிதானமாகப் படகை ஓட்டிக்கொண்டிருந்தான். அது டோறாப் படகு என்பதைத் தெளிவாக அவனால் புரிந்து கொள்ள முடிந்தது. ஒரு டோறாப் படகின் அயுதபலமும், நிரோஜனின் அந்த சிறிய படகின் ஆயுதபலமம் ஒப்பிட முடியாதது. ஆனாலும் அந்தக் கடலின் சாதகங்களை அறிந்து, சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி சில சிங்களப் படையினரைக் கொன்றதுடன் அந்தத் தளபதியையும் பத்திரமாக கரைசேர்த்தான். கடற்புலிகளில் அவனது திறமை வெளிப்படுவதற்கு தொடக்கமாய் இருந்தது அந்தத் தாக்குதல்தான். அதன்பின் அவன் தீயில் சங்கமிக்கும் வரை கடலில் கடற்புலிகள் சந்தித்த முக்கிய போர்களில் எல்லாம் அவன் கலந்து கொள்ளாததென்று எதுவுமேயில்லை.
1996ம் ஆண்டு ஒக்டோபரில் ஒரு நாளின் அதிகாலைப் பொழுது சுண்டிக்குளத்திலிருந்து கடற்புலிகளின் முகாமினை நோக்கி சிறிலங்கா வான்படை உலங்குவானூர்திகளும், கடற்கலங்களும், நெருங்குகின்றன. அங்கே கடற்புலிகளுக்கும் சிறிலங்காவின் தரை, கடற்படைகளுக்குமிடையே சண்டை மூண்டது. அந்தத் தாக்குதலைத் திட்டமிட்டது சிங்களப்படை. அந்தத் திட்டத்தின்படி வெற்றி அவர்களுக்கே. ஆனால் அங்கு நடந்தது அதுவல்ல. சேதத்துடன் சிங்களம் தப்பியோடிக் கொண்டது. ஆனாலும் நிரோஜனின் மனதில் நீண்ட கோபத்தை எதிரி மீது ஏற்படுத்தியது. எங்களது வாசல் தேடிவரும் அளவிற்கும் சிங்களம் துணிந்தமை அவனுக்கு சினத்தை ஏற்படுத்தியது. அவன் மனம் கொந்தளித்துக்கொண்டிருந்தது. இதற்குப் பதிலடி கொடுத்தே ஆகவேண்டும். சிங்கம் புலியைத் தாக்குவதற்கு புலியின் குகையைத் தேடிவந்தது. இப்போது சிங்கத்தின்குகையை நோக்கி புலி சென்று கொண்டிருந்தது.
திருகோணமலைத் துறைமுகத்தைத் நோக்கி கட்டளைப் படகில் நிரோஜன் கடற்புலிகள் அணியை வழிநடத்திக் கொண்டு முன்னகர்ந்து கொண்டிருந்தான். அவனுக்கு துணையாக தாக்குற் படகுகளும், கரும்புலிப் படகுகளும் சென்று கொண்டிருந்தன. அது திருகோணமலைத் துறைமுகத்தின் வாசல், அங்கே துறைமுகத்திலிருந்து டோறாக்கள் சண்டைக்குத் தயாராக வெளியே வந்தன. கடலில் தமக்குச் சாதகமான பகுதியில் கடற்புலிகளின் படகுகள் வியூகமைத்துக் கொள்ளச் சண்டை இப்போது பலமாக நடந்து கொண்டிருந்தது.
நிரோஜன் கட்டளைகளை வழங்கிக்கொண்டு எங்களது படகுகளின் வியூகங்களை மாற்றிமாற்றிச் சண்டை பிடித்தான். கரும்புலிப் படகுகளால் தாக்குதவற்குச் சந்தர்ப்பத்தை எதிர்பார்த்தவன் இப்போது அந்த கரும்புலிப் படகை டோறா ஒன்றின் மீது குறிவைத்து நகர்த்தினான். அது டோறா மீது மோதி வெடிக்க டோறா கடல் நீரின்மேல் செயலற்று நின்றது. நிரோஜனின் கட்டளைப்படகு அந்த டோறாவை நெருங்கியதும், நிரோஜன் அந்த டோறாவில் பாய்ந்து ஏறிக்கொண்டான். அந்தப் படகின் பிரதான சுடுகலனான 20 மி.மீ. கனரக ஆயுதத்தை துரிதாகமாக கழற்ற முற்பட்டான். டோறா கடல்நீரில் அமிழ்ந்து கொண்டிருந்தது. நிரோஜனுக்கு அந்த ஆயுதத்தைதக் கையாண்ட பயிற்சி இல்லாதபோதும் டோறாப் படகு தாழுவதற்குள் அதைக் கழற்றி விட வேகமாக இயங்கினான். அந்த கனரக ஆயுதத்தின் சுடுகுழல் இப்போது அவனது கைகளில் இருந்தது. இதேநேரம் மற்றொரு டோறாப்படகு சேதமடைந்த டோறாவைக் குறிவைக்க நிரோஜனின் கட்டளைப் படகு மறுபக்கத்தால் திரும்பி அந்த டோறாவைத் தாக்க, நிரோஜன் அந்தக் கனமான சுடுகுழலுடன் கடலிற்குள்ளால் நீந்தினான் அதன் சுமை அவன் உடலைக் கடலிற்குள் அமிழ்த்தினாலும் அதைக் கைவிடாது நீந்திப் படகேறினான். சிங்கத்தை அதன் குகையில சந்தித்து தாக்கிய திருப்பியுடன் புலி தளம் திரும்பிக் கொண்டிருந்தது.
இப்போது தமிழீழ விடுதலைப் புலிகள் என்னும் தமிழர் தேசியப் படையின் கடற்படைத் துணைத் தளபதி அவன். அந்தப் பணியைப் பொறுப்பேற்றதிலிருந்தே தமிழீழக் கடற்பரப்பில் சிங்களக் கடற்படையின் பலத்தை சிதைக்கும் தாக்குதல்களை மேற்கொள்வதும், கடல் மூலமான வழங்கற் பணிகளை மேற்கொள்வதும்தான் அவனது நோக்கமாக இருந்தது. அவன் தரையில் கழித்த நாட்களைவிட கடலிற்குள் கழித்த நாட்கள்தான் அதன்பின் அதிகமாக இருந்தது.
கடலில் வழங்கற் பணியை மேற்கொள்ளும் போது சிங்களக் கடற்படையின் டோறாக்கள் விநியோகப் படகுகளை வழிமறிக்கும். அந்தச் சந்தர்பங்களிலில் எல்லாம் குறைந்த படகுகளை வைத்து எதிரியின் கூடிய படகுகளைத் தடுத்து வைத்துத் தாக்குதல்களை மேற்கொள்வதில் வல்லவன் நிரோஜன்.
இப்படித்தான் ஒரு சந்தர்ப்பத்தில் வழங்கற் பணிகளை மேற்கொண்ட படகுகள் சிங்களக் கடற்படையின் தாக்குதலிற்குள்ளானபோது 50 கடல் மைல்களிலிருந்து நிரோஜனின் இரு படகுகள் அந்தக் கடற்களத்தை நோக்கி விரைகின்றன. இடையில் அந்த இரு படகுகளையும் ஏழு டோறாக்கள் வழிமறிக்கின்றன. இப்போது நிரோஜன் அந்த கடற்சூழலுக்கு ஏற்றவாறு டோறாக்களை எதிர்கொள்ளத் தயாராகிறான். ‘மயூரன்” படகு நான்கு டோறாக்களை எதிர்கொள்ள ‘தேன்மொழி” படகு மூன்று டோறாக்களை எதிர் கொள்கிறது.
அங்கே அந்த சிறிய படகுகள் இரண்டும் அந்த ஏழு டோறாக்களுக்கும் போக்குக் காட்டி முன்னேறிக் கொண்டிருந்தன. இறுதியாக அந்த வழங்கற் படகுகளை மீட்டுக்கொண்டு தளம் திரும்பின கடற்புலிப் படகுகள்.
இப்படித்தான் எமது படகுகளின் பலம் குறைவானபோதும் நிரோஜனின் நிதானமானதும், சாதுரியமானதும் உறுதியானதுமான கட்டளைகள் எதிரியின் திட்டங்களைச் சிதறடிப்பதுடன் கடற்புலிகளின் பணியைச் சரிவர மேற்கொள்ளவும் வழிசமைத்துக் கொண்டிருந்தது.
இந்த நாட்களில்தான் சிறிலங்காவின் அமைச்சர் ஒருவர் “யாழ்ப்பணத்தில் உள்ள இராணுவத்திற்கு கடல்வழி மூலமான வழங்கலே பலமாக உள்ளது” என்று தெரிவித்தார். இது நிரோஜனின் காதுகளிற்கு எட்டியதுமே சிறிலங்கா கடற்படைக்குத் தகுந்த பாடம் புகட்ட வேண்டுமென முடிவெடுத்துக்கொண்டான். அடுத்து வந்த காலத்தில் ஒருநாள் யாழ்ப்பாணத்தை நோக்கி சிறிலங்கா கடற்படையின் கப்பற்தொகுதி ஒன்று சென்றுகொண்டிருந்தது. அந்த கப்பற்தொகுதி முல்லைக்கடற்பரப்பைத் தாண்டிக்கொண்டிருக்கும் போது நிரோஜனின் கட்டளைக்குக் கீழ் கடற்புலிப்படகுகள் களமிறங்கின.
மூன்று சண்டைப்படகுகளும், இரண்டு கரும்புலிப் படகுகளும் அலைகளை ஊடறுத்து மேல்நோக்கிச் சென்று அந்தக் கப்பற் தொகுதியை மேவி வந்து கொண்டிருந்தன. ஆனால் அன்றைய நாளில் எங்களது படகுகளின் பலத்தைவிட பன்மடங்கு அதிகரித்திருந்தது எதிரியின் பலம். ஆறு டோறாக்களும், நான்கு படகுகளையும் பாதுகாப்பு வழங்க வலம்புரிக் கப்பலும், பபதாக் கப்பலும் அதனுடன் சேர்ந்து ஒரு தரையிறங்கு கலமும் சென்று கொண்டிருந்தன. எதிரியின் பலத்திற்கு மிகக் குறைவான ஆயுதபலமும், கடற்கலங்களின் பலமும் இருந்தபோதும் அசாத்தியமான துணிச்சலும், சண்டையை வழிநடத்தும் தளபதியின் திட்டலும் எங்கள் பக்கத்தில் அதிகமாயிருந்தது.
இப்போது எதிரியின் கப்பற்தொகுதியை இலக்கு வைத்து பின்தொடர்ந்தன கடற்புலிப்படகுகள். ஆனால் எதிரியிடம் அத்தனை பலமிருந்தபோது அவை சண்டை பிடிக்கப் பயந்து வேகமாகச் சென்று கொண்டிருந்தன. நிரோஜன் கட்டளைகளை வழங்க அந்த கப்பல்களை நோக்கி படகுகள் நெருங்கிச் சென்றன. எங்கள் கடற்தளபதியின் வியூக அமைப்பிற்கு ஏற்றவாறு படகுகள் எதிரியின் கப்பற் தொகுதியை நெருங்கியதும் கடற்புலிகள் தாக்குதலை தொடக்கி வைத்தனர். அவை அப்போதும் தொடர்ந்து கொண்டிருந்ததால் முற்றிலும் சாதகமற்றும், எதிரியின் வலயத்திற்குள்ளும் சென்றன கடற்புலிகள் படகுகள்.
பருத்தித்துறைக்கு நேரே நடுக்கடலில் கடுமையாகச் சண்டை நடத்து கொண்டிருந்தது. கரையிலிருந்து நீண்டதூரம் சென்று விட்டதால் முற்றுமுழுதாகவே கடற்புலிகளின் சிறப்புத் தளபதியுடன் தொடர்பு துண்டிக்கப்பட களத்தில் நின்றபடியே சண்டையை வழிநடத்தினான் நிரோஜன். உயர்ந்து எழுந்து வீழும் அலைகளுக்குள் நிதானமாக நிற்க முடியாத படகிற்குள் நின்று கொண்டும், சீறிவரும் துப்பாக்கிக் குண்டுகளுக்கு முகம் கொடுத்தும், நிதானமிழக்காது தெளிவாக கட்டளை பிறப்பித்தபடி அங்கிருந்த மூன்று சண்டைப்படகுகளுக்குள் ஒன்றில் நின்றான் நிரோஜன்.
அன்று எதரியின் கப்பல்களை அழிக்காது தளம் திரும்புவதில்லையென்று உறுதியெடுத்து அவன் தன் தோழர்களுடன் சேர்ந்து சமரிட்டுக் கொண்டிருந்தான். இறுதியாக எதரியின் சுற்றிலிருந்த பாதுகாப்பு கலங்களை ஊடறுத்து ‘பபதா” கப்பல் மீதும், ‘வலம்புரி” க் கப்பல்மீதும் கரும்புலிப் படகுகள் மோதி வெடிக்க அவை எரிந்தபடியே கடலில் அமிழ்ந்து கொண்டிருந்தன. அந்த நிறைவுடன் எதிரியின் முற்றுகைக்குள் இருந்த கடல் எல்லைக்குள்ளிருந்து வெற்றிகரமாகத் தளம் திரும்பின கடற்புலிப் படகுகள்.
இந்தத் தாக்குதல் முடிந்த பின் மீண்டும் வழங்கற் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தன கடற்புலிப் படகுகள். அந்த படகுகளை வழிமறித்து டோறாப் படகுகள் தாக்குதலை மேற்கொள்த்த தொடங்கியதும் கரையிலிருந்து படகுடன் நிரோஜன் விரைந்தான். ‘பிரச்சினையில்லை நான் கிட்ட வந்திட்டன், நீங்கள் வடிவாயச் சண்டை பிடியுங்கோ” தொலைத்தொடர்பு கருவியில் நிரோஜனின் குரல் ஒலித்ததுமே கடற்களத்தில் சமர் புரிந்துகொண்டிருக்கும் போராளிகளுக்கு புது உத்வேகம் கிடைத்தது. அவர்கள் மூர்க்கமாகச் சண்டையிடத் தொடங்கினார்கள்.
நிரோஜன் கட்டளைகளை வழங்கியபடி சண்டை நடைபெற்ற கடற்பரப்பை நெருங்கி டோறாப் படகுகளை வழங்கற் படகிலிருந்து பிரித்து தாக்குதலை மேற்கொண்டான். ஆரம்பத்தில் எதிரியின் முற்றுகைக்குள் இருந்தன எமது வழங்கற் படகுகள். இப்போது நிரோஜனின் முற்றுகைக்குள்ளாக மாறிக்கொண்டிருந்தன டோறாக்கள்.
நேரம் கடந்து கொண்டிருக்க சண்டை நிலை எமக்குச் சாதகமாக மாறியது. டோறாப் படகொன்றை இலக்கு வைத்து நெருங்கி கனரக துப்பாக்கிச் சூடுகளை வழங்க செயலற்று கடலில் தத்தளித்துக் கொண்டிருந்தது அந்த டோறாப்படகு. சண்டையிட்ட எல்லாப் போராளிகளும் நிரோஜனுடன் சேர்ந்து கடலின் நடுவே உரத்து கூச்சலிட்டனர்.
ஆமாம் அன்றுதான் ஒரு கடற்சண்டையில் ஒரு கரும்புலித்தாக்குதல் இல்லாது கனரக துப்பாக்கிச்சூட்டினால் ஒரு டோறா செயலிழக்கச் செய்யப்பட்டது. நிரோஜன் அந்த டோறாவை கடலில் கைவிடவில்லை ஏனைய டோறாப் படகுகளுக்கு முகம் கொடுத்தவாறு செயலிழந்த டோறாவை எங்களது படகில் கட்டி இழுத்து வந்தான். அது இடையில் தானாகவே கடலில் மூழ்க ஆரம்பிக்க அதிலிருந்த போர் கருவிகள் அகற்றப்படவும் அது நீருக்குள் முற்றாக அமிழ்ந்தது. இந்தத் தாக்குதல் மூலம் எல்லாக் கடற்புலிப் போராளிகளுக்கும் நிரோஜன் மீதும் அவன் திறமை மீதும் இருந்த நம்பிக்கை இன்னும் உச்சத்தை அடைந்தது.
நிரோஜன் கடற்புலியில் இருந்த ஏழு வருடங்களிலும் இப்படித்தான் பல சண்டைகளை தனது நிதானமான முடிவுகளாலும் நுட்பமான திட்டங்களாலும் நெருக்கடியான நேரத்தில் கூட பதட்டப்படாத செயற்பாடுகளாலும் செய்து வென்று முடித்தவன். கடலில் சண்டை மூழும்போது கரையில் நின்று கட்டளைகளை வழங்கும்போது அவர்கள் அவனின் திறமை மீது கொள்ளும் நம்பிக்கையால் சண்டைகளை வழிநடத்தும் பொறுப்பு முழுமையாகவே அவனிடம் ஒப்படைக்கப்பட்டுவிடும். அவன் வரலாற்றுக்குள் இப்படியான பல தாக்குதல்கள் நிறைந்து கிடக்கிறது. அவனுக்குள்ளே தமிழீழத்தின் கடல் வாழ்ந்து கொண்டிருந்ததால் அவன் எப்போதும் கடலுக்குள் வாழ்ந்து கொண்டிருந்தான்.
இப்படித்தான் சண்டைகளிலெல்லாம் நெருப்பாகச் சீறும் அந்த நிரோஜனின் மறுபக்கம் இந்தச் சண்டைகளைப் போல கடினமானதும் கரடுமுரடானதுமல்ல. அவனின் இதயம் மென்மையானது. ஒவ்வொரு சண்டைகளிலும் அவனுடன் படகிலிருந்து மடியும் போராளிகளின் நினைவால் சண்டை முடிந்ததும் வந்து தனியே இருந்து அழும்போது அவன் ஒவ்வொரு போராளிகள் மீதும் எவ்வளவு அன்பு வைத்திருந்தான் என்பது புலப்படும். அப்போது அவன் ஒரு கடற்படைத் தளபதியாகப் பார்க்க முடியாது. சண்டைகளின் வெற்றிகளால் அவன் மகிழ்ந்திருப்பதைவிட இழந்த தோழர்களின் நினைவுகளால் அவன் மனம் உருகிப்போவதே அதிகம்.
அவன் சண்டைகள் இல்லாமல் முகாமில் நிற்கும்போது ஒரு சாதாரண போராளிக்கும் அந்த தளபதிக்கும் எந்த வேற்றுமைகளும் கிடையாது. அந்த வேளைகளில் அவனது முகாமிற்குச் சென்றால் நிச்சயமாக நீங்கள் அவனைப் பிரித்தறிய முடியாது. போராளிகள் அந்த வேலையில் ஈடுபட்டாலும் அவர்களுக்குள் ஒருவனாக அவனும் நிற்பது வழமையானது விளையாட்டுக்கள் என்றால் கூட அப்படித்தான். விளையாட்டுக்களின்போது மிகவும் சுவாரசியமாக அந்த நேரத்தைக் கழிக்கும் தன்மை அவனுக்கே உரியது.
தொடர்ச்சியாக இரவுபகலாக பணிகள் நடந்துகொண்டிருந்த நாட்களில் போராளிகளை உற்சாகப்படுத்துவதற்காக விளையாட்டுப்போட்டி ஒன்றை நடாத்த கடற்புலிகளின் சிறப்புத் தளபதி திட்டமிட்டபோது அவன் விளையாட்டு அமைப்பாளர் குழுவிற்குள் செல்லவில்லை. அவன் போட்டியிடும் வீரர்களின் இல்லமொன்றில் அவர்களில் ஒருவனாகச் சேர்ந்து கொண்டான். அவன் அந்தப் போட்டிகளின்போது நீச்சல் போட்டியில் முதலிடத்தைப் பெற்று தலைவரிடம் பரிசும் பெற்று அந்த மகிழ்வில் தன் தோழர்களுடன் சேர்ந்து துள்ளிக்குதித்தான்.
அவனின் திறமை விளையாட்டில் மட்டுமல்ல. ஒரு கடற்படைத் தளபதிக்கு இருக்கவேண்டிய அத்தனை தகுதிகளுமே அவனிடம் திறமையான விதத்தில் காணப்பட்டது. அவன் கடற்புலிகளின் படைத்துறைப் பள்ளிப் பொறுப்பாளனாக தொழில் நுட்பக்கல்லூரிப் பொறுப்பாளனாக, ஒரு கப்பலின் பிரதான இயந்திரவியலாளனாக என பல பணிகளைச் செய்து முடித்த பின்னரே கடற்புலிகளின் துணைத் தளபதியாகப் பொறுப்பெடுத்துக் கொண்டவன். ஆனாலும் இளம்தளபதி சிறிலங்காவின் கடற்படைத் தளபதி ஒருவனைவிட பன்மடங்கு உயர்ந்தவன்.
ஏனெனில் அவன் சண்டைகளில் வென்றது கடற்கலங்களின் அதிகரித்த பலத்தினாலல்ல. உறுதிமிக்க போராளிகளின் நெஞ்சுரத்தைத் துணையாக்கி தனது நுட்பமான திட்டமிட்ட தாக்குதலினால் மட்டுமே. அப்படி இல்லாவிட்டால் இந்தச் சண்ணடையில் அவன் வெற்றிருக்கவே முடியாது.
அன்றைய நாள் 07-01௧999 அன்றும் வழங்கற்பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தன கடற்புலிகளின் இரு படகுகள். அவற்றில் ஒன்றில் நிரோஜன் நின்றபடி படகுகளை வழிநடத்திக் கொண்டிருந்தான். கடலின் நடுவே இந்தப் படகிரண்டையும் பலம் பொருந்திய நான்கு டோறாக்கள் முற்றுகையிடுகின்றன. சண்டைமிக நெருக்கமாகவே நடந்து கொண்டிருந்தது. மாலை மயங்கிய பொழுதில் அந்தச் சண்டை ஆரம்பித்தபோதும் விடிசாமம் வரையும் அந்த நான்கு டோறாக்களிடமிருந்தும் தன் படகுளைப் பாதுகாத்து வியூகமிட்டுச் சண்டையிட்டுக் கொண்டிருந்தான். அவன் தொலைவில் உள்ள எங்கள் கரையிலிருந்து எப்போதும் போலவே இப்போது உதவியை எதிர்பார்க்கவில்லை. சண்டை தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது. நீண்ட நேரம் கடந்து விட்டதால் படகொன்றில் எரிபொருள் தீர்ந்தபோது அந்த நான்கு டோறாக்களும் சுற்றி முற்றுகையிட்டுக் கொண்டன. அவன் அப்போதும் உதவியை எதிர்பார்க்கவில்லை. சந்தர்ப்பத்தை சரிவரப்பயன்படுத்தி டோறாக்களை ஊடறுத்து புகுந்து தனது எரிபொருளில் பாதியை அந்த படகுக்கு வழங்கிச் சேதமில்லாமல் அந்த நான்கு டோறாக்களுக்கும் போக்குக் காட்டி கரை சேர்ப்பித்தான்.
அதனால்தான் கடற்புலிகளின் சிறப்புத் தளபதி சூசை அவர்கள் அவனைப் பற்றிக் குறிப்பிடும்போது ‘எந்தச் சிக்கலான சண்டையெண்டாலும் நான் அவனிட்டையே கட்டளை வழங்குகின்ற பொறுப்பை விட்டிடுவன். ஏனெண்டா என்னைவிட அவன் சிக்கலான சண்டையள்ள கூட தானும் பதட்டப்படாமல் போராளிகளையும் பதட்டமடையாமல் வைச்சு சண்டையை பிடிச்சு வெற்றி கொள்ளிறதில திறமையானவன். இதில அவனுக்கு நிகர் அவனேதான்” என்றார்.
இந்தத் திறமையான தளபதி தான் 07௰௧999 அன்று வழங்கற் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த வழங்கற் படகுகளை நடுக்கடலில் டோறாப் படகுகள் வழிமறித்தபோது தனது கட்டளைப் படகுடன் இரண்டு படகுளையும் அழைத்துக் கொண்டு கடற்களத்தில் இறங்கினான். அன்று கடல் கொந்தளிப்பாய் இருந்தது. கடும் இருள் கடல்வெளியினையே மறைத்துக் கொண்டிருந்தது. படகில் பொருத்தப்பட்டிருந்த கருவிகள் காலநிலைக் குழப்பத்தால் தங்களது பணியைச் செய்ய மறுத்துக் கொண்டிருந்தன. நிரோஜன் தன் நீண்டகால கடல் அனுபவத்தினை மட்டுமே வைத்து படகினை நகர்த்தினான். வழங்கற் படகிற்கு எதுவும் நடந்துவிடக்கூடாது என்ற உறுதியுடன் படகை நகர்த்தினான். இடையில் துணைப்படகுகள் இரண்டும் இயந்திரக் கோளாற்றினால் மெதுவாகவே நகர்ந்து கொண்டிருந்தன. அவன் அவற்றை எதிர்பார்க்காமலேயே தனது கட்டளைப் படகை மட்டுமே வேகமாக சண்டை மூண்ட பகுதிக்கு நகர்த்தினான். அன்று அவன் சிங்களப் படைகளிற்கு எதிராக மட்டுமல்ல இயற்கைக்கு எதிராகவும் சண்டை பிடிக்க வேண்டியதாயிற்று.
அவன் எங்களின் வழங்கற் படகுகளை நெருங்குகின்றான். அங்கே எங்களது ஒரு படகைக் காணவில்லை. அது டோறாவின் தாக்குதலில் சிக்கி மூழ்கியிருந்தது. ஆனால் அதில் வந்த உயிர்களிற்கு சேதமில்லை. அவை பத்திரமாக ஒரு படகில் இருந்தன. அவன் அந்த திருப்தியுடன் தன் ஒரு படகை வைத்து எதிரியின் அதிகரித்த பலத்தை எதிர்கொண்டான். கடல் இப்போது முரண்டு பிடித்துக் கொண்டிருந்தது இருளுக்குள் டோறாவின் நிலைகள் அவன் கண்களுக்கு தெரியவில்லை. வழங்கற் படகு பத்திரமாய் கரை திரும்பிக் கொண்டிருந்தது. இப்போது நிரோஜனின் கட்டளைப் படகு எதிரியின் தாக்குதலில் செயலற்றுக் கடலில் நின்று கொண்டிருந்தது. அவன் படகின் இயந்திரங்கள் மௌனமாய்க் கிடந்தன. எந்தச் சண்டையிலும் உதவியை எதிர்பார்க்காதவன் இன்று மட்டும் “என்ர படகுக்குச் சேதம், முடிஞ்சா உதவி செய்யுங்கோ, இல்லாட்டி பிரச்சனையில்லை” அவனின் அந்த வார்த்தைகள் தொலைத் தொடர்புக் கருவியில் கேட்டதும் துணைக்குச் சென்ற படகுள் இரண்டும் தங்களால் இயன்றமட்டும் வேகமாக முயற்சித்து முன்னேறின. அங்கே அவர்கள் நிரோஜனின் படகை நெருங்கினார்கள். இப்போது அவர்களின் கரங்கள் தோய்ந்து போனது. கண்களால் வழிந்த நீரரும்புகள் உடலைவிட்டுத் துளித்துளியாய் படகுக்குள் விழுந்தது. அந்த வீரன் கடற்புலி மரபுக்கேற்ப இறுதிவரை சண்டைபிடித்து தன் கடமையை நிறைவேற்றிய திருப்தியுடன் எரிந்து கொண்டிருந்த தோழர்களுடன் படகோடு தீயில் சங்கமமாகிக் கொண்டிருந்தான்.
– மாரீசமைந்தன் –
Recent Comments