Search

Eelamaravar

Eelamaravar

Category

ஆடி மாவீரர்கள்

2000 ம் ஆண்டு ஆடி மாதம் வீரச்சாவைத் தழுவிய மாவீரர்களுக்கு வீரவணக்கம்

நினைவழியாத் தடங்கள் – 08 :லெப் கேணல் சூட்டி நினைவுகளில்

எனது நண்பர் ஒருவருடன் லெப் கேணல் மகேந்தியண்ணையைப் பற்றிய நினைவுகளைப் பரிமாறிக் கொண்டிருந்தோம். மகேந்தி அண்ணையின் தனிச்சண்டைகள் பற்றியும் அவருடைய துணிச்சலான சம்பவங்களைப் பற்றியும் கதைத்துக் கொண்டிருந்த போது, மகேந்தி அண்ணையைப் போலத்தான் சூட்டியும் என்று சொன்ன நண்பர், அவர்களிருவரும் ஒன்றாக இருந்தபோது நடந்த சில சுவாருசியமான நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார்.

Lt-Col-Sooddi

‘‘அது 1989 ம் ஆண்டு காலப்பகுதி, இந்திய ஆக்கிரமிப்பு இராணுவத்தின் காலகட்டம், வன்னிக் காடுகளில் போராளிகள் அணி அணியாகப் பிரிந்து தங்கியிருந்தனர். இந்திய இராணுவம் காட்டுக்குள் இராணுவ நடவடிக்கைகளுக்காக இறங்கினாலன்றி போராளிகள் வழமையான பம்பலும் பகிடியுமாகத்தான் இருப்பார்கள். பல யாழ்மாவட்டப் போராளிகளுக்குக் காடு புதிது, காட்டு மிருகங்களைப் பற்றிக் கேள்விப்பட்டாலும் அதைப்பற்றிய அனுபவமின்மையிருந்தது. வன்னிக் காடுபற்றித் தெரிந்த சிலர், யாழ்ப்பாணப் போராளிகளுக்கு காடு, மிருகங்கள் தொடர்பில் சில போலியான கதைகளைக்கூட பகிடிக்காக கட்டிவிடுவார்கள். இதனால் இவை தொடர்பாக ஏதாவது உண்மைக் கதைகள் சொன்னால் பகிடிக்குச் சொல்வதாக நினைத்து நம்பமாட்டார்கள்.”

‘‘ஒரு தடவை பாலமோட்டைக் காட்டுப்பகுதியில் ஒரு அணி தங்கியிருந்தது. அப்போது அவர்கள் தங்கியிருந்த இடத்திற்கு அருகில் யானைகள் வந்து நிற்பதாக போராளி ஒருவர் சொன்னார். அப்ப சூட்டி உட்பட எங்களுக்கும் யானை பார்க்கும் ஆசை வந்தது. எனவே நாங்கள் யானை நிற்கும் இடத்திற்குச் செல்ல முற்பட்டோம். வன்னியைச் சேர்ந்த போராளிகள் கவனம், யானை தூரத்தில் நிக்கிறமாதிரி இருக்கும் ஆனால் வேகமாக பக்கத்தில வந்திடும் என்று எச்சரித்தனர். ‘சும்மா கதைவிடாதைங்கோ’ என சொல்லிவிட்டுச் சென்றோம்.”

‘‘முகாமிற்குப் பக்கத்தில் இருந்த வெட்டையிற்தான் யானை நின்றது என்பதால் சூட்டி சாரத்துடனே வந்தார். யானைக்கூட்டத்தின் பார்வை எல்லைக்குள் சென்றபின், சூட்டி எங்களில் இருந்து முன்னுக்குச் சென்று, பம்பலாக சாரத்தைப் பிடித்து முன்னுக்கும் பின்னுக்குமாக ஆட்டி,யானையைப் பார்த்து, ‘வா வா‘ என சொல்லிக்கொண்டிருந்தார். சூட்டி எப்பவும் ஏதாவது வம்பு பண்ணிக்கொண்டிருப்பார். அப்படிச் செய்து கொண்டிருக்கும் போது யானைக்கு என்ன நடந்ததோ என்னவோ தெரியவில்லை. திடீரென ஒரு யானை எங்களை நோக்கி வந்து கொண்டிருந்தது. சூட்டி திரும்பி ஓடத் தொடங்க, நாங்களும் வேகமாக பின்னுக்கு ஓடத்தொடங்கினோம். ஓடிவந்த பாதையில் முகாமிற்கு தடிவெட்டிய மரங்களின் அடிக்கம்புகள் ஆங்காங்கு நின்றன. கட்டைகளில் தட்டுப்படாமல் ‘‘தலைதப்பினால் தம்பிரான புண்ணியம்” என்று நினைத்துக் கொண்டு ஓடிக்கொண்டிருந்தோம்.

சூட்டி எங்களிற்கு பின்னால கடைசியாத்தான் வந்துகொண்டிருந்தவர். ஓடிவரும் போது திரும்பிப் பார்க்கேக்கில ஓடிக்கொண்டு வந்த அவரின் சாரம் மரத்தின் அடிக்கம்பில் தடக்குப்பட, அப்படியே நிலைகுப்பற விழுந்து விட்டார். அவர் சுதாகரித்து எழும்பி ஓடுவதற்கு முன் யானை அவருக்குக் கிட்ட வந்துவிட்டது. வந்த யானை கால் ஒன்றைத் தூக்கி இவரின் மேல் மிதித்தது. நாங்கள் திகைத்துப் போய்ப்பார்த்தோம். ஆனால் யானையின் கால் இவரது கால் இடைவெளிக்குள்தான் மிதித்து நின்றது. சாரத்தில் மிதித்ததால் சூட்டி எழும்ப முடியாமல் திகைத்துப்போய் யானையின் காலுக்குள் கிடந்தார். பின்னர் யானை சூட்டியை தும்பிக்கையால் தூக்கி, தும்பிக்கைக்குள் வைத்து உறுட்டித் தேய்க்கத் தொடங்கியது.சிலவேளை தூக்கி எறிவதற்காகத்தான் அப்படிச் செய்ததோ தெரியவில்லை.”
‘‘சூட்டி ஒன்றும் செய்ய முடியாமல் தும்பிக்கைக்குள் இருந்து உறுட்டுப்பட்டு, தேய்பட்டுக் கொண்டிருந்தார். அச்சமயத்தில் ஒருபோராளி முகாமிற்கு ஒடிச் சென்று துப்பாக்கியை எடுத்துவந்து வானத்தை நோக்கிச் சுட, யானை சூட்டியைத் தூக்கி வீசாமல் அப்படியே போட்டு விட்டு ஓடிவிட்டது.

நாங்கள் ஒடி சூட்டிக்குக்கிட்டச் செல்ல, சுதாகரித்து எழும்பி நின்றார். முகம் வீங்கியிருந்தது. யானை நிலத்தில் தேய்த்ததால் முகத்தில் இரத்தக்காயங்களும், உடம்பில் தேய்த்த அடையாளங்களும் இருந்தன. ஆனால் சூட்டி சிரித்துக் கொண்டிருந்தார். இதுதான் சூட்டியின் குணவியல்வு, எந்த கடினமான சந்தர்ப்பங்களிலும் பதட்டத்தைக் காணமுடியாது. நிதானமாகவும் துணிவாகவும் செயற்படுவது அவரது இயல்பு.”

‘‘பிறிதொரு சமயம் மணலாற்றுக் காட்டுப்பகுதியில் இந்திய இராணுவம் ‘செக்மெய்ற்’ எனப் பெயரிடப்பட்ட இராணுவ நடவடிக்கையை, தலைவரை இலக்கு வைத்து மேற்கொண்டது. இதனால் தலைவரை வேறு இடத்திற்கு மாற்றுவதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டது. அப்போது கேணல் சங்கர் அண்ணையுடன் ஒரு அணி, தலைவரை மாற்றுவதற்காகத் தீர்மானித்த இடத்திற்கான உணவுகளைக் களஞ்சியப்படுத்துவதற்காகச் சென்றது. அந்த அணியில் சூட்டியும் நானும் இடம்பெற்றிருந்தோம். சூட்டி காட்டிற்குள்ளால் பாதையை முறித்துக் கொண்டு முன்னுக்குச் சென்று கொண்டிருந்தார்.அப்போது இடையில் இருந்த கருங்குளவிக்கூடு தட்டுப்பட்டு குளவி கலையத்தொடங்கியது. சூட்டியையும் ஓடச்சொல்லிவிட்டு, நாங்கள் எல்லாரும் கலைஞ்சு ஒடிவிட்டோம். பின்னர் எல்லோரும் ஒன்றாகிய பின் பார்த்தால் சூட்டியைக் காணவில்லை. அவரைத் தேடி குளவிக்கூட்டடிக்குச் சென்றோம். அந்த இடத்திலேயே சூட்டி குப்பறக்கிடந்தார். சூட்டிக்கு கருங்குளவி குத்தத் தொடங்க, வேதனையில் அப்படியே விழுந்து கிடந்துவிட்டார்.

கருங்குளவிகள் தலையிலிருந்து கால் வரை உடலில் இருபத்துமூன்று இடங்களில் குத்திவிட்டு கலைந்து சென்று விட்டன. வேதனையில் துடித்தார். ஒரு கருங்குளவி முறையாக் குத்தினாலே தப்புவது கடினம் என்பார்கள். மருத்துவமனைக்கும் கொண்டு செல்ல முடியாது. முகாமிற்கு கொண்டு வந்து பழப்புளியைக்கரைத்து உடம்பு முழுவதும் ஊற்றிக்கொண்டிருந்தாம். ஒரு கிழமைவரை, சாகிறாக்கள் சேடம் இழுக்கிறதைப்போல இழுத்துக் கொண்டு நடுங்கிக் கொண்டிருந்தார். பிறகு குளவி குத்திய இருபத்துமூன்று இடங்களிலும் பொட்டளவிற்குக் காயமாகியது.அதன்பின்னரே குளவி குத்தின இடங்களில் இருந்து குளவியின் ஆணிகளை எடுக்கக்கூடியவாறு இருந்தது. அதுக்குப்பிறகுதான் முழுமையாகக் குணமடைந்தார். இந்தத்தடவை இரண்டாவது முறையாக சாவின்விளிம்புவரை சென்று திரும்பினார்.

பின்னர் ஒருதடவை மன்னாரில் அமைந்திருந்த எமது முகாம் ஒன்றிற்குச் சென்று கொண்டிருந்தோம். முகாமிலிருந்து கிட்டத்தட்ட மூன்று கிலோமீற்றர் தூரத்திற்கு முன் இந்திய இராணுவம் காடு முறித்துச் சென்ற தடையம் இருந்தது. பொறுப்பாளர் தடையத்தை பின்தொடர்ந்து எங்கு செல்கின்றது எனப் பார்க்குமாறு ஒரு போராளியிடம் கூறினார். ஆனால் சூட்டி நான் போறன் எனக்கூறி, தன்னுடன் ஐந்து பேரைக்கூட்டிக் கொண்டு தடையத்தைப் பின்தொடர்ந்து சென்றார். இராணுவம் தடையத்தை ஏற்படுத்திவிட்டு, தடையத்தின் இடையில், தடையம் சென்ற திசையை பார்த்து நிலையெடுத்திருந்தான். இவர்கள் தடையத்தைப் பின்தொடர்ந்து செல்ல, பதுங்கியிருந்த இராணுவம் தங்களைத் தாண்டிச் செல்லவிட்டு விட்டு இவர்கள் மீது பின்பக்கமாகத் தாக்குதலைத் தொடுத்தது.

திரும்பி இராணுவத்தின் மீது தாக்குதலைத் தொடுத்தவாறு காட்டுக்குள் பிரிந்து ஓடிவிட்டனர். பிறகு காடுமாறி, அப்பகுதியில் இருந்த சனத்திட்ட வழிகேட்டு இரண்டு நாட்களின் பின் முகாமிற்கு வந்து சேர்ந்தார் சூட்டி. பின்னர் குளிப்பதற்காக உடுப்பு எடுக்க பாக்கைத் (Bag) திறந்து பார்த்தால் முதுகில் போட்டிருந்த உடுப்புபாக்கில் மூன்று ரவைகள் பட்டு உடுப்பு கந்தலாகக் கிழிந்திருந்தது. இந்த சம்பவத்திலும் மயிரிழையில் மூன்றாவது தடவையாக உயிர்தப்பியிருந்தார்.”

மேலும் அவர் சூட்டி அண்ணையின் தனிப்பட்ட குணாதிசயங்களைப்பற்றிக் கூறும்போது ‘‘சூட்டி மூத்த உறுப்பினர் ஒருவருடைய நம்பிக்கைக்குரிய போராளியாகச் செயற்பட்டவர். சிறந்த நிர்வாகி, நேரம் பாராது கடுமையாக உழைக்கக்கூடிய ஒருவர். எல்லோரையும் அரவணைத்துச் செல்லும் பண்பாளர்” என்றார்.

சூட்டியண்ணையின் இந்தக் குணாதியங்களை நான் புரிந்து கொண்டது ஆ.க.வே சண்ணடையின்போது. ‘‘1991 ம் ஆண்டு, ஆ.க.வே சண்டைக்காக அணிகள் தயாராகிக் கொண்டிருந்தன. கனரக அணியினரான எங்களுக்கு வெற்றிலைக்கேணிக் கடற்கரைப்குதியில் கடற்படையின் தரையிறக்கத்தைத் தடுப்பதற்கான பணி தரப்பட்டது. அந்தப்பகுதிக்குச் சூட்டியண்ணைதான் பொறுப்பாளர். வெற்றிலைக்கேணி கடற்கரைமணலில் நிலையமைத்துக் கொண்டருந்தபோது அருகில் நின்ற போராளி சூட்டியண்ணை வருகின்றார் எனச் சொன்னார். தலையை நிமிர்த்தி பார்த்தபோது சராசரி உயரம், சிரித்தமுகம், தலையில் பின்பக்கமாக திருப்பி விடப்பட்ட தொப்பியுடன் வந்தார் சூட்டியண்ணை. அவரைப்பார்த்தவுடன் உடனே நினைவிற்கு வந்தது லெப்கேணல் மகேந்தி அண்ணை தான். கிட்டத்தட்ட ஒத்த முகவமைப்பைக் கொண்டவர்கள். நாங்கள் கனரக ஆயுதங்களிற்கான பயிற்சி எடுத்த முகாமில் தான் 23.MM கனரகப்பீரங்கிக்கான பயிற்சியை மகேந்தியண்ணை எடுத்தார். அப்போது அவருடன் எனக்குச் சிநேகிதம் ஏற்பட்டது. எனவே சூட்டியண்ணையுடன் முதல் சந்திப்பிலேயே இலகுவாகவே அணுகக்கூடியவாறு இருந்தது.

ஆனையிறவுத்தளத்தை முற்றுகையிட்டுத் தாக்குதல் ஆரம்பிக்கப்பட்டதும் தரையிறக்கத்தை எதிர்பார்த்துக்கொண்டிருந்தன அணிகள். சூலை 14 ம் திகதி நீண்டு விரிந்த கடற்பரப்பில் அணிவகுந்து நின்றன கடற்படைக்கலங்கள். சூட்டி அண்ணையும் தனது பகுதியில் உள்ள அணிகளை தயார்ப்படுத்திக் காத்திருந்தார்.

விமானத்திலிருந்து வந்த குண்டுகள் கடற்கரைப்பகுதியில் கடற்படைத்தரையிறக்கத்திற்கான முன்னேற்பாட்டைச் செய்து கொண்டிருந்தன.பின்னேரம் கடற்படைக்கலங்கள் தரையை நோக்கி நகரத்தொடங்கின. கனரக அணிகளும் முடிந்தளவிற்குத் தாக்குதலைத் தொடுத்து இழப்புக்களை ஏற்படுத்தினாலும் இராணுவம் தரையிறங்கி விட்டது, றோட்டுக் கரையால் இராணுவம் தரையிறங்கிய அந்தப்பகுதியை நோக்கி சூட்டி அண்ணை ஓடிச் செல்வது தெரிந்தது. நாங்கள் கடற்கலன்கள் மீதான தாக்குதல்களை தொடர்ந்து கொண்டிருந்தோம்.

இராணுவம் தரையிறங்கிய பகுதியில் கடுமையான துப்பாக்கிச் சண்டை நடந்து கொண்டிருந்தது. வோக்கியில் சூட்டியணையைத் தொடர்புகொள்வதற்கு முயற்சித்துக் கொண்டிருந்தார்கள். பின்னர் எங்களை அவ்விடத்திலிருந்து பின்வாங்குமாறு கட்டளை கிடைக்க பின்வாங்குகின்றோம்.

மறுநாள் ரவி அண்ணை அழுது கொண்டிருந்தார். சூட்டியண்ணை வீரச்சாவடைந்துவிட்டார் என்பது புலப்பட்டது. எத்தனையோ சந்தர்ப்பங்களில் எல்லாம் உயிர் தப்பிய சூட்டியண்ணை ஆ.க.வெ சமரில் வெற்றிலைக்கேணி கடற்கரையில் தரையிறங்கிய இராணுவத்திற்கெதிரான சண்டையில் வீரச்சாவடைந்தார்.

அவரது குடும்பத்தில் மூன்று பேர் போராளிகளாக இருந்தனர். லெப்கேணல் சூட்டி, அவரது தம்பி லெப் கேணல் மகேந்தி. இருவரும் வீரச்சாவடைந்து விட்டனர். அவரது இன்னுமொரு சகோதரன் ரவி அண்ணைக்கு முள்ளிவாய்க்காலின் என்ன நடந்தது என்று இன்றுவரை தெரியாது.

வாணன்

கடற்கரும்புலி மேஜர் அன்பு/அன்பழகன் வீரவணக்க நாள்

31.07.2008 அன்று வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலி மேஜர் அன்பு/அன்பழகன் என்ற கடற்கரும்புலி மாவீரரின் வீரவணக்க நாள் இன்றாகும்.
BT-Maj-Anpalagan

ஓரிரண்டு பேருக்குள்ளே உறங்கும் உண்மைகள் -இது
ஊருலகம் அறிந்திடாத உறவின் தன்மைகள் (2)
பேரிரைச்சலோடு ஒரு வெடி வெடித்திடும் இங்கு
போக விடை கொடுத்த நெஞ்சம் துடிதுடித்திடும்

ஓரிரண்டு பேருக்குள்ளே உறங்கும் உண்மைகள் -இது
ஊருலகம் அறிந்திடாத உறவின் தன்மைகள்

உங்களுக்கு மட்டும் எங்கள் உணர்வுகள் புரியும் (2)
ஊமைகளாய் நாமிருக்கும் காரணம் தெரியும்
பொங்கு மகிழ்வோடு நீங்கள் போய் விடுவீர்கள்
போன பின்னர் நாமழுவோம் யாரறிவீர்கள்

ஓரிரண்டு பேருக்குள்ளே உறங்கும் உண்மைகள் -இது
ஊருலகம் அறிந்திடாத உறவின் தன்மைகள

தாயகத்து மண்ணைத்தானே காதலித்தீர்கள் – சாவை
எதிர் பாரர்த்து பார்த்துக் காத்திருந்தீர்கள்
பாயும் கரும்புலிகளாகிப் பகை முடித்தீர்கள்
பாதகரின் நெஞ்சினிலே போய் வெடித்தீர்கள்

ஓரிரண்டு பேருக்குள்ளே உறங்கும் உண்மைகள் -இது
ஊருலகம் அறிந்திடாத உறவின் தன்மைகள

கல்லுக்குள்ளே ஈரமுண்டு கசிவதுண்டு
கரும்புலிகளின் விழிகளில் நீர் வழிவதுமுண்டு
அல்லும் பகலும் அண்ணன் பெயரை உச்சரித்தீர்கள்
அந்தப் பெயர் சொல்லி மேனி பிச்செறிந்தீர்கள்

ஓரிரண்டு பேருக்குள்ளே உறங்கும் உண்மைகள் -இது
ஊருலகம் அறிந்திடாத உறவின் தன்மைகள்
பேரிரைச்சலோடு ஒரு வெடி வெடித்திடும் இங்கு
போக விடை கொடுத்த நெஞ்சம் துடிதுடித்திடும்

ஓரிரண்டு பேருக்குள்ளே உறங்கும் உண்மைகள் -இது
ஊருலகம் அறிந்திடாத உறவின் தன்மைகள்

prabakaran with black tigers

தமிழீழ தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிரை ஈந்த இந்த வீரமறவர்களிற்கு எமது வீரவணக்கங்கள். இதே நாளில் வீரச்சாவைத் தழுவிய ஏனைய மாவீரர்களிற்கும் எமது வீரவணக்கங்கள்.

ஓமந்தை ஊடறுப்புத் தாக்குதலில் காவியமான மேஜர் சிட்டு உட்பட்ட 137 மாவீரர்களி​ன் வீரவணக்க நாள்.

ஜெயசிக்குறு படை நடவடிக்கைக்கு எதிராக ஒமந்தைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஊடறுப்புத் தாக்குதலில் வீரகாவியமான தமிழீழத்தின் புகழ்பூத்த பாடகர் மேஜர் சிட்டு உட்பட்ட 137 மாவீரர்களின் ஆண்டு வீரவணக நாள் இன்றாகும்.Maj Siddu Singer

வன்னி மண்ணை ஊடறுத்து யாழில் நிலை கொண்டிருந்த படையினருடன் இணைப்பை ஏற்படுத்த ஜெயசிக்குறு என்ற குறியீட்டுப் பெயருடன் மேற்கொள்ளப்பட்ட பாரிய நடவடிக்கை மூலம் முன்னகர்ந்து நிலை கொண்டிருந்த சிறிலங்கா படையினர் மீது 01.08.1997 அன்று வவுனியா மாவட்டம் ஒமந்தைப் பகுதியில் விடுதலைப் புலிகளால் ஊடறுப்புத் தாக்குதல் ஒன்று நடாத்தப்பட்டது.

ஏற்கனவே தாண்டிக்குளம், மற்றும் பெரியமடுப் பகுதியில்களில் மேற்கொள்ளப்பட்ட ஊடறுப்புத் தாக்குதல்களைத் தொடர்ந்து உச்சவழிப்பு நிலையில் படையினர் மீது நடாத்தப்பட்ட இந்தத் தாக்குதலின்போது படைத் தரப்பிற்கு பாரிய அழிவுகள் ஏற்படுத்தப்பட்டன.

வானூர்தி எதிர்ப்பு சுடுகலன்கள், கிரனைட் செலுத்திகள் உட்பட பெருமளவு படைக்கலங்கள் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டன.

இந்த ஊடறுப்புத் தாக்குதல் நடவடிக்கையின்போது பகை என்னும் தடையரண் மோதி தமிழீழத்தின் புகழ்பூத்த பாடகர் மேஜர் சிட்டு உட்பட்ட 137 வரையான போராளிகள் வெற்றிக்கு வித்திட்ட தாய்மண்ணின் விடியலுக்காக கல்லறையில் உறங்குகின்றனர்.

மேஜர் கிளியன் (கந்தசாமி விஸ்வநாதன் – கிளிநொச்சி)
மேஜர் மதியன் ( மதி) (சிதம்பரம் நடராஜா – மன்னார்)
மேஜர் முருகையன் ( நியூமன்) (இராஜு சௌந்தரராஜன் – முல்லைத்தீவு)
மேஜர் சிட்டு ( தங்கத்துரை) (சிற்றம்பலம் அன்னலிங்கம் – யாழ்ப்பாணம்)
மேஜர் சஞ்சீவி (சின்னையா முத்துக்கிருஸ்ணன் – கிளிநொச்சி)
மேஜர் அன்பு ( கதிர்ச்செல்வன்) (கனகு தவராசா – யாழ்ப்பாணம்)
மேஜர் இளங்குமரன் ( பாபு) (பேரானந்தம் ஜெயராஜ் – மட்டக்களப்பு)
கப்டன் சேரலையான் ( பிரதீப்) (சிதம்பரப்பிள்ளை கருணாகரன் – மட்டக்களப்பு)
கப்டன் துகிலன் (கந்தசாமி சிவகுமார் – மட்டக்களப்பு)
கப்டன் தமிழரசன் (செல்வராசா சந்திரதாசன் – யாழ்ப்பாணம்)
கப்டன் சோழன் ( தமிழன்) (சிவபாலசிங்கம் தயாகரன் – யாழ்ப்பாணம்)
கப்டன் பாலகிருஸ்ணன் (சிவசம்பு சேகரன் – மட்டக்களப்பு)
கப்டன் தூதுவன் (பெரியசாமி முத்துவேல் – மாத்தளை)
கப்டன் கரிகாலன் ( நெல்சன்) (பெஞ்சமின் சகாயநாதன் – மன்னார்)
கப்டன் ஈழப்பிரியா (ஆறுமுகம் ஜெனற்கிருஸ்ரினா பிரியதர்சினி – யாழ்ப்பாணம்)
கப்டன் சாந்தீபன் ( முத்தமிழ்வேந்தன்) (கிருஸ்ணசாமி விநாயகமூர்த்தி – யாழ்ப்பாணம்)
கப்டன் தணிகைநம்பி (சின்னையா கந்தராசா – திருகோணமலை)
கப்டன் பிறைமாறன் (இராசதுரை கருணாகரன் – யாழ்ப்பாணம்)
கப்டன் எழுச்சிமாறன் (கிறிஸ்ரியாம்பிள்ளை ஜெயப்பிரகாஸ் – மன்னார்)
கப்டன் நிர்மலன் (தர்மராஜசிங்கம் பிரசன்னா – யாழ்ப்பாணம்)
கப்டன் பாலகிருஸ்ணன் (இரத்தினகோபால் அகிலன் – யாழ்ப்பாணம்)
கப்டன் உருத்திரன் (சிவபாதம் சிவாகரன் – யாழ்ப்பாணம்)
கப்டன் செந்தூரன் ( செல்லப்பா) (அருளானந்தர் ஜெயக்குமார் – யாழ்ப்பாணம்)
கப்டன் வன்னியன் (அன்ரன் றேமன் – மட்டக்களப்பு)
கப்டன் ஜெயஜோதி (கனகலிங்கம் விஜிதா – யாழ்ப்பாணம்)
கப்டன் கல்யாணி (குணரட்ணம் மதிவதனி – திருகோணமலை)
கப்டன் எழிலரசன் ( விந்தரன்) (பஞ்சலிங்கம் பாலமுரளி – யாழ்ப்பாணம்)
கப்டன் வேணுகா (கணபதிப்பிள்ளை திருச்செல்வி – யாழ்ப்பாணம்)
கப்டன் சிவானந்தன் (இராசேந்திரன் அன்ரன்ஜேசுராஜா – முல்லைத்தீவு)
லெப்டினன்ட் கவியரசு ( கவியரசன்) (சோமசேகரம் சிறிகண்ணதாசன் – மட்டக்களப்பு)
லெப்டினன்ட் ஈழச்செல்வன் (தர்மலிங்கம் கோகுலநாதன் – மட்டக்களப்பு)
லெப்டினன்ட் வெண்சாகரன் (சதாசிவம் சுந்தரலிங்கம் – மட்டக்களப்பு)
லெப்டினன்ட் கதிரவன் (சின்னத்தம்பி சச்சுதானந்தன் – மட்டக்களப்பு)
லெப்டினன்ட் விஜயமுரளி (இராமலிங்கம் கந்தசாமி – மட்டக்களப்பு)
லெப்டினன்ட் சேரமான் (சோதி சிவனேசன் – யாழ்ப்பாணம்)
லெப்டினன்ட் வீரத்தேவன் (குமாரசிங்கம் சண்முகநாதன் – மட்டக்களப்பு)
லெப்டினன்ட் பேரின்பன் (கனகசபை தவராசா – மட்டக்களப்பு)
லெப்டினன்ட் சின்னத்துரை ( நாதன்) (வேலாயுதம் புஸ்பராஜ் – மட்டக்களப்பு)
லெப்டினன்ட் கண்ணன் (சதாசிவம் தேவகுமார் – யாழ்ப்பாணம்)
லெப்டினன்ட் கீர்த்தி (திருஞானசம்பந்தன் நவநீதன் – யாழ்ப்பாணம்)
லெப்டினன்ட் துலாஞ்சினி ( லதா) (முத்தையா பிரிஸ்சிலா அருள்மணி – வவுனியா)
லெப்டினன்ட் வித்தகா (சிவகுரு சிவநந்தி – கிளிநொச்சி)
லெப்டினன்ட் விதுபாலா (நவரத்தினம் சசிகலா – யாழ்ப்பாணம்)
லெப்டினன்ட் அழகியநம்பி (கருணதாஸ் அஜித்விஜயதாஸ் – திருகோணமலை)
லெப்டினன்ட் வேலன் (சண்முகராசா சபேசன் – கிளிநொச்சி)
லெப்டினன்ட் கற்பகன் (கந்தசாமி பராக்கிரமராசா – யாழ்ப்பாணம்)
லெப்டினன்ட் வண்ணன் ( ஜீவன்) (சந்தனம் முத்துக்குமார் – கிளிநொச்சி)
லெப்டினன்ட் தொண்டமான் (பெரியதம்பி சோதரராசன் – யாழ்ப்பாணம்)
லெப்டினன்ட் அறிவொளி ( அற்புதன்) (கதிரேசன் மகேந்திரன் – வவுனியா)
லெப்டினன்ட் காவியன் (மரியநாயகம் ரொறன்ஸ் – யாழ்ப்பாணம்)
லெப்டினன்ட் கல்யாணி ( வண்ணநிலா) (தியாகராஜா ஜெயராணி – யாழ்ப்பாணம்)
லெப்டினன்ட் பொற்சிலை (சின்னத்துரை பாலகௌரி – யாழ்ப்பாணம்)
லெப்டினன்ட் தீந்தமிழ்ச்செல்வன் (கனகரட்ணம் ராஜன் – யாழ்ப்பாணம்)
லெப்டினன்ட் நாகமணி (அப்பையா கலையழகன் – யாழ்ப்பாணம்)
லெப்டினன்ட் சின்னக்குட்டி (செல்வராசு மகேந்திரன் – கிளிநொச்சி)
லெப்டினன்ட் சொரூபி (தங்கவேல் ஜெனிற்சுஜாதா – மன்னார்)
லெப்டினன்ட் வினோதராஜ் (தெய்வநாதன் மோகநாதன் – மட்டக்களப்பு)
லெப்டினன்ட் யாழிசை (வல்லிபுரம் கிரிஜா – யாழ்ப்பாணம்)
லெப்டினன்ட் அப்பன் (தேவதாஸ் கிருசாந்தன் – யாழ்ப்பாணம்)
லெப்டினன்ட் இனியவன் (கனகரத்தினம் செல்வக்குமார் – யாழ்ப்பாணம்)
லெப்டினன்ட் நாயகன் (தெய்வேந்திரன் சீலன் – யாழ்ப்பாணம்)
லெப்டினன்ட் கனியவன் (கந்தையா பாஸ்கரன் – வவுனியா)
2ம் லெப்டினன்ட் எத்திராஜ் (வடிவேல் கோகுலராஜ் – மட்டக்களப்பு)
2ம் லெப்டினன்ட் இசைரூபன் (தர்மன் நிசாந்தன் – மட்டக்களப்பு)
2ம் லெப்டினன்ட் கவியழகு ( கவிவாணன்) (சுபந்திரராஜா கண்ணன் – மட்டக்களப்பு)
2ம் லெப்டினன்ட் பிறேமிலன் ( வரதன்) (கணபதிப்பிள்ளை இராசரத்தினம் – மட்டக்களப்பு)
2ம் லெப்டினன்ட் ரதிசீலன் (குருநாதபிள்ளை கோணேஸ்வரன் – மட்டக்களப்பு)
2ம் லெப்டினன்ட் வைத்தி (கனகசூரியம் உதயசூரியம் – மட்டக்களப்பு)
2ம் லெப்டினன்ட் பேரரசன் (குழந்தைவேல் பாவேந்திரன் – மட்டக்களப்பு)
2ம் லெப்டினன்ட் கிருபராஜன் (இளையதம்பி மனோகரன் – மட்டக்களப்பு)
2ம் லெப்டினன்ட் அன்புவரதன் (சுந்தரம் மோகேந்திரன் – அம்பாறை)
2ம் லெப்டினன்ட் கபில்குமார் (சீவராஜா மனோரூபன் – மட்டக்களப்பு)
2ம் லெப்டினன்ட் பிரியமஞ்சன் ( பிரகலாதன்) (நாகராசா ஜெயக்கணேஸ் – அம்பாறை)
2ம் லெப்டினன்ட் தமிழன் (அழகையா வேலாயுதம் – மட்டக்களப்பு)
2ம் லெப்டினன்ட் செல்வசுந்தரம் (சின்னத்தம்பி சந்திரகுமார் – மட்டக்களப்பு)
2ம் லெப்டினன்ட் திவ்வியநாதன் (பெரியதம்பி நகுலேந்திரம் – மட்டக்களப்பு)
2ம் லெப்டினன்ட் தரணியாளன் (வேல்முருகு ஜெயநேசன் – மட்டக்களப்பு)
2ம் லெப்டினன்ட் மிருநாளன் (பிள்ளையான்தம்பி இளங்கோ – அம்பாறை)
2ம் லெப்டினன்ட் ஈகையன் ( ஈழமாறன்) (கனகசிங்கம விநாயகலிங்கம் – மட்டக்களப்பு)
2ம் லெப்டினன்ட் சித்திராஜன் (சிறிராமன் திவாகரன் – மட்டக்களப்பு)
2ம் லெப்டினன்ட் பழனிராஜ் (கனகசூரியம் சிறிதரன் – மட்டக்களப்பு)
2ம் லெப்டினன்ட் கலைக்கோயில் (முனியாண்டி பெரியதம்பி – கண்டி)
2ம் லெப்டினன்ட் பாடினி (தர்மு அமுதா – யாழ்ப்பாணம்)
2ம் லெப்டினன்ட் அருண் (மாயழகு பரமானந்தம் – வவுனியா)
2ம் லெப்டினன்ட் மலர் ( உசா) (இராஜேந்திரம் தவராணி – யாழ்ப்பாணம்)
2ம் லெப்டினன்ட் குட்டிமோகன் (பெரியசாமி சண்முகராஜா – மன்னார்)
2ம் லெப்டினன்ட் மோகனராசா (கிருஸ்ணசாமி கிருஸ்ணராஜா – கிளிநொச்சி)
2ம் லெப்டினன்ட் மது ( கயல்க்கொடி) (மாதகராசா சுசிகலா – யாழ்ப்பாணம்)
2ம் லெப்டினன்ட் அமரன் (முத்துக்குமார் சிவகுமார் – மட்டக்களப்பு)
2ம் லெப்டினன்ட் சிலம்பரசன் (நாகலிங்கம் கோணேஸ்வரன் – கிளிநொச்சி)
2ம் லெப்டினன்ட் முத்தமிழன் (நவரத்தினம் வசந்தன் – திருகோணமலை)
2ம் லெப்டினன்ட் செங்கதிர்ச்செல்வி ( மகேந்திரா) (பழனிமுத்து நவலட்சுமி – மன்னார்)
2ம் லெப்டினன்ட் ரமா ( கலைக்குயில்) (இராசு சிவனேஸ்வரி – கிளிநொச்சி)
2ம் லெப்டினன்ட் திருமகன் (வேலுப்பிள்ளை கலாநிதி – யாழ்ப்பாணம்)
2ம் லெப்டினன்ட் தமிழேந்தன் ( ரவிவர்மன்) (சிவராசா சிவகுமார் – யாழ்ப்பாணம்)
2ம் லெப்டினன்ட் ஈழவாசன் (விஸ்வலிங்கம் சுரேஸ் – யாழ்ப்பாணம்)
2ம் லெப்டினன்ட் பிரபா (செல்லத்துரை மாலதி – யாழ்ப்பாணம்)
2ம் லெப்டினன்ட் மதி (சிவகணகநாதன் விமலரத்தினேஸ்வரி – மன்னார்)
2ம் லெப்டினன்ட் அருள்நிதி (மகேந்திரன் கௌசலா – முல்லைத்தீவு)
2ம் லெப்டினன்ட் இளவதனி (பொன்னுக்குமார் சுதாஜினி – யாழ்ப்பாணம்)
2ம் லெப்டினன்ட் கலைச்செல்வன் (பூராசா கமலேஸ்வரன் – கிளிநொச்சி)
வீரவேங்கை காந்தராஜ் (சுந்தரலிங்கம் விக்னேஸ்வரன் – மட்டக்களப்பு)
வீரவேங்கை அமிர்தன் ( குலராஜ்) (முருகேசப்பிள்ளை சண்முகராசா – அம்பாறை)
வீரவேங்கை நூதகன் (அப்பாத்துரை ரஜனிக்குமார் – மட்டக்களப்பு)
வீரவேங்கை மதனமாவீ ( சுருளிராயன்) (தம்பிராசா பரமேஸ்வரன் – மட்டக்களப்பு)
வீரவேங்கை பாவாணன் ( பாரதி) (மயில்வாகனம் சங்கரதாஸ் – மட்டக்களப்பு)
வீரவேங்கை நவச்செல்லம் (தேவராசா விக்னேஸ்வரன் – மட்டக்களப்பு)
வீரவேங்கை பொதிகன் (சிவராஜா சிவாநந்தராஜா – மட்டக்களப்பு)
வீரவேங்கை நிர்மலன் (சிவராசா சுவிக்காந்தன் – மட்டக்களப்பு)
வீரவேங்கை மதுர்சனன் (கார்த்திகேசு நாகராஜா – அம்பாறை)
வீரவேங்கை நவானந்தன் (கோபாலபிள்ளை சசிக்குமார் – அம்பாறை)
வீரவேங்கை பவாதரன் (முத்துலிங்கம் விஸ்வலிங்கம் – மட்டக்களப்பு)
வீரவேங்கை கயல்விழியன் (தேவராஜா றதிகரன் – அம்பாறை)
வீரவேங்கை அமுதராசன் (ஸ்ரனிஸ்லாஸ் அன்ரன்கனியூட் – யாழ்ப்பாணம்)
வீரவேங்கை கோணமலை (சிவராசா புண்ணியராசா – மட்டக்களப்பு)
வீரவேங்கை வேணுஜன் (அரசரட்ணம் சுதர்சன் – மட்டக்களப்பு)
வீரவேங்கை ஆனந்தி (திரவியம் சறோ – யாழ்ப்பாணம்)
வீரவேங்கை சுபாநந்தினி (தங்கராசா ராதிகா – யாழ்ப்பாணம்)
வீரவேங்கை அமலி (அரியரட்ணம் மேலின்கிருசாந்தி – மன்னார்)
வீரவேங்கை தமிழவள் (வெலிச்சோர்மியஸ் சுதர்சினி – மன்னார்)
வீரவேங்கை மலர்விழி (கனகலிங்கம் சுதாயினி – கிளிநொச்சி)
வீரவேங்கை கோமதி (சின்னத்துரை சர்மிலா – யாழ்ப்பாணம்)
வீரவேங்கை கடலரசி (திருப்பதி திலகராணி – கிளிநொச்சி)
வீரவேங்கை நவானி (ஆண்டிசுந்தரம் காந்திமதி – முல்லைத்தீவு)
வீரவேங்கை கலைவாணி (ரங்கசாமி கமலினி – கிளிநொச்சி)
வீரவேங்கை கமலேந்தினி (சுந்தரமூர்த்தி சுதாமதி – திருகோணமலை)
வீரவேங்கை விமலகாந் (கதிர்காமப்போடி கிருபராஜா – மட்டக்களப்பு)
வீரவேங்கை ஈழத்தமிழன் (பத்மநாதன் மதியழகன் – யாழ்ப்பாணம்)
வீரவேங்கை வெண்ணிலவன் (கணபதிப்பிள்ளை பத்மநாதன் – யாழ்ப்பாணம்)
வீரவேங்கை சோழன் (பாலசுப்பிரமணிம் ருசிகாந்தன் – யாழ்ப்பாணம்)
வீரவேங்கை மணி ( தமிழ்க்கவி) (ஏகாம்பரம் சிவகுமாரி – யாழ்ப்பாணம்)
வீரவேங்கை வெண்மலர் ( அல்லி) (யோகராசா கமலாதேவி – யாழ்ப்பாணம்)
வீரவேங்கை சோபா (நாராயணசாமி லதா – யாழ்ப்பாணம்)
வீரவேங்கை பேரமுதன் (சிவம் சிவரூபன் – யாழ்ப்பாணம்)
வீரவேங்கை கோன் (சண்முகம் பாலமுருகன் – யாழ்ப்பாணம்)
வீரவேங்கை தேமாங்கனி (மாணிக்கம் சரஸ்வதி – யாழ்ப்பாணம்)
வீரவேங்கை பிருந்தா (விஜயகாந்தன் ரேவதி – யாழ்ப்பாணம்)

போர்குயில் மேஜர் சிட்டு நினைவில்….மேஜர் சிட்டு வீரவணக்கம்

தாயக விடுதலைப்போரில் தங்களை ஆகுதியாக்கிய மாவீரர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!

ltte veeravanakam 2

லெப். மாமா (பாலையா)

Lt Palaiya

லெப்டினன்ட் மாமா (பாலையா) வின் 25ம் ஆண்டு நினைவு வீரவணக்க நாள் இன்றாகும்.

21.07.1988 அன்று யாழ்மாவட்டம் காரைநகர்ப் பகுதியில் இந்திய இராணுவத்தின் சுற்றிவளைப்பில் எதிரியிடம் பிடிபடாமல் விடுதலைப் புலிகளின் கோட்பாட்டுக்கு அமைவாக சயனைற் விலையை உட்கொண்டு வீரச்சாவைத் தழுவிய லெப்டினன்ட் மாமா (பாலையா) அவர்களின் 25ம் ஆண்டு நினைவு வீரவணக்க நாள்.

தமிழீழத்தின் தங்கமண் அன்னியநெருபில் அழிந்துகொண்டிருக்கிறது. பேரினவாதிகளுக்கு எதிராக நாங்கள் நடத்திய தர்மயுத்தம் வெற்றியின் எல்லைகளை தொட்ட போதுதான் புதிதொரு அன்னியப்புயல் நம்மை ஆக்கிரமித்து அழிக்க வந்தது.

எங்கள் தாயகத்தின் பிறப்பிற்காகவே புலிகளின் இறப்புக்கள் தொடர்கின்றன.

தர்மம் எத்தனை நிர்ப்பந்தங்கள் ஏற்ப்பட்டாலும் சரணாகதி அடையமாட்டாது.

தமிழீழ மண்ணில் இந்திய இராணுவம் விதைத்த அவலத்தின் தொடராக இந்த மாவீரனின் வீரமரணத்தையும் தமிழீழ மக்களின் மனதில் மீளாத் துயராக விதைத்துச் சென்றது.

தமிழீழ வேள்விவேதத்தில் இலட்சிய உறுதியுடன் இலங்கை – இந்திய இராணுவத்துடன் போரிட்டு வீரமரணம் அடைந்த அனைத்து மாவீரர்களுக்கும் வீரவணக்கம்.

கடற்கரும்புலி கப்டன் ஜெயாஞ்சலி

03.07.2000ம் அன்று தமிழீழக் கடற்பரப்பில் வைத்து சிறிலங்கா கடற்படையினர் மீதான தாக்குதல் முயற்சி ஒன்றில் வீரச்சவைத் தழுவிய கடற்கரும்புலி கப்டன் ஜெயாஞ்சலியின்  ஆண்டு நினைவு நாள்

Bt Cap Jeyansali

எடித்தாரா கட்டளைக் கப்பல் தாக்குதலில் வீரகாவியமான மாவீரர்கள் வீரவணக்கம்

16.07.1995 அன்று காங்கேசன்துறை துறைமுகத்தில் வைத்து சிறிலங்கா கடற்படையின் “எடித்தாரா” கட்டளைக் கப்பலைத் தகர்த்து மூழ்கடித்து வீரகாவியமான மூன்று கடற்கரும்புலிகள் உட்பட்ட 14 மாவீரர்களின்  ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.

kks habour attack lttes

16.07.1995 அன்று காங்கேசன்துறை துறைமுகத்தினுள் ஊடுருவிய கடற்கரும்புலிகளை உள்ளடக்கிய கடற்புலிகளின் தாக்குதல் அணி கடுமையான கடற்சமரின் நடுவே சிறிலங்கா கடற்படையின் “எத்தாரா” கட்டளைக் கப்பலை தகர்த்து மூழ்கடித்தது.

இந்த வெற்றிகர கடற்சமரில் மூன்று கடற்கரும்புலிகளும், கடற்சமரை வழிநடாத்திய கடற்புலிகளின் தாக்குதல் தளபதி லெப்.கேணல் நரேஸ், கடற்புலிகளின் மகளீர் படையணித் தளபதி லெப்.கேணல் மாதவி ஆகியோர் உட்பட 14 கடற்புலிகள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர்.

காங்கேசன்துறைமுகக் கடற்பரப்பில் வரலாறு காணாத சமர் 16 . 07 . 1995

அதிகாலை 01 : 00 மணி துறைமுகத்தின் உள்ளே ” எடித்தாரா ” கட்டளைக் கப்பலோடு , 3 தரையிறங்கு கலங்கள் ( Landing Crafts ) , மேலும் ஒரு கப்பல் என்பன இராணுவத் தளபாடங்களை இருக்கிக்கொண்டிருந்தன.

துறைமுகத்தின் வெளிப்பகுதியில் போர்க்கலங்கள் பலம் வாய்ந்த வியூகமிட்டு வளைத்து நின்றன.

” டோறா “ அதிவேகத் தாக்குதற் படகுகள் எட்டு , ” சங்காய் “ பீரங்கிப் படகுகள் மூன்று.

இரும்புக் காவல்.

அலைமடியில் தவழ்ந்து அமைதியாகி நெருங்கின கடற்புலிகளின் படகுகள்.

” சுலோஜன் நீரடித் தாக்குதற் பிரிவின் “ கரும்புலி வீரர்களான நியூட்டனும் – தங்கனும் வெடிகுன்டுகளோடு ” எடித்தாராவை ” அண்மித்தார்கள்.

ஆரம்பித்தது உக்கிரமான சண்டை.

காங்கேசன் கடற்பரப்பு போர்க்களமாய் மாறியது.

எம் போராட்ட வரலாறு தன்னில் பதித்துக் கொண்ட மிகப் பெரும் கடற்சமர்.

” எடித்தாராவின் “ அடித்தளத்தை , வெடிகுன்டுகளோடு அணைத்து கரும்புலிகள் சிதறடித்தார்கள்.

அது நான்கு வரிகளில் எழுதிவிடும் சம்பவம் அல்ல. நாற்பதாண்டு காலச் சரித்திரத்தை மாற்ற அவர்கள் புரிந்த அரும்பெரும் செயல்….!

இராப்பகலாய் பட்ட கஷ்டங்களின் பெறுபேறு. வார்த்தைகளால் வர்ணிக்க இயலாத அளப்பரிய உயிர்த்தியாகம்.

” பெண் கரும்புலிகளின் ” ஒரு வெடிகுண்டு படகு , தரையிறங்கு களம் ஒன்றை நெருங்கியது.

அசுரவேகம். மிக அண்மைய…..!

போர்களங்கள் அபூர்வமானவை. அவற்றின் பொதுவான இயல்பு என்னவெனில் – நினைத்துப்போவது நிகழாமல் போகும் , நிகழ்ந்துவிடுவது நினையாதாய் இருக்கும்.

வெடிகுண்டுப்படகு சன்னங்கள் பாய்ந்து சேதப்பட்டுவிட தரையிறங்குகலம் தாக்கப்படவில்லை.

ஐந்து மணிநேரச் சரித்திரச் சமர் முடிந்து விடியும்பொழுதில் எங்கள் தாக்குதலணிகள் களத்தை விட்டு வெளியேறினர்.

கடலில் தவழும் அலையே நான்

கடற்கரும்புலி மேஜர் தங்கன்

கடற்கரும்புலி மேஜர் நியூட்டன்

கடற்கரும்புலி கப்டன் தமிழினி

நியூட்டன் – தங்கன் – தமிழினி ஆகிய கடற்கரும்புலிகள் வரவில்லை.

Kaangkesan-Thurai-Attack

பூநகரிச் சமரின் போது நாகதேவன் துறையில் கைப்பற்றிய விசைப்படகு ஒன்றும் முழ்கிப்போனதால் திரும்பி வரவில்லை…..!

அவர்களின் விபரம் வருமாறு

கடற்கரும்புலி மேஜர் தங்கம் (வீரய்யா மயில்வாகனம் – பதுளை – சிறிலங்கா)
கடற்கரும்புலி மேஜர் செந்தாளன் (நியூட்டன்) (பிரான்சில் டக்ளஸ் – குருநகர், யாழ்ப்பாணம்)
கடற்கரும்புலி கப்டன் தமிழினி (சிவப்பிரகாசம் கனிமொழி – வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்)
கடற்புலி லெப்.கேணல் சந்திரன் (நரேஸ்) (சிவராஜசிங்கம் நவராஜன் – திருகோணமலை)
கடற்புலி லெப்.கேணல் மாதவி (திருநாவுக்கரசு கலைச்செல்வி – இன்பருட்டி, யாழ்ப்பாணம்)
கடற்புலி கப்டன் வில்வன் (ஏரம்பமுர்த்தி ஜீவானந்தன் – பெரியபோரதிவு, மட்டக்களப்பு)
கடற்புலி கப்டன் கமலம் (குழந்தைவேல் சிறரஞ்சினி – காரைநகர், யாழ்ப்பாணம்)
கடற்புலி கப்டன் தாயகி (மகாலிங்கம் ரஞ்சினிதேவி – யாழ்ப்பாணம்)
கடற்புலி லெப்டினன்ட் பூமதி (கனகரட்ணம் சாந்தனி – வல்வெட்டிதுறை, யாழ்ப்பாணம்)
கடற்புலி லெப்டினன்ட் தவமலர் (துரைசிங்கம் கேமாவதி – மானிப்பாய், யாழ்ப்பாணம்)
கடற்புலி லெப்டினன்ட் சோபிதா (தர்மலிங்கம் மாலதி – பருத்தித்துறை, யாழ்ப்பாணம்)
கடற்புலி 2ம் லெப்டினன்ட் நித்தியா (மாரிமுத்து மஞ்சுளா – மாங்குளம், முல்லைத்தீவு)
கடற்புலி 2ம் லெப்டினன்ட் அருள்மதி (வெற்றிவேலாயுதம் விஜந்திரராணி – யாழ்ப்பாணம்)
கடற்புலி 2ம் லெப்டினன்ட் நதியரசி (செல்வராசா சாந்தவதனி – முள்ளிவாய்க்கால், முல்லைத்தீவு)



***

மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட துணைத் தளபதி லெப்.கேணல் றீகனின் 23 ம் ஆண்டு நினைவு வீரவணக்க நாள் இன்றாகும்.

Lt Col Reegan

மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட துணைத் தளபதி லெப்.கேணல் றீகன்

16.07.1990 அன்று மட்டக்களப்பு மாவட்டம் பாலையடிவெட்டைப் பகுதியில் சிறிலங்கா படையினருடனான மோதலில் வீரச்சாவைத் தழுவிய மட்டக்களப்பு – அம்பாறை மாவட்ட துணைத்தளபதி லெப்.கேணல் றீகன் அவர்களின் 23 ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.

மட்டக்களப்பு – அம்பாறை மாவட்டங்களில் சிறிலங்கா, இந்தியப் படைகளிற்கு எதிராக பல்வேறு வெற்றிகரத் தாக்குதல்களை வழி நடாத்தியவர் தளபதி லெப்.கேணல் றீகன் அவர்கள்.

இவரின் தாக்குதல்களினால் பல நூறு சிறிலங்கா, இந்தியப் படையினர் உயிரிழந்தும், காயமடைந்தும் களமுனைகளிலிருந்து அகற்றப்பட்டிருந்தனர்.

தென் தமிழீழத்தின் புகழ் பூத்த தளபதிகளான கேணல் ரமேஸ், கேணல் ரமணன், கேணல் ராம் ஆகியோர் லெப்.கேணல் றீகன் அவர்களின் படையணியில் இருந்து அவரினால் வளர்த்தெடுக்கப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

16.07.1990 அன்று பாலையடி வெட்டைப்பகுதியில் எதிர்பாராதவிதமாக சிறிலங்கா படையினருடன் இடம்பெற்ற மோதலில் லெப்.கேணல் தளபதி றீகன் வீரச்சாவைத் தழுவிக் கொண்டார்.

தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த வீரவேங்கைகளை இன்றைய நாளில் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூருகிறோம்.

தளபதி சீலன்:அதோ அந்தப் பறவை போல…

(தமிழீழவிடுதலைப்புலிகள் அமைப்பின் முதலாவது தாக்குதற்பிரிவு பொறுப்பாளனாக இருந்த லெப்.சாள்ஸ்அன்ரனி(சீலன்) முப்பதாவது நினைவுதினம் 15.07.83அன்று வருகின்றது.அவனின் நினைவு சுமந்த ஆக்கம் இது)

Lt Seelan

சிலவேளைகளில் மௌனத்தைப்போல ஆழமான மொழி வேறெதுவும் இல்லாமல் இருக்கும். ஆயிரம் வார்த்தைகளில் சொல்லப்படும் உணர்வை ஒருசில நிமிட மௌனம் உயிர்ப்பாக வெளிப்படுத்திவிடும்.

இன்றைக்கு முப்பது வருடங்களுக்கு முன்னர் 1983ம்ஆண்டின் இதே யூலை மாதத்து 15ம் நாளில் நீர்வேலியில் ஒருஆசிரியரின் வீட்டில் அமைந்திருந்த தங்குமிடம் ஒன்றின் அறையில் அமர்ந்திருந்த தேசிய தலைவருக்கும் சில போராளிகளுக்கும் முன்னால் இரத்தம் வடியும் கை காயத்துடன் நின்றபடி ‘அருணா’ சொன்னதைக் கேட்டதும் சோகம், இழப்பு, பிரிவு, கவலை என்பவற்றைவிட நீண்ட மௌனமே நிலவியது. உயிரை உலுக்கும் மௌனமாக அது இருந்தது.

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தாக்குதல் பிரிவுத் வீரமரணம்’. எல்லோருடனும் அன்பாக நட்புடன் பழகும் சீலனின் மரணத்தை கேள்விப்பட்ட அந்தக் கணத்தினதும் அதன்பின் நீண்ட நிமிடங்களான மௌனமுமே அவனின் மரணத்தின் வலியை காட்டிநின்றது.

சீலன் பார்க்கும் முதல்க்கணத்திலேயே மனதுக்கு அண்மித்து வரக்கூடிய பேச்சும் பழக்கமும் தோற்றமும் அவனுக்கு. எழுபதுகளின் இறுதியில் திருமலையில் இருந்து இயக்கத்துக்கு வந்தவன். ஆனால் சீலன் இயக்கத்துக்கு வர முன்னரேயே அவனின் சிங்களதேசக்கொடி எரிப்பு பற்றிய நுணுக்கமான திட்டமிடலும், வீரமும் அமைப்புக்குள் அதிகமாக பேசப்பட்டதாக இருந்தது.

ஆதலால் சீலன் இயக்கத்துக்கு வரும்போதே அதிகம் அறியப்பட்டவனாகவே வந்து சேர்ந்தான். திருமலை பாடசாலையில் ஏற்றப்பட்ட சிங்களதேசகொடிக்குள் ‘பொசுபரசை’ எப்படி வைத்தான்’ என்பதே அவனை முதலில் பார்த்து பழகும் இயக்க உறுப்பினர்கள் கேட்கும் கேள்வியாக இருந்தது. அவனும் சலிப்பு இல்லாமல் எல்லோருக்கும் அழகாக சொல்லியும் காட்டுவான்.சீலனின் உடல்மொழி மிகவும் அற்புதமானது.அதுவே ஆயிரம் கதை சொல்லும்.

இயல்பாகவே சீலனுக்குள் உறுதியான இலட்சியப்பற்றும் மக்கள் மீதான புரிதலும் நிறைந்தே காணப்பட்டது. அவன் தனது பாதைபற்றியும் அதனிடையேயான பெரும் வலிகள் பற்றியும் மிகத்தெளிவாக புரிந்தவனாகவே இருந்தான். இதைவிட வேறு பாதை எதுவும் இல்லை என்பதிலும் அவன் குழப்பமின்றியே இருந்தான்.

அவன் எந்தப்பொழுதிலும் அறைக்குள் சுருண்டு கிடந்ததையோ விரக்தியுடன் பேசாமல் இருந்ததையோ எவருமே பார்த்திருக்க முடியாது. செயல் மட்டுமே அறிந்த ஒரு மறவன் அவன். அதிகாலை எழுந்து முதல் இரவு படுக்கபோகும் வரைக்கும் விடுதலைக்கான ஏதாவது ஒரு வேலைத்திட்டம் சம்பந்தமாக அசைந்துகொண்டே இருந்தவன்.

ஒன்றில் தாக்குதலுக்கான தரவுகள் எடுக்கும் பணியில் அலைவான். இல்லையென்றால் தாக்குதலில் எடுத்த ஆயுதத்தை பாதுகாப்பான இடத்தில் பாதுகாப்பாக வைப்பதில் திரிவான். அதுவும் இல்லையென்றால் யாராவது ஒருவருடன் விடுதலைப்போராட்டத்தின் அவசியம் பற்றி பேசிக்கொண்டு நிற்பான். அவனின் பேச்சும் முழுமூச்சும் தாயக விடுதலையே என்று இருந்தது.

இரண்டு முறை பெரிய காயங்களை அவன் போராட்ட வாழ்வில் பெற்று சிகிச்சை எடுத்துக் கொண்டிருந்த காலத்தைத் தவிர்ந்த அனைத்து தாக்குதல்களிலும் தலைமையாளனாக நின்றவன் சீலன். விடுதலைப் போராட்டத்தின் வளைவுகளில் இருந்து வேகம் பெறவும் தடைகளை நீக்கவும் பின்னர் வந்த காலங்களில் தலைவரால் அறிமுகம் செய்யப்பட்ட ‘தற்கொடை’ முறையை முதலில் அமைப்புக்குள் ஒரு திட்டமாக வெளிப்படுத்தியவன் லெப்.சீலன் ஆகும்.

1982ம் ஆண்டில் சென்னையில் தலைவருக்கும் உமாமகேஸ்வரனுக்குமான பாண்டிபஜார் துப்பாக்கி மோதலில் தலைவர் கைதுசெய்யப்பட்டு சென்னை சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

விடுதலைப்புலிகளின் தலைவரும் மற்றவர்களும் கைது செய்யப்பட்டு சிறைவைக்கப்பட்டது அறிந்து அந்நேரத்து சிங்கள சனாதிபதி ஜெயவர்த்தனா தனது சகோதரனை இந்தியாவுக்கு அனுப்பி போராளிகளை சிறீலங்காவுக்கு நாடு கடத்தும் கோரிக்கையை முன்வைத்தார். இந்தியாவும் அதை பரிசீலிப்பதாக சொல்லி இருந்தநேரம் அது. அந்த நேரம் மதுரையில் இருந்த சீலன் சிறையில் இருந்த தலைவருக்கு ஒரு கடிதம் எழுதினான்.

’தலைவரை சிறீலங்காவுக்கு அனுப்பும் முடிவை இந்தியா எடுத்தால் அதை எதிர்த்து கடிதங்களையும், துண்டுப் பிரசுரங்களையும் எடுத்துச்சென்று சென்னையின் மிக உயர்ந்த கட்டிடமான ‘எல்.ஐ.சி’ க்கு மேல் இருந்து குதிக்ப்போவதாக அதில் குறிப்பிட்டு இருந்தான். போராட்டத்தை தேக்கநிலையில் இருந்து மேல் தள்ளும் கரும்புலிகளின் போர்முறை போலவே முதலில் இது சீலனால் வெளிப்பட்டது.

தமிழர்கள் பலமற்று இருப்பதால்தான் எதிரி எம்மீது கொடும் வெறியாட்டத்தை ஏவிவிடுகிறான். பலமான இனமாக எமது இனம் மாறவேண்டுமானால் ஆயுதங்களை எதிரியிடம் இருந்து பறிக்கவேண்டும் என்று பாடுபட்டவன்.

பொன்னாலை பாலத்தில் கடற்படை வாகன அணிமீதான தாக்குதல் முயற்சி,

நெல்லியடி சந்தியில் சிறீலங்காகாவல்துறை வாகனம்மீது தாக்குதல், சாவகச்சேரிகாவல் நிலையம் மீதான தாக்குதலும் தகர்ப்பும், முதன் முதலில் சிங்கள ராணுவம் மீது விடுதலைப்புலிகள் நடாத்திய தாக்குதல், கந்தர்மடம் வாக்குசாவடி மீதான தாக்குதலும் ராணுவ அழிப்பும்… என்று மிகநீளமானது அவனின் களவரிசை.

தாக்குதலுக்கான அனைத்து வளங்களையும் அவனே முன்னின்று செயற்படுத்துவான். தாக்குதலுக்கான நாள் முடிவானது முதல் நித்திரை இல்லாமலும் ஓய்வு இல்லாமலும் சீலனும் அவனின் சைக்கிளும் இயங்கிக்கொண்டே இருக்கும். எல்லா நடவடிக்கைகளிலும் ஒப்புவமை இல்லாத வீரத்தையும் நுண்அறிவையும் வேகத்தையும் காட்டிவன் சீலன். எமது மக்கள் அனைவருக்கும் போராட்டத்தின் அனைத்து விளக்கங்களும் கொடுக்கப்படவேண்டும் என்பதில் மிகவும் விடாப்பிடியாக செயற்பட்டவன்.

சிங்களபடைகளால் மிகவும் தேடப்பட்டவனாக அவன் விளங்கிய காலத்தில்கூட தினமும் பல்கலைகழகத்தினுள் சென்று அங்கும் யாருனாவது போராட்ட நடைமுறை பற்றியும் நகர்வு பற்றியும் கதைத்துக்கொண்டிருந்தவன் சீலன். அவன் மரணிப்பதற்கு ஆறு ஏழு மாதங்களுக்கு முன்னர் தலைவருக்கு இந்தியாவுக்கு எழுதிய கடிதத்தில் ‘போராளிகளை பார்த்து ஒதுங்கிய மக்கள் எல்லோரும் இப்போது போராளிகளாக மாறிவருகின்றனர்’ என்று எழுதிய கடிதத்தில் எமது மக்களின் தெளிவுபற்றிய அவனின் பார்வை புலப்படுகின்றது.

அவனின் போராட்ட வாழ்வில் அவன் மிகவும் அலைக்கழிந்தது அறைகள் எடுப்பதற்காகத்தான். தேடப்படும் போராளிகள் தங்கி இருந்து போராட்டத்தை முன்னெடுப்பதற்கு ஏதாவது தங்குமிடம் தேவை. வீடுகளை வாடகைக்கு எடுக்க முடியாத பொருளாதார நிலை அமைப்புக்கு அப்போது. அறைகள்தான் எடுக்க முடியும். அதுவும் பல்கலைக்கழகத்தில் படிப்பதுபோன்று, அல்லது வேறு படிப்பு படிப்பது போன்றுதான் எடுக்கக்கூடிய நிலை. எடுக்கும் அறையில் எந்த நேரமும் இருந்தால் வீட்டு உரிமையாளனுக்கு சந்தேகம் வரும். வேறு யாரும் அடிக்கடி வந்து போனாலும் பிரச்சனைதான். இதனால் எந்த இடத்திலும் தொடர்ச்சியாக நீண்டகாலம் தங்கி இருக்க முடிந்ததில்லை.

அப்பையா அண்ணை இயக்கத்துக்கு வந்த பின்னர் அவரை ‘சித்தப்பா’,பெரியப்பா என்று உறவுசொல்லி அறைகளை வாடைக்கு எடுக்க முடிந்தது. இப்படித்தான் ஒருமுறை தேங்காய் வியாபாரம் செய்பவர்கள் என்று சொல்லி அரியாலைப்பகுதியில் ஒரு வீட்டின் அறைகளை வாடகைக்கு எடுத்திருந்தார்கள். ஒரு சிறிய பச்சைநிற வாகனத்தில் தேங்காய்களை வாங்கி உரித்து சந்தையில் விற்பவர்கள்போல சீலனும், அப்பையா அண்ணையும், சங்கரும் வேறும் ஓரிரண்டு போராளிகளும் அங்கு இருந்தார்கள்.சீமேந்துதொழிற்சாலையில் வேலைசெய்பவர்கள்போல,பாடசாலைஆசிரியர்போல,பல்கலைகழகமாணவன்போல என்று எத்தனை எத்தனை முகங்களுடன் இந்த விடுதலைப்போராட்டகளத்தில் கரந்துறைந்து திரிந்தான் சீலனின் தனித்த இயல்புகளில் மிகச்சிறப்பானது என்னவென்றால் எதையும் ஆழமாக முழு ஈடுபாட்டுடன் செய்வது ஆகும். இதனை அவன் தனது தாக்குதல்களின்போது மட்டும் இல்லாமல் எல்லாவிடங்களிலும் வெளிப்படுத்தியவன்.

ஒருமுறை தாக்குதல் ஒன்றின் போது மக்களுக்கு கொடுப்பட இருந்த துண்டுப்பிரசுரத்தை வடிவமைக்கவும் அதில்வரும் வசனங்களை தெரிவுசெய்வதிலும் மிக நீண்டபொழுதுகளை செலவழித்தவன். சிங்கள ராணுவவீரனுக்கு ஒரு விடுதலைப்புலி வீரனின் கடிதம் துண்டுப்பிரசுரம் முதன்முதலில் எம்மால் வடிவமைக்கப்பட்டபோது அந்த துண்’டுபிரசுரத்தின் அநேகமான வசனங்கள் சீலனின் தெரிவாகவே இருந்தன.எதனையும் தெளிவாக இலகுவில் புரியக்கூடியதாக சொல்லவோ எழுதவோ வேண்டும் என்பதே சீலனின் முக்கிய கருத்தாகும். மக்களை தெளிவானவர்கள் ஆக்கவேண்டும் என்று எப்போதும் சொல்லிக்கொண்டு இருப்பான். நிறைய புத்தகங்களை வாசித்தான். அவனின் இருப்பிடம் எப்போதும் புத்தகங்களால் நிறைந்தே காணப்பட்டன.

சில வேளைகளில் ஆயுத நடவடிக்கைகளின்போதும் தாக்குதல் நடவடிக்கைகளின் போதும்கூட சீலன் அங்கு நிற்கும் பொதுமக்களுக்கு போராட்ட நோக்கம் பற்றியும் விடுதலைப்புலிகள் பற்றியும் உரத்தகுரலில் கூறத்தொடங்கிவிடுவான். ஒரு கையில் இயந்திரத் துப்பாக்கியுடன் நின்றுகொண்டு அவன் சொல்லும்போது மக்களும் ஆர்வமாக கேட்டார்கள். ஒருமுறை பருத்தித்துறையில் 1983ம் ஆண்டுப்பகுதியில் சிங்களகட்சி ஒன்றின் பொறுப்பாளர் மீதான நடவடிக்கையின்போது அருகில் இருந்த பொதுமகன் ஒருவரும் தவறுதலாக காயமடைந்தபோது நடுத்தெருவில் வீழ்ந்துகிடந்த அந்த பொதுமகனிடம் பல நூறு மக்கள் பார்த்துநிற்க சீலன் மன்னிப்புக்கேட்டதுடன் தனக்கும் போராட்டத்தின்போது இப்படியாக தவறுதலான வெடிக்காயங்கள் ஏற்பட்டன என்று தனது காயம்பட்ட நெஞ்சை திறந்துகாட்டி விளக்கமும் சொன்னான்.

தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் ஒவ்வொரு சிறிய அசைவையும் வளர்ச்சியையும் அவன் மிக அவதானமாக திட்டமிட்டு செயற்படுத்தினான். தலைவருக்கு அடுத்தபடியாக இந்த அமைப்பின் வளர்ச்சியை செப்படினிட்டவன் சீலன் ஆகும். அந்த இறுதி நேரத்திலும் தமிழினத்தின் விடுதலைக்கான ஆயுதம் எதிரியின் கையில் வீழ்ந்துவிடக்கூடாது என்பதற்காக ‘தன்னை சுட்டுவிட்டு ஆயுதத்துடன் தப்பும்படி’ அருணாவுக்கு உத்தரவிட்டு வீரமரணத்தை மிகத்தெளிவுடன் ஏற்றுக்கொண்டவன்.

இன்றைய பொழுதும் அப்போது சீலன் போராடியகாலத்தைப் போன்றே எதிரியால் முழுதுமாக சூழப்பட்டு உள்ளது. அன்றையபொழுதைவிட குழப்பமானதாக இன்றையநிலை இருக்கின்றது. ஆனாலும் சீலன் இப்போது இருந்தால் அன்றைய நாட்களைப் போலவே அதே உறுதியுடனும் தெளிவுடனும் எல்லோருக்கும் வழிகாட்டி முன்னுக்கு சென்றுகொண்டிருப்பான்.

இன்றுவரை சீலனின் ஏதாவதுஒரு நினைவு இந்த போராட்டத்தின் ஏதாவது ஒரு அசைவில் இருந்துகொண்டே இருக்கிறது. ஏனென்றால் அவன் மிக ஆழமாகவும் உண்மையாகவும் இந்த தாயக விடுதலையை நேசித்தவன். அவனுடைய விடுதலை மீதான விருப்புத்தான் அவனை ஓய்வில்லாமல் போராடவைத்தது. அவனுக்கு நாங்கள் ஆயிரம் ஞாபகக்குறிப்புகளை பெரும் புத்தகங்களாக எழுதலாம். அதைவிடசெறிவான கவிதைகளை வடித்து அவனின் தியாகத்தை போற்றலாம்.

இவை எல்லாவற்றையும்விட தேசியத் தலைவர் தனது முதன் முதலான பத்திரிகைப் பேட்டியான ‘SUNDAY’ க்கு 1984ம் ஆண்டில் கொடுத்த பேட்டியில் 1983ம் ஆண்டு யூலை 23ம் திகதி திருநெல்வேலியில் சிங்களராணுவ அணி மீது தொடுக்கப்பட்ட தாக்குலானது சீலனது மரணத்துக்கு பதிலடியா? என்று கேட்கப்பட்டபோது மிகத்தெளிவாக தலைவர் கூறுகிறார்.

‘எங்களைப் பொறுத்தவரையில் சார்ல்ஸ் அன்ரனி (சீலன்) போன்ற உன்னதப் புரட்சிவாதியின், விடுதலை வீரனின் உயிருக்கு ஒருபோதும் பன்னிரண்டு ராணுவ வீரர்களின் உயிர்கள் ஒருபோதும் ஈடாகாது’ என்று. எக்காலத்திலும் ஈடும் இணையும் இல்லா பெரும் போராளியாகவே சீலன் திகழுவான். எங்களின் மக்களுக்கு சுதந்திரவாழ்வை பெற்றுத்தரப் போராடிய அந்த வீரன் தனது பெருவிருப்ப பாடலாக எந்நேரமும் பாடிய பாடலைப்போன்றே
அவனும்..

‘அதோ அந்த பறவை போல…’

திருமலையின் ஒரு வறிய குடும்பத்தில் இருந்து சிறகுவிரித்து தாயகவிடுதலைக்காக களமாடி மீசாலை-கச்சாய் வெளியில் மரணித்த அந்த விடுதலைப் பறவையின் சிறகசைப்புகள் இன்றும் ஏதோ ஒரு வடிவில் அதிர்ந்துகொண்டுதான் இருக்கின்றன. தாயகம் மீட்கப்படும்வரை அந்த பறவை ஓயாது.

அதோ அந்தப் பறவைபோல பாடவேண்டும்
இதோ இந்த அலைகள் போல ஆடவேண்டும்
ஒரே வானிலே ஒரே மண்ணிலே
ஒரே கீதம் உரிமைகீதம் பாடுவோம்’

– ச.ச.முத்து

Lt seelan and v.ananth

கரும்புலிகள் :அடிமுடி தெரியாத அற்புத மாமனிதர்கள்

black tigers day july 5

தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் 1987ம் ஆண்டு யூலை மாதம் 05ம் நாள் கரும்புலி கப்டன் மில்லரின் தாக்குதலுடன் கரும்புலிகள் சகாப்தம் தொடங்கிவைக்கப்பட்டது.

நெல்லியடி மத்திய மகாவித்தியாலயத்தில் நிலைகொண்டிருந்த ஸ்ரீலங்காப் படையினர் மீது மில்லர் கரும்புலித் தாக்குதல் நடத்தி இன்று 26 ஆண்டுகள் கடந்துவிட்டன.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் ஒவ்வொரு திருப்புமுனைகளிலும் கரும்புலிகளின் நாமம் உள்ளது. அந்தவகையில் கடலிலும் எதிரிக்கு தக்க பாடத்தை கொடுத்தார்கள் கடற்கரும்புலிகள்.Black Tigers strong people

இவ்வாறு விடுதலைப்போரின் போராட்டப் பாதைகளில் தடைநீக்கிகளாக கரும்புலிகள் காணப்பட்டார்கள். 2000 ஆம் ஆண்டு கட்டுநாயக்கா வான்படைத்தளம் மீது சென்று கரும்புலித் தாக்குதல் நடத்தப்பட்டது.

இவ்வாறு ஸ்ரீலங்காவின் தென்பகுதியில் பல நிழற்கரும்புலிகள் தாக்குதல்களை நடத்தி வீர வரலாறானார்கள்.

2007ம் ஆண்டு அனுராதபுரம் வான்படைத்தளம் மீது எல்லாளன் நடவடிக்கை என பெயர் சூட்டப்பட்ட கரும்புலித் தாக்குதலில் 21 கரும்புலி மறவர்களால் மேற்கொள்ளப்பட்டது.black tigers day 3

இத்தாக்குதல் தரையிலும் கடலிலும் நடத்தப்பட்டுக் கொண்டிருந்த அதேவேளை, 2009 ஆம் ஆண்டு வான் கரும்புலிகளும் தாக்குதலை நடத்தினார்கள்.
முள்ளிவாய்க்கால் மண்ணிலும் எத்தனையோ கரும்புலிகள் வீர வரலாறானார்கள்.

பெயர் குறிப்பிடாத கல்லறைகளில் உறங்கும் கரும்புலிகள்

black tigers day 4

பல கரும்புலி வீரர்கள் இன்று பெயர் குறிப்பிடப்படாத கல்லறைகளில் அநாமதேயமாக உறங்கிய போதும் அவர்களது அற்புதமான சாதனைகள் வாரலாற்றுக் காவியங்களாக என்றும் அழியாப் புகழ் பெற்றுவாழும்.

– தமிழீழத் தேசியத் தலைவர் ,மேதகு வே.பிரபாகரன்.

எழுத முடியாத காவியங்கள் எ ப்படி இவர்களுக்கு முகங்களில்லையோ, முகவரியில்லையோ அதேபோலத்தான் எத்தைகைய அறிவாலும், எத்தகையஞானத்தாலும் கணிப்பீடு செய்யக்கூடிய வகையில் இவர்களது உள்ளகமும் இல்லை. இங்கே எடுதப்பட்;டுள்ளவை எல்லாம் இவர்களோடிணைந்த சில சம்பவங்கள் மட்டுமே. அந்தச் சம்பவங்களினூடு, உங்களால் முடிந்தால் அவர்களது மனவுணர்வுகளை மதிப்பீடு செய்து கொள்ளுங்கள். அவர்களது சிந்தனைப் போக்கின் தன்மைகளைஉய்தறிந்து கொள்ளுங்கள் தனிமனித அபிலாசைகளுக்கு அப்பால் சுயத்தின் சிறைகளை உடைத்துக் கொண்டு அவர்களது சிந்தனையோட்டம் விரிந்தபொழுது தமதுடலோடு, தமதுயிரோடு ‘தம்மையே தியாகம் செய்யத் துணிந்தவர்கள் அவர்கள்.

ஓயாத எரிமலையாக சதா குமுறிக் கொண்டிருந்த நெஞ்சுக்குள் ஆற்ற முடியாத தாகமாக எழுந்து கொண்டிருந்த வேட்கையைத் தணிக்க, எதுவும் செய்யவும், எங்கேயும் செய்யவும் தயாரான நெஞ்சுரத்தோடு அவர்கள் பயணம் போனார்கள். ஒரு மாறுபாடன முற்றிலும் எதிர்மாறான தள நிலைமைக்குள் நின்று அவர்கள் எவ்விதமாக எழுந்து கொண்டிருந்த வேட்கையை தணிக்க, எதுவும் செய்யவும் எங்கேயும் செய்யவும் தயாரான நெஞ்சுரத்தோடு அவர்கள் பயணம் போனார்கள்.
ஒரு மாறுபாடன முற்றிலும் எதிர்மாறான தள நிலைமைக்குள் நின்று அவர்கள் எவ்விதமாக இவற்றை சாதித்துஇருப்பார்கள் என்பதை, ஆற அமர இருந்து, உள்ளத்தைத் திறந்து சிந்தித்துப் பாருங்கள். நெஞ்சு புல்லரிக்;கும், உயிர் வேர்க்கும். அவர்கள் கண்களுக்கு முன்னால் விரி;ந்து கிடந்த இன்றைய ஷநவீன நாகரீகத்தின் தாலாட்டில்தான் உறங்கினார்கள். புலிகளின் ஒழுக்க வாழ்வின் உயரிய மரபை மீறிவிடச் செய்யும் சூழ்நிலைக்குள் உலாவந்தார்கள்.

இவற்றுக்குள் வாழ்ந்தும் எதற்கும் அசையாத இரும்பு மனிதர்களாக நெருப்பைக் காவித்திரிய எப்படி அவர்களால் முடிந்தது. வெளிப்படையாக அந்த உல்லாச வாழ்வோடு கலந்து சீவித்தபோதும், உள்ளுக்குள் இதய அறைகளின் சுவர்களுக்குள் தாயக விடுதலையின் வேட்கையை மட்டுமே சுமந்து கொண்டு பகைவனின் அத்திவாரங்களைக் குறிவைத்துத் தேடி அலையும் அப+வமான நெஞ்சுரம் எங்கிருந்து இவர்களுக்;குள் புகுந்தது. பகைவனை அழிக்கும் தனது நோக்கினை அடைவதற்காக, தன்னையழிக்கவும் துணிந்ந இந்த அதிசய மனவுணர்வுவை எப்படிஅவர்கள் பெற்றார்கள். தாயகத்திற்காக செய்யப்படும் உயிர் அர்பணிப்புகளில் ஏற்றத்தாழ்வுகள் கிடையாது என்பதுதான் உண்மை. ஆனாலும் இங்கென்றால் வெடி அதிரும் கடைசி நொடிப்பொழுது வரை பரிப+ரணமான ஒரு போர்ச் சூழ்நிலை. அந்த வீரனது மனநிலையை

அதே உறுதிப்பாட்டோடு பேணிக்கொண்டேயிருக்கும். ஆனால் அங்கு………… அது முற்றிலுமே ஒரு தலைகீழான நிலமை. மானிட இயல்புணர்வுகளைத் தூண்டி அவற்றுக்குத் தீனி போட்டு சுய கட்டுப்பாட்டை இழக்கச் செய்து மன உறுதிப்பாட்டைச் சிதைத்து விடக்கூடிய உல்லாசத்தின் மடி அது. அதில் படுத்துறங்கி பகை தேடி வேவு பார்த்;து ஓழுங்கமைத்து குறி வைத்து, வெடி பொருத்தி புறப்பட்டு, மனிதக்குண்டாகி………… எல்லாவற்றையும் தானே செய்வதோடு பகையழிக்கும் போது தன்னையழிக்கும் போதும் கூட தன்பெயர் மறுத்துப் புகழ் வெறுக்கின்ற தற்கொடை ஒரு அதியுயர் பரிமாணத்தை உடையது. உயிர் அர்பணத்தில் அது உன்னதமானது. அவர்களை நெறிப்படுத்தி வளர்த்தது எது.? உண்மையில் இவையேல்லாம் மேனி சிலிர்க்கச் செய்யும் விந்தைகளேதான். நம்புதற்கரிய அற்புதங்கள்தான்… மன ஒருமைப்பாட்டோடு தங்களைத் தாங்களே வழிப்படுத்தி, எங்கள் இயக்கத்தின் உயரிய விழுமியங்களைக் காத்த அந்த புனிதர்கள், தான் அழியப்போகும் கடைசிப் பொழுதுகளிலும் நிதானத்துடனும் விவேகத்துடனும் செயலாற்றி, பகைவனின் இலக்குகளை அழிப்பதில் மட்டுமே குறியாக இருந்த அந்தக் கரும்புலிகள், ” முகத்தை மறைத்து, புகழை வெறுத்து, மனித தியாகத்தின் இமயத்தை தொட்டு விட்ட ” பிரபாகரனின் குழந்தைகள் …..

வெளியில் தெரியாத அந்த அற்புத மனிதர்களையும் நாங்கள் நினைவிற்கொள்கின்றோம்.

LTTE leader V. Pirapaharan commemorating  Black Tigers 3

Up ↑