எந்தவொரு பயங்கரவாதச் சட்டமும் பிரசைகளுக்கெதிரானதாகும் என்பதோடு,’முற்போக்கானது’ என்று அழைக்கப்படமுடியாததாகும். இலங்கையின்; வரலாற்றை எடுத்துக் கொண்டால் பயங்கரவாதத் தடைச்; சட்டம் எமது பிரசைகள்மீது திட்டமிட்டு கட்டவிழ்த்துவிடப்பட்ட செயல்பாடுகளையே பயங்கரத்தின் பின்னணியாக ; கொண்டதாகும்;.

இலங்கை சுதந்திரம் அடைந்த நாளிலிருந்து இதுபோன்ற சட்டங்கள் பெரும் பாதிப்புக்களை மட்டுமல்ல, சிறுபான்மை சமூகத்தை நசுக்கும் ஒரு ஆயுதமாகவும் பாவிக்கப்படுகிறது.

இலங்கையின் பயங்கரவாதச் சட்டம் தொடர்பாக மிக விரிவாக ஆராய்கிறது இக்காணொலி,

ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி. தவராசா வாதாடிய வழக்குகள் 1982–2019

குட்டிமணி, தங்கத்துரை, ஜெகன் கைது 1982

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் கொலை முயற்சி வழக்கு

கீழ் கானும் வழக்குகளில் எதிரிகள் விடுதலை

முன்னாள்எதிர்க்கட்சித் தலைவர் அமிர்தலிங்கம் கொலை வழக்கில் எதிரி விடுதலை 1989

டென்மார்க் ;கல்லூரி மாணவி சித்திரா கைதும் விடுதலையும் 1996

டென்மார்க் ஊடகவியளாளர்கள்; நால்வர் கைதும் விடுதலையும் 1996

கலதாரி ஹோட்டல் குண்டுவெடிப்பு வழக்கில் எதிரி விடுதலை 1997

நாடாளுமன்ற உறுப்பினர்கள் நால்வருக்கு எதிராக வழக்கு 2008

ஊடகவியளாளர் பரமேஸ்வரி, சுசந்திகா கைதும் விடுதலையும் 221

ஊடகவியளாளர் யசிதரனும் வளர்மதியும் கைதும் விடுதலையும்

;மூத்த ஊடகவியளாளர் வித்தியாதரன் கைதும் விடுதலையும் 2009

பாதுகாப்புச் செயலாளர் கொலைமுயற்சி வழக்கில் முதல் எதிரி விடுதலை 2006

ரவிராஜ் கொலை வழக்கு 2006

ஜந்து கல்லூரி மாணவர்கள் கடற்படையினரால் கொழும்பில் கடத்தப்பட்ட வழக்கு 2009

மேஜர் முத்தலிப் படுகொலை வழக்கும் எதிரி விடுதலையும் பாரமி குலதுங்க கொலை வழக்கும் எதிரி விடுதலை 2018

முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லஷ;மன் ;கதிர்காமர் கொலை வழக்கும் விடுதலையும் 2018 .

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கொலை முயற்சிவழக்கும் விடுதலையும்

சரத் பொன்சேகா கொலை முயற்சி வழக்கும் விடுதலையும் 2018

பயங்கரவாதத் சட்டமும் நான்கு தசாப்தங்களும்; 1979 – 2019

பயங்கரவாதத் சட்டம் நீக்கப்படுமா?

காலனித்துவ ஆட்சிகாலத்திலிருந்து இந்நாட்டில் நிலவி வந்த ஆரோக்கியமான பாராளுமன்ற ஜனநாயக மரபுகளையும் நீதித் துறையின் சுதந்திரத்தையும் மனதிற்கொண்டு பார்க்கும்போது, இலங்கையில் பயங்கரவாத தடைச் சட்டம் தொடர்பான பெரும்பாலான விமர்சனங்கள் மிக நியாயமாகவே அச் சட்டத்தின் உள்ளடக்கங்கள், சர்வதேச மனித உரிமைகள் நியமங்களோடு அதன் ஒவ்வாத் தன்மை மற்றும் அமுலாக்கலில் அதன் துஸ்பிரயோகம் ஆகியவற்றின் மீது கவனத்தைச் செலுத்தியுள்ளதுடன்.குறிப்பாக மிகவும் துரதிஸ்டமானதாகக் காணப்படும் நாட்டின் ஜனநாயக அமைப்புகளின் துரிதமான மோசமடைதலை ; வெளிச்சமிட்டுக் காட்டியது காட்டுகிறதுஷஷ

எந்தவொரு பயங்கரவாதச் சட்டமும் பிரசைகளுக்கெதிரானதாகும் என்பதோடு,’முற்போக்கானது’ என்று அழைக்கப்படமுடியாததாகும். இலங்கையின்; வரலாற்றை எடுத்துக் கொண்டால் பயங்கரவாதத் தடைச்; சட்டம் எமது பிரசைகள்மீது திட்டமிட்டு கட்டவிழ்த்துவிடப்பட்ட செயல்பாடுகளையே பயங்கரத்தின் பின்னணியாக ; கொண்டதாகும்;.

பயங்கரவாதம் என்றால் என்ன என்பதற்கு வரைவிலக்கணப்படுத்தாத பயங்கரவாதத் தடைச் சட்டம் 1977 ஜுலை பொதுத் தேர்தலில் பதவிக்கு வந்த ஜே ஆர் ஜயவர்தன தலைமையிலான அரசாங்கத்தின் படைப்பாகும். 1978 ஆம் ஆண்டின் தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இயக்கம் மற்றும் அதனை ஒத்த இயக்கங்களை தடை செய்யும் சட்டமே பயங்கரவாத தடைச்சட்டமாகும்.; அத்தகைய கடுமையான சட்டம்; அவசரசட்டமாக ஒரே நாளில் 1979ஆண்டு ஜுலை 19ஆம் திகதி தற்காலிக சட்டமாக நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டு பின்னர் 1982ம் ஆண்டில்10ம் ;இலக்க சட்ட்த்தின்மூலம் நிரந்தரச் சட்டமாக்கப்பட்டு நான்கு தசாப்தங்;கள் முடிவடைந்து விட்டது

1979 ஆண்டிலிருந்து 30 ஆண்டுகளாக பயங்கரவாதத் தடைச்சட்டம்,; உரிமைப் போராட்டத்தில் தம்மை அர்ப்பணித்த இளைஞர்கள்இ யுவதிகள் மட்டுமின்றி வைத்தியர்கள்இ பொறியியளாளர்இ உதவி அரசாங்க அதிபர்இ ஊடகவியளாளர்கள்இ கோவில் தர்மகர்த்தாக்கள்இ கோவில் குருக்கள்இ கிரிஸ்தவமதப் போதகர்;கள்இ நாடாளுமன்ற உறுப்பினரின் செயளாளர். மாவட்ட அமைப்பாளர்இ பல்கலைக்கழக மாணவர்கள்இ அரச சார்பற்ற அமைப்பின் அதிகாரிகள்இ சுங்க திணைக்களத்தின் உயரதிகாரிகள், ஆசிரியர்கள்;;இ கிராம சேவையாளர்கள்இ தொழில் அதிபர்கள்;இ வர்த்தகர்கள்இ புலம்பெயர் தமிழர்கள்இ வங்கி முகாமையாளர்இ என சமூகத்தின் பல தரப்பட்டவர்களும் கைது செய்யப்பட்டு இவர்களுக்கு எதிராக வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன

; 1979ஆம் ஆண்டு தொடக்கம் 2009ம் ஆண்டுவரை முப்பது வருடங்களில்; யுத்தம் முடிவடைந்து விட்டதாக 2009 ஆம் மே மாதம் முதல் 2019ம் ஆண்டு அரசாங்கம் அறிவித்து பத்து வருடங்களை கடந்த பின்னரும்;, இந்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட அரசியல் கைதிகளில் ; பலர் இன்றும் நாட்டில் உள்ள பல சிறைச்சாலைகள், தடுப்பு முகாம்கள் என்பவற்றில் கால வரையறையின்றி தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றார்கள்;

பயங்கர வாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சட்டமா அதிபரினால் மேல் நீதிமன்றில் வ்ழக்குத் தாக்கல் செய்யப்பட்ட அரசியல் கைதிகள் வழக்கு விசாரணைகளில் அரசியல் கைதிகளுக்கு எதிராக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களை அரச தரப்பு நீருபிக்காமையினால் நீதிமன்றினால் விடுதலை செய்யப்பட்டார்களேயன்றி மகிந்த ராஜபக்சவின் அரசோ அல்லது நல்லாட்சி அரசோ வழக்குத் தாக்கல் செய்யப்பட்ட ஒரு அரசியல் கைதியையும் விடுதலை செய்யவில்லை சந்தேகத்தில் கைது செய்த சாட்சியங்கள் இல்லாத சில கைதிகளை அரசியல்வாதிகளை திருப்திபடுத்தும் நோக்கில் விடுதலை செய்தனர்

2015ம் ஆண்டு இந்த சட்டத்தை நீக்குவதாக இலங்கை அரசு ஜக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக்கு வாக்குறுதி வழங்கிய போதிலும் அவை நடைமுறைப்படுத்தாமல் தொடர்ந்தும் இச் சட்டம் வடக்கு கிழக்கு மலையகத்தில் வாழும் தமிழ் உறவுகளை குறிவைத்து செயல்படுத்தப்படுகின்றது முப்பது வருடங்களாக இடம்பெற்று வந்த யுத்தம் 2009 ஆம் மே மாதம் முடிவடைந்துவிட்டது என்று அரசாங்கம் பெருமையோடு பிரகடனப்படுத்தி;யதுடன். பயங்கரவாதத்தை அழித்துவிட்டோம். நாட்டில் சமாதானம் நிலவுகின்றது என்று அரசாங்கம் கூறுகின்றது. ஆயினும் பயங்கரவாதத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில்; பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுகின்றனர்

1971ஆம் ஆண்டின் மக்கள் விடுதலை முன்னணி கிளர்ச்சியில் ஈடுபட்டிருந்தவர்களை கையாள்வதற்காக 1972 ஆம் ஆண்டு குற்றவியல் நீதி ஆணைக்குழுக்கள் சட்டம் நிறைவேற்றப்பட்டது. தெற்கில் மக்கள் விடுதலை முன்னணி; ஆட்சியை கவிழ்க போராட்டம் நடாத்தினால் அது கிளர்ச்சி; வட கிழக்கு இளைஞர்கள் உரிமைப் போராட்டத்தில் ஈடுபட்டால்; அது பயங்கரவாதமா?

பயங்கரவாத தடைச் சட்டமும் நீதித் துறையின் வகிபாகமும்

சட்டங்களை நீதித்துறை மீளாய்வு செய்வது என்பது அரசியலமைப்பின் மேலாண்மையை பாதுகாககும் ஒரு பொறிமுறையாகும். பாராளுமன்றமே சட்டம் இயற்றும் மிகவும் உன்னதமான அதிகார பீடமாகும். எனினும், அது தனது சட்டம் இயற்றும் பணிகளை அரசியலமைப்பிற்கு உட்பட்டே பிரயோகிக்க வேண்டும.; ஏனெனில் பாராளுமன்றமே அரசியலமைப்பின் ஒரு படைப்புதான்.

சட்டங்களை நீதித்துறை மீளாய்வு செய்வது என்பது அல்லது பல ஜரோப்பிய அரசியலமைப்பு வாதிகள் அதனை விபரிக்க விரும்புவது போல சட்டத்தின் அரசியலமைப்பு ரீதியான மீளாய்வு என்பது அச் சட்டம் அரசியலமைப்புக்கு இயைபாக உள்ளது என்பதை உறுதிப்படுத்த (மக்களின் விருப்;பு) மிகவும் சிறந்த முறையில் வளங்களைக் கொண்டுள்ள அரசாங்கத்தின் கிளையாகிய நீதித் துறைக்கு அச் சட்டத்தை அலசி ஆராயும் இறுதிப் பொறுப்பை வழங்குவதாகும்.

சோல்பரி அரசியலமைப்பின் கீழ,; லியனகே எதிர் மாகாராணியார் மற்றும் லஞச் ஊழல் ஆணையாளர் எதிர் ரனசிங்ஹ முதலிய இலங்கையின் குறிப்பிடத் தகுந்த பெரும்பாலான அரசியலமைப்பு தீர்மானங்கள,; சட்டத்தின் அரசியலமைப்பு ரீதியான மீளாய்வுகளின் விளைவாக ஏற்பட்டவையாகும்.

உலகெங்கும் பல வருடங்களாக செய்யப்பட்டது போலவே இலங்கையின் நீதி மன்றங்கள் எந்த ஒரு அரசியலமைப்பு வழியிலான ஜனநாயகத்திலும் தெளிவாகக் காணப்படுவது போல் அரசியலமைப்புக்கு ஒவ்வாத சட்டங்களை வெற்றானதென்றும் செயலற்றதென்றும் பிரகடணப்படுத்த முடியும் என்பதை அங்கீகரித்தன. எனினும்,

அதன் இரண்டு ஆரம்ப அரசியலமைப்புக்களான 1972ஆம் ஆண்டு மற்றும் 1978ஆம் ஆண்டு அரசியலமைப்புக்கள் சட்டங்களை நீதித் துறை மீளாய்வு செய்வதை தடை செய்தது என்ற வகையில் இலங்கை அரசியலமைப்பு வழியிலான ஜனநாயகங்களுள் மிகவும் வழக்கத்துக்கு மாறான ஒன்றாகவும் விளங்குகிறது.

சட்டங்களை நீதித்துறை மீளாய்வு செய்வது என்பது அரசியலமைப்பின் மேலாண்மையை பாதுகாககும் ஒரு பொறிமுறையாகும். பாராளுமன்றமே சட்டம் இயற்றும் மிகவும் உன்னதமான அதிகார பீடமாகும். எனினும், அது தனது சட்டம் இயற்றும் பணிகளை அரசியலமைப்பிற்கு உட்பட்டே பிரயோகிக்க வேண்டும.; ஏனெனில் பாராளுமன்றமே அரசியலமைப்பின் ஒரு படைப்புதான்.

1972இலும் 1978இலும் பதவிக்கு வந்த இரண்டு அரசாங்கங்கங்களும் ; முதலாவதாக, தமக்குத் தேவையான தமது சொந்த அரசியலமைப்பை வகுத்து நிறைவேற்றக்கூடியவர்களாக இருந்தனர்.

இரண்டாவதாக, மாற்ற முடியாதவாறு விசேட பெரும்பான்மை நிபந்தனைகள் என்ற வடிவில் அமைந்திருந்த மட்டுப்படுத்தப்பட்ட தடைகளும் சமப்படுத்தல்களும் என்ற எண்ணக்கருவை அரசியல் யாப்பு தர்மத்தின் பேரில் விதிப்பதை அவை உதாசீனம் செய்தன.இவை அனைத்தும் 1978ஆம் ஆண்டு அரசியலமைப்பின் கீழ் பயங்கரவாத தடுப்புச் சட்டம் சட்டமாக்கப்படுவதற்கு வசதியாக அமைந்தது.

காக்கப்பட்டிருக்கும் (இறைமை பௌத்தம் மற்றும் ஏனைய ‘அடிப்படை அம்சங்கள்’ ஆகியவற்றைக் கையாளும்) ஏற்பாடுகளை இச் சட்டத்தின் ஏதாவது வாசகங்கள் மீறுகின்றனவா என்பதை உறுதிப்படுத்துவதற்கு அச் சட்டமூலத்தை நுணுகி ஆராயும் மட்டுப்படுத்தப்பட்ட பணியே தனக்கு உள்ளதென நீதிமன்றம் அறிவித்தது.

இது அத்தகைய வாசகங்கள் நிறைவேற்றப்படுவதற்கு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகள் மட்டுமன்றி ஒரு கருத்தறி வாக்களிப்பு மூலம் மக்களின் அங்கீகாரத்தையும் தேவைப்படுத்தியிருக்கும். ஒரு பக்க கட்டளையொன்றில் இலங்கையின் உச்ச நீதிமன்றம் அரசியலமைப்பில் விசேடமாகப் பாதுகாக்கப்பட்டுள்ள ஏற்பாடுகளோடு இச் சட்டத்தில் எந்த ஒரு பிரிவும் ஒவ்வாததாக இல்லை என்று அறிவித்ததோடு, மனித உரிமைகள் மீதான அரசியலமைப்பு ஏற்பாடுகள் தொடர்பான இச் சட்டத்தின் ஏற்பாடுகளை மீளாய்வு செய்ய மறுத்து அதன் மூலம் இச் சட்டமூலத்தை நிறைவேற்றுவதற்கு அரசாங்கத்திற்கு எந்தச் சிக்கலுமின்றி மிகவும் வசதியாக அமைந்தது.

ஒரே நாளில் நிறைவேற்றப்பட்ட சட்டம்.

1979 ஜுலை 19ஆம் திகதி கடுமையான பயங்கரவாத தடைச் சட்டம்;; பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு அதன் மீது விவாதம் நடத்தப்பட்டு ஒரே நாளில் நிறைவேற்றப்பட்டது. இது உச்ச நீதிமன்றம் தனது ஒரு பக்க தீர்ப்பை வழங்கிய இரண்டு நாட்களின் பின்னராகும்

ஆளும் ஐதேக பாராளுமன்றத்தை ; மதிப்பிறக்கம் செய்யும் நடைமுறையை ஆரம்பித்திருந்தது. கிட்டத்தட்ட நாற்பது; வருடங்களில் முதல் தடவையாக சட்டவாக்கச் சபையிலிருந்து பிரதான நிறைவே;ற்று மையத்தை வேறு இடத்திற்கு மாற்றி அது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை அறிமுகம் செய்தது. அது, பாராளுமன்றத்தில் ஐந்தில் நான்கு பங்கு பெரும்பான்மையைக் கொண்டிருந்ததோடு, தனது பாராளுமன்றக் குழுவிலிருந்து கருத்து வேறுபாடு எதனையும் சகித்துக் கொள்ளாமலும் இருந்ததனால,; பாராளுமன்ற விவாதமும் கலந்தாராய்வும் சிறிதளவே பயனுள்ளதென உணரத் தொடங்கியிருந்தது.

விரைவாக சட்டங்களை இயற்றுவதற்கும் நுணுகி ஆராய்தல், விவாதித்தல், கலந்தாராய்தல் மற்றும் கருத்து முரண்படுதல் ஆகிய பாராளுமன்ற வழக்கங்களை அதைரியப்படுத்துவதற்காகவும் சட்டவாக்க நடைமுறையை குறுகியதாக்கும் முகமாக பாராளுமன்ற நிலையியற் கட்டளைகளை நிறுத்தி வைக்கும் நடைமுறையையும் அரசாங்கம் ஆரம்பித்திருந்தது.டன் , 1979 ஜுலை 19ஆம் திகதி பகல் உணவிற்குப் பின்னர், பாராளுமன்றம் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை விவாதத்திற்கு எடுத்துக் கொண்டது.

பாராளுமன்ற விவகார அமைச்சர் வின்சன்ட் பெரேரா பா.உ அன்றைய தினமே அச் சட்டமூலம் நிறைவேற்றப்படக்கூடியதாக நிலையியற் கட்டளைகள் நிறுத்தி வைக்கப்பட வேண்டுமென பிரேரித்தார். நீதி அமைச்சர் கேடபில்யூ தேவநாயகம் பா.உ அச் சட்டமூலத்தை அறிமுகம் செய்தார். அச் சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பு அன்றிரவு 9.45 வரை தொடர்ந்து நடைபெற்றது.

தமிழ் தலைமைகள் மௌனம் ; ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மைதிரிபால சேனநாயக்கா மட்டுமே எதிர்ப்பு

எதிர்க் கட்சியின் சார்பில் பிரதான உரை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மைத்திரிபால சேனநாயக்க பா.உ வினால் ஆற்றப்பட்டது. இச்சட்டமூலத்தின் அம்சங்கள் பற்றி மற்றுமின்றி அதனை சட்டமாக்குவதற்கு முனைந்த முறை பற்றியுமான சில முக்கிய கவலைகளை அவர் எழுப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் கூறினார்:

‘இந்தப் பாராளுமன்றத்தில் எந்த மக்களின் பெயரினால், எந்த மக்களின் அதிகாரத்தைக் கொண்டு; சட்டங்கள் ஆக்கப்படுகின்றனவோ, அந்த மக்கள் அதன் உள்ளடக்கங்களை ஆராய்வதும் விளக்கமாக அவற்றை நுணுகி ஆராய்வதும் ஒரு புறம் இருக்க, அவற்றை அவர்கள் வாசித்துகூட பார்க்கவிடாது தடுத்து, இச்சட்டமூலத்தை இன்றிரவே பாராளுமன்றத்தில் அவசர அவசரமாக நிறைவேற்ற அரசாங்கம் இப்போது முயலுகிறது.

இது ஒன்றும் ஆச்சரியமளிப்பதல்ல. ஏனெனில், கடந்த இரண்டு வருடங்களில், மக்களின் அடிப்படை உரிமைகளில் ஏதாவதொன்றை பறித்துக்கொள்ள முயன்ற ஒவ்வொரு சட்டமூலமும் தேசிய நலனில் அவசர முக்கியத்துமிக்கதாக விபரிக்கப்பட்டு, எந்த மக்களின வாக்குகள் அரசாங்கத்திற்கு இம்மிகப் பெரிய பெரும்பான்மை கிடைப்பதற்கு உதவியதோ, அதே பொரும்பான்மையை பயன்படுத்தி அந்த மக்களின் முதுகிற்கு பி;ன்னால் பாராளுமன்றத்தில் அவசர அவசரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்தச் சட்டமூலத்தைப் பொறுத்தவரை, நாங்கள் அதில் எந்த அவசர முக்கியத்துவத்தையும் காணவில்லை. வடக்கில் பயங்கரவாத நடவடிக்கைகளை கையாளும் நோக்கத்திற்காகவே அது தேவைப்படுகிறது. ஏலவே, தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இயக்கம் மற்றும் அதனை ஒத்த இயக்கங்களை தடை செய்யும் சட்டமும் அதற்கு மேலதிகமாக பொதுமக்கள் பாதுபாப்புக் கட்டளைச் சட்டத்தின் கீழ் பிரகடனப்படுத்தப்பட்ட அவசர கால நிலையும் உள்ளன. அதன் கீழ் எந்த நிலைமையையும் எதிர்த்துச் சமாளிப்பதற்கு அரசாங்கத்திற்கு முழுமையான அதிகாரம் உண்டு.’

அமைச்சர் தேவநாயகம் தமது தொகுப்புரையை நிகழ்த்துவதற்கு இரவு 9.58 மணிக்கு எழுந்து நின்றார் என்று ஹன்சாட் பதிவு செய்துள்ளது. இதன் பின்னர் குழு நிலையும் (இங்குதான் சட்டமூலத்தை பாராளுமன்றம் வாசகம் வாசமாக ஆராயுமென எதிர்ப்பார்க்கப்படுகிறது) முன்றாம் வாசிப்பும் ஆரம்பமாகின. சட்டமூலம் எல்லா நிலைகளிலும் நிறைவேறியது. பயங்கரவத தடுப்புச் சட்டத்தோடு தொடர்பில்லாத, பொது மக்கள் பாதுபாப்பு கட்;டளைச் சட்டத்தின் கீழான ஒரு தீர்மானமும் நிறைவேற்றப்பட்டு, இரவு 10.25 மணியளவில் பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது.

பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்படுமா? 2979-2019

பயங்கரவாதத் தடைச்; சட்டம் நீக்கப்படலாகாது என பல அரசியல் கட்சியை சார்ந்தவாளின் கருத்தாக காணப்படும் நிலையில் ஜக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவின் கருத்து யாதெனில் பயங்கரவாதத் தடைச் சட்ட்த்தை மேலும் வலுப்படுத்தப்பட வேண்டும் இந் நிலையில் மதவாத இனவாதம் தீவிரப்படுத்தப்படுகின்ற யதார்த்த நிலையில் பயங்கரவாதத் தடைச் சட்ட்ம் மேலும் வலுப்படுத்தப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை

1979ஆம் ஆண்டு 48ம் இலக்க பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை (Pவுயு) நீக்குவதாக ஜக்கிய நாடுகள் மனித உரிமைபேரக்கு உறுதி வழங்கிய இந்த அரசு 1979ஆம் ஆண்டு 48ம் இலக்க பயங்கரவாதத் தடுப்புச் சட்டத் தை இரத்துச் செய்யும் போர்வையில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தில் சில பிரிவுகளை நீக்கிவிட்டு அதனைவிட கடுமையான பிரிவுகளை உள்ளடக்கி பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலமாhக (ஊவுயு) சட்ட ஏற்பாடுகளை செய்துள்ளது

2007ஆம் ஆண்டின் 56ம் இலக்கஇகுடியியல் மற்றும் அரசியல் உரிமைகள் மீதான சர்வதேச உடன்பாட்டொழுங்கு சட்டம் பொதுமக்கள் பாதுபாப்புக் கட்டளைச் சட்டத்தின் கீழ் பிரகடனப்படுத்தப்படக் கூடிய அவசர கால நிலையும் உள்ளன.அதன் கீழ் எந்த நிலைமையையும் எதிர்த்துச் சமாளிப்பதற்கு அரசாங்கத்திற்கு முழுமையான அதிகாரம் உண்டு.’ அவ்வாறான கடுமையான சட்டங்கள் நடைமுறையிலிருக்கும் பொழுது இந்த அரசு 1979ஆம் ஆண்டு 48ம் இலக்க பயங்கரவாதத் தடுப்புச் சட்டத் தை இரத்துச் செய்யும் போர்வையில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தில் சில பிரிகளை நீக்கிவிட்டு அதனைவிட கடுமையான பிரிவுகளை உள்ளடக்கி பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலமாhக (ஊவுயு) சட்ட ஏற்பாடுகளை செய்துள்ளது

தேடுதல்,கைது செயதல்,தடுத்த வைத்து விசாரணை செய்தல் மற்றும் கண்காணித்தல் ஆகிய விடயங்களில் பொலிசாருக்கும் இராணுவத்திற்கும் பரந்தளவிளான அதிகாரங்களை வழங்குதல் அடங்கலாக ஜனநாயகப் பரப்பை சுருங்கவைத்துக் குறுகலாக்கும் வல்லமைகொண்ட இத்தகையதொரு சட்டமூலம் தொடர்பாக மனித உரிமை ; நிறுவனங்கள்இ ஜனநாயத்திற்காக குரல்கொடுக்கும்இ; அரசியல் தலைமைகள் பொது அமைப்புக்கள் மௌனம் சாதிப்பது அவதானிக்கத்தக்கது.

முந்திய அரசியமைப்பினதும் ஒரு பகுதியான தற்போதைய அரசியலமைப்பின் இக் குறைபாடுகள் நீக்கப்படவேண்டும் என்பது மிகவும் முக்கியமானதாகுமென எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பயங்கரவாதத் தடை சட்டத்தை நீக்கி பயங்கரவாதத் எதிர்ப்புச்; சட்டத்தை கொண்டுவர அரசு முயற்சித்தபோதிலும் பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தில் குற்ற ஒப்புதலின் ஏற்றுக்கொள்ளல்தன்மை மற்றும் தடுத்து வைத்தல் ஆணைகளுக்கு எதிரான மேன்முறையீடுகள்மீதான கட்டுப்பாடு முதலிய பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (Pவுயு) சட்டப் பல்லவி மனித உரிமை மொழிநடை மூலம் இலகுபடுத்தப்பட்டிருப்பதாகவும் மாற்றியமைக்கப்பட்டிருப்பதாகவும் நாம் உணர வைக்கப்படுகிறோம்

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தற்போதைய வடிவில் அது சட்டமாக்கப்பட்டால், அது1979ஆம் ஆண்டு 48ம் இலக்க பயங்கரவாதத் தடைச் ;சட்டத்திலும ; பார்க்க சில பிரிவுகளில் வெளிப்படையாக பார்க்கும் பார்வையில் நெகிழ்சிதன்மையும் கணிசமான முன்னேற்றமும் காணப்படுவதாக புலப்பட்டாலும் பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் ;பொழுது இந்த இரண்டு சட்டத்திற்கும் மிடையே குறிப்பிடத்;தக்க வேற்றுமையின்மையை அவதானிக்க கூடியதாகவுள்ளன

அவசரகால ஒழுங்கு விதிகளின் முக்கியமான சில விதிகள் பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தில் வெளிப்படையாக புரிந்து கொள்ளமுடியாத வகையில் உள்வாங்கப்பட்டுள்ளது எனவே தற்போதுள்ள வடிவில் சட்டமாக்கப்படின் எந்த ஒரு சூழ்நிலையிலும் அவசரகால ஒழுங்கு விதிகளை நடைமுறைக்கு கொண்டு வராமல் நிரந்தரமாக ஒரு பயங்கரவாத சர்வாதிகார அரசை கொண்டு நடாத்தக்கூடிய வகையில் பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தினை சட்டமாக்கி நடைமுறைப்படுத்தலாம்.

இந்நிலையில் பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் என்ற பெயரில் அவசரகால ஒழுங்கு விதிகள் நிரந்தரமாகவே நடைமுறைக்கு வரலாம் இக்; காரணங்களால் சிங்கள தலைமைத்துவ கட்சிகள் கடும் எதிர்பை வெளியிட்டுள்ளன 1979ம்ஆண்டு பயங்கரவாதத் தடைச்சட்டத்திற்கு எதிர்கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மட்டுமே எதிர்புத் தெரிவித்தது

தற்போதைய அரசியல் களநிலைமையில் நிறைவேற்றுத்துறைக்கும் சட்டவாக்கத்துறைக்கும் இடையே அரசியல்யாப்பு 19ம் திருத்தத்தினால் ஏற்பட்டுள்ள அதிகாரப்பகிர்வினால் ஏற்பட்டுள்ள ;அரசியல் அதிகாரப் போட்டியினால் நாட்டில் பல சிக்கல் நிலையை ஏற்பட்டுள்ளமையை ஏடுத்தியுள்ளமை அவதானிக்கத்தக்கது

இந்த பயங்கரவாதத் தடைச்; சட்டம் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டு 40 ஆண்டுகள் முடிவடைந்நதுடன் என்ன நோக்கத்திற்காக கொண்டுவரப்பட்டதோ இந்த நோக்கம் முடிவடைந்து; கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளின் பின்னர், இலங்கை பிரசைகளின் சுதந்திரங்கள் பாதுகாக்கப்படுவதை உறுதிப்படுத்துவதற்கு ; பயங்கரவாதத்தடைச் சட்டத்தை (Pவுயு) நீக்குவதையும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை (ஊவுயுயை) விலக்கிக் கொள்வதையும் தவிர வேறு எதுவும்ஏற்றுக்கொள்ளத் தக்கதாக அமையாது.

S.P. Thas