தமிழ் மக்களின் விடுதலைப்போரை முறியடிக்கவும், வடக்கு கிழக்கு என இணைந்த தமிழர் தாயகத்தை கூறு போடுவதற்கும் ஏதுவாக சிறிலங்கா அரசுகள் காலம் காலமாக முஸ்லீம் சமூகத்தை தமிழ் மக்களுக்கு எதிராக களமிறக்கியதை நாம் அறிவோம்.
சிறீலங்கா படையினரின் பராமரிப்பு, ஆயுதப்பயிற்சி மற்றும் காவல் என சகல வசதிகளுடனும் கிழக்கில் இயங்கிய முஸ்லீம் தீவிரவாதக்குழுக்கள் பெருமளவான தமிழ் மக்களை படுகொலை செய்ததுடன், பெருமளவான தமிழ் கிராமங்களை அழித்தும், தமிழ் மக்களின் தொன்மையான கலாச்சார வரலாற்று மையங்களை சூறையாடியும் வந்திருந்தனர்.
இந்த தீவிரவாதக் கும்பலுக்கு துணைபோன முஸ்லீம் அரசியல்வாதிகள் தென்னிலங்கை சிங்கள அரசுடன் இணைந்து வடக்கு கிழக்கு இணைப்பை பிரிப்பதற்கு துணைபோனதுடன், மீண்டும் ஒரு இணைப்புக்கு உரியை வழியையும் அடைத்து நிற்கின்றனர்.
தமிழ் மக்களுக்குள் ஊடுருவி அவர்களின் போராட்டத்தை அழிக்கவும், தமிழ் மக்களை இனப்படுகொலை செய்யவும் முஸ்லீம் சமூகத்தினரை தனக்கு ஒரு கேடையமாக பயன்படுத்தி வந்தது சிங்கள அரசு. எனவே தான் சிறீலங்காவின் புலனாய்வுக் கட்டமைப்புக்குள் பெருமளவான முஸ்லீம் சமூகத்தினர் உள்வாங்கப்பட்டிருந்தனர்.
தமிழ் மக்களின் படுகொலைகளில் அவர்களின் பங்குகள் மிக மிக அதிகம். ஆனால் போர் நிறைவடைந்த பின்னர் சிறீலங்கா அரசினால் பயிற்சி அளிக்கப்பட்ட முஸ்லீம் தீவிரவாதிகள் தமது அடுத்த பரிணாமத்திற்குள் சென்றுவிட்டதை சிறீலங்கா அரசு கண்டறியத் தவறிவிட்டது. அதற்கான காரணம் முஸ்லீம் புலனாய்வாளர்களை நம்பியிருந்ததன் விளைவாகக் கூட இருக்கலாம்.
ஆனால் தற்போது மீண்டும் பழைய இராஜதந்திரத்தை பயன்படுத்த சிங்கள தேசம் முற்பட்டுநிற்கின்றது. முன்னாள் போராளிகளை துணைக்கு அழைப்பதன் மூலம் சிங்களத்திற்கும் முஸ்லீம் சமூகத்திற்கும் இடையில் தோற்றம் பெற்றுள்ள முறுகல் நிலையை மடைமாற்றிவிட எத்தனிக்கின்றது சிறீலங்கா அரசு.
முஸ்லீம் சமூகத்துடன் மற்றுமொரு மோதலுக்கு போவது தனது இருப்பை பலவீனப்படுத்தும் என்பதுடன் தென்னிலஙகை அரசியலிலும் எதிரொலிக்கும் என்பது சிறீலங்கா அரசுக்கு நன்கு தெரியும், இரு சிறுபான்மை இனங்களுடனும் மோதுவது பௌத்த பேரினவாத சிங்களத்திற்கு மிகப்பெரும் ஆபத்துக்களை எதிர்காலத்தில் ஏற்படுத்தலாம் எனவே தான் தந்திரமாக தமிழர் தரப்பை இந்த மோதல்களுக்குள் இழுத்துவிட சிங்களம் முன்னிற்கின்றது.
அதற்கு ஏதுவாக யாழில் நிலைகொண்டுள்ள சிறீலங்கா இராணுவத்தின் 51 ஆவது படையணியின் 2 ஆவது பிரிகேட் போராளிகளை அழைத்து தேனீரும், பலகாரங்களும் கொடுத்து கொம்பு சீவிவிட முனைந்து நிற்கின்றது.
சிறீலங்காவில் தற்போது ஏற்பட்டுள்ள நிலையானது தமிழ் மக்களுக்கு பலத்த உயிரிழப்புக்களை ஏற்படுத்தினாலும், அரசியலில் ஒரு சாதகமான சூழ்நிலையை அது தோற்றுவித்துள்ளது. சிங்களம் தற்போது அந்தரத்தில் தொங்குகின்றது. இந்த சந்தர்ப்பத்தை மிகவும் புத்திசாலித்தனமாக பயன்படுத்தி நாம் எமக்கான வலுவான தளம் ஒன்றை உருவாக்க முடியும். ஆனால் அதனை மேற்கொள்ளக்கூடிய அரசியல் பலம் தாயகத்திலும், புலத்திலும் எம்மிடம் இல்லை.
ஆனாலும் நாம் முயற்சி எடுப்போம், அதுவரை போராளிகளே சிங்களத்தின் சூழ்ச்சி வலைக்குள் வீழ்ந்து ஒரு ஒட்டுக்குழு என்ற நிலைக்கு செல்லாதீர்கள். சிங்கள அரசின் தடுப்புக்காவலில் உள்ள அரசியல் கைதிகளை விடுவிக்க சொல்லுங்கள், தமிழர் பிரதேசங்களில் அமைக்கப்பட்டுள்ள புத்தர் சிலைகளை அகற்றச் சொல்லுங்கள், காணிகளை விடுவிக்கச் சொல்லுங்கள், தமிழர் தாயகத்தில் இருந்து படையினரை அகற்றச் சொல்லுங்கள் அதன் பின்னர் உதவி கேட்டு வரச்சொல்லுங்கள் ஆனால் அவர்கள் வரப்போவதில்லை. ஏனெனில் எம்மை அடிமைகளாக வைத்திருப்பதும், அடியாட்களாக பாவிப்பதுமே இந்த ஒன்று கூடலுக்கு அழைத்ததன் நோக்கம்.
ஈழம் ஈ நியூஸ் ஆசிரியர் தலையங்கம்.
நாங்களும் மக்களைக் காப்பாற்றத்தான் போராடினோம்! யாழில் கட்டளைத் தளபதிக்கு பதில் வழங்கிய முன்னாள் போராளிகள்
யாழ்ப்பாண நகரில் வாழும், புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளுக்கும், இராணுவத்தின் 512ஆவது பிரிகேட் கட்டளைத் தளபதிக்கும் இடையில் இன்றைய தினம் சந்திப்பொன்று 512ஆவது படைத்தளத்தில் இடம்பெற்றது.
இந்தக் கூட்டத்தில் 512ஆவது பிரிகேட் தலைமையகத்தின் உயர் இராணுவ அதிகாரிகள், மற்றும் யாழ்ப்பாண பிரதேசத்தில் வாழும் 50 இற்கும் மேற்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகள் கலந்து கொண்டனர்.
இச் சந்திப்பின் போது உரையாற்றிய 512 ஆவது படைப்பிரிவின் கட்டளை அதிகாரி நிலந்த,
அதாவது நீங்கள் புனர்வாழ்வளிக்கப்பட்ட சமூகமயமாக்கப்பட்ட பின்னர் நான் உங்களை அழைத்து சந்திக்க வேண்டிய தேவை இல்லை. எனினும் நாட்டின் இன்றைய சூழ்நிலை காரணமாக நான் உங்களை சந்திப்பதற்காக அழைத்துள்ளேன்.
குறிப்பாக நான் யாழ்ப்பாணத்திலுள்ள மும்மத பிரதிநிதிகள், வர்த்தக சங்கத்தினரை சந்தித்துள்ளேன். அதன் பின்னர் உங்களை அழைத்துள்ளேன். தற்போது நாட்டில் உள்ள நிலைமை யாழ். குடாநாட்டிலும் இடம்பெறா வண்ணம் இருக்க வேண்டுமென்னபதே எனது நோக்கம்.
எனவே யாழ்ப்பாணத்தின் அழகையும், யாழ்ப்பாண மக்களையும் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு எம் அனைவருக்கும் உள்ளது. எனவே நீங்கள் யாழ்ப்பாணத்திற்கு, வெளி மாவட்டத்திலிருந்து வருவோர் தொடர்பில் அவதானமாக இருப்போமாக இருந்தால், கொழும்பில் நடந்த தாக்குதல் போல் யாழ்ப்பாணத்தில் இடம்பெறாமல் தடுக்க முடியும் எனத் தெரிவித்தார்.
பொதுமக்கள் வெளி மாவட்டத்திலிருந்து வருவோர் தொடர்பில் எமக்கு தகவல் தருவதன் மூலம் அனைத்து குற்றச்செயல்களையும் இல்லாதொழிக்க முடியும் எனத் தெரிவித்தார்.
இதன் போது கருத்துத் தெரிவித்த தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளி, நாங்களும் மக்களைக் காப்பாற்றத்தான் போராடினோம் எச் சந்தர்ப்பத்திலும் மக்களைக் கொலை செய்ய நாம் முயற்சித்திருக்கவில்லை எனவும் தெரிவித்திருந்தார்கள்.
இறுதி யுத்தத்தம் முள்ளிவாக்கால் மண்ணை நெருங்கி எமது மண்ணின் கடைசி அங்குல நிலமும் எதிரிப்படையால் முழுமையாக ஆக்கிரமிக்கப்படும் வரையிலும் தமிழீழ சுகாதாரசேவையை சேர்ந்த மருத்துவர்களும் உதவியாளர்களும் அங்கிருந்த அரச மருத்துவர்களுடன் இணைந்து மிகவும் ஆபத்தான சூழ்நிலைகளிலும் இரவுபகல் பாரமால் போராளிகளுக்கும் பொதுமக்களுக்கும் தங்களால் முடிந்த மருத்துவ சேவையினையும் ஆற்றுப்படுத்தும் பணிகளையும் அர்ப்பணிப்புடன் மேற்கொண்டிருந்தனர்.
மருத்துவர்களை இறைவனுக்கு அடுத்த நிலையிலேயே வைத்து மனித சமூகம் கொண்டாடும் இந்த உலகிலே இறுதி யுத்ததிலே அங்கு பணியாற்றிய ஒவ்வொரு மருத்துவர்களையும் இறைவ னுக்கு நிகராகவே எமது மக்கள் நேசித்தார்கள் எநத்வொரு அடிப்படை வசதிகளும் அற்ற நிலையிலே உயிர் இழப்புக்களை தடுப்திலும் நோய் கிருமிகள் பரவுவதை தடுப்பதிலும் இவர்கள் சந்தித்த சவால்களை மருத்துவ உளவியல் நிபுணர்களாலேயே வரையறுக்க முடியாதவை அந்தளவு மக்களிற்கு அருகில் இருந்து சாவின் நிமிடங்களையும, மக்களின் வலிகளையும், கதறல்களையும் ஒவ்வொரு மணித்துளிகளும் நெஞ்சுரத்துடன் எதிர்கொண்டவர்கள்.
இவர்களில் தர்மரத்தினம் வாமனும் ஒருவர் இவர் தாயக விடுதலை என்ற இலட்சியதற்காக தனது காலை இழந்த நிலையிலும் ஒரு மருத்துவ போராளியாக முள்ளிவாக்கால் மண்ணில் கடைசி நிமிடம்வரை தனது பணியினை சிறப்பாக முன்னெடுத்திருந்தார்.
ஐக்கிய நாடுகள் சபையும், அனைத்துலக சமூகமும் எமது இனத்தை கைவிட்ட நிலையில் சாட்சிகள் அற்ற இனப்படுகொலையை மேற்கொண்ட சிறீலங்கா அரசின் வான்படையும், கனரக ஆயுதப்பிரிவும் வைத்தியசாகைளை தேடித்தேடி தாக்கியழித்த போதும், தமது உயிர்களை துச்சமென மதித்து மக்களுக்காக பணியாற்றிய மருத்துவர்களில் வாமனும் ஒருவர்.
இவர் தமிழீழ சுகாதார சேவைகளின் துணைப் பொறுப்பாளராக இருந்தவர் தற்போது பிரித்தானியாவில் தஞ்சமடைந்துள்ள நிலையில் தமிழ் மக்களின் உரிமைக்காக சர்வதேச சனநாயக பொறிமுறைகளிற்கு உட்பட்டு தன்னால் முடிந்த பணிகளை தொடர்ந்து முன்னெடுத்து வருகிறார் முள்ளிவாக்கால் 10வது நினைவேந்தல் தினத்தை உலக் தமிழர்கள் நினைவு கூரவுள்ள நிலையில் இலக்கு மின்னிதழுக்காக அவர் வழங்கிய நேர்காணல்.
கேள்வி: முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் பத்தாவது ஆண்டு நினைவு சுமந்து தமிழினம் தற்போது நிற்கின்றது. இந்த நிலையில் சிறீலங்கா அரசு திட்டமிட்டு மேற்கொண்ட இந்த இனப்படுகொலையானது அனைத்துலக சமூகத்தால் புறக்கணிக்கப்படுவது தொடர்பில் நீங்கள் என்ன கருத்துக்களை முன்வைக்க விரும்புகின்றீர்கள்?
பதில்: தமிழரின் பேரரசை அழித்தொழிக்கும் வரலாற்று அத்தியாயத்தின் முடிவுகாலத்தில் நாடற்றவர்களாக தமிழர்கள் உலகெங்கும் பரவித் தப்பி வாழ்கிறோம். அதன் ஓட்டத்தில் தோற்றம்பெற்ற தன் இனத்தின் தலைமையையே தமிழினம் இழுந்திருக்கிறது.
தென்னாசியப் பிராந்தியத்தின் உலகப் பொருளாதாரப் போட்டியாளர்களின் நலன்களுக்கு போதுமான அளவுவரை மட்டுமே இலங்கையின் இனப்படுகொலை விவகாரம் எனும் பந்து மனிதவுரிமைகள் மைதானத்தில் விளையாடப்படுகிறது. இந்த நலன்கள் சார்ந்து பணிந்து விட்டுக் கொடுக்க முடியாத அரசியல் தேவையாகவே தமிழின இறைமை அடிப்படையிலான உரிமை அமைந்து கிடக்கிறது.
இந்தியாவின் பிராந்திய ஆதிக்கம் நிலைபெறுவதற்கு தமிழர் தாயகத்தை வலுப்படுத்துவது ஒன்று மட்டுமே தீர்வாகுமானால் மாத்திரமே இலங்கையின் திட்டமிடப்பட்ட இனப்படுகொலையை ஒரு முதலீடாக இந்தியா எடுத்தாழும்.
உலக ஒழுங்கில் இந்தியாவுடன் சாரும் நாடுகள் இந்த அடிப்படையிலேயே இலங்கையின் இனப்படுகொலையைக் கையாளும்.
இந்த வல்லாண்மைப் போட்டிகள் தெளிவாகத் தெரியும் வகையிலேயே இலங்கைப் பாராளுமன்ற இழுபறியில் ஈழத் தமிழரின் ஜனநாயக சக்தியை உலகம் பாவித்துக் கொண்டுள்ளது.
இந்த உலகத்துக்கு மனிதவுரிமைகளை நிறுவுவது மட்டுமே தேவையாக மாறும் நாள் சில நூற்றாண்டுகள் தொலைவிலேயே உள்ளது.
கேள்வி: ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பினர்களை வன்னியில் இருந்து வெளியேற்றிய சிறீலங்கா அரசு ஒரு சhட்சியமற்ற இனப்படுகொலையை மேற்கொண்டிருந்தது. எனவே சிறீலங்கா அரசு மேற்கொண்ட இந்த இனப்படுகொலையின் சhட்சியமாக அங்கு கடமையாற்றிய வைத்தியர்கள் இருக்க வேண்டும் என்பது தொடர்பில் நீங்கள் என்ன கருதுகின்றீர்கள்.
பதில்: அதிஸ்ட வசமாக அனேகமான வைத்தியர்கள் போரில் தப்பிப் பிழைத்துத் தமது சாட்சியங்களை முடிந்தளவுக்கு அனைத்து மட்டங்களிலும் பதிவு செய்திருக்கிறார்கள். அப்படி இருந்த போதிலும் அவர்களது சாட்சியங்கள் உலக மக்களின் மனச்சாட்சியைத் தட்டி எழுப்பப் போதுமானதாக இல்லை. தமது கண் முன்னே நடைபெற்ற பல உண்மைகளைக் கண்ட சில நடுநிலைச் சாட்சியாளர்களாக அமையக் கூடிய வைத்தியர்கள் விளைவுகளைக் கருதி அமைதி காத்து வருவதை மறுப்பதற்கில்லை. சர்வதேச நீதி விசாரணை சாத்தியமாகும் தருணத்தில் அனைவரும் மௌனம் கலைப்பார்கள் என்பது எனது உறுதியான நம்பிக்கை.
இலங்கை அரசின் புலனாய்வாளர்களின் அழுத்தத்துக்கு மத்தியிலேயே சிறையில் அடைக்கப்பட்டிருந்த வைத்தியர்கள் ஊடகத்தில் பொய்யாகச் சாட்சியமளிக்க நேர்ந்தது. அமெரிக்காவில் தஞ்சமடைந்த பின்னர்; வைத்தியர் வரதராஜா அழுத்தத்திற்குப் பணிந்தே கூறியதாகப் பின்னாளில்; பகிரங்கப்படுத்தியுள்ளார். வாகரையில் மற்றும் வன்னியில் போர் நடந்தபோது ஊடகங்களுக்கு உண்மைகளைக் கூறியதனால் போர் முடிந்த வேளையில் மூச்சுத் திணறும் நெஞ்சுக் காயத்துடன் கைது செய்யப்பட்டு மருத்துவ உதவி வழங்கப்படாமல் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டார் அதே வைத்தியர் வரதராஜா. ஐக்கிய நாடுகள் மனிதவுரிமைச் சபைவரை சென்று தனது சாட்சியத்தை அவர் பதிவு செய்திருப்பதை இங்கே சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.
தனது சாட்சியங்களை ஒரு திரைப்படமாக்கும் படப்பிடிப்பு முயற்சியிலே அவர் தற்போது உள்ளார். அதற்காக நிதி உதவிகளை தேசப்பற்றாளர்களிடம் அவர் பெரிதும் எதிர்பார்த்து கோரிக்கை விடுத்துள்ளார்.
கேள்வி: வன்னிப் போரின் போது சிறீலங்கா அரசு மருந்தையும் உணவையும் போர் ஆயுதாமாகப் பயன்படுத்தியிருந்ததா?
பதில்: ஆம். அரச மருத்துவ நிர்வாகம் கோரிய மருந்துகளில் போர்க்காயங்களை பராமரிக்கத் தேவையான குருதி மாற்றீட்டு பைகள் மயக்க மருந்துகள் அன்ரிபாயோடிக் மருந்துகளை அனுமதிக்காமல் தடை செய்தது இலங்கை அரசு. அனுமதிக்கப்பட்ட மருந்துகளை எடுத்து வரும் போது வவுனியா ஓமந்தை சோதனைச் சாவடியூடாக கொண்டுவர முடியாதபடி இராணுவம் தடுத்ததாக முல்லைத்தீவு சுகாதார சேவை அதிகாரி வரதராஜா வெளிப்படையாகவே கூறியுள்ளார். ஆபத்துக்களை எதிர்கொண்டு அத்தியாவசியமான மயக்க மருந்துகள் எப்படியோ வன்னிக்குள் கொண்டுவந்து சேர்க்கப்பட்டதால் இன்று பலர் உயிர் பிழைத்து வாழ்கிறார்கள் என்பதை இங்கு கூறியாகவேண்டும்.
வன்னிக்குள் தொண்டு நிறுவனங்களால் எடுத்துவரப்பட்ட உணவு வாகனத் தொடரணியை எறிகணைத் தாக்குதலால் தடை செய்ய முற்பட்டது இலங்கை அரசு. விசுவமடு கூட்டுறவுச் சங்கத்தின் கையிருப்பில் இருந்த உணவுச் சேமிப்பை இலக்கு வைத்து செல் தாக்குதல் நடாத்தியது. பெருமளவு அரிசிச் சேமிப்பு எரிந்து அழிந்து கொண்டிருப்பதைப் பார்த்தேன். மேய்ச்சல் நிலங்களில் நின்ற கால் நடைகள் இலக்கு வைக்கப்பட்டுத் தாக்கியழிக்கப்பட்டதை நேரில் காண முடிந்தது. இதனால் பட்டினிச் சாவு இனவழிப்பின் உபாயமாக்கப்பட்டது.
கேள்வி: முள்ளிவாய்க்காலில் அமைக்கப்பட்டிருந்த வைத்தியசாலை மீது சிறீலங்கா இராணுவம் கனரக ஆயுதங்களைக் கொண்டு பல தடவைகள் தாக்குதல் நடத்தியிருந்தது. இந்த நடவடிக்கையானது ஒரு திட்டமிட்ட இனஅழிப்பின் வடிவமாகும் என நீங்கள் கருதுகின்றீர்களா?
பதில்: அரச சுகாதார சேவைகளின் நோயாளர் காவு வண்டிகள், தியாகி திலீபன் மருத்துவசேவை வாகனங்கள், தமிழீழ சுகாதார சேவைகளின் தெற்று நோய்த் தடுப்புப் பிரிவு நடமாடும் மருத்துவ சேவை வாகனங்கள் போன்றவற்றின் மீது இலக்கு வைத்து கிளைமோர் தாக்குதலை நடாத்தியது இலங்கை அரசு. இதில் பல திறன்மிக்க மருத்துவ ஆளணிகள் கொன்றழிக்கப்பட்டனர். இது காயப்படுத்தப்படும் நோய்வாய்ப்படும் மக்களை காப்பாற்றிவிடாமல் தடுப்பதாகும்.அத்துடன் இது தொற்று நோய்கள் பரவ வைத்து நோயால் மக்களைச் சாகடிக்கும் இனவழிப்பு யுக்தியாகும். முற்றாக ஒழிக்கப்பட்டிருந்த மலேரியா நோய்க் கிருமிகள் ஊடுருவிய இராணுவ அணிகளால் ஏதோ ஒரு வழியில் மீண்டும் வன்னிக்குள் கொண்டுவரப்பட்டது. இதனால் மலேரியா நோய் மீண்டும் ஊடுருவும் இராணுவ வழித்தடத்தில் உள்ள கிராமங்களில் இனங்காணப்பட்டது. இதனை எமது தமிழீழ சுகாதார சேவை தொற்று நோய்த் தடுப்புப் பிரிவே கண்டுபிடித்துத் தடுத்தது.
இந்த இனவழிப்பு யுக்திகள் பெரிய விளைவுகளை ஏற்படுத்திவிடாதபடி தமிழரின் சுகாதார அணிகள் ஓரணியாகி முறியடித்துக்கொண்டிருந்தன. இதன் காரணமாக பொறுமையிழந்த இலங்கை அரசு மருத்துவ மனைகளை நேரடியாகத் தாக்கத் தொடங்கியது.
செயற்பாட்டில் இருந்த அனைத்து மருத்துவ மனைகளும் தாக்குதலுக்குள்ளாகின. செஞ்சிலுவைச் சங்கம் மருத்துவ மனைகளைக் காப்பாற்றுவதற்கென ஆழ்கூறுகளை எடுத்துச் சென்று பாதுகாப்பு அமைச்சிடம் கொடுத்ததும் சில மணி நேர இடைவெளியில் அதே மருத்துவ மனைகள் தாக்கியழிக்கப்பட்டன. ஒரு சந்தர்ப்பத்தில், முகட்டில் தெளிவான சிலுவைக் குறியிடப்பட்ட, நான் பணியில் நின்ற, உடையார்கட்டு பாடசாலை இடம்பெயர் மருத்துவமனை மீதும் அரசால் அறிவிக்கப்பட்ட சுதந்திரபுரம் போர் தவிர்ப்பு வலையத்தில் கூடிய மக்கள் மீதும் வீதிகளில் நெரிசலாக இடம்பெயர்ந்து கொண்டிருந்த மக்கள்மீதும் ஒரே நேரத்தில் செறிவாக்கப்பட்ட எறிகணைத் தாக்குதல்கள்; நடாத்தப்பட்டன. இதில் தலத்திலேயே பல நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டுவிட நூற்றுக்கணக்கானோர் எங்கள் மருத்துவமனைக்கு பாரிய காயங்களோடு கொண்டுவரப்பட்டார்கள்.
அந்த வேளையில் எங்கள் மருத்துவ மனை தாக்கப்படுவதை தடுப்பதற்காக அரச சுகாதார சேவை அதிகாரி ஒருவர் தொலை பேசியில் அரசின் சுகாதார உயர் பீடத்துக்கு தொடர்பு கொண்டு நிலைமை பற்றிப் பேசினார். மருத்துவமனை தொடர்ந்தும் இயங்குவதைத் தெரிந்துகொண்ட அரசு மீண்டும் அடுத்த அரைமணி இடைவெளிக்குள் மருத்துவ மனைக்குள் துல்லியமாகத் தாக்கியதில் மின்னியந்திரங்கள் நின்றுவிட கடமையில் நின்ற பெண் தாதி செத்து வீழ்ந்தார்.
காயமடைந்து வந்தவர்கள் மீண்டும் காயமடைந்தார்கள். காயங்களைக் கொண்டு வந்தவர்கள் கொல்லப்பட்டார்கள். முள்ளிவாய்க்கால் மருத்துவ மனைமீது தாக்குதல் நடத்தப்படுவதையும் மக்கள் சிதறி ஓடியதையும் வேவு விமானத்தின் துல்லியமான காணொளிக் கருவி மூலம் ஜனாதிபதி உட்பட படையதிகாரிகள் பார்த்துக்கொண்டே இருந்தார்களாம். இதை நான் பூசாவில் அடைக்கப்பட்டு இருந்தபோது மனம் திறந்த விசாரணை அதிகாரி ஒருவர் என்னிடமே கூறினார். இது அரசின் உயர்பீடம் திட்டமிட்டே நடாத்திய கட்டமைக்கப்பட்ட இனவழிப்பாக உறுதிபடக் கூறுவேன்.
கேள்வி: கடந்து சென்ற பத்து வருடங்களில் உங்களால் அங்கு ஏற்பட்ட துயரங்களில் இருந்து விடபட முடிந்துள்ளதா?
பதில்: இலங்கைக் குடிமகன் ஒருவரின் உயிரைக் காப்பதற்காக (அரச இராணுவச் சிப்பாய் உட்பட) பயங்கரவாதியாக உலகால் தடைசெய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மருத்துவக் குழாமில் ஒருவனாக தற்காப்பின்றி காயப்பட்டபோதும் உயிர் காக்கும் பணியில் நான் இருக்க ஒரு நூறு பேரைக் கணப்பொழுதில் கொன்று வீழ்த்தியது இலங்கைக் குடிமக்களின் அரசு. அதனை வேடிக்கை பார்த்தபடி மனிதவுரிமை பேசி முண்டு கொடுக்கிறது உலகு. இதற்காக நீதி கேட்டுப் போராடுவதிலே தசாப்தம் கடந்து முரண்பட்டுக் கிடக்கிறது தமிழரின் அமைப்பு. இந்தப் புறநிலையில் இனவழிப்புக்கு எதிராக மனித உரிமைக்காக வாழ்நாளை அர்ப்பணித்துப் போராடி அதன் தோல்வியின் நீட்சிகளைக் கண்டுணரும் கணங்கள் மேலும் கொடுமையானவை. இந்த வகையில் சொல்லப்போனால் போரில் உயிர்தப்பியதே என்போன்றவர்களுக்கு மிகவும் துரஸ்டமானது என்றே நினைக்கின்றேன்.
நன்றி: இலக்கு (21 – 04 – 2019)
புலிகள் பாரிய இன அழிப்புடன் மேற்குலக/ பிராந்திய கூட்டணிகளினால் அழிக்கப்பட்டதற்கு பல காரணங்கள் உள.
இதுவரை படைத்துறை/ புவிசார் அரசியல் காரணங்கள் மட்டுமே மேலோட்டமாக அதுவும் இன்றைய உலக ஒழுங்கின் நிகழ்ச்சி நிரலின் பிரகாரம் புலிகளை எதிர் நிலையில் வைத்து அவர்களை குற்றவாளிகளாக்கி வெளிவந்த ஆய்வுகளே அனேகம்.
ஆனால் உண்மையான காரணங்கள் இன்னும் ஆராயப்படவில்லை..
அதில் முதன்மையானது தமிழீழ நடைமுறை அரசின் கட்டுமானம்/ நிர்வாக அடுக்கு.
போரை நடத்திக் கொண்டே சமகாலத்தில் புலிகள் உருவாக்கியிருந்த இதன் பரிமாணத்தை சமாதான காலத்தில் பார்த்து அதிர்ந்து போன மேற்குலக அச்சமும் புலிகளின் அழிவுக்கு வலுச்சேர்த்த முக்கிய காரணி.
ஒரு புதிய நாடு உருவாவது புதிதல்ல, ஆனால் மேற்குலகின் ஒத்துழைப்பின்றி / அவர்களின் நிகழ்ச்சி நிரலுக்கு அப்பால் தேசக் கட்டுமானத்தில் புதிய நிர்வாகச் சிந்தனைகளோடு புவியியல்/ வரலாற்று அடிப்படையில் புதிய பரிமாணங்களுடன் தமிழீழம் உருவாவதை அவர்களால் ஜீரணிக்கவே முடியவில்லை.
ஒரு தமிழ்த் தேச சிந்தனையாளர் குறிப்பிட்டது போல் தமிழீழம் உருவாகியிருந்தால் அது இஸ்ரேலின் வரலாற்றை பின்னோக்கி தள்ளியிருக்கும்..
இன்னொரு ஆய்வாளரான சேது சபார் புலிகள் இன்று இருந்திருந்தால் அவர்களின் தேச கட்டுமான யுக்தியின் பரிமாண வெளியில் ஒரு செய்மதியைக் கூட ஏவ முயன்றிருப்பார்கள் என்று குறிப்பிட்டிருந்தார்.
அது மிகையல்ல, ஏனெனில் ஒரு அரசாக சிறீலங்கா இடமும்/ நிதியும் ஒதுக்காத விண்வெளி ஆய்வு மையத்திற்கு புலிகள் மல்லாவிப் பகுதியில் இடம் ஒதுக்கியிருந்த கதை பலருக்குத் தெரியாது.
அந்தளவிற்கு புலிகளின் தேசக் கட்டுமானச் சிந்தனை இருந்தது.
இந்தப் படத்திலுள்ள ‘தமிழீழ சூழலியல் நல்லாட்சி ஆணையம்” உருவாக்கப்பட்டதும் அது உலகளவில் பல ஆய்வுப் பட்டறைகளை நடத்தியதும் நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்.
சமகாலத்தில் வாழ்வதால் புலிகளின் போராட்டத்தையும் அது உருவாக்கிய பரிமாண மாற்றங்களையும் நம்மால் உணர முடியவில்லை.
ஆனால் மனித குல வரலாற்றில் இது ஒரு பெரும் பிரளயமாகப் பதிவாகும்.
இலங்கையில் தீவிரவாதிகளுடன் ஒப்பிடுகையில்… விடுதலைப்புலிகளின் அதி உன்னத உயர்வு
விடுதலைப் புலிகள் அமைப்பு 2009இல் மௌனிக்கப்படும் வரை மக்கள் குடியிருப்பு மீதோ அல்லது மக்கள் மீதோ தாக்குதல் நடத்தவில்லை. என்றுமே மக்களை இலக்காக விடுதலைப் புலிகள் பயன்படுத்தவில்லை.
ஆனால் இன்று அந்த நிலைமை தலைகீழாக மாறியுள்ளதுடன், மக்களை இலக்கு வைக்கும் அளவுக்கு முஸ்லிம் தீவிரவாதம் உருவெடுத்துள்ளது.
2009ஆம் ஆண்டு காலப்பகுதயில் யுத்தம் உக்கிரமாக நடந்து கொண்டிருந்த போது கொழும்பின் ஆங்காங்கே பேருந்துகளில் குண்டு வெடிப்புகள் இடம்பெற்றன.
எனினும் இதன்போது குறித்த குண்டு வெடிப்புகள் தம்மால் நேர்ந்தவை அல்ல என விடுதலைப் புலிகள் தெட்டதெளிவான அறிக்கைகளை வெளியிட்டிருந்தன.
ஆனால் இலங்கையில் அப்போதிருந்த அரசாங்கமோ அல்லது சர்வதேசமோ இந்த அறிக்கைகளையும், விடுதலைப் புலிகள் அந்த குண்டு வெடிப்புகளை நடத்தவில்லை என்பதையும் நம்பவில்லை.
எனினும் தற்போதைய நிலைமையை பார்க்கும் போது அன்றைய தினம் விடுதலைப் புலிகளின் பெயரால் முஸ்லிம் தீவிரவாதிகள் மேற்படி குண்டு தாக்குதல்களை செய்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுகின்றது.
அதேவேளை இந்த தொடர்தாக்குதல்களையெல்லாம் பார்க்கும்போது இதன் சூத்திரதாரிகளின் முதல் தாக்குதல்களாக இவை இருக்க வாய்ப்பில்லை. நன்கு முன் அனுபவம் உள்ள ஏற்கனவே பலரின் உயிர்களை காவு கொண்ட ஒரு குழுவே இதனை செய்துள்ளது என்பது தெட்டத் தெளிவாகிறது.
தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளராக இருந்த சு.ப.தமிழ்செல்வன், சிங்கள மக்களுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் எந்தவித விரோதமும் இல்லை. எமது மண்ணில் இருக்கும இராணுவத்திற்கும் எமக்குமே விரோதம் உள்ளது
நாம் சிங்கள மக்களை நேசிக்கின்றோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஆனால் முஸ்லிம் தீவிரவாதிகள் மக்கள் மீது எந்த அக்கறையும் இன்றி மக்களை சூரையாடியிருப்பது வேதனையான விடயமாகும்.
கடுமையான போர் நடந்த போதிலும் கூட விடுதலைப் புலிகள் ஒழுக்க சீலர்களாக மக்களை பாதுகாக்கும் வகையிலும் அவர்களுக்கு தீங்கு நேராமலும் நடந்து கொண்டனர்.
ஒட்டு மொத்தத்தில் அவைரும் தமிழீழ விடுதலைப் புலிகளை தீவிரவாத அமைப்பாக பார்த்தாலும் கூட அவர்கள் மக்களை கொலை செய்யவிலை என்பது நிதர்சனமே.
அதேபோன்று மற்றுமொரு விடயம் என்னவெனில் யாழில் இருந்து முஸ்லிம்களை வெளியேற்றியது விடுதலைப்புலிகளின் முன்னாள் உறுப்பினரான விநாயகமூர்த்தி முரளிதரன் என அழைக்கப்படும் கருணாவே.
அத்துடன் காத்தான்குடியில் முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டதற்கும் காரணம் கருணா தான். எனினும் கருணாவின் இந்த செயற்பாடுகளுக்கு விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனிடம் அனுமதி பெறப்படவில்லை என்பதை தவிர்த்து அறிவிக்கவேபடவில்லை என்பதே சத்தியம்.
ஆனால் கருணாவின் இந்த செயற்பாடுகளுக்கு ஒட்டு மொத்தமாக சேர்த்து விடுதலைப் புலிகள் மீரே பலி வந்து சேர்ந்தது. இலங்கை இராணுவத்தினரை இலக்கு வைத்து விடுதலைப் புலிகள் தாக்கிய போதும், மக்களை எப்பொழுதும் கொல்ல எத்தனித்ததில்லை.
இந்த நிலையிலேயே விடுதலைப்புலிகளுக்கு எதிராக யுத்தம் செய்த மகிந்த நேற்று முன் தினம் இடம்பெற்ற முஸ்லிம் தீவிரவாதிகளின் தாக்குதல் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போது புலிகளை பாராட்டியிருந்தார்.
விடுதலைப்புலிகளை பல சிங்கள கல்வி மான்கள் மற்றும் மற்றும் மக்களும் ஆதரித்திருந்தமை குறிப்பிடத் தக்கது.
போதிதர்மர் சீனாவுக்குப் பலமென்றால் பிரபாகரன் இலங்கைக்கு பலமல்லவா!
தமிழீழ விடுதலைப் புலிகளைப் பற்றி இப்போது அதிகமாகப் புகழ்ந்து பேசுபவர்கள் சிங்கள மக்களும் சிங்கள அரசியல் தலைவர்களும் என்றால் அது மிகையன்று.
2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் திகதி வன்னிப் போர் முடிவுற்றது.
போர் முடிவுற்றதும் போர் வெற்றி விழாக் கொண்டாட்டத்தை நடத்துவதில் அன்றைய ஆட்சியாளர்கள் மும்முரமாக ஈடுபட்டனர்.
பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களைக் கொன்றொழித்துவிட்டு, தமிழ்க் குழந்தைகளை யாருமற்ற அநாதைகளாக்கிவிட்டு, வெற்றி விழாக் கொண்டாட்டம் செய்கின்ற மனநிலை உடையவர்களாக சிங்கள ஆட்சியாளர்கள் இருந்தார்கள் என்பதை எண்ணிப் பார்க்கும் போது கன்னத்தின் ஓரங்கள் நனைந்து கொள்கின்றன.
தமிழ் என்ற ஒரே காரணத்துக்காக, தமிழ் மக்களையும் தமிழ்க் குழந்தைகளையும் கொன்றொழித்த கொடூரம் சகிப்பதற்குரியதல்ல.
தவிர, விடுதலைப் புலிகளைத் தோற்கடித்து விட்டோம்; விடுதலைப் புலிகளை அழித்து விட்டோம் என்ற திமிர்த்தனத்துடன் ஆட்சியாளர்களும் படைத்தரப்பும் நடந்து கொண் டதை தமிழ் மக்கள் ஒருபோதும் மறக்கமாட்டார்கள்.
இவை ஒருபுறமிருக்க, விடுதலைப்புலிகள் கொள்கையுடன் போராடியவர்கள் என்று ஜனாதிபதி மைத்திரியும் விடுதலைப்புலிகள் பொதுமக்களை இலக்குவைத்துத் தாக்குதல் நடத்தவில்லை என்று முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்வும் இப்போது கூறியுள்ளனர்.
இவ்வாறு விடுதலைப் புலிகளை தென் பகுதி ஆட்சியாளர்களும் அரசியல்வாதிகளும் சிங்கள மக்களும் இப்போது புகழ்ந்து பேசுவது என்பது ஒரு தொடக்கப்புள்ளி மட்டுமே.
எதிர்காலத்தில் எதற்கும் விடுதலைப் புலிகளை உதாரணம் காட்டி அவர்கள் உயர்வான வர்கள், இலட்சிய வேட்கை கொண்டவர்கள் என்று இந்த நாட்டின் பெரும்பான்மையினர் அடிக்கடி பேசுவது தவிர்க்க முடியாததாகும்.
இங்கு நாம் கேட்பதெல்லாம், உலகம் முழுவதும் விடுதலைப் புலிகள் என்ற அமைப்பை அதன் தலைவனைப் புகழ்ந்து பேசியது.
அந்த அமைப்பின் கட்டமைப்பு, நிர்வாக ஒழுங்கு, ஒழுக்கம், உரிமை மீது கொண்ட பற்றுறுதி, புலனாய்வு நுட்பம், மிக உயர்ந்த போர்த்திறன் எனப் பல விடயங்களைச் சுட்டிக் காட்டி விடுதலைப் புலிகளை உலகநாடுகள் புகழாரம் சூட்டியபோது; இந்த நாட்டின் எதிர் காலப் பாதுகாப்புக்குரியவர்களாக விடுதலைப் புலிகளை ஆக்க வேண்டும், அவர்களுடன் சமரசம் செய்து அவர்களையும் இந்த நாட்டின் இறைமைக்கான பாதுகாவலர்களாக மாற்ற வேண்டும் என்று தென்பகுதிப் பெரும்பான்மை நினைக்கவில்லையே. இது ஏன்?
இந்தியாவிலிருந்து சீனாவுக்குச் சென்ற போதிதர்மரைத் தங்களோடு வைத்திருக்க வேண்டும். அதுவே தங்கள் நாட்டுக்கான பலம் என்று சீனர்கள் நினைத்தார்கள்.
புலிகளின் தலைவர் பிரபாகரன் இந்த நாட்டின் ஒரு பெரும் பலம் என்று நீங்கள் நினைத் திருந்தால், இன்று இந்த நாட்டுக்கு ஏற்பட்டுள்ள பயங்கரம் கிட்ட நெருங்கியிருக்குமா? அல்லது இலங்கையில் தாக்குதல் நடத்த வேண்டு மென்ற நினைப்புத்தான் மதத் தீவிரவாதத்துக்கு ஏற்பட்டிருக்குமா என்ன?
அழிப்பதுதான் தீர்வு என்றால், இப்போது எழுந்துள்ள பிரச்சினை எதற்கானது என்பதை ஒரு கணம் சிந்தியுங்கள்.
–
தமிழனைப் பகையாக நினைத்தழித்தாய்…
இலங்கைத் திருநாடு அமைதியும் சுபீட்சமும் நிறைந்த நாடாக நிலைபேறடைவது சவால் மிகுந்த விடயமாக மாறிவிட்டது.
இதற்கு மூல காரணம் என்ன என்று ஆராய்ந்தால், இனவாதமும் மதவாதமும் இந்த நாட்டில் விதைக்கப்பட்டு வளர்க்கப்பட்டு இன்று பெரு விருட்சமாக எழுந்து நிற்பதுதான்.
அதிலும் இந்த நாட்டின் பூர்வீகக்குடிகளான தமிழ் மக்களை நசுக்க வேண்டும் என சிங்களப் பேரினவாதம் என்று நினைத்ததோ அன்று தொட்டதுதான் இந்த நாசம்.
ஆம், இலங்கை சுதந்திரமடையும் வரை தமிழ்த் தலைவர்களின் உதவியைப் பெற்று தன் இனத்தை வளர்த்த சிங்களப்பேரின வாதம் தமிழ்த் தலைவர்களை நம்ம வைத்து; தமிழ் மக்களுடன் சேர்ந்து வாழ்வோம் என்பது போன்ற மாயையை ஏற்படுத்தி சுதந்திரத்தின் போது இந்த நாட்டின் ஆட்சி அதிகாரத்தை சிங்களத் தலைவர்கள் தம்வசமாக்கினர்.
நரித்தந்திரத்துடனும் கபடத்தனத்துடனும் தமிழ் அரசியல் தலைவர்களை ஏமாற்றி இந்த நாட்டின் ஆட்சி அதிகாரத்தைத் தம் வசமாக்கியதுதான் தாமதம், தமிழ் மக்களை கல்வி, பதவி, வேலைவாய்ப்பு என பல கோணங்களில் புறக்கணிப்புச் செய்ய முற்பட்டது.
இதுதவிர காலத்துக்குக் காலம் இனக்கல வரங்களை ஏற்படுத்தி தமிழ் மக்களைக் கொன்றும் அவர்களின் சொத்துக்களைச் சூறையாடியும் மிகக் கொடூரமான பாதகத்தை செய்தனர்.
இதற்கு பெளத்த பீடங்களும் பெளத்த துறவிகளும் துணைபோயினர்.
இந்நிலையில்தான் தமிழ் இளைஞர்கள் விடுதலைப் போராட்டத்தை ஆரம்பிக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகினர்.
தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தின் தோற்றத்துக்கான காரணத்தை அறியாமல், தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு காணாமல் தமிழினத்தை அழிப்பதே தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தை நசுக்க ஒரே வழி என சிங்கள ஆட்சியாளர்களும் படைத்துறையும் முடிவு செய்தது.
அதன் இறுதி விளைவு பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் வன்னிப் பெருநிலப்பரப்பில் கொன்றொழிக்கப்பட்டனர்.
அந்தக் கொடூரம் இன்னமும் தமிழ் மக்களை வாட்டி வதைத்து கண்ணீரும் கம்பலையுமாக அலையவிட்டுள்ளது.
கொடும் போர் நடத்தி விடுதலைப் புலிகளை கொன்றொழித்து விட்டோம் என்று போர் வெற்றி கொண்டாடிய இலங்கை ஆட்சியாளர்களின் வஞ்சகத்தனம் இன்று இலங்கைத் திருநாட்டை சர்வதேசத்தின் பயங்கரவாதத்துக்கு இரையாக்கியுள்ளது.
தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வைக் கண்டு தமிழ் மக்களின் அறிவு, வீரம், பொருளா தாரம், அவர்களின் நம்பகத்தன்மை என்பவற்றை இந்த நாட்டின் பெருவளமாக ஆக்காமல், தமிழனைக் கைது செய்தும் அவனை விசாரிக்கத் தமிழ் தெரிந்தவர்களைப் புலனாய்வுப் பிரிவில் சேர்த்தும் அமைச்சுப் பதவிகளைக் கொடுத்தும் ஆளாக்கினர்.
இனி அனுபவித்துப் பார்ப்பதைத் தவிர வேறு ஏது வழி.
என்ன செய்வது ஆட்சியாளர்களின் சிறு மைத்தனத்தால் அப்பாவிப் பொதுமக்கள் பலியாகும் துன்பம் மனித இதயங்களை எரிக்கவே செய்கிறது.
வடக்கு மாகாண முன்னாள் அமைச்சரும் ஈழத்தமிழர் சுயாட்சிக் கழகத்தின் பொதுச் செயலாளருமான அனந்தி சசிதரன் யாழில் இன்று ஊடக சந்திப்பொன்றை நடாத்தியிருந்தார்.
அங்கு அவர் தெரிவித்ததாவது..
இலங்கையில் நடாத்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதல்களைக் கண்டிப்பதுடன் ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கின்ற அதே நேரத்தில், இத்தகைய தாக்குதல்கள் நடாத்தப்படவுள்ளதாக அரசிற்கு பல தரப்பாலும் அறிவிக்கப்பட்டிருந்த போதிலும் அதற்கான நடவடிக்கைகளை எடுக்க அரசாங்கம் தவறியுள்ளது. ஆகவே இதற்கான முழுப் பொறுப்பையும் அரசாங்கமே எடுக்க வேண்டும்.
இவ்வாறான நிலையிலையே தற்போது அரசாங்கம் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அதிலும் இராணுவத்தைப் பயன்படுத்தி சோதனை தேடுதல் என மேற்கொள்வதால் பொது மக்கள் மத்தியில் அச்ச நிலை ஏற்பட்டுள்ளது. ஆகவே மக்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கும் அச்சத்தை நீக்க வேண்டியது அவசியம். அதற்கமைய பொலிஸாரை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
சிவில் நிர்வாகத்தில் இராணுவத்தை தவிர்த்து பொலிஸாரைப் பயன்படுத்துமாறு நாங்கள் கோருகின்ற போது வடக்கு கிழக்கில் இராணுவத்தை நிலை நிறுத்துமாறு நான் கூறியதாக சில செய்திகள் வெளிவந்திருக்கின்றன. அத்தகைய செய்திகளில் எந்தவித உண்மையுமில்லை. இராணுவத்தை நிலை நிறுத்துமாறோ அல்லது இராணுவத்தை பயன்படுத்துமோறோ நாங்கள் கோரவில்லை என்பதை தெளிவாக கூறுகின்றோம்.
மேலும் குண்டுத் தாக்குதல்களால் உயிரிழந்த அல்லது பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்கம் நஸ்டஈட்டை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது. இதே போன்றே கடந்த யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களும் இங்கு வாழ்கின்ற போது அத்தகைய நஸ்ட ஈடுகள் எதனையும் வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கைகளை முன்னெடுக்காத நிலையே இருக்கின்றது.
இதே போல பாதிக்கப்பட்ட மக்கள் சர்வதேச உதவியுடன் தமக்கான நீதியைக் கோருகின்ற சந்தர்ப்பங்களில் அவ்வாறு சர்வதேச உதவிகள் பெறப்படவோ சர்வதேச விசாரணைகள் எவையும் முன்னெடுக்கப்படவோ மாட்டாது என இலங்கை அரச தரப்பினர் தொடர்ந்தும் தெரிவித்து வந்தனர். அது மாத்திரமல்லாமல் சர்வதேச தரப்புக்கள் இங்கு வருவது இலங்கையின் இறைமையைப் பாதிக்குமென்றும் கூறி வந்தனர்.
ஆனால் இன்றைக்கு சர்வதேசம் வந்து விசாரணைகளைச் செய்கின்றது. அந்தச் சர்வதேசத்தையே கைகூப்பி வரவேற்பவர்களாக இலங்கை அரச தரப்பினர்கள் இருக்கின்றனர். ஆகையினால் இப்போது இலங்கையின் இறைமை பாதிக்கவில்லையா என்று கேட்கின்றது மட்டுமல்லாமல் தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட குற்றங்கள் அநீதிகளுக்கு சர்வதேச உதவியுடன் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு நீதி வழங்கப்பட வேண்டுமெனக் கோருகின்றோம்.
அத்தோடு இலங்கையில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்களை ஒரு சந்தர்ப்பமாகப் பயன்படுத்தி இனங்கள் அல்லது மதங்களுக்கிடையே குழப்பத்தை ஏற்படுத்தும் நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ளக் கூடாது என்று கேட்டுக் கொள்கின்றோம். ஏனெனில் வவுனியாவில் உள்ள கூட்டுறவு கல்லூரியை ஆக்கிரமித்து வைத்திருக்கும் படைத்தரப்பு அதனை விடுவிப்பதற்கு இணக்கம் தெரிவித்த போதிலும் தற்போது அதனை விடுவிக்க போவதில்லை எனக் கூறியிருப்பதாக அறிகிறோம்.
அதற்கான காரணமாக பாகிஸ்தானில் இருந்த இலங்கைக்கு வந்துள்ள முஸ்லிம் மக்களை அந்தக் கல்லூரி வளாகத்தில் குடியேற்றப் போவதாக தெரிய வருகின்றது. ஆனால் நாங்கள் அவர்களை குடியேற்ற வேண்டாம் என்று கூறவில்லை. அந்தக் கல்லூரியை விடுவித்துவிட்டு இங்கு குடியேற்றாது வேறு எங்காவது கொண்டு சென்று குடியேற்றுங்கள் என்று தான் கூறுகின்றொம்.
இங்கு ஏற்கனவே பல முரண்பாடுகள் குழப்பங்கள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்ற நிலையில் தொடர்ந்தும் முரண்பாடுகளை வளர்த்துக் கொள்ளும் நடவடிக்கைகளை அரசாங்கமே மேற்கொள்ளக் கூடாது என்று கேட்டுக் கொள்கின்றோம். மேலும் அதிருப்தியுடனும் அச்சத்துடனும் வாழ்கின்ற மக்களுக்கு முழுமையான பாதுகாப்பையும் அரசு வழங்க வேண்டும். குண்டுத் தாக்குதல் தொடர்பில் பல்வேறு தகவல்கள் வெளிவருகின்ற நிலையில் அதன் உண்மையை மக்களுக்கு அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும்.
இதே வேளை நாட்டில் ஏற்பட்டுள்ள இன்றைய சூழலில் ஈழத்தமிழரின் இன விடுதலைக் போராட்டம் என்றால் என்ன என்பதும் தீவிரவாதம் என்றால் என்ன என்பதையும் நாட்டு மக்களும் அரசும் சர்வதேசமும் உணர்ந்திருக்கின்றன. இதனூடாக எமது இனவிடுதலைப் போராட்டத்தின் நியாயப்பாடுகளை ஏற்றுக்கொள்ள நிலை வந்துள்ளது. ஆகவே எமது இனவிடுதலைப் போராட்டத்தின் நியாயப்பாடுகளை அரசும் சர்வதேசமும் ஏற்றுக் கொள்ளுமென எதிர்பார்க்கின்றொம்.
குறிப்பாக இலங்கையில் எங்கு ஒரு சம்பவம் இடம்பெற்றாலும் அது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க முன்னதாகவே அது புலி புலி என்று பார்க்கின்றதும் கூறுகின்றதுமான நிலைமையே இருந்து வந்தது. அதனடிப்படையிலையே கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மட்டக்களப்பு வவுணதீவில் பொலிஸார் கொல்லப்பட்ட பின்னர் சந்தேகத்தின் பேரில் முன்னாள் போராளிகள் கைது செய்யப்பட்டதுடன் பலரும் விசாரணைக்குட்படுத்தப்பட்டிருந்தனர்.
ஆனால் இன்றைக்கு அதனை யார் செய்தார்கள் என்ற உண்மை வெளிவந்திருக்கின்றது. ஆக முன்னாள் போராளிகளை சந்தேகக் கண்ணோட்டத்தில் பார்க்கின்ற வழமையான செயற்பாடுகளை அரசாங்கம் கைவிட வேண்டும். கண்ணை மூடிக் கொண்டு குற்றஞ்சாட்டுவதையும் தவிர்க்க வேண்டும். ஏதாவது ஒரு சம்பவம் நடைபெற்றால் அவை தொடர்பில் நீதியான விசாரணைகளை உரிய முறையில் மேற்கொள்ள வேண்டும்.
அரசின் கண்மூடித்தனமான இத்தகைய செயற்பாடுகளால் இன்றும் எத்தனையோ பேர் சிறைகளில் வாடுகின்றனர். ஆகவே கண்மூடித்தனமான செயற்பாட்டுகளைக் கைவிட வேண்டுமென்று கேட்டுக் கொள்வதாக அனந்தி சசிதரன் மேலும் தெரிவித்தார்.
ஒரு புதிய வரலாற்றைத் தமிழர்களுக்கு தந்த தலைவன்
அடிபணிந்து தலைகுனிந்து அடிமைப்பட்டு வீழ்ந்த தமிழன் படைதிரண்டு அடிகொடுத்து வென்ற பொற்காலம் ஒன்றின் பிதாமகன் எங்கள் தலைவர் பிரபாகரன்.
தமிழனைத் தோற்கடித்தோரையெல்லாம் தமிழன் வென்றெழுந்த தமிழனை அழவைத்தோரையெல்லாம் தமிழன் கதற வைத்த வீரயுகமொன்றின் திருஷ்டிகர்த்தா அவர்.
தமிழீழ மண்ணில் ஒரு புரட்சிகர ஆயுதப் போராட்டத்திற்கு வித்திட்டு யுத்தத்தின் மையமாக நின்று அதன் உந்து விசையாக இயங்கி வெற்றியின் சிகரத்தை நோக்கி அதனை வீறுநடை போடவைத்த பெருந்தலைவர் அவர்.
தொன்மையும் செழுமையும் வாழ்ந்த பழம்பெரும் பாரம்படியங்கள் மிக்க இனமொன்றின் தேசியத் தலைவராக உலகில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு மாமனிதர்.
தமிழன் அடிபட்டு, தமிழன் துன்புற்று, தமிழன் அலைந்தோடி, தமிழன் கண்ணீர் சிந்திக் கிடந்தகாலகட்டத்தில் இனப்பற்று மிகுந்த ஒரு புரட்சி வீரனாக ஆயுதம் ஏந்திய பிரபாகரன், வீழாத படையாகத் தமிழன் அணிதிரண்டு , ஓயாத புயலாகப் பகையைச் சுழன்றடித்து ,சாயாத மலையாக நிமிரும் வரலாற்று அதிசயத்தைக் கண்முன்னால் நிகழ்த்திய பெருந்தலைவர் எங்கள் பிரபாகரன்.
தனியொரு மனிதனாய் நின்று தமிழீழத் தேசியத்தின் ஆன்மாவைத் தட்டியெழுப்பி தமிழர்களையே வியக்கவைத்த பெரும் வீரர் அவர்.
குலையாத கட்டுப்பாடும், வழுவாத நேர்மையும் ,தமிழனின் வாழ்வுநெறி பிறழாத ஒழுக்கமும், சளையாத போர்த்திறனும் ,இளாகாத வீரமும் ,யாரும் நினையாத வகையாக எவரும் மிகையாக நேசிக்கும் உயிரை இயல்பாகத் தூக்கி எறியும் ,கலையாத தேசப்பற்றும், சுதந்திரத்தில் தணியாத தாகமும் கொண்டோராக , ஆயிரமாயிரம் இளையோரை வனைந்தெடுத்து தளராத துணிவான தேசத்தின் பலமான படையொன்றை உருவாக்கி உலகில் எவருமே புரியாத விதமாக ஒரு பெரும் சாதனை படைத்த எம் தளபதி பிரபாகரன்.
பிரபாகரன் என்றால் தமிழர்களின் ஆன்மா என்று பொருள். தமிழர்களின் வாழ்வு என்று பொருள். தமிழர்களின் கீர்த்தி என்று பொருள்
அவர் ஒரு அற்புதமான மனிதர், அபூர்வமான மனிதர். ஆச்சரியமான பல தன்மைகளாலும் பண்புகளாலும் குணவியல்புகளாலும் நிறைந்திருக்கும் அதிசயப் பிறவி அவர்.
அபரிதமான ஆற்றல்கள் மிக்க தனது அழகான ஆளுமையால் முழுத்தேசத்தையுமே ஆகர்சித்து நின்ற அசாதாரண தலைவர்.
தத்தமது தேசங்களிற்கும் இனங்களிற்கும் தங்களது பெயர்களினால் பெருமையினைத் தேடித்தந்த உலக சரித்திரத்தின் தலைசிறந்த மனிதர்களின் வரிசையில் அவரது பெயரும் பொறிக்கப்பட்டுவிட்டது.
தமிழர்களின் சேவகனாகி, தமிழர்களின் தொண்டனாகி, தமிழர்களின் தலைவனாகி, தமிழர்களின் பலமாகி, தமிழர்களின் கவசமாகி, தமிழர்களின் மணிமகுடமாகி…. அடக்கி ஒடுக்கப்பட்டு முடங்கிச் சுருண்டுகிடக்கும் உலகத் தேசிய இனங்களுக்கு உன்னதமான ஒரு முன்னுதாரணமாகி பூலோகத்தின் முள்ளந்தண்டைச் சிலிர்த்திடவைக்கும் ஒரு பெயராகிவிட்டது எம் தேசத்தின் தலைவர் பெயர்.
பிரபாகரன் என்ற பெயர் தமிழீழத்திற்கும் தமிழினத்திற்கும் ஓர் அழியாத புகழ். என்றும் கிடையாத தலைநிமிர்வு.
தகப்பனால் பிள்ளையும் பிள்ளையால் தகப்பனும் வயிறு வளர்க்கும்(EXT….) இவ் உலகில். வரலாறு வளர்த்த எம் குலசாமிகள். புலனுக்குத் தெரியாத புனித சரித்திர புருசர்கள் இவர்கள்.
பிரபாகரன் சார்லஸ் அன்ரனி…!!!
உலகமே வியந்து நோக்கும் ஒரு மாமனிதனை தந்தையாக கொண்ட ஒருவர்,உலக தமிழ் மக்கள் கொண்டாடுகின்ற தலைவனின் மகனென்று ஆணவமோ,இறுமாப்போ,அகந்தையோ ஏதுமற்ற சாக்லட் குழந்தை சார்லஸ் அன்ரனி.தலைவனின் பிள்ளையென்று எப்போதும் தன்னை காட்டிக் கொள்ளாத பிள்ளை,படித்தது யாழ்பாணம் செயிண்ட் ஜான்ஸ் பள்ளியில் படிப்பில் படுகெட்டிகாரன் பண்பில் அப்படியொரு பணிவும் சாந்தமும்.தலைவரின் மகன் என்று ஏதும் பாதுகாப்பு ஒழுங்குகளோ அல்லது ஏதும் சிறப்பு வசதிகளோ சால்ஸ்க்கு ஒன்றுமே இருந்தது இல்லை.வருவதும் போவதும் தெறியாமலே ஒரு சாதாரண மாணவனாகதான் படிப்பை முடித்தார்.அவர் விமானம் ஓட்டக் கற்றுக்கொண்டதும் வன்னி காடுகளில் தானேயன்றி வெளிநாடுகளில் அல்ல.
உண்மையில் சார்லஸ் சண்டைகளுத்துக்குரிய பிள்ளையே அல்ல அதுவொரு சாக்லெட் குழந்தை என்றுதான் தளபதிமார் கூறுவினம்.தலைவரின் முதல் பிள்ளை என்பதால் தளபதிமார் அத்தனைப் பேருக்கும் செல்லம்.தலைவர் முகாமில் இருக்கின்றரை சால்ஸை பயிற்சியில் ஈடுபடுத்திவிட்டு தலைவர் வாகனத்தில் ஏறி வாகனம் வளவு திரும்புவதற்குள் “நீ போய் படுத்துக்கோ தம்பி”என்று அனுப்பி வைக்கும் அளவுக்கு சால்ஸ் தளபதிமாரின்ர செல்லம்.
எவரையும் காயப்படுத்தாத தலைவரின் மகனென்று எவரிடமும் ஆணவமோ அதிகாரமோ காட்டாத பிள்ளை.மற்ற போராளிகளை போலதான் சால்ஸ்சும்.எல்லோரிடத்தும் அப்பா,மாமா,அண்ணே என்றே குழைந்து திரியும் குழந்தை சார்லஸ் அன்ரனி.இறுதி சண்டையில் ஆமி இறுக்கம் நெருங்கிகொண்டே வர தலைவனின் தலைமகன் என்பதால் தன்னை காப்பாற்றுங்கோ என்றோ,தற்போதுள்ள அரசியல் வியாதிகளைப்போல் தந்தையின் அதிகாரத்தை பயன்படுத்தி பத்திரமாக வெளிநாடுகளுக்கு அனுப்பி வையுங்கள் என்றோ ஏதும் கேட்கவில்லை,அவன் அண்ணை பிரபாகரன் ரத்தம் எப்படி கேட்பான் அப்படி ? “செய் அல்லது செத்துமடி”என்ற தன் தகப்பனின் வேத மந்திரத்தையே தானும் உளப்பூர்வமாக ஏற்று களமாடி பிரபாகரன் மகன் என நிருபித்து வீரச்சாவை தழுவிக்கொண்டார்.
உண்மையில் கிளிநொச்சி ஆமியிடம் வீழ்ந்தபின் சார்லஸ் சிறப்பு அதிரடி பிரிவொன்றின் அங்கமாய் புல்மோட்டை காட்டுபகுதிக்குள் நகர்ந்து நிண்டார்.முல்லைதீவு முற்றுகை இருகிக்கொண்டே வர விடுதலைப் போராட்டம் பாதுகாக்கபட வேண்டுமென்றால் தலைவர் களத்தைவிட்டு அகலவேண்டுமென்ற முடிவை தளபதிமார் எடுத்தபோது அதை ஏற்க மறுத்து “என்னை நம்பி வந்த மக்களையும் நான் வளர்த்த போராளிகளையும் விட்டிட்டு நகரமாட்டேன் என்று பிடிவாதமாக நிண்டார்.இத்தனையாண்டு காலப் போராட்டத்தையும் இத்தனையாண்டு காலப் போராளிகளின் தியாகத்தையும் அவர்கள் கண்ட கானவையும் மெய்பிக்க வேண்டுமென்றால் தலைவர் களத்தைவிட்டு அகன்றே தீரவேண்டுமென்று மேலும் அழுத்தமாக தளபதிமார் சொல்ல. “சார்லஸ் காட்டுக்குள் நிக்கிறான் தன்னையும் மகனையும் காப்பாற்றிக்கொண்டு போராளிகளையும் மக்களையும் அழிவுக்கு கொடுத்தான் பிரபாகரன் என்ற வரலாற்றுபழி என்னை சேரவிடமாட்டேன்”என்று மேலும் தலைவர் பிடிவாதமாக கூற,
தளபதிமார் வேறுவழியின்றி அப்படியானால் சால்ஸை களத்திற்கு அழைத்துகொண்டு வருகின்றோம் என்று தளபதிமார் சொன்ன பிறகுதான் தலைவரின் பிடிவாதம் சற்று தளர்ந்தது அந்த ஒரு நொடி தளபதிமாருக்கு போதுமானதாக இருந்தது.எளிமையாக கூற வேண்டுமென்றால் விடுதலைப் போராட்டத்தையும் தலைவரையும் பாதுகாக்க வேண்டி தளபதிமார் தந்தையிடமே மகனின் உயிரை விலை பேசினர் என்பதே உண்மை.
தமிழுலகே என் தமிழ்சாதியே இப்படியொரு அப்பழுக்கில்லாத உன்னதம் உலகினில் வேறெங்காவது நிகழ்ந்ததுண்டா?
இப்படியொரு நீதியான தலைவனை உலகில் வேறெங்காவது பார்த்ததுண்டா? படித்ததுண்டா? கேட்டதுண்டா? அப்படி கேள்விப் பட்டதுண்டா?
ஒரு பசுவின் கன்றுக்காக தான்பெற்ற மகனையே தேர்காலிட்டு கொன்றானாம் மனுநீதி சோழன் என்று ஏட்டில் படித்திருக்கின்றேன்,மனுநீதி சோழன்கூட தனது ஒரு மகனைதான் கொன்று நீதியை நிலை நாட்டினார் ஆனால் அந்த மனுநீதி சோழனையும் விஞ்சியவர் எங்கள் ஈழமகாராஜன்.பிரபாகரன் வம்சம் என்று ஓங்கி உரக்கசொல் மார்தட்டி பெருமைகொள்.
“கயல்விழி தமிழ்ச்செல்வன்”
முகநூல் இன்று நினைவூட்டும் பதிவு இது.. சமகாலத்தில் அவசியமான பதிவும் கூட..
0000000
‘பிரபாகரனியம்’ என்றால் என்ன? இது பலரின் கேள்வி. பதில் மிக எளிமையானது – பிரபாகரனைப் போல் – பிரபாகரனியத்தைப் போல்.
எனது சிந்தனை, உங்களது சிந்தனை மட்டுமல்ல போராடும் ஒவ்வொரு தேசிய இனங்களினதும் கூட்டு சிந்தனையின் வடிவமே ‘பிரபாகரனியம்’.
பெயரின் பின்னால் ஒரு இய(ச)ம் ஒட்டியுள்ளதால் அது தனித்த அவரது கோட்பாடு என்று கற்பனை செய்து கொள்ளாதீர்கள்.
அது பிரபாகரனியத்திற்கு முரணானது மட்டுமல்ல ‘நந்திக்கடல்’ அதை அடியோடு நிராகரிக்கவும் செய்கிறது.
அது லெலினிசம், மார்க்சிசம், மாவோயிசம் ஏன் பெரியாரியத்திற்குக் கூட பொருந்தலாம். ஆனால் பிரபாகரனியத்திற்கு அது பொருந்தாது. அதுவே அதன் சிறப்பு.
மௌனம்தான் பிரபாகரனியத்தின் மொழி. சிந்தனையுடன் கூடிய செயல் வடிவம்தான் அதன் அசைவியக்கம்.
தனது கண்ணசைவிலும் கையசைவிலும் ஒரு இயக்கத்தையும் இனத்தையும் வழி நடத்தியது மட்டுமல்ல ஒரு நடைமுறை அரசையும் கட்டியெழுப்பியவர் பிரபாகரன்.
அவர் நடந்தால் அது ஒரு அரசியல். அமர்ந்தால் அது வேறு ஒரு அரசியல். அதுதான் அவர் முள்ளிவாய்க்காலில் நின்ற போது அது ஒரு அரசியலாக இருந்தது. அவர் நந்திக்கடலை நோக்கி நடந்தபோது அது வேறு ஒரு அரசியலாகப் பரிணமித்தது.
இந்த இரு நிலங்களுக்கும் இடையிலான அவரது நடையின் பின்னுள்ள அரசியல் பிரளயத்தை கணிக்க சாதாரண மனித அறிவால் முடியாது.
அதுதான் ‘நந்திக்கடல்’ அதைக் கணித்து அந்த வரலாற்று பெருமையைத் தனதாக்கிக் கொண்டுள்ளது.
எனவே பிரபாகரனுக்காக, பிரபாகரனியத்திற்காகக் காத்திருக்காதீர்கள். ஏனென்றால் அது உங்களிடம்தான் இருக்கிறது.
அதை நாம் ஒவ்வொருவரும் உணர்ந்து கூட்டாக அதற்கு ஒரு செயல் வடிவம் கொடுக்கும்போது நாம் விடுதலையை எமதாக்கிக் கொள்வதாடு ‘பிரபாகரனியம்’ என்பது நம் ஒவ்வொருவரினதும் தனித்துவ கோட்பாட்டுருவாக்கம் என்பதையும் உணர்ந்து கொள்வோம்.
தனக்கோ தனது குடும்பத்திற்கோ என்று ஒரு பிடி மண்ணைக் கூட எடுத்து செல்லாத ஒரு அதி மனிதன் தனது ‘சிந்தனையை’க் கூட நம் ஒவ்வொருவருக்கானதாக மாற்றி விட்டு ‘வெறும்’ மனிதனாக சென்ற வரலாற்றுக் கதை இது.
Parani Krishnarajani
கடந்த கார்த்திகை மாதம் வவுணதீவில் இடம்பெற்ற பொலிஸாரின் படுகொலை தொடர்பிலான விசாரணை சரியான முறையில் மேற்கொள்ளப்பட்டிருந்தால் கடந்த 21ஆம் திகதி இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதல்களைத் தடுத்திருக்க முடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறீநேசன் தெரிவித்துள்ளார்.
அத்துடன் முற்றுமுழுதாக முன்னாள் போராளிகளை இலக்கு வைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டமையே சரியான குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படாமல் தொடர்ச்சியாக இவ்வாறான தாக்குதல்களுக்கு முகங்கொடுக்க நேர்ந்தமைக்கான காரணம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 21ஆம் திகதி நாட்டின் பல்வேறு இடங்களில் மேற்கொள்ளப்பட்ட குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடையோர், வவுணதீவு பொலிஸாரின் படுகொலையுடனும் தொடர்புப்பட்டிருப்பதாக வெளியாகியுள்ள செய்தி தொடர்பில் இன்று கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கூறுகையில்,
மட்டக்களப்பை மாத்திரம் அல்லாமல், முழு நாட்டையும் அதிரவைத்த பங்கரவாதச் செயல்கள் மூலமான மனித அவலம் அரங்கேற்றப்பட்டு ஒருவாரம் கடந்து விட்டது.
அந்தவகையில், நாட்டில் எட்டு இடங்களில் நடைபெற்ற மனித குண்டுதாரிகளின் கொடூர செயல் மூலமாக நூற்றுக்கணக்கான அப்பாவி உயிர்கள் பறிக்கப்பட்டு விட்டன.
அதேபோன்று 450இற்கும் அதிகமான அப்பாவிகள் படுகாயங்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். இவ்வாறான நிலையில் நாட்டின் பல பாகங்களிலும் சுற்றிவளைப்புகள், கைதுகள் மும்மூரமாக செய்யப்பட்டு வருகின்றன.
சந்தேகநபர்கள் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆங்காங்கே மனித குண்டுகளும் வெடித்துள்ளன. எது எப்படியாக இருந்தாலும், இந்த பயங்கரவாதத்தின் ஆரம்பம் கடந்த 21ஆம் திகதியாக இருக்கவில்லை.
அது ஏறத்தாழ 5 மாதங்களுக்கு முன்பே ஆரம்பிக்கப்பட்டிருந்தது என்றே கூற வேண்டும். அதாவது, 30.11.2018 அதிகாலை வவுணதீவுப் பிரதேசத்தில் பாதுகாப்புக் கடமைக்காக அமர்த்தப்பட்டிருந்த இரண்டு பொலிஸார் சுட்டும், வெட்டியும் கொல்லப்பட்டதோடு அவர்களது ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டிருந்தன.
இதற்கு அடுத்து சந்தேகநபர்களாக புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் இருவர் கைது செய்யப்பட்டனர். இவ்விருவரும் தலா 05 பிள்ளைகளின் தந்தையர்களாவர், ஒருவர் மட்டக்களப்பு – கரையாக்கன்தீவை சேர்ந்தவர், அடுத்தவர் கிளிநொச்சியை சேர்ந்தவர்.
இவர்களது கைதோடு விசாரணைகள் ஏறத்தாழ முடிந்து விட்டது போன்று அமைந்திருந்தது. யாரோ குற்றத்தைச் செய்துவிட்டு இவ்விருவரது தலைகளில் குற்றங்கள் சுமத்தப்பட்டிருப்பது போன்று என்னிடம் நியாயமான சந்தேகங்கள் இருந்தன.
இது தொடர்பாக நாடாளுமன்றத்திலும் எனது கருத்துக்களை முன்வைத்திருந்தேன். அதேபோன்று கடந்த காலத்தில் மண்டூரில் வைத்து மதிதயன் என்ற சொல்லப்படுகின்ற சமூக சேவை உத்தியோகத்தர் அடையாளந்தெரியாத துப்பாக்கிதாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
அந்தக் கொலையாளி சம்பந்தமான குற்றவாளிகளும் இதுவரை கண்டுபடிக்கப்பட்டதாக நான் அறியவில்லை.
அதாவது சூத்திரதாரிகள் யாரோ இருக்க சம்பந்தம் இல்லாதவர்கள், சம்பந்தம் இல்லாத விதத்தில் சந்தேகத்தின் பேரில் கைது செய்ய்பட்டுள்ளனர்.
அத்துடன் கோவைகளும் மூடப்படுகின்றன. இவ்வாறான சூழ்நிலையில் தற்போது உறங்கிய உண்மையொன்று வெளியில் வந்திருக்கின்றது.
அதாவது, குற்றச் செயல்களின் முக்கியமான சூத்திரதாரியான சஹ்ரானின் வாகனச் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
இவரின் வாக்குமூலத்தின்படி வவுணதீவுக் கொலைச் சம்பவத்தில் அவர் சம்பந்தப்பட்டிருப்பதாக ஒத்துக் கொண்டிருக்கின்றார். ஆயின், உண்மையான குற்றவாளி இப்போதுதான் இனங்காணப்பட்டுள்ளார்.
அதேவேளை புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் கைது செய்யப்பட்டு தற்போதும் விசாரிக்கப்பட்டு வருவதாக அறிகின்றோம்.
அதாவது, யாரோ குற்றங்களை செய்ய யாரோ கைது செய்யப்படுகின்ற நிலைமை எமது நாட்டில் தொடர்ந்தும் இருந்து வருகின்றன.
இதனால் குற்றவாளிகள் தப்பித்துக் கொள்வதற்கும், அக்குற்றவாளிகள் மேலும் மேலும் கொடூரமான செயல்களை செய்வதற்கும் இடமளிக்கப்படுகின்றன.
குற்றவாளிகள் தப்பிக்க விடப்பட்டாலும், நிரபராதிகள் தண்டிக்கப்படக் கூடாது என்கின்ற சட்டவியல் சார்ந்த கருத்தொன்று இருக்கின்றது.
அவ்வாறு இருக்க ஏறத்தாழ 05 மாதங்களாகிய பின்னர் தான் உண்மையான குற்றவாளியை இனங்கண்டிருக்கிறார்கள்.
எனவே முறையான துப்புத் துலக்கல்கள் புலனாய்வுகள் நடைபெற்றிருந்தால் 05 மாத காலத்திற்குள் பல சந்தேகநபர்களை அடையாளம் கண்டு அண்மையில் ஏற்பட்ட மனிதப் பேரவலத்தை தடுத்திருக்கலாம்.
அதேவேளை, நிரபராதிகள் வீணாக தண்டிக்கப்படுவதையும் தவிர்த்திருக்கலாம். துப்புகள் துலக்கப்படுவதில் குறைபாடுகள் இருக்கின்றனவா? துலக்கப்பட்ட துப்புகளை உரியவர்களுக்கு அறிவிப்பதில் குறைபாடுகள் இருக்கின்றனவா?
அறிவிக்கப்பட்ட போதும் உரியவர்கள் உரிய நடவடிக்கைகளை எடுக்காமல் இருப்பதில் குறைபாடுகள் இருக்கின்றனவா? அல்லது புலனாய்வுப் பகுதிகளில் யாராவது ஊடுருவி இருக்கின்றார்களா? அந்த ஊடுருவல்கள் புலனாய்வுப் பகுதியை பலவீனமாக்கியிருக்கின்றதா?
அதிகார சக்திகள் சிலர் இந்த பயங்கரவாத அமைப்புகளோடு ஏதாவது பின்னணியில் இருக்கின்றார்களா? அதேவேளை இந்த பயங்கரவாத சூத்திரதாரிகள் வாழ்ந்த இடங்களில் காணப்பட்ட புலனாய்வாளர்கள் உரிய புலனாய்வுகளை செய்யவில்லையா? புலனாய்வுகள் செய்யப்பட்டும் அவை மறைக்கப்பட்டுள்ளனவா?
ஆயின் அப்பிரதேசங்களில் இருந்த புலனாய்வாளர்கள் தொடர்ந்தும் அப்பிரதேசங்களில் பணியாற்றப் போகின்றார்களா? என்கின்ற பல கேள்விகள் எம்மத்தியில் எழுந்துள்ளன.
அதேவேளை அரசின் தலைவர், பாதுகாப்புப் படையின் தலைவர் என்ற வகையில் செயற்படுகின்ற ஜனாதிபதி போதைவஸ்தினைக் கட்டுப்படுத்துவதில் எடுத்துக் கொண்ட அக்கறையின் காரணமாக சர்வதேச பயங்கரவாதம் நாட்டிற்குள் புகுந்து அவலத்தை ஏற்படுத்தப் போவதை கவனிப்பதில் கவனம் செலுத்தவில்லையா?
அதேநேரம் ஜனாதிபதி பாதுகாப்பு அமைச்சு, சட்டம் ஒழுங்கு அமைச்சு ஆகிய இரு பாரிய விடயதானங்களை சுமந்து கொண்டு ஏனைய அமைச்சுகளையும் சுமப்பதில் சிரமப்படுகின்றாரா? சட்டம் ஒழுங்கு அமைச்சினை பொருத்தமான ஒருவரிடம் ஒப்படைக்காமல் இருந்தததால் இப்படியான தவறுகள் ஏற்பட்டனவா?
இரு முக்கியமான அமைச்சசுகளையும் ஜனாதிபதியே வைத்திருக்க வேண்டும் என்பதில் யார் அழுத்தம் கொடுத்தார்கள்? இதனால் சட்டம் ஒழுங்கு அமைச்சு வினைத்திறன் அற்றுப் போயுள்ளதா போன்ற கேள்விகளும் இயல்பாகவே எம்மத்தியில் எழுகின்றன.
எனவே அரசியல் நோக்கம், அரசியல் தேவை, அரசியல் இலாபம் என்பவற்றுக்காக முக்கியமான அமைச்சுகளை பொருத்தமானவர்களிடம் கொடுக்காமல் இருப்பதால் இப்படியான விளைவுகள் ஏற்பட்டிருக்கலாமா என்றெல்லாம் பல கோணங்களில் மக்களும் நாமும சிந்திக்கின்றோம்.
எனவே நியாயமான சந்தேகங்கள் நியாயமான கேள்விகளுக்கு உரியவர்கள் பதில் கொடுத்தாக வேண்டும். பாதுகாப்பு சபைக்கான கூட்டத்திற்கு பிரதமர் அழைக்கப்படுவதில்லை, பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் அழைக்கப்படுவதில்லை, பாதுகாப்பச் சபை பிரதமரின் கருத்துக்களுக்கு செவிசாய்ப்பதில்லை. என்றெல்லாம் நாடாளுமன்றத்தில் ஆளும் தரப்பினர் பேசுகின்றனர்.
ஜனாதிபதி அவரைச் சார்ந்தவர்கள், பிரதமர் அவரைச் சார்ந்தவர்கள் ஆகியோரிடமுள்ள தன்முனைப்புச் சிந்தனைகள் அரசியல் தேவைக்காக இடைவெளிகளை ஏற்படுத்தியுள்ளன. இந்த இடைவெளிகளை பயங்கரவாதிகள் பாணியில் சரியாகப் பயன்படுத்தியுள்ளனர் போன்று தெரிகின்றது.
ஜனாதிபதி, பிரதமர் ஆகியோருக்கிடையில் ஏற்பட்டுள்ள இடைவெளிகள் அவர்களது அரசியற் கட்சி ரீதியான தேவைகளின் அடிப்படையில் அமைந்திருக்கலாம். ஆனால் நாட்டுக்கும், மக்களுக்கும் இந்த முரண்பாடுகள் குந்தகத்தை ஏற்படுத்தியுள்ளன.
கட்சி நலன் என்பதை விட நாட்டு நலன், மக்கள் நலன் என்பது தான் முக்கியமான விடயங்களாகும். இதனை இனிமேலாவது ஐக்கிய தேசியக் கட்சியினர், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியினர், பொதுஜனப் பெரமுன கட்சியினர் உட்பட இன்னும் பல கட்சியினர் உணர்ந்து செயற்பட வேண்டியுள்ளனர்.
நியூசிலாந்தில் தனிநபர் ஒருவர் மூன்று துப்பாக்கிகளைப் பயன்படுத்தி இஸ்லாமியரின் பள்ளிவாசல்களில் தாக்குதல்களை நடத்தியது மனித நேயத்திற்கு முரணானது என்பதை மனிதாபிமானிகள் உணர்கின்றனர்.
ஆனால், அதற்கான பதிலடியொன்று எங்கோ நிகழும் என்கிற எதிர்பார்ப்பு பகுப்பாய்வாளர்கள் மத்தியில் இருந்தன. ஆனால் மேற்குலக நாடுகள் அதனை உணர்ந்து தமது பாதுகாப்புகளை உறுதிப்படுத்தியிருக்கின்றன.
பாதுகாப்புப் பலவீனம் அல்லது பாதுகாப்பு ஓட்டைகள் எங்கிருக்கின்றது என்பதை பயங்கரவாதிகள் கூர்மையாக அவதானித்து வந்திருக்கின்றனர். அதன் விளைவுதான் இலங்கையில் இந்தத் தாக்குதல்கள் நிகழ்ந்திருக்கின்றது.
இந்தியா புலனாய்வுத் தகவல்களைப் பரிமாரியதோடு இலங்கையில் பயங்கரவாதத் தாக்குதல் நடைபெற இருக்கின்றது என்பதை எச்சரித்திருந்தும் ஏன் நமது தலைவர்கள், பாதுகாப்புத் துறையினர் கவனம் செலுத்தவில்லை என்ற கேள்வி ஒவ்வொரு குடிமகன் மத்தியிலும் எழுகின்றது.
இனிமேலாவது இலங்கை தலைவர்கள், அதிகாரிகள் புலனாய்வுத் தகவல்களை சரியாக, முறையாகக் கையாள வேண்டும். குற்றவாளிகள் இருக்க குற்றவாளிகளைக் கண்டுகொள்ளாமல் அப்பாவிகளைக் கைது செய்து அவர்களைக் கொடுமைப் படுத்துவதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
கைது செய்யப்பட்டுள்ள வவுணதீவுக் குற்றச்செயல்களோடு சம்பந்தப்படாத முன்னாள் போராளிகளை விடுதலை செய்து அவர்களது குடும்பங்களுக்கு இழப்பீடுகளைக் கொடுக்கவும் முன்வர வேண்டும்.
அதேபோன்று கொடூரமான செயல்களைச் செய்தவர்களுக்குரிய தண்டனை வழங்கப்பட வேண்டும். அதேவேளை எந்த சமூகத்திலும் அப்பாவிகள் தண்டிக்கப்பட கூடாது.
ஆனால் மறைமுகமாக தீவிரவாதத்தை ஊக்குவிக்கின்ற அதிகார சக்திகள் கண்டறியப்பட வேண்டும். அவர்களுக்கான அதிகாரப் பலம் நீக்கப்பட வேண்டும். அதிகார பலத்தோடு இருக்கின்றவர்கள் தீவிரவாதத்தை வளர்ப்பதற்கு வழிசமைக்கக் கூடாது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டபடி நடைபெற்ற தாக்குதலின் பின்னணியில் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் உள்ளமை தெரியவந்துள்ளது.
தவ்ஹித் ஜமாத் – ISIS பயங்கரவாதிகளின் வவுணதீவு தாக்குதல், புலிகள் மீது போட்ட வீண்பழி !
Recent Comments