Search

Eelamaravar

Eelamaravar

Month

March 2019

இலங்கையில் தமிழ் மன்னர்களின் ஆட்சி !

அகத்திய முனிவர் இலங்கையின் பூர்விகம் பற்றி இராமனுக்குச் சொல்லுகின்ற பாங்கிலே இதன் மூல நூல் அமைந்தமையால் அதற்கு அகத்தியர் இலங்கை” எனப் பெயர் சூட்டப்பட்டது.

இந்த நிலப்பரப்பில் பல கண்டங்கள் இருந்தன. அவற்றுள் ஒன்றுதான் தமிழர் கண்டம் என்பதாகும். இதுவே பிற்காலத்தில் தமிழகம் என அழைக்கப்பட்டது.. மிகப் புராதன காலத்தில் தமிழகத்தில் வாழ்தவர்கள் தமிழர்கள் மட்டுமே. ஆட்சி புரிந்த அரசர்கள் தமிழர்.

அவர்களது நெறி சைவநெறி. மொழி தமிழ். அக்காலத்திலுருந்தே தமிழர்கள் மிக முன்னேற்றமுள்ளவர்களாக விளங்கினார்கள். கமத்தொழில், கைத்தொழில் இரண்டையுமே இரு கண்களாகப் போற்றி வாழ்ந்தார்கள்.

அரசர்களோ நீதி வழுவா நெறிமுறையில் ஆட்சி புரிந்தனர்.மக்களும் தென்புலத்தார், தெய்வம், விருந்து, ஓக்கல், தான் என்னும் ழும்பலமும் ஓம்பி வாழ்ந்து வாந்தனர். பிராமணர்கள், அரசர்கள், வைசியர் எனப்படும் வர்த்தகர்கள், வேளாண்மக்கள் எனப்படும் கமக்காரர் ஆகியோர் தம்தம்க்குரிய கடமைகளின்றும் வழுவாது ஒழுகிவந்தனர்.

அரசனது ஆணைகள் இவற்றுக்கு வழிவகுப்பதாய் அமைந்திருந்தன. இதன் பலனாக மாதம் மூன்று மழை பெய்தது. நீர்வளம் பெருகியது. நிலவளமும் பெருகியது.. அதைதியும் நிலவியது. உணவு உடை உறையுள் ஆகிய மனிதனின் அத்தியாவசிய தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டன.

பசியால் மெலிபடைபவர்களோ, பிணியால் நலிவடைபவர்களோ மிக மிக அரிதாகவே காணப்பட்டனர். இத்தகையதோர் ஒப்பற்ற சமுதாயம் நிலவிய தமிழகத்தை அவ்வப்போது ஆட்சி புரிந்த தமிழரசர்கள் உருவாகினர்ர்கள்.

இவ்வாறு தமிழகத்தைச் சிறப்பாக ஆட்சி புரிந்த அரசர்களுள் மனு என்னும் அரசனும் ஒருவனாவன். இவன் தமிழன். இந்த மனு அரசனுக்கு தமிழர் வரலாற்றில் முதன்மையானதும் முக்கியத்துவம் வாய்ந்த ஓர் தனி இடம் உண்டு.

ஒரு காலத்தில் நெப்போலியன் போர்ன்பாட் என்பவனால் உருவாக்கப்பட்ட சட்டவாக்கங்கள், பிற்காலத்திலும் இக்காலத்திலும் எழுந்த சட்டவாக்கங்களுக்கு எவ்வாறு அடித்தளமாக அமைந்தனவோ அது போலவே புராதன காலத்தில் மனு அரசன் எழுதிய சட்டவாக்கமும் அவனைத் தொடர்ந்து வந்த ஆட்சியாளர்களுக்கும் அவர்களின் சட்டவாக்கங்களுக்கும் அடித்தளமாக அமைந்துள்ளது எனலாம்.

மனுதர்ம சாத்திர நூலும் இவ்வகையில் உருவானதே எனலாம். இந்த மனுசக்கரவர்த்தியானவன் தானுருவாக்கிய நீதி நெறியின் படியே ஆட்சியும் புரிந்தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சாதி வேறுபாடு காட்டுதல் போன்ற அநாகரிகமான சட்டங்கள் அவனது நீதிநூலில் இடம் பெறவில்லை என்பதும், ஆனால் சுயநலவாதிகளும் சாதியின் பெயரால் தம்மைப் பெரியவர்களாகக் காட்டிக் கொண்டவர்களும் அதனால் தம்மை வளர்த்துக் கொண்டவர்களுமே இந்த அநாகரிகமான சட்டத்தை இந் நூலில் புகுத்தி இந் நூலுக்கு இழுக்குத் தேட முற்பட்டனர்.

இந்த உண்மையை நாம் உணர்ந்து தெளிவு பெற வேண்டும். இந்த மனு சக்கரவர்த்தி தமிழகத்தை நாற்பத்து நான்கு வருடங்கள் ஆட்சி புரிந்தான்.

இந்த மனுசக்கரவர்த்திக்கு ‘சமன்” என்னும் புத்திரனும் ‘ஈழம்” என்னும புத்திரியும் பிறந்தார்கள். மனுவின் பின் தமிழகம் இந்த இருவராலும் ஆட்சி செய்யப்பட்டு வந்தது. தென்னகத்தை மகனாகிய சமனும், அவனது சந்ததியினரும், வடபாகத்தை மகளாகிய ஈழமும் அவளது சந்ததியினரும் ஆண்டு வந்தனர்.

மனுவின் மகளாகிய ஈழம் என்பவளுக்கு குமரி என்று வேறு பெயரும் உண்டு. குமரி என்று அழைக்கப்பட்ட இந்த மனுவின் மகள் ஆட்சி புரிந்த பகுதி குமரிக் கண்டம் எனப்பட்டது. இந்தக் குமரிக் கண்டத்திலேயே இலங்கை நாடு, பாண்டி நாடு, சேர நாடு, சோழ நாடு முதலிய நாடுகள் அடங்குகின்றன.

ஈழம் என்னும் அரசி அட்சி புரிந்த பகுதியே அவளின் பெயரால் ஈழம்நாடு என்று அழைக்கப்பட்டுக் காலக்கிரமத்தில் ஈழநாடு ஆகியது. இந்த நான்கு மண்டலங்களும் ஒரு காலத்தில் ஒரே நிலப்பரப்பாகவே இருந்தன. இடையில் ஏற்பட்ட கடல்கோள்களே ஈழநாடு என்று அழைக்கப்பட்ட ஈழ மண்டலத்தை ஏனைய மூன்று மண்டலங்களிருந்து பிரித்து விட்டன.

எனினும் ஈழமண்டலமாகிய இலங்கையில் தமிழரே வாழ்ந்து வந்தனர். பிற்காலத்தில்தான் தமிழலரல்லாதோர் இங்கு வந்து குடியேறினர் என்பதனை நாம் மறந்து விடக் கூடாது. வரலாற்றுக்காலத்துக்கு முன்பிருந்தே தமிழர்கள் இலங்கையில் மிகவும் முன்னேற்றம் அடைந்தவர்களாகவும் நாகரீக வளர்ச்சி பெற்றவர்களுமான ஓர் இனமாக வாழ்ந்து வந்தனர்.

தமிழர்கள் பாரம்பரியமாக வாழ்ந்துவந்த குமரிக் கண்டத்தில் உள்ள ஒரு நகரில் கன்னியாகிய குமரி (ஈழம்) ஆட்சி புரிந்தமையால் அந்நகரம் கன்னியாகுமரி என்று அழைக்கப்பட்டது. இக்கன்னியாகுமரி என்னும் பட்டினம் குமரிகண்டத்துக்குச் சிலகாலம் தலை நகராகி விளங்கியது. பிற்காலத்தில் குமரிக்கண்டத்தின் பெரும் பகுதி கடல் கொள்ளப்பட்டது.

இக்கடல் கோல்களினால் நிலப்பரப்பு மாத்திரமன்றிப் பல தமிழ் சங்க மண்டபங்கள், அவைகளில் இருந்த இலக்கண இலக்கிய நூல்கள் எல்லாம் சமுத்திரத்துள் ஆழ்ந்து விட்டது;. சமன் ஆண்ட பிரதேசமும் கடலுள் அமிழ்ந்தி விட்டது……மிகுதியான நிலப்பரப்பு பாரத கண்டம் இலங்கை முதலிய பல தேசங்களாக பிரிந்தது.

விசயன் இலங்கையில் காலடி வைத்த பின்பே இலங்கையில் சிங்கள இனம் தோன்றியது. இந்த விசயன் யார் ? இவன் இலங்கைக்கு எவ்வாறு வந்தான் என்பன ? பற்றி நாம் அறிந்து கொள்ள வேண்டியது அவசியமாகின்றது…….

சிங்கள இனத்தின் தோற்றம்

வட இந்தியாவில் “லாலா” என்று ஒரு நாடு அதனைச் சிங்கபாகு என்பவன் ஆட்சி புரிந்தான். இவனது தந்தை சிங்கன் என்பவன் ஆவான். சிங்கனைப் பற்றிய பலவித புனை கதைகள் உண்டு. மிருக இராசவாகிய சிங்கமே இவன் என்பது அவற்றுள் ஒன்று.

சிங்கத்தில் இருந்து வந்த சந்ததியினரே சிங்களவர் என்றும் சொல்லப்படுகின்றது. இதனாலேயே சிங்கள மக்களின் தேசியக்கொடி சிங்கமாக இருக்கினறதென்றும் சொல்வாரும் உளர். இவையெல்லாம் ஆதாரமற்ற வெறும் ஐதிகங்களே என இவற்றை இவ்வளவில் விட்டு விடுவோம்.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள சிங்கபாக ஆசியவம்சத்தை சார்ந்தவன். வடஇந்தியாவில் இமயமலை அடிவாரம் வரை ஒரு காலத்தில் திராவிட இனம் வாழ்ந்து வந்தது என்றும் அந்தத் திராவிடரைத் துரத்திவிட்டு வந்து குடியேறிய நாடோடி மக்களே ஆசியராவர். இவர்கள் மெல்லிய சிவந்த மேனியைக் கொண்டிருந்தனர். இந்த ஆசியர்கள் ஒரு காலத்தில் இமயபமைப்ப வடக்தே நாடோடிகளாய் கூட்டங் கூட்டமாய் குதிரைகளில் சவாரி செய்து அலைந்து திரிந்தவர்களாவர்.

இவர்களுக்கு நிரந்தரமான வதிவிடங்களோ நிலங்களோ இருக்கவில்லை. இவாகள் அடிக்கடி கைபர்கணவாய் வழியாகத் திடீர் திடீரென இமய மலையின் தென்பகுதிக்குள் நுழைந்து அங்கு வாழ்ந்து வந்த திராவிட மக்களுக்குத் தொல்லை கொடுக்கு அவர்களுது பொருட்களையும் உணவுப்பண்டங்களையும் மந்தைகளையும் அபகரித்து சென்று அதன் மூலம் வாழ்க்கையை நடாத்தி வந்தவர்கள்.

இவர்களது தொல்லை பொறுக்க முடியாமலே வட இந்தியாவில் வாழ்ந்து வந்த திராவிடமக்கள் மெது மெதுவாகத் தெற்கு நோக்கி நகரத் தொடங்கினர். ஆரியர் திராவிட மக்களைத் துரத்தி விட்டு அவர்கள் வாழ்ந்த பகுதிகளில் வந்து குடியேறினர். தம்மை ஆரியர் எனக்கூறி சிங்களவரும் இதனைத்தான் இங்கு செய்கின்றனர். இந்த அநாகரீகமான மக்களே ஆரியர்.

இத்தகைய ஆரிய வம்சத்தைச் சார்ந்தவன்தான் சிங்கபாகு ஆவான். அவனின் மைந்தனே விசயன் ஆவான்.விசயனின் சந்ததியினரே சிங்களவர்கள். எனவே சிங்களவரும் ஆரியர்களே. தமிழர் திராவிட இனத்தைச் சேர்ந்தவர்கள். இந்த வகையிலேதான் இலங்கையில் வாழ்கின்ற ஆரியர்களாகிய சிங்களவர்களுக்கும் திராவிடர்களாகிய தமிழர்களுக்கும் ஒத்துப் போவதில்லை என்பது புலனாகின்றது.

சிங்கபாகுவின் மைந்தனாகிய விசயன் இனவரசனாக இருந்த பொழுது அவனுக்கு எழுநூறு பேர் தோழர்கள் இருந்தார்களாம். விசயன் இழவரசனாக இருந்தமையால் அவனுக்கு எல்லா வசதிகளும் கிடைத்தன. அதனாலே அவனுக்கு எழுநூறு பேர் தோழராயினர். இந்த விசயனும் இந்த தோழர்களும் நினைத்தவற்றையேல்லாம் செய்தார்கள். நாகரீக சமுதாயத்திற்கு ஒவ்வாத காரியங்களை எல்லாம் இவர்கள் மிகமிக விருப்பமாகச் செய்தார்கள்.

கண்டதே காட்சி கொண்டதே கோலம் என ஆள்வாரிலி மாடுகளாகத் திரிந்தார்கள். தட்டிக் கேட்க யாரும் இல்லை. தந்தை சிங்கபாகுதான் தட்டி கேட்க வேண்டியவன். அவனாலும் தட்டிக் கேட்க முடியவில்லை. அவன் அந்த நாட்டின் அரசனாக இருந்தமையினால் அந்த நாட்டின் மக்களின் நன்மைக்காகத் தன் மகனேன்றும் பராது அவனையும் அவனது தோழர்கள் எழுநூறு பேரையும் நாடுகடத்த விரும்பினான்.

அவர்கள் அனைவரையும் ஒரு பாய் கப்பலில் ஏற்றி வங்கக் கடலில் அலையவிட்டான். அக்கப்பல் காற்றினால் அள்ளுண்டு அவர்களைக் கொணடு வந்து எனது ஈழத்திருநாட்டில் மாந்தை நகரில் ஒதுக்கிவிட்டது.

வந்தாரை வரவேற்று உபசரிக்கும் தமிழர்களின் பண்பாட்டுக்கமைய வந்தாரை வாழவைத்தாள் ஒருத்தி. அவள்தான் இலங்கையில் அந்நாள் அரசி குவேனி என்பாள். அவள் ஒரு தமிழ் அரசி, அவள் வந்தவர்களுக்கு வேண்டிய வசதிகளையும் செய்து கொடுத்தாள். விசயனின் அழகில் மயங்கி தன்னையே கொடுத்து விட்டாள்

அத்தோடு இலங்கையில் தமிழர்க்கு இருந்த இறைமையையும் கூடவே தரைவார்த்துக் கொடுத்து விட்டாள். இத் தொடர்பினால் விசயன் இலங்கையின் இலங்கையின் ஆட்சியுரிமையை இலகுவில் பெற்றுக் கொண்டுவிட்டான். ஆட்சியுரிமையை தந்திரமாக கைப்பற்றிக் கொண்ட விசயன் தன் காரியம் முடிந்ததும், தனது அதிகாரதுக்கு உதவிய மனைவி குவேனியையும் பிள்ளைகளையும் அடித்து துரத்திவிட்டான்.

குவேனியைத் துரத்திய பின் இவனும் இவனது தோழர்கள் ஏழுநூறு பேரும் பாண்டிய நாட்டிலுள்ள நாயக்க வம்சத்தைச் சேர்ந்தவர்களும் அழகுடையவர் ஆகிய தமிழ்ப்பெண்களை வரவழைத்துத் திரமணஞ் செய்த கொண்டனர். இவர்களது சந்ததியினரே இன்று இலங்கையில் வாழ்கின்ற சிங்களவர் ஆவர்.

இம்மட்டில் இவர்கள் நின்று விட வில்லை. அன்று அதிகாரத்தைத் தம்வசம் வைத்திருந்த விசயனும் அவனது தோழர்களினது சந்ததியினரும் ஏற்கனவே இங்கு வாழ்ந்து கொண்டிருந்த தமிழர்களோடு திருமணம் செய்து கலந்து கொண்டனர்.

இவர்களது சந்ததியாரும் சிங்களவராயினர். இவ்வகையிலும் இலங்கையில் தமிழர் சிறுபான்மையினராகப்பட்டனர். இவ்வாறு தமது தனித்துவத்தையும் பண்பாட்டையும் கைவிட்டுச் சிங்களவர்களாக மாறிய தமிழர்களே தமது தனித்துவத்தையும் கலாச்சாரத்தையும் விட்டுக் கொடுக்காமல் வாழ்ந்து வருகின்ற உண்மையான தமிழர்களுக்கு எதிராகத் கிளம்பி இலங்கை சிங்களவருக்கு மாத்திரமே உரியதென்று விதண்டாவாதம் பேசுகின்றனர்.

கூப்பாடு போடுகின்றனர். எஞ்சிய தமிழர்களையும் சிங்களவர் ஆக்க முனைகின்றனர். இந்த உண்மையை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

இலங்கையின் பூர்வீக குடிகள் தமிழர்கள். இலங்கையின் சுதேசிகள் தமிழர்கள். விசயன் வழி வந்தவர்கள் அந்நியர். பரதேசிகள். இத்தகையோர் இலங்கைக்குத் தாம் மாத்திரமே உரிமையுடையோம் என்றும், தமிழர்களுக்கு எவ்வித உரிமை இல்லை என்றும், சிங்களப் பொது மக்களிடையே பிரச்சாரஞ் செய்து வருகின்றனர்.

தமிழர்கள், சிங்களவர்கள் பகைவர்கள் என இள உள்ளங்களில்லாம் அழுத்தமாக உறையும்படி பிரசாரம் செய்கின்றனர். துட்டகைமுனுவின் தாயாகிய விகாரமகாதேவியும் இதனையே செய்தாள். இதனால்தான் துட்டகைமுனு தமிழருக் கெதிராகக் கிளர்ந்து எழுந்தான்.

தமிழர் படையுடன் நேர் நின்று யுத்தம் புரிய முடியாத துட்டகைமுனு கபட நாடகமாடி மனுநீதி தவறாது செவ்வனே ஆட்சி புரிந்த தமிழரசனாகிய எல்லாளனைக் கொன்றான். இளைஞனாகிய துட்டகைமுனு கிழவனாக இருந்த எல்லாளனைத் தனிப் போருக்கு அழைத்துப் போர்புரியும் வேளை எல்லாளனது பட்டத்து யானை போரில் கால் தடுக்கி விழ ஈட்டியால் குத்திக் கொன்றான். இத்தகைய வாரலாற்று உண்மையை இன்றைய எம் நிலைகளோடு ஒப்பிட்டு நோக்கிச் செயற்பட வேண்டியது ஈழத்தமிழராகிய எம் கடனாகும்.

பரதன் என்னும் தமிழ் அரசன்

குமரியின் சந்ததியில் தோன்றிய தமிழ் அரசர்களுள் பரதனும் ஒருவன். இந்தப் பரதன் குமரிகண்டத்தை நாற்பது வருடங்களாக ஆட்சி புரிந்தான். ஒரு தாயானவள் தனது பிள்ளைகளை எல்வளவு கரிசனையுடனும் அன்புடனும் பராமரிப்பாளோ அது போலவே பரதனும் தனது குடிமக்களையும் பராமரித்தான்.

இதனால் அவனது குடிமக்கள் அவளை மிகவும் நேசித்தார்கள். அது மாத்திரமன்றி இக் குமரிகண்டமானது பரதனது திறமையான ஆட்சி முறையினால் பலவகைகளிலும் சிறப்புற்று விளங்கிற்று. இக்காரணங்களினால் அவன் ஆட்சி புரிந்த நிலப்பரப்பாகிய குமரிக் கண்டமே பரதகண்டமென வழங்கப்பட்லாயிற்று.

இப்பரத கண்டத்தில் வாழ்ந்த தமிழ் மக்களை அந்நிய நாட்டினர் பலவாறு அழைத்தனர் அவை பரதர், நாகர், இயக்கர், அரக்கர், இராட்சதர், பூதர், அசுரர், அவுணர், இடிமபர், கருடர், முனிவர், சித்தர்; கந்தருவர், வானரர் என்பனவாகும். இராமாயணத்தில் தமிழர்களை வானரர் (குரங்குகள்) என்றும் இராட்சதர் என்றும் பழித்துரைத்தனர்.

அனுமான் சுக்கிரீவன் வாலி போன்ற பலம் பொருந்திய திறமைமிக்க போராளிகளை குரங்குகளின் அரசர்கள் என்றும் இலங்கையை ஆண்ட ஒப்புயர்வற்ற சிறந்த அரசனாகிய இராவணன் தமிழன் என்ற காரணத்தால் அவனையும் அவனது இனத்தினரையும், நரமாமிசம் புசிக்கின்ற இராட்சதர் என்றும் பழித்துரைத்தனர்.

உண்மை அவ்வாறு அன்று. இராமன் இலக்குமணன் போன்ற திராவிடர்கள் (தமிழர்கள்) பலசாலிகளாகவும் அறிவாளிகளாகவும் சித்துக்களில் வல்லவர்களாவும் விளங்கினர் என்பதே உண்மை.

உண்மையில் இவர்கள் அவர்கள் குறிப்பிடுவது போன்று குரங்குகளோ, இராட்சதர்களோ அல்லர். சிறப்புற்று விளங்கிய தமிழர்களோயாவர். இவ்வாறு அநிநியர்களால் பல்வேறு பெயர்கள் கொண்டு அழைக்கப்பட்ட போதிலும் எல்லோரும் சமத்துவம் உடைய தமிழர்களோயாவர்.

அன்று வாழ்ந்த தமிழ் மக்கள் தம்மிடையே உயர்வு தாழ்வு காட்டுவதில்லை. ஒருவருடைய பிறப்பினைக் கொண்டு அவரின் உயர்வு தாழ்வுகளைக் கணிக்காது அவரவரின் சிறப்பினைக் கொண்டே, செயற்பாடுகளைக் கொண்டே கணித்தனர்;.

‘இட்டார் பெரியோர்,
இடாதார் இழிகுலத்தோர்”

என்னும் ஒளவை வாசகஙகளும் இவ்வகையில் எழுந்தனவே. செயற்கரினவற்றைச் செய்பவர்கள் பெரியோர் என்னும் செயறகரயன செய்ய முடியாதவர்கள் சிறியோர் என்றும் வள்ளுவன் வாய்மொழியும் இதனையே தெளிவுபடுத்துகின்றது.

தமிழ் கூறும் நல்லுலகம்

மனித இனம் முதன் முதலாக தோன்றிய இடம் குமரிக் கண்டம் என்று அறியக்கிடக்கின்றது. இந்தக் குமரிக் கண்டத்தில் வாழ்ந்த மக்கள் பேசிய மொழி தமிழ் என்றும் அவர்களிடமிருந்தே எனைய இனத்தவர்கள் சீர்திருத்ததைக் கற்றுக் கொண்டனர் என்றும் கூறுவர்.

அக்காலத்தில் வாழ்ந்த தமிழர்கள் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டிருந்தார்கள் என்றும் அவற்றில் அவர்கள் வல்லவர்களாக இருந்தார்கள் என்றும் சொல்லப்படுகின்றது. அவையாவன.

வீடு கட்டுதல், கோயில் கட்டுதல், சிற்ப வேலை செய்தல், குளம் வெட்டுதல், நூல் நூற்றல், சிலை செய்தல், குடைசெய்தல், கோயில் த்தேர், போர்த்தேர், வாயுத்தேர்;, அக்கினித்தேர், ஆகாயவிமானம், கப்பல், முதலியன செய்தல், ஆகாயமார்க்கமாகச் செல்லுதல், பாடசாலை, வைத்தியசாலை தமிழ்ச்சங்கம் முதலியன அமைத்தல், இலக்கியம், இலக்கணம், வானசாத்திரம், நீதி சாத்திரம், தொலைவிலுணர்தல், கடவுள் வணக்கம், தவம், கற்பு, விரதம், வியாபாரம், பஞ்சாயம், நீதிமன்றம், குடியாரசாட்சி, தெரிவுச்சீட்டு, கணிதம், சோதிடம், கூடுவிட்டுக் கூடுபாய்தல், ஒரு மனிதன் போல் தேகம் எடுத்தல், ஆகாய யுத்தம், கடல் யுத்தம் முதவியவற்றை நன்றாக அறிந்திருதார்கள்.

தமிழ் மொழியில் மிகவும் சிறந்த இலக்கிய நூல்களும் இலக்கண நூல்களும் கணித நூல்களும், தமிழ் வேதங்களும் தமிழ் சரித்திர நூல்களும் இன்னும் பல சிறந்த நூல்களும் ஆரம்பத்திலேயே இருந்தன.

பாண்டிநாடு சோழநாடு, சேரநாடு முதலிய தமிழ் நாடுகளில் உள்ள தமிழர் முற்காலத்தில் இலங்கையில் பிறந்து வாழ்ந்தபடியால் இலங்கை அந்த நாடுகளின் தமிழருக்குச் சொந்தம். இலங்கை மலைவளமுடைய நாடாக இருந்தமையால் போதிய மழை பொழிந்து பல ஆறுகள் பாய்கின்ற ஆற்று வளமுடையதாக விளங்கியமையால் செழிப்பான தேசமாக விளங்கியது. பெருமளவு நெல் விளைவிக்கப்பட்டது.

அத்துடன் பொன், முத்து இரத்தினம், சங்கு ஆகியவையும் அதிகம் காணப்பட்டன. இவ்வாறு சிறப்பாக விளங்கிய இலங்கையில் முற்காலத்தில் வாழ்ந்த தமிழர்கள் மிகவும் செல்வந்தராயிருந்தனர். இதனால் ஏனைய நாடுகளில் வாழ்ந்த தமிழர்கள் இலங்கையில்; வசிக்க மிகவிரும்பினார்கள்.

இடவசதியற்ற பொழுதெல்லாம் அவர்கள் இலங்கையில் வந்து குடியேறிக் கொண்டே வந்தார்கள். இலங்கைத் தமிழர் பாண்டியநாடு முதலிய மற்றைய தமிழ் நாடுகளின் தமிழரோடும் அதிபூர்வ காலந்தொடங்கி இன்றுவரைக்கும் ஆலயதரிசனம், தீர்த்தமாடுதல், கல்வி பிறப்பு இறப்புச் சம்பந்தமான கொண்டாட்டங்கள், திருவிழா, கலியாணம் மற்றுவிவாகம் முகலிய வைபவங்களைக் கொண்டாடிக் கொண்டும், போக்குவரவு பண்ணிக் கொண்டும் வருகிறார்கள்.

பாண்டியநாடு முதலிய தமிழ்த் தேசங்களின் தமிழர்கள் திருக்கேதீச்சரம், திருக்கோணேச்சரம், நகுலேஸ்வரம், கதிர்காமம் முன்னேசுவரம் முதலிய சைவாலயங்களைத் தரிசிப்பதற்கும் தீர்த்தமாடுவதற்கும் விவாகத்திற்கும் இலங்கைக்குப் போக்குவரவு செய்து கொண்டேயிருக்கின்றார்கள்.

சுரரை ஆண்ட அரசன் சுரேந்திரன். அசுரரை ஆண்ட அரசன் அசுரேந்திரன். இதனால் சயம்பனுக்கு அசுரேந்திரன் என்னும் வேறொரு பெரும் இடப்பட்டது. தமிழரசனாகிய இச்சயம்பன் இலங்கையை முப்பத்து மூன்று வருடங்களாக ஆண்டிருந்தான். சயம்பனுக்குப் பின்பு அவனுடைய மருமகனாகிய யாளிமுகன் என்னும் தமிழன் அரசனாகி பத்து வருடங்கள் ஆட்சி புரிந்து இறந்தான்.

இவனுக்கு பின்பு பல தமிழரசர்கள் நெடுங்காலமாக இலங்கையை ஆண்டனர். இவர்களது ஆட்சிக் காலத்தில் திரிகோணமலை, இலங்காபுரம், சிங்கன்நகர், பணிபுரம், திருகோயில், முருகன்துறை கலியாணி முதலிய நகரங்கள் தலைநகரங்களாக விளங்கின.

யாளிமுகனுக்குப்பின் ஏதி என்னும் தமிழரசன் முருகபுரத்தைத் தலைநகராக்கி அங்கிருந்து இலங்கை முழுவதையும் ஆண்டான். முருகபுரம் என்னும் நகரில் முருகன் என்னும் தமிழ்ச்சேனாததிபதியின் வீரர்களில் ஒருவனாகிய விசயன் என்பவன் மாணிக்கங்கையில் முருகேசுவரம் என்னும் முருகனாலயத்தைக் கட்டுவித்தான். முருகேசுரத்துக்கு, கதிர்காமம், கதிர்வேலன்மலை, கார்த்திகேயபுரம், ஏமகூடம், மாணிக்கநகர். கந்தவேள்கோயில் என்னும் மறுபெயர்களும் உண்டு.

பயை என்னும் தமிழரசகுமாரத்தியை ஏதி விவாகஞ் செய்து வித்துக்கேசன் என்னும் புத்திரனைப் பெற்றான். இவன் இருபத்தெட்டு வருடங்கள் ஆட்சி புரிந்தான். வித்துகேசன் சிவனோளிபாதத்தைத் தலைநகராக்கி, நாகதீவு முழுவதையும் ஆண்டான். முருகன் என்னும் சேனைத்தலைவன் காங்கேசன்துறையில் ஒரு சிவன்கோவிலைக் கட்டுவித்தான்.

வித்துசேசன் இருபத்தொன்பது வருடங்களும், மூன்று மாதங்களும் இலங்கையை ஆண்டான். இவனுக்குப் பின் இவனது மகன் சுகேசன் என்பவன் மணிபுரம் என்னும் கதிரவன் மலையைத் தலைநகராக்கி இலங்கையை ஆட்சி புரிந்தான்.

ஆதிகாலத்தில் மயனால் கட்டப்பட்ட திருக்கேதீசுவரம், முனீசுவரம், நகுலேசுவரம் என்னும் சிவாலயங்களை இவன் பழுது பார்த்து அவற்றுக்கு அநேக நகைகளையும்; நிலங்களையும், கொடுத்தான். மாந்தை நகருக்கு அருகில் உள்ள பாலாவியாற்றங்கரையில் திருக்கேதீசுவரம் மாயவன் ஆற்றுக்குச் சமீபத்தில் முனீசுவரம், காங்கேசனுக்கு அண்மையில் நகுலேசுவரம் ஆகிய சிவாலயங்கள் கட்டப்பட்டன.

இலங்கையில் தமிழ் மன்னர்களின் ஆட்சி

சுகேசனின் ஆட்சி

சுகேசன் தெய்வதி என்னும் அரச குமாரியை விவாகஞ் செய்து மாலியவான், மாலி என்னும் புத்திரர்களைப் பெற்றான். சுகேசனின் ஆட்சி மிகவும் மெச்சத்தக்தாக அமைந்திருந்தது. இவன் கிராமங்கள் தோறும் ஆலயங்களை அமைப்பித்தான். பல வீதிகளைப் புதிதாக உருவாக்கினான். பழைய வீதிகளைப் புதிப்பித்தான், காடுகளை அழித்து நாடுகளாக்கினான். விவசாயத்தை விருத்தியடையச் செய்தான்.

குளங்கள், கால்வாய்கள் பல வெட்டியும் புதுப்பித்தும் பயிர்ச் செய்கைக்கு உதவியளித்தான். நூல் நூற்றல், ஆடை நெய்தல் ஆகிய கைத்தொழில்களையும் விருத்தி பண்ணினான். வைத்தியரையும் வைத்திய நூல்களையும் ஆதரித்ததோடு பல வைத்தியசாலைகளிலும் நிறுவினான். பல பாடசாலைகளை அமைத்தான். பல தமிழ்ச்சங்கங்களையும் உருவாக்கினான்.

இவன் காலத்தில் தமிழ் மொழியில் எல்லாத் துறைகளிலும் நல்ல நல்ல நூல்கள் எழுந்தன. நீதி பரிபாலனமும் செவ்விதாய் அமைந்திருந்தது. சுகேசன் நாற்பத்தொரு வருடங்களும் ஏழுநாட்களும் ஆட்சி புரிந்த பின் தனது மூத்த புத்திரனாகிய மாலியவானை இலங்கைக்கு அரசனாக்கி, காட்டுக்கு சென்றான்.

மாலியவான் ஆட்சி

தமிழ் அரசனாகிய மாலியவான் நாகதீவுக்கு அரசனாகி இலங்காபுரம் என்னும் நகரத்தை அழகாக கட்டுவித்து, அதைத் தலைநகராக்கி அங்கிருந்து இலங்கை என்னும் நாகதீவை ஆண்டான். இவன் கட்டுவித்த அரண்மனைகளும் மாடமாளிகைகளும் கூட கோபுரங்களும் விலையுர்ந்த இரத்தினக் கற்களாலும் தங்கத்தாலும் அலங்கரிக்கப்பட்டன.

இவனது முடியின் மீது பத்துக் கிரீடங்கள் அமைந்திருந்தன. இவனுடைய சிங்காசனமும் வாளும் முடியும் செங்கோலும் கட்டிலும் நவரத்தினங்களாலும் முத்துகளாலும் தங்கத்தாலும் அலங்கரிக்கப்பட்டு விளங்கின. அக்காலத் தமிழர்களில் பலர் எல்லா வசதிகளும் ஒருங்கே அமைந்த பல அடுக்கு மாளிகைகளில் வாழ்ந்தனர்.

இவனது முடியை அலங்கரித்துக் கொண்டிருந்த பத்து கிரீடங்களும் பத்து நாடுகளுக்கு இவன் அதிபதி என்பதை எடுத்து காட்டுகின்றன. இவன் இருபத்தொரு வருடங்கள் இலங்கையை மகோன்னதமாக ஆட்சி புரிந்து வந்தான். மாலியவான் இறந்த பின்பு அவனுடைய தம்பியாகிய சுமாலி என்பவன் ஆட்சி புரிந்தான்.

இவன் மாந்தையிலிருந்தும் இலங்காபுரத்தில் இருந்தும் அரசான்டான். சுமாலி கேதுமதியை மணந்து ஒரு மகளைப் பெற்றேடுத்தான். அவளின் பெயர் கைகேசி என்பதாகும். சூரியப் பிரகாசம் என்னும் ஆகாய விமானத்தை அவன் வைத்திருந்தான்.

சுமாலியின் ஆட்சி முன்னையவர்களது ஆட்சி போன்று அத்துனை சிறப்பாக அமையாமையால் அவனால் ஐந்தரை வருடங்களும் முன்றரை மாதங்களுமே ஆட்சி புரிய முடிந்தது. மக்கள் கிளர்ச்சி செய்து அவனை சிங்காசனத்தில் இருந்து நீக்கி விட்டனர். இவனது ஆட்சியில் வெறுப்படைந்த தமிழ்மக்கள் பாண்டி நாடு, சேரநாடு, சோழ நாடு முதலிய தமிழ் நாடுகளில் சென்று குடியேறினர்.

சுமாலிக்குப்பின் அரசாட்சிக்குரிய கைகேசி சிறு குழந்தையாய் இருந்த படியால் இலங்கையை ஆழ அரசனில்லாதிருந்தது. இதனால் வச்சிரவாகு என்பவன் தனக்கும் இயக்கப் பெண்ணாகிய தேவகன்னி என்பவளுக்கு பிறந்த புத்திரனாகிய வைச்சிரவணானை இலங்கைக்கு அரசனாக்கினான். வச்சிரவாணனுக்கு குபேரன் என்னும் மறு பெயரும் உண்டு.

குபேரன் ஆட்சி

குபேரன் அரசானான பின்பு அவனது தாய் வழியைச் சேர்ந்த பல இயக்க குடிகள் இலங்கையில் வந்து குடியேறினார்கள். இவர்களும் தமிழர்களே. நாகரிகத்திலும் கல்வியிலும் இயக்கர் என்னும் தமிழர் மிகவுஞ் சிறந்தவர்களாய் இருந்தார்கள். இயக்கரும் தமிழரும் பேசிய மொழி தமிழேயாகும்.

பண்டைக்காலத்தில் வரன் என்பவன் புலத்தியவனைப் பெற்றான். புலத்தியன் குணவதியை மணந்து வச்சிரவாகுவைப் பெற்றான். இந்த வச்சிரவாகு குபேரனுடைய தந்தையவான். இந்தக் குபேரன் இலங்கையை நீதியாக ஆண்டான். இவன் புட்பக விமானம் என்னும் ஆகாய ஊர்தியை வைத்திருந்தான்.

இராவணனும் இராமாணமும்

இராவணன் வரலாற்றில் ஒரு விதமாகவும் இலக்கியத்தில் ஒரு விதமாகவும் எடுத்து காட்டப்படுகின்றான். இலக்கியத்தை ஆக்குகின்ற புலவர் தமது விருப்பு வெறுப்புக்களையும் கொள்கைகளையும் அவ்விலக்கியத்தில் புகுத்திவிடுவது வழக்கம். கற்பனையில் கதாபத்திரங்களை அமைத்து அதில் கருத்துகளை புகுத்துவதில் எவ்வித தவறும் இல்லை.

ஆனால் வரலாற்றில் நல்ல குண இயல்பு உடைய ஒருவனை இலக்கியத்தில் தீய குண இயல்பு உடையவனாக திரித்து இலக்கியம் ஆக்கும் போதுதான் சிக்கல் ஏற்படுகின்றது. வெறும் இலக்கிய இரசனையோடு இலக்கியத்தைப் படிப்பவர்களுக்கு இந்த கபடங்கள் புலப்படுவதில்லை.

அவ் இலக்கியத்தில் வருகின்ற அணிகள், நயங்கள், கற்பனைகள் இவைகளே புலப்படுகின்றன. இவ்வாறு இலக்கிய ஈடுபாடு கொண்டவர்கள் இலக்கிய ஆசிரியர் ஒரு பாத்திரத்தை எவ்வாறு சிருட்டிக்கிறாரோ, அவ்வாறே அதனை உண்மையாக ஏற்றுக் கொள்கின்றார்கள்.

அத்தகைய நிலமைதான் எமது இராவணனுக்கும் ஏற்பட்டுள்ளது. இராமாணத்தை நன்கு சுவைத்த ஒருவரிடம் போய் இராவணன் நல்லவன் காமுகன் அல்லன் என்று கூறினால் ஏற்றுக் கொள்ளவே மாட்டார். உண்மை இதுதான். வடக்கே வாழ்ந்த ஆரியருக்கும், தெற்வே வாழ்ந்த திராவிடற்கும் இருந்த இயல்பான பகையுணர்வே இராமாயணமாகும். இராமாயண காலத்தில் எல்லா வகையிலும் திரவிடராகிய தமிழர் மேம்பட்டு விளங்கினர்.

எனவே அவர்களை அழிக்க அல்லது அடக்க நடந்த போரே இராம இராவண யுத்தமாகும். தமிழகத்தில் இயல்பாக இருந்த குறைபாடாய் பதவி ஆசை, காட்டிக்கொடுத்தல் ஆகிய குணங்களால் இவர்களுக்குள்ளேயே ஒருவரை ஒருவர் மோதவிட்டு இறுதியில் தாம் பயணடைந்த கதையே இராமாயணம்.

எனவே தமிழராகிய நாம் இராமாயணத்தை ஏற்றுக் கொள்ளவும் கூடாது. படிக்கவும் கூடாது. இராவணேசுவரன் என்று போற்றப்படுகின்ற சிறந்த சிவபக்தனான இராவணனை தூசிப்பது சிவ தூசனையாகும். இத்தகைய இராமாயணத்தை சைவக் கோவில்களிலோ, தமிழ் மக்கள் மத்தியிலோ பிரசங்கிக்க கூடாது. தமிழர் பாடநூலில் இராமாயணம் இடம்பெறலாகாது.

இராவணன் ஆட்சி

கைகேகி என்னும் தமிழ் அரச குமாரி வச்சிரவாகுவைக் கூடி இராவணன், கும்பகருணன் விபீசணன் புதல்வர்களையும் சூர்ப்பனகை என்ற புத்திரியையும் பெற்றாள். இப் பெயர்கள் இவர்களின் பகைவர்களால் அழைக்கப்பட்டு பிரபல்யம் அடைந்த பெயர்களாகும். ஆனால் இவர்களின் பிள்ளைப் பெயர்கள் முறையே சிவதாசன், பரமன், பசுபதி, உமையம்மை என்பனவாகும்.

சிவதாசனே இராவணன் என்றும், பரமனே கும்பகருணன் என்றும் பசுபதியே விபீசணன் என்றும் உமையம்மையே சூர்பனகை என்றும் அழைக்கப்பட்டனர். இலங்கையின் ஆட்சி உரிமையை பெறுவதற்கு இராவணன் தனது தமையானாகிய குபேரனுடன் யுத்தம் செய்தான். தம்பியுடன் யுத்தம் செய்வது முறையன்று எனக் குபேரன் எண்ணியதால் ஆட்சிப் பொறுப்பை இராவணனிடமே ஒப்படைத்து விட்டுத்தான் அழகாபுரியை ஆட்சி செய்தான்.

அழகாபுரியில் வாழ்ந்தவர்களும் இயக்கர்கள் என்று அழைக்கப்பட்டார்கள். குபேரனோடு இலங்கையில் வந்து குடியேறிய தமிழர் குபேரனோடு திரும்பிப் போகாமல் இலங்கையிலேயே தங்கி விட்டனர்.

குபேரனுக்குப்பின் இராவணனன் இலங்கை முழுவதற்கும் அரசனாகி இலங்காபுரத்தை தலைநகராக கொண்டு ஆண்டு வந்தான். இவன் இலங்கையை பல வருடங்களாக மாற்றாரும் மெச்சும் வகையில் சிறப்பாக அரசோச்சி வந்தான். இவன் தனது மூதாதைகளில் ஒருவனான மாலியவனைப் போன்றே பத்து நாடுகளுக்கு அரசனாக முடி சூடப்பட்டான்.

இதனால் இவனை தசக்கீரிவன் என்றும் அழைத்தனர். இரமாயணத்தில் கூறுவது போன்று இவனுக்கு பத்து தலைகள் இல்லை. பத்து கிரீடங்களே அன்றி பத்து தலைகள் அன்று. இராவணன் மண்டோதரியை திருமணஞ் செய்தான். மண்டோதரியும் கற்பிற் சிறந்தவளாக விளங்கினாள். இவள் இந்திரசித்து, அதிசகாயன் ஆகிக திறமைமிக்க புத்திரர்களைப் பெற்றேடுத்தாள்.

இராவணன் பல துறைகளிலும் ஒப்பற்று விளங்கினான். சங்கீத துறையானாலும் சரி, போர்த் திறமையானலும் சரி, தவ வலிமையிலும் சரி, கடவுட் பக்தியிலும் சரி இவன் ஒப்பாரும் மிக்காரும் இல்லாது விளங்கினான். இவற்றை விட யோக சித்திகளும் கைவரப்பட்டவனாக விளங்கினான். இதனால் இவன் தான் நினைத்த வடிவத்தை கொள்ளவும், எதிரிகளுக்கு தெரியாமல் மறைத்து நிற்கக் கூடிய பல சித்துகளில் வல்லவனாக விளங்கினான்.

யாகங்களில் மிருகங்களை பலி கொடுத்தலை இராவணனும் அவனுடைய இனத்தவர்களும் வெறுத்தார்கள். மிருக வதை அவனுடைய காலத்தில் வாழ்ந்த தமிழ் மக்களுக்கு பிடிக்காது. இராவணன் சிவபூசை செய்யும் நியமம் உடையவன். ஏகபத்தினி விரதம் பூண்டவன். பழிக்குப் பழி வாங்கும் நோக்குடனேயே சிதையை சிறை வைத்தான்.

இம்சித்து அல்ல. இவனது பகைவர்களாகி ஆரியர்களே இவன்மீது இவ்வாறு வீண் பழி சுமத்தினர். இவனும் இவனது தாயாகிய கைகேசியும் மனைவியாகிய மண்டோதரியும் சிவபெருமான் இடத்தில் மிகுந்த பற்றுக் கொண்டவர்கள். இந்த இராவணன் ஆகியோரின் ஆட்சிக்காலம் ஈழத்தமிழரின் பொற்காலம் எனப்போற்றப் படுகின்றது.

இராம இராவண யுத்தத்தில் இராவணன் தம்பி விபீசணன் தமையனாகிய இராவணனை விட்டு நீங்கி இராமன் பக்கம் சேர்ந்து இராவணன் படைப்பலம் யுத்ததந்திர முறைகள், அந்தரங்கள் எல்லாவற்றையும் இராமனுக்கு காட்டிக் கொடுத்து இராவணனின் அழிவுக்கு ஏதுவாக இருந்தான். இராவணனுக்குப் பின் இராமனுடைய அனுசரணையுடன் இலங்கையின் ஆட்சியை கைப்பற்றிக் கொண்டான்.

இதன் மூலம் தமிழரின் வரலாற்றில் மாபெருங் களங்கத்தை ஏற்படுத்தினான். இவன் இராமனது அருவருடியாகி, அடிமைச் சின்னமான ஆழ்வார் பெயருடன் விபீசண ஆழ்வாராகவே இருந்து இறந்தான். இராவணனின் வீழ்ச்சிக்குப் பின் சேர, சோழ, பாண்டி, ஈழம் ஆகிய திராவிட நாடுகள் ஆரியரின் ஆதிக்கத்திற்குப் உற்பட்டன. எனவே இந்த இராவணன் வரலாறு ஈழத்தமிழர்களாகிய எமக்கு ஒரு பெரும் எச்சரிக்கை எனக் கொள்ள வேண்டும்.

எமது மக்கள் விபீசணனைப் போன்று “கோடாரி காம்புகளாக மாறக்கூடாது”. எல்லாத்தமிழர்களுமே இராவணனைப் போன்று தேச பக்தி உடையவர்களாகவும், வீரம் மிகுந்தவர்களாகவும், “வீர சுதந்திரம் வேண்டி நிற்பவர்களாகவும்” மாற வேண்டும்.

எப்பொழுது இந்நிலை எம்மிடம் உருவாகின்றதோ அன்றுதான் சுதந்திர தமிழீழத்தை அமைத்து சுதந்திர புருடர்களாக வாழ்வோம். வீபீசணனின் ஆட்சியுடன் இலங்கையின் பூர்வீக வரலாறும் முடிகிறது எனலாம். சரித்திர ஆசிரியர்கள் குறிப்பிடும் இலங்கை வரலாறும் விசயனின் விசயத்துடன் ஆரம்பிக்கின்றது.

 

 

புலிகளின் மூத்த தளபதி அருணா !

புலி மரபும் / புலிப் பண்பாடும்.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தியாகங்கள் பலவகை. முன் மாதிரிகள் இல்லாதவை / கற்பனைகளுக்கு அப்பாற்பட்டவை. அதில் அருணா அண்ணனின் தியாகம் ஒரு வகை.

புலிகளின் மூத்த தளபதி இவர். கடலில் நடந்த ஒரு சண்டையில் வீரச்சாவடைந்ததாகக் கருதி அந் நாளிலேயே மேஜர் தரம் வழங்கிக் கவுரவிக்கப்பட்டவர்.

பின்னாளில் அவர் கைது செய்யப்பட்டது தெரிந்து கைதிகள் பரிமாற்றத்தின் போது மீட்கப்பட்டவர்.

கிட்டண்ணை மீது தேச விரோதிகளான மாற்றுக் குழுவினர் குண்டெறிந்து வீரச்சாவடைந்து விட்டதாக வந்த வோக்கி டோக்கி ( கால்தான் துண்டிக்கப்பட்டதாக பின்புதான் தெரிய வந்தது) செய்தியை அடுத்து ஆத்திரம் தாங்காமல் அருணா அண்ணை கைது செய்து வைத்திருந்த மாற்று குழு உறுப்பினர்கள் பலரை சுட்டு தள்ளினார்.

தலைவரால் இதை ஏற்க முடியவில்லை. அவரை விசாரணைக்குட்படுத்தி அவரது மேஜர் பதவி நிலையை புடுங்கியது மட்டுமல்ல அவரை அமைப்பிலிருந்தும் நீக்கினார்.

(இந்தக் கொலைகள் குறித்து வாய்கிழியப் பேசும் பலர் தலைவர் எடுத்த இந்த நடவடிக்கை குறித்து மறந்தும் பேசுவதில்லை. எந்த மாற்றுக் குழுக்கள் தமது படுகொலைகளுக்கு இப்படி ஒரு நடவடிக்கை எடுத்தார்கள் என்று ஒரு உதாரணத்தை இவர்களால் காட்டவே முடியாது. அவர்களின் யோக்கியதை அப்படி.)

ஆனால் அருணா அண்ணன் தனது தவறுக்கு மன்னிப்பு கேட்டது மட்டுமல்ல தன்னை ஒரு சாதாரண ஒரு போராளியாகத் தன்னும் கடமையாற்ற அனுமதிக்குமாறு தலைவரிடம் கேட்டும் தலைவர் மறுத்த போதும் ஒரு சாதாரண உதவியாளர் போன்று முகாம்களில் பணிவிடை செய்து கொண்டு திரிந்து பின் நாளில் தனக்கு மாவீரர் அந்தஸ்து கூட வழங்கப்படாது என்று தெரிந்திருந்தும் தான் கொண்ட பற்றின் காரணமாக இந்திய ஆதிக்கத்தை எதிர்த்து போராடி இந்த மண்ணில் வீழ்ந்தார் அருணா அண்ணன்.

இதுதான் புலி மரபும் / புலிப் பண்பாடும்.

தலைவரும் அருணா அண்ணன் விடயத்தில் அதைக் கடைப் பிடித்தார் / அருணா அண்ணனும் அதைக் கடைப் பிடித்து தியாகத்தின் இன்னொரு பரிமாணத்தைக் காட்டி இந்த மண்ணில் வீழ்ந்தார்.

அருணா அண்ணன் குறித்துக் கதைக்க எந்த அற்பப் பதர்களுக்கும் இங்கு உரிமை கிடையாது.

புலிப் பண்பாட்டினூடாக வரலாற்றைப் புரிந்து கொள்ளல்.

வரலாறு என்பது படிப்பதற்கும் பகிர்வதற்கும் அல்ல. அதிலிருந்து நாம் எதையாவது கற்றுக் கொள்ள வேண்டும்.

அண்மையில் குடாரப்பு தரையிறக்கம்/ இத்தாவில் சமர்/ வத்திராயன் பொக்ஸ்/ ஆனையிறவு மீட்பு குறித்தெல்லாம் பலரும் பகிர்ந்திருந்தார்கள்.

மகிழ்வும்/ நெகிழ்ச்சியுமான உணர்வலைகளைக் கிளறிவிட்டது.

ஆனால் அந்த

வரலாற்றிலிருந்து பாடங்களைப் படிக்காமல் அதை வெறுமனே பகிர்வதனூடாக நாம் ஒன்றையும் பெற்றுக் கொள்ளப் போவதில்லை.

அது தலைவரின் நெறிப்படுத்தலில் துல்லியமாக ஒருங்கிணைக்கப்பட்ட ஒரு படை நடவடிக்கை .

எதிர்பார்த்ததை விட கடுமையான எதிர்ப்பு வந்தபோதும் சொன்னது போல் பத்திரமாகப் போராளிகளைக் தரையிறக்கிய கடற்புலிகள்/ சமகாலத்தில் தரையிறங்கும் அணிகள் நிலையெடுக்க வசதியாக எதிர்ப்பைக் குறைக்கப் பளை ஆட்லறித் தளத்தைக் கைப்பற்றி அழித்தொழித்த கரும்புலிகள் /சதுப்பு நிலங்களினூடாக பல மைல் தூரம் கனரக ஆயுதங்களை கொண்டுசேர்த்த பெண் புலிகள்/ சொன்னது போல் நாலு நாளில் கடும் எதிர்ப்பையும் மீறி புதுக்காட்டுச் சந்தியினூடாக இணைப்பை ஏற்படுத்திய தீபனின் அணி/ காயம்பட்ட போராளிகளுக்கு சிகிச்சையளிக்க வெற்றிகரமாக ஒரு தற்காலிக சத்திர சிகிச்சை கூடத்தை அமைத்த மருத்துவப் போராளிகள்/ வத்திராஜன் பொக்சில் நின்று களமாடிய ஒவ்வொரு போராளியும் குறிப்பாக விக்டர் கவச எதிர்ப்பு படையணிப் போராளிகளின் அதியுச்ச வீரம் செறிந்த எதிர்தாக்குதல்கள் என்று அந்தப் பட்டியல் நீளமானது.

அதில் புலிகளின் ஒரு அணி சொதப்பியிருந்தாலும் வரலாறு வேறு விதமாக மாறியிருக்கும்.

“தலைவர்” என்ற மந்திரச் சொல்தான் அவர்களை ஒருங்கிணைத்தது. ஒரு அணிக்காக இன்னொரு அணி தமது உயிரைப் பணயம் வைத்தது.

இதுதான் அந்த வெற்றிச் சூத்திரம்.

ஆனால் எதிரிகளின் நிகழ்ச்சி நிரலின் பிரகாரம் இதை மறந்ததுதான் எமது இன்றைய பின்னடைவின் முதன்மைக் காரணம்.

இன்று புலிகளின் அணிகள் உட்பட – தமிழ்த்தேச சக்திகள் எத்தனை குழுக்களாக/ கும்பல்களாகப் பிளவுண்டுள்ளோம்.

வரலாற்றை மறந்து எவ்வளவு விரைவாக இத்தகைய கேவலமான வீழ்ச்சிக்குள்ளானோம் என்பதே இன்றைய தலையாய பிரச்சினையாக இருக்கிறது.

இந்த இனத்தை ஒருங்கிணைக்கும் சூட்சுமம் புலிகளின் வரலாறும் / புலிப் பண்பாடும்தான்.

இத்தகைய புரிதலுடன் வரலாற்றைப் புரிந்து கொள்வதனூடாகவே நாம் விடுதலைக்கான பாதைகளை வகுக்க முடியும்.

 

தளபதி கேணல் கோபித் வீரவணக்கம் !

Col Kopithதமிழீழ விடுதலையின் வீச்சு கோபித்

வைத்திலிங்கம் சந்திரபாலன் என்ற மல்லாவி பாடசாலை மாணவன் கோபித் என்கிற தமிழனாக தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டபோது அவனுக்கு வயது பதினான்கு ஆரம்ப கல்வி மட்டுமே அவன் பயின்று இருந்தாலும் அழகாக எழுதுவதிலும் படங்கள் கீறுவதிலும் அவன் வல்லவனாய் இருந்தான்.

இளம் மாணவனுக்குரிய குழப்படிகளும் விளையாட்டுக் குணங்களும் நிறைந்திருந்தன, அவனுடைய தந்தை யாலும் பாடசாலை ஆசிரியர்களாலும் கற்பிக்கப்பட்ட ஒழுக்கமும் பொறுப்புணர்வும் அவனுடைய செயல்களில் ஒரு நேர்த்தியை உருவாக்கி விட்டிருந்தன.

வன்னிக்காடுகளிலும்,யாழ்குடா நாட்டிலும் இளம் போராளியாக தன் களப்பணியைத் துவங்கிய கோபித், தனது இயல்பான தலை மைத்துவப் பண்புகளால் இயக்கத்தில் படிப்படியாக வளர்ந்தான். யாழ்குடா நாட்டில் எதிரியின் தொடர் காவலரண்கள் மீதான ஒரு தாக்குதல் நடவடிக்கைக்கு இயக்கம் திட்டமிட்டபோது, அந்தக் களமுனையின் வரைபடத்தைத் தயாரித்துத் தருமாறு மூத்த தளபதி பால்ராஜ் அவர்கள் கோபித்தைப் பணித்தபோது அவனுக்கு வயது பதினேழு. அந்த வரைபடத்தை வைத்து அணித்தலைவர்கள் மற்றும் தளபதிகளுக்கு குரூப் லிடுராக திட்டங்களை விளங்கப்படுத்தியபோது அவன் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. மேலும் அந்தத் தாக்குதல் மிகப் பெரும் வெற்றியடைந்தது.

இதனால் இளம் கோபித்தின் தன்னம்பிக்கையும் முன்முயற்சிகளும் ; பலமடங்கு உயர்ந்தன. ஆரம்பத்தில் செக்சனில் இண்டுக்காரானா தொடங்கிய கோபித்தின் களப்பயணம் விரைவிலேயே மூன்றுபேர் குழுவுக்குத் குழுத் தலைவனாக தொடர்ந்து யாழ்குடா நாட்டில் எதிரியுடனான ஒரு மோதலில் இவனுடைய செக்சன் ஈடுபட்டிருந்தபோது, தீவிரமான தாக்குதலில் செக்சன் லீடர் வீரச்சாவடைய மிகுந்த அதிர்ச்சிக்குள்ளான கோபித் ஒரு நிமிடத்தில் தன்னை திடப்படுத்திக் கொண்டு, செக்சன் லீடரின் நடைபேசியை எடுத்து சண்டை நிலவரங்களை முதுநிலை அணித்தலைவர்களுக்கும் தளபதிகளுக்கும் அறிவிக்கத் தொடங்கினான்.

இளம் கோபித்தின் இந்த உடனடிச் செயற்பாடு அன்றைய சண்டையின் போக்கை மிகச்சரியாக நடத்திக் கொண்டு சென்று போராளிகளுக்கு பெரும் வெற்றியை ஈட்டித்தந்தது. இளம் கோபித்தின் இச்செயற்பாட்டால் தளபதிகளின் பார்வை இவன்பக்கம் திரும்பவே, அவனுக்கு தொலைத் தொடர்பிலும் வரைபடத்திலும் சிறப்புப் பயிற்சிகள் அளிக்கப்பட்டு தாக்குதல் அணியின் செக்சன் லீடராக உயர்த்ப்பட்டான்.Col Kopith with leader

மேலும் வாசிக்க …………..

சுபார்ட்டா (Sparta) எனும் விசித்திர நாடும் புலிகளின் ஈழமும்

இவ்வுலகில் பல விசித்திரமான அரசியல் தத்துவங்களும் சோதனைகளும் தோன்றியுள்ளன, ஆனால் யாரும் கி.மு 800-இல் சுபார்ட்டாவில் நடந்த விசித்திரமான சோதனைகளைப்போல செய்திருப்பார்களா என்பது சந்தேகமே.  பிளேட்டோவின் “The Republic” என்ற நூலே சுபார்ட்டாவின் சோதனையிலிருந்து எடுத்துக்கொண்ட கருத்துக்கள்தான். இவ்வுலகில் தோன்றிய அனைத்து  (மார்க்சு உட்பட)  சமத்துவ கனவுதேச சித்தாந்தங்களின் மூலவேர் சுபார்ட்டா தான்.

அன்றைய சுபார்ட்டாவில் பெருளாதார வர்க்கவேறுபாடுகள் நிறைந்து பெருங்குழப்பம் நிலவியது. அரசு வலிமையற்றதாக இருந்தது. அந்நாட்டின் மன்னர் இறந்துவிட, அவரின் சிறுவயது மகன் ஆட்சிக்கு வருகிறார். அவருக்கு உதவியாக அவரின் சித்தப்பா இலைக்கர்கசு சிறப்பான ஆட்சி புரிகிறார், ஆனால் இலைக்கர்கசு அரசனைக் கொள்ள சதித்திட்டம் தீட்டுகிறார் என்று அரசரின் குடும்பத்தினர் கருத, அரசர் வளரும்வரை நாட்டைவிட்டு விலகி இருப்பதே நல்லது என்று வெளியேறுகிறார் இலைக்கர்கசு. இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி சுபார்ட்டாவை சிறப்பான நாடாக்க எதுமாதிரியான  சட்டதிட்டங்களை உருவாக்கவேண்டும் என ஆராய ஆரம்பிக்கிறார்.  அவர் உலகின் பலநாடுகளுக்கு சென்று அவர்களின் வரலாற்றிலிருந்து அனுபவங்களைக் கற்று  ஒரு புதிய சட்டதிட்டத்தை உருவாக்குகிறார் [1].

அதே நேரம் சுபார்ட்டாவில் குழப்பம் மேலும் கூடுகிறது. மக்கள் இலைக்கர்கசுதான் வேண்டும் என வேண்டுகின்றனர். தூதுவர்கள் பலதிசைகளுக்கும் அனுப்பப்பட்டு இலைக்கர்கசை மீண்டும் நாட்டுக்கு கொண்டு வருகிறார்கள். அவர் தான் உருவாக்கிய சட்டதிட்டங்களை ஒரு சிறிய அறிவார்ந்த குழுவிடம் பகிர்ந்து அவர்களின் ஒப்புதல் மூலம் வெளியிட்டு செயல்படுத்துகிறார்.  ஒரு சமத்துவமான, பாலின பாகுபாடற்ற, படைத்திறனில் அனைவரையும்விட  வலிமையான,  எளிமையான, சுதந்திரமான, அனைவரது அடிப்படைத் தேவைகளையும் நிறைவேற்றும் நாட்டை உருவாக்குவதுதான் அவரது அடிப்படை குறிக்கோள். மொத்தத்தில் நாட்டையே தலைகீழாக புரட்டிப்போட்டு மாற்றினார்,

  1. அதுவரை நாடு மோசமான சர்வாதிகாரமாக இருந்தது அல்லது குழப்பமான மக்களாட்சியாக இருந்தது. அதனால் இலைக்கர்கசு இரண்டுக்கும் நடுவாக அறிவில் சிறந்த நெறியான 28 மூத்தவர்களைக் கொண்டு செனட் உருவாக்கினார். முக்கியமான விடயங்களில் அரசர் செனட்டின் ஒப்புதல் இல்லாமல் எந்த முடிவும் எடுக்க முடியாது. அரசரின் கடிவாளமாக செனட் செயல்பட்டது.
  1. பொருளாதார வேறுபாடுகளால்தான் ஏற்றத்தாழ்வுகள் உருவாகி நாடும் மக்களும் பலசிக்கல்களை எதிர்நோக்குகிறார்கள் என்று அனைவருக்கும் நிலங்கள் சரிசமமாகப் பங்கிடப்பட்டு பொருளாதாரத்தில் சமநிலையைக் கொண்டுவந்தார். அரசனுக்கும் அதே பங்குதான்.
  1. மக்களை சமநிலையில் வைத்திருக்க ஆடம்பரத்தை ஒழிக்கவேண்டும். அதற்காக தங்கம் வெள்ளியை தடை செய்து  நாணயங்களை ஒழித்து, இரும்பினால் ஆன பெரிய கனமான பணத்தைக் கொண்டுவந்தார். பணத்தை சேமிக்க வேண்டுமானால் மிகப்பெரிய அறை தேவைப்படும் அளவிற்கு பணம் மிகப்பெரியதாக கனமாக இருந்தது. வண்டியில்தான் அதைத்தூக்கிச் செல்லமுடியும். பணத்தை வைத்திருப்பதே பெரும் தொல்லை என்ற நிலைமை உருவானது.  இதனால் பல குற்றங்கள் காணமல் போயின. இதனால் வர்த்தகங்கள் அடிபட்டு வியாபாரிகள் வெளியேறினர். நாடு தற்சார்பு பொருளாதாரத்திற்கு மாறியது. எந்த நாட்டுடனும் பெரிதாக எந்த வர்த்தகமும் கிடையாது. பணமும் வர்த்தகமும்  இல்லாததால் ஆடம்பரத்திற்கு வாய்ப்பில்லை. தேவையான பொருட்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டன.  ஈலாட்சு (Helots) என்ற அடிமை மக்கள்தான் நிலங்களில் வேலைசெய்தனர். இது ஒன்றுதான் இன்று அவர்களைத் திருப்பிப்பார்க்கும் பொழுது அவர்கள் செய்த தவறு. அக்காலத்தில் அடிமைத்தனம் என்பது தவறு என்று உணரப்படாத காலம்; அடிமைத்தனம் அனைத்து நாடுகளிலும் காணப்பட்டது.  இன்றும் போற்றிப்புகழப்படும்  தத்துவமேதைகளான பிளேட்டோ அரிசுட்டாட்டில் தோன்றிய ஏதென்சிலும் அடிமைகள் இருந்தனர். அடிமைத்தனம் தவறு என்று இத்தத்துவமேதைகளும் கூறவில்லை.
  1. மேலும் ஆடம்பரத்தை ஒழிக்க பொதுவான உணவறைகள் உருவாக்கப்பட்டன. யாரும் வீட்டில் தனியாக சாப்பிடக்கூடாது, பொதுவாக மற்றவர்களுடன் சேர்ந்து ஆடம்பரமற்ற எளிமையான உணவைத்தான் சாப்பிடவேண்டும். அரசருக்கும் அதேதான்.
  1. பணத்தை ஒழித்ததால் சமூகத்தில் உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்பது ஒருவனின்  நடத்தையை வைத்து மட்டுமே எடை போடப்பட்டது.
  1. பழக்கவழக்கங்கள் மற்றும் பயிற்சிகள் மூலம் சட்டங்கள்  மக்களின் ஆழ் மனதில்  புகுத்தப்பட்டது.  அதனால் மக்கள் இயல்பாகவே சட்டங்களை மதித்தனர். சட்டம் என்று பயந்து யாரும் பின்பற்றவில்லை
  1. வீடுகட்ட பயன்படும் மரங்களை கோடாரியும் இரம்பமும் மட்டுமே கொண்டு வடிவமைக்கப்பட வேண்டும். அதில் எந்த ஆடம்பரமும் கூடாது. அதனால் மக்கள் மரத்தை வெட்டி அறுத்து அப்படியே வீடு கட்டினர். ஒருமுறை ஒருவர் வெளிநாடு சென்ற பொழுது, அங்குள்ள வீடுகளில் சதுரமான மரக்கட்டைகளைப் பார்த்து வியந்து, இங்குள்ள மரங்கள் சதுரமாக முளைக்கின்றனவா என்று கேட்டிருக்கிறார் என்றால் சுபார்ட்டனின் வீடுகள் எவ்வளவு எளிமையாக இருக்கும் என்று கற்பனை செய்து கொள்ளலாம்.
  1. ஆண்களுக்கும் பெண்களும் சமம் என்று சட்டம் இயற்றப்பட்டது. எங்கும் சரி சமமாக திரியலாம், ஆடையற்று நிர்வாணமாகக் கூட செல்லலாம். நாட்டின் குழந்தைகள் ஆரோக்கியமாக இருக்கவேண்டும் என்பதற்காக பெண்களுக்கு ஓட்டம், மல்யுத்தம், ஈட்டி எறிதல் பயிற்சிகள் வழங்கப்பட்டன. குழந்தைகள் நாட்டின் உடைமை, பெற்றோரின் உடமை அல்ல. பிறந்த குழந்தைகளை ஊர் பெரியவர்கள் பார்த்து ஆரோக்கியமாக இருந்தால் மட்டுமே பெற்றோர்கள் வளர்ப்பதற்கு அனுமதிப்பர். பெண்கள் எந்த ஆண்களை வீரமானவர்கள் ஒழுக்கமானவர்கள் எனப் பார்த்தார்களோ அவர்களுக்கு புகழ் உருவானது. ஆண்களை பெண்கள் செம்மைப் படுத்தினார்கள். அடிப்படையில் பெண்கள் ஆண்களை ஆண்டார்கள். “நாங்கள்தான் உண்மையான ஆண்களை உருவாக்குகிறோம்” என்று பெருமிதம் கொண்டார்கள்.
  1. திருமணம் எளிமையாக நடத்தப்பட்டது. சொல்லப்போனால் திருமணம் என்பதே யாருக்கும் தெரியாமல்தான் நடக்கவேண்டும் என்று சட்டம் இயற்றப்பட்டது. மாப்பிள்ளை இரவில் யாருக்கும் தெரியாமல் மனமகளைக் கடத்திக் கொண்டு வரவேண்டும். பின் மணமகளின் தோழி மணமகளின் முடியை வெட்டி ஆண்போல உடையணிவித்து இருட்டறையில் விட்டுவிடுவாள். கணவன் யாருக்கு தெரியாமல் மனைவியிடம் வந்து செல்லவேண்டும். இவ்வாறு தெரியாமல்தான் பல நாட்கள் சந்தித்துக்கொள்வர். சிலர் இவ்வாறு குழந்தை பெற்று முடிந்தபின்தான் திருமணம் ஆனதையே அறிவிப்பர்.
  1. குழந்தைகளை துணிச்சலாக எதையும் எதிர்கொள்ளும்படி வளர்த்தனர். குழந்தைகளை  துணிகளில் சுற்றவில்லை, சுவையான உணவை ஊட்டவில்லை, இருட்டில் தனியாக படுக்கவைத்தனர்.
  1. ஏழு வயதில் சிறுவர்கள் தாயிடமிருந்து பிரிக்கப்பட்டு பொதுவான இடத்தில் கடுமையான பயிற்சிகள் அளித்து வளர்த்தெடுக்கப் பட்டார்கள். அவர்கள் அவர்களுக்குள்ளேயே அறிவிலும் போர்திறனிலும் சிறந்தவரை  தலைவரை தேர்ந்தெடுத்தார்கள்.
  1. அவர்கள் தெளிவாகவும் சுருக்கமாகவும் பேசும்படி வளத்தெடுக்கப் பட்டார்கள். இலைகர்கசிடம் எவ்வாறு எதிரிகளை அண்டவிடாமல் வைத்திருக்கப் போகிறீர்கள் என்பதற்கு “எளிமையையும் சமத்துவத்தையும் கொண்டு எதிர்ப்போம்” என்றார். அடிப்படையில் தங்கமும் வெள்ளியும் இல்லாத நாட்டை யாரும் கொள்ளையடிக்க வரப்போவதும் இல்லை. அப்படி எதிரி வந்தாலும் ஒரு அதி ஒழுக்கமான போர்திறம்மிக்க சமத்துவப் படையை எதிர்கொள்ளவேண்டும். உங்கள் நாட்டிற்கு கோட்டை என்றில்லாமல் எப்படி பாது காக்கப்போகிறீர்கள் என்பதற்கு, “வீரமுள்ள நாட்டிற்கு வீரம்தான் கோட்டை” என்கிறார்.
  2. கவிதைகள், இசை, பாடல்கள் ஆகியன வீரத்தையம் ஒழுக்கத்தையும் புகழும்படி அமைந்தது. அதே நேரம் கோழைத்தனத்தையும் ஒழுக்கமற்ற செயல்களையும் இகழ்ந்தது
  1. போர்க்காலத்தில் மட்டுமே விதிகளும் பயிற்சிகளும் தளர்த்தப்பட்டன. அப்பொழுதுதான் வீரர்கள் தங்கள் கவசங்களையும், முடியையும் அழகுபடுத்திக் கொள்ளலாம். உலகிலேயே சுபார்ட்டன் வீரர்களுக்கு மட்டும்தான் போர் என்பது எளிதாகவும் பயிற்சிக்காலம் என்பது கடினமாகவும் இருந்தது. பெர்சியப் பேரரசு கிரேக்கத்தின்மீது போர் தொடுத்தபோது, சுபார்ட்டாவின் லியோனாடைசு 300 வீரர்களுடன் வீராவேசமாக போரிட்டது இன்றும் உலகில் போற்றப்பட்டு வருகிறது. உலக இராணுவங்களுக்கு சுபார்ட்டா வீரர்களின் ஒழுக்கமும் படைத்திறமும் இன்றும் பாடமாக இருக்கிறது.
  1. சுபார்ட்டா வீரர்கள் தளபதியின் கட்டளையை அப்படியே செய்தனர், அதே நேரம் மோசமான தளபதியை என்றுமே தளபதியாக ஏற்றுக்கொண்டதில்லை. தலைமைப் பண்புகளிலும், தலைமையின் கட்டளையின்படி நடப்பதிலும் சுபார்ட்டா வீரர்களை யாரும் விஞ்சியதில்லை (புலிகள் விஞ்சியிருக்கலாம்). அன்றைய நாடுகள் பல சுபார்ட்டா வீரர்களை தங்கள்நாட்டு தளபதிகளாக நியமித்தார்கள்.
  1. தேவையில்லாத ஆடம்பரங்கள் இல்லாததாலும், பணம் சேமிக்க உழைக்கவேண்டிய தேவை இல்லாததாலும், உலகியிலேயே அவர்களுக்குத்தான் அதிக ஒய்வு நேரம் இருந்தது. உலகிலேயே அதிக சுதந்திரத்தைக் கொண்ட ஒரு இனக்குழு  இருந்திருக்கிறது என்றால் அது சுபார்ட்டன்கள் தான்.
  1. மொத்தத்தில் அவர்களுக்கு தனிமனித வாழ்க்கை என்ன என்றால் தெரியாது. அவர்கள் ஒரு தேன்கூட்டில் வாழும் ஈக்களைப் போல பொதுவான நன்மைக்காக நாட்டுக்காக வாழ்ந்தார்கள்.
  1. போரில் இறந்தவர்கள் மட்டுமே புதைக்கப்பட்டு அவர்களின் கல்லறையில் பெயர் பொறிக்க அனுமதிக்கப்பட்டது. மற்றவர்கள் பெயரில்லாமல்தான் புதைக்கப்பட்டார்கள்.
  1. நாட்டு மக்கள் தேவையில்லாமல் வெளிநாடுகளுக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. அதே போல் வெளிநாட்டினரும் தேவையில்லாமல் அனுமதிக்கப்படவில்லை. அவ்வாறான கலப்பு, தேவையில்லாத எண்ணங்களை மக்களின் மனதில் விதைத்து விதிகளை மீற வைத்துவிடும் என்ற பயம்  தான் இத்தடைக்குக் காரணம்.
  1. இவ்வாறு விதிகளை உருவாக்கி திடமான நாட்டை உருவாக்கியபின், இலைக்கர்கசு டெல்பை கோவிலுக்கு செல்ல முடிவு செய்கிறார். அதற்குமுன் மக்களையும் அரசனையும் செனட்டையும் அழைத்து, அவர் திரும்பி வரும்வரை யாரும்  விதிகளை மீறக்கூடாது என சத்தியம் வாங்குகிறார். பின் டெல்பை கோவிலுக்கு சென்று அவரின் விதிகள் சுபார்ட்டாவை உலகிலேயே சிறப்பான நாடாகும் என்ற உறுதியை கடவுளிடமிருந்து பெறுகிறார். அதன்பின் அவர் உண்ணா நோன்பிருந்து உயிர் துறக்கிறார். எங்கே தானோ அல்லது தனது உடலோ திரும்பினால், மக்கள் விதிகளை விட்டுவிடுவர் என்று எண்ணி, அவரின் உடலை நண்பர்கள் மூலம் எரிக்க உத்தரவிடுகிறார்.  ஒரு அரசன்  தனது இறப்பையும் நாட்டுக்காகவே செய்யவேண்டும், வயது முதிர்ந்து அமைதியாக எதுவும் செய்யாமல் இறக்கக்கூடாது என்ற கருத்தைக் கொண்டிருந்தார்.
  1. அவரின் எண்ணப்படியே சுபார்ட்டா உலகில் புகழ்மிக்க நாடாக விளங்கியது. சிறப்பான ஆட்சி, ஒழுக்கமான மக்கள், ஒழுக்கமான அரசன், குற்றமில்லாத நாடு,  சிறந்த நிர்வாகம், வீரத்தில் உயர்ந்த என மற்ற நாடுகளை விஞ்சி இருந்தது.  எந்த நாட்டையும் ஆக்கிரமிக்கவில்லை, கொள்ளை அடிக்கவில்லை. அண்டைய ஏதென்சு நாட்டுடன் போர் ஏற்பட்டபோது, அவர்களை தோற்கடித்து அவர்களின் கோட்டையை இடித்து விட்டு நாட்டை அவர்களிடமே கொடுத்து வெளியேறிவிட்டனர். ஒரு தங்க நாணயமோ வெள்ளியையோ அவர்கள் கொள்ளையடிக்கவில்லை.  அவர்கள் யாருக்கும் தொல்லை கொடுக்க விரும்பவில்லை, அதே நேரம் யாரும் அவர்கள் நாட்டில் மூக்கை நுழைப்பதை விரும்பவில்லை. அவர்கள் போக்கில் சுதந்திரமாக வாழ்ந்துவந்தனர். இது 500 ஆண்டுகள் தொடர்ந்தது.  அதன்பின் தோன்றிய அரசன்  ஒருவன் மீண்டும் தங்க வெள்ளி பணத்தை அனுமதித்தான். அதன் விளைவாக போட்டி பொறாமை என அனைத்தும் தோன்றி சுபார்ட்டாவின் ஒழுக்கம் குலைந்து சீரழிந்தது.

பண்டைய கிரேக்கர்களின் சோதனைகள் கண்டுபிடிப்புகள் இல்லாமல் நாம் இன்று காணும் நவீன உலகை அடைந்திருப்போமா என்பது சந்தேகமே. சுபார்ட்டா  இராணுவ கட்டுப்பாடான அரசைக்கொண்டிருந்த அதே நேரம் ஏதென்சு மக்களாட்சியுடன் திகழ்ந்தது. அவர்கள்தான் அறிவியலில் முன்னோடிகள். கணிதம், அறிவியல், தத்துவம் என்று அவர்கள் படைத்தது இன்றும் பயன்பாட்டில் உள்ளது. கிரேக்க நாகரீகம் அழிந்தபின் அவர்களின் புரட்சிகரமான கண்டுபிடிப்புகளை ரோமாபுரிப் பேரரசு தொடர்ந்தது. ஐந்தாம் நூற்றாண்டில்   ரோமாபுரி வீழ்ந்தவுடன், மேற்குலகம் இருண்ட காலத்தில் ஆழ்ந்தது. எந்த ஒரு ஒரு புதுமையும் படைக்கப்படவில்லை. அனைத்து கிரேக்க நூல்களையும் இழந்தார்கள். ஒருவகையான மத இறுக்கத்தில் ஆழ்ந்து முன்னேற்றமில்லாமல் உலகம் இருந்தது. பின்பு 13 ஆம் நூற்றாண்டு காலப்பகுதியில் மேற்குலகம் இசுலாமிய உலகத்துடன் தொடர்பு ஏற்பட்டது. அத்தொடர்பின் மூலமாக  கிரேக்க அறிவு சார்ந்த நூல்கள் மீண்டும் மேற்குலகிற்கு கிடைத்தன. இதன் பின்னரே மேற்குலகம் சிந்திக்க ஆரம்பித்தது, சீரிய சிந்தனைகள் வளர்ந்தன, புதிய படைப்புகள் வெளிவந்தன. கோப்பர்நிக்கஸ், கெப்ளர், கலிலியோ, நியூட்டன் ஆகியோர் தோன்றி நவீன அறிவியலை உருவாக்கினர் [2].

சுபார்ட்டா ஏதென்சின் அரசியல்  சோதனைகள்  மக்களிடேயே நல்லாட்சிக்கான கனவினை விதைத்தன. இதன் தாக்கத்தை இத்தாலிய மறுமலர்ச்சி, பிரெஞ்சுப் புரட்சி, இன்று நிலவும் மக்களாட்சி, பொதுவுடமை ஆட்சி, உலக அரசியல் இராணுவ கட்டமைப்புகள் வரை காணலாம்[3]. பண்டைய கிரேக்க வரலாற்றை மேற்குலகம் தனது பழைய பொற்காலமாகக் (Classical civilizations) கருதுகிறது. அதனால்தான் இடைப்பட்ட காலத்தை இருண்டகாலம் என்று பெயர் சூட்டினார்கள். இன்றைய மேற்குலகு என்பது பண்டைய கிரேக்க வரலாற்றின் தொடர்ச்சியாகவே பார்க்கவேண்டும். நவீன அறிவியலுக்குக் காரணமான நியூட்டனின் சிந்தனையைத் தூண்டியவர்கள் பண்டைய அரிசுட்டாட்டிலும், யூக்ளிடும், பிளாட்டோவும்தான். பண்டைய கிரேக்கர்கள் இல்லாமல் நவீன அறிவியலேத் தோன்றி இருக்காது.  அவர்கள் இல்லாவிட்டால் இவுலகமே இன்னும் இருண்டகாலத்தில் இருந்தாலும் இருந்திருக்கும் [2].

சுபார்ட்டா மற்றும் இலைகர்கசின் கதையைப் படிக்கும்பொழுது அதன் சாயலை ஓரளவு புலிகளின் ஈழத்திலும் பிரபாகரனிலும் காணலாம். ஒருவகையில் பார்த்தால் புலிகளின்  ஈழம் என்பது தமிழர்களின் வீரம்செறிந்த ஒழுக்கமான சுபார்ட்டாவும் அறிவிற்சிறந்த ஏதென்சும் சேர்ந்த கலவை. பிரபாகரன் இலைக்கர்கசைப் போன்று ஒரு சட்டசிற்பி (Law  giver). இருவரும் எதையும் எழுதவில்லை, எல்லாவற்றையும் நடைமுறைப் படுத்தினர். புலிகளின் ஈழம் என்பது ஒருவகையில் குறுகிய காலமே இருந்த ஒரு கனவு தேசம் (Utopia). இந்த கனவுதேசம் தான் இன்னும் பலரைத் தூங்கவிடாமல் உசுப்பிக்கொண்டிருக்கிறது.  இந்த கனவுதேச சிந்தனைதான் இன்று தமிழ்த்தேசிய அரசியலை இயக்கிக்கொண்டிருக்கிறது.  புலிகள் உருவாக்கிய கனவுதேசம் மீண்டும் மக்களை உசுப்பி அக்கனவை மெய்ப்பிக்கும். இந்த  சிந்தனையை அண்ணன் ஆழி செந்தில்நாதன் அவர்கள்  கவிதையில் காணலாம்[4]:

“நீ ஒரு வித்தைபுரிந்தாய்.
விடுதலையை கண்முன்பு காட்டிச்சென்றாய்.
தமிழர் வரலாற்றில் ஓர் கணநேரக்காட்சியாக அது
இன்று முடிந்துபோயினும் முள்ளிவாய்க்காலில்,
நீ அதைக்காட்டிவிட்டாய்தானே!
அதை நாங்கள் ருசிகண்டோம்தானே!
இனி தாகம் அடங்காது.” [4]

எவ்வாறு மேற்குலகம் கிரேக்க வரலாற்றை இறுகப்பற்றி இருண்டகாலத்தில் இருந்து வெளிவந்து சாதனைகளைப் படைத்ததோ, அதைப்போல நாம் புலிகளின் வரலாற்றை இறுகப்பற்றியே, நாம் மீண்டு எழுந்து சாதனைகளைப் படைக்கமுடியும்.  தமிழினத்தின் விடுதலை என்பது புலிகளின் கனவுதேசத்தை நாம் இறுகப் பற்றிக்கொள்வதிலேயே இருக்கிறது. அது தானாக நம்மைக் கொண்டுபோய் கரை சேர்க்கும்.

Posted on by 

உசாத்துணை:

  1. Plutarch’s Lives, Volume 1, Life of Lykurgus.
  2. சு.சேது, நாம் அறிவார்ந்த சமூகமாகமாறத் தேவையான அடிப்படை காரணிகள்,   https://sethusubbar.wordpress.com/2017/11/11/sciencefactors/
  3. Hodkinson, Stephen, and Ian Macgregor Morris, eds. Sparta in modern thought: politics, history and culture. ISD LLC, 2012.
  4. ஆழி செந்தில்நாதன், https://www.facebook.com/senthilnathan.aazhi/posts/10157933428469046

குடாரப்பு தரையிறக்கம்: தமிழர் சேனையின் மாபெரும் தரையிறக்க நடவடிக்கை..!


ஆனையிறவு படைத்தள வெற்றி: ஆனையிறவுப் படைத்தளத் தாக்குதல் இலங்கை இராணுவத்தினரின் ஆனையிறவு ஆக்கிரமிப்பிற்கெதிராக 2000 ஆம் ஆண்டு மார்ச் 26, ஞாயிற்றுக்கிழமை மாலை நேர அளவில் தமிழீழ விடுதலைப் புலிகளால் தொடுக்கப்பட்ட தாக்குதல் ஆகும். ஓயாத அலைகள் மூன்று என்ற நடவடிக்கை மூலம் ஆனையிறவுப் படைத்தளம் தமிழீழ விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டது.

35 நாட்களின் பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகளின் முழுக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்ட ஆனையிறவுப் படைத்தளமானது பத்தாயிரத்திற்கும் அதிகமான இலங்கை இராணுவத்தினரின் பாதுகாப்பில் அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

குடாரப்புவில் தரையிறக்கப்படுவதற்கென வெற்றிலைக்கேணியில் இருந்து கடல்வழியே தமிழீழ விடுதலைப் புலிகள் பாரியளவிலான படை நகர்வொன்றை முன்னெடுத்தனர். கடற்புலிகளின் படகுகளில் 1200 வரையிலான தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளிகள் தாளையடி முகாம் மீதிருந்து வரும் தாக்குதல்களையும் எதிர்நோக்கிச் செல்லும் சூழலிற்குத் தள்ளப்பட்டும் மேலும் குடாரப்புப் பகுதியில் தரையிறங்கும் குறிக்கோளுடன் சென்றனர்.
குடாரப்பு தரையிறக்கச் சமர்

ஈழப்போராட்டவரலாற்றில் குறிப்பிட்டுச் சொல்லப்படவேண்டிய சாதனைகளில் இது முக்கியமானது. மிகப்பெரிய நாடுகளின் படைத்துறைக்கு ஈடான உத்தியுடனும் வளத்துடனும் ஒரு மரபுவழித் தரையிறக்கத்தை தமிழரின் விடுதலைச்சேனை நிகழ்த்தியிருந்தது. அதன்மூலம் வெல்லப்பட முடியாததாக பலராலும் கருதப்பட்ட மிகமுக்கிய இராணுவத் தளமான ஆனையிறவும் அதைச்சுற்றியிருந்த மிகப்பெரும் படைத்தளமும் புலிகளால் மீட்கப்பட்டது.

மேலும் வாசிக்க ……….

 

ஆனையிறவுப் படைத்தளம் வெற்றி கொள்ளப்பட்ட நாள்.

தலைவர் பிரபாகரனுக்கு பிறகு தமிழர்களை வழி நடத்தக்கூடிய தலைவர் சீமான் தான் !

சீமானுக்கு ஆதரவாக பிரித்தானியா நாடாளுமன்றின் முன் குவிந்த ஈழத்தமிழர்கள்!

தலைவர் பிரபாகரனுக்கு பிறகு தமிழர்களை வழி நடத்தக்கூடிய தலைவர் சீமான்தான் என வெளிநாடு வாழ் ஈழத்தமிழர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசிய அரசியலை அரியணையில் ஏற்ற நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிக்க வலியுறுத்தி இன்று ஞாயிற்று கிழமை, பிரித்தானிய நாம் தமிழர் கட்சியினரால் பிரித்தானிய நாடாளுமன்றத்தின் முன் கவன ஈர்ப்பு நிகழ்வு ஒன்று இடம்பெற்றது.

கடந்த தமிழ்நாட்டு சட்ட மன்ற தேர்தலில் நாம்தமிழர் கட்சி தொகுதிகளிலும் இரட்டை மெழுகு வர்த்தி சின்னத்தில் போட்டியிட்டது. ஆனாலும் அது 1.1% வாக்கு சதவீதத்தையே பெற்றது. இதனால் இம்முறை நாடாளுமன்ற தேர்தலில் அக்கட்சிக்கு அதே சின்னத்தில் போட்டியிடும் வாய்ப்பு மறுக்கப்பட்டு புதிய சின்னமாக விவசாயி சின்னத்தை இந்திய தேர்தல் ஆணையம் வழங்கியது.

வெறும் முப்பது நாட்களுக்குள் கட்சி சின்னத்தை தமிழ்நாடு முழுமைக்கும் கொண்டு சென்றாக வேண்டும் எனும் கட்டாயத்தில் அக்கட்சியின் தொண்டர்கள் பல்வேறுபட்ட வழிகளில் தம் கட்சி சின்னத்தை மக்களை நோக்கி பரப்பி வருகின்றார்கள்.

அதன் ஒரு அங்கமாக பிரித்தானிய நாம்தமிழர் கட்சியினர் “விவசாயி சின்னம் பொறித்த பிரமாண்டமான பதாகையை” பிரித்தானியாவின் அதி முக்கிய நகரமான வெஸ்ட்மின்ஸ்டரில் உள்ள பிரித்தானிய பாராளுமன்றத்தின் முன் வைத்து கவன ஈர்ப்பு நிகழ்வொன்றை முன்னெடுத்திருந்தார்கள்.

அதில் கலந்து கொண்டு பேசிய பிரித்தானியாவின் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் வி.மயூரன், தமிழ் தேசிய அரசியலை அரியணையில் ஏற்ற நாம் தமிழர் கட்சிக்கு வாக்களியுங்கள் என்று அறைகூவல் விடுத்தார்.

அதனைத்தொடர்ந்து உரையாற்றிய ஒருவர் தலைவர் பிரபாகரனுக்கு பிறகு தமிழர்களை வழிநடத்தக்கூடிய தலைவர் சீமான்தான் என தெரிவித்திருந்தார்.

வான்புலிகள் கட்டுநாயக்க விமானத்தளம் மீது தாக்குதல் 12 ஆண்டுகள் !

தமிழீழ வான்புலிகள் கட்டுநாயக்க விமானத்தளம் மீது தாக்குதல் மேற்கொண்டு இன்றுடன் 12 ஆண்டுகள் நிறைவு.

“கப்பல் ஓட்டினான் தமிழன் அன்று, விமானம் ஓட்டி தாக்குதல் நடத்துவான் தமிழன் இன்று” என்று தமிழ் தேசியத்தலைவரின் தலைமையில் தமிழீழ விடுதலைப்புலிகள் உலகுக்கு வெளிப்படுத்திய நாளின் (26.03.2007) 12வது ஆண்டு நிறைவு நாள் இன்றாகும்.

தமிழீழ விடுதலைப்புலிகளின் மரபுவழிசார் படையணிகள் இருந்த போதும் கடற்படை, தரைப்படை என்ற கட்டமைப்பின்கீழ் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் படைஅணிகள் ஒருநாட்டின் படை அணி கட்டுமானத்திற்கு அமைவாக வான்படையினரை உருவாக்கிய தேசிய தலைவர் அவர்கள், வான்புலிகள் முதல்முதல் சிறீலங்காப் படையினரின் வான்தளம் மீது தாக்குதல் நடத்தி விடுதலைப் புலிகளும் சமபலத்துடனும் சம படைநிலை வலுவுடன் இருக்கின்றார்கள் என்பதனை பன்னாடுகளுக்கு எடுத்துகூறிய தாக்குதல் நாளாக 2007 மூன்றாம் மாதம் 26 ஆம் நாள் கட்டுநாயாக்கா வான்படைதளத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் அமைகின்றது.

தமிழிழ தேசியத்தலைவர் அவர்களின் தூரநோக்கு சிந்தனைக்கு அமைவாக செயற்பட்ட வான்படைஅணிகள் பின்னாக காலகட்டங்களில் சிறீலங்காப் படையினரின் இலக்குகள் மீது பல தாக்குதல்களை நடத்தி எதிரிக்கு பாரிய இழப்பினை ஏற்படுத்தினார்கள்.இறுதியில் வான்வழி சென்று சிறீலங்காவின் தலைமையகத்தின் மீது வான் கரும்புலிகள் தாக்குதல் நடத்தியதில் சிறீலங்காப் படையினரிற்கு இழப்பினை ஏற்படுத்தினார்கள்.

வான் புலிகள் தொடரும் விமானத்தாக்குதல்கள் : புதிய பரிமாணத்தில் ஈழப்போர்

விடுதலைப்புலிகள் அண்ணளவாக ஒரு மாதகால இடைவெளிக்குள் மூன்று வெற்றிகரமான விமானத்தாக்குதல்களை நடத்தியமை முழு உலகையும் ஆச்சரியத்தில் ஆழ்த்திவிட்டது. இவற்றில் இரண்டு தாக்குதல்கள் சிறிலங்காவின் தலைநகரான கொழும்பு நகரத்தின் மையப்பகுதியில் உள்ள கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் நடத்தப்பட்டுள்ளது.

கட்டுநாயக்கா இராணுவ விமானத்தளம் மீதான வான்புலிகளின் தாக்குதல்கள் கடந்த மார்ச் மாதம் 26ம் திகதி அதிகாலை 1.45 மணியளவில் இடம்பெற்றது. இதன்பின் வான் புலிகள் கடந்த 24ம் திகதி அதிகாலை 1.20 மணியளவில் யாழ் குடாநாட்டில் அமைந்துள்ள பலாலி கூட்டுத்தளம் மீது ஒரு தாக்குதலை மேற்கொண்டார்கள். தற்போது வான்புலிகளின் இரண்டு ஸ்குவார்டன்கள் கடந்த ஏப்ரல் 29ம் திகதி அதிகாலை கொழும்பு நகரின் மையப்பகுதிக்கு வான் வழியாக ஊடுருவி கொலன்னாவ எண்ணெய் குதங்கள் மீதும் கேரவலப்பிட்டிய, வத்தளை பகுதியில் அமைந்துள்ள முத்துராயவெல எரிவாயு நிலையங்கள் மீதும் வெற்றிகரமான தாக்குதல்களை மேற்கொண்டுவிட்டு தமது தளங்களுக்கு பாதுகாப்பாக திரும்பியுள்ளன.

இதற்கிடையில் கடந்த ஏப்ரல் 26ம் திகதி இரவு 10.00 – 11.00 மணியளவில இரண்டு புலிகளின் விமானங்கள் கட்டுநாயக்கா மற்றும் வவுனியா இராணுவ முகாம்களை நோக்கி பறப்பதாகக் கிடைத்த செய்திகளைத் தொடந்து சிறிலங்கா படையினர் விமான எதிர்ப்பு நடவடிக்கைக் கட்டமைப்புக்களை இயக்கினார்கள். பயப்பீதியும் அச்சமும் அடைந்த சிறிலங்காவின் முப்படையினரும் விமான எதிர்ப்பு ஆயுதங்களாலும் சாதாரண துப்பாக்கிகளாலும் வானத்தை நோக்கிப் பல்வேறு திசைகளில் சுட்டுத்தள்ளியதால் கட்டுநாயக்கா விமான நிலையத்திலும் ஏனைய பகுதிகளிலும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள், விமானநிலையப் பணியாட்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் பயப்பீதியால் அங்கும் இங்கும் ஓடித்திரிந்தனர். இதைவிட மோசம் என்னவென்றால், இச்சமயத்தில் கட்டுநாயக்கா விமான நிலையத்தில் தரையிறங்குவதற்காக வந்துகொண்டிருந்த எமிரேட்ஸ் மற்றும் சிங்கப்பூர் விமானங்கள் மீதும் கீழிருந்து தாக்குதல்கள் நடத்தப்பட்டதுதான். இதன் காரணமாக எமிரேட்ஸ், சிங்கப்பூர், கதே பசுபிக் விமானங்களின் கட்டுநாயக்கா விமானத்தளத்திற்கான உள்வருகை திசைதிருப்பப்பட்டு தென்னிந்தியா விமானநிலையங்களுக்கு அனுப்பப்பட்டது.

இதற்கெல்லாம் சிகரம் வைத்தது போன்று கடந்த ஏப்ரல் 29ம் திகதி வான்புலிகளின் கொழும்பு நகரத் தாக்குதலுக்குப் பிறகு சம்பவங்கள் நடந்தேறின. கொழும்பு நகரில் வாழும் 10 இலட்சம் மக்களில் பெரும்பான்மையோர் வீடுகளிலும் பொது இடங்களிலும் இரவு முழுவதும் நித்திரை கொள்ளாது சிறிலங்கா – அவுஸ்ரேலியா கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான உலககிண்ணப் போட்டியினை பார்த்துக்கொண்டிருந்த வேளை திடீரென வாண வேடிக்கை போன்று வெடிச்சத்தங்கள் கேட்கத்தொடங்கின. முதலில் மக்கள் உலகக் கிண்ண கிரிக்கெற் போட்டியினை கொண்டாடுவதற்கான வெடிச்சத்தங்கள் கேட்பதாக நினைத்தார்கள். எனினும் உடனடியாக மின்சாரம் கொழும்பு நகர மற்றும் புறநகர்ப்பகுதிகளில் நிறுத்தப்பட்டதுடன் குண்டுச்சத்தங்களும் வெடிச்சத்தங்களும் தொடர்ச்சியாகக் கேட்கத்தொடங்கியதும் ஏதோ விபரீதம் இடம்பெற்றுள்ளது என்பதை உணர்ந்துகொண்டார்கள்.

வீடுகளிலும் கட்டடங்களிலும் இருந்து மக்கள் வெளியே சென்று பார்த்தபோது கட்டுநாயக்காவில் இருந்து இரத்மலானை வரையும் இராணுவ முகாம்கள், சோதனை நிலையங்கள். காவலரண்கள் ஆகியனவற்றில் கடமையிலிருந்த பயப்பீதியடைந்திருந்த சிறிலங்காவின் முப்படைகளைச் சேர்ந்தவர்களும் தமது துப்பாக்கிகளினால் வானத்தை நோக்கி ரம்போ படங்களில் இடம்பெறுவது போன்று நீள் வளைய வடிவத்தில் சுட்டுத்தள்ளினார்கள். இவர்கள் பயன்படுத்திய ரேசர் ரவைகள் இரவு நேர வானத்திலே மத்தாப்புக்கள் வெடித்ததுபோன்று அனைத்துக்கட்டடங்களிலும் இருந்து வான்நோக்கிச் சென்று வர்ணக் கோலங்களை வரைந்தது.

இவ்வாறான சம்பவங்களினால் அச்சமும் திகிலும் அடைந்திருந்த கொழும்பு நகர விடுதிகளில் தங்கியிருந்த உல்லாசப் பிரயாணிகள், வர்த்தகர்கள் மற்றும் ஏனைய பிரமுகர்கள் உடனடியாக தமது அறைகளை விட்டு வெளியேறி தரைப்பகுதியில் இருக்கின்ற வரவேற்பு பகுதிக்கு கீழே இறங்கிவருமாறு பணிக்கப்பட்டார்கள். மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிலையில் பல்லடுக்கு மாடிகளைக் கொண்ட உல்லாச விடுதிக் கட்டடங்களில் இருந்து மாடிப் படிகள் ஊடாக இறங்கவேண்டிய துர்ப்பாக்கிய நிலை இவர்களுக்கு ஏற்பட்டது. பயப்பீதியும் கோபமும் அடைந்திருந்த பல உல்லாசப்பிரயாணிகள் இதுதான் சிறிலங்காவிற்கான தமது கடைசிப் பயணம் எனத் தெரிவித்தார்கள்.

இத்தாக்குதல்களின் மூலோபாய, அரசியல் மற்றும் பொருளாதாரத் தாக்கங்களையும் விளைவுகளையும் சிங்கள தேசம் உடனடியாகவே அனுபவிக்கத்தொடங்கிவிட்டது. கொங்கொங்கினைத் தளமாகக் கொண்டியங்கும் கதே பசுபிக் விமான நிறுவனம், டுபாயினை தலைமையகமாகக் கொண்டியங்கும் எமிரேட்ஸ் ஆகிய நிறுவனங்கள் தமது கொழும்பிற்கான விமான சேவைகளை தற்காலிகமாக நிறுத்துவதாக அறிவித்தன. இவை தவிர, சிங்கப்பூர் விமான நிறுவனம் தனது சிறிலங்காவிற்கான பறப்புக்களை பகல் வேளைகளில் மட்டும் மேற்கொள்ளப் போவதாக அறிவித்துள்ளது. அத்தோடு ஐரோப்பிய நாடுகள் பலவற்றுடன் அவுஸ்ரேலியாவும் தமது மக்களுக்கு சிறிலங்காவிற்குப் பயணிப்பதால் எதிர்கொள்ளவேண்டியிருக்கும் உயிர் அச்சுறுத்தல்கள் மற்றும் நெருக்கடிகள் தொடர்பான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

மேலும் சிறிலங்கா அரசாங்கம் பாதுகாப்பு காரணங்களுக்காக மே 10ம் திகதியில் இருந்து இரவு 10.30 தொடக்கம் அதிகாலை 4.30 வரை சர்வதேச விமானநிலையம் மூடப்பட்டிருக்கும் என்று அறிவித்துள்ளது. இந்த அறிவிப்புக்களின் விளைவுகள் பொருளாதாரத்தைப் பொறுத்தவரை தென்னாசியாவில் விமானம் மற்றும் கப்பல்களின் போக்குவரத்து மையமாக விளங்கும் சிறிலங்காவிற்குப் பாரிய தாக்கங்களை ஏற்படுத்தவல்லது.

சாதாரணமாகக் கட்டுநாயக்கா சர்வதேச விமானநிலையத்தில் ஒரு நாளைக்கு சராசரியாக 70 வரையிலான விமானங்கள் இறங்கி ஏறுவது வழக்கம். விமானநிலையத்தினை இரவு வேளை மூடுவதால் அண்ணளவாக 40வீதமான விமானங்களின் வருகைகள் தடைப்படப்போகின்றது. அத்துடன் சிறிலங்கா ஏயார் லைன்ஸ் நிறுவனத்தின் 43.6 வீதப் பங்கினை எமிரேட்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளதுடன் நிர்வாக முகாமைத்துவம் முழுவதும் எமிரேட்ஸ் நிறுவனவத்தினாலேயே மேற்கொள்ளப்படுகின்றது. எனவே எதிர்காலத்தில் எமிரேட்ஸ் நிறுவனமானது தனது தென் மற்றும் தென்கிழக்காசிய நாடுகளுக்கான பறப்புக்களுக்கு பாதுகாப்பு காரணங்களுக்காக கொழும்பினை தவிர்த்து மாலைதீவு, தென் இந்தியா, சிங்கப்பூர் போன்ற விமானநிலையங்களைப் பயன்படுத்த முற்பட்டால் ஏற்கனவே பொருளாதார மற்றும் நிர்வாக நெருக்கடிகளுக்குள் சிக்கியுள்ள சிறிலங்கா ஏயார் லைன்ஸ் நிறுவனத்திற்கு விரைவில் மூடுவிழா வைக்கவேண்டிய நிலையும் உருவாகும். உல்லாசப் பிரயாணத்துறையானது சிறிலங்காவின் பொருளாதாரத்தில் வருமானம் ஈட்டுவது தொடர்பாக முக்கிய பங்கினை வகிக்கின்றது.

வருடத்திற்கு ஐந்து இலட்சத்திற்கும் அதிகமான உல்லாசப் பிரயாணிகள் சிறிலங்காவிற்கு விடுமுறையைக் கழிப்பதற்காக வருகை தருவதினால் 410 மில்லியன் டொலர்கள் வருமானம் ஈட்டப்படுகின்றது. இத்துறை சிறிலங்காவின் மூன்றாவது பெரிய வருமானத்தை ஈட்டும் அமைப்பாகக் கணிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தொடர்ச்சியான சிறிலங்கா அரசின் போர் நடவடிக்கைகள் காரணமாக 36வீதத்தினால் ஆட்களின் வருகை வீழ்ச்சியடைந்துள்ள நிலையில் புலிகளின் வான்தாக்குதல்களும் அதனைத் தொடர்ந்து விமானநிலைய மற்றும் உல்லாச விடுதி அதிகாரிகளின் நெருக்கடிகளை கையாளத்தெரியாத, முட்டாள்த்தனமான அணுகுமுறையும் (கடந்த ஏப்ரல் 26ம் திகதி நூறு வரையிலான பெல்ஜிய நாட்டு உல்லாசப்பிரயாணிகள் கட்டுநாயக்க சர்வதேச விமானநிலையத்தில் புலிகளின் வான்தாக்குதல் இடம்பெறலாம் என்ற அச்சத்தின் காரணமாக நிலத்தில் குப்புற படுக்கும்படி விமானநிலைய பணியாட்களால் கட்டாயப்படுத்தப்பட்டார்கள்.) இணைந்து மேலும் உல்லாசப்பிரயாணத் துறையை சீரழிக்கப்போவதாக பொருளாதார ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சிறிலங்காவின் பொருளாதாரமானது ஏற்கனவே 17வீத பணவீக்கத்தினால் மற்றும் வரவுசெலவு பற்றாக்குறை மொத்த தேசிய உற்பத்தியில் 8.4வீதமாகக் காணப்படுவதாலும் மூச்சுத்திணறிக் கொண்டிருக்கும் இன்றைய சூழ்நிலையில் வான்புலிகளின் புதிய சவால்களையும் அச்சுறுத்தல்களையும் எதிர்கொள்வதற்கு மிகவும் விலை கூடிய வான் கண்காணிப்புக் கருவிகள், வானூர்திகளை இரவில் கண்டுபிடிப்பதற்கான உபகரணங்கள் மற்றும் வான் பலத்தினை அதிகரிப்பதற்கு புதிய விமானங்கள் கொள்வனவு போன்ற நடவடிக்கைகளுக்காக 2007ம் ஆண்டிற்கான பாதுகாப்புச் செலவீனமானது 139 பில்லியன் ரூபாய்களில் இருந்து 200 பில்லியன் ரூபாய்களாக (20,000 கோடி ரூபா) அதிகரிக்கப்படவுள்ளதாக முன்னாள் விமானப்படைத் தளபதி ஏயார் மாசல் ‘ரி குணதிலக்கா கூறியுள்ளார். இவ் பாதுகாப்பு செலவதிகரிப்பானது ஏற்கனவே வரவுசெலவு பற்றாக்குறையால் திண்டாடும் சிங்கள அரசிற்கு மேலும் சிக்கல்களை ஏற்படுத்தப்போகின்றது.

மூலோபாய போரியலில் கேணல் வார்டனின் ‘ஐந்து வளையக் கோட்பாடு’ !

அமெரிக்க விமானப்படையின் கேணலாக கடமையாற்றிய ஜோன் வார்டன், ஒரு எதிரி அரசின் போரிடும் ஆற்றல்களைப் பௌதீக ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் அழிப்பதற்கு அல்லது முடக்குவதற்கு இந்த ஐந்து வளையக் கோட்பாட்டினை ஒரு எளிய வடிவமாக முன்வைக்கின்றார். இக்கோட்பாட்டினை சிறப்பாகப் பயன்படுத்துவதற்கு எதிரியின் பிரதான தலைமைப்பீடம் மற்றும் கட்டளை மையங்களை குறிப்பாக அடையாளப்படுத்தி அதன் மீது நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தாக்கங்களை ஏற்படுத்தக்கூடிய நடவடிக்கைகளை மேற்கொள்வது மிகவும் அவசியமானது என்று வலியுறுத்துகின்றார் வார்டன்.

அத்துடன் மூலோபாயப் போரியலில் இந்த ஐந்து வளையங்கள் மீதும் இயலுமானளவு பரவலாகவும் சமாந்தரமாகவும் தாக்குதல்களை போரில் ஈடுபடுகின்ற தரப்பு மேற்கொள்வதன் மூலம் போரினை வெல்வதற்குரிய சாத்தியப்பாடுகள் அத்தரப்பிற்கு மிகவும் பிரகாசமானதாகக் காணப்படும் என்று மேலும் கூறுகின்றார்.

அதாவது எதிரியின் போரிடும் உளவுரன் மிகவும் பாதிக்கப்பட்டு எதிரி தனது போர் முயற்சிகளை இதன் காரணமாக கைவிடப் பண்ணுவதே இத் தந்திரோபாயத்தின் இலக்காகும்.

இவ்வளையங்களிலே மிகவும் பிரதானமானதும் உள்வளையத்தில் காணப்படுவது அரசின் தலைமைச் செயலகம் மற்றும் கட்டளை பீடங்களாகும். இதற்கு அடுத்ததாக முப்படைத்தளபதிகளின் கட்டளைப்பணிமனைகள், கூட்டுப்படைத் தலைமையகங்கள், தொடர்பாடல் நிலையங்கள் என்பன போன்ற போரினை செயல்படுத்தும் கட்டமைப்புக்கள் காணப்படுகின்றன.

இரண்டாவது வளையத்தில் போரினை தொடர்ச்சியாக நடத்துவதற்குத் தேவையான சக்திமூலங்கள் காணப்படுகின்றன. ஒரு அரசின் பொருளாதாரம் நல்ல நிலையில் இருந்தால் மட்டுமே போரினை நீண்ட காலத்திற்கு அந்த அரசினால் நடத்த முடியும். அதாவது நிதி, மின்சாரம், எரி பொருள் போன்ற சக்திமூலங்கள் ஒரே சீராகவும் தடையின்றியும் பெறக்கூடியதாக இருந்தால் மாத்திரமே ஒரு அரசினால் தனது தலைமையகத்தையும் போர் இயந்திரத்தையும் சிறப்பாக இயக்க முடியும். சிறிலங்கா போன்ற சிறிய நாட்டின் தலைநகரான கொழும்பு நகரில் மேலே கூறப்பட்ட கேந்திரமுக்கியத்துவம் வாய்ந்த இலக்குகள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் நேரடியாக அரச தலைமைப் பீடத்தினையும் அதனது போர் இயந்திரத்தினையும் பலமாகப் பாதிக்கும்.

அதாவது இரண்டாவது வளையத்தின் மீதான தாக்குதல்கள்,

* அரசு தனது போரினையோ அல்லது அரசியல், இராணுவ நிகழ்ச்சி நிரலையோ தொடர்ச்சியாக மேற்கொள்வதை சாத்தியமற்றதாக்கும்.

* பொருளாதார ரீதியிலான பல்வேறு மோசமான தாக்கங்களையும் பின்னடைவுகளையும் ஏற்படுத்துவதோடு அவ்வரசின் உள்ளக அரசியல் முரண்பாடுகளைக் கூர்மையடையப் பண்ணும்.

* இவற்றின் காரணமாக அரச இயந்திரம் முற்றாகச் செயலிழக்கும் அல்லது ஆகக்குறைந்தது முடக்கமடையும் நிலைக்குத் தள்ளப்படும்.

மூன்றாவது வளையத்தில் விமான நிலையங்கள், துறைமுகங்கள், பிரதான போக்குவரத்துச் சாலைகள், புகையிரதப் பாதைகள், பாலங்கள், நீர்த்தேக்கங்கள் போன்ற உட்கட்டுமானங்கள் காணப்படுகின்றன. இவ்வளையத்தின் மீதான தாக்குதல்கள் எதிரிகளின் போர் நடவடிக்கைகளுக்கான விநியோகங்கள் மீது பாதிப்புக்களை ஏற்படுத்தும்.

நான்காவது வளையத்தில் பொது மக்கள் காணப்படுகின்றார்கள். இரண்டாம் உலக மகா யுத்தத்தின் போது ஜேர்மனியர்கள் லண்டன் மாநகரின் மீது தொடர்ச்சியாக வான் தாக்குதல்களை மாதக்கணக்கில் நடத்தியமை மற்றும் நேச நாடுகள் ஜேர்மன் நகரங்களின் மீது வான்வழியாக குண்டுமழை பொழிந்தமை போன்ற நடவடிக்கைகள் மக்கள் மீது உயிரிழப்புக்களையும் அவலங்களையும் ஏற்படுத்துவதன் மூலம் ஒரு உளவியல் போரை நடத்தி மக்களை போரில் இருந்து அந்நியப்படுத்தும் முயற்சியே இதுவாகும்.

ஐந்தாவது வளையத்தில் கள முனைகளில் நிலைப்படுத்தப்பட்டுள்ள படையினர் காணப்படுகின்றனர். போர் நடவடிக்கைகளில் களமுனைப்படையினர் முக்கியமான பகுதியாகக் கருதப்படுகின்றனர். எனினும் இவர்களின் பிரதான நோக்கம் ஏனைய வளையங்களில் காணப்படுகின்ற தலைமைப் பீடங்களையும் கட்டுமானங்களையும் சக்தி மூலங்களையும் எதிரிகளின் தாக்குதல்களில் இருந்து பாதுகாப்பதே.

இப்போது வார்டனின் ஐந்து வளையக் கோட்பாட்டின் பிரதானமான இலக்கான எதிரி அரசின் தலைமைப் பீடத்தின் அனைத்து போர் மற்றும் அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்கின்ற கட்டளைமையத்தை (Center of Gravity) அடையாளம் கண்டு அதனை தாக்கியழிப்பது அல்லது செயலிழக்கப் பண்ணுவது என்பது போரில் வெற்றி கொள்வதற்கு மிகவும் இன்றியமையாதது. இம் மையமானது ஒரு அரசின் அதிகாரம், பாதுகாப்பு, உள மற்றும் பௌதீக வலிமை, போரிடும் வல்லமை போன்றனவற்றின் ஆதாரமாக விளங்குகின்றது. இது தொடர்பாக குளோஸ்விச் கூறுவதாவது “ஒரு அரசானது போரினை நடத்திக் கொண்டிருக்கும் போது இயல்பாகவே அதனது அதிகாரம் மற்றும் செயற்பாடு போன்ற அனைத்து நடவடிக்கைகளையும் ஒன்றிணைத்து செயற்படுத்துவதற்கான மையம் ஒன்று வளர்ச்சிபெற்று உருவாகும். இம் மையத்தை தாக்கியழிப்பதற்கே எமது அனைத்து சக்திகளும் கவனங்களும் மூல வளங்களும் பிரயோகிக்கப்பட வேண்டும்.”

நான்காவது ஈழப்போரிலே வான் புலிகளின் மரபுவழிப் போர் நடவடிக்கையானது ஒரு புதிய பரிமாணத்தை திறந்துவிட்டிருக்கின்றது. கடந்த காலங்களிலே தேசியத் தலைவர் அவர்களினால் தரையிலும் கடலிலும் மரபுவழி போர்த் தகைமைகள் கொண்ட படைகளை உருவாக்கியதைப் போன்று தற்போது வான் பரப்பின் ஊடாகவும் மரபு வழிப் போரினை சிறப்பாக திட்டமிட்டுத் துல்லியமாக நிறைவேற்றக்கூடிய வான்புலிகளை எந்தவொரு நாட்டின் உதவியுமின்றி தமது சொந்த முயற்சியிலேயே உருவாக்கிவிட்ட அவரது நவீனத்துவமான படைப்புத்திறன் சிந்தனையை பல வெளிநாட்டு ஆய்வாளர்களும் ஊடகவியலாளரும் வியந்து பாராட்டுகின்றனர்.

வான் புலிகளின் மரபுவழிப் போர் என்ற இப்புதிய பரிமாணமானது தரை மற்றும் கடல் போன்றல்லாது எல்லைகள் அற்ற ஒரு புதிய தளத்தினை புலிகளுக்கு திறந்துவிட்டுள்ளது. அதாவது சிங்கள தேசத்தின் அனைத்துக் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இலக்குகளையும், அதாவது வார்டனின் ஐந்து வளையங்களையும் இலங்கைத்தீவின் எப்பகுதியிலும் சென்று அழிக்கக்கூடிய வல்லமையைப் புலிகள் தற்போது பெற்றுக்கொண்டுள்ளனர்.

ஒரு மாதகாலப்பகுதிக்குள் மூன்று வெற்றிகரமான மரபுவழி வான் தாக்குதல்களை வான் புலிகள் நடத்தியதன் மூலம் சிறிலங்கா அரசு தனது வான் ஆதிக்கத்தை புலிகளிடம் பறி கொடுத்துவிட்டது என்று சிங்கள ஆய்வாளர்கள் ஏற்கனவே புலம்பத் தொடங்கிவிட்டார்கள்.

சிங்கள அரசியல் தலைவர்களோ அல்லது சிங்களப் படைத்தளபதிகளோ கள யதார்த்தங்களையோ அல்லது விடுதலைப் புலிகளின் நவீன முறையிலான போரியல் சிந்தனைகள் மற்றும் செயற்றிறன்களையோ அறிவதற்கோ அல்லது அதனை ஏற்றுக் கொள்வதற்கோ தயாரில்லை என்பதே சிங்கள மக்களின் மிகவும் துன்பியல் நிறைந்த சோகம் என சிங்கள பத்தி எழுத்தாளரான ரிசராணி குணசேகரா தெரிவிக்கின்றார். இதைவிட துன்பம் என்னவென்றால் நாட்டின் பொருளாதாரமும் அரச கட்டுமானங்களும் சீரழிந்து கொண்டிருக்கின்ற நிலையில் மகிந்த ராஜபக்சவிற்கும் கோதபாய ராஜபக்சவிற்கும் கொழும்பு நகரின் மூலை முடுக்கு எங்கும் கட் அவுட் வைப்பதும் அவர்களைப் புகழ்ந்து விளம்பரங்கள் ஒட்டுவதும் தான் மிக மோசமான செயற்பாடு என்று மேலும் தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

இனிவரும் காலங்கள் தமிழீழ விடுதலைப் போரியல் வரலாற்றிலேயே புதிய புதிய பரிமாணங்கள்கொண்ட, தேச விடுதலையை விரைவுபடுத்துகின்ற தீர்க்கமான சமர்கள் இடம்பெறப் போவதையே தற்போதைய நிகழ்வுகள் சுட்டிநிற்கின்றன.

பெரும் எடுப்பிலான மரபுவழிப் போர்த் தகைமைகள் கொண்ட புலிப்படையணிகளை உருவாக்கி தரை, கடல் மற்றும் வான் என்ற முப்பரிமாணத் தளங்களிலே போர்களை சம காலத்தில் சமாந்தரமாக இனிவரும் காலங்களில் நடத்தவிருக்கின்ற எமது தேசியத் தலைவரின் மதிநுட்பம் மிக்க சிறந்த இராணுவத் திட்டமிடல்களை செயற்படுத்துவதற்கு விடுதலைப் புலிகளின் தரைப்படை, கடற்படை என்பனவற்றோடு வான் படையும் தயாராக இருக்கின்றது.

எழுத்துருவாக்கம்:- சி.புலித்தேவன்.

விடுதலைப்புலிகள் இதழ் 2007 (பங்குனி, சித்திரை)

வான்புலிகள் கட்டுநாயக்க விமானத்தளம் மீது தாக்குதல் பத்து ஆண்டுகள் !

மனிதநேயம் என்ற பெயரில் புகழ்ச்சி தேடும் சில மனிதர்கள் !

மாலைநேர வகுப்பிற்கு சென்றுவந்த மகள் அறைக்குள் சென்று சத்தமாக அடித்து கதவைச் சாத்துவது கேட்டது,ஒருநாளும் இப்படி கோபப்படாதவள்,இன்றைக்கு ஏன் இப்படி செய்கிறாள்..?

ஏதோ நடந்திருக்கு என்று மட்டும் ஊகிக்க முடிந்தது என்னால்,போய் கதவில் தட்டி எழில் கதவைத்திறவம்மா என்று கூப்பிட்டேன்,வெளியே வந்தவள் அம்மா எனக்குப் படிக்கப்போக சைக்கில்தேவை. யாரிட்டயாவது வாங்கித்தாங்கோ என்று உங்களிட்ட கேட்டனா.,?எனக்கு பள்ளிக்கூடத்துக்கும் பின்னேர வகுப்புக்கும் நடந்துபோகத் தெரியாதா என்று கேட்டாள்..?

ஏன் பிள்ளை என்ன நடந்தது சொன்னால்த்தானே தெரியும் என்றேன்,எனக்கு சைக்கில் தந்த போட்டோவை பத்திரிகையிலையும்,முகநூலிலையும் போட்டிருக்கினமாம், நான் என்ன சின்ன பிள்ளையே. அவயல் உதவிசெய்த போட்டோவை முகநூலிலை கட்டாயம் போடனுமா அம்மா..? என்றாள்,வகுப்பிலை எல்லோரும் என்னை நக்கலடிக்கிறாங்கள்.

உன்ர போட்டோ பேப்பரில வந்திருக்கு.பார்த்தனியோ என்று கேட்கிறாங்கள், எனக்கு வெட்கமா இருக்குதம்மா,என்ர அப்பா இருந்திருந்தால் நான் ஏன் அம்மா இப்படி மற்றவர்களிட்ட அவமானப்படுறன் என்று அழுதாள்,நான் அவளை தேற்றினேன்,அவர்கள் உதவி செய்வதால் முகநூலில் போடுகிறார்கள் பிள்ளை,நாங்கள் கைநீட்டி வாங்குகிறோம்,சொல்லமுடியுமா..? என்ர பிள்ளைக்கு 15வயதாகிட்டுது,வளர்ந்திட்டால் போட்டோ எடுக்காதயுங்கோ முகநூலிலை பத்திரிகையிலை போடாதயுங்கோ என்று.

அப்படி போடுவதால் அவர்களிற்கும் ஒரு மனத்திறுப்தி,உதவி செய்ய பணம் கொடுப்பவர்களும் நம்பிக்கையா உதவி செய்வினம் என்றுதான் போடினம் என்றேன். ஏனம்மா அப்படி போடுபவர்கள் பெண் பிள்ளைகளின் போட்டோ போடும்போது முகத்தை மறைத்து போடேலாதா..? என்றாள் கோபமாக,
எனக்கும் மகளின் கண்ணீரைப்பார்க்க வேதனையாக இருந்தது.

என்னம்மா செய்வது நாங்களும் மற்றவர்களைப் போல சுயநலத்தோடு குடும்பத்தை பார்த்துக்கொண்டு போராடாமல் இருந்திருந்தால் இன்று நீ கண்ணீர் சிந்தியிருக்க மாட்டாய்,என்ன செய்வது எம்மால் அப்படி வாழமுடியவில்லை. அதுதான் நாங்கள் இன்றுவரை கண்ணீரோடு வாழுகிறோம்,

என் கணவனோடு நாம் மகிழ்வாக வாழ்ந்த வாழ்வின் இனிய நினைவுகளை மீட்டுப்பார்க்கிறேன்…….
நானும் என் கணவனும் போராளிகளாக இருந்தோம்.போராட்ட காலத்தில் எமக்கு திருமணம்பேசி செய்துவைத்தார்கள், திருமண பந்தத்தில் நாம் இருவரும் இணைந்துகொண்டோம்.

எமது மகிழ்வான வாழ்வின் அடையாளமாக இரண்டு பிள்ளைகள் பிறந்தார்கள்.மகன் கருமுகிலன்.மகள் எழில்நிலா.
நாம் திருமணம் செய்திருந்தாலும் போராளிகளாகவே இருந்தோம்,பிள்ளைகளும் நன்றாக படித்தார்கள்,எமக்கு துணையாக கணவனின் நண்பர் ஒருவரின் குடும்பம் அருகில் இருந்தார்கள்,எமக்கு மிக ஆறுதலாக இருந்தார்கள்.

யுத்தம் அகோரமாகிக்கொண்டிருந்தது.இராணுவத்தினர் முன்நகர்ந்தபடி இருந்தார்கள்,எனது கணவன் களமுனையில் நின்றபடியால் வருவது குறைவாகவே இருந்தது,வட்டக்கச்சியில்தான் நாங்கள் ஆரம்பத்தில் இருந்தோம்,இராணுவம் முன்நகர்ந்து வர வர ஒவ்வொரு இடமாக அருகில் இருந்த குடும்பத்தவர்களோடு தேவிபுரம்வரை சென்றோம்.

எனது மகளிற்கு தகப்பன்தான் எப்போதும் வேண்டும்,அப்பா எங்க அப்பா எங்க அப்பாவை வரச்சொல்லுங்கோ அம்மா என்று கூறியபடி இருப்பாள்,தேவிபுரம்வரை இடம்பெயர்ந்து போனதோடு நான் எனதுபோராட்ட பணிகளை நிறுத்தி பிள்ளைகளோடு நின்றுகொண்டேன்.

ஒருநாள் பயங்கரமான செல்லடி தொடங்கியது. இராணுவம் செல்மழை பொழிந்தான்,ஒரு சிறிய பங்கரில் பலபேர் ஓடிப்போய் இருந்தோம்,மூச்சுவிடக்கூட முடியாதநிலை,சனநெரிசலில் மூச்சு நின்றுவிடுவதுபோல் இருந்தது.

செல்அடித்து ஓய்ந்தபின் மரண ஓலம் வானைத்தொட்டுநின்றது.பலநூறு மக்கள் செல்தாக்குதலுக்கு இரையாகிப்போனார்கள்,பலநூறுபேர் காயமடைந்தார்கள்.எங்கும் அவலக்குரல்கள்,இறந்தவர்களை கண்ட இடமெல்லாம் கிடங்குவெட்டி அதற்குள் போட்டு மூடிவிட்டு அடுத்த இடத்திற்கு நகர்ந்தார்கள் மக்கள்,
இனிமேல் பங்கர் இல்லாமல் இருக்கேலாது என்று தெரிந்து, என் கணவனிடம் சொன்னேன்,எங்கு போனாலும் எனக்கும் பிள்ளைகளிற்கும் பங்கரை வெட்டித்தாங்கோ என்று.

அதேபோல் என் கணவனும் நான் எங்கு இடம்பெயர்ந்து சென்றாலும் பெரிய எண்ணை பரல்களை அடுக்கியும் பனம் குற்றிகளை போட்டும் தான் தனிய நின்று பங்கர் அமைத்து தருவார்,

இராணுவம் முன்னோக்கி வந்து கொண்டிருந்தபடியால் வேறிடத்தில் நின்ற எனது கணவனிற்கு நான் முள்ளிவாய்க்கால் போகப்போகிறேன் ஒருக்கா வந்திட்டு போங்கோ என்று தொலைத்தொடர்பு கருவியூடாக அறிவித்தேன்,

ஓடிவந்தவர் எமக்கு முள்ளிவாய்க்கால் பொதுச்சந்தைக்கு பின்னால ஒரு பனிச்ச மரத்தடிக்கு கீழ தான் தனிய நின்று பங்கர் அடிச்சு தந்திட்டு போனவர்,அதுக்குப்பிறகு ஒரு பத்துநாளாக எங்களைப்பார்க்க வரவும் இல்லை,ஒழுங்கான சாப்பாடில்லை.பிள்ளைகள் இரண்டும் பசியில அம்மா பசிக்குது சாப்பாடுதாங்கோ பசிக்குது என்று கேட்டு அழுதபடி இருந்தார்கள்,

நான் தனிமரமாக நின்றேன்,என்ர பிள்ளைகளிற்கு சாப்பிடக் கொடுப்பதற்கு என்னிடம் எதுவும் இல்லை,எல்லாமக்களின் நிலையும் இதேதான்,யாரிடம் போய்க்கேட்க முடியும் பசிக்குது என்று.? மகள் பசியில அழத்தொடங்கினாள்.மகனிற்கு 7-வயதும்,மகளிற்கு 5வயதும்,எந்தத்தாய்தான் பிள்ளைகள் அழுவதை பார்த்துக்கொண்டிருப்பாள்.

ஒரு 50மீற்றர் தூரத்தில் நிறுவனங்களால் கஞ்சி காய்ச்சி கொடுக்கும் இடம் இருந்தது,பிள்ளைகள் இருவரையும் பங்கரிற்குள் விட்டுவிட்டு ஒரு பாத்திரத்தை எடுத்துக் கொண்டுபோய் கஞ்சிவாங்க லைனில் நின்றன், அப்போதுதான் கஞ்சி காய்ச்ச தொடங்கியிருந்தார்கள்.எல்லோரும் கால்கடுகடுக்க நடுவெய்யிலுக்க நின்றம். இடைக்கிடை எல்லா இடமும் செல்லுகள் வந்து விழுந்தபடி இருந்தது,அந்த இடத்திலயே படுத்தெழும்பி நின்றம்,சரியான சனம்,இரண்டு மணித்தியாலம் பிடிச்சுது கஞ்சி வாங்குவதற்கு,வாங்கிய கஞ்சியை கொண்டுவந்து பிள்ளைகளிற்கும் கொடுத்து நானும் கொஞ்சம் குடிச்சன்.சரியான சாப்பாடில்லாதத்தில காதும் அடைச்சுப்போய் இருந்தது,

நீண்ட நேரம் வெய்யிலுக்குள்ளும் நிண்டது, ஏலாம இருந்தபடியால் பங்கருக்க அப்படியே நித்திரையாபோனன்,யாரோ வான்மதி என்று கூப்பிடும் சத்தம் கேட்டது.
கண்விழித்துப் பார்த்தேன்,என் கணவன் நிற்பது தெரிந்தது,அவரின் முகம் என்றும் இல்லாதபோல வாடி இருப்பதை பார்த்தேன்.

அவரோட நின்ற நெருக்கமான போராளிகள் யாரும் வீரச்சாவோ தெரியாதென்று நினைத்துக்கொண்டு ஏன் ஒரு மாதிரி இருக்கிறீர்கள் என்று கேட்டேன்.
எதுவும் கூறாமல் இருந்தார்,மீண்டும் கேட்டு வற்புறுத்தினேன்,பிள்ளைகள் சாப்பிட்டார்களா..?நீங்கள் சாப்பிட்டீங்களா என்று அன்போடு கேட்டார்,ஓம் சாப்பிட்டம்,நீங்கள் சாப்பிட்டீங்களா என்றேன்..?

அந்த பையில கொஞ்ச அரிசியும் பருப்பும் இருக்கு,அதை எடுத்து பிள்ளைகளிற்கு சமைத்து கொடுங்கோ.கஞ்சி வாங்க லைனில நிற்கிறீங்களாம் என்று என்னோட நின்ற மணிமாறன் கண்டிட்டுவந்து இந்த அரிசியையும் பருப்பையும் தந்தவன்,

அண்ணி கஞ்சி வாங்க லைனில நிற்கிறா உடன ஒருக்கா போங்கோ அண்ண என்டவன்,அதுதான் வந்தனான் என்றார் தலையை நிமிர்த்தாமல்,அவர் வேதனைப்படுகிறார் என்பது புரிந்தது.

நாளைக்கு சோறும் காய்ச்சி பருப்பையும் சமைச்சு பிள்ளைகளுக்கு கொடுங்கோ கவனமா இருங்கோ,நான் போகோனும்,பெடியல் சாப்பிடாம நிற்கிறாங்கள் நான்போறன் என்று கூறிவிட்டு பிள்ளைகளையும் கொஞ்சிப்போட்டு பங்கருக்க கவனமாக இருங்கோ என்றிட்டு போட்டார்,

மறுநாள் எழும்பி நேரத்தோட சோறும் காய்ச்சி,தனிய பருப்பை தண்ணில அவிச்சுப்போட்டு பிள்ளைகளிற்கு சாப்பிடக்கொடுத்திட்டு நானும் சாப்பிட்டு பிள்ளைகளை பங்கருக்க இருக்கவிட்டிட்டு பக்கத்த இருந்த கிணத்தடிக்கு குளிக்கபோனன்,

ஆமிஅடிச்ச செல் ஒன்று திடீரென்று வந்து கிட்ட விழுந்திச்சு.உடன அந்த இடத்திலயே மண்ணுக்க விழுந்து படுத்தன்,எல்லா இடமும் மல்ரிசெல் அடிக்க தொடங்கினான்,ஒரு தடவை 40-50 செல் அடிப்பான்,

மக்கள் செறிவா வாழ்ந்த இடம் எல்லாம் செல்விழத்தொடங்கியது,எனக்கு என்ர பிள்ளைகள் முக்கியம்,எனக்கு என்ன நடந்தாலும் பறவாயில்லை.அடுத்த செல் விழுந்து வெடிச்ச உடன என்ர பிள்ளைகளிட்ட ஓடோனும் என்று நினைச்சபடி படுத்திருந்தன், அதுக்கிடையில என்ர பாலனுகள் இருந்த பங்கருக்க செல்விழுந்திட்டுது,குளிக்க வரும்போதும் என்ர மூத்த மகன் சொல்லித்தான் விட்டவன் அம்மா செல்லடி தொடங்கினா உடன ஓடிவாங்கோ பங்கருக்க என்று.

என் உடம்பெல்லாம் நடுங்கத்தொடங்கியது, பிள்ளைகளுக்கு ஏதும் ஆகக்கூடாதென்று நினைத்தபடி எழும்பி ஓடினேன், செல்பீஸ்கள் சிதறியபடி இருந்தது,எதையும் பொருட்படுத்தும் மனநிலையில் நான் இல்லை,வேகமாக ஓடிப்போனேன் என் பிள்ளைகளை கூப்பிட்டபடி,நாங்கள் இருந்த பங்கள் சரிந்து கிடந்தது,

பங்கர் வாசலும் தெரியேல,ஒரே புகைமூட்டம்,என்ர உயிர் இரண்டையும் காணேல,ஒருமாதிரி பரலுகள இழுத்துபோட்டுவிட்டு உள்ளே பார்த்தேன்,பலபேர் உள்ளே கிடந்தார்கள்.செல்லடி தொடங்க எங்கட பங்கருக்க பக்கத்த இருப்பவர்கள் எல்லோரும் ஓடிவந்து இருப்பார்கள்,பங்கருக்கு மேலேயே செல் விழுந்திருந்தது,
என்மகளை கண்டுவிட்டேன், உடல் எல்லாம் இரத்தம் வழிய கிடந்தாள்,மரக்குற்றிகளை இழுத்து வெளியே தள்ளிவிட்டு என் மகளை இழுத்து எடுத்தேன்,அம்மாச்சி அம்மாச்சி நோகுது தூக்குங்கோ.என்ர அம்மா தூக்கு என்று கத்தியபடி இருந்தாள்,

உடல் முழுவதும் காயம்,அவள் இரத்தத்தில் தோய்ந்துபோய் இருந்தாள்.யாராவது ஓடிவாங்கோ என்ர பிள்ளையை காப்பாத்துங்கோ என்று கத்தியபடி அங்கும் இங்கும் ஓடித்திரிந்தேன்,செல்லடி ஓயவில்லை.பயத்தில் யாரும் உதவிக்கு வரேல,என்ர மகன் என்ன ஆனான் என்று தெரியாது,நான் கத்திய சத்தம் பல மீற்றருக்கு கேட்டிருக்கும்,யாரும் உதவிக்கு வரேல,

அங்கும் இங்கும் ஓடுவதும் திரும்பி வந்து என்ர பிள்ளைக்கு மூச்சிருங்கா என்று பார்ப்பதுமாக இருந்தேன்,பக்கத்து பங்கருக்குள் இருந்தவர்களிடம் ஓடினேன்,அவர்கள் யாரும் வெளியில் வரவில்லை.அதன்பின் அருகில் போராளிகள் இருந்த தறப்பாள் கொட்டிலுக்கு ஓடினேன்,
யாராவது ஒருவர் உதவி புரிந்தால் என் மகனையும் தூக்கிவிடுவேன்,பங்கர் வாசலில் இருக்கும் பனம் குற்றிகளை தூக்க உதவி செய்யுங்கோ என்று மன்றாடியபடி ஓடித்திரிந்தேன்,

அங்கிருந்த போராளிகளும்,பெரும் காயக்காறரும்,கண்பார்வை அற்றவர்களுமே,அக்கா நாங்கள் என்னக்கா செய்றது எங்களால ஏலாது.ஏலுமென்றால் உங்கட அவலக்குரல கேட்டிட்டு பேசாமல் இருப்பமாக்கா..?என்றார்கள்,நான் இருதலைக்கொள்ளி எறும்பாகத் தவித்தேன்,யாரிடம் போவது,பலர் ஏற்கனவே இடம்பெயர்ந்து முன்னக்கு சென்றவிட்டார்கள்.

ஓடிவந்து மகளை தூக்கி மடியில் வச்சு அழுதேன்.மூச்சுவருகுதா என்று அடிக்கடி இதயதுடிப்பைப் பார்த்தபடி இருந்தேன்,என் அவலக்குரலை கேட்கமுடியாது பெரும் காயங்களோடு இருந்த போராளி ஒருவன் ஊன்றுகோலோடு வந்து அக்கா வாங்கோ என்னால ஏலுமான உதவி செய்றன் என்றான், அவனைப்பார்க்கவே பாவமாக இருந்தது.அந்தபோராளியின் உதவியோடு வாசலில் இருந்த மரக்குற்றிகள் இரண்டை அகற்றினேன்,செல் விழுந்ததில் இருந்து 30 நிமிடத்தின் பின்பே மரக்குற்றிகளை அகற்றி என் மகனை தேடினேன்,

அப்போது ஒரு மூன்று (3 )வயது மதிக்கத்தக்க ஒரு சிறுவன் உடல் முழுவதும் இரத்தத்தோடு வெளியே ஓடிவந்தான்.வந்தவன் என் சட்டையை பிடித்தபடி அம்மா நெருப்பு சுட்டுப்போட்டுது தூக்கு தூக்கு என்று கத்தினான்,என்னைத் தூக்கு அம்மா தூக்கு என்று என் கையைப் பிடித்து அழுதான்.

எனக்கு அந்தச் சிறுவனை தூக்குவதா என்ர மகனை தேடுவதா..?என்ற மனநிலை.பலர் அந்த பங்கருக்குள் இரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார்கள்,அதற்குள் காயக்காறரை ஏற்றும் வாகனம் வந்துவிட்டது, பலர் வந்து மரக்குற்றிகளை தூக்கி இறந்த உடல்களை வெளியே எடுத்தார்கள்,ஒரு 30 உடல்கள் பங்கருக்குள் கிடந்தது,சிலர் காயங்களோடும் கிடந்தார்கள்,

என் மகளை காயங்களோடு முள்ளிவாய்க்கால் மருத்துவமனைக்கு ஏற்றினார்கள்,மகனின் உடலை பார்க்க துடித்தேன்.என்ர பிள்ளைக்கு காயம் எதுவும் இருக்ககூடாது என்று உள்ளநாட்டு தெய்வம் எல்லாத்துக்கும் நேர்த்தி வச்சன், ஆனால் தூங்கி பார்த்தவார்கள் இறந்த உடல்களோடே என் மகனின் உடலையும் வாகனத்துக்குள் போட்டார்கள்,ஓடிச்சென்று பார்த்தேன்,தலைப்பகுதி நசிந்தபடி இரத்தம் பிடரிபக்கத்தால் வழிந்தபடி இருந்தது.என்ர பிள்ளை என்னை விட்டிட்டு போட்டான் என்று கத்திஅழுதேன்,

என்ர இரண்டு குஞ்சுகளையும் பறிகொடுத்திட்டனே கடவுளே உனக்கு கண் இல்லையா..?இனிநான் உயிரோட இருந்துதான் என்னத்துக்கு, வாய்விட்டு அழுதேன்.என் கத்தல் சத்தம்தான் அந்த பகுதி எங்கும் கேட்டது. என் சட்டையை பிடித்தபடி நின்ற சிறுவன் என்னைவிடவில்லை.அவன் குடும்பத்தவர்கள் அனைவரும் பங்கருக்குள் இறந்து விட்டார்கள்போல்,அவனை யாரும் தேடவும் இல்லை.

என் பிள்ளைகளை பார்க்கவா அந்த சிறுவனை பார்க்கவா.?சிறுவனையும் தூக்கிக்கொண்டு ரக்ரர்பெட்டிக்க இருந்து முள்ளிவாய்க்கால் மருத்தவமனை போனேன்,
எப்படியாவது என்ர இரண்டு பிள்ளைகளையும் காப்பாற்றி தாங்கோ டொக்டர்,என்ர கணவன் பிள்ளைகளை கவனமா இருக்கசொல்லி எங்க போனாலும் பங்கர் வெட்டி தாறவர்,என்ர கணவனிற்கு நான் என்ன பதில் சொல்லுவன்.?

கடவுளே என்ர பாலனுகள் இரண்டையும் காப்பாற்றித்தா என்று அங்கும் இங்கும் ஓடியபடி இருந்தேன்.கண்ணாடிபக்கத்தால எட்டிப்பார்த்தேன் என் மகளிற்கு சேலைன் ஏறுவது தெரிந்தது.என்ர கடவுளே என்ர பிள்ளைகளை காப்பாத்து என்று அழுதபடி உள்ளே ஓடினேன்,போராளி மருத்துவர்கள் உள்ளே என்னை விடவில்லை,
அதற்குள் தகவல் அறிந்து என் கணவனும் வந்துவிட்டார்.என் கணவனிடம் ஓடிச்சென்று கால்களை பிடித்து அழுதேன்,என் பிள்ளைகளை காப்பாற்றேலாத பாவியா போனன். என்னை மன்னிச்சிடுங்கோ என்று அழுது புலம்பினேன்.என் கணவர் என்னைத் தேற்றினார்,

உள்ளே சென்றுவிட்டு வந்த என் கணவன் சோகமாக இருந்தார்,ஏதோ விபரீதம் நடந்துவிட்டது என்று ஊகித்தேன்,மகனிற்கு என்ன நடந்தது,தம்பிக்கு சுகமா..?உயிருக்கு ஒன்றும் இல்லைத்தானே என்றேன்,எதுவும் கூறாது நிலத்தை பார்த்தபடி இருந்தார்.என்ர பிள்ளைக்கு என்ன நடந்ததென்று சொல்லுங்கோ என்று அழுதேன், தம்பி எங்களைவிட்டிட்டு போட்டான் என்று கூறினார், இல்லை என்ர பிள்ளை சாகேல,நான் குளிக்கபோகவும் தம்பி சொல்லித்தான் விட்டவன் அம்மா செல்வந்தால் உடன பங்கருக்க ஓடிவாங்கோ என்று.அம்மாக்கு எதுவும் நடந்திடக்கூடாதென்று என்ரபிள்ள துடிச்சது,என்ர பிள்ளைக்கு ஒன்றும் நடந்திருக்காது,திரும்பப்போய் ஒருக்கா வடிவா பார்த்திட்டுவாங்கோ என்று துரத்திவிட்டேன்,

என்ர பிள்ளையை இழந்திட்டன்,என் மூத்த ஆண்பிளைப்பிள்ளை என்னை விட்டிட்டு போட்டான்,நான் இனி அவனை இந்த ஜென்மத்தில் பார்க்கமுடியாதே..?
என் கணவனில்தான் கோபம் வந்தது,நீங்கள் நேற்று வரச்சொல்லி கோல் எடுக்கேக்க வந்திருந்தால் நாங்கள் வட்டுவாகல் போயிருப்பம்,என்ர பிள்ளை தப்பி இருப்பான்,எல்லாம் உங்களாலதான்.

உங்களுக்கு கடமைதானே முக்கியம்.எங்கள வட்டுவாகலில கொண்ட விட்டிருந்தால் என்ர பிள்ளை தப்பியிருக்கும்,நீங்கள் என்ர பிள்ளையின்ர உடலைத்தாக்க வேண்டாம்,நீங்கள் உங்கட கடமையை பார்த்துக்கொண்டு போங்கோ,என்ர பிள்ளை செத்ததுபோல நானும் செல்லடிக்க நின்று சாகிறன் என்று அழுதேன்,
என் கணவர் என்னை தேற்றினார்,என்னால் எப்படி ஆறுதல் அடையமுடியும்..?அதற்குள் மறுதடவையும் செல்லடி தொடங்கியது,

சேலைன் ஏறிய படியே நான் மகளைத்தூக்கிக்கொண்டு நடையாக வட்டுவாகலுக்கு கொண்டு சென்றேன் ,என் கணவர் என் மகனின் உடலை தூக்கிக்கொண்டு வந்தார்.
என் பின்னாலே என்சட்டையை பிடிச்சபடியே பயம் அப்பியமுகத்தோடு அந்த சிறுவனும் வந்தான்.பெற்றோரை இழந்து காயத்தில் நிற்பவனை எப்படி தனியே விட்டிட்டுவர முடியும்.? அவனையும் கூட்டிக்கொண்டு வட்டுவாகலுக்கு போனோம்,

எம்மை ஒரு றோட்டுகரை மரத்தடியில் இருக்கவிட்டிட்டு அருகில் இருந்தவர்களிடம் மண்வெட்டி வாங்கி கிடங்குவெட்டி ஒரு ஆலமரத்துக்குகீழ மகனை தாட்டார் என்கணவர்.

மகளின் உடல் நிலையும் மோசமாகவே இருந்தது,சிறுவனுக்கும் சிறுசிறு காயங்கள்,என் கணவரே அவனிற்கு காயத்திற்கு துணிவைத்துகட்டினார்.அவனிடம் நாங்கள் எதுவும் கேட்கவில்லை,என்னத்தை கேட்பது..?

அவன் அம்மா அம்மா நோகுது நெருப்பு சுட்டுப்போட்டுது நோகுதென்று மட்டுமே கூறியபடி இருந்தான்,பீஸ்பட்டது பிள்ளைக்கு நெருப்புசுட்டதுபோல இருந்திருக்கு என்று ஊகித்தோம்,

என் கணவர் ஒரு நாள் எம்மோடு நின்றார்,மறுநாள் கூறினார் பெடியல் தனிய பாவங்கள் நல்ல சாப்பாடும் இல்லாம கஸ்ரபடுறாங்கள். இந்தநேரத்தில நான் உங்களோட நிற்கிறது சரியில்ல,நான் போறன் இரண்டு பேரையும் பாருங்கோ,பிள்ளை கவனம்,நான் போட்டுவாறன் என்றார்.எனக்கு என் கணவனை அனுப்புவது விருப்பம் இல்லை. அழுதேன் எங்களோடு நில்லுங்கள் எழில் உங்களைதான் தேடுவாள் என்றேன்.

ஆமிகிட்டவந்தால் சனங்கள் ஆமிக்க போகேக்க சனங்களோட சனமா நீங்களும் போங்கோ,என்னைப் பார்த்துக்கொண்டு நிற்கவேண்டாம்.நான் பார்த்துவருவன் என்றிட்டு என்னைப் பார்த்தார்,

அந்த பார்வையில் ஓராயிரம் ஏக்கங்கள் தெரிந்தது….

என்னை நம்பி வந்தவளை நாட்டின் கடமைக்காக நடுத்தெருவில் விட்டிட்டு போறன் என்றுதான் வேதனைப்படுறார் என்று புரிந்தது,ஆனால் எதுவும் செய்யேலாத நிலை.நீயும் போராளி என்ர நிலையை புரிஞ்சுகொள்ளுவாய் என்று நம்புறன் என்டார்,உங்கட கடமையாலதான் என்ர பிள்ளையை இழந்தன்,இனியும் என்ன இருக்கு……நீங்கள் போங்கோ,கவனமா இருங்கோ என்றேன்.

கவலைபடிந்த முகத்தோடு மகளை முத்தமிட்டவர் சென்றுவிட்டார்,அவர் தேசத்திற்கான கடமையைத்தேடிச் சென்றார்,நான் என் குடும்பத்தை இழந்து நின்றேன்,
இறுதிப் போரில் என் கணவனிற்கு என்ன நடந்ததென்று தெரியாமல் போனது,என் கணவனை கூட்டிவரவேண்டும் என்று 18ஆம் திகதி காலைவரை நின்றுவிட்டே வட்டுவாகல் ஊடாக இராணுவத்திடம் சரணடைந்தேன், என்மகனை போரால் இழந்தேன்,ஆனால் யுத்தம் தந்த பங்கரில் கிடைத்த மகனோடும் என்மகளோடும் வாழ்கிறேன், உயிரிழந்த என் மகனின் பெயரான கருமுகிலன் என்றபெயரையே பங்கரில் கிடைத்த மகனிற்கு வைத்தேன், மகன் சிறுவனாக என்னோடு வந்தபடியால் என்னையே அம்மா என்பான்,அவனிற்கு சிறுவயது சம்பவம் எதுவும் நினைவில் இல்லை,என் மகளும் காட்டிக்கொடுக்க மாட்டாள்.

தம்பியோடு பாசமாக இருக்கிறாள்.தேசத்தின் கடமையை நேசித்த படியால் என் மகனை தந்தை இழந்து நின்றார்,இன்று நான் இருவரையும் இழந்து வாழ்கிறேன். இன்று ஏனையோரை பார்க்கும்போது அவர்களைப்போல் இல்லாமல் நாம் நமது தேசத்தை அதிகமாக நேசித்துவிட்டோமா..?

இன்று பல துயர்களை சுமக்கிறோம், மற்றவர்களைப்போல் நாமும் சுயநலத்தோடு வாழ்ந்திருக்கலாமா..?அப்படி எம்மால் வாழமுடிந்திருக்குமா..?

இன்றுவரை கணவனைதேடி நடைப்பிணமாக அலையும் என் அவலம் எப்போது ஓயும்…? புதிது புதிதாய் கவலைகள் வந்தபடியே…மகளின் முகத்தைப் பார்க்கிறேன் எதைச்சொல்லி அவளைத் தேற்றுவேன்..?

முள்ளிவாய்க்காலில் உறவுகளை தொலைத்து அவலத்தை சுமந்து கொண்டிருப்பவர்களின் சார்பான பதிவாக…

– பிரபா அன்பு

Up ↑