Search

Eelamaravar

Eelamaravar

Month

February 2019

போா்குற்ற விசாரணை வேண்டாம் என கூத்தமைப்புடன் இணைந்து கூறிய ரணில்!

தமிழீழ விடுதலை புலிகள் தொடா்பான குற்றங்களுக்கும் வழக்குகள் இடம்பெறுகின்றன, அரச ப டைகள் மீதான குற்றங்களுக்கும் வழக்குகள் இடம்பெறுகின்றன. எனவே மறப்போம், மன்னிப் போம் என்பதன் அடிப்படையில் போா்குற்ற விசாரணைகள் தேவையில்லை.

மேற்கண்டவாறு பிரதமா் ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளாா், இன்று கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடந்த அபிவிருத்தி கலந்துரையாடலிலேயே இதனை தெரிவித்தார்.

போர்க்குற்றச்சாட்டுக்கள் இரண்டு தரப்பிலும் உள்ளன. இலங்கை ஜனாதிபதி கொல்லப்பட்டிருக்கிறார். பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கொல்லப்பட்டிருக்கிறார். அமைச்சர்கள், படைவீரர்கள், பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

ஏன்.. தமிழ் அரசியல் தலைவர்களும் கொல்லப்பட்டுள்ளனர். அவர்கள் எல்லோரும் புலிகளால் கொல்லப்பட்டவர்கள். அதேபோல, இராணுவத்தினர் மீதும் குற்றச்சாட்டுக்கள் வைக்கப்படுகின்றன.

இவற்றிற்கு எதிராக இரண்டு தரப்பும் வழக்கு தொடர முயன்றால், முடிவின்றி மாறி மாறி தொடர்ந்து கொண்டு செல்லலாம். இதையெல்லாம் மறந்து, மன்னித்து, உண்மையை கண்டறிந்து, அனைவரும் ஒன்றுபட்டு நாட்டை கட்டியெழுப்புவதே அவசியமானது“ என்றார்.

அப்படியானால் முன்னால் விடுதலைப்புலிகளின் குற்றங்களையும் மன்னித்து விடுதலை செய்யலாம் தானே !

  சரி சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்ட அரசியல் கைதிகளைக் கூட மன்னித்து விடுதலை செய்யவில்லையே பின்னர் எப்படி தமிழர்கள் மட்டும் மன்னிக்க வேண்டுமா ?

சொந்த மக்களை ஏமாற்றி மத்திய அரசில் சலுகைகளை அனுபவிக்கும் கேவலம் உலகில் வேறு எங்கும் இல்லை

சாதாரண கூட்டமைப்பு நாடாளமன்ற உறுப்பினர்கள் அமைச்சரவைக்கு நிகரான சலுகைகளை பெறுகிறார்கள் . இலங்கை வரலாற்றில் சாதாரண பாராளமன்ற உறுப்பினர்கள் அரச வான் வழி பயண போக்குவரத்தை பெறுவது இயலாத காரியம் . ரணில் விக்ரமசிங்கே எதிர்க்கட்சி தலைவராக இருந்த பொது கூட தயா கமகே நிறுவனத்திற்கு சொந்தமான தயா வான் வழி சேவைகளை தான் பயன்படுத்தி இருந்தார்

இப்போது சாதாரண பாராளமன்ற உறுப்பினரான சுமந்திரனுக்கு அந்த வான் வழி போக்குவரத்து வசதிகள் வழங்கப்படுகிறது .

இங்கே இவளவு வசதிகளை அனுபவிக்கும் இவர்கள் இவர்களை தெரிவு செய்த மக்களுக்கு பெற்று கொடுத்தது என்ன ?

1. கோவில்கலுக்குள் அமைக்கப்படும் விகாரைகளை, புத்தர் சிலைகளை தடுக்க முடியாமல் இருப்பது ஏன் ?
2. வடக்குக்கு நியமிக்கப்படும் சிங்கள சிற்றுளியார்களை தடுக்க முடியாமல் இருப்பது ஏன்
3. கிழக்கு முகாமைத்துவ உதவியாளர் சேவை தொடக்கம் கணக்காளர் சேவை பரீட்சை வரை ஏமாற்றப்படும் தமிழ் தேர்வுநாடிகளுக்கு பெற்று கொடுத்த தீர்வு என்ன ?
4. வவுனியா , முல்லைத்தீவு , திருகோணமலை என பறிக்கப்படும் நிலங்கள் , மேற்கொள்ளப்படும் சிங்கள குடியேற்றங்கள் தொடர்பாக இவர்கள் எடுத்த நடவடிக்கை என்ன ?
5. பட்டதாரிகளுக்கு பல ஆண்டுகளாக வேலைவாய்ப்பு வழங்கப்பட வில்லை .இது தொடர்பாக இவர்கள் எடுத்து கொண்ட நடவடிக்கை என்ன ?
6. 700 நாட்களுக்கு மேலாக வீதியில் இருக்கும் காணாமல் போனவர்களின் உறவினர்கள் , கோப்பாபிலவு மக்கள் , சிறைக்கைதிகள் உறவுகளுக்கு இவர்கள் பெற்று கொடுத்த தீர்வு என்ன ?
7. கிராமிய எழுச்சி திட்டத்தின் கீழ் காசை பங்கீடு செய்து தொகுதிகள் தோறும் வீண் விரயம் செய்யும் இவர்கள் இது வரை நிலைத்திருக்கும் அபிவிருத்திக்கு செய்த பங்களிப்பு என்ன ?
8. தொல்லியல் திணைக்களம் , வளவள திணைக்களம் , மகாவலி அபிவிருத்தி சபை என நாள் தோறும் அபகரிக்கப்படும் நிலங்களுக்கு இவர்கள் வழங்கும் தீர்வு என்ன ?
9. வவுனியா பொருளாதார வலயம் , வடமராட்சி கிழக்கு குடி நீர் திட்டம் , முதலமைச்சர் நிதியம் என வடக்கு மாகாணசபை பெயர் எடுத்து விட கூடாது என மத்திய அரசு சகிதம் இவர்கள் குழப்பி விட்ட பொருளாதாரம் சார்ந்த திட்டங்களுக்கு என்ன தீர்வு ?
10. விவசாய சந்தைப்படுத்தல்களை ஆக்கிரமித்து நிற்கும் தம்புள்ள விவசாயிகள் , ஆமியின் விவசாய பண்ணைகளை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன ?
11. ஆமி நடத்தும் முன்பள்ளிகளை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது ? .

சமஸ்டி தீர்வு , சர்வதேச விசாரணை முடிவடைந்து விட்டது , ஐ நாவில் கால அவகாசம் என சொந்த மக்களை ஏமாற்றி மத்திய அரசில் சலுகைகளை அனுபவிக்கும் கேவலம் உலகில் வேறு எங்கும் இல்லை

-இனமொன்றின் குரல்-

பௌத்த பிக்குவிற்கு சேவகம் செய்யும் சிறிலங்கா வடக்கு ஆளுனர்!

அஸ்கிரிய பீடத்தின் மஹாநாயகர் அதிசங்கைக்குரிய வரக்காகொட ஞானரத்ன தலைமைத்தேரரை வடமாகாண சிறிலங்கா ஆளுநர் சுரேன் ராகவன்; இன்று (15) முற்பகல் சந்தித்து ஆசி பெற்றதுடன் அவர் உரையாடியுமுள்ளார்.

எதிர்வரும் மார்ச் மாதம் வடக்கில் முதலாவது பௌத்த மாநாட்டிற்கு அழைப்புவிடுக்கப்பட்டுள்ள நிலையில் அவரது இந்த சந்திப்பு நடந்துள்ளது.
தமிழர் தாயகத்தில் திட்டமிட்டு முன்னெடுக்கப்படும் பௌத்த விகாரைகள் அமைப்பு நடவடிக்கைகள் தொடர்பில் தமிழ் தரப்புக்கள் பலவும் ஆளுநரது கவனத்திற்கு கொண்டு சென்றுள்ள நிலையில் இத்தகைய சந்திப்பு நடந்துள்ளது.

வழமையாக தமிழ் ஆளுநர் ஒருவரை வடக்கிற்கு நியமிப்பதற்கு எதிர்ப்பு வெளியிட்டு வந்த அஸ்கிரிய மற்றும் மல்வத்த பீடாதிபதிகள் சுரேன் இராகவன் நியமனத்திற்கு ஆதரவு தெரிவித்து வந்தமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே வரலாற்று சிறப்புமிக்க கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் இன்று (15) முற்பகல் விஜயம் செய்து வழிபாடுகளில் ஈடுபட்டு ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டார்.

கண்டி தலதாமாளிகைக்கு விஜயம் மேற்கொண்ட ஆளுநர் அவர்களை கண்டி தலதா மாளிகையின் தியவதன நிலமே பிரதீப் நிலங்க தெல வரவேற்றார்.
இதன்போது ஆளுநர் புனித தந்ததாதுவினை தரிசித்து வழிபாடுகளில் ஈடுபட்டதுடன் ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டார். ஆளுநரின் செயலாளர் எல்.இளங்கோவன், வட மாகாண பிரதம செயலாளர் ஏ.பத்திநாதன் ஆகியோரும் இந்த விஜயத்தில் இணைந்திருந்தனர்.

ஜோர்ஜ் ஃபெர்னாண்டர்ஸ்: தமிழ் மக்களுக்குக் கதாநாயகன் சிங்கள மக்களுக்கு வில்லன்

தீபெத் மீதும் திபெத்தியர்களின் போராட்டத்தின் மீதும் ஜோர்ஜ் ஃபெர்னாண்டஸ் தொடக்கத்திலிருந்தே அனுதாபத்தோடு இருந்தார். அவர்களுக்காக பேசக் கிடைத்த எந்த ஒரு சந்தர்ப்பத்தையும் அவர் தவறவிட்டதில்லை. அவருடைய முகம் நான் இறக்கும் வரை எனது இதயத்தில் நிலைத்திருக்கும். என்னுடைய அடுத்த பிறப்பிலும் நான் அவரை நினைவு கூர்வேன் – -வணக்கத்துக்குரிய தலாய் லாமா

கருணாநிதி உயிர் நீத்தபொழுது முகநூலில் ஈழத் தமிழர்கள் இரு கூறாகப் பிரிந்து நின்றார்கள். ஈழத் தமிழர்கள் மட்டுமல்ல ஒரு பகுதி தமிழகத்தவர்களும் இரு கூறாகப் பிரிந்து நின்றார்கள். புலிகள் இயக்கத்தை ஆதரித்தவர்கள் கருணாநிதியை கடுமையாக விமர்சித்தார்கள். புலிகள் இயக்கத்தை எதிர்த்தவர்கள் அல்லது விமர்சித்தவர்கள் கருணாநிதியை நியாயப்படுத்தினார்கள்.

ஆனால் அண்மையில் ஜோர்ஜ் ஃபெர்னாண்டர்ஸ் உயிர்நீத்த பொழுது ஈழத்தமிழர்களில் பெரும் பகுதியினர் அவரைக் கண்ணியமாக நினைவு கூர்ந்தார்கள். தமிழகத்திலும் ஜோர்ஜ் ஃபெர்னான்டஸ் மதிப்போடு நினைவு கூரப்பட்டார். தமிழகத்துக்கு வெளியில் துலங்கிய ஒரிந்தியத் தலைவருக்கு இவ்வாறு தமிழகத்திலும் ஈழத்தமிழர்கள் மத்தியிலும் மதிப்போடு அஞ்சலி செலுத்தப்பட்டமை என்பது 2009ற்குப் பின்னரான இந்திய ஈழத்தமிழ் அரசியற் பரப்பில் ஒரு நூதனமான தோற்றப்பாடுதான். தமிழகத்தில் பல்வேறு தரப்பினரும் அவரவர் அரசியல் சமூக நோக்கு நிலைகளிலிருந்து ஜோர்ஜ் ஃபெர்னான்டசுக்கு அஞ்சலி செலுத்தினார்கள். அங்குள்ள ஈழத்தமிழ் ஆதரவு சக்திகள் அவரைப் புகழ்ந்து அஞ்சலித்தார்கள். அதே சமயம் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை விமர்சனத்தோடு அணுகும் தரப்புக்களும் ஜோர்ஜ் ஃபெர்னாண்டஸை விமர்சித்தபோதிலும் அவருக்கு உரிய மதிப்பைக் கொடுத்து அஞ்சலித்திருந்தார்கள்.இதில் குறிப்பாக முகநூற் பரப்பில் காணப்பட்ட அஞ்சலிக் குறிப்புக்கள் சிலவற்றிலிருந்து தெரிந்தெடுக்கப்பட்ட சில பகுதிகளின் தொகுப்பு வருமாறு.

புலமையாளரும் சமூக அரசியற் செயற்பாட்டாளருமாகிய பேராசிரியர் ஆ.மார்க்ஸ் பின்வருமாறு கூறியிருக்கிறார்…….“எனக்கு அவருடன் ஒரு அனுபவம் உண்டு. 90களில் நிறப்பிரிகை குழுவினராகிய நாங்கள் பல ஈழ ஆதரவு சிறு அமைப்புகளையும் ஒன்றிணைத்து திருச்சியில் ‘புலம் பெயர்ந்த தமிழர் மாநாட்டை’ நடத்தினோம். அதில் பங்கேற்று ஈழத் தமிழ் ஏதிலியர்களுக்கான உரிமைகளை ஆதரித்துப் பேசியவர்களில் கெய்ல் ஓம்வேத், ஜார்ஜ் ஃபெர்னான்டஸ் ஆகியோரும் இருந்தனர். எந்த நிதி உதவியும் இல்லாமல் குறைந்த பட்ஜெட்டில் நடத்திய அந்தப் பெரிய மாநாட்டிற்கு அவரை திருச்சி விமான நிலையத்திலிருந்து ஒரு ஆட்டோவில் அழைத்து வந்தோம். எல்லோருக்கும் போடப்பட்டிருந்த ஒரு எளிய ஓட்டல் அறையில் தங்க வைத்தோம். அவருக்கு பயணப்படி என ஒரு குறைந்த தொகையை கவரில் போட்டு சற்றுக் கூச்சத்துடன் நீட்டினேன். அப்போது திருச்சியில் இருந்த ராஜன் குறையும் இருந்தார். “ஓ! அதெல்லாம் வேண்டாம். எனக்கு இலவச டிக்கட் வசதியெல்லாம் உண்டு. நீங்கள்தான் தங்கும் வசதியெல்லாம் செய்து தந்துவிட்டீர்கள்ர்களே.. இட்ஸ் ஆல்ரைட்… தாங்க்யூ…” – என அவர் சொன்னது இன்னும் காதுகளில் ஒலித்து கண்களைக் கலங்க வைக்கிறது”

பி.பி.ஸி தமிழோசையில் பணிபுரிந்த ஊடகவியலாளர் எல்.ஆர்.ஜெகதீசன் ஜோர்ஜ் பெர்னான்டசை “வடநாட்டு வை.கோ” என்று அழைக்கிறார். அவருடைய விமர்சனம் கலந்த அஞ்சலிக் குறிப்பின் ஒரு பகுதி வருமாறு………“தமிழ்நாடு அரசியல் ரீதியாகவும் பொருளாதார வலிமையிலும் இந்தியாவின் முதன்மை மாநிலங்களில் ஒன்று என்றாலும் தமிழ்நாட்டையும் அதன் ஏழுகோடி தமிழ்மக்களையும் உண்மையிலேயே மதித்த, உளமாற நேசித்த வட இந்திய அரசியல் ஆளுமைகளை விரல் விட்டு எண்ணிவிடலாம். அத்தகைய மிகச்சிலர் வி பி சிங், பர்னாலா மற்றும் ஜார்ஜ் பெர்ணாண்டஸ். அதில் எஞ்சியிருந்த ஒற்றை மனிதரும் இன்று மறைந்துவிட்டார் என்பது வருந்தத்தக்க செய்திதான். பெர்ணாண்டஸின் அரசியலும் நம்மூர் வைகோ அரசியலைப்போன்றது. உணர்ச்சிக்கொந்தளிப்பால் உருவாகி பின்னர் திசைமாறி எங்கோ போய் எதிலோ முடிந்த அரசியல் பயணம். தமிழ்நாட்டை மதித்த, நேசித்த கடைசி வடஇந்திய ஆளுமையும் மறைந்துவிட்ட நிலையில் அடுத்த தலைமுறை வட இந்திய ஆளுமைகளில் அப்படியானவர்கள் யார் என்கிற கேள்விக்கு காலம்தான் பதில் சொல்லவேண்டும்”

ஏறக்குறைய ஜெகதீசனைப் போலவே மற்றொரு சமூகச் செயற்பாட்டாளாராகிய கறுப்பு நீலகண்டனும் ஃபெர்னாண்டசை விமர்சனத்தோடு பின்வருமாறு அஞ்சலித்திருந்தார்……“ஒரு சோனியா காந்தி விதவையானதற்காக லட்சக்கணக்கனக்கானோர் இலங்கையில் விதவையாக வேண்டுமா?” என சென்னை கடற்கரையில் நடைபெற்ற மரணதண்டனை எதிர்ப்பு மாநாட்டில் அவர் கேட்ட தார்மீகமான மனிதார்த்தமான கேள்வி குஜராத் படுகொலை செய்த, முஸ்லீம்களை கேட்பாரின்றி கொலை செய்த இந்து பயங்கரவாதிகளை ஆதரித்தபோதே செத்துப்போனது…”

மற்றொரு அரசியற் செயற்பாட்டாளராகிய ஆழி செந்தில்நாதன்…….“ஈழத்தமிழர் பிரச்சனை, கூடங்குளம் அணு உலை, ஸ்டெர்லைட், மீனவர்கள் கைது கோக் எதிர்ப்பு போன்ற தமிழகத்தின் முக்கிய போராட்டங்களில் துணை நின்றவர். சேது சமுத்திர திட்டத்தை செயல் படுத்த இராமேஸ்வரம் கோதண்டராம கோவில் அருகே 1998ல் ஆய்வு நடத்தினர்.அவரிடம் எப்போதும் இரண்டு மூன்று பைஜாமா, ஜிப்பா மட்டுமே இருக்கும். மிகவும் எளிமையான மனிதர்.” என்று எழுதியுள்ளார்.

மேற்கண்ட பெரும்பாலான அஞ்சலிக் குறிப்புக்களில் ஃபெர்னான்டஸை விமர்சிப்பவர்கள் கூட அவரை மதித்து அஞ்சலி செலுத்துமளவிற்கு அவருடைய வாழ்க்கை அமைந்திருந்தது என்பதே இங்கு முக்கியமானது. அவருக்கு அஞ்சலி செலுத்திய வை.கோவும் அவருடைய ஆதரவாளர்களும் அவர் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு வழங்கிய ஆதரவைக் குறிப்பிட்டுச் சொல்லியிருந்தார்கள். அவருடைய வீடு எப்பொழுதும் அகதிகளுக்காகத் திறக்கப்பட்டிருந்தது. குறிப்பாக பர்மிய தீபெத்திய அகதிகள் அவருடைய வீட்டில் தங்கியிருந்திருக்கிறார்கள். ஈழத் தமிழர்களும் அவருடைய வீட்டில் கூட்டங்களை நடத்தியிருக்கிறார்கள். தமிழகம் ஈழம் உள்ளடங்கலான பெருந்தமிழ்ப் பரப்பில் மதிப்போடு அஞ்சலிக்கப்படும் அளவிற்கு ஃபெர்னாண்டசின் வாழ்க்கை அமைந்திருக்கிறது.

இதில் குறிப்பாக தமிழக மற்றும் ஈழச்செயற்பாட்டாளர்கள் ஃபெர்னான்டசுக்கு செலுத்திய அஞ்சலிக் குறிப்புக்கள் சிலவற்றில் அவர் பாதுகாப்பு அமைச்சராக இருந்த கால கட்டத்தில் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவாகக் காணப்பட்டதற்காகப் போற்றப்படுவதைக் காணலாம். 1998ல் பெர்னாண்டஸ் புலிகளின் ஆயுதக் கப்பல்களை இடைமறிக்க வேண்டாம் என்று இந்திய கடற்படைக்கு உத்தரவிட்டதாகவும் இதனால் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மூன்று ஆயுதக்கப்பல்கள் பத்திரமாக கரை சேர்ந்ததாகவும் rediff.com (https://www.rediff.com/news/2000/dec/07spec.htm) இணையத்தளம் எழுதியுள்ளது. ஆனால் இங்குள்ள கேள்வி என்னவென்றால் ஒரு பாதுகாப்பு அமைச்சராக அவர் இந்திய வெளியுறவு மற்றும் பாதுகாப்பு கொள்கைகளுக்கு வெளியே வந்து ஈழத் தமிழர்களின் ஆயுதப் போராட்டத்திற்கு எப்படிப்பட்ட உதவிகளைச் செய்திருக்கிறார்? அல்லது எப்படிப்பட்ட உதவிகளைச் செய்திருக்க முடியும்? என்பதுதான்.

அவர் பாதுகாப்பு அமைச்சராக இருந்த காலகட்டமும் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் வன்னி மைய எழுச்சிக் காலகட்டமும் கிட்டத்தட்ட சமாந்தரமானவை. வன்னியை மையமாகக் கொண்டு விடுதலைப் புலிகள் இயக்கம் செயற்படத் தொடங்கிய பின் அது யுத்தகளத்தில் பெரு வெற்றிகளைப் பெற்ற ஒரு காலகட்டம் இதுவாகும். இக்காலகட்டத்திலேயே அந்த இயக்கத்தின் மரபு ரீதியிலான படையணிகள் உலகத்தின் படைத்துறை வல்லுனர்களின் கவனிப்பைப் பெற்றன. அப்படையணிகளின் யுத்தகள சாதனைகள் வன்னியை ஓர் அதிகார மையமாக கட்டியெழுப்பின. அதன் விளைவே இலங்கைத்தீவில் இரண்டு அதிகார மையங்கள் உண்டு என்பதனை ஏற்றுக்கொண்டு எழுதப்பட்ட ரணில் – பிரபா உடன்படிக்கையாகும்.

எனவே புலிகள் இயக்கத்தின் வன்னி மையக் காலகட்டத்தின் பேரெழுச்சிக் காலம் என்றழைக்கப்படும் காலமும் ஜோர்ஜ் ஃபெர்னான்டஸ் இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சராக இருந்த காலகட்டமும் கிட்டத்தட்ட சமாந்தரமானவை என்பதனால் விடுதலைப்புலிகள் இயக்கம் பெற்ற வெற்றிகளோடு ஜோர்ஜ் ஃபெர்னான்டசைத் தொடர்புபடுத்தி சிலர் சிந்திப்பதாகத் தெரிகிறது. ஆனால் ஒரு பிராந்தியப் பேரரசின் வெளியுறவுக்கொள்கை பாதுகாப்புக் கொள்கை போன்றவற்றில் ஒரு தனி மனிதனின் நல்லிதயம் எவ்வளவு பெரிய மாற்றங்களை ஏற்படுத்த முடியும்? ஈழத் தமிழர்களின் ஆயுதப் போராட்டத்திற்கு ஃபெர்னான்டஸ் வழங்கிய ஆதரவு ஒரு தார்மீக ஆதரவா? அல்லது இந்தியாவின் பாதுகாப்புத்துறை சார் கொள்கைகளில் நெகிழ்வை ஏற்படுத்திய ஓர் ஆதரவா?

இக்கேள்விகளுக்கு விடை கூறவல்ல மிகச்சிலரே இப்பொழுது இப்பூமியில் உண்டு. விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அனைத்துலக வழங்கற் செயற்பாட்டிற்கு பொறுப்பாக இருந்த குமரன் பத்மநாதனைப் போன்றவர்கள் வாயைத் திறக்கும் பொழுதே இது தொடர்பான உண்மைகள் வெளிவரும். அதுவரை ஜோர்ஜ் ஃபெர்னான்டஸ் ஈழத்தமிழர்களுக்கு என்றென்றும் தமது தார்மீக ஆதரவை வழங்கினார் என்பதே இப்போதைக்கு உண்மையானதாகும். 2000மாவது ஆண்டு டிசம்பர் மாதம் 7ம் திகதி ரெட்டிவ் இணையத்தளம் இதுதொடர்பாக எழுதியுள்ளது.

1997ஆம் ஆண்டு பெர்னாண்டஸ் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக டில்லியில் ஒரு மகாநாட்டை ஒழுங்குபடுத்தினார். அதற்கு உட்துறை அமைச்சு எதிர்ப்பு தெரிவித்தபடியால் பெர்னாண்டஸ் அந்த மாநாட்டை தனது உத்தியோகபூர்வ இல்லத்தில் நடாத்தினார. அம்மாநாட்டில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் வெளிநாட்டுப் பிரதிநிதிகள் பங்குபற்றியதாகக் கூறப்படுகிறது. இந்த மாநாட்டின் அடிப்படை நோக்கம் “தமிழீழம் தொடர்பாக இந்தியப் பொதுமக்களுக்கு தெளிவூட்டுவதும்; அப்போராட்டத்தில் அவர்களைப் பங்காளிகள் ஆக்குவதும்தான. ஏனெனில் அந்தப் போராட்டம் நீதியானது” என்று பெர்னாண்டஸ் தனது தொடக்க உரையில் தெரிவித்தார்.

அக்காலகட்டத்தில் வெளிவந்த ஐலண்ட் பத்திரிகையின் ஆசிரியத் தலையங்கம் ஒன்று முன்னாள் ஸ்றீலங்க ராஜதந்திரி ஆகிய கல்யானந்த கொடகேயை மேற்கோள்காட்டி இருந்தது. “ எல் .ரி.ரி.க்கும் ஃபெர்னாண்டஸிற்கும் இடையிலான சரசம் இலங்கை அரசாங்கத்துக்கு அச்சுறுத்தலானது” என்று கொடகே தெரிவித்திருந்தார். பாதுகாப்பு அமைச்சர் ஃபெர்னாண்டஸ் தமிழ் மக்களுக்கு கதாநாயகனாக இருக்கலாம் ஆனால் கொழும்பிற்கும் பெரும்பான்மை சிங்கள மக்களுக்கும் அவர் ஒரு வில்லனாகவே இருக்கிறார் என்று ஸ்றீலங்கா அரசாங்கம் கூறியதாகத் தோன்றுகிறது” என்று rediff இணையத்தளம் எழுதியுள்ளது.

ஆனால் இங்குள்ள கேள்வி என்னவெனில் ஒரு தனி மனிதனாக அதுவும் வட இந்தியத் தலைவராக அவர் வழங்கிய ஆதரவை ஈழத்தமிழர்கள் எந்தளவிற்கு ஒரு கட்டமைப்பு சார் ஆதரவுத் தளமாக கட்டியெழுப்பினார்கள்? என்பதுதான். இக்கேள்வி எம்.ஜி.ஆரின் விடயத்திலும் பொருந்தும். தனிப்பட்ட நட்பும் நேசமும் புரிந்துணர்வும் தார்மீக ஆதரவும் வேறு. அதை நிறுவனமயப்படுத்தி ஒரு கட்டமைப்பு சார் செயற்பாடாக மாற்றுவது வேறு. இந்தியாவில் ஈழத்தமிழ் லொபி எனப்படுவது எவ்வாறு முன்னெடுக்கப்பட்டது? அதில் பெற்ற அடைவுகள் எவை? விட்ட பிழைகள் எவை? என்பது தொடர்பில் ஒரு தொகுக்கப்பட்ட ஆய்வு அவசியம்.

தமிழகத்திலும், புதுடில்லியிலும், ஏனைய இந்திய மாநிலத் தலைநகரங்களிலும் தமிழ் லொபி எவ்வாறு செயற்பட்டது? அது நிறுவனமயப்பட்ட ஒரு செயற்பாடாக இருந்ததா? அல்லது பெருமளவிற்கு தனிநபர்களில் தங்கியிருந்ததா? 2009ற்கு முன் அது எப்படிச் செயற்பட்டது? 2009ற்குப் பின்னிருந்து அது எப்படிச் செயற்பட்டு வருகின்றது? ஈழத்தில் நடந்தது இனப்படுகொலையே என்பதனை தமிழகத்திற்கு வெளியே எத்தனை இந்திய மாநிலங்கள் ஏற்றுக்கொண்டிருக்கின்றன? தமிழகத்திலும் இந்தியாவின் ஏனைய மாநிலங்களிலுமுள்ள எத்தனை மனித உரிமை அமைப்புக்கள், செயற்பாட்டாளர்கள் அதை இனப்படுகொலை என்று ஏற்றுக்கொள்கிறார்கள்? தமிழகத்திலும் ஏனைய மாநிலங்களிலும் அரசியல்வாதிகளுக்கு வெளியே சிவில் சமூகங்கள் செயற்பாட்டு இயக்கங்கள் என்று கருதத்தக்க அமைப்புக்கள் எத்தனை அதை ஓர் இனப்படுகொலை என்று ஏற்றுக்கொண்டுள்ளன?

ஜெயலலிதா நிறைவேற்றிய தீர்மானம் மகத்தானது. அது ஓர் அரசியல் தீர்மானம். அதற்குமப்பால் அது தமிழகத்தில் ஒரு பொதுசன அபிப்பிராயமாக திரட்டப்பட்டுள்ளதா? தமிழகத்திற்கு வெளியே ஏனைய மாநிலங்களில் அது ஒரு பொதுசன அபிப்பிராயமாக அல்லது சிவில் சமூகங்களின் அபிப்பிராயமாக அல்லது குறைந்தபட்சம் மனித உரிமைச் செயற்பாட்டாளரின் அபிப்பிராயமாக திரட்சியுற்றுள்ளதா? ஜோர்ஜ் ஃபெர்னான்டஸ், எம்.ஜி.ஆர், நெடுமாறன், வை.கோ, தொல் திருமாவளவன், சீமான் போன்ற நட்பு சக்திகளை ஈழத் தமிழ் நோக்கு நிலையிலிருந்து ஏன் ஒரு கட்டமைப்பாக நிறுவனமயப்படுத்த முடியவில்லை?

இவை போன்ற கேள்விகளுக்கெல்லாம் விடை காணவல்ல தொகுக்கப்பட்ட ஓர் ஆய்வுப் பார்வை தேவை. ஈழ-தமிழக உறவெனப்படுவது அதிகபட்சம் உணர்ச்சிகரமானது. ஆனால் அது எவ்வளவிற்கு எவ்வளவு அறிவுபூர்வமானதாக மாற்றப்படுகிறதோ அவ்வளவிற்கவ்வளவு பிராந்திய அரசியலில் ஈழத் தமிழர்கள் வெற்றிகரமாகச் சுழியோட முடியும். அதைப் போலவே புதுடில்லியும் உட்பட ஏனைய மாநிலங்களை எப்படிக் கையாள்வது? என்பது தொடர்பில் ஈழத் தமிழர்களிடம் ஒரு கட்டமைப்பு சார் அறிவுபூர்வமான அணுகுமுறை அவசியம். கற்பனைகளோடும் முற்கற்பிதங்களோடும் முடிந்த முடிபுகளோடும் பிராந்திய உறவுகளை மட்டுமல்ல அனைத்துலக உறவுகளையும் அணுக முடியாது. எனவே இதுவிடயத்தில் அறிவுபூர்வமாகச் சிந்திக்கின்ற பொருத்தமான ஆய்வொழுக்கங்களைக் கொண்ட சிந்தனைக் குழாம்களை ஈழத்தமிழர்கள் முதலில் உருவாக்க வேண்டும். அரசற்ற தரப்பாகிய ஈழத் தமிழர்கள் அரசுடைய தரப்புக்களோடும், சிவில் அமைப்புக்களோடும் உலகளாவிய நிறுவனங்களோடும் இடையூடாடுவதற்குரிய பொருத்தமான சமயோசிதமான தீர்க்கதரிசனமிக்க ஒரு பொறிமுறையைக் கண்டுபிடிக்காதவரை பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்திற்கு வெளியே சிந்திப்பது என்பது முழுக்க முழுக்கக் கற்பனையே.

நிலாந்தன்

ஈழத்தமிழரின் அரசியல் பிரக்ஞை காலத்துடனான கணக்கு !

PDF
ஈழத்தமிழரின்-அரசியல்-பிரக்ஞை-காலத்துடனான-கணக்கு-

TOPSHOTS
A general view of the abandoned conflict zone where Tamil Tigers separatists made their last stand before their defeat by the Sri Lankan army is seen in northeastern Sri Lanka on May 23, 2009. UN Secretary-General Ban Ki-moon came face-to-face May 23 with the despair of Sri Lanka’s war-hit civilians as he toured the nation’s biggest refugee complex, home to 200,000 displaced by fighting. Just days after Colombo declared victory over Tamil Tiger, he toured the sprawling Menik Farm camp, 250 kilometers (155 miles) north of Colombo, which was jammed with civilians who had fled the war zone. AFP PHOTO/JOE KLAMAR

 

புலிகளின் இறுதி மூன்றாண்டு உத்திகள் இன்னும் பிடிபடவில்லை !

இன்றைய சமகால உலக இராணுவங்களின் படைத்துறை உத்தி என்பது புலிகளிடம் இருந்து பெற்றுக் கொள்ளப்பட்டது.

இதை நந்திக்கடல் ‘பிரபாகரன் சட்டகம்’ (Prabaharan’s paradigm) என்றழைக்கிறது.

தமிழர் போராட்டம் / தாயகம் தொடர்பாக எத்தகைய அங்கீகாரங்கள் வரும் காலங்களில் கிடைக்கும் என்பதை அறுதியிட்டுக் கூற முடியாது, ஆனால் இப்போது மறைத்தாலும் வரலாற்றில் ‘பிரபாகரன் சட்டகம்’ அதற்கான உலகளாவிய அங்கீகாரத்தைப் பெறும்.

காரணம், சென்ற நூற்றாண்டு இறுதிவரை உலக இராணுவங்களின் உத்தியாக இருந்தது நியூட்டன் சட்டகம் (Newton’s paradigm).

புலிகள் அதை ஒரு தோல்வி உத்தியாக நடைமுறையில் நிறுவிக் காட்டினார்கள்.

இதில் ஆச்சர்யமான விடயம் என்னவென்றால் ‘பிரபாகரன் சட்டக’ உத்தியை பிரயோகித்துத்தான் புலிகள் வீழ்த்தப்பட்டார்கள். இது தலைவர் பிரபாகரன் சற்றும் எதிர்ப்பார்க்காத உச்சத் திருப்பம்.

ஆனால் தலைவர் சுதாரித்துக் கொண்டு தனக்கேயுரிய பாணியில் தானே உருவாக்கிய சட்டகத்திற்கு எதிர் சட்டகங்களை உருவாக்கினார்.

அதுதான் 2006 – 2009 வரை புலிகள் நடத்திய எதிர்ப்புச் சமரில் வெளிப்பட்டது.

இறுதியில் புலிகள் உருவாக்கிய எதிர் சட்டகத்தை எதிரிகளால் எதிர் கொள்ள முடியவில்லை. விளைவாக வழமை போல் பயங்கரவாத அரசுகளின் இன அழிப்பு உத்தியை பிரயோகித்து இறுதி வெற்றியை அடைந்தார்கள் எதிரிகள்.

படை வரலாற்றாய்வாளர்களுக்கு புலிகளின் அந்த இறுதி மூன்றாண்டு உத்திகள் இன்னும் பிடிபடவில்லை.

இந்த உத்தி என்ன? அதை புலிகள் எப்படி உருவாக்கினார்கள்?

இத்தகைய உத்திகளுடன் ஒரு வலுவான இயக்கம் தோன்றினால் அதை எதிர் கொள்வது எப்படி? என்பவை தெரியாமலே/ சொல்லப்படாமலேயே புலிகள் மறைந்து போனார்கள்.

வழி நடத்திய படைத் தளபதிகளும் இல்லை / முதன்மைப் போராளிகளும் இல்லை/ இருப்பவர்கள் பேசும் நிலையில் இல்லை/ எஞ்சியுள்ள சில தாக்குதல் போராளிகளின் வாக்கு மூலங்களிலிருந்து தலைவர் தண்ணீரின் பண்புகளை உத்தியாக வைத்து அந்த எதிர் சட்டகத்தை வகுத்துள்ளதை நம்மால் கணிக்க முடிகிறது.

அது நந்திக்கடலின் ‘தண்ணீர் கோட்பாடுகளாக’ வரலாற்றில் இடம் பிடித்துள்ளன.

வரலாற்றாய்வாளர்களுக்கு ஒன்றை அங்கீகரிக்காமல் அது குறித்த தேடலையோ/ ஆய்வுகளையோ தொடர முடியாது.

எனவே ‘பிரபாகரன் சட்டகத்தை’ அங்கீகரித்து விட்டே தலைவர் அதற்கு எதிராக உருவாக்கிய எதிர் சட்டகத்தை கண்டறியும் நிலை உள்ளது.

எனவே வேலுப்பிள்ளை பிரபாகரனை தற்காலிகமாக வரலாற்றின் ஓர வஞ்சனைக்குள் தள்ளி அவரை வரலாற்றிலிருந்து மறைக்க இந்த உலகம் எத்தனிக்கலாம்.

ஆனால் அது நிரந்தரம் கிடையாது. அவர் தனது கோட்பாடுகளின் வழியே ஒரு சுயம்பு போல் வெளிப்பட்டுக் கொண்டேயிருப்பார்.

Parani Krishnarajani

வரலாற்றில் மறக்கப்பட முடியாத கொக்குளாய் முகாம் தாக்குதல்!

தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் மறக்கப்பட முடியாத ஒரு நாளாக இன்றைய நாள் அமைகிறது. முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குளாய்ப் பிரதேசம் இன்றைய நாளின் பெருமையைத் தாங்கி நிற்கிறது. நம்மில் பலருக்கு “கொக்குளாய்” என்னும் இடம் தமிழீழத்தில் இருப்பது தெரியாமற்கூட இருக்கலாம். காரணம் 1984ம் ஆண்டிலிருந்து சுமார் 35 ஆண்டுகளாக அந்நிலத்திற்குச் சொந்தக்காரர்களான எமது தமிழ் உறவுகள் அங்கே தமது வாழ்க்கையைத் தொலைத்து விட்டிருந்தனர் .
சற்றுப் பின்னோக்கிப் பார்த்தோமானால் சில விடயங்கள் வெட்டவெளிச்சமாகப் புரிந்துவிடும் என்று நம்புகிறேன்.

முல்லைத்தீவிலிருந்து திருகோணமலை செல்லும் பாதையில் சிலாவத்தை, அளம்பில், செம்மலை, நாயாறு, கொக்குத்தொடுவாய், கருநாட்டுக்கேணி, கொக்குளாய், புல்மோட்டை ஊடாக திருகோணமலை என்ற வகையில் தமிழரின் பாரம்பரிய வளங்கள் நிறைந்த நிலப்பரப்புகளை நோக்கலாம். இப் பிரதேசங்களின் ஒரு பக்கம் இந்து சமுத்திரத்தின் ஒரு பகுதியாகவும் மற்றய பக்கம் மணலாற்றின் பெரிய காடுகளைக் கொண்டதாகவும் நடுவிலே மக்கள் வாழ்விடங்களான மேலே குறிப்பிட்ட பிரதேசங்கள் அமைந்திரப்பதாகவும் இருக்கிறது.

இது தவிர நாயாறு மற்றும் கொக்குளாய் நீரேரிகள் அப் பிரதேசங்களின் அழகான அம்சங்களாகவும் விளங்குகின்றன. கடல்வளம், நெற்பயிர்ச் செய்கைக்கான நிலவளம், தென்னை பனை வளங்கள் போன்றவற்றை உள்ளடக்கிய நிலப்பரப்புகள் முல்லை மாணாலாறு மாவட்டமென தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் பெயர் பெற்றிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது. இவ்வேளையில் கொக்குளாய் பற்றி பார்க்குமிடத்து, அது ஒரு கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடமாகவே காணப்படுகிறது. காரணம் வடக்கையும் கிழக்கையும் நேரடியாக இணைக்கும் ஒரு இணைப்பு நிலமாக கொக்குளாய் இருப்பதுதான்.

1984ம் ஆண்டுக் காலப்பகுதியில் கொக்குளாய்ப் பாடசாலையில் இலங்கை இராணுவம் பாரிய படைமுகாம் ஒன்றை அமைத்தது மட்டுமல்லாது, கொக்குளாய் தொடக்கம் அளம்பில் வரையிலும் ஒரு படைநடவடிக்கையை மேற்கொண்டு பலவந்தமாக மக்களை அவர்களது வாழ்விடங்களிலிருந்து வெளியேற்றியது. இதன் மூலம் புலிகளின் தாக்குதல் வீச்சைக் கட்டுப்படுத்தலாம் எனவும் பகற்கனவு கண்டுகொண்டிருந்தது இலங்கை அரசு. இது இவ்வாறிருக்க இடம்பெயர்ந்த மக்கள் அளம்பில் ஐந்தாம் கட்டை, சிலாவத்தை, முள்ளியவளை, புதுக்குடியிருப்பு மற்றும் யாழ்பாணம் வரைக்கும் அகதிகளாகச் சென்று தங்குவதற்கு இடமின்றி அல்லல்ப்பட்டனர். இருந்தபோதும் முல்லை மணலாறு மாவாட்ட மக்கள் திடமான தேசப்பற்றையும் விடுதலை உணர்வையும் விட்டுவிடவில்லை. மாறாக விடுதலைப் புலிப் போராளிகளுக்கு பக்க பலமாக தோளோடு தோள் நின்ற அவர்களது அசாத்தியத் துணிச்சல் என்றென்றும் போற்றத்தக்கது.

கொக்குளாயிலும் அதனை அண்டிய பிரதேசங்களிலும் சிங்களக் குடியேற்றங்களை மேற்கொண்டு வடக்குக்கிழக்கைத் துண்டாடுவதே கொக்குளாய் முகாம் அமைக்கப்பட்டதன் பிரதான நோக்கமாக இருந்தது. மேலும் விடுதலைப் புலிகளின் கடல்வழி மற்றும் காட்டுவழி நகர்வுகளைக் கட்டுப்படுத்துவதும், ஏற்கனவே முல்லைத்தீவின் நகர்ப்பகுதியில் முகாம்மிட்டிருந்த இராணுவத்தினருக்கு பலம் சேர்ப்பதும்கூட காரணங்களாயிருந்தன.

இவ்வேளையில் இறுமாப்போடு முகாமிட்டிருந்த இராணுவத்தினருக்கு தக்கப்பாடத்தைப் புகட்ட வேண்டி தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் ஒரு திட்டம் வகுக்கப்பட்டது. இந்தியாவில் பயிற்சிகளை நிறைவு செய்து தாயகம் திரும்பியிருந்த போராளிகளின் அணியொன்றைத் தயார்ப்படுத்தி கொக்குளாய் முகாம் தக்ர்ப்பிற்காக சிறப்புப் பயிற்சிகளை வழங்கி நெறிப்படுத்தினார் தலைவர் அவர்கள். அதுநாள் வரையிலும் கெரில்லாப் போர்முறையினைக் கைக்கொண்டிருந்த விடுதலைப் புலிகள் முதன்முதலாக மரபுவழியிலே கொக்குளாய் முகாமைத் தாக்கியழிக்க முடிவெடுத்த்தார்கள். சரியான முறையில் வேவு பார்க்கப்பட்டு காட்டுவழியாக தாக்குதலுக்கான அணி நகர்த்தப்பட்டது. இன்று மாவீரர்களாகிவிட்ட தளபதிகள், போராளிகள் பலர் அன்றைய அத் தாக்குதலில் களமிறங்கினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. லெப். கேணல் புலேந்திரன், பிரிகேடியர் சொர்ணம், கப்டன் ஆனந்தன், கப்டன் லோரன்ஸ், லெப். சபா, லெப். ஜீவன் போன்றோர் இவர்களில் சிலராவர்.

கொக்குளாய் முகாம் தாக்குதலுக்கான வழிகாட்டிகளாகவும், உணவு ஒழுங்கமைப்பாளர்களாகவும், முதலுதவிகளை மேற்கொள்பவர்களாகவும் மக்களே செயற்பட்டனர். 13.02.1985 அன்று கொக்குளாய் இராணுவத்தினர் எதிர்பாராத ஒரு நிகழ்வாக புலிகளின் தாக்குதல் அமைந்தது. துணிச்சல் மிகுந்த போரளிகள் முகாமிற்குள் நகர்ந்து சண்டையிட்டனர். அங்கே நிலைகொண்டிருந்த 200 வரையிலான படையினரில் பலர் கொல்லப்பட்டதுடன் அதிகளவானோர் காயமடைந்தனர்.

விடுதலைப் புலிகள் தரப்பில் 16 புலி வீரர்கள் வீரச்சாவைத் தழுவிக்கொண்டனர்.கொக்குளாய்க் கடல் வழியாக இராணுவத்தினருக்கான உதவிகள் வரத் தொடங்கவே, காயமடைந்த போராளிகளை தோளிலும் கையிலுமாய்த் தாங்கியபடி விடுதலைப் புலிகளின் அணி பின்வாங்கியது. இத் தாக்குதலானது போராளிகளுக்கு மிகப்பெரியதோர் அனுபவப்பாடத்தைக் கற்றுக் கொடுத்தது என்றால் மிகையாகாது. அதேவேளை இராணுவம் திகிலடைந்து நிலைகுலைய காரணமாகவும் இத்தாக்குதல் அமைந்தது. பிந்நாளில் நடந்த பல வெற்றிகரமான தாக்குதல்களுக்கு கொக்குளாய் முகாம் தாக்குதலே முன்னுதாரணமாய்த் திகழ்ந்தது என்பது மறுக்கமுடியாத உண்மை.

அன்று தம்மை ஆகுதியாக்கிய மாவீரர்களை இன்று நினைவு கூருகின்றோம்.

லெப்டினன்ட் சைமன்

லெப்டினன்ட் பழசு

வீரவேங்கை கெனடி

வீரவேங்கை காந்தரூபன்

வீரவேங்கை ஜெகன் (இடிஅமீன்)

வீரவேங்கை காந்தி

வீரவேங்கை ரவி

வீரவேங்கை வேதா

வீரவேங்கை ரஞ்சன் மாமா

வீரவேங்கை காத்தான்

வீரவேங்கை மயூரன்

வீரவேங்கை சொனி

வீரவேங்கை தனபாலன்

வீரவேங்கை சங்கரி

வீரவேங்கை மகான்

வீரவேங்கை நிமால்

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்

13.02.2019
கலைமகள்

ஈ.பி.ஆர்.எல்.எவ் இன் துரோகத்தின் நீட்சியாகவே வரலாற்று குறிப்பேடு வெளியீடு!

தமிழ் மக்களின் விடுதலைக்காக ஆயுதம் ஏந்திய சில அமைப்புக்களே பின்னாட்களில் பாதை மாறி கொள்கை பிறழ்ந்து தமிழ்மக்களின் விடுதலைக்கு விரோதமாக செயற்பட்டார்கள். இதில் ஈ.பி.ஆர்.எல்.எவ். அமைப்புக்கு வலுவான பங்கிருப்பதற்கு சுரேஸ்பிரேமச்சந்திரன் முக்கிய காரணகர்த்தாவாகத் திகழ்ந்துள்ளமை வரலாறு கூறி நிற்கும் உண்மையாகும்.

தமிழர்கள் தமிழ்த் தேசிய சக்திகளாக அரசியல் ரீதியில் ஐக்கியப்பட்டு பலம்பெற வேண்டிய இவ்வேளையில் மீண்டும் இரத்தக்கறை படிந்த துரோக வரலாற்றை மீட்டுப்பார்க்கும் துர்ப்பாக்கிய நிலையை அதே ஈ.பி.ஆர்.எல்.எவ். தான் ஏற்படுத்தியுள்ளது. கடந்த 03.02.2019 அன்று யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற அவர்களின் கட்சி பிராந்திய மாநாட்டில் வெளியிடப்பட்ட வரலாற்று குறிப்பேடு எனும் ஆவணத் தொகுப்பானது ஈ.பி.ஆர்.எல்.எவ்.இன் தமிழினத் துரோகத்தின் நீட்சியாகவே அமைந்துள்ளது.

தமிழர்களின் சுதந்திர வாழ்வினை இலட்சியமாக வரித்துக்கொண்டு தம்மையே ஈகம் செய்து களத்திலே போராடிய தமிழீழ விடுதலைப் புலிகள் அதே இலட்சியத்தின் வழி நின்று மேற்கொண்ட தமிழ்த் தேசிய விரோதத்திற்கெதிரான நகர்வுகள் அனைத்தும் தமிழ்த்தேசிய நலன்சார்ந்ததாகவே அமைந்திருந்தது. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கான மக்கள் ஆதரவானது இறுதிவரை வலுவான நிலையில் தொடர்ந்தமை அதனையே கட்டியம் கூறி நிற்பதோடு மட்டும் அல்லாமல் தமிழீழ விடுதலையை நோக்கிய போராட்டம் மக்கள் போராட்டமாக உலகளாவிய ரீதியில் எழுச்சி பெற்றதை யாவரும் அறிந்ததே.

ஆயுதப்போராட்டத்தில் உச்சம் பெற்று இராணுவச்சமநிலையில் மேலோங்கியிருந்த போதிலும் அனைத்துலக போக்கிற்கு ஏற்றவாறு மக்களின் ஜனநாயக பங்கேற்பின் அடித்தளத்தில் ஏற்படுத்தப்பட்ட அரசியல் கட்டமைப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தமிழீழத் தேசியத் தலைமை ஏற்படுத்தியிருந்தது. அதில் புளொட்இ ஈ.பி.டி.பி போன்ற கட்சிகளை தவிர்த்து ஈ.பி.ஆர்.எல்.எவ். மற்றும் ரெலோ போன்றவற்றையும் இணைத்தே உருவாக்கப்பட்டிருந்தது.

கொள்கைபிறழ்ந்து பின்னின்று இயக்கிய சக்திகளின் நலன்களுக்காக சொந்த இனத்துக்கே எதிராக செயற்பட்ட துரோக வரலாற்றில் ஈ.பி.ஆர்.எல்.எவ் இற்கும் அதி முக்கிய இடமுண்டு. அவ்வாறு இருந்தும் அவர்களை மன்னித்து அரசியல் நீரோட்டத்தில் இணைத்து மக்கள் பிரதிநிதிகளாக்கியிருந்தமை தமிழீழத் தேசியத் தலைமையின் தமிழினத்தின் விடுதலையை நோக்கிய அதியுச்ச கரிசனையின் வெளிப்பாடாகும்.

இந்நிலையில் எவரையோ திருப்திப்படுத்தவும் அவர்களது அபிலாசைகளை நிறைவேற்றிக் கொள்ளும் வகையிலும் வரலாற்று குறிப்பேடு என்ற ஆவணத்தொகுப்பை வெளியிட்டுள்ள ஈ.பி.ஆர்.எல்.எவ். இன் செயலை அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை வன்மையாக கண்டிக்கின்றது. அத்துடன் இச்சதியில் வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்களை ஒரு கருவியாக கபடத்தனமான முறையில் பயன்படுத்தியுள்ளமைஇ முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள் ஆவணத்தொகுப்பு தொடர்பாக வெளியிட்டுள்ள ஊடக மறுப்பறிக்கை இவர்களை அம்பலப்படுத்தியுள்ளது.

தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்டிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தமிழின விரோத நிலைப்பாட்டின் பின்னணியில் ஒரு வலுவான ஐக்கிய முன்னணியை உருவாக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருந்தது. அந்த அடிப்படையில் தமிழ்த்தேசிய தளத்தில் கொள்கை பற்றுறுதியுடன் பயணிக்கும் சக்திகளை ஒருங்கிணைத்து வலுவான ஐக்கிய முன்னணி ஒன்றை உருவாக்க தாயக, புலம்பெயர் தளங்களில் தீவிர முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் ஈ.பி.ஆர்.எல்.எவ். இன் இந்த செயற்பாடானது அதற்கு எதிரானதாகவே அமைந்துள்ளது.

ஆகவே இவ்வாறான ஐக்கிய முன்னணியை உருவாக்கும் வகையில் தமிழ் மக்கள் கூட்டணி என்ற கட்சியை ஆரம்பித்து செயற்பட்டுவரும் முன்னாள் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள் இவ்விடயத்தில் தீர்க்கமானதொரு முடிவினை எடுக்க வேண்டிய காலசூழலிற்குள் தள்ளப்பட்டுள்ளார் . தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை வென்றெடுக்கும் உன்னத பயணத்தில் தமிழினத்தின் நலனை மட்டுமே முன்னுறுத்திய அடிப்படையில் கொள்கை சார்ந்தவர்கள் மட்டுமே இருக்க முடியும் என்பதனை பொறுப்புனர்வுடன் சுட்எக்காட்ட கடமைப்பட்டுள்ளோம்.

‘தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்’
அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை


அண்ணாந்து பார்த்து சுரேஸ் தன் முகத்தில் துப்புகிறார் !

ஈ.பி.ஆா்.எல்.எவ் கட்சியின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களுக்கான மாநாட்டின்போது வரலாறு சம்மந்தமான ஆவணம் ஒன்று வெளியிடப்பட்டிருக்கின்றது. அது குறிப்பாக சகோதர படுகொலைகள் குறித்து பேசும் ஆவணமாக காணப்படுகின்றது.

ஆனால் அந்த விடயத்தினை மீள..மீள.. நினைவுபடுத்துவது தமிழ் மக்கள் மனங்களில் மாறாத வடுவை விதைக்கும் ஒரு செயலாகும் என ரெலோ அமைப்பினைச் சேர்ந்த சிவாஜிலிங்கம் குறிப்பிட்டிருக்கிறார்.

இது தொடர்பில் மேலும் குறிப்பிட்ட அவர்,

தமிழ்தேசிய கூட்டமைப்பு உருவாக்கப்பட்டபோது தமிழீழ விடுதலை புலிகளின் தலைவா் மேதகு வே.பிரபாகரனுடன் பேசும் சந்தா்ப்பத்தில் முன்னாள் ஆயுதப் போராட்ட இயங்களுடன் தமிழீழ விடுதலை புலிகள் ஒற்றுமைப்படுவதென்பது மறப்போம், மன்னிப்போம் என்பதன் அடிப்படையில் அமையவேண்டும். என கேட்டிருந்தோம். அதனை புலிகள் ஒப்புக் கொண்டாா், அதை பின்பற்றினாா்கள்,

அவ்வாறான நிலையில் மீளவும்.. மீளவும்.. அதை குறித்து பேசிக் கொண்டிருப்பது பயனற்ற ஒன்றாகும். இது சுரேஸ் பிரேமச்ந்திரன் அண்ணார்ந்து பார்த்து தனது முகத்திற்கு நேரே தானே துப்புவது போன்றது என்றாா்.

*
ஈ.பி.ஆர்.எல்.எப் தொடர்ந்து ,ரெலோ, புளொட் அமைப்பினர் மேற்கொண்ட படுகொலைகள்.!

நான் என் வாழ்நாளில் அதாவது ஈழப்போராட்ட வரலாற்றில் பார்த்த முதல் கொலை எனக்கு இப்போதும் நன்றாக நினைவிருக்கிறது. எண்பதுகளின் நடுப்பகுதி அது.

நான் எனது ஊரான வல்வெட்டித்துறையிலிருந்து உடுப்பிட்டிக்கு ரியூசனுக்காக மலர் அக்காவீட்டிற்கு சென்றிருந்தபோது அவரின் வீட்டின் முன்னால் ஒரு வாகனம் ஒன்று வந்து கிறீச்சிட்டு நின்றது. அந்த வாகனத்திலிருந்து குதித்த பல பெடியங்கள் ஆயுதங்களுடன் மலர்அக்கா வீட்டிற்கு பக்கத்து வீட்டிற்குள் ஓடினார்கள்.

அப்போது ஒரு வயதான அம்மாவும் மூன்று அக்காக்களும் “அண்ணா ஓடு ஓடு” என்று கத்தியபடி அந்த பெடியங்களை தடுக்க முனைந்தார்கள். ஆனால் பெடியங்கள் அவர்களை துப்பாக்கியால் தாக்கி தூக்கி எறிந்துவிட்டு வீட்டுக்குள் ஓடினார்கள். சிறிது நேரத்தில் இரத்த வெள்ளத்தில் ஒரு அண்ணாவை வாகனத்தில் தூக்கி எறிந்தபடி அங்கிருந்து மிக வேகமாக மறைந்து போனார்கள்.

அப்போது ஒருவர் இன்னொருவருக்கு சொல்லிக்கொண்டிருந்தார்.. “பொபியின்ர பெடியள் வந்து தாஸின்ர பெடியளை சுட்டு இழுத்துகொண்டு போகிறாங்கள்” என்று.

நான் என் வாழ்நாளில் அதாவது ஈழப்போராட்ட வரலாற்றில் பார்த்த முதல் கொலை அது.

சிங்களவன் தமிழனை கொன்றதை நான் அப்போது பார்க்கவில்லை. ஒரு இயக்கத்தை சேர்ந்தவரை வேறு ஒரு இயக்கத்தை சேர்ந்தவர் அழித்ததையும் பார்க்கவில்லை. ஒரே இயக்கத்திற்குள் இருந்தவரை அதே இயக்கம் சுட்டுகொன்றதை பார்த்ததே எனது ஈழப்போராட்ட அரசியலின் முதல் மனப்பதிவு.

ரெலோ இயக்கத்தின் ஒரு பிரிவைச் சேர்ந்தவர்களால் அதன் வேறு பிரிவை சேர்ந்தவர்கள் சுடப்பட்ட வரலாறு இது.

பிற்பாடு அந்த இரு பிரிவினரும் யாழ் வைத்தியசாலைகளில் ஒன்றின் முன் மக்களையும் நோயாளிகளையும் பொருட்படுத்தாது மிக மூர்க்கமாக பொருதி ரெலோவின் பொபி பிரிவினரால் தாஸ் உட்பட பலர் சுட்டு படுகொலை செய்யப்பட்டனர்.

ரெலோ இயக்கத்தை புலிகள் அடக்குவதற்கு முன்னான ஒரு நிகழ்வு இது.

இப்படி நிறைய நிகழ்வுகளை ஒவ்வொரு இயக்கம் தொடர்பாகவும் வரலாற்றிலிருந்து பட்டியலிட முடியும்.

இந்த சம்பவத்திற்கு சில மாதங்களுக்கு முன்பு சுழிபுரத்திற்கு மாமி வீட்டிற்கு சென்றிருந்தபோது ‘ஆறு விடுதலைப்புலிகளை காணவில்லை’ என்ற அறிவித்தலும் பிற்பாடு அவர்கள் புளொட் இயக்கத்தினரால் கடத்தப்பட்டு சித்தரவதை செய்யப்பட்டு இரகசியமாக படுகொலை செய்யப்பட்டார்கள் என்ற கண்ணீர் அஞ்சலி அறிவித்தல்களையும் காணநேரிட்டது.

நிலைமை இப்படியிருக்க எல்லா மாற்று இயக்க அண்ணையும் சேர்ந்து புலிகள்தான் சகோதரப் படுகொலையை ஆரம்பித்தவை என்று சொல்லித் திரியினம்.

அதை ஏந்தி வாந்தியாக எடுக்க காலாகாலத்திற்கு ஒரு கூட்டமும் உருவாகியிருக்கிறது.

-பரணி கிருஷ்ணரஜினி

தனது பிள்ளையை தேடி அலைந்த மூன்று மாவீரர்களின் தாயார் மரணம் !

போராடும் மற்றொரு தாயும் மறைந்தார் ?

காணாமலாக்கப்பட்ட தனது பிள்ளையை தேடி அலைந்த மற்றுமொரு தாயார் மாரடைப்பால் மரணமடைந்துள்ளார். மாங்குளம் செல்வராணி குடியிருப்பைச்சேர்ந்த வேலு சரஸ்வதி என்பவரே மாரடைப்பால் மரணமாகியுள்ளார்.

வீரவேங்கை நகைமுகன்,லெப்.கேணல் கணபதி,வீரவேங்கை கதிர்காமர் ஆகிய மூன்று மாவீரர்களின் தாயாரும்; காணமலாக்கப்பட்ட தனது மகளைத்தேடியலைந்த அன்னைகளுள் ஒருவருமான வேலு சரஸ்வதியே மரணமடைந்துள்ளார்.

மனதாலும் உடலாளும் சோர்வடைந்த நிலையில் மாரடைப்பால் மரணமாகியுள்ளார் ஏற்கனவே பல தாய்மார்கள் காணாமலாக்கப்பட்ட பிள்ளைகளை தேடியலைந்து உயிரிழிந்திருக்கிறார்கள. இந்நிலையில் இன்று சரஸ்வதி தனது மகளை காணாமலே வலிகளோடு இவ்வுலகை விட்டு பிரிந்திருக்கிறார்.

காணாமல் ஆக்கப்பட்ட அவரது மகளும் ஒரு போராளியாவார்.புனர்வாழ்வளிக்கப்பட்டு தடுப்பு முகாமிலிருந்து விடுவிக்கப்பட்ட பின்னர் அவரது மகள் காணாமல் ஆக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அண்ணா பாவம், அண்ணாவை எல்லோரும் ஏமாற்றி போட்டியல்!

– பம்பைமடு தடுப்பு முகாமில் …..!

வாழ்க்கையில் நாம்பட்ட துயர்கள் எப்போதும் நம் மனதில் இருந்து இலகுவில் அழிந்துவிடுவதில்லை, இறுதி யுத்தத்தில் ஓராயிரம் வலிகள் சுமந்தோம்.அந்த வலிசுமந்த நினைவுகளின் ஓர் சம்பவத்தை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன்….

நான் இறுதியுத்த காலப்பகுதியில் இராணுவத்தினரிடம் சரணடைந்து வவுனியாவில் உள்ள பூந்தோட்டம் தடுப்பு முகாமில் சிறிது நாட்களும் அதன்பின் இடமாற்றம் செய்யப்பட்டு பம்பைமடு தடுப்பு முகாமிலும் தங்கியிருந்தேன்,

நான்கு பகுதிகளாக A,B,C,D என பிரிக்கப்பட்ட கட்டடங்களைசூழ முட்கம்பி வேலிகளிற்குள் பெண்போராளிகள் தங்கவைக்கப்பட்டோம்.நான் B பகுதி கட்டடத்தில் 9 மாதமளவில் தங்கவைக்கப்பட்டு பின்பு A கட்டட பகுதிக்கு இடம் மாற்றப்பட்டேன்,

முதல் இருந்த B பகுதி ஒரு மண்டபமாகவே இருந்தது,ஆனால் A பகுதி மேல்மாடிக்கட்டிடம்,கீழ் பகுதி மேல் பகுதி என்று போராளிகள் அணி அணியாக பிரிக்கப்பட்டு ஒரு அறையில் 15 பேர் இருந்தோம்,மிகுதிப்பேர் கட்டட வளைவுகளிற்குள்ளும் இருந்தார்கள்,

தண்ணீர் வசதி பெரும்பாடாகவே இருந்தது,அதேபோல் உணவும் மூன்று நேரமும் சோறு,அத்தோடு பலநூறு பேரிற்கு நாமே பெரிய பாத்திரங்களில் சமைப்பதால் அனேகமான நாட்களில் சுவையும் இருந்ததில்லை,

காலையில் ஆறு (6) மணிக்கு பெண் இராணுவத்தினரின் விசில் சத்தத்தோடு எழும்புவோம்,வெளியில் சென்று அனைவரும் அணி அணியாக லைனில் நிற்க வேண்டும்,கம்பி வேலிக்குள் இருந்தாலும் தப்பி ஓடிவிடுவோம் என்று எம்மை எண்ணிக்கை செய்வார்கள்,அதேபோல் இரவிலும் கணக்கெடுப்பு நடைபெறும்,

நான் A பகுதிக்கு இடம் மாற்றப்பட்ட மறுநாள் லைனில் நிற்கும்போது அங்கு ஒரு பெண் சிறிய தடியோடு எமக்கு முன் இராணுவத்தினர் நிற்கும் இடத்தில் நின்றார்.இப்படியே தொடர்ந்து இரண்டு மூன்று நாட்களும் அப்பெண் அவ்விடத்திலே நின்றார்.

எனக்கு சந்தேகம் அந்தபெண் இராணுவமா இருக்குமோ என்று, பார்க்க அப்படியும் தெரியேல நாங்கள் போடுற கவுண்தான் போட்டிருந்தாள்,

இராணுவம் விசில் அடிக்கும்வரை பனிகாலத்தில உறக்கம்தான்,அடை மழை என்றாலும் லைன்தான்,லைனிற்கு போகும்போது சிலவேளை முகமும் கழுவமாட்டோம்,இராணுவ பெண்கள் றூம்றூமாக வரும்போதுதான் லைனிற்கு போவோம்.ஆனால் அந்த பெண் மட்டும் தோய்ந்து நெற்றிக்கு குங்குமபொட்டிட்டு அழகாக வந்து நின்றாள்,பார்க்க இடைக்கால நடிகை ரேவதியின் சாயல்வேற,

கொஞ்ச நேரத்தில அந்த பெண் இராணுவத்திற்கு பக்கத்த நின்றுகொண்டு தொடங்கினாள்,

அண்ணா உங்களை இப்படியா வளர்த்தவர்…?அண்ணா பாவம்,அண்ணாவோட இருக்கேக்க லைனென்றா இப்படி பிந்திவருவீங்களோ…?,அண்ணாக்கு முதல்ல மரியாதை குடுங்கோ என்று சராமரியாக வார்த்தைகளை அள்ளிவீசினாள்,எல்லோருக்கும் அதிர்ச்சி அடடா இப்படி துணிசலா கதைக்கிறாளே என்று,

தமிழ் கதைக்கிறாள்.அட அப்ப நம்ம தமிழ் பொண்ணுதான்.தலைவர் அண்ணாவைப் பற்றிதான் சொல்றாள்,அதுசரி இப்படி இராணுவதிற்கு முன்னால நின்றுசொல்ல கொண்ட துலைக்கபோறாளே,இப்படி அந்தாள கதைக்க தலையை சீவி எறியபோறாளே.ஏன் இப்படிக்கதைக்கிறாள்,நல்ல வேளை அவளேக்கு தமிழ்த் தெரியாதது,

எனக்கு மனம் கேட்கேல ஆமிக்காறிகள் லைன் எண்ணிமுடிய போனன் கதைப்பமென்று,கிட்டபோய் அக்கா என்றன்,ஒரு நமட்டு சிரிப்போட போட்டாள்,சரி போகட்டும் எங்க போகப்போறா..?அரசாங்கம் விடும்வரை இங்கதானே கம்பி எண்ணவேணும்,சரி பிறகு பார்த்துக்கொள்ளுவம் என்று விட்டிட்டன்,

மறுநாளும் அதிகாலை 5 மணிக்கு எழும்பி தலைக்கு தண்ணிவார்த்து குங்குமப்பொட்டும் வைத்து தனது நீண்ட தலைமுடியை உலரவிட்டு வந்து நின்றாள்,ஆமிக்காற பெண்கள் இவளை மட்டும் எண்ணிக்கை செய்யமாட்டார்கள்,

அன்றும் லைன் எண்ணிமுடிய போய் கதைகேட்டன்.பதில் இல்லை,அவள் பின் சென்று இருக்கும் இடத்தை பார்த்தேன்,நான் இருக்கும்
றூமிற்கு கொஞ்சம் தள்ளி தனிமையில் ஒரு மூலையில் இருந்தாள்,

அருகில் இருந்த தோழிகளிடம் கேட்டேன் ஏன் தனிமையில் இருக்கிறா என்று,அவர்கள் சொன்னகதை என்னை மிகவும் பாதித்தது,

ஆம் அவள் இராணுவத்தில் சரணடைந்ததை எண்ணி மனநிலை பாதிக்கப்பட்ட பெண்போராளி,அவள் பெயர் சுடர் என்றும்,படையணியின் சிறந்த களமருத்துவ போராளி என்றும் தலைவர் அண்ணா பாவம்,அண்ணாவை எல்லோரும் ஏமாற்றிபோட்டியல் என்ற வார்த்தைகள் மட்டுமே அவள் வாயில் இருந்து வரும் என்றும் கூறினார்கள்.

எனக்கும் தெரியும்.அவள் அண்ணா பாவம் அண்ணா பாவம் என்று அனேகமாக எனக்கு முன்னும் சொல்லியிருக்கிறாள்.

இராணுவத்தினரிடம் போராளிகள் சரணடையும்போது பெண் போராளிகள் பயத்தில் பொது மக்களிடம் குங்குமம்கூட வாங்கிவைத்து கொண்டுவந்தார்கள்,திருமணம் செய்தால் இராணுவம் எதுவும் செய்யமாட்டான் என்ற நப்பாசை,அப்படித்தான் சுடர் அக்காவும் குங்கும பொட்டு வைத்துக்கொண்டு வந்திருக்கிறா.

மனநிலை பாதிக்கப்பட தன்னிலை மறந்து அப்படியே தொடர்ச்சியாக பொட்டு வைக்கிறாள்,என்ன செய்ய முடியும் எம்மால்.,?அவளை மருத்துவமனை கூட்டிச்செல்ல எம்மிடம் என்ன இருக்கு.நோய்கூடி தடுப்பு முகாமிற்குள் இறந்த போராளிகளையும் நாம் கண்டதுண்டு,சுடர் அக்காவிற்கு ஆறுதலாக இருப்பதை தவிர வேறுவழி எம்மிடம் இல்லாமல் போனது.

போராளிகளை குடும்பத்தவர்கள் பார்க்க பாஸ் நடைமுறை இருந்தது.ஆரம்பகாலங்களில் வெளி மாவட்டக்காறர் மூன்று மாதத்துக்கு ஒரு தடவையே தடுப்பில் இருக்கும் பிள்ளைகளை பார்க்க முடியும்.பல போராளிகளின் பெற்றோர் முகாம்களில் இருந்தனர்,

பல பெற்றோரிற்கு பிள்ளைகள் உயிரோடு இருக்கிறார்களா இல்லையா என்று தெரியாமல் இருந்தது,அதோபோல்தான் போராளிகளிற்கும் இருந்தது.தம் குடும்பத்தவர்கள் இருப்பார்களா..?இல்லையா என்ற நிலை,கடிதங்கள் ஒவ்வொரு முகாம்களுக்கும் போட்டே உறவுகளை கண்டுபிடித்துகொண்டார்கள்.

சுடர் அக்காவின் பெற்றோரிற்கு சுடர் அக்கா உயிரோடு இருப்பது தெரியாமல் போனது,அவள் தன்னை மறந்து மனநிலை பாதித்திருந்தபடியால் தன் பெற்றோரிற்கு தான் இருப்பதை தெரியபடுத்த முடியவில்லை,

நானும் பலநாள் அவளிடம் போய் அம்மா அப்பா பெயர் விலாசம் சொல்லுங்கோ,கடிதம் போடுவம் என்று கேட்பேன்,எதுவும் கூறமாட்டாள்,அவளிடம் இருந்து மௌனமே பதிலாக வரும்,

அவள் இரண்டு உடையோடு 12-13 மாதங்களிற்குமேல் பெற்றோரை பார்க்காது இருந்தாள்,தண்ணீர் பிரச்சனை,மணித்தியாலக்கணக்கில் வெய்யிலுக்குள் காத்திருந்தே தண்ணீர் எடுப்போம்,

அப்படி எடுத்துவைக்கும் தண்ணீரில் விரும்பிய வாளி தண்ணீரில் நம்ம சுடர் அக்கா அதிகாலையில் தோய்வார்,

கோபிக்க மாட்டார்கள் எம் தோழிகள்.ஏனெனில் நாங்கள் ஒருகொடியில் பூத்த மலர்கள்,ஓர் இலட்சியதாகத்திற்காக இணைந்தவர்கள்.எல்லோரும் அன்போடு கதைப்பார்கள்,

ஆனால் சுடர்அக்கா யாரோடும் கதைக்கமாட்டாள்,நான் அடிக்கடி கதை கேட்பதால் ஓர் நாள் என் றூமிற்கு வந்த சுடர் அக்கா என்னிடம் பசிக்குது என்றார்,எனக்கு மகிழ்ச்சி ஒருபுறம்.அத்தோடு கவலைவேறு,உடனடியாக விஸ்கட் எடுத்துகொடுத்தேன்,வாங்கியவள் சென்றுவிட்டாள்,

அதன்பின் மறுநாள் நான் விஸ்கற் கொடுத்தபோது வாங்கவில்லை,தனக்கு ஒரு சிந்தனை வந்தால் மட்டும் வருவாள்.ஏதாவது கொடுப்பேன்,

நான் றூமில் இல்லாத நேரங்களில் றூமில் யாராவது கொடுத்தால் வாங்கமாட்டாள்,சென்றுவிடுவாள்.நான் வந்ததும் சொல்வார்கள் சுடர் வந்தது போய் என்னென்று கேட்டிட்டு வா என்று,ஓடிச்செல்வேன் ஆர்வத்தோடு.ஏன் வந்தீர்கள் என்று கேட்பேன்,எதுவும்கூற மாட்டாள்.என்ன செய்வது போஸ்பண்ணவும் முடியாது வந்துவிடுவேன்.

எமது A பகுதியில்தான் பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட முற்கம்பி கூட்டிற்குள் கம்பிக்கு வெளியே பிள்ளைகளை சந்திக்கவரும் பெற்றோரும் முற்கம்பிக்கு உள்பகுதியில்தான் போராளிகளும் நின்று 10 நிமிடம் கதைப்பார்கள்,

பல நாட்கள் பெற்றோர் சந்திப்பிடத்தை பார்த்தபடி சுடர் அக்கா ஏக்கத்தோடு நின்றிருக்கிறா,அதேபோல ஒரு நாள் நண்பகல் 12-01 மணியளவில் சுடர் அக்கா பெற்றோர் சந்திப்பிடத்தை பார்த்தபடி உச்சி வெய்யிலுக்குள் பலமணிநேரம் நிற்பதைப் பார்த்தேன்,சிலவேளைகளில் சிறிதுநேரம் நின்றிட்டு வந்திடுவா,அன்று வரவில்லை,

மற்ற போராளிகளும் வந்து சொன்னார்கள் சுடர் நிறையநேரம் வெய்யிலுக்க நிற்குது போய் கூட்டிவா என்று,போய் கூப்பிட்டேன் சுடர் அக்கா என்று,

அப்போதுதான் பார்த்தேன் அவள் முகத்தில் உள்ள ஏக்கத்தை,தன்னைப் பார்க்க தன் பெற்றோர் வந்திருக்க மாட்டார்களா..? என்ற ஏக்கம் அவள் முகத்தில், படிந்திருந்தது,வெய்யிலுக்குள் நின்று வியர்வையில் போட்டிருந்த சட்டையும் நனைந்து முகம் எல்லாம் வியர்வை படிந்து வடிந்தபடி இருந்தது,

எனக்கு அவள் முகத்தை பார்க்க அழுகைவேறு,தானும் மற்றவர்களைப்போல பெற்றோரை பார்க்கவேண்டும் நல்ல உடுப்பு போடவேணும்,நல்ல உணவு உண்ணவேணும் என்று ஆசைப்பட்டாளோ அந்த அபலை,..?

அவளிற்கு எம்மால் என்ன செய்ய முடியும்..?நாங்கள் கைகள் கட்டப்பட்டு ஊமைகள்போன்றே வாழ்கிறோம்….அக்கா வாங்கோ றூமுக்கு போவம்,வெய்யிலுக்க நிற்ககூடாது,காய்ச்சல் வந்திடும்,என்று கூறினேன்,எதுவும் பேசாமல் போய்விட்டாள்,

நான் எனது றூமிற்குப்போய் என் நண்பிகளிடம் கூறி கவலைப்பட்டேன்,முற்கம்பி வேலிகளிற்கு நடுவே எமது வாழ்க்கை,நாம் என்ன செய்யமுடியும்..?

என்னால் முடிந்த அளவு அவள் பெற்றோரை கண்டுபிடிக்க முயற்சித்தேன்,முடியவில்லை.சுடர் அக்காவின் சொந்த இடம் யாருக்கும் தெரியவில்லை,

அதற்குள் பலரிற்கு மீண்டும் இடமாற்றம்,அதில் நானும் ஒருத்தியாய் கொழும்புக்கு போகநேர்ந்தது.இடம் மாற்றலாகி போகும்நேரம் சுடர் அக்காவிடம் போய் நான் வேறிடம் போகிறேன்,நீங்கள் நன்றாக சாப்பிடுங்கோ ஏதும் தேவை என்றால் என் றூமில் உள்ள தோழிகளிடம் கேளுங்கள் என்று கூறினேன்,அவள் வாங்கமாட்டாள் என்பது தெரியும் ஆனாலும் என்மன ஆறுதலிற்காக கூறினேன்,

நான் பஸ் ஏறபோகும்போது ஏங்கிய முகத்தோடு சுடர் அக்கா வந்துநின்றாள்,தனக்கு ஆறுதலாக இருந்த ஒரு உறவும் போகுதே என்ற ஏக்கமாய் அவள் முகம் தெரிந்தது.அனுபவிக்கின்றபோதே சில வலிகளை உணரமுடியும் என்பார்கள்….

நான் கொழும்பில் இருந்த பம்பைமடுவில் உள்ள தோழிகளிற்கு கடிதம் எழுதுவேன், சுடர் அக்காவின் நலம் கேட்பேன்.அவரின் நிலை அப்படியே தன்பாட்டில் கதைப்பது சிரிப்பதென்றே உள்ளது,வீட்டாரும் யாரும் வந்து பார்த்ததாக தெரியவில்லை என்றார்கள்,சில மாதங்களின்பின் கொழும்பில் இருந்து மீண்டும் பூந்தோட்டம் புனர்வாழ்வு முகாம் வந்தேன்,வந்து சுடர் அக்காவை தேடினேன்….அவர் பற்றி அறியமுடியவில்லை.

எப்படி வீட்டிற்கு சென்றார்,யார் அவரைவந்து பொறுப்பெடுத்து கூட்டிச்சென்றது என்பது தெரியாது,நான் தடுப்பு முகாமில் இருந்த தோழிகளை கண்டால் இன்றும் கேட்பது சுடர் அக்காவைப்பற்றியே..

அவள் மனதில் இறுதியாக படிந்த நினைவுகளே மனநிலை பாதிக்கப்பட்ட பின்பும் கூறியபடி இருப்பாள்,அண்ணா பாவம்,அண்ணாவை எல்லாரும் கைவிட்டிட்டீங்கள்,ஏமாற்றிப்போட்டியல் என்று….அவள் கூறும் வார்த்தைகளிற்கு இன்றல்ல எப்போதும் எம்மால் பதில்கொடுக்க முடியாது…..

***பிரபா அன்பு***

தமிழ் மொழிக்காப்புக்காவும் போராடிய விடுதலைப் புலிகள் !

விடுதலைப் புலிகள் உருவாக்கிய தூய தமிழ்ச் சொற்கள்! காலத்தால் மறக்கமுடியாதவை!!

தமிழீழ விடுதலைப் புலிகள் போராட்ட காலத்தில் தமிழ் மொழிக்கு கொடுத்த முக்கியத்துவம் என்பது அளப்பரிய ஒன்றாகும்.

எந்த மொழியின் பெயரால் இலங்கையில் தமிழர்கள் ஒடுக்கப்பட்டார்களோ, எந்த மொழியின் பெயரால் அதே தமிழர்கள் எழுச்சியடைந்தர்களோ அந்த மொழியின் பெயரைக் காப்பாற்ற வேண்டும் என்பதில் விடுதலைப் புலிகள் மூர்க்கத்தனமான ஓர்மத்தினைக் கொண்டிருந்தார்கள்.

போர்க்களமும் பங்கர் வாழ்க்கையும் மட்டும் தமது குறிக்கோளை எட்டிவிடுவதற்கு துணை நிற்கப்போவதில்லை என்பதை விடுதலைப் புலிகள் நன்குணர்ந்திருக்கவேண்டும். அதனால்தான் அவற்றிற்கும் மேலாக நீதி நிர்வாகக் கட்டமைப்புக்களோடு மொழிக்காப்பு நடவடிக்கையிலும் சமபங்கு அளவுக்கு இறங்கினார்கள்.

விடுதலைப் புலிகளின் தமிழ் மொழி முக்கியத்துவம் எங்கு ஆரம்பிக்கின்றதெனில், அவர்கள் தமது அமைப்பிற்கு சூட்டிய பெயரிலும் உறுப்பினர்களுக்கு சூட்டிய இயக்கப் பெயர்களுமே. தூய தமிழ்ச் சொற்களைத் தேடிப்பிடித்து போராளிகளுக்கு சூட்டுவதில் முன்னின்று செயற்பட்டார்கள்.

தமிழை வளர்ப்பதற்கென்று தனியான ஒரு துறையினை தமிழ் வளர்ச்சிக் கழகம் என்ற பெயரில் நிறுவினார்கள். தமிழ் வளர்ச்சிக் கழகத்தினூடாக தமிழர்களுக்கு வைக்கப்பட்ட வேற்றுமொழிப் பெயர்கள் சுட்டிக்காட்டப்பட்டன. அத்துடன் தூய தமிழ் பெயர்கள் பல்லாயிரக்கணக்கில் பரிந்துரைக்கப்பட்டன.

விடுதலைப் புலிகளின் தமிழ் வளர்ச்சிக் கழகம் தமிழில் புதிய கலைச் சொற்களை ஆக்குவதில் முன்னின்று பாடுபட்டது. இன்று இந்தியா, மலேசியா சிங்கப்பூர் போன்ற நாடுகளில் தமிழ் அறிஞர்களால் உருவாக்கப்படும் கலைச் சொல் உருவாக்க ஆர்வத்துக்கு முன்னோடிகளாய் வித்திட்டவர்கள் விடுதலைப் புலிகள்தான்.

தமிழீழ விடுதலைப் புலிகள் உருவாக்கிய கலைச் சொற்களின் சில பட்டியலை இங்கு காரணத்துடன் இணைக்கின்றோம். 

காவல்துறை-பொலிஸ்

பொலிஸார் சட்டம் ஒழுங்கு என்பவற்றின் காவலர்களாக இருப்பதனால் முதலில் காவலர்கள் என்றும் காவல்காரர் என்றும் அழைக்கப்பட்டனர். ஆனால் அரசாங்கத்தின்கீழ் அவர்கள் ஒரு தனித் துறையினாராக இருப்பதனால் ஏனைய காவல்காரர்களிடமிருந்து வகைபிரிக்கவேண்டிய தேவை இருந்தது. இதனால் காவல்துறை என்று தூய தமிழில் கலைச் சொல் இடப்பட்டது.

வெதுப்பகம்-பேக்கரி

பாண் முதலான பேக்கரி உற்பத்திகள் நெருப்பு வெக்கையில் வெதுப்பப்படுவதனால் அதற்கு வெதுப்பகம் என்றே தூய தமிழில் கலைச் சொல் இட்டனர்.

வெதுப்பி-பாண்

வெக்கையில் வெதுப்பப்படுவதனால் வெதுப்பி என தூய தமிழில் கலைச்சொல் இட்டார்கள்.

குதப்பி-கேக்

கேக் உற்பத்திச் செய்முறையானது குதப்பிக் குதப்பி செய்யப்படுவதனால் குதப்பி என தூய தமிழில் கலைச்சொல் இட்டார்கள்.

குளிர்களி-ஐஸ்கிறீம்

குளிர்சார்ந்த ஒரு களியாக காணப்படுவதால் குளிர்களி என்றே தூய தமிழில் கலைச்சொல் இட்டார்கள்.

தரையில் ஓடும் வாகனங்களுக்கு தூய தமிழ்ச் சொற்களை உருவாக்கினார்கள்.

வாகனங்கள் மோட்டார் பொறிமுறையில் இயக்கப்படுவதனால் மோட்டாருக்கு உந்து என்ற தூய தமிழ்ச் சொல்லினை சூட்டியதுடன் அந்த மோட்டாருடன் இணைந்ததாக வாகனங்களின் தன்மைக்கு ஏற்ப தரம்பிரித்து கலைச்சொல் சூட்டினார்கள்.

பேருந்து-பஸ்

சிற்றுந்து-மினிபஸ், வான்

மகிழுந்து-கார் (மகிழ்ச்சியான உணர்வைக் கொடுப்பதால் மகிழுந்து)

பாரவுந்து/கனவுந்து-லொறி

தொடருந்து-ரயில்/புகையிரதம் (புகையிரதம் தமிழ் சொல் இல்லை. இதிலுள்ள இரதம் என்பது வடமொழி)

போருந்து-டாங்கி

உந்துருளி-மோட்டார் சைக்கிள்

நீருந்து-எஞ்ஜின் படகுகள்

ஈருருளி-சைக்கிள்

இவற்றினை ஓட்டுபவர்களை சாரதி என்று வடமொழியில் கையாளாமல் ஓட்டுநர்கள் என அழைத்தார்கள்.

வானத்தில் விமானத் தொழி நுட்பத்தில் பறப்பனவற்றுக்கு ஊர்தி என பெயர் வைத்தார்கள்.

விமானம்-வானூர்தி (விமானம் வடமொழிச் சொல்லாகும்)

கெலிஹொப்டர்-உலங்கு வானுர்தி (உலங்கு என்றால் காற்றாடி என்பதற்குரிய சொல்)

விமானம் செலுத்துபவர்களை விமானிகள் என்று வடமொழியில் கூறும் வழக்கமே இருந்தது. ஆனால் அதற்கு தூய தமிழில் வானோடிகள் என்று கலைச் சொல் இட்டார்கள். அதேபோல் விமானத்தளங்களை வானூர்தித் தளம் என்று அழைத்தார்கள்.

இவற்றைவிட தொழில் நிலையங்களுக்கு பணிமனைகள் என்றும், வங்கிக்கு வைப்பகம் என்றும், பிரிவுத் தலைவர்களுக்கு பொறுப்பாளர்கள் என்றும் கையாண்டு அவற்றினைப் பாவனையில் கொண்டுவந்தார்கள் விடுதலைப் புலிகள்.

தூய தமிழில் கலைச் சொற்களை மேலும் அறியவேண்டுமெனில் தமிழ் வளர்ச்சிக் கழகம் வெளியிட்ட கலைச்சொற்கள் பட்டியலில் காணலாம்.

நடைமுறைத்தமிழ் வழிகாட்டி: அகர வரிசை: PDF விடுதலைப் புலிகளின் தமிழ் வளர்ச்சிக் கழகம்‎‎‎


http://online.anyflip.com/xaxc/pwhu/

http://online.anyflip.com/xaxc/pwhu/

தமிழ் பெயர்கள்

Up ↑