Search

Eelamaravar

Eelamaravar

Month

January 2019

ஒரு தேசப்பற்று மிக்க போராளி – போர் முகம்-16

இந்தச் சண்டை ஆரம்பமாகிய கண்டல் பகுதியின் நிலவரங்களைப் பார்வையிட்டுக் கொண்டு எங்களின் வரவுக்காகக்காத்திருக்கும் ஏனைய போராளிகளைச் சந்தித்துக் கதைப்பது என்று முடிவு செய்துகொண்டோம். அதனால்; மழை நீர் தேங்கிநிற்கும் நகர்வகழிக்குள்ளால் கண்டல் பற்றைகளால் சூழப்பட்ட களத்தைநோக்கிச் சென்றுகொண்டிருந்தோம். மழைக்கவசங்கள் எதுவும் எங்களிடம் இருக்கவில்லை.

அதனால் தானோ என்னவோ தெரியவில்லை மழையும் திடீரென்று கொட்டத்தொடங்கிவிட்டது. அருகில் இருந்த காப்பரண் ஒன்றிற்குள் ஓடிச்சென்று மழைக்கு ஒதுங்கிக்கொண்டோம். அங்கிருந்த போராளிகள் நனைஞ்சிட்டீங்களோ என்று அன்பாகக் கேட்டுக்கொண்டார்கள். அன்பான கேள்விகள் முடிவதற்கிடையில் மழைக்கவசத்துடன் வந்து நின்றான் போராளி ஒருவன். அந்தப் போராளியிடமிருந்து மழைக்கவசத்தைப் பெற்றுக்கொண்ட நாங்கள் அதனை அணிந்துகொண்டு எங்களின் பயணத்தைத் தொடர்ந்தோம்.

மழை நீரால் நகர்வகழி நன்றாக ஊறிப்போயிருந்தது. ஒவ்வொரு காலடியையும் எடுத்து வைக்கவைக்க பாதம் வரையும் அந்தச் சேற்றுக்குள் புதைந்து கொண்டிருந்தது. என்றாலும் அந்தக் கொட்டும் மழைக்குள்ளாலும் கண்டலை நோக்கிய எங்களின் பயணம் தொடர்ந்தது. ஓரிடத்தில் காப்பரண் ஒன்றிற்கு அருகில் போராளிகள் சிலர் மழைக்குள் நனைந்த படி நின்றுகொண்டிருந்தார்கள். இப்படி மழை பெய்து கொண்டிருக்குது பிறகு ஏன் மழையில நனையிறாங்கள்|| என்று செங்கதிரிடம் கேட்க அவனும் ஏனெண்டு தெரியேல்ல. இப்பிடி மழைக்குள்ள நிண்டு நனைஞ்சு கொண்டிருக்கிறாங்கள். என்னவும் சிக்கலோ தெரியேல்ல. கிட்டப்போய்த் தான் பாக்கவேணும்|| என்றான்.

அந்தப் போராளிகள் நின்ற இடத்தில் இருந்து புறப்பட்டு எங்களை நோக்கி நடந்து வந்துகொண்டிருந்தார்கள். ஓரளவு எங்களை நெருங்கிவந்து விட்டார்கள். முன்னால் நடந்து வந்துகொண்டிருக்கின்ற போராளியின் சாயல் எங்களிற்குப் பரிச்சயமானவர் போலத்தெரிந்தது. என்றாலும் கொட்டும் மழைக்குள்ளால் அவர்களை நன்றாகத் தெரியவில்லை. உயரம், நடை எல்லாம் எங்கோ நன்கு பரீச்சயமான ஒரு போராளியின் தன்மையை எங்களுக்குச் சொல்லிக் கொள்வதாயிருந்தது. மிகவும் நெருக்கமாக அவர்கள் வந்துவிட்டார்கள். எங்களை உற்றுப்பார்த்தபடி நடத்துவந்த அவர்களை நாங்கள் இனங்கண்டு விட்டோம். நீண்ட நாட்களாக முகமாலைக் களத்தில் நாங்கள் சந்தித்துவிடுவதற்குத் தேடித்திரிந்தும், அந்தக் களத்தில் சந்தித்துவிட முடியாது போன ஒரு முதிர்ந்த தளபதி எங்களின் முன்னால் மழையில் நனைந்தபடி நின்று கொண்டிருந்தார்.

கொட்டும் மழையில் நனைந்தபடி முன்னணிக் காப்பரண்களில் இருக்கும் போராளிகளைச் சந்தித்து அவர்களின் பிரச்சினைகளைப் பார்த்துக்கொண்டிருந்தார் அவர். மணியண்ணையை மழைக்கவசம் கூட இல்லாத கோலத்தில் கண்டது எங்களிற்கு மனவேதனையைத் தந்தது. ஒரு தாக்குதல் தளபதி விடுதலைக்காகத் தன்னை நீண்ட காலங்களாகவே அர்ப்பணித்த இந்தத் தளபதி, கிராமத்து வீதிகளில் நாங்கள் மிகவும் எடுப்பாகக் காண்கின்ற அவரின் தோற்றம் முழுமையாய்க் கலைந்து போய்க் களத்தில் எளிமையாகப் போராளிகளுடன் தனது வாழ்வைக் கழித்துக் கொண்டிருந்தார். அருகில் வந்த மணியண்ணை எங்களை உற்றுப்பார்த்துச் சிரித்துவிட்டு என்னதம்பியவ இந்த மழைக்குள்ள வெளிக்கிட்டுட்டியள்.||

என்றார் மிகவும் அன்பாக. மழைக்குள் நனைந்தபடி வந்த மணியண்ணை மழைக்கவசத்துடன் நிற்கும் எங்களைப்பார்த்து ஏன் இந்த மழைக்குள்ளால வெளிக்கிட்ட நீங்கள்|| என்று கேட்டுக்கொண்டதை எங்களால் வெற்று வார்த்தைகளாக ஏற்றுக்கொள்ள முடியாமலிருந்தது. அது தனக்காக இல்லாது பிறர்க்காக வாழும் மணியண்ணையின் இயல்பு. கொட்டும் மழையில் அந்தக்களத்தில் மணியண்ணையைத்தவிர போராளிகள் எவரும் வெளியில் நின்றதை நாங்கள் காணவில்லை. அந்தப் போராளிகள் அனைவரிற்காகவும் தான் தனியாக நனைந்து கொண்டிருந்தார் மணியண்ணை. களமுனைத்தளபதிகளின் ஊடாக அறிந்த மணியண்ணையின் குண இல்புகளை நாங்கள் நேரில் பார்த்ததும் எங்கள் மனங்கள் மணியண்ணைக்குள் சிறைப்பட்டுக்கொண்டன. கொட்டும் மழையின் ஒவ்வொரு துளிகளும் எங்களின் உடலில் வீழ்கின்ற போதும் அவற்றின் வலி அதிகமாய்யிருந்தது. அந்தப் பெரும் மழையின் துளிகள் அணைத்தும் முதுநிலைடையும் அவரின் உடலில் தடைகளெதுவும் இன்றி வாழ்ந்து கொண்டிருந்தன. மணியண்ணையின் தலையில் வீழும் மழைத்துளிகள் அவரின் நரைவிழுந்த முடிகளால் வளிந்துகொண்டிருந்தது ஒரு ரசணையை ஏற்படுத்திக்கொண்டிருந்தது.

உடல் விறைக்கும்; அந்தப்பொழுதில் உயிர் குடிக்கும் களமுனையில் மணியண்ணை எங்கள் கைகளைப்பற்றிக் கைலாகு கொடுத்து எங்களை அன்பாக வரவேற்றுக்கொண்டார். முகமாலைக் களமுனை நோக்கிப் போர்முகப் பயணமாகப் பலதடவைகள் சென்றிருக்கிறோம். அந்தப் பயணங்களில் மணியண்ணைச் சந்திப்பதற்கான திட்டங்களும் நிச்சயம் இருக்கும். ஆனால் மணியண்ணையை அவரின் அலுவலகத்தில் சந்திக்க முடிவதில்லை. அவரை இலக்குவைத்து நாங்கள் அவரின் களமுனை அலுவலகங்களிற்குச் சென்றால் எங்களிற்கு கிடைப்பது ஏமாற்றமே. அந்தத் தளபதியின் உதவியாளர்களை மாத்திரம் சந்திக்கின்ற வாய்ப்பே எங்களிற்குக் கிடைத்திருக்கின்றன. ஷஷதம்பியாக்கள் மணியண்ணா நிக்கிறாரோ|| என்றால் இல்லை அண்ணா|| என்ற பதில் வரும். குறியீட்டுப் பெயரால் கூறி அவர் அங்கால என்று சொல்வார்கள்.

அதன் விரிவாக்கம் லையினில என்பதாயிருக்கும் அப்ப அவரோட ஒருக்கால் கதைக்கலாமோ|| என்று கேட்போம். உடனடியாகவே தொலைத் தொடர்புக்கருவியில் அவரின் குறியீட்டு இலக்கத்தைக் கூறி இரண்டு தடவை கூப்பிட்டுவிட்டால் ஓம்… சொல்லுங்கோ|| என்றவார்த்தை வரும். அண்ண சந்திக்கலாமோ|| என்றால் தம்பியவ நான் இஞ்ச நிக்கிறன் எப்ப வந்தநீங்கள்|| என்ற பதில் அன்புரிமையோடு எங்களின் காதுகளை வந்து முட்டிக்கொள்ளும். பேச்சில் அவரது பணியின் அவசியத்தை உணர்ந்து கொள்வோம். அதனால் அவரின் உதவியாளர்களுடன் உரையாடிவிட்டு அங்கிருந்து புறப்பட்டுவிடுவோம். மணியண்ணை அங்கு இல்லாதபோது அந்தப் போராளிகளிடம்; தம்பி மணியண்ண என்ன லையினில தான் நிக்கிறாரோ|| என்று பகிடியாகக் கேட்போம். அவர் அங்க பெடியளச் சந்திக்கப்போட்டார்|| என்றும். ஷஷலையின் பாக்கப்போட்டார்|| என்றும், பல்வேறு பதில்கள் சொல்லுவார்கள்.

நாங்கள் மணியண்ணயின் களமுனை அலுவலகத்தில் அவரைச் சந்திப்பதற்கு எடுத்த முயற்சிகள் எல்லாம் தோல்வியில் முடிந்ததன் காரணத்தை இப்போது வரை நேரில் பார்த்தபோதுதான் முழுமையாக உணரமுடிந்தது. மணியண்ணை களத்தில் உள்ள அவரின் அலுவலகத்தில் பணிசெய்வதை விட களமுனையில் போராளிகளுடன் நேரில் ஒன்றாகவே நின்று தனது பணிகளைச் செய்து கொண்டிருப்பதில் அதிகநேரங்களைச் செலவுசெய்வார்.

மணியண்ணையைக் கொட்டும் மழையில் நனைந்தபடி முன்னரணில் கண்டது எங்களிற்கு ஒரு இனம்புரியாத உணர்வை ஏற்படுத்திவிட்டிருந்தது. அதனால் என்ன மணியண்ண இப்பிடி நனைஞ்சு கொண்டதிரியிறியள்|| என்று கேட்க பிரச்சினையில்ல மகன், நாங்கள் இயக்கம் நீங்கள் நனைஞ்சிடாதையுங்கோ|| என்றவார்த்தையை மட்டும் செல்லிவிட்டு எங்களைப் பார்த்துக்கொண்டு நின்றார். அவரின் அந்தச் சிறிய வார்த்தைக்குள் நிறையவே பதில்களிருந்தன. நரைவிழுந்த அந்தத் தளபதியை களமுனையில் சந்தித்தது எங்களிற்குப் பெருத்த மனமகிழ்வைத் தந்திருந்தது.

சற்று நேரத்திற்குள்ளாகவே தம்பியவ இதில கனநேரம் நிக்காதையுங்கோ. மழை நேரம் அவன் செல்லடிச்சாலும் கேக்காது பிறகு|| என்றார் நனைந்தபடி நின்ற மணியண்ணை. ஷஷஇந்த மழையளுக்குள்ள எல்லாம் நலைஞ்சு திரியிறியள் வருத்தங்கள் வந்தால் பிறகு|| என்று நாங்கள் சொல்லி முடிக்க இடையில் புகுந்த மணியண்ணை ஷஷதம்பி விடுதலைப்போராளியளுக்கு இதெல்லாம் பெரிசில்ல. இப்ப நாங்கள் செய்யாட்டில் பேந்து எப்பதான் செய்யப்போறம்||என்றார். அவரின் வார்த்தைகளில் ஆழ்ந்த எங்களின் தோள்களில் தட்டியபடி சரி தம்பியாக்காள் இஞ்சாலையும் எனக்கு வேலையள் இருக்குது நாங்கள் பிறகு சந்திப்பம்|| என்று சொல்லியபடி எங்களிடம் விடைபெற்றுக்கொண்டு தனது பயணத்தைத் தொடர்ந்தார்.

தன்னை மறந்து எங்களின் பாதுகாப்பை பலதடவைகள் சுட்டிக்காட்டிக்கொண்டு செல்லும் அந்தத் தளபதியை மனதில் எண்ணியபடி நாங்களும் எங்களின் பயணத்தைத் தொடர்ந்தோம். போர்முகப் பயணத்தின் போது நாங்கள் சந்தித்திருந்த இந்தத் தளபதி கடந்த சில வாரங்களின் முன்னர் கண்டல் களமுனையில் வீரச்சாவடைந்த செய்தி வந்திருந்தது. ஷஷதம்பி மழைக்குள்ள நனையாதையுங்கோ பிறகு சந்திப்பம் என்ர பெடியளப்பற்றிக் கனக்கக் கதைக்கவேணும்|| என்ற அந்தத் தளபதி அதன்பின்னர் எங்களைச் சந்திக்காமலே களத்தில் வீரச்சாவை அணைத்துக் கொண்டுவிட்டார்.

களமுனையில் முன்னரண் போராளிகளுடன் எப்போதும் தனது வாழ்வைச் செலவிட்டுக்கொண்ட அந்தத் தளபதி தனது வாழ்வை விடுதலைக்காகவே முற்றாக அர்ப்பணித்திருந்தார். தமிழர் படையில் நரைவிழுந்தும் போரிட்டுக் களமுனையிலேயே மடிந்த சொற்பமானவர்களுள் மணியண்ணையும் முக்கியமானவராய்;, தினமும் அன்புரிமையோடு தவழ்ந்த கண்டல் நிலத்தில் தன் உயிரின் இறுதி மூச்சுவரை தமிழ் வீரம் விழைத்தார். முகமாலைக் களமுனை நோக்கிய எங்களின் போர்முகப் பயணத்தில் நாங்கள் உறவாடிய போராளிகளில் முதலாவதாய் மணியண்ணை விதையாகியிருந்தார்.

கண்டல் நிலத்தில் உறுதியாய் நிமிர்ந்து நின்று விடுதலையின் நாட்களை விரல்விட்டு எண்ணியபடியிருந்த அவரின் வீரச்சாவுச் செய்தி அஞ்சலிப்பதற்காய் கிளிநொச்சியில் இருக்கும் மணியண்ணையின் வீட்டுக்குப் போயிருந்தோம். மணியண்ணையின் வீடு போராளிகளாலும் அவர் நேசித்த மக்களாலும் நிறைந்து வழிந்து கொண்டிருந்தது. வரிச்சீருடை தரித்திருந்த அவரின் வித்துடலின் மேல் தேசத்தின் தேசியமகனாய் வீரச்சாவடைந்திருந்ததின் சின்னமாய்த் தேசியக்கொடி போர்த்தப்பட்டிருந்தது. அவரின் வீர உடலைத் தழுவியபடி மணியண்ணையின் மனைவி அவற்றைச் சூழ அவரின் பிள்ளைகள் உறவுகள் என்று பெருமளவானவர்கள் கண்;ணீர் விட்டழுதபடியிருந்தார்கள் மணியண்ணையின் வீரச்சாவிற்கு அவரின் வீட்டுக்குப் போன போதுதான் எங்களிற்கு மணியண்ணை திருமணமானவர் என்பதும் போராடும் வயதில் போராளியாக ஒரு மகன் இருக்கிறான் என்பதும்; தெரிந்தது. களத்தில் போராளிகளுடன் எந்நேரமும் இருக்கும் இந்தத் தளபதிக்கு இப்படியான உறவுவட்டமொன்று இருப்பதை அறிந்தபோது எங்களால் நம்பிவிடவே முடியவில்லை.

மணியண்ணையைக் களத்தில் சந்திப்பவர்கள் அவரிற்கு என்றொரு குடும்ப வாழ்வு மனைவி,பிள்ளைகள் என்ற உறவும் இருப்பதாக எண்ணிக் கொள்ளவேமாட்டார்கள். அவ்வளவிற்கு மணியண்ணை விடுதலைக்காகவே தன்னை முழுமையிலும் ஒப்படைத்து வாழ்ந்து கொண்டிருந்தார். வித்துடல் அவரின் வீட்டிலிருந்து இறுதி அஞ்சலிக்காகக் கிளிநொச்சி பண்பாட்டு மண்டபத்திற்கு எடுத்து வரப்படுகிறது. மக்கள் அலையாகத் திரண்டுவந்து இறுதி அங்சலிக்காகக் காத்திருக்கிறார்கள். இன்னேரு மக்கள் திரளுடன்; அவரின் வீட்டிலிருந்து வித்துடல் அந்த மண்டபத்தை வந்து சேர்கிறது. போராளிகள், மக்கள் என்று அந்த மண்டப வளாகம் முழுவதும் நிறைந்து வழிந்து கொண்டிருந்தது. அந்த நிகழ்வு எங்கள் ஆழ் மனதில் நிறைந்த லெப்.கேணல்.வீரமணி, லெப்.கேணல்.மகேந்தி போன்ற மாவீரர்களின் இறுதி அஞ்சலியை ஒரு தரம் மீண்டும் நினைவு படுத்துவதைப் போலவிருந்தது. மணியண்ணையின் போராளி மகன் மணியண்ணையின் வித்துடலிற்கு அருகில் நின்றபடி ஷஷஅப்பா நீங்கள் போட்டீங்களே||.

ஏன்ர பேசுக்கு வந்;து மகன் நீ இயக்கத்தில அப்பிடி இருக்கவேணும் இப்பிடி இருக்கவேணும் எண்டெல்லாம் சொல்லுவியளே|| இப்ப எங்களை விட்டுப் போட்டீங்களே|| என்று கதறி அழுதுகொண்டிருந்தான். மணியண்ணையின் போராளி மகனின் இந்தக் குமுறல் அங்கிருந்தவர்களின் மனங்களை உருக்கிக் கண்களைப் பனிக்கவைத்திருந்தது. மகனின் புலம்பலில் நாங்களும் எங்களை இழந்திருந்தோம். அவரின் மகன் பிறகும் கதற ஆரம்பித்தான் ஷஷஅப்பா பேசுக்கு வாற நேரம் எல்லாம் தம்பி நீங்கள் இப்ப இயக்கம், இனி உங்களின்ர உயிர் உங்களுக்கு மட்டும் சொந்தமில்லை. இயக்கம் அவசரம் எண்டு கேக்கேக்க குடுக்கவேணும். உங்களுக்காக இல்லை இயக்கத்துக்காகப் பத்திரமாய் வைச்சிருக்கவேணும் எண்டு சொல்லுவியளே||எனி ஆர் எனக்கு இப்பிடியெல்லாம் செல்லித்தரப்போயினம். என்று வாய்விட்டுக் கதறியளத் தொடங்கினான். ஒரு தந்தை தன் மகனுக்குச் செல்லிய இந்த அறிவுரையைக் கேட்டதும் அங்கிருந்த அனைவரும் மெய்சிலிர்த்துப் போனார்கள்.

மணியண்ணை உண்மையில் ஒரு தேசப்பற்று மிக்க போராளி. மக்களிற்காகவே வாழ்ந்த மக்கள் சேவகன். அதற்காகவே அவர் தன்னுயிரையும் தியாகம் செய்திருந்தார். மணியண்ணையின் புதல்வனின் இந்தக் குமுறலைக் கேட்டுக்கொண்டிருந்த போராளி ஒருவன் ஷ தம்பி மணியண்ணை இல்லாததோட உங்களுக்கு மட்டுமில்லை எங்களுக்கும் அப்பாவைப்போல அரவணைக்கும் உறவொன்று இல்லாமல் போட்டுது|| என்று புலம்பி அழத்தொடங்கிவிட்டான் ஆறுதல் சொல்லவந்த அந்தப் போராளி. உண்மையில் மணியண்ணை களத்தில் போராளிகளிற்கு ஒரு அப்பாவாக நின்று வழி காட்டி அரவணைத்தார்.

தொடரும்…..

ஈழப் போரிலிருந்து நாம் கற்க வேண்டிய பாடங்கள் – பகுதி 3

பாடம் 3: அதிக எண்ணிக்கையிலான வேறுபட்ட உத்திகளே வெற்றியைத் தரும் !

ஏன் 2009-இல் ஈழ விடுதலைப் போரில் பின்னடைவு ஏற்பட்டது என்பதற்குக் காரணமாக உள்நாட்டு சூழ்ச்சி, வெளி  நாட்டு சதிகள், உலக நாடுகளின் புலிகள் மீதான தடை, உலக இராணுவங்களின் உதவி எனப்  பல்வேறு  கோணங்களில் ஏற்கனவே அலசப்பட்டிருக்கிறது. இவை  என்ன நடந்தது என்று ஒரு கதையைக்  கூறுகிறதே தவிர,  அவற்றைப் பொதுவான அறிவியல் தத்துவங்கள் மூலம் விளக்குவதில்லை. அதனால் எங்கே நமது பிழை ஏற்பட்டது, இனி நாம் எது மாதிரியான உத்திகளைக் கையாளவேண்டும் என்ற விளக்கத்தை அளிப்பதில்லை. ஆயுதப் போர்தான் 2009-இல் முடிவுக்கு வந்ததே ஒழிய,  நமது ஈழ விடுதலை முன்னெடுப்பு நிற்கப்போவதில்லை. அதேபோல  எதிரியின் இனவழிப்பு வேறு வகைகளில்  தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.  இந்த சூழலில் 2009-ஐ அறிவியல் பூர்வமாக அறிந்து, இன்றைய சூழலுக்கு ஏற்றுபடி  உத்திகளை எவ்வாறு  சீரமைப்பது என்பதை அறிவது அவசியம். அதுதான்  இக்கட்டுரைப் பகுதியின்  நோக்கம். முதலில் சிக்கலான அமைப்புகள் பற்றிய ஆராய்ச்சிகளிலிருந்து ஒரு முக்கியமான  தத்துவத்தைப் பார்ப்போம், பின்பு இதனடிப்படையில் ஈழ விடுதலைப் போரையும், இன்று பயன்படுத்த வேண்டிய உத்திகளையும் ஆராய்வோம்.

சிக்கல் வரைபடம் (Complexity Profile):

சிக்கலான அமைப்பு என்பது பல பாகங்களைக் கொண்டு, பாகங்கள் ஒன்றுடன் ஒன்று  இணைந்து சிக்கலான முறையில் இயங்கும். உதாரணமாக   உயிர்கள், சமூகங்கள், ஒரு நாட்டின் பொருளாதார, சுகாதார, கல்வி,  இராணுவ  அமைப்புகள், தொழில் நிறுவனங்கள் ஆகியவற்றை எடுத்துக்கொள்ளலாம். ஒரு சிக்கலான அமைப்பு பல்வேறு சிக்கலான அமைப்புகளை உள்ளடக்கி இருக்கலாம்.  அனைத்து உயிர்களையம் உள்ளடக்கிய பூமிமண்டலம் (Biosphere) மிகச்சிக்கலானாது. ஒரு சிக்கலான அமைப்பை புரிந்துகொள்வது எளிதல்ல; நாம் ஒன்று செய்தால் அதனால் விளையும் பக்க விளைவுகளை முன்கூட்டியே அறிய முடியாது. உதாரணமாக  உலகம் இயந்திர மயமாக்கல் மூலம் முன்னேற ஆரம்பித்தபின், அதன் விளைவாக பூமியும் சூடேற ஆரம்பித்தது. அதை முன்கூட்டியே  நம்மால் அறிய முடியவில்லை. மேலும் அதனால் ஏற்படும் மாற்றங்களால் பல்வேறு உயிர்கள் உலகில் அழிந்து வருகின்றன. அதை எப்படிக் காப்பது என்பது இன்னும்  புலப்படாத ஒன்று.

human-profile

ஓர் அமைப்பு எதிர்நோக்கும் மொத்த சிக்கல்களை விளக்குவது சிக்கல் வரைபடம் (Complexity Profile) [1]. உதாரணமாக மனிதனை எடுத்துக் கொள்வோம் (படம்-1).  X -அச்சு சிக்கலின் அளவைக் குறிக்கும். சிக்கலின் அளவு ஒரு “செல்” (cell) அளவிலிருந்து “அண்டம்” (Universe) வரை இருக்கலாம்.  Y-அச்சு எத்தனை வேறுபட்ட சிக்கல்களை நாம் எதிர்நோக்குகிறோம் என்பதைக் குறிக்கிறது.

ஒரு செல் அளவில் நமது உடலை பல்வேறு  கிருமிகள் தாக்குகின்றன. புதிது புதிதாக கிருமிகள் உருவாகி புதிய நோய்களும் தோன்றிக்கொண்டே இருக்கின்றன. நமது நோய் எதிர்ப்பு மண்டலம் இக்கிருமிகளுடன் தினந்தோறும் போரிட்டுக் கொண்டே இருக்கிறது. என்று போர் உக்கிரமாகி நோய் எதிர்ப்பு மண்டலாத்தால் முடியவில்லையோ, அப்பொழுதுதான் நாம் இந்தப் போரையே உணர்கிறோம், மருத்துவரை நாடுகிறோம். இவ்வுலகில்  மக்களைக் கொல்வதில் முன்னிலையில் இருப்பது இந்தக் கிருமிகளே. அதுபோக செல் அளவில் புற்று நோய் போன்று செல் மாறுதல் (Mutation) நிகழ்வுகளாலும் பாதிப்புகள் உண்டாகின்றன. மனிதன் எதிர்நோக்கும் சிக்கல்கள் என்பது சிறிய அளவில் மிக அதிகமாகவும், அளவு கூடக்கூட குறைவாகவும் இருக்கின்றன[1]. இதைத்தான் படம் விளக்குகிறது. நாம் அன்றாடம் உணரும் சிக்கல்கள் என்பது இதில் ஒரு பகுதியே. பெரும்பாலான சிக்கல்கள் நமக்கு  புலப்படுவதில்லை.

நாம் இவ்வுலகில் வெற்றிகரமாக வாழ்வதற்கு சிறிய அளவிலிருந்து பெரிய அளவு வரை அனைத்து சிக்கல்களையும் எதிர்கொள்ளும் வல்லமை வேண்டும். சுருக்கமாகக் கூறினால் நாம் சிக்கலை அதன் அளவிலும் எண்ணிக்கையிலும் ஈடுகட்டவேண்டும்.  நமது செயல்பாடு சிக்கல் வரைபடத்திற்கு இணையாக இருக்கவேண்டும். (we need to match in size and complexity) [1].

நமது உடலை வெவ்வேறு கிருமிகள் தாக்குகின்றன. அதற்கு ஈடாக நமது நோய் எதிர்ப்பு மண்டலமும் கிட்டத்தட்ட அதே எண்ணிக்கை வேறுபாடான எதிர்-உயிர்களை (anti-bodies) உருவாக்கும் வல்லமை கொண்டது. நமது நோய் எதிர்ப்பு மண்டலம்  எதிர்க்க முடியாத அளவிற்கு கிருமிகள் தோன்றும்பொழுது,  நாம் நவீன மருத்துவ அமைப்புகளை உருவாக்கி நமது சிக்கலை எதிர்கொள்ளும் தன்மையைக் கூட்டுகிறோம்.  மனிதகுலம்  சிறு அளவிலிருந்து பெரிய அளவு வரை சிக்கல்களை  சம அளவில் எதிர்நோக்கும் தன்மையுடன் உள்ளது. அதனால் தான் மனிதன் இன்னும் அழியாமல் இருக்கிறான். மனிதகுலத்திற்கு சவால்களை எதிர்நோக்கும் அளவு சிக்கலான அமைப்புகளை உருவாக்க முடிவதால்  சிறு கிருமிகள் முதல் சுனாமி வரை நம்மைக் காப்பாற்றிக்கொள்ள  முடிகிறது.  இனி விண்ணில் இருந்து வரும் பெருங்கற்களையும் திசைதிருப்ப முடியும்.

சமூகம் என்பது சிக்கலானது, எதிர்கொள்ளும் சிக்கல்கள் எண்ணிக்கையிலும் அளவிலும் பெரிது.  சமூக சிக்கல்களையும்  சிக்கல் வரைபடத்தைக் கொண்டு ஆராய்ந்து, அதற்கான தீர்வுகளைப் பற்றியும் சிந்திக்கலாம்.  முதலில் ஈழப்போரை ஆராய்வோம், பின்பு இன்று எதிர்நோக்கும் சிக்கல்களுக்கான தீர்வைப் பற்றி பார்ப்போம்.

புலிகளின் கொரில்லாப் போர்:

போர் என்பது இரு சிக்கலான அமைப்புகளுக்கிடேயே நிலவும் போட்டி [1]. ஏற்கனவே பார்த்தபடி சிக்கலான அமைப்புகளில் யார்  அதிக வேறுபாடுகளுடனான உத்திகளைப் பின்பற்றுகிறார்களோ  அவர்களுக்குத்தான் வெற்றி. புலிகள் ஆரம்பகட்ட ஈழ விடுதலைப் போர்களில்  இந்திய, இலங்கை இராணுவங்களைத் தோற்கடித்தற்குக் காரணம் கொரில்லாப்  போர்முறைதான். இதை சிக்கல் வரைபடம் மூலம் பார்த்தால் தெளிவாகப் புரியும் (படம்-2):

gori-profile-2

புலிகள் சிறுசிறு குழுக்களாகப் பிரிந்து, பதுங்கி பல்வேறு தாங்குதல்களைத் தொடுத்தார்கள். ஒரே தலைமை என்று இருந்தாலும், சிறு குழுக்கள் சுயமாக இயங்கும் தன்மையைக் கொண்டிருக்கும். சிறு குழுக்கள் தாங்களே இலக்கையும்,  தாக்கும் நேரத்தையும், முறைகளையும் வகுத்தார்கள். அவர்கள் எங்கு பதுங்கி இருக்கிறார்கள் எப்பொழுது   தாக்குதல் நடத்துவார்கள் என்று எதிரிக்குத் தெரியாது. எதிரிகள் இதற்கு மாறாக பெரும்படை கொண்டு இயங்கினார்கள். யானை வரும் பின்னே, மணியோசை வரும் முன்னே என்பதுபோல அவர்களின் நகர்வுகளை புலிகளால்  எளிதாக அறிய முடிந்தது. மொத்தமாக புலிகள் அதிக அளவு  வேறுபாடான தாக்குதல் உத்திகளையும் வாய்ப்புகளையும் பயன்படுத்தினார்கள். மாறாக எதிரிகள், ஒரு படையதிகாரி திட்டமிட்டு பெரிய நகர்வுகளை மேற்கொண்டார்கள், ஆனால் அந்நகர்வுகள் அதிக வேறுபட்டது அல்ல; மேலும் புலிகள் அவர்களின் நகர்வுகளை முன்கூட்டியே அறிந்து  பாதையிலிருந்து விலகிக் கொள்வதால்,  தாக்குதலுக்கான வாய்ப்புகளும் குறைவு. கீழ்நிலை சிப்பாயிலிருந்து மொத்த படையும்  மேலுள்ள அதிகாரியின் திட்டபடிதான், அதனால் அவர்களின் நகர்வுகள் புலிகளைப் போன்று சுதந்திரமான சிக்கலான நகர்வுகளாக இல்லை. இந்த வேறுபாடுதான் கொரில்லாப் பொறிமுறையில் புலிகள் வெற்றி கொண்டதற்குக் காரணம் [1].

இந்த கருத்து மிகமுக்கியமானது என்பதால் இதை இன்னொரு உதாரணம் கொண்டு சிறப்பாக புரிந்து கொள்ளலாம். நீங்கள் பள்ளியில் ஒரு தேர்வுக்குப் போகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். தேர்வுக்கு மூன்று  வினாத்தாள்கள் (Question  paper) உள்ளன. ஒரு வினாத்தாளில் 10 கேள்விகள் உள்ளன, அந்த பத்திற்கும் விடையளிக்க வேண்டும். இரண்டாவது வினாத்தாளில்  15 கேள்விகள் உள்ளன, அதில் 10 கேள்விகளுக்கு விடையளிக்க வேண்டும். மூன்றாவது வினாத்தாளில் 20 கேள்விகள் உள்ளன, அதிலும் 10 கேள்விகளுக்கு விடையளிக்க வேண்டும். எந்த வினாத்தாள் உங்களுக்குப் பிடிக்கும்? அனைவருக்கும் மூன்றாவது  வினாத்தாள்தான் பிடிக்கும் என்பது தெளிவானது. ஏனென்றால் மூன்றாவது வினாத்தால்தான் “அதிக வாய்ப்புகளை” அளிக்கிறது. எப்பொழுது வாய்ப்புகள் கூடுகிறது, அப்பொழுது வெற்றி கூடுகிறது. இது தேர்வுக்கு மட்டுமல்ல அனைத்து சிக்கலமைப்புகளின் வெற்றிக்கும் இதுதான் அடிப்படை. தற்கொலை செய்துகொள்ள முனையும் ஒருவரிடம், ஏன் என்று கேட்டால்  “வேறு வழி” இல்லை என்று பதில் வரும். வாய்ப்புகள் தான் அனைத்து உயிர்கள் மற்றும்  சமூக அமைப்புகளின் வெற்றிக்கும்  அடிப்படை.

புலிகள் சிறுசிறு குழுக்களாக சுதந்திரமாக இயங்கியதால் தாக்குதலுக்கு சிங்களப் படைகளை விட அதிக வாய்ப்புகளை உத்திகளை உருவாக்கினார்கள். இதுதான் வெற்றிக்கான சூத்திரம். பார்ப்பதற்கு ஒரு பலமான தலைமையின் கட்டளை மூலம் இயங்குவது சிறப்பாகத் தோன்றலாம், ஆனால் அதுதான்  பலவீனமே. பிரிந்து வெவேறு  விதமாகத் தாக்கும்பொழுது எதிரி நிலைகுலைந்து விடுகிறான். இவ்வாறு பிரிந்து தாக்குவதால் எதிரியை ஓட வைக்க முடியும், ஆனால் நிலத்தை நிரந்தரமாகத் தக்கவைக்க முடியாது. அதுதான் கொரில்லாப் போர்முறையின் பலவீனமும்.

ஏன் இறுதிப்போரில் பின்னடைவு ஏற்பட்டது?

புலிகள் தோன்றியதிலிருந்து படிப்படியாக பரிணமித்து வலிமை மிக்க இயக்கமாக மாறி மாபெரும் போர் சாதனைகளைப் படைத்தனர். ஆனால் இறுதிப்போரில் வெற்றிகொள்ள முடியவில்லை;  இறுதியில் இயக்கம் ஈழத்தில் முற்றிலும்  இல்லாமல்  போனது. இதை எவ்வாறு புரிந்து கொள்வது? இதை வரலாற்று நிகழ்வுகளைக்கொண்டு சிக்கல் வரைபடத்தை வரைந்து  பின்வருமாறு விளக்கலாம் (படம்-3).

final_war-2

  1. புலிகளின் ஆரம்ப காலத்தில், சிறு குழுக்களைக் கொண்டு கொரில்லாப் பொறிமுறைகளை மட்டும் பின்பற்றினார்கள். இந்திய சிங்களப் படைகள் மரபுவழித் தாக்குதல்களை மேற்கொண்டார்கள். ஏற்கனவே நாம் பார்த்தபடி, இதில் புலிகளின் செய்லபாடுகள் அதிக வேறுபாடுகளுடன் இருந்ததால், அவர்களுக்கு வெற்றி கிடைத்தது. (படம்-3: புலிகள்-1, சிங்களம்-1)
  1. கொரில்லாப் போர்முறைகளை மட்டும் கொண்டு நிலத்தைத் தக்கவைக்க முடியாது என்பதால், புலிகள் மரபுவழி இராணுவமாகப் பரிணமிக்க வேண்டிய கட்டாயம் இருந்தது. மரபுவழி இராணுவத்தில் படைகள் ஒன்று சேர்ந்து இயங்கி நிலத்தை காக்க வேண்டி இருப்பதால், அவர்களின் கொரில்லா தாக்குதல் எண்ணிக்கைகள் குறையும். இவ்வாறு மரபுவழிப் படையாக பரிணமிக்கும் காலத்தில், கொரில்லாத் தாக்குதல்களும் அவ்வப்போது மரபுவழித் தாக்குதல்களும் எனக் கலந்து உபயோகிக்கப் பட்டது. சிங்களம் நடத்தும் மரபுவழித் தாக்குதலுக்கும், புலிகள் நடத்தும் மரபுவழித் தாக்குதலுக்கும் ஒரு பெரிய வேறுபாடு உண்டு. புலிகள் எபோழுது தாக்குவார்கள், எங்கே தாக்குவார்கள், எவ்வளவு நேரம் தாக்குவார்கள், இறுதி இலக்கு  என்ன என்று யாருக்கும் தெரியாது. சிங்களம் ஒவ்வொரு நாளும் பக்கு பக்கென்று எங்கே அடி விழும் என்று காத்திருப்பார்கள். சிங்களப் படைகள் இதற்கு மாறாக, முழுத்த திட்டம் வகுத்து உலகுக்கே அறிவித்து விட்டு, பெரும்படை கொண்டு நகர்வார்கள்.  உதாரணமாக சிங்களத்தின்  செயசிக்குறு நடவடிக்கையை எடுத்துக்கொள்ளலாம்.  ஒன்றரை வருடங்களாக A9 வீதியைக் கைப்பற்ற முனைந்த யுத்தம் இறுதியில் தோல்வியில் முடிந்தது.   மொத்தத்தில் புலிகளின் தாக்குதல் வாய்ப்புகளின் எண்ணிக்கை, சிங்களத்தின் தாக்குதல் வாய்ப்புகளின் எண்ணிக்கையை விட அதிகம்.  அதாவது புலிகளின் தாக்குதல் அதிக வேறுபாடுகளைக் கொண்டிருந்தது. (படம்-3: புலிகள் -2, சிங்களம்-2).
  1. நிலத்தை முழுதுமாகக் கைப்பற்ற புலிகள் மேலும் பெரிய மரபுவழிப் படையாக பரிணமிக்க வேண்டியத் தேவை இருந்தது. அவ்வாறு பரிணமித்து அடித்த அடியில்தான் சிங்களமும் உலகமும் ஆடிப்போனது. ஆனையிறவு கைப்பற்றப்ப பட்டது, வன்னியிலிருந்து சிங்களம் துடைத்தெறியப்பட்டது, புலிகள் யாழ்ப்பாணத்தை நெருங்கினார்கள். அதன் பின்புதான் உலகம் தலையிட்டு சிங்களத்தைக் காப்பாற்றியது.

புலிகளின் தாக்குதல்கள் சிங்களத்தைப் போல முதலிலேயே முடிவு செய்வதல்ல. பல்வேறு இலக்குகளைத் தேர்ந்தெடுத்து, மாதக்கணக்கில் வேவு பார்த்து, எது வாய்ப்பாக இருக்கிறதோ அதை நேரம் பார்த்து வீழ்த்துவர். வாய்ப்புதான் முடிவில்  தீர்மானிக்கும் காரணியாக இருக்கும். ஆனால் சிங்களத்திற்கு வாய்ப்பு எல்லாம் முக்கியமல்ல. கொழும்பில் ஒரு குறிக்கோள் தீட்டப்பட்டு, படைகளுக்கு அளிக்கப்படும். அதை நிறைவேற்றுவதுதான் அவர்களின் கடமை. இந்தப் போரிலும் புலிகளின் திட்டங்கள் சிங்களத்திற்குத் தெரியவில்லை. அவர்கள் எப்பொழுதுமே சிங்களத்தை எங்கே தாக்குதல் நடக்கும் என்ற பயத்திலேயே வைத்திருந்தார்கள். தாக்குதல் எங்கே வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதால், அவர்கள் அனைத்து இடங்களிலும்   தயாராக இருக்கவேண்டும். இவ்வாறு அதிக வாய்ப்புகளை புலிகள் உருவாக்கியதுதான், அவர்களின்     தாக்குதல் வேறுபாடுகளைக் கூட்டும் முக்கிய காரணி. முடிவில் சிங்களம் புலிகளின் அதிக வேறுபட்ட நகர்வுகளுக்குப்  பலியானார்கள். சிங்களம் பழைய அதே உத்திகளைப் பயன்படுத்தியதால் அவர்களின் உத்திகள் எல்லாம் புலிகளுக்கு முன்பே தெரிந்ததுதான். மொத்தத்தில் புலிகளின் அதிக வேறுபாடுகளானத் தாக்குதல்களால், சிங்களம் தோற்றது. (படம்-3: புலிகள்-3, சிங்களம்-2). புலிகளின் வெற்றியோடு மூன்றாம் ஈழப்போர் முடிந்தது.

இப்பொழுது பின்னோக்கி பார்க்கும் பொழுது, ஏன் சிங்களம் இவ்வாறு மோசமான உத்திகளைக் கையாண்டது என்ற கேள்வி எழும். உண்மை என்னவென்றால் இதுதான் சென்ற நூற்றாண்டு இறுதிவரை உலக இராணவங்களின் உத்தி[1]. இதை நியூட்டன் சட்டகம் (Newton’s paradigm) என்று அறிவியல் மொழியில் கூறுகிறார்கள் [2]. நியூட்டனின் விதிப்படி, ஓர் இலக்கை கல்லால் வீழ்த்த  குறிபார்த்து வீசினால் போதும், இலக்கு வீழ்ந்து விடும். அதுபோலத்தான் உலக இராணுவங்கள் போரைப் பார்த்தன. அதிகாரிகள் உட்கார்ந்து முழுத் திட்டமிடுவர். பின்பு அத்திட்டப்படி நகர்வுகளை மேற்கொள்வர். இதுதான் சிங்களத்திற்குக் கற்பிக்கப்பட்டது,  அதன்படி தான் சிங்கள இராணுவம் செயல்பட்டது. . இது மாதிரியான திட்டமிடல்கள் மோசமான உத்தி என்று சிக்கலான அமைப்புகளைப் பற்றி ஆராய்ச்சிகள்  சென்ற நூற்றாண்டின் இறுதியில்தான் தெளிவுபடுத்த ஆரம்பித்தது. போரில் வெற்றிபெற அதிக எண்ணிக்கையில் வேறுபட்ட உத்திகளும்முழுத் திட்டமிடல் இல்லாமல் சந்தர்ப்பவாத அணுகுமுறையே வெற்றியைத் தரும் என்று இந்த ஆராய்ச்சிகள் கூறின. இதன்பின் தான் உலக இராணுவங்கள் “நியூட்டன் சட்டகத்தை” விட்டு “சிக்கல் அமைப்புகள்” (Complex Systems Paradigm) சட்டகத்திற்கு மாறினர். அடிப்படையில் புலிகள் என்ன உத்திகளைக் கையாண்டார்களோ அவைதான்  சிறப்பான உத்தி என்று  உலக இராணுவங்கள் முடிவுக்கு வந்தன. உத்திகளில் புலிகள் உலக இராணுவங்களுக்கு முன்னோடியாக இருந்திருக்கிறார்கள்.

  1. இறுதிப் போருக்கு சிங்கள இராணுவத்திற்கு பயிற்சிகள் வழங்கிய உலக இராணுவத்தினர் புதிய உத்திகளை, அதாவது புலிகளின் உத்திகளைக் கையாள கற்பித்தனர். அதைத்தான்  சிங்களம் பின்பற்றியது:
  • கொரில்லாத் தாக்குதல் பாணியில் ஆழ ஊடுருவும் படையினரால் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் புலிகள் சில முக்கிய தளபதிகளை இழந்தனர். புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியையே பாதுகாப்பற்ற பகுதியாக மாற்றினர். வேவுப் பணிகளையும் செய்தனர்.
  • ஜெயசிக்குறு போன்ற முழுத் திட்டமிடல் கைவிடப்பட்டது. எங்கெங்கே வாய்ப்பு கிடைத்ததோ அங்கங்கே தாக்குதல் நடத்தப்பட்டது. நீரைத் திறந்து விட்டால், வாய்ப்பு உள்ள இடங்களில் எப்படி பாயுமோ, அப்படி பாய்ந்தார்கள். இதைத் தண்ணீர் கோட்பாடு என்கிறார் ஆய்வாளர் பரணி கிருஷ்ணரஜனி [5,8].
  • சிறியதும் பெரிதுமாக அனைத்துவகைப் படை நகர்வுகளையும் பயன்படுத்தினார்கள்.

மொத்தத்தில் அவர்களின் சிக்கல் வரைபடம் புலிகளைத் தாண்டியது (படம்-3: புலிகள் -3, சிங்களம்-3). புலிகள் சிங்களத்தைத் தோற்கடிக்க மேலதிக சிக்கலுடன் செயல்படவேண்டும், ஆனால் அதில் பல பின்னடைவுகள் ஏற்பட்டது. முக்கியமாக:

  • புலிகள் இயக்கம் உலகளவில் தடை செய்யப்பட்டு, புலிகளின் பணவரவு  முடக்கப்பட்டது.
  • ஆயுதக் கப்பல்களை உலகநாடுகள் சிங்களத்திற்குக் காட்டிக் கொடுத்தன. மேலும் முன்னேறி வந்துகொண்டிருந்த செயற்கைக்கோள், GPS தொழிநுட்பம், புலிகளின் கப்பல்களை எளிதில் காட்டிக்கொடுத்தது. புலிகளின் அனைத்து போர் செயல்பாடுகளுக்கும் ஆதாரமான கப்பல் போக்குவரத்து நூலிழையில் தொங்கியது.

சிங்களத்திற்கு புலிகளை வீழ்த்தும் வல்லமை என்றுமே இருந்ததில்லை. உண்மையில் புலிகளை வீழ்த்தியது  சிங்களம் அல்ல, உலக நாடுகள்தான். புலிகளின் இராணுவ உத்திகளில் எந்த பிழையும் இல்லை. அவர்கள்தான் உத்திகளின் முன்னோடியே. உலக நாடுகள் புலிகளுக்கு  உதவாவிட்டாலும், உபத்திரமாக இல்லாமல் இருந்தால்கூட புலிகள் வெற்றிபெற வாய்ப்புகள் அதிமாக இருந்திருக்கும். கடைசியில் உலகநாடுகளின் உதவி  இனவழிப்பில் முடிந்தது.

பலர் எழுப்பும் ஒரு முக்கியக் கேள்வி என்னவெனில்: ஏன் புலிகள் போரை விட்டுவிட்டு சிங்களம் கொடுப்பதை ஏற்றுக்கொண்டு செல்லக் கூடாது? அவ்வாறு செய்திருந்தால் இந்த பின்னடைவு ஏற்பட்டிருக்காது, மேலும் இன்று இருப்பதைவிட நல்ல  நிலைமையிலேயே இருப்போம்.

புலிகள் ஆரம்பத்திலிருந்து தமிழரின் இறையாண்மையை என்றுமே அடகு வைத்ததில்லை. நவீன தமிழர் வரலாற்றில் புலிகளைப் போன்ற ஒரு இயக்கம் தோன்றியதில்லை. அவர்கள் என்ன முன்னுதாரணம் ஏற்படுத்துகிறார்களோ அதுதான் இனிவரும் காலம் முழுதும்  எதிரொலிக்கும். புலிகள் தமிழர் இறையாண்மையை அடகு வைத்தால், அதை முன்னுதாரணமாகக் கொண்டு “புலிகளே விட்டுக் கொடுத்து விட்டார்கள், இனி நாம் எம்மாத்திரம்” என்று தமிழர் இறையாண்மை முற்றிலும் குழிதோண்டி புதைக்கப்படும் வாய்ப்புகள் அதிகம். அது எதிர்காலத்தில் தமிழின அழிவிற்கே இட்டுச்செல்லும். புலிகள் இன்று அழிந்தாலும், தமிழர் இறையாண்மையை விட்டுக் கொடுக்காத முன்னுதாரணத்தை வைத்துவிட்டு போயிருக்கிறார்கள். அதுதான் எதிர்காலத்தில் நம்மை வழிநடத்தப் போவது. இன்று ஏற்பட்டுள்ள பின்னடைவு தற்காலிகமானதே. தற்காலிக இலாபத்திற்காக  நீண்டகால நன்மையை அடகு வைக்க புலிகள் எக்காலமும், தாங்கள் முற்றிலும் அழிய வாய்பிருந்தாலும்,  ஒப்பமாட்டார்கள். அதுதான் நடந்தது.

தமிழர்கள் எதிர்காலத்தில் கட்டாயம் இறையாண்மைக்குப் போராடி வெற்றி பெறுவார்கள். இதற்கு ஒரு வரலாற்று உதாரணம் தருகிறேன். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நடந்தாக நம்பப்படும் “மசாதா” என்ற  ஒரு கட்டுக்கதை நவீன இசுரேலின் தோற்றத்திற்கு ஒரு முக்கிய காரணம் [3].  அன்றைய இசுரேலை ரோமாபுரி ஆக்கிரமித்திருந்தது. அவர்களுக்கு எதிராக இசுரேலியர்களில் “சிகாரி” என்ற குழுவினர் போர் புரிந்தனர். அவர்களை ரோமப்படைகள் “மசாதா” என்ற மலைக்கோட்டையில் சுற்றி வளைத்தது. சரணடைவதை விட  சுதந்திரமாகச் சாவதே மேல் என்று அக்கோட்டையில் இருந்த அனைவரும், பெரியவர் முதல் சிறியவர் வரை பெண்கள் உட்பட மொத்தமாக ஆயிரம் பேரும்  தற்கொலை செய்துகொள்கின்றனர். இது உண்மையானது அல்ல, ஒரு கட்டுக்கதை. ஆனால் இதுவே இரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பின்பு, இசுரேலை உருவாக்க முனைந்த ஆயுதக் குழுக்கள் அனைத்திற்கும் அடிப்படை. அவர்களை சுதத்ந்திரப்போரில் வெற்றி பெற வைத்ததும் “மசாதா” உருவாக்கிய ஓர்மம் தான். இந்த கட்டுக்கதையை உள்வாங்கியவர்கள் தான் பின்பு இசுரேலின் தலைவர்களாகவும் ஆனார்கள். இன்று மசாதா தான் இசுரேலியர்களின்  அடையாளம். இன்றைய இசுரேலிய இராணுவ வீரர்கள் “இன்னொரு முறை மசாதா வீழாது” (Masada shall not fall again) என்று கூறிதான் உறுதிமொழி ஏற்றுக்கொள்கிறார்கள்.

ஆயிரம்பேர் சுதந்திரத்திற்காகத் தற்கொலை செய்து கொண்டார்கள் என்ற ஒரு கட்டுக்கதை இரண்டாயிரம் ஆண்டுகள் கழித்து ஒரு நாட்டை உருவாக்கும் வல்லமை இருக்கும் என்றால், இலட்சக் கணக்கில் சுதந்திரத்திற்காக முள்ளிவாய்க்காலில் உயிர் துறந்த மக்களைப் பற்றிய  நினைவு சும்மா விடுமா என்ன! எதிர் காலத்தில் இந்தியா, இலங்கை, ஐ.நா போன்றவை இருக்குமா இல்லையா என்று உறுதியாகக் கூற முடியாது, ஆனால் ஈழம் என்ற ஒரு நாடு கண்டிப்பாக இருக்கும். அதுதான் முள்ளிவாய்க்கால் உருவாக்குகின்ற உருவாக்கப்போகின்ற ஓர்மம்.

“The Zealots indeed all fell in the battle, but their war, sacrifice, love, and death planted eternal life in the Hebraic nation, and it still exists; and look at the miracle: it is fighting again—after two thousand years of [dispersion in the] Galut—to free its holy land… . Where is the people whose heroes destroyed Masada? … Read well the writing on the wall.” [3]

வரலாற்றின் பலம் மிக அதிகம், அது நீண்ட கால்நோக்கில் பாய்வது. முள்ளிவாய்க்காலில் நடந்ததை ஒவ்வொரு வளரும் மாணவனிடம் கொண்டு சேர்த்தால் போதும், அவர்கள் பார்த்துக் கொள்வார்கள். இன்று தமிழ்த்தேசிய அரசியலை நடத்தும் அமைப்புகளை, தலைவர்களை இயக்குவதும்  இந்த முள்ளிவாய்க்கால் தான். தமிழர் என்ற அடையாளத்தை இனி கொடுக்கப்போவதும்  இந்த முள்ளிவாய்க்கால் தான். உலக யூதர்களை எவ்வாறு மசாதா ஒன்று சேர்த்து போராட வைத்ததோ, அதுபோல முள்ளிவாய்க்கால் செய்யும். இதை உறுதியாகச் சொல்லலாம். அதை உணர்ந்தே புலிகள் கடைசிவரையும் விட்டுக்கொடுக்கவில்லை.  எதிர்காலத்தில் அவ்வாறு ஈழம் அமையவில்லை என்றால் அது புலிகளின் தவறாக  இருக்காது, இன்று வாழும் தமிழர்களின் தவறாக இருக்கும்.

அடுத்து  என்ன?

ஆயுதவழி ஈழப்போர் முடிவுற்றாலும், எதிரிகளின் இனவழிப்பு நடவடிக்கைகள் வேறுவழிகளில் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. அதுபோல நாமும் ஈழவிடுதலையை தொடர்ந்து வேறு வழிகளில் முன்னெடுத்துக் கொண்டுதான் இருக்கப்போகிறோம். இப்பொழுதைய முக்கியக் கேள்வி எது மாதிரியான உத்திகளை எதிரி கையாள்கிறான், அதை எதிர்கொள்ள நாம் எதுமாதிர்யான உத்திகளைக் கையாள வேண்டும் என்பதே.

இன்று நமது சிக்கல்களைத் தீர்க்கும் முறை  என்பது  எந்த உத்தி சிறந்தது என்று ஆராய்ந்து, அதன்படி முழுத்திட்டமிட்டு  இலக்கை வீழ்த்த முனைகிறோம். இது சிங்களத்தின் தோல்வியுற்ற  செயசிக்குறு போர்  திட்டமிடல் போன்றது.   சிக்கலான அமைப்புகளுக்கு இதுபோன்ற திட்டமிடல் உதவாது.  சிக்கலான அமைப்புகளின் ஆராய்ச்சியின்படி,  புலிகளின் போர் உத்திகளே இருப்பதிலேயே சிறந்தது என்று பார்த்தோம். அதன்படி எதிரியைவிட அதிக எண்ணிக்கையில் வேறுபட்ட உத்திகளும்முழுத் திட்டமிடல் இல்லாத சந்தர்ப்பவாத அணுகுமுறையே வெற்றியைத் தரும்.   இந்த உத்திகளின் சிறப்பு என்னவென்றால் இவற்றை அனைத்து சிக்கலான அமைப்புகளுக்கும் பயன்படுத்தலாம். சமூகம் என்பது சிக்கலான அமைப்பு என்பதால் இன்று நிலவும் அனைத்து சமூக அரசியல் சிக்கல்களுக்கும் புலிகளின் அணுகுமுறைதான்  தீர்வு. இதை இனி விரிவாகப் பார்ப்போம்.

ஒரு சமூகம் என்பது பல சிக்கலான அமைப்புகளை உள்ளடக்கிய மிகப்பெரிய சிக்கலான அமைப்பு. சமூகத்தின் அடிப்படை அலகு  மனிதன், பின்பு குடும்பம், சமூக அமைப்புகள், பொருளாதார அமைப்புகள், கல்வி  அமைப்புகள், அரசியல் அமைப்புகள், இராணுவம், அரசு என்று பல்வேறு சிக்கலான  அமைப்புகளை உள்ளடக்கியது.  ஈழப்போரில் முக்கியமாக  நாம் இழந்தது ஓர்  அரசும்,  இராணுவ கட்டமைப்பையும், இலட்சத்திற்கு அதிகமான மக்களையும். இது மிகப்பெரிய இழப்பு என்பதில் ஐயமில்லை. ஆனால் நாம் இன்னும் முழுதாக ஈழத்தில் அழிந்துவிடவில்லை. எதிரியின் இறுதி வெற்றி நம்மை முற்றிலும் அழிப்பதிலேயே இருக்கிறது.

அவர்களின் அடுத்த இலக்கு மீதி இருக்கும் சமூக அலகுகள்தான். மனிதர்களை முன்புபோல சுட்டுக் கொல்ல  முடியாது என்பதால், அவர்களின் உத்திகள் வேறுமாதிரி இருக்கும். உதாரணமாக,  தமிழர்களை சிங்கள அடையாளத்திற்கு மாற்றுவது, மொழியை அழிப்பது, குடும்பத்தை  சிதைத்து பிறப்பு விகிதத்தை குறைப்பது, பொருளாதாரத்தை முடக்குவது, நிலத்தை அபகரித்து சிங்களர்களை குடியேற்றுவது, தமிழர் தரப்பு அரசியல் கட்சிகளை அவர்களின் நோக்கங்களுக்கு இணங்க வைப்பது போன்று இருக்கும். புலிகள் இருந்தபோது இதெல்லாம் சாத்தியமில்லை, ஆனால் இப்பொழுது அவர்களுக்கு சாத்தியமான ஒன்றே.

புலிகளின் உத்திகளை இது போன்ற சூழலுக்கு எவ்வாறு பயன்படுத்துவது? தமிழ்தேசியமும் எதிரியும் வெற்றிபெற போட்டி போடுகின்றனர். இதில் யார் அதிக வேறுபாடான வாய்ப்புகளை உருவாக்குகிறார்களோ அவர்கள்தான் வெற்றி பெறுவர். உதாரணமாக சில சமூக  சிக்கல்களை எடுத்துக் கொள்ளலாம்:

  1. ஒரு தமிழருக்கு தமிழர் என்ற அடையாளத்தைப் பேணுவதற்கான வாய்புகளைவிட, சிங்கள அடையாளத்தை ஏற்றுக்கொள்ளும் வாய்ப்புகள் அதிகமானால், அவர் சிங்கள அடையாளத்திற்கு மாறுவார்.
  1. தமிழ்வழியில் கல்வி கற்றால் ஏற்படும் வாய்புகளைவிட, ஆங்கிலவழியில் கல்வி கற்றால் அதிக வாய்ப்புகள் ஏற்படும் என்றால், மக்கள் ஆங்கிலவழிக்கு மாறுவர். இதுதான் தமிழகத்தில் நடக்கிறது.
  1. ஒரு தமிழ் அரசியல் கட்சி தமிழ்த்தேசியம் பேசுவதைவிட, எதிரித்தேசியம் பேசினால் கட்சிகளுக்கு வெற்றி வாய்ப்பும், தலைவர்களுக்கு பதவியும், கூடினால், அரசியல் கட்சிகள் எதிரிதேசியத்திற்கு மாறும். இவ்வாறுதான் திராவிடக் கட்சிகளை இந்தியம் வீழ்த்தியது. தமிழர் அரசியலைப் பேசிய திராவிட முன்னேற்றக் கழகத்தை பலமுறை மத்திய அரசு கவிழ்த்தது. அதன்பின் இந்தியத்திற்கு தாவியபின் பதவிகளைக் கொடுத்தது, ஊழல்களை தாராளமாக அனுமதித்தது. இந்திய அரசு ஊழலை அதன் நோக்கத்திற்கு ஒரு கருவியாக ஊக்குவிக்கிறது.

இவ்வாறு ஒரு அரசினால் ஒவ்வொரு சமூக அமைப்பாக  ஒழித்து நம்மை இல்லாமல் செய்ய முடியும். ஈழத்தில் புலிகள் சென்றபின் சிங்களம் இதை ஆரம்பித்தது; தமிழகத்தில் நீண்டகாலமாக நடந்து கொண்டிருக்கிறது.  இன்றைய நிலவரம் அப்படியே தொடர்ந்தால் நாம் முற்றிலும் அழிவதற்கான வாய்ப்புகள் அதிகமானது. என்னுடைய அனுமானத்தில்,   இன்றைய தமிழர் நிலவரத்தை ஒரு சிக்கல் வரைபடத்தில் வரைந்தால் படம்-4 -இல் இருப்பதுபோல இருக்கும்.

competition_nations

நாம் வெற்றிபெற ஒரே வழி தான் உண்டு:  எதிரி உருவாக்கும் வாய்புகளைவிட நாம் அதிக வாய்ப்புகளை உருவாக்கவேண்டும். இதை எப்படி செய்வதுபுலிகள் எப்படி சிறு சிறு குழுக்களாக கொரில்லாத்   தாக்குதல் நடத்திவெற்றி பெற்றுமரபுவழிப் படையாக பரிணமித்தார்களோ, அதே போன்ற உத்திகளை இன்றைய சிக்கல்களுக்கு செயல்படுத்த வேண்டும். அதைக் கீழ்வருமாறு செய்யலாம்:

நாம் பல்வேறு சமூக இயக்கங்களை பல வேறுபாடான உத்திகளின் அடிப்படையில் அமைத்து, அடையாளம், குடும்பம், பிறப்பு விகிதம், பொருளாதாரம் என ஒவ்வொன்றிலும் கொரில்லாத் தாக்குதல் போன்று  பல வாய்ப்புகளை உருவாக்கி வெற்றிகொள்ள வேண்டும். எதிரிகளின் உத்தி என்பது அரசு திட்டமிட்டு செய்யும் செயசிக்குறு உத்தி போன்றதுதான். அதை  சமூக இயக்கங்களைக் கட்டி கொரில்லாத் தாக்குதல் நடத்தி எளிதில் வெற்றி கொள்ளலாம். எங்கெங்கெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ அங்கெல்லாம் அடிக்கவேண்டும். எதிரியால் பெரிதாக ஒன்றும் செய்யமுடியாது. ஆயுதப் போராட்டத்தை ஒடுக்க சட்டம் அனுமதிக்கும். ஆனால் சட்டத்தை மீறாத சமூக செயல்பாடுகளை அவர்களால் வேடிக்கைதான் பார்க்கமுடியம். நாம் அரசை இழக்கலாம், நிலத்தை இழக்கலாம், ஆனால் அடையாளத்தையும் பிறப்பு விகிதத்திலும் வெற்றிகொண்டால் வாய்ப்பு கிடைக்கும் பொழுது நிலத்தையும் அரசையும்  உருவாக்கி விடலாம். உலக ஒழுங்கு என்பது நிலையானது அல்ல; அவ்வப்பொழுது உலகு ஒழுங்கில் மறுசீரமைப்பு நடக்கும். அப்பொழுது வாய்ப்பைப் பயன்படுத்தி வெற்றிகொள்ளலாம். இரண்டாம் உலகப்போர் முடிந்த பொழுது உலக ஒழுங்கில்  மறுசீரமைப்பு ஏற்பட்டு உலகில் பலநாடுகள் தோன்றின, அப்பொழுது தமிழினம் தூங்கியதனால்தான் இன்று இவ்வளவு அவலமும். இனி ஒரு நூற்றாண்டுக்குள் மீண்டும் வாய்ப்பு ஏற்படலாம், அதற்கு நாம் தயாராக இருக்கவேண்டும்.  இந்த தமிழ்த்தேசிய பரிணாம உத்தியை  படம்-5 -இல் காணலாம்.

tn-evolution

உதாரணமாக யூதர்கள் அடையாளம், பிறப்பு விகிதம், சமூக அமைப்புகளை மட்டுமே கொண்டு 2000 ஆண்டுகள் அழியாமல் தாக்குப் பிடித்தார்கள். அவர்களுக்கு அரசோ, நிலமோ இல்லை. பின்பு இரண்டாம் உலகப்போர் அளித்த வாய்ப்பில் தனி நாட்டை அடைந்தனர். அடையாளத்தையும், மக்கள் தொகையும் காத்து விட்டால், நாட்டையும்  அரசையும் உருவாக்குவதற்கு நேரம் மட்டுமே தேவை. அவர்களால் எவ்வாறு அடையாளத்தைக் காக்க முடிந்தது என்று பார்த்தால், அடிப்படையில் அவர்கள் சமூக இயக்கங்களைக் கொண்டு  கொரில்லா முறையில்  அதிக வாய்ப்புகளை உருவாக்கியத்தினால்தான். உலக அரசுகள் எவ்வளவோ திட்டமிட்டு பல இனப்படுகொலைகளை செய்தும் அவர்களால் அழிக்க முடியவில்லை. அதேநேரம் யூதர்களை  அழிக்க  முனைந்த  பலமான பண்டைய ரோமாபுரி, எகிப்திய அரசுகள் இன்று இல்லை. இதற்குக் காரணம் அவர்கள். அடையாளத்தைக் காப்பதற்கு அரசை  நம்பி இருந்தனர். அரசு அழிந்தவுடன் அவர்கள் அழிந்தனர்.

மொத்தத்தில் இன்றைய சூழலிலும் நம்மால் பல வெற்றிகளைப் பெறமுடியும். அதற்கு அடிப்படையாக “சிக்கல் அமைப்புகள்” பற்றி அறிவியல் உத்திகளை வகுத்திருக்கிறது. அதுபோன்ற உத்திகளையே புலிகள் போரில் முன்னோடிகளாக பயன்படுத்தி பலவெற்றிகளைக் கண்டனர். அதே உத்திகளை நாம் இன்றை அரசியல் சமூக சூழலிலும் பயன்படுத்தி வெற்றி கொள்ளலாம்.

எவ்வாறு வேறுபட்ட சமூக இயக்கங்களை கட்டி எழுப்பி கொரில்லாத் தாக்குதல் நடத்துவது என்ற கேள்வி எழும். இதற்கான உத்தியை, குறிப்பாக மூன்று விதிகளை,  நாம் ஏற்கனவே பாடம்-2  இல் பார்த்து விட்டோம். விவரத்திற்கு அக்கட்டுரையைப் பார்க்கவும் [7].

இன்று நாம் செய்யும் பிழை என்னவென்றால், நாம் வெற்றிக்காக ஒரு உத்தியைப் பயன்படுத்துகிறோம், அல்லது தேடிக்கொண்டிருக்கிறோம். அதுபோன்ற ஒரு உத்தி என்பது இல்லை. வேறுபட்ட பல்வேறு உத்திகள்தான் வெற்றியைத் தரும், அதனால் அனைத்து முறைகளும் சரியே.  “நமது மூளையில்  ஒரு மோசமான  வியாதி உண்டென்றால் அது “இதுதான் சரியானது,  இது தவறானது” என்பதுதான் என்கிறார் ஒரு சீனப் பெரியோர். அனைத்து வேறுபட்ட முரணான உத்திகளும் ஏற்புடையதே. உத்திகளின், வாய்ப்புகளின் எண்ணிக்கைதான் நமக்கு வெற்றியைத் தருவது. அனைத்தும் ஏற்புடையதே என்பதே வெற்றிக்கான பாதை.

If you want the truth to stand clear before you, never be for or against. The struggle between ‘for’ and ‘against’ is the mind’s worst disease.”  – Jianzhi Sengcan

The only principle that does not inhibit progress is: anything goes – Feyerabend [4]

பி.கு: நான் புலிகளிடமிருந்து கற்றுக்கொள்ளவேண்டும் என்று கூறுவது, அவர்கள் செய்தது அனைத்தையும் சரி என்று நியாயப்படுத்துவது அல்ல. நல்ல உத்திகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதே.

Posted by 

. உசாத்துணை:

  1. Bar-Yam, Yaneer. Making things work: solving complex problems in a complex world. Knowledge Industry, 2004.
  2. Command and Control: The Military Implications of Complexity Theory, http://www.dodccrp.org/html4/bibliography/comch09.html
  3. Ben-Yehuda, Nachman. Masada myth: Collective memory and mythmaking in Israel. Univ of Wisconsin Press, 1996.
  4. Feyerabend, Paul. Against method. Verso, 1993.
  5. பரணி கிருஸ்ணரஜனி, நந்திக்கடல் – ‘தண்ணீர் கோட்பாடு’ (Water Theory), http://www.velichaveedu.com/17218-4/
  6. சு.சேது, ஈழப்போரிலிருந்து நாம் கற்கவேண்டிய பாடங்கள் –  பகுதி 1
  7. சு.சேது, ஈழப்போரிலிருந்து நாம் கற்கவேண்டிய பாடங்கள் – பகுதி 2
  8. பரணி கிருஸ்ணரஜனி, நந்திக்கடல்’ கோட்பாடுகள். ஒரு அறிமுகம், http://eeladhesam.com/?p=5459

முன்னாள் போராளி சேரன் இறுதி நிகழ்வுகள் உலகத் தமிழர் வரலாற்று மைய வளாகத்தில் !

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளி சேரன் 21.01.2019 அன்று பிரித்தானியாவில் சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளார் என பிரித்தானிய தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவரது இறுதி நிகழ்வுகள் Oxford இல் அமைந்துள்ள உலகத் தமிழர் வரலாற்று மைய வளாகத்தில் உள்ள மாவீரர் நினைவு மண்டபத்தில், 03.02.2019 காலை 6.00 மணிக்கு சமய கிரியைகளுடனும் காலை 8.00 மணிக்கு இறுதி வணக்க நிகழ்வுகளுடனும் நடைபெறவுள்ளதாக கூறும் ஏற்பாட்டாளர்கள் மேலும் குறிப்பிடுகையில்…

தகனக் கிரியைகள் அருகில் உள்ள Banbury – Oxford (OX16 1ST) Crematorium இல் காலை 11.00க்கு நடைபெறவுள்ளது.

இதனை தொடர்ந்து மதிய உணவு ஏற்பாடுகள் வரலாற்று மையத்தின் வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

போராட்டத்தில் அளப்பெரும் சாதனைகளுக்கு சொந்தக்காரன், விடுதலைப் புலிகளின் தலைவரின் பாராட்டையும், பரிசும் பெற்ற முன்னாள் தளபதி என கூறப்படுகிறது.
*
தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் சாதனைகள் பல புரிந்து பல வெற்றிகளுக்கு காரணமாக இருந்த புலனாய்வுத்துறைப் போராளி “சேரன்” சுகஜீனம் காரணமாக அதிகாலை பிரித்தானியாவில் சாவடைந்தார்.

யாழ்ப்பாணம் – காரைநகரை பிறப்பிடமாக்க் கொண்ட “சேரன்” தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தன்னை இணைந்து கொண்ட நாள் முதல் எதற்கும் அஞ்சா வீரமும்,உறுதியும், சண்டைக் களங்களை லாவகமாக கையாண்ட விதம், எந்த வேலையையும் சளைக்காது செய்து முடிக்கும் சாமர்த்தியம் போராட்டகளத்தில் அவனை தனித்துவம் மிக்கவனாக துலங்கவைத்தது.

தமிழீழ புலனாய்வுத்துறை இனம்கண்ட மிகச்சிக்கலான இலக்குகளுக்குள் ஆழ ஊடுருவி தனது பணியை சிறப்பாக செய்துமுடித்துக் காட்டியவன் அந்தவகையில் அராலிப்பகுதியில் 08-08-1992ல் இடம்பெற்ற டென்சில் கொப்பேகடுவ மீதான தாக்குதலைக் குறிப்பிடலாம். அந்த தாக்குதல் பங்குபற்றிய ஏழு பேர் கொண்ட அணியில் இருந்து தனது திறமையை வெளிக்காட்டியிருந்தான்.

இறுதி நேர யுத்தத்தின் போது புதுகுடியிருப்பு சந்தியை எதிரி கைப்பற்றுவதற்கு மேற்கொண்ட நடவடிக்கையை எதிர்த்து போராடிய தளபதி சொர்ணம் அவர்களையும், அவரது அணியையும் பாதுகாப்பாக வெளியேற்றும் நடவடிக்கையின் போது மிகவும் கடுமையான விழுப்புண்ணடைந்தார்.

கேணல் சாள்ஸ் அவர்களின் நிர்வாகத்தில் எதிரியின் கட்டுப்பாட்டுப் பகுதியில் இவன் மேற்கொண்ட புலனாய்வு நடவடிக்கைககளும் , அதனால் ஈட்டப்பட்ட வெற்றிகளும் தனித்துவமானவை. இவனது சாதனைகள் அனைத்தையும் வெளியில் சொல்லி விடமுடியாது. இத்தகைய ஒரு ஒப்பற்ற மாவீரனை இன்று தமிழீழ தேசம் இழந்து நிற்கிறது.

இவரது இறுதி வணக்க நிகழ்வுகள் முன்னால் போராளிகளின் தலைமையில் பிரித்தானியாவில் ஒக்ஸ்போட் பகுதியிலுள்ள ‘‘உலகத்தமிழர் வரலாற்று மையம் வளாகத்தில்‘‘ நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் இடம்பெறுகின்றன.

தமிழர் படுகொலைகள் சவேந்திர சில்வாவிற்கு எதிராக ஆவணங்கள் வெளியாகியது !

மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு எதிரான 137 பக்க போர்க்குற்ற ஆவணம்

சிறிலங்காவின் புதிய இராணுவத் தலைமை அதிகாரி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு எதிரான போர்க்குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்களைக் கொண்ட ஆவணம் ஒன்றை, தென்னாபிரிக்காவைத் தளமாக கொண்ட அனைத்துலக உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டம் நேற்று வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக, இந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது-

சிறிலங்காவினுடைய புதிய இராணுவப் பிரதானியான மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவினைப் பதவியில் இருந்து இடைநிறுத்தி அவரை போர்குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களுக்காக வழக்குத் தொடருவதற்கு போதியளவு ஆதாரங்கள் இருப்பதாக அனைத்துலக உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டம் தெரிவித்துள்ளது.

தென்ஆபிரிக்காவை தளமாக கொண்ட விசாரணைக் குழுவானது 2008 – 9 போரின் போது முக்கிய களநிலை கட்டளைத் தளபதிகளில் ஒருவரான சில்வாவினுடைய பணியினை விபரிக்கும் 137 பக்க ஆணவக் கோவையை வெளியிட்டுள்ளது.

இந்த ஆவணக் கோவையானது அவருக்கு எதிரான அல்லது இன்றை வரையான சிறிலங்காவின் போர்க்கால கட்டளைத் தளபதிக்கு எதிரான மிகவும் விரிவான ஆதாரங்களைக் கொண்டுள்ளது.

இது படங்கள், சமகால குறுஞ்செய்திகள், இராணுவத்தினரிடமிருந்து பெறப்பட்ட சாட்சி வாக்குமூலங்கள் மற்றும் போர் முடிவடைந்த பின்னர் உண்மையை மறைப்பதற்காக இணையத்தில் இருந்து அழிக்கப்பட்டு நீக்கப்பட்ட உத்தியோகபூர்வ இராணுவ வெளியீடுகளின் ஆதாரங்கள் இவற்றுடன் கடந்த ஐ நா விசாரணை அறிக்கைகளின் கண்டுபிடிப்புகள் பற்றிய வரைபுகளையும் ஒன்று சேர்த்து தொகுத்துள்ளது.

என்னுடைய அணியினால் பல ஆண்டுகளாக கவனமாகச் சேகரிக்கப்பட்ட அதிர்ச்சியளிக்கும் அளவிலான ஆதாரங்கள் இந்த ஆவணக் கோவையில் உள்ளது” என அனைத்துலக உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டத்தின்  நிறைவேற்றுப் பணிப்பாளர் யஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார்

“அனைத்துலக நீதிமன்றங்களில் அல்லது அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்ட வழக்குகளில் கூட இவ்வளவு ஆதாரங்கள் இருக்கவில்லை. சிறிலங்கா இராணுவத்தின் இரண்டாம் நிலை பதவியில் தொடர்ந்தும் இந்த மனிதர் இருப்பதற்கு சாக்குகள் எதுவும் சொல்ல முடியாது. அவர் உடனடியாக பதவியில் இருந்து நீக்கப்பட்டு குற்றவியல் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும்.”

சிறிலங்காவில் இறுதிப் போர் நடத்தப்பட்ட முறை பற்றி ஆராய்வதற்கு 2010 இல் ஐக்கிய நாடுகளின் பொதுச்செயலாளர் அவர்களால் நியமிக்கப்பட்ட மூன்று அனைத்துலக சட்ட நிபுணர்களில் ஒருவராக சூக்கா இருந்தார்.

இதனைத் தொடர்ந்து 2012 இல் சிறிலங்காவில் ஐ.நாவின் பாரிய தோல்விகள் பற்றி உள்ளக மீளாய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டது அத்துடன் அதன் பின்னர், ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகத்தினாலும்  ஒரு விசாரணை நடத்தப்பட்டது.

“2015 ஆம் ஆண்டு தனது விசாரணைப் பணிகளை நிறைவு செய்த பின்னர் அனைத்துலக உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டம் ஆனது போர் தொடர்பான ஆவணப்படுத்தலையும் அது தொடர்பான சாட்சியங்களையும் சேகரித்து வருகின்றது.

இது, எமது அரச சார்பற்ற அமைப்பானது இறுதிக்கட்ட சிவில் யுத்தம் மற்றும் அதற்குப் பின்னரான மீறல்கள் தொடர்பான மிகவும் விரிவாக ஆவணப்படுத்தப்பட்டுள்ள சாட்சியங்களை இப்பொழுது கொண்டுள்ளது என்பதைக் குறிக்கின்றது.

இந்த ஆவணக் கோவையானது நாங்கள் வைத்திருக்கும் தகவல்களில் ஒரு சிறிய பகுதி மாத்திரமே என சூக்கா தெரிவித்தார். பல வருடங்களாகப் பெற்ற அறிவினைக் கொண்டு அர்ப்பணிப்புமிக்க நிபுணர்கள் குழு செய்த வேலையில் முக்கியத்துவத்துவத்தை இது காட்டுகின்றது.”

2015 ஆம் ஆண்டு புதிய மாற்றங்களை ஏற்படுத்துவதாக வாக்குறுதியளித்த சிறிலங்காவின் புதிய அரசாங்கமானது கலப்பு நீதிமன்றம் உட்பட்ட ஒரு உறுதியான இடைக்கால நீதித் திட்டத்திற்கு ஆதரவு வழங்கும் ஐ நாவின் தீர்மானத்திற்கு இணை அனுசரணை வழங்கியது. பின்னர் அதனை நடைமுறைப்படுத்துவதற்கு மறுப்புத் தெரிவித்தது.

கடந்த காலத்தில் வாக்குறுதிகள் வழங்கியிருப்பினும் பத்து வருடங்களுக்கு முன்னர் முடிவடைந்த போரில் மூத்த இராணுவ அதிகாரிகள் எவரும் அவர்களது நடவடிக்கைகளுக்காக குற்றங்காணப்படவில்லை. பதிலாக குற்றஞ்சாட்டப்பட்ட பலர் பதவியுயர்வு வழங்கப்பட்டுள்ளார்கள்.

ஜனவரி 2019 இல் சவேந்திர சில்வா இராணுவப் பிரதானியபாக பதவியுயர்வு வழங்கப்பட்டமையானது மிகவும் அதிர்ச்சியானதாக இருந்தது. சிறிலங்காவின் பகுதிகளில் முன்னர் இடம்பெற்ற போரில் உயிர்தப்பி இன்னமும் வாழ்ந்துவரும் தமிழர்கள் மத்தியில் இது அச்சத்தையும் பயங்கரத்தையும் ஏற்படுத்தியது. ஆயினும் தெற்கில் உள்ள சிலர் அவரை இன்னமும் ஒரு வீரராகவே கருதுகின்றனர்.

“சவேந்திர சில்வா தண்டனையிலிருந்து பாதுகாப்பை அனுபவிக்கும் வரை அனைத்துலக சமூகம் சட்ட ஆட்சியின் மற்றும் பொறுப்புக்கூறலின் முன்னேற்றம் பற்றி முழுமையாக பேசமுடியாது. இந்த நபர் இராணுவத்தை நிர்வகித்து வரும் வேளையிலும் அத்துடன் அது மோசமான அனைத்துலக குற்றங்களை புறக்கணித்து வரும் வேளையிலும் அமைதிகாக்கும் நடவடிக்கைகளுக்கான ஐ நாவின் திணைக்களம் சிறிலங்காவிலிருந்து அமைதிகாக்கும் படையினரை எவ்வாறு பணியில் அமர்த்த முடியும்.

சிறிலங்கா நடவடிக்கை எடுக்கத்தவறும் பட்சத்தில் இந்தப் பிராந்தியத்தில் சிறிலங்காவுடன் நெருங்கிய இராணுவ உறவினைப் பேணிவரும் நாடுகள் சவேந்திர சில்வாவினுடைய நுழைவு அனுமதிகளை மறுதலிக்க வேண்டும் அல்லது பொதுவான சட்டவரையறையின் கீழ் கைது செய்ய வேண்டும் என நாங்கள் எதிர்பார்க்கின்றோம்”; என சூக்கா தெரிவித்தார்.

2017 ஆம் ஆண்டு இலத்தீன் அமெரிக்காவில் தூதுவராக இருந்த, போரின் போது சவேந்திர சில்வாவின் நேரடி கட்டளைத் தளபதியாக இருந்த ஜெனரல் ஜெகத் ஜெயசூரியவிற்கு எதிராக அனைத்துலக சட்டவரையறையின் கீழ் தொடர்ச்சியான போர்க்குற்ற வழக்குகளை அனைத்துலக உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டம் பதிவு செய்தது.

இந்த வழக்குகளைப் பதிவு செய்வதற்கு முதல்நாள் ஜெயசூரிய நாட்டைவிட்டு தப்பிச் சென்றார் அத்துடன் பிறேசிலிற்கோ அல்லது சிலிக்கோ திரும்பி வந்து ஒரு அனைத்துலக நீதிமன்றத்தில்

தனக்கெதிரான குற்றச்சாட்டுகளை சோதித்துப் பார்ப்பதற்கான எந்த நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை.

ஆவணக்கோவையின் சுருக்கம்

சவேந்திர சில்வா பற்றிய இந்த ஆவணக் கோவையானது 2008 – 9 ஆண்டுகளில் அவர் கட்டளைத் தளபதியாக இருந்த 58 ஆவது படைப்பிரிவு சிறிலங்காவின் வடக்கில் உள்ள தொடர் நகரங்கள் மற்றும் கிராமங்கள் மீது மேற்கொண்ட தாக்குதல்களை விபரிக்கின்றது. அந்த தாக்குதல்கள்

– பொதுமக்கள் மீது வேண்டுமென்றும் கண்மூடித்தனமாகவும் நடாத்தப்பட்ட தாக்குதல்கள்

– வைத்தியசாலைகள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் மீதான தாக்குதல்கள்

– பாதுகாப்பு வலயங்கள் மீதான தாக்குதல்கள்

– தடைசெய்யப்பட்ட மற்றும் கண்மூடித்தனமான ஆயுதப்பாவனை போன்றவற்றை உள்ளடக்குகின்றது.

கட்டளைப் பொறுப்பு

அனைத்துலக சட்டத்தின் கீழ் சவேந்திர சில்வா போன்ற கட்டளைத் தளபதி பின்வருவனவற்றுக்கு நேரடியாக பொறுப்புடையவராவார்:

– சட்டத்திற்குப் புறம்பான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு தனக்கு கீழ் இருந்தவர்களுக்கு கட்டளை வழங்கியமை

– சட்டத்திற்குப் புறப்பான நடவடிக்கைகள் அவருக்கு கீழ் இருந்தவர்களால் மேற்கொள்ளப்பட்டபோது அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் தவறியமை (அவர் அவற்றுக்கு கட்டளையிட்டாரோ இல்லையோ)

சில்வா அனைத்துலக சட்டங்கள் பற்றி இராணுவ வீரர்களுக்கு படிப்பித்து வருவதாக இராணுவம் தெரிவிக்கின்றது. ஆகையால் இது பற்றி அவருக்கு தெரிய வேண்டும்.

பொதுமக்கள் மீதான தாக்குதல்கள்

இந்த ஆவணக் கோவை பொதுமக்களின் உயிரிழப்புகள் மற்றும் காயங்களை ஒரு வகையான அழிவாகவே பார்க்கின்றது. பொதுமக்கள் மீது எவ்வாறான போர் நடத்தப்பட்டது என்பதை தெளிவாக காட்டக்கூடிய ஆயிரக்கணக்கான படங்கள் வெளிவந்துள்ளன. அரசாங்கத்தின் தொடர்ச்சியான தாக்குதல்களுக்கு தற்காலிக வைத்தியசாலைகள் உள்ளான போது ஏற்பட்ட முற்றிலும் பயங்கரமான காட்சிகளை அதனை நேரில் கண்ட சாட்சிகள் விபரிக்கின்றனர்:

அது கூச்சல் குழப்பம் நிறைந்ததாக இருந்தது.அதனை வார்த்தைகளால் விபரிக்க முடியாது. அழுது கொண்டும் கூச்சலிட்டபடியும் பெற்றோர்கள் தமது காயப்பட்ட பிள்ளைகளை இங்கும் அங்கும் பதற்றத்துடன் தூக்கிக் கொண்டு வந்தார்கள். அந்தப் பிள்ளைகள் படுகாயமடைந்திருந்தார்கள். சிலரது அரைவாசி துண்டிக்கப்பட்ட அபயவங்கள் அவர்களின் உடலில் இருந்து தொங்கிக் கொண்டிருந்தது.”

2009 ஆண்டு இடம்பெற்ற போரில் உயிர் பிழைத்த தமிழர்கள் பத்தாண்டுகள் கடந்து விட்ட நிலையிலும் பயங்கரக் கனவுகளாலும் மனவடுவினாலும் இறப்புகள் பற்றி அடிக்கடி வரும் நினைவுகளாலும் இன்னமும் துன்பப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். குழந்தை ஒன்றினுடைய தலை தனக்கு அருகில் வந்து விழுந்ததாக ஒருவர் விபரிக்கின்றார். மற்றவர் தொங்கிக் கொண்டிருந்த தனது குடலைப் பிடித்துக் கொண்டிருந்த ஒரு மனிதரைக் கடந்து சென்றதாக ஞாபகப்படுத்துகின்றார்.

சிலர் பாதுகாப்பிற்காக பதுங்குகுழி வெட்ட முயன்ற போது அங்கு அழுகிய உடல்கள் வருவதைக் கண்டார்கள். வேறு சிலர் இரத்த வெள்ளத்தின் மீது வெறுங்காலுடன் ஓடியதாக கூறுகிறார்கள். தமது அன்புக்குரியவர்கள் ஏற்கனவே இறந்து விட்டது கூட தெரியாமல் அவர்களை பதுங்குகுழிகளுக்குள் கொண்டு செல்வதை அடிக்கடி பார்த்தாக அவர்கள் விபரிக்கின்றார்கள்.

போரில் தப்பி பிழைத்தவர்களின் மனதில் இப்பொழுதும் பயங்கரமான சம்பவங்கள் பற்றிய நினைவுகள் தொடர்ந்தும் உள்ளன. இவர்களில் பலர் போருக்குப் பின்னரான காலப் பகுதியில் தடுத்து வைக்கப்பட்டு சித்திரவதை மற்றும் பாலியல் வன்முறைகளுக்கு உள்ளாக்கப்பட்டார்கள்.

“ஒரு குடும்பத்தில் ஒரு 18 மாதப்பிள்ளையும் அவனுடைய தகப்பனாரையும் தவிர அனைவருமே இறந்தார்கள். இருவரும் தலையில் காயமடைந்தார்கள் அந்த ஆண்பிள்ளை மிகவும் பசியுடன் இருந்தது. அவனுடைய தலையிலிருந்து இரத்தம் ஓடிக்கொண்டிருந்தது. அவனுக்கு தன்னைச் சுற்றி என்ன நடக்கின்றது என்று கூடத் தெரியவில்லை அத்துடன் அவன் மிகவும் பசியுடன் இருந்தமையால் தன்னுடைய தலைக் காயத்தால் ஏற்பட்ட வலி மற்றும் இரத்தம் போன்றவற்றைக் கவனிக்காமல் தன்னுடைய பெருவிரலை சூப்பிக் கொண்டிருந்தான் என்று நான் நினைக்கின்றேன்.”

கிளிநொச்சி தாக்குதல்கள்

கிளிநொச்சி கைப்பற்றப்பட்ட வேளையிலும் அது மீண்டும் மீண்டும் தாக்குதல்களுக்கு உட்பட்ட வேளையிலும் மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா கட்டளைத் தளபதியாக இருந்தார். சவேந்திர சில்வா பொதுமக்கள் இழப்புகள் ஏற்படும் வகையில் வைத்தியசாலை மற்றும் ஐ நாவின் கட்டிடங்கள் போன்ற பொதுமக்கள் இலக்குகள் மீது வேண்டுமென்று தாக்குதல்களை மேற்கொள்வதற்கு கட்டளையிட்டார் என்பதை நிரூபிக்கும் அளவிற்கு போதிய ஆதாரங்கள் உள்ளன.

புதுக்குடியிருப்பு தாக்குதல்கள்

சவேந்திர சில்வா தலைமையிலான 58 ஆவது படையணி புதுக்குடியிருப்பில் இடம்பெற்ற இராணுவ நடவடிக்கையில் நேரடியாக ஈடுபட்டிருந்தது. அரசாங்கத்துடன் தொடர்பில் இருந்தமையால் அவருக்கு வைத்தியசாலையின் ஆள்கூற்று நிலை பற்றி தெரியும். அத்துடன் அந்தப் பிரதேசத்தை நோட்டமிட்ட ஆளில்லா வேவுவிமானங்கள் மற்றும் ட்ரோன் போன்றவற்றுடன் அவருக்கு தொடர்பு இருந்தது.

ஐ நா அதிகாரிகள் வைத்தியசாலை தாக்குதலுக்கு உள்ளாவதாக பலமுறைகள் சிறிலங்கா இராணுவத்திற்கு அறிவித்திருந்தமையால் மேஜர் ஜெனரல் சில்வாவிற்கு புதுக்குடியிருப்பு வைத்தியசாலை குண்டுத் தாக்குதலுக்கும் எறிகணைத்தாக்குதலுக்கும் உள்ளாகி வந்தமை அவருக்கு நன்றாக தெரியும் என்பதை நம்புவதற்கு போதியளவு ஆதாரங்கள் உள்ளன.

தனக்கு கீழ் இருந்தவர்கள் தன்னுடைய முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் பொதுமக்கள் செறிந்து வாழும் பகுதியில் அனைத்துலக மனிதாபிமானச் சட்டத்தை பாரியளவில் மீறும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள் என்பது மேஜர் ஜெனரல் சில்வாவிற்கு தெரியும் அல்லது தெரிந்திருக்க வேண்டும்.

அத்துடன் தான் கட்டளைத் தளபதியாக இருந்தும் அவருடைய சக்திக்கு உட்பட்டதாக இருந்தும் கூட அவர் அந்த தாக்குதல்களை நிறுத்தவில்லை.

pdf :Sri_Lanka_Hospital_Attacks0508_2009

பொக்கணைத் தாக்குதல்கள்

சவேந்திர சில்வாவின் முழுமையான கட்டளையின் கீழ் இருந்த படையினர் பொக்கணையில் இராணுவ நடவடிக்கையில் ஈடுபட்ட நேரத்தில் கண்மூடித்தனமாக மற்றும் வேண்டுமேன்றே பொதுமக்கள் மீது தாக்குதல்களையும் நடத்தினார்கள். இதில் பால் மா வழங்கும் நிலையம் மீதான தாக்குதலும் உள்ளடங்கும். இதில் பொதுமக்களுக்கு பலத்த இழப்புக்கள் ஏற்பட்டன. பல பெண்கள், பிள்ளைகள் கொல்லப்பட்டும் காயத்திற்கும் உள்ளானார்கள்.

தமது கட்டுப்பாட்டிற்கு கீழ் உள்ளவர்கள் பொதுமக்கள் செறிந்து வாழும் பகுதியில் பொதுமக்கள் மீதும் பொதுமக்கள் இலக்குகள் மீதும் வேண்டுமென்று தாக்குதல்களை மேற்கொண்டு வருவதும் அத்துடன் பொதுமக்கள் மத்தியில் இறப்பு மற்றும் காயம் ஏற்படும் வகையில் கண்மூடித்தனமான தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுவது பற்றி சில்வாவிற்கு தெரியும் அல்லது தெரிந்திருக்க சந்தர்ப்பம் உள்ளது. என்பதனை நம்புவதற்கான போதிய ஆதாரங்கள் உள்ளன.

இந்த தாக்குதல்கள் குறிப்பிட்ட நீண்ட காலப்பகுதியில் திரும்பத் திரும்ப இடம்பெற்றன அத்துடன் முன்னைய தாக்குதல்கள் பற்றிய தகவல் அவரைச் சென்றடைந்திருக்க வேண்டும்.

புதுமாத்தளன் தாக்குதல்கள்

மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா புதுமாத்தளன் வைத்தியசாலைக்கு எதிரான இராணுவ நடவடிக்கையை தலைமை தாங்கிச் சென்றார் அத்துடன் அவரின் கட்டளையின் கீழ் இருந்த படையினரே வைத்தியசாலையையும் கைப்பற்றினார்கள் என்பதனை இந்த அறிக்கையிலுள்ள ஆதாரங்கள் உறுதிப்படுத்துகின்றன. வைத்தியசாலைப் பகுதி உட்பட்ட புதுமாத்தளன் பகுதியில் இடம்பெற்ற தாக்குதல்களை மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவே திட்டமிட்டு கட்டளையிட்டதனை நம்புவதற்குரிய போதிய ஆதாரங்கள் உள்ளன. இந்த தாக்குதல்களில் வைத்தியசாலையிலும் அதனை சுற்றிய பகுதியிலும் பொதுமக்களுக்கு பாரிய இழப்புக்கள் ஏற்பட்டன.

வைத்தியசாலையானது பல தடவைகள் தாக்குதல்களுக்கு இலக்கானமையால் பொதுமக்கள் இலக்கினைத் தாக்கும் நோக்கத்துடனான தாக்குதல்களை மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவே கட்டளையிட்டார் என்பதை நம்புவதற்குரிய போதிய ஆதாரங்கள் உள்ளன. இதனைவிட புதுமாத்தளனில் நடத்தப்பட்ட தாக்குதல்கள் ஒரே மாதிரியானதாக இருக்கவில்லை என்பதனை நம்புவதற்குரிய போதிய ஆதாரங்கள் உள்ளன.

வலைஞர்மடம் தாக்குதல்கள்

சவேந்திர சில்வாவின் படையினர் வலைஞர்மடத்திலுள்ள வைத்தியசாலை மற்றும் கிறிஸ்தவ தேவாலயம் மீதான தாக்குதல்களில் ஈடுபட்டிருந்ததனை நம்புவதற்குரிய போதிய ஆதாரங்கள் உள்ளன. இதனால் பொதுமக்களுக்கு இழப்புக்கள் ஏற்பட்டதுடன் கட்டடங்களுக்கும் சேதங்கள் ஏற்பட்டன. 58 ஆவது படைப்பிரிவு உட்பட்ட சிறிலங்கா இராணுவத்தினர் எறிகணைகள் டாங்கிகள் மற்றும் கொத்துக்குண்டுகளை கண்மூடித்தனமான வழிகள் மற்றும் போர் முறைகளிலும் பயன்படுத்தினார்கள்.

மேஜர் ஜெனரல் சில்வாவின் முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் இருந்தவர்கள் வேண்டுமென்றே வலைஞர்மடத்திலிருந்த பொதுமக்கள் மீதும் பொதுமக்கள் இலக்குகள் மீதும் தாக்குதல்களை மேற்கொண்டு வந்தார்கள். அத்துடன் பொதுமக்கள் மத்தியில் பெரியளவில் இறப்பு மற்றும் காயத்தை ஏற்படுத்தும் வகையில் கண்மூடித்தனதான தாக்குதல்களையும் மேற்கொண்டார்கள் என்பதனை அவர் அறிந்திருக்க வேண்டும் என்பதை நம்புவதற்குரிய போதிய ஆதாரங்கள் உள்ளன.

முள்ளிவாய்க்கால் தாக்குதல்கள்

மேஜர் ஜெனரல் சில்வாவின் முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் இருந்தவர்கள் வேண்டுமென்றே முள்ளிவாய்க்கால் பகுதியிலிருந்த பொதுமக்கள் மீதும் பொதுமக்கள் இலக்குகள் மீதும் தாக்குதல்களை மேற்கொண்டு வந்தார்கள் அத்துடன் பொதுமக்கள் மத்தியில் பெரியளவில் இறப்பு மற்றும் காயத்தை ஏற்படுத்தும் வகையில் கண்மூடித்தனதான தாக்குதல்களையும் மேற்கொண்டார்கள் என்பது அவருக்கு தெரியும் அல்லது அறிந்திருக்க சந்தர்ப்பம் உண்டு என்பதனை நம்புவதற்குரிய போதிய ஆதாரங்கள் உள்ளன.

மேலும்அவர் “தரைப்படையினரை நேரடியாக வழிநடத்திச் சென்றமையால்”; அவர் அந்தப் பிரதேசத்தில் இருந்தார் அத்துடன் அப்போது பாதுகாப்பு வலயம் – 32 சதுர கிலோமீற்றர்களைக் கொண்டதாக இருந்தமையால் அவர் இடம்பெயர்ந்த பொதுமக்கள் தாக்குதல்களால் பாதிக்கப்பட்டுக் கொண்டிருந்ததை அவர் பார்த்திருக்க வேண்டும் என்பதை ஆதாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

தன்னுடைய கட்டளையின் கீழ் இருந்தவர்களில் இவற்றுக்கு பொறுப்பானவர்களை அவர் தண்டித்தார் அல்லது இவ்வாறான தாக்குதல் இடம்பெறுவதைத் தடுப்பதற்கு தேவையான எல்லா நடவடிக்கைகளையும் எடுத்தார் என்பதை உறுத்திப்படுத்தும் ஆதாரங்கள் எதுவும் இல்லை.

சரணடைவுகள்

வட்டுவாகல் பாலத்தடியில் இடம்பெற்ற சரணடைவுகள் 58 ஆவது படையணியிடமே இடம்பெற்றதாக ஐ.நா அறிக்கை தெரிவிக்கின்றது. அந்தப் பகுதியில் ஒட்டுமொத்த கட்டளைகளுக்கும் பொறுப்பாக இருந்தாக கூறும் மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா அவரிடம் சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் தலைவர்களுடன் தனிப்பட்ட ரீதியில் கைகுலுக்கி கொண்டார்.

அவர்களுடைய இறந்த உடல்கள் கொஞ்ச நேரத்திற்குப் பின்னர் வட்டுவாகல் பாலத்திற்கு மற்றைய பக்கத்தில் இருந்த வீதியோரத்தில் காணப்பட்டன என அனைத்துலக உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டம் இனால் செவ்வி காணப்பட்ட நேரடிச் சாட்சி ஒருவர் தெரிவித்தார்.

அவர் அங்கு பிரசன்னமாகியிருந்ததையும் அந்தப் பகுதிக்கு கட்டளை வழங்கியதையும் கருத்திற் கொண்டு அவருடைய பொறுப்பின் கீழ் இருந்த படையினரே சரணடைந்தவர்கள் பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டமைக்கும் மற்றும் அவர்களில் சிலர் உடனடியாக படுகொலை செய்யப்பட்டமைக்கும் பொறுப்பு என்பது அவருக்கு தெரியும் அல்லது அதனை தெளிவாக காட்டும் தகவல்களை வேண்டுமென்றே கவனத்தில் எடுக்காமல் விட்டார் என்பதை நம்புவதற்குப் போதிய ஆதாரங்கள் உள்ளன.

பாலியல் வன்புணர்வு மற்றும் ஏனைய வடிவிலான பாலியல் வன்முறை மற்றும் சித்திரவதை

சித்திரவதையினை மேற்கொள்வதற்கு மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா அனுமதி வழங்கினார் என சித்திரவதை செய்யப்பட்ட சாட்சியொருவர் வாக்குமூலம் வழங்கியுள்ளார். சிறிலங்கா பற்றிய அதிகாரபூர்வ  விசாரணை அறிக்கை மற்றும் இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள சாட்சியங்களையும் கருத்தில் எடுத்துப் பார்க்கும் போது தன்னுடைய முழுக்கட்டுப்பாட்டின் கீழ் இருந்த படையினர் சித்திரவதையில் ஈடுபட்டமை மற்றும் அவர் இந்த வன்முறைகளை தடுக்க தவறியதுடன் அதற்குப் பொறுப்பானவர்களையும் தண்டிக்க தவறிவிட்டார் என்பதால் அவருக்கு இது பற்றி தெரியும் அல்லது தெரிந்திருக்க சந்தர்ப்பம் இருந்தது என்பதை நம்புவதற்கு போதிய ஆதாரங்கள் உள்ளன.

இவ்வாறே இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள சாட்சியங்கள் மற்றும் சிறிலங்கா பற்றிய உத்தியோகபூர்வ விசாரணையின் கண்டிபிடிப்புக்களையும் கருத்தில் எடுத்துப் பார்க்கும் போது மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவின் முழுக்கட்டுப்பாட்டின் கீழ் இருந்த படையினரால் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்ற, பாலியல் வன்முறை, சித்திரவதை மற்றும் அவமானப்படுத்துதல்கள் போன்றவற்றுக்கும் அத்துடன் சித்திரவதை ஒரு தனியான குற்றமாகவும் சவேந்திர சில்வா குற்றச்சாட்டுக்களை எதிர்நோக்க முடியும். அத்துடன் எதிர்நோக்க வேண்டும்.” என்று கூறப்பட்டுள்ளது.

கடற்புலிகளின் நகர்திறன் ஆற்றலை வெளிப்படுத்திய கடற்சண்டை !

புலிகளுடான போரில் சிங்களப் கடற்ப்படை ஆற்றும் மிக முக்கியா பணியாக இப்போது குடா நாட்டிற்கான இராணுவ விநியோகம் உள்ளது .இந்த இராணுவப் பணியையும் தனித்த ஒரு விநியோகக் கப்பல் என்றில்லாமல் பல் சண்டைகளங்கள் உள்ளிட்ட ஒரு கப்பல் அணியாக செயற்பட்டே கடற்போக்குவரத்தை நடாத்தவேண்டிய நிர்பந்தத்தில் அது உள்ளது !

செலவு அதிகம் என்றாலும் கப்பல் அணிப் போக்குவரத்து உபாயம் பாதுகாப்பிற்கு உத்தரவாதமானது என்று கருதப்பட்டது. இந்தக் கணிப்பில் 22.02.98 அன்று மண் விழுந்து விட்டது.  அன்றே கடற் சண்டையில் பருத்தித்துறைக் கடலில் ஒரு சரக்குக் கப்பலும் – காங்கேசன்துறைக் கடலில் ஒரு தரை இறங்கு கலமும் மூழ்கடிக்கப்பட்டன. இதன் மூலம் கப்பலணிப்போக்குவரத்துக்கு இருந்த பாதுகாப்பு உத்தரவாதம் கேள்விக்குறியாகிவிட்டது.

“கடற்புலிகளின் நகர்திறன் ஆற்றலை இந்த கடற் சண்டை எதிரிக்குப் புலப்படுத்தியிருக்கும்”

சிங்களக் கடற்படைக்கும் கடற்புலிகளுக்குமிடையே நடைபெறுகின்ற கடற்சண்டைகள் இப்போது பெரும்பாலும் ஆழ்கடல் சமர்ப்பரிமாணத்திலேயே நடைபெறுகின்றன.

1994-இல் இந்த புதிய சமர்ப் பரிமாணம் ஆரம்பமாகிவிட்டது மன்னார்கடலில் 19.01.94 அன்று இடம் பெற்ற சாகரவர்த்தனா மூழ்கடிப்புடன் ஆழ்கடல் சமர்ப்ப ரிமாணம்
உறுதியாக வெளிப்படுத்தப்பட்டது. அவை எறியும் ஆழ்கடலில் அதற்கென்று விஷேடமாகத் தயாரிக்கப்பட்ட கடற்கலஙங்களை வைத்தே சண்டைகள் நடாத்த முடியும்.இந்த வகை கடற்கலங்களையே சிங்கள கடற்படைவைத்திருக்கின்றது. இந்த வசதியை கடற்புலிகள் இதுவரை பெறவில்லை . ஆயினும்
இருக்கக்கூடிய சாதாரண சண்டைப்படகுகளை பயன்படுத்தி, கடற்புலி திறமையான வகையில் ஆழ்கடல சண்டைகளையும் அண்மைக் காலமாக நடாத்தி வருகின்றனர் கடற்சண்டையுடன் கூடிய கரும்புலித் தாக்குதலகளை, கடற்புலிகளது முக்கிய ஆயுதமாக விளங்குகின்றன

வெடிமருந்தேற்றப்பட்ட கரும்புலிப்படகுகள் எதிரியின் கடற்கலங்களுக்கு தொடர்ந்தும் அசசுறுத்தலைக் கொடுத்து வருகின்றன எனினும் 22.02.98 அன்று குடாநாட்டின் கடற்பரப்பில் பலமனி நேரம் நடைபெற்ற கடற்சண்டை ஆழ்கடற்சமரில் ஒரு வளர்ச்சிக்கட்டத்தைப் புலப்படுத்திவிட்டது இந்த கடற்சண்டை பிரத்தியேகமான சில இராணுவ அம்சங்களையும் கொண்டுள்ளது.

எதிரியின் ஆக்கிரமிப்பிற்குள் உள்ள தரைப்பகுதியை கரையாகக் கொண்ட கடல் வலயத்தில் இந்தகடற் சண்டை பலமணி நேரம்நடந்துள்ளது என்பது ஒரு இராணுவ அம்சம்.

அத்துடன், கடற்புலிகள் தங்களது கட்டுப்பாட்டிலுள்ள களப்பிரதேசத்திலிருந்து மிக நீண்ட தூரத்திற்கு எதிரி வலயத்திற் கூடா ஊடுருவி “சமநேரத்தில் தரைப்படையையும் இக் கட்டுக்குள் சிக்கச்செய்வித்து- வான் படையையும் முடக்குவித்து கடற்படையையும் கட்டிவைக்க முற்படும் வகையில் தலைவர் பிரபாகரனின் போர்ச்செயற்பாடுகள் அமைந்துள்ளன”

துணிகரமான ஒரு கடற் சண்டையைவெற்றிகரமாக நடாத்திவிட்டு பாதுகாப்பாக தளம் மீண்டர் என்பதுசண்டையின் மிக முக்கிய இராணுவஅம்சமாகும் இதேவேளை , கடற்புலிகளின் நகர்திறன் ஆற்றலை இந்த கடற்சண்டை எதிரிக்குப் புலப்படுத்தியிருக்கும் இந்த வகையில், சில ராங்குகள் மற்றும் இராணுவ உபகரணங்களூடன் சென்ற ஒரு கொள்கலன் கப்பலையும் ஒரு தரையிறங்கும்கலத்தையும என, இரண்டு கடற்கலங்களை மூழ்கடித்தும் 50-ற்கும்மேற்பட்ட படையினரைக் கொன்றும கடற்புலிகள் ஒரு ஆழ்கடல் சண்டையை வென்றுள்ளார். 400படையினரை ஏற்றிச்சென்ற இன்னொரு தரையிறங்கு கலம் தாக்குதலிலிருந்து தப்பியது படையினருக்கு கிடைத்த அதிஷ்டமாகப் போய் விட்டது.

இரண்டாம் ஈழப்போர்க்காலத்தில் சிறீலங்கா அரசுக்குச் சொந்தமான சுமார் 8000 தொன் எடையுள்ள கடற்கலன்களை புலிகள்கடலடிக்கு அனுப்பி வைத்தனர்
இதே வேளை 3-வது ஈழப்போரில்இதுவரை சுமார் 7000 தொன்எடையுடைய சிங்களத்து கடற்கலன்கள் மூழ்கடிக்கப்பட்டுவிட்டன.மொத்தத்தில் 15000 தொன்களுக்கும் மேற்பட்ட நிறையுடைய சிங்களத்துக் கடற்கலன்கள் தமிழீழக்கடற் பரப்பில் புதைக்கப்பட்டுள்ளன.

ஒரு விடுதலைப் போரில் இந்தகடற் சமர்ப் பரிமாணம் ஒரு உலக அதிசயமாகவே இராணு வரலாற்றில் பொறிக்கப்படும் குடாநாட்டிற்க்கான இராணுவ
விநியோகத்திற்காக ஒரு தரைபபாதை திறந்துவிட் டால், விநியோகப்பனி என்ற சுமையிலிருந்து கடற்படை தன்னை விடுவித்து கடற் சமரில் தீவிர கவனம் செலுத்தும்என்று படைத்தலைமை நம்பியிருந்தது. ஆனால் தரைபாதை அமைப்புபடுமோசமான நெருக்கடியைச் சந்தித்து- தடம்புரண்டு நிற்கின்றது.

இதேவேளை, பாதுகாப்பானதுஎன்று கருதப்பட்ட – ஆழ்கடல் வழியே நடைபெற்ற கப்பல் அணி விநியோகமும் பாதுகாப்பற்றதாகமாறிவிட்டதால் முன்னைப்போதையும் விட இப்போது, குடாநாட்டிற்காண இராணுவ விநியோகம் பாரிய நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது.

சம நேரத்தில் தரைப்படையையும கட்டுக்குள் சிக்கச்செய்வித்து படையையும முடக்குவித்து கடற்படையையும் கட்டிவைக்க முற்படும் வகையில் தலைவர் பிரபாகரனின் போர்ச்செயற்பாடுகள் அமைந்துள்ளன.

எரிமலை-மீள் வெளியீடு

http://www.eelamview.com/2016/02/29/sea-tigers-6/

அன்புச்சோலை மூதாளர் பேணலகம் !


எங்கட பிள்ளைகள் தேசத்தைக் காத்தார்கள் தேசம் இப்ப எங்களைக் காக்கிறது.

எழுபது எழுபத்தைஞ்சு வயசிலயும் இப்படி நாங்கள் இருக்கிறம். எங்கட வீடுகளிலையெண்டாலும் இவ்வளவு அன்பா ஆதரவா நாங்க இருப்பமே?

கிளிநொச்சியில் டிப்போ சந்தியிலிருந்து கோணாவில் நோக்கிய வீதியில், ||அன்புச்சோலை|| என எல்லோராலும் அழைக்கப்படும், முதியோர் பேணலகத்தில் நான் நின்றுகொண்டிருந்தேன்.

கடந்த மூன்று தசாப்தங்களாக, எம்மீது திணிக்கப்பட்ட போரின் வடுக்களை எம்தேசம் இன்னும் ஆற்றிக்கொள்ளாது தவிக்கின்றது. எம்மீது திணிக்கப்பட்ட கொடிய போரின் வடுக்களை இன்றும் சுமப்பவர்கள் எங்கள் முதியவர்கள். தொடர்ச்சியான இடப்பெயர்வின் அவலங்களினாலும், போர் சிதைத்த அவர்களின் பொருளாதாரத்தினாலும், தமது குடும்பங்களை இழந்து, உறவுகளைக் கைவிட்டு, ஏதிலிகளாக, யாருமற்றவர்களாக எம் சமூகத்தில் கைவிடப்பட்ட முதியோர் தொகை ஏராளம்.

திக்குக்கொன்றாய் சிதறிவிட்ட தம் உறவுகளைத் தேடியலைந்து, களைப்படைந்து, கைவிடப்பட்டு, தமது ஊரிழந்து, வீடிழந்து, தொழிலிழந்து. யாருமற்று கொடிய முதுமையிலும், தீராத நோய்களினாலும் யாருமற்றுவிட்டோம் என்ற மன உளைச்சலாலும் நொந்து அலைந்த எம் முதியவர்கள் யாருமற்று வாழ்ந்த வாழ்வு அவலமானது.

” நாங்க யாழ்ப்பாணத்தில இருக்கேக்க ஆமியால என்ர ஒரு மகள் சுட்டுக் கொல்லப்பட்டுட்டாள் ”

” மற்ற மகள் நாட்டை காக்க போராடப் போயிட்டாள் ”

” இடம்பெயர்வில் என்ர கணவனும் செத்திட்டார். உறவுகள் எல்லாம் திக்குக்கு ஒண்டாய் திசைக்கொண்டாய் பிரிஞ்சு போச்சுதுகள். நான் தனிமரமா ஆகிட்டன் ”

அவர்தான் யுத்தம் மிகக் கொடுமையானதாக இருந்த 2001ஆம் ஆண்டுகளில், அன்புச்சோலை உள்வாங்கிய முதலாவது தாய்.

2001 ஏப்பிரல் 19 வன்னி மண்ணில் யுத்த மேகங்கள் கருமை சூழ்ந்து தன் உச்ச தாண்டவத்தை ஆடிய நேரம், போரினால் கைவிடப்பட்டு, யாருமற்று அனாதைகளாகப்போன எம் தேசத்து முதியவர்களுக்கான பராமரிப்பு இல்லம் ஒன்றை ஆரம்பிக்குமாறு தேசியத் தலைவர் அவர்கள் பணித்தபோது, தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளிகள் மாவீரர் குடும்பநலன் காப்பகத்தினால், முல்லைத்தீவின் முள்ளியவளைப் பகுதியில்|| அன்புச்சோலை மூதாளர் பேணலகம் || உதயமாகியது.

அன்றைய போர்ச் சூழலில், மிகுந்த கஸ்ரங்களின் மத்தியில் ஆரம்பிக்கப்பட்ட அந்த இல்லத்தின் நிலைபற்றி அப்போது அங்கிருந்த தாயொருவர் சொன்னார்,

” அப்ப சரியான சண்டை சூழ்நிலை தம்பி, எல்லாரையும் போலதான் நாங்களும் சரியாக் கஸ்ரப்பட்டம். ஆனா, எங்களையும் எல்லோரும் கைவிட்டு விடேல்ல, எங்களையும் பார்க்க தம்பியவை இருக்கினம் எண்ட நிம்மதியிலிருந்தம்.”

ஆரம்பத்தில், தேச விடுதலைக்காய் தம் குழந்தைகளை இழந்து, போரின் கோரத்தினால் தம் உறவுகளையும் இழந்து தனித்துப்போன ஆறு பெற்றோர் இனங்காணப்பட்டு அவர்களுடன் அன்புச்சோலை உதயமானது.

2002ஆம் ஆண்டளவில் முல்லைத்தீவில் இருந்து கிளிநொச்சி உருத்திரபுரம் பகுதிக்கு இடம் மாற்றப்பட்டு, தற்போது கிளிநொச்சி நகரிற்கு அண்மித்த சூழலில், கனகபுரத்தில் அமைதியான ஒரு வளாகத்தில் அன்புச்சோலை தன் உறவுகளை அணைத்துக் கொண்டிருக்கின்றது.

அன்றைய பகற்பொழுது, நான் அன்புச்சோலை மூதாளர் பேணலகத்தின் வரவேற்பறையில், மாவீரர் போராளிகள் குடும்பநலன் காப்பகப் பொறுப்பாளருடன் அன்புச்சோலை பற்றிக் கதைத்துக்கொண்டிருந்தேன்.

அன்புச்சோலை இல்லத்தின் செயற்பாடுகள் மூன்று கட்டங்களாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகச் சொன்னார்கள்.

வரவேற்பு மண்டபத்தைக் கடந்து நான் உள்ளே பிரவேசித்தேன். அமைதியான அந்தச் சூழலில் ஆண்களுக்கெனவும் பெண்களுக்கெனவும் தனித்தனியாக விடுதிகள் அமைக்கப்பட்டிருந்தன. மீண்டும் நம்பிக்கை கொள்ளும் அவர்களின் வாழ்வுபோல முற்றத்தில் அவர்களில் சிலர் நீரூற்றி வளர்க்கும் பூமரங்கள் துளிர்த்திருந்தன. ” வாங்கோ ராசா ” என என் கைபற்றி அழைத்துச் சென்ற முதிய தாயின் அரவணைப்புடன், என்னைச் சூழ இருந்து கதைத்துக் கொண்டிருந்தவர்களின் அன்பில் நான் லயித்துப்போனேன்.

என்னமாதிரி அம்மாக்கள்? எல்லாரும் சுகமே? நான் அவர்களுடன் கதைக்கத் தொடங்கினேன். ” இஞ்சை எங்களுக்கு என்ன கஸ்ரம் தம்பி. இப்பதான் கோயிலுக்கு(சேர்ச்) போட்டு வந்தனாங்கள் ” என அவர்கள் கதைக்கத் தொடங்கினார்கள்.

பன்னிரண்டு அம்மாக்களும், பதினொரு ஐயாக்களுமாக அப்போது இருபத்திமூன்று பெற்றோர் அங்கே இருந்தனர். ஆண்களுக்கு, பெண்களுக்கென அமைக்கப்பட்டிருந்த தனித்தனி விடுதிகளைக் காட்டி என்னுடன் இருந்த அம்மாக்கள் கதைத்தவாறிருந்தார்கள்.

” இதுதான் தம்பி இப்ப நாங்கள் தங்கிற இடம் ”

” ஒவ்வொரு அறையையும் இரண்டு ரெண்டு பேர் தங்கிறநாங்கள், இஞ்சால சாப்பிடுற இடமிருக்கு, பொதுவான குளியலறைகள் இருக்கு, கோலுக்குள்ள ரீவி டெக்கும் இருக்கு ”

” பொழுதுபோக்க ரிவியும் பாக்கிறநாங்கள் ”

முன் வராந்தாவில் போடப்பட்ட கதிரைகளில் இருந்து நாங்கள் கதைத்துக் கொண்டிருந்தோம்.

பூச்சாடிகளுடன் சுத்தமாகவிருந்த அந்த வரவேற்பு அறையில் ஒருபுறம் தொலைக்காட்சிப் பெட்டியிருந்தது. அவர்கள் தங்கும் ஒவ்வொரு அறையும் வரவேற்பு அறையின் இரு பக்கமும் இருந்தன.

” நாங்கள் இப்ப கொஞ்சம் முன்னம்தான் பால் குடிச்சனாங்கள். நீங்களும் கொஞ்சம் குடியுங்கோ தம்பி ” என அந்தத் தாய் நீட்டிய பாலை நான் வாங்கிக்கொண்டேன்.

” இஞ்ச வரமுன்னம் எனக்கு வீட்டில யாருமில்லை தம்பி ”

” என்ர மகனும் வீரச்சாவடைந்திட்டான் ”

” மற்ற உறவுகளும் என்னை சுமையாகக் கருதிச்சினம். அப்பதான் தம்பியவை என்னை இஞ்ச கூட்டியந்தவை ”

ஒரு மாவீரனின் தாய் என்னிடம் சொன்னாள்.

” என்ரை பிள்ளையள் கூட என்னைக் கைவிட்டிட்டுது அப்பன் ”

” ஆனா தலைவர் (தமிழீழ தேசியத் தலைவர்) எங்கள கைவிடேல்ல ”

என்றார் இன்னுமொரு தாய். ” ஒருத்தருக்கும் வருத்தம் துன்பம் கடுமையில்லையே? ” என கேட்டேன்.

” எல்லாம் இருக்கு தம்பி, ஆனா இப்ப நாங்கள் அதற்குக் கவலைப்படுவதில்லை ” என சிரித்தவாறே சொன்னார்கள்.

அந்தப் பேணலகத்தினுள்ளேயே தமக்குத் தனியான மருத்துவ விடுதி இருப்பதாகச் சொன்னார்கள். ஒரு மருத்துவப் பெண்போராளி – விடுதலைப்புலிகள் மருத்துவப் பிரிவுப் போராளி – தங்களை பிள்ளை மாதிரி பார்ப்பதாகச் சொன்னார்கள்.

மாதமொருமுறை, என தேவைப்படும் போதெல்லாம் மருத்துவப் பிரிவைச்சேர்ந்த தேவா டொக்ரர் அன்ரியும், வந்து பார்ப்பதாகச் சொன்னார்கள்.

டாக்டர் பொன்னம்பலம் ஞாபகார்த்த மருத்துவமனையில் மேலதிக சிகிச்சைக்காக நோயாளர்கள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவதாகவும் சொன்னார்கள்.

அவர்களுடைய ஒவ்வொரு வார்த்தையிலும் மகிழ்ச்சியிருந்தது. மீண்டும் மீண்டும், தாங்கள் அரவணைக்கப்படுகின்றோம் என்ற திருப்தியிருந்தது.

மாலைவேளையில், முடியுமானவர்கள் அவர்களுக்கு முன்னால் உள்ள பூமரங்களுக்கு நீரூற்றி அவற்றை பராமரிப்பதாகச் சொன்னார்கள். மூதாட்டியொருத்தி அவர்கள் கோழி வளர்க்கும் கோழிக்கூட்டையும் அழைத்துச்சென்று எனக்குக் காட்டி மகிழ்ந்தார்.

” இதுகள் போடுற முட்டையளக் கூட நாங்கள் எல்லோருமாத்தான் பொரிச்சு சாப்பிடற நாங்கள் ” என்றார்.

தையல், பன்னம் என அவர்கள் பொழுதுபோக்காய் தாம் செய்தவற்றை என்னிடம் காட்டினார்கள்.

” ஒன்றிரண்டு பேருக்கு கொஞ்சம் வருத்தம் கடுமைதான் தம்பி, மிச்சாக்கள் எல்லாருமாச் சேர்ந்து அவையளையும் சந்தோசமாய் வைச்சிருக்கிறம் “.

என்றார் நோய்வாய்ப்பட்ட ஒரு மூதாட்டியை என்னருகே கைத்தாங்கலாக அழைத்துவந்து இருத்திய ஒருவர்.

கரும்புலி மேஜர் கலைச்செல்வனின் தந்தை ஆறுமுகம் ஐயாவையும் அம்மாவையும் அங்கே சந்தித்தேன். அவர்கள் தம்பதியாகவே அங்கேயிருந்தனர். அந்த வளாகத்தினுள்ளேயே குடும்பமாக தாங்கள் இருப்பதற்கு ஒரு சிறிய வீடு அமைக்கப்படுவதாக அவர்கள் சொன்னார்கள்.

” நாங்கள் ஒவ்வொரு நாளும் என்ன செய்யாட்டிலும், பேப்பர் மட்டும் படிக்காம விடமாட்டம் ”

” ஏனெண்டா தம்பி, நீங்கள் எல்லாம் எப்படி இருக்கிறியள் என்று அறியத்தான் ” எனத் தொடங்கிய தந்தையொருவர், ” பின்னேரங்களில் நாங்கள் கொஞ்சப்பேர் சேர்ந்து சும்மா கொஞ்சத் தூரம் நடையாய் போய் வாறநாங்கள் ” எண்டார்.

” பிறகென்ன அம்மாக்கள், சண்டை சச்சரவொண்டும் இல்லையே? ” எனக் கேட்டபோது,

” என்னடா தம்பி, நாங்கள் போராளியளிண்ட தாய்மார். கொஞ்சம் ரோசம் வரும்தானே. ஆனா அடிபடமாட்டம். சும்மா பகிடிக்கு கதைபடுவம் ” என சொல்லிச் சிரித்தனர்.

தங்குமிடங்கள், சமையல்கூடம், தனியான மருத்துவமனை, பூந்தோட்டங்கள் தவிர தனியானதொரு வரவேற்புக் கூடமும் அங்கே இருந்தது. பெண்கள் ஆண்களென தேவையானபோது அவர்களுக்கு உதவவென பணியாளர்களும் அவர்களுடனிருந்தனர்.

வாரம் இருமுறை ” அன்னை இல்லத்தில் ” இருந்து உளவளத்துணை ஆலோசகர்களும் தம்மிடம் வந்து கதைத்துச் செல்வதாகக் கூறிய அவர்களிடம், அவர்களது எஞ்சிய உறவினர்களும், புலம்பெயர்ந்த இடங்களில் இருந்துவரும் உறவுகளும் இடைக்கிடை வருவதாகச் சொன்னார்கள்.

” அன்புச்சோலை ” யின் உள்ளகப் பயனாளர்களைவிட மேலதிகமாக ஐம்பது வரையான முதியவர்கள் அன்புச்சோலையின் குடும்பத்தில் இருந்தார்கள். இவர்கள் தமது சொந்த விடுகளிலும், உறவினர்களுடனும் தற்போது வாழ்ந்தாலும், தமக்கான முகவரியாக அன்புச்சோலையையே சொல்லிவருகின்றனர். அவர்களுக்கும் எதாவது மருத்துவஉதவியோ தனிப்பட்ட உதவியோ அல்லாதுவிடின் அவர்களுக்கான மேலதிகபராமரிப்போ தேவைப்படும்போது அன்புச்சோலையே அவர்களை பொறுப்பெடுக்கின்றது.

அன்புச்சோலையில் இவ்விரண்டு உள்ளக, வெளியேயான பயனாளர்களைவிட, மூன்றாவதாக, இன்னமும் அன்புச்சோலையில் இல்லாவிடினும் தமக்கான உதவியோ, மருத்துவ வசதியோ பராமரிப்போ தேவைப்படும் முதியவர்களை சிறிதுகாலம் அன்புச்சோலை தானே பொறுப்பெடுத்து பராமரித்து அவர்கள் மருத்துவ ரீதியில் குணப்படுததப்பட்ட பின், அவர்களை அவர்களது வீட்டில் சேர்க்கின்றது.

தமிழீழத்தின் எல்லா மாவட்டங்களில் இருந்தும் விடுதலைப் புலிகளின் அரசியல்துறையினராலும், மாவீரர் போராளிகளின் குடும்பநலன் காப்பகத்தாலும் இனங்காணப்படும் முதியவர்கள் அன்புச்சோலைக்கு அழைத்துவரப்படுகின்றனர்.

04.06.2004 அன்று அவர்களுடைய இல்லத்தில் புதிதாக கட்டப்பட்டதொரு தங்குமிடத்தின் திறப்புவிழா. அவர்கள் எல்லோருமே அன்றைய நிகழ்வில் ஆழ்ந்திருந்தனர். திடீரென அவர்கள் யாருமே எதிர்பார்க்காதொரு இனிய அதிர்ச்சி. அவர்களது வளாகத்தில் வேகமாகவந்து நின்றதொரு வாகனத்திலிருந்து தமிழீழத் தேசியத்தலைவர் அவர்கள் இறங்கினார்.

” உண்மையில தம்பி எங்களுக்கு கனவுபோல இருந்திச்சி ”

” அவரை நாங்கள் பாத்திட்டம். அவர் தன்ர கையால எங்களுக்கு பரிசும் தந்தவர்.”

” நாங்கள் அவரை கும்பிடப்போக எங்கட கையைப் பிடிச்சு நா தழுதழுக்கச் சொன்னவர் ”

” நீங்கள் இல்லையம்மா, நான் தான் உங்கள் எல்லாரையும் கும்பிடவேண்டும் ” என்று.

” எங்களுக்கு எல்லாருக்கும் அழுகையே வந்திட்டுது ”

” அவரை கண்டிட்டம், இனி நாங்கள் செத்தாலும் பறவாயில்லை ”

அன்றைய நாளை என்னிடம் சொல்லும்பொழுதே அவர்கள் எல்லோரது கண்ணிலும் ஆனந்தக் கண்ணீர்.

|| அன்புச்சோலை மூதாளர் பேணலகம் நிகழ்வில் தேசியத் தலைவர் அவர்கள்…

யாருமற்றவர்கள் தாங்கள் இல்லையென அன்புச்சோலை மூதாளர் பேணலகம் அவர்களுடன் இன்றிருக்கின்றது. தமிழீழத்தின் எங்கிருக்கும் பெற்றோரும் தம் முதுமையின்போது இனியொருபோதும் தாம் கைவிடப்பட்டவர்கள் இல்லை.

அவர்களிடம் இருந்து நான் பிரிந்துவந்த அந்த மதியப் பொழுதுகளில், அங்கே மாவீரன் ஒருவனின் தாய் கூறிய வார்த்தைகளே மீண்டும் மீண்டும் என்னுள் ஒலித்துக்கொண்டிருந்தன.

எங்கட பிள்ளைகள் தேசத்தைக் காத்தார்கள். தேசம் இப்ப எங்களைக் காக்கிறது…!

அன்புமாறன்.

விடுதலைப்புலிகள் இதழ் ( ஆனி – ஆடி 2004

****

27.01.2007 கொழும்புக் கடற்பரப்பில் தாக்குதல் கடற்கரும்புலிகள் !

கடற்கரும்புலிகள் மேஜர் சுகந்தன், மேஜர் தீக்கதிர், கப்டன் முறையமுதன், லெப். எழுகடல், லெப். மணிக்கொடி வீரவணக்க நாள் இன்றாகும்.BT colombo attack

சிறிலங்கா தலைநகர் கொழும்புக் கடற்பரப்பில் 27.01.2007 அன்று சிறீலங்கா கடற்படையிரின் கடற்கலங்கள் மூழ்கடித்த கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலி மேஜர் சுகந்தன், கடற்கரும்புலி மேஜர் தீக்கதிர், கடற்கரும்புலி கப்டன் முறையமுதன், கடற்கரும்புலி லெப். எழுகடல், கடற்கரும்புலி லெப். மணிக்கொடி ஆகிய கடற்கரும்புலி மறவர்களின் 7ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

விசுவமடு பகுதியில் தவறுதலாக ஏற்பட்ட வெடிவிபத்தின் போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்புலிகளின் முக்கிய உறுப்பினர் லெப். கேணல் மலரவன் அவர்களின் 7ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.Lt Colonel Arichandran

தாயக விடுதலை வேள்வி தன்னில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த மாவீரர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!

முள்ளிவாய்க்கால்: இன அழிப்பும் போர்க் குற்றங்களும் விரிவான ஆய்வு !

அறிமுகம்

மக்கள்திரள்மீதான வன்கொடுமைகள் (mass atrocity) பற்றிய எடுத்துரைப்புகள் (representations) சர்வதேசச் சட்டத்தின் வரையறைகளுக்கு ஏற்பப் போர்க்குற்றங்கள், மானிடத்திற்கெதிரான குற்றங்கள், இன அழிப்பு ஆகிய அடிப்படைகளில் வகைப்படுத்தல்களுக்கு உள்ளாக்கப்படுகின்றன. எனினும் இந்தக் கோட்பாட்டுரீதியான வகைப்படுத்தல்கள் குறிப்பிட்ட அரசியல், கருத்தியல் களங்களிலேயே பிரயோகிக்கப்படுவதால் அந்தக் களங்கள் விமர் சனத்திற்குள்ளாக்கப்பட்டு இலங்கையில் இடம்பெற்ற வன்கொடுமைகள் பற்றிய உண்மைகளைக் கூறும் முழுமையான எடுத்துரைப்பு ஒன்று எட்டப்பட வேண்டும். இந்த வன்கொடுமைகள் பற்றிய எடுத்துரைப்புகளை நோக்கினால், எவ்வாறு உண்மைகள் நோக்கப்படுகின்றன என்பதையும், நீதி, புனரமைப்பு (justice and recovery) பற்றிய எதிர்பார்ப்புகள் எவ்வாறு அமைகின்றன என்பதையும் சித்தாந்தம்தான் முடிவுசெய்கிறது என்பதை இந்தக் கட்டுரை நிறுவ முற்படுகிறது. இந்தப் பணியைச் சந்தேகக் கண்ணோடு அணுகுவது அரசியல் சிந்தனையில் மிகச் சரியான எடுத்துரைப்பு வெளிப்படவும் நீதிக்கும் புனரமைப்புக்குமான விசாலமான முன்னெடுப்புகளை அடையாளங்காட்டவும் உதவும்.

எண்ணிலடங்காத மரணங்கள்

ஐ. நா. விபரங்களின்படி நான்கு மாதங்களே நீடித்த இறுதிக்கட்டப் போரில், குறைந்தது 40,000 தமிழ் மக்கள் கொல்லப்பட்டனர். இலங்கை அரசால் நிறுவப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்களுக்கும் நல்லிணக்கத்திற்குமான ஆணைக் குழுவின் (LLRC) முன்னால் சான்று வழங்கிய மன்னார் ஆயர் 1,46,679 தமிழர்கள் பற்றிய எந்தத் தகவல்களும் இன்னும் கிடைக்கப்பெறவில்லை எனத் தெரிவித்தார். இந்த எண்ணிக்கையை இலங்கை அரசால் வெளியிடப்பட்ட உத்தியோகபூர்வத் தரவுகளிலிருந்து அவர் பெற்றுள்ளார்.

இத்தகைய அதிர்ச்சியூட்டும் வகையிலான பெரும் எண்ணிக்கையிலான உயிரிழப்புகள் பற்றிய உண்மையை எவ்வாறு சரியாக அரசியல் சிந்தனையில் எடுத்தியம்ப முடியும்? சர்வதேசச் சட்டம் போர்க்குற்றங்கள், மானிடத்திற்கெதிரான குற்றங்கள், இன அழிப்பு, அமைதிக்கெதிரான குற்றம் ஆகியன உள்ளிட்ட சட்ட, கோட்பாட்டு வகைப்பாடுகளை முன்வைக்கிறது. இந்த வகைப்பாடுகளுக்கேற்ப இலங்கையில் இடம்பெற்ற வன்கொடுமைகளை எடுத்துரைத்தால் அது புனரமைப்புக்கும் மீளலுக்கும் எத்தகைய முன்னெடுப்புகள் தேவையென்பதைத் தீர்மானிக்கும்.

இது போர்க்குற்றமா?

மூன்று அங்கத்தினர்களைக் கொண்ட இலங்கைமீதான ஐ. நா. பிரதிநிதிகள் குழு, மனித உரிமைகள் கண்காணிப்பகம் (Human Rights Watch), சர்வதேச நெருக்கடிகள் குழு (International Crisis Group) என்பன இறுதிக்கட்டப் போரில் பெரும் எண்ணிக்கையிலான தமிழ் மக்கள் கொல்லப்பட்டது நிச்சயமாகப் போர்க்குற்றம் என்றே எடுத்துரைக்கின்றன. ஐக்கிய அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பிய ஒன்றியம் ஆகியனவும் இதேவகையான சிந்தனையையே கொண்டுள்ளன என்பதைப் போர்க்குற்ற விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என அவை கோருவதிலிருந்து உணர்ந்துகொள்ள முடிகிறது.

இலங்கை தொடர்பில் போர்க்குற்றங்கள் பற்றிய கருத்தாடல் (discourse) சில தனித்துவமான பண்புகளைக் கொண்டுள்ளது. அவை:

– இந்தப் போர் உள்நாட்டு யுத்தமாகக் கருதப்பட்டது

– தனிநபர் உரிமைகள் முன்னிலைப்படுத்தப்பட்டு ஏற்புடைய அளவில் வன்முறையைப் பயன்படுத்துவதற்கான வரையறைகள் விதிக்கப்படுகின்றன.

– இரு சாராரும் குறைகூறப்பட வேண்டியவர்கள் என்பது வலியுறுத்தப்படுகிறது. (இதே அடிப்படையிலேயே ஐரோப்பிய ஒன்றியத்தின் விடுதலைப் புலிகள்மீதான தடையை மனித உரிமைகள் கண்காணிப்பகம் நியாயப்படுத்தியது.)

– இலங்கை அரசு தன்னைத் தற்காத்துக்கொள்வதற்கான உரிமை ஏற்கப்பட்டு அது ஒற்றையலகு (unitary) என்பது அங்கீகரிக்கப்படுகிறது (அரசியல் களம்)

– அனைத்துவகையான தேசியவாதங்களும் எதிர்மறையாகவே நோக்கப்படுகின்றன (சர்வதேச நெருக்கடிகள் குழு).

இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் பற்றிய கருத்தாடல்கள் இத்தகைய சித்தாந்தங்களால் மட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில், நீதிக்கான வாய்ப்புகளும் இதே சித்தாந்தங்களால் மட்டுப்படுத்தப்படுவது தவிர்க்க முடியாதது. எனவே சட்ட ஒழுங்கை வலுப்படுத்துவதிலும் குற்றவாளிகளைத் தண்டிப்பதிலுமே முக்கியக் கவனம் செலுத்தப்படுகிறது. குற்றவாளிகள் தண்டிக்கப்படாத நிலையை நிவர்த்திக்க இந்த முன்னெடுப்புகள் முக்கியமானவை என்றபோதும், இவை இனப்பிரச்சினையைத் தோற்றுவித்த காரணங்களை எந்தவிதத்திலும் நீக்க முயலவில்லை. மாறாக அந்தக் காரணங்களை முற்றமுழுதாக மூடிமறைக்கின்றன. இந்தக் கருத்தியலில் புனரமைப்பு என்பது தமிழர்களுக்கான வரையறுக்கப்படாத அரசியல் தீர்வாக – ஏற்கனவே உள்ள ஒற்றையலகு அரசுக்கு (unitary state) உட்பட்ட தீர்வாக – ஆகிறது. நடைபெற்ற வன்கொடுமைகளைச் சட்ட ஒழுங்குப் பிரச்சினையாகக் குறைத்து மதிப்பிடுகின்ற இந்தப் போர்க்குற்றங்கள் பற்றிய கருத்தாடலின் போதாமையே இத்தகைய தீர்வு வெளிப்படக் காரணம்.

இத்தகைய அணுகுமுறைக்கு இனப்பிரச்சினை பற்றிய வரலாற்று நோக்கு அறவே கிடையாது. அதனால் இனப்பிரச்சினைக்குக் காரணமாக அமைந்த ஒற்றையலகு அரசையோ அந்தக் கோட்பாட்டையோ கேள்விக்குட்படுத்தவே இயலாது. இலங்கை அரசால் நிறுவப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்களுக்கும் நல்லிணக்கத்திற்குமான ஆணைக் குழுவின் கண்டறிதல்களுக்கும் பரிந்துரைகளுக்கும் இந்த அணுகு முறையே ஏறக்குறைய ஆதாரமாக அமைகிறது. அது அரசின் ஒற்றையலகுத் தன்மையை மாற்ற முடியாத விடயமாக ஏற்றுக்கொள்வதோடு அரசு தன் இறையாண்மையைப் பாதுகாக்கப் போர் தொடுப்பதையும் நியாயப்படுத்துகிறது. இந்த அரசு ஆணைக் குழு அரசுப் படைகளால் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்களைத் தனித்த, தொடர்பற்ற, அதிகாரபூர்வமற்ற நிகழ்வுகளாக நோக்குகிறது. சர்வதேசக் குழுக்கள் இரு சாரார்மீதும் குற்றம்சுமத்துகின்றன. இந்நிலையில், போர்க்குற்றங்கள் பற்றிய கருத்தாடல்களின் உண்மையான அர்த்தம் என்ன? ஒற்றையலகு அரசைப் பாதுகாக்கும் போர் நியாயமானது, குற்றமல்ல!

இது மானிடத்திற்கெதிரான குற்றமா?

முள்ளிவாய்க்கால்: இன அழிப்பும் போர்க்குற்றங்களும்மேற்குறிப்பிட்ட அமைப்புகள் மானிடத்திற்கெதிரான குற்றம் என்னும் சொற்பதத்தைப் பயன்படுத்தாதபோதும், சர்வதேச மன்னிப்புச் சபை (Amnesty International) அதைப் பயன்படுத்துகிறது. 2010 இல் நடத்தப்பட்ட இலங்கை மீதான மக்கள் தீர்ப்பாயம் (டப்ளின் தீர்ப்பாயம்) இரண்டு சொற்பதங்களையும் பயன்படுத்தியது. இந்தச் சூழ்நிலையில், மானிடத்திற்கெதிரான குற்றம் என்பது ஆயுதப் போராட்டத்தில் நிகழ்த்தப்படும் நியாயப்படுத்த முடியாத கொலைகளை மட்டுமன்றி, ஒரு மக்கள் கூட்டத்திற்கு எதிராகத் திட்டமிட்ட முறையில், பரவலாக, விளைவு தெரிந்த நிலையில் நிகழ்த்தப்படும் தாக்குதல்களின்போது மேற்கொள்ளப்படும் குற்றங்களையும் உள்ளடக்கும். போர்க்குற்றத்திற்கும் மானிடத்திற்கெதிரான குற்றத்திற்கும் மூலம் ஒன்றானபோதும், நோக்கம் மாறுபடுகிறது. கொலை போர்க் குற்றமாகக் கருதப்படுகையில், கொலையின் நோக்கம் ஒருவரை அல்லது ஒன்றுக்கு மேற்பட்டவர்களைக் கொலைசெய்வதாகும். கொலை மானிடத்திற்கெதிரான குற்றமாகக் கருதப்படுகையில் கொலையின் நோக்கம் ஒருவரைக் கொல்வது என்பதோடு, பரவலான திட்டமிட்டவகையிலான பொதுமக்கள்மீதான தாக்குதல்களின் அங்கமாகவும் அது இருப்பதை உள்ளடக்குகிறது.

டப்ளின் தீர்ப்பாயம் இலங்கையின் இன முரண்பாடு அடிப்படையில் தமிழ் மக்களுக்கெதிரான போர் என்பதை வலியுறுத்தியதோடு, ‘பயங்கரவாதத்திற்கெதிரான உலகளாவிய போர்’ என்ற தோரணையில் இலங்கை அரசின் செயல்பாட்டிற்கு அரசியல் அங்கீகாரம் வழங்கியதில் சர்வதேசம் முழுப்பொறுப்பு வகித்ததையும் சுட்டிக்காட்டியது. ‘தமிழ் மக்கள்’ என்ற சொற்பதத்தைத் தனது அறிக்கையில் பயன்படுத்தியதன் மூலம் டப்ளின் தீர்ப்பாயம் பெருமளவில் பாதிக்கப்பட்டவர்களின் கூட்டு அடையாளத்தை ஏற்றுக்கொண்டதோடு, இலங்கை அரசே பெரும்பாலும் குற்றம்புரிந்ததாக நிறுவியது. மேலும் ஒற்றையாட்சி என்ற கோணத்தைத் தாண்டிச் செல்வதன் மூலம், இலங்கை இனப்பிரச்சினையின் மட்டு மீறிய சர்வதேசமயப்படுத்தலும் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. டப்ளின் தீர்ப்பாயம் இந்தப் படுகொலைகளை இனப்படுகொலை எனக் குறிப்பிடவில்லை எனினும் மேலதிக விசாரணைகள் தேவையெனப் பரிந்துரைக்கிறது.

மானுடத்திற்கெதிரான குற்றங்கள் பற்றிய கருத்தாடல்களிலிருந்து நீதி, புனரமைப்பு பற்றிய எத்தகைய புரிதலை அடைய முடியும்? நீதி, புனரமைப்பு என்பவற்றை அரசியல் கைதிகளின் விடுதலை, அகதிகளின் தேவைகளை நிவர்த்தித்தல், போருக்குப் பிந்தைய மறுவாழ்வு, அதிகாரப் பரவலாக்கலைக் கொண்ட அரசியல் தீர்வு என்பனவாகவே டப்ளின் தீர்ப்பாயம் பார்க்கிறது. இலங்கையில் அதிகாரமிக்க உண்மைகளுக்கும் நீதிக்குமான ஆணைக் குழுவொன்றையும் (நல்லிணக்கம் என்ற சொல்லை அது தவிர்க்கிறது. ஏனெனில் இலங்கை அரசு நிகழ்ந்தவை பற்றிய ஞாபகத்தை மழுங்கடித்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை மறுப்பதற்கான சமூக-அரசியல் கருவியாகவே ‘நல்லிணக்கம்’ என்ற சொல்லைப் பயன்படுத்துகிறது. இந்நிலையில், பாதிக்கப்பட்டவர்களுக்கு ‘நீதி’ என்ற சொல்லே அர்த்தமுள்ளதாகிறது.), 2002ஆம் ஆண்டின் முன்னெடுப்புகள் முறிவடைந்ததற்கும் 2006ஆம் ஆண்டில் போர் மீளமூண்டதற்கும் சர்வதேசம் ஆற்றிய பங்கை விசாரிக்கச் சுயாதீனமான சர்வதேச ஆணைக் குழுவொன்றையும் அது பரிந்துரைக்கிறது. நீதியை நிலைநாட்டுவதற்கும் புனரமைப்புக்குமான அதன் பரிந்துரைகளில் சில போர்க்குற்றங்கள் பற்றிய கருத்தாடல்களை ஒத்திருந்தாலும், டப்ளின் தீர்ப்பாயத்தின் அணுகுமுறை முக்கிய விடயங்களில் வேறுபடுகிறது.

டப்ளின் தீர்ப்பாயம், மக்களை அவர்களின் அரசிடம் இருந்து பாதுகாக்கவே சர்வதேச மனிதநேயச் சட்டம் (International Humanitarian Law) பிரகடனப்படுத்தப்பட்டது என நிறுவுவதோடு இலங்கை அரசின் குற்றநிலையை முன்னிலைப்படுத்துகிறது. (விடுதலைப் புலிகளும் மனித உரிமை மீறல்களைப் புரிந்தார்கள் என டப்ளின் தீர்ப்பாயம் ஏற்றுக்கொண்டபோதும், பாதிக்கப்பட்ட மக்களின் எந்தச் செயல்பாடும் போர்க்குற்றங்களையோ மானிடத்திற்கெதிரான குற்றங்களையோ நியாயப்படுத்தாது எனக் கூறுகிறது.)

அத்தோடு,

இலங்கை அரசுக்கு ஆதரவளித்ததன் மூலம் ஐக்கிய அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பிய ஒன்றியம் ஆகியன குற்றங்களுக்கு உடந்தையாக இருந்ததையும் சுட்டிக் காட்டுகிறது. டப்ளின் தீர்ப்பாயத்திற்குக் கட்டுப்படச் சட்டக்கடப்பாடு இல்லையெனினும், அறக்கடப்பாடு உண்டு. இது உண்மைக்கும் நீதிக்குமான செம்மையான அரசியல் எடுத்துரைப்புகளை மேற்கொள்வதற்கான வெளியை உருவாக்கும்.

இருந்தாலும், போர்க்குற்றங்கள், மானிடத்திற்கெதிரான குற்றங்கள் ஆகிய சட்ட அடிப்படையிலான வகைப்பாடுகள் இலங்கையின் இனமுரண்பாடு பற்றிய வரலாற்றை ஆராயாமலேயே பிரயோகிக்கப்பட்டுள்ளன. சிங்களப் பௌத்தத் தேசிய வாதம் (இனச்சார்பும் மதச்சார்பும் உடையது), தமிழ்த் தேசியவாதம் (இனச்சார்புடையது, மதச்சார்பற்றது) ஆகிய, இனமுரண்பாட்டின் இரண்டு முக்கியக் கதையாடல்களின் தன்மை பற்றிய எந்தத் துருவல்களும் காணப்படவில்லை. இந்தச் சட்டவகைப்பாடுகள் இலங்கையின் வன் கொடுமைகளை விளங்கிக்கொள்வதற்கு அவசியமான முதல் நிலைகளாக இருந்தாலும், அவை முரண்பாட்டின் விசாலத்தைப் போதுமான அளவு பிரதிபலிக்கவில்லை. அதன் பயனாக, நீதி வழங்கலையும் புனரமைப்பு முறையையும் அவை பாதிக்கின்றன. ஆகவே இலங்கையில் இடம் பெற்ற வன்கொடுமைகள் பற்றிய அரசியல் சிந்தனைகளை வரலாற்று அடிப்படையில் அணுக வேண்டியது முக்கியம். இதன் அர்த்தம் பாதிக்கப்பட்டவர்களின் நோக்கிலிருந்தும் தனித்துவமான தேசிய இனக்குழு என்ற அடிப்படை யில் வரலாற்று ஒடுக்குமுறைகளுக்கு எதிரான அவர்களின் எதிர்ப்பிலிருந்துமே உண்மை பெறப்பட வேண்டும்.

இது இனப்படுகொலையா?    

ரஃபேல் லெம்கின்னின் கூற்றுப்படி, ‘இனப்படுகொலை என்பது ஒரு தேசத்தை அல்லது தேசிய இனத்தை அழிப்பது. பொதுவாக, இனப்படுகொலையின் அர்த்தம் ஒரு தேசத்தை உடனடியான அழிப்பது அல்ல. அதன் மக்கள் அனைவரையும் ஒட்டுமொத்தமாகக் கொல்லும்போது மட்டுமே இப்படி அர்த்தம்கொள்ள முடியும். மாறாக இனப்படுகொலை என்பது ஒரு தேசிய மக்கள் குழுவின் வாழ்வாதாரங்களைக் குறிவைத்தழிக்கும் வெவ்வேறு நடவடிக்கைகளைக் கொண்ட திட்டமிட்ட செயல்பாட்டையே குறிக்கிறது’. ‘இத்தகைய செயற்பாடுகள் ஒரு மக்கள் கூட்டத்தை முழுமையாகவோ அதன் ஒரு பகுதியையோ குறிவைக்கலாம்’ என இன அழிப்புக் குற்றத்தைத் தடுப்பதற்கும் தண்டிப்பதற்குமான ஐக்கிய நாடுகள் சாசனம் மேலும் தெளிவுபடுத்துகிறது. ஆகவே இன அழிப்பு என்பதன் வரைவிலக்கணம் ஒரு மக்கள் கூட்டத்தின் பொது அடையாளத்தையும் அவர்களை முழுமையாகவோ அவர்களில் ஒரு பகுதியினரையோ அழிப்பதற்கான திட்டமிட்ட செயற்பாடுகளையும் குறிப்பிடுகிறது.

இலங்கையில் பெருந்தொகையாகப் பலியானவர்கள் தனிநபர் உரிமைகளைக்கொண்ட தனியாட்கள் மட்டுமல்ல, அவர்கள் குறிப்பிட்ட கூட்டு அடையாளத்தையும் கூட்டு உரிமைகளையும் கொண்டவர்களும்கூட. இலங்கை அரசின் நோக்கத்தையும் செயல்பாடுகளையும் வரலாற்று நோக்கில் ஆராயும்போது, தமிழ் மக்களுக்கெதிராக முன்னெடுக்கப்பட்ட இன அழிப்புப் படிமுறை தெளிவாகிறது. கொள்கை அறிவிப்புகள், கட்டளைகள், செயல்பாடுகளால் விரிவாக்கப்பட்ட ஒருங்கிணைக்கப்பட்ட, திட்டமிட்ட செயல்திட்டம் வரலாற்றுப் பின்னணியில் புலனாகிறது. போரின் இறுதிக்கட்டத்தின் மீதே இதுவரை முக்கியக் கவனம் செலுத்தப்பட்டுள்ளது (ஜனவரி முதல் மே 2009). ஆனால் நோக்கம் என்ற விடயத்தை வரலாற்றுரீதியாக ஆராயும்போது, இலங்கை இனப்பிரச்சினையின் நான்கு முக்கியக் காலகட்டங்கள் வெளிப்படுகின்றன. இவையின்றி, இறுதிக்கட்டப் போரின் இன அழிப்பு நோக்கம் தெளிவுபடாது.

1. காலனித்துவக் காலம் (1948 வரை): இலங்கை ஒற்றையலகு அரசாகப் பிரித்தானியக் காலனித்துவ ஆட்சியாளர்களால் கட்டியெழுப்பப்பட்டு, சிங்களப் பெரும்பான்மையின் ஆட்சி நிறுவப்படுகிறது. இலங்கையில் இனவாதத்தின் தொடக்கம் இதுதான். அது தமிழ் திராவிடப் பண்பாட்டைவிட ஆரிய இனம் உன்னதமானது என்ற இந்தோ-ஐரோப்பியப் புனைவிலிருந்து ஊட்டம் பெறுகிறது.

2. பின்-காலனித்துவக் காலம் (1948-1970கள்): சுதந்திரத்திற்குப் பின்னான அரசாங்கங்கள் அனைத்தும் ஒற்றையலகு அரசு முறையையும் அதன் சிங்கள-பௌத்தச் சித்தாந்தத்தையும் வலுப்படுத்தி நாடு முழுவதும் பண்பாட்டை ஒருமுகத் தன்மையுடையதாக ஆக்குவதை (cultural homogenization) ஆதரித்து வந்துள்ளன. தமிழ்த் தோட்டத் தொழிலாளர்களின் குடியுரிமை மறுக்கப்பட்டது. சிங்களம் மட்டுமே அதிகாரபூர்வ மொழியாக அறிவிக்கப்பட்டுத், தமிழ்ப் பிரதேசங்களில் சிங்களக் குடியிருப்புகள் அரசால் நிறுவப்பட்டன. இந்த முப்பதாண்டுக் காலத்தில் தமிழ் எதிர்ப்பு இயக்கங்கள் காந்திய வழிகளைத் தழுவின. எனினும் இந்தச் சாத்வீக எதிர்ப்புகள் சிங்கள இனவாதக் குழுக்களாலும் அரசுப் படைகளாலும் கோரமாகத் தாக்கப்பட்டன. இந்த இனவாதத் தாக்குதல்களால் 500க்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டபோதும் யாரும் நீதியின்முன் நிறுத்தப்படவில்லை.

3. இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான இராணுவப் போராட்ட காலம் (1970கள் – 2002): காலனித்துவத்திற்குப் பிந்தைய முதல் முப்பதாண்டுக் காலத்தில் தமிழ் எதிர்ப்பின் முக்கியக் கோரிக்கை, அரசு அலகுக்குள் சம உரிமையுள்ளவர்களாகத் தமிழர்கள் உள்வாங்கப்பட வேண்டும் என்பதே. எனினும் தமிழர்களின் சம உரிமைக் கோரிக்கை ஒடுக்கப்பட்டதன் விளைவாக 1970களில் ஆயுதந்தரித்த தேசியவாத இயக்கம் ஒன்று விடுதலைப் புலிகளின் தலைமையில் உருவானது. அதற்கு ஜூலை 1983 திருப்புமுனையாக அமைந்தது. அதில் அதிகாரபூர்வத் தரவுகளின்படி 3000க்கும் அதிகமான தமிழர்கள் – அரசுப் படைகள், காவல்படை, அரசு அதிகாரிகள், அமைச்சர்கள் ஆகியோரின் ஆதரவுடன் – சிங்கள இனவாதக் குழுக்களால் கொல்லப்பட்டார்கள். 2002 வரையான போரில் குறைந்தது 2,15,000 பேர் கொல்லப்பட்டார்கள் என்றும் இவர்களில் பெரும்பாலானவர்கள் தமிழர்கள் என்றும் பிரித்தானிய மருத்துவ ஏடு ஒன்று கூறுகிறது. ஒன்றரை மில்லியனுக்கு அதிகமானவர்கள் இடம்பெயர்ந்துள்ளார்கள் என வெவ்வேறு கணிப்புகள் தெரிவிக்கின்றன.

4. போர் நிறுத்தக் காலம் (2002-2006): போரில் ஈடுபட்டிருந்த இரு சாராரும் சமவலிமை பெற்றதன் விளைவாக இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையில் போர் நிறுத்த ஒப்பந்தமும் சமாதான முயற்சிகளும் நடைமுறைக்கு வந்தன. ஒக்டோபர் 2006இல் தொடங்கிய போரின் இறுதி அங்கம், மேலும் ஒருமுறை கோர வன்முறைக்கும் பெருந்தொகையான பொதுமக்கள் உயிரிழப்புக்கும் வழிகோலியது.

நோக்கம் என்பது தனிநபரின் உளவியல் நிலை எனப் பார்க்கப்பட்டாலும் வெளிப்படையான பொதுமக்கள் கதையாடல்கள் தனிநபரின் நோக்கையும் கூட்டு நோக்கையும் ஒன்றிணைக்கின்றன. இலங்கையில் வன்கொடுமைகளுக்குப் பொறுப்பான உள்நாட்டுக் குற்றவாளியான இலங்கை அரசின் (இதில் சர்வதேசக் குற்றவாளிகளுக்கும் பங்குண்டு) வெளிப்படையான கதையாடல் ஒற்றையலகு அரசையும் பண்பாட்டு ஒருமுகப்படுத்தலையும் ஆதரிக்கும் சிங்களப் பௌத்தத் தேசிய வாதத்தையும் உள்ளடக்கியது. தமிழ்த் தேசிய இனத்தை அழிக்கின்ற நோக்கத்திற்கு உந்துகையாக (னீஷீtவீஸ்ணீtவீஷீஸீ) இருப்பது ஒற்றையலகு அரசையும் சிங்களப் பௌத்த சித்தாந்தத்தையும் பாதுகாக்க வேண்டும் என்னும் அவாவே. இந்த வகையில், வெளிப்படையான கதையாடல்களின் பின்னிருக்கும் நோக்கம், இலங்கை அரசின் இன அழிப்பு நோக்கத்தை நிறுவுகிறது.

வரலாற்று நோக்கில் உந்துகையும் நோக்கமும்

காலனித்துவக் காலத்தில் . . .

சிங்களப் பௌத்தத் தேசியவாதத்தின் தந்தையான அனாகரிகா தர்மபாலா, 1910களில் சிறுபான்மையினருக்கெதிரான உணர்வுகளையும் வன்முறையையும் தூண்டினார். 1915இல் முஸ்லிம்களுக்கெதிரான வன்முறையில் ஈடுபட்ட சிங்களத் தலைவர்கள் கைதுசெய்யப்பட்டதைக் கண்டித்துக் காலனித்துவ அரசுக்கு அவர் எழுதிய கடிதத்தின் ஒரு பகுதி பின்வருமாறு அமைந்தது:

‘பிரித்தானிய அதிகாரிகள் சிங்களவர்களைச் சுட்டாலும் தூக்கிலிட்டாலும் அடைத்துவைத்தாலும் கைதுசெய்தாலும் என்ன செய்தாலும் சிங்களவர்களுக்கும் முஸ்லிம்களுக்குமிடையே மனக்கசப்பு எப்போதும் இருந்துகொண்டேயிருக்கும். எனினும் பிரித்தானிய முடிக்கான எனது விசுவாசம் எப்போதும் அசைக்க முடியாதது.’

1930களில் முன்னணிச் சிங்களத் தொழிற்சங்கத் தலைவரான ஏ. ஈ. குணசிங்க அவரது கட்சியால் ‘சிங்கம்’ என அழைக்கப்பட்டார். அதன் அதிகாரபூர்வ ஏடு ஹிட்லரின் முன்னுதாரணத்தைப் பின்பற்றி, கலப்பு மணங்களைத் தவிர்த்துச் சிங்கள இரத்தத்தின் தூய்மையைப் பேண வேண்டியதன் தேவையை வலியுறுத்தியது. ஜெர்மனியில் ஜெர்மன் ஆரிய இனத்தைப் பாதுகாக்க யூத எதிர்ப்புணர்வு தூண்டப்பட்ட வேளையில், இலங்கையில் சிங்கள ஆரிய இனத்தைப் பாதுகாக்கத் திராவிட எதிர்ப்புக் கொள்கை சிலாகிக்கப்பட்டது. இனவாதமயப்படுத்தப்பட்ட சிங்கள அடையாளம், குறிப்பாகப் பாட்டாளி மக்கள் மத்தியில் வலிந்து புகுத்தப்பட, அது இந்தியப் புலம்பெயர் தொழிலாளர்கள்மீதான தாக்குதல்களுக்கு வழிவகுத்தது.

தேசத்தின் தந்தையாகக் கருதப்படுபவரும் 1948இல் சுதந்திர இலங்கையின் முதல் பிரதமராகப் பதவி வகித்தவருமான டி. எஸ். செனநாயக்கா 1939இல் இவ்வாறு கூறினார்:

‘நாங்கள் ஒரே இரத்தம். ஒரே தேசிய இனம். நாங்களே தெரிந்தெடுக்கப்பட்ட மக்கள். தனது மதம் 5500 ஆண்டுகள் நிலைக்குமெனப் புத்தர் சொன்னார். அதன் அர்த்தம், அந்த மதத்தின் பாதுகாவலர்களான நாங்கள், நீடூழி வாழ்வோம்.’

1956இல் சிங்களம் மட்டுமே தேசிய மொழியென வகுத்த எஸ். டிபிள்யு. ஆர். டி. பண்டாரநாயக்கா 1939இல் பின்வருமாறு கூறினார்:

‘எனது சிங்களச் சமூகத்திற்காக நான் உயிரைத் தியாகம் செய்யவும் தயாராக உள்ளேன். எங்கள் வளர்ச்சியை யாரும் தடுக்க முற்பட்டால் அவர்களால் மறக்க முடியாத வகையில் அவர்களுக்குப் பாடம் புகட்ட நான் தீர்மானித்துள்ளேன்.’

காலனித்துவத்திற்குப் பிந்தைய தேசக் கட்டுமானக் காலத்தில் . . .

தேசத்தைக் கட்டியெழுப்பும் செயல்பாடுகள் தமிழர்களுக்கு எதிரான வன்முறைக் கலவரங்களால் அடையாளப்படுத்தப்பட்டன. இந்தக் கலவரங்களில் பெரும்பாலானவை ஒடுக்குதல்களுக்கு எதிராகத் தமிழர்களால் முன்னெடுக்கப்பட்ட சாத்வீக ஆர்ப்பாட்டங்களுக்கு எதிராகத் தூண்டப்பட்டன. 1958இல் இடம்பெற்ற தமிழர்களுக்கெதிரான கலவரத்திற்குப் பின் சிங்களப் பாராளுமன்ற உறுப்பினர்கள் கூறிய கூற்றுகளுள் சில வருமாறு:

‘தமிழர்கள் எங்களை அழித்துவிடுவார்கள். அது நடப்பதற்கு முன் தமிழர்களுக்கு முதலும் இறுதியுமாக முடிவுகட்ட வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்’- பாணி இலங்கைக்கோன்.
‘தமிழர்கள் தாம் வாழும் எல்லாப் பாகங்களிலும் பலம்பெற்று வருகிறார்கள். சிங்களவர்கள் அவர்களால் அழித்தொழிக்கப்படும் அபாயம் உள்ளது’- சாகரா பலன்சூரிய.
‘அவர்களை அழித்தொழி’ – லக்ஷ்மன் ராஜபக்ஷ.

இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்குமான ஆயுதப்போராட்டக் காலத்தில் . . .

தமிழர்களின் எதிர்ப்பியக்கம் பிரிவினைவாதத்தை முன்வைக்கும் ஆயுத இயக்கமாக மாற்றமுற இலங்கையின் முதல் நிறைவேற்று அதிகாரங்கொண்ட ஜனாதிபதியான ஜே. ஆர். ஜெயவர்த்தனே (1978-1988) இவ்வாறு கூறினார்: ‘நான் யாழ்ப்பாணத்து மக்களின் கருத்தைப் பற்றிக் கவலைப்படவில்லை. நாம் அவர்களின் உயிர்களைப் பற்றியோ கருத்தைப் பற்றியோ சிந்திக்க முடியாது. வடக்கின் மீது எவ்வளவு அழுத்தம் பிரயோகிக்கப்படுகிறதோ அவ்வளவுக்குச் சிங்கள மக்கள் இங்கே மகிழ்ச்சியடைவார்கள். உண்மையில் நான் தமிழர்களைப் பட்டினி போட்டுக் கொன்றால் சிங்களவர்கள் மகிழ்ச்சியடைவார்கள்.’

தமிழ்ப் பிரதேசங்களில் நடத்தப்பட்ட ராணுவ நடவடிக்கைகளுக்குப் பொறுப்பாயிருந்த தேசியப் பாதுகாப்பு அமைச்சரின் (1982-1988) பின்வரும் கூற்று தமிழர்களின் கூட்டு அடையாளத்தின் ஆதாரங்களிலொன்றை அழித்தொழிக்கும் நோக்கத்தை வெளிப்படுத்துகிறது: ‘பயங்கரவாதத்தை வோரோடழிப்பதற்கான ஒரே வழி, “பாரம்பரியத் தாயகம்” என்ற கோட்பாட்டை இல்லாது செய்வதே.’ – லலித் அத்துலத்முதலி

இந்தக் காலகட்டத்தில் தென்னாசியாவின் மிகப் பழமைவாய்ந்த நூலகங்களில் ஒன்றும் பெரும் எண்ணிக்கையிலான புராதனத் தமிழ் ஏடுகளைத் தன்னகத்தே கொண்டதுமான யாழ்ப்பாணப் பொதுநூலகம், அமைச்சர் ஒருவரின் வழிநடத்தலில், சிங்களவர் குழு ஒன்றால் எரிக்கப்பட்டது. தமிழர்களின் பண்பாட்டு வாழ்வின் முக்கியச் சின்னமாக அந்த நூலகம் மதிக்கப்பட்டது. அதே காலகட்டத்தில், 53 தமிழ் அரசியல் கைதிகள், சிறைக் காவலர்களின் துணையுடன், சிங்களக் கைதிகளால் கொல்லப்பட்டனர். எண்பதுகளிலும் தொண்ணூறுகளின் ஆரம்பத்திலும் இலங்கை அரசை வழிநடத்தியவர்களின் இனவாதக் கொள்கையை இன்னுமொரு ஜனாதிபதியின் பின்வரும் கூற்று பிரதிபலிக்கிறது:

‘சிங்களப் பெருவிருட்சத்தில் தொங்குகின்ற கொடிகள் போன்றவர்கள் சிறுபான்மையினர்’ – டி. பி. விஜேதுங்கா.

செப்ரெம்பர் 1998இல், தென் ஆப்பிரிக்காவிற்கான அதிகாரபூர்வப் பயணமொன்றை மேற்கொண்டிருந்த சந்திரிகா குமாரதுங்க தொலைக் காட்சி நேர்காணல் ஒன்றில் பின்வருமாறு கூறினார்:

‘அவர்கள் (தமிழர்கள்) – நாட்டின் பூர்வீகக் குடிகள் அல்லாத ஒரு சிறுபான்மையினத்தினர் – தனிநாடு கோருகிறார்கள்.’

திட்டமிட்ட, ஒருங்கிணைக்கப்பட்ட இன அழிப்பு நோக்கத்தின் உந்துகையான சிங்களப் பௌத்த வாதம், சிங்கள மக்களின் மாற்ற முடியாத, அத்தியாவசிய மன நிலையைப் பிரதிபலிக்கவில்லை. இந்த மனநிலை அடிப்படையில் – பன்முகத்தன்மையான பல பிர தேசங்களை ஒன்றிணைத்து மைய ஆட்சி கொண்ட ஒற்றைத் தேசக் கட்டுமானத்தைத் திணிக்கும் அதேவேளை ‘ஆரிய மேன்மை, திராவிட இழிவு’ என்ற புனைவைப் பரப்பும் – பிரித்தானியக் காலனித்துவ நடைமுறையால் உருவாக்கப்பட்ட ஒன்று. காலனித்துவத்திற்கு முந்தைய பௌத்த நூல்கள் மொழி பெயர்க்கப்பட்டு முழுத்தீவும் சிங்களவர்களுக்கே உரியது, காலாதி காலமாக அது ஒற்றையலகுலகாகவே இருந்தது,

அதில் வாழும் ஏனைய மக்கள் (பெரும்பாலும் தமிழர்கள்) அனைவரும் ஊடுருவிகளே எனச் சிங்கள மக்களை நம்பவைக்கும் வகையில் விளக்கமளிக்கப்பட்டது. இத்தகைய புனைவுக்கு உந்தியது இந்தியாவை ஆள்வதற்கான ராணுவக் கேந்திரமாக இலங்கையை அது பயன்படுத்திய தந்திரமே. ஒரு கேந்திர நிலையத்தைத் தக்கவைப்பதற்கு அதன்மீது முழுமையான அரசியல் கட்டுப்பாட்டைக் கொண்டிருப்பது அவசியம். அந்தக் கட்டுப்பாடு இந்தியத் துணைக் கண்டத்தில் சிறுபான்மையினராகவும் இலங்கையில் பெரும்பான்மையினராகவும் இருந்த சிங்களவர்களுக்குச் சலுகைகளை வழங்குவதன் மூலம் எட்டப்பட்டது.

அதேவேளை, பிரித்தானியர்கள் காலனித்துவ ஆட்சியை மேற்கொண்டிருந்தாலும் தமிழர்களே ஊடுருவிகள், ‘அவர்கள் இலங்கையில் எதையும் கட்டியெழுப்பவில்லை, மற்றவர்கள் கட்டியெழுப்பியதையும் அழித்துவிட்டார்கள்’ என்ற கருத்தும் முன்வைக்கப்பட்டது. காலனித்துவத்திற்கு முந்தைய படையெடுப்புகள் யாவும் உண்மையில் இந்தியத் துணைக் கண்டத்தில் வாழ்ந்த அரசகுலங்களுக்கிடையிலான பிணக்குகளால் மாறிமாறி நடந்த கைப்பற்றுதல்கள் என்றபோதும், அவை யாவும் தமிழர்களின் ஊடுருவல்கள் எனக் காண்பிக்கப்பட்டன. இந்தப் போர்கள், அவற்றின் உள்ளீட்டிலும் கட்டமைப்பிலும் நவீன தேசிய, சர்வதேசப் போர்களிலிருந்து பெரிதும் வேறுபடுகின்றன.

வரலாற்றுரீதியான அடக்குதல்களையும் ஒடுக்குதல்களையும் மீறித் தமிழ் தேசிய இயக்கமானது ஆதரவற்ற பாதிக்கப்பட்டவர்கள் என்ற நிலையிலிருந்து உருமாறி ஒன்றிணைந்து தேசியத்தை வலியுறுத்துவதாகப் பலம்பெற்று, குறிப்பாக விடுதலைப் புலிகளின் தலைமையின்கீழ் இலங்கையின் வடக்கிலும் கிழக்கிலும் அங்கீகாரமற்ற தனிநாட்டை உருவாக்கியிருந்தது. இந்த உண்மையே 2002 அளவில் அரசின் இராணுவ முயற்சிகள் நாட்டின் பொருளாதாரத்தைப் பெருமளவு பாதித்திருந்த நிலையில், இனவாத நோக்கத்திற்கு வலுச் சேர்த்த சிங்களப் பௌத்தத் தேசிய வாதத்தின் கதையாடல்களை வலுவிழக்கச்செய்திருந்தது. பேச்சு வார்த்தை மூலம் எட்டப்படும் அரசியல் தீர்வே முன்னேற்றத்திற்கான ஒரே வழியாகக் கருதப்பட்டது.

வன்கொடுமைகளுக்கான உந்துகையும் நோக்கமும் இந்த வரலாற்றுப் பின்னணியில் ஆராயப்பட வேண்டும். 2002இலிருந்து 4 முதல் 6 வருடங்களுக்குப் பின் எவ்வாறு சிங்களப் பௌத்தத் தேசியவாதக் கதையாடல்களின் அரசியல்பலம் அதிகரித்துத் தமிழர்களின் அங்கீகார மற்ற நாட்டின் அழிவுக்கும் அதில் வாழ முடிவுசெய்திருந்த பெரும் எண்ணிக்கையிலான மக்களின் கொலைக்கும் வழிவகுத்தது? சில மேற்குலக ராஜதந்திரிகளும் ஊடகங்களும் மனித உரிமை அமைப்புகளும் பிணக்குத் தீர்வு வல்லுநர்களும் கூறுவதுபோல், அது தானாகவே உள்ள பலச்சமன்பாடுகளினதும் மாற்ற முடியாத இன அடையாளங்களினதும் விளைவாக நிகழ்ந்ததா?

போரின் இறுதிக்கட்டம் . . .

முள்ளிவாய்க்கால்: இன அழிப்பும் போர்க்குற்றங்களும்இறுதிக்கட்டப்போரின் அதிர்ச்சியூட்டும் வன்முறையும் அதனால் பாதிக்கப்பட்டவர்களின் பெரும் எண்ணிக்கையும் ஒரு வரலாற்று விபத்தினதோ துரதிர்ஷ்டவசமான ஒற்றை நிகழ்வுகளின் கோவையினதோ போரின்போது தவிர்க்க முடியாத இழப்புகளினதோ சட்ட ஒழுங்கின் செயலிழப்பினதோ விளைவல்ல. அவை தொடர்ச்சியான இலங்கை அரசுகள் மேற்கொண்ட தமிழ் மக்களின் இன, தேசிய அடையாளத்தின் ஆதாரங்களை அழிக்கும் வரலாற்றுப் படிமுறையின் தர்க்கரீதியான முடிவு மட்டுமல்ல, 2002 போர்நிறுத்தத்தின்போதும் சமாதான முன்னெடுப்புகளின் போதும் இருசாராருக்கும் வழங்கப்பட்டிருந்த சம அந்தஸ்து (ஜீணீக்ஷீவீtஹ் ஷீயீ மீstமீமீனீ) அகற்றப்பட்டதன் நேரடி விளைவும்கூட.

இந்தச் சம அந்தஸ்து முதலில் அமெரிக்காவாலும் பிரிட்டனாலும் அகற்றப்பட்டது. பின்னர் இவ்விரு நாடுகளினதும் அழுத்தம் காரணமாக ஐரோப்பிய ஒன்றியத்தால் அகற்றப்பட்டது. 2003இல் சமாதான நடவடிக்கைகளின் முக்கியக் கூட்டமொன்றை வாஷிங்டனில் நடத்த ஒருதலைப்பட்சமாக அமெரிக்கா முடிவெடுத்து அதன்மூலம் விடுதலைப் புலிகளைப் பேச்சு வார்த்தையிலிருந்து அப்புறப்படுத்திய ‘வாஷிங்டன் அத்தியாயம்’, 2005இல் சுனாமி நிவாரணத்திற்காக நிறுவப்பட்ட இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையிலான கூட்டுக் கட்டமைப்புக்கு நிதி ஒதுக்க மறுத்த அமெரிக்காவின் செயல்பாடு, பிரித்தானியா தலைமைப் பொறுப்பு வகித்த காலத்தில் 2006இல் ஐரோப்பிய ஒன்றியம் விடுதலைப் புலிகளைத் தடைசெய்தமை என்பன இரு சாராருக்கும் வழங்கப்பட்ட சம அந்தஸ்தை அகற்றவும் இலங்கை அரசின் இருப்பை நியாயப்படுத்தும் கதையாடல்களை வலுப்படுத்தவும் இந்த வல்லரசுகள் மேற்கொண்ட நடவடிக்கைகள்.

இலங்கை அரசின் ஒற்றையலகுத் தன்மையைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியம், சீனாவுக்கும் அமெரிக்காவிற்குமிடையிலான உலக-அரசியல் இயக்காற்றலின் பின்னணியிலேயே அலசப்பட வேண்டும். பாரம்பரிய ராணுவ பலமும் சீரான சமூக அரசியல் நிர்வாகமும் 5,00,000க்கும் மேலான குடிமக்களையும் கொண்ட, தமிழர்களின் நடைமுறை யதார்த்தமான தனிநாடு, ஒற்றையலகு அரசையும் அதன் இனவாதக் கதையாடல்களையும் பலமிழக்கச்செய்ததோடு, இந்த ஒற்றையலகு அரசைப் பாதுகாப்பதையே முக்கியக் குறிக்கோளாகக் கொண்ட உலக வல்லரசுகளைக் கவலைகொள்ளவைத்தது. இலங்கை அரசுக்கு இந்த வல்லரசுகளால் வழங்கப்பட்ட அரசியல், ராஜதந்திர, ராணுவ உதவிகளின் உண்மை விளைவு சிங்களப் பௌத்த வாதத்தைப் பலப்படுத்துவதாகவே அமைந்தது. இதுவே சிங்களச் சமூகத்தினதும் அரசியலாளர்களினதும் இன அழிப்பு நோக்கை வலுப்படுத்திப் போருக்குத் தூண்டியது. இதன் அர்த்தம் உலக வல்லரசுகள் சிங்களப் பௌத்தத் தேசியவாதத்தை விரும்புகின்றன என்பதல்ல. அவர்களின் முக்கிய ஆவல் பிரதேச வாரியாக ஒற்றை அலகையும் ஒற்றை அரசு அதிகாரத்தையுமுடைய தேசத்தை உருவாக்குவதே.

ஐரோப்பிய ஒன்றியம் ஏன் சமாதான நடவடிக்கைகளை ஆரம்பத்தில் ஆதரித்தது என்பதையும் அமெரிக்காவும் பிரிட்டனும் ஏன் பட்டும்படாமலும் இருந்தன என்பதையும் அறிய, மேற்கத்திய வல்லரசுகளுக்கிடையிலான – குறிப்பாக ஐரோப்பிய ஒன்றியம், ஐக்கிய அமெரிக்கா, பிரிட்டன் என்பவற்றுக்கிடையிலான பலச் சமன்பாடுகளை ஆராய்வதும் முக்கியமானது. இலங்கையின் ஒற்றையலகுக் கட்டமைப்பின் உலக-கேந்திர முக்கியத்துவமும் உலக வல்லரசுகளுக்கிடையிலான பலச் சமன்பாடுகளும் மேலும் விவாதத்திற்குள்ளாக்கப்பட வேண்டும் என்றாலும், அது இந்தக் கட்டுரையின் இலக்குக்கு அப்பாற்பட்டது. இருந்தாலும், இலங்கையில் இடம்பெற்ற வன்கொடுமைகள் பற்றிய உண்மையைக் கண்டறிய, ஒரு முக்கியமான கேள்வி எழுப்பப்பட வேண்டும். தமிழர்களுக்கு எதிரான இறுதிக்கட்டப் போரை நடத்த முதன்மையான காரணியாக அமைந்தது இலங்கை அரசின் இனவாத நோக்கமா இருதரப்பினருக்குமிடையிலான சம அந்தஸ்தை இல்லாது செய்த உலக வல்லரசுகளின் கேந்திர அக்கறையா (strategic interest) என்பதே அந்தக் கேள்வி. 

போரின் இறுதிக்கட்டம் பெரும்பாலும் இலங்கை அரசாலும் அதன் சர்வதேச ஆதரவு நாடுகளாலும் – பயங்கரவாதத்திற்கெதிரான உலகளாவிய போரின் அடிப்படையில் – கிளர்ச்சிக்கு எதிரான போர் என நியாயப்படுத்தப்படுகிறது. ஒரு தனித்துவமான இனக்குழுவை அழிக்கும் திட்டவட்டமான நோக்கம் போருக்கு இருக்கவில்லை எனக் கூறி இவர்கள் இன அழிப்புக் குற்றச்சாட்டை மறுக்கிறார்கள். எனினும் திட்டவட்டமான நோக்கம் வெளியிடப்படாத போதும், பொதுவான நோக்கம் வெளிப்படையாகத் தெரிகிறது. குற்றச்செயலைப் புரிபவருக்கும் அந்தச் செயலின் விளைவுகளுக்கும் இடையிலான உளவியல் தொடர்பை நோக்கம் பற்றிய அறிவுசார்ந்த விளக்கம் தெளிவுபடுத்துகிறது. குவாத்த மாலா விடயத்தில் வாதிடப்பட்டது போல் கிளர்ச்சியாளர்களைக் கொல்வதென்ற ராணுவ நோக்கம் இனவாதத்தை அடிப்படையாகக் கொண்டிருக்க முடியாதா?

தமிழ் மக்கள்மீது நடத்தப்பட்ட பாரியத் தாக்குதல்களின் விளைவு என்னவாக இருக்குமென முன்கூட்டிய அறிவுடனும் ஓரளவு உறுதியுடனும் எதிர்வு கூறியிருக்க முடியுமென்றால் அந்தத் தாக்குதல்கள் இன அழிப்பு நடவடிக்கையே. வேறுவகையில் கூறுவதானால், ஒரு தேசிய இனப் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக, பாரிய ராணுவத் தாக்குதல்களின் மூலம் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் வலுக்கட்டாயமாகக் கிளர்ச்சிக்கு எதிரான போரை நிகழ்த்துவதன் நோக்கம் இன அழிப்பே.

போரின் இறுதிக்கட்டத்தில், தமிழ் மக்கள்மீது ஒருங்கிணைக்கப்பட்ட தாக்குதல்கள் நடத்தப்பட்ட அதே வேளையில், இலங்கை அரசின் ராணுவ, அரசியல் தலைவர்களால் விடுக்கப்பட்ட பின்வரும் கூற்றுகள் திட்டவட்டமான நோக்கத்தையும் பொதுவான நோக்கத்தையும் எடுத்துக்காட்டுகின்றன:

‘இந்த நாடு சிங்களவர்களுக்கே சொந்தமானது என நான் உறுதியாக நம்புகிறேன். ஜனத்தொகையில் 75 விழுக்காட்டினரான நாங்கள் ஒருபோதும் அடிபணியமாட்டோம். இந்த நாட்டைத் தற்காக்கும் உரிமை எமக்கே உண்டு. சிறுபான்மையினர் இங்கே வாழலாம். ஆனால் அவர்கள் சிறுபான்மையினர் என்ற போர்வையில் நியாமற்ற கோரிக்கைகளை முன் வைக்க முடியாது’ – லெப்டினன்ற் ஜெனரல் சரத் பொன்சேகா, இலங்கைப் படைத் தளபதி (23 செப்ரெம்பர் 2008).

‘எந்தவொரு நாட்டிலும் பெரும்பான்மையினரின் கையிலேயே நிர்வாக உரிமை இருக்க வேண்டும். அதைத் தடுக்க முடியாது. பெரும்பான்மையினரின் கையிலேயே அதிகாரம் இருக்க வேண்டும். இந்த நாடு ஜனத்தொகையில் 74 விழுக் காட்டினரான சிங்களவர்களாலேயே ஆளப்படும்’ – லெப்டினன்ற் ஜெனரல் சரத் பொன்சேகா, இலங்கைப் படைத் தளபதி (19 ஜூலை 2008).

‘முல்லைத்தீவுப் பகுதியில் சிக்கிக்கொண்டுள்ளவர்கள் பயங்கரவாதிகளின் உறவினர்கள் மட்டுமே. அவர்களை ஒருபோதும் பொதுமக்களாகக் கருத முடியாது’ – அரசின் கூட்டணிக் கட்சியான ஜாதிக ஹெல உருமயவின் பத்திரிகையாளர் மாநாடு (28 ஜனவரி 2009).

‘வரையறுக்கப்பட்ட பாதுகாப்பு வலயத்திற்கு வெளியேயுள்ள எதுவும் தாக்குதலுக்காகக் குறிவைக்கப்படும். வைத்தியசாலையாக இருந்தாலும் சரி, பொதுமக்களாக இருந்தாலும் சரி, அது பாதுகாப்பு வலயத்திற்கு வெளியேயுள்ளவரை தாக்குதலுக்கு ஏற்புடைய இலக்காகவே இருக்கும்.’ – பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ஷ (02 பெப்ரவரி 2009).

இலங்கை அரசின் செயல்பாடுகள் தமிழ் மக்களின் உயிர்வாழ்க்கையை எவ்வளவு பாரதூரமாகப் பாதிக்கும் என்பது ஏற்கனவே தெரிந்திருந்தது என்பதை இந்தக் கூற்றுகள் தெளிவாக எடுத்துக்காட்டுகின்றன. வரையறுக்கப்பட்ட ‘பாதுகாப்பு வலயமும்’ தீவிரத் தாக்குதலுக்குள்ளானது என ஐ. நா. அறிக்கை தெரிவிக்கிறது. (இதைப் ‘பாதுகாப்பு வலயம்’ என அறிவித்துப் பொதுமக்கள் அதற்குள் செல்ல வேண்டுமென இலங்கை அரசு கேட்டிருந்தது). மே 2009இல், போருக்குப் பின்னான தனது வெற்றி உரையில், இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இவ்வாறு கூறினார்:

‘இலங்கையில் இன்று பெரும்பாலும் சிறுபான்மைச் சமூகங்கள் கிடையாது. தேசாபிமானிகளும் தேச விரோதிகளும் மட்டுமே உள்ளனர்.’

சர்வதேச அரங்கில், மேமாதத்தில் போரின் இறுதி வாரத்தில், ஐ. நா. பாதுகாப்புச் சபை, ஐரோப்பிய ஒன்றியம், வெள்ளை மாளிகை ஆகியன ஒரே நாளில் – இலங்கை அரசே இலங்கையில் சட்டபூர்வ அதிகாரம்கொண்டது என்ற அவர்களின் கருத்தைத் தெளிவாகப் பிரதிபலிக்கும் வகையில் – அறிக்கைகளை வெளியிட்டன. ஐ. நா. பாதுகாப்புச் சபையும் ஐரோப்பிய ஒன்றியமும் இலங்கை அரசுக்குப் பயங்கரவாதத்தை எதிர்கொள்ளும் சட்டபூர்வ உரிமை இருக்கிறது எனக் கூறுமளவுக்குத் துணிந்தன. ஐரோப்பிய ஒன்றியம், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதாக இலங்கை அரசு வழங்கிய உறுதிமொழிகளை வரவேற்றது. அமெரிக்க அதிபர் விடுதலைப் புலிகள் ஆயுதங்களைக் கைவிட வேண்டுமென வலிந்து கேட்டுக்கொண்டார்.

ராணுவமயப்படுத்தலைத் தளர்த்துதல், புனர்வாழ்வு வழங்குதல், மீள்குடியேற்றம், அதிகாரப் பரவலாக்கம் ஆகிய விடயங்களில் கவனம் செலுத்த முற்பட்ட 2002இன் சமாதான முன்னெடுப்புகளைத் தொடக்கத்தில் ஆதரித்த சர்வதேசச் சமூகம் பின்னர், மேற்குறிப்பிட்ட உலக வல்லரசுகளின் தலைமையில், இலங்கை அரசை ஆதரிக்கும் வெளிப்படையான அரசியல் நிலைப்பாட்டை எடுத்ததன்மூலம் பேச்சுவார்த்தை அடிப்படையிலான தீர்வுக்கான வெளி இல்லாதொழிக்கப்பட்டது. இது ‘பயங்கரவாதத்திற்கெதிரான உலகாளவிய போர்’ என்ற வெற்றுரையால் நியாயப்படுத்தப்பட்டு, இறுதியில் தமிழ் மக்கள் தொகையின் ஒரு பெரும்பகுதியையும் அவர்களின் தேசிய ஆதாரங்களையும் தலைமையையும் அழித்தொழித்த கிளர்ச்சி எதிர்ப்பு உக்திகள்மூலம் நடை முறைப்படுத்தப்பட்டது. அதனால் இலங்கையின் வன்கொடுமைகள் பற்றிய உண்மையைக் கண்டறிய, ஒற்றைநாடு என்னும் பார்வையைத் தாண்டிச்செல்வது மிக முக்கியமானது. உண்மையை நாடுகடந்த நிலைக்கு இட்டுச்சென்று அதன் சட்ட அடிப்படையிலான விளைவுகளை சர்வதேச மட்டத்தில் தேட வேண்டிய தேவையுள்ளது.

இன அழிப்பின் உலக அரசியல்: அமைதிக்கு எதிரான குற்றம்

தமிழ் மக்களுக்கெதிரான நன்கு திட்டமிடப்பட்ட தாக்குதல்கள், இலங்கை அரசினது பூரண அறிவோடு மட்டுமல்ல, ஐ. நா. ஊடாகத் தமது குரல்களை வெளிப்படுத்திய சர்வதேசப் பங்காளிகளின் பூரண அறிவோடுமே நடத்தப்பட்டன. இலங்கையில் இடம்பெற்றதை இன அழிப்பு என அழைப்பது சட்டம், அறம், கோட்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் சரியானது மட்டுமல்ல, பல தசாப்தங்களாக ஓரங் கட்டுதல்களுக்கும் அடக்குதல்களுக்கும் ஒடுக்குதல்களுக்கும் எதிராகப் போராடிவந்த தமிழ் மக்களின் அரசியல் சிந்தனையைக் கவர்வது மாகும். இன அழிப்பு எனப் பெயர் சூட்டுவது குறியீட்டுரீதியாகவும் உணர்வுபூர்வமாகவும் பெறுமதி மிக்கது என்பதோடு, அது இலங்கையின் ஒற்றையலகுத் தன்மையினதும் அதன் சர்வதேச உறவுகளினதும் ஒழுங்கு நிலைத் தகுதியைத் தீவிரக் கேள்விக்குள்ளாக்குகிறது என்றவகையில் அதற்கு அரசியல் பெறுமதியும் உண்டு.

ஒரு இனவாத சிந்தாந்தத்திற்கும் அதிகாரக் கட்டமைப்புக்கும் எதிர்ப்பாக உருவாக்கப்பட்ட தமிழ் மக்களின் தேசிய ஆதாரங்களைப் போர் வேண்டுமென்றே அழித்தொழித்தது. தமிழ் இன அழிப்பில் இலங்கை அரசே குற்றவாளி. எனினும் மேற்குறிப்பிட்ட வல்லரசுகளின் தலைமையிலான, சர்வதேசச் சமூகமும் இதற்கு உடந்தையாக இருந்தது என்ற வகையில் அதற்கும் இதில் பங்குண்டு.

மேற்குறிப்பிட்ட வல்லரசுகளின் பங்களிப்பு எவ்வாறு சர்வதேசச் சட்டத்திற்குள் அடக்கப்படலாம்? அவர்களின் பங்களிப்பு – வலிந்து தொடுக்கப்பட்ட போரின் மூலம் நிகழ்த்தப்பட்ட – அமைதிக்கெதிரான குற்றம் அல்லவா? உண்மையில், இந்தப் போர் நடத்தப்படாதிருந்தால், தமிழ் இன அழிப்பு தவிர்க்கப்பட்டிருக்கும். இந்தவகையான பார்வையில், இனவாத நோக்கம் அல்ல கேந்திர அக்கறையே முக்கிய விடயமாகத் தென்படுகிறது. அமைதிக்கெதிரான குற்றம் ஒன்றால் கேந்திர அக்கறை வலுப்படுத்தப்பட்டது. இதில் மேற்குறிப்பிட்ட வல்லரசுகளே குற்றவாளிகள்.

நிறைவு: நீதி, புனரமைப்பு, மற்றும் நம்பிக்கை

நீதிக்கும் வன்கொடுமைகளை இன அழிப்பு என அழைப்பதற்குமான தொடர்பு என்ன? இன அழிப்பெனப் பெயரிடுவதன் மூலம், தமிழர்களின் பாரம்பரியத் தாயகம் மீதான அவர்களின் சுயநிர்ணய உரிமையினதும் சுயாதிக்க உரிமையினதும் அரசியல் தகுதியும் அறத் தகுதியும் ஏற்கப்பட்டு வலுப்படுத்தப்படுகின்றன. எனினும் இந்த வகையான நீதி வழங்கல், இரு இனங்களையும் மேலும் பிளவுபடுத்தும் வகையிலான ‘சிங்களவர் ஙீ தமிழர்கள்’ என்ற தவிர்க்க முடியாத இரும அடையாள நிலைக்கு இட்டுச்செல்லக் கூடாது. பன்முகத்தன்மையையும் சமத்துவத்தையும் கூட்டுச்சார்பையும் சகித்துக்கொள்ள முடியாத ஒரு அடிப்படைவாத அரசு சித்தாந்தத்திற்குக் காட்டப்படும் தொடர்ச்சியான துணிச்சல் மிக்க எதிர்ப்பின் விளைவாகவே நீதி பெறப்படும். அத்தகைய அடிப்படைவாத சித்தாந்தத்திற்கு ஆதியான அல்லது புதிப்பிக்கப்படுகின்ற மாற்றமடைய முடியாத கடப்பாடுகள் எதுவும் கிடையாது. மாறாக, அது காலனித்துவக் காலத்தில் வரலாற்றுரீதியாகப் புனையப்பட்டு இலங்கைத் தேசத்தைக் கட்டியெழுப்பியவர்களாலும் அவர்களின் கூட்டாளிகளாலும் பலப்படுத்தப்பட்டது. இத்தகையதொரு வரலாற்றுரீதியானதும் இனவாதமற்றதுமான தொலை நோக்கு மட்டுமே இலங்கையில் மீளலை ஏதுவாக்கும்.

நீதிக்கும் அமைதிக்கெதிரான குற்றத்திற்குமிடையிலான தொடர்பு என்ன? ஐக்கிய நாடுகள் மனித உரிமைச் சபையின் வருடாந்த அமர்வு தொடர்பான ஆரவாரங்கள் தமிழர்களை ஆதரவற்ற, பாதிக்கப்பட்டவர்களாக முன்னிறுத்தி, அவர்களுக்கு நம்பிக்கையளிப்பது போல் தோற்றங்காட்டுகின்றன. இலங்கையில் பொறுப்புடைமைக் கட்டமைப்பு ஒன்று ஏற்படுத்தப்பட வேண்டுமென்ற ஐ. நா. மனித உரிமைச் சபையின் முன்மொழிவுக்கு அமெரிக்கா வழங்கிய ஆதரவானது – தேசத்ததைப் பாதுகாப்பதற்கானதெனப் போரை நியாயப்படுத்தி, மனித உரிமை மீறல்களைத் தனிப்பட்ட இராணுவ வீரர்களின் ஒழுக்கயீனம் எனத் தாழ்த்திய – எல். எல். ஆர். சி. பரிந்துரைகளை இலங்கை அரசு நிறைவேற்ற வேண்டுமெனக் கேட்டுக்கொண்டதோடு நின்றுகொண்டது. கொழும்பு அமெரிக்கத் தூதரகத்தில் 13 பெப்ரவரி 2012 அன்று இடம்பெற்ற பத்திரிகையாளர் மாநாட்டில் அமெரிக்க அரசுத் திணைக்களத் துணைச் செயலர் ஒருவரால் வெளியிடப்பட்ட தூதரக அறிக்கையில் இது மிகத் தெளிவாக எடுத்துக்கூறப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் பயன்படுத்தப்பட்ட சொற்பதம் ‘போர்க் கால நெறிப்பிறழ்வுகள்’ (wartime abuses) என்பதே. பெப்ரவரி 17இல், மேற்கூறிப்பிட்ட மனித உரிமை அமைப்புகளும் மேலும் சில அரசுச் சார்பற்ற நிறுவனங்களும் இணைந்து அமெரிக்காவின் கோரிக்கையைப் பாராட்டி அறிக்கையொன்றை வெளியிட்டன. இலங்கையின் வன் கொடுமைகளை வரலாற்று நோக்கில் உண்மையாகப் பிரதிபலிக்கும் வகையில் சர்வதேச மனிதநேயச் சட்டம் அமல்படுத்தப்படவில்லை என்பது மட்டுமல்ல உண்மையை மறைத்து நீதியையும் மீளலையும் மழுங்கடிப்பதற்கான முயற்சிகள் அமைதிக்கு எதிரான குற்றங்களைப் புரிந்த வல்லரசுகளால் வேண்டுமென்றே மேற்கொள்ளப்படுகின்றன என்பதும் தெள்ளத்தெளிவாகிறது. உண்மையில் இலங்கையில் தமிழர்களுக்கெதிராக மேற்கொள்ளப்பட்டது இன அழிப்பும் அமைதிக்கெதிரான குற்றமுமாகும்.

2002 இன் சமாதான நடவடிக்கைகள் ஊடாக, வேறுபட்ட காரணங்களுக்காகப், பேச்சுவார்த்தை அடிப் படையிலான தீர்வை அடைய முயன்றுகொண்டி ருந்த இலங்கைத் தீவின் மக்கள் அனைவருக்கும் எதிராக நிகழ்த்தப்பட்ட அமைதிக்கெதிரான குற்றமாகவும் அது இருக்கிறது. ஒரு சர்வதேசச் சுயாதீனமான பொறுப்புடைமைக் கட்டமைப்பு மாற்றுச் சர்வதேசச் சமூகத்தால் நிறுவப்பட வேண்டும். நடைமுறையில் இது சாத்தியப்பட, இலங்கையில் மனித உரிமைகளுக்கும் நீதியான சமாதானத்திற்கும் ஆதரவு கோரும் செயல்பாடுகளின் போக்கிலும் கோட்பாட்டுவெளியிலும் (orientation and paradigm) பாரிய மாற்றங்கள் ஏற்பட வேண்டும். அமைதிக்கெதிரான குற்றத்திற்கு நீதி பெறப்படுவதை இத்தகைய மாற்றமொன்றே உறுதிப்படுத்தும். வன்கொடுமைகள் பற்றிய பேரதிர்ச்சியூட்டும் நினைவுகளிடையே, வரலாற்றிலிருந்து பாடங் கற்றுக்கொள்வதால் மட்டுமே நம்பிக்கையைக் கண்டடைய முடியும்.

– கட்டுரையாளரான முனைவர் ஜூட் லால் பெர்ணாண்டோ (Dr Jude Lal Fernando) டப்ளின் டிரினிட்டி கல்லூரியைச் சார்ந்த ஐரிஸ் ஸ்கூல் ஆஃப் எக்குமெனிக்ஸில் அமைதி மற்றும் இணக்க மேம்படுத்தல் துறையில் உயராய்வு மேற்கொள்வதோடு அங்கு விரிவுரையாளராகவும் பணியாற்றுகிறார். இலங்கையின் களனியிலுள்ள துலானா என்னும் மதம் சார்பான உரையாடல் மற்றும் ஆராய்ச்சி மையத்தின் உறுப்பினர். டிரினிட்டி கல்லூரியில் 2010 இல் இலங்கைக்கான மக்கள் தீர்ப்பாயத்தை ஒருங்கிணைத்தவர். –

நன்றி:

குளோபல்தமிழ்நியூஸ்.நெற்

 

சிறிலங்கா தொடர்பான மக்கள் தீர்பாயம் 2014 அறிக்கை!

+

The Verdict of the PPT in Tamil

ppt_final_report_web_tamil

ppt_final_report_web_english

http://www.ptsrilanka.org/

Up ↑