Search

Eelamaravar

Eelamaravar

Month

December 2018

தலைவர் பிரபாகரன் அவர்களின் தூர நோக்கு பார்வை !

2000ஆம் ஆண்டு ஆனையிறவு கூட்டு படைத்தளம் தமிழீழ விடுதலைப்புலிகளின் கைகளில் வீழ்ந்த பின் இலங்கை தீவில் இரண்டு இராணுவக் கட்டமைப்பு உண்டு என உலகமே ஒத்துகொண்ட காலப்பகுதி.

ஒன்று இலங்கை இராணுவம் , மற்றையது தமிழீழ இராணுவம். அதுவும் இனிமேலும் தொடர்ந்து போர் நடந்தால் அது இலங்கை இராணுவத்துக்குதான் பேரிழப்பு என்ற ஒரு நிலைமை இப்படி இருக்கும் போதுதான் இலங்கை அரசு அரசியல் பேச்சுவார்த்தைக்கு அடிபணிந்தது.

அதை தொடர்ந்து எமது தேசியத்தை காணுவதற்கு என்றும் ,அரசியல் நல்நோக்கம் என்றும் பல குள்ளநரி கூட்டங்கள் வன்னி நிலப்பகுதிக்குள் படை எடுத்த காலமது எரிக் சோல்கைம் என்றும், யஹூசி அஹாசி என்றும் ஏன் இன்னும் எத்தனை எத்தனையோ உலக அரசியல் தலைவர்களும், இப்படி பெரிய பெரிய வித்துவானுகள் எல்லோரும் கிளிநொச்சி வந்து எம் தலைமையோடு கைலாகு கொடுத்த காலமது.

கலகம் தீர்த்து வைப்பது நிட்சயம் என்று நோர்வே திடமாக நின்ற காலமதுவும் கூட!.

இந்த உலக நாடுகளை எதிர்த்து இனிமேல் இலங்கை இராணுவம் போர் செய்ய முடியாது என்றொரு சூழ்நிலை மாவிலாறு என்று ஒரு ஊர் இருப்பது பெரும் பாலும் யாருக்கும் தெரியாததும் கூட வழமைபோல ஒரு பெரிய உலக அரசியல் புள்ளி ஒருவர் எமது தேசிய தலைவரை காணுவதற்கு எமது அரசியல் தலை நகர் கிளிநொச்சி வருகிறார்.

எமது தேசிய தலைவரையும் சந்திக்கிறார், அரசியல் பேச்சுகளும் சில பேசுகிறார் மீண்டும் வந்த வழியே போய் விடுகிறார். எம் தேசிய தலைவருக்கு பக்கத்தில் நின்று கொண்டிருந்த தளபதிகள்,போராளிகள் அனைவரினதும் முகத்தில் ஒரு சந்தோசம் எதற்கு தெரியுமா!?. அதை அவர்களே தலைவரிடம் சொல்கிறார்கள்.

“அண்ணே எம்மை யார் யாரோ பெரிய ஆட்கள் எல்லோரும் வந்து பார்கிறார்கள் இத்தோடு நாம் பட்ட துன்பங்களுக்கு விடிவு கிடைத்து விடும், எம் மாவீரர்கள் கண்ட கனவை நனவாக்கும் காலம் வந்துவிட்டது தானே ” என்று கேள்வியாகவும் கேட்டார்கள்.

எம் தலைவர் ஒரு விநாடி கூட தாமதிக்காமல் பதில் அளித்தார் எப்படி தெரியுமா..?

“இல்லை அப்படி மட்டும் நினைக்காதீங்கோ இனிமேல் தான் எமது இயக்கமும்,எமது மக்களும் இதுவரை காலமும் படாத பின்னடைவையும், இழப்புகளையும் சந்திக்க போகிறோம் தயாராக இருங்கள் ” என்று கூறினார்.

இதை கேட்ட தளபதிகளுக்கும், போராளிகளுக்கும் மிகவும் குழப்பமாக எம் தலைவரின் முகத்தை பார்த்தான்கள் பதிலுக்கு எமது தலைவர் மெல்லியதாக சிரித்து விட்டு அங்கிருந்து போய் விட்டார் அன்றைய எமது தலைவரின் தீர்கதரிசனத்துக்கு 2009ல் பதில் கிடைத்தது அனைவருக்கும்.

தமிழர்கள் மேல் வீசப்பட்ட கொத்துக் குண்டுகள் (Cluster Bombs Tamil Genocide)

உலக நாடுகளால் தடை செய்யப்பட்ட கொத்து குண்டுகள். இவை தான் இலங்கையில் 2008 மற்றும் 2009ல் வீசப்பட்டது. இந்தியா, அமெரிக்கா மற்றும் சில வல்லரசு நாடுகள் மட்டுமே CBU-105 வகை நவீன வகை சென்சார்க்கொண்ட கொத்து குண்டுகளை பயன்படுத்துகின்றன. 7ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவிடம் 375 மில்லியன் டாலர்களுக்கு வாங்குவதற்கு இந்தியா ஒப்பந்தம் செய்தது. இந்தியாவின் BL755 வகை மற்றும் ரஷ்யாவின் RBK-500 AO2.5-RT வகை கொத்து குண்டுகள் 2009ல் இலங்கையில் வீசப்பட்டன. இந்தியாவை தவிர வேறு யாரும் இலங்கை அரசுக்கு இந்த வகை குண்டுகளை அளிக்க வாய்ப்பு இல்லை…

10000அடி உயரத்தில் இருந்து போர்விமானங்கள் மூலம் குறிப்பிட்ட சதுர கிலோமீட்டர் பரப்பளவுக் கொண்ட ஒரு பகுதியைக் குறிவைத்து ஒரு பெரிய குண்டு வீசப்படும். அதிலிருந்து வரும் பல நூறு சிறு ரசாயன குண்டுகள் பூமியில் விழுந்த நொடிப்பொழுதில் அதில் இருந்து வெளிவரும் வேதிவாயுக்கள் 10அடி உயரத்திற்கு பிராணவாயுவான Oxygenனை அப்புறப்படுத்தும்.

பின், ஒருவித அலறல் சத்தத்துடன் வெடித்து மக்களின் கண், காது, மூக்கு, வாய் என்று அனைத்து உறுப்புகளில் இருந்தும் இரத்தம் வெளிவந்து உடல்உறுப்புகள் தனித்தனியே சிதறுண்டு

படிப்பதற்கே நமக்கு இரத்தம் உறைகிறது என்றால் 2009இல் இந்த நாட்களில் NoFireZone என்று அழைக்கப்படும் போர் தடைச் செய்யப்பட்டப் பகுதியில் படுகாயங்களுடன் மருத்துவம் எடுத்துக்கொண்டிருந்த, பச்சிளங்குழந்தைகளுடன் பாதுகாப்பாக சரணடைய வந்த அப்பாவி மக்கள் மீது கண் இமைக்கும் நேரத்தில் வீசிச் சென்றது இராணுவப்படை, நினைத்து பாருங்கள்.

இத்தனைக்கும் இலங்கையிடம் கொத்துக்குண்டு தயாரிக்கும் தொழில்நுட்பம் அப்போது துளியும் இல்லை. இதை இலங்கைக்கு வழங்கியது யார் என்று தெரியுமா?

உலகில் கொத்துக்குண்டுத் தயாரிக்கும் அதிமுக்கியத்துவம் வாய்ந்த 30 நாடுகளில் ஒன்றான, கொத்துக்குண்டுகள் இருப்பு வைத்திருக்கும் 60 நாடுகளில் ஒன்றான, தெற்காசியாவிலே கொத்துக்குண்டு தயாரிக்கும் தொழில்நுட்பத்தை வைத்திருக்கும் ஒரே நாடான இந்தியா மட்டும் தான். ஒருவேளை இனப்படுகொலைத் தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்தப்படுமானால் இந்தியாவின் முகத்திரைக் கிழித்தெறியப்படும்.

2012களில் United Nations Development Programme (UNDP) கொடுத்த ஆய்வின்படி வடக்கில் யாழ்பாணத்திற்கும் கிளிநொச்சிக்கும் இடையில் பச்சிளப்பள்ளி சுற்றிய பகுதியில் 42 கொத்துக்குண்டுகள் வீசப்பட்டதற்கான ஆதாரங்கள் உள்ளன என்று கூறியுள்ளது.

கொத்துக்குண்டுகளை தயாரிக்கும், வைத்திருக்கும் மற்றும் பயன்ப்படுத்திய நாடுகளின் பட்டியல் பின்வருமாறு, அதில் பயன்ப்படுத்திய நாடுகளின் பட்டியலில் மட்டும் உள்ள இலங்கை.

http://www.dnaindia.com/india/report-india-strikes-deal-with-us-for-cluster-bombs-1479604

https://www.theguardian.com/world/2016/jun/20/cluster-bombs-used-sri-lanka-civil-war-leaked-photos-suggest

http://www.bbc.co.uk/news/world-asia-17861187

http://www.washingtontimes.com/news/2012/apr/26/un-finds-cluster-bombs-sri-lanka/?page=all

Source: Wikipedia

https://en.m.wikipedia.org/wiki/Cluster_munition

கூட்டமைப்பை நடத்துவது புலிகள் தான் ! தேசத்தின் குரல் காணொளி

இப்போ யாரும் கேக்குறதுக்கு இல்லை என்று ஆட்டம் போடுகிறது இந்த கூத்தமைப்பு.. ஒரு நாள் கேள்வி கேட்கப்படும்.. அப்போ என்ன செய்வார்களோ..??

பதிவு – சக்தி தொலைக்காட்சி

https://www.facebook.com/plugins/video.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2FSiNnavanEelamMPK%2Fvideos%2F134712594094282%2F&show_text=0&width=560

யாழ்.மாவட்டத் தளபதி லெப்.கேணல் மதி


திருநெல்வேலிப் பகுதியில் இந்தியப் படையினரின் சுற்றிவளைப்பின்போது தன்னைத்தானே சுட்டு வீரச்சாவைத் தழுவிக் கொண்ட யாழ். மாவட்டத் தளபதி லெப்.கேணல் மதியின் 30 ம் ஆண்டு நினைவு நாள்.
10.12.1988 அன்று யாழ். திருநெல்வேலிப் பகுதியில் இந்தியப் படையினர் சுற்றிவளைக்கப்பட்டபோது தன்னைத்தானே சுட்டு, வீரச்சாவைத் தழுவிக் கொண்ட

யாழ்.மாவட்டத் தளபதி லெப்.கேணல் மதி (சுப்பிரமணியம் பாலச்சந்திரன் – மல்லாகம், யாழ்ப்பாணம்)

தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் தனது இன்னுயிரை ஈகம் செய்த இந்த வீரமறவனை இன்றைய நாளில் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூருகிறோம்.

ஏன் அண்ணா நீங்கள் அதைச் செய்யவில்லை ?

  ‘உன்னிடம் துப்பாக்கியை நீட்டுபவனிடம் நீ கையெடுத்து கும்பிடாதே நீயும் துப்பாக்கியை நீட்டு’ என்றாயே… நிராயுதபாணிகளாக நின்ற இத்தனை அப்பாவி மக்களை கொன்றொழித்தானே ஏன் அண்ணா நீ மௌனம் காத்தாய்????

‘அவலத்தை தந்தவனுக்கே அதை திருப்பிக்கொடு’ என்றாயே பால்மணம் மாறாத செஞ்சோலை பிஞ்சுகளின் மீது குண்டுவீசி கொன்றானே அதுக்கு பலிவாங்கும் விதமாக நீயும் குறைந்தது இரண்டு சிங்கள பாடசாலை மீதல்லவா தாக்குதல் நடத்தியிருக்கவேணும் ஏன் அண்ணா நீ அதை செய்யவில்லை????

சிங்கள தேசத்தின் இதய பகுதியான கொழும்பில் கட்டுநாயக்கா விமானதளத்தில் புகுந்து இத்தனை விமானங்களை உடைத்தெறிய தெரிந்த உனக்கு ஒரு சிங்கள விமான நிலைய ஊழியனையோ அல்லது ஒரு சிங்கள விமான பணிப்பெண்ணையோ கொன்றொழிக்க தெரியவில்லையா ஏன் அண்ணா நீ அதைச் செய்யவில்லை????

எத்தனை எத்தனை உன் தங்கைகளை பிள்ளைகளை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி கொடூரமாக கொன்றானே அதுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக நீயும் உன் போராளிகளுக்கு சிங்களப் பெண்களையும் வன்புணர்வுக்கு ஆளாக்கி கொன்றொழிக்க கட்டளை இட்டிருக்கலாமே ஏன் அண்ணா நீ அதை செய்யவில்லை????

இவ்வளவுக்கு பிறகும் வான் கரும்புலிகளிடம் உங்கள் இலக்கு பிழைத்தாலும் பரவாயில்லை குழந்தைகள் மீதோ, வழிபாட்டு தளங்கள் மீதோ பொதுமக்கள் மீதோ தவறியும் தாக்குதல் நடத்திவிடக்கூடாது என்று சொல்லி கண்ணீர் மல்க அவர்களை அனுப்பி வைத்தாயே ஏன் அண்ணா எதிரி எங்கட பொதுமக்களை கண்மூடித்தனமாக கொன்றொழித்து முன்னேறி வந்தானே நீயும் அவங்கட பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்த ஏன் அண்ணா அனுமதிக்கவில்லை????

சர்வேதேசம் உன்னை பயங்கரவாதி, தீவிரவாதி என்றல்லவா கூறுகின்றது… தீவிரவாதி என்பவன் பேருந்து நிலையம், ரயில் நிலையம் கோவில்கள், மசூதிகள், தேவாலயங்கள், புத்தவிகாரைகள் இப்படிபட்ட இடங்களில் குண்டுவைத்து பொதுமக்களையல்வா கொன்றொழித்திருக்க வேண்டும் ஏன் அண்ணா நீ அதைச்செய்யவில்லை????

இறுதியாக உறுதியாக ஒன்று மட்டும் சொல்கின்றேன்
உன்னைப்போன்ற தலைவனை
உன்னைப்போன்ற வீரனை
உன்னைப்போன்ற தேசப்பற்றாளனை
உன்னைப்போன்ற நேர்மையாளனை
உன்னைப்போன்ற ஒழுக்க சீலனை
உன்னைபோன்ற சிந்தனையாளனை
உன்னைப்போன்ற அர்ப்பணிப்பாளனை
உன்னைப்போன்ற மனிதநேயனை
உன்னைப்போன்ற யோக்கியனை
உன்னைப்போன்ற பண்பாளனை
உன்னைப்போன்ற செயல் வீரனை
உன்னைப்போன்ற தியாகியை
உன்னைப்போல் தமிழை நேசித்தவனை
உன்னைப்போல் தமிழரை நேசித்த தலைவனை
இனி எழுதப்படப்போகும் எந்த வரலாறும் தரிசிக்க போவதில்லை இது மட்டும் உறுதி. நீ பிறந்த தமிழினத்தில் பிறந்தது நாங்கள் பெற்ற வரம். உந்தன் காலத்தில் வாழ்வது எங்கள் பூர்வஜென்ம புண்ணியம்.

அநீதிகளை கண்டு கல்லாய் இருக்கும் கடவுளைவிட அதை தடுக்க போராடிய நீ கடவுளைவிட நூறு மடங்கு மேல். உன் பாதம்பட்ட மண்தான் எங்கள் திருநீறு. நீ உச்சரிக்கும் வார்த்தைகள்தான் எங்களுடைய வேதம் “பிரபாகரன்” என்ற பெயர் தமிழன் சுப்ரபாதம்.

– பிரபாசெழியன்.

தமிழீழ விடுதலைக்கு விதையான தமிழகத்தைச் சேர்ந்த மாவீரர்கள்.

தமிழீழ விடுதலை போராட்டத்தில் 40 ஆயிரம் வரையிலான மாவீரர்கள் தங்கள் உயிர்களை அர்ப்பணித்திருக்கின்­றார்கள். இந்த விடுதலை போராட்டத்தில் தமிழக மக்களின் பங்களிப்புக்கள் மறக்கமுடியாதவை. தமிழீழ மக்களின் விடுதலைக்காகவும் விடுதலைப் புலிகளைப் பாதுகாப்பதற்காவும் எத்தனையோ தமிழக உறவுகள் தங்கள் அற்புதமான உயிர்களை அர்ப்பணித்திருக்கின்றார்கள் இந்த வரிசையில்….

அப்துல் ரவூப், முத்துக்குமார் என 20 க்கும் மேற்பட்டவர்கள் தங்களை தீக்கிரையாக்கி தமிழர்களின் உரிமைக்காக உயிர்விட்டிருக்கும் அதேவேளையில் களத்தில் ஆயுதம் தாங்கிப் போராடியும் தமிழக இளையோர் யுவதிகள் தங்கள் உயிர்களை அர்ப்பணித்திருக்கின்­றார்கள்.

இறுதிவரையிலான போரில் எத்தனை தமிழக மாவீர்கள் விதையானார்கள் என்பது உறுதியாக தெரியவில்லை எனினும் ஒரு கரும்புலி. இரு பெண் மாவீர்கள் உற்பட 14 தமிழக மாவீர்களின் விபரங்கள் கீழே

பிரிவு: கரும்புலி
நிலை: லெப்டினன்ட்
இயக்கப் பெயர்:செங்கண்ணன்
இயற்பெயர்: தனுஸ்கோடி செந்தூர்
ஊர்: சாத்தூர், சிவகாசி (தமிழகம்)
வீரப்பிறப்பு: 25.01.1975
வீரச்சாவு: 11.11.1993
நிகழ்வு: யாழ்ப்பாணம் பலாலி படைத்தளத்தினுள் ஊடுருவி மேற்கொள்ளப்பட்ட சிறப்பு நடவடிக்கையின்போது வீரச்சாவு துயிலுமில்லம்: உடுத்துறை மாவீரர் துயிலும் இல்லத்தில் இம்மாவீரரின் நினைவுக்கல் நாட்டப்பட்டுள்ளது.

நிலை: மேஜர்
இயக்கப் பெயர்: உமா
இயற்பெயர்: வேலுச்சாமி இந்துமதி
ஊர்: தமிழகம்
வீரப்பிறப்பு: 27.05.1972
வீரச்சாவு: 11.12.1999
நிகழ்வு: கிளிநொச்சி பரந்தன் பகுதியில் “ஓயாத அலைகள் 03“ நடவடிக்கையின்போது வீரச்சாவு
துயிலுமில்லம்: விசுவமடு மாவீரர் துயிலும் இல்லத்தில் இம்மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.

நிலை: வீரவேங்கை
இயக்கப் பெயர்: மணியரசி
இயற்பெயர்: செல்லத்துரை கமலாதேவி
ஊர்: தமிழகம்.
வீரப்பிறப்பு: 02.02.1977
வீரச்சாவு: 19.04.1996
நிகழ்வு: யாழ்ப்பாணம் தென்மராட்சி கோட்டத்தை கைப்பற்ற
மேற்கொள்ளப்பட்ட சூரியகதிர்-2
நடவடிக்கைக்கு எதிரான சமரில் வீரச்சாவு
துயிலுமில்லம்: ஈச்சங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம்மாவீரரின் நினைவுக்கல் நாட்டப்பட்டுள்ளது.

நிலை: வீரவேங்கை
இயக்கப் பெயர்: பத்மநாபன்
இயற்பெயர்: பி.பத்மநாபன்
ஊர்: திருச்சி, தமிழகம்.
வீரப்பிறப்பு: 27.07.1963
வீரச்சாவு: 16.03.1988
நிகழ்வு: தமிழகத்தின் திருச்சியில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட விபத்தின்போது வீரச்சாவு

நிலை: வீரவேங்கை
இயக்கப் பெயர்: சுனில்
இயற்பெயர்: கதிரவன்
ஊர்: தமிழகம்.
வீரச்சாவு: 11.04.1988
நிகழ்வு: முல்லைத்தீவு ஒட்டங்குளத்தில்
இந்தியப்படையினர் மேற்கொண்ட தாக்குதலில் வீரச்சாவு

நிலை: லெப்டினன்ட்
இயக்கப் பெயர்: இனியன்(றஸ்கின்)
இயற்பெயர்: முத்தையா இராமசாமி
ஊர்: தூத்துக்குடி, கன்னியாகுமாரி, தமிழ்நாடு.
வீரப்பிறப்பு: 23.07.1962
வீரச்சாவு: 11.12.1991
நிகழ்வு: மன்னார் மருதமடு வேப்பங்குளம் பகுதியில்
சிறிலங்கா படையினருடனான சமரில் வீரச்சாவு
துயிலுமில்லம்: ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலும் இல்லத்தில் இம்மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.

நிலை: 2ம் லெப்டினன்ட்
இயக்கப் பெயர்: உதயசந்திரன்
இயற்பெயர்: சேதுபாணடித்தேவர்
ராமமணி சேகரன்மகாதேவர்
ஊர்: திருநெல்வேலி மாவட்டம், தமிழ்நாடு.
வீரப்பிறப்பு: 05.05.1969
வீரச்சாவு: 09.06.1992
நிகழ்வு: மன்னார் சிறுநாவற்குளத்தில் சிறிலங்கா படையினர் மீதான அதிரடி தாக்குதலின் போது வீரச்சாவு

பிரிவு: கடற்புலி
நிலை: கப்டன்
இயக்கப் பெயர்: ஈழவேந்தன்
இயற்பெயர்: துரைராசன் குமரேசன்
ஊர்: தமிழ்நாடு.
வீரப்பிறப்பு: 25.05.1969
வீரச்சாவு: 20.11.1992
நிகழ்வு: தமிழீழக் கடற்பரப்பில் வீரச்சாவு
துயிலுமில்லம்: எள்ளங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம்மாவீரரின் நினைவுக்கல் நாட்டப்பட்டுள்ளது.

நிலை: லெப்டினன்ட்
இயக்கப் பெயர்: சச்சு
இயற்பெயர்: அன்ரனி சிறிகாந்த்
ஊர்: பியர், இந்தியா.
வீரப்பிறப்பு: 04.09.1975
வீரச்சாவு: 20.12.1992
நிகழ்வு: மன்னார் நானாட்டன் மாதிரிக்கிராமம்
படை முகாம்களுக்கிடையில் அமைந்துள்ள காவலரண்கள்
மீதான தாக்குதலின்போது வீரச்சாவு
துயிலுமில்லம்: பண்டிவிரிச்சான் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம்மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.

நிலை: கப்டன்
இயக்கப் பெயர்: குணதேவன்(லக்ஸ்மணன்)
இயற்பெயர்: அம்மனாரி தென்னரசு
ஊர்: தமிழகம்
வீரப்பிறப்பு: 01.01.1966
வீரச்சாவு: 13.05.1996
நிகழ்வு: அம்பாறை 11ம்கொலனியில் அமைந்திருந்த
காவல்துறை நிலையம் மீதான தாக்குதலின்போது வீரச்சாவு

நிலை: கப்டன்
இயக்கப் பெயர்: பெரியதம்பி(விஸ்ணு)
இயற்பெயர்: சிவானந்தம் முகேஸ்
ஊர்: தமிழகம்
வீரப்பிறப்பு: 31.05.1975
வீரச்சாவு: 19.05.1996
நிகழ்வு: திருகோணமலை கீலக்கடவெல படைமுகாம் மீதான
தாக்குதலில் வீரச்சாவு
துயிலுமில்லம்: மாவீரர் துயிலும் இல்லத்தில் இம்மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.

நிலை: கப்டன்
இயக்கப் பெயர்: குற்றாளன்
இயற்பெயர்: கந்தையா கலைச்செல்வன்
ஊர்: தமிழகம்
வீரப்பிறப்பு: 08.08.1969
வீரச்சாவு: 16.07.1996
நிகழ்வு: மன்னார் பள்ளிமுனைப்பகுதியில்
படையினரின் சுற்றிவளைப்பின் போது சயனைட்
உட்கொண்டு வீரச்சாவு

நிலை: வீரவேங்கை
இயக்கப் பெயர்: சுதா
இயற்பெயர்: வீரப்பன் இலட்சுமணன்
ஊர்: தஞ்சாவூர், தமிழ்நாடு
வீரப்பிறப்பு: 28.10.1980
வீரச்சாவு: 05.07.1999
நிகழ்வு: மன்னார் பள்ளமடு பகுதியில்
சிறிலங்கா படையினருடன் ஏற்பட்ட நேரடிமோதலில்
வீரச்சாவு
துயிலுமில்லம்: கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம்மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.

நிலை: மேஜர்
இயக்கப் பெயர்: குருசங்கர்
இயற்பெயர்: பழனியாண்டி மகேந்திரன்
ஊர்: தமிழகம்
வீரப்பிறப்பு: 18.04.1973
வீரச்சாவு: 25.07.1996
நிகழ்வு: முல்லைத்தீவு படைத்தளம் மீதான ஓயாத அலைகள்
நடவடிக்கையின்போது விழுப்புண்ணடைந்து பண்டுவம்
பெறும்போது வீரச்சாவு
துயிலுமில்லம்: பண்டிவிரிச்சான் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம்மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

இசைப்பேழை :முள்ளிவாய்க்கால் தொட்டு இன்று வரை எம்முள்ளே எரிந்து வரும் நெருப்பிது

செவியை நிறைத்த மாவீரம்

புனிதமானது விற்பனைக்கானதல்ல என்கிற வாசகத்தை தாங்கி இன்று வெளிவந்திருக்கின்ற இந்த இறுவெட்டானது வெறும் இசைப்பேழை மட்டும் அல்ல, முள்ளிவாய்க்கால் தொட்டு இன்று வரை எம்முள்ளே எரிந்து வரும் நெருப்பிது.. இத்தனை காலமும் தேக்கிவைத்த தமிழரின் உணர்விது.

ஓர் புதினமோ, கட்டுரையோ அல்லது இன்னபிற எழுத்தோ அது என்ன சொல்ல வருகிறது என்பதை தாண்டி அதனுள்ளே என்ன இருக்கிறது என்கிற எதிர்பார்ப்பை கூட்டி வாசகனை தன் பக்கம் ஈர்ப்பதில் பெரும்பங்கு வகிப்பது அதன் தலைப்பு.. “விதையாய் விழுவோம் விடுதலையாய் எழுவோம்” என்கிற இந்த இவ்வெறுட்டின் தலைப்பே சொல்லிவிடுகிறது இதன் உள்ள இருப்பது வெறும் பாடல்கள் மட்டுமல்ல.. விடுதலை முழக்கமும் இதில் இடம்பெற்றிருக்கிறதென்று…

விலை கொடுத்தாலும் கிடைக்காததென்று இந்த உலகில் தனியாய் எதுவும் இல்லை உயிரைத்தவிர.. அந்த உயிரையும் விலையாய் கொடுத்து ஈழமென்ற தாய் நிலத்திற்காகவும், தமிழனின் தன்மான விடிவிற்காகவும் சமராடி உயிர் நீத்த எம் மாவீரைப் போற்றும் விதமாய் வெளிவந்திருக்கும் இந்த இறுவெட்டானது.. விதையாய் வீழ்ந்தாலும் விடுதலையாய் எழுவோம் என்கிற அறைகூவலொன்றை கொஞ்சம் சத்தமாகவே விடுத்திருக்கிறது இந்த உலகத்திற்கு..

மாவீரர்களுக்கான புகழாஞ்சலி மற்றும் நம்மை தலைநிமிர்த்திய தலைவனுக்கான வாழ்த்து இதை தாண்டி நிமிராத தமிழனின் முதுகெலும்பை நிமிர்த்தும் நெம்புகோலொன்றும் பாடல்களினூடே இடம்பெற்றிருப்பாதகவே தோன்றுகிறது. இது மிகையான வார்த்தையல்ல, மிகச்சரியான வார்த்தையென்பதை இடம்பெற்றுள்ள பாடல்களை கேட்கும் இனி கேட்கபோகிற செவிகள் உணரும் என்கிற நம்பிகையானது அதிகமாகவே இருக்கிறது விடுதலையை நேசிக்கிற செவியுடைய எனக்கு.

ஒரு உயிர் கருவாகி, உருவாகி, உலகத்தை காண்பதைபோல தான் ஒரு பாடல் உருவாக்கம் பெற்று இசையாகி வெளியீடு செய்யப்படுவதென்பதும்.. மனைவியை மருத்துவமனையில் பிரசவத்திற்கு அனுமதித்து விட்டு வாரந்தாவில் குறுக்கும் நெடுக்குமாய் நடந்து திரியும் கணவனின் உணர்வை போன்றது அது… ஒவ்வொரு பாடலையும் கேட்கும் பொழுது சுகபிரசவம் அடைந்த ஓர் குழந்தையை காண்கிற மகிழ்வை தருகிறது எனக்கு.. பாடல் எழுதிய அத்தனை பேருக்கும் புரட்சிக்கர வாழ்த்துகளும், நெஞ்சார்ந்த வணக்கங்களும்..

நல்லதொரு வரிகளுக்கு உருக்கொடுத்து இசையமைத்த இசையமைப்பாளர் தாமசு இரத்னம் அவர்களுக்கும், குரல்கொடுத்த பாடகர்களுக்கும், இதில் இடம்பெற்ற இசைக்காய் உழைத்த கடைநிலை ஊழியர்கள் அத்தனை பேருக்கும் இசை ரசிகனான எனதின் நெஞ்சார்ந்த நன்றிகள்.. நல்லதொரு இசையை தந்திருக்கிறார்கள் அதற்கு…

பார்க்கும் போதே ஈர்க்கிற வகையில் அட்டைப்படத்தை வடிவமைத்திருக்கிறார் வரைகலைஞர் அண்ணன் இதயதூரிகா.. விடுதலைத்தனலை தூரிகையில் அள்ளியெடுத்து தெளித்திருக்கும் அவரின் நேர்த்திக்கு எனது வாழ்த்துகள்.

மண்ணுக்காய் போராடி உயிர்நீத்து வீரகாவியமாகி காற்றோடு கலந்து இன்று எம் மூச்சோடு நிறைந்தவிட்ட மாவீரர்களை போற்றும் விதமாக வெளியிடப்பட்டிருக்கும் இந்த இசைப்பேழைக்காய் உழைத்த உறவுகள் மற்றும் வெளியில் நின்று பணமாகவும் இனமாகவும் தோள்கொடுத்த அனைவருக்கும் தாயக விடுதலையை நேசிக்கின்ற அத்தனைபேருமே நன்றிக்கடன் பட்டிருக்கிறோம்.. அந்தவகையில் நானும்..

நல்லதோர் இசைப் பேழையொன்றின் மூலமாக மாவீரரின் ஈகைத்தை போற்றும் முகமாய் இந்த இறுவெட்டை வெளீயிடு செய்ய உழைத்த அத்தனைபேருக்கும் நன்றிகள்.

மேற்சொன்னது போல இதில் இடம்பெற்றிருப்பது பாடல்கள் அல்ல.. முள்ளிவாய்க்காலில் முடிந்துபோனதாய் சொன்ன ஒர் இனத்தின் விடுதலை முழக்கம்.. போராட்டத்தின் தொடர்ச்சி.. புரட்சியின் நீட்சி.. கேட்கும் காதுகள் இதை உணரும் என்பது மட்டும் நிச்சயம்.

-சா.அருண் பிரபாகரன்

லெப் கேணல் நவம் அறிவுக்கூடம்( மாற்றுத் திறனாளிகள் ) காணொளி

லெப். கேணல் நவம் அவர்களின் ஞாபகார்த்தமாக நவம் அறிவுக்கூடம் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களினால் உருவாக்க்கப்பட்டது தாயக மீட்பு போரிலே அங்கவீனமான போராளிகளைப் பேணிப் பாதுகாப்பதற்காகவும் அவர்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்காகவும் உருவாகிய ஒன்று. லெப் கேணல் நவம் அவர்கள் போராட்டத்திலே தனது ஒரு கரத்தினை இழந்தவர்.

இவ் நவம் அறிவுக்கூடம் நிலையத்திலே இருக்கும் போராளிகள் எமது தமிழீழ விடிவிற்கான போராட்டத்திலே பங்களித்து தம் அங்கங்களை இழந்தும் அல்லது முழுமையாக அங்கங்கள் செயற்படாது இருப்பினும் இன்னும் தாயகத்திற்கு ஏதாவது செய்யவேண்டும் எனும் துடிப்புடன் இருக்கிறார்கள்.

தமிழீழத் தேசியத் தலைவர் ஒரு நேர்காணலில் ‘ தமிழீழம் கிடைத்த பிறகு என்ன செய்வீர்கள்?’

என்ற கேள்விக்கு கூறிய பதில்

ஆட்சியை பொறுப்பானவர்களிடம் ஒப்படைத்துவிட்டு போரில் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளை பராமரிக்கும் பணிக்கு சென்று விடுவேன்‘ என்றார்.

இந்த பதிலிலிருந்து அவரது நேர்மையையும் பண்பையும் மட்டுமல்ல போரில் பாதிக்கப்பட்டவர்கள் மீதான அன்பையும் அக்கறையையும் அவர்களை பாதுகாக்க வேண்டிய சமூக அக்கறையையும் புரிந்து கொள்ளலாம்.

தமிழீழ நடைமுறை அரசில் ” நவம் அறிவுக் கூடம் ” என்ற பெயரில் மாற்றுத்திறனாளிகளை பராமரிக்கும் பணி மட்டுமல்ல அவர்களை துறைசார் வல்லுனர்களாக வளர்த்தெடுக்கும் பணியும் முன்னெடுக்கப்பட்டது.

போரியல் கலையில் மட்டுமல்ல கலை, அறிவியல், தொழில்நுட்பம், விஞ்ஞானம் என்று பல துறை சாதனையாளர்களாக மாற்றுத்திறனாளிகள் திகழ்ந்தார்கள்.

தமிழீழத்தின் முதல் பெண் விமானி ஒரு மாற்றுத்திறனாளி என்பது பலருக்கு தெரியாத செய்தி.

ஆனால் இன்று மாற்றுத்திறனாளிகள் சிங்களத்தின் நுண்மையான இனஅழிப்பு நிகழ்ச்சி நிரலின் பிரகாரம் அழிவின், தோல்வியின், அவலத்தின் குறியீடுகளாக மாற்றப்பட்டுள்ளார்கள். உடல் ரீதியாக சிதைந்து போன அவர்கள்; உளவியலும் திட்டமிட்டு சிதைக்கப்படுகிறது.

போருக்கு பின்னான பெண்கள், குழந்தைகள் மீதான வன்முறை என்ற வகைமைக்குள்தான் இந்த மாற்றுத்திறனாளிகளையும் நாம் பொருத்தி பார்க்க வேண்டும். 

ஏனென்றால் இவர்கள் தனிமனிதர்கள் அல்ல. சமூகத்தின் அடையாளம் – அங்கம்.

எனவே இவர்களை மீட்டெடுப்பதில்தான் எமது அடையாளம் மட்டுமல்ல அரசியலும் தங்கியிருக்கிறது. இனஅழிப்புக்க்கு எதிரான நமது எதிர்வினையும் இங்கிருந்துதான் தொடங்குகிறது.

இன்றைய நாளிலாவது இது குறித்து சிந்தித்து ஒரு செயற் திட்டத்தை வகுத்து கொள்வோம்.

உலக மாற்றுத் திறனாளிகள் நாள்…! ” International Day of Persons with Disabilities” (December 3)

(பரணி)

ஆனால் இன்றோ அவர் உதவிகள் இன்றி, பார்ப்பாரற்று தவிக்கின்றனர்.

https://www.youtube.com/results?search_query=%23Uravuppalam

http://www.eelamview.com/2012/05/16/lt-col-navam/

https://www.quora.com/Were-there-any-Indian-Tamils-in-the-LTTE

ஆழிப்பேரலையின் 14 வது ஆண்டு நினைவு தினம் -பாடல் காணொளி

tsunami praba message

ஆழிப்பேரலை இயற்கையின் அழிவு இரங்கல் செய்தி -வே. பிரபாகரன்

ஆழிப்பேரலை இயற்கையின் அழிவில் இரத்த உறவுகளையும் அன்புக்குரியவர்களையும் பறிகொடுத்து ஆற்ற முடியாத துயரத்திலும் வேதனையிலும் துடிக்கின்ற எமது மக்களுக்கு எமது அன்பையும் ஆறுதலையும் ஆழ்ந்த அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.

-வே. பிரபாகரன்

Up ↑