தமிழீழ விடுதலைக்காக களமாடி வீழ்ந்த மாவீரர்களை தமிழர் தாயகத்திலும், புலம்பெயர் தேசங்களிலும், நேற்றுமாலை தமிழ்மக்கள் உணர்வுபூர்வமாக நினைவு கூர்ந்தனர்.
சிறிலங்கா அரசின் கெடுபிடிகளுக்கு மத்தியிலும், தமிழர் தாயகத்தில், நேற்று மாலை மாவீரர் துயிலும் இல்லங்களிலும், நினைவிடங்களிலும், மாவீரர்களை நினைவு கூர்ந்து, பொதுச்சுடர் ஏற்றப்பட்டு, ஈகச்சுடர்கள் ஏற்றப்பட்டன.
இந்த நிகழ்வுகளில், பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் உணர்வுபூர்வமாகப் பங்கேற்று, மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்தினர்.
தமிழர் தாயகத்தில் நடந்த மாவீரர் நாள் நிகழ்வுகளின் ஒளிப்படத் தொகுப்பு-
முல்லைத்தீவு – முள்ளியவளை துயிலுமில்லத்தில்-
கிளிநொச்சி – கனகபுரம் துயிலுமில்லத்தில் –
விஸ்வமடு தேறாவில் மாவீரர் துயிலும் இல்லத்தில் நடைபெற்ற மாவீரர்நாள்
முல்லைத்தீவு- அளம்பில் துயிலுமில்லத்தில்-
யாழ்ப்பாணம் -கோப்பாய் துயிலுமில்லம் முன்பாக –
கடற்புலி மாவீரர்கள் நினைவாக –
முல்லைக்கடற்கரையில். மாவீரர்நாள்
அம்பாறை – கஞ்சிக்குடிச்சாறு துயிலுமில்லத்தில்-
மட்டக்களப்பு – வாகரை துயிலுமில்லத்தில் –
யாழ்.- உடுத்துறை துயிலுமில்லத்தில்-
யாழ் பல்கலைக்கழகத்தில் மாவீரர் நாள் நினைவேந்தல்
கிழக்குப் பல்கலைக்கழக வந்தாறுமூலை வளாகத்தில்
யாழ்.சாட்டி துயிலுமில்லத்தில்-
முல்லைத்தீவு- வன்னிவிளாங்குளம் துயிலுமில்லத்தில்-
யாழ். வல்வெட்டித்துறை மாவீரர் நினைவுத் திடலில்-
மட்டக்களப்பு- தரவை துயிலுமில்லத்தில் –
மட்டக்களப்பு – தாண்டியடி துயிலுமில்லத்தில்-
மன்னார்- ஆட்காட்டிவெளி துயிலுமில்லத்தில்-
மன்னார் பண்டிவிரிச்சான் மாவீரர் நாள் நிகழ்வு
மட்டக்களப்பு கோவில்குளம் உயர்தொழில்நுட்ப கல்லுரியில் மாவீரர் நாள் நிகழ்வுகள்
கொடிகாமம் மாவீரர் துயிலுமில்ல மாவீரர் நாள்!
வடமராட்சி கிழக்கு உடுத்துறை மாவீரர் நாள்
முல்லைத்தீவு ஆலங்குளம் மாவீரர் துயிலும் இல்லம்
முதலாவது மாவீரர் லெப்.சங்கர் எரியூட்டப்பட்ட இடத்தில் ஏற்றப்பட்டது பொதுச்சுடர்
தமிழீழ விடுதலைப் புலிகளின் முதலாவது மாவீரர் லெப். சங்கர் உடல் எரியூட்டப்பட்ட கீரைத்துரை சுடுகாட்டில் மாலை சரியாக 6.05க்கு விளக்கேற்றி மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டுள்ளது.
புலிகளின் கட்டளைத் தளபதி சங்கர், சிங்கள ராணுவத்துடன் நடந்த சண்டையில் படுகாயமுற்று குடல் சரிந்த நிலையில், மதுரையிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கடந்த 1982-ம் ஆண்டு நவம்பர் 27-ம் நாள் மாலை மேதகு வே.பிரபாகரன் மடியில், மதுரை மண்ணில் உயிர் நீத்தார். சங்கர் வீரச்சாவடைந்த அதே நாளன்று இரவு விடுதலைப் புலிப் போராளிகள் மதுரை வந்து இராணுவ மரியாதையோடு தளபதி சங்கரின் பூத உடல் இதே கீரைத்துரை மயானத்தில் எரியூட்டப்பட்டது என்பது வரலாறு.
மாவீரன் சங்கர் மரணமடைந்த அந்த நாளைத்தான் மேதகு வே.பிரபாகரன் கடந்த 1989-ம் ஆண்டு முதல் புலிகளின் மாவீரர் தினமாக அறிவித்ததுடன், தனது மடியில் சங்கர், தலை வைத்து உயிர் நீத்த அந்த மாலை 6.05 மணிக்கு தனது மாவீரர் உரையை வாசிப்பதும் மயிர்கூச்செரிய வைக்கும் வரலாறு.
புதுச்சேரியில் மில்லர் அரங்கத்தில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற மாவீரர் நாள்.
தாய்த் தமிழகத்தின் தஞ்சையில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் மாவீரர் நாள் நினைவேந்தல்
லெப்.போசன் கல்லறை நிகழ்வு!
தமிழ்த் தேசியப்பேரியக்கம் சார்பில் தமிழ்நாடெங்கும் மாவீரர் நாள் நிகழ்வு
27.2018 மாலை தமிழ்த்தேசியப்பேரியக்கம் சார்பில் தமிழ்நாடெங்கும் மாவீரர் நாள் எழுச்சியாகக் கொண்டாடப்பட்டது. தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, கும்பகோணம், ஓசூர், சென்னை, உள்ளிட்ட பல இடங்களில் நடந்தேறியது.
சென்னையில் நடைபெற்ற நிகழ்வுக்கு தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் பொதுச்செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன் தலைமையில் நடைபெற்றது. மாவீரர்களின் ஈகங்களை போற்றியும் தமிழீழம் அடுத்த கட்ட செயல்வடிவ போராட்ட முன்னெடுப்புகளையும் தோழர் கி.வெங்கட்ராமன் அவர்கள் முன்னிறுத்தி எழுச்சியுரையாற்றினார்.
அதேபோல் திருச்சி, குடந்தை உள்ளிட்ட இடங்களில் த.தே.பே. பொறுப்பாளர்கள் முன்னின்று நடத்தி நினைவேந்தல் உரையாற்றினர்.
Recent Comments