Search

Eelamaravar

Eelamaravar

Month

August 2018

மகாவலி நில ஆக்கிரமிப்புத் திட்டமும் – தமிழர் மகா வலியும்

மகாவலி ஆற்றுத்திட்டம் தமிழர் இருப்பை அவர்கள் தாயகப் பூமியில் அழிக்க உருவாக்கப்பட்ட திட்டம் என்பது அவ்அவ்போது ஏனோ எம்மவர்களுக்கு மறந்து போகிறது. தமிழர் தம் வாழ்வுரிமைகளுக்காக தம் தாயக இருப்பின் உரிமையை முன்னிறுத்தி போராட ஆரம்பித்ததும்இ இனவாத அரசியலே சிங்களத்தின் இதயநாத அரசியலானதும் 50களின் கதை. ஏனோ எம்மவர்களுக்கு அவ்அவ்ப்போது ஏற்படும் அம்னீசியாவால் அனைத்தும் மறந்துபோவது வாடிக்கையாகிவிட்டது. பின்னர் வரலாறு எவ்வாறு எமக்கு வழிகாட்டியாகும்?? வரலாறு எம்மை விடுவிக்கும்???

1961இல் சிறீமாவோ பண்டாரநாயக்கா அம்மையாரால் கருக்கொண்டது தான இவ்மகாவலி ஆக்கிரமிப்புத் திட்டம். அதற்கு ஐ.நா அபிவிருத்தி நிதிபெறப்பட்டு ஆய்வுகள் செய்யப்பட்டு அதனூடு திட்டங்கள் வரையப்பட்டு திட்ட அமுல் 1970இல் சிறிதாக தொடங்கப்பட்டது. ஆனால் 1977 இல் அமைந்த nஐயவர்த்தனா ஆட்சியின் கீழ் 30 வருடத் திட்டம் துரித அபிவிருத்தித் திட்டமாக மாற்றப்பட்டு 6 வருடத் திட்டமாக விரைவுபடுத்தப்பட்டது. இதன் பிரதான பிதாமகன் சாட்சா நம் ரணில் ஐயா தான். சமீபத்தில் அன்றைய தன் சாதனையை ஐயா கிலாகித்து வேறு பேசியுள்ளார். அப்போது மகாவலி அபிவிருத்தி அமைச்சு என்று ஒன்று உருவாக்கப்பட்டு அதற்கு அமைச்சராக்கப்பட்ட்வர் தான் எம் யாழ் நூலக எரிப்புப் புகழ் நாயகன் காமினி திசநாயக்கா ஐயா அவர்கள்.

அவரின் இனவாதம் மகாவலி அபிவிருத்தி என்ற போர்வையிலான ஆக்கிரமிப்பில் ஏவ்வாறிருந்திருக்கும் என்பதை குறும்படம் போட்டுக் காட்டியா நீங்கள் தெரிந்து கொள்ளவேண்டும்??? என்ன அம்னீசியா காரர்களுக்கு வேண்டுமா? நித்திரையில் இருப்பது போல் நடிப்பவர்களுக்காக ஏன் அந்ந விரயம்?? இன்று போல் அன்றும் ரணில் ஐயா லாவகமாக சர்வதேச சமூகத்தை தன் சாணக்கியம் கொண்டு வளைத்துப் போட்டார். Nஐர்மனி கனடா அமெரிக்கா சுவீடன் இங்கிலாந்து சௌதி அரேபியா உலகவங்கி என அணிவகுக்கப்பட்டன. இன்று போல் அன்றும் எம் தமிழ்த்தலைமைகள் சர்வதேச அணுகுமுறையில் அவர்களுடனான தொடர்பாடலில் மோசமாக சொதப்பினர். இவ்விடயத்தில் கனடா எவ்வாறு தானாகவே விழித்துக் கொண்டு விலகியது என்பதை கனடாவில் பின்னர் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வினூடாக கீழே தந்துள்ளேன்.

1983 இனக்கலவரமும் அதன் பின்னரான தமிழர் தற்காப்பு ஆயுதப் போராட்டமும் மகாவலி முயற்சிளை அன்றைய பொழுதில் முடக்கியது மட்டுமன்றி சர்வதேச பங்காளிகளை வெளியேறவும் வழிகோலியது. பின்னர் அம்மையார் சந்திரிக்கா அற்றும் ஐயா ராஐபக்சவின் கீழ் மகாவலி விடயத்தை அதிகம் கையாண்டவர் வேறு யாரும் அல்ல சாட்சா நம் மைத்திரி ஐயா தான். பொலநறுவையின் மைந்தன் தன் இருப்பிற்காக வாய்ப்பை விடுவாரா?? ஐயா வெளுத்துக்கட்டுகிறார். தன் இருப்பை மேலும் வலுப்படுத்த ஐயா துணைப் பாதுகாப்பு அமைச்சராக தன் பகுதியில் உருவாக்கியது தான் ஊர்காவல் படைகள் கட்டுமானம். இதனால் எல்லையோர தமிழ் கிராமங்கள் பட்ட மகா வலி அவலங்கள்… எமக்குத் தான் அங்கிருந்தவர்கள் சொந்நதமில்லையே!!! எமக்கென்ன கவலை!!!

எங்களுக்கும் கவலையில்லை எம் இன்றைய அரசியல் தலைமைகளுக்கும் கவலையில்லை… ஏனென்றால் அவர்கள் வேற்றுலக வாசிகள் இல்லையா!!! எங்கள் இன்றைய நிலையை ஒருமுறை உங்கள் மனக்கண் முன்னால் காட்டுகிறேன்…

மகிந்தா ஒரு சர்வாதிகாரி – சரி மாற்றுக்கருத்தில்லை… அதனால் அவர் வரவு செலவுத் திட்டங்களை வெளிப்படையாகவே பாராளுமன்றத்தில் எதிர்த்து நம்மவர்களும் வாக்களித்தீர்கள். ஆனால் நாம் கொண்டு வந்த ஆட்சி என மைத்திரி – ரணில் 2016 2017 2018 வரவு செலவுத் திட்டங்களை எவ்வித கேள்வியும் இன்றி முழுமையாக ஆதரித்தீர்களே… உங்கள் வாக்குகளில்லை என்றாலும் இலகுவாக அவை நிறையேறியிருக்கும் என்பது வேறுவிடயம்.. இந்நிலையில் ஆதரித்த தமிழரசுக்கட்சி ரெலோ ஈபிஆர்எல்எவ் மற்றும் புளொட் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் ஒரு பகிரங்க கேள்வி. யார் ஐயா உங்களிடம் சொன்னது ஈழத்தமிழர்களை இரட்சிக்க வந்த மேய்ப்பன்கள் மைத்திரியும் ரணிலும் என்று??? சுமந்திரனுக்கு புரியும் மொழியில் கேட்டிருக்கிறேன்.

2015இல் மைத்திரி தமிழர் தயவில் சனாதிபதியானதும் மீண்டும் மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் பாதுகாப்பு என்ற அமைச்சை உருவாக்கி அதை தன்வசமாக்கியும் கொண்டார். அதற்காக கடந்த மூன்று வரவு செலவுத் திட்டங்களின் கீழ் ஒதுக்கப்பட்ட தொகை வருமாறு..

மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் பாதுகாப்பு அமைச்சு
2016 வரவு செலவுத்திட்டம் – 6949 கோடியே 58 இலட்சத்து 7 ஆயிரம்
2017 வரவு செலவுத்திட்டம் – 5762 கோடியே 34 இலட்சத்து 65 ஆயிரம்
2018 வரவு செலவுத்திட்டம் – 4561 கோடியே 11 இலட்சத்து 54 ஆயிரம்

அதாவது தாம் ஆட்சிப் பொறுப்பேற்றதும் பெரும் தொகை 2016இல் ஒதுக்கி மகாவலியின் கீழானான பொலநறுவையை அண்டிய முல்லைத்தீவு வவுனியா திருகோணமலை நோக்கிய திட்டங்கள் துரிதப்படுத்தப்பட்டன. இதுவே இன்று அதிகம் பேசப்படும் எல் வலயத்திட்டத்தின் மூலம். 2016இல் அதிகரித்த தொகையின் மூலம் திட்டங்கள் துரிதப்படுத்தப்பட்டதாலேயே பின் இரு ஆண்டுகளிலும் ஒதுக்கப்பட்ட தொகையில் சற்று வீழ்ச்சி காணப்பட்டது. சமீப காலமாக பூர்த்தியாகியுள்ள இத்திட்டங்கள் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்படுகின்றன. மகிந்தா தன்னை உறுதிப்படுத்த அம்பாந்தோட்டையை துரித அப்விருத்தி செய்தார். மைத்திரி தன்னை என்றும் நிலைப்படுத்த பொலநறுவையூடாக தமிழர் தாயகத்தை களீபரம் செய்கிறார். இப்போது சொல்லுங்கள் தமிழர்களை காக்க வந்த மேய்ப்பன் சரியா காக்கிறாரா? இல்லையா??

தாம் எவ்வாறு ஏமாற்றப்பட்டோம். தமிழர் தாயக இருப்பை இல்லாதொழிக்கவே இம் முயற்சி. தேசிய இனஅடிப்படையில் மகாவலி திட்டத்தின் கீழ் 7 இலட்சத்து 50 ஆயிரம் பேரை குடியேற்றுவதே திட்டம். இதன் பிரகாரம் 74 சதவீத சிங்களவர் அதாவது 5 இலட்சத்து 50 ஆயிரம் சிங்களவரும் 12 சதவீத இலங்கைத்தமிழர்கள் அதாவது 90 ஆயிரம் தமிழரும் 6 சதவீத மலையகத் தமிழர் 6 சதவீத முஸ்லீம்கள் என அதாவது தலா 45 ஆயிரம் பேரும் குடியேற்றப்படுவார்கள் என்றார்களாம். உங்களுக்குத் தெரியும் இதுவரை 100 சதவீதம் சிங்களவரே குடியேற்றப்பட்டனர். இது தவறு என்பதை பின்னர் புரிந்து கொண்டு அவ்மாவட்ட இனவிகிதாசார அடிப்படையிலேயே மக்கள் குடியேற்றப்படவேண்டும் என தாம் அப்போது வலியுறுத்தியதாக கனடா தெரிவிக்கிறது. இது எம் அரசியல்வாதிகள் யாருக்கும் இன்று தெரியுமா? இதை வலுநிலையாகக் கொண்டு என்ன செயற்பாடு இவர்களிடம் இருக்கிறது?? என்ன புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புக்கள் என்கிறீர்களா?? கனடாவில் இருப்பவர்களுக்கே இது தெரியாது! மற்றவர்கள்??

இத்துடன் வடக்குக்கிழக்கில் இருந்து இராணுவம் வெளியேற வேண்டும் என்ற கூக்குரல்கள் இன்னும் ஓய்ந்தபாடில்லை. கீழே சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் கீழ் நிறுவனமயப்படுத்தப்பட்டுள்ள சிங்கள ஊர்காவல் படைகளுக்கு ராஐபக்க ஒதுக்கிய நிதியையும் மைத்திரி – ரணில் கூட்டு ஒதுகியுள்ள நிதியையும் கீழே தந்துள்ளேன். ஏதாவது புரிகிறதா? இதற்கும் நம்மவர்கள் ஆதரித்தே வாக்களித்தனர் மறந்துவிடாதீர்கள். மைத்திரி ஐயா 2015 இறுதியில் இவர்களுக்கான தலைமையகத்தை தன் பொலநறுவை மாவட்டத்தின் கபறத்துனையில் வேறு திறந்து வைத்தார். இதில் 41 ஆயிரம் பேர் மாதாந்த சம்பளத்தில் தமிழர் தாயகத்தில் முன்பள்ளி நடாத்துகிறார்கள் சிவில் பாதுகாப்பு வழங்குகிறார்கள் விவசாய மற்றும் கைதொழில் பண்ணைகளை நடாத்துகிறார்கள். கூடவே குடியேறவும் செய்கிறார்கள். ஊர்காவல் படைகளே இன்னும் வீட்டுக்கு போகவில்லை. இந்த லட்சணத்தில் படைகள்!! சும்மா கொமடி செய்யாதைங்கோ ஐயா!!!

சிவில் பாதுகாப்புத் திணைக்களம் என்ற போர்வையில் உள்ள ஊர்காவல் படைகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகை

ராஐபக்ச அரசு
2014 வரவுசெலவுத்திட்டம் – 1044 கோடியே 44 இலட்சம்
2015 வரவு செலவுத்திட்டம் – 1206 கோடியே 19 இலட்சத்து 20 ஆயிரம்

மைத்திரி – ரணில் அரசு
2016 வரவு செலவுத்திட்டம் – 1774 கொடியே 72 இலட்சத்து 92 ஆயிரம்
2017 வரவு செலவுத்திட்டம் – 1694 கோடியே 74 .லட்சத்து 52 ஆயிரம்
2018 வரவு செலவுத் திட்டம் – 1758 கோடியே 31 இலட்சத்து 20 ஆயிரம்

ஊர்காவல் படைகளுக்கே ஆயிரம் கோடிகளில் நிதிஒதுக்கீடு.. 2018 வரவுசெலவுத் திட்டத்தை ஏன் ஆதரித்தீர்கள் என கூட்டமைப்பின் கனடிய பிரச்சார பீரங்கியிடம் ஒரு வானொலியில் கேட்டேன். ஐயா சொன்னார் தமிழர் பகுதிகளில் 14 அபிவிருத்தித் திட்டங்களுக்காக முதல்முறையாக 80 கோடிகளை ஒதுக்கியுள்ளார்களாம் என்றார். இவ்வாண்டின் மொத்த செலவீனம் 3 இலட்சத்து 90 ஆயிரம் கோடிகள். இதில் 80 கோடிகள் எவ்வளவு பெரிய காசு எண்டு என்டை மரமண்டைக்கு இன்னும் புரியுதில்லைங்கோ!!! இன்னும் ஒன்று சொன்னார் 50 ஆயிரம் வீடுகளுக்காக அவ் 80 கோடிகளில் 70 கோடிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாம். அதாவது ஒரு வீட்டுக்கு 1400 ரூபா. முடிந்தால் இதற்கு ஒரு மீனை எனக்கு வாங்கித்தரச் சொல்லுங்கோ… ஏமாளிகளும் கோமாளிகளும் இருக்கும் வரை… இலகுவாக ஏமாற்றப்படுபவர்கள் இருக்கும் வரை… சேடம் இழுக்கும் தமிழினத்திற்கு மகா வலியாகத் தான் இருக்கும்…

– நேரு குணரத்தினம் –

 

கலைஞரின் துரோகங்களை பட்டியலிட்ட கருட சித்தர் !

தலைவர் பிரபாகரன் வார்த்தைகளின் வர்ணிப்புக்கு அப்பாலானவர்-சிங்கள பெண்

விடுதலைப் புலிகள் எப்படியானவர்கள் என்பதை சொல்லும் சிங்கள பெண்

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வார்த்தைகளின் வர்ணிப்புக்கு அப்பாலானவர் என மெலனி திசநாயக்கா வெளியிட்டுள்ளார்.ஒரு சிங்கள பெண்ணுக்கு இருக்கின்ற புலிகள் மீதான பார்வை. தமிழ் துரோகிகளிடம் இல்லை

நான் ஒரு சிங்களக்குடிமகளாக இலங்கையரசு எங்களிற்கு அளித்த பொய்யான கருத்துருவாக்கங்களால் விடுதலைப்புலி அங்கத்துவர்களை கொடுமையான பயங்கரவாதிகள் என்றே நம்புவது வழமை.

ஏன் விடுதலைப்புலிகள் அவர்களது இறுதி முயற்சியாக ஆயுதம் ஏந்த நிர்ப்பந்திக்கப்பட்டார்கள் ? ஏன் தமிழ் இளைஞர்கள் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இணைந்து கொள்ளவும் அவர்களது சொந்த உரிமைக்காக யுத்தம் செய்வதையும் தேர்ந்தெடுத்தார்கள்

அவர்களது தியாகங்களும் அற்பணிப்புகளும் வார்த்தைகளுக்கு அப்பாலானவை. அவர்கள் தங்கள் சொந்த மக்களுக்களின் விடுதலைக்காக தங்கள் முழு வாழ்வையும் உவந்தளித்தவர்கள்.

நேர்த்தியான ஒழுக்கக் கட்டுப்பாட்டைப் பேணியவர்கள் விடுதலைப்புலிகள். இது போன்ற நல்ல கட்டுக்கோப்பான இராணுவத்தினையோ அல்லது அமைப்பினையோ பற்றி நான் ஒருபோதும் பார்த்தோ அல்லது கேட்டோ அறிந்ததில்லை. இதன் வழிகாட்டியான விடுதலைப்புலிகளின் தலைவர் வார்த்தைகளின் வர்ணிப்புக்கு அப்பாலானவர். விடுதலைப்புலி வீரர்களது வாழ்வு நெருக்கடிகள் நிறைந்த வேளைகளிலும் பெருமையுடனும் போற்றும் வகையிலும் வாழும் வாழ்க்கையினால் அதன்பால் நான் ஈர்க்கப்படுகிறேன்.

இனப்பிரச்சனை விவகாரத்துக்கு ஒரு போரில்லாத முடிவைப் பெறுவதற்கு உண்மையான நம்பிக்கையுடன் சமாதானப் பேச்சுக்களில் விடுதலைப்புலிகள் நுழைந்தார்கள்.

ஆனால் இலங்கையரசாங்கம் குறிப்பாக முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சமாதானப் பேச்சுக்களை விடுதலைப்புலிகளுக்கு வைக்கப்படும் ஒரு பொறியாக வடிவமைத்தார்.

விடுதலைப்புலிகளது பலத்தையும் விடுதலைப்புலி வீரர்களது மனோபலத்தையும் சிதைப்பதற்கு மிகவும் வஞ்சகத்தனமும் தந்திரமும் கொண்ட பொறியாக அது வடிவமைக்கப்பட்டது.

விடுதலைப்புலிகள் வன்னியில் மனதைக் கவரும் வகையிலான அனைத்து அடிப்படை சமூகக்கட்டமைப்புகளுடன் கூடிய நாட்டைக் கட்டியெழுப்ப முயற்சி செய்தனர். ஆரம்பத்தில் சமாதானம் சீராகச் சென்றுகொண்டிருந்தாலும் சிறிலங்கா அரசின் கோழைத்தனமான யுத்தநிறுத்த மீறல்களால் படிப்படியாக சமாதானம் சீர்குலையத்தொடங்கியது. ஆச்சீர்குலைவுகள் மீண்டும் ஒரு யுத்தத்திற்கு வழிகோலியது.

எப்படி மேற்குலக நாடுகள் விடுதலைப்புலிகளை பயங்கரவாதிகள் என தடை செய்யலாம் ?

இலங்கையரசாங்கம் ஒரு லட்சத்து நாற்பதினாயிரத்துக்கும் அதிகமான தமிழ்மக்களைக் கொன்று ஒரு இரத்தம் தோய்ந்த முடிவையே போரின் மூலம் வழங்கியிருக்கிறது.

வெள்ளைக் கொடியுடன் சரணடைந்த பல விடுதலைப்புலி உறுப்பினர்கள் ஈவிரக்கமற்று கொல்லப்பட்டார்கள். ஏனையவர்கள் சித்திரவதைகளுக்கும் பாலியல் வல்லுறவகளுக்கும் ஆளானார்கள். இவைகள் எல்லாம் பயங்கரவாதம் இல்லையா ? ஏன் மேற்கு நாடுகள் இப்போதும் மௌனமாயிருக்கிறார்கள் ?

தமிழ்மக்கள் அவர்களது சொந்த உரிமைக்காகவும் சொந்த சுதந்திரத்துக்காகவும் போரிட்டார்கள். விடுதலைப்புலிகளே தமிழ் மக்களது ஒரேயொரு பிரதிநிதிகளாகவும் இருந்தார்களே தவிர பயங்கரவாதிகளாக அல்ல.

தமிழ்மக்கள் சிங்கள மக்களைப் போலவே சுதந்திரத்துடன் கூடிய அமைதியான வாழ்க்கையை வாழ்வதற்கு நிறையவே உரிமை பெற்றிருக்கிறார்கள். அவர்கள் எல்லா வழிகளிலும் எங்களுக்கு (சிங்களமக்களுக்கு) சமமானவர்கள்.

உண்மையில் இனவாத சிங்கள அரசாங்கம் தான் பயங்கரவாதிகளாகவும் போர்க்குற்றவாளிகளாகவும் இருக்கிறார்கள்.

எந்தவொரு உண்மையான பௌத்தனும் நல்ல சிங்களக்குடிமகனும் இன அழிப்பைச் செய்த கடந்தகால தற்கால இலங்கை அரசுடன் ஒருபோதும் ஒத்துப்போகப் போவதில்லை.

நாங்கள் சிங்கள சகோதர சகோதரிகள் அதாவது புத்தரை உண்மையாக பின்பற்றுபவர்கள். உங்களது சுதந்திரத்திற்கான போராட்டத்துடன் உங்களுடன் நாங்களும் நிற்போம் என கூறியுள்ளார்.

‘நடுநிலை’ என்ற பெயரில் நஞ்சைக் கக்குபவர்கள் !

கருணாநிதி முதுமையின் காரணமாக மரணத்தை எதிர்நோக்கியுள்ளார்.
இது இயல்பான – இயற்கையான ஒரு விடயம்.

இத் தருணத்தில் அவருடைய சரி, தவறுகளை நேர்மையாக பதிவு செய்ய வேண்டியது நமது கடமை.

ஆனால் இதுதான் தருணம் என்று ‘புலி அடிக்க’ டிசைன் டிசைனா பலர் கிளம்பி விட்டார்கள்.

எதற்கு பதில் அளிப்பதென்று தெரியாமல் நாம் திண்டாட வேண்டியிருக்கிறது.

நேரடியாய் புலி அடிப்பவர்களை விட்டு விடலாம். அதில் ஒரு வகை நேர்மை இருக்கிறது.

ஆனால் ‘நடுநிலை’ என்ற பெயரில் நஞ்சை கக்குபவர்கள் குறித்து அவதானமாக இருங்கள்.

இன்று ஒரு நட்ட நடு சென்டர் அறிவுஜீவி ஒரு முத்தான கருத்து சொல்லியிருக்கிறார்..

அதன் உள்ளடக்கம் இதுதான். ‘ ஆட்சேர்ப்பு என்பது நிபந்தனைகளுடன் ஏற்றுக்கொள்ளக்கூடியதுதான், அதை படிப்படியாக மக்களுக்கு புரிய வைத்து தயார்படுத்த வேண்டும். ஆனால் புலிகள் வெற்றி மிதப்பில் இருந்துவிட்டு கடைசி நேரத்தில் காட்டுமிராண்டிகள் போல் நடந்து கொண்டார்கள்.’

இது வெளிப்பார்வைக்கு ஏதோ சரியானது போல் தோன்றும்.. ஆனால் மோசமான வரலாற்று திரிபும், புலிகளை நுட்பமாக குற்றவாளிகளாக்கும் போக்கும் இது.

ஆட்சேர்ப்பு என்பதை மிகப் பெரிய மனிதப் பேரவலமாக மாற்ற வெளியக – உள்ளக சக்திகள் சேர்ந்து நுட்பமாக காய்களை நகர்த்தின. தொடர் நில இழப்பும், படைத்துறை பின்னடைவும் புலிகளுக்கு இதை சரி செய்யும் சூழலை வழங்கவில்லை.

ஆனால் மேற்படி குற்றச்சாட்டு அப்பட்டமான பொய்.

புலிகள் படிப்படியாக ஆளணி பெருக்கத்திற்கு மக்களை தயார் செய்ததே உண்மை.

01. சமாதான காலத்தில் அனைத்து மக்களுக்கும் ஆயுத பயிற்சி வழங்கியது என்ன வகை?

02. தமது படையணி தவிர்ந்து மக்கள் தொகுதிக்குள்ளிருந்து எல்லைக்காவல் படை, துணை படை உருவாக்கம் செய்தது என்ன வகை?

இவற்றையும் விடுவோம்.

இந்திய படைகளை வெளியேற்றியவுடன் புலிகள் தமது கட்டுப்பாட்டு பகுதிகளில் கொண்டு வந்த ஒரு விடயம்.
‘பாஸ்’ நடைமுறை.

18 வயதுக்கு மேற்பட்டவர்கள் தாயகத்தை விட்டு வெளியேற இறுக்கமான சட்டத்தை கொண்டு வந்தார்கள்.

பின்பு படிப்படியாக அதைத் தளர்த்தி விரும்பினால் ஒரு குடும்பத்தில் ஒருத்தரை விட்டு விட்டு ஏனைய அனைவரும் வெளியேறலாம் என்று மாற்றினர்.

அந்த ஒருத்தர் என்ன புலிகளுடன் பல்லாங்குழி விளையாடவா வைத்திருந்தார்கள்.

தேவைப்பட்டால் நாட்டிற்காக ஆட்சேர்ப்புக்குட்படுத்தப்படுவார் என்பதுதான் அதன் பின்புலக் கதை.

இதெல்லாம் தெரியாமல் கண்டதையும் ‘நடுநிலை’ ஆய்வு என்ற பெயரில் வாந்தியெடுக்கிறது..

“புலிகளை குற்றவாளிகளாக்குகிறோம்” என்று தங்களைத் தாங்களே அம்பலப்படுத்துவதுதான் தற்போது நடந்து கொண்டிருக்கிறது.

Parani Krishnarajani

http://www.eelamview.com/2018/08/01/dmk-dogs-dead/

இனியொரு பிரபாகரன் ஈழத்துக்கு வரப்போவதுமில்லை…..

தாய் நாட்டை காத்த தமிழன் தன் வீட்டைக் காக்க முடியாமல் தவிக்கின்றான்…

பிரபாகரன் என்றொரு
பெரு வெளிச்சத்தை
தொலைத்து விட்டு
பெரும் அச்சத்தோடு தான்
அல்லும் பகலும் மக்கள் வா(டு)ழ்கின்றனர்

தினம் தோறும் திசையெங்கும்
திருடர்களுக்குப் பயம்
பட்டப் பகலில் கூட
படலைகள் பூட்டிக் கிடக்கின்றது

நாய்களை நம்பியே
நாளும் வாழ்க்கை நடக்கின்றது

தாய் நாட்டை காத்த தமிழனால
தன் வீட்டைக் காக்க முடியாமல்
தவிக்கின்றான்
கல்வி கற்கச் சென்ற பிள்ளை
காமுகர்கள் பிடியிலிருந்து
கற்போடு திருப்பி வருவாளோ
என்ற தீராப் பயம்

பதினாறு கடந்த பாவையர் மட்டுமல்ல
பால் மணம் மாறாத
ஆறு வயதுக் குழந்தையையும்
மனித மிருங்கள் சிதைத்து விடுகின்றது

பகை என்று வந்து விட்டால
வார்த்தைச் சொற்களை விடவும்
வாள் பொல்லுகள் தான்
அதிகம் பயன் படுத்தப்படுகின்றது

மரங்களையே உயிராய் வளர்த்தவர்கள்
மனிதர்களை வெட்டி சாய்க்கின்றார்கள்

கேரளத்து கஞ்சாவுக்கு மட்டும்
பஞ்சமில்லைவிடுதலைப் போதையில் திரிந்த
வீர அஞ்சாத் தமிழன்
கஞ்சாப் புகையில் மயங்கிக் கிடக்கின்றான்
சாவு வீட்டிலில் கூட
சாராயப் போத்தில்
சம்பிரதாயப் பொருளாகி விட்டது

ஏதிலியாய் ஏறோப் பிளேன்
ஏறி பாதித் தமிழன் போக
எஞ்சியுள்ள தமிழர்கள்
ஏர் கலப்பை உழவு மறந்து விட்டார்கள்

உந்துருளிகள் உறுமிக்கொண்டு ஓடுது
எதிரே வருபவர்கள்
எமனின் வாகனமாகவே பார்க்கின்றார்கள்

போரில் காயப்பட்டவர்களை விடவும்
போக்குவரத்தில் காயப்பட்டவர்கள் அதிகமாக
போதான வைத்திய சாலை நிரம்பி வளியுது

சாம்பல் தனல் அணையாது கிடந்த அடுப்புகளில்
சாம்பல் வெள்ளைப் பூனைகள்
உறங்கிக் கிடக்கின்றது
உறவுகள் பார்சல் சாப்பாட்டில்
பங்கு பிரித்து பரி மாற
பசி மாற்றுகின்றனர்

கையை விட்டு இறங்காத
கைக் குழந்தைக்கும்
கைபோன் தேவை
சிரட்டையில் மண் சோறு கறி
விளையாட்டுகள் மருவி
சிம் காட்டில் விளையாட்டு சிறுவர்கள் மாறி விட்டார்கள்

கை பேசியில் தான்
ஊரில் உள்ள உறவுகள்
நாடகத் தொடர் இடைவேளையில்
தங்களுக்குள் பேசிக் கொள்கின்றார்கள்

ஊரில் உள்ள கோயில்களும்
வீடுகளும் விஸ்திரமாய் பெருத்து விட்டது
ஆனால்
கோயில்களில் கும்பிடும்
பக்கத்தர்கள் கூட்டமும்
வீடுகளில் குலவி மகிழும்
உறவுகள் கூட்டமும்
எண்ணிக்கை குறைந்து விட்டது

வீடுகளில் கால் நடை
வளர்ப்புகள் மட்டுமல்ல
வீதிகளில் கால்நடைப்
பயணங்களையும் மறந்து விட்டார்கள்

போற போக்கைப் பார்த்தால்
இனி வாற நாட்களில்
ஆட்டோக்களில் தான்
அயல் வீட்டுக்கும் போவார்கள் போல்
அம்மியை தொலைத்து
ஆட்டுக்கல்லை தொலைத்து
உரல் உலக்கையை தொலைத்து
உறுப்புக்கு ஒரு நோயைத் தேடி
வைத்திருக்கின்றார்கள்

மருந்தென்பது உணவு முறை போலாகி விட்டதமருந்தோடு தான் மனிதர்கள் இயங்கின்றார்கள்
காசு பணத்தை
காகிதமாய் தான் பார்க்கின்றார்கள்

ஜயாயிரம் ரூபாய் தாளோடு போனால்
அரைக் கைப்பை பொருளாவது
அங்காடியில் வாங்கலாம்
சந்தையில் மீனுக்கு விலை கேட்டால்
பொன்னுக்கு விலை கூறுகிறார்கள்

உறவுகளை விடவும்
உடமைகளை மதிக்கின்றார்கள்

உறவுகளை உதறிவிட்டு
உடமைகளோடு வாழ்கின்றனர்
அன்றைய தலைவர்மார்களோ
வீட்டுக்கு ஒருவன் வந்தால்
தனி நாடு அடையலாம் என்றார்கள்

இன்றைய தகப்பன்மார்களோ
வீட்டுக்கு ஒருவன் வெளிநாடு போனால் தான்
வேளா வேளைக்கு உண்ணலாம் என்கின்றார்கள்

ஈழத்தில் தலைவர்மார்களுக்குப் பஞ்சமில்லை-ஆனால்
எவருக்கும் உறுதியான நெஞ்சமில்லை
பரதவிக்கும் மக்களுக்கு உதவ யாருமில்லை

பதவியை தக்க வைக்கவேண்டுமென்ற தவிப்பே தலைவர்மாருக்கு அதிகம்
அன்று ஒரு மரண வீட்டில்
முதியவர் சொன்னார்

இன்னொரு பிரபாகரன் வரும் வரை
இந்த அவலம் மாறப் போவதுமில்லை

இனியொரு பிரபாகரன் ஈழத்துக்கு
வரப்போவதுமில்லை…..

விடுதலைப் போரைக் கொச்சைப்படுத்தும் அரசியல்வாதிகள்!

புரிந்துணர்வு என்பது அரசியல்வாதிகளைப் பொறுத்தவரை எந்தக் காலத்திலும் உணர முடியாத விடயம். இதனை எம்.கே.சிவாஜிலிங்கம், சிவசக்தி ஆனந்தன், செல்வம் அடைக்கலநாதன் ஆகிய மூன்று அரசியல் வாதிகளும் நிரூபித்துள்ளனர்.

விடுதலை உணர்வு என்றால் என்ன வென்று இவர்களுக்கு சில விடயங்களைச் சுட்டிக் காட்டவேண்டியுள்ளது. ஏனெனில் அரசியல்வாதி என்ற சட்டை இவர்கள் உடம்போடு ஒட்டிவிட்டது . அதனை பிய்த்து எடுப்பது என்பது முடியாத காரியம்.

முதலில் பரமதேவா விடயம் – கிழக்கில் அவருக்கென்று தனி வரலாறு உண்டு. அவரும் அரசியல் கைதியாக இருந்தார். அவர் விடுதலையாவதற்கு மிகக் குறுகிய காலமே இருந்தது. அப்படி இருந்தும் 23.09.1983 அன்று மட்டக்களப்பு சிறையிலிருந்து ஏனைய தமிழ்க் கைதிகள் தப்பிப் போகத் தேவையான ஏற்பாடுகளைச் செய்தார்.

இம் முயற்சியின் பிரதான பங்காளர் அவரே. ஆனால் ஆறு கடக்கும் வரையே அண்ணன் தம்பி என்ற வகையில் புளொட், ஈ.பி.ஆர்.எல். எப் . மற்றும் தம்பாப்பிள்ளை மகேஸ்வரனின் தமிழீழ இராணுவம் ஆகிய மூன்று இயக்கங்களும் தனித் தனியாகத் தாங்களே இந்தச் சாதனையைப் புரிந்து கொண்டதாகத் தம்பட்டம் அடித்தன. பரமதேவாவோ வெறும் புன்னகையுடன் கடந்து போனார்.

கும்பகோணத்தில் ஈ.பி.ஆர்.எல்.எப் பினர் ஒரு கண்காட்சியை நடத்தினர். ( சிறையுடைப்புப் பற்றி ) சிறையின் பெரிய வரைபடங்கள், தாங்கள் வெளியேறிய பாதை, காவலரண்கள் என்பவற்றையெல்லாம் குறிப்பிட்டு வாயால் விளாசித் தள்ளினர்.

அந்தக் கண்காட்சிக்குப் பரமதேவா போனார் உடனே ஒரு ஈ.பி.ஆர்.எல்.எப். உறுப்பினர் ஓடிவந்து அவரது கையைப் பிடித்தார். “தோழர் ! நிதிசேகரிக்கத்தான் இப்படிச்செய்கிறோம். 

தயவுசெய்து விளக்கமளிப்பவர்களிடம் கேள்வி எதுவும் கேட்டு விடாதீர்கள்” என வேண்டினார். சிரித்துக்கொண்டே சிறிது நேரத்தில் அங்கிருந்து அகன்றார் பரமதேவா.

சிறையிலிருந்து தப்பிய விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்களை இவரே பொறுப்பெடுத்தார்.

பின்னர் அவர்களுடன் சேர்ந்து வந்து புலிகளுடன் இணைந்தார். முன்னரே பரமதேவா பற்றிய நல்லபிப்பிராயம் இருந்தது பிரபாகரனுக்கு. கிழக்கிலிருந்து ஒரு தலைமை உருவாக வேண்டும் என்ற கனவு அவருக்கு இருந்தது. தனது கனவை நனவாக்கப் பொருத்தமானவராக இவர் இருப்பாரென முழுமையாக நம்பினார்.

விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்து விலகுவோர் புதிதாக எந்த இயக்கத்தையும் தொடங்கவோ வேறு இயக்கத்தில் இணையவோ கூடாது என்றொரு கட்டுப்பாடு உண்டு. ஆனால் பரமதேவாவுக்காக இக் கட்டுப்பாட்டைத் தளர்த்த விரும்பினார் பிரபாகரன். ‘நீங்கள் மட்டக்களப்புக்குப் போய்ச் சேர்ந்த பின் ஓரிரு தாக்குதலின் பின் தனியாக இயக்கம் தொடங்கலாம். உங்களுக்குத் தேவையான ஆயுதங்கள், ரவைகள், நிதி போன்றவற்றைத் தருகிறோம்.

அங்குள்ள சூழலுக்கேற்றவாறு போராட்டக் களங்களை, வடிவங்களை அமைத்துக் கொள்ளுங்கள் ” என்று பரமதேவாவிடம் சொன்னார் அவர். அதற்குப் பரமதேவா ‘எனக்கும் உங்களுக்குமான புரிந்துணர்வு என்பது தனித்துவமானது. நாளைக்கு நான் தனியாக இயக்கம் நடத்தும்போது என்னோடு சேர்ந்து கொள்பவர்களுக்கு இதே புரிந்துணர்வு இருக்குமென்பது நிச்சயமில்லை.

எதிர்காலத்தில் பெரும் இரத்தக்களரிக்கு இது வழி வகுக்கலாம். என்னைப்பொறுத்தவரை என்றைக்கும் நீங்களே எனது தலைவராக இருக்க வேண்டும் என நான் விரும்புகிறேன்.

தயவு செய்து என்னை இப்படியே இருக்க விடுங்கள்” எனக் கூறி பிரபாகரனின் வேண்டுகோளை அன்புடன் மறுத்தார். எனினும் மட்டக்களப்புக்குத் தலைமை தாங்கச் சென்றவரிடம் பரமதேவா தனியாக இயக்கம் நடத்த விரும்பினால் தேவையான சகல உதவிகளும் செய்து கொடுங்கள் என வலியுறுத்தினார் பிரபாகரன்.

தமிழரின் துரதிர்ஷ்டம் மட்டக்களப்பு மண்ணில் அவர் சந்தித்த முதல் களத்திலேயே வீரச்சாவடைந்தார். காயமடைந்திருந்த ரவி என்ற போராளி காயமடைய நேர்ந்தபோது நம்பிக்கை யூட்டிக்கொண்டிருந்தார். ஆனால் நிலைமை மோசமானது.

வெற்றியின்றிப் பின்வாங்கவேண்டி ஏற்பட்டது. எனவே இவர்கள் இருவரையும் தூக்கிக்கொண்டு போக வேண்டுமே பரமதேவாவை அணுகிய போராளியிடம் தாங்கள் இருவருமாகத் தீர்மானித்து சயனைட் உட்கொண்டு விட்டதாகவும் தங்களைத் தூக்கப்போய் ஆபத்தில் சிக்காமல் அனைவரும் தப்பிப்போக வேண்டும் என வேண்டினார்.

அத்துடன் ‘அம்மாவிடம் போய்ச் சொல்லுங்கள் நான் களத்தில்தான் இறந்தேனென்று. அண்ணன் (வாசுதேவா) உமாமகேஸ்வரனின் இயக்கத்தில் இருப்பதால் வேறு கதைகள் வந்துவிடும்” எனக் கூறித் தனக்கு இயக்கத்தின் மீதும் போராட்டத்தின் மீதும் உள்ள பற்றை வெளிப்படுத்தினார்.

தான் போராளியானதன் பின் தனது தாய் தன்னை ஒரு கைதியாகவே பார்த்திருக்கிறார். போர் வீரனாகப் பார்க்கவில்லை. எனவே மட்டக்களப்பில் நடக்கும் தாக்குதலொன்றில் தான் பங்குபற்றி அதில் கைப்பற்றப்பட்ட ஆயுதத்துடனேயே தனது அன்னையைச் சந்திக்க விரும்பினார்.

தனது மகன் வீரன் என்று அன்னை பெருமைப்பட வேண்டுமெனத் தீர்மானித்தார். அந்தக்கனவெல்லாம் உடைந்த நிலையிலும் இயக்கத்தின் மீதும் போராட்டத்தின்மீதும் உள்ள விசுவாசத்தை வெளிப்படுத்தினார்.

03.04.1985 அன்று ஈரோஸ் இயக்கத்தினர் மட்டக்களப்பு கொடுவாமடுவில் ஒரு பாரிய தாக்குதலை விசேட அதிரடிப்படையினரின் வாகனத் தொடரணி மீது மேற்கொண்டனர். படையினர் மிகக் கடுமையாகப் போரிட்டனர் அதனால் அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஆயுதங்களுக்கு போதுமான ரவைகள் கிடைக்கவில்லை. இவற்றுக்கு 5.56 ரவைகள் தேவைப்பட்டன. ஈரோஸ் தலைமை பிரபாகரனை அணுகியது.

மட்டக்களப்பு த் தலைமைக்கு அவர் அறிவித்தார். ஆபத்துக்கள் மத்தியில் கடல்வழியாகக் கொண்டுவரப்பட்டு, காடு வழியாகத் தலைச் சுமையாகக் கொண்டுவரப்பட்ட ரவைகளில் கணிசமான பகுதியை ஈரோஸ_க்கு வழங்கினர் புலிகள்.

அதிரடிப்படை உயர் அதிகாரி வீரதுங்க உட்பட 20 படையினர் இத் தாக்குதலில் கொல்லப்பட்டனர். அத்துடன் கோப்பாவெளிப்பகுதியில் படையினரால் கைது செய்யப்பட்டு கொண்டுவரப்பட்டிருந்த இரு புலிகள் இயக்க உறுப்பினர்களான அதே இடத்தைச் சேர்ந்த சி.தவராஜா, ராஜன் ஆகியோரும் இதில் கொல்லப்பட்டனர். அப்படி இருந்தும் யதார்த்தத்தை உணர்ந்து செயற்பட்டார் பிரபாகரன்.

இது போன்றதே தங்கண்ணா – குட்டிமணி போன்றோருக்கும் பிரபாகரனுக்கும் இருந்த புரிந்துணர்வு. இவர்கள் பரஸ்பரம் ஒருவரையொருவர் மதித்தனர். புதிய தமிழ்ப் புலிகள் இயக்கத்தை ஆரம்பித்த பிரபாகரன் 5 மே 1976 அன்று அதனைத் தமிழீழ விடுதலைப் புலிகள் எனப் பெயர் மாற்றம் செய்தார். விடுதலை என்ற சொல் வரவேண்டும் என்பதற்காகவே இந்த மாற்றம்.

அத்துடன் தனிநபர் ஒழுக்கம், கட்டுப்பாடு போன்றவற்றை முதன்மைப் படுத்துவதும் அவரது நோக்கமாக இருந்தது. முன்னர் ஒழுக்க ரீதியாக இதனைப் பேண முடியாதிருப்போரைத் தவிர்த்துவிடுவதும் இப் பெயர் மாற்றத்துக்கான காரணங்களில் ஒன்றாக இருந்தது. தாங்கள் மேற்கொண்ட சில நடவடிக்கைகளுக்கு உரிமைகோர முற்பட்டனர் புலிகள்.

1. அல்பிரட் துரையப்பா ( யாழ். மேயர், வடபகுதி சுதந்திரக் கட்சி அமைப்பாளர் சுட்டுக் கொலை – 27.07.1975)

2. என். நடராஜா (எரிபொருள் விற்பனை நிலைய உரிமையாளர், உரும்பிராய்; கோப்பாய் சுதந்திரக் கட்சி அமைப்பாளர், குண்டு வீச்சு – 02.07.1976)

3. ஏ.கருணாநிதி, (இரகசியப் பொலிஸ், காங்கேசன்துறை, சுட்டுக்கொலை – 14.05.1976)

4. திரு. சண்முகநாதன் (இரகசியப் பொலிஸ், காங்கேசன்துறை – 18.05.1977)

(அதே நாளில் சுட்டுக்கொலை)

5. சண்முகநாதன் (இரகசியப் பொலிஸ் வல்வெட்டித்துறை)

6. சி.கனகரத்தினம் தமிழர் விடுதலைக் கூட்டணி – பொத்துவில் எம்.பி. – 27.01.1978)

7. பஸ்தியாம்பிள்ளை (இரகசியப் பொலிஸ் இன்ஸ்பெக்டர் – 07.04.1978)

8.பேரம்பலம் (இரகசியப் பொலிஸ் சப் இன்ஸ்பெக்டர்)

09. பாலசிங்கம் (இரகசியப் பொலிஸ் சார்ஜன்ட்)

10. சிறிவர்த்தன (இரகசியப் பொலிஸ் சாரதி)

மேற்படி சம்பவங்களே அவையாகும்.

இக் காலகட்டத்தில் தங்கண்ணா, குட்டிமணி குழுவினர் ஒரேயொரு நடவடிக்கையையே வெற்றிகரமாக முடித்திருந்தனர்.

கோண்டாவிலில் முன்னாள் நல்லூர் சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான அருளம்பலத்தின் காரியதரிசி தங்கராஜா மீதான நடவடிக்கையே இதுவாகும். எனவே தமது உரிமைகோரும் நோக்கத்தை தங்கண்ணாவுக்கு வெளிப்படுத்திய பிரபாகரன். தங்கராஜா சம்பவம் தொடர்பாக அவர்களது உத்தேசம் என்ன என்று கேட்டார்.

நாங்கள் உங்களைப்போல கட்டுப்பாடாக இருக்க முடியாது. எங்களது தொழிலையும் பார்த்துக்கொண்டு உணர்வுரீதியாக எம்மால் முடிந்தவற்றைச் செய்கிறோம். எனவே தங்கராஜா மீதான நடவடிக்கையையும் உங்கள் பெயரிலேயே உரிமை கோருங்கள்” எனக் கூறினார் தங்கத்துரை.

இதுதான் உணர்வுரீதியாக விடுதலைப் போராடடத்தை நேசிக்கும் இருவருக்கிடையிலான புரிந்துணர்வு.

அப்படியே தங்கராஜாவின் சம்பவத்தையும் குறிப்பிட்டு வீரகேசரியில் புலிகளின் உரிமைகோரும் செய்தி வெளியானது. விடுதலைப் புலிகள் இயக்கத்தினுள் நிகழ்ந்த பிளவைத் தொடர்ந்து தங்கண்ணா, குட்டிமணி ஆகியோரும் பிரபாகரனும் இணைந்து செயற்படத் தீர்மானித்தனர்.

இக் காலப்பகுதியில்தான் ஏற்கெனவே பிரபாகரனுக்கு அறிமுகமானவரும் பின்னர் காட்டிக் கொடுப்பாளராகவும் மாறிய செட்டி (தனபாலசிங்கம் – கல்வியங்காடு) மீதான நடவடிக்கையை பிரபாகரன் மேற்கொண்டார். குட்டிமணியும் இவரும் சைக்கிளில் சென்று கொண்டிருக்கும்போதே இந்த நடவடிக்கையை மேற்கொண்டார் பிரபாகரன். குட்டிமணி இதனைச் சற்றும் எதிர்பார்க்கவில்லை.

நீர்வேலியில் மக்கள் வங்கிக்குச் சொந்தமான (சுமார் 80 லட்சம் ரூபாவை) பணத்தை கொண்டு சென்ற வாகனத் தொடரணியை மறித்து பறிமுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதும் இக் காலப்பகுதியில்தான். ஓடிக்கொண்டிருந்த பொலிஸ் வாகனத்தின் வேகத்தை இன்னொரு இன்னொரு வாகனத்தின் மூலம் குறைக்கச் செய்து இந்த இடைவெளிக்குள் இன்னொரு வாகனத்திலிருந்த பொலிஸாரை சுட்டுக் கொன்றார் பிரபாகரன். (நகரும் வாகனத்தில் இருந்தோரை இன்னொரு நகரும் வாகனத்திலிருந்து சுட்டுக்கொன்றமை அக்காலத்தில் பிரமிப்பாகப் பார்க்கப்பட்டது.)

குட்டிமணி, தங்கத்துரை கைதானதும் மிகப்பெரிய நெருக்கடி ஏற்பட்டது. இவர்களுக்குத் தெரிந்த சகல இடங்களுக்கும் பொலிஸாரும், இராணுவத்தினரும் சென்றனர். பொன்னம்மான், கே.பி. ,கிட்டு ஒபரோய் தேவன், சின்னபறுவா, தேவர் அண்ணா, ரவீந்திரதாஸ் (நேசன்) முதலானோர் தேடப்படும் சூழ்நிலை ஏற்பட்டது.

அந்தக் காலத்தில் 100 ரூபாய்தான் ஆகக்கூடிய பெறுமதியான நோட்டு. அதிலும் வாகனத்தில் கொண்டு செல்லப்பட்டவையில் கணிசமானவை இரண்டு ரூபாய் நோட்டுக்கள். பொலிசாரும் இராணுவத்தினரும் வருவதற்கிடையில் இவற்றையும் காப்பாற்றியாக வேண்டும்.

எல்லாத்தொடர்புகளும் பெரும்பாலும் இனங்காணப்பட்டு விட்டாலும் மூன்று லட்சம் ரூபாயைத் தவிர ஏனையவை காப்பற்றப்பட்டன. குறிப்பாகச் சொல்வதானால் குட்டிமணி, தங்கத்துரைக்கு தெரியப்படுத்தப்படாத புதிய தொடர்புகள் மூலமாகவே பிரபாகரனால் இதனைச் செய்யமுடிந்தது.

1981 ஐப்பசி 15ம் நாள் யாழ்ப்பாணத்தில் உள்ள காங்கேசன்துறை வீதியில் சிறிலங்கா இராணுவத்தினர் மீதான முதலாவது வெற்றிகரமான தாக்குதல் சீலன்தலைமையில் புலேந்திரன் .லாலா ரஞ்சன் ஆகியோர் மேற்கொண்டதும் இக்காலப் பகுதியிலேயே.

தமிழகத்தில் திருப்பரங்குன்றத்தில் இரு பகுதியினரும் ஒரு திருமண மண்டபத்தை வாடகைக்கு எடுத்து பயிற்சிகளை மேற்கொண்டனர். புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த ராகவனே இருபகுதியினருக்கும் பயிற்சிகளை வழங்கினார் .

இக்காலகட்டத்தில் – ‘1982 தைப்பொங்கல் நாளன்று தமிழீழம்” என்ற கிருஷ்ணா வைகுந்தவாசன் என்பவரது பிரகடனத்தைக் கண்டித்து ‘நாடு கடத்தப்பட்ட நிலையில் தமிழீழ அரசு” என்ற அறிக்கை புலிகளின் சின்னத்துடன் வெளியானது.

இயக்க ஆயுதத்துடன் வெளியேறி புது இயக்கத்தைத் தொடங்கிய சுந்தரம் என்பவர் மீதான நடவடிக்கை பற்றி ‘துரோகத்துக்குப் பரிசு” என்ற தலைப்பில் இன்னொரு பிரசுரமும் வெளியானது. இவற்றை விநியோகித்ததில் அப்போதைய தீவிர ஆதரவாளரான பொட்டம்மானும் ஒருவர்.

இக்காலகட்டத்தில் ரெலோ உறுப்பினர்களாக பந்தண்ணா (ராசப்பிள்ளை), சிறிசபாரத்தினம், முரளி, ரூபன், ஒபரோய் தேவன், அவரது தம்பி சின்ன பறுவா, சுதன்,ரமேஷ்(சாரதி)ஆகியோர்தமிழகத்திலும்நாட்டில்செல்வமும்,திருமலையைச் சேர்ந்த மற்றொரு உறுப்பினருமே இருந்தனர். சிவாஜிலிங்கம் என்ற பெயரை அக்காலத்தில் போராட்டம் சம்பந்தமாக ஒருவரும் அறிந்திருக்கவில்லை.

இன்று ரெலோவில் இருந்து பிரிந்தவர் பிரபாகரன் என்று சொல்கின்றனர் செல்வம்சிவாஜிலிங்கம் ஆகியோர். வேலிக்கு ஓணான் சாட்சி போல சிவசக்தி ஆனந்தனும் இதனை வழி மொழிகிறார். அப்துல் காதருக்கும் அமாவாசைக்கும் என்ன சம்பந்தம்?

1981 இன் பிற்பகுதியில் ‘நாங்கள் தனித்தனியாக இயங்குவோம் என பிரபாகரன் முடிவெடுத்தார். குட்டிமணி அண்ணா, தங்கண்ணா போன்றோருடன் இருந்த புரிந்துணர்வு இல்லாமற் போனதே இதற்கான காரணம் குட்டிமணி அண்ணா முதலானோரை நீதிமன்றத்துக்கு கொண்டுவரும் போது தற்கொலைப் படையாகச் சென்று அவர்களை மீட்போம் என்று பிரபாகரன் சொன்னதை இவர்கள் ஏற்கத் தயங்கினர். இதனைவிட மேலும் சில காரணங்களும் இருந்தன.

இதன் பின்னரே தமிழீழ விடுதலை இயக்கம் என்ற பெயர் அடிபட்டது. இந்தப் பெயரே கடனாக அல்லது இரவலாக வாங்கப்பட்டதுதான்.

முத்துக்குமாரசாமி என்பவரே இப்பெயரில் ஒரு இயக்கத்தை நடத்தி வந்தார். அது செயலிழந்த நிலையில் அப்பெயரை இவர்கள் பயன்படுத்தப் தொடங்கினர்.

கருணாநிதி அடிக்கடி முதல்வர் எம்.ஜி.ஆரைக் கடுப்பேற்றுவார் முதல்வருக்கு ஈழத்தமிழர் விடயத்தில் அக்கறையில்லை என்று.

பொறுமையிழந்த எம் .ஜி.ஆர். குட்டிமணியை இலங்கை அரசிடம் ஒப்படைத்தவர் கருணாநிதிதானே என்று கேட்டார். இதனால் கருணாநிதி வெலவெலத்து விட்டார். உடனே இவர்களைத் தேடிப்பிடித்து ஒரு அறிக்கை விடச்செய்தார்.

அந்த இயக்கத்தின் பெயரும் செயலதிபர் சிறீ சபாரத்தினம் என்பதும் உலகத்துக்கு தெரிய வந்தது அப்போதுதான்.

இதன் மூலம் சிறீசபாரத்தினம் – கருணாநிதி நட்பு தொடர்ந்தது. சிறீ சபாரத்தினத்தின் மறைவுக்குப் பின் பாலைவனத்து ரோஜாக்கள் என்ற படத்தில் சபாரத்தினம் என்ற கதாபாத்திரத்தைப் படைத்தார் கருணாநிதி.

இன்று தீருவிலில் குமரப்பா புலேந்திரனின் நினைவிடத்தில் எல்லா இயக்கத்தவருக்குமென பொது நினைவுச் சின்னத்தை அமைக்க ஏற்பாடு செய்துள்ளார் சிவாஜிலிங்கம். ரெலோ உறுப்பினர்களும் ஈ.பி.டி.பி. உறுப்பினர்களும் கூட்டாக வல்வை நகரசபையில் இதற்கான தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளனர்.

தங்கத்தையும் கிலிற்றையும் சமமாகக் கருதுகின்றனர்.

கரும்புலிகளும் வவுனியா மலர் மாளிகையில் நடந்த சித்திரவதைகளை மேற்கொண்ட மாணிக்கம்தாசனும் ஒன்றாம். பெண் மாவீரர்களும் ஆரையம்பதியில் விஜி என்ற மாணவியைக் கூட்டுப்பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய பின்னர் சடலமாக ஆற்றில் வீசி எறிந்தவர்களும் ஒரே தராசிலாம்.

இப்பாதகத்தைச் செய்தவர்களில் ஒருவரான ராமுவும் இக்குழுவை வழிநடத்திய ஜனாவும் இன்னும் உயிர் வாழ்கின்றனர்.

இறுதி யுத்தம் வரை போராடிய போராளிகளும் படையினருடன் ஒத்துழைத்த புளொட்டினரும் சமமானவர்களாம். இதனைவிடக் கேவலம் வேறென்ன உள்ளது?

பிரபாகரன் ரெலோவிலிருந்து பிரிந்தார் என்று சொல்பவர்களுக்கு ஐயரின் (கணேசன்) ‘ஈழப்போராட்டத்தில் எனது பதிவுகள்” என்ற நூலிலிருந்து சில பகுதிகளைத் தருகிறோம்.

இந்தக் காலகட்டத்தில் குட்டிமணி, தங்கத்துரை போன்றோர் இந்தியாவிலிருந்து திரும்பி வருகிறார்கள். அவர்களது தொடர்புகளும் எமக்கு மறுபடியும் கிடைக்கிறது. அவர்கள் எமக்கு வெளியில் தாமே திட்டமிட்டு சில நடவடிக்கைகளை மேற்கொள்கிறார்கள்.

அவையெல்லாம் முழு வெற்றியளிக்கவில்லை. இந்த நிலையில் அவர்களுடைய நடவடிக்கைகளை ஊக்கப்படுத்தும் நோக்கோடு அவர்களில் இருவருக்கு துப்பாக்கி சுடக் கற்றுக் கொடுப்பது என்ற முடிவுக்கு வருகிறோம்.

இந்த முடிவின் அடிப்படையில் எமது புளியங்குளம் முகாமில் தங்கத்துரை மற்றும் ராசப்பிள்ளை ஆகியோருக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி வழங்குகிறோம். இவர்கள் புதிய புலிகள் அமைப்பில் இல்லாதிருந்தாலும் நட்பு சக்தி என்ற அடிப்படையில் இந்தப் பயிற்சி வழங்கப்படுகிறது. அவர்கள் அப்போது ரெலோ (TELO ) என்ற அமைப்பை உருவாக்கியிருக்காவிட்டாலும் தனியான ஒரு குழுவாகச் செயற்பட்டனர்.”

‘பிரபாகரனோ, புதிய புலிகள் அமைப்பிலிருநத எவருமோ அவர்களை எம்முடன் இணைத்துக் கொள்ள விரும்பவில்லை. அவர்கள் வேறுபட்டவர்களாக இருப்பதையே நாம் அனைவரும் விரும்பினோம்.

தங்கத்துரை, குட்டிமணி போன்றோர் பிரதானமாகக் கடத்தல் தொழிலையும் வன்முறை எதிர்ப்பு நடவடிக்கைகளைப் பகுதி நேரமாகவுமே மேற்கொள்கின்றனர். இதனடிப்படையில் அவர்களை உள்வாங்காமல், நட்பு சக்தி என்ற அடிப்படையில் அவர்களுக்கு உதவிகளை வழங்கினோம்.”

நீண்ட காலம் அரசியலில் ஈடுபடுவதால் சில விடயங்கள் சிலருக்கு மறந்து விட்டன.

எனவே புலம்பெயர் உறவுகள் இணையத்தளத்தில் இவ்வாறான நாடாளுமன்ற, மாகாண சபை உறுப்பினர்களின் மின்னஞ்சல் முகவரியைப் பெற்று எமது விடுதலைப் போராட்ட வரலாற்றை எடுத்தியம்பும் ‘விடுதலைத் தீப்பொறி” எனும் ஒளிப்படத் தொகுப்பை அனுப்பி வையுங்கள் எம்.பிக்களாக இம் மூவரும் தலைவரைச் சந்தித்த காலங்களில் தெரிவிக்காத கருத்துக்களை இப்போது தெரிவிக்கும் நிலைமை இருக்கிறதென்றால் தலைவர் எமது மக்களின் மனங்களில் மட்டும் வாழ்கிறார் என்பதை உணர வேண்டும்.

வரலாற்றை மாற்றமுனையும் கடைந்தெடுத்த அயோக்கியத்தனத்தை மக்கள் இனங்காண வேண்டும் இதேவேளை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் சிவசோதி நவகோடி பொது நினைவுச் சின்னப் பிரேரணையை எதிர்த்து வாக்களிக்க முன் வரவில்லை இவருக்கு எதிராக என்ன நடவடிக்கை எடுப்பதென்பது குறித்து அக்கட்சி முடிவு செய்யட்டும்.

(தயாளன்)

யாழில் இராணுவத்தால் உயிரிழந்த முன்னாள் போராளி!

யாழ். சாவகச்சேரி பகுதியை சேர்ந்த 32 வயதுடைய கோணாமலை பிரதீபன் என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாழை இலை வெட்டுவதற்காக வீட்டின் பின்னால் உள்ள கிணற்றடிக்கு சென்றவரை நீண்ட நேரம் காணவில்லை என்று தேடிச்சென்றபோது தண்ணீர்த் தொட்டியில் மயங்கியநிலையில் காணப்பட்டார்.

இதனையடுத்து, உடனே சாவகச்சேரி வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதும் சிகிச்சை பலன் இன்றி அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த இளைஞர், 2009ம் ஆண்டு யுத்தம் முடிவுக்கு வந்ததன் பின்னர் படையினரால் கைது செய்யப்பட்டு தடுப்புமுகாமில் வைக்கப்பட்டிருந்த காலப்பகுதியில் தடுப்பு ஊசி என கூறி 3 ஊசிகள் போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, முன்னாள் போராளிகளின் தொடர் மரணங்கள் தமிழ் மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

அரச புனர்வாழ்வு முகாம்களிலிருந்து விடுவிக்கப்பட்ட முன்னாள் போராளிகளில் இதுவரை 120 பேர் புற்றுநோய், காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு நோய்களினால் உயிரிழந்துள்ளனர்.

இவ்வாறான நிலையில், குறித்த முன்னாள் போராளியும் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அது மட்டுமன்றி இராணுத்தினர் தொடர் விசாரணை மேற் கொண்டு வந்த நிலையில் மன அழுத்தம் மற்றும் தடுப்பு ஊசி ஏற்றப் பட்டதன் விளைவே இவரது மரணம் என கூறப் படுகிறது.

Up ↑