Search

Eelamaravar

Eelamaravar

Month

May 2018

மராட்டியனை அனுமதிக்கும் தமிழக அரசு மானத்தமிழர்களுக்குத் தடை !

யார் சமூகவிரோதிகள்? – ரஜினியின் கருத்துக்கு கொந்தளித்த சீமான்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நடைபெற்ற போராட்டத்தில் சமூக விரோதிகள் ஊடுருவி இருப்பதாக நடிகர் ரஜினிகாந்த் கூறியிருப்பது போராடிய மக்களைக் கொச்சைப்படுத்தும் செயல் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் தெரிவித்தார்,

யார் அந்தச் சமூகவிரோதிகள்? என்று கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் கூறியதாவது,

எங்கள் வீடுகளை இடித்துத் தரைமட்டமாக்கியவர்கள், தடுக்கப்போராடிய எங்களைச் சொல்கிறார்கள் பயங்கரவாதிகள், சமூகவிரோதிகள் என்று. கண்முன்னே எங்கள் அக்கா-தங்கைகளை வன்புணர்வு செய்து படுகொலை செய்தவர்கள், அதைத் தடுக்கப் போராடிய எங்களைச் சொல்கிறார்கள் பயங்கரவாதிகள், சமூகவிரோதிகள், வன்முறையாளர்கள் என்று. எங்கள் தலைக்கு மேலே குண்டுகள் வீசிக் கொன்றவர்கள், நெஞ்சைக் குறிபார்த்து சுட்டுக் கொன்றவர்களும் எங்களைச் சொல்கிறார்கள் சமூகவிரோதிகள், பயங்கரவாதிகள் என்று. அப்படியானால் இந்தப் பயங்கரவாதமும் இந்தச் சமூகவிரோதமும் எவ்வளவு புனிதமானது பாருங்கள் என்கிறான் ஒரு கவிஞன் அதுபோல் தான் இருக்கிறது இவர்கள் சொல்வதும். இன்று மருத்துவமனையில் ரசிகர்களைக் கொண்டு ரஜினிகாந்த் நடத்தியது படபிடிப்பா? அல்லது பாதிக்கப்பட்ட மக்களைச் சந்திக்கும் நிகழ்வா? துணை முதல்வரை கூடச் சந்திக்க விரும்பாத பாதிக்கப்பட்டவர்கள் இவருடன் எப்படிச் சிரித்துக்கொண்டு புகைப்படம் எடுப்பார்கள்? இவ்வளவு பாதிப்பிற்கும் சமூக விரோதிகள் தான் காரணம் என்கிறார்,
சுட்டுக்கொல்லப்பட்டவர்களில் எத்தனை பேர் சமூகவிரோதிகள்? காயம்பட்டு மருத்துவமனையில் உள்ளவர்களில் எத்தனை பேர் சமூகவிரோதிகள்? என்று அடையாளம் காட்டுவீர்களா? எல்லாம் தெரிந்த திரு.ரஜினி அவர்களே!

போராடும் மக்களைச் சமூகவிரோதிகள், விசமிகள் என்று பேசுவது மிகவும் மோசமானது; நஞ்சானது! இவ்வாறு பேசுபவர்கள் தான் விசமிகள். நான்கு வயது பையனும் 5 வயது பொண்ணும் போராட்டக்களத்தில் நின்று இது மண்ணுக்கான போராட்டம்; இது மக்களுக்கான போராட்டம் என்று முழங்க ஊர் மக்களும் அதே முழக்கத்தைச் சொல்லி போராடிய காணொளிகள் உலகம் முழுவதும் பரவியதே, அந்தப் பச்சிளம் பிள்ளைகள் தான் சமூகவிரோதிகளா? அப்போராட்டத்தில் அதிகாரமற்ற, ஆயுதமற்ற மக்கள் அணி அணியாகக் குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் எனக் குடும்பத்தோடு பங்கேற்றனர். கலவரத்தைத் தூண்ட வந்தவர்கள் குடும்பத்தையுமா கூட்டிக்கொண்டு வருவார்கள்? இதெல்லாம் போராடுகிற மக்களை ஊனப்படுத்திக் கொச்சைப்படுத்தி அவமானப்படுத்துகிற ஒரு கொடுஞ்சொல் தான் சமூகவிரோதிகள் என்றழைப்பது.

மக்கள் போராடிக்கொண்டே இருந்தால் நாட்டில் வளர்ச்சி இருக்காது என்பது பைத்தியக்காரன் சொல்லும் வாதம். இழந்துவிட்ட உரிமைகளைப் பிச்சைக்கேட்டு பெறமுடியாது; போராடித்தான் பெற்றாகவேண்டும் என்கிறார் புரட்சியாளர் அம்பேத்கர். ஓடாத மானும் போராடாத இனமும் வாழ்ந்ததாகச் செய்தியில்லை என்கிறார் ஈழத்து பாவேந்தர் புதுவை இரத்தினதுரை. அப்படியானால் நாங்கள் என்னதான் செய்வது? நாங்கள் யாரும் தொழில்வளர்ச்சிக்கு எதிரானவர்கள் அல்ல. நிலம், வளம், காற்று, நீர் இவற்றை மாசுபடுத்தும் தொழில்வளர்ச்சி தேவையா என்கிறோம். குஜராத்தில் ஸ்டெர்லைட் ஆலை தொடங்க எதற்காக மறுத்தார்கள்? காவிரிப்படுகையில் எடுப்பது போன்று கங்கைப் படுகையில் மீத்தேன் எடுக்காதது ஏன்? நாடு முழுவதும் எத்தனையோ மலைகள் இருந்தும் நியுட்ரினோ ஆய்வுக்குத் தமிழகத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைகள் வேண்டுமா? எங்கள் இனம் மட்டும் ஏன் குறிவைத்து வேட்டையாடப்படுகிறது. தொழில்வளர்ச்சி குறித்துப் பேசும் திரு.ரஜினிகாந்த் அவர்கள், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு அருகில் இருக்கும் வீடுகளில் தண்ணீர் வாங்கிக் குடித்துவிட்டு அதன் நிறம், சுவை எப்படியிருக்கிறது எனக் கூறமுடியுமா? அதற்கான காரணத்தை விளக்க முடியுமா?

போராடும் மக்களைப் பொதுவாகச் சமூகவிரோதிகள் என்று கூறுவது அயோக்கியத்தனம். போராடுவது ஒன்றும் பொழுதுபோக்கோ நேர்த்திக்கடனோ அல்ல; போராடினால்தான் வாழமுடியும் என்ற நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டிருக்கிறோம். ரஜினிகாந்த் தான் சொல்கிறார் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பது தொடர்பாக ஆலை நிர்வாகம் நீதிமன்றம் போனால் அவர்கள் மனுசனே இல்லை என்று, அவ்வளவு கொடிய ஆலையை மூட இதுவரை அவர் பேசியது என்ன? முன்னெடுத்த போராட்டங்கள் எத்தனை?

முதல் நாள் போராட்டம் தொடங்கியதும் ஸ்டெர்லைட் ஆலையை மூடவில்லை திரு.ரஜினிகாந்த் அவர்களே! 100 நாள் போராடி, பல உயிர்களைப் பலி கொடுத்து, இரத்தம் சிந்தி, தடியடியில் காயம்பட்டு, சிறைபட்டுக் கண்ணீர் சிந்திய பிறகே அரசானை பிறப்பிக்கப்பட்டுள்ளது. போராட்டத்தின் தொடக்கநிலையிலேயே அரசு தீர்வு கண்டிருந்தால் இவ்வளவு பெரிய இழப்பு ஏன் ஏற்படுகிறது. போராட்டம் என்பது மக்களின் விருப்பமல்ல; அதிகாரத்தின் திணிப்பு! நெடுவாசலிலும் கதிராமங்கலத்திலும் மக்கள் பிழைப்பை விட்டுவிட்டு ஓராண்டுக்கும் மேலாகப் போராடிக்கொண்டிருகின்றனர்.

மக்களைப் போராட தூண்டுகிறார்கள் என்கிறாரே ரஜினி..?

கற்பி! புரட்சிசெய்! ஒன்றுசேர்! என்கிறார் அண்ணல் அம்பேத்கர். நாங்கள் கற்பி! ஒன்றுசேர்! புரட்சிசெய்! என்கிறோம். மக்களுக்குக் கற்பிக்க வேண்டியது தானே கல்வி; கற்றதினால் ஆன பயன் என்ன? கற்றவை பற்றவைக்கத்தானே? தீயவை தீவைக்கத்தானே! மக்களுக்கு எது சரியானது என்பதைக் கற்பிக்க வேண்டிய கடமை அனைவருக்கும் உள்ளது.
பணமதிப்பிழப்பின் போது மோடிக்கு வாழ்த்து தெரிவிக்க முடிந்த உங்களால் அது தோல்வி திட்டம் என்று உணர்ந்த பிறகும் வாய்திறக்க மறுப்பதேன்? தொடக்கத்தில் எதிர்த்து போராடிய நாங்கள் இப்போது தவறானவர்களா? சினிமாவில் மட்டும் வசனம் பேசி போராடுங்கள் போராடுங்கள் என்கிற திரு.ரஜினிகாந்த், உண்மையில் போராடுபவர்களைச் சமூகவிரோதிகள் என்பதா? காவலர்கள் மீது மக்கள் தாக்கியது தவறுதான்; ஆனால் அதேவேளையில் அப்பாவி பொதுமக்களைச் சுட்டுக்கொன்ற காவல்துறையினர் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் ஏன் வலியுறுத்த மறுக்கிறீர்கள் திரு.ரஜினிகாந்த்?

போராட்டங்கள் மூலமே விடுதலை முதற்கொண்டு ஜல்லிக்கட்டு வரை அனைத்தும் பெறப்பட்டுள்ளது! புரட்சிகரப் போராட்டங்கள் இல்லாமல் உலகத்தில் இவ்வளவு பெரிய மாற்றங்கள் எதுவும் நிகழ்ந்திருக்காது. நெருக்கடி இல்லாமல் எதுவொன்றும் பிறக்காது. போராட்டங்களே கூடாது என்பது மிகவும் ஆபத்தானது.

உரிமைக்காகப் போராடுபவர்களும் போராட்டத்தில் உயிரைவிட்டவர்களும் பைத்தியக்காரர்கள் அல்ல. போராடுபவர்களுக்குத் துணைநிற்க முடியாவிட்டால் ஒதுங்கிநில்லுங்கள்! போராடுபவர்களைச் சமூக விரோதிகள் என்று கட்டமைப்பது மிகத்தவறு!

பாஜக-வினர் மோடி, தமிழிசை, பொன்.இராதாகிருஷ்ணன், எச்.ராஜா, முதல்வர், அதிமுக அமைச்சர்கள் போன்றோர் சொல்வதையே ரஜினியும் வழிமொழிகிறார். ரஜினியின் குரல் அதிகாரத்தின் குரல்; அடித்தட்டு மக்களின் குரல் அல்ல! இதைவிடப் பெரிய அநீதிகள் நடந்தால் தான் முதல்வரை பதிவி விலகக் கோருவாரா ரஜினி என்பதை அவர்தான் தெளிவுபடுத்த வேண்டும்.

போராட்டங்களே கூடாது என்றால், போராட வேண்டிய தேவையே இல்லாத ஒரு நல்ல அரசும் ஆட்சியும் இருந்துவிட்டால் நாங்கள் எதற்காகப் போராடப்போகிறோம்..?
மக்கள் 100 நாட்களாக ஸ்டெர்லைட் மூடக்கோரி போராடிவருகிறார்கள்! இதில் எத்தனை நாள் மாவட்ட ஆட்சியரோ, துறைசார் அமைச்சரோ, முதல்வரோ, துணை முதல்வரோ நேரில் சந்தித்துப் பேசினார்கள்..? இதை ஏன் அரசு செய்யவில்லை என்று ரஜினியால் கேள்வி கேட்க முடியுமா?.

பிரச்சினைகளை மக்கள் மீது திணிக்கிற அதிகாரத்தை எதிர்த்து கேள்வியெழுப்ப துணிவில்லாதவர்கள், தன்னலமற்று மக்களுக்காகப் போராடுகிறவர்களைச் சமூகவிரோதிகள், பயங்கரவாதிகள், விசமிகள் என்று பேசுவது வெட்கக்கேடு!

சொந்தநாட்டு மக்களைப் பயங்கரவாதிகள், சமூகவிரோதிகள் என்பது மிகவும் பைத்தியக்காரத்தனமானது. தூத்துக்குடிக்குள் மராட்டியனை அனுமதிக்கும் தமிழக அரசு மானத்தமிழர்களுக்குத் தடை விதிக்கிறது.

– இவ்வாறு சீமான் கூறியுள்ளார்.

யார் நீங்க? கண்ணா நான் தாப்பா ரஜினிகாந்த் !

இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் இருக்கும் நான்தான்பாரஜினிகாந்த் ஹேஸ்டேக்

இந்திய அளவில் டுவிட்டர் பயன்பாட்டாளர்களால் அதிகம் பகிரப்பட்டு #நான்தான்பாரஜினிகாந்த் என்ற ஹேஷ்டேக் முதலிடத்தில் உள்ளது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தின்போது படுகாயமடைந்த பொதுமக்களை இன்று நடிகர் ரஜினிகாந்த் நேரில் சந்தித்து ஆறுதல் வழங்கினார்.

அப்போது ஒரு இளைஞரிடம் ரஜினி வந்து நலம் விசாரித்தபோது, யார் நீங்க என ஆவேசமாக கேள்வி எழுப்பினார். அதற்கு நான் ரஜினி என அவர் பதிலளிக்க.. அது எங்களுக்கு தெரியாதா? நீங்க தான் ரஜினின்னு யாருக்கும் தெரியாமல் இல்லை.

https://twitter.com/shaitboy/
வாலு பையன் 😁!
@shaitboy
சூப்பர் சம்பவம்!👌👌

யார் நீங்க?
கண்ணா நான்தாப்பா ரஜினிகாந்த் !

ஸ்டெர்லைட்டுக்கு எதிராக 100 நாட்களாக நாங்கள் போராடிய போது சென்னை ரொம்ப தூரத்தில் இருந்ததா? என சரமாரி கேள்விகளை எழுப்பினார். இதனை கண்டு அதிர்ந்து போன ரஜினி அங்கிருந்த மெதுவாக சிரித்துக்கொண்டே நழுவி சென்றார்.

இந்த காட்சி சமூகவலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வந்தது. அந்த வீடியோவில் ரஜினியிடம் கேள்வி எழுப்பும் இளைஞரைப் பலரும் பாராட்டிய நிலையில், அந்த வீடியோ குறித்த மீம்களும் பரவத் தொடங்கியிருக்கின்றன.

அதோடு சேர்த்து தற்போது #நான்தான்பாரஜினிகாந்த் என்ற ஹேஷ்டேக் ட்விட்டர் வலைத்தளத்தில் இந்திய அளவில் ட்ரெண்டாகி உள்ளது.

**
எப்படி தெரியும் என கேட்க வேண்டாம் எனக்கு தெரியும்: குழப்பத்தில் பதிலளித்த ரஜினிகாந்த்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்கள் குடும்பத்தினர்களுக்கு தலா 2 லட்சமும் காயமடைந்தவர்களுக்கு 10 ஆயிரமும் வழங்க ரஜினிகாந்த் இன்று தூத்துக்குடி சென்றார்.

அதன்பின்னர் சென்னை திரும்பிய நடிகர் ரஜினிகாந்த் விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு சமூகவிரோதிகளே காரணம் என தெரிவித்தார்.

மேலும் பொலிஸாரை அடித்ததே சம்பவத்திற்கு காரணம் எனவும் கூறினார்.

அப்போது கேள்வி எழுப்பிய செய்தியாளர் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு சமூகவிரோதிகள் காரணம் என எப்படி தெரியும் என கேட்டார்.

அதற்கு பதிலளித்த ரஜினிகாந்த் எப்படி தெரியும் என கேட்க வேண்டாம் எனக்கு தெரியும் என குழப்பமாக பதிலளித்தார். மேலும் பேட்டி முழுவதும் சற்று ஆவேசமாக காணப்பட்டார்.

**

தமிழ்நாடு சுடுகாடாக மாறிவிடும்!! மறைமுகமாக எச்சரிக்கும் பிரபலம்?

எல்லாவற்றிக்கும் மக்கள் தொடர்ந்து போராடினால் தமிழ்நாடு சுடுகாடாக மாறிவிடும் என தூத்துக்குடியில் இருந்து திரும்பிய நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கெதிரான போராட்டத்தின் போது படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்களை சந்தித்து நலம் விசாரித்த நடிகர் ரஜினிகாந்த் மீண்டும் சென்னை திரும்பினார்.

அப்பொழுது சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்த அவர், ” தூத்துக்குடி போராட்டத்தை நான் கொச்சைப்படுத்தியதாக யார் சொன்னது.

பொதுமக்கள் போராட்டத்தின் கடைசி நேரத்தில் சமூகவிரோதிகள் புகுந்து தான் கெடுத்தனர். ஜல்லிக்கட்டு போராட்டத்தின் கடைசி நாளில் எப்படி செய்தார்களோ அதுபோல் தான் இதிலும் செய்து உள்ளனர்.

போலீசை தாக்கிவிட்டு கலெக்டர் அலுவலகத்தை நொறுக்கியதும் குடியிருப்பு பகுதியை எரித்ததும் சமூகவிரோதிகள் தான்.

இது எப்படிதெரியும் என்று கேட்க வேண்டாம். எல்லாம் எனக்கு தெரியும். சமூகவிரோதிகளை வெளியே எடுத்துவந்து விரைவில் காட்டவேண்டும். போலீசாரை தாக்கிய பின்னர் தான் சம்பவம் தொடங்கியது. சமூகவிரோதிகள் போலீசை தாக்கியதால் பிரச்சனை உருவானது.

போலீசை தாக்குவதை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன். மக்கள் எல்லாவற்றிக்கும் போராட்டம் என தொடர்ந்து சென்றால் தமிழகம் சுடுகாடு ஆகிவிடும்”என கூறினார்.

மேலும் செய்தியாளர்கள் தொடர்ந்து அவரிடம் கேள்வி எழுப்பிய போது கோபமாக வேறு ஏதாவது கேள்வி இருக்கா என்று கேட்டு சென்றார்.

பாஜகவின் மற்றொரு முகமாகவே நடிகர் ரஜினி செயல்பட்டு வருகிறார் என அரசியல் தலைவர்கள் பலரும் கூறி வரும் நிலையில், தொடர்ந்து போராடினால் தமிழ்நாடு சுடுகாடாக மாறிவிடும் என ரஜினி கூறியிருப்பது மறைமுகமாக தமிழகத்தை எச்சரிக்கை செய்கிறாரோ என நெட்டிசன்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

யாரு நீங்க?

கண்ணா என் பேரு ரஜினிகாந்த். எனக்கு இன்னொரு பேரும் இருக்கு (ரசிகர்கள் பாஷா பாஷா என்று அலறுகிறார்கள்). ஏய், சும்மா இருக்கமாட்டீங்களா?

தம்பி மன்னிச்சுக்குங்க. என் பேரு ரஜினிகாந்த். என் இன்னொரு பேரு சிவாஜிராவ். நான் ஒரு நடிகனுங்க. முள்ளும் மலரும், தில்லுமுல்லு, தளபதி, பாஷா இப்பிடி சில படங்கள் பண்ணியிருக்கேன். இப்போ காலான்னு ஒரு படம் ரிலீஸ் ஆகப்போகுதுன்னு நினைக்கிறேன். 2.0 ன்னு ஒரு படத்தில சிக்கி சின்னாபின்னமாகிட்டிருக்கேன். அடுத்ததா கார்த்திக் சுப்புராஜு படமும் இருக்கு. அது பேய்ப்படமா பேசும்படமா என்னன்னே புரியமாட்டேங்குது. சரி அதை விடுங்க.

தம்பி எனக்கு கொஞ்சம் நடிக்கற திறமை இருக்கு. ஒரு ஸ்டைல், டைமிங் இருக்கு. அதை டைரக்டருங்க ரொம்ப நல்லா பயன்படுத்திக்கிட்டாங்க. நான் பேசும்போதும் நடக்கும்போதும் ஒரு வேகம் இருக்கு. அது ஜனங்களுக்கு புடிச்சுது. அதை அப்பிடியே கரிக்டா பிடிச்சு பெரிய நடிகனா நான் வந்துட்டேன். அப்புறம் படங்களில அரசியல் பேச ஆரம்பிச்சேன். அதுக்கும் ஜனங்க கை தட்டினாங்க. அப்புறமா திரையில நான் பேசுற வசனங்களையும் அதுக்கு திரையில வர்ர ஜனக்கூட்டம் கைதட்டறதையும் பார்த்து அத நிஜம்னு நான் நம்பிட்டேன். அந்த வசனங்களை நான் யோசிக்கல. பாட்டு வரிகள நான் எழுதல. திரைக்கதைகளை நான் அமைக்கல. நான் வெறும் நடிகன்தான். டைரக்டர் சொல்றத அப்டியே கேட்டு ஸ்டைலா நடிச்சு மக்களை மகிழ்ச்சிப்படுத்தும் வெறும் நடிகன். ஆனா ஒரு கட்டத்தில, திரையில நடக்கிறத நிஜம்னு நானே நம்ப ஆரம்பிச்சேன். இந்த ஆதரவு உண்மைன்னு தோணிச்சு. இந்த மக்கள் எங்கிட்ட இருந்து நிஜமாவே எதையோ எதிர்பாக்கறாங்க என்று தோணிச்சு. அரசியலுக்கு வரணும், மக்களுக்கு சேவை செய்யணும் என்று நான் திங் பண்ணினேன். ஒரே ஒரு பாட்டு. ஐஞ்சு நிமிசம். நாடே சுபீட்சமாயிடும்னு கனவு கண்டேன். சந்தோஷ் நாராயணன் சாங்கு. கரண்டு பாஸாகி தூக்கம் கலைஞ்சதுதான் மிச்சம்.

இங்க பாருங்க தம்பி, இப்பலாம் அரசியல் முன்னமாதிரி இல்லை. முன்ன எம்ஜிஆர் இருந்தாரு. அவரு காலத்தில இந்த சோசியல் மீடியா எல்லாம் இல்ல தம்பி. மீம்சு இல்ல. அந்தக்காலத்தில் ஜனங்க முட்டாளா இருந்தாங்க. திரையில தெரியிறது உண்மை, அது வெறும் பொழுதுபோக்கு இல்லன்னு நினைச்சாங்க. ஆனா இப்ப காலம் மாறிப்போச்சு. திரையில அரசியல் பேசினா சூப்பர் என்னு கைதட்டுவாங்க. ஆனா நிஜத்தில அது வேறன்னு எனக்கு தெரிஞ்சுபோச்சு. தமில் மக்கள் தெளிவா இருக்காங்க. அரசியல் இப்போ மக்கள் மயமாயிடிச்சு. ஏன் எதுக்கு எடுத்தாலும் போராட்டம் பண்ணறாங்கன்னு எனக்கு புரியல. போராட்டம் பண்ணினாத்தான் குடிக்கற தண்ணிகூட எண்ணை கலக்காம கிடைக்குதுன்னு யாழ்ப்பாணத்திலயிருந்து எனக்கு பசங்க டூவீட்டு பண்ணுறாங்க. எனக்கு இதெல்லாம் புரியல. ரொம்ப கம்பிளிகேட்டட்டா இருக்கு. கோட்பாடு என்னான்னு கேக்கிறாங்க தம்பி. நான் என்ன வச்சிக்கிட்டா வஞ்சகம் பண்ணறேன்? சும்மா கூகிள் பண்ணிப்பார்த்தன். மார்க்சு, ஏஞ்சல்சு, ஆடம் ஸ்மித்துனு எக்கச்சக்கம் பேரு. எல்லா புத்தகங்களும் கிலோ கணக்கில இருக்கு. அப்புறம் லோக்கல்ல காந்தி பெரியார்னு ஒரு லிஸ்டு வந்திச்சு. நம்ம 2.0 ஜெயமோகன் சார்ட கால் பண்ணி கேட்டுப்பார்த்தன். ‘சூப்பர்ஸ்டாரின் கோட்பாட்டுத்தளம், இந்திய ஞானமரபின் அகவெளி’ ன்னு ஐயாயிரம் பக்கங்கள்ல ஒரு புஸ்தகமே இருக்குன்னாரு. அப்டியா, எக்ஸலண்ட், எங்க கிடைக்கும்னு கேட்டன். ஒரு டூ அவர்ஸ் தாங்க சார், எழுதிக்கொடுத்திடறேன் என்றாரு. எனக்கு தலை சுத்திரிச்சு. ரஞ்சித்கிட்ட கேட்டா அம்பேத்கார்னாரு. யாரு அவர்னேன்? அதான் சார், நீங்க கபாலில பஞ்ச் பேசும்போது பின்னாலேயே சிலையா நின்னாரே அவருதான் என்றாரு. நம்ம பின்னாடியே நின்ன அட்டக்கத்தி தினேசுக்குள்ள அவ்வளவு இருக்குன்னு எனக்கு அதுவரை தெரியாமலேயே போயிடிச்சு.

நான் என்ன பண்ணட்டும் சொல்லுங்க தம்பி? நமக்கு எதுவுமே தெரியல தம்பி. அரசியல் என்கிறது ஈஸின்னு நெனைச்சிட்டேன். அது அப்படியில்ல. அது ஒரு துறை. மக்களுக்கு நல்லது செய்யணும்னு நினைக்கிறது ஒண்ணு. அத எப்படி செய்யணும்? எதை எங்கே யாருக்கு எப்போ செய்யணும்? அது பத்தின தெளிவான சிந்தனையை எப்படி வளர்த்துக்கணும்? எதுவுமே எனக்குத் தெரியல. நம்மால இந்த போராட்டம் எல்லாம் இறங்கி பண்ண முடியாது. இங்க சிஸ்டம் சரியில்ல. அத சௌந்தரியாகிட்ட சொன்னா விண்டோஸ் அப்கிரேட் பண்ணுங்கப்பா என்கிறாங்க. ஏம்மா, யன்னல்லாம் நல்லாத்தானே இருக்குன்னு சொன்னேன். அது கம்பியூட்டர்ப்பா ன்னு சிரிச்சாங்க. நிறைய படிச்சவங்க. புத்திசாலிங்க. அவங்க பேச்சை கேக்கக்கூடாது தம்பி. முட்டாப்பயலுகளையே கூட வச்சிக்கிட்டு அவங்க பேச்சையே கேட்டுக்குன்னு இருக்கணும். அதுதான் கரிக்டு.

தம்பி, என்னை நீங்கே அப்டியே தூக்கி சி.எம் செயார்ல வையுங்கன்னு சொன்னா ‘யாரு நீங்க?’ ன்னு பக்குனு கேட்டிட்டீங்க. சரி அதுவும் நல்லதுக்குத்தான் தம்பி.

நடிகர் திலகம் அரசியலுக்கு வந்தாரு. தோத்தாரு. அமிதாப்பச்சன்கூட அரசியலுக்கு வந்தாரு. தோத்தாரு. என்னயும் அந்த லிஸ்ட்ல சேர்த்திடுங்க. தெரியாத்தனமா நம்ம தலையை பானைக்குள்ள வுட்டுட்டேன். வேணாம். தயவு செஞ்சு கழுத்த அறுத்திடாதிங்க. சின்னதா பானையை உடைச்சு வுடுங்க. தப்பிடுவேன். அடுத்த எலக்சன்ல நம்ம டெப்பாசிட்ட காலி பண்ணிடுங்க. என்னை மாதிரி நடிகர்களுக்கு இருக்கிற அரசியல் ஆசையை இல்லாமப்பண்ணிடுங்க. அப்பதான் நமக்கெல்லாம் அறிவு வரும். பாருங்க. நமக்குத் தெரிஞ்சது நடிப்புங்க. அத சரியா செய்யணும். அரசியலுக்கு வரணும்னா, இந்த நடிகன் எங்கிற சட்டையை உதறிப்போட்டிட்டு ஒரு மக்கள் தொண்டரா பூச்சியத்திலயிருந்து ஆரம்பிக்கணும். அதை நமக்கு உணர்த்துங்க. நா, மய்யம், நம்ம அணில்னு பூராபேரும் வரிசைல நிக்கிறாங்க. கொஞ்சம் பெரிய பலாப்பழம்தான். பரவாயில்ல. நான் சாப்பிட்டா மத்தவனுக்காவது கொஞ்சம் அறிவு வரும்.

தம்பி தேர்தல் என்கிறது சிவாஜி படத்தில ஒரு ரூவா காசை சுண்டுறதுமாதிரி. ஹா ஹா ஹா. நான் வென்றால் என்ன நடக்கும்னு யோசிங்க? எனக்கு எந்தமாதிரியான அரசியல் முன்னனுபவமும் இல்ல. ஒரு கட்சியையே முன்ன பின்ன நடத்தினதில்ல. எந்த மக்கள் போராட்டத்தையும் முன்னெடுத்த பழக்கமில்ல. நா எப்டிங்க ஏழு கோடி மக்களை ஆளமுடியும்? அது வேணாம். விட்டிடுங்க.

ஆனா, நான் தோத்துட்டன்னா நிறைய நல்லது நடக்கும். இந்த அரசியல், ஸ்டண்ட் எல்லாத்தையும் விட்டிட்டு சிம்பிளா, எலிகண்டா நான் படம் நடிக்க ஆரம்பிக்கலாம். சீனி கம்னு ஒரு இந்தி படம். நான் அத எடுத்து பண்ணனும்னு ரொம்பநாளா நம்ம ரசிகன் ஒருத்தனோட ஆசை. செஞ்சிடலாம். ‘பிகு’ ன்னு ஒரு படம். அமிதாப்பும் தீபிகாவும் நடிச்சது. அவரு அப்பா. இவங்க பொண்ணு. பண்டாஸ்டிக்கா ரெண்டுபேரும் நடிச்சிருப்பாங்க. தமிழ்ல அத நானும் திரிஷாவும் பண்ணலாம். இதெல்லாம் நடக்கறதுக்கு எங்கிட்ட இருக்கிற இந்த அரசியல் ஆசை அடியோட விலகிடணும். அது உங்க கையிலதான் இருக்கு தம்பி.

தயவு செஞ்சு என்னை காப்பத்திடுங்க.

படலை

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சூத்திரதாதிகள்

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு விலகும் மர்மங்கள் துப்பாக்கிச் சூடு நடந்த கலெக்டர் அலுவலகம், துப்பாக்கிச் சூட்டுக்குக் காரணமான ஸ்டெர்லைட் ஆலை இரண்டுமே தூத்துக்குடி சிப்காட் போலீஸ் ஸ்டேஷன் லிமிட்டுக்குள் வருகிறது.

இங்கே இன்ஸ்பெக்ட்ராக இருக்கும் ஹரிஹரன் பத்து வருடங்களாக இதே பணியில் இருக்கிறார். காவல் துறையின் எல்லா விதிகளையும் மீறி இங்கே பத்து வருடங்களாக ஒரே காவல் நிலையத்தில் பணிபுரிகிறார். சிலசமயம் டிரான்ஸ்பர் போடுவது போல் போடுவார்கள். ஆனால் இரு நாட்களில் மீண்டும் இங்கேயே டூட்டியில் சேர்ந்துவிடுவார் ஹரிஹரன்

அவ்வளவு செல்வாக்கோடு இருக்கிறார். இந்த செல்வாக்குக்குக் காரணம் இன்ஸ்பெக்டர் ஹரிஹரனுக்கும் ஸ்டெர்லைட்டுக்கும் இருக்கும் பரஸ்பர அண்டர்ஸ்டேண்டிங்தான் என்று சொல்லுகிறார்கள்.

‘ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தில் தீவிரமாக இருக்கும் போராட்டக்கார்கள், ஒருங்கிணைப்பாளர்கள் யார் யார் என்பது லோக்கல் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டருக்கு அத்துப்படியான விஷயம்.

ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டம் கடந்த சில மாதங்களில் தீவிரம் அடைந்ததிலிருந்து யார் யார் அதைக் கையிலெடுத்தார்கள், யார் யார் ஒருங்கிணைத்தார்கள் என்ற பட்டியல் இன்ஸ்பெக்டர் ஹரிஹரனுக்குக் கிடைக்க அந்த பட்டியலை அவர் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்துக்குக் கொடுத்திருக்கிறார்.

இந்தப் பட்டியலை வைத்துக்கொண்டுதான் துப்பாக்கிச் சூடு நடந்திருக்கிறது. இன்ஸ்பெக்டர் கொடுத்த லிஸ்டில் இருந்தவர்கள்தான் கொல்லப்பட்டிருக்கிறார்கள்’ என்று மனித உரிமை அமைப்புகள் இப்போது கண்டறிந்திருக்கிறார்கள்

ஓய்வு பெற்ற ஐஜியான அலெக்சாண்டர் துப்பாக்கிச் சூடுக்கு மூன்று நாட்கள் முன்பே தூத்துக்குடியில்தான் இருந்ததாகவும், அவருக்கும் இந்த துப்பாக்கிச் சூடுக்கும் தொடர்பு இருப்பதாகவும் மக்கள் கண்காணிப்பகம், எவிடென்ஸ் ஆகிய மனித உரிமை அமைப்புகள் சொல்கின்றன. இதற்கான ஆதாரம் தங்களிடம் இருப்பதாகவும் அவர்கள் சொல்கிறார்கள்.

ஹரிஹரன் தீவிரமான போராட்டக்காரர்களைப் பட்டியல் போட்டுக் கொடுக்க அதன் பின் அலெக்சாண்டரோடு ஆலோசனை நடத்தப்பட்டதாம். ‘கொஞ்ச பேரை சுட்டுக் கொன்னாதான் அடுத்து யாரும் போராட மாட்டான்’ என்று அலெக்சாண்டர் ஆலோசனை சொல்ல அதன் பேரிலேயே லோக்கல் போலீஸைத் தவிர்த்து வெளியூர் பட்டாலியனிலிருந்து ஆட்களைக் கொண்டுவந்து ஆபரேஷனை முடித்திருக்கிறார்கள் என்பதே மனித உரிமை அமைப்புகளின் அழுத்தமான வாதம்
இன்ஸ்பெக்டர் ஹரிஹரனின் மனைவி

இதற்கிடையே துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட நபர்களின் வீடுகளுக்குக் கடந்த மூன்று நாட்களாக தொடர்ந்து சென்றுகொண்டிருக்கிறார் தூத்துக்குடி டவுன் இன்ஸ்பெக்டர் வனிதா.

இவர் வேறு யாருமல்ல; இன்ஸ்பெக்டர் ஹரிஹரனின் மனைவிதான்.

இவர் கொல்லப்பட்டவர்களின் வீடுகளுக்கு சென்று அவர்களது உறவினர்களிடம், ‘போராட்டத்தைப் பார்க்கச் சென்றபோது போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் தவறுதலாக குண்டு பாய்ந்து என் உறவினர் இறந்துவிட்டார். இதில் ஏதும் சதியில்லை’ என்று எழுதிக் கையெழுத்துப் போடச் சொல்லி வற்புறுத்துகிறார் இன்ஸ்பெக்டர் வனிதா. கொல்லப்பட்ட மேலும் சிலரின் வீடுகளுக்கு சென்று வெற்றுக் காகிதத்திலும் கையெழுத்து கேட்கிறாராம். ஆனால் இதற்கு சம்பந்தப்பட்ட குடும்பத்தினர் மறுப்பு தெரிவிப்பதால் அவர்களைப் பல வகையிலும் சமாதானம் செய்துவருகிறார் இன்ஸ்பெக்டர் வனிதா.

இன்ஸ்பெக்டர் ஹரிஹரன், இன்ஸ்பெக்டர் வனிதா இருவருமே தமிழக அரசுக்கு வேலைபார்க்கிறார்களா அல்லது ஸ்டெர்லைட்டுக்கு வேலை பார்க்கிறார்களா என்பதுதான் மனித உரிமை அமைப்புகளின் கேள்வி. விரைவில் இந்த இன்ஸ்பெக்டர் தம்பதி பற்றிய முழு விவரங்களையும் மனித உரிமை அமைப்புகள் பிரஸ் மீட் வைத்து வெளியிடப் போகிறார்கள்’’

#நிலாக்கீற்று

கனடா உலகத்தமிழர் அறிவகத்தின் அராஜகம் !

அறிவகத்தைப் பற்றி

கனடா உலகத்தமிழ் அமைப்பினால் நடாத்தப்பட்டு வரும் அறிவகம் சிறார்களுக்கு தமிழ் கற்பிக்கும் ஒரு கல்விக்கூடம் ஆகும். ஏதோ தமிழ் வளர்க்கின்றோம் இன பண்பாடுகளை அடுத்த தலைமுறைக்கு வழிகாட்டுகின்றோம் என்று ஆரம்பிக்கப்பட்டாலும்  இது இப்போது முற்று முழுதாக ஒரு வர்த்தக இலாபத்தை மட்டுமே நோக்கான போட்டி அமைப்பாக மாறிவிட்டது.

http://www.arivakam.ca/ta_IN/

இதில் இருந்து பலர் பிரிந்து புது கல்விக்கூடம் கூட அமைத்திருக்கின்றார்கள் அதற்கு காரணம்  கனடா உலகத்தமிழ் அமைப்பின் அடிப்படைக் குணமான யாருடனும் கலந்தாலோசிக்காத , யாருடைய கருத்துக்களுக்கும் செவிமடுக்காத,   தான்தோன்றித்தனமான எதேச்சதிகாரப்போக்குத் தான் காரணம்.

அந்த எதேச்சதிகாரப்போக்கு அறிவகத்திலும்  அப்படியே  காணக்கூடியதாக இருக்கின்றது.  அறிவகத்தால் நடாத்தப்படும் நிகழ்ச்சிகள், பரிட்சைகள் அத்தனையிலும் பாரபட்சம்   காட்டப்படுகின்றது .  அறிவகத்தின் அல்லக்கை ஆசிரியர்களின் மாணவர்களுக்கு சிறப்பான சலுகையும் ,  அறிவகத்தின் செயற்பாடுகளை விமர்சிக்கும்      ஆசிரியர்களை மட்டுமல்லாது அவர்களது மாணவர்களைக் கூட அறிவகம் வஞ்சிக்கின்றது. வேண்டும் என்றே தூர இடங்களுக்கு ஆசிரியர்களையும் மாணவர்களையும் பரிட்சைக்கு அனுவது .

பல பெற்றோருக்கு இப்படி நடப்பதே தெரியாது உங்களுடைய விடுகளுக்கு அண்மையில் பரிட்சை நிலையம் இருக்கும் போது ஏன் நீங்கள் தூர இடங்களுக்கு அனுப்பப் படுகின்றீர்கள் என்று அறிவகத்தின் அதிபர் கிரியைக் கேட்டால்

ஒரு ஆசிரியரின் மாணவர்களை ஒரே இடத்திற்கு அனுப்புகின்றோம், இடம் போதாது  அல்லது அது அந்த ஆசிரியர் உங்களுக்கு அறிவுறுத்தவில்லை என்று பல வருடங்களாக தட்டிக் கழித்து ஆசிரியர்கள் மீதும் பழியையும் போட்டுவிடுகின்றார்கள்.

அறிவகத்தின் வாகை நிகழ்ச்சியிலும் இதே வஞ்சம் தான் ஒரு பாடலை பல வாரங்களாக ஒத்திகை பார்த்து பழகிய பின்னர் இது சரியில்லை அது சரியில்லை என்று கடைசி நிமிடத்தில் மாற்றி வேண்டாத ஆசிரியர்களையும் அவர் மாணவர்களையும் வஞ்சிக்கின்றது .

http://www.tdsb.on.ca/Search/Search?q=tamil

அது மட்டுமல்ல கனடிய ரொரன்ரோ கல்விச் சபையில்  மிகவும் குறைந்த கட்டணத்தில்  கனடிய பாடசாலைகளிலும் தமிழ் கற்பிக்கப்படுகின்றது.  கல்விச் சபையால் நாடத்தப்படும் பாடசாலைகளில் தமிழர் பங்குபற்றவில்லை என்றால் தமிழர்களுக்கு ஒதுக்கப்படும் நிதி , தமிழுக்கு வழங்கப்படும் அங்கீகாரமும் குறைந்து விடும் .

பாடசாலைக்கு அனுப்புவது இவர்களுக்கு போட்டியானது என்று வைத்தால் கூட கல்விச் சபையால் நாடத்தப்படும் போட்டி நிகழ்வுகளுக்கு இவர்களது மாணவர்களை அனுப்புவதன் மூலம் தமிழர்களது அங்கீகாரத்தை பேணிக்கொள்ளலாம்.

Tamil Heritage Month Contest forms

அதை எடுத்துரைத்தும் கூட இந்த அறிவகத்தின் அறிவிலிகள் செவிசாய்க்கவில்லை.

கனடாவில் தமிழர் மரபுரிமை மாதம் தை மாதம் , தைப் பொங்கல்   அங்கீகரிக்கப்பட்டிருக்கின்றது . உங்களுடைய பிள்ளைகளுக்கு வேற்று இன கலாச்சார நிகழ்வுகள் பற்றிய பாடங்களில் தைப் பொங்கல் பயிற்றுவிக்கப்படுவதில்லை. இதையும் நாம் கல்விச்சபைக்கு முறையிட்டோம்  அப்போது நீதன் சான் கல்விச் சபையில் தான் இருந்தார் ஆனால் எந்தப் பதிலும் இல்லை

பின்னர் கல்விச்சபை பாடசாலைகளில் அறிவுறுத்துவதாக மின்னஞ்சல் அனுப்பியிருந்தார்கள் அவை பாடசாலைகளில் பின்பற்றப்படுகின்றனவா என்பதை பெற்றோர் உங்கள் பிள்ளைகளிடம் கேட்டு ஊர்ஜிதப்படுத்தலாம்

ரொரன்ரோ சுற்ரறிக்கைகளில் தமிழ் அலட்சியம்

இதுவும் நாம் முறையிட்டு மாற்றியமைக்கப்பட்டது  இப்படி எதிலும் தமக்கு ஆதாயம் கிடைக்குமா  என்று பார்த்துச் செயற்படும் இந்த அமைப்புக்களும்  , தேசியம் பேசி   அரசியல் செய்யும்  இவர்களிடம் தமிழ் பற்றோ, இன பற்றோ கிடையாது வெறும் பதவி ,பணத்திற்காக கூலிக்கு மாரடிக்கின்றார்கள்.

ஒரு அடக்கப்படும் இனத்தின் விடுதலை வேண்டி போராடுபவர்கள் , விடுதலைப்புலிகளின் ஏக போகபிரதிநிதிகள் என்று சொல்லும் உலகத் தமிழ் அமைப்பினால் நடாத்தப்படும் கல்விக் கூடத்தில் தான் எத்தனை வஞ்சகம்.

அடுத்த தலைமுறைக்கு தமிழ், பண்பாடுகளைச் சேர்க்கின்றோம் என்பதெல்லாம் வெறும் வெளி வேசங்கள் என்பது இதற்கு மேலும் சொல்லித் தெரிய வேண்டியதில்லை

ஒரு தனிமனிதர்களால் செய்யக்கூடியவற்றைத் தானும் இந்த அமைப்புக்கள் செய்ய முற்படாதது இவர்கள் சுயலாபங்களுக்காகத் தான் என்று வெளிச்சம் போட்டுக்காட்டுகின்றன.

இவர்கள் எமது மக்களின் விடுதலைக்காக , அடுத்த சந்ததிக்காக என்று சொல்லி மாவீரர்களை விற்றுப் பிழைப்பு நடாத்துகின்றார்கள் அல்லது விபச்சாரம் செய்கின்றார்கள்.

நன்றி

பெற்றோர் ஒருவரின் ஆதங்கம்

எமது குழுமத்தின் எழுத்துருவாக்கதில்

வாக்களி தமிழா வாக்களி !

மிகவும் நீண்ட காலமாக எமது சமுதாயமானது நகர, மாகாண, மத்திய அரச மட்டங்களில் மிகவும் ஆர்வமுடன் கலந்து கொண்டு செயலாற்றி வருகின்றனர். இன்று நடக்கும் நகரசபைத் தேர்தலிலும் எமது தொண்டர்கள் பல வேட்பாளர்களுக்கான உதவிகளைச் செய்து அவர்களை வெற்றி பெறச் செய்வதற்கான முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றார்கள். பல நகர சபை முதல்வருக்கான வேட்பாளர்கள் தமிழ் மக்களிற்கான குறைகளை அறிந்து அதனை நிவர்த்தி செய்வோம் என உறுதி கூறி இருக்கின்றார்கள்.

மிகவும் நீண்ட காலமாக எமது சமுதாயமானது நகர, மாகாண, மத்திய அரச மட்டங்களில் மிகவும் ஆர்வமுடன் கலந்து கொண்டு செயலாற்றி வருகின்றனர். இன்று நடக்கும் நகரசபைத் தேர்தலிலும் எமது தொண்டர்கள் பல வேட்பாளர்களுக்கான உதவிகளைச் செய்து அவர்களை வெற்றி பெறச் செய்வதற்கான முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றார்கள். பல நகர சபை முதல்வருக்கான வேட்பாளர்கள் தமிழ் மக்களிற்கான குறைகளை அறிந்து அதனை நிவர்த்தி செய்வோம் என உறுதி கூறி இருக்கின்றார்கள்.

நகர முதல்வரும் நகரசபை உறுப்பினர்களுமே அடுத்த 4 வருடங்களுக்கும் நகரத்தின் முதன்மையான தேவை எது என்பதை தீர்மானிப்பவர்கள். குப்பை மற்றும் மீள்பாவனைக்குரிய பொருட்களை அகற்றல், நீர், வீதி, பொது நூல்நிலையங்கள், பூங்காக்கள், பொழுதுபோக்கு நிகழ்வுகள், போக்குவரத்து மற்றும் அவசர சேவைகள் (தீயணைப்பு, காவல்துறை, அவசர சிகிச்சை) கட்டட அனுமதி, குழந்தை பராமரிப்பு, முதியோர் பராமரிப்பு, போன்ற சேவைகளுக்காக நாம் எவ்வளவு சொத்து வரி செலுத்த வேண்டும் என்பதைப் போன்ற நகர சபையில் மேற்கொள்ளப்படும் பல தீர்மானங்கள் மூலம் எமது நாளாந்த வாழ்க்கையின் தராதரத்தை நிர்ணயிப்பதில் நகர சபைகள் மிகவும் முக்கிய இடத்தை வகிக்கின்றன. இன்று வாக்களிப்பதன் மூலம், எமது நகரத்திலும் சுற்றாடலிலும்; மேற்கொள்ள வேண்டிய செயற்பாடுகளுக்கு எமது அனுமதியை வழங்குகிறோம்.

இவ்வாறு இருக்கும் இந்த சூழலில் பொது மக்களாகிய நாங்கள் ஆற்றக்கூடிய முக்கிய கடமை இருக்கின்றது … அது தான் வாக்களிக்கும் ஜனநாயகக் கடமை. வாக்களிக்கும் தகுதி உள்ள ஒவ்வொரு தமிழனும் வாக்களிக்க வேண்டும். எங்கள் கருத்துக்களையும் விருப்பங்களையும் மிக முக்கிய அவசியமான தேவைகளையும் இதய சுத்தியுடன் கருத்தில் கொண்டு செயல்படக்கூடிய பல வேட்பாளர்களைத் தெரிவு செய்வதனூடாக அரசியல் செயற்பாடுகளை மாற்றியமைக்க வேண்டிய பொறுப்பு எம்மிடம் உள்ளது.

வாக்களிப்பது எமது குடியுரிமையும் சமுதாயக் கடமையும் ஆகும். எங்கள் முழுச் சமுதாயமும் எமது வாக்கைப் பயன்படுத்துவோமேயானால் நாங்கள் இந்த நாட்டில் அக்கறை உள்ளவர்கள் என்பதைக் காட்ட முடியும். வாக்களிப்பதனூடாக, யாரும் இனிமேலும் எம்மை அசட்டை செய்ய முடியாத, ஒரு உறுதியான விவேகமுள்ள அதிகாரம் மிகுந்த தமிழ் சமூகத்தை நாம் உருவாக்க முடியும்.

வாக்களிப்பதனூடாக அரசியல் நடைமுறையில் செல்வாக்கைச் செலுத்தக்கூடிய எமது தகுதியை நாம் காட்ட முடியும். எல்லாவிதமான அரசியல்வாதிகளும் எங்களை மேலும் மதிப்பது மட்டுமல்லாது எங்கள் தேவைகளையும் தங்கள் சொந்தத் தேவைகளாகக் கருதிச்செயற்படவும் தொடங்குவார்கள்.

அரசியல் செயற்பாடுகளில் துடிப்புடனும் மேலும் ஈடுபாட்டுடனும் செயற்படுவதனால் நாங்கள் பல சரியான உறுப்பினர்களை தெரிவு செய்து சரியான விகிதாசார முறையில் எம்மை அரசியலில் பிரதிநிதித்துவப்படுத்த முடியும்.

ஆகவே தான், இந்த நகரசபைத் தேர்தலில் நாங்கள் வாக்களிப்பது மிகவும் முக்கியமானதாகும்.

மேலதிக தொடர்புகளுக்கு: கனடியத் தமிழர் தேசிய அவை

தொலைபேசி: 416-830-7703 |

மின்னஞ்சல்: info@ncctcanada.ca

http://www.eelamview.com/2018/05/23/elect-vijay-thanigasalam/

http://www.eelamview.com/2018/05/23/pro-srilankan-sumi-shan/

முள்ளிவாய்க்காலில் ஒளிரும் சுடரை அணையாது பார்த்துக் கொள்வோமாக!

வடக்கின் நினைவேந்தலால் பாரிய பிரச்சனைகள் எழும் என்று எச்சரித்துள்ள முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச சில தமிழ் அரசியல்வாதிகளின் செயல்கள் இன்னொரு இரத்தக் களரிக்கே வழி வகுக்குமெனத் தெரிவித்திருக்கும் கூற்றை தமிழ் மக்களுக்கான பயமுறுத்தலாகப் பார்க்காது, சிங்கள பௌத்த இனவெறியினரை தமிழருக்கு எதிராக எழுச்சி கொள்ளச் செய்யும் அழைப்பாகவே பார்க்க வேண்டும்.

இவை அனைத்துமே எதிர்பார்த்தவைதான்!

முள்ளிவாய்க்காலில் மே 18ம் திகதி தமிழ் மக்கள் நினைவேந்தல் அனுஸ்டித்த வேளையில், அடுத்து என்னவெல்லாம் நடைபெறும் என்று எதிர்பார்த்தோமோ அவையெல்லாம் அச்சொட்டாக அப்படியே நடைபெறுகின்றன.

எதிர்பார்க்கப்பட்டவைகளில் முக்கியமானவையாக இரண்டினைக் குறிப்பிடலாம்.

வடமாகாணசபைத் தலைவரை குறிவைத்து, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களைச் சீண்டிவிடும் செயற்பாடுகள் சிலரால் திட்டமிட்டு மேற்கொள்ளப்படுவது நன்கு தெரிகிறது.

சிங்கள பேரினவாத தரப்பிலிருந்து ஆவேசக் கண்டனங்களும் தமிழ் இனத்துவேச பரப்புரைகளும் வருமென்பது எதிர்பார்க்கப்பட்டதே.

ராஜபக்ச சகோதரர்களிடமிருந்தே காரசாரமான அறிக்கைகள் வருமென்பது பலராலும் எதிர்பார்க்கப்பட்டதுபோல அப்படியே நடைபெறுகின்றது.

அதேசமயம் வேறு சில சில்லறைச் சம்பவங்களும் கால தேவையை ஒட்டி இடம்பெறுகின்றன.

முள்ளிவாய்க்கால் யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது வாய் மூடி மௌனித்திருந்த விக்னேஸ்வரன், இன்று எதற்காக இதுபற்றி அதிகம் பேசுகிறார் என்று கேள்வி எழுப்பியுள்ளார் அண்மையில் அமைச்சரான விஜேதாச ராஜபக்ச.

அடுத்து வரப்போகின்ற மாகாணசபைத் தேர்தலுக்கான முன்னுரையா என்ற பாணியில் இவரது கேள்வி அமைந்துள்ளது.

கடந்த மூன்று வருடங்களாக முள்ளிவாய்க்காலில் நினைவேந்தலை வடமாகாண சபையே பொறுப்பேற்று நடத்தியது என்பதையும், முதலமைச்சரே சுடரேற்றி சிறப்புரை நிகழ்த்தினார் என்பதையும் அமைச்சர் விஜேதாச அறியவில்லைப் போலும்.

வடக்கில் சில நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள சென்றவேளையில், அங்கு உரைநிகழ்த்தும்போதே அவர் இவ்விடயங்களைக் குறிப்பிட்டுள்ளார்.

கூட்டமைப்பின் பேச்சாளரான எம்.ஏ.சுமந்திரனின் அழைப்பில் அமைச்சர் விஜேதாச யாழ்ப்பாணம் சென்றிருந்தமையால், சுமந்திரனை மகிழ்விப்பதற்காக முதலமைச்சர் பற்றி ஏதாவது தெரிவிக்க வேண்டிய கட்டாயம் அமைச்சர் விஜேதாசவுக்கு ஏற்பட்டிருக்கலாம்.

தாயகத் தமிழர்கள் பற்றி இன்று அடிக்கடி அதிகம் பேசுபவராக அமைச்சர் மனோ கணேசன் காணப்படுகிறார்.

விடுதலைப் புலிகளின் தலைமையையும் உரசிப் பார்க்க இவர் தவறுவதில்லை.

2002 யுத்த நிறுத்த காலத்தில் வன்னிக்கு விரைந்து தமிழரின் தேசியத் தலைவருடன் கைலாகு கொடுத்துப் படமெடுத்து, அதனைச் சகல ஊடகங்களிலும் பதிவிட்டு புளகாங்கிதம் கொண்ட இவர், இப்போது நரம்பில்லாத நாக்கை நான்கு பக்கமும் சுழற்றி தமிழரின் விடுதலைப் போராட்டத்தை நக்கல் அடிக்கிறார்.

அன்று ஓடி ஒளிந்தவர்கள் இன்று தீபமேற்றுகிறார்கள் என்று மனோ கணேசன் கூறியது, யுத்தத்தின்போது தமது உறவுகளை இழந்தவர்களையும் தொலைத்தவர்களையும் மனசு நோகடிக்கச் செய்யும் வார்த்தைப் பிரயோகம் என்பதை சிலவேளை அவரால் மாலை மயக்க வேளைகளில் உணர முடியாதிருக்கலாம்.

யுத்தத்தின்போது படையினரால் பொதுமக்கள் கொல்லப்பட்டனர் என்று கருத்து வெளியிட்ட அமைச்சர் ராஜித சேனரட்ன மீது, அவரது வம்சத்தினர் கற்களை வீச ஆரம்பித்துள்ளனர்.

யுத்தத்தை முன்னின்று நடத்தியவர்களில் ஒருவரான ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரி மேஜர் ஜெனரல் கமல் குணரட்ன அமைச்சரை நோக்கி ஒரு கேள்வி எழுப்பியுள்ளார்.

“இராணுவம் தமிழ் மக்களைக் கொலை செய்ததை ராஜித சேனரட்ன பார்த்தாரா” என்பதுதான் கமல் குணரட்னவின் கேள்வி.

அமைச்சர் ராஜித சேனரட்ன நேரில் பார்த்தாரா இல்லையா என்ற கேள்விக்கு அப்பால், இராணுவம் மக்களைக் கொலை செய்தது என்ற தனது கூற்றை இன்னமும் அவர் மீளப் பெறவில்லையென்பதுதான் இங்கு கவனிக்கப்பட வேண்டியது.

போர்க்களத்தை கொலைக்களமாக்கி பல்லாயிரக்கணக்கானவர்களை பலியெடுத்த இராணுவ அதிகாரிகளில் முக்கியமானவரான கமல் குணரட்ன, தமது மனச்சாட்சியைத் தொட்டுப்பார்த்து அமைச்சரின் கேள்விக்கான பதிலை பெற்றுக் கொள்ளலாம்.

சிங்களத் தரப்பில் முக்கியமான இருவரின் கருத்துகளை இங்கு பார்ப்போம். ஒருவர் முன்னாள் ஜனாதிபதி. அடுத்தவர் எதிர்காலத்தில் ஜனாதிபதியாக வரத்துடிப்பவர்.

1977ம் ஆண்டுக் காலகட்டத்துக்கு நாட்டின் நிலைமை தற்போது சென்றுள்ளது என்று பயமுறுத்தும் கோதபாய ராஜபக்ச, புலிகளை நினைவுகூரும் நடவடிக்கைகளை அனுமதிப்பது தமிழ் மக்களிடையே ஆயுதப் போராட்டம் ஒன்றை மீண்டும் உருவாக்கும் என்று சுட்டியுள்ளார்.

நல்லிணக்கம் என்ற பெயரில் பிரிவினைக்கு இடம்கொடுத்து, பயங்கரவாதத்தை வளர்த்தெடுக்க நினைவுத்தூபிகளை எழுப்பவும் அரசாங்கம் அனுமதியளித்துள்ளது என்று கோதபாய சிங்கள மக்களுக்கு இனவாதம் ஓதுகின்றார்.

வடக்கின் நினைவேந்தலால் பாரிய பிரச்சனைகள் எழும் என்று எச்சரித்துள்ள முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, சில தமிழ் அரசியல்வாதிகளின் செயல்கள் இன்னொரு இரத்தக் களரிக்கே வழி வகுக்குமென்றும் எடுத்துக் கூறியுள்ளார்.

இந்தக் கூற்றை தமிழ் மக்களுக்கான பயமுறுத்தலாகப் பார்க்காது, சிங்கள பௌத்த இனவெறியினரை தமிழருக்கு எதிராக எழுச்சி கொள்ளச் செய்யும் அழைப்பாகவே பார்க்க வேண்டும்.

மகிந்த, கோதபாய உட்பட சில சிங்கள அரசியல்வாதிகளும், முன்னாள் இராணுவ அதிகாரிகளும் மட்டுமே முள்ளிவாய்க்கால் நினைவேந்தலைக் கையிலெடுத்து இனவாதத்தை உசுப்பிவிட முன்வந்துள்ளனரே தவிர, சிங்கள மக்கள் மத்தியிலிருந்து அவ்வகையான உணர்வலைகள் எதுவும் இதுவரை எழவில்லை.

போரின்போது விடுதலைப் புலிகளுக்கு பயந்து பெரும்பாலான அரசியல்வாதிகள் அமைதியாக இருந்தனர். நாங்கள் போரை முடிவுக்குக் கொண்டு வந்ததும் அந்த அரசியல்வாதிகள் கதாநாயகர்களாகி விட்டனர் என்ற மகிந்த ராஜபக்சவின் கூற்று இங்கே கவனம் பெறுகின்றது.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னெடுப்பதற்கோ அல்லது அதில் பங்கேற்றவர்களுக்கு இராணுவம் குளிர்பானம் வழங்கவோ அரசாங்கம் அனுமதி அளித்திருக்கக்கூடாது என்று தெற்கிலுள்ள வானொலி நிலையமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் கோதபாய தெரிவித்ததன் அர்த்தம் என்ன?

உலகின் கண்களுக்கு தங்களை மனிதாபிமானிகள் என்று காட்ட இராணுவம் குளிர்பானம் வழங்கியதை கோதபாயவின் கண்கள் இனவெறியில் நோக்குவதையே இது காட்டுகிறது.

மறுபுறத்தில் வடமாகாணசபை முதலமைச்சருக்கும் யாழ். பல்கலைக்கழக மாணவர்களுக்குமிடையே குழப்பத்தை ஏற்படுத்த தமிழர் தரப்பில் சிலர் முயன்று வருகின்றனர்.

ஒருதரப்பினர் பல்கலைக்கழக மாணவர்மீது குற்றப்பத்திரிகை வாசிக்கின்றனர்.

இன்னொரு தரப்பினர் வடமாகாண முதலமைச்சரை இதே குற்றச்சாட்டில் இழுத்து வீழ்த்தப் பார்க்கின்றனர்.

நினைவேந்தல் நடைபெற்ற பகுதியில் பல்கலைக்கழக மாணவர் முதல்நாள் இரவு மது அருந்திக் கும்மாளமிட்டதாக திட்டமிட்ட பொய்ப்பரப்புரை நடைபெறுகிறது.

இதற்காக அங்குள்ள ஒரு வீட்டின் பின்பகுதியில் சிதறிக் கிடந்த மதுப்போத்தல்களின் படங்களையும் வெளியிட்டு வருகிறார்கள்.

இவைகளை விளக்கி பல்கலைக்கழக மாணவர் வெளியிட்ட அறிக்கையை திட்டமிட்டு இருட்டடிப்புச் செய்கின்றனர்.

உணர்வுபூர்வமாக மிகுந்த கட்டுப்பாட்டுடன் இடம்பெற்ற நினைவேந்தல், அடுத்த தேர்தலை எதிர்நோக்கியிருக்கும் சிலருக்கு வயிற்றுளைவை ஏற்படுத்தியுள்ளது.

முதலமைச்சரையும் பல்கலைக்கழக மாணவர்களையும் நல்லுறவில் தொடரவிடாது பார்த்துக் கொள்வதே இவர்களின் இலக்காகவுள்ளது.

இந்தத் தீயசக்திகளையிட்டு ஒவ்வொருவரும் விழிப்போடிருக்க வேண்டும்.

தெற்கில் ஆட்சிகளும் காட்சிகளும் மாறினாலும், முள்ளிவாய்க்காலில் ஒளிர ஆரம்பித்திருக்கும் நினைவேந்தல் சுடரை அணையவிடாது பார்த்துக் கொள்வது ஒவ்வொருவரதும் தார்மிகக் கடமை.

பனங்காட்டான்

மோதும் சீமான் ; திருமுருகன் காந்தி ; பின்னணியும் – காரணமும்.!


ஆயிரம், ஆயிரம் ஆண்டுகளாய் சக மனிதர்களாகவே நடத்தப்படாத மக்களை, நாங்களும் மனிதர்கள் என தலை நிமிர்ந்து நடைபோட வைத்தது திராவிட இயக்கம் என்பார் பேரறிஞர் அண்ணா. ஆம், ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும் திராவிட இயக்கங்கள் இங்கே சாதித்தவை ஏராளம்.

திராவிட அரசியல் எந்த அளவிற்கு இந்த மண்ணில் ஆழ வேரூன்றியுள்ளதோ, அதே அளவுக்கு இங்கு தமிழ்த்தேசிய அரசியலும் வளர்த்தெடுக்கப்பட்ட வேண்டும் என்ற முயற்சி அப்போதிலிருந்தே பலரால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால், நாங்கள் தமிழ்த்தேசிய பாதையில் செல்கிறோம் என அறிவித்து கிளம்பிய பலரும் மீண்டும் திராவிட அரசியல் முகாமிலேயே தஞ்சமடைந்துள்ளனர். அதற்கான காரணம், திராவிட அரசியலை அண்ணா, கலைஞர் போன்ற தலைவர்கள் முன்னெடுத்ததுவும் – திராவிட இயக்கத்தின் அடிப்படை கூறாக தமிழ்த்தேசியம் அமைந்திருந்ததுவும் தான்.

காலப்போக்கில் தேர்தல் அரசியலில் திமுக, அதிமுக மேற்கொண்ட சில நடவடிக்கைகள் மக்களை முகம் சுளிக்க வைத்ததுடன், திராவிட கட்சிகளே இப்படிதான் என எண்ணவைத்துவிட்டன. ஆனால், அது திராவிட கட்சிகளின் தோல்வியே அன்றி. திராவிட இயக்கத்தின் தோல்வி அல்ல.

இந்த நிலையில் தான் தற்போது தமிழ்த்தேசிய அரசியல் மெல்ல தமிழக அரசியல் களத்தில் மேலெழுந்துவருகிறது. தமிழ்த்தேசிய அரசியலை முன்னெடுப்பவர்களில், நாம் தமிழர் கட்சியினர் திராவிட அரசியலால் இழந்த உரிமைகள் குறித்தும், அடைந்த துயரங்கள் குறித்தும் நீண்ட பட்டியல்களை மேடைகளில் பட்டியலிட்டுவருவதுடன், எண்ணற்ற இன்னல்களில் உழல்கிற மக்களை தங்களால் மீட்டெடுக்க முடியும் என்றும் தெரிவித்து வருகின்றனர். நல்ல நோக்கம் தான். ஆனால், தமிழ்த்தேசியத்தை நேசிப்பவர்களையும், அதற்காக பாடுபடுபவர்களுடனும் அவர்கள் இணைய மறுப்பதுடன், அத்தகையோரை அதிகளவில் விமர்சனமும் செய்துவருகின்றனர்.

இங்கே நாம் கவனிக்க வேண்டிய ஒன்று தமிழ்த்தேசியத்தை தனது கட்சியின் நோக்கங்களில் ஒன்றாக அறிவித்துள்ள விசிக தலைவர் திருமாவோ, தமிழ்த்தேசியத்தை சிற்றூர்களுக்கும் கொண்டுசென்ற வைகோவோ, இயக்க அரசியலை முன்னெடுக்கும் திருமுருகன் காந்தியோ, கொளத்தூர் மணியோ, கு.ராமகிருட்டிணனோ சீமானோடு சேர்ந்து செயல்பட முன்வரவில்லை என்பது.

காரணம், மேற்கண்டவர்கள் தமிழ்த்தேசிய தலைவரிடம் நேரிடையான அறிமுகம் ஆனவர்கள். அத்துடன் அவரின் அன்பினை பெற்றவர்கள் திருமுருகன் காந்தியை தவிர்த்து. அத்தகையோர் சீமானிடம் இருந்து விலகி நிற்கிற காரணம் தமிழ்த்தேசியத்தை தமிழகத்தில் பேச வேண்டிய ஆள் தான் ஒருவனே என எதேச்சதிகார போக்கில் அவர் செயல்படுவதுதான்.

தமிழ்த்தேசியம் பேசும் இளைஞர்களின் தலைமைகளாக உலா வரும் சீமான், திருமுருகன் காந்திக்கும் இடையேயான வேறுபடும் மோதலும் இங்கேதான் துவங்குகிறது. இயன்றவரை ஜனநாயக சக்திகளை சேர்த்து கொண்டு நடைபோட முயலும் திருமுருகன் காந்தி – அதுவெல்லாம் கிடையாது என அனைவரையும் சகட்டு மேனிக்கு விமர்சித்து தள்ளும் சீமான். இதன் காரணத்தினாலேயே இவர்களுக்கு இடையே ஒற்றுமை நிலவவில்லை என்பதுவும் உண்மை.

காலத்தின் தேவையான தமிழ்த்தேசியத்தை கட்டியமைத்திட வேண்டுமேயானால் வேண்டியது நட்பு சக்திகளுடனான ஒற்றுமை. அதை விடுத்து தேர்தல் அரசியல் லாபங்களை மனதில் கொண்டு செயல்பட்டால் இலட்சிய நோக்கங்கள் சாத்தியப்படுமா என்பது ஐயமே.

முள்ளிவாய்க்காலில் சர்ச்சை; நடந்தது என்ன?

யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட தினமாகிய மே 18 ஆம் நாள் நாட்டைஅரசியல் உணர்வு ரீதியாக இரு துருவங்களாக்கியிருக்கின்றது. இன ஐக்கியத்திற்கும், அமைதி, சமாதானத்திற்கும் வழி வகுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட யுத்த முடிவு தினமானது, அந்த எதிர்பார்ப்பை நிறைவேற்றத் தவறிவிட்டது.

அந்த தினம் நேர் முரணான இரு முகத்தோற்றத்தைக் கொண்டிருக்கின்றது. நாட்டின் பெரும்பான்மை இன மக்கள் மத்தியில் அது யுத்த வெற்றி தினமாகக் கொண்டாடப்படுகின்றது. ஆனால் வடக்கிலும் கிழக்கிலும், நாட்டின் ஏனைய பிரதேசங்களில் உள்ள தமிழ் மக்கள் மனங்களிலும் அந்த தினம் ஆழ்ந்த துயரத்தைத் தரும் ஒரு சோக தினமாக – துக்கதினமாக அமைந்திருக்கின்றது.

பயங்கரவாதம் என அரசுகளினால் வர்ணிக்கப்பட்ட தமிழ் மக்களின் அரசியல் உரிமைக்கான போராட்;டத்தை, நாட்டின் தென்பகுதி இன்னும் பயங்கரவாதச் செயற்பாடாகவே நோக்குகின்றது. அடக்குமுறைகளில் இருந்து விடுதலை பெறுவதற்கும், அரசியல் உரிமையை வென்றெடுப்பதற்குமாக நடத்தப்பட்ட அந்த யுத்தம் முள்ளவாய்க்காலில் கோரமான முறையில் முடிவுறுத்தப்பட்டது.

ஆயுதம் எந்தாத அப்பாவிப் பொதுமக்கள் கொத்துக் கொத்தாகக் கொன்றொழிக்கப்பட்ட பேரனர்த்தம் அங்கு நிகழ்த்தப்பட்டது. உணவுக்கும் மருந்துக்கும் வழியின்றி வாடிய மக்கள் மீது மிக மோசமான முறையில் எறிகணை தாக்குதல்களும், பீரங்கித் தாக்குதல்களும், விமானக்குண்டுத் தாக்குதல்களும் நடத்தப்பட்டன. இந்த மும்முனைத் தாக்குதலில் பலர் கோரமாகக் கொல்லப்பட்டார்கள். மழையென பொழிந்த துப்பாக்கி வேட்டுக்களும் மக்களை வேட்டையாடியிருந்தன.

யுத்தம் முடிவுக்கு வந்ததுகூட தெரியாத நிலையில், பாதுகாப்புக்காக பதுங்கு குழிகளில் மறைந்திருந்தபோது, பலர் அந்தக் குழிகளிலேயே சுட்டுக் கொல்லப்பட்ட பேரவலமும் நடைபெற்றுள்ளது. இந்த மனிதப் பேரவலத்தின்போது முள்ளிவாய்க்காலிலும், அதனைச் சூழ்ந்த பிரதேசங்களிலும் மக்கள் இரத்த வெள்ளத்தில் மிதந்தார்கள். கடலோரப் பிரதேசமாகிய அந்தப் பகுதி இரத்தத்தில் தோய்ந்தது. மனித அவயவங்களும் இறந்த உடல்களும் அங்கு சிதறிக்கிடந்தன. ஆண், பெண், குழந்தைகள், முதியவர்கள் என்ற பால் நிலை பாராமலும், வயது வித்தியாசமின்றியும் மக்கள் கொல்லப்பட்டார்கள். நேரடியாகக் கண்ட பலர் இந்தத் தகவல்களைத் தெரிவித்திருக்கின்றனர்.

இனவாத அரசியல் மனோபாவத்தில் மாற்றமில்லை

முள்ளிவாய்க்காலில் நிகழ்ந்த சம்பவங்கள் மிகக் கோரமான நிகழ்வாக வரலாற்றில் பதிவாகியிருக்கின்றது. இந்த அவலத்தில் படுகாயமடைந்த பலர், உடனடியான உரிய வைத்திய வசதிகள் கிடைக்காத நிலையில் புண்கள் சிதழ் பிடித்து, சிலருக்குப் புழுக்கள் வைத்த மிக மோசமான துன்ப நிலைக்கு ஆளாகி, மறுபிறவி எடுத்து, உயிர்தப்பி உள்ளனர். முள்ளிவாய்க்கால் சம்பவங்களில் தெய்வாதீனமாக உயிர் தப்பிய பலர், காயமடைந்தவர்களுடன் அங்கு நிகழ்ந்த நிகழ்வுகளின் நேரடி சாட்சியாக இருக்கின்றனர். உயிர் தப்பியவர்கள், குண்டுத் தாக்குதல்களில் கொல்லப்பட்ட தமது இரத்த உறவினர்களது சடலங்களை எடுத்;து அடக்கம் செய்யக்கூட முடியாத நிலையில் தமது உயிர்களைப் பாதுகாப்பதற்காக ஓடி வந்திருந்தார்கள்.

உயிர்ப்பாதுகாப்புக்கு வழியின்றி, ஏதிலிகளாகத் தவித்த நிலையில் மக்கள் கொல்லப்பட்ட துயர சம்பங்களை நினைவுகூர்ந்து, அங்கு இறந்தவர்களுக்காக அஞ்சலி; செலுத்தும் நாளாகவே மே 18 ஆம் திகதி வடக்கிலும் கிழக்கிலும் அனுட்டிக்கப்படுகின்றது. ஆனால், முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்டவர்களை நினைவுகூர்வதென்பது, தென்னிலங்கையில் உள்ள பெரும்பான்மையான மக்களுக்கும், விரல் விட்டு எண்ணக்கூடியவர்கள் தவிர்ந்த ஏனைய அரசியல்வாதிகளுக்கும் விடுதலைப்புலிகளை நினைவுகூர்வதற்கான நிகழ்வாகவே தெரிகின்றது.

மே 18 ஆம் திகதி விடுதலைப்புலிகளையே தமிழ் மக்கள் நினைகூர்கின்றார்கள். இதன் மூலம் யுத்தத்தில் அழிக்கப்பட்ட விடுதலைப்புலிகளை மீண்டும் உயிர்ப்பிப்பதற்கான முயற்சிகளையே அவர்கள் மேற்கொள்கின்றார்கள் என்று நிலைமையைத் திரித்துக்கூறி இனவாத ரீதியிலான பெரியதொரு பிரசாரமே தென்பகுதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

விடுதலைப்புலிகளுக்கும் இராணுவத்தினருக்கும் இடையிலேயே யுத்த மோதல்கள் இடம்பெற்றன. பயங்கரவாதிகளாக மிகைப்படுத்தி உருக்காட்டப்பட்ட விடுதலைப்புலிகளுக்கு எதிராகவே இராணுவத்தினர் போரிட்டதாகவும், அந்த வெல்ல முடியாத எதிரிகளை, உயிர்த்தியாகம் செய்து அவர்கள்; வெற்றி கொண்டிருப்பதாகவும் பெருமளவிலான பிரசாரத்தை அன்றைய அரசு மேள்கொண்டிருந்தது. இதனால், விடுதலைப்புலிகளை இராணுவ ரீதியாகத் தோற்கடித்த இராணுவத்தினர் சாகசங்கள் புரிந்த வெற்றிக்தாநாயகர்களாகவே சிங்கள மக்கள் மத்தியில் கருதப்படுகின்றார்கள். இனவாத ரீதியிலான இந்த அரசியல் மனோபாவம் அல்லது அரசியல் உளவியல், யுத்தம் முடிவுக்கு வந்து ஒன்பது வருடங்கள் நிறைவடைந்துள்ள போதிலும் இன்னும் மாற்றமடையவில்லை.

ஆட்சி மாற்றத்தின் பின்னர் முள்ளிவாய்க்காலில் நினைவேந்தல் நிகழ்வுகளைச் செய்வதற்கான அனுமதி வழங்கப்பட்டு முன்னைய கெடுபிடிகள் நீக்கப்பட்டிருந்த போதிலும் இந்த வருடம் நிலைமைகள் தலைகீழாக நேரிட்டிருக்கின்றது. தடைகள் இல்லாத போதிலும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் விடுதலைப்புலிகளே நினைவுகூரப்பட்டார்கள் என தெரிவித்து, அந்த நிகழ்வை நடத்திய வடமாகாண சபையை உடனடியாகக் கலைக்க வேண்டும் முதலமைச்சரைக் கைது செய்ய வேண்டும் என்ற கூக்குரல்கள் நாட்டின் தென்பகுதியில் எழுந்திருக்கின்றன.

யுத்தத்தின் பின்னர், இனங்களுக்கிடையில் ஐக்கியத்தையும், சமாதானத்தையும் சகவாழ்வையும் ஏற்படுத்துவதற்காக ஒரு பக்கம் நல்லிணக்க முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன. ஆயினும் மறுபக்கத்தில், அதற்கு நேர்மாறான இனவாத அரசியல் உளவியலை எந்த அளவுக்கு வளர்த்தெடுக்க முடியுமோ அந்த அளவுக்கு வளர்த்தெடுப்பதற்கான பிரசாரமும், அதற்கிசைவான நடவடிக்கைகளும் மே 18 ஆம் திகதிய நிகழ்வுகளின் பின்னர் தீவிரமாக முன்னெடுக்கப்படுகின்றன. இதனால், பாடுவது தேவாரம், இடிப்பது சிவன்கோவில் என்ற நிலைமையே நாட்டில் உருவாகியிருக்கின்றது.

நினைவேந்தலை நடத்துவதில் நிலவிய போட்டி

இத்தகைய ஒரு பின்னணியில்தான், 2018 ஆம் ஆண்டின் மே 18 ஆம் நாள் வடக்கில் துயரம் தோய்ந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நடந்தேறியிருக்கின்றது. முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின்போது, பொருந்தாத வகையில் அரசியல் பேசப்பட்டதாகக் குற்றஞ்சாட்டி, அங்கு பிரதான உரையாற்றிய தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு எதிராகக் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

தமிழ் மக்களின் மிக மோசமான துயரநாளாகிய மே 18 ஆம் நாள், அதுவும் அந்தத் துயரங்கள் நடந்தேறிய முள்ளிவாய்க்கால் மண்ணில் பெரும் எண்ணிக்கையானவர்கள் உயிர்த்தியாகம் செய்த இடத்தில்; வடமாகாண சபையின் ஏற்பாட்டில் நினைவேந்தல் நிகழ்வு ஓர் அரசியல் நிகழ்வாகவே நடத்தப்பட்டது என்ற தோற்றப்பாட்டை அன்றைய நிகழ்வில் இடம்பெற்ற குழப்ப நிலைமை ஏற்படுத்தியிருந்தது.

இதனையடுத்து நடப்பு வருடமாகிய 2018 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை அரசியல் கலப்பற்ற நிகழ்வாக நடத்த வேண்டும் என்ற எண்ணம் பெரும்பாலானவர்களுடைய மனங்களில் முனைப்பு பெற்றிருந்தது. அதற்கு உருவம் செயலுருவம் கொடுப்பதற்கான முயற்சிகள் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் மேற்கொள்ளப்பட்டிருந்தன. முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னம் அமைந்துள்ள வளாகத்தையும் சிரமாதானத்தின் மூலம் யாழ் பல்கலைக்கழக மாணவர்களே சுத்தம் செய்தனர். அத்துடன், இம்முறை நாங்களே முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை நடத்தி முடிப்போம் என்று யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் அறிக்கை விட்டிருந்தனர். அவர்களின் முயற்சிக்கு பொது அமைப்புக்களும் வேறு சில அரசியல் தரப்புக்களைச் சேர்ந்தவர்களும் ஒத்துழைப்பு வழங்கியிருந்தனர்.

ஆயினும் வடமாகாணசபையே தொடர்ச்சியாக முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை நடத்தி வருகின்றது. அதன் அடிப்படையில் இம்முறையும் தாங்களே அதனை நடத்தப் போவதாக மாகாண சபையினர் அறிவித்திருந்தனர். ஆயினும் அரசியல்வாதிகளுக்கு இம்முறை இடமளிக்கப் போவதில்லை என்று யாழ் பல்கலைக்கழக மாணவர்; ஒன்றியம் உறுதியாக இருந்தது. தங்களாலேயே நினைவேந்தல் நடத்தப்படும் என்ற நிலைப்பாட்டையும் அது விட்டுக்கொடுக்கவில்லை. இருப்பினும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை இம்முறை யார் செய்யப் போகின்றார்கள் என்பதை அறிந்து கொள்வதில், பொதுமக்களையும் அரசியல்வாதிகள் உள்ளிட்ட ஏனைய தரப்பினரையும் ஆர்வம் மேலிடச் செய்யும் அளவு, இரு தரப்புக்கும் இடையிலான இழுபறி நிலைமை காணப்பட்டது. இறுதியில் ஒருவாறு இரு தரப்பினரும் இணைந்து முதலமைச்சரின் தலைமையில் நிகழ்வை நடத்துவது என்றும், நிகழ்வை நடத்துவதில் பங்களிப்பு செய்வதற்கு முன்வந்த முன்னாள் போராளிகளையும் இணைத்துக் கொண்டு செயற்படுவது என்றும் முடிவாகியது.

என்ன நடந்தது?

நினைவேந்தல் நிகழ்வுக்கான இறுதி ஆயத்தங்களில் முன்ளாள் போராளிகளும், பல்லைக்கழக மாணவர்களும் இணைந்து ஈடுபடுவது என்ற முடிவுக்கு அமைய நினைவேந்தல் முற்றத்தில் செய்யப்பட வேண்டிய ஒழுங்கமைப்பு வேலைகளில் முன்னாள் போராளிகள் மும்முரமாக ஈடுபட்டிருந்தனர். பல்கலைக்கழக மாணவர்களும் அதில் பங்கேற்கச் சென்றிருந்தனர். ஆயினும் பல்கலைக்கழக மாணவர்களே நினைவேந்தல் நிகழ்வை ஆக்கிரமித்திருந்ததைக் காண முடிந்தது.

நினைவுச் சின்னம் அமைந்துள்ள இடத்தைச் சூழ்ந்து, சீருடையிலான ஓர் அணி போன்று கறுத்த உடையணிந்த பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் நின்றிருந்தனர். நினைவுச் சின்னத்திற்குப் பாதுகாப்பு வழங்கவா அல்லது அந்த நிகழ்வுக்குத் தலைமை தாங்கிய முதலமைச்சருக்குப் பாதுகாப்பு வழங்கவா அவர்கள் நின்றிருந்தனர் என்று கூடியிருந்தவர்கள் மனங்களில் கேள்வி எழும் வகையில் அந்தச் சூழல் அமைந்திருந்தது.

நிகழ்வு என்னவோ முதலமைச்சரின் தலைமையில்தான் நடந்தது என்றாலும், யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவரே தலைமை தாங்கி இருந்ததையும், அவரை மையமாகக் கொண்டு பல்கலைக்கழக கறுத்த சீருடையில் காணப்பட்ட மாணவர்கள் செயற்பட்டதையும், சூழ்ந்திருந்தவர்களினால் விசேடமாக அவதானிக்காமல் இருக்க முடியவில்லை.

முதலமைச்சருடன் நினைவுச் சின்னம் அமைந்துள்ள இடத்திற்குச் சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவுக்கு பல்கலைக்கழக மாணவர்கள் அனுமதி வழங்கவில்லை. அரசியல்வாதிகளுக்கு இடமளிக்கப்பட மாட்டாது என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்ததன் காரணமாகவோ என்னவோ நினைவேந்தல் முற்றத்திற்கு வருகை தந்திருந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள் உள்ளிட்ட அரசியல் முக்கியஸ்தர்கள் எவரும் வேலி வடிவத்தில் பாதுகாக்கப்பட்டிருந்த நினைவுச் சின்னத்திற்கு அருகில் செல்லவில்லை.

பதுங்கு குழிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் ஒன்றில், 2009 ஆம் ஆண்டு மே மாதம் 15 ஆம் திகதி தனது பெற்றோரையும், உடனிருந்த மாமாவையும் கோரமான முறையில் பறிகொடுத்து, விபரம் அறியாத குழந்தைப் பருவத்தில் தானும் காயமடைந்தவரான கே.விஜிதா, ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்தவாறு பிரதான நினைவேந்தல் சுடரை ஏற்றினார. அந்த சம்பவத்தில் அவருடன் இருந்த இளைய சகோதரன் தெய்வாதீனமாக உயிர்தப்பியிருந்தார்.

பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவரிடமிருந்து பெற்ற சுடரை, முதலமைச்சர் கையளிக்க, பெற்று பிரதான சுடர் ஏற்றப்பட்டது, முதலாவதாக விஜிதா மலர் அஞ்சலி செலுத்தியதைத் தொடர்ந்து முதலமைச்சர் விக்னேஸ்வரன் மலரஞ்சலி செலுத்தினார். பிரதான சுடரேற்றப்பட்டபோது, முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னம் அமைந்துள்ள வளாகத்தில் திட்டமிடப்பட்ட வகையில் சீராக நிறுவப்பட்டிருந்த இடங்களில் இறுதி யுத்தத்தின்போதும், யுத்தச் சூழலிலும் பலியாகிப்போனவர்களின் உறவினர்கள் கண்ணீர் சிந்தி அழுது அரற்றி உணர்வு மேலிட சுடரேற்றி அஞ்சலி செலுத்தினர்.

சுடரேற்றி மலர் அஞ்கலி செலுத்தப்பட்டதும், முதலமைச்சர் உரையாற்றினார். நினைவுச் சின்னத்தின் அருகில் எந்த இடத்தில் இருந்து அவர் உரையாற்றுவது அதற்கான மேசையை எவ்விடத்தி;ல் வைப்பது என்பதில் அங்கு குழுமியிருந்த மாணவர்கள் தடுமாறிக்கொண்டிருந்தார்கள். அவிடத்தில் சூழ்ந்திருந்த செய்தியாளர்கள் முதலசை;சருடைய உரையைத் தெளிவாகப் பதிவு செய்வதற்கும் காணொளி மற்றும் புகைப்படம் எடுப்பதற்கும் சிரமம் அடைய நேர்ந்திருந்தது. முதலமைச்சர் உரையாற்றுவதற்கான ஒலிவாங்கியை எங்கு வைப்பது என்பதில் அவர்களும் தீவிர அக்கறை காட்டினார்கள். இதனால் முதலமைச்சரின் உரை இடம்பெறுவதற்கு சீரான ஏற்பாடின்றி, சில நிமிடங்கள் தாமதமாகின. உணர்வுபூர்வமாக சோகம் சூழ்ந்த அந்த இடம் உரையாற்றுவதற்கான ஏற்பாட்டுக்காக இடறிக்கொண்டிருந்தது.

இதனால்தானோ என்னவோ சுடரேற்றி மலரஞ்சலி செலுத்தியபோதிலும், உயிரிழந்தவர்களின் ஆன்ம சாந்திக்கான அகவணக்கம் செய்யப்படவில்லை. நிகழ்வுகளை ஒழுங்கமைந்திருந்த பல்கலைக்கழக மாணவர்கள் அதற்கான நிகழ்ச்சி நிரல் இல்லாமல் அலைமோதியதன் விளைவாகவே இதனைப் பார்க்க முடிந்தது.

இத்தகைய ஒரு நிலையிலேயே முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னம் அமைந்துள்ள இடத்தில் இருந்து செயற்பட்டிருந்த முன்னாள் போராளியான துளசி, அந்த இடத்தில் இருந்து பல்கலைக்கழக மாணவர்கள் சிலரால் தள்ளிச் சென்று வெளியேற்றப்பட்டார். இதனை முதலமைச்சர் கவனித்தாரோ இல்லையோ தெரியவில்லை. ஆனால், அஞ்சலி நிகழ்வில் கூட்டாகப் பங்கேற்றிருந்த முக்கியமான ஒருவர் அந்த இடத்தில் இருந்து இங்கிதமில்லாத முறையில் வெளியேற்றப்பட்டதைக் கண்டுகொண்டதாகவும் தெரியவில்லை. இந்த சம்பவம் பலரையும் மனம் நோகச் செய்திருந்தது. சீற்றடையவும் செய்திருந்தது. இருப்பினும் அங்கிருந்து வெளியேற்றப்பட்ட துளசி உட்பட அனைவரும் அமைதி காத்தனர். துயரம் தோய்ந்த அந்த நிகழ்வில் தங்களால் குழப்பம் ஏற்பட்டது அல்லது சலசலப்பு ஏற்பட்டது என்ற பழிச்சொல்லுக்கு ஆளாகிவிடக் கூடாது என்ற எண்ணம் அவர்களிடம் மேலோங்கியிருந்தது என்பதைப் பின்னர் தெளிவாக அறிந்து கொள்ள முடிந்தது.

நினைவேந்தலின் தன்மை

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் என்பது ஒரு சாதாரண நிகழ்வல்ல. அது தமிழர்களின் தேசிய அரசியல் சோகம் சார்ந்தது. காலத்தாலும், அடக்குமுறைச் செயற்பாடுகளினாலும் தடுத்து நிறுத்திவிட முடியாத ஆழமான வலிமை கொண்டது. பாதுகாப்பின்றி அலைக்கழி;ந்து, அஞ்சிப் பதை பதைத்து, உடலும் ஆவியும் துடிதுடிக்க அவலமாக மடிந்து போன ஆயிரக்கணக்கானர்களின் ஆன்மாக்கள் அமைதியின்றி அலைமோதுகின்ற ஓரிடத்தில் நிகழ்கின்ற ஒரு நினைவேந்தலாகும். அது மனதைப் பிழிந்து வாட்டுகின்ற சோகம் நிறைந்தது. அமைதியை வேண்டி ஆறாத துயரத்துடன் நெஞ்சங்கள் திடுக்கிடத்தக்க வகையில் நினைவுகூர்கின்ற ஒரு புனிதமான நிகழ்வாகும்.

இந்த நிகழ்வில் அரசியல் இருக்கக் கூடாது என்ற தீர்மானம் ஏற்புடையது. வரவேற்று ஆதரிக்க வேண்டியது. ஆயினும் கட்சி அரசியல் இருக்கக் கூடாது என்பதே அதன் உள்ளார்த்தமாகும். தேர்தல் கால நலன்களைக் கருத்திற்கொண்ட அரசியலாகவோ அல்லது எதிர்கால சுயநல தேவைகளை அடிப்படையாகக் கொண்ட அரசியலாகவோ அது அமையக் கூடாது என்பதில் தெளிவாக இருக்க வேண்டும். ஏனெனில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் அரசியல் இருக்கக் கூடாது. அரசியல் கலக்கக் கூடாது என்ற நிலைப்பாடும் தன்னளவில் ஓர் அரசியலாகும். கட்சி அரசியல் மற்றும் சுயலாப அரசியல் என்பவற்றை இலக்காகக் கொண்ட குறுகிய நோக்கமுள்ள அரசியலுக்கு அப்பால், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் என்பது தமிழ் மக்களின் தேசிய சமூக, கலை, கலாசார ஆட்சி உரிமை சார்ந்த அரசியலை அடிப்படையாகக் கொண்டது. அந்த அரசியல் வெளி பரந்துபட்டது. விசாலமானது.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் அரசியல் இருக்கக் கூடாது. அரசியல்வாதிகள் எவரும் பங்கேற்கக்கூடாது என்று வரையறை செய்திருந்த பல்கலைக்கழக மாணவர் அரசியலிலும் பார்க்க முள்ளிவாய்க்காலின் உண்மையான அரசியல் அதிக பரிமாணம் கொண்டது. அது தமிழ்த்தேசியத்தை அடிநாதமாகக் கொண்ட தேசிய அரசியலாகும். தமிழ்த் தேசிய அரசியலின் ஓர் அங்கமாக பல்கலைக்கழக அரசியல் இருக்கலாமே தவிர, அந்தத் தேசிய அரசியலின் தலைமையாக மாணவர்களின் அரசியல் வகிபாகம் கொண்டிருக்க முடியாது.

நடந்து முடிந்த முள்ளிவாய்க்காலின் கோர சம்பவங்களை நினைவுகூர்ந்து, அவற்றில் பலியாகிப் போனவர்களின் இறப்பினால் ஏற்பட்ட ஆறாத துயரம் வடிந்தோடுவதற்கான ஒரு வடிகாலாக முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அமைய வேண்டியது அவசியம். ஆறாத மனத்துயரினால் வாழ்க்கையில் நடைப்பிணமாக மாறியுள்ள ஆயிரக்கணக்கானவர்களின் உளவியல் ஈடேற்றத்திற்கும், துயரங்களைத் தாங்கிக் கொண்டு சவால்களை எதிர்கொண்டு வாழ்க்கையில் எதிர் நீச்சலடிப்பதற்கான மனோ திடத்தை அளிப்பதற்கும், முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் ஆற்றுப்படுத்தல் வழங்கும் என்பதில் சந்தேகமில்லை.

முள்ளிவாய்க்;கால் அவலம் என்பது ஒரு சமூகத்தின் கூட்டுத் துயரம். அந்தத் துயரம் வடிந்து தணிவதற்கு சமூகம் சார்ந்த கூட்டு நினைவேந்தல் அவசியம். மனங்களில் மாறாத துயர வடுக்களாக அமைந்துவிட்ட முள்ளிவாய்க்கால் படுகொலைகளின் துயரங்கள் கூட்டுச் செயற்பாட்டின் மூலமாகவே களைந்து தெளிய முடியும். அதேவேளை, ஆறூத துயரத்தைப் போலவே தீராத பிரச்சினையாகத் தொடர்ந்து மனங்களை அழுத்திக் கொண்டிருக்கின்ற அரசியல் உரிமை மறுப்பு என்ற அடக்குமுறைகளைத் தகர்த்தெறிவதற்கான அரசியல் ரீதியான உறுதியையும் உள வலிமையையும் இந்த நினைவேந்தல் நிகழ்வின் ஊடாகப் பெற்றே ஆக வேண்டும். அந்த வகையில் அதற்குரிய தேசிய அரசியல் அவசியம். அது அங்கு புடம்போடப்பட வேண்டியதும் முக்கியம்.

நடந்ததும் நடக்க வேண்டியதும்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வையொட்டி, மே 18 ஆம் திகதி காலை 11 மணிக்கு மக்கள் தாங்கள் தாங்கள் இருக்கும் இடங்களில் எழுந்து நின்று அகவணக்கம் செலுத்த வேண்டும். அமைதியான பிரார்த்தனையில் ஈடுபட வேண்டும் என்று முதலமைச்சர் அறிக்கையொன்றில் பகிரங்கமாகக் கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால், பிரதான நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்ற முள்ளிவாய்க்காலில் அகவணகக்ம் செலுத்தப்படவில்லை. இறந்தவர்களின் ஆன்ம சாந்திக்காக சில நொடிகளாவது கண்களை மூடி அமைதியாக பிரார்த்தனை செய்யவில்லை.

நினைவேந்தல் நிகழ்வுக்கான நிகழ்ச்சிகள் பல்கலைக்கழக மாணவர்களின் நிரல் ஒழுங்கமைப்பில் இடம்பெற்றிருக்கலாம். ஆனால், சாதாரண ஒரு நிகழ்வில்கூட ஆரம்பத்தில் மங்கல விளக்கேற்றலுடன் அமைதிப் பிரார்த்தனை செய்வது எம்மவர்களின் பாரம்பரிய வழக்கம். முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின்போது பாரம்பரிய பழக்கத்திற்கு அமைய அமைதிப் பிரார்த்தனை செய்யப்படவில்லை. அகவணக்கம் இடம்பெறவில்லை.

வடமாகாண சபையும், பல்கலைக்கழக மாணவர்களும், முன்னாள் போராளிகளும் இணைந்து முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நடத்தப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டிருந்த போதிலும், முன்னிலையில் இருந்து செயற்பட்ட பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் முக்கியஸ்தர்கள் அந்த நிகழ்வை முழுமையான ஆக்கிரமிப்பு நோக்கில் நடத்தியிருந்தமை பலரையும் முகம் சுழிக்கச் செய்திருக்கின்றது. மனம் வருந்தவும் செய்திருக்கின்றது. எரிச்சலடையவும் செய்துள்ளது.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் கடந்த வருடம் அரசியல் ரீதியான தலையீடு இடம்பெற்றிருந்தது என்ற ஒரே காரணத்திற்காக வடமாகண சபையினருக்கோ அல்லது முன்னாள் போராளிகளாக இருக்கலாம் அல்லது வேறு யாராகவும் இருக்கலாம் அவர்களால் அரசியல் கலப்பின்றி அந்த நிகழ்வை நடத்த முடியாது என்று தீர்மானித்துச் செயற்பட முற்படுவது அல்லது செயற்படுவது ஏற்புடையதல்ல.

நெருக்கடிகள் மிகுந்திருந்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் 2010 ஆம் ஆண்டு வவுனியாவில் அப்போதைய வவுனியா பிரஜைகள் குழு மற்றும் பல்வேறு தரப்பினருடைய ஒத்துழைப்புடன், மோசமான உயிர் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுட்டிக்கப்பட்டது. இதற்கு வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் மிகுந்த துணிவோடு செயற்பட்டிருந்தார்.

முதல் நினைவேந்தல் நிகழ்வு நடைபெறுவதற்கு ஒழுங்கு செய்யப்பட்டிருந்த மண்டபத்தில் அதனை நடத்த முடியாது என்று இறுதி நேரத்தில் மண்டபத்திற்குப் பொறுப்பானவர்கள் கைவிரித்துவிட்டார்கள். மண்டபக் கதவுகள் இறுக்கி மூடப்பட்டு எவரும் உள்ளே நுழைய முடியாதவாறு தடுக்கப்பட்டிருந்தது. புலனாய்வாளர்களின் நேரடியான அச்சுறுத்தல் காரணமாகவே இந்த நிலைமை ஏற்பட்டிருந்தது. இதனால் அப்போது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அறிவிக்கப்பட்டவாறு நடைபெறுமா என்பது சந்தேகத்திற்குரியதாகியது. இருப்பினும் இறுதி நேர ஏற்பாடாக வவனியா நகரசபை மண்டபத்தில் எண்ணிக்கையில் அதிகூடிய புலனாய்வாளர்களுடனும், பாதிக்கப்பட்ட மக்களில் சிலரும் மற்றும் பொதுஅமைப்புக்களைச் சேர்ந்தவர்களும் அந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். நிகழ்வில் கலந்து கொண்டிருந்தவர்கள் அனைவரையும் புலனாய்வாளர்கள் பல கோணங்களில் படம் பிடித்தும் வீடியோ காட்சிகளில் பதிவு செய்தும் எடுத்துச் சென்றார்கள். அதனைத் தொடர்ந்து அடுத்தடுத்த வருடங்களாக 2015 ஆம் ஆண்டு வரை தொடர்ச்சியாக பல்வேறு அச்சுறுத்தல்களுக்கு மத்;தியில் அந்த நினைவேந்தல் நிகழ்வு அனுட்டிக்கப்பட்டது. மாகாணசபை இயங்கத் தொடங்கியதையடுத்து, 2016 ஆம் ஆண்டு முதன் முறையாக முள்ளிவாய்க்காலில் நினைவேந்தல் நடத்தப்பட்டது.

இதேபோன்று யாழ் பல்கலைக்கழகத்தின் உள்ளே அன்றைய மாணவர்கள் மோசமான அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை நடத்தியிருந்தார்கள். இந்த நினைவேந்தல் நிகழ்வை நடத்தியதற்காகப் பல்கலைக்கழக மாணவர்கள் தாக்கப்பட்டார்கள் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தார்கள். இதேபோன்று கிளிநொச்சியிலும் பின்னர் முல்லைத்தீவிலும் அருட்தந்தையர்களினால் நினைவேந்தல் நிகழ்வுகள் நடத்தப்பட்டன. இந்து ஆலயங்களிலும் ஆத்ம சாந்திப் பூசையுடன் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றன. கிழக்கு மாகாணத்தில் பலராலும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுட்டிக்கப்பட்டது.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் யார் பங்கேற்க முடியும் யார் பங்கேற்க முடியாது என்பதைத் தீர்மானிப்பதற்கு எவருக்குமே அதிகாரம் கிடையாது. எனவே, நடந்து முடிந்த நிகழ்வில் விமர்சிக்கப்படுகின்ற அளவுக்கு இடம்பெற்றிருந்த குறைகள் அடுத்த நினைவேந்தலின்போது இடம்பெறக்கூடாது என்பதை இப்போதே உறுதி செய்து கொள்ள வேண்டும். யுத்தம் முடிவடைந்து ஒன்பது வருடங்கள் கடந்துவிட்ட நிலையிலும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்;வு விடுதலைப்புலிகளுக்கு மீண்டும் உயிரூட்டுவதற்காகவே நடத்தப்படுகின்றது என்ற பேரினவாதிகளின் இனவாத அரசியல் மனோபாவம் உயிர்த்திருக்கின்ற சூழலில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அரசியல் ரீதியான உயிர்ப்பை அடிப்படையாகக் கொண்டு திறம்பட திட்டமிட்டுச் செயற்படுத்தப்பட வேண்டும்.

மோசமடைந்து செல்கின்ற நாட்டின் அரசியல் சூழலில் இது மிகவும் அவசியம். இது ஒரு வரலாற்றுத் தேவை என்றே கூற வேண்டும்.

– பி.மாணிக்கவாசக

தூத்துக்குடியை கண்டுகொள்ளாத இந்திய மத்திய அரசு கனடா மீது பரிவு காட்டியது ஏன்?

தமிழகத்தின் தூத்துக்குடியில் ஏற்பட்ட வன்முறையில் 13பேர் கொல்லப்பட்ட போது கண்டுகொள்ளாத இந்திய மத்திய அரசாங்கம் கனடா மீது கரிசனை வெளியிட்டுள்ளது.

இந்த நிலையில் கனடாவில் மிசுசாகா நகரில் இந்திய வம்வாவளி மக்கள் அதிகம் செல்லும் மும்பாய் மகால் உணவு விடுதியில் மர்ம நபர்கள் இருவர் நடத்திய குண்டுத்தாக்குதலில் 15பேர் காயமடைந்தனர்.

மிகவும் கண்டிக்கத்தக்க தாக்குதல் இது. இதில் சம்மந்தப்பட்டவர்களை பிடிக்க பொலிஸார் அனைத்து வளங்களையும் பயன்படுத்தி வருகின்றனர். பாதிக்கப்பட்ட அனைவரும் வீடு திரும்பிவிட்டனர் என்பதுவும் அமைதி தருகிறது.

ஆனால் தனது நலன்சார்ந்த அரசியலை முன்னெடுக்க ரொரன்ரோவில் உள்ள இந்திய தூதுவராலயம் முயல்வது தான் அதீத கரிசனை தருகிறது என தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் அந்தப் பகுதியில் வந்த ஒருவர் தான் பாரதிய ஜனதா கட்சி உறுப்பினர் எனக்கூறி ஊடகங்களுக்கு போட்டியளித்துள்ளார்.

பொலிஸாரோ, பாதுகாப்பு துறையினரோ சொல்லாத விடயத்தை தானாக முந்திக் கொண்டு இது ஒரு பயங்கரவாதத் தாக்குதல் என தெரிவித்துள்ளார்.

கனடாவில் பாரதிய ஜனதா என்ற கட்சி இருக்கிறதா என்பது எனக்கு புரியவில்லை. துணைத்தூதுவர் வேறு ஊடகங்களில் தமது அரசியலை இத்தாக்குதலை முன்னிறுத்து முன்னெடுத்தார்.

தாம் பாதிக்கப்பட்ட மக்களை அவர்கள் வீடுகளிலும் மருத்துவ மனையிலும் வேறு சென்று சந்தித்ததாக குறிப்பிட்டுள்ளார்.

இதில் நகைச்சுவையான விடயம் என்ன வென்றால் இந்தியர் ஒருவர் கனடியப் பிரஜை ஆனதும் அவர் தனது இந்திய குடியுரிமையை தானாகவே இழந்துவிடுவார்.

அதாவது இந்தியா அவர்களின் இந்திய குடியுரிமையை பறித்துவிடும். பின்னர் அவர்கள் கனடிய கடவுச்சீட்டில் இந்தியா செல்லவேண்டுமானால் இந்திய விசாவிற்கு விண்ணப்பித்து அது வழங்கப்பட்டாலேயே செல்ல முடியும்.

இப்போது சொல்லுங்கள் எவ்வாறான போலித்தனமான செயற்பாடுகள் இவை. இந்திய அரசிற்கும் கனடிய சீக்கியர்களுக்கும் இடையே நிலவும் முறுகல்நிலையை இவ்விடயத்தில் தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள இந்திய தூதுவராலயம் முனைகிறது.

இது கனடிய உள்விவகாரத்திலான அத்துமீறிய செயலாகும். இதேவேளை தமிழகத்தில் நரபலி எடுக்கப்பட்ட தமிழர்கள் விடயத்திலும் இங்கு பாதிக்கப்பட்ட கனடியர்கள் விடயத்திலும் இந்திய அணுகுமுறை பல செய்திகளையும் சொல்லி நிற்கிறது.

Nehru Gunaratnam

16 அப்பாவிகளை கொன்ற தமிழ் இன துரோகி 



தூத்துக்குடி சிக்கிய ஆதாரம்!! இவன் தான் செய்ய சொன்னது

**
துப்பாக்கி சூட்டில் இலங்கை அகதி பலி: தந்தை இறந்தது தெரியாமல் பரிதவிக்கும் மகன்

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் தந்தை இறந்தது தெரியாமல் தந்தைக்காக காத்திருக்கும் மனவளர்ச்சி குன்றிய மகனால் அப்பகுதியே சோகமாய் காட்சியளிக்கிறது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது பொலிசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியாகினர், இதில் கே.கந்தையா(வயது 58) என்பவரும் ஒருவர்.

இலங்கை அகதியான இவர் தூத்துக்குடி சிலோன் காலனியில் மனைவி செல்வமணியுடன் வசித்து வந்தார்.

இவர்களுக்கு ஜெகதீஸ்வரன் என்ற மகன் உள்ள நிலையில், கட்டுமான வேலை செய்து வந்துள்ளார்.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் முனைப்புடன் கலந்து கொண்ட கந்தையா, 100வது போராட்டத்தில் பொலிசாரின் துப்பாக்கி சூட்டுக்கு பலியானார்.

வெள்ளை வேட்டி, சட்டை அணிந்த நிலையில் பிணமாக கணவர் கிடந்ததை தொலைக்காட்சியில் பார்த்ததும் துடிதுடித்து போன செல்வமணி கதறியுள்ளார்.

மேலும் அவர், இலங்கை ராணுவத்தின் தாக்குதலுக்கு பயந்து கடந்த 1981ம் ஆண்டு தமிழகம் வந்தோம், ராணுவத்தின் தோட்டாவுக்கு தப்பி பிழைத்தவர் துப்பாக்கி சூட்டில் பலியாகி விட்டாரே என கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.

கணவரின் மரணமே இன்னும் மீளாத நிலையில் மகனின் நிலை கண்டு தினமும் கண்ணீர் வடிக்கிறார் செல்வமணி.

காரணம் மகன் ஜெகதீஸ்வரன் மனவளர்ச்சி குன்றியவர், தந்தை உணவு ஊட்டி விட்டால் மட்டுமே சாப்பிடுவாராம், தினமும் தந்தை கட்டியணைத்துக் கொண்டே உறங்குவது வழக்கமாம்.

தந்தை இறந்தது கூட தெரியாமல் ஐந்து நாட்கள் சாப்பிடாமல், உறங்காமல் இருக்கும் மகனை பார்த்து நொந்துக் கொண்டிருக்கிறார் செல்வமணி.

இந்நிலையில் இவர்களது குடும்பத்தினருக்கு அரசு உரிய சலுகைகள் செய்து தரவேண்டும், அரசாங்க வேலை வழங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Up ↑