கனடிய அரசியல் களம் சமீப காலங்களாக தமிழர் பிரவேசங்களால் சூடு பிடித்தாலும் தமிழ் இளையவர்கள் இதில் இருந்து தள்ளி நிற்கின்றார்களோ என்ற கவலை பலரிடம் இருந்ததை காண முடிந்தது. இல்லை நாங்களும் களத்திற்கு வந்துவிட்டோம் எனக்கூறிக்கொண்டு கனடிய தமிழ் சமூகத்திற்கு நன்கு அறிமுகமான விஜய் தனிகாசலம் களத்தில் குதித்துள்ளார்.

கனடிய பட்டதாரியான இவர் தமிழ் இளையோர் செயற்பாடுகளின் ஒருங்கமைப்பாளராக தொழிற்பட்டு தமிழ் மக்களுக்கு நன்கு அறிமுகமானவர். தற்போது புதிதாக உருவாகியுள்ள ஸ்காபுரோ ரூச் பார்க் தொகுதியில் 2018 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஒன்ராரியோ மாநிலங்களவைக்கான தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பாளர் தெரிவுத் தேர்தல் நடந்து முடிந்து விஜய் தனிகாசலம் வெற்றியீட்டியுள்ளார்.

இவற்றை எல்லாம் தாண்டி இளையோர் வேட்பாளர் தேர்தலில் வெற்றி சூடியது பாராட்டப்பட வேண்டியதே ! வாழ்த்துக்கள் !

புலம்பெயர் இளைய சமுதாயத்துக்கு பாராட்டு!

இந்த வரலாற்றுச் சூழமைவில், தமிழர் உலகின் எந்த மூலையில் வாழ்ந்தாலும் எந்தக் கோடியில் வளர்ந்தாலும் எமது தேச விடுதலைக்கு உறுதியாகக் குரலெழுப்பி, எமது சுதந்திர இயக்கத்தின் கரங்களைப் பலப்படுத்துமாறு அன்போடு வேண்டுகிறேன்.

அத்துடன், தங்களது தாராள உதவிகளை வழங்கித் தொடர்ந்தும் பங்களிக்குமாறும் உரிமையோடு கேட்டுக்கொள்கிறேன். இந்த சந்தர்ப்பத்திலே தேச விடுதலைப் பணியைத் தீவிரமாக முன்னெடுத்து வருகின்ற புலம்பெயர்ந்து வாழும் எமது இளைய சமுதாயத்தினருக்கும் எனது அன்பையும் பாராட்டுதல்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

தமிழீழ தேசியத்தலைவரின் மாவீரர் நாள் உரை (2008)

Statement from Ontario PC Leader Patrick Brown on the nomination of Vijay Thanigasalam
April 23, 2017

“I congratulate Vijay on his nomination as the Ontario PC candidate for Scarborough-Rouge Park.

“Vijay brings a wealth of experience to our modern, inclusive and pragmatic Ontario PC team. A young professional who has been an active community volunteer for the past decade, I know Vijay will work tirelessly on behalf of the residents of Scarborough.

“After 14 years in power, life is harder with the Liberals. Ontario families are working hard, paying more, and getting less. Ontario deserves better. It’s time for a change in Ontario.

“In Scarborough and across the province, the Ontario PC Party will continue to work hard for a better future. I look forward to working with Vijay as part of our Ontario PC team as we share our positive message of change.”

கட்டுரையை தற்போது முழுமையாக பிரசுரிக்கவில்லை ஆனால்  பின்னர் பிரசுரிக்கப்படும் !

இருப்பினும் எம்மால் பலருடைய பல மாத உழைப்பு வீணாகி விடக்கூடாது என்பதால் தற்போது அமைதி காக்கின்றோம் ,  அதே நேரத்தில் மக்களிடத்தில் உண்மைகளை  உரைக்காமல் மக்கள் எல்லாவற்றையும் பார்த்துக்கொள்வார்கள் என்பதும், சுட்டு விரல் காட்டும் இடத்தில் ஓட்டுப்போடுவார்கள் என்று எதிர்பார்ப்பதும் முட்டாள்தனம் ஆகும்  !

கூலிக்கு மாரடிக்கும் ஊடங்களில் வரும் பொய்கள் தான் இப்போது செய்திகளாகி விட்டது !

அமைப்புக்களும் ஊடகங்களும் உண்மைகளை உரைக்க வேண்டும் !

நன்றி