இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் இரசாயன ரீதியாக என்னென்ன தாக்கங்கள் இருக்கும், என்னென்ன இரசாயனப் பொருட்கள் இருக்கும் என மற்றைய போர் நடந்த நாடுகள் தொடர்பாக ஆய்வு செய்திருந்தார்.

போரால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் இரசாயன ரீதியாக என்னென்ன தாக்கங்கள் இருக்கும், என்னென்ன இரசாயனப் பொருட்கள் இருக்கும் என ஈழத்தமிழ்ப்பெண் தயாரித்த ஆய்வுக்கட்டுரை சிறந்த ஆய்வுக்கட்டுரையாக அமெரிக்க நிறுவனத்தால் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இலங்கையில், வல்வெட்டித்துறை இலக்கணாவத்தையைச் சேர்ந்த இலக்கியா – சிதம்பரநாதனே இச்சாதனையை படைத்துள்ளார்.

க.பொ.த. உயர்தரம் வரை உடுப்பிட்டி மகளிர் கல்லூரியில் கல்வி கற்றிருந்த இலக்கியா பங்களாதேஷில் BSC பட்டப்படிப்பையும், ஹொலண்டில் Environmental Technology இல் Msc உயர் பட்டப்படிப்பையும் மேற்கொண்டுள்ளார்.இதேவேளை அவரின் ஆய்வுக்கட்டுரைக்கு அமெரிக்காவை தளமாக கொண்டியங்கும் The Sustainability Research Network நிறுவனமே இவ்விருதினை வழங்கியுள்ளது.

குறித்த நிறுவனத்தினால் சர்வதேச மட்டத்தில் பெறப்பட்ட ஆய்வுக்கட்டுரைகளில் 12 ஆய்வுக் கட்டுரைகள் இறுதிச் சுற்றுக்கு தேர்வாகியிருந்தது.

இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் இரசாயன ரீதியாக என்னென்ன தாக்கங்கள் இருக்கும், என்னென்ன இரசாயனப் பொருட்கள் இருக்கும் என மற்றைய போர் நடந்த நாடுகள் தொடர்பாக ஆய்வு செய்திருந்தார்.

அந்த இரசாயனப் பொருட்களை செயற்கையாகவும் இயற்கையாகவும் எப்படி அழிக்கலாம் என்ற தீர்வையும் முன் வைத்திருந்த ஆய்வுக்கட்டுரைக்கே சர்வதேச அளவில் பிரபலமான இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.

முன்னதாக, டென்மார்க் நாட்டில் சமர்பித்து அங்கிருந்து தேர்வாகியே அமெரிக்காவிற்கு அனுப்பப்பட்டு இந்த விருது கிடைத்துள்ளது.

இதையடுத்து அவுஸ்திரேலியாவில் குறித்த கட்டுரையை சமர்ப்பிக்க அவர் அழைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இவரை மனதார பாராட்டுகின்றேன் இவரது தந்தையார் ஒரு கூட்டுறவு ஊழியர் என்பது குறிப்பிடதக்கது. வறுமையை உடைத்து சாதனை படைத்துள்ளார்.

Advertisements