ஜெனிவா தீர்மானங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றதா என்பதை ஐ.நா மனித உரிமைகள் பேரவை ஸ்ரீலங்கா அரசாங்கத்திடம் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதன் மூலம் காணாமல் போனோர் தொடர்பான விடயத்தில் என்ன முன்னேற்றங்கள் காணப்பட்டன என்பது குறித்து ஆராய முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்திலுள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் காணாமல் போன உறவினர்களின் அமைப்புக்கள் ஆகியோருக்கும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிற்குமிடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பு இன்று மதியம் கைதடியிலுள்ள வடமாகாண முதலமைச்சரின் அலுவலகத்தில் இடம்பெற்றது.

குறித்த சந்திப்பில் வடமாகாண விவசாய அமைச்சர் பொன்.ஐங்கரநேசன், வடமாகாண கல்வியமைச்சர் குருகுலராசா மற்றும் வடமாகாண சபை உறுப்பினர்களான துரைராசா ரவிகரன் மற்றும் அனந்தி சசிதரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்நிலையிலேயே ஸ்ரீலங்கா அரசாங்கத்திற்கு ஜெனிவாவில் கால அவகாசம் வழங்கப்பட்டமை குறித்து முதலமைச்சர் கருத்துக்களை வெளியிட்டார்.

காணாமல் போனவர்கள் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் விசாரணை மேற்கொள்ள நியமிக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையினை உடனடியாக வெளியிடுமாறு வடமாகாண முதலமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன் காணாமல் போன தமது பிள்ளைகள் உயிருடன் இருப்பதாக தாய்மார் தெரிவிக்கின்றமை தொடர்பில் அரசாங்கம் உரிய பதில் வழங்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

அதேவேளை, நாட்டில் காணப்படும் இரகசிய சித்திரவதை முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் விபரங்களை அடையாளப்படுத்துமாறு அரசாங்கத்திடம் வலியுறுத்தவுள்ளதாகவும் வடமாகாண முதலமைச்சர் தெரிவித்தார்.

இதேவேளை, காணாமல் போனோரின் தமது உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதை அறிந்து கொள்ளும் வரை தமது போராட்டத்தை கைவிடப் போவதில்லையென கடத்தப்பட்டு கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தின் வவுனியா மாவட்ட தலைவி காசிப்பிள்ளை ஜெயவனிதா தெரிவித்தார்.

காணாமல் போன தமது உறவுகளுடன் ஒரு நாள் என்றாலும் சந்தோசமாக வாழ அரசாங்கம் வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் என கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த யோகராசா கனகரஞ்சினி தெரிவித்தார்.

அத்துடன் தமது உறவுகளை கடத்திச் சென்ற நபர்களின் பெயர் பட்டியல்கள் தம்மிடம் உள்ளதாக திருகோணமலையைச் சேர்ந்த ஜெ.நாகேந்திரன் ஆஷா தெரிவித்தார்.

இந்நிலையில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளும் போராட்டத்தினால் உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதாக வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்தார்.

முதலாம் இணைப்பு

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்திலுள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் காணாமல் போன உறவினர்களின் அமைப்புக்கள் ஆகியோருக்கும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிற்குமிடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பு இன்று மதியம் கைதடியிலுள்ள வடமாகாண முதலமைச்சரின் அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

குறித்த சந்திப்பில் வடமாகாண விவசாய அமைச்சர் பொன்.ஐங்கரநேசன், வடமாகாண கல்வியமைச்சர் குருகுலராசா மற்றும் வடமாகாண சபை உறுப்பினர்களான துரைராசா ரவிகரன் மற்றும் அனந்தி சசிதரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதன்போது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் காணாமல் போனோரின் உறவுகள் மேற்கொண்டு வரும் போராட்டம் தொடர்பாக ஆராயப்பட்டுள்ளது.

எம்மை வைத்து அரசியல் நடத்தாதீர்கள்; சிறிதரனுக்கு மக்கள் எச்சரிக்கை

தமிழ்த் தேசியக் கூட்மைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனின் செயற்பாடுகள் அதிருப்தியளிப்பதாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவரும் பன்னங்கண்டி – சரஸ்வதிபுரம் மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

எந்த அரசியல்வாதிகளாக இருந்தாலும் பாதிக்கப்பட்ட மக்களை வைத்து அரசியல் செய்ய வேண்டாம் என்றும் மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

நிரந்தர காணி உரிமைப்பத்திரத்தை பெற்றுத்தருமாறு வலியுறுத்தி பன்னங்கண்டி – சரஸ்வதி குடியிருப்பு மக்கள் இன்று 07 ஆவது நாளாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

இந்நிலையில் கவனயீர்ப்பில் ஈடுபட்டுவரும் மக்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் நேரில் சென்று சந்தித்துள்ளார்.

எனினும் மக்களை நேரில் சென்று சந்தித்து கலந்துரையாடிய நாடாளுமன்ற உறுப்பினர் தமது பிரச்சனை தொடர்பாக எந்தவித சாதகமான பதிலையும் வழங்கவில்லை என்று பாதிக்கப்பட்ட மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

இதேவேளை மக்களுடனான சந்திப்பின் பின்னர், குறித்த சந்திப்பு தொடர்பாக கருத்து தெரிவிக்குமாறு ஊடகவியலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதற்கு பதிலளித்த நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், கிளிநொச்சி மாவட்ட ஊடகவியலாளர்களைத் தரக்குறைவாக பேசியுள்ளதுடன், ஊடகங்கள் முறையற்ற வகையில் செயற்படுவதாகவும் குற்றம் சுமத்தியதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

இந்நிலையில் தமது போராட்டம் குறித்து கருத்து வெளியிட்ட மக்கள், குறித்த பகுதியிலிருந்து ஒருபோதும் வெளியேற மாட்டோம் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதேவேளை பன்னங்கண்டி – சிவா பசுபதி கிராம மக்கள் தமது காணிகளை மீட்பதற்கு முதுகெழும்பாக திகழ்ந்த ஊடகவியாளர்களை நாடாளுமன்ற உறுப்பினர் தரக்குறைவாக பேசியமைக்கு கண்டனம் தெரிவிப்பதாகவும் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

Advertisements