புலிகளை அழித்தவரின் அடுத்த கட்ட முயற்சியால் தொடரும் புலிகள் மீதான அச்சம்

ஆட்சியை கவிழ்த்தே தீர வேண்டும் என்ற வகையில் புதுப் பரிமாணத்தில் இலங்கை தற்போது பயணித்துக் கொண்டு இருப்பதை அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது.

அதற்கான ஆரம்ப கட்டப் படிகளாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கூட்டு எதிர்க்கட்சியுடன் இணைந்து பல்வேறு செயற்பாடுகளை செய்து கொண்டு வருகின்றார்.

அதற்காக மகிந்தவின் முன்னைய கூட்டமாக இருக்கட்டும், அண்மைய கூட்டமாக இருக்கட்டும் அனைத்திலும் கூறப்படுவது “யுத்தத்தை வெற்றி கொள்ளச் செய்தது மகிந்தவே”

“மகிந்தவினாலேயே நாடு சுதந்திரம் பெற்றது, புலிகளை அழித்தவர் மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும்” இந்தக் கருத்தே சாராம்சம்.

அந்த வகையில் அண்மையில் நடைபெற்ற காலி கூட்டத்தில் உரையாற்றிய மகிந்தவிற்கு ஆதரவு தெரிவித்த அனைத்து அரசியல் வாதிகளினதும் கருத்தும் இவை மட்டுமே.

தேர்தல் பிரச்சாரத்திற்கு ஒத்த வகையில் கூட்டங்களை நடாத்திக் கொண்டு வரும் மகிந்த தரப்பு, கடந்த கால ஆட்சியில் செய்யப்பட்ட எதனையும் பிரதானமாக கூறவில்லை.

அவர்களின் ஒரே பிரதான வாதம் மகிந்த புலிகளை அழித்தவர் என்பது மட்டுமே. அவரின் அடுத்த கட்ட நகர்வு என்ன? இதற்கான காரணம் என்ன?

மக்கள் மத்தியில் இப்போதைக்கு மகிந்த திருட்டு, ஊழல் ஆட்சியை நடத்தியவர் என்ற கருத்து நல்லாட்சியினால் வலுப்படுத்தப்பட்டு விட்டது. மகிந்த கடந்த காலத்தில் செய்த ஊழல்களை படிப்படியாக அம்பலமாக்கும் முயற்சியில்.,

நல்லாட்சி அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. ஆனால் யுத்த வெற்றியினை மட்டும் மகிந்த வசம் இன்றி எடுக்கவோ அகற்றவோ முடிய வில்லை.

மகிந்த தரப்பிற்கு இப்போது உள்ள ஒரே துருப்புச்சீட்டு யுத்த வெற்றி மட்டுமே. அதனை மக்கள் மனதில் மீண்டும் மீண்டும் புகுத்தும் செயற்பாடுகளையே செய்து வருகின்றார்.

யுத்தம் மௌனிக்கப்பட்ட பின்னரும் இன்று வரை விடுதலைப்புலிகள் முற்றாக அழிக்கப்பட்டு விட்டார்கள் என்பதை மக்கள் ஏற்றுக் கொள்ளவே இல்லை. அதற்கு அரசியல் வாதிகள் இடம் கொடுக்கவும் இல்லலை என்பதே உண்மை.

அதனை மறக்க வைக்காமல் அன்றாடம் மீண்டும் புலிகள் வருவார்கள் என்ற அச்சம் மக்களிடையே பரப்பப்பட்டு கொண்டே வருகின்றது. அதனை சரியாக கையாளுகின்றது மகிந்த அணி என்றே கூறப்படுகின்றது.

ஆட்சியை பிடிக்க இப்போது மகிந்தவிடம் உள்ள பலம் யுத்த வெற்றி. அது மகிந்த வசம் இருக்கும் வரையில் மகிந்தவை மக்கள் மனதில் இருந்து அவ்வளவு எளிதில் புறந்தள்ளி விட முடியாது.

அது இருக்கும் வரை மகிந்தவின் ஆட்சிக்கு எதிரான செயற்பாடுகள் தொடர்ந்து கொண்டே இருக்கும். அப்படி பார்க்கும் போது மகிந்தவின் பிரதான பலம் நல்லாட்சியின் பிரதான பலவீனம் இரண்டுமே இது மட்டுமே.

அந்த வகையில் மக்களை திசை திருப்ப தம் பக்கம் சேர்க்க கூட்டங்கள் மூலம் மகிந்த அணி புலிகளை அழித்த கதையை நினைவு படுத்திக் கொண்டு வருகின்றது.

இவ்வாறாக நாடு முழுதும் செய்யப்படும் மகிந்தவின் பிரச்சாரங்கள் மக்கள் மனதை மாற்றமடைய வைக்கக் கூடும். இதனை எப்படி அரசு கையாளப்போகின்றது என்பது கேள்விக்குறியே.

புலிகள் என்பது மக்களுக்கு புளித்துப் போன விடயமாக இருந்தாலும் கூட அந்த அச்சம் இன்று வரை மக்கள் மத்தியில் முற்றாக நீங்கவில்லை. இதற்கு அரசியல் வாதிகளும் ஒரு காரணம்.

இதனை நன்றாக அறிந்து கொண்டு மகிந்த ஆட்சியை பிடிக்க புலிகளை முன்னிறுத்தி சரியான காய் நகர்த்தல்களைச் செய்து வருதாக தென்னிலங்கை அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர்.

என்றாலும் இவை எவ்வாறான தீர்ப்புகளை மாற்றங்களைத் தரும் என்பது மட்டும் இது வரையில் வெளிப்படையில்லாத விடயமே.

இலங்கை மீது நம்பிக்கை இல்லை..! சர்வதேச விசாரணை வேண்டும்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையினால் வழங்கப்பட்டுள்ள இரண்டு ஆண்டு கால அவகாசத்தில் இலங்கை தனது கடமையை பூரணமாக நிறைவேற்றும் என்பதில் நம்பிக்கையில்லை என கனேடிய பாராளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனாந்தசங்கரி தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 34வது கூட்ட தொடர் அண்மையில் இடம்பெற்ற நிலையில், கனேடிய பாராளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனாந்தசங்கரி லங்காசிறி 24 செய்தி சேவைக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து எமது செய்திச் சேவைக்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

2009ஆம் ஆண்டு 18ஆம் திகதி அதிகாலை புலிகள் தரப்பில் கஜேந்திரகுமாருடன் கதைத்தது யார்? நீண்ட மௌனத்தின் பின் பதில்..

ஐக்கிய நாடுகள் சபையின் 34ஆவது கூட்டத்தொடரில் தமிழர் தரப்பு ஏமாற்றப்பட்டதற்கான காரணங்கள், இது எவ்வாறான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது, அடுத்தகட்ட நடவடிக்கை என்ன என்பது பற்றி இவ்வாரம் லங்காசிறியின் அரசியற்களம் வட்டமேசையில் ஆராயப்பட்டுள்ளது.

மேலும், 2 வருட கால நீடிப்பானது நம்பகத்தன்மையை குறைக்கும் ஒரு தீர்மானம் எனவும், காணாமல் போனோருடைய விவகாரம், முன்னாள் போராளிகளின் தற்போதைய நிலை, இந்த நல்லாட்சி அரசாங்கம் இவற்றிற்கு தீர்வு கொடுக்காதது ஏன்? போன்ற பல வினாக்களுக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் மனித உரிமைகள் செயற்பாட்டாளருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இணைந்து கொண்டு பதிலளித்துள்ளார்.

புலிகள் அமைப்பில் இருந்தமைக்காக 8 ஆண்டுகள் சிறை : நகங்களும் பிடுங்கப்பட்டன.! இலங்கை அகதிகளின் சோகம்

இந்தோனேசியாவில் இருந்து நாடு கடத்தப்படும் அபாயத்தில் 22 இலங்கை அகதிகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்தாண்டு இந்தோனேசிய கடலில் தத்தளித்த 44 இலங்கை தமிழ் அகதிகள் பல்வேறு அழுத்தங்களுக்கு பின்னர் அந்நாட்டில் தற்காலிகமாக அனுமதிக்கப்பட்டனர்.

குறித்த அனைவரும் தமிழகத்திலிருந்து அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முயற்சித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், குறித்த 44 அகதிகளில் ஐந்து பேருக்கு அகதி அந்துஸ்து வழங்கப்பட்டுள்ளதாகவும் 17 அகதிகள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள 22 அகதிகளும் நாடுகடத்தப்படக்கூடிய ஆபத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அகதிகளில் ஒருவரான சிவரஞ்சனி இந்தோனேசியாவின் Lhokseumawe என்ற அகதிகள் மையத்தில் வசித்து வருகிறார்.

சிவரஞ்சனிக்கு அறுவைச் சிகிச்சை வழியே ஆண்குழந்தை பிறந்துள்ள நிலையில், மூன்றே நாட்களில் அகதிகள் மையத்திற்கு மீண்டும் அவர் வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சிவரஞ்சனியின் கணவர் பகிதரம் கந்தசாமி தங்கள் சூழ்நிலை பற்றி நியூசிலாந்து ஊடகம் ஒன்றிடம் கருத்து தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், “கடந்த வருடம் ஜூன் மாதம் இந்தோனேசிய கடலில் தத்தளித்த அவர்கள் நியூசிலாந்து செல்ல முயற்சித்தாக கூறியுள்ளனர்.

ஆனால், ஐ.நா அகதிகள் முகமை தங்களிடம் கருத்து கேட்ட போது நாங்கள் அவுஸ்திரேலியா செல்ல முயற்சித்ததாக தவறாக பதியப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

அத்துடன் அகதிகள் படகுகளை அவுஸ்திரேலியா திருப்பி அனுப்பிவரும் செய்தியினை நாங்கள் அறிந்திருந்ததால் நியூசிலாந்து செல்லவே முயற்சித்தோம் என்கின்றனர்.

விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்ததற்காக தாம் எட்டு ஆண்டுகள் இலங்கைச் சிறையில் இருந்ததாகவும், நகங்கள் பிடுங்கப்பட்டு சி.ஐ.டியினரால் தொடர்ந்து சித்ரவதைக்கு உள்ளனாதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

44 அகதிகளும் தலா ஒன்றரை லட்சம் ரூபாய் (இந்திய மதிப்பு) கொடுத்து வேதாரண்யத்திலிருந்து படகில் வந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

நியூசிலாந்தில் கரை சேர்ப்பதாக சொன்ன ஆட்கடத்தல்காரர்கள், எரிப்பொருள் தீர்ந்ததும் வேறு படகில் தப்பிவிட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டுள்ள நிலையில், தன்னால் உட்கார, நிற்கக்கூட முடியவில்லை என கலங்கியுள்ளார் சிவரஞ்சனி.

கெளரவமான வாழ்க்கையை எதிர்ப்பார்த்துள்ள இந்த அகதிகள், இலங்கைக்கே மீண்டும் திருப்பி அனுப்பப்பட்டால் கடும் அச்சுறுத்தல்களுக்கு உள்ளாக்கப்படுவோம் என அஞ்சுவதாக” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

*
சிங்களவர் என்றால் குற்றமில்லை தமிழர் என்றால் குற்றம்..

இலங்கையில் இப்போது முக்கூட்டுத் தலைவர்களின் திட்டமிடலில் இன விவகாரம் கையாளப்படுகிறது. இந்த நாட்டின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க இவர்களே முக்கூட்டுத் தலைவர்கள்.

மகிந்த ராஜபக்­வை தேர்தலில் வீழ்த்துவது, அவருக்கு நிகராக மைத்திரிபால சிறிசேனவை தேர்தல் களத்தில் இறக்குவது, மைத்திரி – ரணில் இணைந்த கூட்டு அரசை நிறுவுவது, இரா.சம்பந்தருக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வழங்குவது என்ற நடவடிக்கைகள் அனைத்துக்கும் பின்னணியாக இருந்து செயற்பட்டவர் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க என்பது மறுக்க முடியாத உண்மை.

என்னுடன் போட்டியிடும் அந்த வீரன் யார்? அவரை அறிய விரும்புகிறேன் என்று மகிந்த ராஜபக்ச கர்ச்சித்த போது, மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்துவது என்ற தீர்மானம் சந்திரிகா குமாரதுங்கவால் எடுக்கப்பட்டிருந்தது.

இதற்குப் பின்னணியாக சில வெளிநாடுகளும் இருந்தன என்பது வேறு கதை.

ஷ மைத்திரிபால – ரணில் – சந்திரிகா என்ற முக்கூட்டுத் தலைவர்களின் திட்டமிடலில் மகிந்த ராஜபக்சவுக்கான அரசியல் தோல்வி நிறைவேற்றப்பட்டது.

இந்த வெற்றியை அடுத்து போர்க்குற்ற விசாரணையில் இருந்து முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தரப்பையும் படைத்தரப்பையும் காப்பாற்றுவது என்ற விடயத்தை முக்கூட்டுத் தலைவர்களும் மிகச்சிறப்பாகக் கையாண்டனர்.

இதற்கு இரா. சம்பந்தருக்கு வழங்கப்பட்ட எதிர்க்கட்சித் தலைவர் பதவி மிகுந்த உதவி புரிந்தது.

ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தின் இரண்டு வருட கால அவகாசம் எல்லாப் பிரச்சினையில் இருந்தும் தப்புவதற்கான வழியாயிற்று.

இவை நடந்து முடிய முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா அம்மையர் தனது தாளத்தை மாற்றத் தொடங்கி விட்டார்.

ஆம், போர்க்குற்றம் தொடர்பில் படையினர் மீது விசாரணை நடத்த முடியாது. அவர்களுக்குத் தண்டனை வழங்க முடியாது என்பதாக சந்திரிகாவின் கதை உள்ளது.

வன்னிப் பெரு நிலப்பரப்பில் நடந்த தமிழின அழிப்புத் தொடர்பில் எந்தப் பேச்சுக்கும் இடமில்லாமல் அதனை அப்படியே தாட்டுவிடுவதுதான் முக்கூட்டுத் தலைவர்களின் திட்டம். இது சந்திரிகாவூடாக வெளிப்பட்டுள்ளது.

போர்க்குற்றம் தொடர்பில் படையினருக்கு எதிராக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காது என்று கூறும் சந்திரிகா அம்மையார்,அதேநேரம் சிறைகளில் வாடும் தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் கருத்துக் கூறுகையில், அவர்கள் குற்றம் செய்ததனாலேயே தண்டனை அனுபவிக்கின்றனர் என்கிறார்.

ஆக, ஐ.நா மனித உரிமைகள் ஆணையம் வழங்கிய இரண்டு வருட கால அவகாசத்தை தமிழ் மக்களுக்கு எதிராக பயன்படுத்துவதேயன்றி வேறு எதுவும் நடக்காதென்பது தெட்டத் தெளிவாகிறது.

அதாவது சிறைகளில் வாடும் தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் விசாரணை நடக்கும். அவர்கள் குற்றவாளிகளாக அறிக்கையிடப்படும். இந்த வேலையை இலங்கை அரசு நியமிக்கின்ற விசாரணைக் குழு செய்து முடிக்கும்.

அதேசமயம் படையினர் எந்தக் குற்றமும் இழைக்கவில்லை. அவர்கள் வன்னி யுத்தத்தில் எவரையும் சுட்டுக்கொல்லவில்லை என்பதாக முடிவு இருக்கும்.

இதுவே இரண்டு வருட கால அவகாசத்தில் நடக்கும்.

ஆம், சிங்களவர்கள் தமிழர்களுக்கு எதிராக எது செய்தாலும் அது குற்றமில்லை. ஆனால் சிங்களவர்கள் எந்தக் குற்றத்தை தமிழர்கள் மீது சுமத்தினாலும் குற்றம் சுமத்தப்பட்டவருக்குத் தண்டனை கிடைக்கும். இதுவே நடக்கப் போகிறது.

அட, பரவாயில்லை. தமிழர்கள் எதை இழந்தாலும் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை தமக்காக்கி இருக்கிறார்களே! அது போதாதா என்ன?

வலம்புரி