கனடியத் தமிழர் பேரவை( CTC ) கனடியத் தமிழர்களின் பிரதிநிதிகள் இல்லை !  பல வியாபாரிகளின் தனிப்பட்ட சுய விளம்பரங்களுக்காக அவர்களின் நிதியில் இது இன்றும் இயங்கிவருகின்றது  அது ஆரம்பத்தில் லிபரல் கட்சியோடு ஒட்டிக் கொண்டுவிட்டதால் லிபரல் கட்சியும் இவர்களைத் தான் நம்பிக்கொண்டிருக்கின்றது !

கனடியத் தமிழர் பேரவை( CTC )உலகத்தமிழர் அமைப்பால் உருவாக்கப்பட்டது, பலர் மாத சம்பளத்தில் தான் இன்னும் இருக்கின்றார்கள் ஆனால் அது தொடங்கிய சில காலங்களிலேயே வழக்கம் போல் ஒரு சிலரின் தனிப்பட்ட குடும்ப அமைப்பாக மாற்றப்பட்டு விட்டது அதில் கரி ஆனந்த சங்கரியாரின் பங்கு அளப்பரியது என்பது எல்லோரும் அறிந்ததே ! அதை வைத்து அவர் போட்ட திட்டத்தில் அவரும் அமைச்சராகி விட்டார்.

இது பற்றி பலர் விமர்சித்து வந்த போதும் செத்த இணையம் லங்காசிறி- தமிழ்வின் அவற்றை ஒரு முறையேனும் பிரசுரிக்கவில்லை ஆனால் இப்போது கரி ஆனந்த சங்கரிக்கு ஆப்பு வைக்கின்றார்கள் ,கனேடியப் பிரதமர் தமிழர்களை விட்டு தூர வைக்கப்படுகின்றாரா? என்றும்  ஒரு ஓநாய் அழுவதை பிரசுரித்திருக்கின்றது !

அதன் தொடர்ச்சியாக அதில் இருந்த ஏனைய ஓநாய்களும் இப்போது லிபரல் கட்சியின் சார்பில் வலம் வர ஆரம்பித்து விட்டார்கள் அந்த போட்டிகளின் பின்னனியில்  உட்பூசல் வெளிவரத் தொடங்கிவிட்டது !

ஆனால் இவர்களின் உட்கூத்துக்கள் தமிழர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தப் போவதாக முதலைக்கண்ணீர் வடிக்கின்றனர் !  தமிழ் அகதிகள் இன்னும் சிறைகளில் தான் இருக்கின்றார்கள் அதிலேயே பாரபட்சம் காட்டும் லிபரல் கட்சி இப்போது என்ன செய்து விட்டது  தூர வைத்தால் என்ன வைக்காவிட்டால் என்ன ?

*

கனேடியப் பிரதமர் தமிழர்களை விட்டு தூர வைக்கப்படுகின்றாரா? முஸ்லீம்களும் சீனர்களும் நெருக்கமாகின்றார்கள்?

(http://news.lankasri.com/canada/03/121910)

கனடியத் தமிழர்களிடையே ஏற்பட்டுள்ள ஒரு சில்லறை அரசியல் காரணமாக கனடாவின் ஆளும் அரசையும், அதன் பாராளுமன்றத் தமிழ் உறுப்பினரான ஹரி ஆனந்தசங்கரியையும் தூரவைக்கும் செயற்பாட்டில் இதுவரை லிபரல்கட்சியால் பலன்பெற்று வந்த சிலர் ஈடுபட்டிருக்கின்றார்கள்.

நேரடியாகக் குறிப்பிடுவதானால் தற்போது மார்க்கம் நகரில் எற்படுத்தப்பட்டுள்ள இடைத் தேர்தலில் கனடியத் தமிழ்க் காங்கிரஸ், சாட்சாத் லிபரல் கட்சியின் தமழர்களிற்கான முகவரியாக, ஹரி ஆனந்தசங்கரியை முத்த ஆலோசகராக, தேவையேற்படுகின்ற போது பண உதவி செய்பவராக வைத்திருந்த இருந்த அமைப்பு.

இப்போது திசைமாறிப் பறக்கிறது. அவர்களது கோபம் என்னவென்றால் அவர்களிற்கு பிடித்த ஒருவருக்கு தேர்தலில் போட்டியிட இடம்கொடுக்கவில்லை. தமிழர்களை லிபரல் கட்சி ஒதுக்குகின்றது. எனவே லிபரல் கட்சிக்குப் பாடம் புகட்டப் போகின்றார்களாம். அட தமிழர்களிற்காக குரல் கொடுக்க ஒரு அமைப்பு இருக்கின்றது என்று சிந்திக்க முடியாமல் அவர்களது நடவடிக்கையே தடையகெ இருக்கின்றது.

எத்தனை தமிழர்களிற்கு கடந்த காலத்தில் லிபரல் கட்சி இடம்கொடுக்கவில்லை? அப்போதெல்லாம் இவர்களது தமிழுணர்வு எங்கே போனது என்ற கேள்விக்கான விடை அவர்களிடம் இருக்காது. ஆனால் தியோடர் அந்தோனி, முரளி நாராயணதாஸ், லோகன் கணபதி, சாண் தயாபரன் போன்றோரெல்லாம் ஒதுக்கப்பட்ட போது இவர்கள் நிலத்தில் தலைபுதைத்த வான்கோழிகளாக ஏதுமே செய்யாமல் இருந்து விட்டு,

இப்போது தமிழர்களை உணர்ச்சி மைய அரசியலிற்குள் ஈடுபட வைக்க முனைந்தால் தமிழர்கள் அதற்குச் சம்மதிக்கமாட்டார்கள் ஏனென்றால் அது ஆளும் கட்சி அரசியலை தவிர்ப்பதோடு, இந்தத் தொகுதியில் முதல் இரண்டு பெரும்பாண்மைகளான சீனர்களையும், முஸ்லீம்களையும் அரசியலைத் தீர்மாணிக்க விட்டுள்ளார்கள். கனேடியப் பிரதமர் தமிழர்களை விட்டு தூர வைக்கப்படுகின்றார். ஒட்டுமொத்த கனடியத் தமிழரையும் சூட்சும அரசியலிற்குள் தள்ளும் செயற்பாடு இது.

கட்சியொன்றில் இணைவது என்பது அதன் கொள்கைகளை விரும்பி அதன் தலைமையை ஏற்று அதன் முடிவுகளிற்கு கடப்படுவது என்பதாகும். இயலாது போது உள்முரண்பாடுகளில் கட்சிக்குள் ஈடுபடலாம். ஆனால் இவர்கள் செய்யும் அசுத்த அரசியல் எமது இனத்தின் பெயரால் மேற்கொள்ளப்பட முடியாது. இப்போது யாருக்குமே தலையிடியாக இருக்கப் போகின்ற கேள்வி அப்போது ஹரி ஆனந்தசங்கரி அவர்கள் தமிழரில்லையா? அவருக்கு தமிழுணர்வு இல்லையா? என்பதேயாகும். அவர் அந்தத் தொகுதியில் லிபரல்கட்சிக்கு ஆதரவு தேட அவரது நிதியூட்டலில் ஒரு காலத்தில் உயிர்பெற்ற அமைப்பு லிபரல்கட்சிக்கு எதிராக பிரச்சாரம் செய்கின்றது.

அதுகூட கடந்த காலங்களில் லிபரல் கட்சிக்குப் பணியாற்றி தங்களது பிள்ளைகளை அந்தக் கட்சி சார்ந்த அரசியலாளர்களிடமே பணிக்கமர்த்திய பேச்சாளப் சிறுமக்கள் இப்போது லிபரல்க் கட்சிக்கு பாடம் புகட்ட முனைவதை பல தமிழர்களும் அருவருப்புடன் பார்க்கின்றார்கள். சந்தர்ப்பவாதிகள் என்று ஒதுக்குகின்றார்கள். தங்களுடைய அமைப்பிலுள்ள லிபரல்கட்சியின் ஆதரவாளர்களையே கட்டுப்படுத்த முனையும் இந்தச் செயலானது ஜனநாயக உரிமைகளையே இந்த அமைப்பு மதிக்கவில்லை என்று கூடக் கருதப்படலாம்.

ஏனென்றால் ஒரு கோபத்தை, அது நியாயமான கோபமாக இருக்கலாம், அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட முடிவுடன் தமிழர் சமுதாயத்தை இணைக்க முயல்வது எந்தவொரு வகையிலும் பொருந்தாது. இரண்டு அல்லது மூன்று தனிநபர்கள் கொண்ட வெறுப்பாக இது அடையாளப்படுத்தப்பட்டிருந்தால் யாருமே இதுபற்றிக் கவலைப்பட மாட்டார்கள். ஆனால் ஏதோ ஒட்டு மொத்த அமைப்பும் லிபரல் கட்சியின் மீது அதிருப்தி கொண்டிருப்பது போன்ற தோற்றப்பாட்டை அவர்கள் மறுதலிக்க வேண்டும்.

Angry Management என்கிற கோபத்தை எவ்வாறு கட்டுப்படுத்துதல் என்பதற்கான வழிவகைகளை ஆராய்வதற்குப் பதிலாக தேர்தல்களத்தில் வெளிப்படையாக மாற்றுக் கட்சியுடன் இணைவதன் மூலம், தாங்கள் இவ்வளவு நாளும் அடியொற்றிகளாக, துதிபாடிகளாக இல்லாமல் பற்றும் பாசமும் வைத்திருந்த லிபரல் கட்சியை வெறுத்து ஒதுக்குகின்றார்கள. மக்கள் இவர்களைப் பார்த்துச் சிரிக்கின்றார்கள். ஏனென்றால் தீர்க்கமில்லாத அதீத சுயநலம் தமிழினத்தைப் பலிக்கடாவாக்க முனையும்.

இது தங்களின் நிரந்தர முடிவு. லிபரல் கட்சியினர் நாங்கள் விரும்பியதைச் செய்யவில்லை. எனவே அவர்களுடன் எப்போதும் இணைய மாட்டோம் என்ற உத்தரவாதத்தை இவர்களால் தரமுடியாது. அடுத்த பொதுத் தேர்தலில் இவர்கள் லிபரல் கட்சியுடன் ஒத்து பணியாற்றுவதற்கான சந்தர்ப்பங்கள் நிறையவே உண்டு. ஏனென்றால் பல பத்தாண்டுகளாக லிபரல்கட்சி சார்பாக இருந்தவர்கள் நிச்சயமாக அந்தக் கட்சியை நோக்கிச் சென்றே தீருவார்கள்.

இவ்வாறு கபடக் கோபம் கொண்டுள்ளவர்களின் பலம் என்பது ஹீலியம் காற்றுப் போண்றது. அரசியல்வாதிகளின் தயவில் அல்லது அவர்களை வைத்து புகைப்பட அரசியல் நடத்துகின்ற நிலையிலிருந்த ‘பணியாளர்கள்’ தாங்கள் ஏன் மாறினோம் என்பதை இயக்குனர் சபையூடாகத் தெரிவிக்க வேண்டும்.

ஏனென்றால் கனடிய சட்டதிட்டங்களிற்கு அமைய இலாபநோக்கற்ற அமைப்பாகப் பதிவு செய்து சகல மட்டங்களிலும் தொடர்புகளை வைத்துள்ள அமைப்பின் செயற்பாடுகளிற்கான முடிவெடுக்கும் தலைமையாக இயக்குனர் சபையே உள்ளது என்பதை மறுதலித்து, இயக்குனர்கள் பொம்மலாட்டக் குதிரைகளே என்று கூறுவது போல அதன் பணியாளர்களின் செயற்பாடுகள் அடையாளம் காணப்படுகின்றன.

அதைவிட தமிழர் தெருவிழா போன்ற கட்சிசார்பற்ற “தமிழ்ச் சமுதாயம்” சார்ந்த செயற்பாடுகளில் இவர்களால் எவ்வாறு எதிர்காலத்தில் நியாயமாக நடந்து கொள்ள முடியும் என்ற கேள்விக்கு இயக்குனர்கள் பதில் கூறக்கடப்பட்டவர்கள். இது சமூகம் சார்ந்த செயற்பாடு. தமிழர்கள் ஆரோக்கியமான சமுதாயமாக பரிணமித்ததால் இந்த நிகழ்வு இடம்பெறுகின்றதே தவிர, இது ஒரு அமைப்புச் சார்ந்த நிலைப்பாடல்ல. எனவே எவ்வாறு இதில் நடுநிலையைப் பேண முடியும்?

இவ்வாறு திசையறியாது செல்வது அவர்களிற்கான அரசியற்களத்திற்கான சாவுமணியாக அமையப் போகின்றது. ஏனென்றால் அதற்கான தயாரிப்புக்களையும், முடிவுரையையும் அவர்களே எழுதுகின்றார்கள்.

Advertisements