ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 34வது கூட்ட தொடர் ஜெனிவாவில் இடம்பெற்று வருகின்றது.

ஜெனிவா ஐ. நா .மன்றத்தின் பக்க அமர்வில் கலந்துகொண்டு இன்று (16.03.2017 ) தமிழர்களின் நிலை குறித்தும், இலங்கை அரசு மேற்கொள்ளும் பயங்கரவாத அடக்குமுறைகள் தொடர்பாகவும் தமிழ் இன உணர்வாளரும் திரைப்பட இயக்குனருமான வ.கௌதமன் உரையாற்றியிருந்தார்.

இராணுவத்தினரால் ஈழத்தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டது ஐ.நாவில் நிரூபணம்!

முள்ளிவாய்க்கால் யுத்தத்தில் எமது ஈழத்தமிழர்கள் இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டனர். உலகின் கண்களை கட்டிவிட்டு இத்தனை கொடூரங்களை செய்திருக்க முடியாது என தமிழ் இன உணர்வாளரும் திரைப்பட இயக்குனருமான வ.கௌதமன் உரையாற்றியிருந்தார்.

ஈழத்தமிழர்கள் கொலைசெய்யப்பட்ட விவகாரத்தில், அனைத்து பெரிய நாடுகளும் ஐ.நாவும் தமது பொறுப்பிலிருந்து தவறிவிட்டதாகவும் இதன்போது வ.கௌதமன் தெரிவித்துள்ளார்.

கணிசமான வெளி நாட்டு பிரதி நிதிகள் கலந்து கொண்ட இப்பக்க அமர்வில் தமிழர்களின் கலாச்சார உடையில் தமிழில் உரையாற்றியமை அங்கு இருந்த பலரையும் பெரும் மகிழ்ச்சி அடைய வைத்திருக்கிறது.

இதேவேளை, தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கொல்லப்படுவது குறித்தும் இதன்போது உரையாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisements