சுத்துமாத்தை விபரிக்கிறார் சட்டத்துறை விரிவுரையாளர்(காணொளி)

ஒரு சட்டத்தரணியின் பணி என்பது என்ன உங்களுக்கு சட்டம் தெரியாது என பொதுமக்களுக்கு சொல்லி உங்களுக்கு ஒன்றும் தெரியாது வாயைபொத்திக்கொண்டிருங்கள் நாங்கள் முடிவெடுக்கின்றோம் என சுமந்திரன் செயற்படுவது ஜெனநாயகச்செயற்பாடு அல்ல.

தமிழ்மக்களுக்கு என்ன தேவை என்பதை அரசுக்கும் சர்வதேசத்திற்கும் சொல்பவன் ஜெனநாயகவாதியா அல்லது சர்வதேசமும் அரசும் விரும்புவதை எமது மக்கள் கேட்கவேண்டும் என பிரச்சாரம் செய்பவர்கள் ஜெனநாயகவாதிகளா என்பதை நீங்கள் விளங்கிக்கொள்ள வேண்டும் என சட்டத்தரணியும் யாழ் பல்கலைக்கழக சட்ட விரிவுரையாளருமான குமரவடிவேல் குருபரன் குற்றம் சாட்டியுள்ளார்.

யாழ்.சிவில் சமூக அமையத்தின் ஒழுங்கமைப்பில் யாழ்.ஊடக அமையத்தில் பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்று நடைபெற்றிருந்தது. இதில் சிவில் சமூக அமையத்தின் சார்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அமையத்தின் இணை பேச்சாளரும், சட்டத்தரணியுமான குமாரவடிவேல் குருபரன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

Advertisements