எம் வலிகளை மலேசிய மக்களிற்குத் தெரியப்படுத்த முனைந்த லீனாவுக்காக குரல் கொடுக்க வேண்டியது எமது கடமை.

இலங்கையின் கொலைக்களத்தை ஆவணப்படமாக்கிய பெண்ணை காப்பாற்றும் முயற்சியில் லண்டன் மக்கள்

மலேசிய மனித உரிமைச் செயற்பாட்டாளர் லீனா ஹென்றி இலங்கையின் கொலைக்களம் (பாதுகாப்பு வலயம் )என்கின்ற ஆவணப்படத்தை மலேசியாவில் மலேசியாவின் தணிக்கைப் பிரிவின் அனுமதியின்றி திரையிட்டுக் காட்டியதால் இலங்கை அரசாங்கத்தின் அழுத்தம் காரணமாகக் கைது செய்யப்பட்டு பங்குனி 22 அவருக்கு 3 வருட சிறை வாசம் அல்லது 30,000 றிங்கிற் தண்டப்பணம் கட்ட வேண்டும் என்று தீர்ப்பு வர இருக்கின்றது.

இந்த ஆவணப்படத்தை அடக்கி ஒடுக்குவதற்காக இலங்கை அதிகாரிகளின் தொடர்ச்சியான அழுத்தம் மலேசிய அரசாங்கத்தின் மீது பிரயோகப்படுத்தப் படுகின்றது.

லீனாவை இந்த தண்டனையிலிருந்து காக்கும் முகமாக மலேசிய உயர்ஸ்தானிகத்திற்கு முன்பாக ஓர் அறவழிப் போராட்டம் வியாழக்கிழமை 9 March நடைபெற உள்ளது. Malaysian High Commission in London (45, Belgrave Square, SW1X 8QT), from 6.00-7.00pm (approx) that day.

எம் வலிகளை மலேசிய மக்களிற்குத் தெரியப்படுத்த முனைந்த லீனாவுக்காக குரல் கொடுக்க வேண்டியது எமது கடமை.

Advertisements