“இலங்கை தமிழ் மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றகூடிய அரசியல் ஆளுமையை இன்றைய தமிழ் தலைமைகள் கொண்டிருக்கின்றன எனவும் அதற்கெதிராக அவ்வாறு இல்லை எனவும் சொல்லாடல் களம் அமைந்திருந்தது.

அரங்கு நிறைந்த கூட்டம். வெற்று வார்த்தை ஜாலத்துக்காக அல்ல, இருப்பதற்கு இருக்கைகள் இன்றி நின்றபடி பலரும் விவாத சமரினை மெய் மறந்து ரசித்து கொண்டு இருந்தனர். இப்படி ஒரு தலைப்பைக் கொடுத்து இரு இந்துக்கல்லூரி விவாதிகளின் அரசியல், சமூக விழிப்புணர்வையும் வெளிக்கொண்டுவரும் முகமாக அமைந்திருந்தது.

கொழும்பு இந்து வாதிகளாகவும் யாழ் இந்து பிரதிவாதிகளாகவும் இருந்தனர். கொடுத்த தலைப்பில் சமரசமின்றி விவாதித்து சம்பந்தன் சுமந்திரனுக்கெதிராக யாழ்இந்துக் கல்லூரி மாணவர்கள் முக்கியமாக 12 குற்றச்சாட்டுக்களை ஆதாரங்களோடு மேடையில் காட்டி உரையாற்றினார்கள். ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் அரங்கு நிறைந்த கரகோசம். சுமந்திரனுக்காக கொழும்பு இந்துகல்லூரி மாணவர்களும் அவரை கேள்வி கேட்பதற்கான பகுதியில் யாழ் இந்துக்கல்லூரியும் பங்குபற்றியிருந்தன என அங்கிருந்த தமிழ்கிங்டொத்தின் செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

சொல்லாடலின் ஒருபகுதி உங்களுக்காக இணைக்கப்படுவதோடு மிகவிரைவில் முழுமையாக இணைக்கப்படும் என்பதையும் வாசகர்களுக்கு அறியத்தருகின்றோம்.


யாழ் இந்துவின் மைந்தர்கள் இவர்கள்தான்

tamilkingdom.com