Search

Eelamaravar

Eelamaravar

Month

March 2017

சாள்ஸ் அன்ரனி சிறப்புத் தளபதி கோபித் வீரவணக்க நாள்

தமிழீழ விடுதலைப் புலிகளின் சாள்ஸ் அன்ரனி சிறப்புத் தளபதி கோபித் அவர்களின் 8ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

அடங்காப்பற்றின் வன்னி மண்ணில் மல்லாவியில் பெருமையாக சொல்ல ஓர் வீரத்தளபதி எங்கள் “கேணல் கோபித் அண்ணா !
இளந்தென்றல் வீசும் வன்னி காற்றில் கோபித் எனும் பெயர் உச்சரித்தாலே எம் மனதில் மட்டுமல்ல அடர்ந்த காடுகளுக்கு கூட இனம் புரியாத ஒரு புத்துணர்ச்சி வரும் !

பாசம் எனும் கூட்டில் விழாமல் தேசம் எனும் நேசம் கொண்டு சாள்ஸ் அன்ரனி படையணியை திறம்பட கோலோச்சிய பல சாதனைகளின் சரித்திர நாயகனே !
உன்னுடைய நிதானமான பேச்சும், மற்றவர்களிடையே அன்பாக பம்பலாக நீ பழகும் விதமும் இன்றும் என் மனத்திரையில் அண்ணா !

இரட்டைவாய்க்கால் என உச்சரிக்க முடியவில்லை எம்மால் சிங்களத்தின் சீரழிந்த செயலால் உன்னை இழந்து ஆண்டுகள் தான் ஆச்சு ஆற வில்லை இன்னும் எம் வலிகள்,

அருவி கண்ட விழிகள் அடங்க வில்லை இன்னும்,நெஞ்சுக்குள் நின்றாடும் நினைவுகள் அழியாத கோலங்களாய்…..
அழகாய் பூத்திடும் எம் தமிழீழம் அதில் மொட்டாக மலர்ந்திடும் உன் திருமுகம்!
அன்றும் இன்றும் என்றும் உன் தன்னம்பிக்கை தோற்காது வன்னி மைந்தா !

ஒரு கணம் எம் நினைவுகள் ஒடுக்கியே உங்கள் நினைவுகளை சுமந்து கண்ணீர் பூக்களை காணிக்கை ஆக்குகிறேன் !

நினைவுபகிர்வு மார்ஷல் வன்னி

**

 

 

ஈழத்தமிழ் பெண்ணின் ஆய்வுக்கட்டுரைக்கு அமெரிக்காவில் விருது !

இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் இரசாயன ரீதியாக என்னென்ன தாக்கங்கள் இருக்கும், என்னென்ன இரசாயனப் பொருட்கள் இருக்கும் என மற்றைய போர் நடந்த நாடுகள் தொடர்பாக ஆய்வு செய்திருந்தார்.

போரால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் இரசாயன ரீதியாக என்னென்ன தாக்கங்கள் இருக்கும், என்னென்ன இரசாயனப் பொருட்கள் இருக்கும் என ஈழத்தமிழ்ப்பெண் தயாரித்த ஆய்வுக்கட்டுரை சிறந்த ஆய்வுக்கட்டுரையாக அமெரிக்க நிறுவனத்தால் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இலங்கையில், வல்வெட்டித்துறை இலக்கணாவத்தையைச் சேர்ந்த இலக்கியா – சிதம்பரநாதனே இச்சாதனையை படைத்துள்ளார்.

க.பொ.த. உயர்தரம் வரை உடுப்பிட்டி மகளிர் கல்லூரியில் கல்வி கற்றிருந்த இலக்கியா பங்களாதேஷில் BSC பட்டப்படிப்பையும், ஹொலண்டில் Environmental Technology இல் Msc உயர் பட்டப்படிப்பையும் மேற்கொண்டுள்ளார்.இதேவேளை அவரின் ஆய்வுக்கட்டுரைக்கு அமெரிக்காவை தளமாக கொண்டியங்கும் The Sustainability Research Network நிறுவனமே இவ்விருதினை வழங்கியுள்ளது.

குறித்த நிறுவனத்தினால் சர்வதேச மட்டத்தில் பெறப்பட்ட ஆய்வுக்கட்டுரைகளில் 12 ஆய்வுக் கட்டுரைகள் இறுதிச் சுற்றுக்கு தேர்வாகியிருந்தது.

இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் இரசாயன ரீதியாக என்னென்ன தாக்கங்கள் இருக்கும், என்னென்ன இரசாயனப் பொருட்கள் இருக்கும் என மற்றைய போர் நடந்த நாடுகள் தொடர்பாக ஆய்வு செய்திருந்தார்.

அந்த இரசாயனப் பொருட்களை செயற்கையாகவும் இயற்கையாகவும் எப்படி அழிக்கலாம் என்ற தீர்வையும் முன் வைத்திருந்த ஆய்வுக்கட்டுரைக்கே சர்வதேச அளவில் பிரபலமான இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.

முன்னதாக, டென்மார்க் நாட்டில் சமர்பித்து அங்கிருந்து தேர்வாகியே அமெரிக்காவிற்கு அனுப்பப்பட்டு இந்த விருது கிடைத்துள்ளது.

இதையடுத்து அவுஸ்திரேலியாவில் குறித்த கட்டுரையை சமர்ப்பிக்க அவர் அழைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இவரை மனதார பாராட்டுகின்றேன் இவரது தந்தையார் ஒரு கூட்டுறவு ஊழியர் என்பது குறிப்பிடதக்கது. வறுமையை உடைத்து சாதனை படைத்துள்ளார்.

கீழடியில் அகழ்வாய்வு பணி அதிகாரி இடமாற்றப்பட்டுள்ளார். இந்தி தேசத்தின் சதி

கீழடியில் அகழாய்விற்கான 3வது கட்ட பணிக்கு நிதி கேட்டிருந்த அகழ்வாய்வு பணிகளுக்கான கண்காணிப்பு அதிகாரியாக இருந்த அமர்நாத் அசாம் மாநிலத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.

கீழடி ஆய்வை காலி செய்ய மத்திய அரசு சதி?..3ம் கட்ட ஆய்வுக்கு நிதி கேட்ட அமர்நாத் அசாமுக்கு மாற்றம்! 2500 ஆண்டுகள் பழமை வாய்ந்த தமிழர்களின் பண்பாட்டின் ஆதரங்கள் கிடைத்த கீழடி அகழாய்வின் தலைவராக இருந்த அமர்நாத் அசாம் மாநிலத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

மதுரை: கீழடியில் அகழாய்விற்கான 3வது கட்ட பணிக்கு நிதி கேட்டிருந்த அகழ்வாய்வு பணிகளுக்கான கண்காணிப்பு அதிகாரியாக இருந்த அமர்நாத் அசாம் மாநிலத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். மதுரை அருகே கீழடியில் அகழ்வாராய்ச்சி மேற்கொண்ட போது அங்கு சுமார் 2500 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழர்களின் வரலாற்று பொக்கிஷம் கண்டுபிடிக்கப்பட்டது. சுமார் 5300 பண்டைய பொருட்களும் அங்கே கண்டறியப்பட்டன. மேலும், அகழாய்வு குழியின் இடை அடுக்கில் எடுக்கப்பட்ட பொருட்களில் நடத்தப்பட்ட கரிம பகுப்பாய்வு சோதனையில் கீழடி நகர நாகரீகம் கி.மு. 2ம் நூற்றாண்டுக்கு முந்தையது என்பது உறுதிபடுத்தப்பட்டது.

பாதியில் நிறுத்தம் இந்நிலையில், மத்திய அரசு இந்த ஆராய்ச்சியை பாதியிலேயே நிறுத்தியது. இதனை எதிர்த்து தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும், சமூக ஆர்வலர்களும் எதிர்த்தனர். 3ம் கட்ட ஆய்வு 3ம் கட்ட ஆய்வு இதனிடையே, மதுரை அருகே கீழடியில் புதைந்திருந்த தமிழர் நாகரீகத்தை வெளிக் கொண்டு வந்த புகழ்மிக்க பணியின் கண்காணிப்பாளராக பணியாற்றிய அமர்நாத் ராமகிருஷ்ணன் 3ம் கட்ட ஆய்விற்கான நிதி கேட்டு மத்திய அரசிடம் வேண்டுகோள் வைத்தார்.
அமர்நாத் அசாமிற்கு மாற்றம் அமர்நாத் அசாமிற்கு மாற்றம் இந்நிலையில், கீழடி தொல்லியல் ஆய்வுகளுக்கு தலைமையேற்று நடத்திய அமர்நாத் ராமகிருஷ்ணன் தமிழகத்தில் இருந்து அசாம் மாநிலத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மத்திய அரசு தனது புதிய கொள்கை முடிவுகளைக் காரணம் காட்டி இந்த பணியிட மாற்றத்தை நிகழ்த்தியுள்ளது. ஆய்வில் தொய்வு ஆய்வில் தொய்வு அதிகாரியின் அதிரடி மாற்றத்தால் கீழடி அகழ்வாய்வு பணிகளில் தொய்வு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. இதற்கு தமிழ் ஆர்வலர்களும், வரலாற்று பிரியர்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். அடுத்து யார் இந்த பொறுப்பிற்கு வருவார்கள் என்பதும் தெரியவில்லை. அப்படியே வந்தாலும் இதே உணர்வோடு அகழ்வாராய்ச்சியை மேற்கொள்வார்களா என்ற சந்தேகம் அனைவருக்கும் எழுந்துள்ளது.

tamil.oneindia.com

இரகசிய முகாமிலுள்ளவர்களின் விபரங்களை வெளியிடுங்கள் !

ஜெனிவா தீர்மானங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றதா என்பதை ஐ.நா மனித உரிமைகள் பேரவை ஸ்ரீலங்கா அரசாங்கத்திடம் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதன் மூலம் காணாமல் போனோர் தொடர்பான விடயத்தில் என்ன முன்னேற்றங்கள் காணப்பட்டன என்பது குறித்து ஆராய முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்திலுள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் காணாமல் போன உறவினர்களின் அமைப்புக்கள் ஆகியோருக்கும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிற்குமிடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பு இன்று மதியம் கைதடியிலுள்ள வடமாகாண முதலமைச்சரின் அலுவலகத்தில் இடம்பெற்றது.

குறித்த சந்திப்பில் வடமாகாண விவசாய அமைச்சர் பொன்.ஐங்கரநேசன், வடமாகாண கல்வியமைச்சர் குருகுலராசா மற்றும் வடமாகாண சபை உறுப்பினர்களான துரைராசா ரவிகரன் மற்றும் அனந்தி சசிதரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்நிலையிலேயே ஸ்ரீலங்கா அரசாங்கத்திற்கு ஜெனிவாவில் கால அவகாசம் வழங்கப்பட்டமை குறித்து முதலமைச்சர் கருத்துக்களை வெளியிட்டார்.

காணாமல் போனவர்கள் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் விசாரணை மேற்கொள்ள நியமிக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையினை உடனடியாக வெளியிடுமாறு வடமாகாண முதலமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன் காணாமல் போன தமது பிள்ளைகள் உயிருடன் இருப்பதாக தாய்மார் தெரிவிக்கின்றமை தொடர்பில் அரசாங்கம் உரிய பதில் வழங்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

அதேவேளை, நாட்டில் காணப்படும் இரகசிய சித்திரவதை முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் விபரங்களை அடையாளப்படுத்துமாறு அரசாங்கத்திடம் வலியுறுத்தவுள்ளதாகவும் வடமாகாண முதலமைச்சர் தெரிவித்தார்.

இதேவேளை, காணாமல் போனோரின் தமது உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதை அறிந்து கொள்ளும் வரை தமது போராட்டத்தை கைவிடப் போவதில்லையென கடத்தப்பட்டு கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தின் வவுனியா மாவட்ட தலைவி காசிப்பிள்ளை ஜெயவனிதா தெரிவித்தார்.

காணாமல் போன தமது உறவுகளுடன் ஒரு நாள் என்றாலும் சந்தோசமாக வாழ அரசாங்கம் வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் என கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த யோகராசா கனகரஞ்சினி தெரிவித்தார்.

அத்துடன் தமது உறவுகளை கடத்திச் சென்ற நபர்களின் பெயர் பட்டியல்கள் தம்மிடம் உள்ளதாக திருகோணமலையைச் சேர்ந்த ஜெ.நாகேந்திரன் ஆஷா தெரிவித்தார்.

இந்நிலையில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளும் போராட்டத்தினால் உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதாக வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்தார்.

முதலாம் இணைப்பு

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்திலுள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் காணாமல் போன உறவினர்களின் அமைப்புக்கள் ஆகியோருக்கும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிற்குமிடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பு இன்று மதியம் கைதடியிலுள்ள வடமாகாண முதலமைச்சரின் அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

குறித்த சந்திப்பில் வடமாகாண விவசாய அமைச்சர் பொன்.ஐங்கரநேசன், வடமாகாண கல்வியமைச்சர் குருகுலராசா மற்றும் வடமாகாண சபை உறுப்பினர்களான துரைராசா ரவிகரன் மற்றும் அனந்தி சசிதரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதன்போது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் காணாமல் போனோரின் உறவுகள் மேற்கொண்டு வரும் போராட்டம் தொடர்பாக ஆராயப்பட்டுள்ளது.

எம்மை வைத்து அரசியல் நடத்தாதீர்கள்; சிறிதரனுக்கு மக்கள் எச்சரிக்கை

தமிழ்த் தேசியக் கூட்மைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனின் செயற்பாடுகள் அதிருப்தியளிப்பதாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவரும் பன்னங்கண்டி – சரஸ்வதிபுரம் மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

எந்த அரசியல்வாதிகளாக இருந்தாலும் பாதிக்கப்பட்ட மக்களை வைத்து அரசியல் செய்ய வேண்டாம் என்றும் மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

நிரந்தர காணி உரிமைப்பத்திரத்தை பெற்றுத்தருமாறு வலியுறுத்தி பன்னங்கண்டி – சரஸ்வதி குடியிருப்பு மக்கள் இன்று 07 ஆவது நாளாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

இந்நிலையில் கவனயீர்ப்பில் ஈடுபட்டுவரும் மக்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் நேரில் சென்று சந்தித்துள்ளார்.

எனினும் மக்களை நேரில் சென்று சந்தித்து கலந்துரையாடிய நாடாளுமன்ற உறுப்பினர் தமது பிரச்சனை தொடர்பாக எந்தவித சாதகமான பதிலையும் வழங்கவில்லை என்று பாதிக்கப்பட்ட மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

இதேவேளை மக்களுடனான சந்திப்பின் பின்னர், குறித்த சந்திப்பு தொடர்பாக கருத்து தெரிவிக்குமாறு ஊடகவியலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதற்கு பதிலளித்த நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், கிளிநொச்சி மாவட்ட ஊடகவியலாளர்களைத் தரக்குறைவாக பேசியுள்ளதுடன், ஊடகங்கள் முறையற்ற வகையில் செயற்படுவதாகவும் குற்றம் சுமத்தியதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

இந்நிலையில் தமது போராட்டம் குறித்து கருத்து வெளியிட்ட மக்கள், குறித்த பகுதியிலிருந்து ஒருபோதும் வெளியேற மாட்டோம் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதேவேளை பன்னங்கண்டி – சிவா பசுபதி கிராம மக்கள் தமது காணிகளை மீட்பதற்கு முதுகெழும்பாக திகழ்ந்த ஊடகவியாளர்களை நாடாளுமன்ற உறுப்பினர் தரக்குறைவாக பேசியமைக்கு கண்டனம் தெரிவிப்பதாகவும் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

போரின் போது ஆங்காங்கே குற்றங்கள் இடம்பெற்றது உண்மையே : கோட்டா

போரின் போது குற்றங்கள் இடம்பெற்றன

போரின் போது, அங்காங்கே சில குற்றச்செயல்கள் இடம்பெற்றன என்று சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச ஏற்றுக் கொண்டுள்ளார்.

சிறிலங்காவின் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக இன்னமும் எந்த முடிவையும் எடுக்கவில்லை.

அரசியலில் நுழைவதற்கு விரும்பாவிடினும் நாட்டுக்குச் சேவையாற்றும் வாய்ப்பை நிராகரிக்கமாட்டேன்.

நான் ஒரு நல்ல அரசியல்வாதியாக இருப்பேன் என்பது நிச்சயமில்லை. ஆனால் அரசியலை நான் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்று ஸ்ரீலங்காவின் முன்னாள் ஜனாதிபதி எப்போதும் கூறுவார்.

எனது கொள்கைக்கு இணக்கமான ஒரு தலைவரை ஆதரிக்கத் தயாராக இருக்கிறேன்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அரசியல் பிரவேசத்தை ஒரு உதாரணமாக எடுத்து, அவரது முறைமைகளை ஆராய்ந்து வருகிறேன்.

போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்வதற்கு புதிய விசாரணைப் பொறிமுறைகள் தேவையில்லை. தற்போதுள்ள நீதிப் பொறிமுறைகளே போதுமானது.

போரின் போது தனித்தனியான சில குற்றவியல் சம்பவங்கள் இடம்பெற்றன என்பதை நான் நிராகரிக்கவில்லை. ஆனால் முழு இராணுவத்தையும் குற்றம்சாட்டுவது நியாயமானதல்ல.

எனது கட்டுப்பாட்டில் இருந்த இராணுவப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த குழுவொன்று ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல்களை மேற்கொண்டதாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்த குற்றச்சாட்டு தவறானது.

இராணுவப் புலனாய்வுப் பிரிவு அவ்வாறு செயற்பட்டிருந்தால் அப்போதைய இராணுவத் தளபதியான சரத் பொன்சேகாவே அதற்கு பொறுப்பேற்க வேண்டும்.

இராணுவப் புலனாய்வுப் பிரிவு தனது கட்டுப்பாட்டில் இருக்கவில்லை என்று அவரால் எப்படிக் கூற முடியும்? இது ஒரு நகைச் சுவை.” என்றும் அவர் கூறியுள்ளார்.

 https://youtu.be/Bb_5ikxarZc

போர்க்குற்ற விசாரணைகள் நல்லிணக்க முயற்சிகளை பாதிக்கும்

போர்க்குற்ற விசாரணைகள் நல்லிணக்க முயற்சிகளை ஊக்குவிக்காது என்றும் சமூகங்களுக்கிடையிலான இடைவெளியையே அதிகப்படுத்தும் என்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

விசாரணைகளையும் வெளிநாட்டு நீதிபதிகளையும் ஒரே நேரத்தில் கொண்ட வருவதன் மூலம் இந்த சமூகங்களை இணைக்க முடியும் என்று எவ்வாறு கூற முடியும்? அவ்வாறு செய்ய நினைத்தால் அனைவருக்குமான நல்லிணக்கம் இருக்காது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

போருக்குப் பின்னர், எம்மால் என்ன செய்ய முடியும்? பின்னால் சென்று, இந்த விடயங்கள் பற்றிப் பேசினால் சமூகங்கள் ஒன்றுபடாது. அது இடைவெளியைத் தான் அதிகப்படுத்தும்.

தமிழர்கள் போர்க்குற்ற விசாரணை பற்றிப் பேசும் போது, பெரும்பான்மை இனத்தவரான சிங்களவர்கள், பௌத்த மதகுருமார் மற்றும் காவல்துறையினரின் படுகொலைகள் போரின் போது தாம் எதிர்கொண்ட கொடூரங்கள் பற்றி பேசுவார்கள்.

அது போருக்குப் பிந்திய குணமாக்கல் செயற்பாடுகளின் வேகத்தைக் குறைக்கும்.” என்றும் கோட்டாபய ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

இந்தியா ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த தீர்மானித்தது

சீனா தொடர்பான நிலைப்பாடே ஸ்ரீலங்காவில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தை இந்தியாவிற்கு ஏற்படுத்தியதாக ஸ்ரீலங்காவின் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்காவில் செயற்படும் வெளிநாட்டு ஊடகவிலாளர்களை சந்தித்த போதே அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.

காங்கிரஸ் தலைமையிலான இந்திய அரசாங்கம் ஸ்ரீலங்கா அரசாங்கத்துடன் மிகவும் ஒத்துழைப்புடன் செயற்பட்டதாகவும் அதனை அப்போதைய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஷிவ் சங்கர் மேனனின் நூல் எடுத்துக்காட்டியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

எனினும் இந்தியாவில் பாரதீய ஜனதா கட்சி ஆட்சியை கைப்பற்றிய பின்னர் அஜித் தோவல் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டதை தொடர்ந்து சீனா தொடர்பான விவகாரம் தலைதூக்க ஆரம்பித்ததாக கோட்டாபய ராஜபக்ச கூறியுள்ளார்.

சீனாவின் நிதி உதவியுடன் முன்னெடுக்கப்படும் கொழும்பு துறைமுக நகரத் திட்டம் மற்றும் கொழும்புத் துறைமுகத்தின் தெற்கு இறங்குதுறை ஆகியவற்றை சீனாவிடம் இருந்து மீளப் பெற்றுக்கொள்ள வேண்டும் என அஜித் தோவல் இரண்டு தடவைகள் கோரியதாகவும் அவர் கூறியுள்ளார்.

பிரபாகரனை பாதுகாப்பாக மீட்கும் திட்டத்தை அமெரிக்கா முன்வைக்கவில்லை – கோத்தா

போரின் இறுதிக்கட்டத்தில் போர் வலயத்தில் இருந்து விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனை பாதுகாப்பாக மீட்கும் திட்டம் எதையும் அமெரிக்கா கொண்டிருந்ததா என்று தன்னால் உறுதியாகக் கூற முடியாது என்று சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று வெளிநாட்டுச் செய்தியாளர் சங்கத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர்களுடன் நடத்திய சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.

முள்ளிவாய்க்காலில் போரின் இறுதிக்கட்டத்தில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் மற்றும் உயர்மட்டத் தலைவர்களை பாதுகாப்பாக மீட்கும் திட்டத்தை அமெரிக்கா முன்வைத்தது என்றும், ஆனால் சிறிலங்கா அரசாங்கம் அதற்கு இணங்கவில்லை என்றும் முன்னர் தகவல்கள் வெளியாகியிருந்தன.

இதுகுறித்து கோத்தாபய ராஜபக்சவிடம் நேற்று கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு அவர்,“அத்தகைய திட்டம் ஒன்று இருந்ததாக என்னால் உறுதியாக கூற முடியாது.

ஆனால், பொதுமக்களை மீட்பதற்கு அமெரிக்கா விரும்புவதாக, அப்போதைய அமெரிக்கத் தூதுவர் ரொபேர்ட் ஓ பிளேக் என்னிடம் கூறினார்.

எனினும். அவர் முன்வைத்தது பிரபாகரனையோ, புலிகளின் உயர்மட்டத் தலைவர்களையோ மீட்பதற்கான திட்டம் அல்ல. அது ஒரு பரிந்துரையாக மட்டுமே இருந்தது” என்று பதிலளித்தார்.

ரஜனியைத் தற்கொலை செய்வதற்கு துாண்டிய காவாலிகள் !

நல்லுாரடியில் இன்டைக்கு ரஜனியை இஞ்ச வரவைப்பதற்கான ஆதரவுப் போராட்டம் ஒன்டு நடந்தது. யாழ்ப்பாணத்தில் 99 வீதமானவர்கள் எழுதுப்படிக்கத் தெரிஞ்சவர்கள். மிகுதி ஒரு வீதமானவர்களே எழுத்தறிவு குறைந்தவர்கள். யாழ்ப்பாணச் சனம் எவ்வளவு கஸ்டப்பட்டாலும் படிப்பைக் கைவிடாதுகள். யாழ்ப்பாணத்தில இருக்கிற எழுதப்படிக்கத் தெரியாத ஒரு வீதமானதுகளில செரியான பிக்காலித்தனமான போக்குள்ளவர்களில் ( ரஜனியால் வில்லன்கள் என பந்தாடப்படுபவர்கள் போல் உள்ள) சிலரைத் திரட்டி அவர்களின் உறவுகளையும் கிழடு கட்டைகளையும் கொண்டே இந்த ஆர்ப்பாட்ம் நடாத்தப்பட்டது.

இதில் இன்னொரு முசுப்பாத்தி என்னவென்டால் நானும் ஆர்ப்பாட்டம் எப்புடி நடக்குது என்டு விடுப்புப் பாக்கப் போய் தேவையில்லாமல் அதுகள ஏத்தி வந்த ஒரு வான் றைவரிட வானை படம் பிடிக்க முற்பட்டு அவன் தன்ர வில்லத்தனத்தை தன்ர அடியாட்களோட காட்ட முற்பட்டுவிட்டான்.

நான் என்ன ரஜனியோ… பாஞ்சு பாஞ்சு புரட்டி எடுக்க…. வடிவேலப் போல அப்புடியே… ”வாடா… வாடா….” என்டு சொல்லிக் கொண்டு ஓடிவந்துட்டன்…….

உண்மையா ரஜனி ரகசியமா இஞ்ச வந்து இந்த ஆர்ப்பாட்டத்தைப் பார்த்திருந்தால் ”லைக்காகாரனுக்கு செவிட்டைப் பொத்தி ஒரு அறை விட்டுப்போட்டு துாக்கில தொங்கி தற்கொலை செய்திருப்பார்…….

”ஏன்டா… டேய்… ஏன்டா….. உங்களுக்கு இந்த வேலை””””

**

Parani Krishnarajani

போருக்கு பிந்திய சமூகத்தில்
உருக்கொள்ளும் உளவியற்சிக்கல்கள்
பலதரப்பட்டவை.
அதில் இது ஒரு வகை.
இன்று யாழில் ரஜனிக்காக போராடியவர்களுக்கு உடனடியாக ஒரு
கவுன்சிலிங் தேவை.

**

தமிழர்களின் குரல்

ஈழப்போர்ல வக்காலி ஒங்கள கொன்னுருக்கணும்டா ஈனப்பயலுகளா >_< ஈழத்தமிழர்களோட நெஞ்சுறுதிய பாத்து பலமுறை மெய்சிலிர்த்துருக்கேன்டா, ஆனா நீங்கமட்டும் கையில கெடச்சிங்கன்னா வக்காலி கண்டம்துண்டமா வெட்டி வீசணும் >_<

யாருக்கு யார்டா தலைவன் த்தூ….

**
யாழில் ரஜினிக்காக ஆர்ப்பாட்டம்: நடத்தப்பட்டதன் பின்னணி என்ன..?

நடிகர் ரஜினிகாந்த் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளவிருந்த நிலையில், அதற்கு தடை ஏற்படுத்தியவர்களுக்கு எதிராக யாழ். நல்லூரில் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.

ஈழத்துக் கலைஞர்களின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டதாக கூறப்படும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் குறித்து தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறிப்பாக ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட அனைவரும் ஏமாற்றி அழைத்து வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ். மற்றும் வவுனியாவில் இருந்து அவர்கள் அழைத்து வரப்பட்டுள்ளார்கள்.

குறிப்பாக வீடு இல்லாதவர்களுக்கு வீடு பெற்றுத்தருவதற்கான கூட்டம் என தெரிவித்தே பலரும் அழைத்து வரப்பட்டுள்ளனர்.

இது குறித்து ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கருத்து தெரிவிக்கையில், “யாழ். வேலணை பகுதியை சேர்ந்த எங்களை, யாழ்ப்பணத்தில் கூட்டம் என பஸ்ஸில் ஏற்றி வந்தார்கள்.

காலை 10 மணியளவில் எங்களை ஏற்றினார்கள். மதிய சாப்பாடு மட்டும் வழங்கியதுடன், பின்னர் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அழைத்து வந்து விட்டுள்ளார்கள்” என தெரிவித்துள்ளார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட மற்றும் ஒருவர் கருத்து தெரிவிக்கையில், “நாங்கள் யாழ்ப்பாணம் அராலி பகுதியை ​சேர்ந்தவர்கள். வீட்டுத் திட்டங்கள் கிடைக்காதவர்கள், வீடு தேவையானவர்களுக்கு தர போறதாக கதைத்தார்கள்.

இதனையடுத்து, வீடு கையளிப்பது தொடர்பான கூட்டம் எனக்கூறி அழைத்து வந்து இங்கே விட்டுள்ளார்கள். இங்கு வந்த பின்னரே ரஜினி யாழ்ப்பாணம் வர வேண்டும் என்பது தொடர்பான ஆர்ப்பாட்டம் என்று” என அவர் கூறியுள்ளார்.

இல்லத்தின் வாயில்க்கதவில் தலைவர் பிரபாகரன் உருவத்தை செதுக்கிய தமிழன் !

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் அவர்களின் தோற்றத்தை தனது இல்ல பிரதான நுழைவாயில் கதவில் செதுக்கியுள்ளார் தமிழ் நாட்டைச் சேர்ந்த வழக்கறிஞர் சதீஷ்குமார்.

புதிதாக அமைக்கப்பட்ட தனது இல்லத்திலேயே இவர் இந்த முயற்ச்சியை மேற்கொண்டுள்ளார் .

குறித்த இல்லத்தின் புதுமனைப் புகு விழாவிற்குச் சென்ற பலர் கதவில் தமது தலைவர் பிரபாகரனின் உருவத்தை பார்த்து மகிழ்ச்சி அடைந்ததுடன் புகைப்படங்களையும் எடுத்துக்கொண்டுள்ளனர்.

புலிகளை அழித்தவரின் புலிகள் மீதான அச்சம் !

புலிகளை அழித்தவரின் அடுத்த கட்ட முயற்சியால் தொடரும் புலிகள் மீதான அச்சம்

ஆட்சியை கவிழ்த்தே தீர வேண்டும் என்ற வகையில் புதுப் பரிமாணத்தில் இலங்கை தற்போது பயணித்துக் கொண்டு இருப்பதை அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது.

அதற்கான ஆரம்ப கட்டப் படிகளாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கூட்டு எதிர்க்கட்சியுடன் இணைந்து பல்வேறு செயற்பாடுகளை செய்து கொண்டு வருகின்றார்.

அதற்காக மகிந்தவின் முன்னைய கூட்டமாக இருக்கட்டும், அண்மைய கூட்டமாக இருக்கட்டும் அனைத்திலும் கூறப்படுவது “யுத்தத்தை வெற்றி கொள்ளச் செய்தது மகிந்தவே”

“மகிந்தவினாலேயே நாடு சுதந்திரம் பெற்றது, புலிகளை அழித்தவர் மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும்” இந்தக் கருத்தே சாராம்சம்.

அந்த வகையில் அண்மையில் நடைபெற்ற காலி கூட்டத்தில் உரையாற்றிய மகிந்தவிற்கு ஆதரவு தெரிவித்த அனைத்து அரசியல் வாதிகளினதும் கருத்தும் இவை மட்டுமே.

தேர்தல் பிரச்சாரத்திற்கு ஒத்த வகையில் கூட்டங்களை நடாத்திக் கொண்டு வரும் மகிந்த தரப்பு, கடந்த கால ஆட்சியில் செய்யப்பட்ட எதனையும் பிரதானமாக கூறவில்லை.

அவர்களின் ஒரே பிரதான வாதம் மகிந்த புலிகளை அழித்தவர் என்பது மட்டுமே. அவரின் அடுத்த கட்ட நகர்வு என்ன? இதற்கான காரணம் என்ன?

மக்கள் மத்தியில் இப்போதைக்கு மகிந்த திருட்டு, ஊழல் ஆட்சியை நடத்தியவர் என்ற கருத்து நல்லாட்சியினால் வலுப்படுத்தப்பட்டு விட்டது. மகிந்த கடந்த காலத்தில் செய்த ஊழல்களை படிப்படியாக அம்பலமாக்கும் முயற்சியில்.,

நல்லாட்சி அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. ஆனால் யுத்த வெற்றியினை மட்டும் மகிந்த வசம் இன்றி எடுக்கவோ அகற்றவோ முடிய வில்லை.

மகிந்த தரப்பிற்கு இப்போது உள்ள ஒரே துருப்புச்சீட்டு யுத்த வெற்றி மட்டுமே. அதனை மக்கள் மனதில் மீண்டும் மீண்டும் புகுத்தும் செயற்பாடுகளையே செய்து வருகின்றார்.

யுத்தம் மௌனிக்கப்பட்ட பின்னரும் இன்று வரை விடுதலைப்புலிகள் முற்றாக அழிக்கப்பட்டு விட்டார்கள் என்பதை மக்கள் ஏற்றுக் கொள்ளவே இல்லை. அதற்கு அரசியல் வாதிகள் இடம் கொடுக்கவும் இல்லலை என்பதே உண்மை.

அதனை மறக்க வைக்காமல் அன்றாடம் மீண்டும் புலிகள் வருவார்கள் என்ற அச்சம் மக்களிடையே பரப்பப்பட்டு கொண்டே வருகின்றது. அதனை சரியாக கையாளுகின்றது மகிந்த அணி என்றே கூறப்படுகின்றது.

ஆட்சியை பிடிக்க இப்போது மகிந்தவிடம் உள்ள பலம் யுத்த வெற்றி. அது மகிந்த வசம் இருக்கும் வரையில் மகிந்தவை மக்கள் மனதில் இருந்து அவ்வளவு எளிதில் புறந்தள்ளி விட முடியாது.

அது இருக்கும் வரை மகிந்தவின் ஆட்சிக்கு எதிரான செயற்பாடுகள் தொடர்ந்து கொண்டே இருக்கும். அப்படி பார்க்கும் போது மகிந்தவின் பிரதான பலம் நல்லாட்சியின் பிரதான பலவீனம் இரண்டுமே இது மட்டுமே.

அந்த வகையில் மக்களை திசை திருப்ப தம் பக்கம் சேர்க்க கூட்டங்கள் மூலம் மகிந்த அணி புலிகளை அழித்த கதையை நினைவு படுத்திக் கொண்டு வருகின்றது.

இவ்வாறாக நாடு முழுதும் செய்யப்படும் மகிந்தவின் பிரச்சாரங்கள் மக்கள் மனதை மாற்றமடைய வைக்கக் கூடும். இதனை எப்படி அரசு கையாளப்போகின்றது என்பது கேள்விக்குறியே.

புலிகள் என்பது மக்களுக்கு புளித்துப் போன விடயமாக இருந்தாலும் கூட அந்த அச்சம் இன்று வரை மக்கள் மத்தியில் முற்றாக நீங்கவில்லை. இதற்கு அரசியல் வாதிகளும் ஒரு காரணம்.

இதனை நன்றாக அறிந்து கொண்டு மகிந்த ஆட்சியை பிடிக்க புலிகளை முன்னிறுத்தி சரியான காய் நகர்த்தல்களைச் செய்து வருதாக தென்னிலங்கை அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர்.

என்றாலும் இவை எவ்வாறான தீர்ப்புகளை மாற்றங்களைத் தரும் என்பது மட்டும் இது வரையில் வெளிப்படையில்லாத விடயமே.

இலங்கை மீது நம்பிக்கை இல்லை..! சர்வதேச விசாரணை வேண்டும்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையினால் வழங்கப்பட்டுள்ள இரண்டு ஆண்டு கால அவகாசத்தில் இலங்கை தனது கடமையை பூரணமாக நிறைவேற்றும் என்பதில் நம்பிக்கையில்லை என கனேடிய பாராளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனாந்தசங்கரி தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 34வது கூட்ட தொடர் அண்மையில் இடம்பெற்ற நிலையில், கனேடிய பாராளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனாந்தசங்கரி லங்காசிறி 24 செய்தி சேவைக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து எமது செய்திச் சேவைக்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

2009ஆம் ஆண்டு 18ஆம் திகதி அதிகாலை புலிகள் தரப்பில் கஜேந்திரகுமாருடன் கதைத்தது யார்? நீண்ட மௌனத்தின் பின் பதில்..

ஐக்கிய நாடுகள் சபையின் 34ஆவது கூட்டத்தொடரில் தமிழர் தரப்பு ஏமாற்றப்பட்டதற்கான காரணங்கள், இது எவ்வாறான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது, அடுத்தகட்ட நடவடிக்கை என்ன என்பது பற்றி இவ்வாரம் லங்காசிறியின் அரசியற்களம் வட்டமேசையில் ஆராயப்பட்டுள்ளது.

மேலும், 2 வருட கால நீடிப்பானது நம்பகத்தன்மையை குறைக்கும் ஒரு தீர்மானம் எனவும், காணாமல் போனோருடைய விவகாரம், முன்னாள் போராளிகளின் தற்போதைய நிலை, இந்த நல்லாட்சி அரசாங்கம் இவற்றிற்கு தீர்வு கொடுக்காதது ஏன்? போன்ற பல வினாக்களுக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் மனித உரிமைகள் செயற்பாட்டாளருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இணைந்து கொண்டு பதிலளித்துள்ளார்.

புலிகள் அமைப்பில் இருந்தமைக்காக 8 ஆண்டுகள் சிறை : நகங்களும் பிடுங்கப்பட்டன.! இலங்கை அகதிகளின் சோகம்

இந்தோனேசியாவில் இருந்து நாடு கடத்தப்படும் அபாயத்தில் 22 இலங்கை அகதிகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்தாண்டு இந்தோனேசிய கடலில் தத்தளித்த 44 இலங்கை தமிழ் அகதிகள் பல்வேறு அழுத்தங்களுக்கு பின்னர் அந்நாட்டில் தற்காலிகமாக அனுமதிக்கப்பட்டனர்.

குறித்த அனைவரும் தமிழகத்திலிருந்து அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முயற்சித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், குறித்த 44 அகதிகளில் ஐந்து பேருக்கு அகதி அந்துஸ்து வழங்கப்பட்டுள்ளதாகவும் 17 அகதிகள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள 22 அகதிகளும் நாடுகடத்தப்படக்கூடிய ஆபத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அகதிகளில் ஒருவரான சிவரஞ்சனி இந்தோனேசியாவின் Lhokseumawe என்ற அகதிகள் மையத்தில் வசித்து வருகிறார்.

சிவரஞ்சனிக்கு அறுவைச் சிகிச்சை வழியே ஆண்குழந்தை பிறந்துள்ள நிலையில், மூன்றே நாட்களில் அகதிகள் மையத்திற்கு மீண்டும் அவர் வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சிவரஞ்சனியின் கணவர் பகிதரம் கந்தசாமி தங்கள் சூழ்நிலை பற்றி நியூசிலாந்து ஊடகம் ஒன்றிடம் கருத்து தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், “கடந்த வருடம் ஜூன் மாதம் இந்தோனேசிய கடலில் தத்தளித்த அவர்கள் நியூசிலாந்து செல்ல முயற்சித்தாக கூறியுள்ளனர்.

ஆனால், ஐ.நா அகதிகள் முகமை தங்களிடம் கருத்து கேட்ட போது நாங்கள் அவுஸ்திரேலியா செல்ல முயற்சித்ததாக தவறாக பதியப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

அத்துடன் அகதிகள் படகுகளை அவுஸ்திரேலியா திருப்பி அனுப்பிவரும் செய்தியினை நாங்கள் அறிந்திருந்ததால் நியூசிலாந்து செல்லவே முயற்சித்தோம் என்கின்றனர்.

விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்ததற்காக தாம் எட்டு ஆண்டுகள் இலங்கைச் சிறையில் இருந்ததாகவும், நகங்கள் பிடுங்கப்பட்டு சி.ஐ.டியினரால் தொடர்ந்து சித்ரவதைக்கு உள்ளனாதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

44 அகதிகளும் தலா ஒன்றரை லட்சம் ரூபாய் (இந்திய மதிப்பு) கொடுத்து வேதாரண்யத்திலிருந்து படகில் வந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

நியூசிலாந்தில் கரை சேர்ப்பதாக சொன்ன ஆட்கடத்தல்காரர்கள், எரிப்பொருள் தீர்ந்ததும் வேறு படகில் தப்பிவிட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டுள்ள நிலையில், தன்னால் உட்கார, நிற்கக்கூட முடியவில்லை என கலங்கியுள்ளார் சிவரஞ்சனி.

கெளரவமான வாழ்க்கையை எதிர்ப்பார்த்துள்ள இந்த அகதிகள், இலங்கைக்கே மீண்டும் திருப்பி அனுப்பப்பட்டால் கடும் அச்சுறுத்தல்களுக்கு உள்ளாக்கப்படுவோம் என அஞ்சுவதாக” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

*
சிங்களவர் என்றால் குற்றமில்லை தமிழர் என்றால் குற்றம்..

இலங்கையில் இப்போது முக்கூட்டுத் தலைவர்களின் திட்டமிடலில் இன விவகாரம் கையாளப்படுகிறது. இந்த நாட்டின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க இவர்களே முக்கூட்டுத் தலைவர்கள்.

மகிந்த ராஜபக்­வை தேர்தலில் வீழ்த்துவது, அவருக்கு நிகராக மைத்திரிபால சிறிசேனவை தேர்தல் களத்தில் இறக்குவது, மைத்திரி – ரணில் இணைந்த கூட்டு அரசை நிறுவுவது, இரா.சம்பந்தருக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வழங்குவது என்ற நடவடிக்கைகள் அனைத்துக்கும் பின்னணியாக இருந்து செயற்பட்டவர் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க என்பது மறுக்க முடியாத உண்மை.

என்னுடன் போட்டியிடும் அந்த வீரன் யார்? அவரை அறிய விரும்புகிறேன் என்று மகிந்த ராஜபக்ச கர்ச்சித்த போது, மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்துவது என்ற தீர்மானம் சந்திரிகா குமாரதுங்கவால் எடுக்கப்பட்டிருந்தது.

இதற்குப் பின்னணியாக சில வெளிநாடுகளும் இருந்தன என்பது வேறு கதை.

ஷ மைத்திரிபால – ரணில் – சந்திரிகா என்ற முக்கூட்டுத் தலைவர்களின் திட்டமிடலில் மகிந்த ராஜபக்சவுக்கான அரசியல் தோல்வி நிறைவேற்றப்பட்டது.

இந்த வெற்றியை அடுத்து போர்க்குற்ற விசாரணையில் இருந்து முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தரப்பையும் படைத்தரப்பையும் காப்பாற்றுவது என்ற விடயத்தை முக்கூட்டுத் தலைவர்களும் மிகச்சிறப்பாகக் கையாண்டனர்.

இதற்கு இரா. சம்பந்தருக்கு வழங்கப்பட்ட எதிர்க்கட்சித் தலைவர் பதவி மிகுந்த உதவி புரிந்தது.

ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தின் இரண்டு வருட கால அவகாசம் எல்லாப் பிரச்சினையில் இருந்தும் தப்புவதற்கான வழியாயிற்று.

இவை நடந்து முடிய முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா அம்மையர் தனது தாளத்தை மாற்றத் தொடங்கி விட்டார்.

ஆம், போர்க்குற்றம் தொடர்பில் படையினர் மீது விசாரணை நடத்த முடியாது. அவர்களுக்குத் தண்டனை வழங்க முடியாது என்பதாக சந்திரிகாவின் கதை உள்ளது.

வன்னிப் பெரு நிலப்பரப்பில் நடந்த தமிழின அழிப்புத் தொடர்பில் எந்தப் பேச்சுக்கும் இடமில்லாமல் அதனை அப்படியே தாட்டுவிடுவதுதான் முக்கூட்டுத் தலைவர்களின் திட்டம். இது சந்திரிகாவூடாக வெளிப்பட்டுள்ளது.

போர்க்குற்றம் தொடர்பில் படையினருக்கு எதிராக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காது என்று கூறும் சந்திரிகா அம்மையார்,அதேநேரம் சிறைகளில் வாடும் தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் கருத்துக் கூறுகையில், அவர்கள் குற்றம் செய்ததனாலேயே தண்டனை அனுபவிக்கின்றனர் என்கிறார்.

ஆக, ஐ.நா மனித உரிமைகள் ஆணையம் வழங்கிய இரண்டு வருட கால அவகாசத்தை தமிழ் மக்களுக்கு எதிராக பயன்படுத்துவதேயன்றி வேறு எதுவும் நடக்காதென்பது தெட்டத் தெளிவாகிறது.

அதாவது சிறைகளில் வாடும் தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் விசாரணை நடக்கும். அவர்கள் குற்றவாளிகளாக அறிக்கையிடப்படும். இந்த வேலையை இலங்கை அரசு நியமிக்கின்ற விசாரணைக் குழு செய்து முடிக்கும்.

அதேசமயம் படையினர் எந்தக் குற்றமும் இழைக்கவில்லை. அவர்கள் வன்னி யுத்தத்தில் எவரையும் சுட்டுக்கொல்லவில்லை என்பதாக முடிவு இருக்கும்.

இதுவே இரண்டு வருட கால அவகாசத்தில் நடக்கும்.

ஆம், சிங்களவர்கள் தமிழர்களுக்கு எதிராக எது செய்தாலும் அது குற்றமில்லை. ஆனால் சிங்களவர்கள் எந்தக் குற்றத்தை தமிழர்கள் மீது சுமத்தினாலும் குற்றம் சுமத்தப்பட்டவருக்குத் தண்டனை கிடைக்கும். இதுவே நடக்கப் போகிறது.

அட, பரவாயில்லை. தமிழர்கள் எதை இழந்தாலும் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை தமக்காக்கி இருக்கிறார்களே! அது போதாதா என்ன?

வலம்புரி

புலத்துக்குள் புகுந்த புலிகளின் 300 இடைநிலைத் தளபதிகள்!

முறியடிப்பு தந்திரத்தின் செயற்பாடுகள் எப்படிப்பட்டவையாக இருக்கும் என்பதை சற்று விரிவாக பார்ப்பதன் ஊடாகவே அதன் தாற்பரியங்களை இலகுவாக நாம் உணர்ந்துகொள்ள முடியும்.

இந்த முறியடிப்பு தந்திரத்தின் செயற்பாடானது எதிரிகளை வீழ்தமுடியாத சந்தர்ப்பத்திலும்,எதிரிகளை இனங்காணமுடியாத சந்தர்ப்பத்திலும், எதிரிகளின் கட்டமைப்புக்களை சிதைக்கும் நோக்கத்துடனும் மேலும் எதிரிகளின் ஒருங்கிணைப்பை சிதறடிக்கும் நோக்கத்திற்காகவும் இன்னும் எதிரிகளின் ஆளணிகளை சிதைப்பதற்காகவும் எதிரிக்கு எதிரி இத்தகைய தந்திரங்களை சரமாரியாக பரஸ்பரம் உபயோகிப்பது இயல்பானதொன்றே.

ஆனால் இப்படியான நடவடிக்கைகளை எதிரிகள் தமது எதிரிகளை நோக்கி ஏவும்பொழுது அவ் எதிரிகளுக்கு பக்கபலமாக இருக்கும் அனைவரும் ஒருவித குழப்ப நிலைக்குள் இயல்பாகவே தாம் சென்றுவிடுவதை தடுப்பதென்பது மிகவும் கடினமானதொன்றே.

அதாவது இந்த முறியடிப்பு புலனாய்வுத் தந்திரத்தை சுருக்கமாக நாம் அனைவரும் இதை விளங்கும்படி கூறவேண்டுமானால் இதை எதிரிகள் தமது எதிரிகளுக்குள் உருவாக்கிவிடும் “பொய்யான செய்திகளே” இந்த முறியடிப்பு தந்திரத்தின் சூட்சுமமாகும்.

உண்மையில் கடந்த முப்பது ஆண்டுகால எமது ஆயுதப் போராட்ட வரலாற்றிலும் பல்லாயிரக்கணக்கான பொய்த் தகவல்களை சிங்கள அரச புலனாய்வாளர்கள் தமது ஊடகங்கள் வாயிலாகவும், எமது எல்லைக்குள் அவர்களால் தமக்காக மாற்றியமைக்கப்பட்ட தமழ் புலனாய்வு முகவர்கள் ஊடாகவும் நேரடியாகவே பரப்பிவிடப்பட்ட பொய்யான தகவல்களுக்கும் அளவே கிடையாது.

இப்படியான பொய்த் தகவல்களால் போர்தொடங்கி அதன் முடிவுவரைக்கும் ஏன் தற்போதுவரைக்கும் இலங்கை புலனாய்வாளர்கள் எமது இனத்துக்குள் பரவலாக பொய்ச்செய்திகளை கட்டவிழ்த்து தமது முறியடிப்பு புலனாய்வுத் தந்திரத்தை தொடுத்தவண்ணம் இருப்பதையே நாம் நன்கு அவதானிக்கமுடிகின்றது.

மேலும் கடந்த சில வாரங்களுக்கு முன்பு சிங்கள புலனாய்வாளர்களால் ஒரு பொய்யான செய்தியொன்று கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளதை நீங்கள் ஊடகங்கள் வாயிலாக அறிந்திருப்பீர்கள்’ அதாவது த.தே.கூட்டமைப்பின் உறுப்பனரான “துரோகி சுமந்திரனை” புலத்தில் இருக்கும் நெடியவன் குழுவினர் அவரை கொல்வதற்காக திட்டம் தீட்டியுள்ளார்கள் என்பதே அந்த செய்தியாகும்.

இதை உண்மையோ,பொய்யோ என்று நீங்கள் அறிவதென்பது இனி இயலாத காரியம். ஏனென்றால் இந்தச் செய்தி உலகம் பூராகவும் தற்போது தீயாகப் பரவிவிட்டது. ஆனாலும் இலங்கை புலனாய்வாளர்களின் இப்படியான பொய்யான செய்திகளை நிதானமாக சிந்திக்கும் நம் ஒவ்வொருவரும் இதன் உண்மைத் தன்மையை உடனடியாகவே உணர்ந்துகொள்ள முடியும்.

மேலும் எதிரிகளால் எமக்கெதிராக பகிரங்கமாக உருவாக்கிவிடப்படும் இப்படியான பொய்யான செய்திகளிற்குரியவர்களின் மேலதிக தேவைகள் கருதியே எதிரிகள் அவர்களை தமது வலைக்குள் வீழ்த்துவதற்காக எமக்குள் இருப்பவர்களில் தாங்கள் அவர்கள்மீது அளவுகடந்த கரிசனைகொள்வதான பாணியை வெளிப்படுத்துவதன் ஊடாக எமக்குள் நாமே சந்தேகங்களை வளர்த்து அவர்களை ஓரங்கட்டும் பட்ச்சத்தில் எதிரிகளின் இலக்கும்,தேவைகளும் இலகுவாகவே வெற்றியடைந்துவிடும்.

மேற்குறிப்பிட்ட அனைத்தும் எமது எதிரிகளின் புலனாய்வாளர்களின் பொதுவான செயற்பாடுகளாகும்.

இதில் துரோகி சுமந்திரன் என்பவர் விதிவிலக்கே’ ஏனென்றால் துரோகி சுமந்திரனை சிங்கள எதிரிகள் ஏற்கனவே தமது வலைக்குள் வீழ்த்திவிட்டே அவரை புலிகள் கொலைசெய்ய முற்படுவதாக தமது பொய்களை உலகம் பூராகவும் கட்டவிழ்த்துவிட்டுள்ளார்கள் என்பதே யாரும் மறுக்கமுடியாத உண்மை.

மேலும் ஒரு முக்கியமான விடையம் என்னவெனில், சிங்கள புலனாய்வாளர்கள் தற்போது கட்டவிழ்த்திருக்கும் பொய்யைக்கூட தமது கைப்பாவையாக புலத்தில் மாற்றிவைத்திருக்கும் நெடியவன் அணியையே தாம் மேற்கோள்காட்டி அவர்கள்தான் சுமந்திரனை அழிக்க திட்டம்போடுவதாக சொல்லியிருக்கும் பொய்யும்கூட நெடியவனை தாங்கள் இயக்கவில்லை என்று குறிப்பாக புலம்பெயர் மக்களுக்கு அவரை தற்போதும் எமது இயக்கத்தின் பிரதானமான புள்ளியாக காண்பிக்க முயல்வதையும் இங்கே அவதானிக்க முடிகின்றது.

இன்னும் இலங்கைப் புலனாய்வாளர்களின் இந்தமாதிரியான பொய்கள் ஊடாக ஏற்கனவே நோர்வேயில் சிறைப்பட்டிருக்கும் நெடியவனை பயன்படுத்தி புலத்திலிருக்கும் நெடியவனின் விசுவாசிகளை உற்சாகப்படுத்தி அதன் ஊடாக தமக்கான நிதி வசூலிப்புக்களையும், புலத்துக்குள் புகுந்துள்ள புலிகளின் இடைநிலைத் தளபதிகளின் செயற்பாடுகளை இனங்காண்பதற்காகவும் மேலும் அவர்களை இயங்கவிடாமல் தடுப்பதற்காகவுமே தற்போதைய பொய்த் தகவலின் ஊடாக இலங்கைப் புலனாய்வாளர்கள் தாம் எதிர்பார்பதை நாம் இலகுவாக உணர்ந்துகொள்ள முடிகின்றது.

மேலும் சுமந்திரனின் துரோகச் செயற்பாடுகள் ஊடாக எமது ஒட்டுமொத்த இனத்துக்கும் பாரிய துரோகங்கள் நிகழ்ந்துவிட்ட பின்னரும் அவரை எமது எதிரியானவன் மாற்றுவதற்காக முயற்சிக்கிறான் என்பதைவிட முழுமையாக தன்பக்கம் மாற்றியமைக்கவே முயல்கிறான் என்பதே பொருத்தமானது.

மேலும் புலிகளைப் பொறுத்தமட்டில் அவர்கள் ஒருபோதும் தமது அமைப்பிற்கு எதிராக செயற்படும் அரசியல்வாதிகளை உடனும் அழிப்பதற்கு முன்வருவதில்லை’ மாறாக எமது ஒட்டுமொத்த இனத்திற்கும் ஒரு அரசியல்வாதியால் ஆபத்து வந்தால் மட்டுமே அவரை தமது தீர்த்துக்கட்டும் பட்டியலில் இணைப்பதும் வளமை.

இந்தவகையில் துரோகி சுமந்திரன் என்பவர் புலிகளின் தீர்த்துக்கட்டும் பட்டியலுக்கு தான் தகுதியானவராக இருந்தாலும்கூட அவரை தீர்த்துக்கட்டும் தேவை என்பது ஆயுதரீதியில் புலிகளுக்கு சாத்தியப்படாவிட்டாலும், அவரை அடுத்துவரும் தேர்தலில் மக்கள் ஊடாக வெளியேற்றி அவரை செல்லாக்காசாக மாற்றி அழிப்பதற்கு சமமான தண்டனைகளை வழங்குவதற்காக மட்டுமே செயற்படுவார்கள் என்பது மட்டும் உண்மை.

சரி இனி புலத்துக்குள் புகுந்த தளபதிகளை தேடிக் கண்டுபிடிக்கும் இலங்கை புலனாய்வாளர்களின் தோல்வியை அடுத்து, அவர்களால் புலத்துக்குள் ஏற்படுத்திய போலியான முறியடிப்பு தந்திரத்தின் திகிலூட்டும் தரவுகளை அடுத்துவரும் தொடரினில் நிச்சயம் எதிர்பாருங்கள்.

நன்றி

-கழுகுவிழியன்- தொடர்…2

Up ↑