துரோகத்தால் விழைந்த அவலச்சாவு!

புலம்பெயர் தேசங்களில் தமிழீழ விடுதலைப் புலிகளால் மிகவும் பிரமாண்டமாக கட்டிவளர்க்கப்பட்ட ஒரு அமைப்புத்தான் TCCஎனப்படும் தமிழர் ஒருங்கிணைப்பு குழு.

இந்த குழுவானது தாயகத்தில் ஏற்பட்ட புலிகளின் ஆயுத மௌனிப்பை தமக்கு சாதகமாக பயன்படுத்தி அதுவரை தாங்கள் புலிகளின்பால் எமது மக்களிடம் திரட்டிய கோடிக்கணக்கான நிதிகளையும், சொத்துகளையுத் சூறையாடிக்கொண்டு சிறிது காலம் இப் புலம்பெயர் தேசங்களில் தங்களை தாங்களாகவே ஒளித்துக்கொண்டார்கள்.

எமது தேசியத் தலைவர் அவர்கள் மிகவும் தூரநோக்குடன் புலம்பெயர் தேசத்தில் தனது போராளிகள் ஊடாக கட்டி உருவாக்கப்பட்ட இந்த அமைப்பின் தேவையானது, ஒவேளை தாயகத்தில் எமது அமைப்பிற்கு எதிரிகளால் ஏதாவது திடீர் தாக்கங்கள் ஏற்பட்டால் அதை புலத்திலிருந்து தடுப்பதற்கான ஒரு பின்தளமாக தான் கருதியே அவர் புலத்திலும் ஒரு அரசியல் தளத்தை புலம்பெயர் தாயக உறவுகளின் ஒத்துளைப்புடன் அதை விடுதலைப் புலிகளின் பாணியில் உருவாக்கியிருந்தார்.

மேலும் இந்த கட்டமைப்பில் அதிகம் புலத்திலுள்ள இளையோர்களையே இணைக்கும்படி தான் பிரத்தியேக உத்தரவினையும் வழங்கியிருந்தார்.

இதற்கான எமது தலைவரது தூரநோக்கம் என்னவாக இருந்திருக்கும் என்பதை நீங்கள் இலகுவாக புரிந்துகொள்ள முடியும்.

மேலும் இவ் அமைப்பின் உருவாக்கம் ஊடாக எமது தலைவரது எதிர்பார்ப்பென்பது அது மலையாக இருந்த காரணத்தினால்தான் அவர் தனது 2008ம் ஆண்டு மாவீரர் நாள் உரையிலும் அதை குறிப்பிட்டு “புலம்பெயர் இளையோரின் பங்களிப்பை வலியுறுத்தி” தமது விடுதலைப் போராட்டத்தை வீச்சாக்குவதற்கு உங்கள் ஒவ்வொருவரினதும் பங்களிப்பை தீவிரமாக நல்கும்படி கேட்டுக்கொண்டிருந்தார்.

உண்மையில் எமது தேசியத் தலைவர் அவர்கள் முன்கூட்டியே தான் எதிர்பார்த்ததுபோன்று கடந்த 2009ம் ஆண்டு தாயகத்தில் எமது அமைப்பிற்கு பாரிய நெருக்கடி ஏற்பட்டுவிட்டது. இதனால் எமது விடுதலைக்கான ஆயுதப் போராட்டமும் முடிவுக்கு வந்தது.

ஆனால் புலம்பெயர் தேசங்களில் எமது தலைவர் அவர்கள் தான் நம்பி உருவாக்கியிருந்த TCCஎனும் இப் புலம்பெயர் கட்டமைப்பு ஊடாக நாம் தாயகத்தில் ஏற்பட்ட எமது இழப்புக்களை ஓரளவுக்கேனும் ஈடுசெய்யலாம் என்று கருதியே தாயகத்திலிருந்து எப்படியாவது எதிரியின் பிடியிலிருந்து நாம் தப்பி மறுபடியும் ஒரு அரசியல் பலத்தின் ஊடாக எமது தமிழீழ விடுதலையை நாம் வென்றெடுக்க முடியுமென்றே எமது தேசியத் தலைமையும், போராளிகளாகிய நாங்களும் இவ் அமைப்பை மலையாக நம்பியிருந்தோம்.

ஆனால் புலத்தினில் என்ன நடந்தது?

துரோகம்,துரோகம்,துரோகம் மட்டும்தான். அதாவது எமது தமிழீழ விடுதலைக்காக “ஆயுதம்தரித்த எந்தவொரு முன்னாள் போராளிகளையும் தமது புலம்பெயர் கட்டமைப்புக்குள் உள்வாங்கமுடியாதென்ற” நயவஞ்சக முடிவினை இந்த புலம்பெயர் அமைப்பான TCC தனக்குள் எடுத்துவிட்டது.

இதன்காரணமாக தாயகத்திலிருந்து எதிரியிடம் தப்பிவந்த போராளிகளும், தாயகத்திலிருந்து தப்பிவர முயற்சித்த போராளிகளும், ஆதரவாளர்களும் தாம் எதுவுமே செய்வதறியாது நிற்கதியானார்கள்.

புலத்தினில் எமது தலைவர் அவர்களால் தாயகத்திற்கு பின்தளமாக நம்பி உருவாக்கப்பட்ட இந்த TCC எனும் அமைப்பானது, எதிரியை தம் கண்களால் காணாமலேயே தனது தளத்தை விட்டு கிலியினால் மட்டும் தப்பியோடவில்லை, அதுவரை தாம் வெற்று வீரம்பேசி எமது தேசியத்தின்பால் மக்களிடம் திரட்டிய பணத்தையும், சொத்துக்களையும் காவிக்கொண்டே ஓடி ஒளித்தார்கள்.

இதனால் புலம்வந்த எமது போராளிகள் தமக்கு ஏதுவான தளமேதுமற்று அவரவர் அங்கொன்றும் இங்கொன்றுமாக தம்மை தாமே பலப்படுத்தி இன்றுவரை தாயகத்தையும், தமது தேசியத் தலைமையையும்,மாவீரர்களையும், போரினால் பாதிக்கப்பட்ட தமது உறவுகளையும் தமது நெஞ்சில் சுமந்து, எமது அடுத்தகட்ட விடுதலைக்கான வேள்விக்காக தம்மை இப் புலம்பெயர் தேசங்களில் புடம்போட்டு வருகிறார்கள்.

உண்மையில் புலத்திலிருந்த இந்த TCCஎனும் எமது பின்தளம் ஒருவேளை உறுதியாக இப் புலம்பெயர் தேசத்தில் இருந்திருந்தால், நிச்சையமாக தாயகத்திலிருந்துவந்த எமது போராளிகளை உள்வாங்கி இப்புலம்பெயர் தேசங்களில் மகா மக்கள் சக்தியை உருவாக்கியிருக்க முடியும்.

இதையும்விட தாயகத்தில் எதிரிகளால் அல்லல்படும் எமது போராளிகளையும், மக்களையும் துரிதமாக மீட்டு அவர்களின் துன்பங்களையும் தடுத்திருக்க முடியும்.

ஆகவே இந்த தேசத் துரோக அமைப்பின்(TCC) மாபெரும் துரோகத்தின் காரணமாகத்தான் அன்று 2013ம் ஆண்டு இறுதியில் தாயகத்தைவிட்டு எதிரிகளின் பிடியில் இருந்து துருக்கிவரை தப்பிவந்த பாடகர் S.G.சாந்தன் அவர்கள், மிகவும் நெருக்கடியான பிரையாண அழுத்தங்களுக்குள் தான் முகம்கொடுத்து குடிக்க நீர்கூட அற்று, உண்ண உணவேதுமற்று, உறங்க உறங்கிடமற்று “துருக்கியின் வனாந்தரத்தில்” பெரும் நோய்வாய்ப்பட்டிருந்தார்.

அவருக்கேற்பட்ட அந்த “பிரையாணத்தின் தோல்விதான்” அவருக்கான மரணத்தை விரைவாக்கி அவரை வேகமாக சாகடித்ததென்பதே யாரும் மறுக்கமுடியாத உண்மை.

ஒருவேளை அவர் ஏதாவதொரு ஐரோப்பிய நாட்டுக்குள் அன்று வந்திருந்தால் நிச்சையமாக அவரை இப் புலம்பெயர் நாடுகளின் தாராளமான மருத்துவ வசதிகளால் அவரை காப்பாற்றியிருக்க முடியும் என்பதுடன், அவரூடாக எமது தேசிய விடுதலையை சற்று எழுச்சிபெற உயிர்பூட்டியிருக்க முடியும் என்பதையும் இங்கே பதிவுசெய்ய விரும்புகின்றேன்.

ஆகவே மறைந்த எமது இசைப்புலி S.G.சாந்தன் அவர்களின் சாவுக்கு மட்டுமல்லாமல், தாயகத்தில் கடந்த 2009ற்கு பின்னர்தொட்டு தற்போதுவரை அவலப்பட்டு மடிந்துகொண்டிருக்கும் எமது அனைத்து போராளிகளினதும், தீவிர ஆதரவாளர்களினதும் அவலச் சாவுகளுக்கும், துன்பங்களுக்கும் புலத்தில் பின்தளம் என்று எம்மையும், எமது தேசியத் தலைமையும் ஏமாற்றி பிழைத்த இந்த TCCஎனும் தேசத் துரோகிகளே முதன்மை காரணம் என்பதை மனவேதனைகளுடன் இங்கே பதிவுசெய்கின்றேன்.

நன்றி
-கழுகுவிழியன்-

Advertisements