சிரிய அகதிகளை செஞ்கம்பளம் வைத்து  கனடியப்பிரதமரே விமான நிலையம் சென்று வரவேற்கும் கனடிய அரசு , ஈழத்தமிழ் அகதிகளை எவ்வாறு நடாத்துகின்றது என்று முகநூலில் இருந்து பகிர்ந்து கொள்கின்றோம் முழுமையான பெயர் விபரங்கள் குறிப்பிடப்படவில்லை !

கனடாவின் இரட்டை முகம் ஈழத்தமிழ் அகதிகள் , சிரிய அகதிகள்?

கனடா தமிழ் மரபுத் திங்கள் அரசியலா ?

**

தமிழர்களுக்கு ஓர வஞ்சகம் செய்கிறது கனடிய அரசு!

தற்போதைய இலங்கை அரசுத்தலைவர் மைத்திரி பாலாவின் கொலைவெறி படையினரின் தேடுதலில் இருந்து தப்பி அமெரிக்கா வந்திருந்தார் தமிழ் உறவு ஒருவர். அவரை பிணைப் பொறுப்பு வழங்கி கனடா அழைத்து வர நேற்று போட்ஏரியில் இருக்கும் அமெரிக்க-கனடிய எல்லைக்கடவில் இருக்கும் குடிவரவுத்துறைக்கு சென்றிருந்தேன். அங்கு தமிழ் ஏதிலிகளையும் (அகதிகள்) சிரிய எதிலிகளையும் நடத்தும் விதம் அதிர்ச்சியாக இருந்தது.

சிரிய ஏதிலிகளை தங்கத் தாம்பாளம் வைத்து வரவேற்கும் கனடிய அரசு தமிழ் ஏதிலிகளை வேண்டா வெறுப்பாக நடத்துகிறது.

சிரிய ஏதிலிகள் களைப்பாற தனியான இடம், 2 மாதத்துக்கான செலவு தொகைப் பணம், இரண்டு பெட்டிகளில் உடனடி அத்திய அவசியப் பொருட்கள் என வழங்கும் கனடிய அரசு இச்சலுகைகள் எதனையும் தமிழ் ஏதிலிகளுக்கு வழங்குவதில்லை. மாறாக அவர்களை வழிமறித்து அங்கிருக்கும் தேவாலயம் ஒன்றில் தங்கவைத்து சிலகிழமைகளின் பின் துருவித்துருவி விசாரித்து இரத்த உரித்து உள்ள ஒருவர் பெறுப்போடு உள்ளே செல்ல அனுமதிக்கிறது.
உள்ளே அனுமதித்த பின்னர் ஏதிலிகள் அல்லர் எனக் கண்டு பத்துக்கு ஏழு பேர் மீண்டும் இலங்கைக்கு நாடுகடத்தப் படுகின்றனர். பத்தில் மூன்று தமிழர்களே உயிர் ஆபத்துக் உள்ள ஏதிலிகளாக ஏற்றுக் கொண்டு நிரந்தரமாக தங்க அனுமதிக்கப்படுகின்றனர்.

கனடாவில் தமிழர்களின் அரசியல் வளர்ச்சியின் தொய்வையே இது காட்டுகின்றது. தொழில்துறை மற்றும் வாணிபத்தில் தமிழர்கள் வளர்ந்தது போன்று அரசியலிலும் வெற்றிக் கொடி கட்டி இந்நிலைபோக்க வேண்டும்.
Thir

**
Akath உண்மையில் இது ஒரு தோல் வியாதி , இருப்பினும் , நல்ல ” இன உணர்வுள்ள ” தமிழ் வேட்பாளரை பா.ம. அனுப்புவதன் மூலமே இவற்றை எளிதாக எதிர் கொள்ளலாம்….!

Anto அகதி விடயத்துடன் இன்னொரு விடயத்தையும் இங்கு குறிப்பிட வேண்டும். இந்தியா, சீனா போன்ற நாட்டு மாணவர்கள் கனடா வந்து படிக்க எவ்வித சிரமமுமில்லை. அதேபோல் இலங்கை சிங்கள மாணவர்கள் கனடா வந்து படிக்க இலங்கையில் உள்ள கனேடிய தூதரகம் விசா வழங்கும் அதேவேளை தமிழ் மாணவர்களின் விசா விண்ணப்பங்களை ஏதோ ஒரு சாக்குப்போக்கு சொல்லி நிராகரிக்கிறது. இலங்கை கனேடிய தூதரகம் முழுமையாக இன்று வரை தமிழ் மாணவர்களை புறக்கணித்து நடக்கிறது. இதையிட்டு தமிழ் கனேடிய அரசியல் பிரமுகர்கள் யாரும் அரசிடம் முறையிட்டதாக தெரியவில்லை. இவர்கள் தமிழ் மக்கள் மீது அக்கறை கொண்டவர்கள் ஆயின் உடனடியாக இதையிட்டு அரசிடம் பேச வேண்டும். புகைப்படங்களில் வெள்ளையின அரசியல் பிரமுகர்களுடன் போஸ் கொடுப்பதோ, தமிழ் கலாச்சார நாள், கிழமை, மாதம், வருடம் என பறை தட்டுவது பெரிய விடயமல்ல. இந்த மாதிரியான விடயங்களை கருத்திலெடுத்து அரசுடன் பேசி தீர்வு காண வேண்டும்.

**
Rama நாம் இன்னும் குண்டுச்சட்டிக்குள் குதிரை ஓட்டிக்கொண்டிருக்கின்றோம் !

உண்மையில் நாம் கடைந்தெடுத்த பச்சோந்திகள் !

நம்மில் எத்தனை பேர் ஆங்கில ஊடகங்களில் பின்னூட்டல்கள் இடுகின்றீர்கள் ? ஏன் வேற்றின ஈழத்தமிழர் சார்புக்கட்டுரையாளர்களைக் கூட நாம் ஊக்குவிப்பது இல்லை அதில் எதிர் பின்னூட்டல்கள் தான் அதிகம்

பல பெற்றோர்கள் தமது பிள்ளைகளுக்கு தமிழ் கற்பிப்பதில்லை !

  • ரொரன்ரோ சுற்றறிக்கைகளில் தமிழ் மொழிக் கொலை பற்றி யாரும் அலட்டிக்கொள்வதில்லை !
  • இது புலம் பெயர்ந்த தமிழர்களின் மொழிப்பற்றின்மையை , அலட்சியத்தை காட்டுகின்றது
  • இது குறித்து மாநகரசபையோடு தொடர்பு கொண்ட போது ஆவன செய்வதாக பதிலளித்தார்கள்

ரொரன்ரோ பாடசாலைகளில் ஆங்கிலத்தில் தமிழர்கள் பற்றிய எந்த நூல்களும் இல்லை !
குறிப்பாக முஸ்லீம் மக்கள் மீதான இனப்படுகொலை நூல்கள் சிறார்களுக்கு கற்பிக்கப்படுகின்றன. ஆனால் நாம் இன்னும் இலங்கைக் குடிகளாகவே அடையாளப்படுத்தப்படுகினறோம்

கல்விச் சபைகளில் தமிழர்கள் இருந்த போதும் அவர்கள் வெறும் சுயநலவாதிகளாகவும் தன்னலம் சார்ந்தவர்களாகவும் தான் இருக்கின்றார்கள்.
இவர்கள் எவரிடமும் தமிழர் நலன் சார்ந்த எந்த வேலைப்பாடுகளும் இல்லை வெறும் இது தனி நபர் தொழிலாக மாறிவிட்டது

தமிழ் கலாச்சாரம், தமிழ் மரபுத்திங்கள் பற்றிய பரப்புரை இல்லை அது பற்றி தமிழ் சிறார்களுக்கு ஏன் பெற்றோர்களுக்கே தெரியாது !
பாடசாலைகளில் கற்பிக்கப்படும் மற்றைய இனங்களின் மரபுகள் கலாச்சாரங்களில் தமிழர்கள் சார்ந்த கனடா -கல்விச்சபையால அங்கீகரிக்கப்பட்ட தமிழர் மரபுரிமைத் திங்கள் கருத்தில் எடுத்துக்கொள்ளப்படவில்லை

இது குறித்து நாம் கல்விச்சபையோடும் நீதன் சான்-கல்விச்சபை , தமிழர் மரபுரிமைத் தலைவர் உடனும் தொடர்பு கொண்ட போது நீதன் பதிலளிக்கவில்லை
கல்விச்சபை இது பற்றி இனி பாடசாலைகளுக்கு அறிவிப்பதாக எமக்கு பதிலளித்திருக்கின்றார்கள்

**
Tamil இப்படித்தான் எல்லாம் அரைகுறையாக நடக்கிறது. அல்லது மூடி மறைக்கிறார்கள்.
பொறுப்பில் இருப்பவர்கள் அதனைக் கவனிப்பார்கள் என்று மக்கள் நம்பிக் கொண்டிருக்கிறார்கள் ஆனால் அவர்கள் அத்தனையையும் மறைத்து வேறு யாருடையதோ வேலையைச் செய்கிறார்கள்.
இங்குள்ள தமிழ்மொழி சார்ந்த அத்தனை அமைப்புகளும் கேள்விக்குட்படுத்தப்பட வேண்டும்.
கனடா மற்றைய இன அரசியல்வாதிகளை அணுகினால் கூட பல சிறப்பான பணிகளை நிறைவேற்றலாம் போல உள்ளது.
பல்கலைக் கழகத்தில் படிக்கும் தமிழ் தெரிந்த மாணவர்களாவது இத்தகைய விடயங்களில் அக்கறை செலுத்துவது நல்லது.

Rama நாம் உரியவர்களிடம் முறையிட வேண்டும் மற்றவர்கள் செய்வார்கள் என்று எப்போதும் காத்திருப்பதே வழக்கமாகிவிட்டது

அன்புச் செல்வன் அப்போ இங்கயும் எங்கட ஆக்கள் புலுடா அரசியலோ செய்யினும்??
அமெரிக்காவில தமிழ்ச்சங்கம்,ஒபாமாவுக்கான ….என்ன பண்ணினம்?

Tamil உந்தச்சங்கங்கள் மற்றது எல்லாம் புலுடா என்பது எப்போதோ தெரிந்து போயிடுச்சுதே!
எட்டு ஆண்டுகள் கற்றுத் தந்த பாடம்.
உண்மையாக உழைப்பவர் மன்னித்துக் கொள்ளவும்.!

Tamil அதற்குப் பின்னாலும் தமிழன்தான் அள்ளி வைப்பதற்கு இருப்பான். ஆராய்ந்து பாருங்கள்.
எப்படித் த.தே. கூட்டமைப்புக்காரரை பாராளுமன்றத்துக்கு வென்று வா மகனே சென்று வா என்று அனுப்பினீர்களோ அப்படி உலகை வென்று வா என்று அனுப்புவர்கள் இவற்றைக் கவனிக்கிறார்களா என்று பாருங்கள். தமிழர் மரபுத்திங்கள் கொண்டு வந்தால் மட்டும் போதாது.
தமிழனுக்கு வாழும் வசதியும் இருக்கா என்று பார்க்க வேண்டும்.

நான் மட்டும் உச்சிக் கொம்பில் ஏறி நுனிக்கொம்பு மேய்ந்துவிட்டு உலகமே தெரியுது என்று சொல்லக்கூடாது.
ஆயிரம் செய்தித்தாள் வானொலி ஊடகங்கள் தொலைக்காட்சிகள் தங்கள் கருவிகளை அந்தப்பக்கமும் திருப்புங்கள்.
மரக்கறியும் மீனும் உடுபுடவைக்கும் பாய்ந்து பாய்ந்து விளம்பரம் செய்தால் போதாது.

Gane ஒரு உறுப்பினர் போதாது.

– வழக்கு தொடுத்து இந்த நிலையை மாற்ற முடியுமா…?

Thir அரசியல் சாசனத்தின் உட்பிரிவுகளை கேள்விக்குள்ளாக்க நேரிடும். அவைதொடர்பான வழக்குகள் உச்சநீதிமன்றில்தான் நடக்கும். பெரும் பொருட் செலவும் காலமும் எடுக்கும். இவை அரசியல் வாதிகளால் இலகுவாக சீர் செய்யக் கூடியவை. தமிழர்கள் அக்கறை எடுத்தால் இதை இலகுவாக மாற்றலாம்.

Pirana உண்மையான பதிவு ஆனால் இதை நம் சமூகம் என்றும் ஏற்காது..அகதியாக கனடாவில் வாழும் வாழ்ந்து கொண்டிக்கும் நம் தமிழ் உறவுகளின் நிலமை மிகவும் மோசமானது ஒரு நாடாளமன்ற உறுப்பினரால் எதுவும் செய்துவிடமுடியாது ஆனால் எமக்குதான் ஒற்றுமை இல்லையே இன்னும் ஒருவரை அனுப்புவதற்க்கு.. நம் இனம் நாதியற்ற இனம் என்பதை கனாடா வந்ததும் உணர்ந்தேன் நமக்கான உரிமைகள் இவ் உலகில் எங்கும் கிடைக்காது நமக்கு..

Roy- Agreed. Im not against refugees coming here however 2 ships came with full Tamils with legitimate reason but all been labeled as terrorists and most oof their claims not been heard or decision made but not a single family been re united. 8 years later still seperated and waiting for their fate.

**

முன்னாள் போராளிகளின் அவலநிலைகள்

தமிழ் இனத்திற்காக தம்மை அர்ப்பணித்தவர்கள்..
அனைவராலும் கைவிடப்பட்ட நிலையில்…
வலி சுமந்தவர்கள், வாழ வழியின்றி வாடுகின்ற சோகம்.. என் இனமே என் சனமே..!!

Advertisements