விடுதலைப் புலிகளை இல்லாதொழிப்பதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் ஒத்துழைப்பு வழங்கியதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி குற்றஞ்சாட்டியுள்ளது.

சுயநிர்ணய உரிமையுடன் கூடிய சமஷ்டி அவசியம் என்பதை தாம் வலியுறுத்திய போதிலும் அதற்கு சம்பந்தன் இணக்கவில்லை என யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் இந்த கருத்தை வெளியிட்டார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு பிளவுபடுவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைகலநாதனே காரணம் எனவும் செல்வராசா கஜேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

முப்படைகளையும் கொண்டிருந்த தமிழர்களால் சாதிக்க முடியாததை உடனடியாக சாதிக்க முடியுமா என செல்வம் அடைக்காலநாதன் கேள்வி எழுப்பியமை குறித்து ஊடகவிலாளர்கள் வினவிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

Advertisements