நம்பிக்கை இழந்துவிட்டதாக புதுக்குடியிருப்பு மக்கள் கவலை

பொதுமக்களின் காணிகளிலுள்ள இராணுவத்தை வெளியேறுமாறு கோரியும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கேப்பாப்புலவு மக்களுக்கு ஆதரவு தெரிவித்தும் புதுக்குடியிருப்பில் பொதுமக்கள் முன்னெடுத்துள்ள போராட்டம் இன்று இருபதாவது நாளை எட்டியுள்ளது.

இந்தநிலையில் புதுக்குடியிருப்பு பொதுமக்களால் சுழற்சி முறையில் முன்னெடுக்கப்பட்டுள்ள உணவுத்தவிர்ப்பு போராட்டம் இன்று ஒன்பதாவது நாளை எட்டியுள்ளது.

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசசெயலகத்திற்கு முன்னால் கடந்த 03 ஆம் திகதி முதல் புதுக்குடியிருப்பு பிரதேசசெயலாளர் பிரிவிற்குட்பட்ட 49 பொதுமக்களுக்கு சொந்தமான 19 ஏக்கர் காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி பொதுமக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

60 வருடத்திற்கு மேலாக குறித்த காணிகளில் வசித்து வந்த புதுக்குடியிருப்பு மக்கள், 2009 ஆம் ஆண்டு யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து சென்று, மீள்குடியேற்றம் செய்யப்பட்டனர்.

**

அவ­லங்­க­ளுடன் தொடர்­கி­றது போராட்டம்

யாழ்.பல்­கலை மாண­வர்கள் நேரில் சென்று ஆத­ரவு

கேப்­பாப்­பு­லவு பிலக்­கு­டி­யி­ ருப்பு மக்கள் தமது சொந்த நிலங்­களை விடு­விக்­கக்­கோரி முன்னெ­டுத்­ து­வரும் தொடர் போராட்டம் நேற் றும் தொடர்ந்­தது. போராட்­டத்தின் 22 ஆவது நாளான நேற்று யாழ்.பல் க­லைக் ­க­ழக மருத்­து­வ­பீட மாண­வர்கள் போராட்­டக்­க­ளத்­துக்கு வரு­கை­தந்து மக்­க­ளுக்­கான ஆத­ர­வினை தெரி­வித்­தனர். அத்­துடன் உதவி பொருட்­க­ளையும் வழங்கி வைத்­தனர். தொடர்ந்து போராட்­டக்­க­ளத்தில் உள்ள மக்­க­ளுடன் இணைந்து விமா­னப்­படை முகா­முக்கு முன்­பாக கவ­ன­யீர்ப்பு ஆர்ப்­பாட்டம் ஒன்­றையும் மாண­வர்கள் முன்­னெ­டுத்­தனர்.

இந்­நி­லையில் போராட்­டத்­தின்­போது யாழ் பல்­க­லை­க­ழக மருத்­து­வ­பீட மாணவர் ஒன்­றி­யத்­த­லைவர் வைகுந்தன் குறிப்­பி­டு­கையில்

சொந்த நிலங்­களை மீட்­ப­தற்க்­கா­கவும் தமது வாழ்­வா­தா­ரத்தை மேம்­ப­டுத்­து­வ­தற்­கா­கவும் தொடர் கவ­ன­யீர்ப்பு போராட்­டத்தை மக்கள் முன்­னெ­டுத்­து­வ­ரு­கின்­றனர்.

இவர்­களின் போரா­டடம் நியா­ய­மா­னது. உண்­மை­யா­னது. இவர்­களின் நிலங்கள் விடு­விக்­கப்­ப­ட­வேண்டும். அதற்­கான வேலை­களை நல்­லாட்சி என சொல்லும் அரசு மேற்­கொள்­ள­வேண்டும். இந்த மக்­களின் நிலங்கள் விடு­விக்­கப்­படும் வரை எமது மருத்­து­வ­பீட மாண­வர்­களின் ஒத்­து­ழைப்பும் ஆத­ரவும் என்றும் இருக்கும் என்றார்.

முல்­லைத்­தீவு கேப்­பா­பு­லவு பிலக்­கு­டி­யி­ருப்பு மக்கள் தமது சொந்த நிலத்தை கைய­கப்­ப­டுத்­தி­யுள்ள விமா­னப்­ப­டை­யினர் அதனை விடு­விக்­க­வேண்­டு­மென விமா­னப்­படை முகாமின் முன்­பாக கடந்த 31 ஆம் திகதி முதல் தொடர் கவ­ன­யீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்­னெ­டுத்­து­வ­ரு­கின்­றனர்.

கேப்­பா­பு­லவு பிலக்­கு­டி­யி­ருப்பு கிரா­மத்தில் 84 குடும்­பங்­க­ளுக்கு சொந்­த­மான 50 ஏக்­கர்­க­ளுக்கு மேற்­பட்ட காணி­களை விமா­னப்­ப­டை­யினர் கைய­கப்­ப­டுத்தி விமா­னப்­ப­டைத்­தளம் அமைத்­துள்­ளனர்.இந்த நிலை­யி­லேயே மக்கள் காணிகளை மீட்டுத்தருமாறு வலியுறுத்தி போராட்டத்தை முன்னெடுத்துவருகின்றனர்.

நேற்றும் பல பிரதேசங்களில் இருந்து மக்களும்,சிவில் அமைப்பினரும் வருகைதந்து மக்களுடன் கலந்துரையாடியதோடு பல உதவிகளையும் வழங்கி சென்றனர்.

**
கேப்பாபுலவு மக்களுக்கு ஆதரவு தெரிவித்து யாழ்ப்பாணத்தில் கண்டனப் போராட்டம்

ஸ்ரீலங்கா விமானப்படையினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி கேப்பாபுலவு மக்கள் முன்னெடுத்துள்ள போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வடபகுதியில் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி கேப்பாபுலவு மக்கள் ஆரம்பித்துள்ள போராட்டம் இன்று 23ஆவது நாளை எட்டியுள்ள நிலையில் குறித்த போராட்டத்திற்கு பல தரப்பினரும் ஆதரவை வழங்கி வருகின்றனர்.

கேப்பாபுலவு பகுதியில் ஸ்ரீலங்கா விமானப்படையினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட கண்டனப் போராட்டம், யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்தின் முன்பாக இன்று காலை 09 மணியளவில் ஆரம்பமாகி யாழ். மாவட்ட செயகம் வரை பேரணியாக சென்று மாவட்ட செயலகம் முன்பும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கம், யாழ்.மாவட்ட மீனவ ஒத்துழைப்பு இயக்கம், திருகோணமலை மாவட்ட மீனவ ஒத்துழைப்பு இயக்கம், டெலிகொம் மனிதவலு போராட்ட ஒற்றுமை முன்னணி உட்பட பல்வேறு அமைப்புக்கள் குறித்த போராட்டத்தில் பங்கேற்றிருந்தனர்.

கேப்பாபுலவு மக்களுக்கு ஆதரவு தெரிவித்து முன்னெடுக்கப்பட்ட இந்த போராட்டத்தின் போது அரசியல் கைதிகளது விடுதலை, காணாமலாக்கப்பட்டோர் கண்டறியப்பட வேண்டும் மற்றும் இராணுவத்தால் அபகரிக்கப்பட்டுள்ள தமிழர் நிலங்கள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

இதேவேளை நல்லாட்சி அரசே எமது நிலமே எமது வாழ்வு, இராணுவ ஆக்கிரமிப்பில் உள்ள எமது காணிகள் உடனே விடுவிக்கப்பட வேண்டும், பிலக்குடியிருப்பு மக்களின் போராட்டத்துக்கு தீர்வு என்ன? என்பன போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தாங்கியிருந்ததுடன் கோசங்களையும் எழுப்பினர்.

கேப்பாபுலவு உட்பட இராணுவத்தால் கையகப்படுத்தப்பட்டுள்ள தமிழ் மக்களது காணிகள் விரைவில் விடுவிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் வடகிழக்கு இணைப்பாளர் அன்ரனி ஜேசுதாசன், காணிகள் விடுவிக்கப்படும்வரை தேசிய ரீதியில் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை யுத்தத்தைக் காரணம் காட்டி அபகரிக்கப்பட்ட மக்களது காணிகள் விடுவிக்கப்படாவிட்டால், குறித்த காணிகளுக்குள் அத்துமீறி நுழைவோம் என்று வலிகாமம் வடக்கு மீள்குடியேற்ற குழு தலைவர் எஸ்.சஜீவன், ஸ்ரீலங்காவின் நல்லாட்சி அரசாங்கத்துக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுமாத்திரமன்றி தமது சொந்த நிலங்கள் ஸ்ரீலங்கா கடற்படையினராலும் அபகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள மக்கள் காணிகள், விடுவிக்கப்படும் வரை போராட்டம் தொடரும் என்று தெரிவித்துள்ளனர்.

யாழ்.மாவட்ட செயலகத்தின் முன்னால் இடம்பெற்ற போராட்டத்தின் நிறைவில் காணி விடுவிப்பு தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்திய மகஜர், யாழ்.மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் தெ.சுகுணவதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கேப்பாபுலவு மக்களின் போராட்டத்துக்கு ஆதரவாக யாழ்ப்பாணம் – நெடுந்தீவிலும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கேப்பாபுலவு மற்றும் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலமீட்பு போராட்டங்களுக்கு வலுச்சேர்க்கும் முகமாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.இந்த போராட்டத்திற்கு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலர் இணைந்து தமது ஆதரவை வழங்கியுள்ளனர்.

**
கேப்பாபுலவு காணி மீட்பு போராட்டம் : கொள்கையில் மாற்றமில்லை

எமது உறவுகள் என்ற எண்ணம் இளைஞர்களுக்கு இருக்குமானால் மக்களின் போராட்டத்திற்கு ஆதரவு வழங்க கேப்பாபுலவில் 25 ஆம் திகதி ஒன்றுகூடுமாறு இன்றையதினம் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கேப்பாபுலவு புலவுக்குடியிருப்பில் இடம்பெற்றுவரும் தொடர் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து புலவுக்குடியிருப்பு இராணுவ முகாமிற்கு முன்னால் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

விமானப்படையினர் நிலைகொண்டுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு கேப்பாபுலவு பிலவுக்குடியிருப்பு மக்கள் இன்று 22 ஆவது நாளாக தொடர்போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

கடந்த 31 ஆம் திகதி முன்னெடுக்கப்பட்ட போராட்டம் தீர்வின்றிய நிலையில் இன்றும் தொடர்கின்றது.

குறித்த போராட்டத்திற்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருவதுடன், கவனயீர்ப்பு போராட்டங்களும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் இன்றும் விமானப்படையினரின் முகாமிற்கு முன்னால் ஒன்று திரண்ட மக்கள் காணிகளிலிருந்து விமானப்படையினரை வெளியேறுமாறு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் எதிர்வரும் 25 ஆம் திகதி புலவுக்குடியிருப்பில் இளைஞர்களை ஒன்று கூடி போராட்டத்திற்கு ஆதரவு தருமாறு இன்றைய தினம் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் கோரிக்கை முன்வைத்தனர்.

இதேவேளை தமது காணிகள் பொருளாதார வளம் நிறைந்த காணிகள் என்பதாலேயே தமது காணிகளை விமானப்படையினர் கையளிப்பதற்கு மறுப்பதாக போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தெரிவித்தனர்.

காணியில் கால் பாதிக்கும் கொள்கையில் மாற்றமில்லாத நிலையில் தமது காணி மீட்பு போராட்டத்தை இன்று 23 ஆவது நாளாகவும் கேப்பாபுலவு பிலவுக்குடியிருப்பு மக்கள் முன்னெடுத்துள்ளனர்.

கடந்த 31 ஆம் திகதி விமானப் படையினரால் விடுவிக்கப்பட்டதாக கூறப்பட்ட தமது காணிகளை தம்மிடம் மீள வழங்க வேண்டும் எனக் கோரியே மக்கள் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

பிலவுக்குடிருப்பிலுள்ள இராணுவ முகாமிற்கு முன்னால் வீதி அருகில் முகாமிட்டு மக்கள் போராட்டத்தை முன்னெடுத்துவருகின்றனர்.

மக்களின் இந்தப் போராட்டங்களை முடக்குவதற்கு படையினர் பல்வேறு கைங்கரியங்களை மேற்கொண்ட போதிலும், தமது காணியில் கால்பதிக்கும் வரை அங்கிருந்து வெளியேறப் போவதில்லை என மக்கள் சூளுரைத்துள்ளனர்.

கேப்பாபுலவு மக்களின் இந்தப் போராட்டத்திற்கு வடக்கு கிழக்கு பகுதியில் இருந்து மாத்திரமல்லாமல் தென் பகுதியில் இருந்தும் பல்வேறு தரப்பினர் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், மக்கள் போராட்டம் தொடர்ந்து இடம்பெற்றுவருகின்றது.

இதேவேளை கடுமையான பனியுடன் கூடிய காலநிலைக்கு மத்தியிலும் தமது பிள்ளைகள் சகிதம் கேப்பாபுலவு மக்கள் நிலமீட்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பாடசாலை மாணவர்களின் கல்வி செயற்பாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisements