தலைவர் பிரபாகரன் அவர்கள் ஈழவிடுதலைக்கான தனது புரட்சிகர இராணுவ-அரசியல் போராட்ட களத்தில் அன்ரன் பாலசிங்கம் அண்ணையை தவிர மற்ற எவரையும் நம்பி தன்னோடு வைத்திருக்கவில்லை. சிலர் இதனையே பெரும் குறையாக கூறுவர். “தலைவருக்கு ஆயுதப் போராட்டந்தான் தெரியும், உலக அரசியல் அறிவு அவருக்கு இல்லை, படித்தவர்களின் ஆலோசனையினையும் அவர் கேட்காது தன் புத்தியில் நடந்துவிட்டார்” என்றெல்லாம் அரசியலை கரைத்து குடித்தவர்களைப்போல விளக்கமளிப்பர். உந்த பழைய அப்புக்காத்துமாரை நம்பி நம்பி ஏமாந்துபோய்த்தான் அவர் தனித்தே போராட துணிந்தார்.

நாங்கள் வென்றால் தலைவர் வீரன் என்றும் ,வீழ்ந்தால் ஏதோ உலக அரசியல் தெரியாதவர் என்றும், தானும் படுக்காது தள்ளியும் படுக்காத கதையாய் வீணே கிடந்தோம். அவருக்கு தெரிந்த போராட்ட வழியிலாவது போக விட்டோமா?

“யுத்தத்தை விட்டு புனித அரசியல் நீரோட்டத்தில் கெதியாய் கலவுங்கோ என்று அதில் தள்ளாக் குறையாய் தடக்கி விழுத்தினோம். அதிலும் ஒன்றுமில்லை இதிலும் ஒன்றும் ஆனதில்லை. படத்தில் நிற்கும் சம்பந்தனிடம் ஏதாவது பெருமிதம், மகிழ்ச்சி தெரிகிறதா?

இந்த இளம் பிள்ளைகள் தங்கள் எல்லா நலன்களையும் துறந்து சாவினை எப்போதும் அணைக்க துணிந்து பெரும் வல்லரசுகளையே தம் துணிவால் எதிர்கொண்ட சுத்த வீரர்கள், அவர்களாலேயே நாங்களும் சிங்களவனோடு சரியாசனம் அமர்ந்து அரசியல் செய்கிறோம் என்று ஏதாவது நன்றியுணர்வு, பெருமிதம், அன்பு தெரிகிறதா?

இந்த பள்ளிக்கூடம் போகாத அற்ப பொடிப் பயலுக்கு பின்னால் எப்பேற்பட்ட என்னை குமாஸ்தா போல நிற்க வைத்துவிட்டார்களே என்ற பொறாமையில் வாய் கோணி நிற்கிறார். ஒரு தகப்பனைப்போல அரவணைத்து நிற்க வேண்டியவர் கயமை உள்ளத்துடன் எட்டிநிற்கிறார். காலம் வரும்போது இவங்களுக்கு நான் ஆரென்று காட்டுறன் என்ற கள்ளச் சிந்தனையோடு நிற்கிறார். இந்த இடத்தில் அன்ரன் பாலசிங்கம் அண்ணை நின்றிருந்தால் எப்படி சிரித்துக்கொண்டு இவங்கள் எங்கள் பிள்ளைகள் என்ற தாய்மையோடு அரவணைத்திருந்திருப்பார்.

இவர்கள் படித்தவர்களா? தமிழரை மீட்கும் மீட்பர்களா? இவர்களால் எமக்கு ஏதாவது நல்லது நடக்குமா?

சுத்த விசர் தனம். 2009 இல்இறுதி யுத்த நேரம் இவரது செயற்பாடு எப்படி இருக்கிறது என்பதை அறிவதற்காக ” சக்தி ரங்கா” மின்னல் நிகழ்ச்சிக்காக தொடர்பை ஏற்படுத்த முயன்றபோது ” அவர் குளிக்கிறார், அவர் போனில் இருக்கிறார், அவருக்கு மூட் சரியில்லை என்று எத்தனை பதில்கள். அதனை பின்னர் ஒளி பரப்பினர். எப்படி கொதித்துப்போய் என்னவெல்லாம் செய்திருக்க வேண்டியவர் இவர், வாழாதிருந்தார் அவர்கள் பூண்டோடு அழியட்டுமென்று. உலகின் நியாயம் உரைக்கும் வாயிற்கதவுகளில் என் உறவுகளை காப்பாற்றுங்கள் என்று ஓலமிட்டுருக்க வேண்டாமா?

என்னைக் கொன்ற பின்பே என் பிள்ளைகளை துப்பாக்கி முன் நிறுத்துங்கள் என்று போர் வரும் வழியை அடைத்து நின்றிருக்க வேண்டாமா? இவர் ஆயிரம் கருணாநிதிகளிலும் கடையன். இந்த கிழங்களிடம் விடுதலைக் குழந்தையை எதிர்பார்ப்பதா?

**

செத்த மாட்டில் இருந்து கழன்று போகும் உண்ணிகள் போல!

மாடு உயிருடன் இருக்கும்வரை அதில் ஒட்டி இருந்து ரத்தத்தை உறிஞ்சிக் குடிக்கும் உண்ணிகள், மாடு செத்தவுடன் அதில் இருந்து நைசாக கழன்று விடுகின்றன.

அதுபோல் புலிகள் பலமாக இருக்கும்வரை அவர்களுடன் ஒட்டி இருந்து பதவி நலன்களை அனுபவித்தவர்கள் இன்று புலிகள் இல்லை என்றவுடன் உண்ணிகள் போல் கழன்று விடுகின்றனர்.

உண்ணிகள் போல் கழன்றுவிட்டாலும் பரவாயில்லை, கொஞ்சம்கூட நன்றி இல்லாமல் புலிகளை தூற்றுகின்றனர்.

இதோ இந்த படத்தில் புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளர் தமிழ்செல்வன் பின்னால் பைல் கட்டுகளை தூக்கிக்கொண்டு வரும் உண்ணி யார் என்று தெரிகிறதா?

இவர்தான் இன்றைய எதிர்கட்சிதலைவர் சம்பந்தன் அய்யா. இவர் பாராளுமன்றத்தில் கூறுகிறார் “புலிகள் பயங்கரவாதிகள், அவர்களை நாங்கள் ஒருபோதும் ஆதரித்தது இல்லை” என்று.

புலிகளே தமிழ் மக்களின் ஏகோபித்த பிரதிநிதிகள் என்று கூறியவர் இந்த சம்பந்தன் அய்யா. அதுமட்டுமன்றி புலிகள் உருவாக்கிய தமிழ்தேசிய கூட்டமைப்பு மூலம் பதவிகளைப் பெற்றவரும் இதே சம்பந்தன் அய்யாதான்.

தமிழ்தேசிய கூட்டமைப்பை புலிகள்தான் உருவாக்கினார்கள் என்பது தனக்கு தெரியாது என்று சம்பந்தர் அய்யா கடந்த வருடம் கூறினார். இப்போது யுத்தத்திற்கு பின்பே அதாவது 2009 க்கு பின்பே தமிழ்தேசிய கூட்டமைப்பு உருவானதாக பொய் கூறுகிறார்.

இப்படி வயதான காலத்தில் அறளை பெயர்ந்து அலட்டுவதை விட, கௌரவமாக அரசியலில் இருந்து ஒதுங்குவதே சம்பந்தர் அய்யாவுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழ் இனத்திற்கும்கூட நல்லது.

**
தொடரும் போராட்டம் பெருகும் மக்கள் ஆதரவு மீண்டும் சுமந்திரன் துரோகம்!

தமது சொந்த நிலத்தை ஒப்படைக்குமாறு கோரி கேப்பாப்பிலவு மக்களின் போராட்டம் 13வது நாளாக தொடர்கிறது.

அந்த மக்களின் நியாயமான கோரிக்கைக்கு ஆதரவாக சிங்கள முஸ்லிம் மக்களும் தமது ஆதரவினை தெரிவித்து வருகிறார்கள்.

புத்தளம் முஸ்லிம் மாதர் அமைப்பினர் கேப்பாப்ப்pலவிற்கு நேரில் வந்து தமது ஆதரவினை தெரிவித்துள்ளனர்.

காலியில் இருந்து சிங்கள அமைப்புகள் மற்றும் கிறிஸ்தவ மதகுருமார்கள் விரைவில் கேப்பாப்பிலவிற்கு வந்து தமது அதரவினை தெரிவிக்கவுள்ளார்கள்.

கேப்பாப்பிலவு மக்களின் போராட்டம் இலங்கையில் உள்ள அனைத்து இன மக்களின் ஆதரவையும் பெற்ற போராட்டமாக மாறிவருகிறது.

இந்நிலையில் “பிரதமருடன் பேசியிருந்தால் இந்த பிரச்சனை எப்பவோ தீர்ந்திருக்கும்” என்று சுமந்திரன் மட்டும் கேப்பாப்பிலவு மக்கள் மீது குற்றம் சுமத்தியிருக்கிறார்.

முதலாவது, காணாமல் போனோர் தொடர்பாக அவர்களின் உறவுகள் பிரதமருடன் பேசியும் இன்னும் பிரச்சனை தீரவில்லை. எனவே பிரதமருடன் பேசியிருந்தால் கேப்பாப்பிலவு பிரச்சனை தீர்ந்திருக்கும் என்று சுமந்திரன் எப்படி நம்புகிறார்?

இரண்டாவது, பிரதமருடன் பேசுவதற்காகத்தானே சுமந்திரனை எம்.பி யாக மக்கள் தெரிவு செய்துள்ளார்கள். ஏன் இதுவரை சுமந்திரன் பிரதமருடன் இது பற்றி பேசவில்லை?

தன் மீது தவறை வைத்துக்கொண்டு சுமந்திரன் எதற்காக போராடும் மக்கள் மீது குற்றம் சுமத்துகிறார்?

13 நாளாக மக்கள் போராடுகின்றனர். இதுவரை எந்தவித அக்கறையும் எடுக்காத பிரதமரை பேசியிருந்தால் தீhத்திருப்பார் என்று எதற்காக சுமந்திரன் காப்பாற்ற முயல்கிறார்?

தமது சொந்த நலன்களுக்காக இன்னும் எத்தனை மக்கள் போராட்டங்களை சுமந்திரன் இப்படி காட்டிக் கொடுக்கப் போகிறார்?

புதுக்குடியிருப்பிலும் மக்கள் போராடி வருகிறார்கள். அவர்களுக்கும் நல்லாட்சி அரசு இதுவரை எந்த பதிலும் அளிக்கவில்லை.

எனவே அவர்கள் இனி சுழற்சி முறையில் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தப்போவதாக அறிவித்துள்ளார்கள்.

இங்கு எமக்கு எழும் கேள்வி என்னவெனில் இந்த புதுக்குடியிருப்பு மக்களின் போராட்டத்திற்கு என்னத்தைக் கூறி சுமந்திரன் காட்டிக் கொடுக்கப் போகிறார் என்பதே!

Advertisements