சாட்சியாளர் பாதுகாப்பு: செம்மறி ஆட்டுக்குப் பாதுகாப்பாக ஓநாயைப் விடுதல்

இந்த அறிக்கையானது குற்றச் செயல்களால் பாதிக்கப்பட்டவர்களை மற்றும் சாட்சியாளர்களை பாதுகாப்பதற்கு இலங்கையில் புதிய அமைப்பான தேசிய சபையினை உருவாக்குவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசாங்கமானது மேற்கொண்ட நியமனங்களைப் பற்றி ஆராய்கின்றது. இந்த நியமனங்கள் ஐ.நா அறிக்கையில் பெயர்குறிப்பிடப்பட்டு;ள்ள ஒரு குற்றவாளியை உள்ளடக்கின்றது, அத்துடன் போருக்குப் பின்னரான காலப் பகுதியில் புனர்வாழ்வு முகாம்களில் மேன்முறையீட்டு உரிமைகள் எதுவும் இல்லாமல் தடுத்து வைக்கப்பட்டதுடன் கடுமையாக சித்திரவதை செய்யப்பட்டதாக விபரிக்கப்படும் இந்த முகாம்களுக்குப் பொறுப்பான அதிகாரியையும் இந்த நியமனங்கள் உள்ளடக்குகிறது.

இவ்வாறான சூழ்நிலையில் உண்மை ஆணைக்குழுவிலோ அல்லது நீதி மன்றத்திலோ இலங்கையிலுள்ள பாதுகாப்பு படையினருக்கு எதிராக சாட்சி சொல்லும் சாட்சியாளர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் தமது பாதுகாப்பிற்காக இந்த அரசாங்கத்தினை நம்ப முடியாது. சாட்சியாளர் பாதுகாப்பு என்பது இலங்கை தனது மக்களுக்கு பொறுப்புக்கூறல் செயல்முறையில் முக்கியமாக உறுதியளித்தவிடயமாகும்.

ஒரு நாளைக்கு சித்திரவதை போன்ற மோசமான குற்றத்திற்கு நீதிமன்ற வழக்கிற்கு முகங்கொடுக்கப் பேபாகும் இவ்வாறான நபர்களை சாட்சியாளர்களைப் பாதுகாக்கும் ஒரு அமைப்பிற்கு நியமிப்பது செம்மறியாடுகளைப் பாதுகாப்பதற்கு ஓநாய்களை காவலுக்கு விடுவதற்கு ஒப்பானது. இது சர்வதேச கடப்பாடுகளை மேற்கொள்வது பற்றியும் தனது சொந்த மக்களுக்கு நீதிபெற்றுக் கொடுக்கும் அதன் வாக்குறுதிகள் தொடர்பிலும் அரசாங்கத்தின் நல்லெண்ணம் பற்றிய பெரும் கவலையை அதிகரிக்கச் செய்கிறது.

தமிழில்

http://www.itjpsl.com/#tamil

**

See ITJP’s full dossier here.

See ITJP’s press release here.

**

https://twitter.com/francesharris0n

**

Related reports :

Advertisements