தற்போது உலகில் இடம்பெற்ற முக்கியமான போராட்டங்களான ஜல்லிக்கட்டு, அமெரிக்க அதிபர் ட்ரம்பிற்கு எதிரான போராட்டம் போன்றன, வவுனியாவில் முன்னெடுக்கப்பட்ட சாகும் வரையான உண்ணாவிரதப்போராட்டங்களை குறிப்பிடலாம்.

அந்தவகையில் தற்போது கேப்பாப்புலவு மக்களால் தமது உரிமைகளை வென்றெடுப்பதற்கான போராட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

முல்லைத்தீவு கேப்பாப்புலவு, பிலவுக்குடியிருப்பு மக்களின் போராட்டம் தொடர்ச்சியாக இன்றைய தினமும் 6 ஆவது நாளாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதில் 84 குடும்பங்கள் தமது சொந்தக் காணிகளை விடுவிக்க கோரி கைக்குழந்தைகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்கள்.

மேலும், இந்தியாவில் நடைபெறும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து இலங்கையில் பல போராட்டங்களை நடத்தியவர்கள், ஏன் இலங்கை மக்களின் கோரிக்கைகளை கண்டுகொள்ளவில்லை என சமூக வலைத்தளங்களில் சிலர் விசனம் தெரிவித்துள்ளனர்.

மேலும் குறித்த போராட்டத்திற்கு, திருமண வீடுகளுக்கும், இறந்த வீடுகளுக்கும் வந்து செல்வதைப்போன்று சற்று முகத்தை காட்டிவிட்டு செல்கின்றார்கள் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இவ்வாறான சூழ்நிலையில், வடக்கில் உள்ள இளைஞர்களினதும் அரசியல் தலைவர்களின் செயற்பாடுகளும் இவ்வாறுதான் நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றது.

அயல் நாடான இந்தியாவில் ஜல்லிக்கட்டிற்கு தடை விதித்தமைக்கு எதிராக தமிழ் மக்கள் தமது உரிமைகளை வென்றெடுப்பதற்கு ஆதரவு தெரிவித்து இலங்கையில் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் வெடித்தது.

ஆனால் தற்போது இலங்கையில் உள்ள தமிழ் மக்களின் உரிமையை வென்றெடுப்பதற்கான போராட்டத்தில் ஏன் தலைவர்களும், இளைஞர்களும் கண்டுகொள்ளாமல் இருக்கின்றனர்.

மேற்கூறிய செயற்பாடுகள் அனைத்தும் அரசியல் இலாபங்களுக்காகவா, அல்லது இளைஞர்கள் முகப்புத்தகத்தில் விருப்புக்களை (LIKE) பெறுவதற்காகவா என முதியவர்கள் மற்றும் போராட்டக்காரர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

Advertisements