அண்மைய நாட்களில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய சுமந்திரனுக்கு முன்னாள் விடுதலைப்புலிகளினால் கொலைத்திட்டம் தீட்டப்பட்டுவருவதாக கூறி இற்றைவரை முன்னாள் போராளிகள் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர் அவர்கள் மீதான குற்றச்சாட்டுக்களாக கிளைமோர் மற்றும் டெற்ரனேற்ரர்கள் வைத்திருந்தமை பெருந்தொகையிலான கேரளக் கஞ்சா வைத்திருந்தமை என குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றது.

இந்தக் கொலை முயற்சி காதை புலனாய்வுப்பிரிவு சொல்லதற்கு முன்பதாக 4 மாதங்களுக்கு முன்பதாகவே மாகாணசபை உறுப்பினர் சயந்தன் மேடைகளில் கூறிய விடயம் இது விடயத்தில் அரச புலனாய்வினை விட சயந்தன் புலனாய்வு மிகச் சிறந்ததோ என எண்ணத்தோன்றுகின்றது.

அவர் மாகாண சபை தன் நிதி ஒதுக்கத்தில் கொடிகாமம் காவல்துறையினருக்கு மடிக்கணனியும் நிழற்பட இயந்திரமும் சாவகச்சேரி நீதிமன்றுக்கு ஒலிபெருக்கி சாதனமும் வழங்கிவைத்த உத்தமரல்லவா. தென்மராட்சி மக்கள் மாகாண சபையில் ஒரே ஒரு பிரதிநிதியை வைத்திருக்க அவர்யாருக்கு ஒதுக்குகின்றார் எனப்பாருங்கள்?

சாவகச்சேரி நகரில் இயங்கும் அலுவலகத்தின் பெயரோ மாகாண சபை உறுப்பினரது மக்கள் குறைகேள் அலுவலகம் ஆனால் அங்கே தனது சொந்த வியாபாரத்தினை அவர் நடாத்திச் செல்வது கட்சியின் மேல்மட்டங்கள் என வெளிநாட்டுப் பணத்தில் வயிறு வளர்ப்பவர்களுக்குத் தெரியாதா? இன்னமும் சிறிது நாட்களில் கட்சியின் பெயரில் விபச்சாரம் கூட நடக்கலாம் ஆச்சரியப்படுவதற்கில்லை.

இக் கட்டத்தில் ஒரு விடயத்தினை தெளிவுபடுத்தியாக வேண்டும். யார் இந்தச் சுமந்திரன் 2010 ம் ஆண்டில் விடுதலைப்புலிகளின் ஓய்விற்குப்பின்னராக சம்பந்தர் தனியாக எடுத்த முடிவின் பிரகாரம் தமது கட்சியின் சட்டவாதிக்க சக்தியை மேம்படுத்துவதற்காக தேசியப்பட்டியல் மூலம் நாடாளுமன்ற உறுப்பினர் ஆக்கப்பட்டவர்.

2015 இல் தேர்தல் ஓட்டக்களத்தில் தன்னை ஒரு மக்கள் விரும்பும் பிரதிநிதியாக்கவேண்டும் என்றகொள்கையில் யாழ்ப்பாணத்தில் தேர்தலில் நின்றவர். வென்றவர். இதனுள் ஒரு சிறு விபரிப்பைச் செய்துவிட்டே தொடர எனக்கொரு கடப்பாடு உள்ளது.

2015 தேர்தல் களத்திற்கு ஏன் சுமந்திரன் முகம் கொடுத்தார்? இம்முறையும் அவரினால் தேசியப் பட்டியல் ஊடாக வந்திருக்க முடியுமே! இருக்க ஏன் தேர்தலில் இறங்கி பல திருகுதாளங்களை முன்நிறுத்தி வெல்லவேண்டிய தேவை?

திருகுதாளம் எனக்குறிப்பிட நீங்கள் என்னை கொஞ்சம் மலினமாகப் பார்ப்பது எனக்கு தெரிகின்றது. இதன்பின் எதற்கு நான் தொக்குவைக்க! வடமராட்சி மாலுசந்தியில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் தன்மீது சேறுபூசும் துண்டுப்பிரசுரங்கள் விநியோகித்ததிலிருந்து சமதான நீதவான் பட்டம் தருவிக்கின்றேன் எனக்கூறி வாக்குக்களை நிரப்பியவரை எப்படிச்சொல்ல?

இது மட்டுமல்ல இது போல பல இவராலும் இவரது விசிறிகளாலும் ஆனோல்ட், சயந்தன், சுகிர்தன், சிவயோகன் போன்றோரால் மேற்கொள்ளப்பட்ட ஏன் தற்பொதுவரை தொடரும் அயோக்கியத்தனங்கள் சொல்லிலடங்காது.

வடக்கு தமிழ் அரசியற்களத்தில் விக்னேஸ்வரனுக்கு ஒரு காத்திரமான இடத்தினை மக்கள் ஒதுக்கி வருவதான உண்மை நிலைப்பாட்டினை உணர்ந்தவர்களாய் மாவை சேனாதிராசாவும் சுமந்திரனும் புழுங்கிக் கொள்வது அனைவரும் தெளிந்த விடயம்.

மாவை சேனாதிராசா அதிகபட்சம் இன்னமும் ஒரு நான்கு வருடங்களில் அரசியலில் இருந்து ஒதுங்கிவிடுவார் அல்லது மறைந்துவிடுவார்.

வடக்குத் தமிழர்களின் மிகை ஆதரவுடைய அரசியற்கட்சியாகத் திகழ்வது விடுதலைப்புலிகளால் உருவாக்கப்பட்ட தமிழ்த்தேசியக் கூடடமைப்பே என்பது மிகத் தெளிவாக அனைவருக்கும் தெரியும் சம்பந்தர் தனக்குப் பின்னராக தலைமை தாங்கும் பணியை வடக்கு வாழ் தமிழன் யாருடைய கைகளிற்கும் சென்றுவிடக்கூடாது என்ற தெளிவான திட்டமிடலின் பயணத்திலேயே மக்கள் அங்கீகாரம் என்பதற்காகவே தேர்தலில் நின்றார் நிக்கவைக்கப்பட்டார்.

வடக்கு வாழ் தமிழர்களுக்கு ஒரு போராட்டத்தை தாங்கிச்செல்லும் வல்லமை உள்ளது என்பதை உலகிற்கு புடம்போட்டுக் காட்டியவர் தலைவர் பிரகாகரனே ஆனால் இன்று ஒரு கட்சியை தாங்கிச் சென்று நடாத்தும் திராணி அற்ற தலைமைகளே வடக்கில் உள்ளனர்.
நிறுத்தி இத்துடன் வருவோம் விடயத்தினுள்!

தமிழ்தேசியக் கூட்டமைப்பின் கொள்ளைகள் தமிழீழ விடுதலைப் புலிகளது விருப்பங்களில் இருந்து வேறுபடுகின்றன. ஆதலால் முன்னைநாள் தமிழீழ விடுதலைப் போராளிகள் இணைந்து சுமந்திரனை கொல்லச்சதி என நல்லாட்சி அரசு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கான நற்சான்றிதழ் வழங்குகின்றதா?

தொடரவுள்ள ஐக்கிய நாடுகள் மனிதஉரிமைகள் அமர்வுகளில் விடுதலைப்புலிகளின் பிரசன்னம் மீண்டும் தொடர வாய்ப்புள்ளதென்ற தோரணையை உருவாக்கமுனைகின்றதா அரசு? அதற்குள் ஏன் சுமந்திரன் நுழைக்கப்படுகின்றார்?

பல்வேறு சந்தர்ப்பங்களை உருவாக்கி தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் அடுத்த தலைவராக சுமந்திரனை உருவாக்க பேரினவாத அரசு முயற்சிக்கின்றதா?

த ஹிந்து இலங்கையில் பல திட்டங்கள் தீட்டப்பட்டும் அவை இடம்பெற்றும் அவற்றினை எடுகோள்களாகக் காட்டக் கூடிய சந்தர்ப்பங்கள் கிடைத்த சம்பவங்களில் இவ்வாறானதொரு புலனாய்வறிக்கையை வெளிவிட்டதாக அறிய முடியவில்லை. ஆனால் சுமந்திரன் தொடர்பில் திடீர் கரிசனை கொள்ளக் காரணம் என்ன?

சம்பந்தரின் பின்னரான விசுவாசியாக சுமந்திரனை தத்தெடுத்துக் கொள்கின்றதா டெல்லி?

இவற்றில் எதனுடன் நீங்கள் இணங்கினாலும் இந் நான்கு விடயங்களுள் ஒவ்வொன்றாய் நுழைகின்றேன் நாளைமுதல்.

-கார்த்திகையான்-

Advertisements