செல்லம்மாவுக்கு 83 வயதிருக்கும். அவருக்குச் சொந்தமாக முல்லைத்தீவு, கிழக்கு புதுக்குடியிருப்பில் ஒரு வீடு இருக்கிறது. இது புதுக்குடியிருப்பு பிரதேச செயலக அலுவலகத்தின் முன்பே அமைந்துள்ளது. ஆனால் கடந்த இரு வாரங்களாக செல்லம்மா தனது வீட்டுக்கு முன்பாக வெயில், குளிர் பார்காமல் இரவிரவாக போராடி வருகிறார். இராணுவம் செல்லம்மாவின் வீட்டையும் அதைச் சுற்றியுள்ள காணியையும் ‘பாதுகாப்புத் தேவைகளுக்காக’ சுவீகரித்துக் கொண்டது. இதனை மீட்பதற்காகவே செல்லம்மா போராடிவருகிறார். தூரத்தில் இருக்கும் தன்னுடைய வீட்டை இராணுவ கண்காணிப்புக்கு மத்தியில் செல்லம்மா எனக்குக் காட்டினார். உரிமையாளரின் அனுமதி இருந்தும், அந்த வீட்டைப் புகைப்படமெடுக்க நான் விரும்பினாலும் பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும் என்பதால் அதனைத் தவிர்த்துக் கொண்டேன்.
1985 இல் யுத்த சமயத்தில் செல்லம்மாவின் மகனும் மருமகனும் இராணுவத்தால் கொல்லப்பட்டனர். அன்று ஒரே தினத்தில் இந்த இருவருடன் சேர்த்து மொத்தம் 24 பேர் படையினரால் கொல்லப்பட்டனர். அதன் பின் செல்லம்மாவின் கணவர் 2014 ஆண்டில் உயிரிழந்தார். அவருடைய ஈமக்கிரியை தனது சொந்தவீட்டில், சொந்தக் காணியில் வைத்து செய்வதற்கு செல்லம்மா விரும்பினார். வீடு இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்ததால் அதைச் செய்ய செல்லம்மாவால் முடியவில்லை. காணி அபகரிப்புக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாக மண்ணெண்ணெயை தன் மீது கொட்டிக் கொண்டு செல்லம்மா தீவைத்துக் கொள்ளவும் முயன்றுள்ளார். ஆனால், சுற்றி இருந்தவர்கள் அவரைத் தடுத்திருக்கிறார்கள்.
செல்லம்மா இப்போது பலவீனமாக இருக்கிறார். தனக்கு ஒரே ஒரு ஆசை இருப்பதாக செல்லம்மா கூறுகிறார், தான் வாழ்ந்த வீட்டிலேயேதான் உயிர்பிரிய வேண்டும் என்பதுதான் அது. “என்னுடைய தோட்டத்தில் ஏராளமான தென்னைமரங்கள் இருந்தன. ஆனால், இப்போது இராணுவத்தினர் அவற்றை பறித்து அவர்களே எடுத்துக் கொள்வதால், நான் தேங்காயை காசு கொடுத்து வாங்க வேண்டியுள்ளது” என விரக்தியுடன் கூறுகிறார் செல்லம்மா. அது மட்டுமல்ல, இராணுவம் அவருடைய வீட்டை கைப்பற்றியுள்ளதால் ரூ. 8000 மாத வாடகை கொடுத்து அவர் வேறு ஒரு வீட்டில் வசித்து வருகின்றார்.
68 வயதான மார்கரட் கருணானந்தன் செல்லம்மா வசிக்கும் அதே கிழக்கு புதுக்குடியிருப்பில் வசித்துவருகிறார். இவருடைய கணவரும் 1985இல் இராணுவம் மேற்கொண்ட ஒரு தாக்குதலின் போதே உயிரிழந்தார். மார்கரட்டுக்கும் சொந்தமாக வீடு, காணி இருந்ததுடன் தனது காணியில் 42 தென்னைமரங்கள் இருந்ததாக அவர் கூறினார்.
மார்கரட்டும் செல்லம்மாவும் மட்டுமல்லாமல் கிராமத்தைச் சேர்ந்தவர்கள், இந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என எல்லோரும் 2009ஆம் ஆண்டு இடம்பெயர்ந்தார்கள். பல்வேறுபட்ட துன்பங்களை அனுபவித்த அவர்கள், பிறகு மெனிக் ஃபாமில் தடுத்து வைக்கப்பட்டார்கள். பிறகு அவர்கள் விடுதலை செய்யப்பட்டாலும் சொந்த இடங்களுக்கு, சொந்த வீடுகளுக்குச் செல்வதற்கு அனுமதி வழங்கப்படவில்லை. செல்லம்மா, மார்கரட் உட்பட்ட 49 குடும்பங்கள் இடம்பெயர்ந்திருந்த போது அவர்களுக்குச் சொந்தமான வீடுகளும் 19 ஏக்கர் காணியும் இராணுவத்தால் கைப்பற்றப்பட்டது. இதுநாள் வரை மக்களின் நிலம் இராணுவத்தின் பிடியிலேயே இருக்கின்றது. தமது வீடு, காணிக்கான பத்திரங்கள் கூட சிலரிடம் இன்னும் இருப்பதாக அவர்கள் என்னிடம் கூறினார்கள்.
செல்லம்மா உட்பட 49 பேரின் காணிகளை அபகரித்து வைத்திருக்கும் 682ஆவது படையணி.
வீடு, காணிகளை இழந்த மேற்படி கிழக்கு புதுக்குடியிருப்பு வாசிகள் அவற்றை மீட்பதற்காக தொடர்ந்து பல போராட்டங்களை நடத்தியுள்ளனர். அவர்கள் மீண்டும் ஒரு போராட்டத்தை 2017 பெப்ரவரி 3ஆம் திகதி தொடங்கியிருக்கின்றனர். இந்தத் தடவை தமது வீடுகளுக்கு திரும்பிச் செல்வதற்கு இராணுவம் இடம் தரும் வரை தமது போராட்டத்தைக் கைவிடப்போவதில்லை என திடசங்கற்பம் பூண்டுள்ளார்கள். இந்த அடிப்படையில் செல்லம்மா, மார்கரட் உட்பட்ட 49 குடும்பங்களின் உறுப்பினர்கள் கடந்த இரண்டு வார காலமாக பாதை ஓரத்திலேயே உணவு சமைத்து, பசியாறி, பாதை ஓரத்திலேயே பகலில் உட்கார்ந்தும், இரவில் படுத்தும் காலத்தைக் கழித்து வருகின்றனர். கண்கள் விழித்திருக்கும் போதெல்லாம் தனது கைக்கு இன்னும் எட்டாமல் இருக்கும் தமது சொந்த வீடுகளையும் காணிகளையும் ஏக்கத்துடன் பார்த்த வண்ணம் இருக்கின்றார்கள்.
நான் அவர்களை அணுகிய போது ஆரம்பத்தில் என்னை சந்தேகத்துடனேயே பார்த்தனர். நான் இராணுவத்தைச் சேர்ந்தவனா என்றும் விசாரித்தனர். ஆனால், நான் யார் என்பது தெரிந்தவுடன் என்னுடன் நேசபூர்வமாக பேச ஆரம்பித்தனர். தமக்கு நடந்துள்ள அவலத்தைப் பற்றி வருவோர் போவோருக்கெல்லாம் திரும்பத் திரும்பக் கூறி சலித்திருந்தாலும் அதைப் பொருட்படுத்தாமல் தமது சோகக்கதையை எனக்கும் விலாவாரியாக விவரித்தார்கள்.
கடந்த பெப்ரவரி 9 ஆம் திகதி இவர்களில் சிலர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்திப்பதற்கு கொழும்பு வரை சென்றுள்ளனர். அதன்போது தமது வீடுகளிலும், காணிகளிலும் முற்றுகையிட்டுள்ள இராணுவத்தினர் அருகாமையில் இருக்கும் அரச காணியில் எந்தப் பிரச்சினையுமின்றி தங்கலாம் என்பதை பிரதமருக்கு எடுத்துக் கூறியுள்ளனர். அதன்போது பிரதமர் அவுஸ்திரேலியா செல்லத் தயாராகிக் கொண்டிருந்ததால், தான் திரும்பி வந்தவுடன் இந்தப் பிரச்சினை தொடர்பாக விசாரித்து தக்க நடவடிக்கை எடுப்பதாகக் கூறினார் என்று அங்கு சென்றுதிரும்பியவர்கள் தெரிவித்தார்கள். அது மட்டுமன்றி, முல்லைத்தீவு அரச அதிபருடன் தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்டு இது பற்றிய தகவல்களை பிரதமர் கேட்டறிந்ததாகவும் அவர்கள் கூறினார்கள். அதேவேளை, தமது போராட்டத்தை இப்போதைக்கு கைவிடும் படி பிரதமர் கேட்டுக் கொண்டதாகவும் அவர்கள் கூறினர். ஆனால், தமது சொந்த இடங்களுக்குச் செல்ல இடம்கொடுத்தால் போராட்டத்தைக் கைவிடுவதாக சென்றவர்கள் பிரதமரிடம் கூறியுள்ளார்கள். அதற்கு பிரதமர் சற்று மௌனமாக இருந்து விட்டு வேண்டுமானால் போராட்டத்தை அமைதியாக நடத்தும் படியும் எவருக்கும் இடையூறு ஏற்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொண்டதாகவும் அவர்கள் மேலும் கூறினர். கைப்பற்றப்பட்டுள்ள இடங்களுக்கு அவற்றின் உரிமையாளர்கள் செல்ல முயற்சித்தால் அவர்களைத் தடுக்கவேண்டாம் என இராணுவத்தினருக்குக் கூறும் அதிகாரம் பிரதமருக்கு இருக்கின்றதா என்பது பற்றி எனக்குத் தெரியவில்லை.
ஆனால், போராட்டம் ஆரம்பித்து 3 வாரங்கள் கடந்துள்ள நிலையில் – பிரதமரைச் சந்தித்து 10 நாட்கள் கடந்துள்ள நிலையில் இன்னும் சாதகமான பதில் எதுவும் அரசிடமிருந்து கிடைத்த பாடில்லை. இந்த நிலையில், போராட்டம் நடத்துபவர்கள் உண்ணாவிரதம் ஒன்றை ஆரம்பித்துள்ளனர். அவர்கள் எதையும் புதிதாகக் கேட்கவில்லை. நடந்துள்ள ஒரு அநியாயத்தை சரி செய்யுமாறே அவர்கள் கேட்கின்றனர். தமது சொந்த வீடுகளுக்கு செல்ல இடமளிக்குமாறே அவர்கள் கோருகின்றனர்.
தமது சொந்த இடங்களுக்குத் திரும்பிச்செல்ல அனுமதி தருமாறு நடாத்தப்படும் இது போன்ற போராட்டங்கள் இங்கு பல இடங்களில் நடைபெறுகின்றன. புதிய நல்லாட்சி அரசு பதவிக்கு வந்ததன் பின் இராணுவம் கைப்பற்றியிருந்த சில இடங்கள் அதன் உரிமையாளர்களுக்கு விடுவிக்கப்பட்டுள்ளன. ஆனால், பல்லாயிரக்கணக்கானோர் இன்னும் அவ்வாறு அனுமதி கொடுக்கப்படாமல் தமது வதிவிடங்கள் மற்றும் காணிகளில் இருந்து எப்போது இராணுவம் வெளியேறும் என அறியாமல் தவித்து வண்ணம் உள்ளனர். கேப்பாபிலவு, முள்ளிக்குளம், அஷ்ரப்நகர், பாணம, யாழ்ப்பாணம் என பட்டியல் நீடித்துக்கொண்டே போகிறது. அவர்கள் பல ஆண்டுகளாக போராட்டம் நடத்தியவண்ணமும், அதிகாரிகளிடம் மகஜர்களை சமர்ப்பித்த வண்ணமும், நீதிமன்றங்களின் படிகளில் ஏறி இறங்கிய வண்ணமும் ஆயுளை கழித்து வருகின்றனர். ஆனால், தீர்வுதான் கிடைத்தபாடில்லை.
நல்லிணக்கம் பற்றி அரசு இடைவிடாது பேசி வருகின்றது. ஆனால், செல்லம்மா போன்றவர்களுக்கு நல்லிணக்கம் என்றால் தமது சொந்த இடங்களுக்குச் செல்ல அரசு இடம் கொடுப்பதேயாகும். சொந்த வீடுகளை இழந்து நிர்க்கதியாகி தவிப்பவர்களை அவர்களுடைய வதிவிடங்களுக்குச் செல்ல இடம்கொடுத்தாலே போதும். நல்லிணக்கத்தால் மற்றும் நிலைமாற்று நீதியால் அரசு எதிர்பார்க்கும் மன மாற்றத்தை விட கோடி மடங்கு பெறுமதியான மனமாற்றமொன்று தமிழ் மக்களிடையே ஏற்படுவதை அரசு நிச்சயம் எதிர்பார்க்கலாம். ஆனால், அரசாங்கமோ, வதிவிடங்களை உரிமையாளர்களுக்கு திருப்பிக் கொடுப்பது சற்று சிக்கலான மற்றும் ஓரளவு காலம் தேவைப்படும் விடயம் என்று கூறுகின்றது. ஆனால், செல்லம்மாவுக்கு அதுவரை பொறுத்திருக்க காலம் இடம்கொடுக்குமோ தெரியவில்லை. உயிரிழக்கும் முன் எப்படியாவது தனது வீட்டிற்கு, காணிக்குத் திரும்பிவிட வேண்டும் என்பதே செல்லம்மாவின் ஆசையாக இருக்கிறது.
புலம்பெயர் தேசங்களில் தமிழீழ விடுதலைப் புலிகளால் மிகவும் பிரமாண்டமாக கட்டிவளர்க்கப்பட்ட ஒரு அமைப்புத்தான் TCCஎனப்படும் தமிழர் ஒருங்கிணைப்பு குழு.
இந்த குழுவானது தாயகத்தில் ஏற்பட்ட புலிகளின் ஆயுத மௌனிப்பை தமக்கு சாதகமாக பயன்படுத்தி அதுவரை தாங்கள் புலிகளின்பால் எமது மக்களிடம் திரட்டிய கோடிக்கணக்கான நிதிகளையும், சொத்துகளையுத் சூறையாடிக்கொண்டு சிறிது காலம் இப் புலம்பெயர் தேசங்களில் தங்களை தாங்களாகவே ஒளித்துக்கொண்டார்கள்.
எமது தேசியத் தலைவர் அவர்கள் மிகவும் தூரநோக்குடன் புலம்பெயர் தேசத்தில் தனது போராளிகள் ஊடாக கட்டி உருவாக்கப்பட்ட இந்த அமைப்பின் தேவையானது, ஒவேளை தாயகத்தில் எமது அமைப்பிற்கு எதிரிகளால் ஏதாவது திடீர் தாக்கங்கள் ஏற்பட்டால் அதை புலத்திலிருந்து தடுப்பதற்கான ஒரு பின்தளமாக தான் கருதியே அவர் புலத்திலும் ஒரு அரசியல் தளத்தை புலம்பெயர் தாயக உறவுகளின் ஒத்துளைப்புடன் அதை விடுதலைப் புலிகளின் பாணியில் உருவாக்கியிருந்தார்.
மேலும் இந்த கட்டமைப்பில் அதிகம் புலத்திலுள்ள இளையோர்களையே இணைக்கும்படி தான் பிரத்தியேக உத்தரவினையும் வழங்கியிருந்தார்.
இதற்கான எமது தலைவரது தூரநோக்கம் என்னவாக இருந்திருக்கும் என்பதை நீங்கள் இலகுவாக புரிந்துகொள்ள முடியும்.
மேலும் இவ் அமைப்பின் உருவாக்கம் ஊடாக எமது தலைவரது எதிர்பார்ப்பென்பது அது மலையாக இருந்த காரணத்தினால்தான் அவர் தனது 2008ம் ஆண்டு மாவீரர் நாள் உரையிலும் அதை குறிப்பிட்டு “புலம்பெயர் இளையோரின் பங்களிப்பை வலியுறுத்தி” தமது விடுதலைப் போராட்டத்தை வீச்சாக்குவதற்கு உங்கள் ஒவ்வொருவரினதும் பங்களிப்பை தீவிரமாக நல்கும்படி கேட்டுக்கொண்டிருந்தார்.
உண்மையில் எமது தேசியத் தலைவர் அவர்கள் முன்கூட்டியே தான் எதிர்பார்த்ததுபோன்று கடந்த 2009ம் ஆண்டு தாயகத்தில் எமது அமைப்பிற்கு பாரிய நெருக்கடி ஏற்பட்டுவிட்டது. இதனால் எமது விடுதலைக்கான ஆயுதப் போராட்டமும் முடிவுக்கு வந்தது.
ஆனால் புலம்பெயர் தேசங்களில் எமது தலைவர் அவர்கள் தான் நம்பி உருவாக்கியிருந்த TCCஎனும் இப் புலம்பெயர் கட்டமைப்பு ஊடாக நாம் தாயகத்தில் ஏற்பட்ட எமது இழப்புக்களை ஓரளவுக்கேனும் ஈடுசெய்யலாம் என்று கருதியே தாயகத்திலிருந்து எப்படியாவது எதிரியின் பிடியிலிருந்து நாம் தப்பி மறுபடியும் ஒரு அரசியல் பலத்தின் ஊடாக எமது தமிழீழ விடுதலையை நாம் வென்றெடுக்க முடியுமென்றே எமது தேசியத் தலைமையும், போராளிகளாகிய நாங்களும் இவ் அமைப்பை மலையாக நம்பியிருந்தோம்.
ஆனால் புலத்தினில் என்ன நடந்தது?
துரோகம்,துரோகம்,துரோகம் மட்டும்தான். அதாவது எமது தமிழீழ விடுதலைக்காக “ஆயுதம்தரித்த எந்தவொரு முன்னாள் போராளிகளையும் தமது புலம்பெயர் கட்டமைப்புக்குள் உள்வாங்கமுடியாதென்ற” நயவஞ்சக முடிவினை இந்த புலம்பெயர் அமைப்பான TCC தனக்குள் எடுத்துவிட்டது.
புலத்தினில் எமது தலைவர் அவர்களால் தாயகத்திற்கு பின்தளமாக நம்பி உருவாக்கப்பட்ட இந்த TCC எனும் அமைப்பானது, எதிரியை தம் கண்களால் காணாமலேயே தனது தளத்தை விட்டு கிலியினால் மட்டும் தப்பியோடவில்லை, அதுவரை தாம் வெற்று வீரம்பேசி எமது தேசியத்தின்பால் மக்களிடம் திரட்டிய பணத்தையும், சொத்துக்களையும் காவிக்கொண்டே ஓடி ஒளித்தார்கள்.
இதனால் புலம்வந்த எமது போராளிகள் தமக்கு ஏதுவான தளமேதுமற்று அவரவர் அங்கொன்றும் இங்கொன்றுமாக தம்மை தாமே பலப்படுத்தி இன்றுவரை தாயகத்தையும், தமது தேசியத் தலைமையையும்,மாவீரர்களையும், போரினால் பாதிக்கப்பட்ட தமது உறவுகளையும் தமது நெஞ்சில் சுமந்து, எமது அடுத்தகட்ட விடுதலைக்கான வேள்விக்காக தம்மை இப் புலம்பெயர் தேசங்களில் புடம்போட்டு வருகிறார்கள்.
உண்மையில் புலத்திலிருந்த இந்த TCCஎனும் எமது பின்தளம் ஒருவேளை உறுதியாக இப் புலம்பெயர் தேசத்தில் இருந்திருந்தால், நிச்சையமாக தாயகத்திலிருந்துவந்த எமது போராளிகளை உள்வாங்கி இப்புலம்பெயர் தேசங்களில் மகா மக்கள் சக்தியை உருவாக்கியிருக்க முடியும்.
இதையும்விட தாயகத்தில் எதிரிகளால் அல்லல்படும் எமது போராளிகளையும், மக்களையும் துரிதமாக மீட்டு அவர்களின் துன்பங்களையும் தடுத்திருக்க முடியும்.
ஆகவே இந்த தேசத் துரோக அமைப்பின்(TCC) மாபெரும் துரோகத்தின் காரணமாகத்தான் அன்று 2013ம் ஆண்டு இறுதியில் தாயகத்தைவிட்டு எதிரிகளின் பிடியில் இருந்து துருக்கிவரை தப்பிவந்த பாடகர் S.G.சாந்தன் அவர்கள், மிகவும் நெருக்கடியான பிரையாண அழுத்தங்களுக்குள் தான் முகம்கொடுத்து குடிக்க நீர்கூட அற்று, உண்ண உணவேதுமற்று, உறங்க உறங்கிடமற்று “துருக்கியின் வனாந்தரத்தில்” பெரும் நோய்வாய்ப்பட்டிருந்தார்.
அவருக்கேற்பட்ட அந்த “பிரையாணத்தின் தோல்விதான்” அவருக்கான மரணத்தை விரைவாக்கி அவரை வேகமாக சாகடித்ததென்பதே யாரும் மறுக்கமுடியாத உண்மை.
ஒருவேளை அவர் ஏதாவதொரு ஐரோப்பிய நாட்டுக்குள் அன்று வந்திருந்தால் நிச்சையமாக அவரை இப் புலம்பெயர் நாடுகளின் தாராளமான மருத்துவ வசதிகளால் அவரை காப்பாற்றியிருக்க முடியும் என்பதுடன், அவரூடாக எமது தேசிய விடுதலையை சற்று எழுச்சிபெற உயிர்பூட்டியிருக்க முடியும் என்பதையும் இங்கே பதிவுசெய்ய விரும்புகின்றேன்.
ஆகவே மறைந்த எமது இசைப்புலி S.G.சாந்தன் அவர்களின் சாவுக்கு மட்டுமல்லாமல், தாயகத்தில் கடந்த 2009ற்கு பின்னர்தொட்டு தற்போதுவரை அவலப்பட்டு மடிந்துகொண்டிருக்கும் எமது அனைத்து போராளிகளினதும், தீவிர ஆதரவாளர்களினதும் அவலச் சாவுகளுக்கும், துன்பங்களுக்கும் புலத்தில் பின்தளம் என்று எம்மையும், எமது தேசியத் தலைமையும் ஏமாற்றி பிழைத்த இந்த TCCஎனும் தேசத் துரோகிகளே முதன்மை காரணம் என்பதை மனவேதனைகளுடன் இங்கே பதிவுசெய்கின்றேன்.
AFP reports on Friday, citing Malaysian Police, indicated that the North Korean leader’s estranged half brother was assassinated at the Kuala Lumpur International Airport (KLIA) with a lethal nerve agent called VX, manufactured for chemical warfare and listed by the UN as a weapon of mass destruction. As the question comes how the chemical weapon came to Malaysia, AFP cited ‘Sri Lankan’ Terrorism Professor Rohan Gunaratna stationed in Singapore saying that North Korea has previously used diplomatic pouches to smuggle items. The IC, its media and terrorism research outfits, miserably failing in international investigation on how the cluster bomb had reached genocidal Sri Lanka and was deployed against Tamil civilian masses herded into a zone in Vanni in a war upheld by a bandwagon, could only make a poor show on the current crime committed at KLIA, commented Tamil political observers. Full story >>
Two Muslim organisations, Kaaththa-nakar Arasiyat Ka’lam (Kaaththaan-kudi Forum of Politics) and the Progressive Council for National Integration, mobilised Muslims in Kaththaan-kudi (Kattankudy) outside Jamiullafireen Jummah Mosque after Friday prayers. “Let us begin afresh from our split-ups” and “Unity brings prosperity” were featured as the main slogans by the organisations. In the meantime, the families of enforced disappeared Tamils in Vavuniyaa in the Northern province resumed their struggle on Friday amidst a section of NGO agents were seeking to pacify the grassroots activists. Full story >>
Mothers and wives of enforced disappeared in Ki’linochchi district, who are waging a continuous struggle since Monday this week, have blamed the Office of Human Rights High Commissioner in Geneva for working behind the scene to give more ‘time and space’ to the SL State without bringing international justice. “Look at us. I am already 65. Most of the aged mothers, like myslef, are affected by various kinds of illnesses. We take more medicines than food. We would not last for long. 7 years have already vanished. Giving time and space to SL State only means death to ourselves and justice. If we are no more, there would be no one demanding justice. Colombo knows this,” Leelathevi Ananthanadarajah, one of the mothers giving collective leadership to the struggle being waged in front of the Kandaswamy temple in Ki’lilnochchi told TamilNet in a video interview. Full story >>
There are multiple ways that New Delhi could ameliorate the circumstances of Sri Lankan Tamils. India’s Prime Minister, Narendra Modi, has been relatively quiet when it comes to Tamil issues in Sri Lanka, although now would be a good time for the prime minister to reconsider his low-key approach. Modi visited Sri Lanka in March 2015, the first time an Indian prime minister had traveled to the island nation in nearly thirty years. He even went to Jaffna in the country’s north, a symbolically significant move. During the visit, Modi spoke about devolution and the need to go beyond the 13th amendment to the constitution. He is expected to visit Sri Lanka later this year too.
By Taylor Dibbert [thediplomat.com] Full Read Story
Shanthalingam Gunaratnam (SG Shanthan), the most popular Eezham Tamil singer of songs in the Tamil Eelam liberation struggle so far, has passed away in Jaffna on Sunday at the age of 57 of kidney failure. The singer, known for his unique high-pitch singing of liberation songs, has recorded more than 250 Tamil Eelam songs and at least 350 devotional songs. One of his initial Tamil Eelam songs, “Intha ma’n engka’lin chontha ma’n” (this is our soil) sung 26 years ago, is still used as slogan by the people demanding de-militarisation of the occupied country of Eezham Tamils. Shanthan is gone but his voice will live in the hearts and minds of Eezham Tamils forever.
SG Shanthan (30 December 1960 – 26 February 2017)
“Poo-malarnthathu kodiyinil” was his first Tamil Eelam song recorded in Jaffna in 1991 and “Ka’n’nukku’l’lea vaiththu kaaththidum veerarai” was his last Tamil Eelam song recorded in 2009 during the genocidal war on Tamil Eelam.
After getting released from the prolonged military incarceration in 2010, Shanthan has continued to be a singer of devotional songs until he became bedridden, as both his kidneys had failed.
Shanthan was awaiting kidney transplantation for some time and was undergoing special treatment at the clinic attached to Jaffna Teaching hospital.
Shanthan’s demise occurred at 2:20 p.m. while the doctors were trying hard to save his life, medical sources at Jaffna Teaching Hospital said. He was admitted to intensive treatment on Saturday. Toxins had built up in his body despite regular dialysis, the doctors said.
Born on 20 December 1960, Shanthan who hails from Pungkudutheevu in Jaffna, debuted as a singer at the age of 12 while his family was based in Colombo. He moved to Ki’linochchi in 1978 and continued to sing devotional songs at temples and had a keen interest in traditional theatre (kooththu songs) until the LTTE identified his talent in 1991. From 1991 to 2009, he remained the star singer of Tamil Eelam songs.
Two of Shanthan’s sons have sacrificed their lives in the armed struggle. One of them, Isai-arasan, was also a singer.
Most of the Tamil Eelam songs sung by SG Shanthan were authored by popular Eezham Tamil poet Puthuvai Ratnathurai, whose whereabouts is still not known after the occupying Sri Lankan military had him into custody during the final hours of the Vanni war in May 2009.
Shanthan’s funeral is to be held in Ki’linochchi on Tuesday.
[TamilNet]
***
SL military bans devotional song at ancient Saiva temple in Batticaloa [TamilNet, Friday, 09 August 2013]
The occupying Sri Lanka Army in the East has banned Saiva devotional songs authored by popular poet Puthuvai Ratnathurai, whose whereabouts are still not known after the occupying Sri Lankan military had him into custody during the final hours of the Vanni war in May 2009. The SL military personnel have warned the temple administration of the historic Siva temple Thaan-thoan’ri-eesvarar at Kokkaddichchoalai not to play the popular devotional song “Piddukku ma’n chumantha perumaanaar” on the temple loud-speakers or on at any occasion. Together with the popular song on Kokkaddich-choalai, TamilNet also releases a few other songs for the wider Tamil audience throughout the world.
The song has been regularly relayed in the loudspeaker till the SL military recently instructed the temple administration not to play it any more.
The song, which is a poem of Ratnathurai that has been rendered into voice by prominent Eezham Tamil singer SG Shanthan, is purely a devotional.
The temple authorities have been recently instructed by the SL military not to play the devotional songs of the “LTTE era”.
Several devotional songs were written by Poet Puthuvai Ratnathurai under the title ‘Koapura vaasal’ praising the glory of Thaanthaamalai Murukan Koayil, Ukanthai Murukan Koayil, Ea’raavoor Kaa’li Koayil, Maamaangkap-pi’l’laiyaar Koayil, Kokkaddich-choalai, Chiththaa’ndi Murukan Koayil, Ma’ndoor Murukan Koayil and Thiruk-koa’neasvaram temple.
The ban and restrictions being placed on Saiva temples by the occupying Colombo and its military remind the people of Batticaloa of the colonial Portuguese and Dutch periods, Saiva devotees in Batticaloa say.
During the Portuguese and Dutch periods, Saiva Koyils were destroyed and the colonial masters banned routine poojas and rituals. Today, more than five hundred Saiva temples have been destroyed in the East giving way to the construction of new Buddhist Viharas. Some Buddhist monks have removed the Pi’l’laiyaar statue from the Pillaiyar Koyil located at Punaanai where Sri Lanka Army has a cantonment.
The occupying military, constructing Buddha temples, is also allegedly behind the robberies in the temples after the Saiva devotees protested against the hostile act by the SL military in grabbing the lands belonging to Saiva temples in the East.
The Saiva devotees protesting against the ‘robberies’ taking place at Saiva temples have been threatened by the SL military.
If the Saiva devotees attend the protests organised by Tamil parliamentarians from Batticaloa, they would face the same fate of the Sinhala residents of Welweriya in the Gampaha district where a student was shot dead by the SL military when the protestors ignored the ‘instructions’ of the ‘security forces’, the Sinhala military has warned the villagers in Batticaloa.
The genocidal realities in the island have to get into the conscience of the people in India misled by the BJP-RSS-Shiv Sena lot and by the Indian media empires operated from Mumbai, New Delhi and Chennai, said representatives of Saiva associations in the East.
சிரிய அகதிகளை செஞ்கம்பளம் வைத்து கனடியப்பிரதமரே விமான நிலையம் சென்று வரவேற்கும் கனடிய அரசு , ஈழத்தமிழ் அகதிகளை எவ்வாறு நடாத்துகின்றது என்று முகநூலில் இருந்து பகிர்ந்து கொள்கின்றோம் முழுமையான பெயர் விபரங்கள் குறிப்பிடப்படவில்லை !
தற்போதைய இலங்கை அரசுத்தலைவர் மைத்திரி பாலாவின் கொலைவெறி படையினரின் தேடுதலில் இருந்து தப்பி அமெரிக்கா வந்திருந்தார் தமிழ் உறவு ஒருவர். அவரை பிணைப் பொறுப்பு வழங்கி கனடா அழைத்து வர நேற்று போட்ஏரியில் இருக்கும் அமெரிக்க-கனடிய எல்லைக்கடவில் இருக்கும் குடிவரவுத்துறைக்கு சென்றிருந்தேன். அங்கு தமிழ் ஏதிலிகளையும் (அகதிகள்) சிரிய எதிலிகளையும் நடத்தும் விதம் அதிர்ச்சியாக இருந்தது.
சிரிய ஏதிலிகளை தங்கத் தாம்பாளம் வைத்து வரவேற்கும் கனடிய அரசு தமிழ் ஏதிலிகளை வேண்டா வெறுப்பாக நடத்துகிறது.
சிரிய ஏதிலிகள் களைப்பாற தனியான இடம், 2 மாதத்துக்கான செலவு தொகைப் பணம், இரண்டு பெட்டிகளில் உடனடி அத்திய அவசியப் பொருட்கள் என வழங்கும் கனடிய அரசு இச்சலுகைகள் எதனையும் தமிழ் ஏதிலிகளுக்கு வழங்குவதில்லை. மாறாக அவர்களை வழிமறித்து அங்கிருக்கும் தேவாலயம் ஒன்றில் தங்கவைத்து சிலகிழமைகளின் பின் துருவித்துருவி விசாரித்து இரத்த உரித்து உள்ள ஒருவர் பெறுப்போடு உள்ளே செல்ல அனுமதிக்கிறது.
உள்ளே அனுமதித்த பின்னர் ஏதிலிகள் அல்லர் எனக் கண்டு பத்துக்கு ஏழு பேர் மீண்டும் இலங்கைக்கு நாடுகடத்தப் படுகின்றனர். பத்தில் மூன்று தமிழர்களே உயிர் ஆபத்துக் உள்ள ஏதிலிகளாக ஏற்றுக் கொண்டு நிரந்தரமாக தங்க அனுமதிக்கப்படுகின்றனர்.
கனடாவில் தமிழர்களின் அரசியல் வளர்ச்சியின் தொய்வையே இது காட்டுகின்றது. தொழில்துறை மற்றும் வாணிபத்தில் தமிழர்கள் வளர்ந்தது போன்று அரசியலிலும் வெற்றிக் கொடி கட்டி இந்நிலைபோக்க வேண்டும். Thir
** Akathஉண்மையில் இது ஒரு தோல் வியாதி , இருப்பினும் , நல்ல ” இன உணர்வுள்ள ” தமிழ் வேட்பாளரை பா.ம. அனுப்புவதன் மூலமே இவற்றை எளிதாக எதிர் கொள்ளலாம்….!
Anto அகதி விடயத்துடன் இன்னொரு விடயத்தையும் இங்கு குறிப்பிட வேண்டும். இந்தியா, சீனா போன்ற நாட்டு மாணவர்கள் கனடா வந்து படிக்க எவ்வித சிரமமுமில்லை. அதேபோல் இலங்கை சிங்கள மாணவர்கள் கனடா வந்து படிக்க இலங்கையில் உள்ள கனேடிய தூதரகம் விசா வழங்கும் அதேவேளை தமிழ் மாணவர்களின் விசா விண்ணப்பங்களை ஏதோ ஒரு சாக்குப்போக்கு சொல்லி நிராகரிக்கிறது. இலங்கை கனேடிய தூதரகம் முழுமையாக இன்று வரை தமிழ் மாணவர்களை புறக்கணித்து நடக்கிறது. இதையிட்டு தமிழ் கனேடிய அரசியல் பிரமுகர்கள் யாரும் அரசிடம் முறையிட்டதாக தெரியவில்லை. இவர்கள் தமிழ் மக்கள் மீது அக்கறை கொண்டவர்கள் ஆயின் உடனடியாக இதையிட்டு அரசிடம் பேச வேண்டும். புகைப்படங்களில் வெள்ளையின அரசியல் பிரமுகர்களுடன் போஸ் கொடுப்பதோ, தமிழ் கலாச்சார நாள், கிழமை, மாதம், வருடம் என பறை தட்டுவது பெரிய விடயமல்ல. இந்த மாதிரியான விடயங்களை கருத்திலெடுத்து அரசுடன் பேசி தீர்வு காண வேண்டும்.
** Ramaநாம் இன்னும் குண்டுச்சட்டிக்குள் குதிரை ஓட்டிக்கொண்டிருக்கின்றோம் !
உண்மையில் நாம் கடைந்தெடுத்த பச்சோந்திகள் !
நம்மில் எத்தனை பேர் ஆங்கில ஊடகங்களில் பின்னூட்டல்கள் இடுகின்றீர்கள் ? ஏன் வேற்றின ஈழத்தமிழர் சார்புக்கட்டுரையாளர்களைக் கூட நாம் ஊக்குவிப்பது இல்லை அதில் எதிர் பின்னூட்டல்கள் தான் அதிகம்
பல பெற்றோர்கள் தமது பிள்ளைகளுக்கு தமிழ் கற்பிப்பதில்லை !
ரொரன்ரோ சுற்றறிக்கைகளில் தமிழ் மொழிக் கொலை பற்றி யாரும் அலட்டிக்கொள்வதில்லை !
இது புலம் பெயர்ந்த தமிழர்களின் மொழிப்பற்றின்மையை , அலட்சியத்தை காட்டுகின்றது
இது குறித்து மாநகரசபையோடு தொடர்பு கொண்ட போது ஆவன செய்வதாக பதிலளித்தார்கள்
ரொரன்ரோ பாடசாலைகளில் ஆங்கிலத்தில் தமிழர்கள் பற்றிய எந்த நூல்களும் இல்லை !
குறிப்பாக முஸ்லீம் மக்கள் மீதான இனப்படுகொலை நூல்கள் சிறார்களுக்கு கற்பிக்கப்படுகின்றன. ஆனால் நாம் இன்னும் இலங்கைக் குடிகளாகவே அடையாளப்படுத்தப்படுகினறோம்
கல்விச் சபைகளில் தமிழர்கள் இருந்த போதும் அவர்கள் வெறும் சுயநலவாதிகளாகவும் தன்னலம் சார்ந்தவர்களாகவும் தான் இருக்கின்றார்கள்.
இவர்கள் எவரிடமும் தமிழர் நலன் சார்ந்த எந்த வேலைப்பாடுகளும் இல்லை வெறும் இது தனி நபர் தொழிலாக மாறிவிட்டது
தமிழ் கலாச்சாரம், தமிழ் மரபுத்திங்கள் பற்றிய பரப்புரை இல்லை அது பற்றி தமிழ் சிறார்களுக்கு ஏன் பெற்றோர்களுக்கே தெரியாது !
பாடசாலைகளில் கற்பிக்கப்படும் மற்றைய இனங்களின் மரபுகள் கலாச்சாரங்களில் தமிழர்கள் சார்ந்த கனடா -கல்விச்சபையால அங்கீகரிக்கப்பட்ட தமிழர் மரபுரிமைத் திங்கள் கருத்தில் எடுத்துக்கொள்ளப்படவில்லை
இது குறித்து நாம் கல்விச்சபையோடும் நீதன் சான்-கல்விச்சபை , தமிழர் மரபுரிமைத் தலைவர் உடனும் தொடர்பு கொண்ட போது நீதன் பதிலளிக்கவில்லை
கல்விச்சபை இது பற்றி இனி பாடசாலைகளுக்கு அறிவிப்பதாக எமக்கு பதிலளித்திருக்கின்றார்கள்
** Tamil இப்படித்தான் எல்லாம் அரைகுறையாக நடக்கிறது. அல்லது மூடி மறைக்கிறார்கள்.
பொறுப்பில் இருப்பவர்கள் அதனைக் கவனிப்பார்கள் என்று மக்கள் நம்பிக் கொண்டிருக்கிறார்கள் ஆனால் அவர்கள் அத்தனையையும் மறைத்து வேறு யாருடையதோ வேலையைச் செய்கிறார்கள்.
இங்குள்ள தமிழ்மொழி சார்ந்த அத்தனை அமைப்புகளும் கேள்விக்குட்படுத்தப்பட வேண்டும்.
கனடா மற்றைய இன அரசியல்வாதிகளை அணுகினால் கூட பல சிறப்பான பணிகளை நிறைவேற்றலாம் போல உள்ளது.
பல்கலைக் கழகத்தில் படிக்கும் தமிழ் தெரிந்த மாணவர்களாவது இத்தகைய விடயங்களில் அக்கறை செலுத்துவது நல்லது.
Rama நாம் உரியவர்களிடம் முறையிட வேண்டும் மற்றவர்கள் செய்வார்கள் என்று எப்போதும் காத்திருப்பதே வழக்கமாகிவிட்டது
Tamil உந்தச்சங்கங்கள் மற்றது எல்லாம் புலுடா என்பது எப்போதோ தெரிந்து போயிடுச்சுதே!
எட்டு ஆண்டுகள் கற்றுத் தந்த பாடம்.
உண்மையாக உழைப்பவர் மன்னித்துக் கொள்ளவும்.!
Tamil அதற்குப் பின்னாலும் தமிழன்தான் அள்ளி வைப்பதற்கு இருப்பான். ஆராய்ந்து பாருங்கள்.
எப்படித் த.தே. கூட்டமைப்புக்காரரை பாராளுமன்றத்துக்கு வென்று வா மகனே சென்று வா என்று அனுப்பினீர்களோ அப்படி உலகை வென்று வா என்று அனுப்புவர்கள் இவற்றைக் கவனிக்கிறார்களா என்று பாருங்கள். தமிழர் மரபுத்திங்கள் கொண்டு வந்தால் மட்டும் போதாது.
தமிழனுக்கு வாழும் வசதியும் இருக்கா என்று பார்க்க வேண்டும்.
நான் மட்டும் உச்சிக் கொம்பில் ஏறி நுனிக்கொம்பு மேய்ந்துவிட்டு உலகமே தெரியுது என்று சொல்லக்கூடாது.
ஆயிரம் செய்தித்தாள் வானொலி ஊடகங்கள் தொலைக்காட்சிகள் தங்கள் கருவிகளை அந்தப்பக்கமும் திருப்புங்கள்.
மரக்கறியும் மீனும் உடுபுடவைக்கும் பாய்ந்து பாய்ந்து விளம்பரம் செய்தால் போதாது.
Gane ஒரு உறுப்பினர் போதாது.
– வழக்கு தொடுத்து இந்த நிலையை மாற்ற முடியுமா…?
Thir அரசியல் சாசனத்தின் உட்பிரிவுகளை கேள்விக்குள்ளாக்க நேரிடும். அவைதொடர்பான வழக்குகள் உச்சநீதிமன்றில்தான் நடக்கும். பெரும் பொருட் செலவும் காலமும் எடுக்கும். இவை அரசியல் வாதிகளால் இலகுவாக சீர் செய்யக் கூடியவை. தமிழர்கள் அக்கறை எடுத்தால் இதை இலகுவாக மாற்றலாம்.
Pirana உண்மையான பதிவு ஆனால் இதை நம் சமூகம் என்றும் ஏற்காது..அகதியாக கனடாவில் வாழும் வாழ்ந்து கொண்டிக்கும் நம் தமிழ் உறவுகளின் நிலமை மிகவும் மோசமானது ஒரு நாடாளமன்ற உறுப்பினரால் எதுவும் செய்துவிடமுடியாது ஆனால் எமக்குதான் ஒற்றுமை இல்லையே இன்னும் ஒருவரை அனுப்புவதற்க்கு.. நம் இனம் நாதியற்ற இனம் என்பதை கனாடா வந்ததும் உணர்ந்தேன் நமக்கான உரிமைகள் இவ் உலகில் எங்கும் கிடைக்காது நமக்கு..
Roy- Agreed. Im not against refugees coming here however 2 ships came with full Tamils with legitimate reason but all been labeled as terrorists and most oof their claims not been heard or decision made but not a single family been re united. 8 years later still seperated and waiting for their fate.
ஈழத்தின் புரட்சிப் பாடகர் சாந்தன் காலமானார்
ஈழத்தின் தலைசிறந்த பாடகர் எஸ்.ஜி. சாந்தன் இன்று பிற்பகல் 2 மணியளவில் காலமானார்.
பிரபல தென்னிந்திய பாடகர் ஆலங்குடி சோமு தெய்வம் திரைப்படத்திற்காக பாடிய “மருதமலை மாமணியே முருகையா” என்ற பாடலை 1972 ஆம் ஆண்டு கொழும்பில் சிறுவனாயிருந்தபோது ஏதேச்சையாக பாடியதிலிருந்து சாந்தனின் கலைப்பயணம் ஆரம்பமாகியது.
தொடர்ந்து பல புரட்சிப் பாடல்கள் பாடியதோடு எண்பதுகளின் இறுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளோடு இணைந்து பன்னூறு தமிழீழ எழுச்சிப் பாடல்களைப் பாடியிருந்தார். போராட்ட காலத்தில் தமிழீழத்தின் ஆஸ்தான பாடகராய் மிகுந்த மரியாதைக்குரியவராய் வலம்வந்தவர் சாந்தன்.
எண்பதுகளின் இறுதியில் “இந்த மண் எங்களின் சொந்த மண்” என்ற பாடலில் ஆரம்பித்து “களம் காண விரைகின்ற வேங்கைகள் நாங்கள்….”, “ஆழக்கடல் எங்கும் சோழ மகராஜன்..”, “கரும்புலிகள் என நாங்கள்…”, “எதிரிகளின் பாசறையை தேடிப் போகிறோம்” முதலான நூற்றுக்கணக்கான எழுச்சிப் பாடல்களும் “பிட்டுக்கு மண் சுமந்த பெருமானார்” முதலான பக்திப் பாடல்களும் பாடியிருந்தார்.
போராட்ட எழுச்சியை ஈழத்தின் தமிழ் இளைஞர் யுவதிகளிடையே ஊட்டியதில் சாந்தனின் கணீரென்ற உச்ச ஸ்தாயி குரலுக்கு பெரும் பங்குண்டு.
கடும் சிறுநீரக கோளாறால் அவதிப்பட்டுவந்த சாந்தன் கடந்த வருடம் சிறுநீரக மாற்றுச் சிகிச்சை செய்துகொண்டர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
‘இந்த மண் எங்களின் சொந்த மண்’ எனும் பாடலின் மூலம் தனது இசைப்பயணத்தை ஆரம்பித்த சாந்தன் கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தின் புகழ்கூறும் “பிட்டுக்கு மண்சுமந்த பெருமானார் கொக்கட்டிச்சோலையிலே உருவானார்”
மற்றும் அம்பிளாந்துறை ஸ்ரீ முத்துமாரியம்மன் புகழ் கூறும் தோரணம் இசைப்பேழையில் உள்ள மூன்று பாடல்கள் என பல பாடல்களை பாடி தமிழ் மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
***
எஸ். ஜி. சாந்தன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எஸ். ஜி. சாந்தன் ((குணரத்னம் சாந்தலிங்கம், இறப்பு: 26 பெப்ரவரி 2017) ஈழத்துப் பாடகரும், நாடகக் கலைஞரும் ஆவார். இவர் தமிழீழ விடுதலைப்புலிகளின் பிரதானப் பாடகராக இருந்தவர். 1995 வரை யாழ்ப்பாணத்தின் மிகப் பிரபலமான நட்சத்திரப் பாடகராக இருந்தவர். இவர் நடித்த அரிச்சந்திர மயான காண்டம் இவரது நடிப்புத்திறனுக்குச் சான்றாக அமைந்தது.
கலைப்பயணம்
இவரது தந்தைக்கு கொழும்பில் ஒரு கடை இருந்தது. அங்கு தங்குவதற்கு அறையும் இருந்தது. அதனால் பாடசாலை விடுமுறைக்கு கொழும்புக்குப் போய் விடுவது இவரது வழக்கம். அப்படியொரு தருணத்தில் 1972 இல் கொழும்பு, செக்கடித் தெரு கதிரேசன் கோவிலில் நடந்த இசை நிகழ்ச்சி ஒன்றைப் பார்க்கச் சென்ற போது அங்கு பாடும் வாய்ப்பு இவருக்குக் கிடைத்தது. ‘மருதமலை மாமணியே முருகையா’ என்ற பாடலைப் பாடி மிகுந்த வரவேற்பைப் பற்றுக் கொண்டார். இவரது கலைப்பயணத்தின் ஆரம்பமாக இதுவே அமைந்தது. இது இவரது முதல் மேடை அனுபவமாகவும் அமைந்தது. இதன் பின்னர் இவர் வீதியில் செல்லும் போது இவரை அழைத்து தம்பி அந்த ‘மருதமலைப் பாடலை’ பாடு என்று இவரது ரசிகர்கள் கேட்கத் தொடங்கி விட்டார்கள். இதன் பின்னர் அந்தத் தெருவுக்கு வரும் கத்தார் வீடு ஜேசுரட்ணம் என்பவர் இவரை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திற்கு அழைத்துச் சென்று சிறுவர் மலரில் பாடவைத்தார். அதிலிருந்து வானொலி நிகழ்ச்சியில் நாடகத்திலும் நடிக்க ஆரம்பித்திருந்தார். 1977 இல் கிளிநொச்சிக்குக் குடிபெயர்ந்தார். 1981 இல் கண்ணன் இசைக்குழுவுடன் இணைந்து பாட ஆரம்பித்தார். அந்த இசைக்குழுது 1982 இல் கலைக்கப்பட்டதன் பின் தனது பெயரிலேயே சாந்தன் கோஷ்டி (சாந்தன் இசைக்குழு) என்ற பெயரில் இசைக்குழு ஒன்றை ஆரம்பித்தார்.
குடும்பம்
இவரது இரு மகன்கள் மாவீரர்கள். மூத்த மகன் இரண்டாம் லெப்டினன்ட் கானகன். இவர் 1998 களின் பிற்பகுதியில் ஜெயசிக்குறு முறியடிப்புச் சமரின் போது மூன்று முறிப்புப் பகுதியில் வீரச்சாவைத் தழுவியவர். இரண்டாவது மகன் இசையரசன்
இவர் பாடிய பாடல்களில் சில
பிட்டுக்கு மண் சுமந்த பெருமானார்
ஈடுவைத்து ஈடுவைத்து நந்தலாலா
கலைஞர்கள் எல்லோருக்கும் சொந்தமானவர்கள் – மதுரக் குரலோன் சாந்தன்
“கலைஞன் எல்லோருக்கும் சொந்தக்காரன் அவன், இவர், இவருக்குரியவன் என சுட்டுவது தவறானது. கலைத்துறை ரம்மியமானது. இதில் போட்டியிருக்கலாம். அது பொறாமையாக மாறிவிடக்கூடாது. பொறாமை ஏற்பட்டால் எமது அடுத்த சந்ததி வளர முடியாத நிலைமை ஏற்படும். நம் நாட்டுக் கலைஞர்களுக்கு மதிப்பளிக்க வேண்டும். அதுவே எமது தனித்துவத்தை நிலை நாட்டுவதற்கான ஆதாரம்” இவ்வாறு தனது கணீரென்ற மதுரக்குரலால் தற்கருத்தை முன்வைத்தார் பிரபல பாடகர் எஸ்.ஜி.சாந்தன்.
கே: உங்களைப் பற்றி முதலில்…
எனது அப்பாவுக்கு கொழும்பில் ஒரு கடை இருந்தது. அத்துடன் எங்களுக்குச் சொந்தமாக ஒரு அறையும் இருந்தது.
யாழில் எங்களுக்கு பாடசாலை விடுமுறை கொடுத்ததும் நாங்கள் கொழும்புக்கு போய் அப்பாவுடன் நிற்போம். இப்படி ஒருமுறை கொழும்பில் நிற்கும் பொழுது செக்கடித் தெரு கதிரேசன் கோவிலில் இசை நிகழ்ச்சி ஒன்று நடந்தது இதனை பார்க்கச் சென்றிருந்தேன் அப்போது அங்கு பாடும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது.
“மருதமலை மாமணியே முருகையா” என்ற பாடலை பாடினேன். பாடி முடிந்ததும் நல்ல கைதட்டல் கிடைத்தது. இதனையே நான் எனது ஆரம்பமாக கருதுகிறேன். இது 1972 இல் நடந்தது. அதுதான் எனது முதல் மேடை அனுபவம். அதன் பின் நான் வீதியில் சென்றாலும் என்னை அழைத்து தம்பி அந்த “மருதமலைப் பாடலை” பாடு என்பார்கள் நானும் பாடுவேன்.
இந்நிலையில் அந்தத் தெருவில் பழம் சாப்பிடவரும் கத்தார் வீடு ஜேசுரட்ணம் என்பவர் என்னை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திற்கு அழைத்துச் சென்று சிறுவர் மலரில் பாடவைத்தார். அப்போது சிறுவர் மலரை பத்மநாதன் மாமா என்பவரே நடத்தி வந்தார். தொடர்ந்து இந்த வானொலி நிகழ்ச்சியில் நாடகத்திலும் நடித்தேன்.
கே: இதன் பின்னர் உங்களது மேடை இசைத்துறை பயணம் எவ்வாறு இருந்தது?
இப்போது இருக்கும் அப்சராஸ் இசை குழுவை ஆரம்பிக்கும் முன் சித்ராலயா என்ற இசைக் குழுவை செல்லத்துரை அண்ணன் ஆரம்பித்தார். அவர் தற்போது கொழும்பில் பாடுகிறார் என நினைக்கிறேன். அந்த நேரம் நான் சித்ராலயாவில் பாட ஆரம்பித்தேன். அப்போது எனக்கு ஓரளவு தாளம், சுருதி என்பவற்றை முதலில் சொல்லித்தந்த மனிதர் என்றால் அது செல்லத்துரை அண்ணன் தான். அவரை என்னால் மறக்க முடியாது.
அவர் துணிந்து மேடை ஏறியதால் தான் என்னை அறியாமலே இந்த இசை துறையில் தடம் பதிக்க ஆரம்பித்தேன்.
முத்துசாமி மாஸ்டரை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுதாபனத்தில் காண்பேன். என்னைத் தட்டிக் கொடுப்பார். நாராயணன் என்ற சங்கீத வித்துவானும் பாடு எனத் தட்டிக் கொடுத்தார். இவ்வாறாக எனது பயணம் தொடர்ந்தது.
கே: இந்நிலையில் நீங்கள் கொழும்பிலிருந்து இடம்பெயர நேர்ந்தது ஏன்?
எனது அப்பாவின் கடை நஷ்டமாகி விடவே அவர் 1977 ஆம் ஆண்டு கிளிநொச்சி வந்தார் நாம் 1979இல் கிளிநொச்சி வந்து ஆர்மோனியத்தோட பாட ஆரம்பித்த நான், 1981 ஆம் ஆண்டு கண்ணன் கோஷ்டியில் சேர்ந்து பாட ஆரம்பித்தேன்.
எனினும் என்ன பிரச்சினையோ 1982 ஆம் ஆண்டு கண்ணன் மாஸ்டர் இசைக் குழுவை நடத்துவதை கைவிட்டார். இந்நிலையில் நான் “சாந்தன் இசை குழு” என்ற ஒரு மெல்லிசை இசைக் குழுவை ஆரம்பித்து பாடிவந்தேன். அப்படியே வாழ்வு வேறொரு கட்டமைப்புக்குள் வந்தது. அங்கு பாடிய நான் மீண்டும் பக்திப் பாடல், சினிமாப் பாடல் என பரிமாணம்… பாட வந்துவிட்டேன்.
கே: மேடை நிகழ்ச்சிகளில் எவ்வாறான பாடல்களை இப்போது பாடி வருகிறீர்கள்?
இடைக்காலம் சினிமாப் பாடல்களைப் பாடுவதை, விட்டு தத்துவபாடல்களையும் பக்திப் பாடல்களையும் பாடுகின்றேன். பிட்டுக்கு மண் சுமந்த பெருமானார் பாடல் கேட்டிருக்கிறீர்களா அதுதான் என்னை பிரபல்யப்படுத்தியது. இது மட்டுமின்றி முத்துவிநாயகர், ஆதிகோவில் என்பவற்றுக்கு பாடி வருகிறேன்.
எனக்கு பக்திப் பாடல் என்றால் மிகவும் விருப்பம். எனது ஆத்ம திருப்திக்காக பாடும் பாடல்கள் என்றால் அது பக்திப்பாடல் தான்.
கே: சமகால சினிமாப் பாடல்களைத் தாங்கள் பாடுவதில்லையா?
தற்போது எனக்கு சினிமாப் பாடல்களை பாடமுடியாது என்றல்ல, பாட முடியும். இருந்தாலும் கருத்து மிக்க பழைய பாடல்களையும், இடைக்காலப் பாடல்களையும் பாடுகிறேன். புதிய பாடல்களை தற்போது எனது பிள்ளைகள் பாடுகின்றனர். அவர்களுக்கு நாங்கள் விலகி நின்று இடமளிக்கின்றோம்.
கே: அன்றைய பாடல்களுக்கும் இன்றையப் பாடல்களுக்கும் இடையிலுள்ள இசை வேறுபாடுகளை நீங்கள் எவ்வாறு பார்க்கிறீர்கள்?
பழைய பாடல்கள் பாடல்கள் இசை என்பன மனதில் நிலைத்து நிற்க கூடியவை இதனை உருவாக்க இசையமைப்பாளர்கள் அதிக நேரத்தை பயன்படுத்தினர். ஆனால் இப்போது இசைக் கருவிகள் தொழில்நுட்பங்கள் வளர்ச்சியடைந்துள்ளதால் பாடல்களை உருவாக்குவது வேகம் பெற்றுள்ளது. வசன அமைப்புக்கள் மெல்ல பின் தள்ளப்பட்டு இசைக் கருவிக்கு முதலிடம் வழங்கப்படுவதாக நான் கருதுகிறேன்.
“கற்றது கை மண் அளவு கல்லாதது உலகளவு” இது குறித்து நாங்கள் யாரோடும் போட்டி போட முடியாது.
ஏனென்றால் இசை என்பது சத்திரத்திற்கு ஒப்பானது இதன் அடி நுனியை காண்பது என்பது இலகுவானது அல்ல என்னைவிட மற்றவன் திறமைகளையே நான் சாதனையாகக் கருதுகிறேன். அவரவரது திறமைகளை சாதனைகளை இரசிகர்களே தீர்மானிக்கிறார்கள்.
இருப்பினும் நாங்கள் செய்யும் தொழிலை சுத்தமாக செய்வதற்கு முனைய வேண்டுமே தவிர, யாரோடும் போட்டி போடுவது அல்லது பொறாமைப்படுவதும் முறையல்ல.
கே: இத்துறையில் போட்டி மனப்பான்மை இருப்பது குறித்து தாங்கள் என்ன கருதுகிறீர்கள்?
போட்டி இருக்க வேண்டும் ஆனால் அது பொறாமையாக மாறக் கூடாது. மாறினால் அடுத்த சந்ததி வளராமல் அழிந்து போகும் நிலை ஏற்படும். எமது இசை மக்களுக்கு சலித்துவிடாமல் பின்னால் முன்னேறி வருபவர்களுக்கு நாம் இடமளிக்க வேண்டும். அவர்கள் முன் செல்ல வழி செய்ய வேண்டும்.
அந்த எண்ணம் எல்லா கலைஞர்களுக்கும் இருக்க வேண்டும். எவரேனும் நன்றாக செய்தால் அவரை முன் உதாரணமாக எடுத்துக் கொள்வேனே தவிர, அது திறம் இது திறம் என்ற கொள்கை என்னிடத்தில் இல்லை.
கே: இப்பொழுது உங்கள் பெயரில் ஓர் இசைக்குழுவை ஆரம்பித்துள்ளீர்கள். உங்களுக்குப் பின் இந்த இசைக் குழுவைக் கொண்டு செல்வது யார்?
அப்படி ஒரு நியதியை வைத்து இந்த இசைக் குழுவை நான் தொடங்கவில்லை நானிருக்கும் வரை செய்வேன். எனக்கு இந்தத் தொழிலில் 39 வருடகால அனுபவம் உள்ளது.
சில சந்தர்ப்பங்களில் இந்தத் தொழிலை விடலாமா என்று கூட சிந்தித்து இருக்கின்றேன். அந்த அளவிற்கு கஷ்டப்பட்டிருக்கிறேன்.
“பேச்சு பல்லக்கு தம்பி கால்தடை” என்பர். அதுபோல ஊரெல்லாம் பேசுவார்கள் சாந்தன் இப்படிப் பாடுறார் அப்படிப் பாடுறார் என்று ஆனால் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டிருந்தேன். இருப்பினும் கலையிலுள்ள பற்றும் அன்பும் மக்கள் ஆதரவும் இதிலிருந்து ஒதுங்கிவிடாது செய்துள்ளது.
இந்நிலை எனது பிள்ளைகளுக்கு ஏற்படக்கூடாது. அவர்கள் பொருளாதார ரீதியில் வளர வேண்டும். என்பதையும் என்னால் தீர்மானிக்க முடியாது அதை இறைவன் கொடுக்க வேண்டும்.
கே: தங்களது பிள்ளைகள் இத்துறையில் ஈடுபட்டுக்கொண்டிருப்பது குறித்து எதை உணர்கிறீர்கள்?
நல்ல வரவேற்பு இருக்கிறது. நான் சிறுவனாக இருந்தபோது நான் மேடையில் பாடிவிட்டு வரும் போது எனது அப்பா சந்தோஷமாக சொல்வார் “என்ர மகனை போல பாட யாருமில்லை; நல்லா பாடுறான்” அதே நிலையிலேயே இன்று நானும் இருக்கிறேன்.
கே:இப்போது தங்களது தனித்துவமான இசை முயற்சிகள் எவ்வாறுள்ளன?
இறுவட்டுகள் பலவற்றில் பாடி வருகிறேன். பல கோயில்கள் குறித்த இறுவெட்டுக்களும் வெளிவந்துள்ளன.
திருகோணமலை சண்டிலிப்பாய் போன்ற பகுதிகளைச் சேர்ந்த சில ஆலயங்களுக்கான பாடல்கள் இதில் அடங்குகின்றன. இது மகிழ்ச்சியாய் இருக்கிறது.
கே: உங்களது இசைப்பயணத்தில் நெகிழ்ச்சித்தரும் நிகழ்வாக அமைந்தது எது?
ஒரு காலத்தில் தென் இந்திய பாடல்களை மட்டும் பாடிக் கொண்டிருந்தோம் எங்களுடைய இசையில் சுயமாக எனது குரலில் சொந்தப் பாடல்கள் பாடும்போது நெகிழ்திருக்கின்றேன்.
கே: விரைவில் அதாவது எதிர்வரும் 11ஆம் திகதி உங்கள் இசை நிகழ்ச்சியன்று கொழும்பில் நடைபெறுவதாக அறிகிறோம். இதுகுறித்து என்ன கூற விரும்புகின்றீர்கள்.
ஆம். பம்பலப்பிட்டி கதிரேசன் மண்டபத்தில் இந்நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. முழுமையாக எனது இசைக்குழுவினர் இந்நிகழ்ச்சியை வழங்கவுள்ளனர். நம்நாட்டிலுள்ள திறமைமிக்க கலைஞர்களை இம் மேடையில் நீங்கள் சந்திக்கலாம். நம்மவர்களும் சளைத்தவர்கள் அல்லர் என்பதை இந்நிகழ்ச்சியில் நீங்கள் பார்த்து மகிழலாம்.
மூலம்: வீரகேசரி – மார்கழி 4, 2011 ஆக்கம்: ராகவி
**
ஈழ புரட்சிப் பாடகர் எஸ்.ஜி சாந்தனின் உயிர்பிரிந்தது. மேடையில் இறந்தாலும் பறவாயில்லை பாடல் தான் என்னுடைய உயிர் மூச்சு. எஸ்.ஜி.சாந்தன்
**
தேசப்பாடகனுக்கு எமது இரங்கல் – தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – யேர்மனி
விடுதலைக் குயிலே எங்கு சென்றாய்!
விடுதலைக் குயிலே எங்கு சென்றாய்! எங்கள்
வேங்கையின் குரலே எங்கு சென்றாய்!
ஈழத்தின் விடுதலை கூவிய குயிலே
ஈழக்காற்றினில் கலந்தாயோ…
இந்த மண் எங்களின் சொந்தமண் – என்று
எங்கினும் உன் குரல் கேட்குதையா!
எங்கள் தேசத்தின் அடையாளக் குரலாக ஒலிக்கின்ற
வீரியம் எம்மை ஆளுதையா!
மேடையில் புலியாகி நீ நின்றால் – எம்
நரம்புகள் புடைத்துமே நிற்குமையா – ஈழ
மேன்மையை உன் குரல் பாடி நின்றார்
எதிரிகள் அடிவயிறும் நடுங்குமையா
உலகெங்கும் சென்றுமே குரல் கொடுத்தாய் – எங்கள்
விடுதலை வேள்வியில் தீ வளர்த்தாய்
நீ பெற்ற மைந்தரை ஈழம் தந்தாய் – எம்
நெஞ்சத்தின் மூலத்தில் வீற்றிருப்பாய்.
குரலெனும் ஆயுதம் ஏந்தி அனல் குயிலாய்
போர்புரிந்த மறவன்.
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.
**
எஸ்.ஜி.சாந்தன்
“செந்தூருக்க கோலம் வானத்துல பாரு
வந்து இந்த நேரம் போட்டு வச்சதாரு”
உரும்பிராய்ப் பக்கமிருக்கும் வானத்தை நோக்கித் தன் விரலால் காட்டி விட்டுக் கூடப் பாடும் சேவியர் சுகுமாரனைக் காதலோடு பார்த்துப் பாடுகிறது அந்தக் குரல்
“சேரும் இள நெஞ்சங்களை வாழ்த்துச் சொல்லக் கோர்த்தார்களா ஊருக்குக்குள்ள சொல்லாததை வெளியில் சொல்லித் தந்தார்களா?”
கோண்டாவில் உப்புமடப் பிள்ளையார் கோயில் முன்றலில் கே.கே.எஸ். றோட்டை மறித்துப் போடப்பட்ட தற்காலிக திடலில் மக்கள் திரண்டிருக்க, கோயிலின் வெளிப்புற மதிலை ஒட்டிய பக்கம் போடப்பட்ட மேடையில் இருந்து ஒலிக்கிறது அந்த கணீர்க் குரல். ஜிப்பாவும், வேட்டியும் கட்டி, முறுக்கேறிய அந்த அழகிய உருவத் தோற்றமே தென்னிந்திய சினிமா நட்சத்திரமொன்று எங்கள் முன்னால் நிற்பது போல ஒரு பிரமை. குரலுக்குச் சொந்தக் காரர் வேறு யாருமல்ல, அந்த எவரைப் பற்றிய அந்தப் பசுமையான நினைவுகளை எழுதும் போது மயிர்க்கால்கள் குத்திட்டு மெய் சிலிர்க்கின்றனவே அவர் தான் எஸ்.ஜி.சாந்தன்.
1991 ஆம் ஆண்டென்று நினைக்கிறேன் அதுதான் சரியாகப் பொருந்திப் போகிறது. எங்கள் அயலூர் கோண்டாவில் உப்புமடப் பிள்ளையார் கோயிலின் இரவுத் திருவிழாவுக்கு அருணா கோஷ்டி வருகிறது என்ற செய்தி வந்தவுடன், என் சகோதரனும் நண்பனுமான சுதாவோடு சைக்கிள் போட்டுக் கோயிலுக்குப் போகிறோம். நாச்சிமார் கோயிலடி ஐயரின் ஶ்ரீதேவி வில்லிசைக் குழு நடந்து கொண்டிருக்கிறது. அது முடிந்த போது சாமப் போர்வையில் நட்சத்திரப் பதக்கங்கள் மின்னிக் கொண்டிருந்தது.
அடுத்தது அருணா இசை குழு தான் என்ற உற்சாகத்தில் சனம் தம்மை ஆசுவாசப்படுத்துகிறது. ஒரு மணி நேரம், இரண்டு மணி நேரம் என்று நேரம் கடந்தாலும் கூட்டம் அசையவில்லை. அப்போது தான் ஒரு மொறிஸ் மைனர் கார் வந்து நிற்க, பின்னால் ஒரு வானும் சேர்ந்து கொள்கிறது. கூட்டத்தின் ஒரு பகுதி எட்டிப் போய் அந்தக் காரையும் வானையும் மொய்த்து விட்டு வந்து கடலைச் சரை போட்டுக் குறி வைத்த தம் இடத்தில் வந்து உட்கார்ந்து கொள்கிறது.
“அளவெட்டியில இருந்து கச்சேரி முடிச்சு வருகினமாம், தொடர்ச்சியா மூண்டு கச்சேரி பார்வதி சிவபாதத்துக்குத் தொண்டை கட்டிப் போச்சாம் பெண் பாடகிக்கு என்ன செய்யப் போகினமோ” என்று உச்சுக் கொட்டியது வேவு பார்த்து விட்டு வந்த சனம்.
அருணா இசைக்குழு கடகடவென்று தம் வாத்தியங்களை மேடையில் பரப்ப, பத்துப் பதினைந்து நிமிடங்களுக்கெல்லாம் பாட்டுக் கச்சேரி தொடங்கி விட்டது.
“தேவன் கோயில் மணியோசை நல்ல சேதிகள் சொல்லும் மணியோசை” என்று தன் ஒலிவாங்கியை இரு கைகளால் பவ்யமாகக் கோத்துக் கொண்டு ஆராதித்துப் பாடும் அந்தக் கலைஞன் எஸ்.ஜி.சாந்தன் என்று என்று எனக்கு முதன் முதலில் அறிமுகமாகிறார்.
அந்த நிகழ்ச்சியைத் தொகுத்தவர் பெயரைத் தற்சமயம் மறந்து விட்டேன், ஒரு காலத்தில் றேடியோ சிலோனில் இருந்தவர் பின்னாளில் ஐரோப்பாவுக்குப் புலம் பெயர்ந்து அங்கும் வானொலிப் பணி செய்தவர். அவர் தன் கம்பீரக் குரலால் அறிமுகப்படுத்திய போது எம் போன்ற அடுத்த தலைமுறை இளையவர்களிடம் எஸ்.ஜி.சாந்தன் பதியம் போட்டு உட்கார்ந்து விட்டார். இவர் தான் தொடந்து எம் வாழ்நாளில் மறக்க முடியாத பாடகராக அமையப் போகிறார் என்பதும் அப்போது எமக்குத் தெரிந்திருக்காது.
பார்வதி சிவபாதம் இல்லாத தனிக் கச்சேரியா என்ற எங்கள் அவ நம்பிக்கையைத் தகர்த்துப் போட்டது “ராசாத்தி மனசுலே இந்த ராசாவின் நெனப்புத்தான்” சேவியர் சுகுமாரன் பெண் குரலெடுத்துக் கச்சிதமாகப் பாட, “தேவன் கோயில் மணியோசை” பாடலில் சீர்காழியாக உருகி நின்றவர் “ராசாத்தி மனசுல” பாடலில் மனோவாக காதல் ரசம் கொட்டிப் பாடுகிறார் இந்த எஸ்.ஜி.சாந்தன். இன்னும் “கேளடி கண்மணி காதலன் சங்கதி” என்று எஸ்.பி.பாலசுப்ரமணியமாகக் குரல் தணித்து இன்னொரு வேடம் பூணுகிறார் எங்கள் சாந்தன்.
தன்னுடைய குரலை வெவ்வேறு பரிமாணங்களாக வெளிப்படுத்தி, பாடும் போது தென்னிந்தியப் பாடகர் எஸ்.பி.பி போன்று மக்களோடு மக்களாய்க் குதூகலித்துப் பாடும் வித்தை கற்ற நட்சத்திரப் பாடகர் எஸ்.ஜி.சாந்தன் ஊர் ஊராய் மக்கள் மனதில் ஊன்றியது இப்படித்தான். அப்போது பள்ளிக்கால விடலைகளாய் இருந்த எங்கள் காலத்துக்கு முற்பட்ட பால்ய காலத்து கண்ணன் கோஷ்டி மெல்லிசை மேடைகளிலும் எஸ்.ஜி.சாந்தனின் பங்களிப்பு இருந்தது பின்னாளில் தெரிந்த கதை. சாந்தனுக்காக, சேவியர் சுகுமாரனுக்காக, பார்வதி சிவபாதத்துக்காக கோயில் கோயிலாகத் திரிந்து திருவிழா மேடைகளில் அவர்களைக் கண்டு பூரித்தது ஒரு பொற்காலம்.
ஈழத்துப் போர்க்கால எழுச்சிப் பாடல்கள் தமிழகத்துப் பாடகர்களால் பாடி ஒலியேறிய காலம் கடந்து ஈழத்து இசை வல்லுநர்கள் இசைவாணர் கண்ணன் முதற் கொண்டு உள்ளூர்க் கலைஞர்களின் சங்கமம் அரங்கேறிய போது எஸ்.ஜி.சாந்தனின் அடுத்த பரிமாணம் வெளிப்படுகிறது. அதுவரை சினிமாப் பாடல்களால் அடையாளப்பட்டவர் நம் தாயகக் கலைஞன் என்ற சுய அந்தஸ்த்தை நிறுவுகிறார்.
ஈழத்துப் போர்க்கால எழுச்சிப் பாடல்களில் மரபிசை சார்ந்த திரு.பொன்.சுந்தரலிங்கம், திரு.வர்ண இராமேஸ்வரன் போன்ற நட்சத்திரங்களுக்கு மத்தியில் ஒரு வெகுஜன அந்தஸ்துப் பெற்ற பாடகன் எஸ்.ஜி.சாந்தனின் வரவு தனித்துவமாக அமைகிறது. தன் குரலில் மிடுக்கையும், உணர்வையும் ஒரு சேரக் கொடுக்கும் திறன் , இயல்பாக உள்ளே பொதிந்திருக்கும் நடிப்பாற்றல் சேர்ந்த ஒரு ஜனரஞ்சகக் கலைஞராகப் போர்க்கால எழுச்சிப் பாடல்களில் வீறு கொண்டு வியாபித்த சாந்தன் குரல் பறையொலிக்கு நிகரான போர் முழக்கமாகத் தெனித்தது.
“போற்றியெம் தமிழெனும் காவியப் பொருளே” என்று சங்கீத பூஷணம் திரு பொன்.சுந்தரலிங்கம் தன் மரபிசை சார்ந்த வெளிப்பாட்டைக் குரல் வழியே வெளிப்படுத்த
“ஆதியாய் அநாதியாய் அவதரித்த செந்தமிழ்”
என்று தன் தாய்த் தாய்த் தமிழைப் போற்றிப் பாடும் அந்தக் குரலின் பாங்கு இன்னொரு திசையில் இருந்து கிளம்புகிறது எஸ்.ஜி.சாந்தனின் குரல் அது இன்னொரு முத்திரை இந்த இரண்டு விதமான இசைக் கூறுகளின் அடிப்படையிலேயே ஈழத்துப் போர்க்கால இசைப்பாடல்கள் தம்மை நிறுவியிருக்கின்றன.
“ஈடு வைத்து ஈடு வைத்து நந்தலாலா”
பாடல் ஆனையிறவுப் போர்க்களம் கடந்து பின்னாளில் சந்தித்த எல்லாக் களமுனைகளிலும் நின்றிருந்த போராளிகளின் வாயில் முணுமுணுக்க வைத்திருக்கும். அந்தக் காலத்துக் குஞ்சு குருமான்களும் சாந்தனின் குரலைப் பிரதி பண்ணிப் பாடிப் பார்த்தன.
“விண் வரும் மேகங்கள் பாடும் மாவீரரின் நாமங்கள் கூறும் ”
அந்த நீண்ட பாடலைக் கடப்பதற்குள் எத்தனை முறை அழுதிருப்பேன்/போம் அங்கே சாந்தன் வெளியில் நின்று வேடிக்கை பார்த்த எங்கள் குற்ற உணர்ச்சியைத் தட்டியெழுப்பியதோடு மானசீகமான அஞ்சலியையையும் கொடுக்க வைத்தார் தன் குரலில் பொதிந்த கற்பூர மெழுகால்.
ஈழத்துப் போர்க்காலப் பாடல்கள் வெறும் வீரத்தை மட்டுமா பறை சாற்றியும் தட்டியெழுப்பியும் வைத்தது? தமிழின் பெருமையை, ஈழத்து ஆலயங்களின் மகிமையையும் அல்லவா அரவணைத்தது. வடக்கிலிருந்து கிழக்கின் கோடி வரை போற்றித் துதித்தது எஸ்.ஜி.சாந்தனின் குரல் http://thesakkatru.com
மொழியும் கலையும் எம் இனத்தின் இரு கண்கள் என்பது போல ஈழத்துக் கூத்திசைக்கான பாடல்களில் எஸ்.ஜி.சாந்தனின் குரலும் கையாளப்பட்டது. முந்த நாள் சிவராத்தியில் புலம் பெயர்ந்த சமூகத்தைக் கொக்கட்டிச்சோலைத் தாந்தோன்றீஸ்வரர் கோயிலுக்குப் போக வைத்தது “பிட்டுக்கு மண் சுமந்த பெருமான்”
இன்னும் “ஆழக் கடலெங்கும் சோழ மகராசன் ஆட்சி செய்தானே அன்று”
என்று தலைவனைப் போற்றிய குரலாய், போர்க் கால மேகங்களில் மீனவர் படும் துயரின் வெளிப்பாடாய் “வெள்ளி நிலா விளக்கேற்றும் நேரம்”
என யாசித்துப் போகும் அத்துணை போர்க்காலத்து உணர்வுகளின் வெளிப்பாடாய் எஸ்.ஜி.சாந்தனின் குரல் ஆவணப்படுத்தியிருக்கிறது.
இவற்றையெல்லாம் எழுதும் போது ஒரு பெருங்குற்ற உணர்வை ஈழ சமூகத்தோடு சேர்ந்து சுமக்க வேண்டியிருக்கிறது. எஸ்.ஜி.சாந்தன் நோய்ப் படுக்கையில் இருக்கிறார் என்று செய்தி வந்த போது முந்திக் கொண்டிருக்க வேண்டும் அவருக்கான மருத்துவ உதவிகளுக்குப் பணம் வேண்டும் என்ற அறை கூவல் வருவதற்கு முன். மீண்டும் ஒருமுறை நாம் நன்றி மறந்த சமூகமாக அடையாளப்படுத்தப்பட்டு நிற்கிறோம்.
தன்னுடலில் நோயைச் சுமந்து கொண்டு வாழ்வாதாரத்துக்காக மேடையேறிப் பாடிய இந்தக் காணொளியைக் காணும் போது
அந்தக் குற்ற உணர்ச்சி மிகும்.
இன்றும் கூட அந்தக் கலைக் குடும்பத்தை ஏந்திப் பிடிக்க நாம் முன் வர வேண்டும்.
எஸ்.ஜி.சாந்தன் குறித்த இன்றைய செய்திகள் எல்லாம் வெறும் செய்திகள் தான்.
எஸ்.ஜி.சாந்தன் எங்களிடமிருந்து காலாகாலமாகப் பிரிக்க முடியாத உணர்வு மட்டுமே.
Recent Comments