ஜல்லிக்கட்டுக்கு எதிராக செயல்படும் பீட்டாவின் துனை அமைப்பான ஹுயுமன் அனிமல் சொசைட்டி (HAS) சார்பில் வருகின்ற 29/01/2017 அன்று கோவை PSG CAS ல் பின்னணி பாடகி சித்ரா கலந்து கொள்ளும் ஆடலும் பாடலும் நிகழ்ச்சி நடைபெறுகிறது இதற்கு அனுமதி கட்டணமாக ரூ.5,000, 2,500, என பல லட்சங்கள் கோவை மக்களிடமிருந்து நுழைவு கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

இந்த பணத்தை ஜல்லிக்கட்டு எதிரான வழக்கு தொடர்வதற்கும், ஜல்லிக்கட்டுக்கு எதிராக பிரச்சாரம் செய்வதற்காகவும் பயன்படுத்த உள்ளனர். பொதுமக்களிடமிருந்து பல லட்சம் வசூல் செய்து பொதுமக்களின் ஆதரவு பெற்ற ஜல்லிக்கட்டை எதிராக அமைப்பு நடத்தும் இந்த நிகழ்ச்சியை தடை செய்ய கோரி கோவை காவல் துறை ஆணையர் அவர்களிடம் கோவை வழக்கறிஞர்கள் சார்பாக இன்று புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது.

நமது பணத்தை பெற்று நம்மை அடக்க நினைக்கும் இது போன்ற அமைப்புகளை வண்மையாக கண்டிப்பதுடன் இந்த நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு எதிர்ப்பை தெரிவிப்போம்.

https://liveday.in/chennai-online/peta-music/

Advertisements