ஹிப் ஹாப் ஆதி மத்திய அரசின் அதிகாரத்தால் மிரட்டப்பட்டரா அல்லது விலைக்கு வாங்கப்பட்டாரா ?

தமிழகத்தில் நடக்கும் போராட்டம் தமிழக அரசை நோக்கி அல்ல மத்திய அரசை நோக்கி நடக்கும் போராட்டம் .காரணம் தமிழக கலாச்சாரம் பண்பாட்டை அழிக்க மத்திய அரசு சட்டங்கள் உதவியுடன் அதிகார வெறியுடன் செயல்படுகின்றன அதை உடைத்துதெரிய வரலாற்றில் இல்லாத ஒரு போராட்டமாக இந்த போரட்டம் நடை பெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த போராட்டத்தை மத்திய அரசு சற்றும் எதிர்பார்க்கவில்லை. மேலும் உளவுத்துறையில் இருந்து வரும் ரிப்போர்ட்களை பார்த்து அது சொல்லும் செய்திகளை அறிந்து வழக்கத்திற்கும் அதிகமாகவே பயந்தும் போய் உள்ளது என்பது கண்கூடு மேலும் மற்ற மாநில மீடியாத்துறையில் உள்ளவர்களோடு தொடர்பு கொண்டவ்ர்களுக்கு இது மிக நன்றாகவே தெரிந்து இருக்கிறது

உளவுத்துறை ரிப்போர்ட் வந்த பின் மோடி சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி தமிழக மக்களுக்கு சாதகமாக தமிழக அரசு வேண்டுமென்றால் அவசரசட்டம் இயற்றலாம் அதற்கு சட்டத்தில் இடம் இருக்கிறது என்று பெருந்தன்மையோடு சொல்வது போல நாடகம் ஆடி அதை தமிழக முதல்வரிடம் அந்த பிரச்சனை தள்ளி பிரச்சனையை சுமுகமாக முடிப்பதாக நாடகம் ஆடி பிரச்சனைக்கு முற்று புள்ளி வைக்கலாம் என நினைத்து இருக்கிறார்.

ஆனால் தமிழக மக்களுக்கு மோடியின் எண்ணம் புரியாத என்ன? அதனால் அவர்கள் பட்டியலில் இருந்து காளையை நீக்க வேண்டும் மற்றும் நிரந்தரசட்டம் கொண்டு வரப்பட வேண்டும் அது வரை யார் தடுத்தாலும் எங்கள் போராட்டம் தொடரும் என்று அறிவித்து அதை தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கிறார்கள், இந்த செய்தியை அறிந்து மத்திய அரசு மிக அதிர்ந்துதான் போய் இருக்கிறது.காரனம் போராட்டம் தொடர்ந்தால் இறுதியில் போராட்டம் செய்பவர்களின் கோரிக்கையை கண்டிப்பாக நிறைவேற்றுவதை தவிர வேறு வழியில்லை மேலும் பணப்பிரச்சனைக்கு அப்புறம் இது அவருக்கு கிடைத்த மிகப் பெரிய தோல்வியாகிவிடும் அப்படி நடந்தால் அடுத்து வரும் ஐந்து மாநில தேர்தல்கள் பாதிப்பதோடு தமது செல்வாக்கு மேலும் சரியும் அதுமட்டுமல்லாமல் தமிழர்களின் இந்த கோரிக்கைக்கு செவி சாய்த்துவிட்டால் இனிமேல் எல்லா மாநிலங்களிலும் இப்படி பல போராட்டங்கள் புற்று ஈசல் போல ஆரம்பித்துவிடும் என்ற பயம்.

இதனை தடுக்க என்ன செய்யலாம் என்று ம்த்திய அரசு நினைத்து போது அவர்களுக்கு கிடைத்த ஒரு பொக்கிஷம்தான் ஹிப் ஹாப் ஆதி அவரை வைத்து அரசியல் சதுரங்க விளையாட்டை ஆரம்பித்துவிட்டார். யார் மாணவர்களோடு இணைந்து போராடி வந்தாரோ அவரை மத்திய அரசின் உளவுத்துறை அணுகி மிரட்டி நாங்கள் சொல்வதுபடி செயல்படாவிட்டால் அவருக்கு மட்டுமல்ல அவரது குடுமப்த்திற்கும் மிக பெரிய ஆபத்து உண்டு என்று எச்சரித்து இருக்கிறது.

மத்திய அரசின் அதிகாரத்திற்கு தமிழக ஆளும் கட்சி தலைவர்கள் மட்டுமல்ல பெரிய எதிர்கட்சிகளின் தலைவர்களும் பயப்படும் போது இந்த சின்னஞ் சிறுவன் பயந்து சொன்னபடி செயல்பட்டு இருக்கமாட்டான் என்பது பொய்யாகிவிடுமா என்ன?

போராட்டத்தில் தினமும் பல்வேரு இடங்களில் கலந்து கொண்ட ஆதி சில நாட்கள் கலந்து கொள்ளாமல் திடிரென்று வீடியோ ஒன்றை வெளியிட்டு அதில் தான் போராட்டத்தில் ஈடுபட்டு இருந்த போது அருகில் போராட்டம் செய்த குழுக்கள் பிரிவினை வாதம் பேசி தேசத்திற்கு எதிராக நடந்தும் தலைவர்களை இழிவாக பேசியும் தலைவர் பிரதமர் மோடியிம் படத்தை அவமதித்தும் வந்ததை கண்டு போராட்டம் வேறு திசை நோக்கி செல்வதால் அந்த போராட்டத்தில் இருந்து விலகி வந்துவிட்டதாக சொல்லி இருக்கிறார்,

இந்த பேச்சை நன்றாக கவனித்தவர்களுக்கு ஒன்று நிச்சயம் புரியும் அதில் அவர் பேசிய பிரிவினை வாதம் தேசத்திற்கு எதிராக என்ற சொற்கள் இந்த சொற்க்கள் எல்லாம் பிரச்சனை எங்கே அதிகமாகிறதோ அங்கு எல்லாம் இந்த சொற்க்கள் பாஜக கட்சியினரால் உபயோகப்படுத்தப்பட்டு அது மீடியாக்கள் மூலம் பரப்பபட்டு பிரச்சனையை நீர்த்து போக செய்யும் அந்த வார்த்தைகள் தான் கொண்டையை மறைக்க முடியாமல் வெளியே தெரிகின்றன.

ஆதியின் வாதத்தின் படி அருகில் உள்ள குழுக்கள் தேசவிரோத பிரிவினை வாததங்களை பேசிக் கொண்டிருந்தால் அவரும் சரி அவரது நண்பர்களும் சரி செல்போன் மூலம் ஒரு வீடியோகாட்சிகளை கூட எடுத்து போலீஸாரிடம் புகார் கொடுத்து இருக்க முடியாதா என்ன அல்லது அப்படி பேசபவர்களை அப்படி செய்யாதீர்கள் என்று தடை செய்து செய்ய ஏன் முயற்சிக்கவில்லை.

அதுமட்டுமில்லாமல் தலைவர்களை அசிங்கமாக பேசுகிறார்கள் மோடி படத்தை அசிங்கப்படுத்துகிறார்கள் என்று கூறுகிறார்கள். போராட்டம் என்று வரும் போது அந்த காலத்தில் இருந்து இந்த காலம் வரை தலைவர்களின் கொடும்பாவிகளை ஏறிப்பது படங்களை அசிங்கப்படுத்துவது என்பது உலகம் முழுவதும் நடந்து கொண்டு இருக்கும் செயல்கள்தானே மேலும் தலைவர்களை அசிங்கமாக பேசுகிறார்கள் என்று இன்னொரு குற்றம் வாசிக்கிறார் ஏம்மா தமிழர்களை பொறுக்கிகள் என்று தொடர்ந்து எழுதி வருகிறார் சுப்ரமணிய சுவாமி. தமிழ் இளைஞர்களின் அறப்போரை இழிவுபடுத்தினார் ராதாராஜன். மதம் கடந்த மக்கள் எழுச்சியில் மதவெறியை விதைக்கத் துணிந்தார் எச்.ராஜா.இவர்கள் மூவருமே ஆர்.எஸ்.எஸ் காரர்கள். இப்படி அநாகரிகமாக பேசுபவர்களை அந்த கட்சியின் தலைமை கூட கண்டிப்பது இல்லை அதை பார்த்து ரசிக்கிறார்கள்அதனால் தான் மக்கள் கோபத்தினால் ஆர்.எஸ்.எஸ்ஸையும் அதன் அரசியல் வடிவமான பாஜகவையும் அதன் தலைவரான மோடியையும் அதுவும் தங்கள் கலாச்சாரத்தை அழிப்பவர்களை கோபத்துடன் பேசுவதுமட்டும் தவறா?

சு.சுவாமியும் ராதா ராஜனும் எச்.ராஜாவும் இந்த போராட்டத்தை இழிவு செய்த போது கொதிக்காத ஹிப் ஹாப் ஆதி, இப்போது ஏன் கொதிக்கிறார்? யாருக்காக கொதிக்கிறார்? எதனால் கொதிக்கிறார் என்று யோசித்து பாருங்கள் அதன் பின் இதன் பின் உள்ள அரசியல் சூழ்ச்சிகள் புரியும்

ஹிப் ஹாப் ஆதி இப்படி பேசினார் என்று அவரை குறை சொல்லவீல்லை அவர் என்ன செய்வார் அதிகார வர்க்கம் மிரட்டும் போது அரசியல்தலைவர்களே பயந்து நடுங்கும் போது இந்த ஹிப் ஹாப் ஆதி மட்டும் விதிவிலக்கா என்ன?

இந்த ஹிப் ஹாப் ஆதி அதிகார வர்க்கத்தினால் மிரட்டப்பட்டதினால் இப்படி பேசி இருக்கிறார் அதனால் அவரை மன்னித்துவிடலாம் ஆனல் இந்த செய்தியை அறிந்த விவேக் ஹிப் ஹாப் ஆதி பேச்சை ஆதரிக்கிரேன் என்று அவரின் பேச்சு நிறைய யோசிக்க வைக்கிறது என்று சொல்லி இருக்கிறார் என்று செய்திகள் வந்து இருக்கிறது இவரை தொடர்ந்து ஒய்ஜி மகேந்திரன் என்வி சேகர் கிரேஸி மோகன் போன்றவர்கள் கருத்தை சொல்லுகிறேன் என்ற போர்வையில் விஷத்தை கலக்க வருவார்கள் பொறுத்து இருந்து பாருங்கள்

இன்னொரு விஷயம் போராட்டத்தில் மக்கள் மத வேறுபாடுகள் இன்றி போராடி வருவது பாஜக தலைமைக்கு பொறுக்கவில்லை அதனால் மாற்று மத்தத்தினர் ஆதிலும் இஸ்லாமியர்கள் தவறாக செய்திகளை வருகிறார்கள் என்று வாட்சப்பில் வந்த செய்தி என்று பல செய்திகளை போட்டோஷாப் மூலம் தயாரித்து அதனை சமுக வலைதளங்கள் மூலம் வெளியிட்டு மதஒற்றுமையை கலைத்து பிரச்சனைகளை உண்டு பண்ணி அதில் குளிர் காய நினைக்கிறார்கள் . இவர்கள் இப்படி செய்திகள் பரப்புவதெற்கென்றே டில்லியில் ஒரு ஐடி கம்பெனியை வைத்து நடத்துகிறார்கள் என்று பல செய்திகள் வந்து இருக்கின்றது இந்த ஐடி குழுக்கள் லோக்கல் கட்சிகள் இப்படி போராட்டங்களில் கலந்து மக்களை திசை திருப்பு கின்றன என்று பழியை லோக்கல் கட்சிகள் மேல் சுமத்தி அதன் மீது மக்களுக்கு வெருப்பு ஏற்படுமபடியும் மிக திறமையாக செய்கிறது இப்படி செய்ய காரணம் போராட்டம் வலி விலக்கும் நிலையில் லோக்கல் கட்சிகள் இந்த பிரச்சனையை எடுத்து போராடினால் பிரச்சனை தான் என்று மிக திறமையாக செய்திகளை பரப்புகிறார்கள் பாவம் இந்த லோக்கல் கட்சிகளில் திமுகவின் பெயரைத்தான் அவர்கள் டேமேஜ் பண்ணுகிறார்கள் காரணம் அவர்களை தவிர மற்ற கட்சிகள் எடுத்து போராட வாராது என்ற காரணத்தினால் இப்படி செய்கிறார்கள்

இதையெல்லாம் யோசிக்காத நமது சமுக வலைதள நண்பர்கள் உடனே ஹிப் ஹாப் ஆதி சொன்னததும் அதன் பின பாஜக ஐடி ஆட்கள் கிரியேட் பண்ணி சமுக தளங்களில் பரப்பும் செய்திகளை பார்த்து போராட்டகுழுவில் தேச விரோத சக்திகள் புகுந்து விட்டார்கள் இனிமே மாணவர்கள் கவனமாக இருக்க வேண்டும் அல்லது போராட்டத்தை கைவிட வேண்டும் என்று பேசியும் எழுதியும் வருகிறார்கள் இந்த செய்திகள் போராட்டக்காரர்களை வலுவிலக்க செய்யும். அதைத்தான் இந்த அதிகார வர்க்கம் எதிர்பார்த்தது அதைத்தான் நம் சமுக வலைதள மக்களும் எதையும் ஆராயமல் செய்து கொண்டிருக்கிறார்கள்

இந்த பதிவை எழுதி முடிக்கும் தருவாயில் தமிழகத்தில் இருந்து வரும் செய்திகள் கவலைக் கொள்ளவே செய்கின்றன. போலீஸ்சாரின் கெடு பிடிகள் அதிகரித்துவிட்டன என்றும் மெரினா பீச்சில் இருந்து போராட்டக்காரர்களை அப்புற படித்துகிறார்கள் என்று புதிதாக வரும் யாரையும் தடை செய்கிறார்கள் என்று அறிந்தேன்

ஒரு தலைவன் இல்லாத இந்த போராட்டம் இறுதியில் அதிகார வர்க்கத்தின் கையில் சிக்கி சின்னப்பின்னாமாகி போகிறது

இனிமேல் மக்கள் அவரவர்கள் வீட்டு வாசலில் கருப்பு கொடி ஏற்றி போராட்டத்தை தொடர வேண்டியதுதான் அதுவும் பலன் அளிக்காவிட்டால் அற்வழியை விட்டுவிட்டு வேறு வழியை கையாண்டு நமது கலாச்சாரத்தை காப்பாற்ற போராடவேண்டியதுதான்

இது வரை நடந்து வந்தது போராட்டம் அல்ல இனிமேல் வருவதுதான் உண்மையான போராட்டம் ஆகும்

அன்புடன்
மதுரைத்தமிழன் ( டிஜே.துரை)

avargal unmaigal

Advertisements