1)ஆதி நல்லவரா கெட்டவரா ???

2)சிவசேனாபதி காசு வாங்கிட்டாரா இல்லை மிரட்டப்பட்டாரா??

3)அந்த பொண்ணு Dmk va இல்லையா??!!

4)ஆர்.செ பாலாஜி பின்வாங்குராரா இல்லையா??!!

இப்படி நமக்குள்ள பட்டிமன்றம் நடத்திட்டு இருப்போம், அதற்குள் குள்ள நரி ஓநாய்கள் இந்த போராட்டத்தை நீர்த்து போக செய்துவிடும் !!!

யாரை நம்பி போராட வந்தோம் ?? யாருக்காக போராட வந்தோம்?? யார் உணவு அளித்தது ?? எதற்காக சாமானிய மக்கள் அனைத்தையும் குடுத்து உதவினார்கள் ??!! இதையெல்லாம் மறக்க வேண்டாம் என் இணைய நண்பர்களே !!!

நம்மை நம்பிய மக்களை நாம் ஏமாற்ற வேண்டாம் !!! வேற்றுமைகளை களைந்து நம் இலக்கை நோக்கி மீண்டும் வீரு கொண்டு நடப்போம் !!!

களத்தில் ஆபாச கோஷங்களை தவிருங்கள் , வேறு யாராவது கோஷம் போட்டால் குழுவாக சென்று தடுத்து நிறுத்துங்கள் !!!

ஆபாச வார்தைகள் தாங்கிய பதாகைகள் கையில் இருந்தால் உடனே தூக்கி எறியுங்கள் !!!

அரசியல் சாயம் உள்ள எந்த புகைப்படத்தையும் ஷேர் செய்யாதீர்கள் !!!

அவசர சட்டமே போதும்னு நினைக்கும் நபர்கள் யாரையும் குழப்பாம அமைதியா வீட்டுக்கு போகலாம் !!! இது போதாதுனு நினைக்குரவங்க போராட்டத்த அறவழியில் தொடருங்க !!!

இது எதுவுமே முடியலேனா, எந்த கோஷமும் போடாம அமைதியா உட்கார்ந்து இருங்க !!!
உலகையே திரும்பி பார்க்க வைத்து உள்ளோம் !!! மாற்றத்தை நம்மிடமிருந்தே தொடங்குவோம் !!!
தமிழன்னை வாழ்க

தமிழர்களின் குரல்

***

நமக்குள் இருக்கும் எதிரியை அடையாளம் காண்போம் !!!

சல்லிக்கட்டை எதிர்ப்பவர்கள் தான் உண்மையான சாதிவெறியரகள் !!!

1-திருமாவளவன் 2- கிருஷ்ணசாமி 3- சுப்ரமணியசுவாமி

#அண்ணன் திருமாவளவன் ஏன் இந்த மாதிரி தமிழர்களுக்கு எதிரான அரசியல் நிலைப்பாட்டை எடுக்கிறார் என்று தெரியவில்லை ? சாதி எதிர்ப்பு மட்டுமா ?

***

போராட்டத்தில் உடன்பாடு இல்லை என்றால் அமைதியாக இருங்கள்’: சமுத்திரக்கனி ஆதிக்கு சவுக்கடி

ஜல்லிக்கட்டு போராட்டம் திசைதிரும்புவதாக கூறிய ஹிப்ஹாப் தமிழா ஆதியின் குற்றச்சாட்டு குறித்து இயக்குநர் சமுத்திரக்கனி கருத்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ஒரு ஊடகத்தை தொடர்புகொண்டு பேசிய சமுத்திரக்கனி, ஆதியின் பேச்சு குழப்பத்தை விளைவிக்கும். போராட்டத்தில் உடன்பாடு இல்லை என்றால் அமைதியாக அவர் விலகி இருக்கலாம். தமிழகம் முழுவதும் கண்ணியமான முறையில் போராட்டம் நடைபெற்று வருகிறது. அவர்களுக்கு நாம் உறுதுணையாக தான் இருக்க வேண்டுமே தவிர அவர்களுக்குள் குழப்பத்தை ஏற்படுத்தக்கூடாது. மக்கள் கூடும் இடத்தில் குழப்பவாதிகள் கூடத்தான் செய்வார்கள். யார் சூழ்ச்சி செய்தாலும் நாம் தான் அதனை முறியடிக்க வேண்டும் என்று சமுத்திரக்கனி கருத்து தெரிவித்துள்ளார்.

ஜல்லிக்கட்டுக்காக போராடியவர்கள் போராட்டத்தை முடித்துக் கொள்ளலாம்’

ஜல்லிக்கட்டு நடப்பதற்கு ஏதுவாக தமிழக அரசு அவசரச் சட்டம் கொண்டு வந்துள்ளதை தற்காலிக தீர்வாக கருதி, ஜல்லிக்கட்டு தடைக்கு எதிரான போராட்டத்தை போராட்டக்காரர்கள் மார்ச் 31-ஆம் தேதி வரை வரை தள்ளி வைக்க வேண்டும் என்று ஜல்லிக்கட்டு ஆதரவு அமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில், செய்தியாளர்களை ஜல்லிக்கட்டு நிர்வாகிகள் சந்தித்து, தமிழகத்தில் இது வரை நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தின் தன்மை குறித்தும், இந்த போராட்டம் இனி எவ்வாறு முன்னெடுக்கப்பட வேண்டும் என்று விளக்கமளித்தனர்.

இந்த செய்தியாளர்கள் சந்திப்பில், ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் ராஜசேகர், காங்கேயம் கால்நடை ஆராய்ச்சி மையத்தின் தலைவர் கார்த்திகேய சேனாபதி, ஹிப்ஹாப் தமிழன் என்று அறியப்படும் ஆதி, ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் ராஜேஷ், அம்பலத்தரசு ஆகிய ஐவர் கலந்து கொண்டனர்.

ஜல்லிக்கட்டு ஆதரவு அமைப்பினர் இன்றைய செய்தியாளர்கள் சந்திப்பில் கூறுகையில், ”இந்திய இறையாண்மைக்குள் தான் எங்களால் வேலை செய்ய முடியும். அதற்கு பங்கம் விளைவிப்பதை நாங்கள் ஏற்றுக் கொள்ள முடியாது” என்று தெரிவித்தனர்.

மேலும், யாருக்கும் பயந்து நாங்கள் பின்வாங்கவில்லை என்றும், எங்களை யாரும் கட்டாயப்படுத்தவில்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஜல்லிக்கட்டு தடைக்கு எதிரான போராட்டத்தை போராட்டக்காரர்கள் மார்ச் 31-ஆம் தேதி வரை வரை தள்ளி வைக்க வேண்டும் என்று அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

திசைமாறும் ஜல்லிக்கட்டு போராட்டம்: ஹிப்ஹாப் ஆதி திடுக்! பரபரப்பு வீடியோ

ஜல்லிக்கட்டுக்காக துவங்கிய போராட்டம் தற்போது திசைமாறுவது அதிர்ச்சி அளிப்பதாக பிரபல இசை அமைப்பாளர் ஹிப்ஹாப் ஆதி திடுக் தகவல் வெளியிட்டுள்ளார்.

இசை அமைப்பாளர் ஹிப்ஹாப் ஆதி, ஜல்லிக்கட்டு பிரச்னையில் தமிழக மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் டக்கரு டக்கரு என்ற பாடலை வெளியிட்டார் என்பது நினைவுக் கூரதக்கது.

இந்நிலையில் தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடைபெற்று வரும் பேராட்டம் குறித்து அவர் கூறியதாவது, ஜல்லிக்கட்டுக்காக துவங்கிய போராட்டம் தற்போது திசைமாறுவது அதிர்ச்சி அளிக்கிறது.

தமிழகம் முழுவதும் நடககும் போராட்டத்தில் பல தரப்பு நோக்கம் கொண்ட குழுக்கள் புகுந்து ஜனநாயகத்திற்கு எதிரான கோஷங்கள் எழுப்பிகின்றனர்.

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் நோக்கத்தை சிதைக்க சிலர் சதி செய்கின்றனர். போராட்டத்தை திசை திருப்ப சில அமைப்புகள் முயற்சி செய்கின்றன.

சிலர் தனித்தமிழ்நாடு பேனரை வைத்து போராட்டம் செய்கின்றனர். இதனால் தான் போராட்டத்திலிருந்து விலகியதாக தெரிவித்துள்ளார்.

**

ஆமா நான் பீப் பீப் தான் பேசுவேன்…தொடுறா பார்க்கலாம்: கொந்தளித்த நடிகர் சிம்பு

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மெரினாவில் களம் இறங்கிய சிம்பு உணர்ச்சி பொங்க பேசியுள்ளார்.

ஜல்லிக்கட்டு நடத்த நிரந்தர சட்டம் கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தி, தமிழகமெங்கும் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், சென்னை மெரினாவில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொண்டு பேசிய சிம்பு, இந்த போராட்டத்துக்கு ஆதரவு கொடுத்ததிலிருந்து எனக்கு அரசியலுக்கு வரியா என கேட்டு மிரட்டுகிறார்கள்.

என்னை நீங்கள் மிரட்டலாம், ஆனால் நான் அரசியலுக்கு வரமாட்டேன். நாளைக்கு இந்த இளைஞர்கள் வர போறாங்க அப்போ என்ன டா பண்ணுவ, ஒருத்தி தமிழனை பத்தி தெரியாம பேசுறா… ஆமா நான், பீப் பீப் தான் பேசுவான், தொடுறா பாக்கலாம் என்று உணர்ச்சி பொங்க பேசியுள்ளார்.

**

டெல்லியில் நடப்பது ஜல்லிக்கட்டு நாடகம்தான்!’ – எச்சரிக்கும் சீமான்

ஜல்லிக்கட்டு நடத்த அவசரச் சட்டம் பிறப்பித்திருக்கிறார் தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ். ஜல்லிக்கட்டை நடத்துவதற்கான வேலைகளும் களைகட்டத் தொடங்கியுள்ளன. ‘ டெல்லியில் நடக்கும் அரசியல் நாடகங்களை நான் நம்பவில்லை. பெயரளவுக்கு அனுமதியைக் கொடுக்கும் வேலையில் மத்திய அரசு இறங்கியுள்ளது’ என்கிறார் சீமான்.

தமிழகம் முழுவதும் ஐந்தாவது நாளாக, ஜல்லிக்கட்டுக்கான போராட்டம் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. ‘ ஜல்லிக்கட்டு உறுதியாக நடைபெறும். வாடிவாசல் திறக்கப்பட்டு, ஜல்லிக்கட்டு காளைகள் துள்ளிக் குதித்து வெளியே வரும்’ என நம்பிக்கை தெரிவித்தார் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம். இதையடுத்து, அவசரச் சட்டத்துக்கு ஒப்புதல் அளித்திருக்கிறார் தமிழக ஆளுநர். “முதல்வர் பன்னீர்செல்வத்தின் டெல்லி பயணமும் அதையொட்டி தற்போது நடக்கும் காட்சிகளும் தற்காலிக ஏற்பாட்டை நோக்கித்தான் நகர்ந்து கொண்டிருக்கின்றன. தமிழக மக்களுக்கான நிரந்தரத் தீர்வை எட்டும் முயற்சியாக இதை நான் பார்க்கவில்லை” என்கிறார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். தொடர்ந்து நம்மிடம் விவரித்தார்.

“உச்ச நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதைக் காரணம் காட்டி, ஜல்லிக்கட்டைக் கடந்து போய்விடுவார்கள் என்பது நாம் எதிர்பார்த்த ஒன்றுதான். தற்போது ஜல்லிக்கட்டு தீர்ப்பை ஒரு வாரத்துக்கு தள்ளி வைத்துவிட்டார்கள். இதில் எழும் கேள்வி ஒன்றுதான். காவிரி மேலாண்மை வாரிய வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இத்தனைக்கும் ஜல்லிக்கட்டுக்கு நீதிமன்றம் தடை விதித்தது. காவிரி விவகாரத்தில், வாரியத்தை அமைக்குமாறு நீதிமன்றமே உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவை மீறி, ‘நாங்களே சட்டம் இயற்றிக் கொள்கிறோம்’ என உச்ச நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது மத்திய அரசு. இதே அடிப்படையில், ‘ஜல்லிக்கட்டு என்பது ஒரு பண்பாட்டு நிகழ்வு. நாங்களே சட்டம் இயற்றி பார்த்துக் கொள்கிறோம். நீங்கள் தலையிட வேண்டாம்’ என்று நீதிமன்றத்திற்குச் சொல்ல வேண்டியதுதானே? காவிரி விவகாரத்திலும், ‘வழக்கு உச்ச நீதிமன்றத்தில் உள்ளது’ என்று இவர்கள் ஏன் சொல்லவில்லை? ஜல்லிக்கட்டுக்கான அனுமதியைத் தருவதில் மத்திய அரசுக்கு விருப்பமில்லை. இது தமிழக மக்களுக்கு இழைக்கப்பட்ட துரோகம். இந்தத் தடைக்கு மிக முக்கியக் காரணமே காங்கிரஸ் அரசுதான். அப்போது இவர்களுடன் கூட்டணியில் இருந்தது தி.மு.க. தற்போது இவர்கள் இருவரும் இணைந்து, ‘ஜல்லிக்கட்டு தடையை நீக்க வேண்டும்’ என்று போராடுகின்றனர். இதைவிடப் பெரிய கொடுமை எதாவது இருக்க முடியுமா? என் அப்பா இறந்துவிட்டார் என்று நான் அழும்போது, கொன்றவனும் அருகில் அமர்ந்து அழுவதைப் போலத்தான் பார்க்கிறேன். ‘அ.தி.மு.க செய்யத் தவறிவிட்டது’ என தி.மு.கவும் ‘காங்கிரஸ் செய்த துரோகம்’ என பா.ஜ.கவும் மாறி மாறி குற்றம் சுமத்திக் கொள்கின்றன.

“டெல்லியில் நடக்கும் காட்சிகள் அனைத்தையும் நாடகமாகத்தான் பார்க்கிறேன். ‘தீர்ப்பில் தடை’ என்று வந்துவிட்டால், அவசரச் சட்டம் இயற்றுவதில் சிக்கல் ஏற்படும். எனவேதான், ஒரு வாரத்துக்கு என ஒப்புக்குத் தள்ளி வைத்துள்ளனர். அதன்பிறகு, ‘ஜல்லிக்கட்டுக்குத் தடை’ என்று உச்ச நீதிமன்றம் சொல்லும். இந்தத் தீர்ப்பை இந்த நாடு மதிக்கலாம். நான் ஒரு போதும் மதிக்கப் போவதில்லை. அதனால்தான் தடையை மீறி ஏறு தழுவுதலை நடத்தினேன். இனி வரும் காலங்களில் தடை என்பது வார்த்தை அளவில்தான் இருக்கும். தடையை மீறி புரட்சி வெடிக்கும். அதை யாராலும் தடுக்க முடியாது. அதே சமயம் தொடர்ச்சியாக போராடும் மாணவப் பிள்ளைகள், தற்போது பின்பற்றும் அறவழியைத்தான் தொடர வேண்டும். அறவழிக்கே அரசால் பதில் சொல்ல முடியவில்லை. நிற்கும் இடத்தில் இருந்தபடியே, நீங்கள் எழுப்பும் குரலை உலகம் உற்று நோக்கிக் கொண்டிருக்கிறது. ‘அரசியல் வேண்டாம்’ என்று மாணவர்கள் சொல்வதே மிகப் பெரிய அரசியல். ‘ஜல்லிக்கட்டுக்குத் தடை நீக்கு’ என்று நீங்கள் சொல்வதே ஆகச் சிறந்த அரசியல். அதைத் தொடர்ந்து செய்யுங்கள்” என்றார் நெகிழ்ச்சியோடு.

Advertisements