கனடா -ரொரன்ரோ பெரிய சிவன் ஆலயத்தின் கனடா உதயன் பத்திரிக்கை விளம்பரத்தில் சிவ வழிபாடு இல்லாததால் புலிகள் தோற்றுப் போனார்களாம் !

கேட்கும் வரங்களை கொடுக்கும் இந்த ஆலயத்தில் வழிபட்டால் தமிழீழம் கிடைக்கும் !

இப்படியும் ஈனத்தனம் செய்கின்றார்கள் இந்த வியாபாரி ஆலயங்கள் !

**

விடுதலை புலிகள் வீழ்ந்தமைக்கு.. இந்த எலி தமிழன் இல்லாமல் போனதே காரணம்!

விடுதலை புலிகள் உண்மையில் வீழ்ந்துப்போனமைக்கு சில துரோக குணம் கொண்ட தமிழர்களும் காரணம் என்பதே அடிப்படை உண்மை. அதனை சரியாக காட்டும் ஒரு சம்பவம் சீனாவில் இடம்பெற்றுள்ளது.

உயிரியல் பூங்காவில் பாம்புக்குஇரையாக எலிகளை கொடுப்பது வழக்கம் . இரண்டு மூன்று எலிகளை பாம்பு கூண்டுக்குள் போட்டு விடுவர். வழக்கமாக பாம்பு ஒரு எலியை சாப்பிடும்போது மற்ற எலிகள் ஒளிந்து கொள்ளும். பிறகு அந்த எலிகளையும் பாம்பு பிடித்து உண்ணும்.

ஒருமுறை பாம்புக்கு தீனியாக இரண்டு வெள்ளை எலிகளை போட்டனர்.ஒரு எலியை பாம்பு பிடித்து திண்று கொண்டுஇருக்கும் போது, தன் நண்பன் பாம்பிடம் மாட்டி கொண்டு இருப்பதை பார்த்த இன்னொரு எலி பாம்பை தாக்க ஆரம்பித்தது.ஆனால் அதற்குள் அந்த எலியின் கதை முடிந்து விட்டது.

இதை பார்த்து கொண்டிருந்த உயிரியல் பூங்கா ஊழியர்கள் பாம்பிடம் வீரமாக சண்டையிட்ட எலியை பிடித்து வெளியே விட்டுவிட்டார்கள்.

உண்மையிலேயே அந்த எலிக்கு நம்மை விட வாழ தகுதி இருக்கிறது.

தமிழ் இனம் அழிக்கபட்டபோது வேடிக்கை பார்த்த சில தமிழர்களை விட, தன் நண்பனுக்காக உயிரைவிட துணிந்த அந்த எலிக்கு வாழ தகுதி இருக்கிறது தானே…?

Advertisements