தமிழர் திருநாளான தைப்பொங்கலை முன்னிட்டு வல்வெட்டித்துறையில் நேற்றுமாலை நடத்தப்பட்ட பட்டப் போட்டியில் வித்தியாசமான உருவங்களில் தயாரிக்கப்பட்ட பட்டங்கள் வானத்தில் பறக்கவிடப்பட்டன.

வல்வெட்டித்துறை உதயசூரியன் கடற்கரையில் நேற்றுமாலை நடந்த இந்தப் பட்டப் போட்டியில், பெருமளவு இளைஞர்களும் சிறுவர்களும், பங்கேற்று, தாம் தயாரித்த பட்டங்களை பறக்கவிட்டனர்.

இந்தப் பட்டப்போட்டியைக் காண, யாழ்ப்பாணக் குடாநாட்டின் பல பகுதிகளில் இருந்தும் பெருமளவிலானோர் வல்வெட்டித்துறையில் ஒன்று கூடியிருந்தனர்.


படங்கள் – வல்வை சுலக்ஸ் (முகநூல்)

Advertisements