மோடி என்ன சொல்கிறாரோ அதைத்தான் நாங்கள் செய்வோம் என்பதுபோல இன்றைய தமிழக அரசாங்கம் செயற்படுகின்றதென இயக்குநர் கௌதமன் குற்றம் சாட்டியுள்ளார்.

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்று தமிழகம் முழுவதும் போராட்டங்கள் வலுப்பெற்று வருகின்றன.

இந்நிலையில் மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என வலியுறுத்தி போராட்டம் நடத்தப்பட்டது. இதனால் பொலிசார் அங்கு குவிக்கப்பட்டனர்.

இந்த போராட்டத்திற்கு திரைப்பட நடிகரான ஆர்யா, பிரபல இயக்குநர் கெளதமன், இயக்குனர் அமீர், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா மற்றும் பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

போராட்டம் முற்றியதால் பொலிசார் தடியடி நடத்தி அங்கு இருந்த மக்களை அப்புறப்படுத்தினர்.

இயக்குநர் கெளதம் மீது பொலிசார் தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதன் பின்னர் ஏராளமானோரை கைது செய்யப்பட்டு அவர்களை பொலிசார் வாகனத்தில் ஏற்றிச் சென்றனர்.

இந்நிலையில் இது குறித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட கௌதமன்,

*

இயக்குனர் மீது நடத்தப்பட்ட தாக்குதல்: சீமான் கடும் கண்டனம்

பிரபல இயக்குநர் கௌதமன் மீது பொலிசார் தடியடி நடத்தியதற்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டம் தெரிவித்துள்ளார்.

மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடிகர் ஆர்யா, இயக்குனர் அமீர், இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா, இயக்குநர் கௌதமன் ஆகியோர் போராட்டம் நடத்தினர்.

இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைந்து செல்லுமாறு பொலிசார் அறிவுறுத்தினர்.

ஆனால் கலைந்து செல்ல மறுப்பு தெரிவித்த இளைஞர்கள் மற்றும் இயக்குநர் கௌதமன் ஆகியோர் மறியலில் ஈடுபட்டதாக தெரிகிறது.

இதைத் தொடர்ந்து பொலிசார் அவர்கள் மீது சரமாரியாக தடியடி நடத்தினர். அவர்களை தரதரவென் இழுத்துச்சென்று கைது செய்தனர், இயக்குநர் கௌதமனையும் அவர்கள் சரமாரியாக தாக்கி உள்ளனர்.

இந்நிலையில் இந்த தடியடி தாக்குதலுக்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அறவழியில் போராடியவர்கள் மீது பொலிசார் தடியடி நடத்தியது அநாகரிகமான செயல் எனவும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

Advertisements