ஜல்லிக்கட்டை பிரபலப்படுத்திய ரஜினி! இப்போது அமைதி காப்பது ஏன்?

ஜல்லிகட்டிற்கு முட்டுக்கட்டை போட்டுள்ள மத்திய அரசை கண்டித்தும், அவசர சட்டம் இயற்ற வலியுறுத்தியும் திரையுலக பிரபலங்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

சிம்புவின் ஆவேச பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கமல், விஜய் சேதுபதி, சத்யராஜ், இயக்குநர் பாரதி ராஜா, இயக்குநர் அமீர், இயக்குநர் கரு.பழனியப்பன், நடிகர் ஜி.வி பிரகாஷ், ஆர்.ஜே.பாலாஜி, உள்ளிட்ட பலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

ஆனால் முரட்டுக்காளை படத்தில் ஜல்லிகட்டில் காளையை அடக்கி, தமிழகம் முழுவதும் அந்த போட்டிக்கு கவுரவம் சேர்த்த சூப்பர் ஸ்டார் ரஜினி தற்போது அமைதியாக உள்ளார்.

500, 1000 ரூபாய் நோட்டுக்களுக்கு தடை விதிக்கப்பட்டபோது, அதனை விஜய் கண்டித்த நிலையில், ரஜினி ஆதரித்தார்.

காவிரி விவகாரத்தில் ரஜினி மீது ஒரு அதிருப்தி இருந்தாலும் அதனை யாரும் பெரிதுபடுத்தவில்லை.

ஜல்லிக்கட்டு போராட்டம்! சிம்புவிற்கு  ஆதரவு

நடிகர் சிம்பு இன்று மாலை சரியாக 5 மணிக்கு தன் வீட்டின் முன்பு கருப்பு சட்டை அணிந்து ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்க வலியுறுத்தி மௌன போராட்டம் நடத்தி வருகிறார்.

அவருக்கு ஆதரவாக ஒரு பெரிய ரசிகர் கூட்டமே அவரது வீட்டின் முன்பு குவிந்துள்ளது. மேலும் சமூக வலைத்தளங்களிலும் இந்த போராட்டம் சூடுபிடித்துள்ளது.

பலரும் கருப்பு நிற உடை அணிந்து தெருவில் போராடி, அந்த புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றி வருகின்றனர்.


ஜல்லிக்கட்டு: கிரண்பேடிக்குப் பதிலளித்த ஆர்.ஜே. பாலாஜி! இணையத்தில் பலத்த வரவேற்பு! (வீடியோ)

தமிழகத்தின் கலாசாரப் பாரம்பரியத்துடன் இணைந்த விளையாட்டாக விளங்கும் ஜல்லிக்கட்டு, பொங்கல் பண்டிகையை ஒட்டி நடத்தப்படுகிறது. 2 ஆயிரம் ஆண்டுகள் மிகப் பழமையானது இந்த விளையாட்டுப் போட்டி. ஆனால், தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்த தடை விதித்து கடந்த 2014-ஆம் ஆண்டு மே 7-ஆம் தேதியன்று உச்ச நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்தது.

தமிழகத்திலும், மகாராஷ்டிரத்திலும் ஜல்லிக்கட்டு, எருதுப் போட்டிகள் மூலமாக விலங்குகளை காட்சிப்படுத்துவதை அனுமதிக்க முடியாது என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதனால் தமிழக மக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். இந்தவருடமும் ஜல்லிக்கட்டுப் போட்டி தமிழகத்தில் நடைபெறவேண்டும் என்று குரல்கள் எழுந்துள்ளன.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடிகர் சிம்பு சென்னையில் இன்று மௌன போராட்டம் மேற்கொள்ள உள்ளார். இதனிடையே சென்னையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் ஜல்லிக்கட்டு பற்றிய சிறிய விவாதம் ஒன்று நடைபெற்றது. அதில் ஜல்லிக்கட்டுக்கு எதிரான கருத்தை புதுச்சேரி ஆளுநர் கிரண் பேடி தெரிவித்தார். உடனே அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் ஆர்.ஜே. பாலாஜி அதற்கான பதிலைத் தந்த வீடியோ இணையத்தில் வெகுவாக வரவேற்பு பெற்றுள்ளது.

குஜராத்தில் ஒட்டகம் பொதி சுமக்கிறது. டெல்லியிலிருந்து பார்த்தாலே தெரியும். முதலில் அதைத் தடை செய்யுங்கள். அதைவிட்டுவிட்டு எங்கோ உள்ள மதுரையில் நடக்கும் ஜல்லிக்கட்டை ஏன் தடை செய்யவேண்டும் என்று கேள்வி எழுப்பிய ஆர்.ஜே. பாலாஜி, கிரண் பேடியின் ஷூவைப் குறிப்பிட்டு, அது லெதர் ஷூ என்றார்.

சட்டப்படி நடக்கவேண்டும். இது உச்ச நீதிமன்றத்தின் ஆணை என்றார் கிரண்பேடி. உடனே பாலாஜி, அதுசரிதான். ஆனால் ஒரு மாநிலம் இன்னொரு மாநிலத்துக்குத் தண்ணீர் விடவேண்டும் என்று இதே உச்ச நீதிமன்றம்தான் கூறியது. ஆனால் அந்த மாநிலம் அதைக் கேட்கவில்லை. இதை ஏன் யாரும் கேள்வி எழுப்புவதில்லை என்றார்.

பண்பாட்டுக் கலாச்சாரத்தில் கை வைக்காதீர்கள் தேசிய ஒருமைப் பாட்டுக்கு தீங்கு ஏற்படலாம் -பாரதிராஜா

டைரக்டர் பாரதிராஜா வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-

4000 ஆண்டுகளாக விளை டி வரும் தமிழர்களின் வீர விளையாட்டைத் தடை செய்வது எந்த கையில் நியாயம்? இது மிருகவதையல்ல, மனிதவதை என்று கொஞ்சம் மாற்றிக் சொல்லுங்கள்.

ஜல்லிக்கட்டில் மாடுகள் இறந்ததாக சாட்சிகள் இல்லை. மாறாக மனிதர்கள் மரித்து போனதாய்தான் செய்தி இருக்கிறது. இது இப்படியிருக்க, இதை மிருகவதை என்று சொல்லி தடை செய்வது எந்த வகையில் நியாயம் என்று புரியவில்லை.

ஜல்லிக்கட்டு மிருகவதை என்றால் அனுதினமும் ஆயிரக்கணக்கான மாடு கள் கேரளாவிற்கு அடிமாடு களாய்ப் போகும் அவலத்தை உங்களால் தடுக்க முடி யுமா? கோயில்களில் காட்சிப் பொருளாய், கால் களில் சங்கிலியால் கட்டப் பட்டிருக்கும் பாவப்பட்ட யானைகளை, உங்களால் அவிழ்த்துவிட முடியுமா?

பறவைகளையும், விலங்குகளையும் சிறைப்பிடித்து, அதை ஜோக்கர்களாக ஜோடித்து ரசிக்கும் மிருககாட்சி சாலைகளின் கதவை மூடுங்கள். அடைத்து வைத்திருக்கும் அனைத்து உயிரி னங்களையும், மிருகங்களையும், பறவைகளையும் சுதந்திரமாக வெளியே விட முடியுமா? குதிரைப்படை, யானைப்படை என்று மத்திய-மாநில அரசு விழாக்களில் அணிவகுத்து நிற்கும் விலங்குகளுக்கு விடுதலை கிடைக்குமா?

தேர்தல் நேரங்களில் கழுதைகளும், ஒட்டகங்களும் மலைக் கிராமங்களுக்கு ஓட்டுப்பெட்டி சுமக்கும் விலங்குகளுக்கு கருணை கிடைக்குமா? காவல் துறையில் பயன்படுத்தப்படும் மோப்ப நாய்களை விடுவிக்க முடியுமா?

ஏன் அசைவம் மட்டுமே சாப்பிட்டு உயிர் வாழும் விலங்குகளுக்கு மாற்று உணவு ஏற்பாடு செய்ய முடியுமா? இந்தியா முழு வதும் சைவ உணவுதான். அசைவத்திற்கு தடை விதியுங்கள். இதெல்லாம் உங்களால் முடியும் என்றால் ஜல்லிக்கட்டுக்கு தடை விதியுங்கள்.

இது ஐந்தறிவுக்கும், ஆறறிவுக்குமான உணர்வுப்பூர்வமான விளையாட்டு. இதில் திமிலா, தோளா? என்ற போட்டியே தவிர, மிருகவதைக்கான இடமே இல்லை. மனிதன் மடிந்திருக்கிறானே தவிர, மாடுகள் இறந்ததாக தகவல் இல்லை. மனிதவதை என்று மனு செய்திருந்தால் கூட ஏற்றுக் கொள்ளலாம். மிருக வதை என்பது இரண்டாம் கருத்து.

ஜல்லிக்கட்டுக்கு தடை என்ற பெயரில் நாட்டு மாடுகள் அழிக்கப்படுகின்றன. சினைப் போட காளைகள் இல்லாமல் நம் பசு மாடு களுக்கு சினை ஊசி போட்டே கருத்தரிக்கச் செய்கிறோம். இதில் இருந்து வரும் பால், விஷத்தன்மை கொண்டதாக சொல்கிறார்கள். அந்நிய முதலீடும் இதில் தலை காட்டுகிறது.

நம் கண் முன்னே பண் பாட்டுப் பாரம்பரியம் பலியாக வேண்டுமா? திருவிழாக் காலங்களில் மனிதர்கள் மட்டுமே சந்தோ ஷப்பட்டு மகிழ்ந்திருக்க வேண்டாம் என்று, மாடு களையும் பட்டியலில் சேர்த்துக் கொண்டாடும் தமிழனின் பாரம்பரிய விளையாட்டுப் போட்டிக்கு போட்ட கடிவாளத்தைக் கழட்டி விடுங்கள்.

எங்கள் காளைகளுக்கு கட்டிய மூக்கணாங் கயிற்றை அவிழ்த்து விடுங்கள். எங்கள் வாடிவாசலில் காளைகளின் காலடிக் குளம்புக் கோலங்கள் பதியட்டும். தமிழர்களின் தொண்மையான பாரம் பரியம் அழியாதிருக்கட்டும்.

ஆட்டை கடிச்சு, மாட்டைக் கடிச்சு மனுசனையே கடிக்க வருமாம் ஒன்று. கடைசியில் அங்கே இங்கேன்னு கையை வைத்து தமிழனின் பழக்க வழக்க பண்பாட்டுக் கலாச்சாரத்தின் அடி மடியிலேயே கையை வைக்கின்ற அவல நிலையை மத்திய அரசு கையாள்வதும், அதற்கு மாநில அரசு கைகட்டி நிற்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதும், தமிழனை அவமானத்தின் பெருங்குழியில் தள்ளுவதற்கு சமமானதாகும்.

உங்கள் அறிவிப்புகளாலும், சில சட்டத்திட்ட முறை கேடுகளாலும், தமிழனின் பண்பாட்டுக் கலாச்சாரம் மற்றும் பழக்க வழக்கங்களில் கை வைக்காதீர்கள். அது தேசிய ஒருமைப் பாட்டுக்கே தீங்கு விளைவிக்கலாம் என்பதை தாழ்மையோடு கேட்டுக் கொள்வது, ஒவ்வொரு தமிழனின் தலையாய கடமை. இதனை இந்தியா வின் தலைமைப் பொறுப் பில் உள்ளவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு பாரதிராஜா கூறியுள்ளார்.