Search

Eelamaravar

Eelamaravar

Month

January 2017

ஜாலியன் வாலா பாகும் மெரினா கடற்கரையும்!

அது 2017 ஜனவரி 23ம் அல்ல! மெரினா கடற்கரையும் அல்ல!
அது, 1919 ஏப்ரல் 13.
ஜாலியன் வாலா பாக்.
அன்று, பைசாகி தினம்.
சீக்கியச் சகோதரர்களுக்கு ஏப்ரல் 13 பெருமிதத்துக்குரிய நாள். ‘சீக்கிய அறப்படை’யை (கால்ஸா) குரு கோவிந்த் சிங் நிறுவிய நாள்.
அந்தப் புனிததினத்தில் தான், அமிர்தசரஸ் பொற்கோயில் அருகிலுள்ள ஜாலியன் வாலா பாகில் அமைதியாகக் கூடியிருந்த அப்பாவிப் பொதுமக்கள்மீது, எந்த முன்னறிவிப்புமின்றி, மனிதத்தன்மையே இல்லாத மிருகத்தனமான தாக்குதலை மேற்கொண்டது ஜெனரல் ரெஜினால்டு எட்வர்டு ஹாரி டையர் தலைமையில் வந்த பாதுகாப்புப் படை..

‘சுட்டுத் தள்ளுங்கள்’ என்று டையர் உத்தரவிட்டவுடன், அவனுடன் வந்த பாதுகாப்புப் படையினர் 150 பேரும் (அவர்களில் 50 பேர் இந்தியர்) கண்மூடித்தனமாகச் சுட்டனர். அதிகாரி உத்தரவிட்டால் ஏன் எதற்கு என்றெல்லாம் கேட்காமல் அடிபணிகிற அரசாங்க ரவுடிகள், 10 நிமிடங்களுக்கும் மேல் இடைவிடாது சுட்டனர்.

ஜாலியன் வாலாபாக் படுகொலையில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 379 என்று பிரிட்டிஷ் அரசாங்கம் பொய் சொன்னது. காந்திஜி தலைமையிலான குழு, ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டிருப்பதைக் கண்டறிந்தது. படுகாயமடைந்தவர்கள், சுமார் 2000 பேர். பெண்களும் குழந்தைகளும் தான் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தனர்.

அது, பிரிட்டிஷ் அரசின் அடக்குமுறைச் சட்டமான ரௌலட் சட்டத்தை எதிர்த்து, காந்திஜியின் தலைமையில் ஒட்டுமொத்த இந்தியாவும் போராடிக் கொண்டிருந்த காலகட்டம். ஜாலியன் வாலாபாகில் அதற்கான பொதுக்கூட்டம் நடந்துகொண்டிருந்தபோதுதான், டையரின் படை உள்ளே நுழைந்தது.

ஜாலியன் வாலா பாகின் நாலாபுறமும் நெடிய மதில் சுவர்கள். சுவரேறித் தப்பியவர்கள் மட்டுமே உயிர் பிழைத்தனர். பூங்காவின் நடுவில் ஒரு கிணறு. துப்பாக்கிச் சூட்டிலிருந்து தப்பிப்பதற்காக அதில் குதித்தவர்கள் பலர். அந்தக் கிணற்றில் மட்டுமே 120 உடல்கள் மிதந்தன.

ரௌலட் சட்டத்துக்கு எதிராக பஞ்சாப் மக்களிடையே ஏற்பட்ட போராட்ட உணர்வை நசுக்கிவிடுகிற நோக்கத்துடன்தான், அந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது – என்கிற குற்றச்சாட்டை டையர் மறுக்கவேயில்லை. ஜாலியன் வாலா பாக் படுகொலை தொடர்பான விசாரணையின் போது அவன் கொடுத்த வாக்குமூலம், ஒட்டுமொத்த உலகையும் அதிரவைத்தது.

‘’சுட்டேன்…. அங்கே கூடியிருந்த கூட்டம் சிதறி ஓடும்வரை சுட்டேன்…… கூட்டத்தைக் கலைப்பதற்காகச் சுடவில்லை. இன்னொருமுறை போராட்டங்களில் கலந்துகொள்ளவே அஞ்சுகிற குலைநடுக்கத்தை ஏற்படுத்துவதற்காகவே சுட்டேன். ஒட்டுமொத்த பஞ்சாபிலும் அப்படியொரு குலைநடுக்கத்தை ஏற்படுத்தவே சுட்டேன்….. கூடுதல் படை இருந்திருந்தால் இன்னும் அதிகம் பேரைச் சுட்டுக் கொன்றிருப்பேன்’’ – இதுதான் மனிதமிருகம் டையரின் வாக்குமூலம்.

அது இந்தியா அடிமைப்பட்டுக் கிடந்த நேரம். அப்படியொரு நேரத்தில் அவ்வளவு திமிராக டையர் கொடுத்த வாக்குமூலத்துக்கும், இப்போது இருக்கிற சூழ்நிலையில் சென்னையில் காவல்துறை அதிகாரிகள் கொடுக்கிற வாக்குமூலத்துக்கும் இடையில் பெரிய வித்தியாசம் எதையும் பார்க்க முடியவில்லை.

ஜாலியன் வாலா பாக் போலவே, மெரினாவிலும் அமைதியாகத்தான் திரண்டிருந்தனர் இளைஞர்களும் பெண்களும்! அவர்களைப் போலவே இவர்களும் நிராயுதபாணிகள். அவர்களைப் போலவே இவர்களும் தங்கள் உரிமைகளைக் காக்கத் திரண்டிருந்தனர். அவர்களை எப்படியாவது கலைக்க வேண்டும் என்கிற நோக்கம் டையர்களுக்கு அன்றும் இருந்தது, இன்றும் இருந்திருக்கிறது. நமது காவல்துறை அதிகாரிகள் தாமாகவே முன்வந்து கொடுக்கிற வாக்குமூலங்கள் இதை உறுதி செய்கின்றன.

‘ஜல்லிக்கட்டுக்காக அவசரச் சட்டம் இயற்றப்பட்டது குறித்து மயிலாப்பூர் துணை ஆணையர் 6 முறை விளக்கினார்…… அதற்குப் பிறகும் போராட்டம் கைவிடப்படவில்லை….’
‘நாளடைவில் சட்ட விரோத இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் மாணவர்களிடையே நுழைந்துவிட்டனர்’

‘23ம் தேதி காலையில் கலைந்து செல்லும்படி காவல்துறை கேட்டுக்கொண்டது. சமூக விரோத கும்பலைச் சேர்ந்தவர்கள் அதை விரும்பவில்லை…..’

’காலை 10 மணிக்கு போலீசார் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. ஐஸ்ஹவுஸ் காவல்நிலையம் மீது பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. ஒரு பெண் காவலர் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டார். 23 மோட்டார் சைக்கிள்கள் காவல்துறை வாகனங்கள் எரிக்கப்பட்டன’

‘நடுக்குப்பத்திலும் தாக்குதல் நடந்தது’

‘அமைதிப் போராட்டம் திசை மாறியதையடுத்து அதைக் கட்டுப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டது’
இதெல்லாம் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ள தகவல். ஓரளவு நியாயமான அதிகாரி என்று நான் நம்புகிற அதிகாரி ஒருவரும் சேர்ந்தே இதையெல்லாம் தெரிவித்தது வேதனையளித்தது என்றாலும், இதில் எதைப்பற்றியும் நான் கேள்வி எழுப்பப் போவதில்லை.

காவல்துறையும் சில ஊடகங்களும் தெரிவிக்கிற இரண்டு குற்றச்சாட்டுகள் குறித்து மட்டும் நான் பேச வேண்டியிருக்கிறது.
1. போராட்டத்தில் பங்கேற்ற சிலர் குடியரசு தின விழாவைச் சீர்குலைக்க முயன்றனர் – என்கிற குற்றச்சாட்டு.
2. போராட்டத்தில் கலந்துகொண்டிருந்தவர்கள், அதில் பங்கேற்கும்படி நடுக்குப்பத்தைச் சேர்ந்த மீனவ மக்களைத் தூண்டினர்…. அதற்காக 500 ரூபாய் பணமும் பிரியாணி பொட்டலமும் வழங்கினர் – என்கிற குற்றச்சாட்டு.

அமைதியாகவும் வெற்றிகரமாகவும் நடந்த ஓர் அறப்போரைக் கொச்சைப்படுத்துவதற்காகவே செய்யப்படும் இந்த இழிவான பிரச்சாரத்தை, அதில் பங்கெடுக்காத என்னாலேயே தாங்கிக் கொள்ள முடியாத நிலையில், அதில் பங்கெடுத்த லட்சோபலட்சம் இளைஞர்களுக்கும் மாணவர்களுக்கும் இது எவ்வளவு எரிச்சலை ஏற்படுத்தியிருக்கும்?

இந்த அவதூறுகளை மேலும் அருவருப்பாக்கும் விதத்தில் இருந்தது, குடியரசு தின விழாவில் குழப்பத்தை ஏற்படுத்த கடற்கரையில் கண்ணிவெடிகள் வைக்கப்பட்டிருக்கிறதா – என்று போலீசார் சோதனை போட்டது. தங்களது தகிடுதத்தத்தை நியாயப்படுத்த காவல்துறை என்னென்ன கூத்தெல்லாம் நடத்த வேண்டியிருக்கிறது பாருங்கள்!

‘23ம் தேதி வரை பொறுத்துக் கொண்டிருந்த காவல்துறை, குடியரசு தின விழா நெருங்கிவிட்ட நிலையில்தான் வேறு வழியின்றி நடவடிக்கையில் இறங்கியிருக்க வேண்டும்’ என்பது ஊடக நண்பர் ஒருவரின் கருத்து. மாணவர் போராட்டம் தொடர்ந்ததால், குடியரசு தின விழா அணிவகுப்புக்கான இரண்டு ஒத்திகைகள் ரத்து செய்யப்பட்டதைச் சுட்டிக்காட்டினார் அவர்.

குடியரசு தின அணிவகுப்பை நடத்துவதற்காகத்தான் அமைதியாகப் போராடிக்கொண்டிருந்த இளைஞர் திரளை காவல்துறை வலுக்கட்டாயமாகக் கலைக்கப் பார்த்தது – என்பது, ‘குடியரசு தின விழாவைச் சீர்குலைக்க சதி நடந்தது’ என்கிற குற்றச்சாட்டுக்கு முரணானது.

ஒவ்வோராண்டும் சென்னைக் கடற்கரையில் நடக்கிற குடியரசு தினவிழா அணிவகுப்பை நேரிலோ தொலைக்காட்சியிலோ பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். எந்த ஆண்டு அணிவகுப்பு மிகவும் கம்பீரமாகவும் அழகாகவும் இருந்தது என்பதைத் தீர்மானிக்க, நமது நினைவுகளை ரீவைன்ட் செய்து பார்த்தால் போதும். அப்படியே அது எதுவென்று தீர்மானித்தாலும், அந்த ஆகச் சிறந்த அணிவகுப்பைக் காட்டிலும் அழகானதாக இருந்தது, ஜனவரி 17 முதல் 23 வரை அந்தக் கடற்கரையைக் கறுப்பு உடைகளால் அலங்கரித்த எங்கள் இளைஞர்களின் அணிவகுப்பு. வலுக்கட்டாயமாக அதைக் கலைக்கக் காவல்துறைக்கு உத்தரவிட்டது யார்?

நடப்பது மக்களாட்சி…. அதாவது, குடியரசு. மக்கள் சக்தியைப் பெருமைப்படுத்த வேண்டிய நாள்தான் ‘குடியரசு நாள்’. இதை உணராமல், மக்கள் சக்தியை அடக்கி ஒடுக்கி, அவர்களை சமூக விரோதிகள் என்றும் விஷமிகள் என்றும் சிறுமைப்படுத்த முயலும் ஓர் அரசுக்கும் அதிகார வர்க்கத்துக்கும் குடியரசு நாளைக் கொண்டாட என்ன தகுதி இருக்கிறதா – என்கிற கேள்விக்கு எந்த அதிகாரியாவது பதில் சொல்ல முடியுமா?

சென்னைக் கடற்கரையில் கூடிய லட்சக்கணக்கான இளைஞர்களால் தமிழ்நாட்டுக்கு மத்திய அரசாங்கங்கள் இழைத்த தொடர் துரோகங்கள் அம்பலமாவதையும் அந்தப் போராட்டம் தொடர்வதையும் மத்திய அரசு விரும்பவில்லை என்பது நண்பர்கள் சிலரின் வாதம். மத்திய அரசு கொடுத்த நெருக்கடியில்தான் ஓ.பி.எஸ். அரசு அவசரப்பட்டு நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் – என்கிறார்கள் அவர்கள்.

தமிழக முதல்வர் ஓர் உண்மையைப் புரிந்துகொள்ள வேண்டும். மோடியுடன் நல்லுறவைப் பேணுவது முக்கியம்தான்…. அதைவிட முக்கியமானது, மக்களுடன் நல்லுறவு வைத்துக் கொள்வது!

மத்திய அரசின் அறிவுறுத்தல்கள் பிழையானதாக இருந்தால் அதை ஏற்க மறுக்கிற துணிவு ஒரு மாநில முதல்வருக்கு இருக்க வேண்டியது மிக மிக அவசியம். 2009ல், சொக்கத்தங்கம் சோனியாவின் பழிவாங்கும் மனப்போக்கைத் தட்டிக்கேட்கக் கலைஞர் கருணாநிதி தலைமையிலான தி.மு.க. அரசு அஞ்சியதால்தான், 26வது மைலில் ஒன்றரை லட்சம் உறவுகளை இழந்திருக்கிறோம். இதை பன்னீர் செல்வம் மறந்துவிடக் கூடாது. ஒருபோதும், கலைஞர் பன்னீரின் வழிகாட்டி ஆகிவிடக்கூடாது.

குடியரசுதின விழாவைச் சீர்குலைக்க போராட்டத்தில் பங்கேற்றவர்கள் முயன்றார்கள் என்கிற குற்றச்சாட்டு, வலிந்து கூறப்படுகிற ஒன்றாகவே தெரிகிறது. ஒருவேளை ஏதாவது ஒரு சந்தேகத்தின் அடிப்படையில் அந்தக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருந்தால், அப்படியொரு ஐயம் எழுவதற்கு எது அடிப்படை என்பதையாவது முதல்வர் விவரிக்க வேண்டும்.

போராட்டத்தில் கலந்துகொண்டிருந்தவர்கள், நடுக்குப்பத்தைச் சேர்ந்த மீனவ மக்களுக்கு 500 ரூபாய் பணமும் பிரியாணி பொட்டலமும் வழங்கினர் – என்கிற குற்றச்சாட்டு அபத்தத்திலும் அபத்தம். மெரினா போராட்டத்தை நடத்தியது, 500 ரூபாயும் பிரியாணியும் கொடுத்து ஆள் பிடிக்கிற அரசியல் கட்சிகள் இல்லை. அப்படியே பணம் கொடுத்திருந்தாலும், பிரியாணி கொடுத்திருந்தாலும், உழைத்துப் பிழைக்கிற எங்கள் மீனவச் சொந்தங்கள் அதை வாங்கியிருப்பார்களா? ஆபத்துக்காலத்தில் இளைஞர்களுக்கும் மாணவர்களுக்கும் உதவினார்கள் என்பதற்காக மீனவ உறவுகளை இப்படியா கொச்சைப்படுத்துவது?

தமிழ் நாளேடு ஒன்றில் வெளியாகியிருந்த அற்புதமான பதிவு ஒன்றை இந்த இடத்தில் குறிப்பிட்டே ஆகவேண்டும்.
‘’ஜல்லிக்கட்டு அல்ல…. மாடு வளர்ப்பதுகூட மீனவ மக்களுக்கு அவசியமற்றது. புற்களற்ற கடற்கரையில் மாடு வளர்ப்பது சாத்தியப்படாது……
ஆனாலும், மாணவர்களை விட்டுவிட்டு எல்லோரும் ஓடியபோது, தன்னை நம்பி தங்களுக்குச் சொந்தமான இடத்தில் இடத்தில் போராடிய மாணவர்களைப் பாதுகாப்பது தனது கடமை என்று மாவீரர்களாக வந்து மாணவர்களுக்கு அரணாக நின்ற எம் மீனவ உறவுகளை மண்டியிட்டு வணங்குகிறேன்….
உழைக்கும் மக்கள் எப்போதுமே மகத்தானவர்கள்…. அவர்கள்தான் நமக்குக் கற்றுத் தருகிறார்கள்….’
என்பது மதிமாறன் என்கிற நண்பரின் துல்லியமான கருத்துப் பதிவு.

மதிமாறன் சொன்னது தான் உண்மை.

போராடியவர்களை விரட்ட போலீசார் முயன்றபோது, உடுக்கை இழந்தவன் கைபோல உதவிக்கு வந்தார்கள் மீனவச் சகோதரர்களும் சகோதரிகளும்! அதனாலேயே, 500 ரூபாய், பிரியாணி என்று அவர்களைக் கொச்சைப்படுத்த முயற்சிக்கின்றன சில ஊடகங்கள்.

இதே ஊடகங்கள், தங்கள் வாழ்வுரிமையைக் காக்க களத்தில் இறங்கிய இடிந்தகரை பகுதி மீனவ உறவுகளை எப்படியெல்லாம் சிறுமைப்படுத்தப் பார்த்தார்கள் என்பதை இப்போது நினைத்துப் பார்க்கிறேன். இடிந்தகரை மக்களுக்குப் பாடம் கற்பிக்கப்பார்த்த, அவர்களது போராட்டத்தைக் கொச்சைப்படுத்தப்பார்த்த ஊடகங்களும் காவல்துறையும் அங்கே செய்ததைத்தான் மெரினாவிலும் செய்திருக்கிறார்கள்.

இடிந்தகரையிலும் மெரினாவிலும் மக்கள் எழுச்சியை அடக்க அவர்களுக்குப் ‘பாடம்’ கற்பித்திருப்பவர்கள் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். தங்கள் உரிமைகளுக்காக மீண்டும் மீண்டும் களத்தில் இறங்க வேண்டும் என்கிற உறுதியை அவர்களுக்குள் விதைத்திருப்பது உங்களது அதிகாரத் திமிரும் அறியாமையும் தான்! அந்த இரண்டையும் தவிடுபொடியாக்க முடியும் என்பதை நிரூபிப்பதற்காகவாவது எமது மக்கள் மீண்டும் திரள்வார்கள். ஜாலியன் வாலா பாக் சம்பவத்தால் விடுதலைப் போராட்டம் வீழ்ந்துவிட்டதா என்ன?

-புகழேந்தி தங்கராஜ்!

தைப்புரட்சி – சாதனைகளும் சவால்களும் !

தைப்புரட்சி என்று போற்றப்படும் தமிழர் புரட்சி வழங்கியுள்ள பாடங்கள்:

1. இக்கால இளைஞர்களும் – மாணவர்களும் – ஆண்களும் பெண்களும் – சமூகச் சிந்தனை இன்றி நுகர்வு வாழ்வில் தோய்ந்து உதிரிகளாக இருக்கிறார்கள் என்ற வசையைத் தைப்புரட்சி புரட்டிப் போட்டு விட்டது.

சமூகப் பொறுப்பு, தமிழினப் பொறுப்பு ஆகிய வற்றில் பெரியவர்களுக்கே வழிகாட்டும் அளவிற்கு இளைஞர்கள் இலட்சோப இலட்சமாய்த் தமிழ் நாடெங்கும் களத்தில் இறங்கி விட்டார்கள்! அவர்கள் பொறுப்பற்ற உதிரிகளுமல்லர்; விவரம் அறியாதவர் களுமல்லர்! எல்லாம் தெரிந்தவர்களே!

2. ஒரு கோடி உறுப்பினர்களைக் கொண்டுள் ளோம்; ஒன்றரைக் கோடி உறுப்பினர்களைக் கொண்டுள்ளோம் என்று கூறிக் கொள்ளும் கட்சிகள், தன்னலப் பூதங்களே தவிர, தமிழர்களுக்கான தற்காப்புத் தலைமைகள் அல்ல என்பதைத் தைப்புரட்சி உணர்த்தி விட்டது.

அவற்றின் தலைவர்கள் தங்கள் பெயருக்கு முன்னால் சுமந்து கொண்டிருக்கும் புகழ்ச்சிப் பட்டங்கள் செல்லப் பிராணிகளுக்கு சூட்டப்பட்ட பெயர்களை விடவும் பொருத்தமற்றவை என்பதைக் காட்டி விட்டது!

3. இந்தியன், திராவிடன் என்ற போலி இனப் பெயர்களைத் தைப்புரட்சிப் புயல், வரலாற்றின் குப்பைக் கூடையில் வீசி விட்டது.

“தமிழன்டா!” என்ற முத்திரை முழக்கத்தைத் தைப்புரட்சி நமது பதாகைகளுக்கு வழங்கியுள்ளது.

“தமிழன்டா” முழக்கத்தில், ஆண்களும் பெண்களும் அடக்கம்; அனைத்து மதங்களும் சாதிகளும் அடக்கம்!

4. இந்தியத் தேசியவாதக் கட்சிகள் – தமிழ் நாட்டில் வெகுமக்கள் கட்சிகளாக – இனி ஒரு பொழுதும் எழ மாட்டா! இந்தியத்தேசியவாதிகள் பெயருக்குக் கட்சி நடத்திக் கொண்டிருக்கலாம் என்ற வரலாற்றுப் பாதையை வரையறுத்து விட்டது.

5. பெரும் பெரும் நாளிதழ்கள் வார ஏடுகள், பெரும் பெரும் தொலைக்காட்சிகள் முதலிய ஊடகங்களைவிட வலிமை மிக்க ஊடகம் ஒவ்வொரு தமிழன் – தமிழச்சி கையிலும் பையிலும் இருக்கின்றது, அது சமூக வலைத்தளம் என்று காட்டிவிட்டது!

அவற்றின் வழியாக நடந்து வரும் கருத்துப் பரிமாற்றங்கள், திறனாய்வுகள், அழைப்புகள் ஆகியவற்றால்தான் தைப்புரட்சி ஏற்பட்டது.

வெள்ளம்போல் தமிழர் கூட்டம்
வீரங்கொள்கூட்டம்; அன்னார்
உள்ளத்தால் ஒருவரே மற்று
உடலினால் பலராய்க் காண்பார்
கள்ளத்தால் நெருங்கொணாதே;
எனவையம் கலங்கக்கண்டு
துள்ளும்நாள் எந்நாள்? உள்ளம்
சொக்கும் நாள் எந்தநாளோ?

என்று ஏங்கிக் கேட்டார் பாவேந்தர். அந்நாள் இந்நாள் என்று மெய்ப்பித்தார் அவர் பேரப்பிளைகள்!

எச்சரிக்கைகள்
==============
1. இசவாதிகள்
————————
தமிழர் எழுச்சியைத் திசை திருப்பிட “இசவாதிகள்” (Isamists) கடுமையாக முயல்வார்கள். “இசவாதிகள்” என்பவர் யார்? வெளிநாட்டில், வடநாட்டில், தமிழ்நாட்டில் முந்தியத் தலைமுறையினர் அவரவர் வாழ்ந்த காலத்தில், அவரவர் எடுத்துக் கொண்ட சிக்கலுக்கேற்ப தயாரித்த சிந்தனைத் தொகுப்புகளை அப்படியே இப்போதும் ஏந்திக் கொண்டு, அந்த சிந்தனைகளுக்கேற்ப தமிழ்ச் சமூகத்தை மாற்றிட முயன்று தோற்போர் ஆவர்!

நோயாளியை ஆய்வு செய்து அவருக்கு வந்திருக்கும் தனித்துவமான நோயை அறிந்து அதற்கான மருத்துவ முறையைக் கையாண்டு, மருத்துவம் பார்ப்பவர் சிறந்த மருத்துவர்! என்னிடம் உள்ள ஒற்றை மருந்து எல்லா நோய்களையும் தீர்த்து விடும் என்று கூறுபவர் மருத்துவர் பெயரில் உள்ள மந்திரவாதி! தமிழ்நாட்டில் மந்திரவாத இசங்களுக்குப் பஞ்சமில்லை!

ஒட்டுமொத்தத் தமிழர்களின் எழுச்சியைக் கூறுபோட்டுப் பங்கிட்டுக் கொள்ள இசவாதிகள் ஓடி வருவார்கள்!

2. ஆரிய இந்துத்துவா வாதிகள்
————————————————–
ஆரியப் பார்ப்பனிய இந்துத்துவா வாதிகள் – தமிழர் அடையாளங்களை இந்துத்துவா அடையாளங்களாகத் திரித்துக் காட்டித் திருதராட்டிர ஆலிங்கனம் செய்து தமிழர் எழுச்சியைச் சீர்குலைக்க வருவார்கள். எதிரி மீது பாசம் காட்டுவது போல் பாவனை செய்து கட்டித் தழுவி இறுக்கிக் கொன்று விடுவதுதான் திருதராட்டிர ஆலிங்கனம்!

ஆரியப் பார்ப்பனிய இந்துத்துவா வாதிகள், புராணக் கதைகளற்ற தமிழர் பொங்கல் விழாவை, கருங்கிராந்தி நோய் என்பது போல் சங்கராந்தி என்பார்கள்! தமிழரின் ஏறுதழுவல் “ரிஷப வைபவம்” என்பார்கள்! ஆனால் ஆரியவர்த்த மாநிலங்களான உ.பி., ம.பி., பீகார் போன்றவற்றில் தமிழரின் பொங்கல் விழாவைப் போல் போகி தொடங்கி ஏறுதழுவல் வரை நான்கு நாள் நிகழ்வுகள் இல்லை.

3. இந்திய ஏகாதிபத்திய அரசு
———————————————–
இந்திய ஏகாதிபத்தியத்தின் நடுவண் அரசு தமிழர்களின் தைப்புரட்சி எழுச்சியைப் பழிவாங்கும் வெறியுடன் குறுகுறு என்று பார்த்துக் கொண்டுள்ளது. என்னென்ன வகைகளில் தமிழர்களை ஒடுக்கி, அடக்கி வைக்கலாம் என்று கருவிக் கொண்டுள்ளது.

காலம் காலமாக நடந்துவந்த காளை விளை யாட்டான சல்லிக்கட்டை நடத்திட அனுமதி கோரி, தமிழ்நாடெங்கும் இந்தியாவில் எங்குமே காணாத அளவிற்கு, கோடிக்கணக்கான மக்கள் அங்கங்கே குவிந்து, ஆறு நாட்கள் தொடர்ந்து அறப்போராட்டம் நடத்தினார். மோடி அரசு மக்களின் குரலுக்கு செவி சாய்த்து, தடை செய்யப்பட்ட விலங்குகள் பட்டி யலிலிருந்து காளையை நீக்கியிருக்க வேண்டும். தானே முன்வந்து விலங்குகள் துன்புறுத்தல் தடைச் சட்டம் – 1960-ஐ திருத்தியிருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு செய்யவில்லை.

மாணவர் போராட்டத்தின் நெருக்கடி காரணமாக செயல்பாட்டில் இறங்கிய தமிழ்நாடு முதலமைச்சர் ஓ.பி.எஸ். தில்லிக்குச் சென்று, நரேந்திர மோடியிடம் நேரடியாகக் கோரிக்கை வைத்தபோதுகூட, தம்மால் எதுவும் செய்ய முடியாது என மறுத்துவிட்டார் மோடி!

தமிழினத்தின் மீதுள்ள நிரந்தரக் காழ்ப்புணர்ச்சி யால், பா.ச.க. நடுவண் ஆட்சி குறிப்பாக தலைமை அமைச்சர் நரேந்திர மோடி, “தமிழர்களின் ஞாயத்தை ஏற்றுக் கொண்டால், அவர்களுக்குப் பணிந்து போவதுபோல் ஆகும்” என்று கருதி, தமிழ்நாடு அரசே சட்டத்திருத்தத்துடன் அவசரச்சட்டம் இயற்றிக் கொள்ளுமாறு கூறிவிட்டது.

காவிரி வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தபடி, மேலாண்மை வாரியம் அமைக்கப்பட இருந்த நிலையில், கடைசி நேரத்தில் அதைத் தட்டிப் பறித்தது மோடி அரசு! தொடர்ந்து இனப்பாகுபாடு பார்த்துதான் தமிழர்களை இந்தியா வஞ்சிக்கிறது. நம் பண்பாட்டு விழாவான ஏறுதழுவலை தடை செய்வதிலும் அதே அணுகுமுறையைத்தான் இந்தியா கொண்டுள்ளது.

“தமிழ்நாட்டின் போராட்டங்களைக் கூர்ந்து கவனித்துக் கொண்டுள்ளோம். நடுவணரசின் உளவுத்துறை விவரங்களைத் திரட்டிக் கொண்டுள்ளது. தமிழ்நாடு அரசு உதவி கேட்டால், உடனடியாக துணை இராணுவப் படைகளை அனுப்பி வைப்போம்” என்று தில்லி உள்துறை அதிகாரி ஒருவர் கூறியதாக இந்து ஆங்கில நாளோடு (24.01.2017) செய்தி வெளி யிட்டுள்ளது.

4. இனப் பெயரில் போலிகள்
———————————————
தமிழினம், தமிழ்த்தேசியம் என்ற பெயரிலேயே பதவி வேட்டையாடும் போலிகள் புகுவார்கள்; புதிதாகவும் உருவாவார்கள்!

5. தைப்புரட்சியைப் புகழ்ந்து அல்லது திறனாய்வு செய்து கட்டுரை எழுதுவோரில் பலர், கடைசியில் திராவிடவாதத்துக்கு ஆதரவாகவோ அல்லது இந்தியத் தேசியத்திற்கு ஆதரவாகவோ எழுதி முடிப்பர். இவ்வாறு தமிழின எழுச்சியை மடைமாற்றுவர்.

தைப்புரட்சியில் பங்கு கொண்ட – தைப்புரட்சியை ஆதரித்த தமிழர்கள் அனைவரும் இந்த எச்சரிக்கை களைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

அ.இ.அ.தி.மு.க. அரசு
====================
சென்னைக் கடற்கரை, மதுரை, கோவை, திருச்சி, அலங்காநல்லூர் மற்றும் தமிழ்நாடெங்கும் ஆறு நாட்கள் வரை மக்கள் திரள்7 அறப்போராட்டத்தை அ.தி.மு.க. அரசு அனுமதித்ததும், வன்முறை ஏவாமல் இருந்ததும் ஓர் அரசியல் உத்திதான்!

ஆனால் அதற்கு முன், அவனியாபுரத்தில் 14.01.2017 அன்று அறவழியில் சாலை ஓரமாக இயக்குநர் வ. கவுதமன் தலைமையில் அமர்ந்து, சல்லிக்கட்டு தடை நீக்கிட முழக்கமிட்ட இளைஞர்கள் மீது கடுமையாகத் தடியடி நடத்திக் காயப்படுத்திக் கூட்டத்தைக் கலைத்து, அவர்களைத் தளைப்படுத்தினார்கள். அதனால் அ.தி.மு.க. அரசுக்குப் பெரிய அளவில் கெட்ட பெயர் ஏற்பட்டது.

இப்பின்னணியில் 17.1.2017 அன்று சென்னை மெரினா கடற்கரையில், வெள்ளம் போல் திரளத் தொடங்கிய தமிழர்கள் மீது அ.தி.மு.க. அரசு கைவைக்கத் தயங்கியது. மாணவர்களும் இளைஞர் களும் தமிழ்நாட்டின் மூலை முடுக்குகளிலிருந் தெல்லாம் வந்து குவிந்தார்கள்.

தமிழ்நாட்டின் பிற பெரு நகரங்கள், நகரங்கள், பேரூர்கள், சிற்றூர்கள் என எல்லா இடங்களிலும் மக்கள் வெள்ளம் அங்கங்கே கூடிப் பெருகியது. இரவு பகலாகக் கூட்டம் தொடர்ந்தது.

சல்லிக்கட்டு உரிமையுடன், காவிரி உரிமை, உழவர் உரிமை, கச்சத்தீவு, பாலாறு, முல்லைப்பெரியாறு எனப் பல உரிமைகள் பேசினர். மீத்தேன் எதிர்ப்பு, கெயல் குழாய் எதிர்ப்பு, வியோ பால் புட்டி – பெப்சி – கோகோ கோலா பாட்டில்கள் உடைப்பு, பன்னாட்டு வேட்டை நிறுவனங்கள் எதிர்ப்பு, பீட்டா வெளியேற்றல் எனத் தமிழ்நாட்டின் முகாமையான வாழ்வியல் உரிமை முழக்கங்களை எழுப்பினர். இயற்கை வேளாண்மை, தமிழர் மரபு உணவு பற்றியெல்லாம் உரையாடினர்.

கட்டுக்கோப்பாகவும், தன்னொழுங்குடனும், கண்ணியத்துடனும், ஆண்களும் பெண்களும், மாண வர்களும் இலட்சக்கணக்கில் ஒரே இடத்தில் இரவு பகலாக இருந்து முழக்கமிட்டனர். சுற்றுப்புற தூய்மை பேணினர்.

தாராள மனம் படைத்த தமிழ்ப் பெருமக்கள் உணவு, தின்பண்டம், கழிவறை வசதி எனப் பல உதவிகள் செய்தனர். பொங்குமாங்கடலென மக்கள் குவிந்தனர்.

எனவே வன்முறையை ஏவினால், 1965 மொழிப் போரில் காங்கிரசு காவல்துறையையும் இராணுவத் தையும் ஏவி இரத்தக்குளியல் நடத்தியதுபோல் ஆகிவிடும்; தமிழ்நாட்டில் காங்கிரசு அத்தியாயம் முடிவுக்கு வர அதுவே தொடக்கமாக இருந்தது என்ற வரலாற்றை உணர்ந்த அ.தி.மு.க. அரசு, தமிழர் உரிமைக்கான அறப்போராட்டம் நடத்திய மக்களுக்கு உதவியாக இருந்தது.

சல்லிக்கட்டு உரிமை வழங்கும் அவசரச்சட்டம் கொண்டு வந்தது அ.தி.மு.க. அரசு! அந்தச் சட்ட நகலை வெளியிடாமல் மூடு மந்திரமாக வைத்துக் கொண்டு, மக்கள் வெள்ளத்தைக் கலைந்து போகச் சொல்லி 23.01.2017 அன்று விடியற்காலையிலிருந்து நெருக்கடி கொடுத்தனர் காவல்துறையினர்.

சென்னைக் கடற்கரையில் ஆயிரக்கணக்கில் காவல்துறையினரைக் கொண்டு வந்து இறக்கினர்; சரக்குந்துகளில் தடிகளையும் கொண்டு வந்தனர்.

பிடித்து இழுத்தும், தள்ளியும், தூக்கி எறிந்தும், அடித்தும், விரட்டியும் மக்களைக் கலைத்தனர். பெண்கள், பெரியவர்கள், மாணவர்கள், மாணவிகள் என எல்லாரும் அடிக்கப்பட்டனர். காவல்துறையினரே, தானி வண்டிக்குத் தீ வைத்தனர்; காவல் நிலையத் திற்கும் தீ வைக்கப்பட்டது.

சல்லிக்கட்டு உரிமையை மீட்டிடும் சட்டம் கொண்டு வந்த பின் தடியடி நடத்தியது ஏன்? அடிபட்டு கடற்கரையில் சூழ்ந்து நின்ற மக்களுக்கு உணவும், தண்ணீரும் வழங்கிய மீனவ மக்களைத் தாக்கியது ஏன்? இதுதான் அரசின் வன்மம்! காவல்துறையின் பொது உளவியல் இதுதான்!

காட்சிப்படுத்தத் தடை செய்யப்பட்ட விலங்குகள் பட்டியலிலிருந்து காளையை இந்திய அரசு நீக்க வில்லை. தமிழ்நாடு அரசு போட்ட சட்டத்தை எதிர்த்து, எதிர்த்தரப்பினர் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தால் – தடைப் பட்டியலில் காளை தொடர்வது ஒரு வினாக் குறியே!

இந்த ஒன்றைத் தவிர, மற்றபடி தமிழ்நாடு அரசு கொண்டு வந்த திருத்தச் சட்டம் வரவேற்கத்தக்கதே!

இவ்வாறு இருக்கும்போது, பொறுமையாக இந்த உண்மைகளை விளக்கி, கூட்டத்தைப் பதற்றமின்றி விடை பெறச் செய்திருக்கலாம்.

வரலாறு காணாத அளவிற்கு உலகமே வியக்கும் வகையில் நடந்த தமிழ்நாடு தழுவிய மாபெரும் மக்கள் திரள் எழுச்சியை அமைதியாகக் கலைய விட்டால், மீண்டும் போராட அவர்களுக்கு ஊக்கம் கொடுக்கும் என்று கருதி, உடலில் மட்டுமின்றி நெஞ்சத்திலும் காயத்தோடு அனுப்ப வேண்டுமென்று தமிழ்நாடு அரசு கருதியிருக்கலாம்.

அடுத்து வரும் காலங்களில், சனநாயகப் போராட் டங்களை வழமைபோல் அனுமதிக்காமல் கெடுபிடிகள் செய்யலாம். அதேவேளை தமிழர்களை அண்டிப் பிழைக்கும் நுகர்வோராக மாற்றுவதற்கு மேலும் சில இலவசங்களையும் வழங்கலாம். இவ்வாறான இரு வழிகளில்தான் அ.இ.அ.தி.மு.க. அரசு தமிழர் எழுச்சிக்குப் பிந்திய செயல்முறையை வகுத்துக் கொள்ளும்.

இவ்வாறான அரசின் போக்கை எதிர் கொள்ளும் சிந்தனைத் தெளிவும், மன உறுதியும் இளைஞர்களுக்கும் மாணவர்களுக்கும் தேவை.

தி.மு.க.
========
தைப்புரட்சியாக விளங்கிய தமிழர் எழுச்சியையும், அதில் பங்கேற்றோர் தாக்கப்பட்டதையும் பயன்படுத்தி, மக்கள் செல்வாக்குப் பெற்று ஆட்சியைப் பிடிக்கும் உத்திதான் தி.மு.க.வுக்கு இருக்கும். உண்மையான தமிழின உரிமை மீட்பு நடவடிக்கைகளில், தி.மு.க. இறங்குவதற்கு வாய்ப்பில்லை. திருந்துவதற்கும் வாய்ப்பில்லை. அக்கழகத்தின் ஆட்சியில்தான் பல்வேறு உரிமைகளைத் தமிழ்நாடு இழந்தது.

சிங்கள அரசு இந்தியாவின் துணையோடு ஈழத்தமிழர்கள் மீது இன அழிப்புப் போர் நடத்தி, ஒன்றரை இலட்சம் தமிழர்களை படுகொலை செய்த காலத்தில், அதைக் கண்டித்து 2008 – 2009 ஆண்டுகளில் மேடையில் பேசியவர்கள் மீது “தேசியப் பாதுகாப்புச் சட்டம்” (N.S.A.), அரசுக் கவிழ்ப்புப் பரப்புரை (Sedition – 124A) போன்ற சட்டங்களின் கீழ் வழக்குகளைத் தொடுத்து சிறையில் அடைத்தது கலைஞர் ஆட்சி.

போர் நிறுத்தம் கோரி போராடிய வழக்கறிஞர்களை சென்னை உயர் நீதிமன்ற வளாகத்திற்குள் சுற்றி வளைத்து, அடித்து நொறுக்கி எலும்புகளை உடைத்துப் படுகாயப்படுத்தியது காவல்துறை (17.02.2009). ஒரு நீதிபதி எலும்பும் முறிக்கப்பட்டது.

அரசு அமைத்த விசாரணை ஆணையம், குற்றம் இழைத்த காவல்துறை அதிகாரிகளை அடையாளம் கண்டு அறிக்கை கொடுத்தது. ஆனால், அந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க மறுத்தார் அன்றைய முதலமைச்சர் கருணாநிதி.

இது அண்மைக்கால தி.மு.க. அரசியலுக்கான ஒரு சான்று! அதற்கும் முந்தைய கால சான்றுகள் ஏராளம்! ஏராளம்!

காங்கிரசு கூட்டணி அரசில் தி.மு.க. அமைச்சர் பதவி வகித்தபோதுதான், “காளை” தடை செய்யப்பட்ட விலங்குகள் பட்டியலில் சேர்க்கப்பட்டது (2011).

எனவே, அ.இ.அ.தி.மு.க.வும் தி.மு.க.வும் இனத்துரோக அரசியல் என்ற நாணயத்தின் இரண்டு பக்கங்கள்தான்!

மாணவர்களின் வரலாற்று
முன்னெடுப்பும் மக்களின் பங்களிப்பும்
===================================

ஆதிக்க இந்தியை விரட்டிட 1965-இல் மாணவர்கள் முன்னெடுத்த வரலாற்றுச் சிறப்புமிக்க மொழிப் போருக்குப் பின், ஈழத்தமிழர் விடுதலைப்போர் உள்ளிட்ட தமிழர் உரிமைகளுக்கு பலப் போராட் டங்கள் தமிழ் மாணவர்கள் நடத்தியிருந்தாலும், “தைப்புரட்சி” என்ற தமிழர் புரட்சியை முன்னெடுத்த மாபெரும் வரலாற்றுப் பாத்திரம் இன்றையத் தமிழ் மாணவர்களுக்கே இருக்கிறது.

அடையாளப் போராட்டம் நடத்தாமல், விளம்பரப் போராட்டம் நடத்தாமல், பிரமுகத்தனம் காட்டாமல், இலட்சியத்தை மட்டுமே முன்னிறுத்திப் போராடிய மாணவர்களின் நேர்மையும் ஒழுக்கமும் தமிழ் மக்களை ஈர்த்தது. மாணவர் போராட்டமாக முகிழ்த்தது, பெற்றோரும் பங்கேற்ற மாபெரும் தமிழர் வெள்ளமாக மலர்ந்தது.

மக்களின் ஆற்றலுக்கு எல்லையில்லை. அவர்கள் நடத்தும் போராட்ட வடிவங்களுக்கும், ஆதரவுச் செயல்பாட்டு வடிவங்களுக்கும் அளவில்லை என்பதை இப்போராட்டத்தில் மாணவர்களும் மக்களும் காட்டினார்கள்.

தலைமை இல்லாப் போராட்டமா?
===============================
இம்மாபெரும் தைப்புரட்சியைத் தலைமை இல்லாப் போராட்டம் என்று ஊடகத்தார் குறிப்பிட்டனர். வெளித்தோற்றத்திற்கு அப்படித்தான் தெரிந்தது. ஆனால் தான் பெற்ற பிள்ளைகளின் போராட்டத் திற்குத் தமிழன்னைதான் தலைமை தாங்கினாள்; அதாவது தமிழ்மொழி வழி பெற்ற தமிழின உணர்வுதான் தலைமை தாங்கியது.

பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தமிழ் ஆசான்கள், சான்றோர்கள், வீரர்கள், மாமன்னர்கள் நடத்திய வாழ்வும் வழங்கிய சிந்தனைகளும் வாழையடி வாழையாய் தமிழர்களுக்கு இன உணர்ச்சியையும், அறச்சிந்தனைகளையும், போர்க் குணத்தையும் வழங்கி வருகின்றன. வற்றாத அந்த வரலாற்றுத் தொடர்ச்சியே இன்றைய தைப்புரட்சிக்குத் தலைமை தாங்கியது!

தைப்புரட்சியில் எழுந்த தமிழர் எழுச்சி காட்டாற்று வெள்ளமாய்க் காணாமல் போய்விடும் என்று சிலர் கணிக்கிறார்கள். அப்படிக் காணாமல் போய்விட வேண்டும் என்று தமிழினப் பகைவர்களும் வஞ்சகர்களும் ஆசைப்படுகிறார்கள்.

ஒரு சமூக நெருக்கடியில் எழுந்த மக்கள் கொந்தளிப்பு அலை சாதாரண காலத்திலும் அப்படியே நீடிக்கும் என்று எதிர்பார்ப்பது கற்பனைவாதம்! அது பின்வளர்ச்சியின்றி அடிச்சுவடு தெரியாமல் மறைந்து விடும் என்று கருதுவது அகநிலைவாதம்! அல்லது எதிரிகளின் எதிர்பார்ப்பு!

தைப்புரட்சி இளைஞர்களே, மாணவர்களே! உங்களைச் சுற்றி வளைக்கப் பலர் வட்டமிடுவார்கள்! நீங்கள் உங்கள் சொந்த அறிவாற்றல் கொண்டு தேர்வு செய்யுங்கள்!

நீங்கள் யாரையோ பின்பற்றுவதற்கு மட்டுமே பிறந்தவர்கள் அல்லர். வழிகாட்டவும் பொறுப்புடைய வர்கள்; உரிமை உடையவர்கள்!

இசவாதிகளிடம் எச்சரிக்கையாக இருங்கள்! எந்த இசத்திலும் உள்ள முற்போக்கான கருத்துகளை, சமகாலத்திற்குத் தேவையான கருத்துகளை தமிழர் உளவியல் ஏற்கும்; ஆனால் அதில் தன்னைக் கரைத்துக் கொள்ளாது.

தத்துவம் வழிகாட்டவும் செய்யும், வழி மறிக்கவும் செய்யும்!

தகவல் தொழில்நுட்பத்தில் ஏற்பட்ட புரட்சி, சிறு சிறு தேசிய இனங்களின் அடையாளங்களை உலக அரங்கில் கொண்டு வந்துள்ளது. பெருந்தேசிய இன ஆதிக்கத்தில் சிக்கிக் கொண்ட சிறு தேசிய இனங்கள் விடுதலை பெற உந்துவிசை அளித்து வருகிறது தகவல் தொழில்நுட்பப் புரட்சி!

இரசியப் பேராதிக்கக்திடமிருந்து 14 தேசிய இனங்கள் பிரிந்தன. பிரித்தானியாவில் ஆங்கிலேயப் பேராதிக்கத்திலிருந்து பிரிந்திட அயர்லாந்தும் ஸ்காட்லாந்தும் நேரம் பார்த்துக் கொண்டுள்ளன. இந்தோனேசியாவிலிருந்து கிழக்குத் திமோர், எத்தியோப்பியாவிலிருந்து எரித்திரியா பிரிந்தன. கனடாவிலிருந்து கியூபெக், ஸ்பெயினிலிருந்து கட்டலோனியா, பாஸ்க், சீனாவிலிருந்து திபெத், உய்கூர் ஆகிய தேசிய இனங்கள் விடுதலை கோருகின்றன.

நாம் தமிழ்நாட்டில் மட்டும் எட்டுக்கோடி பேர் இருக்கிறோம் இந்தியாவின் இதர மாநிலங்களில் இரண்டு கோடிப் பேர் இருக்கலாம். உலகில் மொத்தம் 12 கோடித் தமிழர்கள் மக்கள் தொகை வாழ்கிறோம். பிரித்தானியா, பிரான்சு தமிழ்நாட்டு மக்கள் தொகையைவிட அதிகம்!

உலகத்தின் இன்றையப் போக்கு தேசிய இன இறையாண்மையை உறுதிப்படுத்துவதுதான். உலகமயம் என்ற பெயரில் வேட்டையாடும் பன்னாட்டு நிறுவனங்களை எல்லை கட்டி வெளியே தள்ள தேசிய இனத் தாயக உரிமையும், தாயக வரலாற்று – பண்பாட்டு உளவியல் உணர்ச்சியும் மிகமிக இன்றியமையாதவை!

தமிழ்த்தேசிய இறையாண்மையே, பன்னாட்டு வேட்டை நிறுவனங்களை வெளியேற்றும்; தடுக்கும்! தமிழ்த்தேசிய இறையாண்மையே, தமிழ்நாட்டைத் தமிழர்களின் வாழ்வுரிமைத் தாயகமாக மாற்றும்! வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் தமிழ்நாட்டில் தொழில், வணிகம், வேலை வாய்ப்பு ஆகியவற்றில் ஆதிக்கம் செலுத்தி மண்ணின் மக்களாகிய தமிழர்களை தமிழ்நாட்டிலேயே இரண்டாம் தரக் குடி மக்களாக மாற்ற வருகிறார்கள். வெளியாரை வெளியேற்றினால் தமிழர் வாழ்வுரிமை பாதிக்கப்படும்.

தமிழ்த்தேசிய இறையாண்மையே, ஆரிய மொழிகளான சமற்கிருதம், இந்தி ஆதிக்கத்திலிருந்து தமிழைக் காக்கும்!

தமிழ்த்தேசிய இறையாண்மையே, பொங்கல் விழா, திருவள்ளுவர் நாள், ஏறுதழுவுதல் போன்ற தமிழ்ப் பண்பாட்டுரிமைகளைக் காக்கும்.

தமிழ்த்தேசிய இறையாண்மையே, கச்சத்தீவு, கடல் உரிமை, காவிரி, முல்லைப் பெரியாறு, பாலாறு, பவானி உரிமைகளை மீட்கும்!

தமிழ்த்தேசிய இறையாண்மையே, பெப்சி – கோக்கோ கோலா, வியோ உள்ளிட்ட வெளிநாட்டு நிறுவனங் களை விரட்டும்; உள்நாட்டு மரபு உற்பத்திகளை வளர்க்கும்! மண்ணுக்கேற்ற புதுமைகளைப் படைக்கும்!

தமிழர் அறம் மனித சமத்துவத்தை நிலைநாட்டும்!

தைப்புரட்சியில் தமிழர்களாக ஒருங்கிணைந்த இந்து, முசுலிம், கிறித்துவ மக்கள் ஒற்றுமையைத் தமிழ்த்தேசியமே வளர்க்கும்; சாதியைப் பின்னுக்குத் தள்ளி தமிழராய் ஒருங்கிணைந்த இன உணர்ச்சியைப் பெருக்கும்!

ஆணும் பெண்ணும் சமமாய்க் களம் கண்ட தைப்புரட்சியில் சமத்துவத்தைத் தமிழ்த்தேசியமே தொடரும்; தலைவன் – தலைவி என்ற சங்ககால சமத்துவத்தை மேலும் மேன்மைப்படுத்தும்!

இந்தியன், திராவிடன் என்ற அயல் இன ஆதிக்கப் புனைவுகளைப் புறந்தள்ளுங்கள்! தமிழராய்த் தலை நிமிருங்கள்!

“தமிழன்டா!”.
தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
ஐயா பெ. மணியரசன்
சிறப்புக் கட்டுரை!

==========================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

விடுதலையை விலைபேசும் சுமந்திரன் !

தமிழர்களுடைய விடுதலைக்கான ஆயுதப் போராட்டமானது மௌனிக்கப்பட்ட பின்னரும் உயரிய கட்டுக்கோப்பை பேணும் வகையிலேயே கடந்த ஏழு ஆண்டுகள் கடந்துள்ளன.

விடுதலைப் போராட்டம் பாரிய சவாலை எதிர்கொண்டு பேரவலத்தை சந்தித்தபோதும் அதில் தப்பிபிழைத்த போராளிகளும் அதனோடு பயணித்த பொதுமக்களும் எப்போதுமே ஒரு உயரிய கட்டுக்கோப்பை பேணியே வாழ்ந்துவருகின்றார்கள்.

போர்க்காலத்தில் விடுதலைப்புலிகளை வசை பாடிய சிறிலங்கா இராணுவத்தின் குறிப்பிடத்தக்க அதிகாரிகள் கூட விடுதலைப்புலிகளின் திறனை தவிர்க்கமுடியாமல் வியந்திருக்கிறார்கள்.

ஆனால் எமது தமிழர்களின் பிரதிநிதிகளோ தமிழர்களுடைய முப்பது வருட விடுதலைக்கான ஆயுதப்போராட்டத்தை கொச்சைப்படுத்துவதற்கு தம்மாலான முயற்சிகளை அவ்வப்போது செய்துவருகின்றார்கள்.

குறிப்பாக தமிழ்த்தேசிய கூட்டமைப்பை சேர்ந்த சுமந்திரன் அதனை வெளிப்படையாக விடுதலைப்போராட்டத்தை கொச்சைப்படுத்துவதில் அதீத கவனம் செலுத்திவருகின்றார்.

அதிலும் காயமடைந்து போராட்டத்திற்காக தமது வாழ்வை தொலைத்து வாழ்வாதாரத்திற்கு ஏங்கி நிற்கும் முன்னாள் போராளிகளின் எதிர்காலத்தையும் நெருக்கடிக்குள்ளாக்குவதில் மிகக்கவனம் எடுத்துவருகின்றார்.

சிறிலங்கா புலனாய்வுத்துறையின் பல்வேறு நரித்திட்டங்களுக்கு நடுவில் சிக்கிதவிக்கும் இப்போராளிகளின் வாழ்வை சீரழித்து அழிப்பதிலும் அப்படியான அழிவை தமிழர் சார்பாக நியாயப்படுத்துவதிலும் சுமந்திரன் தனது இராசதந்திர நுட்பத்தை தெளிவாக பயன்படுத்திவருகின்றார்.

கடந்த ஆண்டு சாவகச்சேரி பகுதியில் ஒரு தற்கொலை அங்கி கண்டுபிடிக்கப்பட்டதாகவும் அதனை சுமந்திரனுக்கு இலக்கு வைத்தே கொண்டுவரப்பட்டதாகவும் சுமந்திரனின் கையாளான கேசவன் சயந்தன் என்ற மாகாணசபை உறுப்பினர் ஊடாக பகிரங்கமாக குற்றம்சாட்டப்பட்டது.

பழைய சிங்களப் பத்திரிகை ஒன்றில் மடித்து மறைக்கப்பட்டிருந்த அந்த அங்கியைய சாட்டாக வைத்து வடக்கே பருத்தித்துறை தொடக்கம் கிழக்கே மட்டக்களப்பு வரை 65 இற்கும் மேற்பட்டோர் இரகசியமாக கைதுசெய்யப்பட்டனர்.

மக்களுக்கு பயப்பீதியை உருவாக்கும் நோக்குடன் சிறிலங்கா புலனாய்வுத்துறையால் நடத்தப்பட்ட இந்த நடவடிக்கையில் சுமந்திரன் தரப்பு வேண்டுமென்றே உள்நுழைந்து கைதுசெய்யப்பட்டவர்கள் மேல் அபாண்டமான ஒரு குற்றசாட்டை முன்வைத்திருந்தது.

கைதுசெய்யப்பட்டவர்களோ தற்கொலை அங்கி என்ற பெயரில் கைதுசெய்யப்பட்டபோதும் அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளோ அவர்கள் அனைவர் மீதும் பயத்தை உருவாக்கும் நோக்குடனே நடத்தப்பட்டிருந்தது.

அப்படி கைதுசெய்யப்பட்டவர்களில் ஒரு தொகுதியினர் ஏற்கனவே இராணுவ புலனாய்வுத்துறைக்காக வேலை செய்துகொண்டிருந்தவர்கள் என்பதைவிட வேலை செய்ய வைக்கப்பட்டவர்கள் என்பது பொருத்தமானது.

இப்போது கனடாவிலிருந்து கட்டுக்கதைகளை உருவாக்கி எழுதுவதில் வல்லவரும் தனது நெருங்கிய உறவினருமான டிபிஎஸ் ஜெயராஜ் ஊடாக தன்மீது கிளைமோர் தாக்குதல் நடத்தப்பட இருந்ததாகவும் அதில் தான் எப்படியோ தப்பிவிட்டதாகவும் இன்னொரு செய்தியை கசிய விட்டிருக்கின்றார் சுமந்திரன்.

சுமந்திரன் எப்படியான செய்தியை உருவாக்கி பரப்புகின்றார் என்பதனையும் அதன் பின்புலம் எவ்வளவு ஆபத்தானது என்பதையும் புரிந்துகொள்வதன் மூலமே தமிழர்கள் தமக்கு முன்னேயுள்ள ஆபத்துக்களை புரிந்துகொள்ளமுடியும்.

அவர் பரப்பிய அந்த செய்தி என்ன?

கிளிநொச்சியில் ஒருவரிடம் 5000 இலங்கை ருபாக்களை கொடுத்து தமிழீழக் கொடியை கடந்த மாவீரர் நாளில் ஏற்றுமாறு புலம்பெயர்ந்த நாடுகளில் இருந்த புலிகளால் சொல்லப்பட்டிருந்ததாம். அந்த காசை பெற்றுக்கொண்ட அந்நபர் அப்படியே அந்தக்கொடியை நவம்பர் 26 இரவு ஏற்றினாராம்.

அதன் பின்னர் ஒற்றைக் கையில்லாத ஒருவருடன் சேர்ந்து வந்த நபர் மிகமுக்கியமான தமிழ் அரசியல்வாதி ஒருவரை கிளைமோர் வைத்து கொல்லவேண்டும் என சொன்னார்களாம்.

அதற்கு அவர் அந்த கொல்லப்படவேண்டிய நபர் யாரென்று சொன்னால்தான் தான் அதனை செய்வேன் எனச் சொன்னாராம்.

அப்போது அவர்கள் அது சுமந்திரன் தான் எனச்சொன்னபோது அந்ந நல்ல மனுசனை கொல்லமுடியாது என்றும் சுமந்திரன்,மாவை,சம்பந்தன் போன்றவர்களே எமக்கு விடிவைப்பெற்றுத்தரப்போகின்றவர்கள் அவர்களை எப்படிக்கொலை செய்வது என பின்வாங்கி விட்டதோடு நில்லாமல் அதனை அவர் அப்படியே இராணுவ புலனாய்வுத்துறையிடம் சொல்லிவிட்டாராம்.

உண்மையாகவே சுமந்திரனை யோ அல்லது வேறு ஒரு அரசியல் தலைவரை கொலை செய்வதற்கு யாரேனும் திட்டமிட்டிருந்தால் அவர்கள் ஏன் அதனை சுமந்திரனுக்கு ஆதரவான நிலைப்பாட்டையுடைய ஒருவரிடம் அதனை கேட்கவேண்டும் ஏற்கனவே சுமந்திரனுக்கு எதிரான அரசியல் நிலைப்பாட்டையுடைய பலநூறு பேரில் ஒருவரை ஏன் அணுகவில்லை என்பதையும் அவர்கள் அணுகியபோது அந்த முன்னாள் போராளி ஐயோ அவர்தானே(சுமந்திரன்) எமக்கான தீர்வை செம்பந்தன் மாவை போன்றவர்களுடன் சேர்ந்து பெற்றுத்தரப்போகின்றவர்கள் என சொன்னதிலிருந்து டி.பி.எஸ் ஜெயராச்சின் கற்பனைத்திறன் புரிகிறது.

இதுதான் அந்தச்செய்தி.

இதன் தொடர்ச்சியாக மூன்று தடவைகள் கிளைமோர் வைக்கப்பட்டபோதும் சாதுரியமாக சுமந்திரன் தப்பிவிட்டார் என்றும் அப்படி கிளைமோர் வைத்தவர்களை படையினர் கைதுசெய்து விட்டார்கள் என்றும் அவர்கள் கைது செய்யப்பட்டபோது கேரளா கஞ்சா மீட்கப்பட்டதாகவும் அந்தச்செய்தி நீள்கின்றது.

இப்போது சுமந்திரன் என்ன சொல்கிறார் என்பதை பாருங்கள்.

“What seems to be clear now is that some misguided former LTTE cadres living in the Island are being exploited by certain overseas elements through cash incentives to engage in acts of violence on Sri Lankan soil. We can’t be sure at this time whether this is an individual act targeting me or whether it is part of a more comprehensive design to revive the LTTE again. I am confident that the security agencies will probe this further and arrive at definite conclusions very soon”

“வெளிநாட்டு சக்திகள் ஊடாக முன்னாள் விடுதலைப் போராளிகள் தவறாக பயன்படுத்தப்படுகின்றார்கள் என்பது தெளிவாக தெரிகின்றது. பணத்தை வழங்கி சிறிலங்கா மண்ணில் வன்முறையை தூண்ட வைக்கப்படுகின்றார்கள். இது ஒரு தனிப்பட்ட சம்பவமா அல்லது விடுதலைப்புலிகளை மீள உருவாக்குவதற்கான பிரமாண்டமான முழுமையான திட்டத்தின் ஒரு பகுதியா என்பதை எங்களால் சொல்லமுடியவில்லை. ஆனால் எமது பாதுகாப்பு படையினர் இதனை சரியாக விசாரணை செய்து முடிவை விரைவில் தெரிவிப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்குண்டு”.

இதன் மூலம் சுமந்திரன் சொல்லவருவது என்ன?

தமிழர்களின் போராட்டத்தை கொச்சைப்படுத்தியும் எமது போராளிகளின் எதிர்கால வாழ்வை சிதைப்பதிலும் சிறிலங்கா படைத்துறையோடு இணைந்துநிற்கும் சுமந்திரனின் இத்திட்டத்தின் நோக்கம் என்ன?

இப்போது சுமந்திரனுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு அவரது போக்குவரத்துக்கு சிறிலங்கா படைத்துறை உலங்குவானூர்தி வழங்கப்படவுள்ளது.

இதன்மூலம் புலிகள் இன்னமும் உள்ளார்கள் அவர்கள் வந்துவிடுவார்கள் எனவே எதிர்வரும் மார்ச் மாதத்திற்கு முன்னர் நிறைவேற்றப்படவேண்டிய பல விடயங்களை நிறைவேற்றமுடியவில்லை.
ஏனென்றால் தமிழர்களின் பிரதிநிதிகளுக்கு பாதுகாப்பு வழங்குவதற்கே எங்களுக்கு அதிகநேரம் தேவைப்டுகின்றது என சிறிலங்கா அரசு சொல்லப் போகின்றது.

இதுதானே அந்த செய்தி.

http://www.tamilkingdom.com

ஈழத்தமிழரின் நிகழ்காலம் !

கடந்தகாலக் கசப்பான வரலாற்றின் தொடர்ச்சியாக நிகழ்காலமாகிப் போன மீதி மீட்டலை 2009 வைகாசி 18 ஆம் நாளின் பின்னரான மணித்துளிகளிலிருந்து செய்யலாம் என்ற நோக்குடன் “ஈழத்தமிழரின் நிகழ்காலம்” எனத் தலைப்பிட்டு இவ்வாரப் பத்தியைத் தொடருவோம்.

போரியலையே வாழ்வியலாக்கி எமது விடுதலையை எமது கைகளாலேயே வென்றெடுப்போம் என்ற திடத்துடன் விடுதலைப் புலிகளின் தலைமையில் உறுதியுடன் போராடிய எம்மக்கள், கொத்துக் கொத்தாகக் கொல்லப்பட, எஞ்சியோர் உறவுகளை இழந்தும் அவயவங்களை இழந்தும் அரசியல் ஏதிலிகளாக ஒரு வெறிதான உளவியலுடன் முட்கம்பி வேலிக்குள் தமது மீளாத்துன்ப வாழ்வின் அடுத்த கட்டத்திற்குச் சென்ற மணித்துளிகளுடன் போரின் பிந்தைய காலம் தனது இருண்மையான பக்கங்களை வரலாற்றிற் பதிவு செய்யத் தொடங்கியது.

விடுதலையை வென்றெடுக்கும் இறுதிக் கணம் வரை சென்று விட்டதாக மட்டற்ற மகிழ்ச்சியில் மூழ்கித் திளைத்திருந்த எமது மக்கள், தமது விடுதலையை வென்றெடுக்கும் கடைசிப் போரை எதிர்கொண்டு தமிழீழம் அமைக்கப் போகும் ஒரு வித வீரப் பெருமிதத்துடன் தம்மை அணியணியாக்கி நில மீட்புப்போரிற்காக கடும் பயிற்சி பெற்றுக் காத்திருந்து எதிர்கொண்ட நான்காம் கட்ட ஈழப்போரானது தம்மை அழித்தொழிக்கும் இனப்படுகொலையின் உச்சமாகப் போய் ஈற்றில் எல்லாமுமாகி ஆத்மார்த்தமாகத் தமிழர் நெஞ்சில் நிறைந்திருந்த தலைமையும் இல்லாமல், நாதியற்று நட்டாற்றில் விடப்பட்டு அவல வாழ்வின் அடுத்த கட்டத்திற்குள் இன்னொரு வடிவிலான ஒடுக்கலிற்கு உள்ளாக்கப்படுவதான அவலச் சூழலிற்குள் தள்ளிவிடப்படப்போகின்றோமென்று சிறிதும் நினைத்திராத எம்மக்கள், தேற்றுவாரின்றித் தவித்துவிடப்பட்டு, தமது காணாமற்போன உறவுகளைத் தேடும் வலி நிறைந்த அடுத்த படலத்தை ஆரம்பித்தார்கள்.

சிறிலங்கா அரச படைகளினதும் அதன் புலனாய்வு அமைப்புகளினதும் கழுகுக் கண்களிற்குள்ளும் அவர்களது தேடல்களிற்குள்ளும் சிக்கிய எமது மக்களும் போராளிகளும் சிறையிலடைக்கப்பட்டார்கள் அன்றேல் காணாமலாக்கப்பட்டார்கள். இந்நிலையில், சிறிலங்காவில் ஐ.நா செயற்படக் கூடிய செயற்பாட்டுவெளி இல்லை என்றும் நீதி மற்றும் விசாரணை தொடர்பான விடையங்களில் ஐ.நா வின் திட்டமிடலும் வழிகாட்டலும் தேவையென்றும் குறிப்பிட்டு, 2009 ஆம் ஆண்டு வைகாசி 26 ஆம் நாள் ஐ.நாவின் மாந்த உரிமை ஆணையர் நவிப்பிள்ளை சிறிலங்கா மீது பன்னாட்டு விசாரணை கோரினார். ஐ.நாவின் சட்ட விதி 99 இன் படி, சிறிலங்கா மீது பன்னாட்டு விசாரணைக்கு செயலுறுத்தும் பணிநிலை வலு ஐ.நாவின் பொதுச் செயலாளர் பன்கி மூனுக்கு இருந்தும், 2009 ஆடி மாதம் 30 ஆம் நாள் ஐ.நா தலைமை அலுவலகத்தில் கூடிய கூட்டத்தில் பன்னாட்டு விசாரணையை அவர் முற்றிலுமாக மறுதலித்துக் கருத்தினைப் பதிவு செய்தமை, நவிப்பிள்ளை தலைமை வகித்த ஐ.நாவின் மாந்த உரிமை ஆணையகம் ஒரு செயலுறுத்தும் வலுவற்ற ஒரு கண்துடைப்புக் கட்டமைப்பு என்பதை மறைமுகமாகத் தமிழரிற்கு உணர்த்தியது. அத்துடன் நிறுத்திக்கொள்ளாமல், உள்நாட்டு விசாரணைக் கட்டமைப்பை ஏற்படுத்துவதற்குத் தேவையான அரசியல் வெளியை சிறிலங்கா அரசிற்கு வழங்க வேண்டும் என்று கூறி, இனப்படுகொலையாளியான சிறிலங்கா அரசை அதன் தமிழர் மீதான இனச்சுத்திகரிப்பைச் செய்து முடிப்பதற்குக் கால இடைவெளியை வழங்க முனைந்தார் பான்கி மூன் என்ற அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அடிவருடியும் இனப்படுகொலைப் பங்காளியான இந்திய இராணுவத்தினைச் சேர்ந்தவனது மாமனாருமாகிய பன்கி மூன்.

இந்தச் சூழமைவில், மீள் குடியேற்றம் என்ற போர்வையில் அங்கொன்று இங்கொன்றாக எந்த அடிப்படை வசதியுமில்லாமல் கண்துடைப்பு மீள் குடியேற்றம் செய்தவாறே திட்டமிட்ட அரச ஒத்துழைப்புடனான சிங்களக் குடியேற்றங்களையும் தமிழர் தாயக நிலப்பரப்பில் செய்து வந்தார் இனப்படுகொலை அரசின் தலைவராயிருந்த மகிந்த ராஜபக்ச. போரின் மூலம் தமிழரை இனப்படுகொலை செய்து அழித்த சிங்கள வெறிபிடித்த வெற்றி மனோநிலையில் நின்றுகொண்டு சிங்களதேசத்தின் போற்றுதலுக்குரியவராகி நின்ற மகிந்த 2010 ஆம் ஆண்டு தை 10 ஆம் நாள் நடைபெற்ற சனாதிபதித் தேர்தலில் வெற்றியீட்டித் தனது சிங்கள வெறியாட்டத்தைத் தொடர்ந்தவாறே, அதேயாண்டு சித்திரையில் 14 ஆவது பாராளுமன்றப் பொதுத் தேர்தலை நடாத்தி தான் தலைமை தாங்கிய ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிற்கு 144 பாராளுமன்ற இருக்கைகளைப் பெற்று 2/3 பெரும்பான்மைக்கு மிகச் சற்றுக் குறைவானதான பெருவெற்றியினை ஈட்டினார். இந்தத் தேர்தலில் அரசியல் வலுவின்றி பரிதவிக்கும் நிலையில் நின்ற தமிழினம், தமக்குக் கிடைக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் இன ஓர்மையை வெளிப்படுத்துவது போல, எந்தப் பேரம் பேசும் வலுவுமின்றி பல சவால்களை எதிர்கொண்டு தேர்தலில் குதித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு வாக்களித்து 14 பாராளுமன்ற இருக்கைகள் கிடைக்கச் செய்தது.

பொறுப்புக் கூறல் என்ற விடையத்தில் காலங்கடத்தலை ஏற்படுத்தவும் அந்தக் கால இடைவெளியில் தனது தமிழினம் மீதான இனச்சுத்திகரிப்பைச் செய்யவும் பன்னாட்டு ஒழுங்குகளிற்கேற்றாற் போல ஏமாற்று வேலை செய்யவும் உவப்பான சித்து விளையாட்டாக, கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவினை 2010 ஆம் ஆண்டு வைகாசி மாதம் மகிந்த ராஜபக்ச நிறுவினார். அவ்வேளையில், “மூவர் குழு” என்ற பெயரில் ஐ.நா அமைத்த நிபுணர் குழு 2011 ஆம் ஆண்டு பங்குனி மாதத்தில் வெளியிட்ட தனது அறிக்கையில், சிறிலங்கா அமைத்த கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் செயற்பாடுகள் நேர்மையற்றதாக இருப்பதனாலும் அதனால் சிறிலங்கா மீது பன்னாட்டு விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் பரிந்துரைத்தது. நிலைமை அப்படியாயிருக்க, குற்றவாளி தன்னைத்தானே விசாரித்துத் தண்டனை அளிக்கும் ஒரு கேலிக்கூத்தான பொறிமுறையைக் கூறும் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தனது கேலிக் கூத்தான அறிக்கையை 2011 ஆம் ஆண்டு இறுதியில் வெளியிட்டது. ஐ.நாவின் நடைமுறைகளின் படி அதனுடைய செயல்வீச்சு மட்டத்தில் பன்னாட்டு விசாரணை குறித்த விவாதங்கள் தொடர்ச்சியாக நடைபெற்றுக்கொண்டிருந்த சூழலில், கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் கேலிக்கிடமான அறிக்கையை அடிப்படையாகவும் சார்பாகவும் கொண்டு 2012 ஆம் ஆண்டு பங்குனியில் ஐ.நாவின் மாந்த உரிமைகள் ஆணையகத்தில் ஒரு தீர்மானத்தை இனப்படுகொலைப் பங்காளியில் ஒன்றான அமெரிக்கா முன்வைத்தது.

நிலைமை இவ்வாறிருக்க, மகிந்த ராஜபக்சவின் சிங்கள இனவெறிக் கொடுங்கோல் ஆட்சியில், எமது மண்ணில் எமது தமிழ் மக்கள் எந்தவொரு தீவிரமான அரசியலிலும் ஈடுபடுவதற்குச் சக்தியற்றவர்களாகவே இருந்தார்கள். அத்துடன் தங்கள் மத்தியில் ஒரு கட்டுறுதியான அரசியல் சமுதாயத்தை தமிழர்கள் கொண்டிருக்கவில்லை. இவ்வாறு, மகிந்த ராஜபக்சவின் இனவெறிக் கொடுங்கோலாட்சியின் உச்சத்தில், எமது தாயக மண்ணில் வாழும் மக்களின் குரல்கள் நசுக்கப்பட்டவாறு இருக்க, ஐ.நாவின் மாந்த உரிமை ஆணையகத்தின் வருடாந்த நிகழ்வு என்பது ஈழத்தமிழர்களின் விடியலிற்கான நிகழ்ச்சி நிரலின் ஓர் அங்கம் என்றாற் போல போலி விம்பம் எமது மக்களின் மனங்களில் புலம்பெயர் தமிழர்களில் பெரும்பான்மையினரது அரசியல் வறட்சியின் விளைவாக கட்டியமைக்கப்பட, அவர்களும் விடியலை நோக்கி வெளியாருக்குக் காத்திருக்கப் பழக்கப்பட்டார்கள். இந்நிலையில் 2013 ஆம் ஆண்டு பங்குனியில் மேலும் ஒரு தீர்மானத்தை அமெரிக்கா ஐ.நாவின் மாந்த உரிமை ஆணையகத்தில் முன்வைத்து, கற்றுக்கொண்ட ஆணைக்குழுவின் பரிந்துரைகளை (குற்றவாளி தானே தன்னை விசாரித்து வழங்கிய பரிந்துரைகள்) சிறிலங்கா நிறைவேற்றவில்லை என்று கூறி அறிக்கையளவில் போலியாகக் கடிந்ததோடு, சிறிலங்காவின் சீனச்சார்பு நிலை அதிகரிப்பதை மனதிற் கொண்டு, தனது இராசதந்திரிகள் மூலம் போர்க்குற்றங்கள் தொடர்பாகப் பன்னாட்டு நீதிமன்றில் பொறுப்புக் கூற வேண்டி வரலாம் என்று கூறி சிறிலங்காவிற்கு திரைமறைவில் அழுத்தம் கொடுத்து தனக்கேற்றாற் போல சிறிலங்கா அரசாங்கத்தை மாற்றும் வேலையில் முனைப்புடன் செயற்பட்டது. அவ்வேளையில், வடமாகாண சபைக்கான தேர்தல் 2013 ஆம் ஆண்டு புரட்டாதி 21 ஆம் நாள் நடைபெற்றது. தனது முழுவளத்தையும் குவித்து மகிந்த தலைமையிலான அரசு இந்தத் தேர்தலில் களம் இறங்கியும் மொத்தம் 38 இல் 30 இனை பெற்றுத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை வெற்றி பெறச் செய்து ஈழத்தமிழர் தமது ஒற்றுமையை மீண்டும் பறைசாற்றினர்.

விடயம் இவ்வாறிருக்க, 2013 ஆம் ஆண்டு இறுதியில் ஜேர்மன் டப்ளினில் நடந்த நிரந்தர மக்கள் தீர்ப்பாயமானது சிறிலங்காவில் நடைபெற்றது தமிழர்களின் மீதான இனப்படுகொலை எனவும், தனிநாடு கோரிய வாக்கெடுப்புத் தமிழர்களின் மத்தியில் நடத்த வேண்டும் என்றும் தீர்மானம் இயற்றியது. அதுவரையில் இனப்படுகொலை என்ற சொல்லை முற்றாக மறுதலித்து இறுதிப் போரில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் இருதரப்பாலும் இழைக்கப்பட்ட மாந்த உரிமை மீறல்கள் என்றளவில் பொருட்செறிவைக் குன்றித்துத் தீர்மானங்களை முன்வைத்து வந்த அமெரிக்கா, 2014 ஆம் ஆண்டு பங்குனி மாதம் கொண்டு வந்த தீர்மானத்தில், சிறிலங்காவில் இந்துக்கள், இசுலாமியர்கள், கிருத்தவர்கள் எனும் மதச் சிறுபான்மையினர் மீதும் வன்முறைகள் நிகழ்த்தப்படுவதாகப் பொத்தம் பொதுவாகச் சொல்லி சிறிலங்கா மீதான குற்றச்சாட்டுகளை மடைமாற்றம் செய்து நீர்த்துப்போகச் செய்தது. இருந்தபோதும், 2014 ஆம் ஆண்டு ஆவணி மாதத்துடன் தனது பதவியிலிருந்து நவிப்பிள்ளை விடைபெற்றுச் செல்லும் போதும் தான் தலைமை வகித்த செயலுறுத்தும் வலுவற்ற ஐ.நாவின் பொம்மை அமைப்பான ஐநா.மாந்த உரிமைகள் ஆணையத்தின் சார்பாக சிறிலங்காவின் மீதான பன்னாட்டு விசாரணையை வலியுறுத்திக் கோரினார். மேலும், 2014 ஆம் ஆண்டு அமெரிக்கா தீர்மானம் கொண்டு வருவதற்கு முன்பாக அமெரிக்காவின் உள்த்துறை அமைச்சகத்தின் துணைச் செயலாளரான நிசா பிஸ்வால் 2014 ஆம் ஆண்டு மாசி மாதம் வெளியிட்ட அறிக்கையில் அமெரிக்கா சிறிலங்காவுடனான நட்பின் அடிப்படையிலேயே சிறிலங்கா மீதான தீர்மானத்தை முன்வைக்கப் போவதாகச் சொல்லித் தமிழர்களின் வெளியாருக்காகக் காத்திருக்கும் அரசியல் வறட்சிக்கு ஒரு குட்டுக் குட்டினார். அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை ஐ.நாவின் தீர்மானம் என்று பொருட்படுத்தி சிற்றின்பம் கண்ட எமது மக்களின் பன்னாடுகள் தொடர்பான அரசியல் வறட்சிக்கு முன்னால் நிசா பிஸ்வால் குட்டிய குட்டும் உணரப்படவில்லை.

தமிழ் மக்களின் தேசிய இனச்சிக்கலை, தேசிய இனமொன்றின் மீதான இன ஒடுக்கல்களாகவும், அதற்கெதிரான போராட்டங்களை தன்னாட்சி அடிப்படையிலான ஒரு தீர்வுக்கான போராட்டமாகவும் கருதப்படுவதற்கு மாறாக மாந்த இனச் சிக்கல்களாகவும், அகதிகள் சிக்கல்களாகவும் எல்லோரிடமும் கருணையை எதிர்பார்த்துக் கையேந்தி நிற்கின்ற ஒரு சமூகத்தின் மீதான கழிவிரக்கமாகவும் குறுக்குகின்ற அரசியல் வறட்சியில் ஈழத்தமிழரின் தமிழ்த் தேசிய அரசியல் தத்தளித்தவாறு அடிப்படையற்ற காத்திருப்புக்களுடன் காலம் போக்கியது.

இந்நிலையில், 2015 ஆம் ஆண்டு தை மாதம் சனாதிபதித் தேர்தல் நடபெற்றது. மகிந்தவிற்குப் போட்டியாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையிலான எதிர்க்கட்சிகளின் கூட்டமைப்பிற்கு மைத்திரி தலைமை தாங்கினார். தெற்காசியப் பிராந்தியத்தில் தனது வர்த்தக நலனை மேம்படுத்த வேண்டும் என்பதற்காக, தமிழினத்தின் விடுதலைப் போராட்டத்தை முற்றுமுழுதாக சிதைக்கும் நோக்கில் தமிழரை இனப்படுகொலைக்குட்படுத்திய இந்தியாவும் மேற்குலகமும், சிறிலங்காக் கடற்பரப்பில் சீனாவின் நீர்மூழ்கிக் கப்பல்கள் வருகை தந்தைமையினை தமக்கான அச்சுறுத்தலாகக் கருதி மகிந்தவை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என்று முடிவெடுத்துச் செயலாற்றியது. இதனால், மைத்திரியின் வெற்றிக்கு இந்தியாவுடன் சேர்ந்து மேற்குலகமானது முழு ஒத்தாசையையும் ஆலோசனையையும் வழங்கியது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பனது, மகிந்தவின் சிங்கள வெறிக் கொடுங்கோலாட்சியை அகற்றுவதன் மூலம், தமிழர் சிறிதளவு மூச்சுவிடவேனும் தகுந்த அரசியல் வெளியை ஏற்படுத்தும் நோக்குடனும் மேற்குலகத்தின் கட்டளைப் பாங்கிலான வலியுறுத்தலின் விளைவாகவும், நிபந்தனையின்றி மைத்திரிக்கு ஆதரவு தெரிவித்தது. விளைவாக, மைத்திரிபால சிறிசேன சிறிலங்காவின் சனாதிபதியானார். தனக்குச் சார்பானவரை ஆட்சிக்கட்டிலில் இருத்திவிட்ட மேற்குலகம், புதிய சனாதிபதியான மைத்திரிக்குப் பாராட்டுத் தெரிவித்ததோடு, அவருக்கு உதவும் படியாக 2015 ஆம் ஆண்டு பங்குனி மாதம் கொண்டு வர இருந்த உப்புச் சப்பற்ற கண்துடைப்புத் தீர்மானத்தைக் கூட, புரட்டாதிக்குத் தள்ளிப்போட்டது. இந்நிலையில், 2015 ஆம் ஆண்டு ஆவணி மாதம் 17 ஆம் நாள் பாராளுமன்றப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இதில் மைத்திரி தலைமையிலான நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி அரசு 106 இருக்கைகளைப் பெற்று ஆட்சியமைக்கத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது, சமூக வலைத் தளங்களில் அரசியல் வறட்சியின் உச்சத்திலிருப்போரால் மேற்கொள்ளப்ப்பட்ட எதிர்ப்பிரச்சார நடவடிக்கைகளிற்கும் மத்தியில் 16 இருக்கைகளைப் பெற்று (2010 பெற்ற இருக்கைகளிலும் இரண்டு இருக்கைகள் அதிகம்) சிங்கள வெறி கொண்ட பாராளுமன்ற உறுப்பினர்களின் எதிர்ப்பையும் தாண்டி எதிர்க்கட்சியாகத் தெரிவாகி, நல்லாட்சி அரசு என்று தங்களைத் தாங்களே சொல்லிக்கொள்ளும் அரசிற்கு வெளியிலிருந்து ஆதரவழிக்கும் நிலையை எடுத்தது.

ஈழத்தமிழர்கள் தமது தாயகத்தில் தமது விடுதலைக்காக முப்பது ஆண்டுகளிற்கு மேலாகப் போராடிய தலைமையை இழந்ததன் விளைவாக, எந்தவொரு தீவிரமான அரசியலிலும் ஈடுபடுவதற்குச் சக்தியற்றவர்களாக இருந்தமையாலும், தொடர்ந்து வந்த மகிந்தவின் வெளிப்படையான சிங்களக் கொடுங்கோலாட்சியில் தம்மை ஒரு கட்டுறுதியான அரசியல் சமுதாயமாகக் கட்டியமைக்க முடியாமையாலும் ஏற்பட்ட வலுவற்ற அரசியல் சூழலில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அழுத்தங்களிற்கு ஈடுகொடுக்க முடியாமல் வளைந்து கொடுக்க வேண்டிய இயலாத்தன்மையை இராசதந்திரம் என்ற வார்த்தை விளையாட்டில் மறைக்க முனைவது வருத்தத்திற்குரியதே. இருப்பினும், தமிழ்மக்கள் தமது நெஞ்சார்ந்த அரசியல் வாஞ்சைகளை வெளியே எடுத்துச் சொல்ல விரும்புகிறார்கள். இதற்கு சாத்தியப்பாடான வழிவகைகளைத் தேடுகின்றார்கள். தங்கள் மத்தியில் செயற்திறனுடைய தியாக உணர்வுடன் கூடிய அரசியற் சக்தி இல்லை என்பது அவர்களுக்குத் தெளிவாகின்றது. அது உடனடியாக உருவாகும் என்றும் அவர்கள் நம்புமளவில் அவர்கள் கட்புலனாகும் படி எதுவும் நடந்தேறுவதாக அவர்களுக்குத் தோன்றவில்லை. எனினும் தமிழின ஓர்மையைக் காட்டுவதற்கும், தமது அரசியல் வாஞ்சையை வெளியில் எடுத்துச் சொல்லவும் தற்போது சிறிலங்காவில் இருக்கும் சூழ்நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே பொருத்தமானது என்று அவர்கள் திடமாக நம்புகின்றார்கள். இந்த விடயத்தையே, தமிழ் மக்கள் தமக்குக் கிடைக்கும் எல்லா வாக்களிக்கும் வாய்ப்புகளிலும் சொல்ல முனைகின்றார்கள்.

பின்னர் 2015 ஆம் ஆண்டு புரட்டாதிக்குத் தள்ளிப்போடப்பட்ட அமெரிக்கத் தீர்மானமானது, சிறிலங்கா அரச படைகளும் விடுதலைப் புலிகளும் இழைத்த மாந்த உரிமை மீறல்களை, சிறிலங்கா நீதித்துறையின் மேற்பார்வையில் வெளிநாட்டு நீதவான்கள் அடங்கிய குழு விசாரிக்கலாம் என்று கூறிச் சப்பைக்கட்டுக் கட்டிச் சிறிலங்கா மீதான பன்னாட்டு விசாரணைக்குக் குடமுழுக்குப் போட்டது. தீர்மானம் பரிந்துரைப்பதற்கமைய சிறிலங்கா அரசு தேசிய விசாரணையை நடத்தும் என்று கூறிய சிறிலங்கா அரசு, தானே கையொப்பமிட்டுத் தீர்மானத்தை ஏற்றுக்கொண்டது. ஈழத் தமிழர்களுக்கு பன்னாட்டு விசாரணைகள் மீது நம்பிக்கையை ஏற்படுத்தி, அவர்களைப் பகடைக் காயாக்கி, அவர்கள் மீதான ஒடுக்கல்களைத் தமக்குத் தேவையான ஆட்சியாளரை ஆட்சிக்கட்டிலிற்குக் கொண்டுவருவதற்குத் தேவையான அழுத்தமாகப் பயன்படுத்தி, அது நிறைவேறியவுடன், ஈழத்தமிழர்களிற்கு நல்லிணக்கம் பற்றி வகுப்பெடுத்து, சிங்களவருடன் இணைந்து நல்லிணக்கமாக வாழும் படி அறிவுரை சொல்லிவிட்டுப் போகும் இந்திய மேற்குலகக் கூட்டுச் சதிவலையில் மீண்டும் மீண்டும் சிக்கிச் சின்னாபின்னமாகச் சீரழிந்துபோவதான அவலமே ஈழத் தமிழரின் நிகழ்கால அரசியல் வறட்சியின் உச்சமாக இருக்கின்றது.

தமிழரிற்கான அரசியற் தீர்வைக் கொடுக்காமல், காலங்கடத்தி, கிடைக்கின்ற அந்தக் கால இடைவெளியில் சத்தஞ் சந்தடியின்றித் தமிழினம் மீதான தமது கட்டங் கட்டமான இனவழிப்பை முனைப்புடன் முன்னெடுக்கும் உத்தியாக நல்லிணக்க வேசமிட்ட மைத்திரிபால சிறிசேன தலைமையிலான சிறிலங்கா அரசு, அரசியலமைப்பு சீர்திருத்தம் என்று இன்னொரு மாயமானை ஈழத் தமிழரிற்குக் காட்டுகின்றது. ஈழத்தமிழரை மடையராக்கும் மைத்திரி தலைமையிலான சிங்களச் சூழ்ச்சியின் வெற்றிகரமான இரண்டாவது வருட நிறைவிற்கு இன்னும் சில நாட்களே இருக்கின்றன.

இந்த அவதியான காலகட்டத்திலும், தமிழ்த் தேசியத்தை முனைப்புறுத்துவதாக நினைத்துக்கொண்டு, குறைப்பிரசவ அரசியலே தமிழ்மக்கள் மத்தியில் மீண்டும் மீண்டும் செய்யப்படுகின்றதுடன் பொது எதிரியை மறந்து காழ்ப்புணர்வின் பாற்பட்டு இன ஓர்மையைக் குலைக்கும் முதிர்ச்சியற்ற கருத்துருவாக்கங்களே பொறுப்பற்ற ஊடகங்களாலும் அரசியற் சிந்தனை வறட்சியுடன் சமூக வலைத்தளங்களில் அரசியற் பதிவிடுவோர்களாலும் செய்யப்பட்டுக்கொண்டிருக்கும் வலி நிறைந்த காலப்பகுதியாக ஈழத்தமிழர்களின் நிகழ்காலம் இருப்பது இன்று எம்மினம் முகங்கொடுக்கும் மிகப் பெரிய சவால்களில் முதன்மையாகிவிட்டது.

தமிழர்களின் தாயக நிலப்பரப்புக்கள் தொடர் இராணுவமயமாக்கலுக்குள்ளாவதுடன், சிங்களக் குடியேற்றம், கட்டங்கட்டமான இனவழிப்பு, இன விகிதாசாரத்தை மாற்றுதல், போராட்ட சிந்தையற்ற சமூகத்தை உருவாக்கல் என்றவாறு ஈழத்தமிழர்களின் நிகழ்காலம் இருண்மையாக இருக்கின்றது. தமிழின மீட்புப்போரில் பங்காளிகளாகி நின்ற எமது மக்களும் போராளிகளும் சகலதையும் இழந்து மீண்டெழ முடியாத அவலநிலைக்குள் சிக்கித் தவிக்கும் இந்த நிகழ்காலச் சூழலில், உரிய பொருண்மிய மற்றும் சமூகக் கட்டமைப்புகளை கட்டுறுதியுடன் கட்டியெழுப்பி அடுத்த கட்டத்திற்கு எமது இனம் எமது மண்ணில் இயங்காற்றலைப் பெற முன்னெடுத்திருக்க வேண்டிய வேலைகள் இன்னும் உரியவாறு முன்னெடுக்கப்படாமலே நீளும் இந்த நிகழ்காலம் இன்னும் இப்படியே நீடிக்காமல் இருக்க மக்கள் திரள் தனது தோள்களின் மீது ஏற்றுச் சுமந்து முன்செல்ல வேண்டிய பணிகளை ஒருங்கமைத்து வழிகாட்ட வல்லதொரு போராட்டத் தலைமை வராதா என்ற ஏக்கமே நிகழ்காலத்தின் இந்தக் கணங்களில் தமிழ்த் தேசிய ஆன்மாவைக் குடைந்தெடுத்துக் கொண்டிருக்கின்றது.

ஈழத்தமிழரின் கனதியான கடந்த காலத்தின் மிகத் தெளிந்த பக்குவமான பாடத்தை மீட்டிப் பார்த்து, அதன் தொடர்ச்சியாக நிகழ்கால நிகழ்வுகளை இப்பத்தியில் பகுப்பாய்ந்தமையுடன் கிடைத்த தெளிவின் பாற்பட்டு, ஈழத்தமிழரின் எதிர்காலம் குறித்த வரலாற்றினையாவது எமக்கானதாக்க என்ன செய்ய வேண்டும் என்ற வினாவுடன் அடுத்த வாரப்பத்தியைத் தொடருவோமாக.

தம்பியன் தமிழீழம்

2017.01.07

http://www.kaakam.com/

காவல்துறை இந்திய அரசின் ஏவல் நாய் !

பொலிஸ் மக்களின் நண்பன் அல்ல. அது எப்போதும் அரசின் ஏவல் நாய்!

அமைதியாக போராடிக்கொண்டிருந்த மாணவர்கள் மீது தமிழக அரசு பொலிஸ் அடக்குமுறையை ஏவியுள்ளது.

மாணவர்களுக்கு உணவு கொடுக்க முயன்ற மீனவ பெண்கள் மீது பொலிஸ் இரக்கமின்றி தடியடி நடத்தியுள்ளது.

போராடும் மாணவர்களை கலைக்கக்கூடாது என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தும் மாணவர்கள் பலாத்காரமாக அப்புறப்படுத்தப்படுகின்றனர்.

இதுவரை போராடுபவர்களை மாணவர்கள் என்று அழைத்தவர்கள் இப்போது அவர்களை கலகக்காரர்கள் என்று முத்திரை குத்துகின்றனர்.

பல இளைஞர்கள் கைது செய்யப்பட்டு சித்திரவதை செய்யப்படுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

கைது செய்யப்ட்ட இளைஞர்கள் மீது வேண்டுமென்றே பொலிசாரால் பொய் வழக்குகள் போடப்படுகின்றன.

உலகம் முழுவதும் தமிழர் திரண்டு ஆதரவு தெரிவித்த போராட்டம் பொலிசாரின் அராஜகத்தால் அடக்க முயற்சிக்கப்படுகிறது.

பொலிஸ் மக்களின் நண்பன் இல்லை. அது அரசின் ஏவல் நாய் என்பது மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்படுகிறது.

**
எதுக்கு “சமூகவிரோதி” “பயங்கரவாதி” ன்னு சொல்லிக்கிட்டு பேசாமா தமிழ்நாட்டை தனியா பிரிச்சு விட்டுடுங்களேன்!

பிரதமரை விமர்சித்தவர்கள் “சமூகவிரோதிகள்” என்று பா.ஜ.க வைச் சேர்ந்த நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

அமைதி வழியில் போராடிய மாணவர்களை “பயங்கரவாதிகள்” என்று அமைச்சர் ராதாகிருஸ்ணன் கூறியுள்ளார்.

கடந்த ஆட்சிக் காலத்தில் மன்மோகன்சிங் பிரதமராக இருந்தார். அவரை மோடி முதல் அனைத்து பா.ஜ.க வினரும் அப்போது விமர்சித்திருந்தனர்.

ஆனால் அப்போது பிரதமர் மன்மோகன்சிங் இவர்களை சமூகவிரோதிகள் என்று கூறவில்லை.

ஏனெனில் இந்தியா ஒரு ஜனநாயக நாடு. இங்கு சட்டத்திற்கு முன் அனைவரும் சமம். யாரையும் யாரும் விமர்சிக்க முடியும். யாரும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்கள் இல்லை.

ஆனால் அன்று பிரதமர் மன்மோகன் சிங்கை விமர்சித்தவர்கள் இன்று மோடியை விமர்சிப்பவர்களை பார்த்து சமூகவிரோதிகள் என்கின்றனர்.

உலகின் மிகப் பெரிய சர்வாதிகாரிகள் என்று அழைக்கப்பட்ட கிட்லர் முசோலினி கூட தம்மை விமர்சிப்பவர்களை சமூக விரோதிகள் என்று கூறியதில்லை.

அதுமட்டுமல்ல டில்லியில் இருந்துகொண்டு 8 கோடி தமிழர்களையும் பொறுக்கி என்று சுப்பிரமணியசுவாமி கூறுகிறார்.

அவர் மீது எந்த நடவடிக்கையும் இல்லை. அதுமட்டுமல்ல அவருக்கு தமிழ் மக்களின் வரிப் பணத்தில் பாதுகாப்பு வேறு வழங்கப்படுகிறது.

இப்பொது சமூகவிரோதிகள் என்பார்கள். அப்புறம் விமர்சிப்வர்களை பாகிஸ்தான் போகும்படி கூறுவார்கள்.

எதற்கு இந்த சிரமம். பேசாமல் தமிழ்நாட்டை தனியாக பிரித்து விடுங்களேன்!

**

பலே பன்னீர்! இன்னும் நிறைய உங்ககிட்டேயிருந்து எதிர்பார்க்கிறோம்!

வாழ்நாள் பூராவும் “அம்மா” “சின்னம்மமா” என்று விழுந்து கும்பிட்டுக் கிடக்கும் உங்களுக்கு மாணவர்களின் எழுச்சியை புரிந்துகொள்வது கடினம்தான்.

அதனால்தான் மக்களை தாக்கிய பொலிசாருக்கு நிவாரணமும் தாக்கப்பட்ட மக்கள் மீது வழக்கும் போடுகிறீர்கள்.

உங்கள் பதவியை காப்பாற்றுவதற்காக, மோடி யை திருப்திபடுத்துவதற்காக அமைதி வழியில் போராடிய மாணவர்களை பின்லேடன் படம் பிடித்து போராடிய பயங்கரவாதிகள் என்று கூறியுள்ளீர்கள்.

கும்பிட கும்பிட அடிப்பவன் பயங்கரவாதியா? கும்பிட்டு கும்பிட்டு அடிவாங்குபவன் பயங்கரவாதியா?

பெண்களை அடிப்பவன் பயங்கரவாதியா? பெண்களை காப்பவன் பயங்கரவாதியா?

சொல்லுங்கள். உங்கள் பதவி நாட்கள் எண்ணப்படுகின்றன. அதற்குள் இன்னும் என்னென்ன சொல்ல முடியுமோ தாராளமாக சொல்லுங்கள்.

டில்லியில் இருந்துகொண்டு எட்டுகோடி தமிரையும் “பொறுக்கி” என்று சுப்பிரமணியசுவாமி சொல்கிறான். அவன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க துப்பில்லை.

ஆனால் போராடிய மாணவர்களை பயங்கரவாதிகள் என்கிறீர்களே. அவர்கள் மீது வழக்கு போடுகிறீர்கள். வெட்கமாய் இல்லை?

முடிந்தால் தாக்கிய பொலிசார்மீது வழக்கு பதிவு செய்யுங்கள். தாக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குங்கள். கைது செய்யப்பட்டுள்ள 300 பேரையும் விடுதலை செய்யுங்கள்.

இல்லையேல் பதவியை ராஜினாமா செய்துவிட்டு போய் ஊரில் ஓய்வு எடுங்கள். ஆனால் மோடியை நம்பி தமிழ் மக்களுக்கு துரோகம் செய்யாதீர்கள்.

Balan tholar

சீமானின் பேச்சு ஒரு பல்கலைக்கழகம் !

சீமானின் பேச்சு, 100 தலைமுறை கடந்து பிறக்கும் தமிழ் பிள்ளைக்கும் தான் யார் என்பதைச் சொல்லும்!

சீமான் மீது வழக்கு….
அது முடிந்து போய்விடும்…
ஒரு வேளை தண்டனை எதாவது கிடைத்தால்
அதுவும் தீர்ந்து போய்விடும்….
சீமான் மரணத்தோடு
அவர் வாழ்வும் முடிந்து போய்விடும்!

ஆனால்,

அறிவு மறுக்கப்பட்டு, பாமரனாய், அடிமைகளாய், துன்பச்சேற்றில் உழல்கிற மக்கள் தொகுதியை நோக்கி விடுதலைக்கான பாதையை சுட்டிக்காட்டிப் பேசுகிற சமகால கலகக்காரன் ஒருவனின் சீற்றமிகு போர்ப்பரணியாய் ஒலித்திருக்கிற அந்தப் பேச்சு லட்சம் ஆண்டுகள் ஆனாலும் வாழும்….

இன்னும் 100 தலைமுறை கடந்து பிறக்கும் தமிழ் பிள்ளைக்கும் தான் யார் என்பதைச் சொல்லும்!

தன் முன்னோர்கள் எப்படியெல்லாம் அடிமைப்பட்டுக் கிடந்தார்கள்…. அவர்களை அடிமை செய்தவன் யார்….
அவர்களை அடிமை செய்ய அவன் பயன்படுத்திய கருவி எது என்பதையெல்லாம் ஒரு பல்கலைக்கழகம் போல் நின்று இந்தப் பேச்சு சொல்லிக்கொடுக்கும்!

ஆயிரம் வழக்குகள் போடலாம்…. மேடைகள் போட்டு ஒப்பாரி வைக்கலாம்…. உங்கள் அதிகார பலம் கொண்டு அவனைக் கொன்று கூட போடலாம்…. ஆனால், அந்தக் கலகக்காரனின் நேர்மையான சிந்தனையிலிருந்து உதித்த கேள்விகளுக்கு ஒருகாலும் உங்களால் விடை சொல்ல முடியாது!

– கல்யாண சுந்தரம்

**
சீமான் யார்?
அவன் என்ன பேசுகிறான்?
என்ன என்ன செய்ய வேண்டும் என சொல்கிறான்?.

மரத்தின் அவசியத்தை பற்றி பேசுகிறான்!

மழையின் அவசியத்தைப் பற்றி பேசுகிறான்!

ஆற்று மணலின் அவசியத்தைப் பற்றி பேசுகிறான்!

நீர் மேலாண்மையை பற்றி பேசுகிறான்!

தூய காற்றின் அவசியத்தை பற்றி பேசுகிறான்!

விவசாயத்தின் அவசியத்தை பற்றி பேசுகிறான்!

எதிர்கால சந்ததியை பற்றி அக்கறை கொள்கிறான்!

நம் தலைமுறையோடு அழிந்துவிடுவது அல்ல இந்த பூமி என்கிறான்!

வெறும் ஆட்சி மாற்றத்தை மட்டும் மற்ற கட்சிகள் முன்னிறுத்தும் நிலையில் அடிப்படை மாற்றம் வேண்டும் என்கிறான்!

நாம் தமிழர் ஆட்சியின் செயல் திட்ட வரைவு.

■ மருத்துவம் அனைவருக்கும் இலவசம், ஆட்சியாளர்கள் கட்டாயம் அரசு மருத்துவமனைகளிலேயே சிகிச்சைபெற வேண்டும்.

■ அனைவருக்கும் பொதுவான கட்டணமில்லா தமிழ் வழிக்கல்வி.

■ அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் குழந்தைகள் கட்டாயம் அரசு பள்ளிகளிலேயே படிக்கவைக்க வேண்டும்.

■ ஆடுமாடு மேய்த்தல் மற்றும் விவசாயம் அரசு பணி… ஊதியம் குறைந்த பட்சம் 30000.

■ 4 மணி நேர செய்வழிக்கல்வி.. 4 மணி நேரம் தமிழரின் போர் வீர விளையாட்டு பயிற்சி.

■ மெக்காலே கல்வி முறை ஒழிப்பு.

■ இயற்கை விவசாயத்திற்கு மட்டுமே அனுமதி.

■ ஒவ்வொரு குடும்பங்களிலும் நாட்டு மாடு வளர்க்க ஆணை.

■ விவசாயம் சார்ந்த மரபு வழி தொழில்களுக்கு மட்டுமே அனுமதி.

■ பெருவணிக நிறுவனங்களுக்கு தடை.

■ தமிழில் படித்தால் மட்டுமே அரசு பணி.

■ அனைத்து வணிக நிறுவனங்களுக்கும் தமிழில் பெயர் வைத்தால் மட்டுமே மின் இணைப்பு வழங்கப்படும்.

■ 10 லட்சம் நீர் நிலைகள் உடனடியாக அமைக்கப்படும்.

■ சாலைகள் இரு பக்கங்களிலும் இயற்கையை பாதுகாக்கும் மரங்கள் நட்டப்படும்.

■ புதியதாக காடுகள் வளர்க்கப்படும்.

■ 1 கோடி பனைமரங்கள் முதற்கட்டமாக நடப்பட்டு பாதுகாக்கப்படும்.

■ தேசிய விளையாட்டாக சல்லிக்கட்டு அறிவிக்கப்படும்.

■ கோவில்களில் சமசுகிருதம் படித்தால் தேசத்துரோகம்.

■ அந்நியர்கள் தொழில் தொடங்க தடை.

■ விவசாய நிலங்கள் அனைத்தும் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவித்து அரசின் மேற்பார்வையில் இருக்கும்.

■ தூய சுத்திகரிக்கப்பட்ட வேதி பொருள் கலக்காத இலவச குடிநீர் அனைவருக்கும் ஒரே மாதிரியாக வழங்கப்படும்.

■ தண்ணீர் விற்கத்தடை.

■ கோக், பெப்சி போன்றவை கடைகளில் வைத்து விற்க தடை.

■ இளநீர், பதனி தேசிய பானமாக அறிவிக்கப்படும்.

■ கிராமங்களில் இருந்து குடிபெயர்வது தடுக்கப்படும்.

■ நகர் மயமாக்கல் தடுக்கப்படும்.

■ அனைத்து வசதிகளும் கிராமங்களுக்கும் கிடைக்கச் செய்யப்படும்.

■ அழிவுத் திட்டங்களுக்கு அனுமதி கிடையாது.

■ அணு உலைகள் முற்றாக மூடப்படும்.

■ பெண் வதைக்கு கடுமையான தண்டணைகள் வழங்கப்படும்.

■ வரதட்சணைக்கு தடை.

■ பூரண மதுவிலக்கு அமல்.

■ மீன் பிடித்தொழில் பாதுகாப்பு அமைச்சு அமைத்தல்.

■ எல்லை பாதுகாப்பு படை உருவாக்கம்.

■ மீனவர் பாதுகாப்பு படை.

■ மேலும் தமிழ் நாட்டின் அனைத்து பகுதியிலும் முப்பாட்டன் முருகன் கோவில் அமைக்கப்படும்.

■ திருக்குறள் தேசிய நூலாக அறிவிக்கப்படும்.

■ அழிந்துபோன தமிழர் கலைகள் அனைத்தும் மீட்டெடுத்து வளர்க்கப்படும்.

■ ஏறுதழுவுதல்/தொழூப்புகுத்தல் (ஜல்லிக்கட்டு) தேசியத்திருவிழாவாக அறிவித்து,7 நாட்கள் அரசு விடுமுறை அறிவித்து கொண்டாடப்படும்.

■ தைபூசத் திருவிழாவுக்கு அரசு பொது விடுமுறை அறிவிக்கப்படும்.

■ காவல் துறை பணி நேரம் 8 மணி நேரமாக குறைக்கப்படும், குறைந்த பட்ச ஊதியமாக, மாதம் 30000 ருபாய் வழங்கப்படும்.

■ கைய்யூட்டு வாங்கினால் உடனடியாக பணி நீக்கம் செய்யப்பட்டு சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும்.

■ கைய்யூட்டு வாங்குவது தேசத்துரோகமாக அறிவிக்கப்படும்.

■ பிற மாநிலங்களிடம் இழந்த பகுதிகளை மீட்க தனி அமைச்சகம் அமைக்கப்படும்.

💪சிறந்த தமிழகத்தை உருவாக்க நாம் தமிழர் கட்சியை ஆதரிப்போம்.

இந்த அறிக்கையில் உள்ள அறிவிப்புகள் அனைத்தும் நிறைவேற்ற முடிந்தவைதான் முடியாதது ஒன்றும் இல்லை.

-படித்ததில் பிடித்தது.

யார் இந்த ஈழத் தமிழன் -வரலாறு ! Part -01

முன்னாள் போராளிகளின் அவலநிலை -7 !

தமிழ் இனத்திற்காக தம்மை அர்ப்பணித்தவர்கள்..
அனைவராலும் கைவிடப்பட்ட நிலையில்…
வலி சுமந்தவர்கள், வாழ வழியின்றி வாடுகின்ற சோகம்.. என் இனமே என் சனமே..!!

நன்றி
IBC Tamil

நடுகுப்பத்தில் காவல் வெறி ! காணொளிகள்

அண்மையில் தமிழகத்தில் இடம்பெற்ற பண்பாட்டுப் புரட்சி பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. இதன்போது சென்னை மெரீனாக் கடற்கரையிலும் மிகப் பெரியளவில் மக்கள் திரண்டு போராட்டம் இடம்பெற்றது. லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு ஜல்லிக் கட்டுக்கான தடையை நீக்குமாறு தமது முழக்கத்தை வெளிப்படுத்தினர்.
வரலாறு காணாத இந்தப் போராட்டத்தால் ஒட்டுமொத்த தமிழகமும் ஸ்தம்பிதமடைந்தது. ஜல்லிகட்டு விடயத்தில் தமிழக அரசு மற்றும் இந்திய அரசு என்பன தமது முடிவுகளை மாற்றிக் கொள்ளும் அளவில் தமிழகமே திரண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை போராட்டத்தின் இறுதிநாள் போராட்டக் களத்தில் வன்முறை திணிக்கப்பட்டு, இதனை வன்முறைப் போராட்டமாக சித்திரிக்க முற்பட்டுள்ளதாக அனைத்து தமிழ்நாடு மாணவர் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. வன்முறையில் ஈடுபட்டது காவல்துறையினரே என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
இந்த நிலையில் சென்னைப் பல்கலைக்கழக இதழியல் மற்றும் தொடர்பியல் துறை நடுக்குப்பத்தில் காவல்வெறி என்ற ஆவணப்படத்தை வெளியிட்டுள்ளது. காவல்துறையினர் மேற்கொண்ட வன்முறைகளை இந்த ஆவணப்படம் துல்லியமாக பதிவு செய்துள்ளது.

காவல்துறையினர் வன்முறையை மேற்கொண்ட இடங்களின் காட்சிகள், வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்களின் மனக்குமுறல்கள், பொருளாதாரப் பாதிப்புக்கள், காவல்துறையினரின் கொடூரச் செயல்கள் என பலவற்றை இந்த ஆவணப்படம் மக்களின் குரலில் பதிவு செய்துள்ளது.

தமிழக காவல்துறையினர் போராட்டக் களத்தில் மேற்கொண்ட வன்முறை குறித்து இந்திய அளவிலும் சர்வதேச அளவிலும் விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் இந்த ஆவணப்படம் பாதிக்கப்பட்ட மக்களின் குரலாக உண்மையை எடுத்துரைக்கும் வித்தில் அமைந்துள்ளமை விசேட அம்சமாகும்.

நடுகுப்பத்தில் காவல் வெறி (Nadukuppam Police Violence) part-1

Up ↑