இந்திய அரசியலுடன் பின்னிப்பிணைந்ததே, எமது தாயக விடுதலைப்போராட்டமும்.!

இதன் தாக்கம் 2009 முள்ளிவாய்க்கால் வரை நீடித்தது. இதில் எம் சொந்த இனத்திலேயே, எமக்கு எதிரான கருத்தை தமிழ்நாட்டு தமிழர்களின் மனங்களில் விதைத்த பெருமை, தமிழ்நாட்டை ஆண்ட இரண்டு திராவிடக் கட்சிகளையே சாரும்.

இந்த இரண்டு காட்சிகளையும், கோடிக்கணக்கான தொண்டர்கள் பின்பற்றி நடந்தனர்/நடக்கின்றனர். இந்த இரு தலைவர்கள் சொல்லும் கருத்துக்களை, எந்தவிதப் பகுப்பாய்வும் செய்யாது, நம்பும் மந்த நிலையே இன்றும் தமிழ்நாட்டில் காணப்படுகின்றது.!

அம்மையாரோ அல்லது கலைஞர் கருணாநிதியோ, தமிழ்நாட்டுக்கான சேவையை விட, தங்களை செல்வந்தராக்குவதிலேயே நேரத்தை செலவிட்டனர். அவரவர் கட்சியை சார்ந்தவர்களும், தங்கள் பொருளாதாரத்தை மேம்படுத்துவதிலேயே குறியாக இருந்தனர். இதனால் தலைவர்களின் துரோகங்களுக்கு தெரிந்தே துணைபோயினர்.!

பணத்தை கொடுத்து ஓட்டை வாங்கும் கலாச்சாரத்தை, உருவாக்கிய பெருமையும் இவர்களையே சாரும். ஒருவருக்கு 500ரூபா வீதம் பல்லாயிரம் கோடி ஓட்டுக்காக செலவழிக்கப்படுகின்றது.

பணத்தை பெற்றமையால், அரசியல் வாதிகளின் ஊழல்களைத் தட்டிக்கேக்கும் உரிமையை தமிழ்மக்கள் இழந்து, அதற்குள் வாழத் தங்களைப் பழக்கப்படுத்தி விட்டார்கள். தங்களை அறியாமலே தங்களின் பிள்ளைகளின் எதிர்காலத்தில் மண்ணைப்போடுகின்றார்கள் தமிழர்கள்.!

இந்த பணத்தை, அரசியல்வாதிகள் மீண்டும் எப்படிப்பெறுவார்கள்? இவர்களிடமிருந்தே இவர்களுக்கு தெரியாமலே மீண்டும் திருடப்படும் என்பதை, யாரும் சிந்திப்பதில்லை, அல்லது சிந்திக்கும் தன்மையை இழந்த, ஒரு மந்தைக் கூட்டமாக, தமிழர்களை மாற்றிய பெருமையும் இவர்களையே சாரும்.!

அத்தோடு, திட்டமிட்ட சினிமா மோகத்தை விதைத்து, அந்த திரை நடிகர்களை, நிஜக் கதாநாயகர்களாகவும், திரைக்கதாநாயகிகளை, தேவலோக கனவுக்கு கன்னிகளாகவும், மனதில் பதிவுசெய்து, அதிலிருந்து மீளவே முடியாத ஒரு மன நோயாளிகளாக, மறைமுகமாக உருவாக்கி வைத்த பெருமையும், இந்த தலைமைகளையே சாரும்.!

ஒரு இனம் என்பது மொழியினாலேயே வகைப்படுத்தப்பட்ட வேண்டும். ஒன்றுபட்டிருந்த தமிழினத்தை,பல நூற்றாண்டுகளுக்கு முன் பிழைப்புத் தேடிவந்த “பலம் மிக்கவர்களால்” சாதியம் திணிக்கப்பட்டு,காலம் கடந்தும் திட்டமிட்டு அதை நம்பவைத்து, அதை மேம்பட்ட போதையாக்கி, தமிழினத்தை திட்டமிட்டு பிரித்து கையாண்டதும் இவர்களே.!

சந்ததி சந்ததியாக கடத்தப்பட்ட இந்த இந்த இழிநிலை, இவர்களது ஆட்சியில் இன்று வேர்விட்டு கிளைபரப்பி நிக்கின்றது.!

இப்படிப் பல காரணங்கள் அடிக்கிக் கொண்டே போகலாம்.!

இந்திராகாந்தியின் காலத்தில் ஒருவித கரிசனைப்போக்கில் இருந்த எமது ஆயுதப்போராட்டம், அவரின் மரணத்திற்கு பின்னர், இந்தியக் கொள்கை வகுப்பாளர்களால், பிழையாக வழிநடத்தப்பட்டு, தமிழர் தேசிய இனத்தின் விடுதலை சிதைக்கப்பட்டது.!

அது போலவே தான், ஜெயலலிதா ஆட்சியில் வந்தமர்ந்தபோது, புலிகள் பற்றியோ அல்லது எமது மக்களின் அபிலாசைகள் பற்றியோ, எந்தவித புரிதலோ அல்லது தெளிவான பார்வையோ இல்லாது இருந்தார்.!

அந்த நேரத்தில் அவரின் காலை சுற்றியிருந்த சோ,ஹிந்து ராம், மூப்பனார், சுப்பிரமணிய சுவாமி போன்றவர்களின் புலியெதிர்ப்பு விஷம், கொஞ்சம் கொஞ்சமாக அவருக்கு ஊட்டப்பட்டு, எமக்கு எதிரான நிலையை எடுத்தார்.!

எந்தவித வித தேடலும் இல்லாது, அம்மையாரின் தமிழர் விரோதப் போக்கிற்கு, அவர் மட்டுமே பொறுப்பு கூறமுடியும் என்பதை நான் பதிவு செய்கின்றேன்.!

ஒரு கட்டத்தில் சிங்கள அரசின் படுகொலைகளைக்கூட நியாயப்படுத்த அவர் முன் வந்தார். அந்த படுகொலைகளுக்கு அவர் கொடுத்த உவமைகள், ஈழத்தமிழர் நெஞ்சில் அறையப்பட்ட ஆணிகள்.!

2009க்கு பின் அவரது எம் மீதான கரிசனைகூட, உள அன்போடு இல்லாது, அரசியல் நோக்கம் கொண்டதாகவே இருந்துள்ளது என்பது எனது நம்பிக்கை.!

அதற்கு சிறந்த உதாரணம் இன்றுவரை “இலங்கை அகதிகள் என்ற அடையாளத்துடன், சிறப்புமுகாமில் அடைத்து வைத்திருக்கும் எமது மக்கள், இரண்டாவது தலைமுறை கடந்தும், எந்த விதக்குடியுரிமையும் இல்லாது, இலங்கை அகதியாகவே வாழ்க்கையை கழிக்கின்றனர்.!

இதற்கான முன்னெடுப்பை இரண்டு பெரும் கட்சிகளும்,மத்திய அரசின் ஊடாக செய்யவில்லை.!

இரண்டாவது, ராஜீவ்காந்தி மரணத்திற்கு கொலைக்குற்றம் சாட்டப்பட்ட, ஏழு பேர் விடுதலையில் எந்தவித கரிசனையும் காட்டாவில்லை.
அவர் நினைத்திருந்தால் என்றோ, இதை அவரால் சாதித்திருக்க முடியும். கிடைத்த சந்தர்ப்பங்களை திட்டமிட்டு நழுவவிட்டார்.!

இந்த நேரத்தில் தலைவரின் கூற்று ஒன்றை எடுத்துக்காட்ட விரும்புகின்றேன்.

“நாங்கள் பரிதாபத்துக்கு உரியவர்களாக அலைவதை நான் ஒரு போதும் விரும்பவில்லை” என்ற கூற்றை தான் நாங்கள் பின்பற்ற வேண்டும் என்பது எனது விருப்பம்.!

அம்மையாரோ அல்லது கலைஞரோ எமக்கு உதவவில்லை என்ற ஏக்கத்தில் இருந்து விடுபடுவோம்.!

எம் உரிமையை நாமே தான் மீட்க வேண்டும். நாம் இன்னொருவர் எமக்காக போராட வேண்டும் என்று எதிர்பாப்பது அவமானம். நாம் போராடுவோம் முடியாவிட்டால் அடுத்த சந்ததியிடம் கையளிப்போம்.!

அவர்களால் முடியாவிட்டால், அவர்கள் அடுத்த சந்ததியிடம் கையளிக்கட்டும். எத்தனை ஆண்டுகள் கடந்தாலும், நாமே நம் விடுதலையை வென்றாக வேண்டும். அந்த விடுதலையே உண்மையான சுதந்திரமாக இருக்கும்.!

இஸ்ரவேலரும் 2000வருடங்களுக்கு மேல் போராடியே தங்களுக்கான நாட்டை உருவாக்கினார்கள்.!

இரண்டு எதிர், எதிர் இனங்கள் நேரடியாகப் போராடும் போது, ஒருவரின் மரணத்தை, எதிர் இனம் இன்றுவரை கொண்டாடுகின்றது என்பதும் வரலாறு.!

நான் கூற விளைவது “எதிரியின் மரணத்தையும், துரோகியின் மரணத்தையும்” மட்டுமே. எமக்கு உதவாதவர்களின் மரணத்தை அல்ல.!

ஆரியர்களால் கொல்லப்பட்ட இராவணன்,நாகாசுரன் போன்ற தமிழர்களின் மரணத்தை இன்றுவரை திருநாளாக்கி கொண்டாடுகின்றனர். (இராவணன்,நாகாசுரன் யார் என்றே தெரியாது தமிழறையும் கொண்டாடவைத்தது, ஆரியத்தின் சாணக்கியம்) ஆக, சில மரணங்கள் எதிர் இனங்களால் கொண்டாப் படுகின்றதென்பது வரலாறு.!

ஈழப்போரின் போது எதிரியின் முக்கிய தலைவர்களின் மரணம் எம் மக்களை மகிழ்வித்தது. அதை எம் மக்கள் கொண்டாடினர். லக்ஷ்மன்கதிர்காமர் மரணத்தின் போது எம் மக்கள் உலகம் முழுவதும் இனிப்பு கொடுத்தே கொண்டாடினர். காரணம் ஒரு தமிழனாகப்பிறந்து தன் இனத்துக்கு செய்த துரோகத்தையும் அழிவையும் எம் மக்கள் மன்னிக்க தயாராக இருக்கவில்லை.!

இதில் வேடிக்கை என்னவென்றால், அம்மையார் முதல்வராக இருக்கும் போதும், அவரது காலே கதியென்று இருந்தவர்கள், குனிந்த முதுகு நிமிராமல் வாய்பொத்தி நின்ற அமைச்சர்கள், அவரது உடலுக்கு முன்னாலேயே சிரித்து பேசியபடி செல்பி எடுத்து தங்களது போலி விசுவாச முகத்திரையை வெளிக்காட்டினார்.

அதுவரை அம்மா அம்மா என்று மூச்சுக்கு முன்னூறுதடவை உச்சரித்து பேட்டி கொடுத்தவர்கள், இன்று “ஜெயலலிதா” என்றே விழித்து கருத்து பகிர்கின்றனர். ஆக,அவர்களே அந்த அம்மையாரை, உள் அன்புடன் நேசிக்கவில்லை.!

அன்பு என்பது ஏழுகடல் கடந்தாலும் நகக்கண் துன்பம் கண்டாலும், உள்ளம் கலங்குவதே ஆகும். ஆனால், கூட இருந்தவர்களே கும்மாளமிடும் நிலையிலேயே, அம்மையார் மீதான அன்பு வெளிப்பட்டுள்ளது.(அவருக்காக உண்மையாகவே கண்ணீர் சிந்திய தொண்டர்களை இதில் நான் சேர்க்கவில்லை.!

எமது தலைவரை, ஒருமுறையேனும் பார்க்காத எம் மக்கள், அவர்மீது அன்பு வைத்து, அவரை பூசிப்பது தான் உண்மையான அன்பின் வெளிப்பாடு.
அந்த அன்பை அவர் கேட்டு பெறவில்லை, அது தானாக மக்கள் மனங்களில் உருவான அன்பு.!

ஆக, இது தான் இந்த அரசியல் கட்சிகளின் இன்றைய உண்மை முகம்.!

அம்மையாருடன் இருந்தவர்கள் யாரும் உத்தமர்கள் இல்லை. அவர்கள் பெரும் வியாபாரிகள். சந்தர்ப்பத்துக்காக காத்திருக்கும் ஓநாய்கள்.!

இது தான் ஏனைய “தலைவர்களுக்கும்”அவர்களது மரணத்தி போதும் நடக்கும்.!

ஏனெனில் இந்த வியாபாரத்தை ஆரம்பித்தது இவர்களே.!

இன்று அதிமுக என்ற நிறுவனம், சசிகலா என்ற, மாபியா கும்பலின் கைகளில் வந்துவிட்டது. அதற்கு மோடி அரசின் ஆசிர்வாதமும் கிடைத்து விட்டது.!

அதனாலேயே, அம்மையார் தனிமைப்படுத்தப்பட்டு, இன்று அரசியல் அனாதையாக, சுற்றி இருந்தவர்களின் போலி மரியாதையுடன், ஏழைத்தொண்டனின் கண்ணீருடன், அவரது இறுதிப்பயணம் முடிந்தது.!

அம்மையாரின் மரணத்தை தொடந்து, சோவும் காலமானார். சோ ராமசாமியின் மரணமும் எம் மக்களுக்கு எந்த வருத்தத்தையும் கொடுத்திருக்காதென்றே நான் நம்புகின்றேன்.!

எம்மைப் பொறுத்தவரை கதிர்காமரும், சோவும் வேறு வேறல்ல. வாழ்நாள் முழுவதும் புலிகளையும், தமிழர் போராட்டத்தையும் வஞ்சம் கொண்டு விஷத்தை மட்டுமே விதைத்த சர்ப்பம்.

அவரது விஷக்கருத்தின் ஊடாக, அவர் பலமுறை நிறுவ முற்பட்ட ஒருவிடையம், “புலிகள் தமது பெண் போராளிகளை பாலியல் தேவைக்கு மட்டுமே” பயன்படுத்துகின்றனர் என்றபொய்யை விதைக்க முற்பட்டு தோற்றுப்போன விஷம்.

எமது எதிரியான சிங்களவன் கூட சொல்லத்துணியாத ஒரு உண்மைக்கு, புறம்பான குற்றச்சாட்டை விதைக்க முற்பட்டார். இவரது கருத்தை தான், சமீபத்தில் திமுக வின் MLA ஒருவரான சிவகாமி IAS என்னும் கழிசடை,விழுங்கி மீண்டும் நேர்காணலொன்றில் கக்கியிருந்தது.!

ஜெயலலிதா அம்மையாரின் மரண நிகழ்வும், அதன் போது அவரைச்சுற்றி நடந்தவையும், அவர் மேல் எனக்கு பரிதாபத்தையே இன்று உண்டாக்கியிருந்தது.
75நாட்கள் வைத்தியசாலையில் இருந்த போதும், யாரையும் பார்க்க அனுமதிக்காது, எந்த தகவலையும் வெளிவர விடாது, திட்டமிட்டு மறைத்து, 5ம்திகதி தங்கள் நாடகத்தை நிறைவு செய்தனர் சசிகலா கும்பல்.!

ஜெயலலிதா அம்மையாரின் மரணம் சம்பவித்த, நேரத்தில் ஏற்பட்ட குளறுபடிகளும், அவரது உடலில் உள்ள தடயங்களும், அவசர அவசரமாக 14மணித்தியாலத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டமையும், இப்படி பல ஆயிரம் சந்தேகங்களை மக்கள் மத்தியில் உண்டாக்கி உள்ளது.

ஆனால், இந்திய நடுவண் அரசோ அல்லது மாநில அரசோ மக்களின் சந்தேகங்களை என்றும் தீர்க்கப்போவதில்லை.!

அவர்களால் தீர்க்கவும் முடியாது.!

முதல்வர் ஜெ.ஜெயலலிதா அவர்கள் ஒரு ஆளுமை மிக்க பெண் தலைவராக தன்னை அடையாளப்படுத்தியவர்.!

முன்னாள் முதல்வர் MGR அவர்களின் மறைவின் பின், சிதறி இருந்த ஆதிமுக வை, மிக ஆளுமையுடன் தனி ஒரு பெண்ணாக எந்தவித அரசியல் பின்புலமும் இல்லாது ஒருங்கிணைத்தது,அவரது பெரும் சாதனை என்பதே எனது கருத்து.!

இதற்காகவே தான் நான் அவருக்கு தலை வணங்குகின்றேன்.!

மர்மமான ஆளுமை நிறைந்த பெண், தனது இறுதி நாட்களை மர்மமாகவே முடித்துக்கொண்டார்.!

இதில் நம்பியவர்கள் துரோகமும், நண்பர்களின்/நண்பிகளின், வஞ்சகமும் சூழ்ந்தே, அவரது இறுதிப் பயணம் நிறைவு பெற்றுள்ளது.!

தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா அம்மையார் அவர்களுக்கு எனது இரங்கலை தெரிவிக்கின்றேன்.!

“எப்பொருள் யார் வாய்கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு”

எனது நண்பர்கள் என்னுடன் பகிர்ந்த படங்களை உங்களோடு பகிர்கின்றேன், அந்தப்படங்கள் பல செய்திகளை உங்களுக்கு கூறும்.!

தோழமையுடன் துரோணர்.!!